குண்டலினி

kundalini_snakeஅது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

7-chakrasமுதலில் மூலாதாரம். இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது சுவாதிஷ்டானம். இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம். இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நான்காவது அனாகதம். இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)

ஐந்தாவது விசுக்தி. இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை). இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்). இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.) (சக்கரங்களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்துவத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.)

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்patanjali_2 தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?

நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக்கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும்தான்!!?)

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

pathanjaliஇந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.

இந்தத் தருணத்தில் யோகப் பயிற்சியை எளிமையாக வகுத்து, தொகுத்து, உலகுக்கு அளித்த யோகாவின் தந்தையாம் பதஞ்சலி முனியை வணங்கி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

22 Replies to “குண்டலினி”

  1. மிகுந்த நன்றி
    வணங்கி மகிழ்கிறேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  2. சூப்பர். மிகவும் அருமையான கட்டுரை. நானும் குண்டலினியை மேலேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

  3. Kanchi Paramacharya has warned that unless you get an able guru who can guide you till the end one should not try to practice this yoga.He says in the present world where there is many things to distract your it is very difficult to attain the end.Hesays further,
    1. if you give up half way, the entire effort will be waste.
    2.if it is not properly practiced it may lead to mental disorder etc.
    Please refer Deivathin kural( I think in Volume 6 )under the heading “Soundarya lahari”.

    Hence I request everyone to be careful and read volume six of “Deivathin kural” regarding this.

  4. Meditation, if practised regularly and arrived at a stage when able to retain the mind vaccuum, and experience the calmness of the mid-sea for about fifteen minutes, one can attain upto the fourth stage, Anagata. And that is enough for almost all of us, who are normally inclined to worldly commitment (householders and social activists). It is NOT dangerous to reach upto fourth stage. Kindly do NOT try to go further without proper guidance. How do you know that you have reached the fourth stage? You will know automatically, by experience. Reaching upto the level of fourth will make you sucessful in all your worldly needs.

    It is also possible to physically kindle the dormant Kundalini at moolaadhaaraa by an experienced person/guru. For a guru, it is not necessary to activate from its spot. He can do it from anywhere of the body. It is believed Sri Ramakrishna Paramahamsa physically kindled Kundalini of Swami Vivekananda to hasten his mision and return (casting aside the physical body). I was in Calcutta for many years and I used to visit Dakshineswar and Belur frequently. I was told about the said incident related to Sri Ramakrishna and Swami Vivekananda during one of my visits to Belur.

    I think I should not talk further on the topic, as it would amount to self promotion.
    MALARMANNAN

  5. Wonderful article.
    Mr.Muthukumar is correct. Without a proper guru, if we practice kundalini, it might turn conterproductive. I am yet to read Deivathin Kural 6th volume (still in 2nd volume).

    See what Swami Vivekananda says about attaining samadhi without a teacher :

    Complete Works of Swami Vivekananda – Vol 1 – Rajayoga – Chapter “Dhyana and Samadhi” –

    https://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_1/vol_1_frame.htm

    “The Yogi says there is a great danger in stumbling upon this state. In a good many cases there is the danger of the brain being deranged, and, as a rule, you will find that all those men, however great they were, who had stumbled upon this superconscious state without understanding it, groped in the dark, and generally had, along with their knowledge, some quaint superstition. They opened themselves to hallucinations. Mohammed claimed that the Angel Gabriel came to him in a cave one day and took him on the heavenly horse, Harak, and he visited the heavens. But with all that, Mohammed spoke some wonderful truths. If you read the Koran, you find the most wonderful truths mixed with superstitions. How will you explain it? That man was inspired, no doubt, but that inspiration was, as it were, stumbled upon. He was not a trained Yogi, and did not know the reason of what he was doing. Think of the good Mohammed did to the world, and think of the great evil that has been done through his fanaticism! Think of the millions massacred through his teachings, mothers bereft of their children, children made orphans, whole countries destroyed, millions upon millions of people killed!

    So we see this danger by studying the lives of great teachers like Mohammed and others”

  6. ஒரு கேள்வி. யோகா செய்வதற்கென்று வரைமுறை இருக்கிறது. சரி! ஆங்காங்கே இலவச மற்றும் பணம் வாங்கிக்கொண்டு யோகா வகுப்புகள் எடுக்கிறார்களே, அவற்றை நம்பி போகலாமா?

  7. Yoga is the most misunderstood word today. Yogam is the correct word. And its geenral meaning is practice. What is marketed as yoga is physical and menatl excercises. I think it is enough doing Suraya Namskaram for physical excercise and meditation for mental excercise doing at home early in the morning is enough, for a normal healthy life.
    MALARMANNAN

  8. சீனு அவர்களுக்கு,
    இலவச மற்றும் கட்டண யோகா வகுப்புகளுக்கு தாங்கள் செல்வதற்கு முன் சில விஷயங்களை யோசிக்க வேண்டுகிறேன். வெறும் ஆசனங்கள், உடற்பயிற்சி மட்டும் யோகா அல்ல. அவற்றை தாண்டி உண்டல் நிலை, மன நிலை, உணர்ச்சி நிலையிலும் ஒரு சம நிலையை கொண்டு வருவதே யோகா. இந்த மாதிரியான யோகப் பயிற்சிகள் சில குருமார்களால் கற்று தரப்படுகிறது. முதலில் ஆரம்ப நிலை பயிற்சிகளை கற்று கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொடுத்தால் நீங்கள் மேல்நிலை பயிற்சிகளை கற்றுகொள்ளலாம். முக்கியமாக, யோகா பயிற்சிகளை கல்வியாக கற்றவரிடத்தில் நீங்கள் கற்று கொள்ள வேண்டாம். யோகாவில் இளகலை, முதுகலை பட்டம் முடித்தவர்கள் பணத்திற்காக மட்டும் சொல்லி குடுக்க வாய்ப்புகள் மிக அதிகம். மற்றும் இவர்களுக்கு ஆத்ம சாதகங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இவர்களிடம் நீங்கள் யோகா
    கற்றால் அது வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே இருக்கும். ஆதலால் ஒரு ஆன்மீக குருவிடம் (உ.ம்: சத்குரு ஜாக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்) யோக பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள். அஃதே சாலச்சிறந்தது.

  9. முத்து குமார் அவர்களுக்கு,
    யோகா கற்க குருவின் துணை தேவைதான். இங்கே யார் உண்மையான குரு என்பதில்தான் பிரச்சினை. குரு என்ற வார்த்தையை எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். வெறும் மூன்றுமாத, ஆறுமாத காலங்களில் யோகாவில் உள்ள ஆசனங்களை மனப்பாடம் செய்து அதை தேர்வில் எழுதி பட்டம் பெற்றவர்கள் தங்களை குரு என்றே சொல்கிறார்கள். இவர்கள் உடற்பயிற்சி நிலையம் போன்று யோகப்பயிற்சி நிலையம் ஆரம்பித்து சில்லறைகளை அள்ளுகிறார்கள். காலை நேரங்களில் பெரும்பாலான சேனல்களில் இவர்கள் பவனி வருவதை காணலாம். இவர்கள் அத்தோடு நில்லாமல் புத்தகம் வெளியிட்டு மக்களுக்கு சேவை செய்கிறார்கள். இந்த மாதிரி அரைகுறை ஆசாமிகளில் ஒருவரை தெரிவு செய்து பயிற்சி பெறுவது ஆபத்து ஒன்றுமல்ல. ஆனால் அவர்களிடம் கற்பவர்கள் செய்வது யோகப்பயிற்சியாக இராது, வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே இருக்கும். யோகாவை பற்றி எத்தனை புத்தகம் படித்தாலும் யாரும் இம்மி அளவு கூட முன்னேற்றம் பெற முடியாது. எனவே குரு என்று சொல்வதை விட ஆன்மீக-யோக-குரு என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும். ஒரு யோகி மட்டுமே சிறந்த குருவாக இருக்க முடியும்.
    மலர்மன்னன் அவர்களுக்கு,
    சூர்ய நமஸ்காரம் மற்றும் தியானம் மட்டும் சாதாரண வாழ்வுக்கு போதுமானது என்று யோகாவின் எல்லைகளை எப்போதும் வரையறுக்காதீர்கள். இவை வெறும் முதற்படிகள் மட்டுமே. நம் மண்ணில் விளைந்த வல்லமை வாய்ந்த யோகப் பயிற்சிகள் அனைத்தும் ஒவ்வொரு சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் உண்மையான ஆன்மீகத்தில் எல்லோருக்கும் நாட்டம் வரும். எல்லோரும் மெய்ஞானம் பெற்றால் மனிதம் தழைத்தோங்கும். நம் தெருக்களில் யோகிகளும், ஞானிகளும் வலம் வர வேண்டும். அப்போது இந்த பூமியே கடவுள் வாழ ஆசை கொள்ளும் இடமாக மாறும். மேலும் ஒரு வேண்டுகோள், தியான அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் எவராலும் சொல்லிவிட முடியாது. தியானம் செய்தால் மனதில் வெறுமை, அமைதி உண்டாகும் என்று சொல்வதுகூட ஒருவிதமான எல்லைகளை கொடுக்கிறது. இவற்றை தாண்டியும் அது செல்லும். ஆக தியான அனுபவங்களை (புத்தகத்தில் படித்ததையோ, அனுபத்தில் உணர்ந்ததையோ) எப்போதும் வெளிக் கொனாராமல் இருப்பதே நலம். நாம் செய்ய வேண்டியது அனைவருக்கும் யோகாவை பற்றிய ஆர்வத்தை தூண்டுவதே. ஆர்வம் தூண்டப்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் ஒரு ஆன்மீக குரு கிடைப்பார். மீதியை குரு பார்த்து கொள்வார்.

  10. Dear Sri Chinna,
    I said surya namaskaram and mediattion are enough to lead normal life with good intention only because I have seen most of the people fall on the wrong side and suffer. Most of the householders are forced to lead a very fast day croweded with so many commitments and therfeore I suggested likewise. If they begin those two and if they have consistency, they will naturally continue. I have also indicated that those two are stepping stones only.
    What we need from our people now is Rajo Guna to face the challenges.
    MALARMANNAN

  11. Hi,

    your article has clarified some of my doubts and gave me an overview about the treasure Kundalini sakthi.

    Appreciate if you would continue to write on these kind of minute topics which has been scattered in every aspects of our Sanathana Dharmam.

    NB: hindu is a word coined by the british to indicate those who lived on the sides of the river sindh. Some namologists says use of the word hindu will make the religion to back-log , degenerate etc. I neither believe this (namology) nor acknowledge this. But through our vedas(i didnt learn those great treasures but thro the word of mouth of the Gurus and Aachaaryas in upanyasams) i came to know before the invasion of british we used the word ‘Sanathana Dharma’ to name our faith. Can u make a brief research on this and write and article on the same

    adiyen,

    PL.Seenivasan

  12. Dear chinna anna your article is good. i am practising Isha Yoga and my GURU is Sadhguru Jaggi Vasudev. GURU is nothing but an atlas or Guide to show the path of Mukthi everyone dont need a guru but all are on not Columbus even columbus not reached where he should be. he landed in America instead of India and belived that is West India. So everyone need a guru for Yoga.
    Pranams
    J.Barthassarady

  13. அபத்தம் இதெல்ல்லாம் காலம் காலமாய் கற்பனை இதனால் பலன் கண்டவர் எவருமில்லை

  14. #
    //Srinivasan
    1 September 2010 at 12:18 pm

    அபத்தம் இதெல்ல்லாம் காலம் காலமாய் கற்பனை இதனால் பலன் கண்டவர் எவருமில்லை//
    அன்பரே நீங்கள் பகுத்தறிவுவாதியாக (என்று சொல்லிகொள்பவராக ) இருந்தால்
    நீங்கள் ஆராய்ந்து பார்த்து தோல்வி அடைந்து பின்னர் இந்த கருத்தை எழுதியதாக தெரியவில்லை.உங்களுக்கு எங்கள் தாத்தாவின் பதில்
    கிழே.
    எந்த ஒன்றையும் பகுத்து பகுத்து கடைசியில் அதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிப்பதுதான்,அதன் பின்னர் தான் கண்ட உண்மைகளை வெளியிடுவதுதான் பகுத்தறிவு. ஒன்றும் செய்யாமல் வெறுமனே ஒண்ணுமே இல்லை என்று சொல்வதற்கு பெயர் பகுத்தறிவு அல்ல,அப்படி எந்த ஒரு IDIOT ம் சொல்லிவிடலாம்.
    (நன்றி :கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம்.)

    அல்லது மற்ற மதத்தவராக இருந்தால் உங்கள் மதத்தில் உள்ள நம்பிக்கைகளும், அபத்தம் காலம் காலமாய் கற்பனை அதனால் பலன் கண்டவர் எவருமில்லை.

    அல்லது செகுலர் வியாதி பிடித்த இந்துவாக இருந்தால் உங்களுக்கு பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை.

  15. குண்டலினி பயிற்சி பெற தொடர்ப்பு கொள்வீர் “மனவலக்களைமன்றம் ” https://vethathiri.edu.in/
    தமிழகத்தில் உள்ள அணைத்து ஊர்களில்லும் உள்ளது. அனைத்தும் எளிய முறை பயிற்சிகள், கட்டணமும் குறைவே!!
    தமிழக அரசு ஊழியர்களுக்கு, காவல் துறைனருக்கு இந்த பயிற்சியை கற்றுக்கொடுப்பதட்கு அரசு ஆணையே உள்ளது. அதனால் மனவளக்கலை மன்றம் சென்று கற்று பயன் பெறுவீர்.

    ஆசிரியர் (குரு) – வேதாத்திரி மகரிஷி அவர்கள்
    வாழ்க வளமுடன் என்ற வார்த்தையை வழங்கியவரும் இவரே…
    இந்த மன்றம் உங்கள் ஊர்களில் அறிவுத்திருக்கோயில் என்ற பெயரிலும் செயல் பட்டு வருகிறது..

    குறிப்பு : மதசார்ப்பற்றது

  16. Want learn Kundalini Yoga?
    Contact Manavalakkalai Centre all over the world. Every towns in tamilnadu has its own centres.
    For more informations, get your location address through this website.
    https://vethathiri.edu.in/

    Its a Non Governmental Organization
    Founder : Vethathiri Maharishi

  17. மிக அருமையான க்ட்டுரை , அனைவருக்கும் இது சென்று சேர வேண்டும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *