நான் (சரவணன்) வித்யா.

கிழக்கு பதிப்பகத்தின் இலவச விமர்சனத் திட்டத்தின் கீழ் வாங்கியது இந்தப் புத்தகம். நான் வெளிநாட்டில் இருப்பதால் இந்த ஆண்டு விடுமுறையில்தான் பெற்றுக்கொள்ள முடிந்தது.

சரவணன் வித்யாவாகிய நிகழ்வு பெரிய கதை போலச் சொல்லப்பட்டிருக்கிறது.

livingsmileதனது சுயம் எது எனத் தெரிய வரும்போது அதை அடைய ஒரு மனிதன் கையில் எடுக்கும் போராட்டம் எப்போதுமே சிறிய ஒன்றாக இருக்காது. அதுவே, நடைமுறையில் ஒரு ஆண், பெண்ணாக மாறுதல் என்றால் எவ்வளவு பெரிய வலிதரும் விஷயமாக அமையும்?. உடல் வலியை விட்டு விடலாம், அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலில் உடல்வலி என்பது ஒரு பகுதிகூட இருக்காது. இந்த உடல்வலி என்பதையும் மனவலி என்பதையும் வித்யாவின் அனுபவமாக இப்புத்தகத்தில் உணரலாம்.

என்னதான் சொன்னாலும், ஒருவனைத் திடீரெனப் பெண்ணாகப் பார்க்க நண்பர்களாகிய நமக்கே மனத்தடைகள் இருக்கும். அதிர்ச்சியும் சந்தேகமுமாக நாம் விலகிச்செல்லும்போது, அந்தப் பையன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களின் வலியையும், அவர்கள் மனம் கொள்ளும் போராட்டங்களையும், சமூகத்தில் அவர்கள் பட்டிருக்கும் அவமானங்களையும் நம்மால் உணர முடிகிறது. பையன் பெரிய ஆளா வருவான் என நம்பும் தகப்பனிடம் “என்ன சார்… உங்க பையன் ஒம்போதாமே” என்று யாராவது கேட்டால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்களை வைக்க வேண்டிய நிலையில்தான் திருநங்கைகள் இருக்கிறார்கள். அதாவது நாம் வைத்திருக்கிறோம்.

ஆனால் அப்படிச் சொல்லாதீர்கள்… நாங்களும் மனிதர்கள்தான்… நாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை இந்த நிலை… நாங்கள் விரும்பாமலேயே இயற்கை எங்களிடம் செய்த கோளாறு இது என்கிறார்கள் திருநங்கைகள். திருநங்கை – பெயரே நாகரீகமாக இல்லை? இப்படி ஒரு பெயரை அறிமுகம் செய்தவருக்கு திருநங்கைகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இதுபோக அரவாணிகள், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எது வல்லமை உள்ளதோ அது நிற்கும். ஆனால் இவற்றில் எந்த வார்த்தை வந்தாலும், அது நிச்சயம் நல்ல மாற்றமே.

மனதில் எத்தனை திட்டங்கள் இருந்திருக்கும் வாழ்க்கை மற்றும் கல்விகுறித்து. அவை அனைத்தும் இந்த ஒரு காரணத்தினால் அர்த்தமிழந்து வெற்றுக் காகிதமாகுதல் என்பது எவ்வளவு பெரிய கொடுமை…

மனசுல பொம்பள மாதிரி இருந்தாக்கூடப் பரவாயில்லைடா.. ஆம்பளைமாதிரி நடந்துக்கோ எனச் சொல்லும் பெற்றோர்கள், நண்பர்களின் அறிவுரைகளைக் கேட்க இயலாத அளவு மன அழுத்தம்…

எப்பாடு பட்டாவது திருநங்கை ஆகிவிடத் துடிக்கும் மனம் ஒருபுறம்…

திருநங்கை ஆன பின்பு சமூகத்தில் கிடைக்கப்போகும் அவமரியாதைகள். புறக்கணிப்புகள்…

யாருக்கும் சொந்தமில்லாமல், வேறுவகையில் சொல்வதானால் எல்லோரும் இருந்தும் அநாதையாய் வாழவேண்டிய நிர்ப்பந்தம்…

இத்தனை சிக்கல்கள் இருந்தும் ஏன் ஒருவர் திருநங்கை ஆகிறார் என்பதை உளவியல் ரீதியாகவும், தனது வாழ்க்கைக் கதையையே சொல்லி இருப்பதாலும் எளிதில் ஒன்றிப் படிக்க முடிகிறது.

நிச்சயம் சாதாரன புத்தகங்களைப் படிப்பதைப் போல் இந்தப்புத்தகத்தை படித்துவிட முடியாது. நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு உலகம் இருப்பதே தெரியும்? அதை அறிமுகம் செய்கிறது இப்புத்தகம்.

வித்யாவாக ஆகிவிட சரவணன் நடத்திய போராட்டங்களும், பெற்ற அவமானங்களும், அவ்வப்போது கிடைத்த ஊக்கங்களைக் கொண்டே கடந்திருக்கிறார் என்பதை நினைக்கையில் ஏற்படும் பிரமிப்புக்கு அளவே இல்லை. ஒரு விதத்தில் திருநங்கைகளின் மனோதிடம் மற்ற எந்த ஆண், பெண்ணைவிட மிக அதிக அளவு இருக்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை தவிர இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இருக்க முடியாது, இத்தனை அவமானங்களையும், நிராதரவான நிலையில் வாழவும் வேண்டிய இந்த வாழ்க்கையில்…

நிர்வாணம் அடைதல் – ஏதோ புத்தர் அடைந்தது போலத் தோன்றினாலும் அதை திருநங்கை வித்யாவின் விவரிப்பில் திருநங்கைகளுக்கு நடைபெறும் நிர்வாணத்தைப் படிக்கப் படிக்க மனம் பதைக்கிறது. கடப்பா ஆஸ்பத்திரியைப் பற்றிய விவரணைகளும் அவருக்கு நடந்த அறுவைச் சிகிச்சையைப் பற்றியும் சொல்லும்போது இதர முறைகளில் (தாயம்மா முறை) நிர்வாணம் அடையும் இதர திருநங்கைகள் மீது பரிதாபமே ஏற்படுகிறது. இந்தியாவில் திருநங்கைகளின் நிலைமை பற்றியும் அங்கங்கு எழுதியுள்ளார். வடஇந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பும் அல்லது குறைந்தபட்சம் அவமரியாதை நடக்காமல் இருக்கும் என்பதாலும் திருநங்கைகள் வடக்கே செல்லுதல் இயல்பாகவே ஆகிவிட்டிருக்கிறது.

திருநங்கைகளின் புதிய வாழ்க்கையில் புதிய உறவுமுறைகள், அவர்களுக்குள்ளான சீனியர், ஜூனியர் விஷயங்கள், கூட்டங்களாக வாழும்போது அவர்களுக்குள் இருக்கும் கட்டுப்பாடுகள் என எல்லாவற்றையும் சக நண்பனிடம் பகிர்ந்துகொள்வதுபோல எழுதி இருக்கிறார். இதுதவிர பேண்ட், சட்டை அணிந்துகொண்டு ”கோத்தி”யாக இருக்கும் நிலை. நிர்வாணம் அடைந்து முழுப்பெண்ணாக ஆனவர்கள் என அவர்களைப்பற்றிய உலகின் முழு பிம்பத்தையும் தந்திருக்கிறார் இப்புத்தகத்தில்.

தான் பெண்தான் என்பதை பிறருக்கும், தனக்கும் நிரூபிப்பதற்காக, தன்னைப் பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள எற்படும் செலவுகளுக்காக பிச்சை எடுப்பதுதான் ஒரு வழி என்ற நிலை கிட்டத்தட்ட அனைத்து திருநங்கைகளுக்கும் விதிக்கப்பட்டதுபோலத் தெரிகிறது. இப்போது அரசு பொது மருத்துவமனைகளில் இதுபோன்ற பாலின மாற்றுச் சிகிச்சைகள் செய்யப்படுகிறதா எனத்தெரியவில்லை. இல்லையெனில் அவர்களது சிகிச்சை வசதிகள் செய்யப்படுதல் அவசியம்.

திருநங்கைகளை நாம் நடத்தும் விதத்திற்காக நாம் வெட்கவேண்டும். ஒரு சக மனிதனாகக் கூட மதிக்காத நமது இயல்பினால் வாழ வழியின்றி இருக்கும் அந்த மனித உயிர்கள் வாழ்க்கையின் கடைநிலையில் இருந்துகொண்டு வாழவிடுங்கள் என கேட்பது நம் அனைவருக்கும் கேட்க வேண்டும். இல்லையெனில் நாம் மனிதர்கள் எனச் சொல்லிக்கொள்ளவே அருகதை அற்றவர்கள். நாம் நம் பூனைக்கும், நாய்க்கும் கொடுக்கும் குறைந்தபட்ச ஆதரவைக் கூட இந்த திருநங்கைகளுக்குக் கொடுப்பதில்லை என்பது நாம் அவர்களை மதிக்கும் விதத்திற்கு எடுத்துக்காட்டு.

இப்புத்தகத்தின் ஆசிரியர் லிவிங்ஸ்மைல் வித்யா ஒரு  வலைப்பதிவும் நடத்துகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.  

பிற்சேர்க்கை:-

நீண்ட நாள்களுக்கு முன்பு, இந்தப் புத்தகம் படிப்பதற்கு முன்பாக என் நண்பர் ஒருவர் கிழே உள்ள கமெண்ட்டுகளை அனுப்பியிருந்தார். எனக்கும் சரியெனப் பட்டதால் கீழே…

01. வித்யாவின் கடும் சீற்றமும் கோபமும் கலந்த மொழி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இப்புத்தகத்தின் பெரிய குறைபாடு.

02. உண்மையில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாந்தர்களின் மொழி வீரியமடைவதே, அவர்கள் சமூகத்தின் மேல் கொள்ளும் வெறுப்பிலும் கோபத்திலும் அது வெளிப்படும் எழுத்திலும்தான். அந்த மொழி தொலைந்துபோய், கிழக்கு பதிப்பகத்தின் பொது மொழியில் இது வெளியாகும் என்பது நான் எதிர்பார்க்காதது. சுவாரஸ்யத்தின் சக்கரங்களில் வீரியம் அடிபட்டுப் போய்விட்டது.

03. வித்யாவின் சில பதிவுகள் மிகக்கடுமையான, நாகரிகமற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தன. அதை நீக்கும் ஒரு எடிட்டரின் (எடிட்டர் யாரென்று தெரியவில்லை) பணி கொஞ்சம் அதைக் கடந்து வித்யாவின் எழுத்துநடையையே மாற்றிவிட்டது சோகமே.

04. தோழமை வெளியீடாக வந்திருக்கும் அரவாணிகள் பற்றிய புத்தகத்தில், வித்யா எழுதியிருக்கும் ஒரு கட்டுரை (ஏற்கனவே அவரது பதிவில் உள்ளது) கடும் சீற்றத்துடனும் உச்சகட்ட கோபத்துடன் வெளியாகியுள்ளது. அதே அலையில் இந்தப் புத்தகமும் அமைந்திருக்குமானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

05. புத்தக ஆரம்ப சுவாரஸ்யத்தைக் கணக்கில் வைத்து – கிழக்கு பதிப்பகத்தின் மு.க. புத்தகத்திலும் இது போன்ற உத்தி உள்ளது என நினைக்கிறேன் – முதல் அத்தியாத்திலேயே உறுப்பு அறுவை சிகிச்சை நடப்பதைச் சொல்லியிருப்பதையும் தவிர்த்திருக்க வேண்டும். அப்போதுதான் வித்யாவின் சோகம், சமூக நிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அவற்றின் உச்சமாக இந்த அத்தியாயம் அமையும்போது, அது கடும் மன உளைச்சலை வாசகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இப்போது இருக்கும் புத்தகத்தில் முதல் அத்தியாத்தில் ஏற்படும் பதற்றம், புத்தகத்தின் தொடர் மொழிகளில் தணிந்து, மீண்டும் அதைவிட அதிக பதற்றத்தைத் தராமல் முடிந்துவிடுகிறது. ஒரு பதற்றம் தேவையானது என்று நான் சொல்லவில்லை. முழுக்க முழுக்க வாசக கவனம் என்ற வகையிலேயே இது சொல்லப்படுகிறது.

06. வித்யாவின் தந்தையைப் பற்றிய கலந்து பட்ட சித்திரம் தெளிவாக வருகிறது. அது யதார்த்தமானதும் கூட. வித்யாவின் குமுறல்கள் பல்வேறு நிலைகளில் சமூகத்தில் பல்வேறு விளிம்புகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் என் கவனம் வித்யாவின் தந்தையின் சித்திரம் மீதே குவிந்திருந்தது. உண்மையில் அவரது நிலை இன்னும் அதிகமாக கவனிக்கப்படவேண்டியதும் விவாதிக்கப்படவேண்டியதும் என்பது என் எண்ணம்.

07. வலையுலகில் முற்போக்காளர்கள் பலர் வித்யாவை ஆதரித்தார்கள். அமைதியாக கிழக்கு பதிப்பகம் வித்யாவின் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. முந்தையை ஆதரவின் வீச்சைவிட அதிகமான ஒரு பெரிய பரப்பு கொண்ட காரியத்தை கிழக்கு அமைதியாகச் செய்திருக்கிறது.

08. வித்யாவின் முதல் புத்தகம் இது. வாழ்த்துகள். தொடர்ந்து பல்வேறு புத்தகங்களின் மூலம், கட்டுரைகள் மூலம் அவர் தொடர்ந்து வினையாற்றவேண்டும்.

நான் (சரவணன்) வித்யா:
எழுதியவர்: லிவிங்ஸ்மைல் வித்யா.
கிழக்குப் பதிப்பகம்,
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.
ஆன்லைனில் வாங்க: https://nhm.in/shop/978-81-8368-578-8.html

12 Replies to “நான் (சரவணன்) வித்யா.”

 1. This is a very important subject. We should not let them down.

 2. அருமையான கட்டுரை. ஆனால் இந்த லிவிங்ஸ்மைல் வித்யா கொள்ளும் சமுதாய சீற்றம் தேவையற்றது. இந்த பண்பாடு போல மாற்றுப்பாலினத்தவருக்கு பண்பாட்டு வேரும் இடமும் அளித்த மற்றொரு பாரம்பரியத்தை அவர் காணமுடியாது

 3. ////////திருச்சிக் கார‌ன்
  12 November 2009 at 11:41 am
  This is a very important subject. We should not let them down./////////

  பூகம்பம் வரப்போகுது திருச்சி சார். ஒரே லைன்ல இப்படி முடிச்சிட்டீங்க. சே. நீங்க இப்படி ஆய்டுவீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. (சும்மா வ்ளாட்டுக்கு)

 4. அருமையான கட்டுரை, நல்ல விமர்சனமாகவும் அமைந்தது

 5. Good subject. even our ‘samaya kuravargal’ has sung ‘anai, pennai, aliyay’…so they were treated well in earlier days. How and when did they go down to such bad levels, we s hould really think. I think only our culture treated even ‘ali’ as a roopam of the god.

 6. “அலிகள்” என்று தாழ்வாகவும் திருநங்கைகள் என்று அழகாகவும் வர்ணிக்கப்படும் மூன்றாவது மனித இனத்தார் பண்டைய காலத்தில் சிறப்பான இடத்திலிருந்தனர், என்பது வேத கால வரலாறு;

  அவர்கள் மாமன்னர்களின் எண்ணற்ற அந்தபுர நாயகிகளின் பாதுகாவலர்களாகவும் மன்னரின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தனர்; அவர்க‌ளுக்கு அனைத்து இராஜ ரகசியங்களும் தெரிந்தாலும் ஒன்றையும் வெளியே சொல்ல மாட்டார்கள்; இயல்பிலேயே மனத் தாழ்மையும் அன்பும் வீரமும் அவர்களிடம் ஒருங்கே அமைந்திருக்கும்;

  இதனை பைபிளின் “எஸ்தர்” என்னும் புத்தகத்தில் விவரமாக வாசிக்கலாம்; இந்த புத்தகத்தில் மட்டுமே ஆரம்பத்திலேயே இந்தியாவின் பெயர் “இந்து தேசம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; இந்த புத்தகத்தில் “பிரதானிகள்” என்று வருமிடமெல்லாம் ஆங்கில மொழி பெயர்ப்பின்படி “திருநங்கை”களையே குறிக்கும்;

  இன்னும் சொல்லப்போனால் இயேசு பெருமானும் இவர்களை அண்ணகர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை மேன்மைபடுத்தியுள்ளார்; “ப்ரஜாபதியின்” ஒன்பது இலட்சணங்களும் இயேசுவில் நிறைவேறியுள்ளதால் அவரும்கூட ஒரு திருநங்கையாகவே வாழ்ந்திருக்கவேண்டும்..!

  (தொடரும்…)

 7. I quote from

  The Eunuch in Bible and Quran
  By: Prof.dr. Ibrahim Khalil

  As women were sometimes forbidden to sing in Church, their place was taken by castrati. The practice, known as castratism, remained popular until the 18th century and was known into the 19th century. The last famous Italian castrato, Giovanni Velluti, died in 1861. The sole existing recording of a castrato singer documents the voice of Alessandro Moreschi, one of the last eunuchs in the Sistine Chapel choir. Unfortunately, the early 20th century recording is of poor quality and Moreschi, who was never trained for the stage, is not considered a great singer.”

  According to the Bible, Deuteronomy 23:1
  Eunuch is Excluded From the Assembly and the Congregation, Cannot Become One of the Lord’s People , Can not Go Into The Meeting Of The Lord and Can not Worship With the Lord’s People.

  Herein is the different translation of Deuteronomy 23:1

  New International Version
  No one who has been emasculated by crushing or cutting may enter the assembly of the LORD.

  New American Standard Bible
  No one who is emasculated or has his male organ cut off shall enter the assembly of the LORD.

  The Message
  No eunuch is to enter the congregation of God.

  Amplified Bible
  HE WHO is wounded in the testicles, or has been made a eunuch, shall not enter into the congregation of the Lord.

  New Living Translation
  If a man’s testicles are crushed or his penis is cut off, he may not be admitted to the assembly of the Lord.

  King James Version
  He that is wounded in the stones, or hath his privy member cut off, shall not enter into the congregation of the LORD.

  English Standard Version
  No one whose testicles are crushed or whose male organ is cut off shall enter the assembly of the LORD.

  Contemporary English Version
  If a man’s private parts have been crushed or cut off, [a] he cannot fully belong to the Lord’s people.

  New King James Version
  He who is emasculated by crushing or mutilation shall not enter the assembly of the LORD.

  21st Century King James Version
  He that is wounded in the stones or hath his private member cut off shall not enter into the congregation of the LORD.

  American Standard Version
  He that is wounded in the stones, or hath his privy member cut off, shall not enter into the assembly of Jehovah.

  Young’s Literal Translation
  One wounded, bruised, or cut in the member doth not enter into the assembly of Jehovah;

  Darby Translation
  He that is a eunuch, whether he have been crushed or cut, shall not come into the congregation of Jehovah.

  New Life Version
  No man who has his sex part crushed or cut off will go into the meeting of the Lord.

  Holman Christian Standard Bible
  No man whose [testicles] have been crushed or whose penis has been cut off may enter the Lord’s assembly.

  New International Reader’s Version
  No man whose sex organs have been crushed or cut can join in worship with the Lord’s people.

  New International Version – UK
  No-one who has been emasculated by crushing or cutting may enter the assembly of the LORD.

  Today’s New International Version
  No one who has been emasculated by crushing or cutting may enter the assembly of the LORD.

  Also, it is forbidden to offer to the LORD an animal whose testicles are bruised, crushed, torn or cut.

  Leviticus 21:20
  or who is hunchbacked or dwarfed, or who has any eye defect, or who has festering or running sores or damaged testicles.

  Leviticus 22:24
  You must not offer to the LORD an animal whose testicles are bruised, crushed, torn or cut. You must not do this in your own land,

  I do not know why the Biblical Lord is very interested in the genital organs?
  Why the Biblical Lord excludes Eunuch from the His Assembly and Congregation,
  Why the Eunuch Cannot Become One of the Lord’s People , Why the Eunuch Can not Go Into The Meeting Of The Lord Why the Eunuch Can not Worship With the Lord’s People.

  Jesus told the Young Man who called him-why do you call me Good ? Only God is good? Mark:10:8
  Jesus has no qualities of God in Gospels and a Jewish Patriot who tried to fight Romans.

  Mr.Chilsam’s Non connected claims are totally false. Bible is Anit-Human, Racist and same is Jesus.

 8. I quote from

  Mr.Chilsam’s un warranted claims are false – Bible is anti-Humanistic and same is Jesus.
  Stick on to Subject

 9. // இந்தியாவின் பெயர் “இந்து தேசம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

  அலெக்சாண்டர் காலம் வரை பாரத தேசம் வெறும் வாடா நாடு வரை மட்டுமே என்று நம்பப்பட்டது – அவர்கள் கங்கையை கடல் என்று எண்ணினார்கள் – “Aristotle” அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்களுக்கு அப்படிதான் பாடம் சொல்லி கொடுத்தார் – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்து வந்த பிறகே அவர்களுக்கு உண்மை தெரிய வந்தது

  அக்கால மேற்கத்தியரின் எண்ணத்தில் “இந்து நாடு” என்பது “indus valley civilization” இருந்த இடத்தை மட்டுமே குறித்தது

 10. Dear Ram,

  //பூகம்பம் வரப்போகுது திருச்சி சார். ஒரே லைன்ல இப்படி முடிச்சிட்டீங்க. சே. நீங்க இப்படி ஆய்டுவீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. (சும்மா வ்ளாட்டுக்கு)//

  They are in a difficult and peculier situation. Our films use their characters but with comtempt!

  I dont have any solution to alluviate their suffereings.

  Better me keep quiet rather not complicating the matter further!

 11. // According to the Bible, Deuteronomy 23:1
  Eunuch is Excluded From the Assembly and the Congregation, Cannot Become One of the Lord’s People , Can not Go Into The Meeting Of The Lord and Can not Worship With the Lord’s People…. Mr.Chilsam’s un warranted claims are false – Bible is anti-Humanistic and same is Jesus. Stick on to Subject//
  திரு.தேவப்ரியா அவர்களுக்கு, மிக நீண்ட- விவரமான பதில்களைக் கொடுத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியில் எம்மையெல்லாம் ஆழ்த்திவிட்டீர்கள்;
  அது எத்தனை மொழிபெயர்ப்பிலிருந்தால் என்ன?

  சரி, என்னுடைய கருத்தைச் சொல்லுகிறேன்; தமிழ் வேதாகமத்திலேயே இதற்கு தெளிவான விவரமுண்டு; எனவே ரொம்ப சிரமப்பட வேண்டாம்; உங்கள் குற்றஞ்சாட்டும் பைபிள் வாக்கியத்தைப் பதிக்கும் தள நிர்வாகிகள் என்னுடைய விளக்கமளிக்கும் வாக்கியத்தினைப் பதிக்கமாட்டார்கள்; எனவே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்;

  நீங்கள் குறிப்பிட்ட உபாகமம்.23:1 வசனத்தை மீண்டும் வாசியுங்கள், அது செயற்கையாகத் தன்னை திருநங்கையாக மாற்றிக் கொள்ளுபவர்களைக் குறிப்பிடுகிறது என்பது விளங்கும்; அவர்கள் ஒரு இயல்பான வாழ்க்கை வாழும் கூட்டத்தில் இணைந்தால் மற்றவரையும் அதுபோல மாற்றுவதற்கு வாய்ப்பு உண்டல்லவா? எனவே தான் ஒழுக்கத்தை விரும்பும் கடவுள் அவர்களைத் தனிமைப்படுத்தச் சொல்லுகிறார்; இன்றைக்கும் நமது சமுதாயத்தில் அவர்களைக் கண்டு அச்சப்படும் சூழ்நிலை நிலவவும் அதுவே காரணமாகும்;

  (comment edited & published)

 12. எபிரேய மக்களை ஒன்றிணைக்க அரசிய ரீதியிலான பல கட்டுக்கதைகளே பைபிள் பழைய ஏற்பாடு என இஸ்ரேல் நாட்டின் பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர் என்பதை நான் பல ஆதாரங்களுடன் கொடுத்துள்ளேன். வலைப்பூவில், ஒரீரு சாபம் கொடுத்து ஓடிவிட்டீர்.

  • இஸ்ரேல் பழைய ஏற்பாடு பைபிள் விவிலியம் சாலமன் தாவீது
  https://devapriyaji.wordpress.com/category/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%88%e0%ae%af-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%88%e0%ae%aa/

  இன்றைய பைபிளியல் அறிஞர்களின் பெரும்பான்மையோர் முடிவு
  – எபிரேயர்கள் இஸ்ரேலைச் சேர்ந்த மக்களே,
  யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எகிப்து பயணம்
  – யாத்திர ஆகமம் முழு கட்டுக் கதை. BCE 200௪00 வாக்கில் பக்கத்து நாட்டு சட்டங்களின் பலவற்றுடன் செர்த்து மோசேவிற்கு யாத்திரையின் போது சொன்னதாகப் புனையப் பட்டுள்ளது.
  BCE 720 வாக்கில் தான் ஜெருசலேம் பெரிதாகி வளம் பெற்றது. தாவீது, சாலமன் இவை வெறும் கட்டுக்கதையே.

  தமிழ் பைபிள் வசனத்தில் முரண்பாடு காட்டினால் உடனே மழுப்பலாக பல ஆங்கில பைபிள் காட்டி வேறு கதை விடுவீர்கள். நான் ஆங்கிலம் காட்டினால் இப்போது கதை மாற்றுகிறிர்கள். பழைய ஏற்பாட்டின் நம்பிக்கைக் குறிய ஏடுகள் CE800 வாக்கிலானது. பழைய- புதிய ஏற்பாட்டின் முக்கிய ஏடுகளை ஒன்றிணைத்துப் பார்க்கையில் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல மாற்று உள்ளன என்றும், மாற்று சொல் இல்லாத வார்த்தைகளே இல்லை என கலைக்களஞ்சியங்கள் கூறுகின்றன. இந்நிலையில் உங்கள் வாதத்திற்கு அர்த்தமே இல்லை.

  இயேசு என்னும் புதிய ஏற்பாட்டு புராண கதா நாயகன்
  17. பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, நல்ல போதகரே நித்திய ஜீவனைச்சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்;18. அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன்ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;

  ஆனால் அந்த மனிதனையே அதிலும் யூதரல்லாதொரை நாய் என்றும் பன்றி என்றும் அருவருப்பாகப் பேசிய்ச் இயேசுவை போற்றிக் கூறும்படி ஏதுமில்லை- சுவிசேஷங்களை முழுமையாக நடுநிலையாகப் பார்க்கும் அனைவரும் உணரலாம். உலகம் போற்றும் 20ம் நுற்றாண்டின் ஒப்பற்ற தத்துவ ஞானியும் நோபல் பரிசு பெற்றவௌர்மான பெட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் -“நான் ஏன் கிறிஸ்துவரல்ல கட்டுரையின் ஆங்கில வடிவம்- இங்கே

  https://www.positiveatheism.org/hist/russell0.htm

  பைபிள் ஒரு ஆதாரமற்ற வெறும் அரசியல் காரணங்கட்குப் புனையப் பட்ட இஸ்ரேல் நாட்டின் கட்டுக்கதை- அதை ஏன் இன்கே நுழைக்கிரீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *