“உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்…. உலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை…உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும்…
View More உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்புTag: அமெரிக்க அராஜகம்
காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி
1959ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவின் பானுமதிக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா “லத்தீன் அமெரிக்காவில் மக்கள் கடும் ஏழ்மையால் துன்பபடுகிரார்கள். உங்கள் ஊரில் காந்தி இருந்தது போல் எங்கள் ஊரில் அவர்களை நல்ல வழிக்கு கொன்டுவர தலைவர்கள் இல்லை. அதனால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது” என்றார். காந்தியின் சத்தியாகிரகம், அகிம்சை அனைத்தும் அவருக்கு பிடித்ததாக கூறினார். ஊருக்கு திரும்பியதும் காஸ்ட்ரோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு பதில் இப்போது ரஷ்யா மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுவதை லேட்டாக புரிந்துகொண்டார். ரஷ்யா அவருக்கு உதவ மறுத்துவிட்டது. காங்கோவில் நடந்த போராட்டம் தோற்று, பொலிவியா திரும்பினார்…
View More காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சிதேவையா நீ பணிப் பெண்ணே? – 2
ஐ டி வேலைக்கு வருபவர்கள் கடும் உழைப்புக்கும் நடுவிலும் சமையல் செய்து பாத்திரம் கழுவி கார் ஓட்டி கார் கழுவி கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வாழ்ந்து கொள்வதில்லையா என்ன? இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம்?…. இந்தியாவில் இருந்து வேலையாட்களை அழைத்து வரும் உரிமை இவரைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அதை எவருமே முறையாகப் பயன் படுத்திக் கொள்வதில்லை. பிரிட்டிஷ் கால எச்சமாக நாம் அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவைக்கேற்ற சொகுசு வாழ்க்கைகளை அளிக்கிறோம்…. நேர்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல் திறனும் சிந்தனைத் தெளிவும் தீர்க்க தரிசனமும் கூடிய தலமை இந்தியாவுக்கு அமைய வேண்டும். அது அமைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊழலில்லாத நேர்மையான துணிவான பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வாய்த்து விட்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது தானாகவே மரியாதை பிறக்கும். இந்தியாவின் மீது நல்லெண்ணமும் உயர் அபிப்ராயமும் ஏற்படும். இந்தியர்களும் மதிக்கப் படுவார்கள்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 2தேவையா நீ பணிப் பெண்ணே? – 1
அமெரிக்க அரசாங்கம் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக வற்புறுத்தும் ஒரு கருவியாக, இந்தியாவின் கைகளை முறுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைதை பயன் படுத்தியுள்ளதா? அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரிகள் வேறு நாடுகளில் கொலையே செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி விடுதலையைக் கோரி அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது…. அப்துல் கலாம் அவமரியாதை செய்யப் பட்ட பொழுதும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட பொழுதும், மீனவர்கள் கைது செய்யப் பட்ட பொழுதும் விழிக்காத இந்தியா இப்பொழுது தீடீரென்று தர்மாவேசம் கொண்டு சாமி ஆடுவதின் காரணம் என்ன? சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது? …. இந்தியாவின் பலவீனங்கள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் பேசுவதினால் இந்தியா என்னும் ஒரு மாபெரும் தேசத்திற்கு இருக்கும் சுய மரியாதையையும் கவுரவ்த்தையும் மறுத்து விட முடியாது. இங்கு அவமரியாதை செய்யப் பட்டிருப்பது தேவயானி என்றவொரு தனி நபர் கிடையாது. இந்தியா என்னும் ஒட்டு மொத்த தேசமும் அவமானப் படுத்தப் பட்டதாகவே கருதப் படும்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 1