ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!

“அமர்நாத் கோயில் நில விவகாரம்”, “ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதட்டம்” என்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது ஜம்மு-காஷ்மீர் மாநிலம். இது ஏதோ அயோத்யா பிரச்சனை போல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக இரு வேறு குழுவினர் சண்டை போட்டுக் கொள்வது போல ஒரு மேலோட்டமான உருவம் நிலவுகிறது. இன்னும் இதில் கொஞ்சம் அக்கறை எடுத்து கொண்டு செய்திகளை கவனிப்பவர்களுக்கு, இதில் இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் கூட கேள்விக்குறி ஆகியிருப்பது தெரிய வந்திருக்கும். ஆனால் “இது வெறும் அமர்நாத் நிலம் பற்றிய பிரச்சனை தானா ? ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு ?” என்ற கேள்விகளுக்கு, நாம் இன்னும் இந்த விஷயத்தில் ஆழமாக செல்ல வேண்டியிருக்கிறது. சரித்திரத்தில், சில பழைய பக்கங்களை புரட்ட வேண்டியிருக்கிறது. அதில் ஒளிந்து கிடக்கும் வெளி உலகத்திற்கு அவ்வளவாக தெரியாத (அல்லது தெரியபடுத்தப்படாத) பல தகவல்கள், நம்மை வியப்பிற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்குகின்றன. அப்படி என்ன தான் காஷ்மீரில் நடந்து விட்டது? கொஞ்சம் பார்ப்போம்.

முதலில் இந்த அமர்நாத் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது ? என்று சுருக்கமாக பார்ப்போம். அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க, லட்சக் கணக்கான ஹிந்துக்கள் வருடந்தோறும் காஷ்மீருக்கு புனித யாத்திரை செல்வது பலருக்கு தெரிந்த செய்தி. அங்கே வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் இந்த யாத்திரை நடக்கிறது. அமர்நாத் என்ற இடம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளது. இலட்சக்கணக்கான பக்தர்கள் அங்கே கடும் குளிரையும் கரடு முரடான மலைப் பாதையையும் கடந்து சென்று அந்த குகை கோயிலை அடைய வேண்டியிருக்கிறது. கடந்த வருடங்களில், பல பிரயாணிகள் பனிச் சரிவு போன்ற விபத்துகளில் சிக்கி இறந்திருக்கிரார்கள்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு, இந்த வருடம் மே மாதம், “ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகம்” ( Sri Amarnath Shrine Board ) என்ற அமைப்பிற்கு சுமார் 40 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியது. இந்த நிர்வாகமும், முன்னர் மாநில அரசால் உருவாக்கபட்டதே. இந்த நிலம், வருடத்தில் இரண்டு மாதத்திற்கு யாத்ரீகர்களுக்கு தங்கும் வசதி அமைக்க தற்காலிக உபயோகத்திற்காக கொடுக்கப் பட்டது. அதுவும் ரூபாய் 2.3 கோடி குத்தகைக்கு. இது அந்த மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டனி அரசின் முடிவு. இந்த முடிவு அறிவிக்கப் பட்டதுமே காஷ்மீரில் பெரும் கலவரம் வெடித்தது. “எப்படி இந்துக்களுக்கு நிலத்தை வழங்கலாம் ?” என்று காஷ்மீர் மக்களும் மற்றும் பிரிவினைவாதிகளான ஹுர்ரியத் அமைப்பும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டன. மூன்றே நாள் கலவரத்திற்குள், மக்கள் ஜனநாயகக் கட்சி, தனக்கும் இந்த உத்தரவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், “நிலத்தை ஒதுக்கியது தவறு. அதனால் அரசுக்கு நாங்கள் கொடுத்த ஆதரவை திரும்ப பெறுகிறோம்” என்று அறிவித்தது.

மைனாரிட்டி ஆன காங்கிரஸ் அரசின் முதல்வர் குலாம் நபி ஆசாத், அவசரம் அவசரமாக நிலத்தை ஒதுக்கும் உத்தரவை திரும்ப பெற்றார். பின்னர், அரசும் ராஜினாமா செய்து, கவர்னர் ஆட்சி வந்து விட்டது. நிலத்தை திரும்ப கொடுக்குமாறு வலியுறுத்தி, ஜம்முவில் மக்கள் போராட ஆரம்பித்தார்கள். போட்டிக்கு, காஷ்மீரில் போராட்டம் வலுத்து, இப்போது “நாங்கள் பாகிஸ்தானோடு இணைகிறோம்” என்றும் “காஷ்மீருக்கு இந்தியாவிலிருந்து விடுதலை வேண்டும்” என்றும் குரல்கள் காஷ்மீரில் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. ஏன் ஜம்மு மக்களுக்கு மட்டும் அமர்நாத் நிலத்தின் மேல் இவ்வளவு அக்கறை ? காஷ்மீரில் நிலம் கோரி ஏன் எந்த போராட்டமும் இல்லை ? எதற்காக காஷ்மீர் மக்களுக்கு மட்டும் இப்படி பாகிஸ்தான் மீது இவ்வளவு பாசம் ? இந்த கேள்விகளுக்கு விடை காண, நாம் பல ஆண்டு காலம் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் முன்னொரு காலத்தில், ஹிந்துக்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. ஹிந்து பண்பாட்டின் ஒரு பீடமாக, பல அறிஞர்கள் வாழ்ந்த காரணத்தினால், “காஷ்மீர புர வாஸினி” என்று ஒரு சுலோகம் சரஸ்வதியை வர்ணிக்கிறது. கஷ்யப முனிவர் வாழ்ந்ததால் காஷ்மீரம் என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பின்னர், வெளியிலிருந்து வந்த இஸ்லாமிய படையெடுப்பிற்கு உள்ளாகி, இந்தியாவின் மற்ற பகுதிகளை போல் காஷ்மீரும் சீரழிந்தது. பல இஸ்லாமிய கொடுங்கோல் அரசர்களின் ஆட்சியில், அங்கு பல கோயில்கள் தரை மட்டமாக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டு இஸ்லாமியத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். சில ஹிந்து மன்னர்கள் ஆட்சியைப் பிடித்த போதிலும், பெருவாரியான மக்கள் ஏற்கனவே மதம் மாற்றப்பட்டு ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து போனது. காஷ்மீர் ஹிந்துக்கள் “காஷ்மீர் பண்டிதர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.

1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த போது, ஜின்னாவின் தலைமையில் பெருவாரியான முஸ்லிம்கள் தனி நாடு வேண்டி கலவரம் செய்து, அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள், பாகிஸ்தான் என்று தனி நாடாக, தாரை வார்க்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக நேரு பதவி ஏற்றார். ஸர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால், பல நூறு சமஸ்தானங்களாய் பிரிந்து இருந்த பகுதிகள் ஒன்று சேர்ந்து சுதந்திர இந்தியாவாய் உருப் பெற்றது. அந்த சமயத்தில் காஷ்மீர மன்னராக இருந்த ராஜா ஹரி சிங், தனி நாடாக இருக்கலாமா அல்லது இந்தியாவுடன் சேரலாமா என்ற குழப்பத்தில், முடிவெடுக்க காலத் தாமதம் செய்தார் ( இந்தியாவுடன் சேர அவர் விரும்பினார், ஆனால் நேரு அதில் முதலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது ). இந்த நிலையில், சுதந்திரம் கிடைத்த இரண்டே மாதங்களுக்குள், பாகிஸ்தான் தன் வேலையை காட்டியது. அவர்கள் வசம் இருந்த சிறு இராணுவம் மற்றும் முஸ்லிம் பழங்குடி படையினரை திரட்டி கொண்டு காஷ்மீர் மீது படை எடுத்தது. பயந்து போன ராஜா ஹரி சிங் உதவிக் கோரி, இந்தியாவுடன் இணைய சம்மதமும் தெரிவித்தார். உடனே இந்திய படை காஷ்மீரை விரைந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் படையை தடுத்து நிறுத்தியது.

ஆனால் அதற்குள் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானால் பிடிக்கப் பட்டு விட்டது. அந்த பகுதிகளைத்தான், நாம் இப்போது “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK)” என்று சொல்கிறோம். பிரதமர் நேருவோ ஐக்கிய நாடுகள் சபையை அணுகி பாகிஸ்தான் மீது புகார் தெரிவித்தார். பாகிஸ்தானும் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடியதால், ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானம் போட்டது. ஆதாவது “காஷ்மீர் மக்கள் தங்களின் எதிர்காலம் குறித்து தாங்களே சுய நிர்ணயம் செய்ய ஒரு வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப் பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர், காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் படையும், குடியேறிய பாகிஸ்தான் மக்களும் வெளியேர வேண்டும்”. ஆனால், அது இன்று வரை நடக்காததால் இந்திய அரசும் இந்த வாக்கெடுப்பை நடத்த அக்கறைக் காட்டவில்லை. அதனால் பாகிஸ்தானும் இந்தியாவும், “Line Of Control” என்ற எல்லைக் கோட்டின் இருப்புறமும் இருக்கும் பகுதிகளை, தங்கள் பகுதியாக கருதி ஆட்சி நடத்துகின்றன. ஆனால், இந்திய அரசு நம்முடைய தேச வரைப் படதில் முழு காஷ்மீரையும் காட்டுகிறது.

Line of Control
Line of Control

ஆக நாம் பார்க்கும் இந்திய வரைப் படத்தில் இருக்கும் காஷ்மீரில் பாதி, பாகிஸ்தான் கை வசம் உள்ளது என்பது பல இந்தியர்களுக்கு இன்று கூட தெரியாத ஒன்று ! ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தே இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, நேரு அரசாங்கம் அந்த மாநிலத்திற்கு தனி உரிமைகள் ( Article 370 ) தகுதி அளித்தது. அதன் படி அந்த மாநிலத்திற்கு என்று தனி அரசியல் சட்டமைப்பு, ஒரு தனி கொடி உட்பட, வேறு எந்த மாநிலத்தவரும் அங்கே எந்த சொத்தும் வாங்கத் தடை, போன்ற சலுகைகள் வாரி வழங்கப்ப்பட்டன.

அன்றிலிருந்து எண்பதுகளின் கடைசி வரை, காஷ்மீரில் மூன்று விதமான மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஓன்று, இந்தியாவுடன் இணைந்து வாழ விரும்பியவர்கள். இரண்டு, பாகிஸ்தானுடன் இணைய விரும்பியவர்கள். மூன்று, இரு பக்கமும் சேராமல் சுதந்திரம் கேட்கிறவர்கள். இதில் முதல் வகையை தவிர மற்ற இரண்டு வகையினரும் பல்வேறு முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பாகிஸ்தானும் இவர்களுக்கு தன்னால் ஆன எல்லா உதவியும் செய்து வந்தது. இரண்டு முறை, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த போர்களில், பாகிஸ்தானை நசுக்க வாய்ப்பு கிடைத்தும் இந்திய பெருந்தன்மை அவர்களை பிழைத்துப் போக விட்டது. இதற்கெல்லாம் இடையில் காஷ்மீர் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர், ஒற்றுமையான நல்லிணக்கதோடு வாழ்ந்து வந்தார்கள் என்பதும் உண்மை.

1980-களில் பாகிஸ்தான் அதரவு காஷ்மீர் மக்கள், மற்றும் விடுதலை கேட்டு போரிடும் மக்களின் கைகள் உயர்ந்தன. இந்த இரு பிரிவினர்க்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. விடுதலை வாங்கினால் மட்டும் இவர்கள் வேறு எங்கே போகப்போகிறார்கள் ? பாகிஸ்தானிடம் தான் சேருவார்கள். 80-களின் கடைசியில், “இந்தியாவுடன் இணைந்து வாழ விரும்பும் ஹிந்துக்களை விரட்டி அடித்து விட்டு, காஷ்மீர் முழுவதும் முஸ்லிம் பகுதியாக ஆக்கினால் தான் நம்முடைய திட்டம் நிறைவேறும்” என்ற முடிவிற்கு வந்தார்கள். அதே சமயத்தில் தீவிரவாதமும் தழைத்து வளர தொடங்கி இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் தான் இந்தியர்கள் பலருக்கும் தெரிய வராத ஒரு பெரும் கொடுமை நிறைவேறியது. ஆம் ! 1989-ல் ஒரே மாதக் காலத்தில், சுமார் 4 இலட்சம் ஹிந்துக்கள் ( Kashmir Pandits ) தங்கள் வீடு மற்றும் உடைமைகளை விட்டு காஷ்மீரிலிருந்து கொடூரமாக துரத்தி அடிக்கப்பட்டார்கள். அவர்களை துரத்தும் படி மசூதிகளின் ஒலி பெருக்கிகளின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல குடும்பங்களில் இருந்து ஹிந்து ஆண்களை கடத்திச் சென்று, கொலை செய்து, உடலை ஜீலம் நதியில் தூக்கி எறிந்தார்கள் பாவிகள். பல வீடுகள் எரிக்கப் பட்டன. இதில் உடன்படாத முஸ்லிம்களும் துரத்தி அடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

காஷ்மீரில் இருந்து வெளியேறிய ஹிந்துக்கள் ஜம்முவிலும் டெல்லி போன்ற இடங்களிலும் இன்றும் கூடாரங்களில் அநாதைகளாக வாழ்கிறார்கள். இவர்கள் எல்லாம் காஷ்மீரில் வசதியாக வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்த நாட்டிலேயே நடந்தக் கொடுமைகளைப் பற்றி பேச அன்று எந்த அரசியல் கட்சியும் கிடையாது. ஹிந்து ஆதரவு பா.ஜ.க 1989-ல் ஒரு சிறியக் கட்சி. இந்த நிகழ்வுகள், அன்று இருந்த தூர்தர்ஷன் மற்றும் ரேடியோவால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஏன், இன்றும் கூட அவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுப்பதில்லை. ஓட்டு வங்கிக்காக முஸ்லிம்களை தாஜா செய்தே பழகிய இந்திய அரசியலுக்கு இவர்களின் அழுக் குரல் எப்படி கேட்கும் ?

அப்படிப்பட்ட துயரங்களுக்கு ஆளான ஜம்மு ஹிந்துக்கள் தான் இப்பொழுது பொங்கி எழுந்திருக்கிறார்கள் ! ஓதுங்கி போயே பழகிய ஹிந்துக்களுக்கு “ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு கூட நாம் பிச்சை எடுக்க வேண்டுமா ?” என்ற கோபம் நியாயமானதுதானே. அதனால் தான் தாத்தா, பாட்டி முதல் ஐந்து வயது சிறுமி வரை இன்று, ஒரு கையில் சிவபெருமான் படத்தையும் இன்னொரு கையில் “நாங்கள் இந்தியர்கள்” என்ற பெருமையில் தேசிய கொடியையும் தாங்கிக் கொண்டு போரட்டத்தில் இறங்கியிருக்கிரார்கள். ஆனால், மறுபுறம் காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் திட்டம் நன்றாகவே நிறைவேறி இருக்கிறது. அங்கே, சுதந்திர தினம் அன்று, நம் தேசியக் கொடி வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு பாகிஸ்தான் கொடி பறக்கப்பட விட்டது. “பாகிஸ்தான் தான் எங்கள் நாடு” என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது.

இதையெல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருக்குமாறு, போலீசாருக்கும் கவர்னர் தலைமையிலான அரசு உத்தரவு போட்டிருக்கிறது என்பது இன்னொரு வெட்கக் கேடு !
இதற்கிடையில் “காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்கும் காலம் வந்து விட்டது” என்று அருந்ததி ராய், CNN-IBN போன்ற நம்ம ஊர் அறிவு ஜீவிகள் போடும் கோஷம் வேறு. காஷ்மீர மலைகளில் தவம் செய்த நம் முன்னோர்கள் முதல், இன்று உயிர் நீத்துக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்கள் வரையிலான புனிதர்களை இதை விட மோசமாக அவமானப்படுத்த முடியாது.

எது எப்படி போக போகிறது என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்..ஆனால், இதெல்லாம் இப்படி இருக்க, “சரித்திரம் படித்து ஏன்யா மூளையை குழப்பிக்கறே..என்ன நடந்தால் நமக்கென்ன ?” என்று கேட்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்…

12 Replies to “ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!”

  1. Readers should copy paste this wonderful article by Rajaram in comments sections of all magazines as eye opener for everyone. Will tamilhindu.com allow that ?

  2. திரு ராஜா ராமின் கட்டுரை வெகு அருமை. போலி மதச்சார்பின்மை கட்சிகள் தான் இந்த நிலைக்கு காரணம் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் 370 வது சட்டபிரிவு பற்றியோ அல்லது பொதுசிவில் சட்டம் பற்றியோ வாயைத் திறந்தால் உடனே இந்து மதவாதம் என கூக்குரலிட அறிவுஜீவிகளும் சிறுபான்மை வோட்டு பொறுக்கிகளும் தயார் ஆகிவிடுகின்றனர். காஷ்மீர் பண்டிட்களின் நிலமைப்பற்றி பேச எந்தவொரு அமைப்பும்முன்வரவில்லை . பலவருடங்களுக்கு முன் டெல்லியில் நடந்தவொரு நிகழ்ச்சியில் அனுபம் கேர் என்கிற கலைஞர் கண்ணீர் விட்டுக்கொண்டே கூறினார் “இங்கு எனக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையினை எனது காஷ்மீர் பண்டிட் சகோதரர்களின் கண்ணீரை துடைக்க கொடையாக அளிக்கிறேன் “. இன்றுவரை போலி அறிவுஜீவிகளும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளும் இந்தப் பிரச்னைப் பற்றி மனந்திறந்து பேசுவதில்லை. வெளிப்படையான பாகிஸ்தான் ஆதரவு கூட்டங்கள், பேரணிகள் இவற்றுக்கெல்லாம் காரணம் மத்திய அரசின் கையாலாகதத் தனம்தான் .மப்டி முஹம்மத் சையதும் அவர் மகளும் பிரிவினைவாதிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மற்ற கும்பல்களும் அவ்வாறே. பாகிஸ்தான் ஆதரவு தருகின்றது என்று தெரிந்தும் ஆண்மையற்ற மத்திய அரசு நட்பு பஜனை செய்கிறது. இருபது எட்டு வருடங்களாய் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு பலியானவர்களின் ஆத்மா அருந்ததிரை போன்றவர்களை மன்னிக்காது.

  3. Really an eye opener. Its pathetic that Indians are cheated with their own maps. No where in the world, except India, Kashmir is shown as part of India, and the Indian govt. is cheating everyone with the image that things are fine in Kashmir.

    I remember reading that, Lal Bahadhur Shastri protested strongly with Nehru, when Nehru went to the UN on Kashmir Issue. He boldly said that, if Nehru had thought that Kashmir is integral part of India, then he would have allowed me, the home minister to take care of the Kashmir issue. But since Nehru didnt consider Kashmir to be integral part of India, he, being the external affairs minister, took it to the UN.

    We are reaping for the mistakes done by Nehru and subsequent Congress leaders on the Kashmir issue.I am really surprised, how the govt. is keeping quite, when people like Geelani openly says that they want to join Pakistan and not India. Shouldnt they be arrested for treason and hanged for terrorism?

    Hindu uprising has just started. I strongly belive that there are more to come. Hindus have started to realise their state. Orissa is the second in line. More to come.

    Let Shiva save the Hindus.

    Regards,
    Satish

  4. ‘We can wake-up anyone who is actually sleeping and not the pseudo-secularists of India, particularly in Media who pretend to sleep and spew poison closing the eyes as a matter of habit”.
    What is the use of exposing them times without number, unless followed by strong physical reaction on them to tear them to pieces by the Vast Hindu Uprising. There is limit for everything. What are you ‘Hindus’ waiting for? It has gone tooooooooo far.
    Or are we waiting for “Parithranaya Sadhunam vinashaya cha dushkritham —-Sambhavami Yuge Yuge”. Every Hindu presently living should turn to start thinking that they have taken birth to take on Pseudos and finish them once for all. God for His own reasons and does not take birth in his full form and splendour.
    Every Hindu is a part of that Paramatman. So,

    O!!Hindus , awake and arise. Stop not till the Pseudos are silenced!!

  5. அதிர்ச்சியாக இருக்கிறது. நமது வரைபடங்கள் எல்லாம் இத்தனை நாட்களாய் பொய் சொல்லிவருகின்றன என்பதை நம்பவே முடியவில்லை.

    இங்கே உள்ள வரைபடம் பாதி காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கும், கால்வாசி சீனாவிற்கும், மீதி முஸ்லீம்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலமாகவும் இருக்கிறது என்கிற உண்மையை சொல்லுகிறது.

    எங்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பத்திரிக்கைகளிலும் இந்த உண்மை ஏன் எங்களுக்கு சொல்லி தரப்படவில்லை?

    அங்கே இந்துக்களான நாங்கள் ஒரு குடிசையைக்கூட வாங்க முடியாது, கடை வைக்க முடியாது. வியாபாரம் செய்ய முடியாது. ஆனால், எங்கள் ஊர் கோயில்களையும், சுற்றுலா தலங்களிலும் இந்த காஷ்மீர் முஸ்லீம்கள் மிகப் பெரிய கடைகள் நடத்துகிறார்கள். மிகப் பெரிய வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அத்தனை செல்வ செழிப்பும் காஷ்மீரில் உள்ள இந்துக்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டதால் வந்திருக்கிறது என்பது எனக்கு இத்தனை நாட்களாய் தெரியாது.

    இந்த அமர்நாத் பிரச்சினையின்போது இந்த கடைக்காரர்கள் அனைவரும் காஷ்மீர் முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தங்கள் கடை வாசலில் தட்டி வைத்தனர்.

    அதை பார்த்துவிட்டு இவர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்து வருந்தினேன். அதை நினைத்தால் எனக்கு இப்போது வெட்கமாக இருக்கிறது.

    காஷ்மீர் என்பது இந்திய அரசாங்கத்துக்கு சொந்தம் இல்லை என்பது தெளிவு. திரிபுராவை சீனா தன்னுடைய மாநிலமாக அதனுடைய மேப்பில் போட்டுக்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் தன்னுடையது என்று அது வெளிப்படையாகவே பேசிவருகிறது. அதை இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளும் வரவேற்கிறார்கள்.

    இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் கிருத்துவர்களால் நடத்தப்படும் என்.எல்.எஃ.டி போன்ற தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இந்தியாவின் ஆயிரக்கணக்கான மாவட்டங்கள் நக்ஸலைட்டுகளின் முழுமையான கண்ட்ரோலில் உள்ளன.

    பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், சர்ச்சுகள், மசூதிகள், தர்காக்கள், மற்றும் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மத சம்பந்தமான அமைப்புக்களுக்கு சொந்தமாக மிகப்பெரிய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் எல்லாம் இந்த மத அமைப்புக்களின் வெளிநாட்டு தலைமைக்கு சொந்தமான நிலங்கள்.

    அந்த வகையில் கணக்கு போட்டுப் பார்த்தால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிலங்கள் வெளிநாட்டினருக்கே சொந்தமாக இருக்கின்றன.

    இப்படி பெரும்பாலான நிலங்கள் மற்ற நாட்டினருக்கு சொந்தமாக இருக்கும்போது, இந்திய வரைபடங்களிலும், பள்ளிக்கூட பாடபுத்தகங்களிலும் இந்த நிலங்கள் இந்திய அரசாங்கத்துடையது என்று எங்களுக்கு சொல்லித் தரப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. உலகிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை மிக எளிதாக ஏமாற்றப்பட்டுவருகிறது.

    இந்தியாவில் இந்தியர்களுக்கு சொந்தமாக இப்போது இருக்கும் நிலங்கள் மிகவும் குறைவு. இந்தியாவின் 80 சதவீத நிலம் வெளிநாட்டினரின் கையில் இருக்கிறது.

    உண்மை இப்படி இருக்கும்போது, இந்திய அரசாங்கம் எங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கிறது என்று இந்த நாட்டில் பலர் சொல்லிவருவதில் தவறு ஏதும் இல்லை. உண்மையை சொல்லும் இவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லி கண்துடைப்பு செய்துவிடுகிறார்கள். நாங்களும் அதை நம்பிவிடுகிறோம்.

    இந்திய அரசாங்கம் ஏன் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களின்மேல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, எதனால் தீவிரவாதிகளுக்கு ஆயுர்வேத மஸாஜும், சுவையான வலு தரும் உணவுகள் தரப்படுகின்றன, இவர்கள் விடுதலைக்காகப் போராடுவதை முற்போக்கானவர்கள் செய்யவேண்டிய செயல் என்று என்.ஜி.ஓக்கள் போராடுவது எதனால் என்பவை இப்போதுதான் புரிகின்றன.

    உண்மையில் இந்த தீவிரவாதிகளுக்கு சொந்தமாக்கப்பட்ட நிலங்களில்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    நாம் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? வாயையும் வயிறையும் கட்டி நான் சம்பாதித்து கொடுக்கும் வரிப்பணம் எந்த நாட்டுக்கு போகிறது?

  6. The PM calls Orissa violence against Christians a “national shame” and asssures compensation.
    https://www.hindu.com/2008/08/29/stories/2008082961121500.htm

    What has the congress govt done to Kashmiri Pandits so far ?
    Sonia’s country condemns India for Orissa violence.

    https://www.ibnlive.com/news/italy-govt-to-summon-indian-envoy-over-orissa-attacks/72380-3.html

    Why ? They want to convert more people in Orissa to Christianity ?
    Pakistan supports Kashmir muslims. Italy supports Orissa Christians. But no support for Hindus in their own country !

  7. இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாங்கங்களை உருவாக்கி, அவற்றின் மூலமாகவே இசுலாமிய, கிருத்துவ ஆக்கிரமிப்புகளுக்கு இரையாகாமல் இந்து மதம் இதுவரை பிழைத்து வந்தது.

    இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்தானும், கிருத்துவர்களுக்கு ஆதரவாக இத்தாலியும் செயல்படுமானால், ஜனநாயக நாடான இந்தியாவும் மெதுவாக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் நேரம் வருவதை தடுக்க முடியாது.

    தன் உடம்பில் கடைசி பலம் இருக்கும்வரை புழுகூட ஆக்கிரமிப்பை எதிர்க்கிறது. அது செத்த பின்னால்தான் ஆக்கிரமிப்பு முழுமையடைகிறது. செத்த உடம்பைத்தான் ஆக்கிரமிக்க முடியும். மதம் மாற்றுதல் செத்த பிணத்தை ஆக்கிரமிக்கும் எதேச்சதிகாரம்தான்.

    ஆக்கிரமிப்பை இதுவரை எதிர்க்காதவர்கள் இந்த புழுக்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளட்டும்.

  8. இந்துக்கள் தங்கள் மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை பற்றி பேசினால் போதும் உடனே,மதவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான்.அல்லது முதுகில் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். இல்லையென்றால் மதகலவரங்களை தூண்டுகிறான் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுகிறான்
    சட்டத்தின் அனைத்து பிரிவுகளும் அடுக்கடுக்காக அவன் மீது சுமத்தப்படுகின்றன.
    ஒவ்வொரு மதத்திலும் அதன் தத்துவங்களை புரிந்து கொள்ளாத சகிப்புத்தன்மையற்ற மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயல்கள் அனைத்து சமுதாயதினரையுமே பாதிக்கிறது என்பதை மக்கள் உணரும் காலம் எப்போது வரும்?
    வன்முறைகளை கைக்கொண்ட மதங்கள் என்றும் வெற்றிபெரபோவதில்லை
    அன்புமதம்தான் அனைத்து புண்களையும்,ஆற்றும் மருந்து

  9. ஏன் காஷ்மிருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யக்கூடாது?

  10. யார் அதை செய்வது?
    அதற்கு சோனியா அண்ட் கோ, திராவக மற்றும், கத்தி கபடா கட்சிகளின் பிடியிலிருந்து நாடு விடுதலை அடைந்தால்தான் அது சாத்தியம்.அதற்கு மக்கள் முதலில் தெளிவுபடுத்தபடவேண்டும்.

  11. மிக சரியான, ஆழமான கருத்துகளை கொண்ட கட்டுரை.. இது ந்ம் பாரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *