விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

விவசாயி கஜேந்திர சிங்கின் இந்த நிலைக்கு நிலக் கையகப் படுத்துதல் மசோதாவோ அல்லது பிஜேபியோ தான் காரணமா? ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்..தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா? கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்… கேஜ்ரிவால்ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும்? ஏன் தற்கொலை நடந்தபின்பும் அவர் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்?…

View More விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன….. இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி.

View More நம்மாழ்வார்

பசுமைப் புரட்சியின் கதை

அந்த நண்பர்  விவசாயி  மகன் .   அக் கணம்  நான்  அந்த  நண்பர் மீது  பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி –   அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது… நமது  வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை  என அது  எதிர்கொண்டு  முன்னகர வேண்டிய  சவால்கள் மீதும்  கவனம் குவித்து, திறன்வாயந்த  அடிப்படை நூலாக  வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம்  அவர்கள் எழுதிய ”பசுமைப் புரட்சியின் கதை”. நூலின் சில பகுதிகளை  கண் கலங்காமல் , குரல்வளை அடைக்காமல் கடக்க முடியாது… உலகப் போருக்கு  கண்டடையப் பட்ட  ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி  முறையும் , கால்நடைகளுக்கான  தீவனப் பற்றாக்குறையும்,  கன ரக உழவு முறைகளின்  தாக்கமும்  எவ்வாறு  நமது  விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று  நூல் பல்வேறு ,தரவுகள்  வழியே சொல்லிச் செல்கிறது….

View More பசுமைப் புரட்சியின் கதை

விவசாயிகளைப் பாதுகாப்போம்

விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது….ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. ‘வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…

View More விவசாயிகளைப் பாதுகாப்போம்

திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா

மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி… பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயிகளாலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் இன்றும் அழியாமல் பாதுகாப்பப் பட்டு பயிரிடப் பட்டு வருகின்றன…. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 63 வகையான பாரம்பரிய நெல்விதைகள் 3000 உழவர்களுக்கு வழங்கப் பட உள்ளது… அழைப்பிதழ் கீழே, அனைவரும் வருக…

View More திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா

திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது… அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின… இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..

View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]