இங்கிலாந்தின் முதல் இந்து பள்ளிக்கூடம்

First Hindu school in UKமேளம் கொட்ட, வேதம் முழங்க இங்கிலாந்தின் முதல் இந்து பள்ளிக்கூடத்தின் பூமி பூசை நேற்று நடந்தது.

லண்டனின் வடக்கே ஹாரோ நகரில் உள்ள இந்த பள்ளியின் பெயர் கிருஷ்ண-அவந்தி ஸ்கூல். 90 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த பள்ளியில் வரும் செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்க உள்ளன. இங்கு யோகா, சமஸ்கிருத பாடங்கள் விசேஷமாக வழங்கப்படும்.

சைவ உணவுப்பழக்கம் இந்த பள்ளியின் சிறந்த அம்சம். இதற்காக தனிப்பட்ட காய்கறிகளை இந்த பள்ளியே பயிரிடும். பாரம்பரியமான ஒரு இந்துக்கோவில் இந்த புதிய பள்ளியின் முகப்பில் நிறுவப்படுகிறது. இந்த பள்ளியில் 240 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.

இந்த பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்கள் சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களாகவும், குடிப்பழக்கம் இல்லாதவர்களாகவும் தினசரி பிரார்த்தனை செய்யும் குணம் உள்ளவர்களாகவும் இருக்க முதலில் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், பின் இது தளர்த்தப்பட்டு இந்து மதத்தில் ஒழுகி இந்து மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும் அனைவருக்கும் இங்கே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளிக்கு எதிர்பாராத அளவில் ஆதரவுகள் பெருகிவருகின்றன. ஹாரோ நகரின் 900 நபர்கள் இந்த பள்ளியை ஆதரித்து கடிதங்கள் அனுப்பியுள்ளார்கள்.

இந்த ஸ்கூல் iskcon அமைப்பினரால் நடத்தப்பட்டு ஆங்கிலேய அரசால் நிதி வழங்கப்படுகிறது. இது போன்று மேலும் இரண்டு பள்ளிகளை பார்னெட், லெசஸ்டர் நகரங்களில் அமைக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

https://www.expressindia.com/latest-news/–Bhoomi-Puja—performed-for-UK–s-first-Hindu-school/320172/

https://news.bbc.co.uk/1/hi/england/london/7441561.stm

https://www.hindu.com/thehindu/holnus/001200806071965.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *