இந்து மதத்தை கண்டிக்கும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை கண்டிப்பதில்லையே ஏன் என்று இந்துக்கள் கேட்டால், அதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாரிசுகள் சொல்வது என்ன தெரியுமா?
‘‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’
என்றுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே தவிர இந்துக் கடவுள்களை மட்டும் சொல்லவில்லை. இதில் வரும் ‘கடவுள்’ என்ற சொல் கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களையும் குறிக்கும் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வாசகம் இந்து மதத்திற்கு மட்டும்தான் என்பதை இவர்கள் மூடி மறைக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மறுப்பு வாதத்தை இந்து மதத்திற்கு மட்டும்தான் சொன்னாரே தவிர கிறிஸ்த, முஸ்லிம் மத கடவுள்களுக்காக அல்ல. கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறார். அந்த மதங்களைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் விமர்சனம் மிக மிக மிக சொற்பமே. அந்த சொற்ப விமர்சனமும்கூட அந்த மதத்தைக் கண்டிக்கும் விதமாக இல்லாமல் அறிவுரை கூறும் விதமாகவே இருக்கும். ஆனால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும்போது அறிவுரை கூறும் விதமாக இல்லாமல் கண்டிக்கும் விதமாக இருக்கும்.
கடவுள் மறுப்பு என்று வரும்போது கிறிஸ்துவ, முஸ்லிம் கடவுள்களுக்கு விதிவிலக்கு அளிப்பது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் போலி கடவுள் மறுப்பு கொள்கையைத்தானே காட்டுகிறது! ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானது என்பதற்கு இதோ ஆதாரங்கள்:-
16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.
25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதுகிறார்:-
‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.
23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-
புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.
21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-
‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’
26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’
26-12-1948 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (மகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).
31-12-1948 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-
‘‘… ஆனால் கிருஸ்துவையோ, மகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’
04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-
‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’
25-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’
இந்த ஆதாரங்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானவை என்பதைத்தானே காட்டுகிறது! கடவுளே இல்லை என்று சொல்கின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் அன்பான தெய்வமே கிறிஸ்து என்று சொல்லுகிறார் என்றால் அது போலி கடவுள் மறுப்புக் கொள்கையைத் தானே காட்டுகிறது! ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை இந்து மதத்திற்கு மட்டும்தான். அதுவும் போலி கடவுள் மறுப்புக் கொள்கைத்தான்.
இதிலே மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக பல இடங்களில் பேசியிருக்கிறார்; எழுதியும் இருக்கிறார்.
‘‘நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்பவேண்டாம் என்று சொல்லவும் இல்லை… அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை’’
(விடுதலை 10-09-1956)‘‘கடவுளைக் கும்பிடவேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளை கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை.’’
(விடுதலை 04-06-1959)கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரி கும்பீடு’’
(விடுதலை 04-05-1959)
இது போன்ற முரண்பட்ட கருத்துக்களை பல தடவை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியிருக்கிறார். கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஒரே கடவுளை கும்விடு; கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை என்று பல்டி அடித்து முரண்பட்டவாதமல்லவா?-இப்படி நாம் கூறும் போது இதற்கு பதிலாக பகுத்தறிவுவாதிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரே ஒரு கடவுளை கும்பிடு என்று சொன்னது ‘‘கடவுள் வேண்டும் என்று சொல்லுகின்ற, கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான்’’ என்று பகுத்தறிவுவாதிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த பதில்கூட பலமில்லாததுதான். ஏனென்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களாக்குவதுதானே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வேலை. அதைத்தானே அவர் செய்து வந்தது. அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி சாதியை ஒழிக்க வேண்டுமானால் பிராமணர்களை ஒழிக்கவேண்டும். பிராமணர்களை ஒழிக்க வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டும். மதத்தை ஒழிக்கவேண்டுமானால் கடவுளை ஒழிக்க வேண்டும். இப்படி கடவுளை ஒழித்தால்தான் எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்று சொல்கின்றபோது சிலருக்கு மட்டும் கடவுளை கும்பிடு என்று சொன்னால் அது தான் பகுத்தறிவா? அதுதான் கடவுள் மறுப்புக் கொள்கையா? இது முரண்பட்டவாதம்தானே!
கடவுள் வேண்டும் என்று சொல்கின்ற-கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான் என்பது சரி என்றால் சாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா? சாதியைவிட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றபோது சாதியை விடமுடியாதவர்களுக்கு மட்டும் சாதியை கடைபிடியுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு மூடத்தனமோ அதேபோலத்தான் கடவுள் இல்லை என்று சொல்கின்றபோது கடவுளை விடமுடியாதவர்களுக்கு மட்டும் கடவுளை கும்பிடுங்கள் என்று சொன்னால் அதுவும் பகுத்தறிவற்ற மூடத்தனம் ஆகும். ஆனால் இப்படி பகுத்தறிவற்ற முறையில் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தானே பகுத்தறிவு பகலவன் என்று சொல்லுகின்றார்கள் பகுத்தறிவுவாதிகள்!
— தொடரும்.
பகுத்தறிவுஇல்லை; பகுத்தறிவு இல்லை; பகுத்தறிவு இல்லை
பகுத்தறிவு கற்பித்தவன் முட்டாள்
பகுத்தறிவு பரப்பியவன் அயோக்கியன்
பகுத்தறிவு வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’
Tamilhindu a site site for tamil peoples…
tamilhindu nice site…
பெரியாரின் பல புத்தகங்களை படித்திருக்கிறேன் அப்போதும் சரி, இப்போதைய தி.க நடவடிக்கைகளையும் பார்க்கும் எனக்கு இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு மற்ற மதங்களில் உள்ள தவறுகளை இவர்கள் ஏன் சுட்டிக்காட்டுவதில்லை!!!!! சுட்டிக்காட்டியிருந்தால் என்னவாயிருக்கும்… ஏன் இவர்களுக்கு தைரியம் இல்லாமல் போனது… நூறு சதவீதம் தூய்மையான மதம் என்று எதுவும் கிடையாது.
உலகத்திலேயே யூதர்கள்தான் புத்திசாலிகள் என்று கூறுவார்கள் அது தவறு. உலகிலேயே மிக புத்திசாலிகள் தமிழ்நாட்டில் உள்ள பகுதறிவாளர்கள்தான். யாரைத்திட்டினால், யாரை விமர்சனம் செய்தால் திருப்பித்திட்ட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும் எனவே அவர்களை மட்டும்தான் திட்டுவார்கள்.
I have come across people who have argued that EVR did criticize other religions – he has said ‘parisuththa aaviyil idli veguma?’ ‘786 allavin kaidhi number-a?’. These are just one or two statements, but as this article says, his main target was only Hindus, brahmins and hindu gods. Why did you garland Pillayar with slippers and not Jesus? One of my friends said, he used Pillayar because he was very clever…if he had used a murugan or amman or a muneeswaran to garland with slippers he would have been killed, because till date the dravidian groups propagate that Pillayar is a north indian god. 🙂 hypocrites, they are….
Another friend of mine rightly pointed out that, EVR is the most blessed man, because he got the fortune of seeing temples and gods 24/7 throughout tamil nadu. ( he has statues in front of every temple in TN 🙂 ). Also, his followers themselves are not following him, because, he said there is no god and they made him to see the god throughout the state, by installing statues in front of every temple.
These souls are more blessed than an aasthiga, because an asthigan will think of god only for a few times, but these people take the name of god every now and then and remember him more than an asthiga. 🙂
Regards,
Satish
I am a regular reader of Tamil Hindu.
Periyar, as you mentioned Ee.Ve.Raa, is a reformer. Though he targeted only Hindu religion, that does not mean that he supports the rest. Remember, Buddha told that there is no GOD. But ironically, Buddha himself has been treated as a Disciple of GOD. That is the strength of our Religion / Culture.
Only Hinduism allows Criticism, and not the other Abrahamic religons. Though he hate Hindu religion and criticises, why don’t we consider him as a one who is necessary for cleaning the disease in Hinduism, esp Casteism and Untouchability? If these 2 are not there, then there would not be a person called Ee.Ve.Raa.
As far as I am concerned, I like Periyar as well as Hinduism and I take Periyar as a gift for Hinduism, who criticises and reform it.
Hope this will be published, if not moderated.
//….. Only Hinduism allows Criticism, and not the other Abrahamic religons. Though he hate Hindu religion and criticises, why don’t we consider him as a one who is necessary for cleaning the disease in Hinduism, esp Casteism and Untouchability? If these 2 are not there, then there would not be a person called Ee.Ve.Raa….//
EVR actually did not fight against Casteism and Untouchability.
He brought a facade of cleansing the society, but actually fought for his own development garnering other non-brahmin high castes playing out the dialogue written by evangelists. By so doing he made casteism and untouchability stronger than anytime. To cleanse the society from untouchability and casteism it is important to remove the strong cover put on it by this EVR.
So, it is important to know the difference between wheat from chaff, and caution the society from consuming the chaff.
May a thousand ma. venkatesan come to the fore to cleanse the window dressing social reformers.
பெரியார் என்ற பெயரில் அவர் செய்த கூத்துக்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரியும்..இதுவரை செவி வழிச் செய்திகளாகவே தெரிந்த அனைத்தையும் இன்று ஆதாரங்களுடன் அடுக்குகிறார் வெங்கடேசன் அவர்கள். அருமை.. இனியாவது அடுத்த தலைமுறை ராமசாமி நாயக்கரை பெரியார் என்றழைக்காதிருக்கட்டும்.
Mr.Subburayalu’s comments on “periyarin marupakkam-Bagam 7” is 100% correct. May his wishes come true with thousands & thousands of reformers come to the fore for a true social reformation.
cnu777
ஈ வெ ரா சீர்திருத்தவாதியா? பேஷ் பேஷ்? ஈ வெ ரா எழுதியது பேசியது அனைத்தையும் நீங்கள் ஒழுங்காக புரிந்து கொண்டு படித்திருந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள். ஈ வெ ரா பிராமணர்களின் வீடுகளைக் கொளுத்துங்கள், தீ வைத்து அழியுங்கள் என்கிறார். அப்படிச் சொல்பவர் என்னைப் பொருத்தவரை ஒரு கொலைகாரன், கொடூரமானவன் உங்களுக்கு அவர் சீர்திருத்தவாதியாகத் தெரிந்தால் உங்களிடம் ஏதோ பெரிய கோளாறு இருக்கிறது அல்லது உங்கள் அகராதியில் சீர்திருத்தம் என்றால் கொலை கொள்ளை என்று அர்த்தம் போலிருக்கிறது.
சரி ஈ வெ ரா ஜாதியை அகற்றப் போராடினார் என்று சொல்கிறீர்கள். ஆனால் அதே ஈ வெ ரா தலித் பெண்களை மிகக் கேவலமாகப் பேசியுள்ளார். படித்திருக்கிறீர்களா? மேலும் கீழ் வெண்மணியில் குடிசையில் எரித்துக் கொல்லப் பட்ட தலித்களைக் கொன்றது தனக்கு ஆதரவளித்த தன் ஜாதிக் காரன் என்பதினால் அதை ஆதரித்து எழுதியுள்ளார் படித்ததில்லையா?
ஏன் ஐயா அப்படி ஜாதி பார்க்காமல் இருந்திருந்தால் ஈ வெ ரா மடத்திற்கு மடாதிபதியாக வீரமணி எனப்படும் சாரங்கபாணிக் கோனாரை அமர்த்த வேண்டும்? பதில் சொல்லுங்கள் ஏன் ஒரு தலித்தை அவருக்கு வாரிசாக நியமிக்கவில்லை?
இவர் ஹிந்துமதத்தை மட்டும் குறிபார்த்துத் தாக்கியதற்கு சர்ச்சுகளின் நிதியுதவியும் ஆதரவும் இருந்தது. இன்றைய ஈ வெ ரா மடத்தின் சொத்துக்கள் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் எங்கிருந்து இவ்வளவு பணம் குவிந்தது சொல்ல முடியுமா? கூட்டங்களில் உண்டியல் குலுக்கி ஈ வெ ரா காலத்திலே 500 கோடி வரை சொத்து சேர்ந்ததா? எப்படி இவ்வளவு பணம் வந்தது? எங்கிருந்து வந்தது? சொல்ல முடியுமா? கிறிஸ்த்துவ மிஷநரிகளின் ஏவிவிடப் பட்ட ஒரு கூலிக் கிரிமினலைப் போய் சீர்திருத்தவாதி என்கிறீர்களே அடுக்குமா? இதில் இந்து மதம் பிடிக்கும் என்ற பீலா வேறு. உங்களுக்கு இந்து மதத்தையும் தெரியவில்லை, ஈ வெ ராவையும் தெரியவில்லை அதுதான் உண்மை. முதலில் ஒழுங்காக ஈ வெ ரா இன்று வரை பேசியது எழுதியதை அனைத்தையும் படிய்ங்கள் புத்தி இருந்தால் தானாகவே புரிய வரும். பகுத்தறிவு என்பது ஈ வெ ரா வின் மோசடிகளைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது
இன்று தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான புத்தி கெட்ட ஜென்மங்கள் அறிவிலிகள் பகுத்தறிவு அற்றவர்கள் ஈ வெ ராவினால் மட்டும்தான் தங்களுக்கு சுயமரியாதை, ரிசர்வேஷன் முன்னேற்றம் எல்லாம் வந்தது என்று நினைத்துக் கொண்டு திரிகிறார்கள். கேரளத்தில் ஈழவர்களுக்கும், கர்நாடகாவில் கவுடாக்களுக்கும், ஆந்திராவில் ரெட்டிகளுக்கும் எந்த ஈ வெ ரா வந்து சுயமரியாதை சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு வளர்ச்சி வந்தது? கொஞ்சமாவது மூளை வழியாக யோசிக்கப் பழகுங்கள்
விஸ்வாமித்ரா
விஸ்வாமித்ரா,
நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எனக்கு அவர் சீர்திருத்தவாதியாகத்தான் தெரிகிறார்.
உங்களின் மற்ற கேள்விக்கு, வரலாறு தெரியாததால் என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை. அதற்காக, நீங்கள் சொன்னதை உண்மையென்று சொல்லவில்லை.
//ஏன் ஐயா அப்படி ஜாதி பார்க்காமல் இருந்திருந்தால் ஈ வெ ரா மடத்திற்கு மடாதிபதியாக வீரமணி எனப்படும் சாரங்கபாணிக் கோனாரை அமர்த்த வேண்டும்? பதில் சொல்லுங்கள் ஏன் ஒரு தலித்தை அவருக்கு வாரிசாக நியமிக்கவில்லை?//
ஜாதி வேண்டுமென்று நினைத்தால் தான் ஜாதி பார்த்து நியமிக்க வேண்டும் (வீரமணி ஒன்றும் நேர்மையானவர் இல்லை தான்). வீரமணியை தவிற யாரை நியமித்தாலும், அவர்களுக்கென்று ஒரு ஜாதி இருக்கும். முதலியாரை நியமித்தால் “ஏன் முதலியாரை நியமிக வேண்டும்?” என்பீர்கள். பிள்ளையை நியமித்தால் “ஏன் பிள்ளையை நியமிக வேண்டும்?” என்பீர்கள்.
//இதில் இந்து மதம் பிடிக்கும் என்ற பீலா வேறு. உங்களுக்கு இந்து மதத்தையும் தெரியவில்லை, ஈ வெ ராவையும் தெரியவில்லை அதுதான் உண்மை.//
போயும் போயும், உங்களிடமிருந்து எனக்கு எந்த சர்டிபிகேடும் எனக்கு தேவையில்லை.
//முதலில் ஒழுங்காக ஈ வெ ரா இன்று வரை பேசியது எழுதியதை அனைத்தையும் படிய்ங்கள் புத்தி இருந்தால் தானாகவே புரிய வரும். பகுத்தறிவு என்பது ஈ வெ ரா வின் மோசடிகளைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது//
இதிலிருந்து, உங்கள் புத்தியை விட என் புத்தி மேலாகவே இருக்கும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. உங்களை போன்றவர்களுக்கு தான் பகுத்தறிவுக்கு விளக்கம் தெரியவில்லை. நான் கூறியது சரி தான் என்று இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
//இன்று தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான புத்தி கெட்ட ஜென்மங்கள் அறிவிலிகள் பகுத்தறிவு அற்றவர்கள்//
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
subburayalu,
//By so doing he made casteism and untouchability stronger than anytime. To cleanse the society from untouchability and casteism it is important to remove the strong cover put on it by this EVR.//
உங்களை போன்ற நல்லவர்கள் இருந்திருந்தால், பெரியார் என்ற ஒருவரே தேவைப்பட்டிருக்க மாட்டாரே? நீங்கள் பெரியார் காலத்தில் இல்லாதது இந்து மதத்திற்கு இழப்பாகும் 😉
//………..உங்களை போன்ற நல்லவர்கள் இருந்திருந்தால், பெரியார் என்ற ஒருவரே தேவைப்பட்டிருக்க மாட்டாரே? நீங்கள் பெரியார் காலத்தில் இல்லாதது இந்து மதத்திற்கு இழப்பாகும் ;)………..//
There are far more good and honest people in EVR’s period than now.
But, if we are not ready to question the propaganda engulfing us, we will never be able to see the truth.
Dear Mr. ,
//…….. நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எனக்கு அவர் சீர்திருத்தவாதியாகத்தான் தெரிகிறார். …… //
Please tell us at least one act of Mr. EVR that has resolved a social evil.
Everyone would agree the so called Social Reformer EVR is a naidu or a naicker and his family roots from Balija Naidu community. He belonged to the group that started the aryan / dravidian myth. But do you know that this so called Social Reformer EVR communities roots itself is an Aryan and his origins are from North India.
Here comes the evidence from Wikipedia – https://en.wikipedia.org/wiki/Balija
– Balija is a sub caste of the Kapu or Naidu caste of Andhra Pradesh.
– The caste title of the Kapus, Naidu, which is a derivation of the word Nayaka (meaning “leader”),
– The Balija Sub-Caste is Classified as an O.C (Forward Caste) by the Government of Andhra Pradesh.
– Kapus were the earliest inhabitants of the Deccan region, people who migrated from the north, cleared forests for agriculture and built settlements.
– Kapu are the descendants of the Kaampu tribe, an Indo-Aryan tribe, which migrated from Kampilya, Mithila and Ayodhya, ancient cities situated in the Gangetic Plains of North India
With all these in mind… What to you call people who spit on themsleves ?
AriyaVisuvasi has wrongly assumed that EVR belonged to Balija Naidu community.Balija Naidus are telugu speakers..EVR belonged to Naicker community speaking kannada.
Mr. Subburayalu,
I feel the lifestyle of Dalits’ in TN is far better than those are in other parts of India. You can see a quite number of Dalits in sectors of Government (of course, these people are still ill-treated by other upper caste Hindus and Christians). Hope you will not oppose this.
Cheenu.
SONTHAMAGA YOSI
UNNAI NESI
UNMAI PURIUM
Dear Cheenu sir,
//……………..I feel the lifestyle of Dalits’ in TN is far better than those are in other parts of India. You can see a quite number of Dalits in sectors of Government (of course, these people are still ill-treated by other upper caste Hindus and Christians). Hope you will not oppose this………//
Yes. What you say is the common conception, but this is a perception that comes out of propagation rather than facts. There is no official or reliable source to prove that the number of dalits in the govt sector of tamilnadu is the highest in India.
May be, I can recommend the following books for every tamilian who is interested in the Dalit upliftment:
Dalits in Dravidian Land – Frontline reports on anti-Dalit violence in Tamil Nadu (1995 – 2004) by S. Viswanathan, ; Navayana Publishing, Pondicherry, 2005; pages 318, Rs. 300.
Untouchable Citizens – Dalit Movements and Democratisation in Tamil Nadu by Hugo Gorringe, Sage Publications, New Delhi, 2005; pages 397, Rs. 750.
The review of the books are available online at:
https://www.flonnet.com/fl2223/stories/20051118000407000.htm
“
Dear Cheenu Sir,
I am providing the starting lines of the relevant chapter of “Tamilnadu Social Development Report 2000” here ..
DALITS & EMPLOYMENT IN TAMILNADU
Representation in State Services
The shockingly low levels of representation of dalits in State
Government’s services and jobs have become a serious
point of contention of late. The higher the levels, the lower
and insignificant are their shares, vis-à-vis their rightful due.
In the Government services alone, in Tamilnadu, there are
about 13 lakhs employees. Given the 19% share of the
dalits, there should be more than 2.5 lakhs dalit employees
at all the levels and services of the Government.
The actual positions occupied by dalits, as per the 1981
Census, was much lower:
Class I: 6.0%
Class II: 13.5%
Class III: 11.9%
Class IV: 15.7%
….
The complete report is available online at: “https://www.swtn.org/publications/7.a.Dalits_in_Tamilnadu.pdf”.
Please refer to it.
சுப்பராயலு சார்,
சரியாக புள்ளிவிவரங்களை அருமையாகத் தந்திருக்கிறீர்கள்.. சொல்லப் போனால் தமிழக தலித்கள் நிலைமை பிற்போக்கு மாநிலங்கள் என்று கருதப் படும் உ.பி, பீகாரை விட மோசமாக இருக்கின்றது… இதற்கு காரணம் பெரியார் என்று தலித் ஆய்வாளர் சந்திரபான் பிரசாத் அவர்களே எழுதியுள்ளார்.
இது பற்றிய எனது பதிவு:
“தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்” – தலித் தலைவர் சந்திரபான் பிரசாத்
https://jataayu.blogspot.com/2007/10/blog-post_6191.html
In India most of the people did,t know about Periyar and Dr.Ambedkar. All are try to konw about their life and all the history.
Please Don,t flame about Periyar. In this world nobody equal to Periyar and Dr.Ambedkar
சாதரணக் கல் , கடவுள் என்றால் சிந்திக்காமல் , சிரிக்காமல் நம்பிய மடையர்களை இன்று எந்த சமயமும் (இந்து மதம் உட்பட ) முழுவதும் துய்மை இல்லை என்று ஆராய வைத்த நம் பெரியார் பற்றி வெங்கடேசன் எழுதிய பதிவு பெரியாரின் முழு கருத்தைக் கூறாமல் மிக சில வரிகளை மட்டும் உள்ளடக்கயுள்ளது . பெரியார் இந்து மதக் குறைகளை சொன்னால் இவர்கள் பெரியாரை இகழ்வார்கள். அனால் பெரியார் மற்ற மதக் குறைகளை சொன்னால் , பெரியார் அந்த மதத்தை சார்ந்தவர் அல்லது அம மதத்திற்கு அறிவுரை கூறுகிறார் என்று கூறி ஆதாயம் தேடுவார்கள். இது வடிவேலு நகைசுவை போல் “உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னி” இருக்கிறதல்லவா?. இவர்கள் மேல் பெரிய தவறு ஒன்றும் கூற இயலாது, மூவாயிரம் ஆண்டுகள் இரத்தத்தில் ஊரிய பண்பு , மரபணுக்களை மற்றம் செய்து உள்ளது அவ்வளவுதான். கன்னி மாதாவின் மகன் ஏசு என்றால் மாதாவை ஏன் கன்னி மாதா என்று கூறுகிறாய் என்று கேட்டவர் பெரியார். 756 என்ற எண் என்ன அல்லாவின் விலாசமா ? என்று கேட்டவர் அதே பெரியார் தான் . பாப்பான் மட்டுமே தொடும் (அதை புஜை என்று கூறி ) ஒரு கல் பகவான் விஷ்ணு , மகாகணபதி , அருள்மிகு …. என்றெல்லாம் மாறும் போது , ” எதை ஒன்றையும் பகுத்தறிந்து யோசி ” என்று நமக்கு உணர்த்திய ஈ.வே. ராமசாமி அவர்கள் தந்தை பெரியார் , பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படுவதால் உங்கள் நாக்கு அழுகி விடாது நண்பர்களே. பெரியார் கருத்துகளை ஆராயுங்கள் தவறில்லை , ஆனால் அதை கொச்சை செய்ய உங்கள் தான் தோன்றித்தனமான கற்பனையை பயன்படுத்தாதீர் .
Some people above compared EVR with Buddha and Mahavira. I would say this:- What an insult to those two glorious figures! EVR’s statements and comments were filthy and venomous to Hinduism. While I don’t condemn some of his attacks on the Brahmins (I would like to say I am a Brahmin, but still I would say this), because some Brahmins are still following those evils, but I strongly oppose and condemn him for having insulted the noble and harmless religion called Hinduism. Where was Periyar’s guts when a Muslim wrote a book stating Qur’an is superior to Thriukkural? All hell would have cut loose if a Hindu had written anything so (though they would never write such things). Can you show me one place where Buddha insulted someone? How can that Godman be compared to EVR? Buddha is really great! Recently, our CM said Swami Vivekananda was a rationalist who had echoed Periyar’s teachings. Well, this is the greatest insult to Swami Vivekananda. He was a true rationalist, and that is why the young rational Narendranath Dutta later became Swami Vivekananda. As far as our paguthharivalargal are concerned, whoever true rationalists were there, all were Periyar.
My sincere and hearty wishes to Shri.M.Venkatesan for bringing out the truth. Don’t worry Sir, all Hindus are not Brahmin supremacists. There have been great people like Azhwars, Nayanmars, Ramanuja, Chaitanya, Ramananda, Vallalar, Vivekananda, and now ISKCON.
Continue the good work!
Dear Raj,
Don’t compare Dr.Ambedkar with Periyar. Dr.Ambedkar was a real genius. He was well educated, and was a true rationalist (unlike EVR). He never believed colonial myths like Aryan/Dravidian divide like Periyar did. Periyar founded the Dravidian movement (which was totally based on the nonsense spread by the British). I am providing a refutation of Dr.Ambedkar to the Aryan/Dravidian divide:-
Dr.Bhimarao Ramji Ambedkar, who is considered to be the Godfather of the downtrodden thoroughly rejected the Aryan/Dravidian racial myth. It was nothing but a Colonial propaganda by the British to rule India and also to spread Christianity. See his “Who were the Shudras?”. Dr.Ambedkar points out to Rig Veda (6.22.10) which states that the Dasyus (the so-called Dravidians) being transformed as Aryans, and also Rig Veda (10.49.3) which states that bad Aryans being degraded as Dasyus. Thus Dr.Ambedkar himself showed that the terms ‘Aryan’ and ‘Dasyu’ were not racial. Further he states that such racial translations and interpretations of Prof.Max Muller and Ralph Griffith are ‘childish’. (Who were the Shudras?, Chapter-4). Some other points from Dr.Ambedkar’s works:-
1. The Vedas don’t mention ‘Aryan’ as a race.
2. The Vedas do not mention anything like an ‘Aryan invasion’ on the ‘native Dasyus’.
3. There is no proof in the Vedas to say that the words ‘Aryan’ and ‘Dasyu’ were racial!
4. The Vedas do not mention anything that the so-called Aryans had a different complexion from the Dasyus.
He further shows Rig Veda (6.22.10) which says “Oh Indra! You transformed evil people into good ones, and Dasyus into Aryas with your grace. Similarly help us to win over our enemies”. It must be noted here that Dr.Ambedkar learnt the Vedas in a critical perspective. In a devotional perspective, Sri Aurobindo says that the Aryan/Dravidian racial theory was nothing but a “Philological myth”.
Dr.Ambedkar further says:- “The word ‘Aryan’ is just for respect, and not for a race. What the Colonial Indologists have suggested is not true. It has not been proved at all. The supposed Invasion is a myth. It is neither proved that the ‘Aryans’ came from outside, nor the ‘Dasyus’ were indigenous people!”.
Now tell me, can’t you differentiate the rationality of Dr.Ambedkar and Periyar? Moreover, Dr.Ambedkar encouraged conversion of Hindus to Buddhism, and not Christianity or Islam, but Periyar? If you compare the two, I feel it is a gross insult to the genius of Dr.Ambedkar..
தோழர் சத்திய மூர்த்தி (முதலில் ‘திராவிடனுக்கு ஏன் ‘ஆரிய’ பெயர்?) நமது மொட்டை பகுத்தறிவாளர்களை போலவே ‘பகுத்தறிவு’ என்ற முகமூடியை போட்டுக்கொண்டு மூடத்தனத்தைதான் வெளிப்படுத்துகிறார். அவரின் ‘மேலான’ கருத்துக்களை ஒவ்வொன்றாக வீழ்த்திக்காட்டுகிறேன்.
முதலில், அவரும் மற்றவர்களும் சொல்வது போல இந்துக்கள் வெறும் கல்லை ஒன்றும் கடவுள் என்று சொல்லவில்லை. இந்துக்களின் மிகப்பெரிய நூற்களான வேதங்கள் இறைவனை இருவிதமாக வழிபடலாம் என்று கூறுகிறது. ஒன்று சகுண ப்ரஹ்மம், அதாவது உருவம் மற்றும் குணங்கள் நிறைந்த கடவுள். இதுதான் இன்று நீங்கள் ஆலயங்களில் காணும் விக்ரக வழிப்பாடு. மற்றொன்று நிர்குண ப்ரஹ்மம், அதாவது உருவம் மற்றும் குணங்கள் இல்லாத இறைவன். ஆக, பகுத்தறிவான மதங்கள் என்று பெரியாரும், நமது சந்தர்பவாதிகளும் கூச்சல் போடும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஏன் அதினினும் பழமையான யூதமதத்திற்கு முன்பே இந்துக்கள் உருவம் அற்ற கடவுளை வழிபடத்துவங்கிவிட்டனர். நாள் போக்கில், நிர்குண ப்ரஹ்மதை மறந்து, சகுண ப்ரஹ்மதை வணங்கத்துவங்கிவிட்டார்கள்!
இன்றும், அத்வைத வாதத்தை கடைபிடிப்பவர்கள், உருவமற்ற கடவுளைத்தான் வணங்குகிறார்கள். அடுத்ததாக அவர் என்னமோ திரு.வெங்கடேசன் பெரியாரின் முழு ‘கருத்துக்களை’ சொல்லாமல் சிலவற்றை மட்டும் சித்தரித்துக்கட்டுவதாக பழி கூறினார். நான் கேட்கிறேன், உங்கள் பெரியாரும் அப்படித்தானே! வேதங்களும் புராணங்களும் உண்மையில் என்ன கூறுகின்றன என்பதைக்கேட்காமல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒன்று இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்து மதமே போலி என்று கூறுவதுதான் நீங்கள் சொல்லும் பகுத்தறிவா? அவர் சொன்னார் “பெரியார் இந்து மதக் குறைகளை சொன்னால் இவர்கள் பெரியாரை இகழ்வார்கள். அனால் பெரியார் மற்ற மதக் குறைகளை சொன்னால் , பெரியார் அந்த மதத்தை சார்ந்தவர் அல்லது அம மதத்திற்கு அறிவுரை கூறுகிறார் என்று கூறி ஆதாயம் தேடுவார்கள்” என்று. ஒரு மதத்தின் குறைகளை சொன்னால், எப்படி அவர் அந்த மதத்தை சார்ந்தவர் என்று சொல்ல இயலும்? பெரியார் தன் காலம் முழுவதும் இந்து மதத்தை இழிவு படுத்துவதில் தானே கழித்தார்? அபூது, அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்ற சொல்லுகிறோம்? இதுதான் நீங்கள் சொன்ன பகுத்தறிவா? உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள், கிறிஸ்தவமோ இஸ்லாமிய மதங்களைப்பற்றி விமர்சித்தல், என்ன நடக்கும் என்பது பெரியாருக்கும் அவரது தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும், எனவே பேசவில்லை. இது வடிவேல் சொல்வது போல “அங்க என்னப்போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க, அங்க எல்லாம் சும்மா இருந்துட்டு, நாளைக்கு சாகப்போற கெழவிய போட்டுத்தல்றேங்கிரியே, வெக்கமா இல்லே?” என்பது போல உள்ளது. எங்களுக்கும் சினிமா தெரியும் அய்யா!
இந்து மதத்தை என்ன சொன்னாலும், ஒன்னும் பேசமாட்டார்கள் என்ற கோழைத்தனம் தானே தவிர, இதில் பகுத்தறிவு எங்கே? மரபணுக்களை பற்றிப்பேசி அவருக்கு மிகவும் பிடித்தமான போலியான ஆரிய/திராவிட இன பேதத்தை பற்றியும் பேசுகிறார்! பெரியார் கிறிஸ்தவ மதத்தை கேலி செய்தாரா? இதென்ன புதுக்கதை? நான் கேட்கட்டுமா? ஜான் 3:16 கூறுகிறது “ஆண்டவர் பூமியை மிகவும் நேசித்தால், அவரது ‘ஒரே’ மகனைத்தந்தார்”. இதையே கிறிஸ்தவர்கள் அவர்கள் மதம் மட்டும் தான் உண்மை என்பதுபோல பேசுகிறார்கள். இறைவனுக்கு ஒரு மகன்தானா? ஏன், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டாரா? இன்னொரு மகன் இல்லையா? இதையெல்லாம் கேட்டிருந்தால், பெரியார் இன்மயிலயே பகுத்தறிவாளர் என்று நானே ஒப்புக்கொள்வேன்! நீங்கள் கூறியது போல இஸ்லாமியர்களின் புனித என்ன 756 அல்ல, அது 786. வெளியில் சொல்லிவிடாதீர்கள்! சிரிப்பார்கள்…
நீங்களும் இந்து மதத்தை ஆராயுங்கள் தவறில்லை, ஆனால் கொச்சை படுத்தாதீர்கள். ஒரு ‘தலைவர்’ இன் சொற்களே இவ்வளவு மதிப்பு என்று நீங்கள் சொல்லும்போது, ஒரு மதத்தின் வாக்கு எவ்வளவு மதிக்கவேண்டும். ஆனால், நீங்களும் உங்கள் தலைவரும் பேசியதை சற்றே யோசித்துப்பாருங்கள்!
பெரியார் பகுத்தறிவு பகலவன் என்றால், அப்பொழுது விவேகானந்தர், வோல்டைர், மற்றும் விஞ்ஞானிகளை எல்லாம், என்னவென்று கூறுவீர்கள்??
கவியரசர் கண்ணதாசன் தனது “அர்த்தமுள்ள இந்து மதத்தில்” சொல்கிறார் உலகில் உள்ள அனைத்து மக்களுமே பகுத்தறிவாளர்கள் தானே! மனிதனையும் மிருகத்தையும் வேறு படுத்தும் ஆறாவது அறிவு தான் பகுத்தறிவு, தோழரே. இதற்காக என்ன தனி ஒரு கூட்டம் கழகம் எல்லாம்? கவியரசர் மேலும் சொல்கிறார்:- திருநீறு பூசுபவனும், கோவிலுக்கு செல்பவனும் பகுத்தறிவாளன் இல்லை என்றல், தலைவனுக்காக காரணமே இல்லாமல் தொண்டை கிழிய கத்துபவனும் அதே வகை தான்!”
ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்:- பகவான் புத்தர் சொல்கிறார்:- “எந்த நூலில் எழுதியிருந்தாலும் சரி, யார் சொன்னாலும் சரி, உன் பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லையென்றால், ஏற்றுக்கொள்ளாதே!” ஆசார்யர் ஆதி சங்கரர் தங்கள் ப்ரஹ்மஸுத்ர பாஷ்யத்தில் கூறுகிறார்:- “ஒருவன் சொல்லும் கருத்தை அடுத்தவன் முறியடிப்பான், அவன் சொல்வதை இன்னொருவன் நிராகரிப்பான். ‘நெருப்பு சூடு’ என்பதைப்போல் இருக்கும் கருத்தைத்தான் ஒருவராலும் நிராகரிக்க முடியாது”. இது பகுத்தறிவா இல்லை ஒரு மதத்தினர் கொடுத்த காசுக்காக இன்னொரு மதத்தை அடி ஆட்கள் வைத்து அடித்தும், பயித்தியக்கரத்தனமான வகையில் பேசுவதும் பகுத்தறிவா????
உங்கள் காலம் முடியப்போகிறது தோழரே! இனி உள்ள பகுத்தறிவு தாசர்களை, புதிய இந்து சமூகம், புறமுதுகு காட்டி ஓட வைக்கும். இது சத்தியம்!
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்!!!
ஜெய் ஹிந்த்….
திரு.வள்ளுவன் கூரியுள்ளது நூற்றுக்கு நூறு சரியே. பெரியாரின் பகுத்தறிவு என்பது – (பணம்)படைத்தவர்களின் அருளுக்காக ஏங்கிய பக்தி நெறியாகும். அவர் துவக்கிய இயக்கம் மத புரட்சியோ அல்லது சமுதாய புரட்சியோ அல்ல. பித்தலாட்டம். கடவுள் மறுப்பு மற்றும் விக்ரக வழிபாடு முட்டாள்தனம் போன்றவைதான் அவர் கொள்கை என்றால் அவர் எப்படி ஒரு பிள்ளையார் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருக்கமுடிந்தது??? யாரும் அறியாவண்ணம் ராஜாஜியுடன் திருவண்ணாமலையில் அண்ணாமலை கோவிலுக்குள் புகுந்துக்கொண்டு நகம்மையை மணம் முடிக்க ஆலோசிக்கமுடிந்தது???? ஈ.வே.ரா. கிருத்தவர்களின் அடிமை. அவர்கள் போட்ட தாளத்திற்கு இவர் ஆடினார் என்பதுதான் உண்மை. கி.பி.1545ல் இந்தியா ஒரு ஆன்மீக நாடு. ஆன்மீகத்தையும் பக்தியையும் பிராமணர்கள் மக்கள் மத்தியில் மிக ஆழமாக் ஊன்றியிருக்கிறாகள். அவர்களுக்குள் ஜாதி வேறுபாடு(தொழில் ரீதியாக) இருந்தாலும் சமூகத்தில் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆகவே நாம் இந்தியாவை(அன்றைய பாரதத்தை) நமது ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டுமானால் முதலில் இவர்கள் ஒற்றுமையை ஒழிக்கவேண்டும். அதற்கு முதலில் ஜாதி துவேஷத்தை கிளப்பவேண்டும். அதை அடைய பிராமணர்களை அடக்கி அவர்களை சமுதாயத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்றும் அதற்கு லண்டன் அரசிடமிருந்து அனுமதி வேண்டும் என்று கோவாவில் இருந்த அன்றைய வைசிராய் கேட்டான். அனுமதி கிடைத்து. கிருத்தவர்களின் வெறியாட்டம் தொடங்கியது. பிராமணர்கள் கொடுமைப் படுத்தபட்டார்கள். பிராமண பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். கோவில்கள் அழிக்கப்பட்டது. அவர்களுடைய குள்ளநரித்தனம் வெற்றி கண்டது. அவர்களுடைய மதமாற்று பேயாட்டம் தொடங்கியது. அவர்களின் அடிச்சுவற்றை பின் பற்றித்தான் ஈ.வே.ரா.வும் தன் இயக்கத்தை ஆரம்பித்தார். அவர்கள் பாணியிலேயே பிராமண விரோத கொள்கையை கடைப்பிடித்தார். ஈ.வே.ரா. உண்மையிலேயே சமூக சீர்த்திருத்தவாதியாக இருந்திருந்தால் ஜாதியே கிடையாது என்றல்லவா முழங்கியிருக்கவேண்டும்? அந்த கிராதக கிருத்துவர்களின் தூண்டுதலால்தான் இவர் திராவி கழகத்தையே ஆரம்பித்தார். கிருத்துவ அரசும் அவருக்கு கோடி கோடியாக பணத்தை வாரி வழங்கியது. அதைத்தான் வீரமணி அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஈ.வே.ரா தமிழர்களை காட்டுமிராண்டி என்றார். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார். ஆனால் தமிழின தலைவர்கள் அவரை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். ஏன்?? இன்றைய ஆட்சியாளர்கள் ஈ.வே.ரா. காட்டிய வழி படிப்பறிவற்ற பாமர மக்களை சுலபமாக ஏமாற்ற முடிகிறது. அதை வைத்து இவர்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற வழியாக உள்ளது என்பதால்தான். சுதந்திர போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்துக்கொண்டிருக்கும்போது 1920 ல் இவர் சேலம் மகாநாட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம். அப்படியே சுதந்திரம் கொடுக்கவேண்டி வந்தாலும் தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் வேண்டாம். தமிழகம் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் என்று அடிமை சாசன தீர்மானம் இயற்றியவர்தானே இந்த இந்து விரோத சீர்த்திருத்தவாதி!!!!!! அவருடைய சிஷ்யகோடிகள் கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்ததை காப்பாற்றிக்கொள்ளத்தான் “பகுத்தறிவு” கோஷத்தை இன்னகும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஈ.வே,ரா.வும் அவர் சிஷ்யகோடிகளும் சீர்த்திருத்தவாதிகள் அல்ல — சீர்த்திருத்த விரோதிகள். இவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் காலம் வந்துவிட்டது. அன்று ஈ.வே.ரா எனக்கு முட்டாள்கள்தான் தேவை. படித்தவர்கள் இந்த இயக்கத்திற்கு வேண்டாம் என்றார். அன்று படிக்காத முட்டாள்களின் சந்ததிகள் இன்று படித்து முன்னேறிவிட்டனர். சாயம் வெளுத்துவிட்டது. இந்துக்களின் ஒற்றுமை மீண்டும் துளிர்விட ஆரம்பித்துவிட்டது.
திரு ,கிருஸ்ணசாமி சொல்வது மிகச்சரியான கருத்து.ஈவெராக்கு என்றுமே தேச பக்தி இருந்தது இல்லை ,இவர் தன்னுடைய காலம் முழுவதும் வெள்ளைக்காரனின் அடிவருடியாகவே இருந்தார் .கிருத்தவ ,முஸ்லிம்களின் கைக்கூலியை போல் செயல்பட்டார் .இன்று தமிழ் மக்களால் அறிங்கர் என்று புகழப்படும் அண்ணாதுரை இவரின் சுயரூபம் தெரிந்து தான் இவரை விட்டு விலகினார் .கர்நாடக மாநிலக்கன்னடக்காரரான ராமசாமிநாயக்கர் உண்மையில் ஒரு உயர் சாதி இந்து ஆவார் .உள்ளூர் பிராமணர்களிடம் ஏற்ப்பட்ட பிணக்கால் இவர் பிராமண விரோதியானார் .மற்றபடி இவருக்கு சமூக முன்னேற்றம் என்பதெல்லாம் கிடையாது .இவர் பெரிய தலைவரானது ஒரு விபத்து போல் தற்செயலானது …..
திருமிகு சீனு அவர்களே! இந்தப் பகுதியில் வந்த விமரிசனங்களில் எந்த வாதத் தரப்பு சரியானது என்கிற போட்டியெல்லாம் தேவையே இல்லாதவை என்றாலும் இது, “எது சரி?” என்று தேடி அறியும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கி இருக்கிறது என்கிற அளவில் வரவேற்கத் தக்கதே. சரியான முறையில் ஹிந்து (உங்கள்) சமயத்தைத் தெரிந்து கொள்ள சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். இதைச் சொல்வதால் மற்ற ஞானிகளை நிராகரிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எல்லோரும் உயர்ந்தவர்களே. ஆனால் எல்லோரையும் படிப்பது சற்றுச் சிரமம். மகான்களில் யாரோ ஒருவரின் தொடர்பால் உண்மையை அறிந்துகொள்ள முடியும். அந்த அடிப்படையில் சுவாமி விவேகானந்தரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதன் மூலம் சரியான ஹிந்து சமயம் புரிய வரும்.
கடவுள் மறுப்பு என்கிற தவறான பாதையில் காலடி வைக்காமலேயே சமூக ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தவர்கள் பலர். உண்மையில் கடவுள் மறுப்பு என்பது கடுகளவு கூட சாதீயத்தை ஒழிக்க உதவவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி அவர்களை விமரிசிப்பது நம் நோக்கமல்ல. கடவுள் மறுப்பு கூட அறியாமை தான். ஆனால் அந்த அறியாமைக் கொள்கையை அசிங்கமான முறைகளில் கடுமையான
சொற்களோடு வெளிப்படுத்தியது நிச்சயம் நல்ல செயலே அல்ல. ஹிந்து சமய நூல்களின்படி நடைபெறாத ஒரு சமயச் சார்பற்ற அரசு ஹிந்து சமயத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஜாதீய முறைப் பிரிவுகளின்படி மக்களைப் பிளவு படுத்தி நிர்வகிப்பது சரியல்ல என்பதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
ஒரு சராசரி இந்தியர் ஹிந்துவாக இருக்கவேண்டும் என்றோ அந்த வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்றோ அப்படிப் பின்பற்றுபவர்களுக்குத் தான் அரசுப்பணி அல்லது அரசுத் திட்டப் பயன்கள் சென்று சேரும் என்றோ சட்ட திட்டங்கள் இல்லாத போது, அந்த சமயத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஜாதியை இன்னும் அரசு ஏன் கட்டியழ வேண்டும்? யோசியுங்கள்.
உலகின் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு மொழி பேசுபவரும் கடவுள் என்கிற கருத்தை ஏதோ ஒரு குறி, கொள்கை, உருவம், பெயர் என்கிற வகைகளில் கொண்டிருக்கும்போது, ஏதோ தமிழ் பேசிய மக்கள் மட்டும் தான் ஆரியர்கள் எனப்படும் பிரிவினரால் மூடப் பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுத்தப் பட்டார்களா என்ன? உலகமெல்லாம் ஏதோ ஒன்றைக் கடவுள் எனக் கொள்ளும்போது தமிழ் பேசுபவரின் கடவுள் தான் யார்? பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளையும் உருவாக்கியிருப்பது இறைச் சக்தியே என்பதை உண்மையான மேலை/கீழை அறிஞர்கள் அறிந்திருக்கவே செய்கிறார்கள். தமிழர் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும்? மேலும் பிறகு பகிர்ந்துகொள்வோம்.
Periyar Started with:
“முதலில் உன் வீட்டை சுத்தம் செய் அப்பரம் அடுத்தவன் வீட்டை பார் ”
“First Clean the dirt in his House before pointing the others House.”
Dhamu,
We have to clean our house first, fine. But we have to accept that other houses also have dirt. U cannot say that only my house is dirty & keep criticising it.
முதலில் உன்வீட்டைப்பார் என்றாரா ஈவெ ராமசாமி. வீட்டை சுத்தம் செய்யவில்லை அவர் வீட்டின் பகுதிகளுக்கே நெருப்பு வைத்தார். வீட்டையே அழிக்க முயன்றார். இடிக்க முனைந்தார். அதிகாரத்தில் இருப்பவர்களை உயர் சாதியினர் ஆயினும் அவர் ஒரு நாளும் எதிர்க்கவில்லை.அவர்களோடு மாமன் மச்சான் உறவு கொண்டாடினார். ஈவெராவின் தொண்டர்கள் தான் இன்றுள்ள சாதி சங்கங்களின் தலைவர்கள் என்பது அவர் சாதியை ஒழிக்கப்பாடுபட்டார் என்ற வாதத்தினை தவிடு பொடியாக்குகிறது.
அன்புள்ள தாமு,
நம் வீட்டை சுத்தம் செய்யவேண்டும் என்பதும் பிறர் வீட்டு குப்பையை பார்க்க கூடாது என்பதும் உண்மை. ஆனால் பிறர் வீட்டிலும் குப்பைகள் உள்ளன என்ற உண்மை தெரியாமல், உன் வீட்டை விட்டுவிட்டு , அடுத்தவன் வீட்டுக்குள் நுழைந்து, ஞான ஸ்நானம் பெற்று மோட்சத்துக்கு போ என்று சொல்வது, அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். நம் வீடு மட்டுமே குப்பை என்று சொல்லித்திரிந்தவர் ஈ வெ ரா . அவரைப்போன்ற ஒரு ஞானசூன்யத்தினை இந்தியா இதுவரை கண்டதில்லை.
நம் நாட்டு மக்களிடையே இருந்த அழுக்குகளை அகற்ற பெரியாருக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே , பல தலைவர்கள் பாடுபட்டனர். வீட்டை இடிப்பவன் முட்டாள். வீட்டை சீர்திருத்தி அங்கேயே ஆனந்தமாக வாழ்பவன் புத்திசாலி. பெரியார் முதல் ரகத்தை சேர்ந்தவர். ஈழவர்களுக்காக தனியாக ஏராளமான சிவாலயங்களை அமைத்து நல்வழிகாட்டிய நாராயண குரு போன்றோரே நம் நாட்டுக்கு தேவை. பெரியார் ஒரு குழப்பவாதி.
பார்ப்பானை கோயிலை விட்டு விரட்டும் முயற்சியில் இறங்கினார், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அவர் வழிவகுக்கவில்லை. யாருமே கோயிலுக்கு போகக்கூடாது என்றார், பின்னர் வியாபாரம் சரியாக ஆகவில்லை என்பது புரிந்தவுடன் , கிறித்தவர்களையும், இஸ்லாமியர்களையும் போல ஒரே கடவுளை வணங்கு என்று சொன்னார். ஏனித்தனை சாதி என்றார்.கிறித்தவத்திலும், இஸ்லாமிலும் உள்ள பல பிரிவினர் நடத்திய நூற்றாண்டு போர்களையும், அவர் வாழ்ந்த நூற்றாண்டில் கூட இங்கிலாந்தின் வடபகுதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் பிராடஸ்டண்டு ஞானிகள் நடத்திய போர்களை மூடிமறைத்து , இந்தியாவில் மட்டுமே எல்லாம் கோளாறு என்று பொய்பிரச்சாரம் செய்தவர் அவர். அவரிடம் இருந்த ஒரே நற்குணம் அவர் பண வரவு செலவுகளில் ஊழல் செய்யாத, சுயநலம் இல்லாத, சிக்கனமான, நபர் என்பது. ஆனால் அவரது வாரிசுகள் அந்த அறக்கட்டளையை பரிசுத்த ஆவியை துயில் எழுப்ப வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் .
தமிழும், தமிழனும் காட்டுமிராண்டி என்றார். உலகில் எல்லா மொழிகளும், எல்லா இனங்களும் காட்டுமிராண்டி நிலையில் வாழ்வை தொடங்கி , படிப்படியாகத்தான் முன்னேற்றங்களை கண்டுள்ளனர். ஆனால் உலகிலேயே தமிழன் மட்டுமே காட்டுமிராண்டி என்று பொய்ப்பிரச்சாரம் செய்தார். அவரை தலைவராக ஏற்றவர்கள் அனைவரும் தற்குறிகளே.
இப்ப பெரியார் இருந்த கிருஸ்த பாதரி இல்ல முஸ்லிம் முதேவி இருப்பன் எங்கள் சைவம் தவறு என்று சொன்னான் என்னேன்றல் அந்த பெரியார் தமிழனே இல்ல அதன் .இவன் கருத்தில் பல அர்த்தசாஸ்திரத்தில் உள்ளது எ.கா பெண்விடுதலை மற்றும் விதவை மறுமணம் கலப்பு திருமணம் எல்லாம் அதில் இருக்கு சில இடங்களில் இவன் சமஸ்கிருதம் மறுத்தாதற்கு காரணம் தன கருது அந்த காலத்தில் இருந்தது என்று தெரிய கூடாதுன்னு தான்.
As soon as DMK came to power , Periyar made naked idols of Ram , Seetha and other Hindu gods and took out a procession of these gods with garlands of Chappal at Salem .The govt headed by Annadurai was a mute spectator to this . They rather allowed this to happen . Which other state will allow this gross insult to any religion or the people who believe in it . Shame ! To Tamil Nadu
thiru
திரு கணேஷ் , ஈவேரா பெரியார் சேலத்தில் ராமர் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தியது 1 9 7 1 ஆம் ஆண்டு . அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் சர்க்காரியா புகழ் கட்டுமரம் தான். அண்ணா அல்ல. அண்ணா 1969 ஆம் ஆண்டே காலமாகிவிட்டார். அண்ணா இருந்திருந்தால் அது நடந்திருக்காது. கட்டுமரம் திமுகவை தவறான பாதைக்கு இழுத்து சென்று , திமுக என்பது திருக்குவளை கட்டுமரம் முன்னேற்றக் கழகம் என்று ஆகிவிட்டார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கைக்கு எதிரிதான் கட்டுமரம். அண்ணாவின் உண்மையான தொண்டர்கள் கட்டுமரத்தை ஆதரிக்க மாட்டார்கள். எம் ஜி ஆர் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டவுடன் , அண்ணாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் எம் ஜி ஆர் பக்கம் போய்விட்டனர். இப்போது சர்க்காரியா , டூ ஜி என்று பல்வேறு அடித்த கொள்ளைப்பணம் தான் கழகம் என்ற பெயரில் அரசியல் செய்து வருகிறது.
குணமற்ற நிலையே கடவுளின் தன்மை எனில்,அதுவே ஒரு குணமாகி விடுவதைக் காண்கின்றோம்.பின் அங்கு குணமற்ற நிலை என்பதே இல்லை அல்லவா?
Nalladhoru vivaadham.
நீங்கள் என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் ‘ஈ வெ ராவை’ எதிர்த்து கேள்வி கேட்டால் ‘பார்ப்பன கைக்கூலி’ (அல்லது) ‘காவி தீவிரவாதி’ என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள்
ஆகவே உலகின் ஒரே உத்தமன் ‘ஈ வெ ரா’ தான் என்பதை ஒத்துக்கொண்டு மேலும் விவாதிக்கவும்