இஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.

சிறுபான்மையினரின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தன்னுடைய மற்றுமொறு ஓட்டு வங்கி அரசியல் நோக்கத்துடன் “இஸ்லாமிய வங்கி”களைத் துவக்க முடிவு செய்துள்ளது.
UAE-FINANCE-ISLAMIC BANIK
வளைகுடா நாடுகளிலிருந்து சுமார் ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கான முதலீடுகளைக் கவரும் நோக்கத்தின் பெயரில் இஸ்லாமிய வங்கிகளை அறிமுகப் படுத்துவதாக அரசு முடிவெடுத்திருக்கிறது. மந்திரி சபைச் செயலர் தலைமையில் நிதியமைச்சகச் செயலர் உட்பட பல செயலர்கள் கூடிய ஒரு குழுவை சத்தமின்றி அமைத்து, ஆலோசனை செய்யப் பணித்தது மத்திய அரசு. அந்தக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு இஸ்லாமிய வங்கிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையின்படியே இந்திய ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும் சேர்ந்து, இஸ்லாமிய வங்கிகளைத் துவக்குவதற்கான சட்டத் திருத்தங்களை கொண்டுவரத் தேவையான பணிகளை மேற்கொண்டுள்ளன.

“இந்திய-அராபிய பொருளாதார உச்சிமாநாடு” (Indo-Arab Economic Summit) ஒன்றை, வரும் பிஃப்ரவரி 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் புது தில்லியில் நடத்த ஏற்பாடு செய்து வரும், “இந்திய-அராபிய பொருளாதார கூட்டுறவு மன்றம்” (Indo-Arab Economic Co-operation Forum) என்ற அமைப்பின் ஆதரவாளரும் ராஜ்ய சபையின் துணைத் தலைவருமான திரு.ரகுமான் கான் அவர்கள், மத்திய அரசின் முடிவை உறுதி செய்துள்ளார். அவர், “துணிகர மூலதனம் (Venture Capital), பரஸ்பர நிதி (Mutual fund), போன்ற வழிகளை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு இணக்கமாக்குவதன் (Sharia compliant) மூலம் இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெரும் மூலதனத்தைக் கவரலாம்” என்றும் “இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு இணக்கமான சில பூர்வாங்க வேலைகள் பாரத ஸ்டேட் வங்கி (SBI), இந்திய ஐக்கிய டிரஸ்ட் (UTI) போன்ற நிறுவனங்களில் தொடங்கப் பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
(Ref: https://timesofindia.indiatimes.com/biz/india-business/Govt-may-allow-Islamic-banking-eyes-1tn-funds/articleshow/5507005.cms )

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ‘ஹாங்காங் ஷாங்காய் பாங்கிங் கார்பரேஷன்’ (HSBC) மற்றும் ‘ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி’ (Standard & Chartered Bank) ஆகிய வங்கிகளில் பிரத்தியேகமான இஸ்லாமிய வங்கிச் சாளரங்கள் (Exclusive Windows for Islamic Banking) உள்ளன. கடந்த 2008-ஆம் ஆண்டில், நாட்டின் நிதித் துறையில் ஏற்படுத்தவேண்டிய சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை ஆராய்வதற்காகத் திட்டக் கமிஷன் அமர்த்திய “ரகுராம் ராஜன் கமிட்டி”, இஸ்லாமிய வங்கிமுறையில் உள்ள சில கொள்கைகளைப் பரிந்துரை செய்துள்ளது என்பதையும் இத்தருணத்தில் நாம் நினைவு கூறுவது முக்கியமாகும்.
(Ref: https://www.financialexpress.com/news/raghuram-rajan-report-advocates-introduction-of-islamic-banking/357126/ ).

இஸ்லாமிய வங்கிமுறை (Islamic Banking) என்பது, இஸ்லாமியச் சட்டத்தின் (Sharia) கீழ் உள்ள கொள்கைகளின் படி, இஸ்லாமியப் பொருளாதர முன்னேற்றத்தின் ஊடாக, வழக்கமாகப் பிரயோகிக்கப்படும் முறையாகும். இம்முறையின் முக்கியமான அம்சம் என்னவென்றால், இஸ்லாமிய ஷரியா சட்டமானது பணம் கொடுக்கல் வாங்கல் செயல்பாட்டின் போது, “வட்டி” (Interest) கொடுப்பதையும் வாங்குவதையும் தடை செய்கிறது. மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் படி “கடும் வட்டி” (Riba – Usury) விதிப்பதையும், ஷரியா சட்டத்தின் கீழ் தீயதென விலக்கப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள் (பன்றி மாமிசம், மதுவகைகள் மற்றும் சூது, சினிமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகள், முதலியவை) (Haraam – Forbidden) ஆகியவற்றில் முதலீடு செய்வதையும் தடை செய்கின்ற முறையாகும் இது.

மேற்கண்ட கொள்கைகள், எட்டாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை, அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த வங்கி நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருந்தாலும், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, இருபதாம் நூற்றண்டில் தான் இக்கொள்கைகளை இஸ்லாமிய சமூகத்தின் தனியார் துறை வணிக நிறுவனங்களில் பிரயோகப் படுத்தும் விதமாக இஸ்லாமிய வங்கிகள் தொடங்கப் பட்டன.

islamic-banking-conference1963-ல் எகிப்து தேசத்தில் துவங்கப்பட்ட நவீன இஸ்லாமிய வங்கி முறையானது, தற்போது பத்து சதவிகிதத்திலிருந்து பதினைந்து சதவிகித அளவில் வளர்ந்து, அமெரிக்கா உட்பட 51 நாடுகளில் 300 நிறுவனங்களில் படர்ந்து இருக்கின்றது. 1994-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பஹ்ரைனில் நடந்து வரும் “உலக இஸ்லாமிய வங்கிமுறை மாநாடு” (World Islamic Banking Conference), இஸ்லாமிய வங்கிமுறை மற்றும் இஸ்லாமிய நிதி விஷயங்கள் ஆகியவற்றை ஆலோசிக்கும் இஸ்லாமியப் பொருளாதாரத் தலைவர்கள் அதிக அளவில் கூடும் முக்கியத்துவம் கொண்ட ஒரு அரங்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. மற்றுமொரு ஆச்சரியமான மற்றும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், “நொடிந்து போகும் சந்தைகளுக்கு நோய் தீர்த்து குணமாக்கும் மருந்தாக இஸ்லாமிய நிதிநிர்வாகக் கொள்கைகள் பயன்படும்” என்று கத்தோலிக்க தலைமையகம் வாடிகன் கூறியுள்ளது!

பிஃக்ஹ் அல்-முஅமலத் (Fiqh al-Muamalat – Islamic rules on transactions) என்று சொல்லப்படுகிற ஷரியா சட்டத்தின் படி தான் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. ‘லாப நஷ்டங்களைப் பகிர்தலும் கடும் வட்டியைத் தவிர்த்தலும்’ (sharing of profit and loss and the prohibition of riba) இதன் அடிப்படைக் கொள்கைகளாகச் சொல்லப்படுகின்றன. இஸ்லாமிய வங்கி முறைப்படி செய்யப்படும் அடமான விவாகரத்தில் (Mortgage Transactions), வாங்குபவருக்கு வங்கி கடன் கொடுப்பதில்லை. பதிலாக விற்பவரிடமிருந்து வங்கியே அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்கி, சந்தை விலையை விட அதிக லாபத்துடன் விலை வைத்து, வாங்குபவருக்கு மீண்டும் விற்கிறது. வாங்குபவருக்கு வங்கி செய்து கொடுகும் ஒரே வசதி அந்தத் தொகையை திருப்பித் தர சுலபமான தவணை முறையை அளிப்பது தான். இருப்பினும், தன்னுடைய நன்மையையும் காத்துக் கொள்ளும் விதமாக வாங்குபவரிடமிருந்து விற்பனைப் பொருளுக்கு ஈடான ஜாமின் உத்தரவாதத்தையும் (strict collateral) பெற்றுக் கொள்கிறது வங்கி.
(Ref: https://en.wikipedia.org/wiki/Islamic_banking ). இதன் மூலம் என்ன தெரிகின்றதென்றால், “வட்டி” இல்லை என்று மேம்போக்காகத் தெரிந்தாலும், வங்கியின் “லாபத் தொகை” பின்வாசல் வழி “வட்டி”யாக வருகிறது!

eyஇஸ்லாமிய வங்கிகளை அறிமுகம் செய்யலாம் என்று மத்திய அரசு எண்ணிக் கொண்டிருக்கையில், கேரள மாநில அரசு கடந்த ஆகஸ்டு மாதத்தில் “எர்ண்ஸ்ட் & யங்” (Ernst & Young) என்கிற நிறுவனம் அளித்த ஒரு திட்ட அறிக்கையை ஊர்ஜிதம் செய்து இஸ்லாமிய வங்கிமுறையை அறிமுகம் செய்வதென்று முடிவு எடுத்தது. அக்டோபர் 14 தேதியிட்டு வெளியிட்ட அரசாணையில், கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (KSIDC – Kerala State Industrial Development Corporation) ஷரியா சட்டப்படி இயங்குமாறு ஒரு இஸ்லாமிய நிதி நிறுவனத்தைப் பதிவு செய்ய அனுமதி அளித்தது கேரள அரசு. பதிவு செய்ய இருக்கின்ற நிதி நிறுவனத்தில் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் 11 சதவிகித பங்குகளைக் கொண்டிருக்கும். மேலும், துவக்கத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனமாக (NBFC – Non Banking Finance Company) பதிவு செய்யப்படும் அந்நிறுவனம் பின் நாட்களில் முழுவதும் ஷரியா சட்டப்படி இயங்கும் இஸ்லாமிய வங்கியாக மாற்றப்படும். நடப்பு ஆண்டிலேயே (2009) பதிவு செய்வதற்கான அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு 2010-ல் வங்கி இயங்குமாறு செய்வதே கேரள அரசின் திட்டம்.

ksidcதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி திரு.டி.ஜி.மோஹன்தாஸ் என்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் (CHN/RIA/09/985/22 dated 10.11.2009) அளிக்கையில், கேரள மாநில தொழிற் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், “KSIDC இஸ்லாமிய நிதிமுறை நிறுவனத்தை ஸ்தாபித்து விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; இது KSIDC-யும் தனியார்களும் சேர்ந்து விருத்தி செய்யும் நிறுவனமாகும்; இந்நிறுவனம் பணம் கொடுக்கல் வாங்கல்களில் வட்டி வசூல் செய்யாது; இது முழுவதுமாக இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இயங்கும்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். மேலும், தலைமை நிர்வாக அலுவலர் (CEO-Chief Executive Officer), நிறுவனச் செயலர் (Company Secretary), போன்ற முக்கியப் பணிகளுக்கான “ஆட்கள் தேவை” விளம்பரங்களைத் தங்கள் இணையதளத்தில் (https://ksidc.org/) வெளியிட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், தலைமை நிர்வாக அலுவலர் “ஷரியா ஆலோசனை மன்றம்” (Shariah Advisory Board) கீழ் அடிபணிந்து நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் நடவடிக்கைகளை, ஷரியா சட்டத்தை நன்கு அறிந்த மத குருமார்களும் இஸ்லாமிய வங்கிமுறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களும் கொண்ட ஷரியா ஆலோசனை மன்றம், கூர்ந்து கவனித்து வரும். இந்நிறுவனம் ஷரியா சட்டத்திற்கு இணக்கமாக இயங்குமாதலால், இதன் தலைமை நிர்வாக அலுவலர் KSIDC இணைய தளத்தில் கூறியுள்ளபடி, ஷரியா ஆலோசனை மன்றத்தின் கீழ் அடிபணிந்து பணி புரிவார்.

கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி பொது நல வழக்கு தொடர்ந்தார். மேலே சொல்லியுள்ள தகவல்களை அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தாலும், அவைகளுக்கான ஆவணப் பத்திரங்களை அளிக்கவில்லை என்று நீதிபதிகள் எடுத்துக் கூறியதால், டாக்டர் ஸ்வாமி அவகாசம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உயர்நீதிமன்றம் வழக்கை ஜனவரி ஐந்தாம் தேதிக்குத் தள்ளி வைத்தது. (Ref: https://www.zeenews.com/news585754.html ).

subramanianswamy_01டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி தன் வாதத்தில், இந்தியாவில் இயங்கும் இஸ்லாமிய வங்கியோ அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனமோ கூட, கீழ்காணும்
1. 1932-ஆம் வருடத்திய கூட்டுத் தொழில் சட்டம் – Partnership Act (1932),
2. 1872-ஆம் வருடத்திய இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் 30-வது பிரிவு – Section 30 of Indian Contract Act (1872).
3. 1949-ஆம் ஆண்டின் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 5, 9, 21 பிரிவுகள் – Sections 5(b) & (c), 9 and 21 of Banking Regulation Act (1949)
4. 1934-ன் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் – RBI Act (1934)
5. 1961-ன் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் – Co-operative Societies Act (1961). மற்றும்
6. Negotiable Instruments Act (1881)
ஆகிய சட்டங்களை மீறுவதாகத் தான் இருக்க முடியும் என்று தெளிவு படக் கூறியுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய பொதுநல வழக்கில், இஸ்லாமிய வங்கியில் 11% பொது நிதியை KSIDC முதலீடு செய்வது, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காகப் பொதுப்பணத்தைச் செலவு செய்வது போன்றது என்கிற வாதத்தையும் வைத்துள்ளார். அவர், “இவ்விஷயத்தில் அரசாங்கத்தின் செயல் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கிறது என்பது தெளிவு. அரசாங்கமே ஒரு குறிப்பிட்ட மதச்சட்டத்தின் கீழ் இயங்குமாறு ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்து அதில் முதலீடும் செய்வது என்பது அந்த மதத்தினருக்கு மட்டும் ஆதரவாகச் செயல் படுவது தான். இச்செயல் நமது அரசியல் சாஸனத்தில் (Constitution) கூறப்பட்டுள்ள 14-ஆம் க்ஷரத்து அளிக்கும் ‘சட்டத்தின் முன் சமத்துவம்’ (Equality before Law – Article 14) மற்றும் 25-ஆம் க்ஷரத்து அளிக்கும் ’மதச் சுதந்திரம்’ (Freedom of Religion – Article 25)ஆகிய உத்தரவாதங்களை மீறுவதாகும். உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வு (Constitutional Bench) பொது நிதியை ஒரு குறிப்பிட்ட மத நிறுவனத்தை விருத்தி செய்யப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பு அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், Ramana D Shetty v. International Airport Authority of India, AIR 1979 SC 1628: (1979) 3 SCC 489), SR Bommai v. Union of India (1994) 3 SCC 1, 233) மற்றும் M.P Gopalakrishnan Nair v. State of Kerala, (2005) 11 SCC 45 ஆகிய வழக்குகளின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி,
1. இந்த வழக்குச் சம்பந்தமான தாஸ்தாவேஜுகளை வரவழைத்து, ஸர்ஷியாரரி ரிட் (writ of certiorari) போன்ற ஒரு கட்டளையை, கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பிட வேண்டும்;
2. இந்த வழக்கின் சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, வேறு எந்தவிதமான கட்டளையாக இருந்தாலும், அந்த உத்தரவையிட்டு கேரள அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்;
3. வழக்கிற்கான செலவுகளைக் கேரள அரசின் பொறுப்பாக்கித் தீர்ப்பளிக்க வேண்டும் ஆகிய பிரார்த்தனைகளை முன்வைத்தார்.

பின்னர், ஜனவரி ஐந்தாம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாண்புமிகு உயர் நீதிமன்றம், “கேரள அரசோ அல்லது கேரள மாநில தொழிற் மேம்பாட்டுக் கழகமோ, இஸ்லாமிய வங்கியையோ அல்லது இஸ்லாமிய நிதிமுறை நிறுவனத்தையோ ஸ்தாபிக்க மேற்கொண்டு எந்தவிதமான முயற்சியோ நடவடிக்கைகளோ மேற்கொள்ளக் கூடாது” என்று தடை விதித்துள்ளது. இஸ்லாமிய வங்கியானது, இந்திய அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும் வங்கிமுறைகளுக்கும் எதிரானது என்று சுப்ரமணியன் ஸ்வாமி தொடர்ந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மேலும் உள்ள நடவடிக்கைகளுக்குத் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், கேரள அரசிற்கும், மத்திய அரசிற்கும், கேரள மாநிலத் தொழிற் மேம்பாட்டுக் கழகத்திற்கும் நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளது.

கேரளாவை ஆளும் கம்யூனிச அரசிற்குத் தன் ஆதரவை நல்கியதோடு மட்டுமல்லாமல், கேரள உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கையும் கவனித்து வந்துள்ள போதிலும், மத்திய அரசில் தலைமை வகித்து வரும் காங்கிரஸ் கட்சியானது, இஸ்லாமிய வங்கிகளை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. ஆயினும் தன் முடிவிற்குக் கடும் எதிர்ப்புகளை எதிர்பார்த்த காங்கிரஸ் அரசு, அறிமுகப் படுத்தப்போகும் நிதி நிறுவனங்களுக்கு “இஸ்லாமிய வங்கிமுறை” (Islamic Banking) என்கிற உண்மைப் பெயரை மாற்றி, “பங்குகொள்ளும் வங்கிமுறை” (Participative Banking) என்று வைத்து ஒரு மதச்சார்பற்ற வண்ணம் பூச நினைப்பதாகச் செய்திகள் வருகின்றன.

cp-joshiஇது, சில தினங்களுக்கு முன்னால் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சி.பி.ஜோஷி அவர்கள், “வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களின் பட்டியலில் முஸ்லீம்கள் நேரிடையாகச் சேர்க்கப் படவேண்டும்” என்று கூறிவிட்டுப் பின்னர் எதிர்ப்புகள் வருமென்று அஞ்சி, “முஸ்லீம்கள் என்கிற வார்த்தைக்குப் பதிலாக அந்த இடத்தில் சிறுபான்மையினர் என்று இருக்கவேண்டும்” என்று கூறியதைத் தான் நினைவுபடுத்துகிறது!

இத்தருணத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆரம்பகாலத்திலிருந்து முஸ்லீம் சமுதாயத்திற்கு மட்டும் சாதகமாகச் செய்த செயல்களையும் முடிவுகளையும் மீண்டும் நாம் நினைவு கூறுவது முக்கியம். பொடா (POTA) சட்டத்தை வாபஸ் பெறுவதில் ஆரம்பித்த இந்த மானம் கெட்ட செயல், ராணுவத்தில் எத்தனை முஸ்லீம்கள் இருக்கின்றனர் என்று தலைக் கணக்கு எடுக்க வேண்டும் என்ற சோனியாவின் பேச்சு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை விசாரித்து தங்களுக்கும் 55 ஹிந்துக்களை உயிரோடு எரித்துச் சாம்பலாக்கிய முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கும் சாதகமாக அறிக்கை தருவதற்காக நீதிபதி பானர்ஜி கமிட்டி அமைத்தது, இந்தியாவின் அனைத்து ஆதாரங்களுக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் முதல் உரிமை முஸ்லீம்களுக்கே என்று பிரதம மந்திரி மன்மோகன் இயம்பியது, ரஜீந்தர் ஸச்சார் கமிட்டி மற்றும் ரங்கனாத் மிஷ்ரா கமிட்டி ஆகியவற்றை அமைத்தது, என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது, முஸ்லீம்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் பட்டியலில் நேரிடையாகச் சேர்ப்பது மற்றும் இஸ்லாமிய வங்கிகளைத் தொடங்குவது என்று மேலும் தொடர்கிறது!

எனவே, கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் மௌனத்தைத் திரு.சுப்பிரமணியன் ஸ்வாமி அவர்கள் கேள்வி எழுப்பிச் சுட்டிக் காட்டியது சரியானதே. அவர், “துபாய் போன்ற நாடுகளில் இருக்கும் பணக்கார தொழிலதிபர்களையும், ஹவாலா கில்லாடிகளையும் காங்கிரஸ் கட்சி கோபமூட்ட விரும்பவில்லை. மேலும், பிரதமரின் முதன்மைச் செயலர் திரு.டி.கெ.எ.நாயர் அவர்களே கேரள மாநிலத் தொழிற் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதாலும், பிரதமரே நாட்டின் அனைத்து ஆதாரங்களுக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் முதல் உரிமை முஸ்லீம்களுக்கே என்று கூறியுள்ளதாலும், காங்கிரஸ் கட்சியானது, திரௌபதியின் உடைகள் களையப்பட்டபோது துரோணர், பீஷ்மர் போன்றவர்கள் வாய் மூடி மௌனம் காத்ததைப் போன்று, மௌனம் காக்கிறது. எனவே, கேரள மாநிலத்தில் உள்ள தேச பக்தர் அனைவரும் எழுச்சியுடன் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெகு வேகமாக இஸ்லாமியமாக்கப் படும் தங்கள் மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும், அவர்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள தேசபக்தர்கள் ஆதரவளித்து உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் சேர்த்து 51 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் பரவியிருந்தாலும், “பாதுகாப்பு வல்லுனர்கள்” மற்றும் “இஸ்லாம் பார்வையாளர்கள்” ஆகியோர் திடீரென்று இஸ்லாமிய வங்கிகள் பெருகுவதைச் சந்தேககத்துடனும் கவலையுடனும் கவனித்து வருகின்றனர். “ஷரியா நிதிமுறை என்பது குரானில் உள்ள திரித்துக் கூறப்பட்ட போதனைகள் என்பது மட்டுமல்லாமல், அறுபதுகள் வரை பெரும்பாலும் முஸ்லீம்களின் பழக்க வழக்கத்தில் வராமல் இருந்த இம்முறையானது, தற்போது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகிறது” என்று அவர்கள் கூறுவதாக சி.பி.என் நியூஸ் (CBN News) கூறுகிறது. இந்த வங்கிமுறை அறுபதுகள் வரைக் காணாமல் போயிருந்ததையும், கடந்த பனிரண்டு ஆண்டுகளாகத் திடீரென்று இம்முறை பழக்கத்தில் வருவது அதிகமாவதையும் சந்தேகத்துடன் விசாரித்து வந்த வல்லுனர்கள், இம்முறையை “நிதி வழி ஜிகாத்” (‘Financial Jihad’ or ‘Jihad with Money’) என்று அழைக்கின்றனர் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. மேலும் அது, ஷரியா ஆலோசனை மன்றத்தில் தீவிரவாதம் மிக்க மத குருமார்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும், இஸ்லாமிய வங்கிகளின் நிதியானது குரானில் கூறப்பட்டுள்ளபடி ஜிகாத் புரிவதற்குப் பயன்படுத்தப் பட்டு, ஜனநாயக நாடுகளில் உள்ள சட்டப்பூர்வமான ஆட்சிமுறையைத் தகர்த்து விடும் என்றும் வல்லுனர்கள் கூறுவதாகத் தெரிவிக்கின்றது.
(Ref: https://www.youtube.com/watch?=b_emH9gy7KI&feature=related ).
இந்த மாதிரியான இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய தேசங்களுக்கு வேண்டுமானால் நன்மை பயப்பதாக இருக்கலாம். ஆனால், இந்தியா போன்ற 85% ஹிந்துக்கள் உள்ள மதச்சார்பற்ற நாடுகளுக்கு ஒத்து வராது. அனைத்து இந்தியர்களும் ஒன்றாக இணைந்து இருக்கவேண்டிய தருணத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டனி அரசானது, முஸ்லீம்களின் நலன் மட்டும் பார்த்து, ஹிந்துக்களைப் பிரித்து, ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும். இவ்வாறு அரசாங்கங்களும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளும் நடந்துகொள்வதால், முஸ்லீம்கள் மற்ற இந்தியர்களிடமிருந்து மேலும் மேலும் பிரிந்து தனிமைப் பட்டுப் போகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக முஸ்லீம்கள் இந்த வேதனையான உண்மையை உணர்வதாகத் தெரியவில்லை. அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்கிறார்களோ, அவ்வளவிற்கு இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.

32 Replies to “இஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.”

 1. ஐயா எடிட்டர் அவர்களே…
  இந்த விஷயத்த பொருத்த வரைக்கும்,இஸ்லாமிய வங்கி பற்றி,நிறைய விஷயங்களை அறியத்தந்தற்கு நன்றி..
  நீங்களும்,ஷ்ரியா,ஜிகாத்,னு என்னனென்னமோ சொல்லி பாக்கலாம்னு பாத்தாலும்,அதில் உள்ள நல்ல விஷயங்களே கோலோச்சுகிறது…
  வட்டியில்லா வங்கி முறை உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு பெரும் பயன் அளிக்கிறது.அது வெற்றிகரமாகவும் இயங்குகிறது….
  அதை விடுத்து.அதை இஸ்லாம் சொல்கிறது என்ற ஒரே காரனத்துக்காக நல்ல விஷயத்தையும் எதிர்ப்பது,சுத்த மதவாதமே தவிர வேரில்லை.
  இதையே ஒரு ஹிந்து வல்லுனர் சொல்வாரேயானால்
  இதே தளத்தில் ஆகா என்ன அருமையான திட்டம் என சொல்வீர்கள்.
  சும்மா ஜிகாத்,அது இதுன்னு கத விடாதீங்க…
  ஆமா இது வட்டியை ஆதாரமாக கொண்டு இயங்கும் வங்கி முறையின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கும்…
  இது அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் என தங்கள் கட்டுரையே பேசுகிறது…
  வட்டி….இதன் பாதிப்பை ஹிந்து முஸ்லிம் அல்ல,அனைவரும் அனுபவிப்பதே…
  அதன் மூலம் சாவக்கூடியவன் யாரானாலும்..இழப்புதான்…
  ந்ல்ல விசய்ங்களை யார் சொன்னாலும்,,..அதை மதம் தாண்டி ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்…..
  வட்டியை ப்ரதானமாக கொண்ட இந்திய அரசாங்கமும்,அதன் அங்கமான ரிசர்வு பேங்கும் இது ஒரு நல்ல திட்டம் என்றே கொள்கிறது…இதில் மதம் பார்க்கப் படுவதில்லை.

  இது இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை..அவ்வளவே….அதை விடுத்து இதற்க்கு,அதீத முயற்சி எடுத்து.மதச்சாயம் பூச முயல்வது….
  சுத்த பிற்போக்கு தனமே…….
  ————————

 2. ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும்…………….//////////

  சரியா சொன்னீங்க.

 3. Nice article Haran sir.

  The article is clear about one thing – that this banking system is encouraging “religion” based support to all the human welfare and that support too is given by the government only to the powerful minorities and not for powerless majorities and minorities.

  But, this fact could be easily and strongly refuted by another argument with respect to the benefit to the poor:

  “The installment method of paying back the loan is cheaper than the paying back the interest rates. So, it benefits the poor enterpreuners.”

  If the author could disprove this argument with facts and statistics, then it will add more strength against the jihadi system and give clarity to the readers why they should not invest and become losers.

 4. நாலு பேர்கிட்ட வட்டி வாங்கமாட்டோம் ஆனா நாலு பேர வெட்டி சாய்ப்போம் – வட்டி வாங்காம இருப்பதெல்லாம் ஒரு தாத்பர்யமா
  வட்டி வாங்காமல் இருப்பதென்பது யாரையும் கடும் வட்டி சுமத்தி கஷ்டத்தில் ஆழ்த்தக் கூடாதென்பதற்காக, அதற்குதான் இப்போது அரசாங்க விதிகளின் படி அதிக வட்டி சுமை ஏற்றாத வங்கிகள் இருக்கே.
  ஷாரிய என்னவோ காலாவதியான நடைமுறைக்கே ஒவ்வாத ஒரு ஸ்ம்ரிதி போலத்தான் அதை பிடித்துகொண்டு இன்னும் தொங்குவதேனோ தெரியல.

  – இந்த விஷயமெல்லாம் [பணம் குடுக்கல் வாங்கல் எல்லாம்] நம்முடைய ச்ம்ரிதிகளில் மிக தெளிவாக உள்ளன – ஏன் அதை எல்லாம் திரட்டி எடுத்து ஹிந்து பாங்கிங் என்று ஒன்று புதூச ஆரம்பிக்கலாமே.

 5. CBS channel had told about Islamic finance and he had highlighted and CNN propogating about Indian policies r u ready to oppose that? Oh u will not do. cos ur anti-Congress person. Can u believe that few Hindus when I came back from Dubai asked me about Islamic banking and Urged to get loan from there with repeated calls ( Still I am having their phone nos. in chennai and intrestingly all are Iyengars!!!!) போங்க சார். மத துவேஷம் கலக்காம எழுதுங்க!

  (edited and published)

 6. எனது பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு,முதலில் எனது நன்ற்யை தெரிவித்துக் கொள்கிறேன்.

  //ஐக்கிய முற்போக்கு கூட்டனி அரசானது, முஸ்லீம்களின் நலன் மட்டும் பார்த்து, ஹிந்துக்களைப் பிரித்து//

  இந்த கருத்துடன் என்னால் உடன்பட இயலவில்லை.இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை கொண்டு இயங்கும் ஒரு வங்கியே இது.அது இஸ்லாமியர்களுக்கான வங்கி அல்ல.அப்படிப் பட்டதாக இருந்தால்.அந்த வங்கி இருக்க கூடிய 10% முஸ்லிம்களை கொண்டு இலாபகரமாக செயல்பட முடியாது.இது முதல் விஷயம்.இரண்டாவது,அப்படி பட்ட வங்கி மதம் சார்ந்து இருக்குமேயானால்,அந்த அரசாங்கம் பங்குகளை பெற்று இருக்க முடியாது.

  // பதிவு செய்ய இருக்கின்ற நிதி நிறுவனத்தில் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் 11 சதவிகித பங்குகளைக் கொண்டிருக்கும்//

  வட்டியின் வன்கொடுமைக்கு ஆளாகுபவர்கள்,ஹிந்து முஸ்லிம் என பேதம் இல்லாது அனைவருமே தான்…
  அரசாங்கமே இதன் பங்குகளை கைகொள்ளும் போது,இது அனைத்து சமுதாய மக்களுக்குமான வங்கியாகவே இருக்கும்.அப்படி இல்லாத வங்கி முறை இந்தியாவுக்கு பொருந்தாது.

  இஸ்லாமிய பொருளாதாரம் என்பதால் எதிர்க்காதீர்கள்..இதனால் பயனடைவது,செல்வந்தர்கள் அல்ல.நடுத்தர வர்க்கத்தினரும்,,,,ஏழைகளுமே.. அதில் ஹிந்து என்ன முஸ்லிம் என்ன?

  வட்டியால் குடும்பத்துடன் இறந்து போகும் எனது சகோதரர்கள்,அவர்களை ஹிந்து,முஸ்லிம் என பிரிக்க முடிய வில்லை.அவர்களுக்காக எனதுள்ளம் உருகவே செய்யும்.அப்படிப் பட்ட பாதிப்பில் இருந்து அவர்கள் மீள,இது வல்லாத நல்ல ஒரு பொருளாதாரக் கொள்கையை முன்வைத்துவிட்டு…இதை எதிர்ப்பவர்கள்,எதிர்க்கலாமே.

  // இம்முறையை “நிதி வழி ஜிகாத்” (‘Financial Jihad’ or ‘Jihad with Money’) என்று அழைக்கின்றனர் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது //

  ம்ம் இது சுத்த ஹம்பக்…நிதி வழி போர் என்பது என்ன,என தெரிந்து கொள்ளுங்கள்.ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது விதிக்கும் பொருளாதாரத் தடையே,அது.
  இதன் மூலம்,அந்த நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்,அதன் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும்,வேலையின்மையை உருவாக்கி பட்டினி,அழிவைத் தர முடியும்…இதுவே நீங்கள் சொல்லும் நிதி வழிப் போர்.

  ஆனால் இந்த வங்கி அங்கு வெற்றிகரமாக இயங்குகிறது,எனும்போது…அது அந்த அரசாங்க விதிகளுக்கு உட்படாமல் இருந்து நடத்தமுடியாது. அதுவல்லாது.வங்கி கணக்கு வைத்து இருப்பவர்கள்,அதிகபட்சம் மக்களே.அந்த மக்களுக்கு இது அழிவை தருவதானால்,அவர்கள் அதை விட்டு நீங்கி செல்ல என்ன தடை இருக்க முடியும்.அப்படி சென்றுவிட்டால்,அது இருந்த இடம் தெரியாமல் அல்லவா போய் இருக்கும்..

  இந்த கதையை கிழப்பிவிட்டவர்கள்,வட்டியை ப்ரதானமாக கொண்ட வங்கியினரும்,அந்த அடிப்படை கொண்ட பொருளாதார நிபுனர்களுமே..வேறு எந்த குறையும் சொல்லி இதை தடுக்க முடியாத காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே,இந்த கூப்பாடு…

  // இந்தியா போன்ற 85% ஹிந்துக்கள் உள்ள மதச்சார்பற்ற நாடுகளுக்கு //
  // ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும் //

  ஓட்டு வங்கி அரசியல்.இது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.இந்தியாவில் 85 % ஹிந்துக்கள்,என தாங்களே சொல்கிறீர்கள்…அப்படி இருக்க.இந்த அரசு,நீங்கள் சொல்வது போல ஹிந்துக்களுக்கு எதிராக செயல் பட்டு விட்டு,எப்படி மறுமுறை ஆட்சியை பிடிக்க முடியும்…வெரும் 15 சத இதர மக்களை கொண்டா?
  அப்படி 15% உள்ள இதர மக்களில்,கிரித்தவர்கள்,தலித்கள்,இஸ்லாமியர்கள்,எனப் பிரித்தால்,10% மட்டுமே முஸ்லிம்கள் மிஞ்சுவார்கள்.அப்படி இருக்க கூடிய இந்த 10% முஸ்லிம்களை கொண்டு இந்த அரசு ஆட்சி பீடத்தை பிடிக்க முயல்கிறது எனும் வாதம் அறிவுக்கு ஒவ்வாத ஒன்றே….
  இதை மலிவான அரசியல் பன்னும் அரசியல் வாதிகள் தான் செய்கிறார்கள் என்றால்…நீங்களும் அதே கருத்தை,சிந்திக்காது முன்வைக்கிரீர்கள்….

  நன்றி
  ரஜின்

  (edited and published)

 7. அய்யா ரெஜின்

  //

  இது இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை..அவ்வளவே….அதை விடுத்து இதற்க்கு,அதீத முயற்சி எடுத்து.மதச்சாயம் பூச முயல்வது….
  சுத்த பிற்போக்கு தனமே…….
  //

  எல்லாத்தையும் படிச்ச நீங்க, வட்டியில்லா வங்கி என்பது ஜாலமே வட்டிக்கு பதில் வங்கிகள் லாபத்தை உயர்த்தி சமாளித்துவிடுகின்றன என்று சொல்லி இருந்தாரே

  ஹிந்து ச்ம்ரிதிகளில் வட்டியே வாங்க கூடாது என்று சொல்லாமல் – யார் யாரிடம் வாங்கலாம் எவ்வளவு வாங்கலாம், எப்படி வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு மதுரை அரவிந்த் மருத்துவமனை பற்றி தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன் – அவர்கள் ஏழைகளிடம் பணம் வாங்காமல் அறுவை சிகிச்சை செய்வார்கள், பணம் உள்ளவரிடம் குறைந்த அளவில் பணம் வாங்கிக்கொள்வார்கள் – இந்த பணம் உள்ளவர்கள் கொடுக்கும் பணத்திலிருந்து ஏழைகளுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது – “self sustaining model”. நீங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் வட்டியோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் லாபமோ இல்லாமல் வங்கி நடத்த இயலுமோ? முடியவே முடியாது – அதனால் இந்த காலாவதியான கொள்கை தேவை அற்றதே.

  – ச்ம்ரிதிகளோ அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாறுதல் கொள்ள வேண்டும் – ஷரியா காலத்திற்கு ஏற்ப மாரினாற்போல் தோன்ற வில்லை. ஒரு நல்ல முறையில் ஏன் இந்த சட்டம் உள்ளது என்று அணுகினால் – இந்த ஷரியா சட்டம் அரபு நாடுகளில் தோன்றிய பொது கடும் வட்டி பிரச்சனையை இருந்திருக்க வேண்டும், மக்கள் இதனால் அவதிபட்டிருக்க வேண்டும் அதனால் இந்த சட்டம் அவசியமானதாக இருந்திருக்க வேண்டும் – இன்னொரு காரணம் – மதத்தை உலகளாவிய அளவில் பரப்ப பணம் தேவை பட்டிருக்கும், அதை எளிய வழியில் அடைய இந்த சட்டம் உபயோகமாக இருந்திருக்கும்

  இந்திய அரசாங்கம் பல படி மேலே போய் வட்டியுடன் முதலையே தள்ளுபடி செய்கிறது – IP சிங்க் (மன்னிக்கவும் VP singh ) கேள்விபட்டிருக்கிறீர்கள – ஓட்டுக்காக ஒரு பத்தாயிரம் கோடி ச்வாஹா செய்தார் – இந்த கட்டுரையில் ஆசிரியர் ஒரு வோட்டு வங்கி ஏற்படுத்த அரசாங்கம் செய்யும் கேவலமான செயல்களையே சுட்டிக்காட்டி உள்ளார் – ஏன் அவர்கள் ஹிந்து ச்ம்ரிகளில் இருக்கும் வட்டி பற்றிய சட்டத்தை நடை முறை படுத்தலாமே அது (aravind hospital) போல ஒரு self sustaining model ஆகா இருக்குமே – இப்போது வங்கிகள் லாபத்தை ஏற்றும் back door mechanism தேவை இல்லாமல் போகுமே

  இது தான் இந்த கட்டுரையின் மையக் கருத்து என எனக்கு படுகிறது – muslim denounciation அல்ல

 8. //இது அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் என தங்கள் கட்டுரையே பேசுகிறது…//

  வங்கி துவங்கிய பிறகு இந்த வட்டியில்லா கடன் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்களா, அல்லது எல்லா மதத்தினருக்கும் உண்டான்னு க்ளியரா இல்லையே! உள்ள வந்த பிறகு முஸ்லீம்களுக்கு வட்டியில்லா கடன்னும் மத்த மதக்காரங்களுக்கு வட்டின்னும் பிரிச்சா பிரச்சனை அங்கே தானே ஆரம்பிக்கும். அதப்பத்தி தெளிவு இல்லையே. எங்ககிட்ட வட்டி வாங்கி உங்களுக்கு இலவசமா கொடுப்பார்களேயானால் இந்துக்களின் உழைப்பில் முஸ்லீகளை வாழ வைக்க அதாவது நேரடியாக முஸ்லீம் களுக்கு உழைத்துக் கொடுக்கும் அடிமைகளாக இந்துக்கள் மாற்றப்படுவார்களே. அது பற்றி ஒன்றும் தெரியவில்லையே! நீ வட்டி இல்லா கடன் அனுபவிக்க வேண்டும் என்றால் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று மதம் மாற்றத்திற்கு புது வழி உண்டுபண்ணுவார்களோ?

 9. அந்த வங்கி அனைவருக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்குமா அல்லது முஸ்லிம்களுக்கு மட்டும் கடன் கொடுக்குமா என்று தெளிவாகச்சொல்லுங்கள் ?

 10. சகோத்ரர் சாரங் அவர்களே.வட்டியையும் இலாபத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம்.
  வட்டி முறை வங்கி:இந்த வங்கி முறையானது,மக்கள் போடும் பணத்திற்கு வட்டி கொடுக்கிறது.மக்கள் கடனாக பெறும் பணத்திற்கு வட்டி வசூல் செய்கிறது.இப்படிப் பட்ட வங்கிக்கு வட்டியே மூல ஆதாரம்.அதனிலிருந்தே,அந்த வங்கியின் ஊளியர்களுக்கு சம்பளம்.லாபம் என அனைத்தும் வட்டியிலேயே அடங்கி இருக்கிறது.இந்த வங்கியில் கைவைக்கும் எந்த பணத்துக்கும் வட்டியில்லாமல் இல்லை.வாங்கிய தொகைக்கு அசல் தவிர வட்டி மட்டுமே காலங்காலமாக் கட்டும் நபர்களை நாம் காணாமல் இல்லை.அப்படி ஒருவனை வருத்தி,அதை அதே வங்கியில் டெபாஸிட் செய்து வைக்கும் ஒரு நபருக்கு,வட்டியாக தருகிறது…
  இந்த முறையில்,ஒரு சார்புடைய மக்கள் மட்டுமே பயன் பெறுவார்கள்.அதாவது வங்கியில் பணம் போட்டவர்கள் மட்டுமே.வங்கியில் கடன் வாங்கியவர்…..ம்ம்ஹும்..வருந்தி வட்டி கொடுப்பவரே.அது நீங்களானானும் சரி,நானாலும் சரி.யாரும் விரும்பி வட்டி தர முன் வருவதில்லை.ஆனால் வங்கி வட்டி தருமேயானால்,அது எப்படி வருகிறது என்ற கேள்வியே இல்லாமல் கை நீட்டிவிடுவோம்.அது ஒருவனை வருத்தி பெற்ற காசே…..இல்லையா.

  இஸ்லாம் கூரும் பொருளாதாரம்,ஒரு வியாபாரம் போல,Mutual Benifit.அதில் வியாபாரியான வங்கியினரும் பயன் பெற வேண்டும்,நுகர்வோரான மக்களும் பயன்பெறவேண்டும்.

  //எல்லாத்தையும் படிச்ச நீங்க, வட்டியில்லா வங்கி என்பது ஜாலமே வட்டிக்கு பதில் வங்கிகள் லாபத்தை உயர்த்தி சமாளித்துவிடுகின்றன என்று சொல்லி இருந்தாரே – sarang//

  சகோதரரே,அது ஒன்றும் தொண்டு நிறுவனம் அல்லவே.அதில் வேலை செய்பவர்களுக்கு,ஊதியமும்,அதன் நிர்வாகத்திற்கு தேவையான பணமும்,நிர்வாகிக்கு லாபமும் இல்லாது,எப்படி இயங்க முடியும்..ஆனால் அந்த லாபம் எந்த வழியில் வருகிறது என்பதே முக்கியம்.இங்கு யாரும் வருந்துவதில்லை.
  வட்டி இல்லா வங்கி முறை:இந்த முறையில் வங்கியானது,அதே போன்று,கடன் கொடுக்கவும் செய்கிறது,வங்கியில் சேமிப்பும் நடக்கிறது.ஆனால் வட்டி இல்லை.பிறகு எப்படி,மக்களுக்கு பயன்?எனறால்..
  வங்கியில் போடப்பட்ட பணத்தை,வங்கியானது,பெரிய நிருவனங்களில் முதலீடு செய்கிறது.அதன் பங்குதாரராக.அந்த நிருவனத்தின்,லாபத்தின் ஒரு பங்கை,invester எனும் முறையில் பெற்றுக் கொள்கிறது.அதில் 1 கோடிக்கு 20% லாபம் என்று வைத்துக் கொண்டால்,அந்த 20%தில் 10% ஐ வங்கி தனது,பொருளாதாரம்,வாடகை,சம்பளம்,இதர செல்வீனங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.மீதம் உள்ள 10% தொகையை பணம் போட்டவர்களுக்கு லாபமாக கொடுத்துவிடுகிறது.அப்டி பார்த்தால் வெரும் 1000 ரூபாய் போட்ட ஒருவனுக்கு லாபமாக் 100 ரூபாய் கிடைக்கிறது.ஆனால் நல்ல வழியில்.எனவே தான்,வட்டியை விட பல நேரங்களில் அதிக தொகையை மக்கள் பெற்றுக் கொள்ள முடிகிறது,யாருக்கும் எந்த பாதிப்பும் இன்றி.
  ஆனால் இதில் இன்னொரு நிலையும் உண்டு.நஷ்டம் என வரும் போது அதை,நுகர்வோரும் ஏற்க வேண்டும்..இதை வைத்து பல கேள்விகள் எழலாம்.வங்கி லாபத்தை பெற்றுக் கொண்டு,பொய் கணக்கு காட்டி ஏமாற்றி விடலாமே.என..ஆனால் அப்படி பட்ட வங்கி நீண்டகாலம் இயங்குவது சாத்திய மற்றதே,,இது போன்ற வங்கி முறை எங்கும் தோல்வி அடையவில்லை என்பதே,அதன் உண்மை தன்மைக்கு சான்று.
  இந்த வங்கியின் முக்கிய வேலையே.சிறந்த,லாபகரமான,நல்ல நிறுவனகளை அணுகி,அவர்களின் பங்குகளை பெற்று,அதில் கிடைக்கும் லாபத்தை மூல தனமாக கொள்வதே.இந்த அடிப்படையில் வங்கி கண்க்கு வைத்து இருக்கும் நாமும்,அந்த நிறுவனத்தின் மறைமுக பங்கு தாரராக இருந்து அதன் லாபத்தை பெறுகிறோம்.இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே,
  இல்லை இது ஏற்றுக் கொள்ள முடியாது என்று இருந்தால்,வட்டி இல்லாத மாற்று பொருளாதாரத்தை,முன்வையுங்கள்,அது ஹிந்துக்களின் ஸ்ம்ரிதி அடிப்படை கொண்டதானாலும்,வெற்றி அடையக் கூடியதாக இருப்பின் ஏற்றுக் கொள்ள எந்த ஆட்சேபமும் இல்லை.
  இஸ்லாம் எது ஒன்றையும் தடுக்கும் போது அதற்கான மாற்று வழி ஏற்படுத்தாமல் விட்டதில்லை.வட்டியை தடை செய்ததோடு நில்லாமல் அதற்கான வட்டியில்லாத பொருளாதார முறையை வகுத்து,அதை வெற்றி அடைய செய்ததே அதன் சிறப்பு.

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

 11. //மேலும், தலைமை நிர்வாக அலுவலர் (CEO-Chief Executive Officer), நிறுவனச் செயலர் (Company Secretary), போன்ற முக்கியப் பணிகளுக்கான “ஆட்கள் தேவை” விளம்பரங்களைத் தங்கள் இணையதளத்தில் (https://ksidc.org/) வெளியிட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், தலைமை நிர்வாக அலுவலர் “ஷரியா ஆலோசனை மன்றம்” (Shariah Advisory Board) கீழ் அடிபணிந்து நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.//
  இதற்கு ரஜின் அவர்களின் பதில் என்ன? வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமே என்பது போல் அல்லவா இருக்கிறது!
  எந்த வங்கியும் கடன் மூலம் கிடைத்த வட்டியை வைத்துக் கொண்டு மட்டும் வியாபாரம் செய்ய முடியாது. Shares & investmentsம் கொடுக்கும் வட்டியும் எல்லா வங்கிகளுக்கும் பிரதானம்தான். ரஜின் அவர்கள் கூறுவது போல இஸ்லாமிய வங்கிகள் மட்டுமே செய்வது இல்லை.
  Financial jihad இப்படி கூட செய்யலாமே. By trying to take over Hindu businesses through market manipulation, investment blackmail. All the while using money from majority hindus!
  85% இந்துக்கள் சாதீய ரீதியில் பிரிந்து இருப்பதும் முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் இமாம், பிஷப்களின் வழிகாட்டுதலின் படி ஓட்டு போடுவார்கள் என்பதும் ரஜின் அவர்களுக்குத் தெரியாதா?! ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று பெரும்பாலான இந்துக்கள் ஓட்டு போடவே வருவதில்லை என்பது ரஜின் அவர்களுக்குத் தெரியாதா?!
  எல்லாவற்றிற்கும் மேல் காங்கிரஸ் அரசோ கம்யூனிச அரசோ திடீர் என்று இப்படி சொல்வது/செய்வது மக்களின் துன்பத்தைப் போக்க அல்ல ஓட்டுக்காகத்தான் என்பதை குழந்தை கூட சொல்லுமே!

 12. Dear Sir,

  One good article about “Islamic Banking is not Islamic” seen in faithfreedom.org site – interested reader can visit this web and in search column type islamic banking to browse the article . In foreign countries they have good controls /checks of outside money sent to their country. But in india we do not have fool proof system. Already through ‘P’ note system lot of foreign funds flown into India without knowing the origin & helping the terrorist organization .
  If we start such Bank in India funds inflow/outflow and the purpose for it is beeing used, level of controll of RBI etc., are all a big question mark ?

 13. முதலில் நாம் ஒரு வங்கியின் வேலையை சின்ன உதாரணத்துடன் பார்க்கலாம். தனது சேமிப்பு வாடிக்கையாளரிடம் இருந்து 7% வட்டிக்கு வாங்கி அதனை 11% – 12% வட்டிக்கு கடனாக கொடுக்கிறது. இந்த ஐந்து % வித்தியாசத்தில் தான் அதன் மற்ற செலவினங்கள் – வாடகை, கரண்ட் பில், ஊழியர் சம்பளம், கம்ப்யூட்டர், பிரிண்டர், தகவல் தொழில் நுட்ப செலவுகள், வாரா கடன், மத்திய அரசு அறிவிக்கும் வட்டி தள்ளுபடி, அசல் தள்ளுபடி எல்லாம் அடங்கும். 12% வட்டி என்பது முழி பிதுங்கும் விஷயமில்லை.

  ஆனால் வட்டியில்லா வங்கி முறை என்பது mutual fund ல பணத்தை முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை முதலீட்டார்களுக்கு பிரித்து கொடுப்பதை போல. லாபம் என்றால் என்ன? ஒரு ரூபாய்க்கு வாங்கி ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு விற்றால் அந்த ஐம்பது காசு தான் லாபம். பெயர் என்னவாய் இருந்தால் என்ன? வட்டி = லாபம்.

 14. நண்பர் ரெஜின்

  //
  சகோத்ரர் சாரங் அவர்களே.வட்டியையும் இலாபத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம்.
  //

  சரி இதை விளக்க முயல்கிறேன் – வட்டியாவது பரவாஇல்லை லாபம் என்ற பெயரில் முதலிலேயே வட்டிக்கு நிகரான பணத்தை பிடுங்குவது பெரும் ஆபத்தான விஷயம்

  வட்டி என்பது simple interest, compound interest முறையில் உள்ளது – இரு முறையிலும் நீங்கள் வாங்கிய கடன் குறைந்து கொண்டே வரும் – நமது சுமை குறையும் – வட்டி என்பது அரசாங்க விதிப்படி இருக்க வேண்டும் 8% வட்டி , 15% வட்டி அல்லது 20% வட்டி [கந்து வட்டி இல்லாத நாடே இல்லை அரபு நாடு உட்பட]

  இப்போது லாபத்தால் வரும் தொல்லையை பாப்போம்

  லாபம் என்பதற்கு அப்படி ஒரு கட்டாயம் இல்லை அது எவ்வளவு % வேண்டுமானாலும் இருக்கலாம் – லாபம் என்பது ஒரு “market function” அதிக “demand” இருக்க இருக்க mark up அதிகமாகும் – வட்டி இப்படி ஆவதில்லை என்று நீங்கள் பார்க்கலாம் (அதிக demand இருந்தால் அது குறையும் – Power money என்ற macro economic principle இப்படி தான் செய்யும்].

  net present value என்ற தத்துவத்தின் படி லாப முறையில் அத்தனை பணத்தையும் இன்றே கட்டி விடுகிறோம் – நாம் இன்றைக்கு கொடுக்கும் பணத்தின் மதிப்பு நாளைக்கு கொடுக்கும் பணத்தின் மதிப்பை விட அதிகமே – வட்டி முறையிலும் இதை சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் அது லாப முறையில் இயங்குவது போல் அல்லாமல் ஒரு ஸ்திராமான % ஆக இருக்கும்

  //
  இந்த முறையில்,ஒரு சார்புடைய மக்கள் மட்டுமே பயன் பெறுவார்கள்.அதாவது வங்கியில் பணம் போட்டவர்கள் மட்டுமே.வங்கியில் கடன் வாங்கியவர்…..ம்ம்ஹும்..வருந்தி வட்டி கொடுப்பவரே.அது நீங்களானானும் சரி,நானாலும் சரி.யாரும் விரும்பி வட்டி தர முன் வருவதில்லை.ஆனால் வங்கி வட்டி தருமேயானால்,அது எப்படி வருகிறது என்ற கேள்வியே இல்லாமல் கை நீட்டிவிடுவோம்.அது ஒருவனை வருத்தி பெற்ற காசே…..இல்லையா.
  //

  இது தவாறான புரிதல் – இன்றைய power money என்ற தத்துவத்தின் படி இப்பணம் போடுவோர் அடையும் லாபம் சின்ன மேட்டர் – அதை யாரையும் வருத்தி வாங்க வேண்டியதில்லை – power money தத்துவத்தின் படி ஒருவர் போடும் 100 ருபாய் சில கட்டுப்பாட்டிற்கு இணங்க 1200 வட்டி இல்லாமலேயே போட்ட மாத்திரத்திலேயே 1200 ருபாய் ஆகிறது அதாவது ஒருவர் போட்ட பணத்தை வைத்து ஒரு 12 பேர் பயன் பெறுகிறார்கள்

  – பணம் போட்டவன் தான் ஏமாளி 🙂 கடன் வாங்குபவன் அல்ல 🙂

  //
  வங்கியில் போடப்பட்ட பணத்தை,வங்கியானது,பெரிய நிருவனங்களில் முதலீடு செய்கிறது.அதன் பங்குதாரராக.அந்த நிருவனத்தின்,லாபத்தின் ஒரு பங்கை,invester எனும் முறையில் பெற்றுக் கொள்கிறது.அதில் 1 கோடிக்கு 20% லாபம் என்று வைத்துக்
  //

  அன்பரே இது சுழல் நிகழ்வு என்று இன்னும் புரிவில்லையா – இந்த வங்கி முதலீடு செய்யும் நிறுவனம் தனது நியாமான லாபத்திலிருந்து அந்த 20 % லாபம் கொடுக்குமா அல்லது நுகர்வோரின் மீது அந்த சுமையை திணிக்குமா – இந்த வங்கி முதலீடு செய்யும் நிறுவனம் வேறொரு வங்கியிடம் இருந்து கடன் வாங்குகிறது அதற்கான வட்டி தருவதில்லை ஆனால் அந்த வங்கி வேறோரோ நிறுவனத்தில் முதலீடு செய்கிறது – இப்படி எல்லா பொருளின் விளையும் உயருமே ஒழிய இறங்காது

 15. நான் இஸ்லாமிய வங்கிகளுக்கு தணிக்கையாளராக இருந்திருக்கிறேன் என்ற முறையில் எழுதுகிறேன்:

  இ.வங்கி முறையில் கேடு எதுவும் இல்லை. ஆனாஸ் அதை நடைமுறையில் அப்படியே நடதுவதில்லை இந்த வங்கி முதலாளிகள்.

  உதாரணங்கள்:
  ஒன்று:
  வட்டி முறை வங்கியில் மிதக்கும் வட்டி விகிதத்தில் (floating rate) கடன் வாங்கலாம். அதாவது வட்டி 2% + Libor or other discount rate என கணக்கிடப்படும். அதனால் டிச்கோவ்ன்ட் ரேட் ஏறி இறங்கினால் அதற்கேற்ப வட்டியும் ஏறி இறங்கும். ஆனால் இ.வங்கியில் முதலில் ஒத்துக்கொண்ட லாப விகிதத்தை மாற்ற ஷரியாவில் அனுமதி கிடையாது. அதனால் வரப்போகும் எல்லா ஏற்ற இறக்கங்களையும் கணக்கிட்டு முதலிலேயே ஒரு பெரிய லாபத்தை நிர்ணயம் செய்து விடுகிறார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த லாபத்தை நிர்ணயிக்கும் முறையை (Pricing Strategy) பார்த்தல், இது முழுக்க முழுக்க சர்வதேச வட்டி விகிதங்களை கொண்டு தான் நிர்ணயிக்க படுகிறது! பிறகு எதுக்கு வட்டியில்லா வங்கி… ஏழைகளுக்காக எளிய வட்டி… என்று பறைசாற்ற வேண்டுமோ!!

  இரண்டு:
  இ.வங்கிகள் எல்லாம் சகாத் (Zakat) என்னும் ஒரு தொகையை சர்காருக்கு வரி அல்லது charity என்ற வடிவில் கொடுக்க வேண்டும். இதை கணக்கிடுவதற்கு 2 முறை நிலவுகிறது. ஒன்று சொத்து வீதத்தில், மற்றொன்று லாப விகிதத்தில். ஆனால் வங்கியின் மொத்த லாபத்தை குறைத்து காட்டுவதற்கே இந்த சகாத் provision ஐ உபயோக படுத்துகிறார்கள்! முதல் வருடம் கணிக்கில் காட்டிய provision ஷரியாவின் தணிக்கைக்கு பிறகு குறையும். அடுத்த வருடம் அந்த provision திரும்பி விடும்! இதில் சகாத் kattaamal எப்படி thappipadhu என்று meetings veru!

  இதை போல் நிறைய உள்ளன! அதனால் நடைமுறையில் பார்த்தல், இ.வங்கி அது தன்னை தானே பறைசாற்றி கொள்ளும் அளவிற்கு ஒன்றும் சாதிக்கவில்ல என்பது தான் உண்மை.

  மற்றொரு உண்மை என்னவென்றால், வட்டி முறை வங்கிகளை விட இ.வங்கிகலீல் தான் லாபம் அதிகம் என்பது நிரூபணமாகிய உண்மையே! அதனால் தான் இன்று எல்லா வங்கிகளும் இ.வங்கியாக மாரிவதற்கு முயன்று லொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளும் இந்த லாபத்தை பங்கு போட்டு கொள்வதற்கு Islamic Banking Window என்ற தனி ஜன்னலை திறக்க துவங்கி உள்ளன!!

  ஸ்ரீராம்.

 16. திரு ஸ்ரீராம் அவர்கள் சொன்னது போல் இ.வங்கிகளால் பெரிய தவறு இல்லை என்றாலும், அது பெருமைபெசுவதற்கும், முதலாளிகள் (எந்த மதத்தினராயினும்) லாபத்தை அதிகரிக்கவுமே பயன்படும்.
  பிரச்னை என்னவென்றால் நானறிந்த பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள் வட்டி என்பதை ஒரு கெட்டவார்த்தை,பாவம்,ஹராம் என்ற ஆழமான உணர்வில் ஊரியிருக்கிரார்கள்.
  பள்ளப்பட்டி,நிலக்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள முஸ்லிம்கள் எண்ட்டர்ப்ரைசஸ் எனும் ஒரு தொழில் நடத்துகிறார்கள்.
  பொருள்களை தவணை முறையில் தரும் திட்டம்.இது சுமாராக இ.வங்கி திட்டம் போல தான்.அதிகம் படிப்பறிவு இல்லாத வட இந்திய மக்களிடம் அவர்கள் செய்யும் கோல்மால்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

  நியாயமான வட்டிக்கு நகரத்தார்கள் தொழில்செய்வதும் நம் நாட்டில் தான்,கந்துவட்டிக்கு இஸ்லாமியர் கடன் கொடுப்பதும் கூட இருக்கத்தான் செய்கிறது.

  பொதுவாக இஸ்லாமிய ஷரியாவில் வட்டி ஹராம் ஆனதால் வட்டி என்ற பெயரில் இல்லாமல் லாபம் என்ற பெயரில் அதே பணத்தை பெற்றுக் கொள்வதில் மனத்தடை ஏதும் இருப்பதில்லை.
  மற்றபடி நம் அரசியல் தலைகளுக்கு இந்த மேட்டர் தெரியாமல் போகாது.லாபமும் பெருகி இஸ்லாமியர்களும் சந்தோஷப்பட்டால் நல்லது தானே என்ற நினைப்பு அவர்களுக்கு.
  மாடு மேச்சமதிரியும் ஆச்சு ,மச்சினனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு.
  சத்திய நாராயணன்

 17. ரஜின்,

  அப்போ கத்தில்லிக சிரியன் வங்கி நட்டத்திலா இயங்குகிறது?

  ஒரு வங்கி, சிறியதாக இருந்தாலோ பெரியதாக இருந்தாலோ, அதன் எண்ணிக்கையே லாப நட்டத்தை தீர்மானிகிறது. உதா, ஆம்பூர் போன்ற இஸ்லாமிய மக்கள் பெரும்பாண்மையாக இருக்கிற ஊர்களில் இந்த வங்கில்யை ஆரம்பித்தால், அங்குள்ள அனைவரும் அந்த வங்கியில் தான் முதலீடு செய்வர். அந்த ஊரில் ஒரு வங்கி இருந்தால், அந்த ஊரை பொருத்த அளவில் அந்த வங்கி லாபகரமாக இயங்குகிறது என்பதாக தான் அர்த்தம்.

  முஸ்லீம்கள் எப்பொழுது தங்களுக்கு ஒத்து வராதவர்களுடன்(!) சேர்ந்து வாழ விரும்ப மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் இத்தகைய வங்கிகள் என்பது என் கருத்து.

 18. ரஜின்,

  நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் பயனுள்ளவை. ஸ்ரீராம் சொன்ன கருத்துக்கள் ஆதாரபூர்வமானவை.

  நீங்கள் இருவர் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் சாதாரண குடிமகனுக்கு இஸ்லாமிய வங்கி முறையால் பலன் உண்டு என்று தெரிகிறது.

  இந்த முறையால் பலன் உண்டு என்றால் அதை ஏற்றுக்கொள்ளுவதுதான் சரி.

  ஒரு இந்துவாக எனது கருத்து இதுவே.

 19. //ச்ரிWilting Tree
  14 February 2010 at 11:16 pm

  ரஜின்,

  நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் பயனுள்ளவை. ஸ்ரீராம் சொன்ன கருத்துக்கள் ஆதாரபூர்வமானவை.

  நீங்கள் இருவர் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் சாதாரண குடிமகனுக்கு இஸ்லாமிய வங்கி முறையால் பலன் உண்டு என்று தெரிகிறது.

  இந்த முறையால் பலன் உண்டு என்றால் அதை ஏற்றுக்கொள்ளுவதுதான் சரி.

  ஒரு இந்துவாக எனது கருத்து இதுவே.//
  ஸ்ரீராம் கூறியதை வைத்துப் பார்த்தால் வங்கிகளுக்குதான் பயன் அதிகம் என்று தெரிகிறது. ‘ஒரு இந்துவாக’ என்பதை விட ‘ஒரு சாதாரண குடிமகனாக’ என்று நீங்கள் கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

 20. எல்லாம் நல்லது தான். ஒன்று மட்டும் அரசோ அல்லது ஹிந்து அமைப்புகள் கவனமாக இருக்க வேண்டும்: கடன் கொடுக்கும் பொது மதம் பார்க்கக் கூடாது. இல்லை என்றால், கடன் வேண்டும் என்றால் மதம் மாற வேண்டும் என்பார்கள்.

 21. what ever it is.now it is stopped,because of Mr.Swamy.He painted a religious color on it.and our court also accepts it.and stopped it.so nothing will happen,with our discussion.
  mm some peoples are saying,that for intrest less credit,they might be converted to islam.

  i don’t know.what that people are thinking.see.no one,even arabs to till me,we are not sparing time,money to convert u peoples.the arabs,the rich peoples,don’t know to spend their money in a right way.they over expense on their lifes.they dont even consider muslims to help.then how they think to convert u all.i know well about them,more than u people,
  and me…we dont have enough time to deal with my problems.and i don’t have enough money to do that.i can spare my time to explain about islam.if some one says this is wrong,i say no this is what this thats all.
  u people are taught like that.if some muslim comes near by u to help u.beware,he is going to convert u to islam…that is what happened.u r educated,dont u know to think,how it could be done.?
  so this is 2010,where the compulsary conversions takes place.all we are well educated,then how u become converted,without ur knowledge.

 22. Pingback: ksidc
 23. வோட்டு வங்கி அரசியல்எப்படி என்றால்

  முஸ்லிம்கள் சமுதாயம் கட்டுப்பாடான சமுதாயம்
  அவர்கள் தங்களது மத கோட்பாடுகளை மீறி நடக்க முடியாது
  கோர்ட்டுகளைப் போல் ஜமாத்கள் உள்ளன
  ஏன் கோர்ட் உத்தரவுகளையும் தாண்டி ஜமாத்கள் செயல் படுகின்றன
  அதை மீறும் முஸ்லிம் கதி என்ன என்பது உலகத்துக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாதது ஆச்சர்யம்

  அதனால் காங்கிரஸ் முதலிய கட்சிகள் முஸ்லிம்களுக்கு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று சொல்லியும், பீ ஜி பீ போன்ற கட்சிகள் ஹிந்து மதவாதக் கட்சிகள் ,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று பொய் பிரசாரம் செய்தும், முல்லாகளின் மூலமாகவும் , பத்வா மூலமாகவும் முஸ்லிம்களை தங்களுக்கு வோட்டு போட வைக்கின்றனர்.
  ஜமாஅத் மற்றும் மசூதி மூலமாக் முஸ்லிம்களுக்கு ‘இந்த கட்சிக்கு ஒட்டு போடுங்கள்’ என்று சொல்லப் படுகிறது
  ஆகவே அவர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கட்சிக்கு போடுகின்றனர்

  ஆனால் ஹிந்துக்கலுக்கு மத ரீதியான கட்டுப்பாடு இல்லை
  ஆகவே அவர்கள் தாங்கள் விரும்பியபடி ஓட்டுப் போடுகின்றனர் .
  மேலும் பெரும்பா லா ஹிந்துக்கள் குறிப்பாக படித்த மற்றும் வசதி படைத்தவர்கள் ஓட்டே போடுவதில்லை
  ஆகவே ஒரு தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்
  முஸ்லிம்கள் மொத்தமாக பதினைந்து சதவிகிதம் ஒருவருக்குப் போடுவார்கள்

  மீதி எண்பத்து ஐந்து சதவிகிதத்தில் ஹிந்துக்களில் அதிகமாக ஐம்பது விழுக்காடு தான் வோட்டு போடுவார்கள்
  அந்த வோட்டுகள் சமமாக நாலு பேர்க்கும் பிரிகிறது.
  அதனால் எல்லோருக்கும் சராசரியாக பன்னிரண்டு விழுக்காடு ஹிந்து வோட்டு கிடைக்கிறது
  அதனால் இப்போது முஸ்லிம்கள் பெருவாரியாக வோட்டு போட்டவருக்கு மொத்தம் இருபத்தி ஏழு சதவிகிதமும் மற்றவ்ரகளுக்கு தலா பனிரெண்டு சதவிகிதமும் கிடைக்கிறது
  இப்போது சொல்லுங்கள் யார் வெற்றி பெறுவார்?
  இதற்காகவே பெரும்பாலான கட்சிகள் அலைகின்றன
  இதுதான் ஒட்டு வங்கி அரசியலின் தத்துவம்

  இரா.ஸ்ரீதரன்

 24. இந்த மாதிரி வங்கியால் எல்லோருக்கும் பலன் உண்டு என்றால் அரசாங்கமே இந்த மாதிரி ஒரு வங்கியை எல்லோருக்கும் பொதுவாக துவக்கலாமே.
  அதை ஏன் இஸ்லாமிய வங்கி என்று பெயரிட வேண்டும்
  இங்கே எல்லோரும் நினைப்பது போல் அந்த வங்கியில் ஹிந்துக்களுக்கு கடன் கிடைக்காது
  அதே போல் ஹிந்துக்களும் அதில் பணம் போட முடியாது
  ஏனென்றால் அங்கு கடனுக்கும் வட்டி கிடையாது.போடும் பணத்துக்கும் வட்டி கிடையாது
  ஹிந்துக்கள் அதில் பணம் போட மாட்டார்கள் .எப்படி அவர்களுக்கு அதில் கடன் மட்டும் கொடுப்பார்கள்?

  மேலும் இந்த மாதிரி ஒரு வங்கியை முஸ்லிம்கள் முதல் போட்டு தான் துவக்க வேண்டுமே தவிர
  ஹிந்துக்களின் பெருவாரியான வரிப் பணத்தைக் கொண்டு அரசு துவக்கக் கூடாது
  ஏனென்றால் இது முஸ்லிம்களின் மத கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு செய்ய படுவது
  மதச் சார்பின்மை பேசும் அரசு இதை என் செய்ய வேண்டும்
  எனவே இது ஒரு ஒட்டு வங்கி அரசியலே.

  இரா.ஸ்ரீதரன்

 25. பிற்போக்கு்த்னத்தைப் பற்றி யார் பேசுவதென்றே இல்லையா ?
  முஸ்லிம்கள் ‘சகத்’ என்ற ஒரு வரியை அவர்களது மத முல்லாகலிடம் செலுத்துகிறார்கள்
  அதிலிருந்து வட்டி இல்லாக் கடன் பெறலாமே.

  இது எல்லாருக்கும் நல்லது என்றால் பொது சிவில் சட்டம் கூடத்தான் எல்லோருக்கும் நல்ல்து
  அதை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்க வேண்டும்

  ஷா பனோ கேசில் உச்ச நீதி மன்றம் விவாக ரத்து ஆன முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கும் தீர்ப்பை எப்படி முஸ்லிம்கள் எதிர்த்தனர்
  அதனால் ராஜீவ் காந்தி சட்டத்தையே மாற்றினாரே

  ஆகேவ் இது வெறும் இஸ்லாமிய மத சம்மந்தமான விஷயமே.
  முஸ்லிம்களை தாஜா செய்து அவர்களின் ஓட்டை அப்டியே கவரலாம் என்ற காங்கிரசின் திட்டமே

  இரா.ஸ்ரீதரன்

 26. பசுவை இந்த நாட்டு மக்கள் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர்
  அது மட்டுமே அல்லாமல் அவைகளால் சமுதாயத்துக்கு பெரும் நன்மைகள் ஏற்படுகின்றன
  பசுக்கள் கிராமப் பொருளாதார த்துக்கு பெரும் அளவில் உதவுகின்றன
  பசுக்கள் பாதுகாக்கப் பட்டால் எல்லோருக்கும் தானே நன்மை?
  எனவே பசு வதை தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் நிர்ணய சட்டமே கூறியிருந்தும் முஸ்லிம்கள் எதிர்ப்பினால் வர முடிய்வில்லை
  இது ஏன் ?

  இரா.ஸ்ரீதரன்

 27. பணத்திற்கு வட்டி கூடாது. ஓகே .
  அதே போல் ஒரு முஸ்லிம் தன கடையில் ஒரு பொருள் விற்றால் அதன் அடக்க விலையில் தானே விற்க வேண்டும்?என் லாபம் வைத்து விற்கிறார்? அதுவும் ஒரு வட்டி போல் தானே?

 28. இஸ்லாமிய வங்கி தவறு என்றால் முஸ்லிம்கள் தானே பாதிக்கப்படப்போகிறார்கள்,பின்பு ஏன் உங்களுக்கு கவலை மேல் கவலை?
  எங்கே இஸ்லாமிய வங்கி வந்து அதன் நன்மைகளை மக்கள் புரிந்து பின்பு இஸ்லாமிய மதத்தை ஆதரித்து விடப்போகிறார்களோ என்ற கவலை மட்டுமே உங்களுக்கு உள்ளதாக படுகிறது.
  ஆனால் நாங்கள் கவலைப்படுவதெல்லாம் இந்திய மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளை விடவும் ஏன் ஆப்பிரிக்காவை விடவும் வறுமையில் வாடுகிறார்கள் இதற்க்கு யார் விடிவு கொடுப்பார்கள் என்பதே.

 29. கேட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை
  இஸ்லாமிய வங்கிகளால் எல்லோருக்கும் நன்மை என்றால் பொது சிவில் சட்டம்,பசுவதை தடை சட்டம், பெண்களுக்கு ஜீவனாம்சம் எல்லாமும் நல்லதுதானே?

  அண்மையில் வந்த ஒரு செய்தி:
  எண்ணை வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவில் அறுபது சதம் மக்களுக்கு வீடு இல்லை என்பது
  ஆனால் அதன் சுல்தான் மற்றும் அவர்கள் உறவினர்கள் கனவிலும் காண முடியாத செல்வச் செழிப்பில் வாழ்க்ன்றனர்.
  இதிலிருந்தே தெரிகிறது இஸ்லாம் என்ற பெயரில் ஆளும் வர்க்கமும் அவர்களைச் சார்ந்தவர்களும் செல்வச் செழிப்பில் மிதப்பதும் , பெரு வாரியான மற்ற மக்கள் குறைந்த பட்ச தேவைகளைப் பெறுகின்றனர் என்று.
  இந்த சுல்தான்கள் லண்டனிலும், நியூ யார்க்கிலும், சுவிஸ் வங்கிகளிலும் பில்லியன் கணக்கில் டாலர்களைப் போட்டுள்ளனர் .
  இதையெல்லாம் ஏன் அவர்கள் இஸ்லாமிய வங்கிகளில் போடவில்லை?

 30. //“துணிகர மூலதனம் (Venture Capital), பரஸ்பர நிதி (Mutual fund), போன்ற வழிகளை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு இணக்கமாக்குவதன் (Sharia compliant) மூலம் இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெரும் மூலதனத்தைக் கவரலாம்”//

  சவூதி இளவரசர்/அரச குடும்ப உறுப்பினர் அல் வலீத் Citi Bankல் பெரும் பணத்தை முதலிட்டுள்ளார். Citi Bank ஷரியா சட்டத்திற்கு இணக்கமானதல்லவே! அமெரிக்காவில் Sharia compliance இல்லாவிட்டாலும் முதலீடு செயயும் அராபியர்கள் இந்தியாவில் முதலிட மட்டும் Sharia compliance எதிர்பார்க்கிறார்களோ?

  வங்கிகள், நிதிநிறுவனங்களை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு இணக்கமாக்குவதன் (Sharia compliant) மூலம் முஸ்லிம் ஓட்டுக்களை வேண்டுமானால் பெறலாம். முதலீட்டை ஈர்க்க Sharia compliance தேவையில்லை.

 31. இஸ்லாமிய வங்கிகள் அனைவருக்கும் உபயோகமானது……….. அதனை மத சாயம் பூசி புறக்கணிப்பது உங்களுக்கே இழப்பாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *