மாற்றுமத சகோதரர் ஒருவர் என்னிடம் ‘எங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவோ தொண்டு அமைப்புகள் உள்ளன. நாங்கள் மருத்துவம் கல்வி ஆகிய தொண்டுகளை ஏழைகளுக்காக செய்கிறோம். ஆனால் இந்து மதத்தில் அத்தகைய செயல்பாட்டை காணமுடியவில்லையே. இதற்கு காரணம் இந்து மதம் கர்மம் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டிருப்பதுதான்’ என சொல்லுகிறார். அவர் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது. இந்துக்களின் தொண்டு நிறுவனங்கள் கூட மாற்றுமத அமைப்புகளின் தாக்கத்தால் ஏற்பட்டவைதானே? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
~ சொர்ணப்பன், மேட்டுப்பாளையம்
இந்தக் கேள்விக்கு இந்து தர்மம் சார்ந்த எண்ணிறந்த அமைப்புக்கள் ஆற்றும் தொண்டுகளைப் பட்டியலிடமுடியும்.
இதோ நீங்கள் இணைந்து சேவை செய்ய
சில இந்து சேவை அமைப்புகள் பற்றிய விவரங்கள்
இந்து மதத்தின் சேவை அடிப்படையைப் பற்றி உங்களுக்கு எடுத்துக் காட்டிவிட்டு ஒரு சில தொண்டு நிறுவனங்களின் உன்னத சேவைகளைப் பற்றி விளக்கிச் சொல்ல முற்படுகிறேன்.
இந்து தருமத்தில் தொண்டு நிறுவனம் இல்லை என்பதும், ஊழ்வினை-கர்மம் கோட்பாட்டால் ஒருவித “விதியே” என வாழும் போக்கு ஏற்பட்டுவிட்டது என்றும் சொல்வது கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பிரச்சாரமாகும். இது காலனிய சக்திகளால் செய்யப்படும் பிரச்சாரம். துரதிர்ஷ்டவசமாக நம்மவர்களிலேயே படித்தவர்கள் சிலரும் இதனை நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்ன? இந்துக்களின் தொண்டு நிறுவனங்கள் மேற்கத்திய சமய பிரச்சார அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களை அமைப்புரீதியில் ஒத்திருக்கவில்லையே தவிர குவித்தன்மையற்ற விதத்தில் ஊர் ஊராக தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டன. குடும்பங்களில் கூட தொண்டு என்பது கடமையாக செயல்பட்டது. இவற்றின் உள்ளார்ந்த தொண்டு மதிப்பீடுகள் சரியாக மதிப்பிடப்பட்டதே இல்லை.
உதாரணமாக, இந்துக்களை தாக்கி அவர்கள் “மூடநம்பிக்கையாளர்கள் கல்லை வணங்குபவர்கள்” என்றெல்லாம் எழுதும் ஒரு ஐரோப்பிய மாற்றுமதத்தவர் இந்துக்களின் தொண்டு அமைப்பை பின்வருமாறு வர்ணிக்கிறார்:
“இந்துஸ்தானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனிநபர்களால் ஏற்படுத்தப்பட்ட தொண்டு அமைப்புகளை நீங்கள் காணலாம். நீர் நிலைகள் இளைப்பாறும் இடங்கள் கிணறுகள் உணவு அளிக்கும் இடங்கள் என …அவை அனைத்து மனித குலத்துக்கு நன்மை அளிக்கவேண்டும் (They are intended for the benefit of mankind) ஆயிரக்கணக்கான சக மக்களின் நன்மைக்காக – அந்த ஒரு குளம் இல்லாவிட்டால் தண்ணீருக்காக தவித்துவிடும் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக – தன் செல்வத்தை செலவு செய்து குளங்களை வெட்டும் இந்த தனி மனிதர்களை மனிதகுலத்துக்கு நன்மை செய்பவர்கள் என சொல்லத்தான் வேண்டும். இவ்வாறு மானுடகுல நன்மைக்காக தொண்டு செய்வதென்பது இந்துக்களின் எந்த அளவு மதிக்கப்படுகிறது என்றால் பெரும் அளவில் செல்வமில்லாதவர்கள் கூட இத்தகைய தொண்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மரத்தோரங்களில் தண்ணீர் பந்தல்கள் வைக்கிறார்கள். யாசகர்களுக்கு உணவு அளிக்கிறார்கள்….ஐரோப்பா இந்த விஷயங்களை இந்துக்களிடமிருந்து சிறிதாவது பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.”[1]
மருத்துவ துறையிலும் இந்துக்களின் தொண்டும் பங்களிப்பும் சிறிதும் குறைந்தது அல்ல. தொழு நோயாளிக்கு சைதன்ய மகாபிரபு சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். இந்திய கிராமங்கள் பலவற்றிலும் அம்மை நோய் தடுப்பு குழந்தைகளுக்கு அளிப்பதற்கு தொண்டுள்ளம் கொண்ட பிராம்மணர்கள் ஊர் ஊராக சென்று பாரம்பரிய நோய் தடுப்பு முறையொன்றினை பயன்படுத்தி வந்தார்கள். இந்த முறையைக் கொண்டு பின்னாளில் ஜென்னர் இன்று புகழ்பெற்றிருக்கும் அம்மை தடுப்பு ஊசியை உருவாக்கினார். 1767 இல் வங்காளத்தில் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வந்ததை ஹோல்வெல் என்பவர் குறிப்பிடுகிறார். 1805 இல் அன்றைய பிரிட்டிஷ் சுகாதார தலைமை அதிகாரியாலும் இந்த முறை செயல்பட்டு வருவது ஒத்துக்கொள்ளப்பட்டது. வரலாற்றாசிரியர் நெயில்ஸ் ப்ரிம்னஸ் (ஆர்த்தஸ் பல்கலைக்கழக வரலாற்று துறை டென்மார்க்) தமது ஆராய்ச்சிக்கட்டுரையில் இந்த தரவுகளை அளிக்கிறார். அவர் கூறுகிறார்: “Despite this recognition of the indigenous roots of variolation, the colonial authorities from the outset sought to detach the practice from its Indian context.”[2] அதாவது ஜென்னரின் தடுப்பூசி முறை இந்து மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட அதனை அந்த இந்திய சூழலிலிருந்து காலனிய அதிகாரிகள் முழுவதுமாக அறுத்தெறிந்தனர்.
ஆக, இந்து தொண்டு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டன. எவ்வித உள்நோக்கம் – உதாரணமாக மதப்பிரச்சாரம்- ஆகியவை இல்லாமல் செயல்பட்டன. எனவே ஏதோ மேற்கத்திய மத நிறுவனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவது போல கூறுவது தவறான பார்வை ஆகும். எட்மண்ட் வெப்பர் எனும் இறையியல் பேராசிரியர் இதனை விளக்குகிறார்:
“இந்தியாவின் பாரம்பரிய அமைப்பில் தனிமனிதர், உறவுமுறைகள், சாதி-பந்தங்கள், சமுதாய தொண்டு ஆகியவை செயலாற்றின. சிறிய அளவுக்குள் இயங்கி வந்த இந்த அமைப்புகளின் பங்களிப்பின் பொருளாதார மதிப்பு இன்று வரை கணக்கில் எடுக்கப்பட்டு எந்த ஆராய்ச்சியும் நான் அறிந்தவரை நடைபெறவில்லை. அது கணக்கிடப்பட்டால் அதன் மதிப்பு மிக மிக பெரியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பாரம்பரிய தொண்டு அமைப்புகள் என்ன ஆயின (அவை இருட்டடிப்பு செய்யப்பட்டது) மிகக் கொடுமையான காலனிய வரலாற்றுப் பொய் உருவாக்கம் ஆகும். காலனிய மத பிரச்சாரகர்கள் இந்திய பாரம்பரிய தொண்டு நிறுவனங்கள் மதிப்பில்லாதவை போலவும் தாம் மட்டுமே தொண்டு செய்பவர்கள் என்றும் ஒரு சித்திரத்தை உருவாக்க முனைந்தார்கள். இதை சில படித்த இந்தியர்களும் நம்பிவிட்டார்கள்.”[3]
அண்மைகாலங்களில் இந்து அமைப்புகள் செய்யும் சேவையானது இந்த பாரத தொண்டு பாரம்பரியத்துடன் ஒட்டியதாகவே கருதப்பட வேண்டுமே அல்லாது அவை மேல்நாட்டு மத பிரச்சார அமைப்புகளின் தாக்கத்தால் ஏற்பட்டவை என கருத இயலாது. உதாரணமாக, கரும வீரர் காமராசர் அவர்களின் மதிய உணவு திட்டம், பின்னர் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் சத்துணவு திட்டமென கொண்டு வரப்பட்டது. இது நவீன உலகில் வளரும் நாடுகளுக்கு இந்து தொண்டு சித்தாந்தத்தின்/அமைப்புகளின் பங்களிப்பாகும்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையே நம் இந்து தர்மத்தில் வேரூன்றி நிற்கும் “உணவினை மக்களுடன் பகிர்தல் (பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்)” என்னும் பாரம்பரியமாகும். “அன்னம் பஹு குர்விதா தத் விரதம்… ந கஞ்சன வஸதௌ ப்ரத்யாசஷீத தத் விரதம்” என்பது உபநிஷத்தின் சொல். அதாவது, “உணவினை மிகுந்த அளவில் உற்பத்தி செய்வதும் அதனை பறையறிந்து தெரிவித்து உலக மக்களுடன் பகிர்ந்து கொள்வதும் மனித குலத்தின் தவிர்க்கமுடியாத தவிர்க்க கூடாத விரதங்கள்” என வேதம் இந்துக்களுக்கு ஆணையிடுகிறது.
இந்த பாரம்பரிய ஞானத்தின் சிறந்த தமிழ் இலக்கிய உதாரணமாக ஆபுத்திரனும் மணிமேகலையும் விளங்குகிறார்கள். வேத மரபினை பின்பற்றி மாணாக்கர்களுக்கு இலவச பால் வழங்கும் தொண்டினை ஏழைக்குழந்தைகளுக்கு நாள் தோறும் பசும் பால் கொடுக்கும் இந்த ஷீரதானத்தை கலவல கண்ணன் செட்டி செய்து வந்தார்.தன் வாழ்நாளுக்கு பின்னரும் இந்த தானம் தொடரவேண்டுமென அவர் தன் உயிலிலும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இந்த இலவச பால் பராமரிப்பு இன்றளவும் கண்ணன் செட்டி வாழ்ந்த இல்லமாகிய கலவலகிரகத்தில் நடந்து வருகிறதாம்.[4]
இம்மரபே மிகச்சிறந்த சமுதாய புரட்சியாக கர்மவீரர் காமராஜரால் கொண்டு வரப்பட்டது. பின்னர் இதற்கு புத்தெழுச்சி ஊட்டியவர் வள்ளலாக மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார். இன்று தமிழ்நாடு மக்கள்-நல்வாழ்வு அளவையில் அகில இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக உள்ளதென்றால் அதற்கு இந்த வேதபாரம்பரியத்திலிருந்தும் முகிழ்த்த உணவினை பகிர்ந்து தேவைப்படுவோருக்கு அளிக்கும் தொண்டு சித்தாந்ததத்திலிருந்து உருவான தொண்டுதான் காரணம்.[5] இதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றுள்ளது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். அதன் அக்ஷயபாத்திரம் திட்டத்தின் மூலம் மத பேதமில்லாமல் அனைத்து அரசு பள்ளி குழந்தைகளுக்கும் ஊட்ட சத்து மிக்க உணவு அளிக்கப்படுவதுடன் அதனால் சத்துமிக்க உணவால் குழந்தைகள் கல்வி தரம் நன்றாக மாறுவதையும் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.பெங்களூரில் ப்ரேஸர் டவுணுக்கு அப்பால் உள்ள உருது பள்ளிகளில் பயிலும் 3000 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குழந்தைகளுக்கு இந்த இயக்கத்தின் அக்ஷயபாத்திர திட்டத்தின் மூலம் உணவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[6] 14 பிரதேசங்களில் ஆறு மாநிலங்களில் ஏறத்தாழ 4500 பள்ளிகளில் 8,53,000 குழந்தைகள் இதனால் ஒவ்வொருநாளும் பயனடைகிறார்கள்.
புகழ்பெற்ற ஏசிநெல்ஸன் புள்ளியியல் நிறுவனம் அக்ஷயபாத்திரம் விளைவு குறித்து கூறுகிறது:
“… enrolment data shot up during the first year of program implementation across almost all locations, significant improvement in school attendance and the retention of students in school, and better student performance after implementation of the Akshaya Patra school meal program”.[7]
மருத்துவ துறையிலும் 50க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்துகளை (ஆரியோமைஸின், wide spectrum anti-bacterial medicine ஆகியவை உட்பட) கண்டுபிடித்த யெல்லப்ராத சுப்பாராவ் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவரின் உந்துதலால் மனிதசேவையே மகேசன் சேவை என மருத்துவ துறையில் சென்றவர். அரவிந்த் கண் மருத்துவமனை இன்று ஆசியாவிலேயே தலை சிறந்த தொண்டு நிறுவனமாக சர்வதேச அளவில் போற்றப்படுகிறது. அதுவே மிக அதிக அளவில் கண் மருத்துவ முகாம்களை நடத்துகிறது.
ஜெய்பூர் செயற்கை கால்கள் எவ்வித காப்பீட்டு உரிமையும் பெறாதவை ஆகும். இதன் விளைவாக அவை பல இலட்சம் மானுடகுடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளன. இதனை உருவாக்கிய ஸ்ரீ ராமச்சந்திர ஷர்மா சேத்தி ஆகியோர் இதற்காக எவ்வித காப்பீட்டு உரிமையும் கோரவில்லை. ஏனெனில் நரசேவையே நாராயண சேவை என்பதே அவர்களது வாழ்க்கை இலட்சியமாக அமைந்துள்ளது. இன்று 18 நாடுகளில் இந்த அமைப்பு இயங்குகிறது. கால்கள் இழந்த 20000 பேருக்கு ஜெய்ப்பூரில் மட்டும் இந்த செயற்கை கால்கள் பொருத்தப்படுகின்றன.[8] ஏன் இந்த ஜெய்ப்பூர் கால் அறிவு-காப்புரிமை பெறவில்லை? இதனை உருவாக்கிய ராமச்சந்திர ஷர்மா இன்றும் காலையில் 4:30 க்கு எழுந்து பகவானை பிரார்த்தித்து பசுவுக்கு பால் கறந்து எளிய வாழ்க்கையே வாழ்கிறார்.
“பகவான் மகாவீர் விகலங்க் சகாயதா சமிதி” எனும் அமைப்பு மூலம் ஜெய்ப்பூர் கால்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது பயிற்சி பட்டறைகளும் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. வேத இந்துவான ராமசந்திரா ஒரு ஜைன அமைப்புக்கு தம் தொழில்நுட்பத்தை அளிக்கிறார். அது உலகெங்கும் போலியோவாலும் கண்ணிவெடிகளாலும் கால்களை இழந்த மக்களுக்கு பயன்படுகிறது. “மக்களின் முகத்தில் மலரும் புன்னகையே எனக்கு ஊதியம். காப்புரிமை பெற்றால் நான் பணக்காரன் ஆகலாம். ஆனால் மக்களின் முகத்தில் தெரியும் இந்த சந்தோஷத்தை பார்க்கமுடியுமா?” என கேட்கிறார் ராமச்சந்திர ஷர்மா.[9]
இவை தவிர ஓராசிரியர் பள்ளிகள் மூலம் வனவாசிகளுக்கு கல்வி சேவை நடத்தப்படுகிறது. 24006 ஓராசிரியர் பள்ளிகள் மூலம் 720182 வனவாசி மாணவர்கள் பயனடைகிறார்கள்[10] விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் வளங்குன்றா வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை கிராமமக்களுக்கு வழங்குகிறது. இதற்காக அதற்கு “ஆஷ்டன் சர்வதேச சூழலியல் விருது” வழங்கப்பட்டது.[11]
இதில் நூற்றில் ஒரு பகுதி செய்திருந்தாலும் மேற்கத்தியராக இருந்திருந்தால் இந்நேரம் எத்தனை புகழ் எத்தனை பாராட்டு கிடைத்திருக்கும்?
இதுதான் இந்து தருமத்தில் தொண்டு செய்வதன் சிறப்பு தன்மை. நாம் தொண்டு செய்கிறோம் – எந்த உள்நோக்கமும் இல்லாமல், அனைவருக்கும் தொண்டு செய்கிறோம் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தொண்டு செய்கிறோம். விளம்பரங்கள் இல்லாமல். இதனை பிற மத சகோதரர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய தொண்டு பாரம்பரியத்தையும் அதன் நிகழ்வையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொண்டு ஸ்தாபனங்களுடன் நீங்களும் ஏன் ஏதாவது ஒருவிதத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கூடாது?
இதோ நீங்கள் இணைந்து சேவை செய்ய
சில இந்து சேவை அமைப்புகள் பற்றிய விவரங்கள்
சான்றுகள்:
- [1] John Howison, European Colonies, in Various Parts of the World:Aborgines of India, ஆக்ஸ்போர்டு:1834, பக்.62-3)
- [2] நெயில்ஸ் ப்ரிம்னஸ், Variolation, Vaccination and Popular Resistance in Early Colonial South India, Med Hist. 2004 April 1; 48(2): 199–228.
- [3] எட்மண்ட் வெப்பர், Charity in Inter-religious Perspective, Journal of Religious Culture, No. 46 (2001), ப்ராங்க்பர்ட் பல்கலைக்கழகம்
- [4] ராண்டார் கை எழுதிய அன்றைய சென்னை பிரமுகர்கள் 5-1-1992 தினமணி கதிர்
- [5] Raja M , India fights illiteracy with lunch, மே 20 2008:
“In January 2008, a national conference on human development ranked Tamil Nadu among the top three states in India, after Kerala and Punjab. A senior bureaucrat Naresh Gupta attributed Tamil Nadu’s growth to various poverty alleviation and development programs in the state as well as to the noon-meal scheme.”
- [6] Akshaya Patra program, https://www.bangalorebest.com
- [7] https://www.akshayapatra.org/documented_impact.html
- [8]தர்ஷன் தேசாய், Helping the disabled stand on their feet, இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 22 1998
- [9] டிம் மெக்ரிக், The $28 Foot , டைம்ஸ் – Heroes of Medicine
- [10] https://ekalindia.org
- [11] https://www.ashdenawards.org/winners/vknardep
அற்புதமான கட்டுரை. மேலும் பல இந்து சேவை இயக்கங்களின் பட்டியலையும் இதில் இணைக்க வேண்டுகிறேன்.
இலைமறை காயாக ஒளிந்திருக்கும் உண்மைகளை அனைவரின் பார்வைக்கும் வெளியே கொண்டு வருகிறது இந்த கட்டுரை. தொண்டு என்பது ஒவ்வொரு குடும்பத்தோடும் ஒன்றியிருந்தது. தீபாவளி, பிறந்த நாள், பொங்கலுக்கு நமக்கு தெரிந்தவர்களுக்கு உதவி செய்து அவர்கள் இன்புறுவதை பார்த்து இன்புறுவதும் ஒரு தொண்டு தான். நம் கலாசாரத்தை நன்கு ஆராய்ந்தால் தொண்டும், சேவை மனப்பான்மையும் ஒவ்வொரு செயலிலும் வியாபித்திருப்பதை உணரலாம். பிறருக்கு உதவி செய். அதை உடனே மறந்து விடு என்று தான் திருக்குறளும் கூறுகிறது. செய்த உதவியை எப்போதும் சுட்டி காட்டி பேசிக் கொண்டே இருக்க கூடாது. மேற்கத்தியவர்கள் அளவுக்கு அதிக அளவில் விளம்பரம் செய்பவர்கள். தாங்கள் செய்யும் சிறு தொண்டை முதலில் உலகம் முழுதும் தண்டோரா போட்டு விட்டு தான் பின்னர் செய்வர். இது போன்ற பழக்கம் அவர்கள் கலாசாரத்திலேயே ஒன்றிப் போனது. அதிக விளம்பரம் இருக்கும் சிறு தொண்டிற்கும், விளம்பரமே இல்லாத அன்றாட செயல்களோடு வியாபித்திருக்கும் தொண்டும் இன்று இணையத்திலும் பிற ஊடகத்திலும் சந்தித்து கொள்கின்றன. இதன் விளைவே இது போன்ற மாயத்திரை உருவாக காரணம். இத்திரை கால சுவட்டில் வேகமாக மறையும். இந்த கட்டுரை அதற்கு ஒரு படி.
I m very happy to know that tamil hindus are uniting.Let us forget the regional ; linguistic ;casteist differences forever to protect our Sanatan Dharma.I from Goa Salute you.Thank you.
I really liked and appreciated this Hindu Charity
Organisation and its article.
Excellent narration and clearly stating that how
the westerns advertise everything which we dont.
sometimes i feel we need to advertise not for promoting
our selves, just to show the world how good
we are/and our great services to the humanity.
My friend been to EKAL VIDYALAYA SCHOOL – SINGLE TEACHER
SCHOOL IN TAMIL NADU – SHE JUST APPRECIATED THEIR GREAT SERVICE.
THE OTHER ORGANISATION DOING GREAT SERVICE IS
AIM FOR SEVA – SEVA MOVEMENT STARTED BY SWAMIJI DAYANANDAJI
Aravindan Neelakantan Sir,
It is a eye opening article. Your dedication to Hinduism is admirable.
Dear Aravindhan,
I had already mailed you on this but since you had asked for a comment I am writing here. Also adding some after thoughts.
First of all it is a nice post. It is wrong to say that Hinduism does not advocate Charity. The difference between other charities and Hindu charity is the Organizational nature of the latter and the individualistic nature of the Hindu charities, as you have rightly pointed out.
It is a bit far fetched to bring in the Government’s mid day meals system into this fold, in that case you should be willing to accept the mistakes of these governments as failure of Hinduism. I am sure that is not the case. But it is a nice thought indeed.
A funny way of looking at Christian charities is that for Christian organizations Charity is almost instinctual. Most of them survive on creating and maintaining ‘Charitable Organizations’. This is almost a natural instinct for them. I do not see that as a positive.
The point that they have ‘conversion’ motive behind all these charities is arguable. Just match the number of christian charities against the number of conversions happening. I do not see a direct proportion between them. This also brings me to the next point that the ratio between charities and population would be so deviant in Christianity and Hinduism.
To highlight the great stuff done in the name of Hinduism is one thing but to ignore the great contributions of Christian charities is another. You should cut some slack and acknowledge them.
But then if you did that you would not be Aravindhan Neelagandan I guess 🙂 just kidding.
// But then if you did that you would not be Aravindhan Neelagandan I guess just kidding.//
Same. Same.
If not lamented about the direct proportion between conversion and charity, then it ain’t Cyril’s comment !!
Seriously humourous !!
//If not lamented about the direct proportion between conversion and charity, then it ain’t Cyril’s comment !! //
🙂 True. But is that all you could comment from my comment?
அன்புள்ள சிறில்
தமிழ் நாடு அரசின் மதிய உணவுத் திட்டத்தை அரவிந்தன் இந்துக்களின் பங்களிப்பாகக் குறிப்பிட்டதில் தவறில்லையென்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்துக் கோவில்களின் வருமானம் அனைத்தையும் அரசாங்கமே எடுத்துக் கொள்கிறது. அந்த வருமானத்தில் இருந்து மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கோவில்களுக்கு உதவுவதில்லை மாறாக கோடிக்கணக்கான பணம் அரசாங்கத்தின் சத்துணவு போன்ற சமூக நலத் திட்டங்களுக்கே செல்கின்றன. ஆகவே ஒவ்வொரு இந்துவுக்கும் கோவிலுக்குக் கொடையளிக்கும் காணிக்கை அரசாங்கம் வழியாக ஏழை மாணவர்களுக்கு சத்துணவாகவும், அரசு பள்ளிகளை நடத்தவும், அரசின் பிற சமூக நலத் திட்டங்களைச் செயல் படுத்தவுமே பயன் படுத்தப் படுகின்றன. கோவில்கள் வழியாக குவியும் நிதி இந்துக் கோவில்களின் நலன்களுப் பயன் படுத்தப் படுவதில்லை மாறாக அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவுமே செலவழிக்கப் படுகிறது. ஆகவே இந்தத் திட்டங்கள் யாவுமே இந்துக் கோவில்களின் பங்களிப்பே என்று யாரும் சொன்னால் அதில் தவறு ஏதும் இல்லை. பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் வருமானங்களையும் தமிழ் நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான சிதிலமாகிப் போய் ஒரு வேளை பூஜைக்கே வழியில்லாத நிலையையும் ஒப்பிடும் பொழுது கோவில்களில் குவியும் உண்டியல் பணம் அரசாங்கத்தின் பிற திட்டங்களுக்கே செல்வது புரியும்.
மாறாக ஒரு சர்ச்சில் வரும் வருமானமோ, ஒரு தர்காவில் குவியும் நிதியோ அரசாங்கத்தின் கைகளில் செல்வதில்லை. சர்ச்சுக்களும், மசூதிகளும் அவர்களிடம் குவியும் உண்டியல் நிதி கொண்டு அவர்களே தத்தம் சமூக சேவைகளை பிரதியுபகாரம் கருதி தன்னலத்துடன் தங்கள் மதத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமே செலவு செய்து கொள்கிறார்கள். ஆகவே அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பிற மதத்தினர் தத்தம் வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாகப் பங்களிப்பதில்லை மாறாக இந்துக் கோவில்கள் வழியாக அளிக்கப் படும் நிதியை பிற மதத்தினரும் அனுபவித்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆகவே இந்துக்களின் தர்மம் கோவில் வழியாக அரசிடம் சென்று அதிகாரிகள்/அரசியல்வாதிகள் சாப்பிட்டது போக அனைத்துத் தரப்பாரின் முன்னேற்றத்திற்கும் பயன் படுகிறது. இதுவும் ஒரு வகை தர்மமே. ஆனால் இந்துக்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுவதில்லை என்ற அவப் பெயரே மிஞ்சுகிறது. அரசாங்கம் நடத்தும் கல்வி ஸ்தாபங்களும், மருத்துவ மனைகளும், சத்துணவுகளும் ஒவ்வொரு இந்துவும் கோவில் உண்டியலில் செலுத்தும் காணிக்கையினாலும் நடக்கின்றது என்ற உண்மையை உங்களைப் போன்ற விஷயம் அறிந்தோரே ஃபார் பெட்ச்டு என்று சொல்லும் நிலமைதான் இருக்கிறது என்பது வருத்தத்துக்குரியது.
அப்படி ஒவ்வொரு இந்துக் கோவிலில் குவியும் நிதியைக் கணக்கில் கொண்டால் இந்துக்களால் நடத்தப் படும் தர்ம ஸ்தாபங்களே இந்தியாவில் முதன்மையான தர்மஸ்தாபனங்களாக இருக்கும் உண்மை தெரிய வரும். அல்லது இந்துக் கோவில்களை அரசாங்கம் தன் பிடியில் இருந்து விடுவித்து இந்து அமைப்புகளிடம் ஒப்படைத்தால் அந்த அமைப்புகளும் மிகப் பிரமாண்டமான சேவைகளைச் செய்வார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
அரசாங்கம் இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதினாலேயே அவற்றை இந்து தர்ம சேவைகள் என்று குறிப்பிட வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எப்படி இந்து மதம் பொறுப்பாகும். பக்தர்கள் மனம் உவந்து பக்தியுடன் அளிக்கும் காணிக்கையை அரசு நல்ல திட்டங்களுக்குப் பயன் படுத்தினால் அது இந்து தர்மம் என்று சொல்லுகிறோம், ஊழல் செய்தால் அதற்கு இந்து தர்மம் பொறுப்பாகாது ஆனால் ஊழல் செய்பவன் ஆண்டவன் சந்நிதியில் தக்க தண்டனை பெறுவான் என்ற நம்பிக்கை மட்டும் உண்டு. நான் உண்டியலில் காசு போடுகிறேன் அதில் இருந்து செய்ய்யப் படும் நல்ல காரியங்களில் எனக்குப் புண்ணியம் கிடைக்கும் அதை வைத்துச் செய்யப் படும் ஊழல்களுக்கு அதைச் செய்யும் அரசியல்வாதி/அதிகாரி தண்டனை பெறுவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆகவே நல்லதற்கு இந்து தர்மம் பொறுப்பேற்கும் அல்லாததற்கும் அந்த மதம் பொறுப்பல்ல அதற்கு தண்டனை ஆண்டவன் கைகளில் உள்ளது.
ஆகவே மேற்கண்ட உண்மைகளின் படி தமிழ் நாடு அரசு போடும் சத்துணவில் ஒரு பங்கிலாவது இந்துக்கள் கோவில்களில் செலுத்தும் காணிக்கையும் இருக்கிறது என்பதே உண்மை, ஆகவே அரசாங்கத்தின் காரியங்களும் இந்துக்கள் செய்யும் தர்மத்தின் ஒரு பகுதியே. இதில் அரசாங்கம் தலையிடாமல் சர்ச்சுக்களுக்குக் கொடுத்ததைப் போல, மசூதிகளுக்குக் கொடுத்ததைப் போல பரிபாலன சுதந்திரம் அளிக்குமானால் இந்துக்களின் தர்மம் இதை விடச் சிறப்பாக அமையும். இந்துக்கள் போடும் உண்டியல் காசில் அரசின் திட்டங்களை நடத்தி ஓட்டு வாங்கிக் கொண்டு அதே கோவில்களையும் அதில் உறையும் தெய்வங்களையும் நிந்தனை செய்யும் நிலை தமிழ் நாட்டில் மட்டுமே காணலாம். இந்துக்களின் நிதி அரசாங்கம் மூலமாக பரோபகாரம் எதிர்பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் செல்கிறது. ஆனால் பிற மதத்தினர் அளிக்கும் நிதிகளோ எதிர் பலன் கருதி அவர்கள் மதத்தை மட்டும் வளர்க்கவும், அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றதிற்கும், மதம் மாற்றவுமே பயன் படுகிறது. பொது மக்கள் மனதில் அவர்கள் மட்டுமே தர்மம் செய்வது போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
வழிபாட்டுத் தலங்களில் அளிக்கப் படும் நிதி நல்ல காரியத்துக்குப் போனால் புண்ணியம் அல்லாத காரியத்துக்குப் போனால் பாவம் சம்பாதித்துக் கொடுக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இருந்தாலும் நான் உண்டியலில் போடும் பணத்தினால் ஒரு ஊழல் நடந்து விடக் கூடாதே என்பதற்காக நான் கோவில்களின் தேவைகளுக்கு நேரடியான உதவியும் , கஷ்டப் படும் பணியாளர்களுக்கு நேரடியான உதவியும் மட்டுமே செய்து வருகிறேன், உண்டியலில் பணம் போட்டு அரசியல்வாதி பிழைக்க வழி செய்வதில்லை. என் பணம் யாருக்குப் போகிறது என்பது எனக்கு நேரடியாகத் தெரியும். இந்துக்கள் உண்டியலில் காசு போடுவதைத் தவிர்த்து நேரடியாக கோவில்களின் நலத்திற்கும், கோவில் பணியாளர்களுக்கும் உதவ வேண்டும். உண்டியலில் காசு போடக் கூடாது மாறாக மேற்கண்ட இந்து தர்ம ஸ்தாபனங்களுக்கு நேரடியாக அந்தப் பணத்தை அளிக்கலாம் என்பதே என் கருத்து.
அன்புடன்
ச.திருமலை
திருமலை அவர்களுக்கு,
நீங்கள் கூறியுள்ளதில் எனக்கு உடன்பாடே.
எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்…
சுனாமிக்குப் பிறகு, நான் அப்போது பணிபுரிந்த ஒரு பன்னாட்டு நிறுவனம், அகில உலக அளவில் இருக்கும் தனது எல்லாப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தையும், அதற்கு நிகராக அதே அளவு அந்நிறுவனமும் ஒரு பெருந்தொகையை தன் பங்குக்குப் போட்டு, நாகர்கோவிலுக்கு அருகே உள்ள அழிக்கால் என்னும் சுனாமியால் மிக அதிகமாக பாதிக்கப் பட்ட கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை வளத்தை முன்னேற்றும் விதமாக 20 விசைப்படகுகள், 20 எஞ்சின்கள்,20 மீன்பிடிவலைகள் (60 குடும்பங்கள் பயனாகும் விதமாக)இலவசமாக வழங்கப்பட்டன.இந்த 60 குடும்பங்களை, அல்லது பயனாளிகளைத் தெரிவு செய்யும் வேலையை அங்கு உள்ள ஒரு சர்ச் செய்தது.அந்த கிராமத்தில் எல்லா மதத்தினரும் இருந்தாலும், அறுபது பயனாளிகளுமே கிறிஸ்தவராகவோ, அல்லது கிறிஸ்தவத்திற்கு மத மாற்றம் செய்யப் பட்டவராகவோ இருந்தது கண்டு ஆச்சரியமுற்றேன்.மதம் மாறினால், உனக்கு உதவி;இல்லையெனில் உனக்கு உதவமாட்டேன் என்கிற மாற்றாந்தாய் மனோபாவம். இதுவா உண்மையான சேவை?
இது போன்ற செயல்பாடுகள் தான் கிறிஸ்தவ சேவைகளை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தூண்டுகின்றன.
ப்ரகாஷ்,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. இதனை நானும் கண்டிருக்கிறேன்.
சீனு.
திருமலை,
உங்கள் விளக்கம் அருமை. அதில் உண்மை உள்ளதை உணர்கிறேன் அதே சமயம் விவாதிக்கக் கூடிய கருத்ததகவும் இது உள்ளது. ஒன்று அறநிலையத் துறை வருமானத்துக்கும் மதிய உணவுத் திட்டத்துக்கும் நேரடித் தொடர்புகளில்லை இரண்டு அறநிலையத் துறையின் வருமானம் பகுதியேனும் கோவில்களுக்கு பயன்படுத்தப்படுகிறது மூன்று அரசின் மற்ற திட்டங்களுக்கும் இந்த வருமானம் பயன்படுகிறது நான்கு அரசுக்கு பல மதத்தாரிடமிருந்தும் வருமானம் உள்ளது.
ஆனால் அரவிந்தன் சொல்ல வந்தது மதிய உணவு திட்டம் எனும் சேவையை அரசு அறிவித்தது இந்து தர்ம தத்துவங்கள்/விதிகளின்படி என்பது. இதைத்தான் அப்படியானால் அரசின் எல்லா நடவடிக்கைகளும் அப்படி இந்துமத தத்துவ அடிப்படையில் நிகழ்ந்தவையாக ஏற்க முடியுமா என்று கேட்டிருந்தேன்.
சர்ச்சுகளின் சேவைகள் தன்னலத்துடன் அவர்களுக்கு மட்டுமே சென்றடைகிறது என்பதுவும் விவாதத்திற்குரியது. கிறீத்துவ நிறுவனங்களினால் பலன் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் பலர். நிச்சயம் பலரும் சுயநலத்துடன், குழு மனப்பாங்கோடு செயல்படுவதுண்டு. இது சில இந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் இல்லையா? இல்லையென்றால் மகிழ்ச்சியே.
அன்புள்ள சிறில்,
மன்னிக்கவும். சிலகாலம் வேலைகளில் பிஸியாகிவிட்டேன். தங்கள் கேள்விக்கான விரிவான பதிலை அளிக்க முடியாமல் போய்விட்டது. மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அதற்கு முந்தைய அதன் வடிவம் ஏழை மாணவர்களுக்கு மதிய பால் வழங்குவதாக இருந்தது. மாணவர்களை போஷிக்க வேண்டிய பொறுப்பு சமுதாயத்தை சேர்ந்தது என்பது மிக தெளிவாக இந்து பாரம்பரிய எண்ணமேயாகும். குருகுல மாணவர்கள் அரசர்களின் பையன்கள் உட்பட வீதி வீதியாக சென்று பிச்சை பெறுவார்கள் என்பதை நாம் உபநிடதங்கள் மற்றும் இதிகாச புராணங்களில் படித்திருக்கிறோம். மாணவர்களுக்கு சமுதாயத்தை குறித்த அறிவும் சமுதாயத்திடம் நன்றி கடன்பாடும் அதே நேரத்தில் சமுதாயத்துக்கு அற உணர்வையும் வளர்க்கும் ஏற்பாடு இது. எனவே காமராஜரின் மதிய உணவு திட்டம் இந்து கோட்பாட்டின் ஒரு வளர்ச்சியே என்பது எனது வாதம். மதிய உணவு திட்டம் என்பது ஒரு தனித்தன்மை கொண்ட திட்டமாகும். சமுதாயம் மாணவர்களின் உணவுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் திட்டம். எனது தனிப்பட்ட எண்ணம் எல்லா மாணவர்களும் -வசதி உடையவர்களோ வசதி அற்றவர்களோ- மதிய உணவு கட்டாயம் கல்வி சாலைகளில்தான் உண்ணவேண்டும் என்று கூட இந்த திட்டத்தை மாற்றலாம். அன்ன தானம் என்பது தொன்று தொட்டு இந்து மரபில் இருந்து வரும் ஒரு அம்சம். காமராஜர் அதனை சமுதாய மேம்பாட்டுடனும் கல்வி வளர்ச்சியுடனும் அழகு பட இணைத்தார். எம்.ஜி.ஆர் அதனை மேலும் விரிவுபடுத்தினார். எந்த வளரும் நாட்டிலும் ஊழல் இருக்கிறது ஏன் வளர்ந்த நாட்டிலும் இருக்கிறது. இது அரசியல் அமைவுகளில் இருக்கும் பிரச்சனைகள் மானுட பலவீனங்களால் ஏற்படுவது. தெளிவாக ஒரு மரபு சார்ந்து உருவானதோர் அம்சத்தினை சுட்டிக்காட்டும் போது பொத்தம் பொதுவாக உலகெங்கிலும் இருக்கும் ஒரு அரசமைப்புக்குறையை இணைத்து பேசுவது சரியானதா என எனக்கு தெரியவில்லை.
அன்புடன்
அநீ
அருமையான பதிவு திரு. அரவிந்தன் நீலகண்டன். இது ஒரு ஆதாரமாகவும் செயல்படும். ஜெயக்குமார்
The Church got funds from British government which was looting India throughout their rule;before that they were colluding with the Portuguese who were looting,destroying India.
A part of the looted booty was funneled back by the colonial governments through church to create a fifth column amongst Indians. This fifth column was created to deride their ancestors & culture and to betray their motherland.
I don’t see how cyril alex equates hindu organisations with the Church. May be cyril alex is still a missionary underneath his skin and still he feels the need to support the Church which has been discredited worldwide for abusing the native communities and for abusing its own members’ children.
Cyril Alex should first admit that church is still intent on destroying India; it is propelling the various terrorist organisations in our Country’s north-east; it is colluding still with the external powers and has always been anti-India, anti-Indians at its heart. They have apologized to the aborigines of Australia, but never have they admitted their past and present abuse of Indians and India mainly because this would mean that they would be forced to shut their proselytizing businesses throughout our Country.
Jesus christ never existed. It was a myth created by a sect of jews. Now, world over this is an accepted fact in the academic circles. But, this falsehood is still sold to poor Indians! And Indians like cyril alex whose ancestors got converted to save their skins from the onslaught of muslims at sea, started believing in the false messaiah concept of jews, which was used to destroy their Roman rulers. These brain washed converts start singing tunes praising their masters who abused them just because they also get an opportunity to abuse others. What a pity!
அன்பிற்குரிய திரு சிரில் அவர்களுக்கு
1970களில், நான் பயின்ற கத்தோலிக்கக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்தேன். உணவு விடுதியின் செலவு மாதந்தோறும் விடுதியில் உள்ள அனவருக்கும் சரிசமமாகப் பிரித்து வசூலிப்பர். ஆனால் இதில் சிலருக்கு முழு விலக்கு உண்டு. இந்தப் பழக்கத்தை வேறு மாணவர் சிலர் கண்டுபிடித்து விட்டனர். இதற்கு நிர்வாகம் சொன்ன காரணம் விலக்கு அளிக்கப்பட்டு இலவசமாக உணவு கொள்ளும் மாணவர்கள் ஏழைகள். ஆனால் உண்மையில் அவர்கள் அனைவரும் இந்து மதத்திலுருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராமப்புற மாணவர்கள். அதாவது பிற இந்துக்களின் பணத்தையும் தங்கள் மத எண்ணிக்கையைப் பெருக்க பயன்படுத்துவதோடு அல்லாமல், பாதிரியார்கள் தங்களைத் தொண்டாளர்களாகக் காட்டி வந்திருக்கிறார்கள். இது குறித்து விவாதம் எழுந்தபோது, நாங்கள் சிலர் (இந்துக்கள்) ஏழைகளுக்குச் செல்வதை எதற்காகவும் விவாதிக்க வேண்டாம் என விட்டுவிட்டோம். இருந்தும் சிலர் விடுதியிலுருந்து வெளியேறி அறையெடுத்துப் படித்தனர்.
உமாசங்கர்
தொன்றுதொட்டு பாரத மதங்கள் அனைத்தும் தர்மம் சார்ந்தனவே.
இந்து மதமே சனாதன தர்மம்தான்.
புத்தம் சரணம் கச்சாமி.
சங்கம் சரணம் கச்சாமி.
தம்மம் சரணம் கச்சாமி.
எல்லாவுயிற்க்கும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.
இங்கே தர்மம் யாருக்கு என்பது என்றுமே கவலையில்லை. தேவைப்படுபவனுக்கா என்பதே கவலை.
இங்கே விசுவாசிக்கு ஒரு நீதி, அவிசுவாசிக்கு ஒரு நீதி என்றில்லை.
அவிசுவாசியை நாயின் பிள்ளை என்று எந்த மெசையாவும் சொன்னதில்லை.
ஆதிகாலம் தொட்டே பொதுவில் ஏரி செய்தனர்.
இன்றும் வழிபோக்கர்களுக்கென்று பழங்கால சுமைதாங்கிகளைக் காணலாம்.
பழங்கால சாலை ஓர மண்டபங்கள் எல்லாம் சாலைப்பயணிகள் இளப்பாற ஏற்படுத்தப்பட்ட சத்திரங்களே.
அன்னதானம், வஸ்த்ரதானம், பூமிதானம், பசுதானம் எனப் பலவகை தானங்கள் இருந்தன.
1300 ஆண்டுகளுக்கு முன்னர் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் திங்களுரில் திருநாவுக்கரசர் பெயரால் செய்த தானம் ஏராளம்…
பவதி பிக்ஷாந்தேஹி, தாயே பிச்சையிடுங்கள் என்றால் உணவிடாதவர்களே இல்லை எனலாம்.
கல்விக்கு கட்டணம் வாங்கியதில்லை. காணிக்கை இயன்ற அளவே தந்தனர்.காலனி ஆதிக்கக் கல்வியில் கட்டணமிட்டு, மதம் மாறுபவர்க்குச் சலுகை செய்யும் முறையைப் புகுத்திவிட்டனர்.
என்ன, நம்மவர்களுக்கு காலனி ஆதிக்கத்தினால் எல்லாம் மறந்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுப் பழமை மிக்க சென்னைக்கு 350 வயதுதான் என்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாண்டி சிந்தனை செய்யாது கொண்டாடுபவர்கள்தான் இன்றைய வரலாற்று அறிஞர்கள்.
Excellent article. Drives away a number of misconceptions. The oft-repeated claim that Hindus are fatalistic and do not try to help others in distress is a complete lie that you have exposed well. Infact it is said that a person who mocks at a person saying that he is suffering due to his karma gets half the sins on himself. So the law of karma is used to explain the source for suffering in this world and is by no means used to justify inaction. Remember krishna’s words to arjuna: “Be not attached to the fruits of action. Be not attached to inaction either.” If the pandavas were fatalistic they would have taken their humiliation as their fate. In fact the entire Mahabharatha’s purport is to selfless action which is in tune with dharma.
The temples on those days were built not only for worship but for the promotion of the entire community around in many different ways including their economy. The temples were used for many public purposes including the shelters during devastations. The entire community activities were temple centric in those days. The temple tanks served the biggest purpose. All todays’ towns were those got developed yesterday around those temples only. Srivilliputhur is just one example. If that temple didn’t exist,the town is not there today. So in Hinduism, seva is our way of life through temples. We don’t need specific orphanages, old age homes etc.,
I understand that there were no lodging houses in Mysore those days. Anybody coming for Dasara can stay at anybody’s place in Mysore and the doors of all were kept open for the guests. Such is the hospitality and seva built into the blood of Hindus. Our homes were built with ‘Thinnai’ just for any traveler to rest and relax. You can see those houses in any village even now. When you are “seva”, when seva is built into your blood, when seva is your way of life, you don’t need specific places/ activities just to receive funds and misuse. These Americans have/need one day in an year just to see their parents, just to be with them – that’s their way of life whereas parents are part of our life, they are into our blood. So we don’t need such a day. The same case with sevas.
Thanks for initiating this good discussion
Just for the purpose of service to the Hindu community and Hindu Temples in Chennai and all over Tamil Nadu area, we have formed “Loka Dharma Seva Foundation Trust” over 2 years back. They have been serving the community with Health Camps, Eye camps, Hindu education and Temple cleaning program.
Our mission is: A Foundation for the service to our great traditions with several centers for education and research studies catering to men and women of all Hindu communities of all varnas and jaathis, renovation and reconstruction of thousands of Village temples organization for Temple managements, arrangements for the welfare of the Priests, Archakas and Poojaris; conducting educational programs in Hindu Dharma, Vedas and Agamas for men, women and children of all sections of the communities, in every village and city, and Community Welfare work, Health camps, Social Service for all and much more with chapters in every part of India.
There are several such Faith based service organizations which are started by Hindus purely out of a service mentality working for all communities who are in need, below poverty line and not as a reaction to missionaries and also they do not have conversion as the target like the missionaries.
Scriptural References
Rig Veda HYMN CXVII. Liberality.
1. The Devas have not ordained hunger to be our death: even to the well-fed man comes death in varied shape.
The riches of the liberal never waste away, while he who will not give finds none to comfort him.
2 The man with food in store who, when the needy comes in miserable case begging for bread to eat,
Hardens his heart against him-even when of old he did him service-finds not one to comfort him.
3 Bounteous is he who gives unto the beggar who comes to him in want of food and feeble.
4 No friend is he who to his friend and comrade who comes imploring food, will offer nothing.
Let him depart-no home is that to rest in-, and rather seek a stranger to support him.
5 Let the rich satisfy the poor implorer, and bend his eye upon a longer pathway.
Riches come now to one, now to another, and like the wheels of cars are ever rolling.
6 The foolish man wins food with fruitless labour: that food -I speak the truth- shall be his ruin.
He feeds no trusty friend, no man to love him. All guilt is he who eats with no partaker.
7 The ploughshare ploughing makes the food that feeds us, and with its feet cuts through the path it follows.
Better the speaking than the silent Brahman: the liberal friend outvalues him who gives not.
Thirukkural
Charity
221. The only gift is giving to the poor;
All else is exchange.
222. To receive, even if sinless, is bad; and to give
Even without a heaven, is good.
223. Never to say, “I lack” and to give
Mark the well-born.
224. Pity is painful till one sees the face
Of the suppliant lit with joy.
225. It is great to endure hunger, but only next
To removing it.
226. A rich man who removes a poor’s killing hunger
Lays up treasures for himself.
227. Hunger, dread, disease, will never touch
One who shares his food.
228. Don’t they know the joy of giving
Who heartless hoard and love their wealth?
229. To eat alone what one has hoarded
Is worse than begging.
230. Nothing is worse than death; but death is sweet
If one can’t help the poor.
Social Obligation
211. Duty is not for reward
Does the world recompense the rain-cloud?
212. The worthy work and earn wealth
In order to help others.
213. How rare to find in heaven or earth
A joy to excel beneficence!
214. He only lives who is kin to all creation;
Deem the rest dead.
215. The wealth of a wise philanthropist
Is a village pool ever full.
216. The wealth of liberal man
Is a village tree fruit-laden.
217. The wealth of the large-hearted
Is an unfailing medicine tree.
218. Those bound to their community
Even helpless will not slacken.
219. The want the liberal-minded feel
Is not to be able to help others.
220. If poverty comes of doing good
for one’s self may be sold to do it
Bhagawad Gita
The righteous who eat the remnants of the Yajna are freed from all sins, but the impious who cook food only for themselves (without sharing with others in charity) verily eat sin. (3.13)
Arjuna, whatever you do, whatever you eat, whatever you offer as oblation to the sacred fire, whatever charity you give, whatever austerity you perform, do all that as an offering unto Me. (See also 12.10, 18.46)
Charity that is given as a matter of duty, to a deserving candidate who does nothing in return, at the right place and time, is called a Saattvika charity. (17.20)
Therefore, acts of sacrifice, charity, and austerity prescribed in the scriptures are always commenced by uttering “OM” by the knowers of Brahman. (17.24)
Various types of sacrifice, charity, and austerity are performed by the seekers of nirvana by uttering “TAT” (or He is all) without seeking a reward. (17.25)
Faith in sacrifice, charity, and austerity is also called SAT. The action for the sake of the Supreme is verily termed as SAT. (17.27)
The Supreme Lord said: Fearlessness, purity of heart, perseverance in the yoga of knowledge, charity, sense restraint, sacrifice, study of the scriptures, austerity, honesty; (16.01)…these are the qualities of those endowed with divine virtues, O Arjuna. (16.03)
Acts of sacrifice, charity, and austerity should not be abandoned, but should be performed, because sacrifice, charity, and austerity are the purifiers of the wise. (18.05)
Even these (obligatory) works should be performed without attachment to the fruits. This is My definite supreme advice, O Arjuna. (18.06)
Yakshan Prashna in Mahabharatha
kimsvinmi tram marishyatah
DANAM mitram marishyatah
Who is the friend of the dying? His charity
kimsvidas ya para yanam
DANAMasya parayanam
What is his (a man’s) principal duty? Charity
Brihadaranyaka Upanishad
That very thing is repeated even today by the heavenly voice, in the form of thunder, as “Da,” “Da,” “Da,” which means: “Control yourselves (Damayata),” “Give (Datta),” and “Have compassion (Dayadhvam).” Therefore one should learn these three: self-control, giving and mercy.
Chandogya Upanishad
There are three divisions of dharma: Sacrifice, study and charity form the first.
திரு.அரவிந்தன்,
நல்ல கட்டுரை. இதை இத்தனை நாள் கழித்து இன்றுதான் படித்தேன். வலைத் தளத்தில் வேறு எப்படி முந்தைய கட்டுரைகளைக் காட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போதைய முறை முந்தைய கட்டுரைகளில் பல சிறப்பான கட்டுரைகளை வெளித் தெரிய வைக்கவில்லை என்று தோன்றியது.
இதை விரிவுபடுத்தி அச்செழுத்தில் எங்காவது பிரசுரிப்பது நல்ல தாக்கத்தைத் தரும். இங்கு வந்த வாசகர் மறுவினைகளை, குறிப்பாக சிரில் அவர்களுடைய கிருஸ்தவ சாதக வினைகளையும் கணக்கிலெடுத்து, எதிர்வாதமாக அல்லது மட்டுப் படுத்தும் வாதமாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றிற்குச் சொல்லப்பட்ட பதில்களையும், குறிப்பாக திரு.ராஜன் அவர்களுடைய மிகக் கூர்மையான பார்வையையும் உள்கொண்டு ஒரு விரிவான கட்டுரையை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நல்ல பணி, தொடருங்கள்.
மைத்ரேயா
புரியாதவர்களின் பிதற்றும் பேச்சுகளுக்கு செவி சாய்க்காதீர். பிறருக்கு உதவுவது என்பது இந்தியா திருநாட்டின் பாரம்பரியமான உணர்வு
அதனால்தான் முன்னாளில் வீட்டிற்கு வீடு திண்ணைகள் இருபுறமும் இருக்கும். வழிப்போக்கேர்கள் தங்கி இளைப்பாற. பின்னாளில் வழிப்பறி கொள்ளைகள் பெருகிவிட்டதால் இந்த பண்பு அழிந்துவிட்டது.
தான் மட்டும் உணவு சமைத்து உண்பவன் பாவி என்றும் அவ்வாறு அவன் உண்ணும் உணவு நச்சு தன்மை கொண்டது என்றும் அதிதி அதாவது விருந்த்னருக்கு உணவு வழங்கியபின் மீதமிருப்பதை உண்பது என்ற கோட்பாடுகளை பின்பற்றிய சமூகம் இது. தற்காலத்தில் விருந்தினர்கள் நல்லவர் யார் கயவர்கள் யார் என்று பகுத்துணரா நிலைமை வந்து விட்டதனால் இந்த பண்பும் அருகி வருகிறது. செல்வத்து பயன் ஈதல் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப செல்வம் படைத்தவர்கள் அன்ன சத்திரங்களை கட்டி வைத்து இலவசமாக உணவு வழங்கியது கடந்த நூற்றாண்டு வரை நடந்த ஒன்று. ஆனால் இன்று கொள்ளையடித்த பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டுவிட்டு உத்தமர்கள் போல் இங்கு வாழ்க்கை நடத்தும் கூட்டம் தான் இங்கு. விளம்பரமின்றி தன்னிடம் உள்ளதை பிறருக்கு அளித்து மகிழ்ந்தவர் இந்திய மக்கள்.
மேலை நாட்டு தொண்டு நிறுவனங்கள் உள் நோக்கோடுதான் அதுவும் கட்டணம் வசூலித்துத்தான், விளம்பரத்திற்காகச் செயல்பட்டு வந்துள்ளன, இப்போதும் அப்படிதான் செயல்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
திரு.அரவிந்தன் நீலகண்டன்,
நல்ல கட்டுரை. இதை இத்தனை நாள் கழித்து இன்றுதான் படித்தேன். நான் நேசக்குமார், டோண்டு, எழில் மற்றும் உங்களின் கட்டுரைகளை படித்து உலகை புரிந்துக் கொண்டவன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னம், வஸ்த்ரம், பூமி, பசு,கல்வி, ஸ்வர்ணம் எனப் பலவகை தானங்களை ப்ரதி உபகாரம் பார்க்காமல் செய்தனர்.
பவதி பிக்ஷாந்தேஹி, தாயே பிச்சையிடுங்கள் என்றால் உணவிடாதவர்களே இல்லை எனலாம். நம் வளத்தை சுரண்டி நமக்கே தொண்டு செய்வதாக மேலைநாட்டு தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. நம் ப்ரார்த்தனையில் மாத்ரு தேவோ, பித்ரு தேவோ,அதிதி தேவோ பவ என்றும், அதிதி போஜனமே கடவுளுக்கு அன்னமிட்டதுபோல் என்றும், லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து, அன்ன தாதா சுகி பவ என்றும் இந்து மதத்தில் மட்டுமே உள்ள தனிச் சிறப்பு. வாழ்க உமது தொண்டு. வளர்க உமது குலம்.
பசியால் வாடும் உயிர்களுக்கு உணவு அளிக்க அறிவு தேவையில்லை
அன்புள்ள இதயம் இருந்தால் போதும்
துன்பப்படும் ஒரு உயிரின் வேதனையை நீக்க உதவும் எண்ணம் இருந்தால் போதும்
வழிமுறைகள் தானே புலப்படும்
மனித உயிர்கள் அனைத்தும் ஒரே பரம்பொருளின் படைப்புகளே
வடிவங்கள் வேறானாலும் அவைகளுக்குள் இருந்து இயக்கும் பரம்பொருள் ஒன்றுதான் என்று இந்து மதம் அறுதியிட்டு சொல்கிறது
இருந்தும் உண்மை அறியாத மூடர்கள் மக்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி இவ்வுலகை துன்பமயமாக்கி விடுகிறார்கள்
இதில் வேதனை என்னவென்றால் இந்து மதத்தில் உள்ள பல பிரிவு தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டு மக்களிடையே குழப்பங்களை விளைவிப்பது வேற்று மதத்தினர் நம் மதத்தினை பற்றி செய்யும் தவறான பிரச்சாரங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தருகிறது என்பது இன்றைய நிலை.
Please read this fansatic article in Indian Express by Gurumurthy in the following link
https://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Better+know,+before+talking&artid=a0LdnUqZ4iI=&SectionID=d16Fdk4iJhE=&MainSectionID=HuSUEmcGnyc=&SectionName=aVlZZy44Xq0bJKAA84nwcg==&SEO=
AMAR SEVA SANGAM at Ayikudi, near Tenkasi is another Hindu Social Organisation which is doing yeomen service for the rural folk in and around Tenakasi, especially for the physically Handicapped and special children. This service organisation is run by two physically handicapped , but large-hearted gentlemen Sri. Ramakrishnan ( an Engineer) and Sri. Sankar raman
( a chartered accountant). For more details see the website: http://www.amarseva.org/
Those who happen to go to Kutrallam falls , can go there to see for themselves the tremendous work done by these two gentlemen.
regards,
KRISHNAMURTHY
வணக்கம்,
இவ்வளவு சேவை அமைப்புகள் இருந்தும் இவைகள் ஏன் அதிகம் பிரபலம் ஆகாமல் இருக்கின்றன?
(Edited.)
Dear Mr.Baskar,
Our Sanathana Dharma philosophy is that – ‘the left hand should not know about the good the right hand is doing’. We are not of the type who boasts all over the world that we do social service. As you must be aware, anywhere a calamity strikes, RSS’ ‘Seva Barathi’ will be the first to set up camp there, even before the local people can comprehend that something has happened, but this news never comes out.
Swami Vivekananda talks in detail about how our dharma should be and stresses that, the left hand should not know what the right hand does. Such is the greatness of our land. Thats why we dont have any eloborate details about our history because our kings thought building temples is more important than building forts and our saints thought that singing the praise of god is more important that writing about the history of their time.
In europe you can find detailed history recoreded from atleast 1000AD. Even in North India you can find detailed records of day to day activities of Muslim Kings, but you can never find any such record for any of our Hindu Kings.
Our dharma need no advertisements to showcause the good we do.
very good attempt
மிகவும் அருமையான படைப்பு. காலதாமதமாக இதைப் படிக்கிறேன். வாழ்த்துக்கள் அரவிந்தன், தமிழ் ஹிந்து!
https://www.thehindu.com/news/cities/chennai/article3570254.ece?homepage=true