இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

சென்ற பல வருடங்களாகவே பதிப்பகத் துறையில் இந்துக்களுக்கு – இந்து மதத்திற்கு – இந்துப் பண்பாட்டிற்கு எதிரான குரல்கள் தமிழ்நாட்டில் பலமாகவே ஒலித்துக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறும் பல பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்த்தாலே இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சக்திகள் எவ்வளவு வளர்ந்து இருக்கின்றன என்பது புரியும்.

நமது மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு இவைகளை திரித்தும், மோசமான முறையில் அவதூறு செய்தும், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள், இந்திய தேசிய எதிர்பாளர்கள் போன்ற பல சித்தாந்த முகாம்களைச் சேர்ந்த பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வருகின்றன. இதைப் படிக்கும் பொது வாசகர்களின் மனநிலை இந்து மதத்திற்கும், பண்பாட்டிற்கும், இந்துத்துவத்திற்கும் எதிரானதாக மாறி விடுகிறது. இவர்கள் தொடர்ந்து பதிப்பிக்கும் புத்தகங்களை பார்த்தாலே புரியும் – அவர்களுடைய ஒரே நோக்கம் இந்துக்களை – இந்து மதத்தை வேரோடு பொசுக்க வேண்டும் என்பதே.

இந்தப் போக்கை மாற்ற வேண்டும்; நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர். தமிழ்ஹிந்து இந்தப் பதிப்பகத்திற்குத் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி இப்பதிப்பகத்தினை வாழ்த்தி வரவேற்கிறது.

இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த வார்த்தையை ஒரு கசப்பான வார்த்தையாக மாற்றி இருக்கின்றன ஊடகங்கள் மற்றும் இந்து விரோத கருத்தியல்கள். அந்த கசப்பை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்துத்துவப் பதிப்பகம் என்றே இந்தப் புதிய பதிப்பக்கத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

”இப்பெயர் வைக்கும்போது சிலர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இப்பெயர் வைத்தால் இந்துக்களே கூட புத்தகத்தை வாங்க மாட்டார்கள் என்று காரணம் சொன்னார்கள். நாம் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு இப்பதிப்பகத்தை ஆரம்பிக்கவில்லை.

இந்துத்துவம் மனித நேயத்திற்கான சிந்தனை.
இந்துத்துவம் உயர்நெறிகளின் சிந்தனை.
இந்துத்துவம் நல்வாழ்விற்கான சிந்தனை.
இந்துத்துவம் உலக சகோதரத் துவத்திற்கான சிந்தனை.
உலகத்தின் மானுட சமுதாயத்திற்கான மிகச்சிறந்த சிந்தனையே இந்துத்துவம் –

என்பதைப் பறைசாற்றவே இந்துத்துவப் பதிப்பகம் ஆரம்பிக்கப்படுகிறது என்று பதில் சொன்னோம்”

என்கிறார் ம.வெங்கடேசன்.

இந்துத்துவத்தை உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு பறைசாற்றவே இப்பதிப்பகம். இந்து மதம் மீதோ அல்லது பண்பாட்டின் மீதோ அல்லது இந்து வாழ்க்கை முறையின் மீதோ ஒரு உணர்வு ரீதியான ஒட்டுதலும் பற்றும் கொண்டவர்கள் இந்த புத்தகங்களை வாங்கி மற்றவர்களுக்கு பரப்பினாலே கூட போதும், இப்பதிப்பகத்தின் நோக்கங்கள் நிறைவேறும். அதையே தான் இப்பதிப்பகமும் விரும்புகிறது.

2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது.

இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?

அ) புத்தகங்களை வாங்க ஆர்வம் உள்ளவர்கள், வாசக உறுப்பினர் ஆகி, முன்பே அது பற்றித் தெரிவிப்பது திட்டமிட வசதியாக இருக்கும். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. உங்கள் பெயர், முகவரி, இமெயில், (விருப்பமிருந்தால் தொலைபேசி எண்) ஆகியவற்றை hindutva.pathippagam@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்கவும். புத்தகங்கள் அச்சிட்ட பின்பு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் ஆர்டர் கொடுத்த உடன் 10% கழிவுடன் புத்தங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இந்தப் புத்தகங்களை வாங்கி விற்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதையும் குறிப்பிட்டு எழுதவும் – ஒரு புத்தகம் 10 பிரதிகளுக்கு மேல் ஆர்டர் செய்தால், மேலதிக கழிவு வழங்கப் படும்.

ஆ) இந்தப் பதிப்பக முயற்சிக்கு நேரடியாக நன்கொடை அளிக்க, நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் திரு. ம. வெங்கடேசன் அவர்களை 99412-98629 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெளிரும் புத்தகங்கள்:

[1] ஆழி பெரிது

வேதப் பண்பாடு குறித்து அறிவியல் பூர்வமான நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வேள்விகள், வேத கால சமுதாயம், இயற்கை குறித்தும் பிரபஞ்சம் குறித்துமான வேத ரிஷிகளின் கோட்பாடுகள், உலக தொல் கலாசார வெளியில் வேதங்களின் இடம் என்று பல புள்ளிகளைத் தொட்டுச் செல்பவை இக்கட்டுரைகள். அசுவமேத யாகம், சரஸ்வதி நதி, சோமபானம், முருக வழிபாடு, ஆரியர் தமிழர் இணைப்பு முதலிய கலாசார,வரலாற்றுப் புதிர்கள் குறித்த தேடல்களும் இந்த நூலில் உண்டு. ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்.

[2] தாழ்த்தப் பட்டவர்களுக்காக போராடியதா நீதிக்கட்சி?

தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைப் போராட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தவர்களால் போராடிப் பெறப்பட்டன என்ற பிம்பத்தை உடைக்கிறது இந்நூல். ம.வெங்கடேசன் எழுதியிருக்கும் இந்நூல் திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சியின் புரட்டல்களை அம்பலப்படுத்துகிறது. மதுரைப் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா என்று தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளுக்காக உண்மையில் போராடிய தலைவர்களையும், எப்படி இந்தப் போராட்டங்களுக்கு எதிரானதாகவே நீதிக்கட்சியின் செயல்பாடுகள் இருந்தன என்பதையும் எடுத்துரைக்கிறது.

[3] புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

புரட்சியாளர் அம்பேத்கரின் இந்து மதம் குறித்த விமர்சனங்கள் மற்றும் அவரது மதமாற்றம் குறித்த முழுமையான பார்வையை முன்வைக்கிறது ம.வெங்கடேசன் எழுதியிருக்கும் இந்நூல். சனாதன இந்து மதத்திலிருந்து வெளியேறிய அம்பேத்கர் கிறித்துவம், இஸ்லாம், கம்யூனிசம் ஆகிய பாதைகளை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அம்பேத்கரே கூறியுள்ள பல்வேறு தகவல்களோடு விவரிப்பதுடன், இறுதியில் பௌத்தத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையும் காரண காரியங்களோடு விளக்குகிறது.

[4] பாரதி: மரபும் திரிபும்

ஈவெராவின் பக்தரும் துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் மகாகவி பாரதி மீது பொய் அவதூறுகளை சுமத்தி எழுதியிருக்கும் ”பாரதீய ஜனதா பார்ட்டி” என்ற புத்தகத்திற்கு மறுப்புரையாக ம.வெங்கடேசன் எழுதியுள்ள நூல். மதிமாறன் எழுதிய புத்தகம் முழுவதுமே வெறுப்பினால் எழுதப்பட்டது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளுடன் கூடியது என்பதை பாரதியின் எழுத்துகளின் வாயிலாகவே நிரூபிக்கும் நூல். மறுப்புரை என்பதோடு, யுகபுருஷரான பாரதியின் பன்முக ஆளுமையின் இன்னும் சில பரிமாணங்களையும் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது என்பது நூலின் சிறப்பு.

[5] 1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்கள்

1947 இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எத்தகைய சொல்லொணாத கொடுமைகள் நேர்ந்தன, உரிமை மறுப்புகள் நிகழ்ந்தன என்பது பற்றி எச்.ஜோகிந்தர் நாத் மண்டல் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரது எழுத்துக்களிலிருந்தும், உரைகளிலிருந்தும் தொகுக்கப்பட்ட நூல். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை அப்பட்டமாக விளக்கும் புத்தகம் இது.


[6] விலக்கப்பட்ட மலர் (இந்துத்துவச் சிறுகதைகள்)

ஆலந்தூர் மள்ளன் எழுதியுள்ள சுவாரஸ்யமான சிறுகதைகளின் தொகுப்பு. தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்த போது பரவலான வாசிப்பையும், பாராட்டுக்களையும், விவாதங்களையும் உருவாக்கியவை இந்தக் கதைகள். சுமைதாங்கி அம்மன் கோயில் பூசாரி முதல் பிரிட்டிஷ் சோல்ஜர் வரை, காரைக்குடி வக்கீல் முதல் சோவியத் ரஷியா காலத்து விஞ்ஞானி வரை பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்களை இக்கதைகளில் நீங்கள் நேர்கொள்ளலாம். முற்றிலும் வேறுபட்ட கதைக் களங்களையும் சம்பவக் கோர்வைகளையும் தாங்கி வரும் இந்தச் சிறுகதைகள் ஒவ்வொன்றும் இந்துத்துவ கருத்தியல் கல்வியை மட்டுமல்ல, நல்ல வாசிப்பு அனுபவத்தையும் அளிக்கக் கூடியவை.

[7] 1857: முதல் சுதந்திரப் போர்

சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்து வந்த 1857 புரட்சிக்கு “முதல் சுதந்திரப் போர்” என்று பெயர் சூட்டி வீர சாவர்க்கர் தமது பாரிஸ்டர் கல்விக் காலத்தில் எழுதிய பிரபல நூல் இது. கைப்பிரதியாக இருக்கும் போதே பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்ட இந்த நூல், புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர்களால் இரகசியமாக அச்சேற்றப் பட்டு இந்திய இளைஞர்களைச் சென்றடைந்து மாபெரும் தேசிய எழுச்சி உணர்வை உருவாக்கியது. 1857 போர் எப்படி ஏற்பட்டது, யாரெல்லாம் ஈடுபட்டார்கள், அது ஏன் தோல்வி கண்டது, இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன என்பதைப் பற்றி ஒரு வளரும் புரட்சி வீரராக சாவர்க்கர் மிக அருமையாக அலசுகிறார். சில பத்தாண்டுகள் முன்பு தமிழில் இந்நூலை  கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அச்சில் கிடைக்காமல் நின்று விட்ட அந்தப் புத்தகத்தை தற்போது நமது பதிப்பகம் வெளியிடுகிறது.

[8] இந்துத்துவம் – வீர சாவர்க்கர்

1920களில் அந்தமான் தீவுகளின் இருட்சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் வீர சாவர்க்கர் இயற்றிய நூல் இது. சிறைக்கூடத்தில் நூல்களோ பத்திரிகைகளோ எதுவும் கிடைக்காத போதும், தமது நினைவாற்றலையும் சிந்தனைத் திறத்தையும் மட்டுமே கொண்டு அவர் இந்நூலை எழுதினார். இந்த நூலில் தான் “இந்துத்துவம்” என்ற சொல்லை உருவாக்கி, ஒரு தேசிய, சமூக, அரசியல் சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார். இன்றளவும், இந்துத்துவ கருத்தியலின் அடிப்படையான சித்தாந்த நூல்களில் ஒன்றாக இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நூல் திகழ்கிறது. சில பத்தாண்டுகள் முன்பு இந்த நூலும் தமிழில் வெளிவந்து, இப்போது தேடிப்பிடிக்க முடியாத அளவில் உள்ளது. ஜடாயுவின் புதிய மொழி பெயர்ப்பில் இந்த நூல் நமது பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது.

[9] பண்பாட்டைப் பேசுதல்

முன்பு தமிழ்ஹிந்து வெளியீடாக வந்த நூலின் மீள்பதிப்பு.

சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, அருணகிரி மற்றும் சில சிந்தனையாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

மேலும் விவரங்கள் இங்கே.

 

 

 

[10] சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்

முன்பு தமிழ்ஹிந்து வெளியீடாக வந்த நூலின் மீள்பதிப்பு.

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன?

சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன?

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி இணைந்து எழுதிய இந்தச் சிறு நூல் இத்தகைய கேள்விகளுக்கு சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.

 

 

51 Replies to “இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்”

  1. மிகுந்த மகிழ்ச்சியும் உத்சாஹமும் தரும் செய்தி.

    முயற்சிகள் எடுத்த மதிப்பிற்குறிய ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன், ஸ்ரீமான் ம.வெங்கடேசன் மேலும் அவர்களுக்கு பக்க பலமாய் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    இதை நான் மிக முக்யமான துவக்கமாகவே பார்க்கிறேன்.

    நமது தளத்தில் நான் விடாது தொடர்ந்து பகிர்ந்து வரும் மற்றொரு விஷயம் ஹிந்துத்வ கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு Times of India, Hindusthan Times, தினமணி, தினமலர் போன்று இயங்க வேண்டிய தினசரி மற்றும் டெலிவிஷன். ஈழத் தமிழர் ப்ரச்சினை ஆகட்டும், ராமஜென்மபூமி விவஹாரமாகட்டும், நரேந்த்ரமோடி அல்லது நிதின் கட்கரி போன்றோர் பற்றிய நிகழ்வுகள் ஆகட்டும். பொழுது விடிந்து பொழுது போனால் பரபரப்பு மட்டுமே ஆதரமாகக் கொண்டு பாதி உண்மைகளையும் முழுப்பொய்களையும் புனைசுருட்டுகளையுமே செய்தி என்று தினசரிகள் இயங்கும் பாங்கு அதிகரித்து வருகிறது.

    இதே தான் டெலிவிஷன் விஷயமும். சட்டமன்ற கூச்சல் குழப்பங்கள் போதாதென்று டெலிவிஷன் விவாதங்களிலும் ஒருவர் சொல்வதை அடுத்தவர் கேழ்க்கக்கூடாது யார் சொல்வதையும் Anchor கேழ்க்கக்கூடாது என்ற ரீதியில் விவாதங்கள். உண்மையா பொய்யா என்றெல்லாம் பார்க்காது TRP Rating பெருக வைக்கும் பரபரப்பை ஏற்படுத்தும் புனைவுகளை செய்திகள் என்று திரும்பத் திரும்ப 24 X 7 ஒளிபரப்புவது தான் வெகுஜன டெலிவிஷன் என்று ஆகி விட்டது.

    வெகுஜன தினசரி ஆகட்டும் வெகுஜன டெலிவிஷன் ஆகட்டும் பொழுது விடிந்து பொழுது போனால் ஹிந்துத்வ சிந்தனைகளை பயங்கரமாக சித்தரிப்பதும் அல்லது தேசமுழுதும் நன்மை நல்கத்தக்க ஹிந்துத்வ கருத்துக்களை முனைந்து இருட்டடிப்பு செய்வதுவும் அபாயகரமான தேசவிரோத சிந்தனைகளை மதசார்பின்மை என்ற போர்வை போர்த்தி மதிப்புடன் உலாவர விடுவதும் தொடர்ந்து வரும் அவலங்கள்.

    ஹிந்துத்வப் பதிப்பகம் வெகுஜன தினசரியும் வெகுஜன டெலிவிஷனும் கூட ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது ஆசை. பேராசை என சொல்லலாம்.

    முயற்சிகள் பெருவெற்றி பெற்று தேசத்திற்கும் தேச மக்களுக்கும் நலன் விளைய முருகப்பெருமானை இறைஞ்சுகிறேன்.

  2. வாழ்த்துக்கள்
    இருவருக்கும் பாராட்டுக்கள்
    எனது ஆதரவு இதற்கு உண்டு
    எல்லா ஹிந்துக்களும் ஆதரவு நல்க வேண்டும்

  3. இன்றைய காலகட்டத்தில் நமது இந்து சமயதினற்கு மிக தேவையான பதிப்பகம் வுங்களது சேவைக்கு பாராட்டுகள் , நன்றியும் .

  4. Very good effort and I expect hindus living all over the world will extend their support unreservedly.
    Please publish more books on social issues confronted by hindus.

  5. தங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு

  6. நல்ல காரியம் ஐயா. எழுதப்பட்டவை சஞ்சிகைகளில் மின் சஞ்சிகையோ அச்சிலோ எதிலானாலும் அத்தோடு மறக்கப்பட்டு விடும். புத்தகமாக வந்து ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு ஸ்திர வாழ்வு தந்தால் தான் அது எப்போதும் யார் கையிலும் கைக்கெட்டும் , படிக்கப்படும் நிலையை எட்டும். எல்லாம் அச்சில் வரவேண்டும். புத்தகமாக பாதுகாக்கப்படவேண்டும். படிக்கத் தயாராகக் கிடைக்கும் நிலையை எட்ட வேண்டும். நல்ல காரியம். வாழ்த்துக்கள்.

  7. ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. . அரவிந்தனைச் சிரித்த முகத்துடன் பார்க்க, ஒரு நிம்மதியாக ஆசுவாசம் தருவதாக இருக்கிறது. இப்போதெல்லாம் அவர் எழுத்தைப் பார்த்தால் முகத்தில் எப்போதும் கடுகும் சீரகமும் வத்தல் மிளகாயும் வெடித்துக்கொண்டே இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருந்து வந்தது. ஒரு வேளை போட்டோவுக்காக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தாரோ.

