உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…
View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?Tag: பாரதிய ஜனதா கட்சி
கோரக்கர் வழிவரும் யோகி ஆதித்தியநாத சித்தர்
தமிழ்நாட்டில் சித்தர் மரபு என்றால் அது புரட்சிகர ஆன்மீகம் என்பது போல ஒரு பிம்பம் உள்ளது. இமயமலை “நவநாத” சித்தர்களின் மகாகுரு கோரக்நாதர் தான் தமிழில் கோரக்கர் ஆகிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் சித்தர் பீடத்தின் தலைவர். ஆனால் அவரைக் குறித்து கீழ்த்தரமான வசைகள், அவதூறுகள், வெறுப்பு இங்கு பரப்பப் படுகிறது. அதைக் குறித்து ஒரு கண்டனம் கூட கிடையாது, மாறாக “சித்தர்” ஆசாமிகளும் கூட இதில் சேர்ந்து கொள்ளும் கொடுமை தான் இங்கு நடக்கிறது…
View More கோரக்கர் வழிவரும் யோகி ஆதித்தியநாத சித்தர்சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலை
அண்ணாமலையின் பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல. இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று நேரில் அறிந்து வரவும், ஆறுதல் சொல்லவும், அபயக்கரம் நீட்டவும். அதன் பின்னான அரசியல் ஆக்கங்களைச் செய்யவும் ஓர் அருமையான வாய்ப்பாக இந்தப் பயணம் அவருக்கு அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அழைப்பை திமுக ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? உள்மனது சொல்லுகிறது, முடியாது. அங்கே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் கிடைக்குமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது..
View More சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலைபாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்
1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா…
View More பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்
ஐந்து மாநிலங்களிலும் ஐந்து விதமான தீர்ப்புகள். இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் மகிழ்ச்சி அடையவும் வருத்தம் கொள்ளவும் பல முடிவுகளை அளித்திருக்கிறது எனில் மிகையில்லை.. பல தசாப்தங்களாக இக்கட்சிகளின் பிடியில் இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக இப்போது இரண்டாவது பிரதானக் கட்சியாகி இருக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சோகத்திலும் ஆறுதல்… தமிழகத்தில் கருணாநிதியின் நேரடி வாரிசான ஸ்டாலின் தனது அரசியல் தலைமையை நிரூபிக்கும் கட்டாயமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் அடுத்த தலைமை தானே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தன. இந்தச் சோதனையில் இருவருமே வென்றுள்ளனர்…
View More ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்
பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….
View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!
இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான முழுமையான மதிப்பெண்களை மக்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்… குஜராத், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக ஈட்டி இருக்கிறது. சுமார் 200 தொகுதிகளில் 50 சதவிகிததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குவிகிதமும் 38 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது….
View More 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?
எனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்… அண்ணல் அம்பேத்கர் தீர்க்கமான பார்வையுடையவர். இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தவர். அதனால் இவற்றைப்பற்றி இன்று பிரச்சாரம் மையம் கொண்டிருப்பதால் அண்ணல் அம்பேத்கர் இருந்திருந்தால் இன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார் என்பதை அலச வேண்டியுள்ளது…
View More இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்
ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட… நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்… ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும்….
View More நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்