தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்

சில நாட்கள் முன்பு ஒரு ஜூனியர் விகடன் செய்தி –

thiruvalluvar_statueகிளம்பும் மூடுக்கு வந்த கழுகார், ”தமிழகத்தில் எங்கெங்கும் தான் பதித்த முத்திரையே இருக்க வேண்டுமென்ற முதல்வரின் இன்னொரு கனவுக்கும் சட்டசபையில் அடி போடப் பட்டுவிட்டது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ-வான ரவிக்குமார், ‘எந்த அரசும் சமயச் சார்பற்று இருக்க வேண்டும். ஆனால், அரசு முத்திரையில் இந்து கோயிலைக் குறிக்கும் விதமாக கோபுரம் இடம் பெற்றிருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்’ என்று பேசியதோடு, ‘அதற்கு பதிலாக எல்லா சமயமும் ஏற்றுக் கொண்ட திருவள்ளுவரை அரசு முத்திரையில் வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

‘சந்தேகமென்ன… குமரியில் முதல்வர் அமைத்த அதே ‘அய்யன் திருவள்ளுவ’ உருவம்தான் பரிசீலிக்கப்படும். தமிழ் செம்மொழி மாநாட்டு கோலாகலத்தோடு இதுவும் சேர்ந்துகொள்ளும்’ என்கிறார்கள் விவகாரம் அறிந்த தி.மு.க. பெருந்தலைகள்!”

”ஓ!”

”அரசு முத்திரைகள் மாறும்போது, மாநிலத்தின் அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் புழங்கும் விண்ணப்பங்கள், கார்டுகள் என்று எல்லாமே புதிதாக அச்சாகும். அது ஒரு தனிப்பெரும் அச்சக கான்டிராக்ட்! யாருக்கு வாய்க்குமோ அந்த முத்திரை அதிர்ஷ்டம்?” என்று சொல்லிக் கண்ணடித்துப் பறந்தார். அவர் சீறிப் பறந்த வேகத்தால், நம் மேஜைக் காகிதங்களெல்லாம் காற்றில் மிதந்தன.

உள் ஒன்று வைத்தவர்  முதல்வர்;  அந்த ஒன்றையே புறம் நின்று பேசுபவர் ரவிக்குமார்; அகமும், புறமும் ஒன்றான உத்தம அரசியல்வாதிகள்.

இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியானதும், இது பற்றிய அபிப்பிராயங்களும், விவாதங்களும் பொதுத் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப் படுமுன்பே கமுக்கமாக கழக அரசு தன் கைவண்ணத்தைக் காட்டத் தொடங்கி விட்டது போலத் தெரிகிறது. சென்னையில்  நகர்ப் பேருந்து பயணச் சீட்டுக்களில் ஏற்கனவே புதிய சின்னம்  போடப்பட்டு விட்டதாக அங்கு சென்று வந்த ஆந்தையார் தெரிவிக்கிறார்.

சித்திரைப் புத்தாண்டை சீரழித்த சிறுமதியாளர் இப்போது முத்திரையிலும் கைவைத்து விட்டனரே என்று மனம் பதைக்கிறார்கள் உண்மையான தமிழன்பர்கள்.  சின்னம் விவகாரம் சின்ன விவகாரம் தான்.  இன்று  தமிழக அரசியலில் எதிர்க் கட்சிகளும், இளிச்சவாய்ப் பொதுமக்களும் இருக்கும் நிலையில்  இந்த மாற்றமும் சுமுகமாகவே  நடந்தேறி விடலாம்.  இங்கு அதிர்ச்சி தரும் விஷயம் என்று இனி எதுவுமே இருக்காது.

இந்த மாற்றங்களின் ஊடாக தமிழ்ச் சமூகமும், பண்பாடும், அரசியலும் போய்க் கொண்டிருக்கும் திசை என்ன என்பது பற்றி நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

***********

சொல்லப் போனால்,  19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயங்களிலேயே கோபுர சின்னம் இடம் பெற்று விட்டது. தமிழகத்தில் எங்கும் காட்சி தரும் கோபுரமே அதன் நாணயத்தில் இடம் பெறத் தகுந்த அடையாளம் என்று காலனிய ஆட்சியாளர்களுக்கே தோன்றியிருக்கிறது. 1819ம் ஆண்டில் கால் வராகன் நாணயத்தில், ஒரு பக்கம் வாளேந்திய போர்வீரனும், மறுபக்கம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட நீள கோபுரத்தின் சின்னமும் உள்ளது. Quarter Pagoda  என்ற வாசகமும் உள்ளது.

tn_old_coin_full

Pagoda என்பது நீண்ட கோபுரத்தைக் குறிக்கும் சொல். இந்த குத்துமதிப்பான சித்திரத்தைப் பார்த்தால் குறிப்பிட்டு இது எந்தக் கோயில் கோபுரம் என்று சொல்ல முடியாது. ஆனால் இத்தகைய கோபுரங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம் இல்லை (மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் விமானங்கள் நீண்டு கூம்பு வடிவத்தில் மேலேறிச் செல்பவை. ஆனால் அவை விமானங்கள், கோபுரங்கள் அல்ல). பெரும்பாலான கோயில் கோபுரங்கள்  அடிப்பகுதி மிக அகன்று சாய்மானம் குறைவாக சீராக மேலேறிச் செல்பவை.

பின்னாட்களில் இதே கோபுர சின்னம் சீர்படுத்தப் பட்டு, தற்போதைய  தமிழக அரசு சின்னம் 1956ல் அறிமுகப் பட்டது  (அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது).  பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. சின்னத்தில் உள்ள கோபுரத்தின் நீள, அகல விகிதங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தையே பெரிதும் ஒத்திருந்ததால், இது அந்தக் கோயில் கோபுரம் என்றே அப்போது முதல் அறியப் படலாயிற்று. அவ்வகையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்  தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் நீளம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது; அக்கோபுரத்தின் மடிப்புகளும், அதில் உள்ள சிற்பங்களும்  கூட (இவை பக்கத்தில் உள்ள உயரக் கட்டிடங்கள் மீது நின்று பார்த்தால் மட்டுமே காணக் கூடியவை) தனித்தன்மை கொண்டவை.

tn_state_emblems_over_time

தொடக்கத்தில் சத்யமேவ ஜயதே என்ற வாசகம் தேவநாகரி லிபியிலேயே இருந்தது. பிறகு ஆங்கிலத்திற்கு வந்து, கடைசியில் “வாய்மையே வெல்லும்” என்று தவறாகத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு இன்றுவரை தொடர்கிறது.

சத்தியம் என்ற சொல்  என்றும் அழியாமல் இருப்பதை (’சத்’), நித்தியத் துவத்தைக் குறிக்கிறது – “உண்மை” என்பதே அதற்கு ஈடான தமிழ்ச் சொல்.  சத்தாகவும், அசத்தாகவும் இருக்கும் பரம்பொருளை “உண்மையுமாய் இன்மையுமாய்” என்று திருவாசகம் கூறும்.  வாய்மை என்பது  அந்த சத்திய வஸ்துவின் இயல்பில் அடங்கிய, பொய் பேசாமலிருத்தல் என்ற ஒரு குறிப்பிட்ட ஒழுக்க நெறி. அதுவே சத்தியப் பொருள் அன்று. எனவே “உண்மையே வெல்லும்” என்பதே சரியானது.

போகட்டும்.

***********

இப்போது  கோபுரத்திற்குப் பதிலாக வள்ளுவர் உருவத்தை வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. ”மழித்தலும், நீட்டலும் வேண்டா” என்று போதித்த தெய்வப் புலவர் உண்மையில் எப்படி இருந்திருப்பார் என்று யாருக்குத் தெரியும்?  தற்போது நாம் எங்கும் காணும் கொண்டை போட்ட, தாடி வைத்த திருவள்ளுவர் கடந்த சில பத்தாண்டுகளில் ஒரு திருவல்லிக்கேணி ஓவியரின் கற்பனையில் உருவானவர்.

கன்யாகுமரிப் பாறை மேல் உள்ள சிற்ப வடிவத்தையே அரசு சின்னமாக வைக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த சிற்பத்தில் கலை ரீதியாக நிறைய குறைபாடுகள் உள்ளன என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  முதலில் அதன் கண்ணை உறுத்தும் பரிமாணம்.   சாஸ்தாங்கோவில்  பிராகாரத்தில் நிற்கும் சங்கிலி பூதத்தான் போல அவ்வளவு பெரிதாக வள்ளுவர் என்கிற ஞானியை, கவிஞரை வடித்தது சுத்தமாக ரசிக்கும் படியாக இல்லை.  அதோடு, அவர் வலது இடுப்பை ஒசித்து நிற்கும் பாவத்திற்கும் (bhavam), அந்த மூர்த்திக்கும் பொருத்தம் இருப்பதாகவே தோன்றவில்லை. அந்த முகமும், சுருள் தாடியும்  படத்தில் பார்க்கும் வள்ளுவரை விடவும்  முற்றிலும் வேறு ஒரு மாதிரி இருக்கிறது. அவர் கையில் காட்டும் மூன்றுவிரல் முத்திரை எந்த சிற்ப சாஸ்திரத்திலும் இல்லாத, சுண்டுவிரலும் கட்டைவிரலும் இணையும் ஒரு செயற்கையான, அர்த்தமற்ற புது முத்திரை. இவ்வளவு  குளறுபடிகள் உள்ள அந்த சிலாரூபத்தின் மீது  முதல்வருக்கு அப்படி என்ன மோகமோ தெரியவில்லை!

சரி, அப்படியே வள்ளுவரது மிக ஆதாரபூர்வமான வடிவம் நமக்குக் கிடைத்திருந்தால் கூட, தமிழக அரசின் சின்னமாக இருப்பதற்கு அந்த வடிவத்தை விட கோபுரமே சிறந்த தகுதி வாய்ந்தது. எந்த ஒரு தனிமனிதரை விடவும்  தமிழ்க் கலாசாரத்தை  அது சிறப்பாகப் பறைசாற்றும் தன்மை கொண்டது.

srivilliputhur_templeகோபுரம் தமிழ்க் கட்டடக் கலையின்  உன்னதங்களுள் ஒன்று. பூமியினின்று எழுந்து விண்ணை நோக்கி எழுந்து செல்லும் அதன் தோற்றம் என்றென்றும் மேன்மையை, உயர்ச்சியை, வளர்ச்சியை விழையும் மானுட சக்தியின்  ஒளிமிக்க குறியீடாக விளங்குகிறது. அது பற்றியே,

”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே”

என்று பாரதியார் பாடினார் போலும்!  கோபுரத்தின் அடுக்குளில் அமைக்கப் படும் சிற்ப உருவங்கள் பிரபஞ்சத்தின், இயற்கையின் பல்வேறு  வர்ணஜாலங்களையும், விசித்திரங்களையும் பிரதிபலிப்பவை. அவ்வகையில் முழுமையின்,  பரிபூரணத்தின் உருவாகவும் திகழ்ந்து, தமிழரின் இரண்டாயிரம் ஆண்டு கால தத்துவ ஞானத்தின் சாரத்தை கோபுரம் விளக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்த மண்ணின் சிற்பிகளின், கலைஞர்களின், ஞானிகளின், உழைப்பாளிகளின், மன்னர்களின், வீரர்களின், மக்களின் ஆன்மாவைத் தம்முள் கோபுரங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறன.

இத்தகைய மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான கோபுரம் இந்து மதச் சின்னமாகவும் இருக்கிறது. உண்மை தான். ஆனால் அதில் என்ன பிரசினை?

தமிழ்த் தாயின் திருவுருவத்தைத் தமிழே அரசே அங்கீகரித்து தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் நிறுவியுள்ளது. அந்தத் திருவுருவத்தின் மூலம் என்ன? கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் சுற்றில் உள்ள அழகிய சரஸ்வதி சிலையின் வடிவமே அது.  ”தெள்ளு கலைத் தமிழ் வாணி”க்கு  அந்தச் சிலாரூபத்தைத் தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தமானது. இயைபான அழகியல்.  அப்போ தமிழ்த் தாய் சந்தேகமில்லாமல் இந்து மதச் சின்னம் தானே?

அவளுக்கு நாம் பாடும் வாழ்த்து?  அதில் “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (ஸமுத்ர வஸனே தேவி!) என்று பூமி தேவியைத் தான் போற்றுகிறோம். அந்த பூமித் தாயின் முகமண்டலமாகவும், திலகமாகவும்  பாரதமும், தமிழ்நாடும் இருப்பதாக அந்தப் பாடல் கூறுகிறது.

“செம்பொனார் திலகம் உலகுக்கெல்லாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே”

thamizh_annaiஎன்ற சம்பந்தர் தேவாரத்தை உள்வாங்கி சைவத் தமிழ்ப் புலவர் எழுதிய, கவித்துவம் நிரம்பிய வாழ்த்துப் பாடல். அந்தப் பாடல் இந்துச் சின்னம் இல்லையா?

“கோபுரம் இந்து மதச் சின்னம்; அதை மாற்ற வேண்டும்” என்ற வக்கிரம் பிடித்த வாதம் எங்கு இட்டுச் செல்கிறது என்று பாருங்கள். கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு இது ஆட்சேபகரமாக இருக்கலாம் என்று கற்பிதப் படுத்தப் பட்டு, மூளைகெட்ட முந்திரிக் கொட்டை மதச்சார்பின்மை  என்ற பெயரில்  இந்த மண்ணின் இயல்பான பண்பாடு ஒழிக்கப் படுகிறது.  நாளை தமிழ்த் தாய்க்கு பர்தா போடவும் (அல்லது அவளைக் கல்லால் அடித்தே கொன்று போடவும்),  தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதில் சுவிசேஷ பஜனை பாடவும் கூட இந்த மானங்கெட்ட கூட்டம்  கொடி பிடிக்கும்.

அட, அந்த வள்ளுவரே, அவரது சிலையே இந்து மதத் தொடர்புடையவை என்று எளிதாகச் சொல்லலாமே!  தெய்வப் புலவரின் திருக்குறளை  திராவிட இயக்கம் வந்து பிய்த்துப் போட்டு அதற்கு அபத்த உரைகள் எழுதும் காலத்திலும் சரி, அதற்கு முன்பும் பின்பும் சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சைவர்களும், வைணவர்களும், சமணர்களும் தான் அதை ஏற்றிப் போற்றிப் படித்து, உரைகள் எழுதினார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும் (இது பற்றிய எனது பழைய கட்டுரை : “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து”). கழக அரசு  இன்று அடிவருடும் ஆபிரகாமிய மதவெறி சக்திகள் நாளை திருவள்ளுவரையும் தூக்கி எறியக் கோரிக்கை விடுக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

பாமியான் மலைக் குன்றுகளின் புத்தர் சிலைகளை பீரங்கி வைத்துத் தகர்த்த அதே தாலிபானிய மதவெறி சக்திகளுக்கு கூழைக் கும்பிடு போட்டு சேவகம் செய்யும் கேடுகெட்ட அரசியலை எம்.எல்.ஏ ரவிக்குமார் சார்ந்திருக்கும் கட்சி செய்கிறது.  இஸ்லாமியர்கள் பிரசினை செய்தார்கள் என்பதற்காக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை போடும் உரிமையை தமிழ் இளைஞர்கள் விட்டுத் தந்து விட வேண்டும் என்று  ஈனத்தனமாகக்  கடிதம் எழுதும் அளவுக்கு தலித்துகளுக்குத் திம்மித் தனத்தைப் போதித்துக் கொண்டுகிறது  அவரது “விடுதலை சுண்டெலிகள்” கட்சி.

ஒரு கட்டத்தில் திராவிட அரசியல் தமிழ்ப் பண்பாட்டின் உண்மையான கூறுகளை (அவை அனைத்தும் இந்துத்துவத்தின் வெளிப்பாடுகளே)  அவமதிப்பதை நிறுத்தி விட்டு,  சிறிதாவது ஏற்கும் கட்டத்திற்கு வருவது போலத் தோன்றியது. சமீபத்திய திமுக மாநாடுகளில் அலையலையாக ஐயப்ப சாமிகள் தெரிந்தார்கள்.  கழக இளைய வாரிசுகளின் குடும்பத்தினர் கமுக்கமாக அல்லாமல்,  கண் பார்வை பட  தங்கள் கடவுள் நம்பிக்கைகளைப் பறை சாற்றினார்கள்.  ஆனால் அது ஒரு குறுகிய கால மாயத் தோற்றம் மட்டுமே என்று  தோன்றுகிறது.  சோனியா காந்தியின் பிடியில் சிக்கியுள்ள தேசிய அரசியல் முழுமையாகவே இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை வேரூன்றி வருகையில், திராவிடக் கட்சிகளில் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வரும் கடும் இந்து துவேஷமும்,  ஏன் இந்திய தேசியம் மீதான வெறுப்புணர்வும் கூட இன்னும் அதிகமாக, வெளிப்படையாகவே தலை தூக்கக் கூடும்.

*********

இந்த முத்திரை மாற்ற அறிவிப்புக்கு அங்கங்கே சில எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. தமிழகத்தில் தன்மானம் இன்னும் செத்துவிடவில்லை என்று அவை உணர்த்துகின்றன.

karnataka_emblemவேறு மாநிலச் சின்னங்கள் எல்லாம் மதச்சார்பற்றவையாகத் தானே இருக்கின்றன என்று  ஒரு நொள்ளைக் கேள்வியை ரவிக்குமார் கேட்கிறார். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தின் சின்னத்தில் நடுவில் கண்ட பேருண்ட பட்சியும் (Ganda Bherunda bird) அதற்கு இருபுறமும்  இரு சரபங்களும்  (Sharabha),  அதாவது யாளிகளும் உள்ளன. இது முழுமையாகவே புராண உருவகம்.  இரணியனைக் கிழித்து கோபம் அடங்காத நரசிம்மரை சாந்தம் செய்ய சிவனார் சரப உரு எடுத்து அவரைத் தழுவுகிறார். அப்போதும் கோபம் அடங்காத நரசிம்மர் இரண்டு தலைகள் கொண்ட பேருண்டப் பட்சியாக உருமாறுகிறார் – ஒன்று சாந்தத்தையும், ஒன்று கோபத்தையும் குறிக்கிறது.  தீயோரை அழித்தலும், நல்லோரைக் காத்தலும் செய்யும் அரசுக்கு இந்தப் பட்சி ஒரு தத்துவார்த்தமான குறியீடாகக் கருதப் பட்டது.  ஹொய்சளர்கள், கடம்பர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள் என்று எல்லா கர்நாடக ராஜ வம்சங்களும் இந்தப் பட்சியின் உருவத்தை தங்கள் இலச்சினைகளில் பொறித்துள்ளனர். அதன் நீட்சியாகவே இன்று கர்நாடக அரசு முத்திரையில் அந்த உருவம் உள்ளது.  அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் சின்னத்தில் நந்தியின் திருவுருவம் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சின்னத்தில் குத்துவிளக்கும்,  அதன் சுற்றுலாத் துறையின் சின்னத்தில் திரிமூர்த்தி உருவமும் (திராவிட பாணி எலிபெண்டா குகை சிற்பம்) உள்ளது. கேரள அரசின் சின்னத்தில் நடுவில் திருச்சங்கும் இருபுறமும் பாரம்பரிய அலங்காரத்துடன் கூடிய யானைகளும் உள்ளன.  இந்தச் சின்னம் திருவாங்கூர் சம்ஸ்தானத்தின் சின்னத்தின் அடிப்படையிலானது.  திருச்சங்கு பத்மநாப சுவாமியைக் குறிக்கிறது.

இப்படிப் பல உதாரணங்கள் தரலாம்.  எந்த மாநிலத்திலும்  குறுகிய கால அரசியல் சரிநிலைகளுக்காக அதன்  பண்பாட்டின் அடையாளத்தையே மாற்றவேண்டும் என்பது போன்ற கேனத்தனமான வாதங்கள் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எதிர்ப்பாளர்களில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் பண்பாட்டு ரீதியாக சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஸ்ரீவில்லிப் புத்தூர்க் காரர்கள் தங்கள் ஊர்ப் பெருமைக்கு இழுக்கு வருகிறதே என்பதற்காக இதை எதிர்க்கிறார்களாம்.  அந்தத் தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏவும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் கூட முத்திரை மாற்றத்தை எதிர்த்துப் போராடப் போகிறார்களாம்!  (”கோபுர மாற்றம்… ஸ்ரீவில்லிபுத்தூர் சீற்றம்!” – சமீபத்திய ஜூனியர் விகடன் ரிப்போர்ட்). இந்த விஷயத்தில் பண்பாட்டுவாதத்தால் ஒரு பயனும் இல்லை, அதைவிட  ஊர்ப்பெருமைவாதம், குறுங்குழுவாதம் ஓரளவு எடுபடும் என்று தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சைவ, வைணவ மதங்கள் மூலமும், கலைகள், இலக்கியம் மூலமும் ஒன்று திரண்டு  வந்திருக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் நல்ல முன்னேற்றம் தான்!

மொத்தத்தில் இத்தகைய விஷயங்கள் ஒரு பெரும் நோயின் அறிகுறிகள். நோய் முதல் நாடி அதைத் தீர்க்க வேண்டும்.

*********

eknath-ranadeபாறை மேல் வள்ளுவர் வந்த வரலாறு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.  1960களில் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவின் போது, கடும் கிறிஸ்தவ எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் மீறி, நாடு தழுவிய மக்கள் சக்தியின் துணை கொண்டு, கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீபாதப் பாறை மீது விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுந்தது.  அதனை எழுப்ப அயராது உழைத்தவர் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரும், விவேகானந்த கேந்திரத்தை நிறுவியருமான ஏகநாத் ரானடே.  உடனடியாக, அதற்குப் பக்கத்தில் இருந்த பாறைக்கு  இரவோடிரவாக ஒரு புது மகத்துவம் முளைத்தது – புனித சேவியர் (அல்லது புனித தாமஸ்??,  யாரோ ஒருவர்..) முதன்முதலில் வந்த போது அங்கு தான் கால் வைத்தாராம்!  மளமளவென்று  சிலுவையை நாட்ட ஏற்பாடுகள் நடந்தன.

