தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை… பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா…எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்… ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த ராகுல்…..
View More காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்Tag: தேர்தல் 2014
புதிய பாரதம் மலர்கிறது
நரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் குடும்பத்தினரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம் தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது. “Ab ki bar Modi Sarkar” என்று யூ ட்யூப் வீடியோக்களில் மழலை மொழியில் பேசிய 5 வயதுக் குழந்தைகள், தாங்கள் வாக்களிக்கும் வயது வரும்போது, அதே வாசகத்தை இன்னும் அழுத்தமாக வீதிகளில் முழங்குவார்கள்…
View More புதிய பாரதம் மலர்கிறதுதேர்தல் ஆணையத்தின் அராஜகம்
ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக இந்தியா முழுவதுமான பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில தினங்களில் நடத்தி முடிக்கப் பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் பரவலான நவீனமான தொலைத் தொடர்பு வசதிகளும் தேர்தல் இயந்திரங்களும் இருக்கும் இன்றைய சூழலிலும் கூட தேர்தல் நடத்த 2 மாதங்கள் எடுத்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒரு மோசமான திறனற்ற செயல்பாடாகவே கருதப் படும்… தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வக்கில்லாத இந்தத் தேர்தல் ஆணையம் பல காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மட்டுமெ அதிகாரத் திமிருடன் ஒரு தலை பட்சமாக பயன் படுத்தி வருகிறது. தவறு செய்பவர்களையும் பணம் பட்டுவாடா செய்பவர்களையும் கைது செய்ய துப்பில்லாத, அதிகார பீடத்துக்கு அடி பணிந்து நடக்கும் சம்பத் ஒரு மோடி தனது படத்தைப் போட்டவுடன் அதை உலக மகா குற்றமாகக் கண்டு பிடித்து அவரைக் கைது செய்யத் துடிக்கிறார்… ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் அடிமைகளைக் கொண்டு முற்றிலும் திறமையற்ற விதத்தில் மிகக் கேவலமாகவும் மிக மோசமான திறமையற்ற முறையிலும் நடத்தப் படும் இந்த ஆணையம் உடனடியாக சீர்திருத்தப் பட்டு காலாவதியான சட்டங்கள் களையப் பட்டு வளர்ந்த ஜனநாயக நாடுகளில் கடை பிடிக்கப் படும் சிறப்பான முறைகள் பின்பற்றப் பட்டு சீரமைக்கப் பட வேண்டும்…
View More தேர்தல் ஆணையத்தின் அராஜகம்மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்
இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன. பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது, சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது, தொழிலுக்கான நிதியை உருவாக்குவது இவை இக்குழுக்களின் வேலைகள்… அங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினர்….
View More மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்இன்று வாக்களிக்கு முன்…
2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்..
View More இன்று வாக்களிக்கு முன்…நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!
தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது… இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லப் பெருமைப்படும் காலம் வர வேண்டும்…
View More நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2
பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார். இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது…. கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின் சராசரி தனி நபர் வருமானம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. மாநில மக்கள் தொகையில் வேலைவாய்ப்பின்மை ஒரு சதவீத அளவிலேயே உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்த மற்ற எல்லா மாநிலங்களையும் விட மோதியின் குஜராத் முன்னணியில் உள்ளது…
View More மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1
ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர் ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்…. சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள்…
View More மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1மோடி திருமணத்தை மறைத்தாரா?
இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா…
View More மோடி திருமணத்தை மறைத்தாரா?புத்தாண்டில் ஒரு புது சபதம்!
சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில்…
View More புத்தாண்டில் ஒரு புது சபதம்!