  8. மிகவும் உச்சி முகர்ந்து வரவேற்க்கப்பட வேண்டிய முயற்சி.ஒவ்வொரு இந்தியனின் இந்துவின் கடமை இதை ஆதரிக்க வேண்டியதும்,அறிவுத்தெளிவோடு இதை சொல்லுவதும்…படிப்பதும்

  9. ஒரு மாபெரும் முயற்சியில் முனைந்துள்ள ஸ்ரீ அரவிந்தன் ஸ்ரீ வெங்கடேசன் ஆகியோருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். முதலில் வரும் பத்து நூல்களும் முத்துக்கள் என்றே சொல்லலாம். தமிழ் ஹிந்துவில் வருகின்ற நல்ல சைவம் வைணவம் ஆன்மிகக் கட்டுரைகளையும் தொடர்ந்து பதிப்பிக்க வேண்டுகிறேன். முன் வெளியீட்டுத்திட்டம் என்ற அடிப்படையிலும் ஹிந்துத்துவப் பதிப்பகம் நூல்களை வெளியிட வேண்டும். இணையத்தில் பணம் செலுத்தி நூல்களை வாங்கும் பழக்கம் பெருகிவருவதால் அதற்கும் தமிழ் ஹிந்துவில் ஆன்லைன் புக்சாப் ஏற்படுத்தவும் வேண்டுகிறேன்.
    திருவருள் நிறைக
    சிவஸ்ரீ

  10. நல்ல முயற்சி. எழுத்து துறையில் இருக்கும் நீங்கள் பதிப்பு துறையில் கவனம் செலுத்தி இந்துத்துவத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் படி எடுத்து இருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற பிராத்திக்கிறேன். வாசக உறுப்பினராகி உங்கள் முயற்சிக்கு துணை நிற்ப்போம்.

  11. திரு.மா.வெங்கடேசன் திரு.அரவிந்தன் முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள் கிழக்கு பதிபகம் புத்தகங்கள் விலை மிகவும் அதிகமாகபடுகிறது. ஹிந்துத்துவ பதிபக வெளியிடுகளை சற்று விலை குறைவாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உதாரணமாக கிழக்கு பதிபகத்தார் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்திற்கு ரூ.50 200 பக்கங்களுக்கு ரூ.100 300 பக்கங்கள் ரூ.150 என்ற கணக்கில் தான் விலை நிர்ணயிக்கிறார்கள். இதைவிட சற்று மலிவாக தங்கள் பதிபகவெளியீடகள் இருக்கும் என எதிர்பார்கிறேன்.

  12. வாழ்த்துகள்! முடிந்தால் D.ராமன் (S P குட்டி ) அவர்களின் புத்தகங்களை (என்று காண்போம் எங்கள் சிந்துவை ,………………….) பதிப்பிக்கவும். எனது நெடுநாள் ஆசை!

  13. மிகத் தேவையான நல்ல முயற்சி. அன்னையின் அருள்வலத்தால் முஅற்சி திருவினையாக வாழ்த்துகின்றேன். உறுதியாக இந்துத்துவத்தின் மேன்மையை, இன்றியமையாமையைப் பறி எண்ணுபார்களுக்கு இந்த முயற்சி மகிழ்ச்சியைத் தரும்

  14. முயற்சி செய்து இதனை சாத்தியமாக்கிய அரவிந்தனுக்கும், திரு.ம.வெங்கடேசனுக்கும் வாழ்த்துகள். என்னாலான அனைத்ஹு உதவிகளையும் வழங்க தயாராய் இருக்கிறேன்.

  15. சீரிய முயற்சி. வாழ்த்துக்கள் … தொடரட்டும் சமுதாய பணி … ஆதரவு நிச்சயம் அதிகமாகும் … பிரார்த்தனையுடன்

  16. வாழ்த்துகள்!
    முடிந்தால், ஹிந்துத்வப் பதிப்பகம் வெகுஜன தினசரியும் வெகுஜன டெலிவிஷனும் கூட ஆரம்பிக்க வேண்டும்.

    சு.சண்முகவேல், ஈரோடு.

  17. சந்தோஷமான விஷயம்,

    //[9] பண்பாட்டைப் பேசுதல்// இது வேறு சில கட்டுரைகளையும் அனெக்ஸ் வடிவில் தாங்கி வந்தால் நலம்.

    வ சோமு அவர்களின் எழுத்துக்கள் எதுவும் புத்தக வடிவம் பெறுகிறதா ?

    நன்றி
    சஹ்ரிதயன்

  18. my simple suggestion sir we can go for some corpus funds thro our friends for smooth and long run. we can collect from 1000 rs onwards per person. you can ensure money and deliver accordingly even print based on demand. all hindu activities needs funds and your job ie intellectual war needs more. since you work against ideological forces make sure it last long. my prayers for our success. i wish to see ee ve ra vin marupakkam also soon. please try to bring voice of india publications in tamil and i wish to see aravindhan writing on niyogi commission report fully in tamil. maaveeran award to ma venkatesan and i request the readers to select award for shri aravindhan neelakandan. namasthey.

  19. நமக்கென்று நமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கென்றே சமரசம் செய்து கொள்ளாத ஒரு பதிப்பகம் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் சுயமான சந்தைப்படுத்தும் ஏற்பாடும் உடன் இருப்பது முதுகு எலும்பைப் போன்றதாகும். சொந்தமாக விற்பனைப் பிரதிநிதிகள் நியமிப்பது அவசியம். என் அனுபவத்தில் பெரும்பாலான முகவர்களும் புத்தகக் கடை வைத்து நடத்தும் விற்பனையாளர்களும் சரியாகக் கணக்குக் கொடுப்பதும் தொகையை அனுப்புவதும் இல்லை. உற்சாகத்துடன் தொடங்கப்படும் பல முயற்சிகள் தொடராமல் முடங்கிப் போவது இதனால்தான். நான் நடத்திய ’கால்’ தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டு இதழைக் கொன்றவர்கள் வெளியூர்களில் உள்ள முகவர்களூம் புத்தகக் கடைக்காரர்களும்தான். இன்று மிகவும் செழிப்பாக விளங்கும் முகவர்/புத்தக வெளியீட்டாளர்/ விற்பனையாளார்களுக்கும் அதில் பங்குண்டு. என் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் நிலைமை பெரும்பாலும் அப்படித்தான் என்று தெரிகிறது.. நேரில் சென்று வசூலித்தால் ஒழியத் தொகை கைக்கு வருவதில்லை என்றும் ஆனால் இவ்வாறு வசூல் செய்வதற்கான நிரந்தர ஏற்பட்டைச் செய்துகொள்ள வசதி இல்லை என்றும் கணையாழி ம. ராஜேந்திரன் சொன்னார். சென்னையில் மட்டும் நேரில் சென்று வசூலிப்பதால் பிரச்சினை இல்லை, பெரும்பாலான மற்ற ஊர்களில் நிலைமை அவ்வாறு இல்லை என்றும் மாதந் தோறும் கணிசமான தொகை துண்டு விழுவதாகவும் சொன்னார்.
    மேலும், சராசரி வாசகர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் சரளமான மொழி நடையிலும் புத்தகங்கள் அமைவது அவசியம்.
    உங்கள் முயற்சி வெற்றிபெற என் குல தெய்வத்தை வெகு தீவிரமாக தியானிக்கிறேன்.
    -மலர்மன்னன்

  20. வாழ்த்துக்கள். அனைவரும் புத்தகங்களை வாங்கி அருகில் இருக்கும் நூல் நிலையங்களுக்கு அன்பளிப்பாக அளிக்குமாறு கோருகிறேன்

  21. ஸ்ரீ விஸ்வாமித்ராவின் யோசனை நல்லதே. ஆனால் இதுவும் என் அனுபவத்தில் இவ்வாறு வெளி நபர்கள் அளிக்கும் நூல்கள் கணக்கில் வராததால் பல நூலகர்கள் அவரவர் வீட்டுக்கு அத்தகைய நூல்களை எடுத்துப் போய்விடுகிறார்கள், அல்லது அவர்களீன் நண்பர்கள் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்கள். நாமே நமது சக்திக்குத் தகுந்தாற்போல் கூடுதல் பிரதிகள் வாங்கி தெரிந்த ஆனால் விழிப்படையாத நண்பர்கள்/ உறவினர்களுக்கு அனுப்புவது நல்லது. இந்த முயற்சி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற அக்கறையின் காரணமாகவே என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். அதிகப் பிரசங்கித்தனம் என்று எண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன். மேலும் நான் சொல்வதற்கு மாறான விதி விலக்குகளும் இருக்கலாம். அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
    -மலர்மன்னன்

  22. மிகவும் அற்புதமான செயல்.மதம் மதம் மாற்றும் ஆபிரஹாமிய மதங்களுக்கு சாவு மணியடிக்க வேண்டும்.

  23. வைணவத்தின் பெருமையை உலகறிய செய்த உடையவரும் தூப்புல் வேங்கடநாதரும் உங்களின் முயற்சிக்கு அருள் புரிவார்களாகுக! செழிக்கட்டும் உங்கள் பணி!

  24. நன்றி வாழ்த்துக்கள் எங்களது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. உங்களது புத்தகங்களை நாங்கள் வாங்கிப் படிக்க தயாராக இருக்கிறோம் .

  25. கேப்டன் s.p குட்டி புத்தகங்கள் மறு பதிப்பு செய்யப்பட்டு படிக்க ஆவலுடன் உள்ளேன்
    வாழ்த்துக்கள் அரவிந்தன் நீலகண்டன் ஐயா .

  26. Well done 🙂
    MalarMannan Sir wishes always great look at his touch. Why can not we have some website where it can be used in the soft books like a app or something. Easy, but some of us tend to copy them even there will be many people willing to buy them. There very little few comes in Tamil comes in that format

  27. murugan அருள் உண்டாக்கட்டும் .வாழ்த்க்கள்

  28. I need a kind favour……On the picture above, where Mr Arvind and Mr Vengadasen appear to be sitting against the wall, there is a ramayanam picture above them that depicts each of the crucial scenes ( in seqeunce) from the epic Ramayana. Does Mr Arvind or Mr Ma Vengadasen or anyone here knows where to get or purchase this pictures.

    Thank you….

  29. அன்புள்ள Kreshna அவர்களுக்கு, இங்குள்ள புகைப்படத்தில் பின்னணியில் சுவரில் உள்ள ராமாயணக் காட்சிகள் புகழ்பெற்ற ஓவியரான B G Sharma அவர்கள் வரைந்த ராமாயணப் படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டவை. ஷர்மா அவர்களின் ஓவியங்களுக்கான இணையதளம் –

    https://www.bgsharmaart.com/index.html

  30. வரவேற்கிறேன் வாழ்க வளர்க…

  31. இந்துத்துவ பதிப்பகம் பெரு வெற்றி பெற்று சாதனைகள் நிகழ்த்த விடையேறியின் அருள் ஓங்கட்டும்.

  32. வரவேற்கத்தக்க முயற்சி; வாழ்த்துகள்.
    எனது வலைப்பூவில் உடனே கவனப்படுத்தி
    விட்டேன் –
    http://www.askdevraj.blogspot.com

    அன்பர்கள் தத்தம் வலைமனைகளில்
    தெரிவிக்கலாம்

    அன்புடன்,
    தேவ்

  33. இந்த அருமையான முயற்சி பூரண வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். புத்தகங்களை விலை மலிவாய்க் கொடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோளும். நன்றி.

  34. வணக்கம்.
    நேற்று நான் திருப்பூவணம் (மதுரைக்கு அருகில் உள்ள ஊர்) சென்றிருந்தபோது, கோயிலில் ஒருவர் tamilhindu.com படியுங்கள் என்று கூறினார்.
    இன்று இந்தப் பதிவைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
    தங்களது நல்ல முயற்சி சிறக்க வாழ்த்துகள்.
    அன்பன்
    கி.காளைராசன்

  35. Pray for the success of Hindututva Publications and all of us (Hindus) make it by purchasing the books released by Hindututva.

    Ever serving for Bharath Mata
    Chezhian

  36. GENERATE A GROUP OF PERMANENT SUPPORTERS WHO WILL BUY ONE COPY EACH(AT LEAST) OF EACH AND EVERY BOOK YOU WILL PUBLISH.KEEP A DEPOSIT AND RUNNING ACCOUNT.POST EVERY NEW BOOK TO THE ADDRESS GIVEN BY POST AUTOMATICALLY.
    WITH A BIG GROUP TO SUPPORT YOU FROM INDIA AND ABROAD YOU WILL HAVE STRONG AND PERMANENT SUPPORT FOR EVERY BOOK YOU PUBLISH.
    V.RAVISANKAR
    MUSCAT-OMAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *