2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால்….
View More புவனேஸ்வரி நவரத்ன மணிமாலைTag: poem
மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)
இதுதான் மண்ணிலே தென்படும் விண் என்ற தகுதிக்கு எதுவெல்லாம் வரக்கூடும்? ஒருசிலவற்றை வெண்பா வடிவத்தில் தந்திருக்கிறேன். சந்தவசந்தக் குழுவில் நடந்த கவியரங்கில் பங்கேற்றபோது இட்டவை இவை.
View More மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)கவிதை: குருநாதன்…
நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!