மதமெனும் பேய்

”நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”… காலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும்…

View More மதமெனும் பேய்

சில ஆழ்வார் பாடல்கள் – 2

இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்… அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு – இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்… உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்…

View More சில ஆழ்வார் பாடல்கள் – 2

சில ஆழ்வார் பாடல்கள் – 1

ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்… நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது… நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை… (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது).

View More சில ஆழ்வார் பாடல்கள் – 1

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது… விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்… சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது… இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது…

View More ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

சத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது… ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.

View More பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

அக அழகும், முக அழகும் – 2

போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?

View More அக அழகும், முக அழகும் – 2

அக அழகும், முக அழகும் – 1

குழந்தை முருகனின் தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது…. அதுவே கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது….

View More அக அழகும், முக அழகும் – 1

மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

(பாடலும் விளக்கமும்.) ரஷ்யப் புரட்சியையும் ஃபிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு…

View More மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1