மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்

‘Butch Cassidy and the Sundance Kid’ என்ற பிரபலமான திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் திரைப்படத்தின் நாயகர்கள் இருவரும் ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் மாட்டிக் கொள்வார்கள். சிறு திருடர்களான அவர்களை எப்போதும் போலிஸ் துரத்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பித்து விடும் அவர்களை இந்தமுறை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று ஒரு பெரிய பட்டாளமே அந்த கட்டடத்தைச் சுற்றிவளைக்கும். வெளியே ஒவ்வொரு அங்குலத்துக்கும் போலிஸ் நிற்பது தெரியாமல் எப்போதும் போல் தப்பித்துவிடலாம் என்று கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வருவார்கள் நாயகர்கள் இருவரும். அந்த ஃப்ரேம் அப்படியே உறைந்துபோய், இன்று உலக சினிமாவின் ஒரு முக்கியக் காட்சியாகப் பதிந்துவிட்டது.

ஆனால் Butch Cassidy-யும், Sundance Kid-உம் பாவப்பட்டவர்கள்! அவர்கள் காலத்தில் கட்டடத்தைச் சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்று லைவ் அப்டேட் கொடுக்க செய்திச் சேனல்கள் இல்லை. ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய சிம்கார்டுகள் இருந்தன; அவை புதுதில்லியில் வாங்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தப் பட்டிருக்கின்றன; தீவிரவாதிகள் வசமிருந்த செல்ஃபோன்களின் பேட்டரி தீர்ந்து போனபோது, தாங்கள் சுட்டுக்கொன்றவர்களிடமிருந்த செல்ஃபோன்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அத்தனையும் போலிஸிடம் உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி சொன்ன தகவல்கள்! தீவிரவாதிகளுக்கு இத்தனை தகவல்கள் நம் ஊடகங்களின் உடனடிச் செய்திகளால் கிடைத்ததில் ஒரு கட்டத்தில் அரசே, இந்த ஊடகங்களை சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொள்ளுமாறு ஆனது. ஆனாலும் நம் செய்தி ஊடகங்களைப் போர்வீரர்கள் என்றும், பொறுப்பான மகாத்மாக்கள் என்றும் சிலாகித்துக் கட்டுரை எழுதுபவர்கள் இருக்கிறார்கள்!

நாளை இதுபோன்ற புல்லரிப்புக் கட்டுரைகள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படிக்கும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெறும். ஏன், சென்சேஷலிசப் பத்திரிகைகளில் ஒன்றான ஜூனியர் விகடன், தீவிரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப் பட்டும், அதுவும் ஏன், பிடிபட்ட தீவிரவாதியே தான் ஒரு பாகிஸ்தானி என்று வாக்குமூலம் கொடுத்தும், கூசாமல் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்துக்கள் எனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களே இப்படிப் பொறுப்பில்லாமல், விஷமத்தனத்துடன் நடந்து கொள்ளும்போது, உலக ஊடகங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

பிரபலமான பத்திரிகையான ‘டைம்’, முஸ்லிம்கள் இப்படி அடிக்கடி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் காரணம் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதலபாதாளமான பொருளாதார வேறுபாடு இருப்பதுதான் என்றும், கடும் வறுமையில் இருக்கும் முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என திட்டமிட்ட பிரச்சாரம் சர்வதேச ஊடகங்களில் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது.

இது எவ்வளவு பெரிய பொய் என்று இந்தியாவின் கிராமங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்கும் எவராலும் சுட்டமுடியும். முஸ்லிம்கள் உண்மையில் தங்கள் சவக்குழியைத் தாங்களே வெட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஆண்களிலும் கல்லூரியைத் தாண்டுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தில், ஏன், உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில், வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதித்துக் குடும்ப வண்டியை இழுப்பது எவ்வளவு சிரமம் என்பது மத்திய தரத்தினருக்கு நன்றாகத் தெரியும். இதில் அடிப்படை வாதத்தால் உந்தப்பட்டுப் பெண்களைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தபின், வெகு சிரமப்பட்டுக் கல்லூரியை முடிக்கும் இளைஞர்களைக் கொண்டு பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும்? அதே நேரத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்த எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள், பொறியியல், வணிகம், மருத்துவத் துறைகளில் நுழைந்து வெகுசிறப்பான நிலைகளுக்கு வந்திருக்கின்றன.

ஒரு வாதத்துக்காக முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் தாழ்நிலையில் இருக்கும் ஏழை இந்துக்கள் எத்தனை அரசு அலுவலகங்களைத் தகர்த்திருக்க வேண்டும்! பல்லாயிரக் கணக்கான ஏழைத் தமிழர்கள் வாழும் மும்பைச் சேரிகள் இந்நேரம் எத்தனை தீவிரவாதிகளை உருவாக்கியிருக்க வேண்டும்?

இவர்கள் சொல்லும் இன்னொரு வாதம் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும், ஊக்கமும் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது. ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கிப் பார்த்த நாட்டைப் பார்த்துக் கூசாமல் இவர்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது? இந்திய தேசம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கிரிக்கெட்டில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் முஸ்லிம் இளைஞர்தானே! சானியா மிர்ஸாவுக்குத் தொடர்ந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் வருவது இந்திய அரசாங்கத்திடமிருந்தா, இல்லை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தா?

அபூர்வமாக பதிலுக்கு இந்துக்களிடமிருந்து வன்முறை கிளம்பினால் தேசமெங்கும் கண்டிக்கப்படுகிறது. ‘நான் ஒரு இந்துவாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்’ என்ற கூக்குரல்கள் கூட அவ்வப்போது எழும்புகின்றன. நம் பத்திரிகைகளும் மை தீரும் வரை கண்டித்துத் தலையங்கங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். இது போன்ற அறக்கோபம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களில் நூறில் ஒரு பங்கு கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறித்தனத்தின் போது இஸ்லாமிய சமூகங்களிலிருந்தோ, நம் ‘செக்யூலர்’ ஊடகங்களிலிருந்தோ எழுவதில்லை.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் தவறாமல் பாபர் மசூதி இடிப்பையும், குஜராத் கலவரங்களையும் ஒரு சமநிலைக்காக முன்னணியில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படியானால் 64 முறை இடிக்கப்பட்ட சோமநாதபுரம் (மற்றும் எண்ணற்ற கோவில்களை) இந்துக்கள் காட்டி நியாயம் கற்பிக்கலாமே. பாமினி புத்தர் சிலைகளைத் தகர்த்ததை பௌத்தர்கள் சுட்டிக் காட்டலாம். இதெல்லாம் வாதமே அல்ல. ஆனாலும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் நம் ஊடகங்கள் ஏதாவது ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன.

நேற்று ஒரு செய்திச் சேனலில் மும்பை குண்டுவெடிப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியானது. அதில் பேசிய ஒருவர் சொன்னது: “BJP உண்மையிலேயே தலைகுனிய வேண்டிய நேரமிது. ஏனென்றால் பாபர் மசூதியை இடித்து இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்தக் கட்சிதான்!” தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியாவில் முஸ்லிம் தாக்குதல்களே நடைபெற்றது கிடையாதா?

இதோ இப்போது மும்பை தாக்குதல்களை நியாயப்படுத்தி, நம் சிறுபத்திரிகைகள் மெல்ல, மெல்லத் தம் ஆஸ்தான எழுத்தாளர்களை வைத்துக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கும். தவறாமல் அக்கட்டுரைகளில் மோடி, குஜராத், மலேகான் போன்ற வார்த்தைகள் இடம்பெறும். ஒருவேளை இக்கட்டுரைகள் இவர்களைத் துகிலுரித்துக் காட்டிவிடுமோ என்ற அச்சம் இருந்தால், மொத்த குண்டுவெடிப்பையும் மறந்துவிட்டு ஏதாவது மேற்கத்திய எழுத்தாளரின் கதைகளை மொழிபெயர்த்து இப்பத்திரிகைகள் வெளியிடும். இவர்களுக்குத்தான் கட்டமைப்பை விடக் கட்டுடைப்பு அதிகம் பிடித்ததாயிற்றே.

மொத்தத்தில் பொறுப்பில்லாத, கைக்கூலித்தனம் இந்திய ஊடகங்களின் அடையாளமாகிவிட்டது. இருந்திருந்தால், பந்துக்குப் பந்து கிரிக்கெட் விமர்சனம் போல, பயங்கரவாதத் தாக்குதலைக் காண்பித்து விவரித்து, ISI முன்னாள் அதிகாரி ஒருவர் இங்கே செயல்பட்ட வன்முறைக் கும்பலுக்குச் சரியான அழிவுக்கு வழிகாட்ட உதவியிருக்க மாட்டார்கள். இருந்திருந்தால், மத்திய அரசுக் கட்டில் மிக நெடுங்காலமாக உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் அரசின் கையாலாகத் தனத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை ‘அரசியல்வாதிகளின் மீதான கோபம்’ என்று திசைதிருப்பிக் காட்ட மாட்டார்கள்.

இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.

28 Replies to “மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்”

  1. வனமாலி பர்காதத்துக்கு இதை ஆங்கிலத்தில் மொழிமாற்றி அனுப்பி வையுங்கள் தான் செய்தது தவறு என்பதை இன்னும் உணராமல் பெரிய தியாகி மாதிரி ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார். இந்த லட்சணத்தில் நாராயணமூர்த்தியே என் டி டி வியைப் பாராட்டியதாக வேறு பீத்திக் கொள்கிறார் பரக்கா தத். இந்த மீடியாவின் பெறுப்பற்ற தன்மையை உணராமல் பாராட்டியிருக்கும் நாராயணமூர்த்தியின் செயல் அவரது ஜட்ஜ்மெண்ட் திறனையும் அவரது நம்பிக்கைத்தன்மையையுமே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. நமது ஊரில் படித்தவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது அவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் நாலாம் கிளாஸ் ஃபெயிலான சோனியாவைக் கூட ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர் என்று இந்தியர்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்திய மத்தியவர்க்கத்தின் ஆதர்சமான நாராயணமூர்த்தி எப்படி இந்த மீடியாக்களின் பொறுப்பற்ற தனத்தைப் பாராடினார் என்பது தெரியவில்லை. அவர் அப்படிப் பாராட்டியதை வைத்தே பரக்கா தத் தான் செய்த குற்றத்தை மறைக்கப் பார்க்கிறார். ராணுவக் கமாண்டோக்களின் கொலைகளுக்கும், பிடிபட்டவர்களின் உயிர் இழப்பிற்கும் பரக்கா தத்தும், சர்தேசாயும் ஒரு விதத்தில் பொறுப்பானவர்கள் தீவீரவாதிகளைப் போலவே இந்த இருவருக்கும் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். இருவரையும் குற்றவாளிகளாக கருத வேண்டும். நாராயணமூர்த்தி போன்றவர்கள் இனிமேல் யாருக்கும் சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் முன்னால் அவர்கள் தரம் அறிந்து கொடுக்க வேண்டும்,படித்தவர்கள் எழுதுவதையும் பேசுவதையும் பொறுப்பாகச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் செய்யும் தவறு பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடும் இதனால்தான் பாரதியார் படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்று சொல்லியிருக்கிறார். அருமையான கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்

    அன்புடன்
    விஸ்வாமித்ரா

  2. அருமையான சாட்டையடி. நம் தமிழ் ஊடகங்கள் இல்லை இல்லை-ஊழலகங்கள் , இவ்வளவு கேவலமாகவா போய் விட்டன? காசு கொடுத்து வாங்கிப் படித்து ரத்தக் கொதிப்பை இலவச இணைப்பாகப்பெற்றுக்கொள்ளலாம்.
    இந்த பர்க்கா அம்மையார் தெரியாமலா செய்கிறார்?
    அல்லது அவரது தேச பக்திக்கு பெயர் போன [ ! ] சேனல் காரர்கள் தான் தெரியாமல் செய்கிறார்களா?
    நமக்கு வெளி எதிரிகள் தேவையே இல்லை. இந்த தெய்வங்களே போதும்.
    மக்கள் விழித்தாக வேண்டும் . நம் அனைவரின் வாழ்வும் அதில் தான் உள்ளது.
    தங்கள் சேவை தொடரட்டும்.

  3. //இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும்.//

    திருந்தமாட்டார்கள்; ஐயமில்லை.

    //இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.//

    அச்சு ஊடகங்கள் எனில் விலைகொடுத்து வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

    மின் ஊடகங்கள் (தொலைக்காட்சி) எனில் அவற்றைப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

    படிப்பவர்கள், பார்ப்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கைதான் ஊடகங்களுக்கு வாழ்வு தருகிறது; இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்கள் திருந்தக்கூடும்.

    இது எளிய வழி.

    பலர் பலகாலம் சொன்ன வழிதான்.

    மக்கள் இந்த எளிய வழியைப் பின்பற்றித் திருத்துவார்களா என்பது ஐயமே.

  4. பர்கா தத் பாகிஸ்தானுக்கு ஒற்று வேலை செய்பவள். சர்தேசாய் அமெரிக்க ஒற்றன். “தி ஹிந்து” பத்திரிகையின் ஆசிரியன் ராம் ஒரு சீன ஒற்றன். இவர்களைப் போல் இன்னும் பல ஒற்றர்கள் நம் இந்தியாவின் ஊடகங்களில் ஊடுருவியிருக்கிறார்கள்.

    இது மட்டுமல்லாமல் பல ஊடகங்கள் வெளி தேசத்து முதலாளிகளுக்கு கூலி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவ, மற்றும் இஸ்லாமிய தேசங்கள் டாலர் கணக்கில் பணம் தருகின்றன. என் ஜி ஓக்கள் மறைமுகமாக இவர்களுக்கு உதவி செய்கின்றன.

    தேச விரோத என் ஜி ஓக்களை ரத்து செய்ய வேண்டும். ஊடகங்களின் முதலீடுகளையும் கணக்கு வழக்குகளையும் ஆராய வேண்டும். அவர்களுக்கு எங்கிருந்து, யார் மூலம் பண உதவி வருகிறது என்று சோதனை செய்து, துப்பறிந்து அதை நிறுத்த வேண்டும். ஊடகங்களை ஒரு வரை முறைக்கு கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும்.

    பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்று நிலை நிறுத்த வேண்டும். தேச நலனுக்கு முன்னால் மற்றவை யாவும் இரண்டாம் பட்சமே என்கிற நிலை வர வேண்டும். அவ்வாறான நிலைமை வர மக்கள் அனைவரும் போராட வேண்டும்.

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வனமாலி அவர்களே. பாராட்டுகள்!

  5. வனமாலியின் இந்த கட்டுரை ஊடகத் தெய்வங்களாக தங்களை நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சவுக்கடி. தங்களது ஊடகம் முதலிடத்தில் இருப்பதற்காக நாட்டு நலன், போராடும் வீரர்கள் நலம் எதுவமே இவர்கள் கண்ணுக்குத்தெரிவதில்லை. அல்லது போட்டி மறைக்கிறது இவர்களது கண்களை. தேசத்துரோகிகளின் பட்டியல் எடுத்தால் இந்த மூவரும் ( பர்காதத், சதேசாய், இந்து என் ராம் ) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருப்பார்கள். இதுபோக நாட்டைக்காட்டிக்கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தில் வாழும் முற்போக்கு எழுத்தாளர்கள் என கூறிக்கொள்ளும் தேசவிரோதிகள் வருவார்கள்.

    இதுபோன்ற உண்மையின் உரைகல்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.

    ஸ்ரீதர்

  6. The Live telecast of Mumbai Blasts reminds me of the film ‘The Condemned’. Media had got free reality show for 60 hours.. The people who watched the show also to be blamed.. Everybody has violence inside.. Involuntarily they were enjoying the violence show.. The shamless government allowed the comedians to telcast live.. All the median should be thrown out the place till Taj was sanitised.. In this country, we dont know, how many more years in the name of secularism and democracy we are going to see such things.. There should be separate law to deal with Terrorism.. Otherwise the caught terrorist would easily and right royally walk out of the custody and take a flight to Pakistan..

    Mahesh.

  7. //தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி //

    எனக்கு தெரியாத செய்தி

  8. ப்ரனாய் ராய், பர்க்கா தத் முதலியோர் இந்தியாவிலிருந்து கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு உதவும் ஐந்தாம்படை அணி. இவர்கள் பணம் கொண்டுதான் என் டி டிவி யை நிருவினாகள். அதற்கு மற்றொரு பெயர்

    ‘N’ATION ‘D’AMAGING ‘T’ELE ‘V’ISION.

    NDTV: Funded by Gospels of Charity in Spain supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan. Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, Gen Secy of Communist party of India.

    ராஜ்தீப் சர்தேஸாய், இந்துவிலிருந்து கிருஸ்தவனாக மாறிய பச்சோந்தி,

    CNN-IBN: 100% Funded by Southern Baptist Church with its branches in all over the world with HQ in US. The Church annualy allocates 800 Million Dollars for Promotion of its channel. Its Indian Head is Rajdeep Sardesai and his wife Sagarika Ghosh both converted xtians!!!!!.

    போதுமா?

    நேர்முக வர்ணனைக்கு இரு நோக்கங்கள்:

    முதல்: இந்தியர்களிடம் நேர்முக விவரணத்திற்கு நல்பெயரும் கிட்டியது,
    இரண்டு:அவர்கள் தலைவர்களுக்கும் மிக உகந்தவர்கள் ஆகிவிட முடிந்தது, இக்காட்சிகளைக்கொண்டு, தாஜ்ஜில் இருக்கும் பயங்கர தீவிரவாதிகளை உஷார்படுத்தியும் ஆகிவிட்டது, இதனால், அவர்களுக்கு, பாகிஸ்தனிலிருந்து அவ்வப்போது தகுந்த யோசனைகளையும் கொடுக்கமுடிந்து, அதிக நஷ்டத்தையும் நமக்கு உண்டாக்க முடிந்தது.

    அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாக என்ன கொடுக்கலாம் எனறு உங்கள் மனதில் உள்ளது? — (மூன்றெழுத்து தண்டனை!!)

  9. Excellent and really an eye opening article.is it possible to provide the exact details reg., the Babri masjid issue. media always confusing abt this and create tensions too. It’s highly appreciated if someone gives details abt the Babri masjid like what’s the real cause, why demolition started? what’s the result of ASI’s report etc.,

  10. நவம்பர் 28ஆம் தேதியிட்ட இதழில் முதற்பக்கத்தில் தினமணி வெளியிட்ட கட்டுரை இங்கு சுட்டுவது பொறுத்தமாக இருக்கும் என தோன்றுகிறது

    பொறுப்பற்றதனம்

    […]

    இது ஓருபுறமிருக்க, நமது தொலைக்காட்சி சேனல்கள் அரங்கேற்றிய பொறுப்பற்ற தனத்துக்கு அளவே இல்லை. ஹோட்டலின் உள்ளேயும், இன்ன பிற மறைவிடங்களிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது அரிச்சுவடிப் பத்திரிகை நிருபருக்குக்கூடத் தெரியும். மற்ற சேனல்களைத் தங்களது சேனல் முந்திக்கொள்ள வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையில், இந்தியாவின் மூன்று பிரதான ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய பாதுகாப்புப் பின்னடைவுக்கு வழிகோலிய விதம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

    தேசியப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளைப் பிடிக்க என்னின்ன வியூகங்களை வகுக்கின்றனர் என்பதில் தொடங்கி, அவர்களது ஓவ்வொரு நடவடிக்கையையும் தங்களது தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பின இந்த நிறுவனங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், ஆதற்கேற்றாற்போல தங்களது ஆடுத்தகட்டத் திட்டங்களைத் தீட்ட முடிந்தது. தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்ட நிலையில், அனிமேல் தப்பிக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டதைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்டு, அந்தக் கட்டடத்தையே தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நியூயார்க் நகரத்தில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது ஆங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த பொறுப்புணர்வு நம்மை மெச்ச வைத்தது. பாதுகாப்புப் படையினருடன் கைகோர்த்து செயல்பட்டனர் பத்திரிகையாளர்கள். தேசிய ஆளவில் பீதி ஏற்படாமல் காத்தனர். ஆனால் மும்பையில் நமது பத்திரிகையாளர்கள் வெறும் வியாபாரிகளாகச் செயல்பட்டார்களே தவிர, பத்திரிகையாளர்களுக்கு உரித்தான பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.

    அரசு தவறு செய்யலாம். காவல்துறை தவறு செய்யலாம். நீதித்துறை தவறு செய்யலாம். இனால் இவர்களது தவறுகளைத் தட்டிக் கேட்கும் ஊரிமை பெற்ற பத்திரிகைகள் தவறிழைப்பதா? தங்களுக்கிடையே உள்ள வியாபாரப் போட்டிக்காக தேசநலனை, நாட்டின் பாதுகாப்பை, பொதுமக்களின் ஊயிரைப் பகடைக்காயாக்குவதா? வெட்கக்கேடு!

    உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் கையாலாகாத்தனத்தைவிடக் கொடுமையானது டெலிவிஷன் பத்திரிகையாளர்களின் பொறுப்பற்றதனம்!

    –இவண்–

    வினோத் ராஜன்

  11. தகவல் தொடர்பு வளர்ந்துவிட்டது, மகத்தான சாதனை. ஆனால் அதன் அசிங்கமான மறுபக்கம்தான் மும்பை சம்பவங்களின் நேரடி ஒளிபரப்பு” என்கிற பெயரில் நமது நாட்டிற்குள்ளேயே நடந்த மிருகத்தனமான தாக்குதலை ஒளிபரப்பி பயங்கரவாதிகளுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று வெகு சவுகரியமாய் காட்டிக் கொடுத்த “கருத்து சுதந்திரம்” நம்து டெலிவிஷன் சேனல்களுக்கு பொறுப்புணர்வு என்பது 0.001% கூடக்கிடையாது என்பதே உண்மை. இவர்கள் போடும் செக்குலர் கூப்பாடு என்பது இவர்களுடைய வயிற்று பிழைப்பு.தேச பக்தி என்பது லவலேசமும் இல்லாத இவர்களும் ஊடகபயங்கரவாதிகள் என அழைக்கப்படவேண்டும்.

  12. பர்க்காதத் மேல் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாமே?
    அவர் ஓவர் ஸ்மார்ட் வேலை செய்து நமது தேசத்தை காட்டிக்கொடுத்து எட்டப்பன் வேலை செய்கிறார்.

  13. Source : https://satyayugam.blogspot.com

    Who owns the media in India ?‬

    ‫There are several major publishing groups in India , the most prominent‬ ‫among them being the Times of India Group, the Indian Express Group, ‬ ‫the Hindustan Times Group, The Hindu group, the Anandabazar Patrika ‬‫Group, the Eenadu Group, the Malayalam Manorama Group, the ‬ ‫Mathrubhumi group, the Sahara group, the Bhaskar group, and the Dainik ‬Jagran group. ‬

    Let us see the ownership of different media agencies.‬

    ‫NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in ‬‫Spain supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be ‬‫aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother of Prakash ‬‫Karat, General Secretary of Communist party of India.His wife and Brinda ‬Karat are sisters.‬

    ‫India Today which used to be the only national weekly who supported BJP ‬‫is now bought by NDTV!! Since then the tone has changed drastically and ‬turned into Hindu bashing. ‬

    ‫CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with its‬ ‫branches in all over the world with HQ in US. The Church annually ‬ ‫allocates $800 million for promotion of its channel. Its Indian head is ‬Rajdeep Sardesai and his wife Sagarika Ghosh.‬

    Times group list:‬‫Times Of India , Mid-Day, Nav-Bharth Times, Stardust, Femina, Vijaya ‬‫Times, Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many ‬‫more.

    Times Group is owned by Bennet & Coleman. ‘World Christian Council’ does 80 percent of the Funding, and an Englishman and an Italian equally ‬‫share balance 20 percent. The Italian Robertio Mindo is a close relative of ‬Sonia Gandhi.‬

    ‫Star TV: It is run by an Australian, who is supported by St. Peters‬ Pontificial Church Melbourne . ‬

    ‫Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since ‬‫Shobana Bhartiya took over. Presently it is working in Collobration with ‬Times Group.‬

    The Hindu:‬ ‫English daily, started over 125 years has been recently taken over by‬ Joshua Society, Berne , Switzerland . N.Ram’s wife is a Swiss national. ‬

    Indian Express: Divided into two groups. ‬

    The Indian Express and new Indian Express (southern edition)‬

    ‫ACTS Christian Ministries have major stake in the Indian Express and later ‬is still with the Indian counterpart. ‬

    ‫Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao. Ramoji ‬‫Rao is connected with film industry and owns a huge studio in Andhra ‬Pradesh. ‬

    ‫Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a ‬Congress Minister has purchased this Telउgu daily very recently. ‬

    The Statesman: It is controlled by Communist Party of India. ‬

    Kairal TV: It is controlled by Communist party of India (Marxist)‬

    ‫Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have ‬major investment.‬

    ‫Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company ‬with its chief Editor M.J. Akbar.‬

    ‫The ownership explains the control of media in India by foreigners. The‬ result is obvious. ‬

  14. Wonderful Article. Hats off to you for bringing out all our emotions. The Bombay people have already shown that they are fuming inside. It is not too late before Congress learns the lesson of their life. The people had already rejected the media in total in the case of Modi but at the same time, we should also generate more awareness of these foreign owned media.
    Pls keep it up.

  15. Dear Sir,
    Not all Hindurs , Muslims or Christians are extremists. All extremists belong to a separate category. Most of them are uneducated. They are easily brainwashed by some perverted Religious, Caste and Political leaders Indiscipline, lack of patriotism, stupidity, perversion, immaturity, poverty, and some other such factors make some youth as extremists. If military or Police training is made compulsory for the students immediately after their school days and before entering into colleges, particularly in all thickly populated countries, youth would become automatically disciplined and patriotic. education shall be made compulsory till college level in such countries and parents who deny education to their children shall be punished to eradicate illiteracy and stupidity. The school and college syllabus shall contain such matters that make a youngster a good, matured and non-perverted citizen.Right to work shall me strictly implemented in countries like India, Pakistan, Bangla Desh etc. to keep all youth engaged so that no vagabond is available for the perverted leaders to execute their bad designs. Set the man right and the world will be alright.
    V.Ramanathan

  16. Some one said it recently – ‘ let us not wortry about people came by boat but we should worry about people came by VOTE. How exactly it has been said. The entire Country, right from day we got independence has been ruined by the polituicians, who worked for amazing wealth for themselves. In this process, as correctly pointed out, they have not only sold temselves but also the Country foruncruplous persons who bent upon eliminating INDIA from the World map. If the retaliation is born out of demolition of Babri Masjid or creating Bangladesh, there should be a way out to sort out these issues, if need be through arbitration by Internatyional Jury. Let the terrorists come out with their arguments. The way in which our Country is going, the safety of innocent citizens is at stake.

  17. When the trial takes place the role of media in this incident is to be included and the guilty to be punished.

  18. All the views are absolutely correct. Media has pocketed major parties and politicians. Their political life is in the hands of the media, particularly, TV News channels and major news papers which were once upon a time founded by patriots, which have been soled to money-makers. Present-day Politicians without exception are also benficiaries. Hence our cry will not result in any improvement. All the news channels appear to be entertainment channels like serials-carrying channels. We have to enjoy if we happen to see them; otherwise, it would be better to see other channels showing time-winding serials or better ones which telecast Srimad Bhagavtam, Srimad Ramayanam discources. Seeing them we will definitely gain spiritually and will not worry much about the news channels. Whatever is to happen will happen as per the design of the Lord. Our sincere prayers will get good results for us. I am confident. Think of the wonder of a Goverment run by a party created by Mahatma Gandhi submitting to the Supreme Court asserting that Rama was not real but an imagined charater in the Puranas; Ram-sethu is not a place of worship as “mentined” in Kamba Ramayanam. The rulers have forgotten that the last word utterred by Mahatma Gandhi while dying was “He Ram”.
    I am writing this only to give vent to my feelings about our situation and not for hurting anyone. If anyone felt hurt, I offer unconditional appologies.

  19. I am in concurrence with all the opinions mentioned above. But one thing noticed from the Mumbai Attack is that assembly of more than a lakh people is very very significant from my point view.Even though, the assembly of people at Gateway of India shown their agitation and frustration against all the politicians, in specific Congress party politician who are continue sleep under the foot of muslims. These politicians not going to do any thing. One day all these frustrations are going to point at one particular community who are continue to shield the culprits and supporters of jihad. That time no body can save them.It is certain. Because of lack of time, I can not remedy. But I wonder how it is possible such big attacks such as recent one and previous train attack can happen without local support. Muslim think tank must find quick and urgent solution for this problem. Time is running out. Do something.
    Regards
    PPV

  20. Swetthambari,

    Is reading the article in Tamil is your problem, or, you want an English translation of it?

    If you have difficulty in display of Tamil characters on your computer, we may make available a PDF version of this article.

    Otherwise we’ll try and translate it by and by.

    Please respond.

    Regards,

    Editor

  21. Really a thought provoking article. It is a shame after 62 years of Independence we still have illiterate peope in our country. The politicians continue to give freebies to keep them blind. Everybody wants money, money and money only. Media has also become so perverted they forget to broadcast good things that happen across the country. Hope our people wake up and learn what is good and what is bad for them.
    Continue your sevice.
    Anbae Sivam
    Arumugam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *