திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.
View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்Tag: களப்பணியாளர்கள்
இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?
‘ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறீர்களா’ என கொக்கரிக்கிறார்கள் இடதுசாரிகள். இல்லை என்பதுதான் சந்தோசமான விசயம்.. அரசு அதிகார உதவியுடன் வெளிநாட்டு பல்கலைக்கு சென்று இந்திய வரலாற்றைப் படித்து அதை காலனிய-மார்க்சிய நோக்கில் மட்டுமே அணுகி தன்னை ஒரு அதிகார மையமாக மாற்றிய ஒரு ஆளுமையை இந்துத்துவம் உருவாக்கவில்லை. ஆனால் பீம்பெதகா குகைகளை கண்டுபிடித்து அவற்றுக்கு உலக குகையோவியங்களின் தொல்வரலாற்றில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வகங்கர் ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆசியாவின் மிகச் சிறந்த தொல்லியலாளர் என சர்வதேச தொல்லியலாளர்களால் அறியப்பட்ட பிரஜ் பஸி லால் இந்துத்துவர்… இந்துத்துவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என்பது அவர்களின் வாழ்க்கைகளேதான். ‘களப்பணி’, ‘அறிவியக்கம்’ என்பது போன்ற பாகுபாடுகளை கேட்கும் போது துணுக்குற செய்கிறது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும் தத்தோபந்த் தெங்கடிஜியும் தாணுலிங்க நாடாரும் சுவாமி சித்பவானந்தரும் செமினார் சிந்தனையாளர்களல்ல. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் சிந்தனைக்கும் கோடு கிழிக்க முடியாது…
View More இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை
பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது… தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோள் கீழே.. இதில் தன்னார்வலர்களாகப் பங்குபெற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை அளித்து களப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்..
View More வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை