முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா உடனான தொடர்பு தமிழ்ஹிந்து இணையதளம் மூலமாகவே கிடைத்தது. எனது அனுபவங்களையும், பேராசிரியர் ஐயாவிடமிருந்து நான் கற்றவற்றின் பயன்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்… எனது நண்பர்கள் வட்டத்தில் பிள்ளைத்தமிழ் தொடர்பான செய்திகள் வேண்டுமெனில் என்னைத்தொடர்பு கொள்வது வழக்கம். இசை நிகழ்ச்சிகளில் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை யாருமே பாடுவதில்லை எனும் குறை எனக்கு இருந்து வந்தது…
View More சிவமாக்கும் தெய்வம்Tag: பிள்ளைத் தமிழ்
சிவபிரான் சிதைத்த சிற்றில்
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…
View More சிவபிரான் சிதைத்த சிற்றில்குழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]
குழந்தையின் வாய்முத்தம் உலகில் நாம் அடையும் வேதனைகள், வருத்தங்கள் அத்தனையையும் துடைத்து நீக்கிவிடும் தூய்மையுடையது… பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் திருவாயினுடைய பெருமையைப் பேசுவது பிள்ளைத்தமிழின் முத்தப் பருவம்… அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தாய்தந்தையரோ அல்லது தாத்தா பாட்டியோ தமக்கு மகவாய் வந்து பிறந்துள்ளனர் என்று மகிழ்வுடன் நினைந்து குழந்தைகள் மீது காதல் கொள்வது மக்கள் இயல்பு… ஆபிரகாமிய மதங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு, பரம்பொருளுக்கு மானுடக் குழந்தைகளின் இயல்புகளைக் கற்பித்துக் குழந்தைகளைப் பாராட்டிச் சீராட்டிக் கொஞ்சி வளர்க்கும் தாயன்பையே பத்திநெறியாக தெய்வானுபவமாக மாற்றிக் கொள்ளும் விரகினைப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் நமக்கு அளித்துள்ளது…
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]குழவி மருங்கினும் கிழவதாகும் – 4
குழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள்… தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘நன்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும்…. அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருநிலைநாயகி! கொட்டுக சப்பாணி….கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா? ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே?….
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 4குழவி மருங்கினும் கிழவதாகும் – 3
..உறங்கும் நேரம் கழிந்தும் கண் விழித்திருக்கும் குழந்தையிடம் தாய் அவனை உறங்கச் செய்யத் தான் அவனுக்குச் செய்த சீராட்டுக்களையெல்லாம் வரிசையாகக் கூறி, உரிய நேரத்தில் உறங்குவாய் என்ற எதிர்பார்ப்பில் இவற்றைநான் செய்து முடித்தேன், ஆனால் நீ இன்னும் உறக்கம் கொள்ளாமல் மழலை பேசிக்கொண்டு விழித்துக் கிடக்கின்றாயே எனப் பாசம் கலந்த சலிப்புடன் பேசுகின்றாள்…
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 3குழவி மருங்கினும் கிழவதாகும் -2
செங்கீரைப் பருவம்… தவழ்ந்த குழந்தை எழுந்து இருகைகளையும் ஊன்றிக்கொண்டு உட்காரத் தொடங்கும். தவழும்போதும் இருமுழங்கால்களையும் இருகரங்களையும் ஊன்றித் தலையை இருமருங்கும் ஆட்டும். வாயில் எச்சில் ஒழுக இனிய ஒலியெழுப்பத் தொடங்கும். தன்னுடைய தாய் எப்படியெல்லாம் தலையசைத்துப் பேசுகின்றாளோ அதைப்போல அதுவும் தலையை அசைத்து ஏதோ ஒலியை எழுப்ப முயற்சியைச் செய்யும். போலச் செய்தல் குழந்தையின் இயல்பு… இவ்வாறு தாம் பெற்ற குழந்தைகளுடன் உரையாடி மகிழ்தலையே தெய்வானுபவமாக மடைமாற்றம் செய்துகொள்ளும் வித்தகத்தினைப் பிள்ளைத்தமிழ் நூல்கள் கற்பிக்கின்றன…
View More குழவி மருங்கினும் கிழவதாகும் -2குழவி மருங்கினும் கிழவதாகும்
திருமால் தம் மார்பில் காடுபோல் துழாய்மாலையை அணிந்துள்ளார். அதிலிருந்து வழியும் தேன் வெள்ளம் பாய்தலால் வழியெல்லாம் சேறாய் கழனிபோலாக,. அத்தகைய சேறான வழியில், கமலத்தணங்காகிய திருமகளின் கை தன் கையாகிய அணையை முகந்து செல்ல ( திருமால் தம் கையை அணையாகக் கொண்டுதான் பள்ளி கொள்கிறார். அதனால் அது தலையணை போல் கையணை ஆயிற்று. திருமாலின் கைக்குள் திருமகள் தன் கையை நுழைத்துத் தழுவிச் செல்வதால் அது முகந்து செல்வதாயிற்று) காதலர்கள் கைகோத்துதுச் செல்வதை மனக் கண்ணில் காண்க…
View More குழவி மருங்கினும் கிழவதாகும்