மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

madhani_with_politiciansகேரள மாநிலத்தின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர், வெட்கம், மானம் எதுவுமின்றி, பயங்கரவாதி மதானி மற்றும் அவரது மனைவி சூஃபியா ஆகியோர் விஷயத்தில், ஒருவரை மற்றவர் குறை கூறிக் கொண்டு கேவலமான அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர். இவ்விரண்டு கட்சியினரும் மதானிக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் போட்டி போட்டுக்கொண்டு “உழைத்ததை” மக்கள் இன்னும் மறக்கவில்லை. இவர்கள் எவ்வாறு அந்த பயங்கரவாதிக்குத் தொண்டு புரிந்தனர் என்று சற்று நினைத்துப் பார்ப்போமா?

மதானியின் தொண்டர்களாக ‘மதச்சார்பின்மை’ அரசியல்வாதிகள்

பயங்கரவாதி மதானி 1998-ஆம் அண்டு நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக (அல்லது சிலரது பார்வையில், விசாரணைக் கைதியாக) கருதப்பட்டு சிறையில்  தண்டனை  “அனுபவித்துக்”  (சிக்கன் பிரியாணி, மசாஜ் இத்யாதிகளுடன்) கொண்டிருந்த காலம்.  ஜூன் 2, 2005 அன்று அப்போதைய காங்கிரஸ் முதல் மந்திரி உம்மன் சாண்டி மதானியின் வீட்டிற்கே சென்று அவரது மனைவியையும் தந்தையையும் சந்தித்து “மனிதாபிமான” அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

மார்ச்சு 14, 2006 அன்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினரைக் கொண்ட கேரள சட்டசபை, மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தேசத்தை வெட்கித் தலை குனிய வைத்த பெருமை கேரள அரசியல்வாதிகளையே சாரும்.

அதன் பிறகு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை கோவை சிறையில் மதானியை சந்தித்து தைரியம் சொல்லுமாறு பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் ஜூன் 10, 2006 அன்று கேரள முதல்வர் அச்சுதானந்தனே நேரிடையாகச் சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து மதானியை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் விடுதலை செய்ய மறுத்தாலும், சிறைச்சாலையிலேயே மதானியின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.

ஆகஸ்டு 1, 2007 அன்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்திராபதி, மதானியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார். அவர் விடுதலையாகி திருவனந்தபுரம் சென்றபோது, காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர் போட்டிபோட்டுக்கொண்டு அவருக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்ததால், மதானியும் தன்னுடைய கட்சியின் ஆதரவை அவர்களுக்கு அளிப்பதாக உறுதியளித்தார். தான் என்றுமே பயங்கரவாதியாக செயல்பட்டதில்லை என்றும், இனி முஸ்லிம் மற்றும் தலித் மக்களுக்காகப் பாடுபடப்போவதாகவும், கூறி தன்னை ஒரு உத்தமனாகக் காட்டிக்கொண்டார் மதானி. தன்னை ஒன்பது வருடங்கள் சிறையில் கொடுமை படுத்தியதற்காகத் தமிழக அரசை எதிர்த்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும், ஆனால் தன் விடுதலையை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் சும்மா விடப்போவதில்லையென்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாதி சூஃபியா

இதனிடையே, 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதானியை கோவை சிறையில் மிகவும் துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி அவரை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளான அவருடைய ஆதரவாளர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேருந்தை கொச்சி அருகே களமச்சேரி என்னுமிடத்தில் முழுவதுமாக எரித்தனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்த நசீர் எனும் பயங்கரவாதி வங்காள தேசத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இவன் 2008-ஆம் அண்டு நடந்த பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்டுள்ளவன் என்று தெரியவந்துள்ளது. இவன் லஷ்கர்-இ-தைபா எனும் பயங்கரவாத அமைப்பின் தென்னிந்தியத் தலைவன் என்பதும் தெரியவந்துள்ளது. இவனைக் கேரள போலீசார் விசாரித்தபோது, அவன் மதானியின் வீட்டில் தங்கியிருந்ததும், மதானியின் மனைவி சூஃபியா அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததும், அவர்கள் தமிழக பேருந்து எரிப்பு சம்பவம், கோவை பிரஸ் கிளப் தாக்குதல் சம்பவம், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. (செய்திகள் இங்கே மற்றும் இங்கே).

எனவே டிசம்பர்-2009, பன்னிரண்டாம் தேதி சூஃபியாவையும் குற்றவாளியாக்கி அவர் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது கேரள போலீஸ். முன்ஜாமீன் கோரி சூஃபியா தாக்கல் செய்த மனு கேரள உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே பதினேழாம் தேதி சூஃபியா கைது செய்யப்பட்டார். தமிழகக் காவல்துறையும் கர்நாடகக் காவல்துறையும் கூட இவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். (செய்திகள்  இங்கே மற்றும் இங்கே).

ஆனால் மதானியோ, தன் மனைவி கைது செய்யப்பட்டது தனக்கு எதிராக செய்யப்பட்ட சதிச் செயல் என்றும் கேரள காவல் துறையில் உள்ள ஒரு சில உயர் அதிகாரிகள் தான் அதைச் செய்திருக்கின்றனர் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சூஃபியாவும், காவல்துறையும் காங்கிரஸ் தலைவர்களும் தன்னைப் பற்றி பொய்யான அவதூறுகளைச் சொல்வதாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸ்-கம்யூனிச கட்சிகளின் பயங்கரவாத-எதிர்ப்பு நாடகம்

சூஃபியா கைதானதுதான் தாமதம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர் மதானியை தங்களிடமிருந்து ஒதுக்குவதாகக் காட்டிக் கொள்வதில் பெரும் சண்டை போடத் துவங்கிவிட்டனர். அதாவது முந்தா நாள் வரை அவரை மதநல்லிணக்க மஹாத்மா என்றும் உத்தமன் என்றும் போற்றி வந்த இரு கட்சியினரும், நேற்று அவர் மனைவி கைது செய்யப்பட்டதும் இன்று அவருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒரு வெட்கம் கெட்ட நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்! கோவை சிறையிலிருந்து அவரை வெளியே கொண்டுவருவதற்கும், அவர் விடுதலை ஆனவுடன் அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதற்கும் எவ்வளவு போட்டியிட்டனவோ, அதைவிட அசிங்கமாக இப்போது அவரிடமிருந்து விலகி இருப்பதாகக் காட்டிக் கொள்ள இரண்டு கட்சியினரும் சண்டை போடுகின்றனர்.

பயங்கரவாதிகளுடன் உறவு கொள்வதில் சற்றும் தயக்கம் கொள்ளாத கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், “மதானியின் மனைவியைக் கைது செய்ததன் மூலம் கேரள அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக எவ்வளவு தீவிரமாக முனைந்து செயல்படுகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. முன்னால் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு எட்டு மாதங்கள் உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் மதானியின் மனைவியைக் கைது செய்ததன் மூலம் எங்கள் அரசின் மதிப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது” என்று பீற்றிக் கொண்டுள்ளார். அதற்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, “கொடியேறி பாலகிருஷ்ணன் எங்கள் ஆட்சியில் எட்டு மாதங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்கிறார். நாங்கள் ஆட்சி மாறும்போது இவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் கொடுத்துச் சென்றோமே! இவர்கள் ஆட்சியில் கடந்த 42 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தனர்?” என்று கேட்டுள்ளார். (செய்திகள் இங்கே மற்றும் இங்கே).

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

கேரள மாநிலத்தின் இரு கட்சியினரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டவர்கள் சிலர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன் மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் மதானி விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் கீழ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 43 பயங்கரவாதிகளில் 22 பேரை வேறு விடுதலை செய்துள்ளனர்! இந்தத் தீர்ப்பானது குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போன்று அமைந்துள்ளது.

அண்ணா பிறந்த நாள் (16 செப்டம்பர்) அன்று ஆயுள் தண்டனை பெற்ற 9 பயங்கரவாதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆயினும் அவர்களை மீண்டும் சிறையில் தள்ளவேண்டும் என்று சொல்லவில்லை! மேலும் அரசு தரப்பு கோவைக் குண்டு வெடிப்பு வழக்கைச் சரியான முறையில் நடத்தவில்லை என்றும், கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் போடாமல், சாதாரண இ.பி.கோ சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறு என்றும், புலனாய்வும் விசாரணையும் கூட முறையாக நடத்தப்படவில்லை என்றும் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.

கோவை குண்டு வெடிப்புகள் தீவிரமாக சதியாலோசனை செய்து தீவிர கவனத்துடன் நடத்தப்பட்டப் பயங்கரவாதச் செயல் என்று கூறிய நீதிபதிகள், “சதி செய்தவர்கள் சாதித்தது தான் என்ன? அப்பாவி மக்களைக் கொன்றதன் மூலம் அவர்கள் அடைந்தது என்ன? பயங்கரவாதச் செயலைப் புரிந்தவர்களே கூட சம்பவத்திற்குப் பிறகு மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளனர். (Ref: Print Media dated 19 December 2009)

மதச்சார்பின்மையும் மனித உரிமையும்

மேலும் தங்களுடைய “மதச்சார்பின்மை”யைக் காட்டிக்கொள்ளும் வகையில், “யுத்தம், ஜிகாத், க்ரூசேட் ஆகியவற்றை ஏழ்மையின் மீதும் எழுத்தறிவின்மையின் மீதும் பிரயோகித்தால் நிறைய சாதிக்கலாம்” என்றும் கூறியுள்ளனர். ஆப்பிரஹாமிய மதங்களான இஸ்லாமும் கிறுத்துவமும் தான் புனிதப் போர் (ஜிகாத், க்ரூசேட்) என்கிற பெயரில் அடுத்த மதத்தினர் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அதற்கு வரலாற்றில் ஏராளமான ஆவணங்களும், அத்தாட்சிகளும் இருக்கின்றன. ஹிந்துக்கள் எந்த நாட்டின் மீதும், வேறு எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மீதும், மதத்தின் பெயரால் “புனிதப் போர்” புரிந்ததில்லை எனும்போது, மாண்புமிகு நீதிபதிகள் எதற்காக ”ஜிகாத், க்ரூசேட்” ஆகிய வார்த்தைகளுடன் ”யுத்தம்” என்கிற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டனர் என்று தெரியவில்லை. போலி மதச்சார்பின்மை எனும் நோய் நீதிமன்றங்களையும் பீடித்துள்ளது போலும்!

பெரும்பாலும் “மனித உரிமை” என்கிற பெயரில் தான் இந்தப் “போலி மதச்சார்பின்மை” கொள்கைகள் வெளிவருகின்றன. மதானி கோவைச் சிறையில் இருந்தபோது ‘மனித உரிமை’க் காவலர்கள், அவன் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்றும் ஒரு மிகப் பெரிய நாடகம் ஆடி, அவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வந்தனர். அவர்களின் போலிப் பிரசாரத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் அவர்களும் கலந்து கொண்டார்.

தற்போது மதானியின் மனைவி கைதானதும், மதானி அவர் தனக்கு ஆதரவாக இருந்ததைச் சுட்டிக் காட்டித் தானும் தன் மனைவியும் அப்பாவிகள் என்று கூறித் திரிகிறார். மதானியின் இந்தப் பிரசாரத்தினால் அதிர்ந்து போன முன்னாள் நீதிபதி கிருஷ்ண ஐயர், “எனக்கும் மதானிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. அவர் கோவைச் சிறையில் துன்புறுத்தப் படுவதாக அவரது மனைவி என்னிடம் முறையிட்டபோது, அவரது மனித உரிமை பாதுகாக்கப் படவேண்டும் என்று கூறி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினேன், அவ்வளவு தான். பிறகு அவர் விடுதலையானவுடன் தன்னுடைய கட்சி மதச்சார்பின்மைக் கட்சி என்று கூறி என்னை ஒரு விழாவிற்கு அழைத்ததால் நானும் போய் கலந்து கொண்டேன். மற்றபடி அவருக்குப் பயங்கரவாதத்தில் தொடர்பு உள்ளதாவென்று எனக்குத் தெரியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

tblgeneralnews_13088625670‘இஸ்லாமிய சேவா சங்கம்’ என்னும் இயக்கத்தைத் துவங்கிய அன்றிலிருந்து மதானி பயங்கரவாதி என்பதும், பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி என்று பெயர் மாறிய அவ்வியக்கம் வன்முறையில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சி என்பதும், இந்த நாட்டிற்கே தெரியும் எனும்போது, ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வது ஆச்சரியம் அளிப்பதாகவே இருக்கிறது. மேலும் 60 அப்பாவி மக்களைக் கொன்று 200க்கும் மேற்பட்டவர்களைக் காயமுறச் செய்த தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, பல ஆண்டுகள் சட்டத்தின் மாட்சிமையை நிலை நாட்டிய நீதிபதியாக பணிபுரிந்த ஒருவர், ஆதரவு அளித்தது எவ்விதத்தில் நியாயம்? அவ்வாறு ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவு அளித்துவிட்டு அவனைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்வது ஒத்துக் கொள்ளும் படியாக இல்லையே! மனித உரிமை என்பது மதானிகளுக்கும், அஃப்சல்களுக்கும், கசாவுகளுக்கும், மற்ற குற்றவாளிகளுக்கும் தானா? அவர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்குக் கிடையாதா? கைகளும், கால்களும் இழந்து தங்கள் வாழ்வுரிமையையும் இழந்து வாடுகின்றார்களே, அவர்களுக்கு மனித உரிமை கிடையாதா? அவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ண ஐயர் போன்றோர் என்ன செய்துள்ளனர்? ஒய்வு பெற்ற நீதிபதிகளும், பணியில் உள்ள நீதிபதிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிபதி கிருஷ்ண ஐயரின் தர்மசங்கடம் ஒரு சிறந்த உதாரணம்.

மீண்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு வருவோம். பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மனம் நொந்து போயிருக்கிறார்கள். மதானியின் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் மேலும் 22 பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று நீதிக்குப் போராடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

கோவை: ஜிகாதிகளின் தமிழக பலிகள் – சிதைந்த கனவுகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் ஏதோ கண்துடைப்பாகத்தான் இருக்கின்றன. தீவிரமாக சதி செய்து தீவிர கவனத்துடன் செய்யப்பட்ட சதிச் செயல் என்று கூறிய உயர்நீதிமன்றம், சதியலோசனையில் ஈடுபட்ட 22 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது எப்படி? அதே போல் அரசு தரப்பு சரியான முறையில் வழக்கை நடத்திச் செல்லவில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், அரசு தரப்பிடம் ஏன் விளக்கம் கேட்கவில்லை? பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தவறு என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், மதானியின் விடுதலையை ஏன் ரத்து செய்யவில்லை? குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கும் பலத்த காயம் பட்டு அங்கஹீனங்கள் ஏற்பட்டவர்களுக்கும் தகுந்த நஷ்டஇடு கொடுக்கச் சொல்லி ஏன் உத்தரவிடவில்லை? அவர்கள் ஹிந்துக்கள் என்பதால் அவர்களுக்கு மனித உரிமை கிடையாதா?

குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் நடப்பவற்றை கவனித்துப் பார்த்தால் தெரியும். மனித உரிமைக் காவலர்களும், மதச்சார்பின்மை மஹாத்மாக்களும், சிறுபான்மை உரிமைச் சேவகர்களும் எவ்வளவு அழகாகத் தங்களுக்குள் இணைப்பு ஏற்படுத்திக்கொண்டு, நிதி திரட்டி, சாட்சியங்கள் ஏற்பாடு செய்து, வழக்குகளை ஜோடித்து, குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா அரசுகளை விரட்டியும் மிரட்டியும் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர்! ஊடகங்கள் உட்பட அனைத்து சக்திகளும் சேர்ந்து எவ்வளவு தீவிரமாக இயங்குகின்றன!

மலேகான் குண்டு வெடிப்பில் சாத்வி பிரக்யா என்கிற பெண் துறவியின் மீது பொய் வழக்கு போட்டு, அவர் மீது “பொடா” (POTA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துச் சித்திரவதை செய்து, ஒராண்டுக்கும் மேலாகத் துன்புறுத்தி, பின்னர் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் பொடா குற்றச்சாட்டுகளை மட்டும் வாபஸ் பெற்று, எந்த விசாரணையுமின்றி இன்னும் அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய அராஜகம்? அப்போது 24 மணி நேரமும் அனைத்து ஊடகங்களும் அவரைப் பற்றி எவ்வளவு தவறான செய்திகளைப் பரப்பின? ஆனால் இப்போது சரியான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள மதானியின் மனைவி சூஃபியாவைப் பற்றி எந்த தொலைக்காட்சி சானலும் வாய் திறக்கவில்லையே, ஏன்? அவரை எந்த துன்புறுத்தலும், சித்திரவதையும் இன்றி ஒரு போலீஸ் உயர் அதிகாரியே (மாநிலக் காவல் துறை உதவி இயக்குனர் அலெக்சாண்டர் ஜேகப்) மருத்துவமனையில் பாதுகாப்புடன் கொண்டு சேர்ப்பது ஏன், எப்படி, எதனால்?

அவ்வாறு அவரை மருத்துவமனையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு ஜாமீன் கிடைக்க ஏதுவாக கேரள அரசு வழக்கை சரியாக நடத்தாமல் விட்டது, ஏன், எதற்காக? கேரள காவல்துறை ஆதாரங்களுடன் கைது செய்துள்ளது; தமிழக மற்றும் கர்நாடக காவல்துறையும் சூஃபியாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்; அப்பேற்பட்ட சூழ்நிலையில் கேரள அரசு தரப்பு எவ்வாறு சூஃபியாவிற்கு ஜாமீன் கிடைக்குமாறு வழக்கை நடத்தலாம்? அவர் முஸ்லீம் பெண்மணி என்பதாலா?

ஆதாரம் சற்றும் இல்லாத ஹிந்துப் பெண் துறவிக்கு ஊடக தாக்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சித்திரவதை, துன்புறுத்தல், சிறைவாழ்வு! ஆனால் ஆதாரம் உள்ள முஸ்லிம் பெண்ணிற்கு ஊடக மௌனம், மருத்துவ வசதி, ஜாமீன் விடுதலை! இது தான் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் மதச்சார்பின்மையும், மனித உரிமையும்!

(தொடரும்)

8 Replies to “மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1”

  1. திரு. கிருஷ்ணையர் கம்யூனிஸ்ட் அரசில் மந்திரியாக இருந்தவர். அவர் எப்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கப் பட்டார் என்பது எனக்கு எப்போதும் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. அவர் ஒரு பழைய கம்யூனிஸ்ட் என்பதால்தான் ஹிந்து பத்திரிக்கை அவரைக் கொண்டாடி வருகிறது. ஒரு பழைய கம்யூனிஸ்ட் இடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  2. அற்புதமான கட்டுரை.

    இந்திய, கேரள அரசாங்கங்களை வெட்கம், கேவலம், அவமானம் என்று எவ்வளவு சொன்னாலும் அதை அவர்கள் நன்றியுடன் “கூச்சமா இருக்கு.. ரொம்ப புகழறீங்க” என்று சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்.

  3. போலி மதசார்பின்மை மடையர்களின் கபடநாடகம் ஒருநாள்
    வெளிச்சத்துக்குள் வரும்.அன்று உள்ளது செருப்படி
    அதுவரை சாந்தி…சாந்தி…சாந்தி….

  4. மறு மொழி எல்லா வற்றையும் பிரசுரிக்கவும். அடுத்தவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள ஒரு பக்க மறு மொழியை மட்டும் பிரசுரிப்பது சரியில்லை.

    (edited and published)

  5. மதானி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கல்.ஏற்கனவே ஒன்பது வருடம் சிறையில் அநியாமாக வாடிய மதானியை மீண்டும் சிறையில் தள்ள சங்க்பரிவார மற்றும் கமுநிஸ்ட் திருட்டு கும்பல் முயல்வது வெட்ககேடு.இதை எதிர்த்து முஸ்லிம்கள் மற்றும் நடுநிலைவாதிகள் போராட முன் வரவேண்டும்.முற்றிலும் ஒரு தலைபட்சமாக எழுதும் தமில்ஹிண்டு உங்களுக்கெல்லாம் கடவுள் பயமே கிடையாதா.

  6. பயங்கரவாதி மதானி போன்ற சமுதாய விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தில் அதிகாரத்தை அனுபவித்துவரும் அதிகாரிகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். மதானி போன்ற தேச துரோகியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசையோ கேரளா மற்றும் தமிழக அரசுகளையோ சத்தியமாக எதிர்பார்க்க முடியாது. கர்நாடகத்தில் உள்ள பா. ஜ. க. அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மதானியின் தேசத்ரோக கும்பலை முழுமையாக வளைத்து பூண்டோடு அழித்துவிடவேண்டும்.

  7. இன்று அரசிலோ அரசாங்க பதவியிலோ அதிகாரத்தில் இருக்கும் நியவானகள்.தீவேரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் செயல்களுக்கும் தன்னுடைய பதவியை காப்பற்றிகொள்ள ஆதரவுகொடுத்துவிட்டு தாங்கள் ஓய்வு பெறும்போது இதுபோன்றசெயல் தர்மமில்லை என்று கூறுவார்கள் அவர்கள்தான் மக்களின் முதல் எதிரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *