பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் – பெரியாரின் முரண்பாடு)

periyar_marubakkamசொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு அய்யா (ஈ.வே. ராமசாமி நாயக்கர்) அவர்கள் போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அது உண்மையில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு பல தடவை போயிருக்கிறார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்:-

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்.
(திராவிடன் 05-08-1929)

இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:-

தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.
(குடியரசு 20-10-1935)

அம்பேத்கருக்கு அறிவுரை கூறிய ஈ.வே. ரா!

தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம்-அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’ என்று கூறுகிறார்.
(குடியரசு 20-12-1935)

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார்.
(குடியரசு 31-05-1936)

ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவ்வளவு உறுதியாக, சபதம் ஏற்றிருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தனது கடைசி காலத்தில் மதம் மாறாமல் இந்துவாகவே இறந்தார்?

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியமா?

அம்பேத்கருக்கு அறிவுரை கூறியதுதான்.

அதாவது அம்பேத்கர் கொண்டுவந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சொன்னதுதான். ஆனால் அம்பேத்கர் தான் இந்துவாக இறக்கப்போவதில்லை என்று சொன்னவாறே பெளத்தத்தை தழுவி, தான் சொன்ன சொல்லை செயலில் காட்டினார். ஆனால் அம்பேத்கருக்கு அறிவுரை சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதை காற்றிலே பறக்கவிட்டுவிட்டார். உண்மையிலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத்தான் அம்பேத்கர் அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். இவர், தான் சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்குப் போகாதவராம்!

இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா?

அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்!

சொல் ஒன்று-செயல் ஒன்று என்ற கட்டத்திற்கே அய்யா போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அப்படியானால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொன்ன கட்டத்திலிருந்து இந்துவாகவே இறந்தார் என்ற கட்டத்திற்கு சென்றது ஏன்? இதுதான் சொல்லும் செயலும் ஒன்று என்ற கட்டமா? இதை வீரமணிதான் விளக்கவேண்டும்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்று நாம் சொன்னால்-உடனே ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துமதத்தை எதிர்த்தவர். நாத்திகர்களுக்கு மதம் இல்லை. அவர் மதம் மாறவில்லையென்றாலும் அவரை இந்து என்று சொல்லிவிடமுடியாது. ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாத்திகவாதியாதலால் அவர் இறக்கும்போது நாத்திகவாதிதான். இந்து அல்ல என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லிவிடுவார்கள்.

அறிவுரையை மறந்த ஈ.வே. ரா!

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்பதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்திருக்கிறார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்.
(விடுதலை 09-02-1950)

periyar_ambedkarஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?

— தொடரும்

18 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் – பெரியாரின் முரண்பாடு)”

 1. //சொல் ஒன்று-செயல் ஒன்று என்ற கட்டத்திற்கே அய்யா போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அப்படியானால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொன்ன கட்டத்திலிருந்து இந்துவாகவே இறந்தார் என்ற கட்டத்திற்கு சென்றது ஏன்? இதுதான் சொல்லும் செயலும் ஒன்று என்ற கட்டமா? இதை வீரமணிதான் விளக்கவேண்டும்.//

  இவர்தான் இன்றைய திராவிடக்கழக தலைவர்களின் முன்னோடி.. அவர் காட்டிச்ச் சென்ற வழியில்தான் இன்றைய தலைவர்கள் நோன்புக் கஞ்சி குடிப்பதும், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு பிரார்த்தனை செய்வதும்.. நல்ல விதமாய் அய்யாவை ( ஐயா அல்ல) அறிமுகம் செய்கிறீர்கள். இது நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.. அவர்களுக்காவது உண்மையான சுயமரியாதையும், நேர்வழியில் செல்லும் எண்ணமும், சொல் ஒன்றும் செயலொன்றுமாக இல்லாமலும் இருக்கட்டும்..

 2. Mr Venkatesan should send his articles to Veeramani and DEMAND an answer ( though very unlikely this Veeramni will repond to any intelligent discussion) Mk/DMK will continue with their Brahmin bashings as long as it suits them and the idiotic ignorant Hindu tamils will continue to fall for this vile propaganda and will continue to vote for them. Even God cannot save TN.

 3. பெரியார் சொன்னதில் பல விசயங்களை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே போல அவரிடமுள்ள சில குறைகளை அவரின் தொண்டர்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இருவரும் முரண்பட்டுக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை.

 4. பெரியாரை பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கு கிடைத்து இருக்கும் இந்த எழுத்து உரிமை கூட அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்.

  தங்களது தலைப்பே ( தமிழரின் தாய் மதம்) எனக்கு வித்தியாசமாக இருக்கிறது.
  இந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும் முன் அந்த வார்த்தையின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும். முதலில் யார் இந்து?

 5. //…… ……… ……….. இந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும் முன் அந்த வார்த்தையின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும். முதலில் யார் இந்து?……. ………. ……..//

  முதலில் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்துகொள்ள: https://koenraadelst.bharatvani.org/books/wiah/index.htm

 6. நன்றி திரு வெங்கடேசன். மணிமெகலைக்குத் தாங்கள் பரிந்துரைத்த புத்தகத்தைப் போன்ற புத்தகத்தை நான் வெகுகாலமாகத் தேடிக் கொண்டிருக்கின்றேன். பாரதநாட்டில் இமயம் முதல் குமரிவரை எழுந்த ஆன்மீக சிந்தனைகள் அனைத்தும் இந்துமதமே. சங்கரருடைய அத்துவிதம் ஒன்றையே இந்துமதமாகவும் சங்கரருடைய மதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியதென்றும் கருதப்படும் சிந்தனையின் எதிரொலியே இந்துத்துவம் என ஒன்று இல்லை என மணிமேகலை போன்றோரை எண்ண வைக்கின்றது.

 7. அய்யா இந்து என்பது ஒரு மதமே அல்ல. இங்கு சைவம், வைணவம்,ஸ்மார்த்தம் என்பது போன்ற பல பிரிவுகள் தான் இருந்தன. இவர்களுக்குள் இருந்த சண்டை வேறு விஷயம். இந்து என்பது 400 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரன் நமக்கு கொடுத்த பெயர்.

  இது எல்லோருக்கும் பொதுவான மதமும் அல்ல. வேதத்தை படித்தால் கண்ணை குத்தி கெடு, படித்தால் நாக்கை அறு, கேட்டால் காதில் ஈயத்தை காட்சி ஊற்று என்று எழுதப் பட்டு இருக்கிறது.

  மனு சாஸ்திரத்தை படித்து விட்டு எப்படி அய்யா என்னை இந்து என்று கூற முடியும் ?

  மதத்தை விட மானமே முக்கியம் அல்லவா?

 8. அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்……

  இஸ்லாம் பற்றி எதுவுமே தெரியாமல் அதை விமர்சிப்பது தான் தங்கள் எழுத்துரிமையோ…..இது மற்ற மதங்களின் மீதான,தங்களின் தவறான எண்ணத்தையும்,அதன் வெளிப்பாட்டையும் காட்டுகிறது,ஹிந்துத்துவம் பற்றி அறியவே நான் தங்கள் தளத்தை அணுகினேன்..ஆனால் இங்கு,என்னுடைய மதம்(மார்க்கம்) இழிவு படுத்த படுவதை,என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..இஸ்லாம் பற்றிய அறிமுகம் இல்லாதவராக தாங்கள் இருக்கலாம்,அல்லது தவறான அறிமுகம் பெற்றவராக இருக்கலாம்..
  இஸ்லாம் தூய்மையான மார்க்கம்,அது பற்றி அறிய விரும்பினால்,தயக்கம் இல்லாமல் என்னிடம் கேளுங்கள்..நல்ல நண்பனாக இருந்து,தங்களுடைய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க கடமை பட்டுள்ளேன்,,…..அதுபோல ஹிந்து மதம் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் கேட்டு பெறவும் விரும்புகிறேன்..

  நீங்கள் இதை ஏற்றுக்கொண்டால்,இஸ்லாம் குறித்த சந்தேகங்களுடன் என்னுடைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.என்னுடைய பதிலுடன்,ஹிந்து மதம் குறித்த என்னுடைய சில சந்தேகங்களை நான் தங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
  இது இந்த வலைதள உரிமையாளருக்கு மட்டுமல்ல..இதை படித்து,ஆர்வமுள்ள அனைவரும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

  இஸ்லாத்தில் தாங்கள் கண்ட மூடநம்பிக்கைகள்,பற்றி எனக்கு சொல்லுங்கள்.அது மூட நம்பிக்கையா அல்லது,இஸ்லாத்தில் இல்லாத நம்பிக்கையா என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்..

  இந்த மடலில் என்னுடைய வரம்பு மீறி,தங்களின் மனம் புண்படும்படி எழுத நீங்கள் கண்டால்,தயவு செய்து என்னை மன்னிக்கவும்..
  பதில் எதிபார்க்கிறேன்…
  நன்றி……

  நட்புடன்……
  H.RAZIN ABDUL RAHMAN.
  MECHANICAL ENGG,
  DUBAI.
  razinabdul@gamil.com

 9. ஏனுங்க..

  சங்கராச்சாரி, சங்கர் ராமன், சொர்ணமால்யா வெவகாரங்களையும் இப்புடி புட்டு புட்டு எப்பங்க வைக்கப்போறீங்க..?

  நியாயவான் எனில் இச்செய்தியை மட்டுறுத்தாமல் பதிலளிக்கவும்.

 10. Dear Brother ” Simbu”,

  Please visit பெரியாரின் மறுபக்கம் – பாகம் 10, பாகம் 11

 11. இந்து என்பதே ஒரு மூட நம்பிக்கைதான்… இதில் தமிழரின் தாய் மதம் என்று உங்கள் தலைப்பில் குறிப்பிட்டுள்ளீர்கள்!!!! தமிழருக்கு தாய் “மதம்” என்று ஒன்று இல்லை….

 12. ஐயா, சிவா நீங்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் இப்ப‌டி சொல்கிரீர்?

 13. இதற்குமுன், திரு.மகிழ்நன் அவர்கள் ஏன் பெரியார் இந்துமதத்தை கேவலப்படுத்தியது போல பிற மதங்களை விமர்சிக்கவில்லை என்று “bleaching powder” என்ற கட்டுரையில், “ஒரு வகுப்பறையில், வாத்தியார் ஒரு மாணவனை தண்டித்தால், அவன் ஏன் மற்ற மாணவர்களை தண்டிக்க வில்லை என்று கேட்பது போல இந்த வாதம் உள்ளது” என்று மொக்கைபோட்டார். இங்கு இந்த பெரியார்தாசர்களே அப்படித்தானே பேசுகிறார்கள்! ஏன் பெரியார் இவ்வாரு செய்தார் என்று கேட்டால், அவர் இப்படிசெய்தார், சங்கராச்சாரியார் இப்படிசெய்தார் ஏன் இவைகளை விமர்சிக்கவில்லை என்று திரு.வெங்கடேசனை கேள்வி கேட்கிறார்கள். முதலில், உங்கள் அழுக்கை நோன்டிக்கொள்ளுங்கள் தோழர்களே, பிறகு அடுத்தவனை குளிப்பாட்டலாம்!

  (Edited.)

 14. Rahman,
  U get worked up when islam is criticised. Fine.

  But what or who is the reason? It is you.

  Every muslim leader interprets Quran in his own way.

  This incident happened in UP, a few years back. A father-in-law rapes his daughter -in-law. The case is taken to the local muslim court. The ulemas (or whoever) give the verdict. Know what is it? The daughter-in-law has committed a sin, she must be driven out of the house.

  When women’s organisation groups protested to the then UP CM Malayam singh yadav, he cooly said ” If the ulemas have taken a decison, there must be some meaning in it?

  Does your holy Quran justify this?

  Why no right thinking muslim citizen or leader come forward to condemn this incident?

  My muslim friend tells me that as per Quran, only the prophet is entitled to issue fatwas (God knows how even he can do that, but that is another matter). Here, we have muslim leaders issuing fatwas left, right & centre. Who gave U this right?

  The hindu published a story of prophet mohammed in the “young world” supplement. That day, a group of muslim leaders went to the newspaper office & demanded an apology. Reason : In the story, prophet was depicted graphically. Their argument was that the prophet was not to be given any form.

  Mind you, it was a story detailing the greatness of the prophet meant for children, but even here, your dogmatic attitude is clearly seen.

  The Hindu immediately issued an apology the next day.

  It is this face of islam that is known to the public.

  It maybe a bit harsh for you but the fact of the matter is that islam is seen as a “militant” religion by everyone.

  The fault lies in you.

  There is no point getting worked up & issuing fatwas, please explain your religious teachings clearly if you feel islam has been misinterpreted.

  Simpyu saying that Quran does not justify violence is childish (No religious book justifies violence)

  Also, in the name of “jehad”, do not take innocent lives.

  Please do not kill people in the name of Islam, please, please.

 15. “I disapprove of what you say, but I will defend to the death your right to say it”.
  You people should read history properly first before claiming to be Hindus.
  You people are like flies, but Periyar was THE SUN. By blaming against truth you cannot destroy his contributions to the society. I too thought to be a Hindu , but history shows there is no such a religion like Hinduism.

 16. Kannan,

  You must first understand history before blindly supporting EVR.

  Also, remember that hinduism is not just a religion (in the true sense of the word) but a way of life.

  If tamil society is severely divided along caste lines today, it is due to that 1 man – EVR.

  He has poisoned the minds of the people for more than 50 yrs.

  That is the pity.

 17. இந்த பெரியாரின் மறுபக்கம் தொகுப்பில் எந்தெந்த அத்தியாயங்களில் மிகவும் ஆதாரபூர்வமான முறையில் பெரியாரை ஆழ்ந்து விமர்சிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் சுயமரியாதை இழந்தோர்கள் பெரியாருக்கு கூஜா தூக்குவதில்லை. எங்கெல்லாம் சற்று நெகிழ்ச்சியான முறையில் அவர் விமர்சிக்கப் பட்டிருக்கிறாரோ, அங்கெல்லாம் அவரை சூரியன், பகலவன் என்று அநியாய “பில்ட் அப்” கொடுக்கிறார்கள். அய்யா, எல்லாத் தொகுப்பையும் படித்து விட்டு மறுப்புக் கருத்துக்களை எல்லாப் பக்கங்களுக்கும் இடுங்கள். இதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் இந்தத்தொகுப்பின் பல பகுதிகளை மறுக்க இயலாதவர்களாகி விடுகிறீர்கள்.

  ஒரு வரலாற்றுப் பிழையை சரி செய்யும் துணிச்சலுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பின் இடைடையே வந்து சம்மந்தமே இல்லாமல் பெரியார் ஜால்ரா அடிப்பது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. அவரைப் பற்றிய எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி விட்டுப் பிறகு ஜால்ரா அடியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *