பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…
View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு