தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா

தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரலை பெரிய அளவில் காண படத்தின்மேல் கிளிக் செய்யவும்.

3 Replies to “தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா”

  1. Its great victory for our Dharma and Faith,I pray to God Lakhs of Lakhs Peoples come to Mother relegion and also i pray to god for the success of the function.

  2. ஆகாயத்தையும் , பூமியையும் படைத்த ஆண்டவர் 3 வது நாள் பகலை ஆழ சூரியனையும், இரவை ஆழ சந்திரனையும் படைத்தார்… சந்தேகம் 1 :- சூரியனும் சந்திரனும் இல்லாமல் எப்படி பகலும், இரவும் வரும். பகலும் இரவும் இல்லாமல் எப்படி முதல் 2 நாட்கள் கணக்கிடப்பட்டன? 2. ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு 7 வது நாள் ஓய்வு எடுத்தார். சந்தேகம் 2 :- நீங்கள் ஏன் வாரத்தின் முதல் நாளே ஓய்வு எடுக்கிறீர்கள்? 3.சாத்தானின் தூண்டுதலால் தான் ஆதாமும், ஏவாளும் அந்த கனியை சாப்பிட்டு அவர்களுக்கு வெக்கம், மானம், ஆடை போன்ற மனித இயல்புகள் வந்ததாக சொல்கிறீர்கள். சந்தேகம் 3 :- அப்படி என்றால் உங்கள் ஆண்டவர் வெக்கம், மானம், ஆடை இல்லாத மனிதரை தானே படைக்க விரும்பினார்.அப்புறம் நீங்கள் ஏன் ஆடை அணிகிறீர். ஆடை அணிவது தான் சரி என்றால் நீங்கள் சாத்தானாக கருதுபவர் தானே உண்மையான கடவுள்…? 4.இயேசுவை குற்றவாளியாக மன்னனிடம் நிறுத்தும் போது, முதலில் 24 சவுக்கடிகள் கொடுக்க சொல்கிறார். ஆனால் அதை மக்கள் அனைவரும் ஓன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து இயேசுவை சிலுவையில் அறைய சொல்கின்றனர். சந்தேகம் 4 :- மக்களின் கோரிக்கை ஏற்றே தண்டனை வழங்கப்பட்டது. அதே மக்கள் இயேசு சிலுவையில் அறையப்படும் போது அழுததாக சொல்வது யதார்த்தமாக இல்லையே? 5.அந்த நாட்டில் பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே சிலுவையில் தான் அறையப்படுகிரார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் போது இன்னும் 2 குற்றவாளிகளுக்கும் அதே தண்டனை வழங்கப்படுகிறது. சந்தேகம் 5 :- இயேசு மட்டுமே சிலுவையில் அறையப்பட்டதுபோல் , பரிதாபம் ஏற்படுத்தி ஓட்டு வாங்க , மன்னிக்கவும் மக்கள் மனதை மாற்ற நினைப்பதன் நோக்கம்? 6.ஏசுவும் சிலுவையில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டதால் சிலுவையை நாங்கள் புனித சின்னமாக வழிபடுகிறோம். சந்தேகம் 6 :- அப்படி என்றால் , இயேசுவை தூக்கிலிட்டிருந்தால் தூக்கு கயிறை புனித சின்னமாக வணங்கி இருப்பீர்களோ? 7. இயேசு பிறந்தது டிசம்பர் 25. இறந்தது வெள்ளிகிழமை. சந்தேகம் 7 :- பிறந்ததை மட்டும் தேதி குறிப்பிட்டு கொண்டாடும் நீங்கள், இறந்தது மட்டும் எப்பவுமே வெள்ளிக்கிழமை வருவதன் அர்த்தம் என்னவோ? ( குறிப்பு : இந்துக்கள் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திர கணக்குபடியே நடைபெறுகிறது) 8.இயேசு தினமும் தன் தேவனை நினைத்து பிரார்த்தனை செய்வார். சந்தேகம் 8 :- அப்படி என்றால் இயேசு வணங்கிய தேவன் யார்? 9. இயேசு சிலுவையில் அறையப்படும்போது என் தேவனே என்னை காப்பாற்றும் என்றும், எந்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றும் கத்தினார். சந்தேகம் 9 :- அப்படி என்றால் இயேசு கடவுளா? அல்லது இயேசு வணங்கிய தேவன் கடவுளா? 10.நீங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு கடைசியாக ” பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே என தொடங்கி……. இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் எங்கள் பரம பிதாவே” என்று ஜெபத்தை முடிப்பீர்கள். சந்தேகம் 10 :- இயேசுவின் மூலம் ஜெபத்தை ஏற்றுகொள்ளும் அந்த பரம பிதா யார்? ( எல்லாம் சிவமயம். ஹிந்துக்கள் மட்டுமே இறைவனை நேரடியாக பிரார்த்தனை செய்கின்றனர். கிறித்தவம்-இயேசுவின் மூலம், இஸ்லாம்-நபிகள் மூலம், பௌத்தம்-மகாவீரர் மூலம். இப்படி கிருத்தவமோ, இஸ்லாமோ , பௌத்தாமோ எல்லா மதங்களும் தூதர்கள் மூலம் பரம்பொருளை வணங்குகின்றனர். ஆனால் ஹிந்துக்கள் மட்டும் தூதர்கள் இல்லாமல் பரம்பொருளை வணங்குகின்றனர் என்பதே உண்மை.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *