இன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்

1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் உயிரைப் பறிப்பதற்காகவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காகவும் திட்டமிட்டு நகரின் பல பகுதிகவைக்கப் பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இந்த சதி தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 166 பேர்களில் பெரும்பாலர் அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்த சதியின் முக்கிய காரணகர்த்தர்களாக குற்றம் சாட்டப் பட்டு சிறையில் இருந்தவர்களில் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் மதானி மற்றும் தமிழகத்தின் எஸ். ஏ பாட்சா, முகமது அன்சாரி ஆகிய தலைவர்களும் அடக்கம்.

httpsv://www.youtube.com/watch?v=2WFqxnvBvk0

httpsv://www.youtube.com/watch?v=Oqjl_FGdC7A

தொழில் நகரமான கோவையின் அமைதிக்குப் பெரும் குந்தகம் விளைவித்த இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், அதுவரை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முளைப்பதைக் கண்டும், காணாமலும் இருந்த தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செயலில் இறங்கி இந்த இயக்கங்களின் எல்லாத் தொடர்புகளையும் ஆணிவேர் வரை சென்று தீவிரமாக ஆராய்ந்து புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பிடித்து, இந்த இயக்கங்கள் செய்திருந்திருக்கக் கூடிய வேறு பல குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் திட்டங்களையும் செயலிழக்கச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. அஸ்ஸாம், மும்பை, தில்லி என்று பல நகரங்களிலும் வலைவீசி குற்றவாளிகள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். சமீபகால வரலாற்றில், இது போன்று மிகத் துல்லியமாக ஒரு சந்தேக இழையையும் விட்டுவைக்காமல் ஒரு பயங்கரவாதச் சதியில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியற்கான உதாரணங்கள் மிகச் சிலவே உண்டு.

ஆனால், இப்படி ஆரம்பித்த இந்த விசாரணை, கால ஓட்டத்தில் மிக மோசமான அரசியல் நிர்ப்பந்தங்களை சந்தித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாற்றல்கள், அவர்களது சில சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இவை இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. இறுதியில் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படாமல் பார்த்துக் கொண்டது அரசு. 2005 இல் வழக்கு மேலும் மேலும் பலவீனப்பட்டு வந்தது. மதானிக்காக மனித உரிமையாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெரும் நிதியாதரவுடன் களமிறக்கப்பட்டார்கள்.

திரும்பிப் பார்க்கையில், கோவை மற்றும் தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த பயங்கரவாதச் செயலையும், அதன் பின்னணியையும், பற்றி ஒரேயடியாக மற்ந்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. சிறையில் இருக்கும் தீவிரவாத குற்றவாளிகளுக்கு ராஜோபசாரம் நடப்பது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. மதானிக்கு சிறையில் ஆயுர்வேத மசாஜ், ஸ்பெஷல் கோழிக்கறி இவை வழங்கப் படுவது பற்றிய செய்திகள் வந்தன. கேரள சட்டசபை உறுப்பினர்கள் மதானி என்கிற இந்த குற்றவாளியை தமிழக சிறைகளில் “துன்புறுத்துவதாகவும்” அவரை விடுவிக்கவேண்டும் என்றெல்லாம் கூட கோரிக்கை வைத்தனர். இவ்வளவு சீரியஸான விஷயத்தை எதிர்த்து ஒரு கண்டனம், ஒரு அரசியல் பொதுக் கூட்டம் இங்கு நடத்தப் படவில்லை. மாறாக, சிறைகளில் “துன்புறும்” தீவிரவாதிகளது “மனித உரிமை”களுக்கு வக்காலத்து வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. சில முற்போக்குவாதிகள் அவைகளில் சென்று இந்த மனித மிருகங்களுக்கு தங்கள் பரிவையும், கனிவையும் தெரிவித்தனர்.

httpsv://www.youtube.com/watch?v=CsBXDH0hKco

httpsv://www.youtube.com/watch?v=sJ8Rg-rRWes

சட்டத்திற்கு அடங்கி நடக்கும் கோடிக் கணக்கான சாதாரண குடிமக்களின் பாதுகாப்பையும், நலவாழ்வையும் விட தீவிரவாதிகளுக்கு தரப் படும் வசதிகளும், உரிமைகளும் தான் முக்கியமானவையாக அரசும், அறிவுஜீவிகள் சிலரும் கருதும் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே பெரும் அச்சமூட்டுவதாக உள்ளது. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களின் இழப்புகள், துயரங்கள், வேதனைகள் பற்றிய நினைவுகளோ, பதிவுகளோ தமிழக ஊடகங்களில் பெரிய அளவில் எடுத்துச் சொல்லப் பட்டதாகதவே தெரியவில்லை.  கோவை குண்டு வெடிப்பின் பரிமாணங்கள் என்ன என்பதனை விளக்கும் ஆவணப்படங்கள் இணையத்தில்தான் ஓரளவு வெளிவந்துள்ளன. இந்த சோகங்களை காணுங்கள். இதற்கு காரணமானவர்களை தப்பிக்க வைக்க துடிக்கும் கொடியவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

கோவையில் தொடர்ந்து நடத்தப்பட்ட வெறுப்பியல் கொலைகள், அதனைத் தொடர்ந்து காவலர் செல்வராஜ் கொலை பின்னர் கலவரங்கள் பின்னர் கோவை குண்டு வெடிப்பு அதன் பின்னர் உளவுத்துறை இந்த சதிகாரர்களை பிடித்த பிறகு, வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட விதம், வழக்கு பலவீனப்படுத்தப்பட்டது, ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் இஸ்லாமிய பிரச்சார அமைப்புகள் ஆகியவை கோவை குண்டுவெடிப்பின் பிரதான மூளையாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மதானியை விடுதலை செய்ய திட்டமிட்டு செயல்பட்ட விதம் ஆகியவை எப்படி பயங்கரவாதிகள் அகப்பட்டுக்கொண்டாலும் இந்திய அரசியலின் ஓட்டைகளையும் பொந்துகளையும் பயன்படுத்தி அவர்களை விடுவிப்பது என்பதில் ஒரு தெளிவான செயல்திட்டத்தை பயங்கரவாதிகளுகு வழங்கியுள்ளது.

பக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாடச் சென்று, உடல் சிதறி இழந்த மகனைப் பற்றி மீளமுடியாத துயரத்துடன் நினைவு கூறும் தாய். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் குண்டு வெடித்ததால் அருமை அண்ணனை இழந்த சகோதரி. மகனையும், அவன் இறந்த சோகத்தால் மறைந்த கணவனையும் பறிகொடுத்து நிற்கும் அபலைப் பெண். இவர்களது வேதனையைப் பார்க்கையில் நெஞ்சு பதறுகிறது. இந்தக் கதி செய்தவர்களை சும்மா விடக் கூடாது, அவர்கள் உடல் சிதறி சாக வேண்டும் என்று ஆற்றாமையில் சாபமிடுகிறார்கள் இந்த அல்லலுற்றவர்கள்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவிகளுக்கு இன்றைய தினம் அஞ்சலி செலுத்துவதைத் தவிர இன்று  நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை.

நன்றி:

https://jataayu.blogspot.com/2007/07/blog-post_26.html

https://arvindneela.blogspot.com/2008/12/blog-post.html

https://arvindneela.blogspot.com/2007/05/blog-post_17.html

9 Replies to “இன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்”

 1. Pingback: Indli.com
 2. (ஒரு கற்பனை) அழைப்பிதழ்

  கோவையில் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக குண்டு வெடிப்புப் போராட்டம் நடத்திய ஜனநாயகப் போராளிகளுக்கு பாராட்டு விழா.

  நாள்: 14-2-2011, நேரம்: மாலை 6 மணி
  இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம், எல்.எல்.ஏ. பில்டிங், சென்னை.

  வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

  சிறப்புரை:
  ஆர்.நல்லக்கண்ணு
  அ. மார்க்ஸ்
  சாரு நிவேதிதா
  ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  ஞாநி
  கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
  இன்னும் பலர்

  அனைவரும் வருக!

  விழா ஏற்பாடு: உயிர்மை பதிப்பகம்.

 3. எப்போதும் பேசிடும் விஷயமான ஹிந்துக்களின் ஒற்றுமை உடனடித் தேவை! அனைவரும் வாக்களிக்கத் தவறக் கூடாது! அனைவரின் வாக்குகளும் பதிவு செய்யப் பட்டாலே எல்லாக் கட்சிகளுக்குமே பயம் வரும், சரியாக செயல் பட வேண்டும் என்னும் எண்ணம் உருவாகும்! எனக்கு எந்த பாதிப்புமே ஏற்படவில்லை, எல்லாருக்குமான விலைவாசி உயர்வு என்னையும் பாதித்திருக்கிறது, என்றெல்லாம் மட்டும் சிந்தித்துக் கொண்டு இருந்தால் இந்தியாவையும் ஹிந்துக்களையும் காப்பாற்றவே முடியாத நிலைமை வந்து விடும்! மதச்சார்பின்மை என்னும் பொய்மையான வார்த்தையில் மயங்கி விட வேண்டாம்! இனியும் தாமதிக்க வேண்டாம்!
  ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!

 4. சொந்த ஜாதி அராஜகங்களை அந்தந்த ஜாதி மக்கள் அங்கீகரிக்கும்போது, தங்கள் ஜாதியாக இருந்தாலும்,விலக்கிவிடுவது என்பது,ஒரு சிலர் மத்தியிலே மட்டும் தான் நடைபெறுகின்றது. ஆனால், கிரித்தவனோ, முஹம்மதீயனோ, ஜாதி விஷயத்தில், அன்னியனாகக் கருதப்படுவதால், கிரித்தவனோ, முஹம்மதீயனோ என்ன செய்கிறான், நல்லது செய்கிறானா கெட்டது செய்கிறானா என்று கண்காணிக்கும் போக்கு, சரிபார்க்கும் போக்கு இல்லாமல் இருப்பதால் தான்,இந்து மக்கள் சூழ்ச்சிகளுக்கு பலியாகின்றனர். எனவே, கிறித்தவ மற்றும் முஹம்மதீய மக்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, விழிப்புணர்வுடன் இருக்கும் பழக்கம் இந்து மக்களுக்கு வேண்டும். இந்து மக்களுக்குப் போதாத நேரம், பல்லாயிரம் வருடங்களாக, நம்மை அராஜகப்ப்படுத்தி, அடிமைப் படுத்திய,வந்தேறிகளுடனேயே வாழவேண்டிய, நம் வளங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டோம். ஆனாலும், தளராத விழிப்புணர்வும், ஒருவருக்கொருவர் ஆதராவாக இருக்கவேண்டிய கட்டாயங்களும் இருக்கின்றன.

 5. இஸ்ரேல் நாட்டைப் போல நம் நாடு செயல்படாதவரையில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. தீவிரவாத தாக்குதலில் பத்து இஸ்ரேலியன் கொல்லப்பட்டதாக முதல்நாள் செய்தி வந்தால் மறுநாள் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வரும். திட்டமிட்டு குண்டுவெடிப்பில் ஈடுபடும் தீவிரவாதிகளை அன்றே என்கவுண்டரில் காலி செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களுக்கு சிறையில் செல்போன் கொடுத்து ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் கொடுத்து வளர்த்து போலீஸ்வேனில் பாதுகாப்பு கொடுத்து கோர்ட்டுக்கும் ஜெயிலுக்குமாக போலீசும் சாட்சிகளும் அலைந்து கடைசியில் விடுவிக்கப்படுவது மகா கேவலம். சாதாரண தாதாக்களையே என்கவுண்டா் போடும் போது தீவிரவாதிகளை இப்படியா நடத்துவது. ஒரே நாளில் தீவிரவாதிகளை காலி செய்திருந்தால் ஒருநாள் செய்தியோடு முடிந்து போயிருக்கும். கோர்ட் , வழக்கு என்று இத்தனை வெட்டிச்செலவு தேவையில்லை. சரி சிறையில் இருந்து வெளிவந்தவர்கள் திருந்தியா வந்திருப்பர். நிச்சயமாக அடுத்து குண்டு வெடிப்பிற்கு தமிழகத்தை தயார் செய்ய ஆரம்பித்திருப்பர்.

 6. நிச்சயம் விரைவில் ஒரு நாள், பாரத தேசம் ஹிந்து புரட்சியை காணத்தான் போகிறது. அதன் முடிவில், ஹிந்துத்வா என்ற வீர வாள் மூலம், இஸ்லாமிய ஜிகாத்களையும், மதசார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமிய கிறுத்தவர்களின் அடிவருடிகளான அரசியல்வாதிகளும் வீழ்த்தப்படுவார்கள்.
  ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

 7. அடியேன் கேள்விப்பட்டது, மனுஷ்ய புத்திரன் உண்மையில் மனு( ஷ்ய) புத்திரன் அல்ல. முகம்மது புத்திரன் என்று.

 8. இதுஎன்ன கையாலகாத புலம்பல், தீவரவாதிகளை காப்பாற்ற எந்த ஒரு நல்ல மனிதனும் முன்வரமாட்டான், இது இஸ்லாமியற்கும், நமக்கும் பொருந்தும். பெப்ரவரி 14 இந்த சோக நாள் என்று தமிழகத்துக்கு சரியாக நினைவூடபடவில்லை, நல்லவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். நல்லவர்களின் ஓட்டுதான் அதிகம், ஒரே விஷயம் நல்லவர்கள் சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும். கிறிஸ்துவினுடைய தியாகம் தொடர்ந்து சொள்ளபடுவதாலேயே, நினைவில் உள்ளது, 52 உயிர் இழப்பு தொடர்ந்து நினைவூட்டபடவேண்டும். தீயதும் விதியசபடுதபடவேண்டும். சோகங்கள் மறக்கப்பட கூடாது. நல்லவையும் நினைவூடபடவேண்டும். நல்லவர்களின் ஒட்டு ஒன்றுபட வேண்டும். புலம்பல் பயன் தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *