இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. நம்மையும் நமது வாரிசுகளையும், நமது எதிர்கால சந்ததியினரையும் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கச் செய்யும் ஒரு முக்கியமான பொது நிகழ்வு ஆகும். எப்படி உங்கள் கல்வி, திருமணம், குழந்தைகள் நலன், வீடு கட்டுதல்/வாங்குதல், வேலை போன்றவற்றிற்கு எல்லாம் அதி முக்கியத்துவம் தருவீர்களோ அது போன்ற ஒரு முக்கியத்துவத்தைத் தயவு செய்து இந்தத் தேர்தல் குறித்தான எனது வேண்டுகோளுக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்… உலக வரலாற்றிலேயே மாபெரும் ஊழல்களை நிகழ்த்தியவை தி மு க வும் காங்கிரஸும். வேறு எந்த நாட்டிலும் இவர்கள் கைது செய்யப் பட்டு மரண தண்டனையோ அல்லது வாழ்நாள் முழுக்கச் சிறையோ அளிக்கப் பட்டு நிரந்தரமாக ஜெயிலில் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே மீண்டும் மீண்டும் இவர்கள் தேசத்தைக் கொள்ளையடிக்கத் தேர்தலில் போட்டி போடுகிறார்கள்.,,,
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)Tag: தமிழக பாஜக
சென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்
தமிழக பாரதிய ஜனதா கட்சி மழைவெள்ள நிவாரணத்திற்காக எமர்ஜென்ஸி எண்கள் அறிவித்துள்ளது. அதுபற்றிய அமைச்சர்…
View More சென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?
தேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது… கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இது. இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்…இந்த டி வியின் முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நபர்கள் அனைவருமே கடுமையான இந்து வெறுப்பு உடையவர்கள். கம்னியுஸ்டு மற்றும் திக நிலைப்பாடு உடையவர்கள். அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள். இவர்களினால் எப்படி நடுநிலையான நிகழ்ச்சிகளை அளிக்க முடியும்?…இவர்களின் பத்திரிகையில் முன்பு இணையத்தில் உள்ள பெண்களின் படங்களை எடுத்து நிர்வாணமாக்கி காமக் கதைகள் எழுதி அவர்களை மிரட்டிக் கொண்டிருந்த ஒரு பொறுக்கியைத்தான் நிருபராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்….
View More ‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..
மாதொரு பாகன் நாவல் புத்தக எரிப்புக்கு கடும் கண்டனங்கள். எந்தப் புத்தகத்தையும் எரிப்பதோ, தடை செய்யக் கோருவதோ ஜனநாயக விரோதமான வழிமுறைகள்… தனிப்பட்ட அளவில், அந்த நாவலில் இந்து மத விரோதமாகவோ அவதூறாகவோ எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. ஆனால் சாதாரண திருச்செங்கோட்டுக் காரர்கள், அந்தக் கோயில் மீதும் தங்கள் சாதி சனங்களின் மரபுகளின் மீதும் தீவிர பிடிப்புள்ள சராசரியான மக்கள், இந்த நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தால், இத்தகைய கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் சமூகத்தையும் கலாசாரத்தையும் நாவல் அவதூறு செய்கிறது, அசிங்கப் படுத்துகிறது என்று தான் கருதுவார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… சராசரிகளின் முதிர்ச்சியின்மை அறியாமையால் வருவது. ஆனால், அறிவுக் கயவர்களின் திரிபுவாதம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டு பரப்பப் படுவது…
View More மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு” தலைமை அடிமை”யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்…. கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது என்பதே நிதர்சனம்..
View More தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்
இங்கு மிகப்பெரிய சந்தேகம், முதலில் பா.ஜ.கவினருக்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதா என்பதே. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழையும் ஒரு கட்சி இதைப்போன்றதொரு அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல…. இன்று தமிழகத்தில் உருப்படியான அரசியல் சக்தியாகத் தெரிந்தது அ.இ.அ.தி.மு.க மட்டும் தான். இந்த சூழலில் தமிழக அரசியலில் ஒரு ஆற்றல் வெற்றிடம் நிலவுவதை நம்மால் உணரமுடிகிறது. அந்தவெற்றிடத்தை நிரப்புவது யார்? அந்த இடத்துக்கான போட்டியாளர்கள் யார்?யார்?… இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள். இனத்தையும், சமுதாயத்தையும், இயற்கையையும் காப்பவர்களாகக் காட்டிக்கொண்டு,கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் கையாள்களாக இருக்கக்கூடிய அமைப்புகள்…இந்தப் பட்டியலைப் பார்த்தாலே தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் அபாயம் புரியும்….
View More தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்
நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை… தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்….
View More தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1
தினமும் 10 மணி நேரம் மின் வெட்டை மாநிலம் முழுவதும் செய்து வரும் ஜெயலலிதாவுக்கு இந்த முறை மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டாவிட்டால் அவர் அவர்களை இலவசங்களை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்களாக மட்டுமே வருங்காலத்திலும் நடத்துவார்…. தமிழகத்தில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பெண் ஒருவர் கூட இல்லை என்பது ஒரு பெரும் குறை. வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை அல்லது வானதி இருவரில் ஒருவர் அறிவிக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இருவரும் இல்லாமல் “கல்வித் தந்தை” ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது….
View More தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….
View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை
பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது… தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோள் கீழே.. இதில் தன்னார்வலர்களாகப் பங்குபெற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை அளித்து களப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்..
View More வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை