ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…

View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு

ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் – வேற்றுமையற்றவன் – பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் – சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் – சத்தியப்பொருளென அறியப்படுபவன்… அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?…

View More ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

கருநாகமொத்த குழல்

கருணை, பொறுமை மற்றும் அன்பு இக்குணங்கள் அத்தனைக்கும் ஒருங்கே உறைவிடமான ராதா தேவியினது குழல் எப்படி கொடிய விஷமுடைய கருநாகத்துடன் ஒப்பிடப்பட்டது என விசனமுற்றார்… தேவியின் கால்கள் தரையில் கோலமிடுகின்றன. கோலமா? ராதையின் கால்களா? இல்லையில்லை. ஏதோ எழுதுகின்றன. என்ன தான் எழுதும் அவை? அனிச்சையாக தேவியின் திருப்பாதங்கள் ‘க்ருஷ்ண க்ருஷ்ண’ என எழுத்தின் மேல் எழுத்தாக எழுதுகின்றன… ஆஹா இது என்ன கொடுமை? இவ்வளவு ஆனந்தம் மிகும் இக்கணத்தில் ராதையும் கண்ணனும் சேரப் போகும் நேரத்தில் இதென்ன மாபெரும் ஆபத்து?….

View More கருநாகமொத்த குழல்

ரமணரின் கீதாசாரம் – 2

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.

View More ரமணரின் கீதாசாரம் – 2

ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்

கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!

View More ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்