கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.

View More கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

முத்தாலம்மன் பொங்கல்

கிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி எங்கூர்ல (தே. கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்) பஞ்சம்…

View More முத்தாலம்மன் பொங்கல்

வேட்டையாடி விளையாடும் அரங்கன்

வையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.

எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.

View More வேட்டையாடி விளையாடும் அரங்கன்