1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்… இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
அடல் பிகாரி வாஜ்பாய் என்ற இமயம் தேசிய அரசியலிலிருந்து விலகக் காரணமான நாசகார சக்திகளுடன் எந்த இணக்கமும் பாஜக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே, சரித்திர நினைவு உள்ளவர்களின் கருத்து…
Tag: மு.கருணாநிதி
அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)
ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை… அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை…
View More அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்
ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது
View More திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்போகப் போகத் தெரியும் – 34
‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்றான் நண்பன்.
திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
View More போகப் போகத் தெரியும் – 34