போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்..
View More சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?Tag: கவிதை விளக்கம்
பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?
புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..
View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?கம்பராமாயணத்தில் சிவபெருமான்
உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.
View More கம்பராமாயணத்தில் சிவபெருமான்இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்
மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். முருகா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் வரும் அழகிய பாடல்கள் இவை. இவற்றில் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது….
View More இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்இரு புறநானூற்றுப் பாடல்கள்
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…
View More இரு புறநானூற்றுப் பாடல்கள்சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..
View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்
ஞாலத்தில் விரும்பியது நண்ண வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் எண்ணியது எய்தும் என்று பாரதி கூற வருவது போல் படுகிறது. விருப்பம் என்பது நமது இச்சையை மட்டும் சார்ந்து நிற்பது. ஆனால் எண்ணுவது என்பது உலகில் உள்ள புற அக மெய்மையைக் கவனத்தில் கொண்டு எழும் மனத்தின் செய்கை என்று படுகிறது… மனத்தின் விழியில் பட்டதை மனம் நயப்பது விருப்பம். மனத்தின் விழியில் அல்லாமல் ஜீவனின் விழியில் பட்ட சிவம் என்னும் நன்மையான பொருளை நாடுதல் எண்ணம் என்று ஒருவாறு வித்யாசம் காணமுடிகிறது. …
View More பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்
புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது… கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்… எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே…
View More பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்கம்பனின் சித்திரகூடம்
பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது… கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?”..
View More கம்பனின் சித்திரகூடம்கம்பன் பாடிய குறள்
இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…
View More கம்பன் பாடிய குறள்