இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

சற்றுமுன் கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது தில்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு வெடிப்புகளுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பு(?) வழக்கம் போல ஈமெயில் அனுப்பியுள்ளது. நமது ‘பாவங்களுக்காக’ இப்படி பொதுமக்கள் கூடுமிடங்களில் குண்டுவைத்து கொல்கிறார்களாம், இந்த அல்லாஹ்வின் போராளிகள்(முஜாஹித் – இஸ்லாமிய போராளி).

delhi bomb blasts

இந்த குண்டு வெடிப்பில் கவனிக்கத் தகுந்த அம்சம் ஒன்று உள்ளது. இது ரம்ஜான் மாதம். இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் 6-6:30 மணிக்கு தங்களது ரம்ஜான் நோன்பை முடிக்கிறார்கள். இந்த குண்டுகள் அந்த நேரத்தில் சரியாக வெடித்துள்ளன. அதாவது எதிர்பாராதவிதமாகக் கூட எந்தவொரு முஸ்லீமும் உயிரிழந்துவிடக்கூடாது என்பதால், சரியாக அவர்கள் அனைவரும் வீட்டில் நோன்பு திறக்கும் நேரத்தில் திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள் இந்த ஈமானிகள் (ஈமான் – முஹம்மதுவே அல்லாஹ்வால் உலகிற்கு அனுப்பப்பட்ட இறுதி தூதன் என்று நம்பி, முஹம்மது சொன்னதையெல்லாம் இறை வாக்காக நம்பிச் செயல்படுகிறவர்கள்).

The blasts at Delhi have been carefully planned to minimise muslim casualities. The Islamic community during this ramalan month breaks fast in India at 6-6:30 pm and the blasts have been timed to coincide with this. This sadly reminds me of the Mumbai blasts when they were timed to coincide with namaz timings, again to minimise muslim casualities.

அதிகம் எழுதத் தோன்றவில்லை. துக்கமும், கோபமும், இயலாமையும் நெஞ்சை அடைக்கிறது. இறந்த, காயம்பட்டு கைகால்களை இழந்த சக இந்திய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.

இறந்தவர்களது ஆத்மா சாந்தியடைய இறை அருள் துணை நிற்கட்டும்.

13 Replies to “இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்”

 1. பாராளுமன்றத்தைத் தாக்கிய அஃப்சல் குரு-வை இன்னும் தூக்கில் போட வக்கில்லை !
  காஷ்மிரில் பாக்கிஸ்தான் கொடி பறக்கத் தடை இல்லை !
  பொடா சட்டம் வாப்பஸ் !
  அஸ்சாமிலும் வங்காளத்திலும் பங்க்லாதேச முஸ்லிம்கள் குடியேறி ஆக்கிரமிப்பு !
  ஸிமி இயக்கத்திற்க்கு மத்திய அமைச்சர் லாலு பகிரங்கமாக ஆதரவு !

  இந்த அரசு என்று தொலையுமோ…கடவுளே !!!

 2. நமது எதிரிகள் முஸ்லீம்கள் அல்ல. செயல் திரன் இல்லாத அரசாங்கமே. எத்தனை குண்டு வெடிப்புகள். என்ன செய்தார்கள் இவர்கள்? இறந்தவர்கள் இந்துக்கள் தானே என்ற அலக்க்ஷியமோ? குற்றவாளீகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அல்லவா கண்டுபிடிக்க? அதுவும் முஸ்லீம் என்றாலே அஞ்சும் இவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து தூக்கிலா போடப் போகிறார்கள்? செயலற்ற இவர்களுக்கு அரசாங்கம் எதற்கு? அதை ஆள்வதற்க்கு அமைச்சர்கள் எதற்கு? பணவெறியும், பதவிமோஹமும் கொண்ட இவர்களுக்கு மனித உயிர் ஒர் பொருட்டல்ல. ஒன்றா, இரண்டா, எவ்வளவு குண்டு வெடிப்புகள், இதுவரை ஒன்றுமே செய்யாத இவர்கள் இனி செய்யப் போகிறர்கள்? பொறுத்தது போதும். உயிரிழ்ந்த பிறகு நாம் எங்கே ஓடப்போகிறோம்? இவர்களை பதவியிலிருந்து ஓடச்செய்ய, மீண்டும் பதவியில் அமராதிருக்க, அரசியல் பக்கமே வராதிருக்க, காங்கிரஸுக்கும் அதனைச் சார்ந்தவர்களுக்கும், இனி ஓட்டளிப்பதில்லை என சூளுரைப்போம்…ஒருங்கிணைந்து, பெருங்குரளெடுத்து, சத்யப் பிரமாணம் செய்வோம்.

  “வந்தே மாதரம்; ஒன்றே பாரதம்”

  பார்த்த‌சார‌தி

 3. ராஜீவ் படுகொலைக்கு பிறகு விடுதலை புலிகளுக்கு ஆதரவு குறைந்து, தமிழகத்திலேயே எதிர்ப்பு அலை எழுந்தது போல், தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா முழுவதுமான ஒரு எதிர்ப்பு எழ வேண்டும். அதற்கான குரல் அமைதியை விரும்பும் முஸ்லிம்களிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

 4. *வினை விதைத்தல் வினையை தான் அறுவடை செய்ய வேண்டும்* புரிந்து உங்களை திருத்தி கொள்ளுங்கள் முஸ்லிம்கள .
  – இல்லை எனில மிக மிக மிக கடுமையாக தண்டிகபடுவிர்கள்

  எரிமலை (இந்து) கொதித்து எழுந்தால்
  எல்லாரும் சம்பல் அகிவிடுவிர்கள்.

 5. The rise of Saudi-sponsored extremist Islam is a danger to civilization everywhere. All extremist Muslims are potential terrorists and Allah’s soldiers. There should be no tolerance for this religiously organized intolerance against liberalism, human rights and women’s equal status and other manifestations of
  our civilization. Muslims in civilized and democratic societies should be required to take the oath of loyalty to the state and democracy.

 6. நேற்று மாலை கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது நண்பர் ஒருவரின் தகவல் வந்தவுடன் தொலைகாட்சி பெட்டியின் பக்கம் சென்று சானல்களை மாற்றிப் பார்த்தேன்.

  அந்த அழகான புல்தரைப் பூங்காவில் ஜோடியாக அமர்ந்திருந்த காதலர்கள் சிதறிக்கிடக்கும் காட்சி…அந்தப் பெண் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன். இளைஞனை மருத்துவ மனைக்குத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். சற்றுத் தள்ளி இன்னொரு ஜோடி கிடந்தது……..

  அடுத்து ஒரு பஸ் நிறுத்தம் அருகே காவி அணிந்த ஒரு சாமியார் போன்ற ஒருவர் குப்புற விழுந்து இறந்து கிடக்கிறார். இடப்பக்கம் இருவர் ரத்தம் சொட்ட சொட்ட உதவியை எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தனர் வலியுடன்…….

  மருத்துவ மனைக்குள் ஒரு ஸ்ட்ரெட்சரில் ஒருவரை தள்ளிக் கொண்டு செல்கின்றனர்..அவர் கால்மாட்டில் அவருடைய குழந்தை ஒன்றும் புரியாமல் அமர்ந்துகொண்டிருக்கிறது…….

  மற்றொருவரை கைத்தாங்கலாக மருத்துவ மனைக்குள் அழைத்து செல்கிறார்கள். அவர் மனைவியும் குழந்தைகளும் பதறியபடியே பின் தொடர்கின்றனர்……

  என் டி டிவியில் பர்கா தத் ஒரு பெண்மணியிடம், “நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்கிறார்…அந்தப் பெண்மணி தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி சிரித்துக் கொண்டு, “இந்த மாதிரி சமயத்தில் போலீசும் மற்றவர்களும் எப்படி வேலை செய்கிறார்கள், என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை பார்க்க வேண்டும் என்று என் மகள் ஆசைப்பட்டாள். அதற்காகத்தான் அவளை அழைத்துக் கொண்டு வந்தேன்” என்று சொல்கிறார். குண்டு வைத்த ஜிகாதிகளை விட இந்தப் பெண்மணி கொடூர மனம் படைத்தவர்…

  தன் சக குடிமக்கள் இறந்தும், இறந்துகொண்டும் இருக்கிறார்களே…அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மனதில் தோன்றவில்லை…வேடிக்கை பார்க்க வேண்டும் என்று தோன்றியதாம்…அதையும் சிரித்துக் கொண்டே சொல்கிறார்…
  இவரைப் போன்றவர்களும் இந்த தேசத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்!

  மறத்துப்போன மன்மோகனும், வெட்கம் இல்லா சிவராஜ் பாடீலும், மதப் பகை வளர்க்கும் சோனியாவும், ஒன்றுக்கும் உதவாத பிரதீபா பாடீலும் எப்பொழுதும் போல் கண்டன அறிக்கை விட்டாயிற்று…அடுத்து மருத்துவ மனை விஜயம் செய்துவிட்டால் கடமை முடிந்து விடும். மக்கள் நாம் அடுத்த குண்டு வெடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கலாம்.

  குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்கிறது அரசாங்கம்! குற்றவாளிகள் என்று ஒரு பொதுவான வார்த்தை…..ஜிகாதிகள் என்றோ இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்றோ சொல்லக் கூட தைரியம் இல்லாத அரசாங்கம் இருந்து என்ன பயன்? கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்கிறார்களே, இதுவரை எத்தனை பயங்கரவாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பயங்கரவாதக் குற்றங்கள் சரியாக புலனாய்வு செய்யப்பட்டு ஜிகாதிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறார்கள்?

  பயங்கரவாதிகளும், மதம் மாற்றுபவர்களும், நக்சலைட்டுகளும் வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள். உண்மையான தேசப்பற்று உள்ள மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு பெயர், மதச்சார்பின்மை….மதச் சுதந்திரம் …..மனித உரிமை……

  மண்ணாங்கட்டி…….மானமுள்ள ஒரு அரசாங்கம் இப்படி செயல் படுமா? மலட்டுத் தன்மையுள்ள அரசாங்கம் அல்லவா இது?

  நமது நாட்டில் நிம்மதியாக நம்மால் இருக்க முடியவில்லை. நமது பண்டிகைகளை நம்மால் ஆனந்தமாகக் கொண்டாட முடியவில்லை. நமது குடும்பத்துடன் நாம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியவில்லை. நம் நண்பர்களுடன் நாம் திரையரங்குகளுக்கு சென்று உல்லாசமாக திரைப்படம் பார்க்க முடியவில்லை. ஒரு பேருந்து நிறுத்தத்தில் கூட பயந்தபடியேதான் நிற்கவேண்டும். எப்பொழுது எங்கு குண்டு வெடிக்கும் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியில் போனால் உயிருடன் திரும்பி வருவோமா என்று நிச்சயம் இல்லை. என்ன கொடுமை இது? என்ன வாழ்க்கை இது? எத்தனை நாள் இந்தக் கொடுமையை பொறுப்பது?

  நாம் தெருவுக்கு வந்து சில வன்முறைகளில் ஈடுபட்டால் தான் நமது சுதந்திரத்தை நிலை நிறுத்த முடியுமா? அப்படி நடந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்குமா? அப்பொழுது தான் அமைதி திரும்புமா? அத்தகைய நாள் தொலைவில் இருப்பதாகத் தோன்றவில்லை! .

  உயிர் பிரிந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
  காயம் பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தானை செய்வோம்.

  பிரார்த்தனையுடன்

  ப.இரா.ஹரன்.

 7. Well said Mr Harhan
  We need a Hindu backlash, otherwise there will only be more bombs. You cannot talk logic or appeal for commonsense to these Islamists. Appeasement in the past has never worked.
  Defend your country and your family by any means. The time for talk and negotiations are over. This UPA Govt is not going to stop the next bomb explosion.

 8. அவர்கள் (தீவிரவாதிகள்) விடுகின்ற அறிவிப்பை போன்று, இந்து மதத்தை சேர்ந்தவர்களும் புதிது புதிதாக அமைப்பினை உருவாக்கி, இனிமேல் இந்துக்கள் அதிக அளவில் உயிர் இழக்க நேரிட்டால், அவர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக கூடும் இடத்தில் நாங்களும் வெடிகுண்டை போடுவோம் என்ற பதிரங்க அறிவிப்பை வெளியிட்டால். என்ன நடக்கும்?? அப்படி ஒரு நிலைமை அற்பட வேண்டுமா.. ?? தயவு செய்து சிந்தியுங்கள்..

  உயிரிழப்பு என்றுமே உங்களுக்கு வேண்டிய முடிவை தர போவதில்லை.. மாறாக அமைதியாக இருக்கும் இந்துக்களின் மனதில் ஒரு ரணம், வடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்..

 9. உணர்ச்சி மிகுதலில் இங்கு சில அன்பர்கள் – பீத்பிரியன், தெய்வேந்திரன் மற்றும் சில பெயர்களில் வந்துள்ள நம் அன்புத்தோழர்கள் – வன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சிறிது மனதை நெருடுகின்றன. நம் இந்து சம்யம் எப்போ்தும் தழைத்து வந்திருக்கிறது, ஆயிரம் ஆண்டுகளாக எல்லா விதமாக அச்சுறுத்தல்களையும் வென்று வந்திருக்கிறது என்றால் அதற்கு நம் மதத்தின் மிக நேர்மையான கருத்துக்களும், தத்துவங்களுமே காரணம். ந்மக்கு இன்று இந்தியாவை ்மற்றும் இந்துக்களை அச்சுறுத்தும் எல்லாவற்றிற்கும் நம் ஒற்றுமையே தீர்வு, வன்முறை தேவையில்லை. மனதை அதிர வைக்கும் இப்போதைய நிகழ்வுகளில் நாம் உணர்ச்சி வயப்பட்டு எல்்லை மீறவேண்டாம். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  நன்றி

  ஜயராமன்

 10. சோனியா சொன்னால் பதவி விலகத்தயார் என்று இயம்பியிருக்கிறார் கையாலாகாத உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீல்.

  இவர் பதவியில் இருக்கும் போது இந்தியா முழுதும் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துவிட்டன. ஒரு தொடர் குண்டு வெடிப்புக்கும் குற்றவாளியைப் பிடித்து கூண்டில் ஏற்றியபாடில்லை. இவர் இன்னும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளாம் வாங்கும் உள்துறை அமைச்சராக இருப்பது வரி செலுத்தும் ஒவ்வொரு குடி மகனுக்கும் எதிர்க்கவேண்டும். இன்னிலையில், நாட்டின் தலமைப் பொருப்பில் இருக்கும் பிரதம மந்திரி இவரை பதவி விலகச் சொல்லவேண்டும் அது தான் நீதி. ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா சொன்னால் பதவி விலகத் தயார் என்று சொல்வது பிரதம மந்திரிக்குக் கேவலம் இல்லையா ?

 11. டில்லி குண்டு வெடிப்பு மற்றோர் உண்மையைத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளத் தெரியாத “கையால்லாகாத” அரசு ஒன்று நமது தேசத்தை எவ்வாறு முஸ்லீம் வெறியர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும். மத சார்பின்மை பஜனை பாடும் அரசியல் தலைவர்களோ அல்லாது அவர்களின் உற்றாரோ இந்த குண்டு வெடிப்பினால் கொல்லப்பட்டாலோ படு காயமடைந்தாலோ அவர்கள் செகுலர் பாட்டு பாடுவார்களா? இந்துக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு என்பதே நமது வழ்க்கமான பல்லவி. ஜனாதிபதி முதல் வார்டுக் கவுன்சிலர் வரை குண்டு வெடிப்பை கண்டிப்பார்கள். பின்னர் அடுத்த குண்டுவெடிப்பு வரை ஒரு ரூபாய் அரிசி மற்றும் பல கவர்ச்சி திட்டங்களும் தொலைகாட்சி தொடர்களும் சராசரி இந்தியன்(தமிழன்) வாழ்வை சொர்க்கமாகிவிடும்.

 12. The new Muslim fanatic terror baby Indian Mujahidin has been delivered. There is no doubt that this illegitimate baby is the creation from the unholy marriage between Pakistani Army/ Govt. officials, Muslim fanatics of Kashmir and Muslims from other parts of India.

  The name for this illegitimate baby has been deliberately given as Indian Mujahidin, to give an impression that this monster is home grown and has nothing to do with our long standing enemy Pakistan.

 13. Mr Jayaraman
  I have a lot of respect/admiration for you and your writings. Patience and Ahimsa so far have failed to stop all the bombings. I am not advocating violence against Muslim population. Inflicting violence/injury against innocents wil be against my Hindu dharma. But, we also cannot sit on our backside and do nothing- as I can assure you, more bombings in major cities in near future is a reality. Throwing out the useless UPA govt and installing a govt interested in Hindu wellfare is a long way off.On the lighter side, living in a far off land, we Indians are more concerned about India than an average Indian! Your thoughts and any future plan of action will be appreciated.
  Jai Hind
  Rama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *