பெரியாரின் மறுபக்கம் – பாகம் 5 (பெரியாரும் இஸ்லாமின் சாதியும்)

periyar_marubakkamஇஸ்லாமின் சாதியைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்:

ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்வதில் எவ்வளவு வல்லவர்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், இஸ்லாமில் ஜாதியைப் பற்றிய இவர்களுடையப் பிரச்சாரங்கள்.

இஸ்லாமில் சாதி இல்லையாம், ஈ.வே. ராவின் பிதற்றல்!

இந்துமதத்தில் பல ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதத்தில் மட்டுமே உயர்வு-தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன-என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? இதோ!

* இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன.
(குடியரசு 03.11.1929)

* தீண்டாமையை ஒழித்து மகமதிய மதமே! இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு-தாழ்வு இல்லை.

* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
(குடியரசு 02.08.1931)

* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
(குடியரசு 23.08.1931)

* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
(குடியரசு 17.11.1935)

* இப்போது வரவர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும், சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லிம்களாக ஆகிவிட்டால் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.

* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.
(குடியரசு. 19.01.1936)

* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.
(குடியரசு 31.05.1936)

* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றன.

* இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.
(நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)

அதாவது இஸ்லாமில் ஜாதி இல்லை. இஸ்லாமில் உயர்வு-தாழ்வு இல்லை. அங்கு எல்லோரும் சமம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து. இதுபோலவே வீரமணியும் ‘சங்கராச்சாரியார்’ என்ற நூலில் ‘சாதி என்று வரும்போது அது இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலே உண்டு?’ என்று கேட்கிறார். ஆக இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் ஜாதி இல்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் கூறுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள்.

இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்களே – இதுவாவது உண்மையா என்று பார்க்கலாம்.

இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!

‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-

முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.

1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்

உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-

1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.

3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.

இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-

1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.

2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.

3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)

4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)

5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)

6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)

7. பஹாவீ

8. ஸனூஸி

9. கைதியானி

10. அஹ்மதியா

11. ஸீபிகள்

இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)

ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.

இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:

1. ஆந்திரா – மஹாதர்

2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.

3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.

4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்

5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்

6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்

7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)

8. பஞ்சாப் – பகிர், மேகாதி

9. ராஜஸ்தான் – ஜூலாஹா

10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா

11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்

மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?

இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே! இந்த சாதிகள் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் வீரமணிக்கும் தெரியாதா? தெரியாது என்று இவர்கள் சுலபமாகப் பொய் சொல்லிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு தெரிந்த மாதிரி மேலும் ஓர் ஆதாரத்தை நாம் காட்டலாம்.

இஸ்லாமின் சாதிப் பற்றி அம்பேத்கர்!

அம்பேத்கர்
அம்பேத்கர்

ஈ.வே. ராமசாமி நாயக்கரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாயணத்தின் இருபக்கங்கள் என்று சொல்கின்றார்களே, அந்த ஒரு நாணயத்தின் ஒரு பக்கமான டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர். 1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

மேலும் இஸ்லாமியர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாயத்து முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுவதாவது:-

”பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துக்களைப் போன்றே முஸ்லிம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லிம்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான். அவன் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றபடுகிறான்; இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது; அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாட முடியும். ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும்; இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.”

இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடி மதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத் தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கம் இடமில்லை. இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்தும் தீமைகளையும் வரிந்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லிம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.”

குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் கூறியதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகின்ற இந்த இஸ்லாமிய சாதிகள் கூட ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், வீரமணிக்கும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இஸ்லாமில் சாதி இல்லை என்று இவர்கள் மறுபடியும், மறுபடியும் பொய் சொல்வதற்குக் காரணமென்ன?

ஒன்று இஸ்லாமில் உள்ள சாதிகளை மூடிமறைத்து அம்மதத்துக்கும் இந்துக்களை மதமாற்ற உதவி செய்வதன் மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து தங்கள் அமைப்புக்கு பணம் பெறுவது.

இரண்டாவது, இஸ்லாமியர்களை விமர்சித்தால் தம் உயிருக்கு பாதகம் எற்படும் என்ற பயம்.

மூன்றாவது தங்களுடைய கருத்துக்கு எப்பொழுதும் யாராளும் மறுப்பு சொல்ல முடியாது என்ற ஆணவம்.

இவைகள்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறதல்லவா! உண்மைகள் அவர்களுக்கே வெளிச்சம்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய் ஒரு புறமிருக்கட்டும். வீரமணி என்ன சொல்கிறார்? இந்து மதத்தைத் தவிர வேறுமதத்தில் சாதி இல்லையாம். இஸ்லாமிலே சாதி இருக்கின்றது என்று பார்த்தோம். அடுத்து இவருடைய தந்தை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதை கவனியுங்கள்:-
பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். (குடியரசு 02-08-1931)

தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும், ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. கிருத்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை (குடியரசு 19-01-1936)

இதிலிருந்து தெரிவதென்ன?

கிறிஸ்துவ மதத்திலும், பவுத்த மதத்திலும், ஜைனமதத்திலும் தீண்டாமையிருக்கிறது என்பது தானே? வீரமணியுடைய தந்தைக்கு பல மதங்களில் உள்ள தீண்டாமை தெரிகின்றது. ஆனால் பிள்ளைக்கு தெரியவில்லை. இதில் யார் உண்மையை சொல்லியிருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் தீண்டாமைதானே தவிர சாதி இல்லை என்று வாதிடலாம். ஆனால் சாதி இருப்பதால்தான் தீண்டாமையே இருக்கின்றது என்று இவர்கள்தான் சொல்லி வருகின்றனர். அதனால் தீண்டாமை இருக்கின்றது என்று சொன்னால் அங்கு சாதியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் வீரமணி சொல்வது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி திரியும் இவர்கள் பண்பாடுமிக்கவர்களாம்! இவர்களுடைய இதழுக்கு பெயர் ”உண்மை”யாம்! அதைவிட ”பொய்மை” என்று வைத்திருக்கலாம் அல்லவா!

– தொடரும்

49 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 5 (பெரியாரும் இஸ்லாமின் சாதியும்)”

 1. அடப்பாவிகளா.. இத்தனை பிரிவுகளா இஸ்லாமிய மதத்தில்..?? நான் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நினைத்தேன். இது தவிர, டாக்டர்.அம்பேத்கரின் தீர்க்க தரிசனம் கூட சரியென்றே எனக்குப் படுகிறது. இஸ்லாமிய மார்க்கம் ஒரு வழிப்பாதை.. போனவர்கள் மீள முடியாது என்பதாலேயே அவர் தலித்களை பவுத்ததிற்கு மாறச்சொன்னதாக படித்திருக்கிறேன். ஜாதிக்கொடுமை இந்து மதத்தில் வேரறுக்கப் படும்போதோ அல்லது மாற்றங்கள் நிகழும்போதோ மீண்டும் இந்துவாக வாய்ப்பு இருக்கிறது நமது சகோதரர்களுக்கு.. இஸ்லாமில் அது சாத்தியம் இல்லையே… விரும்பினாலும், விரும்பாவிட்டலும் அவன் இஸ்லாமியனே..

  திரு.வெங்கடேசனின் இந்தக் கட்டுரைத் தொடர் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றால் அது மிகை இல்லை. நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 2. // 1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

  கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் …… …… …… …… ….. ….. …. //

  கன்னிகளா?

  அதெல்லாம் உடம்பில் குண்டைக் கட்டிக்கொண்டு தெருவில் உடல் சிதறிச் செத்தவர்களுக்குத்தான். அதற்கு முன்வரை அவர்களுக்கான பெயர் சரியாகவே வழங்கப்பட்டுள்ளது. அதை ஏன் தவறாகப் ப்ரிண்ட் செய்துள்ளீர்கள்?

  ஒருவரது பெயரையே தவறாகச் சொல்லுவது அநாகரீகம். புகழ் வாய்ந்த இந்தக் குழுவின் பெயரைத் தவறாகச் சொல்லலாமா? 🙂 !

 3. I concur with Bharataputran. I too know only shia and sunny in Islam. Its an eye opener. I always used to think, if Christianity and Islam are really preaching equality and if people convert to these religions in the name of attaining equality, then why these religions are not categoriesed as ‘forward castes’ (FC) and why do they fight for OBC /SC/ST status? If all are equal in them, then all should be the upper caste and hence they should not get any reservation at all. But these days every govt. is inclined to give special quota to them, and first in line is EVR’s followers.

  I also read somewhere, that once Ambedkar was asked question on inter religious and inter caste questions. He replied, when it comes to religion, I am a Hindu first and I will not compromise on that. Any caste issue is our internal issue and we will fight it our own way, but when another religion tries to poke its nose in our affairs, I will first fight that interference. (not sure about exact context and words).

  Again Bharatputrans comment on why he converted to Buddhist and not to any other religion definitely makes sense.

  Kudos to Mr.Venkatesan for this wonderful article.

 4. //… …. அடப்பாவிகளா.. இத்தனை பிரிவுகளா இஸ்லாமிய மதத்தில்..?? நான் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நினைத்தேன்…..//

  பாரதபுத்ரன்,

  ஜாதி என்பது எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் இருந்த, இருக்கிற ஒரு சமூகப் பொருளாதார நிகழ்வு. எனவே இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பது இயல்பான விஷயம்தான்.

  ஆனால், ஜாதி என்பது இந்தியாவில் மட்டும் இருப்பதாகவும், ஜாதிக் கொடுமைகள் என்பது ஹிந்து மதத்தில் மட்டும் இருப்பதாகவும் உலக அளவில் பொய் சொல்லுகிறார்கள். உண்மை மறைக்கப்பட்டதால் நாமும் அதையே நம்பி வருகிறோம்.

  அதனால்தான், யூரோப்பாவிலும், அரேபியாவிலும் ஜாதி இருந்தது, இருக்கிறது என்று யாராவது சொன்னால் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைகிறோம். ஏனெனில், நம்மிடமிருந்து பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

  இப்படி மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்றுதான் ஜாதி என்பது எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் ஏற்படும் ஒரு சமூகப் பொருளாதார நிகழ்வு என்கிற உண்மை. ஜாதி வேறுபாடு என்ற ஒன்றைத் தவிர ஹிந்து மதத்தைக் குறை சொல்ல வேறு காரணங்கள் எதுவும் இல்லை. அதனால், இந்தப் பொய்யை பெரிதாகப் பேசி உண்மையைத் திரித்து ஹிந்து மதத்தில் மட்டுமே இந்த விஷயம் இருப்பதாகப் பொய் பிரச்சாரம் நடக்கிறது. ஹிந்து மதம் என்பது மட்டும்தான் இந்த கீழான பழக்கத்தைப் பின்பற்றுகிறது என்று நம்மை நம்ப வைக்கிறார்கள்.

  இந்த உண்மைகளை மறைப்பதன் மூலம் நம்மைப் பற்றி நாமே இழிவாகவும், தாழ்வாகவும் எண்ண ஆரம்பிக்கிறோம். தன்னம்பிக்கை இல்லாத சமூகமாக நாம் மாறினால், நம்மை அடிமைகளாக்குவதும், சுரண்டுவதும் ”அவர்களுக்கு” எளிதாகிவிடும். எனவே இந்தப் பொய்யை மீண்டும் மீண்டும் நம் மனத்தில் புகுத்தி வருகிறார்கள்.

  உலகம் முழுவதும் ஜாதி என்ற அமைப்பு இருக்கிறது என்ற உண்மை குறித்து இந்தியாவின் ஆகச் சிறந்த சமூகப் பொருளாதார விமரிசகர்களில் ஒருவரான திரு. அரவிந்தன் நீலகண்டன் ஒரு அருமையான கட்டுரையை எழுதியுள்ளார்.

  அந்தக் கட்டுரையில் ஜாதி என்னும் சமூகப் பொருளாதார நிகழ்வின் கொடூரங்களை இந்து சமூகம் மதரீதியாக எதிர்த்துப் போராடுவதையும், ஆனால், ஆபிரகாமிய மதங்கள் அதை எதிர்க்காமல் இருந்ததையும்/இருப்பதையும் மிக அழகாக, சார்பற்ற வகையில் ஆய்ந்தறிந்த முடிவுகளோடு முன்வைக்கிறார்.

  அந்தக் கட்டுரையை நீங்கள் இங்கே https://arvindneela.blogspot.com/2007/07/blog-post.html படிக்கலாம்.

  //….. இஸ்லாமிய மார்க்கம் ஒரு வழிப்பாதை.. போனவர்கள் மீள முடியாது என்பதாலேயே அவர் தலித்களை பவுத்ததிற்கு மாறச்சொன்னதாக படித்திருக்கிறேன்….//

  அம்பேத்கார் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்த காரணம் அதுவும் ஹிந்து மதம் போலவே ஒரு தார்மீக மதம். மேலும், பௌத்த மதமானது பல வகைகளில் ஹிந்து மதங்களில் ஒன்றுதான்.

  இஸ்லாம் ஒரு தார்மீக மதம் இல்லை. இஸ்லாம் குறித்து் அம்பேத்கார் உயர்வான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை.

  எனவே, இந்தியாவில் இருக்கிற உயர்ஜாதி ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற சடங்காச்சார போக்கிற்கு எதிராக நடந்த ஒரு ஹிந்து மதச் செயல்பாடாகத்தான், அம்பேத்காரின் அந்த மதமாற்றத்தை ஹிந்துக்கள் கருதுகிறார்கள்.

  மேலும், பௌத்த மதத்திலும் ஜாதிப் பிரிவுகள் உண்டு. பாரம்பரிய பௌத்த மதக்கொள்கையின்படி ஒரு பிராமணரோ அல்லது ஷத்திரியரோதான் போதிசத்துவராக (அதாவது, பௌத்த மதத்தில் மிக உயரிய நிலையை) அடைய முடியும். இந்த விஷயம் அம்பேத்காருக்கும் தெரியும். எனவேதான், அம்பேத்கார் பௌத்த மதத்திலேயே ஒரு புதிய தனியான போக்கை உருவாக்கி அதில் இந்த கீழான நம்பிக்கைகள் எதுவும் இல்லாதவாறு செய்து அதன் பின்னரே மதம் மாறினார்.

  மேலும், ஹிந்து பாரம்பரியத்தின்படியும், ஸமஸ்க்ருத மொழியின்படியும் “மதம்” என்பதன் பொருள் “ஒருவனது கருத்து” என்பதுதான். மதம் என்பது “அமைப்பு” என்ற பொருளில் எப்போதும் வழங்கப்படவில்லை. எனவே, ஒரு ஹிந்துவாக அவரது மத மாற்றமானது, வெறும் “கருத்து மாறுதல்” மட்டுமே.

  // …….. ……..ஜாதிக்கொடுமை இந்து மதத்தில் வேரறுக்கப் படும்போதோ அல்லது மாற்றங்கள் நிகழும்போதோ மீண்டும் இந்துவாக வாய்ப்பு இருக்கிறது நமது சகோதரர்களுக்கு.. …..//

  ஹிந்துக்களின் அனைத்து மார்க்கங்களின் படியும் மதம் என்ற ”அமைப்பே” கிடையாது. ஒருவர் தன்னை பௌத்தர் என்று அழைத்துக்கொண்டாலும், சைவர் அழைத்துக்கொண்டாலும், சமணர் அழைத்துக்கொண்டாலும், சாக்தர் என்று அழைத்துக்கொண்டாலும், வைணவர் என்று அழைத்துக்கொண்டாலும் அவர் ஹிந்துவே.

  ஹிந்து என்றால் இந்தியர். இந்தியர் என்றால் ஹிந்து. இந்தியாவின் இன்னொரு பெயர் ஹிந்துஸ்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

  எனவே, இங்கே மன மாற்றம் மட்டுமே உண்டு. மத மாற்றம் கிடையாது.

  மற்ற மதங்களைச் சாத்தானின் படைப்பாகவோ, முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டிய கொள்கைகளாகவோ கருதாத, இந்தியாவில் தோன்றிய அனைத்து சமூக-ஆன்மிகப் போக்குகளும் ஹிந்து மதங்களே. அந்த மன மாற்றங்களையும் தனிமனித உரிமையாகவே ஹிந்து மதம் பார்க்கிறது.

  எனவே, பொன்னார் மேனியனையும், மரகத மேனியனையும் கண்டு கசியும் ஹிந்து மனம் சித்தார்த்த புத்தரையும், மகாவீரரையும் காணும்போதும் அதே பக்தியோடு பணிகிறது. புத்தரும், மகாவீரரும் தோன்றியிருக்காவிட்டால் நமது சமூகம் வெறும் சடங்குகளில் சீரழிந்திருக்கும். இந்த அளவு வளர்ந்திருக்காது.

  அதே போல ஒரு பௌத்த மதத்தவருக்கும், சமண மதத்தவருக்கும் ஹிந்து தெய்வங்களும், தெய்வங்களே.

  // …. ….. இது தவிர, டாக்டர்.அம்பேத்கரின் தீர்க்க தரிசனம் கூட சரியென்றே எனக்குப் படுகிறது. ….//

  ஹிந்து மதத்தில் தோன்றிய மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவராகவே அவர் மதிக்கப்படுகிறார்.

  அதனால்தான், ஆர். எஸ். எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவிக் கொடியின் முன்னின்று வணங்கிப் போற்றும் “ஒருமைப்பாட்டு வந்தனத்தில்” அம்பேத்காரும் வணங்கப்படுகிறார். பூஜிக்கப்படுகிறார்.

  அந்த வந்தனத்தை இங்கே தருகிறேன்:

  சுபாஷ: ப்ரணவானந்த: க்ராந்தி வீரோ விநாயக:
  டக்கரோ பீமராவஸ்ச ஃபுலே நாராயணோ குரு: (30)

  ….. நமஸ்தேப்யோ பூயாத் ஸகல ஸுஜனேப்ய: ப்ரதிதினம் (32)

  அந்த வந்தனத்தின் பொருள்:

  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், வங்காளத்தில் தோன்றிய சுவாமி பிரணவானந்தர், புரட்சி வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர், தக்கர் பாபா, டாக்டர் பீமராவ் அம்பேத்கார் , மகாத்மா ஜோதிபா ஃபுலே, ஸ்ரீ நாராயண குரு (30)

  ….. போன்ற நாம் அறிந்த அறியாத அத்தனை பேரையும், ஒவ்வொரு நாளும் நாங்கள் நமஸ்கரிக்கிறோம்.

 5. //நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், வங்காளத்தில் தோன்றிய சுவாமி பிரணவானந்தர், புரட்சி வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர், தக்கர் பாபா, டாக்டர் பீமராவ் அம்பேத்கார் , மகாத்மா ஜோதிபா ஃபுலே, ஸ்ரீ நாராயண குரு (30)

  //

  Thank you Sri களிமிகு கணபதி .

 6. //# மகிழ்நன் June 29th, 2009 2:39 pm//
  // மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? //
  கோயில் நுழைவு போராட்டம் நடத்தும் கட்டாயத்தை, இந்து மதம்தான் ஏற்படுத்தியதேயல்லாமல்…..மசூதிகள் ஏற்படுத்த வில்லை.
  இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள்..
  இந்து மதத்தில் தேவர், பறையர்….
  உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தால், முதலில் இதை கண்டியுங்கள்….//

  என்ன சின்ன புள்ள தனமா எழுதறீங்க மகிழ்நன், முகமதியர்களிடம் பிரிவுகள் இல்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?

 7. // …. …. …. … கோயில் நுழைவு போராட்டம் நடத்தும் கட்டாயத்தை, இந்து மதம்தான் ஏற்படுத்தியதேயல்லாமல்…..மசூதிகள் ஏற்படுத்த வில்லை.
  இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள்..
  இந்து மதத்தில் தேவர், பறையர்….
  உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தால், முதலில் இதை கண்டியுங்கள்….//

  மசூதியில் சம உரிமை தொழுகை நேரத்தில் மட்டுமே. மற்ற நேரங்களில் அரபிகள் போன்ற உயர்சாதியினருக்குத்தான் உரிமைகள் அதிகம்.

  இந்து மதத்தில் இதுபோன்ற கீழ்மைகளைப் போராடியாவது திருத்திவிடலாம். அழித்துவிடலாம். நமது காலத்திலேயே தாழ்ந்தவர்களாகக் காட்டப்பட்ட சில ஜாதியினர், உயர்ந்த ஜாதியினராக உயர்ந்துள்ளதை நாம் காணுகிறோம். ஆனால், இஸ்லாமிய மதத்தில் அது நடக்கவே நடக்காது என்பதுதான் நிதர்சனம். ஏனெனில், முகம்மது உயர்ஜாதியில் பிறந்தவர். ஆனால், இந்து மதத்தின் ரிஷிகள் அனைத்து ஜாதியில் இருந்தும் உருவானவர்கள். உருவாகிக்கொண்டிருப்பவர்கள்.

  எனவே, மேம்போக்கான சம உரிமையை நம்புவதைவிட, அடிப்படை உறுதியாக இருக்கிற ஆன்மீகப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது.

 8. I have never seen such an article in my life before, really excellent man! And Mr.Kalimigu Ganapathy stole the show with his thunderous comment… I very well knew that Islam and Christianity are also affected by castes (besides their intolerance to ‘Unbelievers’). But however it is difficult to believe that Buddhism and Jainism are affected by castes, really unbelievable. The great masters’ images are deep-rooted in Indian soil, and my people, you need to read Swami Vivekananda’s “Buddhism- the fulfillment of Hinduism”. It is a very good work. However I can assure you of one thing:- Arya Samaj, Ramakrishna Mission & Math, Narayana Mission and recently Iskcon do not recognize castes nor untouchability.
  And where the hell is our Magizhnan? Hiding somewhere? Come out man! Refute this if you can…..

 9. //எனவே, பொன்னார் மேனியனையும், மரகத மேனியனையும் கண்டு கசியும் ஹிந்து மனம் சித்தார்த்த புத்தரையும், மகாவீரரையும் காணும்போதும் அதே பக்தியோடு பணிகிறது.//

  You stole the words from my mouth, sorry keyboard!

 10. இஸ்லாத்தில் எத்தனை ஜாதி இருந்தாலும் மசூதியில் இந்த ஜாதிக்காரன் மட்டும் தான் தொழுகை வைக்க வேண்டும் மற்ற ஜாதிக்காரன் எல்லாம் பின்னல் நின்று தொழ வேண்டும் இன்னும் சில ஜாதிக்காரன் மசூதிக்கு உள்ளே வரகூடாது போன்ற தீண்டாமை இல்லை.

  மேலும் நீங்கள் சொல்லும் ஜாதி எல்லாம் முஸ்லிம் மக்களுக்கே தெரியாது.. இவை எல்லாம் நடைமுறையில் கிடையாது.

  இஸ்லாமியர்கள் யாரும் திருமணத்தின் போது நீங்கள் பட்டியலிட்டுள்ள ஜாதியை எல்லாம் பார்பதில்லை. எந்த இஸ்லாமியரின் திருமண பதிரிகயிலாவது ஜாதி பெயர் உள்ளதா?

 11. இருப்பான்,
  அன்சாரி, குரேஷி எல்லாம் சாதிப்பெயர்தானே? சையது என்பதும் சாதிப்பெயர்தானே? சையது மேல்ஜாதி, நாசுவன் கீழ் சாதி என்று சொல்வதும், நாசுவர்களுக்கு தனி மசூதி, மரைக்காயருக்கு பெரிய மசூதி என்று இருப்பதும் தமிழ்நாட்டில்தானே? எதுக்கு இந்த வீண் ஜம்பம் எல்லாம்?

 12. அன்புள்ள வெங்கடேசன்,

  உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும். பிற மதங்களில் உள்ள சாதிகளைப்பற்றி எழுதியுள்ளதில் அவற்றின் பெயர்களில் அச்சுப் பிழைகள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள பெயர்களை தமிழில் எழுதும் சமயத்தில் தமிழாக்கம் சில இடங்களில் சரியாக வராது. எனவே ஆங்கிலப்பெயரையும் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடுவது நல்லது.

  சரியான தமிழ்ப்பெயர்களை அறிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் (கல்லூரிக்கல்விப்பிரிவு) வெளியிட்டுள்ள இந்திய இசுலாமியர் சட்டம் என்ற பழைய புத்தகத்தைப்பார்க்கலாம்.

 13. வரலாறு என்பது பல ஆட்சியாளர்கள் தங்கள் வசதிக்காக எழுதிவைத்த பொய்களின் தொகுப்பே ஆகும். உண்மையும் அங்கங்கே கலந்திருக்கும்.ஆனால் உண்மைக்கலப்பு என்பது ஆட்சியாளர்களின் அனுமதிக்குட்பட்டே சிறிதளவு இருக்கும். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை பிரித்து ஆளுவதற்காக சிறிதளவு இருந்த ஒற்றுமையை சீர்குலைத்து நாட்டை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். அவர்கள் எழுதிய பொய் வரலாறே இன்றைய பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

  சமீப காலங்களிலேயே சரித்திர பித்தலாட்டங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. யூகோஸ்லாவியா என்ற நாடு சோவியத் ரஷ்யா பல நாடுகளாக உடைந்தபின்னர் தானும் பல கூறுகளாக உடைந்தது. ஒரே நாடாக இருந்தபோது 1989 வரை ஒரு சரித்திரம் கல்வி நிலையங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பல நாடுகளாக பிரிந்தபின்னர், ஏழு அல்லது எட்டு நாடுகளும் தனித்தனியே வித்தியாசமான மற்றும் ஒன்றுக்கு ஒன்று முரணான வரலாற்று புத்தகங்களை பின்பற்றி வருகின்றன. அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப சரித்திரம் திருத்தி எழுதப்படுகிறது. இது பற்றி 1990 களின் துவக்கத்தில் இந்து நாளிதழ் மிக விரிவாக கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

  எனவே எவனோ எழுதிய பொய் வரலாறுகளை வைத்துக்கொண்டு மக்கள் வீண் சண்டை போட்டுக்கொண்டு திரிகிறார்கள். அதுபோலவே, நம் நாட்டைப்பற்றியும் முழுவதும் தெரிந்துகொள்ளாமல் பிற நாடுகள் மற்றும் மதங்களை பற்றியும் சரிவரத் தெரிந்து கொள்ளாமலும் மனம் போன போக்கில் பொய்களை கூறி பகுத்தறிவு வியாபாரம் செய்யும் இவர்களை உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் நன்கு அடையாளம் கண்டு கொள்வார்கள். மோசடி வியாபாரம் எவ்வளவு காலம் எடுபடும்?

 14. இஸ்லாத்தில் ஜாதிகள் கிடையாது, இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க நீங்கள் குரானை படிக்க வேண்டும், ஹதீஸை படிக்க வேண்டும், நீங்கள் சொல்கிற ஜாதி நிச்சயமாக இஸ்லாத்தில் இல்லை, அரபு நாடுகளில் நீங்கள் சொல்கிற பெயர்கள் குடும்ப பெயர்கள்.
  ஒவொவொரு மாநிலதிருகும் ஒரு ஜாதி இருப்பதாக சொல்கிறீர்கள் இதற்க்கு நீங்கள் இஸ்லாத்தை குறை கூற முடியாது குரானிலோ ஹதீஸிலோ இந்த ஜாதி பற்றி எழுதி இருந்தால் ஆதாரம் காட்டுங்கள்,
  ஹிந்து மதத்தில் ஜாதி இருப்பதற்கு மனு தர்மம் என்ற உங்கள் வேதம் ஆதாரமாய் இருக்கிறது.
  சையத்து என்ற சொல்லுக்கு திரு (mr) என்று அர்த்தம் இஸ்லாத்தை முறையாக படிக்காமல் குறை சொல்ல வேண்டாம்.

 15. முஸ்லிம் என்பது ஒன்றுதான் ஜாதி என்பதெல்லாம் நீங்கள் சொல்வதுபோல் ஒன்றும் இல்லை. என்றோ ஒழிக்கப்பட்டுவிட்டது . அப்படியெஇருந்தாலும் கடவுள் என்பது ஒன்றுதானே . இந்துக்களில் ஓராயிரம் கடவுள்கள் இருப்பதுமட்டும் நியாயமா? இதில் எந்தக் கடவுள் ஒரிஜினல் எந்தக் கடவுள் டுபாக்கூர் என உங்களால் உறுதி செய்ய முடியுமா?

 16. நண்பர் rafi அவர்களே,
  ////முஸ்லிம் என்பது ஒன்றுதான் ஜாதி என்பதெல்லாம் நீங்கள் சொல்வதுபோல் ஒன்றும் இல்லை. என்றோ ஒழிக்கப்பட்டுவிட்டது /////
  உங்களுக்கு காயல் பட்டினம்,அதிராம்பட்டினம் இஸ்லாமிய நண்பர்கள் தெரியுமா? எனக்கு இருக்கிறார்கள். அந்த ஊரில் பிற ஊர் முஸ்லிம்கள் உடன் திருமண உறவு கிடையாது. அவர்களுக்கு உள்ளகதான்.

  என் நண்பர் குடும்பங்களிலேயே அந்த பிரிவு முஸ்லிம் மட்டம் நாங்கள் ராவுத்தர்,நங்கள் உசத்தி என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். ஜாதி மட்டம் ஊர் மட்டம் என்று பார்த்துதான் திருமணங்கள் நடக்கின்றன முஸ்லிம் குடும்பங்களில். நீங்கள் அதிலிருந்து மாறிவரும் அல்லது மறிவர தயாராக இருக்கும் நபராக இருக்கலாம். அனால் உண்மையில் அங்கு ஜாதி உயர்வு தாழ்வு இன்னும் உள்ளது.
  ///இந்துக்களில் ஓராயிரம் கடவுள்கள் இருப்பதுமட்டும் நியாயமா? இதில் எந்தக் கடவுள் ஒரிஜினல் எந்தக் கடவுள் டுபாக்கூர் என உங்களால் உறுதி செய்ய முடியுமா?////

  ஒரே கடவுள் என்று நீங்கள் சொல்லும் கடவுள் ஒரிஜினல் (டுபாகூர் அல்ல) என்று உங்களால் உறுதி செய்ய முடியுமா?

  ஆமாம் உருவம் இல்லாத உங்கள் கடவுள் சொர்கத்திலே உருவத்துடன் தான் இருக்கிறாரா? அல்லது அங்கேயும் உருவம் இல்லாமல் இருக்கிறாரா? அப்புறம் உங்கள் சொர்கத்துக்கு உருவம் உண்டா அல்லது அதற்கும் உருவம் இல்லையா?
  இல்லை என்றால்
  எப்படி (உருவம்)இல்லாத ஒன்றில் (உருவம்) இல்லாத ஒருவர் இருந்து கொண்டு இருக்கும் இந்த உலகை படைத்து ஆட்சி செய்கிறார்?
  அல்லது நீங்களும் புத்த சமணர்கள் போல சூன்ய வாதிகளா?

  இருக்கிறது என்றால்
  நீங்கள் ஏன் உருவம் இல்லாமல் தான் வழிபட வேண்டும் என்கிறீர்கள் அவர் உருவத்துடன் அங்கே இருக்கும் போது?

 17. சு பாலச்சந்திரன்
  அன்புள்ள முபாரக்,
  மனு தர்மம் என்பது இந்துக்களின் வேதம் அல்ல. மனு தர்மம் என்பதை வேதம் என்று நீங்கள் உங்கள் கடிதத்தில் எழுதுவதிலிருந்து உங்களுக்கு இந்து மதத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது என்பது தெளிவாகிறது. மனு ஸ்ம்ருதி என்பதைப்போல எங்கள் இந்து மதத்தில் போனவன் வந்தவன் எல்லாம் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். எங்களுக்கு அந்த சுதந்திரம் உண்டு. அவை எல்லாம் சட்டம் அல்ல.வேதம் என்பது நான்கு. அவை ரிக், யசுர், சாமம்,அதர்வணம் என்று நான்கு ஆகும். நண்பர் திரு முபாரக்கின் கடிதத்தில் ” இஸ்லாத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஜாதி இருப்பதற்கு இஸ்லாத்தை குறை கூற முடியாது ” என்று கூறியுள்ளார். அது சரியே.

  அது போலத்தான் , இந்து மதத்திலும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்றிய பின்னர் தொழில் அடிப்படையில் , 1.கல்வி போதித்தல், 2.நாட்டு எல்லையைகாக்க போரிடுதல், 3.பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்தல் மற்றும் 4. இதர உடல் உழைப்பால் பலவிதமான வேலைகள் செய்வோர் ( விவசாயம் உட்பட )என்று மனித சமுதாயம் பிரிந்தது. ஆனால் இன்று இந்தியாவில் இந்துசமுதாயத்தில் பல ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. இவற்றுக்கு இந்து மதத்தை குறை கூற முடியாது. இவை மதத்தால் வந்தவை அல்ல. மனிதர்கள் உருவாக்கியவை.

  மேலும் இப்போது எல்லா ஜாதியிலும் ஏராளமான காதல் மற்றும் பிரஜாதிக்கலப்பு திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடக்கின்றன. கலப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு இட ஒதுக்கீடு செய்தால், எல்லா சாதிச்சங்கங்களும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

  ரபி என்ற நண்பர் எழுதிய கடிதத்தில் “இந்துக்களில் ஓராயிரம் கடவுள்கள் இருப்பது மட்டும் நியாயமா ” என்று எழுதியிருக்கிறார். இந்து மதத்தை பற்றி இந்த நண்பருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதும், இந்து அல்லாத பிறர் செய்யும் பொய் பிரச்சாரங்களை கேட்டு ஏமாந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது தெளிவாகிறது. இறைவன் ஒருவனே என்பது இந்துக்களின் தீர்ப்பு. எங்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு. எவனுக்கும் நாங்கள் அடிமை அல்ல. நாங்கள் சுயமாக சிந்திப்பவர்கள். எங்களுக்கு எல்லையே கிடையாது. ஆயிரம் கடவுள் கிடையாது. ஒரே கடவுளை கோடிக்கணக்கான பெயர்களில் நாங்கள் வழி படுகிrom. இறைவனுக்கு ஒரே பெயர் தான் என்பது இறைவனை கட்டுப்படுத்துவதாகும். தமிழில் maanikka vaasakar எழுதிய திருvaachakam என்ற noolil mika azhakaaka “orunaamam oruruvam illaarkku ஆயிரம் thirunaamam paadi naam thellenam kottaamo ” என்று paadiyullaar. மேலும் sivapuraanaththil, ekan anekan இறைவன் adivaazhka என்று koori ullaar. enave ondraka iruppavanum, palavaaka iruppavanum ஒரே iraivane ஆகும். innum பல kodi peyarkalilum , பல kodi uruvankal moolamaakavum vanankappadupavan ஒரே iraivane ஆகும். enave edhuvum dubaakkoor kidaiyaadhu.எல்லாம் original தான். unkalai உங்கள் makan appaa enbaan , உங்கள் thaai makan enbaar, உங்கள் manaivi kanavar enbaar, neengal ஒரு vakkeel endraal unkalai korttil vazhakkarignar enbaarkal. ஒரு saadharana manidharaana ungalukke ivvalavu peyarkal இருக்கும்podhu, எல்லாம் vallavan என்று நீங்கள் kooda sollum இறைவனுக்கு peyarkalukku panchame இல்லை. thani nabaraana unkalai பல பெயர்களில் unkal uravinarkal kooppidumpodhu avarkal azhaippai neengal erpadhu pola, iraivanum பல kodi பெயர்களில் avanai azhaippadhai erkiraan. palaveru mozhikalilum பல kodi peyarkal உள்ளன.

  maraindha maamedhaiyum mikachchirandha indhiya needhibathikalil oruvarumaana janaab திரு em em ismaayil avarkal எழுதிய “allahvin azhakiya ஆயிரம் thirunaamangal ” என்ற puththakaththai padikkum vaaippai allah unkalukku vazhankattum. இஸ்லாத்தில் ulla thaththuvankalai mudhalil payilungal. islaaththilum இறைவனுக்கு ஆயிரம் peyarkal உண்டு. idhu theriyaadha உங்களுக்கு naangal கூற virumbuvadhu ” இறைவனுக்கு ellai vakukka yaarukkum urimai இல்லை.

 18. to rafi: முதலில் முஹம்மத் அல்லா வுடன் தான் பேசிக்கொண்டு இருந்தாரா இல்லை டுபாகூரா? ஏனனில் அல்லா வுடன் பேசியது அவர் மட்டுமே….

 19. //இந்துக்களில் ஓராயிரம் கடவுள்கள் இருப்பதுமட்டும் நியாயமா? இதில் எந்தக் கடவுள் ஒரிஜினல் எந்தக் கடவுள் டுபாக்கூர் என உங்களால் உறுதி செய்ய முடியுமா?//

  உங்களை எவன் படைத்தான்னேன்று நினக்கிறிர்களோ அவனேதான் டுபாக்கூர்.

 20. நண்பர் babu அவர்களே ,
  நீங்கள் கூறும் ஏற்றதாழ்வுகள் குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் அல்ல நாடு முழுவதிலும் காணலாம். ஏனெனில் இங்கு உள்ள முஸ்லிம்கள் யாவரும் அரேபியாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல. ஏற்கனவே பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவராக இருந்தபொழுது இன மத வெறி பாகுபாட்டால் முஸ்லிமாக ஆனவர்கள். இராவுத்தர் மரைக்காயர் என்பதுபோன்ற பிரிவுகள் ஜாதிகள் அல்ல பட்டப்பேர்களே. யானைக்கு பயிற்சியளிப்பவர் மாவுத்தர் என்று குறிப்பிடப்படுவதுபோல் குதிரைக்கு பயிற்சியளிப்பவர் ராவுத்தர் என்று குறிப்பிடப்படுவார். அன்றைய முஸ்லிம்கள் பலர் அரபுநாட்டு குதிரைகளை இறக்குமதி செய்து பயிற்றுவித்து பாண்டிய மன்னர்களிடம் விற்றுவந்தனர் அதனால் அவர்கள் ராவுத்தர் என்றழைக்கப்பட்டனர். இதன்வழிவந்தவர்களும் குதிரையுடன் எந்ததொடர்பும் இல்லாதபோதும் தங்களை ராவுத்தர் எனக் குறிப்பிடுவதால் இதுவும் ஒரு ஜாதி போன்ற தோற்றம் பெற்றுவிட்டது. இதேபோல் கடல் வழியாக மரக்கலத்தில் சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்துவந்ததால் அவர்கள் மறக்கலாயர் என்பது மருவி மரைக்காயர் என்று ஆகிவிட்டது. எனவே ஜாதிகள் இல்லையடி பாபு.

 21. நண்பர் rafi ,

  அதே போல இங்கும் தொழிற்பிரிவுகல்தான் பின்பு பட்டமாகி இன்று ஜாதி என கூறப்படுகிறது கூறுவது கூட தவறில்லை ஆனால் அதனடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளும் வந்து சேர்ந்து தொல்லை கொடுத்தன அவை இப்போது திருத்தப்பட்டு இன்னும் ஓரளவு திருத்தவேண்டி எஞ்சி உள்ளன.
  உங்கள் கதையும் அதுவே தான்.

 22. //rafi: எனவே ஜாதிகள் இல்லையடி பாபு.

  அப்படின்னா சுன்னி ஷியா அஹ்மீடியா இதெல்லாம் என்ன கண்ணு? அஹ்மேடியாவை கண்டா பாகிஸ்தான்ல கண்ட துண்டமான்னா வெட்றான். ஜாதிக்கு பதிலா வேற ஏதாவது பேரு. ஒரு 1200 வருஷம் முன்னால வந்த மதத்திலேய இப்படின்னா என்னிக்கோ வந்த மதத்தில இதெல்லாம் ஜகஜமப்பா. எவனா இருந்தாலும் ஆத்மா அறிவு இருந்தா முக்திதான் கண்ணு. அது எந்த ஜாதி எந்த மதமா இருந்தாலும் சரி.

  விக்கிபீடியா: In present-day Iran, while Shi’a religious institutions are encouraged, Sunni institutions are blocked. In 1993 a newly constructed Sunni mosque in Sanandaj was destroyed by a mob of Shi’a zealots. Despite the fact that more than one million Sunnis live in Tehran, many of them Kurds, no Sunni mosque exists to serve their religious needs.

 23. சென்ற மாதம் பாகிஸ்தானில் ஒரு ஷியா ஊர்வலத்தின் மீது சுன்னிகள் குன்ன்டு வீசியதில் அறுபதுக்கும் மேல்பட்டவர்கள் கொல்லப் பட்டனர்.
  மேலும் அஹமதியாக்கள்,முஹஜிர்கள் இவர்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் அறிந்ததே.

 24. நான் முன்பு அனுப்பிய கடிதத்தில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டைப் சரியாக ஆகவில்லை. எனவே ஆங்கிலம் கலந்த பகுதியை மீண்டும் தமிழில் டைப் அடித்து அனுப்பியுள்ளேன்.

  ” ஒரே கடவுளை கோடிக்கணக்கான பெயர்களில் நாங்கள் வழி படுகின்றோம் . இறைவனுக்கு ஒரே பெயர் தான் என்பது இறைவனை கட்டுப்படுத்துவதாகும். தமிழில் மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம் என்ற நூலில் மிக அழகாக “ஒருநாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ” என்று பாடி உள்ளார். மேலும் சிவபுராணத்தில் , ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்று கூறி உள்ளார் . எனவே ஒன்றாக இருப்பவனும், பலவாக இருப்பவனும் ஒரே இறைவனே ஆகும். இன்னும் பல கோடி பெயர்களிலும் , பல கோடி உருவங்கள் மூலமாகவும் வணங்கப்படுபவன் ஒரே இறைவனே ஆகும். எனவே எதுவும் டுபாக்கூர் கிடையாது .எல்லாம் ஒரிஜினல் தான். உங்களை உங்கள் மகன் அப்பா என்பான் , உங்கள் தாய் மகன் என்பார் , உங்கள் மனைவி கணவர் என்பார் , நீங்கள் ஒரு வக்கீல் என்றால் உங்களை கோர்ட்டில் வழக்கறிஞர் என்பார்கள். ஒரு சாதாரண மனிதரான உங்களுக்கே இவ்வளவு பெயர்கள் இருக்கும்போது , எல்லாம் வல்லவன் என்று நீங்கள் கூட சொல்லும் இறைவனுக்கு பெயர்களுக்கு பஞ்சமே இல்லை. தனி நபரான உங்களை பல பெயர்களில் உங்கள் உறவினர்கள் கூப்பிடும்போது அவர்கள் அழைப்பை நீங்கள் ஏற்பதுபோல, இறைவனும் பல கோடி பெயர்களில் அவனை அழைப்பதை ஏற்கிறான் . பலவேறு மொழிகளிலும் பல கோடி பெயர்கள் உள்ளன.

  மறைந்த மாமேதையும் மிகச்சிறந்த இந்திய நீதிபதிகளில் ஒருவருமான திரு எம் எம் இஸ்மாயில் அவர்கள் எழுதிய “அல்லாஹ்வின் அழகிய ஆயிரம் திருநாமங்கள் ” என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை அல்லா உங்களுக்கு வழங்கட்டும் . இஸ்லாத்தில் உள்ள தத்துவங்களை முதலில் பயிலுங்கள் . இஸ்லாத்திலும் இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டு. இது தெரியாத உங்களுக்கு நாங்கள் கூற விரும்புவது ” இறைவனுக்கு எல்லை வகுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்பது மட்டுமே.

 25. இந்து மத மறுமலர்ச்சியாளர்களில் சுவாமி தயானந்த சரஸ்வதி ( ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் ) குறிப்பிடத்தக்கவர். அவரைவிட மிக்க பகுத்தறிவுடன் கருத்தாய்வு செய்தவர்கள் மிக மிக குறைவு. அவர் கடவுள் நம்பிக்கை என்ற பேரில் பேசுவோரிடம் சில முக்கிய கேள்விகளை எழுப்பினார்.

  ” கடவுள் எல்லாம் வல்லவர் என்கிறீர்களே, அவரால் தன்னைப்போல் இன்னொரு கடவுளை உருவாக்கமுடியுமா ” என்று கேட்டார். அதற்கு ஒருநண்பர் நிச்சயம் முடியும் என்றார். உடனே சுவாமிகள் அவரிடம் ” கடவுள் தன்னிகரற்றவர் என்றும் சொல்கிறீர்கள் , தன்னிகரற்ற ஒருவர் தன்னைப்போல ஒருவரை தனக்கு சமமாக உருவாக்க முடியும் என்றால் அவரை தன்னிகரற்றவர் என்று எப்படிச்சொல்ல முடியும் என்றார். ஏனெனில் அவருக்கு இணையாக அவரைப்போல ஒருவரை அவர் படைத்தபின்பு, அவர் தன்னிகரற்றவர் என்ற இலக்கணம் அடிபட்டு போய்விடுமே என்றார். இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால் கடவுளைப்பற்றி மனிதன் தான் பயன்படுத்தும் மொழியில் வரையறை செய்ய முற்படுவது மிகவும் சிரமம் என்பதே ஆகும்.

  அடுத்து வேறொரு அன்பர் அவரை சந்திக்க வந்தபோது ” கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்கிறீர்களே, அவரால் யாரையும் ஆக்கவும், யாரையும் அழிக்கவும் முடியும் என்கிறீர்களே ! அது சரி என்றால் , கடவுள் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியுமா ஆம் என்றால் அதன் பிறகு என்ன ஆகும் என்று கேட்டார். இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன வென்றால், மனிதனின் மொழிகள் அனைத்துமே குறை பாடுடையவை ஆகும். மனிதன் தன்னுடைய பேச்சு, மற்றும் மொழிகளில் இறைவனை வரையறை செய்வது என்பது நகைப்புக்கிடமான ஒன்றே ஆகும். ஏனெனில் மனிதன் பல எல்லைகளால் வரையறை செய்யப்பட்டவனாகவே இருக்கிறான்.

 26. //மறைந்த மாமேதையும் மிகச்சிறந்த இந்திய நீதிபதிகளில் ஒருவருமான திரு எம் எம் இஸ்மாயில் அவர்கள் எழுதிய “அல்லாஹ்வின் அழகிய ஆயிரம் திருநாமங்கள் ” என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை அல்லா உங்களுக்கு வழங்கட்டும் . இஸ்லாத்தில் உள்ள தத்துவங்களை முதலில் பயிலுங்கள் . இஸ்லாத்திலும் இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டு. இது தெரியாத உங்களுக்கு நாங்கள் கூற விரும்புவது ” இறைவனுக்கு எல்லை வகுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்பது மட்டுமே.//

  beautiful words.

 27. சமீப காலமாக உலகம் முழுவதும் மனித வாழ்வில் அமைதி குறைந்து ஆணவமும், தற்பெருமையும் தலை தூக்கி மனிதர்கள் நிம்மதி குறைந்து காணப்படுகிறார்கள். இதற்கு என்ன அடிப்படை காரணம் என்று பலருடன் விவாதித்து அவர்களது கருத்துக்களை கேட்டேன். தொண்ணூறு சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்த கருத்து ஒரே மாதிரியாக இருந்தது.

  மனிதனுக்கு இன்று உள்ள பிரச்சினை சுத்தமான குடிதண்ணீர், இருவேளை நல்ல சத்துணவு, உடுத்த நல்ல உடை, தங்க ஒரு வசிப்பிடம் அதாவது வீடு, நோய்நொடி வரும்போது சிகிச்சை பெற நல்ல மருத்துவமனை அதாவது ஆஸ்பத்திரி, நல்ல கல்விக்கூடங்கள் ( மதம், ஜாதி , மொழி அடிப்படையில் ஒன்று உயர்ந்தது ,மற்றவை மட்டம் என்று கூறாத கல்வி வழங்கும் இடம் ) இவைதான் தேவை. சமுதாயத்திற்கு கடவுள் நம்பிக்கை இருப்பது நல்லது ஆனால் என் கடவுள்தான் பெரியவர் உன் கடவுள் சிறியவர், என் மதம் மட்டுமே உலகில் இருக்க வேண்டும். பிறரின் மதங்களும், மொழிகளும் அழிக்கப்படவேண்டும் என்று பிறரை அழிக்கும் முயற்சியில் மனிதன் ஈடு படுவானே ஆகில், கடவுள் நம்பிக்கை ஒழிந்தாலும் பரவாயில்லை என்று கூறுகின்றனர். மனித இனத்திடையே அன்பும், பரஸ்பர மரியாதையும் உரு வாக்க நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். உணவு, உடை, மொழி, கடவுள் நம்பிக்கை என்று எல்லா விஷயங்களிலும் ஒருவன் தன் கருத்தை பிறர் மீது திணிக்கக்கூடாது. முக்கியமாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களை வெறுக்கவோ அவர்களை அழிக்கவோ நினைக்கக்கூடாது. அது போலவே நாத்திகம் என்பதை பேசுவோரும் இறைநம்பிக்கை உள்ளவர்களையும், அது சார்ந்த நடவடிக்கைகளையும் கேலி கிண்டல் செய்து பேசுவது கூடாது.

  இன்றைய உலகில் நாம் காண்பது என்ன ? மனிதர்களை ஜாதி அடிப்படையில் மத அடிப்படையில் மொழியடிப்படையில் பிரித்து ஒட்டு அரசியலாக்கி சண்டை சச்சரவை மூட்டி விடவே பல தலைகள் உள்ளன. ஒரு சிலர் தங்கள் மதத்திலேயே மாறுபட்ட சில கருத்துக்களை உடையவர்களை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தற்கொலைப்படையாக மாறி தானும் உடல் சிதறி பிற பல உயிர்களையும் , பல கட்டிடங்களையும் நாசப்படுத்துகிரார்கள். கேட்டால் இதுவே இறைவன் ஆணை என்கிறார்கள். மதம், கடவுள் நம்பிக்கை என்று சொல்லுகிற விஷயங்கள் எல்லோரிடமும் அன்பு, மதிப்பு ஆகியவற்றை உருவாக்கவில்லை என்றால் , அவற்றுக்கு விடை கொடுப்பதே நல்லது. இந்த உலகில் மனிதனுக்காகத்தான் மதம் என்ற வழி உருவாகிறது. அது அன்பை போதிப்பதாக இருந்தால் இருக்கட்டும்.

 28. hai kiran,
  அல்லா முகம்மதுவுடன் பேசினார் என்று எந்த பாட்டி உங்களுக்கு கதை சொன்னார்கள்? கடவுள் மனிதனிடம் பேசியதாக இதுவரை வரலாறு இல்லை.

 29. dear s.balachandran,
  நீதிபதி மு.மு. இஸ்மாயில் சொன்னது “அல்லாவின் அழகிய ஆயிரம் திருநாமம்” என்றுதான் சொன்னாரே தவிர ஆயிரம் திரு உருவங்கள் என சொல்லவில்லை. என்னை எனது குடும்பத்தார் பலவாறு அழைக்கலாம் ஆனால்,அவர்களுக்கெல்லாம் தெரிவது நான் என்ற ஒரு மனித முகமேயன்றி வேறுவேறு முகங்கள் அல்லவே.?

 30. /////மனிதனுக்கு இன்று உள்ள பிரச்சினை சுத்தமான குடிதண்ணீர், இருவேளை நல்ல சத்துணவு, உடுத்த நல்ல உடை, தங்க ஒரு வசிப்பிடம் அதாவது வீடு, நோய்நொடி வரும்போது சிகிச்சை பெற நல்ல மருத்துவமனை அதாவது ஆஸ்பத்திரி, நல்ல கல்விக்கூடங்கள் ( மதம், ஜாதி , மொழி அடிப்படையில் ஒன்று உயர்ந்தது ,மற்றவை மட்டம் என்று கூறாத கல்வி வழங்கும் இடம் ) இவைதான் தேவை. சமுதாயத்திற்கு கடவுள் நம்பிக்கை இருப்பது நல்லது ஆனால் என் கடவுள்தான் பெரியவர் உன் கடவுள் சிறியவர், என் மதம் மட்டுமே உலகில் இருக்க வேண்டும். பிறரின் மதங்களும், மொழிகளும் அழிக்கப்படவேண்டும் என்று பிறரை அழிக்கும் முயற்சியில் மனிதன் ஈடு படுவானே ஆகில், கடவுள் நம்பிக்கை ஒழிந்தாலும் பரவாயில்லை என்று கூறுகின்றனர். மனித இனத்திடையே அன்பும், பரஸ்பர மரியாதையும் உரு வாக்க நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். உணவு, உடை, மொழி, கடவுள் நம்பிக்கை என்று எல்லா விஷயங்களிலும் ஒருவன் தன் கருத்தை பிறர் மீது திணிக்கக்கூடாது. முக்கியமாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களை வெறுக்கவோ அவர்களை அழிக்கவோ நினைக்கக்கூடாது. அது போலவே நாத்திகம் என்பதை பேசுவோரும் இறைநம்பிக்கை உள்ளவர்களையும், அது சார்ந்த நடவடிக்கைகளையும் கேலி கிண்டல் செய்து பேசுவது கூடாது.//////

  இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதனை வரவேற்ப்போம்,

 31. நண்பர் islam buster,
  சன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல. இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர், அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது.
  மதங்கள் கூட அப்படித்தானே நண்பரே. கொள்கைகள் மாறுபடும் போது குழப்பங்கள் வரத்தானே செய்யும். அவனும் மனிதன் என நினைக்கும்போதுதான் மனிதநேயம் வளரும்.அதை கடைபிடிக்க அனைத்து மதங்களும் அதன் தலைவர்களும் சிந்திக்கும்போதுதான் அந்நிலை உருவாகும். சிறுவயதில் நாம் செயும் தவறுகளை திருத்த முயன்று திட்டும் பெற்றோர்கள் மீதே நமக்கு வெறுப்பு வரும்போது,பக்கத்து வீட்டார் திட்டினா அது நம் மதத்தவராக இருந்தாலும் நம்மை வெறுக்கவைக்கும். அதுவே மற்றுமததவராக இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். பள்ளியில் படிக்கும்போது இல்லாத மதவேற்றுமை பருவபாடத்தை படிக்கும்போது மாறிவிடுகிறோம் யாரால்? இடையில் யார் தடைபோட்டது? நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா? யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல அப்படிஇருப்பின் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

 32. அன்புள்ள ரபி,

  ஆயிரம் உருவங்கள் என்று அவர் சொன்னதாக நான் எங்கும் சொல்லவில்லை. ஆயிரம் பெயர்கள் என்று தான் கூறியுள்ளேன். மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உருவமும் பல பெயர்களும் உள்ளன என்பதை அறிவோம்.

  மனிதர்கள் பல பிரதேசங்களில், பல தட்ப வெப்ப நிலைகளில், பல மொழி பேசி வாழ்ந்து வருவதால் அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களுக்கு தகுந்தவாறு தங்கள் இறை வழி பாட்டு முறைகளை உருவாக்கியுள்ளனர். தெய்வீக வாழ்க்கையில் மனஒருமைப்பாட்டுடன் கூடிய தியானம் முக்கியப்பங்கு வகிக்கிறது. தியானம் நூறு சதவீத மன ஒருமைப்பாட்டுடன் நிறைவேற உருவத்தின் மூலம் இறைவனுக்கு செய்யும் வழிபாடு மிக உன்னதமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் மன ஒருமைப்பாட்டுக்கு ஒரு தனிப்பட்ட உருவம் தேவைப்படும். சிலருக்கு ரோஜா மலர், சிலருக்கு மல்லிகை, சிலருக்கு தாமரை, சிலருக்கு ஒரு யானை, சிலருக்கு ஒரு அழகிய குதிரை, சிலருக்கு ஏதேனும் ஒரு மதிப்பு மிக்க தலைவர் படம் அல்லது அவரது சிலை, சிலருக்கு அவர்களது பெற்றோரின் உருவப்படம் ஆகியவை தியானத்துக்கு உதவும்.

  இறைவன் நினைத்தால் எந்த உருவத்திலும் அவரால் தோன்ற முடியும். இந்து மதம் உருவத்தின் மூலம் எங்கும் நிறைந்த இறைவனை வழிபாடு செய்வது மட்டும் அல்லாமல் உருவமில்லாமல் வழிபடுவதையும் தன்னுள்ளே வைத்துள்ளது. யார் யாருக்கு எந்தவகை வழிபாடு சுலபமோ அதை பின்பற்றி பயன் பெறலாம். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ” என்று கூறும் பாடல் தெரிவிக்கும் கருத்து என்னவெனில் இறை வழிபாட்டில் உருவம் மூலம் செய்யும் வழிபாடும், உருவம் இன்றி செய்யப்படும் அருவ வழிபாடும் சமம் என்பதையும், ஆனால் முதன்முதலில் உருவ வழிபாடு குறிப்பிடப்படுவதன் காரணம் மனித இனத்தில் தொண்ணூற்று ஐந்து சதவீத மக்களுக்கு உருவம் மூலம் செய்யும் வழிபாடே பின்பற்ற எளிது ஆகும். மிகவும் பக்குவம் அடைந்த ஞானிகளுக்கு மட்டுமே அருவ உபாசனை நல்ல பலன் தரும்.

  நேரடியாக அருவ வழிபாடு செய்வது என்பது ஒரு மாணவன் முதல் வகுப்பிலிருந்து பட்டமேற்படிப்பு வரை பதினேழு வருடங்கள் முறையான கல்வி கற்காமல் நேரடியாக எம்.பில் மற்றும் பி.எச்.டி தேர்வுக்கு ஆஜராக முயற்சிப்பது போல ஆகும். பிறவியிலேயே ஜீனியஸ் ஆக உள்ள கோடியில் ஒரு மாணவனுக்கே நேரடியாக பி எச் டி செல்ல இயலும். எனவே உருவ வழிபாடே மிக எளிது பெரும்பான்மையான மக்களுக்கு மிக வசதியானது ஆகும். எங்கும் நிறைந்தவன் உருவங்களுக்கு உள்ளே மட்டும் இல்லை என்று கூறுவது கடவுளை இழிவு படுத்தும் பெரும் பாவம் ஆகும். மேலும் உருவங்களுக்குள் கடவுள் இல்லை என்போர், கடவுள் சில இடங்களில் இல்லை என்று கூறி இறைவனின் ஆட்சிப்பிரதேசத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

  இதை விட முக்கியமான செய்தி என்னவென்றால் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக மேலை நாடுகளிலிருந்து வந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் ஜடப்பொருள்களுக்கு உயிரில்லை/சக்தியில்லை என்று அறியாமையினால் கூறி வந்தார்கள். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானம் ஜடப்பொருள்களுக்குள்ளும் நேர் மின் அணு,( புரோட்டான்) எதிர் மின் அணு (எலெக்டிரான்), சமநிலை அணு (நியூட்டிரான் ) என்று முழு இயக்கம் உள்ளது என்பதை ஆராய்ந்து நிரூபித்து உள்ளது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் வேதங்கள் இந்தப்பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தி பல்வேறு வடிவங்களில் உள்ளது என்பதையும் மேலும் சடப்பொருள் களிலும் சக்தி இருக்கிறது என்பதையும் மிக தெளிவாக அறிவித்துள்ளன.

  எனவே கடவுள் சக்திக்கு எல்லை வகுக்கும் செயல் தேவையற்றது, மேலும் கொடிய பாவமும் ஆகும். இறை வழிபாடு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தனிப்பட்ட விருப்பமும் உரிமையும் ஆகும். இறை வழி பாட்டில் இப்படித்தான் செய்யவேண்டும் அப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதும், கட்டுப்பட மறுப்பவர்களை அவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் என்று பொய்யை சொல்லி ஏமாற்றுவதும் மன்னிக்க முடியாத கொடிய பாவமாகும். பிறரை நரகத்திற்கு போவாய் என்று சொல்பவன் தனக்கு நரகத்தில் ஒரு நிரந்தர வீட்டை கட்டிக்கொள்கிறான்.

 33. மனிதன் தன் அனுபவங்களை காலப்போக்கில் சேகரித்து ஒரிஜினலாக உள்ள பழைய கருத்துக்களை தேவைப்படும் பொது மாற்றிக் கொள்ளுவான். இதனால் தான் பல நாத்திகர்கள் அனுபவம் கூடியபின் இறை நம்பிக்கை உள்ளவர்களாக மாறுகிறார்கள். சில இறை நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் கடவுளை வழிபாடு செய்தும் சிரமம் தீரவில்லை பிரச்சினை தீரவில்லை என்று விரக்தி அடைந்து நாத்திகர்களாகவும் மாறுகின்றனர். என் நாத்திக நண்பர் ஒருவர் என்னிடம் பேசும் சமயம் “கடவுள் எல்லாவற்றையும் படைத்தான் என்று சொல்கிறீர்கள். மனிதனுக்கு தேவையான மரங்கள், காய்கறி, பழங்கள், குடி தண்ணீர் ஆகியவற்றை படைத்த அவன், மனிதனுக்கு தீமை செய்யும் நோய்நொடிகள், தீராத வியாதிகள், விஷ ஜந்துக்கள் ( தேள், பாம்பு, முதலியவை ) வறுமை, தண்ணீர் பஞ்சம், வேலையில்லாத திண்டாட்டம், போன்றவற்றையும் படைத்து உள்ளான். நமக்கு தீமை செய்யும் பலவற்றையும் சேர்த்து படைக்கப்பட்டு இருப்பதால், இறை நம்பிக்கை இருப்பதில் தவறில்லை, ஆனால் இறை வணக்கம் மூடத்தன மானது என்று தெரிவித்தார்.

  நான் அவரிடம் பிறரது நம்பிக்கையை மூடத்தனமானது என்று நாத்திகரான நீங்கள் சொன்னால் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் உலக அளவில் பெரும் சண்டை மூண்டு மனித வாழ்வின் அமைதி குறையும். எனவே அவரவர் கருத்து அவரவரால் பின்பற்றப்படட்டும். பிறரை தாக்கி பேசாதீர்கள். காலப்போக்கில் அனுபவம் கூடும்போது பலரது கொள்கை மாறும் என்றேன்.

 34. நண்பர் RAFI ,முஹம்மது கடவுளோட பேசலைன்ன அப்போ யாரோட பேசி அவருக்கு மெசேஜ் வந்துச்சி.இடைதரகுகள் மூலமாகவா?. இல்ல, அல்லாவே அவருக்குள இறங்கி சொன்னாரா!?

  பாலச்சந்திரன் சார்,”ஒரு கடவுள்” அப்பிடின்னு சொல்றது எல்லாம் வெத்து அரசியலுக்காக தான் என்று என்னை மாதிரி சில ஆளுங்க நெனைக்கிறோம் என்பதை நீங்கள் என்றாவது எண்ணியதுண்டா? நாங்கள் பல கடவுள்கள் இருப்பதை உறுதியாக நம்புகிறோம் என்பதை நீங்கள் ஏன் நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.கிருஷ்ணன்,ராமனை எல்லாம் நாங்கள் சாதாரண மனிதர்களாக தான் பார்க்கிறோம் என்பதை நீங்கள் ஏன் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.ஒரு கடவுள் என்பது வடிகட்டிய பொய்!! பல கடவுள்கள் என்பதே மெய் உணரும் மெய்!! ஒரு கடவுள்ன்னு ஏற்று கொள்வதே ஆப்ரகாமிய மதங்களை சந்தோசபடுத்த தான் என்பது என்னை போன்றவர்களின் எண்ணம். எங்கள் கடவுள்கள் என்று உறுதியாக என்னை போன்ற ஆட்கள் நம்புவதை ருத்ரன்,துர்க்கை,நரசிம்மன்,மாரியாத்தா, கங்கையம்மன்,எல்லையம்மன்,காளி போன்ற உண்மையான தெய்வங்களே என்பதை தங்கள் நினைவுக்கு கொண்டுவர இங்கே விளைகிறேன்.அத்வைத குப்பையையை,குப்பையில் போடுங்கள்!! கிருஷ்ணன் சொன்னதெல்லாம் தங்கள் சகோதரர்களை கொல்ல உசுப்பேத்தி விட்ட வார்த்தைகள் தான் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.அந்த ஆள் ஒரு அரசியல்வாதி,எப்படி வேணும்னாலும் பேசிட்டு போய் இருக்கலாம்,நாங்க அதை ஏற்கவேண்டும் என்ற எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.சில முஸ்லிம்கள் சொன்னது உண்மையோ உண்மை.இந்த இஸ்லாம் வந்த பின்னாடி தான் ராமன் கடவுள் ஆகி இருப்பான்…அதுவும் அந்த முஹம்மதோட பாதிப்புல! அயோதிலே இருந்தது கூட அவங்க சொன்ன மாதிரி ராமன் கோயிலா இருந்திருக்காது.ஆத்தா கோயிலா தான் இருந்திருக்கும்..

  ஆத்தா, மாதிரி இருக்கணும்டி.. சும்மா அலறும் இல்ல!!

 35. //சன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல.//

  நான் அதை ஜாதின்னு சொல்லவே இல்லியே. மதம்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அதுல கொஞ்சம் வித்யாசம் இருக்கத்தான் கண்ணு செய்யும். என்னதான் நாம எல்லாரும் பிரதருங்கத்தான்னு சொன்னாலும் இத மாதிரி பிரிவுங்க வரத்தான் செய்யும்.

  //இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர்,//
  இடைதரகர் வேணாமுன்னா அப்றோம் கப்ரியல் எதற்கு நடுவுல வரனும்?

  //நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா?//
  ஏங்க இஸ்லாம்லேந்து வெளில வந்தா மரண தண்டனைதாநாமே? அதை எப்படி நீங்க வெருப்பீங்க? முன்னால உங்களுக்குள்ள பிரதருங்கள மனுஷனா நடத்துங்க. அப்றோம் மத்தவங்களுக்கு உவ்தேசம் pannalaam

  //அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது//
  என்ன கண்ணு இதபோயி வெறும் சண்டைங்கற? ஒத்தனுகொத்தன் அடிச்சு சாவருதுதான் சண்டையா? ஏதோ வீட்ல வர்ற சின்ன சண்டை மாதிரி சொல்லிபுட்ட? ஒருத்தன் மசுதிக்குள்ள இன்னொருத்தன் போஹமாட்டேங்கிரிங்காலே?

  //நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா?//
  முன்னால உங்க பிரதருங்கள மனுஷனா நடத்த பளகுங்க. அப்றோம் ஊருக்கு உவ்தேசம் பண்லாம்.

 36. //சுன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல. இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர், அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது.
  -ஸ்ரீ ரஃபி//

  ஸ்ரீ ரஃபி தரும் தகவல் சரியல்ல.
  சுன்னி என்றால் கேட்டு அதன்படி நடப்பவர்கள் என்றும் ஷியா என்றால் பார்த்து அதற்கிணங்க நடப்பவர்கள் என்றும் அர்த்தம். முகமது மறைந்ததுமே ஷியா சுன்னி தகராறு வந்துவிட்டது. முகமதுவின் நண்பர்கள்-சீடர்களளிலிருந்து ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து இயங்குவதென்று முடிவு செய்தவர்கள் சுன்னிகள். முகமதுவின் குடும்பத்திலிருந்தே ஒருவரைத் தலைவராகக் கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தவர்கள் ஷியாக்கள்.

  முகமது இவ்வாறு சொன்னார் என்று கேட்டு அதற்கு ஏற்ப நடப்பவர்கள் என்பதற்காக சுன்னி என்றும் முகமதுவின் செயல்பாடுகளையும் அவரது குடும்பத்திலிருந்து வந்தவர்களின் செயல்பாடுகளையும் கண்கூடாகப் பார்த்து அதன்படி நடப்பவர்கள் என்பதால் ஷியா என்றும் அடையாளப் படுத்திக் கொண்டார்கள்.

  இதுவே அடிப்படையான வேறுபாடு.
  -மலர்மன்னன்

 37. Dear moderator,
  Please delete my previous post.

  //சன்னி,ஷியா பிரிவுகள் பற்றி கேட்டீர்கள் அதுவும் ஜாதிகள் அல்ல.//

  நான் அதை ஜாதின்னு சொல்லவே இல்லியே. மதம்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அதுல கொஞ்சம் வித்யாசம் இருக்கத்தான் கண்ணு செய்யும். என்னதான் நாம எல்லாரும் பிரதருங்கத்தான்னு சொன்னாலும் இத மாதிரி பிரிவுங்க வரத்தான் செய்யும்.

  //இஸ்லாத்தின் கொள்கைகளில் மாறுபட்டவர்கள்.அதாவது சமாதி வழிபாடு,ஆன்மீகத்தளைவரிடம் தீட்சை பெறுதல்,கடவுளிடம் கேட்கப்படுவதை இடைத்தரகர் வைத்து கேட்பது போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழி முறைகளை கடைபிடிப்பதால் தனி பிரிவாக சென்றனர்,//
  இடைதரகர் வேணாமுன்னா அப்றோம் கப்ரியல் எதற்கு நடுவுல வரனும்?

  //அதனாலேயே இவர்களுக்குள் சண்டைகள் வரக்காரணமாக அமைந்துவிட்டது//
  என்ன கண்ணு இதபோயி வெறும் சண்டைங்கற? ஒத்தனுகொத்தன் அடிச்சு சாவருதுதான் சண்டையா? ஏதோ வீட்ல வர்ற சின்ன சண்டை மாதிரி சொல்லிபுட்ட? ஒருத்தன் மசுதிக்குள்ள இன்னொருத்தன் போஹமாட்டேங்கிரிங்காலே?

  //நம் மனித நேயத்துக்கு தடையாக மதமும் கடவுளும் குறுக்கிட்டால் அதை வெறுக்க நான் தயார். நண்பர்கள் யாரும் தயாரா?//
  ஏங்க இஸ்லாம்லேந்து வெளில வந்தா மரண தண்டனைதாநாமே? அதை எப்படி நீங்க வெருப்பீங்க? முன்னால உங்களுக்குள்ள இருக்கற பிரதருங்கள மனுஷனா நடத்துங்க. அப்றோம் மத்தவங்களுக்கு உவ்தேசம் பண்ணலாம்

 38. நண்பர் பிரதாப்,
  அருமை மிகமிக அருமை இதைதான் நானும் எதிர்பார்க்கிறேன். நம் நாட்டிற்குத் தேவை மதங்கள் அல்ல, நல்ல மனிதர்கள். எங்கள் மதமும் எங்கள் கடவுளும் உயர்ந்தது என்றால் மற்றவைகள் பொய்யாகின்றன எனவே மதங்கள் கடவுள்களை கடந்து மனிதர்களாக வாழ்வோம். அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களிலும் எனக்கு இன்றுவரையில் நண்பர்களாகவே உள்ளனர். நாளையும் தொடரும் உங்களைப்போல் நண்பர்கள் உள்ளவரையில். நன்றி …..

 39. இது பிரதாப் மற்றும் ரபி போன்ற நண்பர்களின் சிந்தனைக்கு. ஒருவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் நல்ல மருத்துவரைத் தேடுகிறோம்; வழக்கு, வியாஜ்ஜியங்கள் என்றால் சரியான வக்கீலைத் தேடுவோம்; பசி என்றால் ஹோட்டலுக்கு வழி கேட்போம். ஆனால், சமயம், வழிபாடு என்றெல்லாம் வந்துவிட்டால், அது பற்றி எதுவும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கூட இல்லாத யார் யாரோ சொல்லும் அறிவுரைகளிக் கேட்டு விமரிசனம் செய்வோம்.
  உலகத்தில் எந்தத் துறையில் பிரச்சினைகள் இல்லை? லஞ்சம் இல்லையா? நேர்மைக்குறைவு இல்லையா? வஞ்சனை இல்லையா? கொலை, கொள்ளை இல்லையா? இவை எல்லாம் இருக்கும் எந்தத் துறையையாவது வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடிகிறதா? அரசியலால் நிகழாத அசிங்கங்களும் கொலைகளும் கொஞ்சமா, நஞ்சமா? அதனால் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட முடிகிறதா? வேண்டும் என்றால் ஓட்டே போடாமல் நொந்து பலர் ஒதுங்கிக் கொள்ளலாம். அப்படி ஒதுங்குவது அரசியலை இல்லாமல் செய்துவிடாது.
  அதுபோலவே சமயத்தின் பெயரால் பிரச்சினைகள் உருவாவதாகவும் அதனால் சமயமே தேவையில்லை என்றும் நாம் சிலர்/பலர் முடிவு செய்வது நம் இயலாமை மற்றும் அறியாமையைக் காட்டுமேயல்லாமல் சமயங்களை அழித்துவிடாது. உண்மையில் “எல்லாத் திசைகளிலிருந்தும் நன்மைகள் வந்து சேரட்டும்” என்று வேதம் சொல்கிறது. நன்மை எங்கிருந்து வந்தாலும் நல்வரவு செய்யும் உயர் பண்பைக் கொடுத்திருக்கும் கலாச்சாரத்துக்குச் சொந்தக் காரர்களாகிய நாம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அந்தத் துறையின் மேலானவர்களிடம் வழிகாட்டுதல் பெற வேண்டுமே அன்றி அபத்தமாக ஏதோ சொல்லுபவர்களிடம் உண்மை இருப்பதாக நம்பி ஏமாறக் கூடாது. நண்பர்கள் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள்; இன்று இந்தியாவில் வாழும் எவராவது அவரை விட நல்ல விதமாக நமக்குச் சமய அறிவை வழங்க முடியுமா என்ன?
  இனிமேலேனும் அந்தந்தச் சிக்கல்களை அந்தந்தத் துறையின் மேலானவர்களின் வழிகாட்டல் மூலம் புரிந்து கொண்டு தீர்க்க முயல்வோம். ‘நோய் முதல்’ நாடித்தனே அது தணிக்கும் ‘வாய் நாட’ முடியும்? பிரச்சினை சமயத்தில் இல்லை. அதை அழிக்க முயன்று நாம் வாழப் போவதும் இல்லை.

 40. \\”எங்கள் மதமும் எங்கள் கடவுளும் உயர்ந்தது என்றால் மற்றவைகள் பொய்யாகின்றன”//

  அன்புள்ள ரபி அவர்களுக்கு,

  எங்கள் மதமும் எங்கள் கடவுளும் உயர்ந்தது என்று கூறுவதால் எந்த தவறும் இல்லை. இந்த வாக்கியத்தினால் மற்ற மதங்களும் மற்ற நம்பிக்கைகளும் பொய்யாவதில்லை. எங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்றும்,எங்கள் கடவுள் மட்டுமே உயர்ந்தது என்றும்,என் மொழி மட்டுமே உயர்ந்தது என்றும் கூறும் போது தான் மற்றவைகள் தாழ்வு படுத்தப்படுகின்றன. நான் நல்லவன், இனிமையானவன் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். நான் மட்டுமே நல்லவன், நான் மட்டுமே இனிமையானவன் என்று கூறும் போதுதான் மற்றவர்கள் மனவேதனைக்கு ஆளாவார்கள்.

  கடவுள் நம்பிக்கையோ மதமோ இருப்பது தவறு அல்ல. இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இவற்றின் பெயரால் அன்பும் பாசமும் நேசமும் பெருகுவதாக இருக்கட்டும். ஒருவருக்கு ஒருவர் சண்டையும் விரோதமும் கூடாது. இந்த உலகத்தில் பிற மொழி பேசுபவர்கள், பிற மத நம்பிக்கை உடையவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று கூறி எல்லோரையும் ஒரே மதத்தில் பிரச்சாரம், பணத்தாசை, பயமுறுத்தல் போன்றவற்றின் மூலம் தங்கள் மதத்திற்கு மத மாற்றம் செய்ய வேண்டும் என்று முயல்பவர்கள் தான் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.

 41. அன்புள்ள நண்பர்களே ,

  மேலே குறிபிடப்பட்டுள்ள ஹம்பில், மாலிக்கி, போன்றவை ஜாதிகள் இல்லை அந்த அந்த பிராந்தியத்தில் நிகழும் தொழுகை முறைகளாகும்,
  மற்றும் இஸ்லாமில் எந்த இடத்திலும் ஜாதிகள் பற்றி புனித குரானிலோ, ஹதீஸிலோ குறிபிடப்படவில்லை.
  இவை இரண்டினையும் பின்பற்றுபவரே முஸ்லிம்.
  மேலும் முஹம்மது நபி அவர்கள் எந்த மதத்தினரையும் மனம் நோகும் படி நடந்துகொண்டது கிடையாது இதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளது – முகமது நபிகளாரின் சிறிய தந்தையே மதம் மாற வில்லை என்பது எதனை பேருக்கு தெரியும்.
  பிலால் (ரலி) அவர்கள் அடிமையாக இருந்து பின்பு நபிகளாரின் முயற்சியில் அடிமை விலங்கில் இருந்து விடுபட்டு உயர்ந்த நிலை அடைத்திருக்கிறார்கள்.
  மேலும் இங்கு சிலர் சொன்னது போல் நபி அல்லாஹ்விடம் நேரிடையாக பேசவில்லை இறை தூதர் மூலமாகவே பேசி உள்ளார் .
  இன்று மேலே குறிப்பிட்ட ஜாதி அடிப்படை இல்லாமல் யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் .
  பல நூறு வருடங்களுக்கு முன்பே வட்டி , விபச்சாரம் , பொய், புரட்டு, வரதட்சணை கூடாது போன்ற உயரிய சிந்தனைகள் இஸ்லாம் pothithathu

 42. முன்னேறிய சமுதாயம் இருந்தால், பொருளாதார அடிப்படையில் பிரிவுகள் இருக்கும் . கிறித்துவம் ஐரோப்பாவில் வரும் போது சாதிகள் இல்லை, மிடில் எஜஸ் வந்த பின்பு knights peasants traders என்று பிரிவுகள் வந்தது. எங்கு வர்த்தகம் இருக்கோ அங்கு சாதிகள் வரும், அது ஒரு social economical பிரிவு. கல்யாணம் கூட ஒரே சாதியாக இருந்தாலும் சம அந்தஸ்து இருந்தால் தான் நடக்கும். டாக்டர் பயன்னுக்கு டாக்டர் பொண்ணு பார்ப்பார்கள் , அது போல தான் arranged marriage. இபோழுது உள்ள சதிகள் ௧௦௦௦ வருடங்கள் முன்பு கிடையாது. இந்தியாவில் பொருளாதார நிலைமை மாறும்போது சாதிகள் மாறும், புதிய சாதிகள் வரும் (அதற்க்கு சாதி கட்சிகளும் முளைக்கும் 🙂 )

 43. நபிகள் நாயகம்

  முகமதுநபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன.

  முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு, பல கடவுள்கள் இல்லை என்றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப்பற்றி என் கருத்து என்ன என்று? என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். கடவுள் என்று மக்கள் ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டியழுகிறவர்களைவிட, நபி அவர்கள் எவ்வளவோமேலானவர் என்பேன். முதலில் மக்கள், பல கடவுள்கள் என்பது பொய், ஒரு கடவுள்தான் மெய் என்ற நிலைக்கு வரட்டும்; மேற்கொண்டு அப்புறம் சேர்த்துக்கொள்ளலாம். நம் நாட்டுக்கு, நம் மக்களுக்கு இது எவ்வளவு நல்ல உபதேசமென்பதைச் சிந்தியுங்கள்.

  அடுத்தபடியாக முகமது நபி அவர்கள் சொன்னது மனித சமுதாயத்தில் மக்களுக்குள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு, பேதா பேதம், வித்தியாசம் இல்லை. யாவரும் சமமான பிறவியே என்று சொன்னார். இதுவும் மிக முக்கியமானதாகும். நம்மிலும் பல பெரியார்கள் இந்தப்படியாகச் சொன்னார்கள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுபோல எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவை வெறும் ஏட்டு அளவிலே இருக்கிறதே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லீம் சமுதாயத்தில் நடப்பிலேயே ஒரே ஆண்டவன் வழிபாடும், மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகிறது. இது அவர்களைப் பொறுத்த மட்டிலுந்தான். அதாவது அவர்கள் மதஸ்தர்களைப் பொறுத்தமட்டிலுந்தான் என்று சொல்லப்பட்டாலுங்கூட, மற்ற மதங்களில் அந்த மதத்தில் கட்டுப்பட்டுள்ளவர்களுக்குள்ளாகவே காட்டப்படும் பேதா பேதங்கள், வித்தியாசங்கள், முஸ்லீம் மதஸ்தர்களுள், அவர்களுக்குள்ளாக காண்பிக்கப்படுவதில்லையல்லவா?

  இன்றையதினம் நமக்குள்ளும் இந்த உணர்ச்சி, அதாவது முஸ்லிம்கள் நபி அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், எப்படி ஒரு ஆண்டவன், மக்கள் அனைவரும் ஒருகுலம் என்பதான தன்மை உடையவர்களாக இருக்கிறார்களோ, அதே போன்ற உணர்ச்சியும் கருத்தும் இன்று நமக்குள்ளும் தோன்றிவிட்டது. தவிரவும் இந்த மாதிரியான உணர்ச்சி என்பது இன்றைக்கு ஒரு ஃபேஷனாகவும் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன? நபியவர்கள் உபதேசம் அமலில் இருப்பதேயாகும்.

  அடுத்தாற்போல முகமது நபி அவர்கள் விக்கிரக ஆராதனையை அந்தக் காலத்திலேயே மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இதில் மிக வேகமாகவே போயிருக்கிறார். விக்கிரகத்தை முஸ்லீம்கள் தொழக்கூடாது. அப்படி விக்கிரகத்தை வணங்குகிறவன் முஸ்லீமே அல்ல என்று சொல்லி, அந்த அளவுக்கு அவர் உருவ வணக்கத்தைக் கண்டித்து, முஸ்லீம்களை வெறுக்கும்படிச் செய்துள்ளார். இதுவும் மிகவும் பாராட்டத்தக்க, போற்றத்தக்க காரியமாகும் என்பதோடு இவையெல்லாம் நம் மக்கள் பின்பற்றவேண்டிய ஒரு பெரிய படிப்பினை என்பேன். இந்தக் காரியங்களைத் தவிர மற்றும் மிக முக்கியமானதொன்றை நபி அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னவற்றிலே இது மிகவும் முக்கியமாய்க் கவனத்தில் வைக்கவேண்டிய காரியமாகும். என்ன? அவர் சொல்கிறார். நான் என்ன சொல்லியிருந்தாலும், அவற்றில் உனக்குச் சந்தேகம் இருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்! என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

  தோழர்களே! மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நபி அவர்கள், மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள்; மக்கள் சமுதாயம் ஒரே குலம்; உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக்கூடாது; நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

  கடைசியாக இன்னொன்றும் சொன்னார்; நான்தான் கடைசி நபி; எனக்குப் பின்னால் நபிகள் (தீர்க்கதரிசிகள்) தோன்றமாட்டார்கள் என்று. அதைப்பற்றி நீங்கள் எப்படிக் கருதினாலும், என்ன முடிவுக்கு வந்தாலும் இன்றைய வரையிலே அவருக்குப் பின்னால் இந்தத்துறைகளில் அவர் சொன்ன கொள்கை, கருத்துகளைவிட மேலானதாகச் சொல்வதற்கு ஒருவரும் தோன்றவே இல்லை. அந்த அளவுக்கு மனித சமுதாயத்தின் எல்லா வாழ்வுத்துறைத் தன்மைகள்பற்றியும் உயர்ந்த தத்துவங்கள் கொண்ட கோட்பாடுகள் சொல்லிவிட்டார் நபி அவர்கள்.

  ஏதோ பொருளாதாரத் துறையில் சில பெரியார்கள் சில நூறு வருடங்களுக்கு முன்தோன்றி, பல அரிய கருத்துகளை, பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில் சொல்லியிருக்கிறார்கள். தோழர் ஜீவானந்தம் அவர்கள், அதைப்பற்றியும்கூட நபி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். அது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது என்பதோடு, நபியவர்கள் சொன்னதற்கு மேலாக இதுவரை யாரும் எந்த ஆஸ்திகரும் சொல்லவில்லை.

  இந்த விழாவிலிருந்து நாம் என்ன பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நபி அவர்களின் இக் காரியங்களையும் கொள்கைகளையும் நம் மனதில் பதிய வைத்துக் கொண்டு, அந்தப்படி நடக்க நாமும் முயற்சி செய்யவேண்டும்.

  மற்றும் தங்கள் மத சம்பந்தமான கோட்பாடுகளில் முஸ்லீம்கள் மற்றவர்களையும் அழைத்து, மற்றவர்களுடைய பாராட்டைப் பெறவேண்டும் என்று கருதுகிறார்களோ, அதேபோல மற்ற மதக்காரர்களும் தங்கள் மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மற்றவர்களை அழைத்து அவர்களின் பாராட்டைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றத்திற்கு வழிதோன்றும்.

  20.12.53 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

 44. மதம் வேண்டுமானால்…. இஸ்லாத்தை தழுவுங்கள்…

  எனக்கு இந்தச் சர்க்காரைப் பற்றிக் கவலை இல்லை. வேறு எந்த சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்வது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்திரமல்ல, 50 வருஷம் ஆண்டாலும் கவலையில்லை. ஆனால், உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.

  உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்தக் கணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர், சண்டாளர் ஆகித் தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம் தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பது தான் கருத்து இந்த பிரிவுகளை நிலைநிறுத்துவதுதான் இந்த மதத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஆகும்.

  உங்களைப் பொருத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சிபாரிசு செய்கிறேன். பெளத்தர்களையும் பிற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத் தான் இன்றும் கருதப்படுகிறார்க்ள்.

  கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கை தான் கவலையே தான் தவிர, சுயமரியாதையில் கவலை கிடையாது.

  கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாமியர்களாகுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். மற்றபடி “மோட்சத்தில்”, “பாவமன்னிப்பிலோ” எந்த மதம் எப்படி இருந்தாலும் மனிதத் தன்மையில் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதந்தான் பறைத் தன்மையை ஒழிக்கிறது. பறை துலுக்கன், பறை முகம்மதியர் கிடையாது. பார்ப்பன முஸ்லிம் கிடையாது. மனித முஸ்லிம் தான் உண்டு.

  நீங்கள் அதில் விழுந்தாலொழிய 100 வருஷமானாலும் உங்கள் பறை தன்மை போகாது.

  தோழர்களே! !இவை என் அபிப்ராயம். இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்தி கொண்டு சிந்தித்து உங்களுக்கு சரியென்றபடி நடங்கள்.

  (ஆம்பூரில் 4.7.1937 அன்று நடைப்பெற்ற ஆதிதிராவிடர்கள் மகாநாட்டில் தந்தை பெரியார் சொற்பொழிவு. – ‘குடியரசு’ இதழ் 16.7.1937)

 45. முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?

  நீங்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும். உலகத்திலேயே அறிவுத் துறையில் நாம் மிகப் பின்னடைந்து இருக்கிறோம். சம்பாதிப்பதில் பிள்ளை பெறுவதில் மூட்டை கட்டுவதில் வேண்டுமானால் நீங்கள் புத்திசாலிகளாக இருக்கலாம். வெள்ளைக்காரன் இன்றைக்கு பகுத்தறிவுவாதியாக இருக்கிறானே, அதனாலே கடவுள் போய் விடுமென்று யாரும் பயப்பட வேண்டாம். அறிவுப்படி அவசியத்துக்கேற்ப சடங்கு முறையில் அவன் ஒரு கடவுளை வைத்திருக்கிறான். அதுபோல வேண்டுமானால், நீங்களும் வைத்துக் கொள்ளுங்கள். கிறித்துவர், முஸ்லிம்கள் தொழும் கடவுள், நம்பிக் கையை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கம், அருள், கருணை இவைகளை உடையது. அது தனக்கு என்று ஒன்றும் வேண்டாதது என்று அவன் சொல்லு கிறான். ஆனால், நீ என்ன சொல்லுகிறாய்? நெருப்புக் குச்சிகள் மாதிரி, செங்கல் மாதிரி லட்சம், பத்து லட்சக்கணக்கில் ஏராளமாக கடவுள்களை வைத்திருக்கிறாய். ரோடு ஓரத்தில் படுத்திருக்கும் குழவிக் கல்லை நிமிர்த்தி வைத்தால் அதைக் கடவுள் ஆக்கி விடுகிறாய்! மாட்டுச் சாணியை கொழுக்கட்டையாட்டம் பிடித்து வைத்தால் அது உன் கடவுள்! மைல்கல், ஃபர் லாங்குகல் எல்லாம் கூட கடவுள்கள் ஆக்கப்பட்டிருக்குமே, நாங்கள் இல்லா விட்டால்! முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?

  உன் கடவுளுக்கு பெண்டாட்டி, பிள்ளைக்குட்டிகள் திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை இத்தனையும் தேவைப்படுகிறதே? உன் கடவுள் என்றால் 1,000 முகமுடையாள், 2,000 கையுடையாள் என்று அளக்கிறான்! நாமும் மடப்பசங்கள் என்பதால் பார்ப்பான் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு உருவத்திற்கும் ஒவ்வொரு முட்டுக்கல் அடிக்கிறாங்களே, ஒண்ணும் வேண்டாதவர் கடவுள் என்றால் அவருக்கு மனைவி எதற்கு? திருமணம் எதற்கு? பிள்ளைக் குட்டிகள் எதற்கு? ஆறு வேளை பூசை எதற்கு? யாரும் கேட்பதில்லையே? வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் கட்டிக் கொண்டா அழுகிறான்? நீ என்ன அவனைவிட அறிவாளியா? உன் கடவுளுக்கு ஒழுக்கமிருக்கிறதா? 1,000 வைப்பாட்டிகளை வைத்திருந்தது என்று எழுதி வைத்திருக்கிறாயே, அந்தக் கடவுளுக்கு மானம் வேண்டாமா? உன் கடவுள்கள் சாகிறதே, பிறக்கிறதே! இப்படிப்பட்ட தன்மையில் நாம் இருக்கிறோம். உனக்கு என்னென்ன வேண்டுமோ, அதெல்லாம் கடவுளுக்கு வேண்டும் என்று சொல்லி விடுகிறாய். அவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம்.

  கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், வில்லும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாபுளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிப் பசங்க சங்கதி என்பதைத் தவிர வேறு என்ன? கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, கொள்ளை, கொலை இவ்வளவும் உன் கட வுளுக்கு தேவை. அப்புறம் திருட்டுப் பசங்களுக்கும், கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துப் பாருங்கள். நம் புத்தகங்களை விடுதலை பத்திரிகை முதலியன வற்றை படித்தால்தான் நீங்கள் பகுத்தறிவுவாதிகளாக ஆக முடியும். இந்தப் பார்ப்பானுங்க நடத்துகிற பத்திரிகைகளில் புராண, இதிகாச ஒழுக்கமற்ற ஆபாசக் கதைகளைத் திணித்து விஷமிட்டும், அதை நம்முடைய மனத்தில் புக வைத்து விடுவான். மற்றவர்கள் இக்கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். உயிருக்குத் துணிந்து இருக்கிற எங்களால்தான் இது போன்ற காரியங்களைச் செய்திட முடியும்.

  ——————
  முசிறியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – “விடுதலை” 20.9.1964

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *