வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை

TH_FB_Modi_Welcome_to_TNபாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், மக்கள் பிரச்சினைகளில் நேரடியான கவனத்தை அதிகரிக்கவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று மக்களோடு நேரடியாக கலந்து கொண்டு மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை  நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய  நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை  நேருக்கு நேர் அறிந்து அரசியல் விழிப்புணர்வு பெறும் விதமாகவும் மக்களை  அணுக வேண்டும் என பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகம் முழுக்க இருக்கும் பாஜக நிர்வாகிகளையும் , தொண்டர்களையும்   நோக்கி வேண்டுகோள் வைக்கிறார். அந்த வேண்டுகோளை இங்கு வெளியிடுகிறோம். 

 

bjp logoஅன்புடையீர்,

வணக்கம், பாரதீய ஐனதா கட்சியின் ஒப்பற்ற தலைவர்திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது அணுகுண்டு வெடித்தது முதல் அனைவரின் கையிலும் செல்போன் கொடுத்தது வரை 6 ஆண்டு காலத்தில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தி காட்டினார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக லஞ்சம்,ஊழல்களில் திழத்து விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பெண் கெடுமை, விவசாயம், தொழில் நசிவுகள் போன்று அனைத்து துறைகளிலும் தோற்றுபோய், உலக நாடுகளின் மத்தியில் நமது நாட்டின் மதிப்பை அதலபாதாளத்தில் தள்ளி உள்ளது.

காங்கிரஸின் கட்சியின் தவறுகளிருந்து அவர்களையும், பாரதீய ஐனதா கட்சியின் “விடு தோறும் மோடி ௨ள்ளம் தோறும் தாமரை” யையும் ௨ளமாற ஏற்றுள்ள தமிழக மக்களுக்கு அவர்களின் வீடு தோறும் சென்று நன்றி தெரிவிப்பதோடு பாரதீய ஐனதா கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று தமிழக மக்களிடம் கேட்பது நமது தலையாய கடமையாகும்.

எனவே தமிழகத்தில் ௨ள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நடைபயணம் சென்று தமிழக மக்களை சந்தித்து நமது பாரதீய ஐனதா கட்சி “விடு தோறும் மோடி ௨ள்ளம் தோறும் தாமரை” என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியை நடத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.

ஒருவருக்கு ஒரு பஞ்சாயத்து என்ற வகையில் தமிழ் நாட்டில் ௨ள்ள 12618 பஞ்சாயத்துகளில் நடைபெற ௨ள்ள இப்பாதயாத்திரைக்கு தாங்களும் தலைமையேற்று ஒரு பஞ்சாயத்தில் பாதயாத்திரை நடத்தி தருமபடி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தங்கள் தலைமையில் நடைபெறும் பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்த தலைவர்கள் வரிசையில் தாங்களும் இடம் பெறுவீர்கள் என்பது உறுதி.

எனவே இப்பாதயாத்திரைக்கு தலைமை ஏற்பது (முடியாதவர்கள் ஏதேனும் ஒரு சிறு பணியை செய்யலாம்) குறித்து தங்கள் விருப்பத்தை உடனடியாக தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தன்னார்வ படிவத்தை(Volunteer Form) நிரப்பவும்

(குறிப்பு; நேரடியாக களப்பணி செல்ல முடியாதவர்கள் தங்கள் பஞ்சாயத்தில் ஏதேனும் ஒரு சிறு பணியையாவது எடுத்து செய்யவேண்டும் என வேண்டுகிறோம்)

ponrClick Volunteer Form

அன்புடன் தாயகப்பணியில்

 

பொன். இராதாகிருஷ்ணன்
தலைவர் , தமிழக பாரதீய ஐனதா கட்சி

வணக்கம்.

9 Replies to “வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை”

 1. வருக வருக! தாமரையின் நாயகனே! தாயகத்திற்கு நல்லாட்சி தருக!

 2. ஒருவர் தன நண்பரைப் பார்த்து “என்ன நண்பா! ஆளையே ரொம்ப நாளா பார்க்கமுடியவில்லை” என்றாராம்.அதற்கு அவரது நண்பர் “” என் பெண்ணுக்கு திருமணம் வச்சிருக்கிறேன். Invitation குடுக்க ஒருநாள் உங்க வீட்டிற்கு வரணும் . நான் கல்யாண வேலையில் ரொம்ப பிசி இப்பவும் தேவையான மளிகை பொருட்கள் வாங்க மளிகைக் கடைக்கு போய் கொண்டிருக்கிறேன். சரி வரட்டுமா? அப்புறம் பார்கிறேன்.”” என்றார்.நண்பரை மளிகை கடையில் பார்த்த அந்த நபர் ( kmv போல) “இது கல்யாண பணி அல்ல சாப்பாட்டு பணி” என்றாராம். சாப்பாடு போடுவதும் கல்யாணத்தின் ஒரு அங்கம் தான் பிஜேபி பணியும் ஒரு தேச பணியின் ஒரு அங்கமே! என்ன புரிகிறதா அன்புத் தங்கமே (kmv )!

  திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு.ஒரு வேண்டுகோள்: 12618 கிராம ஊராட்சிகளுக்கும் செல்லும் தொண்டர்களிடம் தயவு செய்து booklets கொடுத்து அனுப்புங்கள். (அதில் காங்கிரஸ் ஊழல்கள், குஜராத் வளர்ச்சிகள், பிஜேபி மற்றும் RSS குறித்த மாற்று கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு பதில்கள் அடங்க்யிருக்க வேண்டும்) ஒவ்வொரு வீட்டிற்கும் அதை கொடுத்து படிக்க சொல்ல வேண்டும். மக்கள் படித்து உண்மையை உணர்ந்து எதிரி கட்சிகளின் பொய் பிரச்சாரத்தையும் மீடியாக்கள் நடத்தும் கபட நாடகங்களையும் புறந்தள்ளுவார்கள் செய்வீர்களா?

 3. All the best. why to project only the BJP rule in Gujarat. you should give the development of states under the BJP current/recent past service also.

  what is the BJP stand on Cauveri issue of TN with Karnataka?

 4. //what is the BJP stand on Cauveri issue of TN with Karnataka?//

  on this dispute – who has given clear statement apart from BJP? what was the solution for Mullai Periyaru ? since both sides are ruling by the “SECULAR Parties” many years. you should ask these type of questions to yourself first.

 5. secularism has no meaning when there is a probability of election success in Karnataka. BJP and Cong I – chance of winning on own in TN is not immediate and hence both parties will drag the case.

 6. இப்போ காங்கிரஸ் ஞானதேசிகன் ஆரம்பிச்சிடாரு ” கிராமம் தோறும் காங்கிரஸ் இல்லம்தோறும் கை “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *