சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி, விநியோகம், ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள், மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய், பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்….
View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2Tag: காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,
பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1
லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்,விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த…
View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?
2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?
View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்
காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது… தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அப்துல் கலாம் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்… மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்…
View More கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?
கேரளா அரசின் தலைமைக் கொறடாவான பி.சி.ஜார்ஜ் அண்மையில் செய்தியாளர்களிடம், ”கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை” என்று கூறி இருக்கிறார். ‘பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்
View More கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?ஐந்து மாநிலத் தேர்தலும் இந்திய அரசியலும்
காங்கிரஸ் இளவரசர் ராகுல் ‘புயல்வேக பிரசாரம்’ செய்தார். அவரது சகோதரியும், அவர்தம் கணவரும், அன்னையும் கூட உ.பியில் தெருத் தெருவாக சுற்றினார்கள். மத்திய அமைச்சர்களும் சளைக்கவில்லை. அமைச்சர் சல்மான் குர்ஷித் ‘’காங்கிரஸ் வென்றால் இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படும்’’ என்று விதிகளை மீறி அறிவித்தார். பிறகு தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார்.. சிதறிய நெல்லிக்காய் மூட்டைகளாக இருந்த பாஜக தலைவர்கள் ஆட்சியை மாற்ற மக்களிடம் வாக்கு கேட்டனர்…இனியேனும், ஊடகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்காமல், உண்மை நிலையை நடுநிலையுடன் செய்திகளாக தர வேண்டும்….
View More ஐந்து மாநிலத் தேர்தலும் இந்திய அரசியலும்சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்
சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம். கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் உண்டு.. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது
View More சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?
நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?
View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்
மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்… ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு? இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு?… அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்… நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது?…
View More சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்
திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது.
View More ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்