பார்த்தார் ரானடேஜி.  பாறையின் ஒரு சிறிய மாடலை செய்து, அதில் ஒரு சின்ன திருவள்ளுவர் சிலையை வைத்து அரசுக்கு அனுப்பினார். அங்கு தெய்வப் புலவரின்  நினைவு மண்டபம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் முன்வைத்தார். அரசு ஏற்றுக் கொண்டது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே திட்டம் போடப் பட்டது.

தமிழனின் பாறையைத்  தாமஸ் அபகரிக்காமல் காத்தது ஒன்றுபட்ட இந்து உணர்வு தான்.  அதே உணர்வு தான் நமது பண்பாட்டையும் பாதகர்கள் ஒழித்து விடாமல் காக்கும் அருமருந்து என்பதை உணர்வோம்.

114 Replies to “தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்”

  1. முழுமையான பார்வையை அளிக்கிறது
    வாழ்த்துக்கள்.

  2. மதசார்பற்ற அரசு என்ற போர்வையில் மதவெறுப்பு(இந்து) அரசல்லவா ஆட்சி செய்கிறது.

  3. அருமையான தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது கட்டுரை.

    அன்பர் ஜடாயுவுக்குப் பாராட்டுகள்.

  4. உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் கலையில் காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளுக்கு சளைத்ததல்ல. ஆராய்ந்து பார்த்தால், சுதந்திரப் போராட்டமே முன்னர் சுல்தான்காளாக இருந்து பின்னர் கிறித்தவர்களால் ஆளப்பட்ட ‘முஹம்மதீயர்களுக்கு’ , கிறித்தவர்களிடமிருந்து, இந்துக்களைப பகடைக்காய்களாக வைத்து ‘சுதந்திரம் வாங்கித் தருவதுதான்; அதனால் தான் ‘பாகிஸ்தான்’ என்ற ஒரு நாடே உருவாக்கப்பட்டது.

    சர்வதேச உளவு நிறுவனகள் ‘இஸ்லாம்’ ஆக்கப் பட்டு விடுமோ இந்தியா என்று ‘இத்தாலியிலிருந்து’ ‘அன்டனியோ மைனோ’ வை கிறித்துவத்திற்காக இடைச் செருகல் செய்தது. இவையெல்லாம் எதற்க்காகச சொல்லப்படுவது என்றால், அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஆசிர்வாதத்தோடு தான் ராமபிரான் இகழப்பட்டார், தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றுவது நடைபெற்றது; தற்போது சின்னம் மாற்றும் சின்னத்தனம் அரங்கேர்கிறது.

    கோபுரத்தை சின்னமாக வைத்ததும் அதே காங்கிரஸ் கட்சிதான். மற்றும் கருனாய்நிதி அரசு அதிகாரத்தில் இடப்பட்ட காகித ஆணையை வைத்து மாற்றப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம், அதே கருனாய்நிதியால் பராமரிக்கப் படும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வென்ற கிரிக்கெட் போட்டியின் போது, ஊரறிய, உலகறிய, ஊடகங்கள், படம் மற்றும் புடம் பிடிக்க, மகிழ்ச்சியான சூழலில், கேப்டன் தோனியால், தை ஒன்றாம் தேதி முன் தினம், அடுத்த நாள் என் அறிவிக்கப்பட்டது. அதில் கருனாய்நிதியும் இருந்து மறுப்பு தெரிவிக்க முடியாமல் போனதை ‘ தமிழ்-இந்துவும்’ முகப்பில் அறிவித்தது. எனவே தமிழ்-இந்து தெய்வங்கள், அங்கங்கே இவர்களுக்கு ஆப்பு வைக்கிறது. பால சங்கராச் சாரியார் பெயில் அப்ப்ளிகேஷனை வெள்ளிக்கிழை தள்ளிப்போட்டு வைத்த சவ்ய சாச்சி முகெர்ஜி, ஞாயிற்றுக்கிழமை, வள்ளுவர் சிலை அருகே, விவேகானந்தர் பாறையில் சிறு சுனாமியால் சிக்கியவுடன், ஓடோடி வந்து திங்கட்கிழமை , பெயில் கொடுத்தார். ஆயிரம் வருடக்களுக்கு மேலாக நடந்துவந்த சந்ட்ரமோவ்லீச்வர பூஜை நடைபெற தடை செய்த அரசாங்க ‘அப்பியர்’ ஆணை , பேரு சுனாமியால் காணாமல் போனது. எனவே, ‘ஊழ்’ வந்து வருத்தும் போது, கருனாய்நிதிக்கும், பகுத்தறிவு காணாமல் போகும்.

    (edited and published)

  5. The Tamilsl have lost all sense of shame. They are at the bottom of moral degradation and degeneration that they will sell their mothers for money. How else you can explain the continious support this amoral, corrupt DMK enjoy from this crowd? I am so livid with rage at this attempt by this Government. On the other hand, I feel the Tamils DESERVE what they are getting for electing this anti hindu mob.
    Hindus of Tamil Nadu, wake up. At least, for once, stand up for your religion and culture. All is not lost yet (hopefully).
    I have a funny feeling though that we, the readers of this site are just banging our heads against a brick wall. I cannot see any hope for this state or for this country.

  6. Mr Rama I agree3 whole heartedly with your views. It is also shameful that DMK enjoyed and enjoys the support of Brahmins more than any other parties!?

  7. திரு. ஜடாயு அவர்களே!
    மிக நல்ல கட்டுரை. ஒரே நேரத்தில் இயலாமையையும், கோபத்தையும்
    காண்பிக்கிறது.
    இந்த மாற்றங்கள் மேற்கத்திய நாடுகளிலும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன.
    “பைத்தியக்கார மதச்சார்பின்மை” என்பதை அனுசரிப்பவர்கள் மட்டுமே
    மனிதர்கள். மற்றவர்கள் வெறி பிடித்தவர்கள் என்ற விளக்கத்தால் ஏற்படும்
    குழப்படிதான் இது.
    தமிழ்நாட்டில் இதன் பரிமாணம் வித்தியாசமாக இருக்கிறது.
    பைத்தியக்கார மதச்சார்பின்மையை நாத்திகம் தத்து எடுத்து கொள்வதால்
    இதன் சீற்றம் இங்கு அதிகமாக இருக்கிறது.
    – ஒரு ஐரோப்பிய நாட்டில், ஒரு மருத்துவமனையில் வேலைபார்க்கும்
    கிறிஸ்தவ நர்ஸ் சிலுவை மாலையை மாற்றிக்கொள்ள தடை. ஆனால் ஒரு
    முஸ்லீம் நர்ஸ் அவர் மதத்தின்படி உடை அணிந்து கொள்ள அனுமதி.
    -அமேரிக்காவில் 200 வருடங்களுக்கும் மேலாக அனுசரிக்கப்படும்
    “Prayer Day”க்கு கிறிஸ்தவ குறியீடுகள் உள்ளதால் எதிர்ப்பு.

    உலக சமூகம் இன்று மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது. பெரும்பான்மை
    சமூக மக்கள் தங்கள் மதக்குறியீடுகளை வெளியில் காண்பிக்க கூடாது.
    ஆனால் சிறுபான்மை மக்கள் அவர்கள் மதத்தின் படி வாழலாம்.
    அது மதச்சார்பின்மை. அது மட்டுமே மதச்சார்பின்மை.

    தமிழகத்தில் பல இடங்களில் ஒரு குறியீட்டை காணலாம். சிலுவை,
    ஓம் என்னும் பிரணவம், பிறை என்ற மூன்று குறியீடும் ஒரே புகைப்படத்தில்
    இருக்கும். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் மனிதர்களே இல்லையா!

    இவர்களின் இந்த துவேஷ நடவடிக்கைகள் கடும்போக்கு வலதுசாரிகளை
    தான் உலகம் முழுதும் உருவாக்கியிருக்கிறது.

    “இத்தகைய மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான கோபுரம் இந்து மதச் சின்னமாகவும் இருக்கிறது. உண்மை தான். ஆனால் அதில் என்ன பிரசினை?” என்று கேட்டிருக்கிறீர்கள்.
    அவர்களின் பிரச்சினையே அதுதானே!.

    பா.ஜ.கவுடன் கூட்டில் உள்ளபோது, இந்த தரம்தாழ்ந்த சிந்தனைகள்
    எங்கிருந்தன? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பிரச்சினைகள் இருக்கும்.
    மன சமாதானங்களை செய்து கொள்ள வேண்டிவரும். நம்முடைய
    பாரம்பர்யங்களை காப்பாற்றி கொள்ள நாம் பா.ஜ.கவிற்குத்தானே
    ஆதரவு அளித்திருக்க வேண்டும்.

    நாம் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
    அதிகாரம் இருந்தால்தான் இவர்களை அடக்க முடியும்.

    இதைப்போன்ற பைத்தியக்கார நடவடிக்கைகள் தொடரும் என்றுதான்
    நான் நினைக்கிறேன். நமக்கு விடிவு வருமா என்பதும் சந்தேகமாகவே
    இருக்கிறது.

  8. ஜடாயு, தமிழ் புத்தாண்டை சித்திரை திருநாள் என்று மக்களை மாற்றிய பெருமை தமிழக அரசுக்கு உண்டு. தற்போது கையில் எடுத்திருப்பது இலச்சினை. வருங்காலங்களில் இந்து மதத்திற்க்கு என்று எந்த தனிப்பட்ட குறியிடுகளே, பண்டிகைகளோ வராமல் போக வாய்ப்புள்ளது. தமிழ் புத்தாண்டை குழி தோண்டியாகி விட்டது. சிறுபான்மையினருக்கு வக்கலாத்து வாங்குகிறேன் பேர்வழி என்று ஒரேயடியாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் அரசியல்வாதிகள் திராவிட கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துக்களை உண்மையான எந்த இந்துவும் சகித்துக் கொள்ள மாட்டான். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. முதல்வருக்கு மதிக் கெட்டு விட்டது.

  9. இப்போது தமிழ் நாட்டு அரசியல் இருக்கும் நிலையிலே கருணாநிதியார் முன்னெப்போதையும் விட மிக வலுவுடன் இருக்கிறார். அவருடைய முக்கிய அரசியல் எதிரியான ஜெயலலிதாவோ இது வரையில் சந்திக்காத பின்னடவை சந்தித்து இருக்கிறார். எனவே இதில் பெரிதாக செய்ய எதுவும் இல்லை. இந்த சின்னத்தை மாற்றும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், நக்கல், நையாண்டி தான் பதிலாகக் கிடைக்கும். அதோடு நான் என்பதால் தானே இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பார். எனவே இதில் சாப்ட் பவரை உபயோகித்து, நட்பு முறையில் ஏதாவது முயற்ச்சி செய்தால் தேறினால் தேறும்.

    உண்மையான தீர்வு, மக்களிடம் ஆன்மீக உணர்வை உருவாக்குவதுதான். ஆனால் இப்போது தமிழ் நாட்டில் ஆழ்வார்களும் இல்லை. நாயன் மார்களும் இல்லை. நமக்கு கிடைத்திருப்பதோ நித்யா தான். எங்கே போய் முட்டிக் கொள்வது?

  10. ஜடாயு அவர்களே,

    உங்களது கட்டுரை மிகவும் நன்றாகவும், அதிக விஷயம் உடையதாகவும் உள்ளது.

    இந்து சமய சின்னகளை பிற மாநிலங்களில் உபயோகபடுதுவதாக எழுதிருகிரீர்கள்.

    இதை படிக்கும் மற்ற அன்பர்கள் அந்த மாநிலங்கலளிலும் சின்னங்களை மாற்ற முயற்சி செய்வார்கள். இது தான் என் கவலை.

    சில சமயங்களில் அதிக தகவல்கள் ஆபத்தில் கொண்டு சேர்கின்றது.

    அதிமுக போன்ற மற்ற கட்சிகள் இதை பற்றி என்ன நினைக்கிறது என்ன செய்ய போகிறது என்பதை பொருது இருந்து தான் பார்க்கவேண்டும்.

    கடவுள் தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

  11. திருக்குறளின் அடிப்படை
    அறத்துப்பால் – பாயிரவியல் – வான்சிறப்பு-குறள் 20:
    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.

    எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

    பொருட்பால் – அரசியல் – கொடுங்கோன்மை

    குறள் 559:
    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
    குறள் 560:
    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.
    .
    நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்களை மறப்பர்.

    இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழகத்தைக் குட்டிச்சுவர் ஆக்கிவரும் அரசியல்வாதிகளை என்ன செய்வது?

    தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படித்தவரைக் கைது செய்யும் கொடூர அரசு
    தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா? April 15, 2010 by vedaprakash
    https://devapriyaji.wordpress.com/2010/04/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/
    ஆவிற்கு -பசுவிற்கு நீர் கொடுக்கக் கூட தானம் பெறாதே என்ற வள்ளுவர் வாக்கு போய் ஓட்டிற்கும், தொலைக் காட்சிப் பெட்டி என அனைத்தையும் இலவசமாக பிச்சையாய் பெறத் துடிக்கவிட்டு, தெருக்குதெரு டாஸ்மேக் கடை திறந்து சாரயம் பெருக்கும் திராவிட ஆட்சி வாழியவே?
    https://devapriyaji.wordpress.com/

  12. அவ்வளவு காழ்ப்புணர்ச்சி தலித்கள் மீது.
    அவ்வளவு பயம் தலித்கள் கள் மீது உங்களுக்கு.

    பாவம் அவர்களை நீங்கள் இதே கோபுரத்தை வைத்து தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமையாவும் சூத்திரர்கள் என ஒதுக்கியும் வைத்திருந்தீர்கள்.
    இன்று நல்ல நாள் அவர்கள் உங்களை ஒழிக்கும் நாள்.

    முன் விணை செய்தவன் பின் விணை அனுபவிப்பான்.
    ரவிக்குமார் MLA. போல எத்தனை பேர் பழிவாங்க வருவார்களோ.
    அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
    வாழ்க ரவிக்குமார் அவர்தம் ஆக்ரோஷம் வாழ்க.

    இனி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல காலம்.

  13. தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?
    இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.
    ஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

    1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

    தமிழக அரசின் சின்னம் மதசார் பின்மைக்கு எதிரானது என்ற கருத்தினை கோடிட்டுக் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை அனைத்து மக்களுக்கும் உரிமையான அரசாங்கத்தின் சின்னமாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கேள்வி விடுத்திருக்கிறார்.

    கூர்ந்து நோக்க வேண்டிய அதி முக்கியமான விஷயத்தை திராவிட கட்சிகள் இதுவரை எப்படி கோட்டை விட்டார்கள்?

    திராவிட இயக்கத்தின் பிதாமகர்களாக கருதப்படும் பெரியார், அண்ணா என அரசியலில் கோலோச்சியவர்கள், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் கலைஞர் உள்ளிட்டோர் எவ்வாறு கோட்டை விட்டார்கள்?

    அதிர்ச்சியளிக்கக் கூடிய ஆச்சரிய மல்லவா? மதசார்பின்மையை பேணு வதில், சமூக நல்லிணக்கணத்தை கட்டிக்காப்பதில் அலட்சியம் காட்டி யதால் தான் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம், இன்றுவரை இடம் பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டமாட்டோம்.
    ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? எப்படியோ கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். போகட்டும் இருப்பினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை.

  14. நல்ல உரை . . விளக்கங்களும் கருத்துக்களும் அருமை . . .

    கலாச்சாரத்தை அழிப்பவர்களே முற்போக்கு வாதிகள் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதே இதற்க்கு காரணம் .

    சிருபான்மை மக்களின் ஓட்டுக்காக பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தை சிதைக்கும் சிற்றறிவு படைத்த அரசியல் வியாதிகளை பெரும்பான்மை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் .

  15. சில நாட்களுக்கு முன் தான் நமது முதலவர் ராஜராஜசோழனுக்கு சிறந்தமுறையில் விழா நடத்தப்படவேண்டும் என்றும் தஞ்சை பெரிய கோவில் திராவிட சிற்ப்ப கலைக்கு ஒர் முதன்மையான எடுத்தக்காட்டு என்றும் புகழாரம் சூட்டினார். அப்படிப்பட்ட கோவில் சின்னத்தை மாற்றுவது தவறான அணுகுமுறையே ஆகும். இதுகிருஸ்துவர்களி்ன் சூழ்ச்சி இனி கருணாநிதியின் தயவு சோனியாவுக்கு தேவை இல்லை ? புரிந்தால் சரி !!

  16. தொல்(லை) திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். தமிழைக்காப்பாற்ற அவதாரம் எடுத்த நவீனக்கும்பலைச்சேர்ந்தவர். அவர் பேரில் உள்ள “ரவி”யும் “குமா”ரும் செந்தமிழ் அல்ல. ஆனால் இவர் தலைவர் தமிழ் பெயர் சூட்டும் விழா நடாத்தினார். அப்பொழுது அவர் அருகில் இருந்த ஒரு கட்சி முக்யஸ்தரின் பெயர் “ஜார்ஜ்” மாற்றப்படவில்லை. மிஷனரிகளின் கைக்கூலிகளான இவர்களிடம் வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது. அம்பேத்கரின் பெயர் இவர்களுக்கு ஒரு சந்தைப்பொருளே. விழாக்களை மாற்றுவதும், சிலைகள் வைத்து தற்புகழ்ச்சி யடைவதுமே இந்தக் கும்பலின்
    தலையாயக் கடமைகள். இதற்கு இந்தக் கழுதைப்புலிகள் பரிவார விலங்குகள்.
    மறத்தமிழர் மரத்துப்போன தமிழர் ஆனால் கோவில்கள் எல்லாம் ஹோட்டல்கள் ஆகும் காலம் தூரத்தில் இல்லை.

  17. The Gopuram is the only unique and distinguishing Symbol of Tamil Culture.It is found in all most all places whre Tamils went even in the remote past under Vijayalaya Chola.The Tanjore Temple tower is considred an architectural model and a heritage of Tamils.By removing this ndo the protecters of tamil culture whant to erase the pride of Tamils–which includes hindu,muslim christians and a host of tamils all over the world.Even the western countries have not done this i.e. putting their literateurs as the govt”s mascot.
    A.T.Thiruvengadam

  18. அன்பின் ஜடாயு ,
    நல்ல விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை அளித்துள்ளீர்கள். கொடுக்கப்பட்ட தகவல், நூற்றாண்டுக்கு முற்பட்ட காசு , பல மாநில சின்னங்களைப் பற்றிய ஆராய்ச்சி என உங்கள் கடின உழைப்புக்கும் பலனில்லமலா போய்விடும்?

    கருணாநிதி மட்டுமல்ல, எல்லா திராவிடர்க்கும், முகமதியர்க்கும் உள்ள பொது பண்பாடு, பழக்க வழக்கம் இதுதான் :
    ௧) பொய் சொல்லுதல்
    ௨) வெட்கமில்லை வெட்கமில்லை, வெட்கமென்பதில்லையே என்று கூசாமல் நடவடிக்கை எடுத்தல்

    / சமீபத்திய திமுக மாநாடுகளில் அலையலையாக ஐயப்ப சாமிகள் தெரிந்தார்கள். / — என்னை வாசகர்கள் மன்னிக்கவும். ஐயப்ப சாமிகளில் 20 % கண்ணியமான நல்லோர்கள். மீதி 80 சதவிதம் பேர் ரௌடிகள்தான். கிட்டத் தட்ட குற்றம் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் எல்லாருமே சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அவர்களை திமுக கும்பலில் காண்பது இயல்பானது தானே?

  19. அருமையான் BULLSHIT ARTICLE. அதற்கு ஏற்ற பிண்னோட்டங்கள்.

  20. தமிழ் நாட்டில் அரசு முத்திரை மாற்றம் எதுவாக இருந்தாலும் மக்களின் ஏகோபித்த முடிவாக இருப்பது நல்லது

  21. தமிழ் என்பது ஒரு மொழியே தவிர ஒரு இனமோ சமுதாயக் கூட்டமோ பூகோளப் பரபபோ கிடையாது; அந்தத் தமிழ் எங்கே, யாரால், எப்போது உருவாக்கப்பட்டு, தற்போதைய ஒலி மற்றும் வரி வடிவத்தை அடைந்ததோ, அம்மாதிரியான ‘இயல்பு’ மானிட இனம் ஒன்று தமிழ் பெயரில் கிடையாது.
    ஆனால் இறைநிலை சார்ந்த வகையில், தமிழ் எப்போதும் இந்திய இந்து முறையையே சார்நதிருந்ததால், தமிழுக்கு குறைந்தபக்ஷம், அதை மொழியாகக் காப்பாற்ற மன்னர்களும், மக்களும் கிடைத்தனர்; தமிழிலிருந்து, இந்த மதத்தை, கோவில் போன்ற சின்னத்தை, எடுததெறிநது, வள்ளுவரையோ அப்படியே இயேசு கிறிஸ்து போன்றோரை, இடைச் செருகல் செய்தால், மெல்லத் தமிழினிச் சாகும்.
    .

  22. ஆழ்வார்களும் நாயன்மார்களும் , வேண்டும் என்பவர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், தேவார, திருவாசக, நாலாயிரப்ரபந்த வடிவங்களில்; சன் மற்றும் கலைஞர் டிவிக்களை விழுந்து விழுந்து பார்க்கிறவர்களுக்கு வேறு எதாவதுதான் கிடைக்கும்.

  23. //ஆழ்வார்களும் நாயன்மார்களும் , வேண்டும் என்பவர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், தேவார, திருவாசக, நாலாயிரப்ரபந்த வடிவங்களில்; சன் மற்றும் கலைஞர் டிவிக்களை விழுந்து விழுந்து பார்க்கிறவர்களுக்கு வேறு எதாவதுதான் கிடைக்கும்.//

    நூல்களின் சிறப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த நூல்களின் ஆன்மீகத்தை வாழ்க்கையில் உணர்ந்து, மற்றவர்க்கு மாற்றும் ஆன்மீக வாதிகள் இருந்தால் அவை மக்களிடம் பரவும். இந்திய வரலாற்றை, தமிழக வரலாற்றை , இந்து சமய வரலாற்றை படித்துப் பார்த்தால் தெளிவாகும்.

  24. //கருணாநிதி மட்டுமல்ல, எல்லா திராவிடர்க்கும், முகமதியர்க்கும் உள்ள பொது பண்பாடு, பழக்க வழக்கம் இதுதான்//

    நாம் எல்லோருமே இந்தியர்கள் தான். திராவிடம் என்பது குஜராத், மராட்டா போல ஒரு பகுதியின் பெயரே. . இதில் திராவிடர்கள் என்று யாரை தனியாகக் குறிக்கிறீர்கள் ? மற்றவர்கள் திராவிடர்கள் என்றால் அப்போது நீங்கள் யார்? வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை.

    If you think they are Dhravidiyans and you are something else, it shows as how the unity had detoriated.

    சரியான ஆன்மீகத்தைப் பரப்ப வேண்டும். தமிழ் நாட்டில் எல்லோரும் கோவிலுக்குப் போகாமல், சாமி கும்பிடாமல் இருக்கிறார்களா? அவர்களின் ஆன்மீக சிந்தனையை அதிகப் படுத்த வேண்டும்.

  25. கருத்துத் தெரிவிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

    // இந்து சமய சின்னகளை பிற மாநிலங்களில் உபயோகபடுதுவதாக எழுதிருகிரீர்கள். இதை படிக்கும் மற்ற அன்பர்கள் அந்த மாநிலங்கலளிலும் சின்னங்களை மாற்ற முயற்சி செய்வார்கள். இது தான் என் கவலை.

    சில சமயங்களில் அதிக தகவல்கள் ஆபத்தில் கொண்டு சேர்கின்றது. //

    அதிராவி ஐயா, அந்தக் கவலை வேண்டாம்.. நான் குறிப்பிட்ட மாநிலங்களில் அரசுகளுக்கும், மக்களுக்கும் தங்கள் பண்பாடு பற்றிய ஓரளவு பிரக்ஞை உள்ளது. மதச்சார்பின்மை என்பதை administrative principle ஆகக் கொள்ள வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி தமது சொந்தப் பண்பாட்டையே மறுதலிக்கக் கூடாது என்ற அளவுக்காவது அது உள்ளது.

    இந்திய தேசியச் சின்னத்தில் உள்ள சத்யமேவ ஜயதே என்பதே உபநிஷத் வாக்கியம் தானே, அது இந்துமதம் இல்லாமல் வேறென்ன? தேசிய சின்னத்தில் உள்ள சக்கரம் பௌத்த மத குறியீடாக பொதுவாக சொல்லப் படுகிறது.. ஆனால் அதன் உருவகம் அதைவிட பழமையானது. வேதத்தில், உபநிஷத்தில் குறிப்பிடப் படும் பிரபஞ்ச சுழற்சி சக்கரம் என்ற கருத்தின் நீட்சியே புத்தமதத்தின் தர்மசகக்ரம்.

    ”ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்” என்று கீதை கர்மயோகம் கூறும் சக்கரமும் அதுவே. இந்தக் கருத்தை மிக அழகாக ஜெயமோகன் தனது சமீபத்திய கீதை உரைப் பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறார்.

    இந்தப் பண்பாட்டுச் சக்கரத்தில் எங்கு சுற்றி வந்தாலும் இந்து மதத்தில் தான் போய் முட்டிக் கொள்ள வேண்டும் :))

  26. இந்தியாவின் சின்னமான நான்கு சிங்கங்களும் சரி, அசோகச் சக்கரமும் சரி, மதசார்பற்ற சின்னங்கள் அல்ல. அவை புத்த மதச்சின்னங்களே. கடைசியில் இது போன்ற சின்னத்தனமான காரியங்களால் திமுக ஆட்சியிழக்கும் நிலை ஏற்படும் போல தெரிகிறதே.

  27. //இயேசுவின் பிரதான சீடர்களுள் ஒருவரும், சென்னையில் தங்கி இறைப்பணியாற்றும்போது கொல்லப்பட்டவருமான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாற்றை பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு, பணிகளையும் ஆரம்பித்தது சென்னையில் உள்ள மயிலை மறைமாவட்ட கிறிஸ்தவ அமைப்பு. இந்தப் படத்தின் பணிகளைத் துவங்கி வைத்தவர் முதல்வர் கருணாநிதி.

    இந்தப் படத்தின் சிறப்பே திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்புதான் என்கிறார்கள். ஆனால் இதற்கான சரித்திர ஆதாரம் ஏதும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

    ‘அந்த காலகட்டத்தில் திருமயிலையில் வாழ்ந்த திருவள்ளுவரும் சாந்தோமில் வாழ்ந்த தோமையாரும் மிகுந்த நட்புடன் திகழ்ந்ததாகவும், தோமையாரின் நட்பின் காரணமாக கிறிஸ்தவ கருத்துக்களை உள்ளடக்கிய குறட்பாக்கள் சிலவற்றை திருவள்ளுவர் இயற்றியதாகவும்’ இந்தப் படத்தின் வசனகர்த்தா பால்ராஜ் லூர்துசாமி தெரிவித்திருந்தார்.

    திருவள்ளுவர் வேடத்தில் நடிக்க ரஜினியுடன் பேசப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    அந்த புராஜக்ட் இப்போதும் உள்ளது. ஆனால் ரஜினியிடம் பேசினார்களா, படப்பிடிப்பு நடக்கிறதா? உள்ளிட்ட தகவல்கள் எதையும் இன்னமும் வெளியிடவில்லை, சாந்தோம் கத்தோலிக்க சபையினர். நாம் விசாரித்தபோது, உரிய நேரத்தில் தகவல் வெளியாகும் என்று மட்டும் கூறினர்.//

    மேற் குறிப்பிட்ட தகவல் இந்த இணைப்பில் உள்ளது https://www.envazhi.com/?p=17762&cpage=1#comment-17507. தமிழ் ஹிந்து வாசகர்கள் தங்கள் மறுப்பை / கருத்தை தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

  28. //இயேசுவின் பிரதான சீடர்களுள் ஒருவரும், சென்னையில் தங்கி இறைப்பணியாற்றும்போது கொல்லப்பட்டவருமான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாற்றை பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு, பணிகளையும் ஆரம்பித்தது சென்னையில் உள்ள மயிலை மறைமாவட்ட கிறிஸ்தவ அமைப்பு. இந்தப் படத்தின் பணிகளைத் துவங்கி வைத்தவர் முதல்வர் கருணாநிதி.

    இந்தப் படத்தின் சிறப்பே திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்புதான் என்கிறார்கள். ஆனால் இதற்கான சரித்திர ஆதாரம் ஏதும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

    ‘அந்த காலகட்டத்தில் திருமயிலையில் வாழ்ந்த திருவள்ளுவரும் சாந்தோமில் வாழ்ந்த தோமையாரும் மிகுந்த நட்புடன் திகழ்ந்ததாகவும், தோமையாரின் நட்பின் காரணமாக கிறிஸ்தவ கருத்துக்களை உள்ளடக்கிய குறட்பாக்கள் சிலவற்றை திருவள்ளுவர் இயற்றியதாகவும்’ இந்தப் படத்தின் வசனகர்த்தா பால்ராஜ் லூர்துசாமி தெரிவித்திருந்தார்.//

    https://www.envazhi.com/?p=17762&cpage=1#comment-17507 இந்த இணைப்பில் சென்று தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

  29. //நாம் எல்லோருமே இந்தியர்கள் தான். திராவிடம் என்பது குஜராத், மராட்டா போல ஒரு பகுதியின் பெயரே. //

    திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயரென்றால் திராவிடர் கழகம் என்றால் என்ன? அவர்கள் ஏன் ஆரியம் பற்றிப் பேசுகிறார்கள்?

    நான் திராவிடர் என்று சொன்னது ஈ.வே. ரா வைப் பின்பற்றுபவர்களை.

  30. Mr Bavaani
    தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?
    இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.
    Where did you get this idea that TN is a true secular state? Why the Government is not taking over the administration of all Churches and Mosques as they do with the Hindu temples?Periyar ( I call him Sriyar EVR) and ,Annadurai were plain USELESS leaders. They were like empty vessels which were making a lot of noise.Pray tell me, what these ” leaders as you call them” have done to uplift the ordinary people out of their misery?.Annadurai was as much a Hindu hater as our MK of manchathundu fame. You can read all about this Sriyar Ramasamy in Mr Subbu’s book.He was just plain evil, selfish and egocentric. All the DK/DMK were doing was dividing the society on the Aryan/ Dravidian myth.They still continue to do so and will destroy our timeless dharmic culture to appease the Christians and Muslims for their votes,.
    TN is a peaceful state? Which planet are you from? May be you should talk to some of the victims of Coimbatore bomb blasts!!
    As they say, you can wake someone who is asleep but you cannot wake up someone who is pretending to sleep. Please continue with your pretended sleep.

  31. திராவிட என்ற சொல்லின் பரிணாமம் –
    தமிழ -> த்ரமிள (பிராகிருதம்) -> த்ரமிட (பிராகிருதம்) -> த்ரவிட (சம்ஸ்கிருதம்).

    தமிழையும், தமிழ் மக்களையும் குறிக்க பயன்படுத்த சம்ஸ்கிருதச் சொல் அது. தமிழ் வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ‘திரவிட வேதம்’ என்றே வைஷ்ணவத்தில் சொல்வார்கள். பின்னர் தென்னிந்தியா முழுவதையும் குறிக்கும் சொல்லாயிற்று – ஜனகணமன தேசிய கீதத்தில் அந்தப் பொருளில் தான் வருகிறது. எனவே “திராவிடர்கள்” என்று சொன்னால் அது “தமிழர்கள்/தென்னிந்தியர்கள்” என்பதற்கான சம்ஸ்கிருதச் சொல்.

    அதற்கு இனவாதப் பொருள் அளித்தவர் கால்டுவெல் பாதிரி. அதன் அடிப்படையிலேயே ஆரிய – திராவிட இனவாதமும், கழகங்களும் உருவாயின.. துரதிர்ஷ்டவசமாக வெகுஜன அளவில் இந்தப் பொருளே அதிகம் புழங்குகிறது..

    எப்போதும் இந்த வேறுபாட்டை மனதில் கொண்டு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது நல்லது.. பின்னதைக் குறிக்கும்போது ’திராவிட’ என்று மொண்ணையாக சொல்லாமல் “திராவிட இனவாதம்”, ”திராவிட இயக்கம்”, ”திராவிட அரசியல்”, “திராவிட கழகம்” என்று கூறலாம்.. .

  32. சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய போது இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே இனமே என்பதைக் குறிப்புட்டு பேசி இருக்கிறார்.

    மொழி வேறுபாடு இல்லாமல் வேறு எந்த வேறுபாடும் இந்தியர்களிடையே இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

    தமிழ் நாட்டில் கவுண்டர் கர்நாடகாவில் கவுடே என அழைக்கப் படுகிறார்களோ, தமிழ் நாட்டில் செட்டியார் கர்நாடகாவில் ஷெட்டி என அழைக்கப் படுகிறார்களோ என நான் கருதியதுண்டு.

    திராவிடர் கழகத்தவர் ஆரியம் பேசி, ஆரியர் என்று அழைத்தால் நீங்கள் அதனை அப்படியே ஒப்புக் கொண்டு பதிலுக்கு திராவிடர் என்று அழைக்கிறீர்கள் – இது உங்களை அறியாமலேயே நீங்கள் திராவிட கழகத்தின் மாணவர் ஆகி விட்டதையே காட்டுகிறது. பெரியாரைப் பின்பற்றுபவர்களை, திராவிடர் கழகத்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம், திராவிடர் என்று சொல்வது சரியல்ல.

    திரு. ஜடாயு சொலவது போல தமிழ் மொழியையும் தமிழ் மொழியோடு தொடர்புள்ள மொழிகளைப் பேசுபவர்களும் வசிக்கும் பகுதி, திராவிடம் எனக் குறிப்பிடப் பட்டதாக கருதுவது சரியானதே.

    பெரியாரின் கருத்துக்கள் காலாவதியாகும் (Outdated) நேரம் இது. அவருடைய கருத்துக்களுக்கு அவசியம் இல்லாத வகையில் தமிழ் நாட்டில் சமூக, அரசியல் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன. சரியான ஆன்மீகம் எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும்.

    மீண்டும் நாம் அனைவரும் ஒரே இனமே என்கிற கருத்தை வலியுறுத்தி விடை பெறுகிறேன். இணைவதற்கான நேரம் இது.

  33. ஐயா ஜடாயு அவர்களே

    ஆக // திராவிட என்ற சொல்லின் பரிணாமம் –
    தமிழ -> த்ரமிள (பிராகிருதம்) -> த்ரமிட (பிராகிருதம்) -> த்ரவிட (சம்ஸ்கிருதம்) //

    இந்த திராவிட என்ற சொல்லே சமஸ்கிருதம்தான், தமிழ் இல்லை. தங்களின் பதிவிலிருந்து புரிந்து கொண்டது
    சரியா ஐயா

  34. இந்த ஆட்சி இருக்கும் வரை இது போன்ற அபத்தங்கள் இன்னும் நடக்கும் .யாருக்கும் பயன் இல்லாத விஷயத்தை நடத்தி முடிப்பது தான் இவர்கள் சாதனை.

  35. இப்போது இருக்குற சின்னமே போதும். இத்தனை வருசமா யாரும் இதைப் பற்றி கவலைப்படல. இனிமேல் மாத்த சொன்னா கலைஞர் அவரோட உருவத்தையே தமிழக அரசு சின்னமா அறிவித்து அதற்கும் ஒரு விழா நடத்துவாரு. அந்தக் கொடுமைய வேற பார்க்கணுமா?????????

  36. //
    பெரியாரின் கருத்துக்கள் காலாவதியாகும் (Outdated) நேரம் இது. அவருடைய கருத்துக்களுக்கு அவசியம் இல்லாத வகையில் தமிழ் நாட்டில் சமூக, அரசியல் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன. சரியான ஆன்மீகம் எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும்.

    மீண்டும் நாம் அனைவரும் ஒரே இனமே என்கிற கருத்தை வலியுறுத்தி விடை பெறுகிறேன். இணைவதற்கான நேரம் இது.
    //

    திருச்சிக்காரன்
    சொப்பன வாழ்வில் இருந்து வெளியே வாருங்கள்.

    பெரியாரின் கருத்துக்கள் காலவதியாகவில்லை. பிராமண சமூகத்தை அவர் வெற்றிகரமாக அழித்துவிட்டார். இரண்டு வருடம் முன்பு, தில்லை நடராஜர் கோவில் திராவிட பேத அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செல்ல பெரியார் விதைத்த விஷம்தான் காரணம்.

    உண்மையில் உங்கள் திராவிடத்துக்கான அர்த்தம்தான் outdated. It means no longer means ‘southern indian sect’.

    தயவு செய்து சொப்பன வாழ்வில் இருந்து வெளியே வாருங்கள். மற்றவரின் நேரத்தை வீண் செய்யாதீர்கள்.

  37. //https://www.envazhi.com/?p=17762&cpage=1#comment-17507 இந்த இணைப்பில் சென்று தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.//

    அன்புள்ளம் கொண்ட தமிழ் ஹிந்து வாசகர்களே நமது வலை தளத்துக்குள் நாம் எப்போது வேண்டுமானாலும் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் பிற செய்தி ஊடகங்களில் வரும் நமது சமயத்திற்கு எதிரான் கருத்தை நாம் உறுதியாக மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டும். எனவே மேற்கண்ட இணைப்பிற்கு சென்று தங்கள் மறுப்பையும் எதிர்ப்பையும் தெரிவியுங்கள். இது போன்ற கருத்துக்கள் சிறு அளவில் தோன்றினாலும் அதனை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

    அன்புடன் சுரேஷ்

  38. //தமிழையும், தமிழ் மக்களையும் குறிக்க பயன்படுத்த சம்ஸ்கிருதச் சொல் அது. தமிழ் வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ‘திரவிட வேதம்’ என்றே வைஷ்ணவத்தில் சொல்வார்கள். பின்னர் தென்னிந்தியா முழுவதையும் குறிக்கும் சொல்லாயிற்று – ஜனகணமன தேசிய கீதத்தில் அந்தப் பொருளில் தான் வருகிறது. எனவே “திராவிடர்கள்” என்று சொன்னால் அது “தமிழர்கள்/தென்னிந்தியர்கள்” என்பதற்கான சம்ஸ்கிருதச் சொல்.//
    தென் இந்திய பகுதிக்கு திராவிட பகுதி என்று பண்டைய நூல்கள் சொல்லுமானால் பிறகு ஏன் தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்கள் யாரும் இந்த திராவிட என்ற சொல்லை கையில் எடுக்க வில்லை? இந்த மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து பிறந்தவை தானே? பின் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இதை கெட்டியாக கையில் எடுத்துக் கொண்டு மக்களை முட்டாள்களாக்கி வருகிறார்கள்?
    எனக்கு வரலாறு என்பது படிக்கும் காலத்தில் இருந்தே சற்றும் புரியாத விஷயம் தான். ஜடாயு இதை விளக்கும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். சுரேஷ்

  39. //இது உங்களை அறியாமலேயே நீங்கள் திராவிட கழகத்தின் மாணவர் ஆகி விட்டதையே காட்டுகிறது. //
    இதையெல்லாம் படிக்க வேண்டாமென்றுதான் தமிழ் ஹிந்துவில் பதிவு செய்வதையே நிறுத்தி இருந்தேன். சூடு பட்டும் புத்தி வருவதில்லை.

  40. // இதையெல்லாம் படிக்க வேண்டாமென்றுதான் தமிழ் ஹிந்துவில் பதிவு செய்வதையே நிறுத்தி இருந்தேன். சூடு பட்டும் புத்தி வருவதில்லை.//

    கார்கில், தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள். இது போன்ற விமர்சனங்கள் வந்து போய்க் கொண்டு தான் இருக்கும்.

  41. // தென் இந்திய பகுதிக்கு திராவிட பகுதி என்று பண்டைய நூல்கள் சொல்லுமானால் பிறகு ஏன் தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்கள் யாரும் இந்த திராவிட என்ற சொல்லை கையில் எடுக்க வில்லை? //
    // எனக்கு வரலாறு என்பது படிக்கும் காலத்தில் இருந்தே சற்றும் புரியாத விஷயம் தான். ஜடாயு இதை விளக்கும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். சுரேஷ் //

    சுரேஷ், அரசியல் இயக்கங்கள் தோன்றுவது, வளர்வது எல்லாம் அவ்வப்போதைய சமூக, வரலாற்று சூழல்களைப் பொறுத்தது.

    விந்தியத்திற்குத் தெற்கே உள்ளவர்கள் எல்லாரும் “மதராஸி” என்ற கருத்து போலவே ”திராவிட” என்பதும் ஒரு பொதுப் பெயராக சம்ஸ்கிருத மொழியில், வட இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது. அதனால் தான் தாகூர் தன் பாடலில் அதைப் பயன்படுத்தினார். கால்டுவெல் தனது மொழி இலக்கணம் பற்றிய நூலிலும் பயன்படுத்தினார்.

    ஆனால் தென்னகத்தில் இந்தச் சொல் தமிழகத்தை மட்டுமே குறித்தது – தென்னிந்தியாவில் எழுதப் பட்ட சம்ஸ்கிருத நூல்கள் இதற்கு ஆதாரம். மற்ற பகுதிகளுக்கு ஆந்திரம், கர்நாடகம், கே(சே)ரளம் என்ற தனிப் பெயர்கள் நிலை பெற்றிருந்தன.

    ஆரிய இனவாதம் காலனிய வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப் பட்டபோது, தமிழகத்தில் அப்போதிருந்த அரசியல்/சமூக சூழலால், அது க்ளிக் ஆயிற்று. மற்ற மாநிலங்களில் எடுபடவில்லை. அதனால் அவர்கள் “திராவிட” அடையாளத்தை கையில் எடுக்கவில்லை.

  42. Bavaani, your response shows your ignorance and prejudices against brahmins.Most likely you are another follower of EVR.,who is famous for marrying a young girl old enough to be his grand daughter and who amassed massive personel wealth, taking his DK party and his followers for a ride .More than likely, you are nothing but blind follower of his pea brained ideas rather than for any merrits in his policies.More than likely, you are a brahmin hater just for hate sake. Please grow up or leave this forum so that we can have some intelligent discussions here.Sorry, my fault, I should not mix up intelligence with EVR followers like Bavaani.

  43. திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் யார் நேரத்தை வீணடித்தேன்.

    .//கருணாநிதி மட்டுமல்ல, எல்லா திராவிடர்க்கும், முகமதியர்க்கும் உள்ள பொது பண்பாடு, பழக்க வழக்கம் இதுதான்//

    நீங்கள் எல்லா திராவிடர்க்கும் என்ற வார்த்தையை யாரைக் குறிக்க பயன் படுத்தினீர்கள்? “திராவிடர் கழகத்தவரை” என்று பிறகு விளக்கம் தருகிறீர்கள். ஆனால் //கருணாநிதி மட்டுமல்ல, எல்லா திராவிடர்களும்// என்றால், கருணாநிதி திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர். அப்படியானால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களை “திராவிடர்” என்று குறிக்க உபயோகப் படுத்தினால், தி.மு.க கட்சிக்காரர் பலரும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுகின்றனர். அவர்களுக்கு பக்தி இல்லையா?

    தமிழ் மொழி பேசிய , தமிழ் நாட்டை சேர்ந்தவர் “திராவிடர்” என்று ஒரு பொருள் கொண்டால், இராஜஇராஜ சோழன், நரசிம்ம பல்லவன், ஜடாவர்மா பாண்டியன், இராஜேந்திர சோழன், சேக்கிழார், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் ….. இவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே – இவர்கள் இந்து மதத்திற்கு செய்யாத சேவையையா, நீங்களும் நானும் செய்து விட்டோம்?
    அவர்களின் வழி வந்தவர்களை எல்லாம் திராவிடர்கள் பழக்க வழக்கம் அப்படித்தான் என்றால் எப்படி சரியாகும். தமிழ் நாட்டில் நாயர், ஈ.வே.ரா, அண்ணாதுரை , கருணாநிதி ஆகியோர் அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை சரியாக செய்து விட்டனர். அதை சமன் செய்து ஆன்மீக பிரச்சாரம் மூலம் அன்பை உருவாக்க வேண்டிய பணி பாக்கி உள்ளது. அதை செய்வதை விட்டு ஆறு கோடி தமிழர்களையோ (அல்லது திராவிடர்களையோ) எல்லாம் அப்படித்தான் என்று பேசினால் சரியல்ல.

    இதைப் புரிந்து கொள்ளாமல் என் மீது பாய்கிறீர்கள். ஆறு கோடி தமிழர்களுக்கு சிறப்பான ஆன்மீக உணர்வை ஊட்ட வேண்டியது நம் கடமை. அவர்களை திட்டுவது அல்ல.

    பிராமணர்களுக்கான பிரச்சினையை பேசுவது என்றால் அதை தனியாக கட்டுரை போட்டு விவாதித்துக் கொள்ளலாம். இந்துக்களுக்கான பொதுப் பிரச்சினையை விவாதிக்கும் போது, திசை மாறத் தேவை இல்லை.

    //உண்மையில் உங்கள் திராவிடத்துக்கான அர்த்தம்தான் outdated. It means no longer means ’southern indian sect’. //

    நான் சொன்னது இந்தியர் அனைவரும் ஒரே இனம் என்பதையே. அதை வலியுறுத்தி மீண்டும் சொல்லி இருக்கிறேன். மற்றபடி திராவிடம் என்பதற்கு நம் தேசிய கீதம் தரும் பொருளையே நான் குறிப்பிட்டு இருக்கிறேன். பெரியாரும், அவர் பெயரை சொல்லி பிழைப்பவர்களும் தான் திராவிடர் என்கிற வேறு பாட்டை உண்டாக்குகின்றனர். நீங்களும் அவர்களைப் போல பேசினால் என்ன அர்த்தம்?

    சொப்பன வாழ்வில் இருப்பது நான் அல்ல. நீங்கள் திராவிடர் என்று குறிப்பிட்டு “அவர்களே அப்படித்தான்”” என்று சொல்லும் மக்களை இன்னும் சிறப்பான ஆன்மீக வழியில் செலுத்துவது எனக்கு முக்கியம். அதற்காகவே என் பொன்னான நேரத்தை செலவழிக்கிறேன். உங்களை திருப்தி படுத்த 6 கோடி ”திராவிடர்”களை, நம் சகோதரர்களை நான் தனிமைப் படுத்த முடியாது.

  44. திரு. ஜடாயு அவர்களே,

    //கார்கில், தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள். இது போன்ற விமர்சனங்கள் வந்து போய்க் கொண்டு தான் இருக்கும்.//

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லலாமே.

    //இது போன்ற விமர்சனங்கள் வந்து போய்க் கொண்டு தான் இருக்கும்.//

    என்றால் நாங்கள் எழுதும் கருத்துக்கள் நாகரீகம் இல்லாதவையா, நியாயம் இல்லாதவையா? நான் எழுதியதில் என்ன தவறு? தமிழ் நாட்டில் உள்ள 6 கோடி மக்களை பிரித்து தனிமைப் படுத்த முடியாது.

    //இது போன்ற விமர்சனங்கள்// என்று எழுதுவதை கண்டிக்கிறேன்.

  45. // திருச்சிக் கார‌ன்
    22 April 2010 at 12:01 pm
    என்றால் நாங்கள் எழுதும் கருத்துக்கள் நாகரீகம் இல்லாதவையா, நியாயம் இல்லாதவையா? நான் எழுதியதில் என்ன தவறு? தமிழ் நாட்டில் உள்ள 6 கோடி மக்களை பிரித்து தனிமைப் படுத்த முடியாது.

    //இது போன்ற விமர்சனங்கள்// என்று எழுதுவதை கண்டிக்கிறேன்.
    //

    அன்புள்ள திருச்சிக்காரன்,

    “இது போன்ற” என்பதை ”சாதகமான & பாதகமான” என்ற அர்த்தத்தில் சொன்னேன். அது உங்கள் கருத்துக்களின் மீதான விமர்சனம் அல்ல.

    கார்கில் ஜெய் தனக்கு எதிரிடையான கருத்துக்கள் வருவதாலேயே பதிவு செய்வதை நிறுத்திவிடக் கூடாது என்ற அர்த்தத்திலேயே அப்படிக் கூறினேன் என்று தெளிவுபடுத்துகிறேன்.

    அன்புடன்,
    ஜடாயு

  46. இந்தக் கட்டுரைக்கு இது தொடர்பில்லாதது, எனினும் இந்த செய்தி நம்மவர்களுக்குக் சேர வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.

    https://whc.unesco.org/en/activities/620/?svc_mode=N&g=260060136539&svc_campaign=information-201004-april&svc_partner=whc.unesco.org&svc_position=WHC&estat_url=https://whc.unesco.org/en/activities/620/

    ஐ.நா.வின் அங்கமான UNESCO வின் சார்பில் நடக்கும் பாரம்பரியச் சின்னங்களின் பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் volunteers தேவையாம். பாரதத்தில் ஹம்பியில் உள்ள பாரம்பரியப் பாதுகாப்புக்கான திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. நம்மவர்கள் சிலராவது இது போன்ற நிகழ்வுகளில் பங்கெடுப்பது நல்லது. பிறிதொரு காலத்தில் இத்தகு தொடர்புகள் நமது பாரம்பரியச் சின்னங்களுக்கு ஆபத்து வரும்போது பயனுடையதாக இருக்கும்.

  47. ஜடாயு அவர்களுக்கு, தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. எனினும் இது பற்றி தமிழகத்தில் விதைக்கப்பட்டுள்ள விஷ விதை மிகவும் அதிகம். இது நம் ஊரில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட சீமை கருவேல மரங்களுக்கு ஒப்பாக விதைகளை கூட அழிக்க முடியாத அளவிற்கு பரவி விட்டது. இதன் காரணமாகவே, நான் மேலே பதிவு செய்துள்ள இக்கட்டுரைக்கு தொடர்பில்லாத ஆனால் நமது கலாசாரத்திற்கு வேட்டு வைக்க கூடிய திருவள்ளுவர் பற்றிய புனைவுகளும் அவர் பற்றிய படத்தில் நடிகர் ரஜினி நடிக்க கூடும் என்பதும். தங்களது மறுப்பையும் envazhi.com தளத்தில் பதிவு செய்ய நான் விழைகிறேன்.

    திருச்சிக் கார‌ன் மற்றும் கார்கில் ஜெய் அவர்களுக்கு நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் களைந்து கொள்ள கூடியவை. இதை விட ஆபத்தான விஷயங்கள் நம்மை எதிர் நோக்கி உள்ளன என்பதை தாங்கள் அறிவீர்கள். தங்களை போன்றோரின் மறுப்பையும் envazhi.com தளத்தில் பதிவு செய்ய நான் விழைகிறேன்.

    சுரேஷ்

    (edited and published)

  48. //திருச்சிக் கார‌ன் மற்றும் கார்கில் ஜெய் அவர்களுக்கு நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் களைந்து கொள்ள கூடியவை. இதை விட ஆபத்தான விஷயங்கள் நம்மை எதிர் நோக்கி உள்ளன என்பதை தாங்கள் அறிவீர்கள். தங்களை போன்றோரின் மறுப்பையும் envazhi.com தளத்தில் பதிவு செய்ய நான் விழைகிறேன்.

    சுரேஷ்
    //
    ஸ்ரீ சுரேஷ்,

    எதிரியாக இருப்பவர்களை, ஆபத்தான விஷயங்களை எளிதாக சமாளிக்கலாம்.

    இதையெல்லாம் பதிவு செய்து கொண்டிருக்காதீர்கள். திராவிடர்கள் 6 கோடிபேர் என்னும் பேச்செல்லாம் விடிஞ்சால் மாறக் கூடியவை. கேரளா, ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு எல்லாம் சேர்ந்தால் 6 கோடி மட்டும்தானா வரும்? இல்லை திராவிடர் என்றாலே தமிழர் மட்டும்தான் என்றால் ஆரியர் என்பார் தமிழரில்லை என்றாகிறது. அது மட்டுமில்லாமல் நான் ‘திராவிட வழக்கம்’ என்று சொல்லாமல் பொய் சொல்வது தமிழரின் வழக்கம் என்றே சொல்லி இருப்பேனே?

    இதையெல்லாம் எழுதி உங்கள் பக்கத்தையும், அதைப் படிப்போரின் நேரத்தையும் வீணாக்க வேண்டம். அதைப் படித்து அவர்களும் நாலு இடத்தில் பதிவு செய்வார்கள்.

  49. இங்கே தமிழ் நாட்டில் வசிக்கும் இந்தியர்களை குறித்து தான் விவாதம் நடை பெறுகிறது. எனவே நான் 6 கோடி பேர் என்று எழுதியது அவர்களைக் குறித்தே, அது சரியானதே.

    இந்தியர்கள் எல்லோரும் ஒரே இனமே என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

    தமிழ் நாட்டில் வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலோர் (கிட்டத் தட்ட) ஆறு கோடிப் பேர், இந்துக்களே. அவர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ்வதிலும், பக்தி செய்வதிலும் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல.

    சிலர் நாத்திகப் பாதையில் சென்றால், அவர்களுக்கு ஆன்மீகத்தின் மூலம் மன அமைதி பெரும் வழியை எடுத்துக் காட்டினால் அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

    உறுதியான உள்ளமுடையவன் முன் பாம்பின் விடம் கூட சக்தி அற்றதாகி விடும் என்றார் விவேகானந்தர்.

    ஆனமீக வலிமை இல்லாதவர்கள் தான் “அரசியல்வாதிகள் சொல்வதையே மக்கள் கேட்பதில்லையே, நாம் சொன்னால் கேட்பார்களா ?” என்று முனகுவார்கள்.

    நம்பிக்கை, நம்பிக்கை , நம்பிக்கை.

    எப்போது மாறாத உண்மைகளின் அடிப்படையில் எழுதினால் , விடிந்தாலும் மாறாது, எப்போதும் மாறாது.

    இருளில் இருப்பவருக்கு விடியலை உருவாக்கவே நாம் எழுதுகிறோம்.

  50. தமிழ் அன்னை என்று காட்டியே சிலை two piece துணியில் நன்றாக இருக்கிறது. நீயெல்லாம் திருவள்ளுவர் சிலையை கேலி பண்றே? திருவள்ளுவர் வெறியர்கள் (தமிழ்) சும்மா இருக்க மாட்டார்கள்.

  51. 1)திராவிடன் என்பதற்கு தற்போதைய அர்த்தம் ‘தெற்கத்திக் காரன்’ என்பதன்று. தமிழன் என்பதுமன்று. திராவிடன் என்பவன் மனத்தால் ஆரியம் என்பதை எதிர்ப்பவனே. திராவிடன் என்பதற்கு சம்ஸ்கிருத அர்த்தம் கொள்ளவேண்டும் என்றால், ஆர்யன் என்றால் ‘படித்தவன்’ என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். ஆக படித்த திராவிடன் ஆர்யன் ஆகிறான். ஆக ஆரியன் என்பது ஒரு இனத்தை மட்டும் குறிக்க முடியாது. ஆகவே நான் பிரித்துப் பேசியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு தவறானது.

    ௨) பெரியாரியம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கண்ணை மூட்டி கனவில் லயித்தால் பெரியாரியம் அழிந்ததாகச் சொல்லி பெருமைப் படலாம். நான் இதை வேறு கட்டுரையில் எழுத வேண்டுமானால், பெரியாரியம் அழிந்ததகச் சொல்பவரும் வேறு கட்டுரையில் அப்படிச் சொல்லட்டும்.

    ௩) ஒரு கட்டுரை எழுதும்போது நான் ‘வடமொழி’ என்று எழுதியதை அறிஞர் ஸ்ரீ. மலர்மன்னன் ‘சமஸ்க்ரிதம்’ என்பதுதான் தெற்குக்கும் சேர்த்து சரி. வடமொழி என்று தென்னாட்டிலும் பண்பட்ட மொழியைக் கூறுவது தவறு என்று என் எழுத்தைத் திருத்தினார். ஆனால் நான் ‘திராவிடர் கழகப் பள்ளியில் என்னைஅறியாமல் படித்ததாகவோ, பாஸ் ஆனதாகவோ’ அவர் சொல்லவில்லை.

    (edited and published)

  52. ஆரியன் என்பது படித்தவர்களை மட்டும் குறிப்பதாக என்ன முடியாது. எந்த நிலையிலும் மனச் சோர்வின்றி, மன வருத்தமின்றி , குழப்பமின்றி தன்னுடைய கடமையை சிறப்பாக செய்பவன் ஆரியன் என்று கருதப் பட முடியும். இதை சொன்னது நான் இல்லை, கிருஷ்ணர்!

    தேவையே இல்லாமல் திராவிடர்கள் என்று குறிப்பிட்டு 6 கோடி இந்துக்களை தனிமைப் படுத்தும்படி எழுத ஆரம்பித்தது, திரு. கார்கில் ஜெய் தான். பிறகு திராவிடர்கள் என்று எழுதியதற்கு புதுபுது வியாக்க்யானனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

  53. திருச்சிக்காரன், கார்கில் ஜெய் உணர்வுபூர்வமாகச் சொன்ன விஷயத்தை அரசியலாக்குகிறீர்கள். அவர் விளக்கம் கொடுத்தும், தொடர்ந்து நீங்கள் அதையே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, எப்போதும் நீங்கள் செய்வது இதைத்தான். ஒரு வரியைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு, அதையே திரும்ப திரும்ப எழுதி, தமிழ்ஹிந்துவைப் படிப்பதையே சலிப்புக்குரிய விஷயமாக மாற்றுகிறீர்கள். அவர் கருத்தைச் சொன்னார், உங்கள் தரப்பை சொல்லியாகிவிட்டது. யார் ஜெயித்தார் என்ற போட்டியில் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள் இப்போது. நீங்களே வெற்றியாளர். இந்த அறிவிப்புக்குப் பரிசாக ஒன்றைச் செய்யுங்கள், இனியும் இதே விஷயத்தை தொடர்ந்து எழுதாதீர்கள். அயர்ச்சியாகவும் எரிச்சலாகவும் வருகிறது.

  54. ஹலோ Mr. tamilhinduwatchdog, அடேயப்பா, இது என்ன அதிகாரம் தூள் பறக்கிறதே!

    திராவிடர்கள், ஆரியர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரும் இந்தியர்கள் தான். அல்லது எல்லோரும் பாரத நாட்டவர்தான். இந்தக் கருத்து உங்களுக்கு ஒப்பா, இல்லையா? இந்தக் கருத்து உங்களுக்கு ஒப்பவில்லை என்றால் இன்னும் பல பின்னூட்டங்களை எழுத வேண்டியது எனக்கு அவசியமாகும்.

    முதலில் திராவிடர் என்கிற பிரிவினை, பிறகு ஆரியருக்கு தவறான விளக்கம். இப்படியே எழுதிக் கொண்டே போனால் எப்படி.

    இந்துக்கள் பிரிவினைப் படுத்தப் படுவதை ஒப்ப இயலாது. உங்களுக்கு சலிப்பு வந்தால் என்ன செய்ய இயலும்? என்னுடைய பின்னூட்டத்தை படிக்க சொல்லி நான் கட்டாயப் படுத்தவில்லையே. என்னுடைய கருத்து தவறாக இருந்தால் ஆசிரியர் குழு மட்டுப் படுத்த இயலுமே.

    அதோடு நீங்கள் ஒவ்வொரு கட்டுரையாக சென்று பின்னோட்டம் இடுபவர்களை எல்லாம் மிரட்டி எழுதுகிறீர்களே. தமிழ் ஹிந்துவில் பலரும் பின்னூட்டம் இட்டால் அதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?

  55. திருச்சிக்காரன், தெளிவாகப் பேசுங்கள். திராவிடர் என்பது இன்றைய நிலையில் எதைக் குறிக்கிறதோ, எது திராவிடம் என்று மற்றவர்களால் சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறதோ, எதை திராவிடம் என்று சொல்லி ஆரியர்களுக்கு எதிராக முன்னிறுத்துகிறார்களோ அதனைத்தான் திராவிடர் என்று குறிப்பிட்டதாக கார்கில் ஜெய் சொல்லியாகிவிட்டது. நீங்கள் கம்யூனிஸ வாதிகள் போல, ஆறு கோடி திராவிடர்களையும் ஆன்மிகப் பாதையில் அழைத்துப் போகப் போகிறேன் என்று உட்டோப்பிய சமுதாயம் ஒன்றை உருவாக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் என்ன பேசுகிறோம் என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள். ஒட்டுமொத்த பதிவையும் தேவையற்ற விவாதத்துக்கு ஹைஜாக் செய்யாதீர்கள். தமிழ்ஹிந்து ஏன் வெளியிடுகிறது என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்காதீர்கள். வேறு வழியில்லாமல் வெளியிட்டு வருகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் வெளியிடுவதாலேயே நீங்கள் சொல்வது சரியென்றால், அதில் வரும் கமெண்ட்டுகள் எல்லாமே சரி என்றாகிறது. அப்படியானால் இங்கே உங்களுக்கு வேலையே இல்லை என்றாகிறது.

    மேலும் மேலும் கமெண்ட்டுகள் எழுத நான் விரும்பவில்லை. அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசங்கள் இல்லாமல் போய்விடும். இப்படி நினைத்தாலே என் உடல் நடுங்குகிறது.

    அடுத்தவர்கள் சொல்வதில் ஏதேனும் கருத்து இருக்கும் என்று நினைத்து, கொஞ்சமாவது காதைத் திறந்து கேட்கும் ஹிந்துத்தன்மை உங்களிடம் இல்லை என்று தெரிகிறது. உங்களுடன் பேசுவது செவிடன் காதில் சங்கூதுவது போன்றது.

    எதாவது பேசவேண்டும் என்று அவதூறு பரப்பாதீர்கள். நான் ஒவ்வொரு கட்டுரையாக சென்று பதிவு எழுதுபவர்களை மிரட்டி எழுதுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் எங்கே எப்படி எந்த எந்தக் கட்டுரைகளில் இதனைச் செய்திருக்கிறேன் என்று ஆதாரத்தோடு விளக்கவேண்டும். அப்படி விளக்க முடியவில்லை என்றால், கொஞ்சமாவது நேர்மை என்னும் சித்தாந்தம் உங்கள் ரத்தத்தில் ஓடுமானால், இதற்காக மன்னிப்புக் கேட்டு, இந்தத் தேவையற்ற ஹைஜாக் கமெண்ட்டுகளை விட்டுவிட்டு, தேவையான பதிவுக்குத் தொடர்புடைய கமெண்ட்டுகளை மட்டுமே போடவேண்டும். இது உங்களுக்கு நேரடியான கேள்வி/சவால். தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

  56. திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் என்ற தலைப்பில் அறிஞர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரை சில ஆண்டு களுக்குமுன் திண்ணை டாட் காமில் வெளியாயிற்று. அது அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கள் முன்னின்று நடத்தும் விராட் ஹிந்து சபா என்ற அமைப்பு சென்னையில் நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்டதாகும். அதில் திராவிட இயக்கம் இறந்துவிட்டது. ஆனால அதனை ஆழக் குழி தோண்டிப் புதைக்கத் தவறிவிட்டதால் அதன் வீச்சம் இன்னும் இருந்து கொண்டிருக்கி றது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். திராவிட இயக்கம் இன்று செயல் குன்றியும் சிறுத்தும் போய்விட்ட போதிலும் கடந்த எண்பது ஆண்டுகளாக அது ஹிந்து சமுதாயத்தை சாதியின் அடிப்படையில் பிளவு படுத்தும் பிரசாரத்தை இடைவிடாமல் செய்து வந்ததால் அதன் தாக்கம் இன்றும் எல்லா தளங்களிலும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் திரு கார்கில் ஜெய் தெரிவிக்கும் கருத்து சரியே. இன்று திராவிடன் என்று ஒருவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டால் அதன் பொருள் திரு கார்கில் ஜெய் சொல்வது போலத்தான் எடுத்துக் கொள்ளப்படும். ஆதி சங்கரரே தம்மை திராவிட சிசு என்று சொல்லிக் கொண்டாரே என்று வாதாடிப் ப்யனில்லை. .

    ஹிந்துக்கள் வெறுமனே கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு அர்ச்சனை செய்துவிட்டு வருவதால் மட்டும் ஹிந்துகளாகிவிட முடியாது. ஹிந்து என்கிற சமுதாய உணர்வும் ஒற்றுமையும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும். இவ்வாறு இல்லாமல் பக்தி மட்டும் இருப்பதால்தான் அவர்கள் பல துறைகளிலும் கோட்டை விடுவதோடு நாட்டையும் பறிகொடுத்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் காலப் போக்கில் அவர்கள் கும்பிட்டு பக்தி செலுத்தக் கோயிலும் இல்லாது அவற்றை மசூதிகளும் சர்ச்சுகளும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இப்போதே தென் மாவட்ட கிராமங்களில் அவ்வாறான நிலைமைகள் உருவாகி விட்டதைக் கேள்விப்படுகிறோம். சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால் வழி நெடுகிலும் மசூதிகளும் சர்ச்களும் மாற்றி மாற்றி வருவதைக் காணலாம். ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம் இயக்கங்களுக்கும் கிறிஸ்தவ தலைமைப் பீடங்களுக்கும் துணை போகும் கூலிப்படைதான் திராவிட இயக்கம். இன்று அதன் மிச்ச சொச்சங்களின் பிடியில்தான் ஹிந்து ஆலயங்கள்கூட இருந்து வருகின்றன. எனவேதான் அரசின் சின்னத்தை மாற்றும் திட்டம்போல் ஹிந்து கலாசாரத் தடையமே தமிழ் நாட்டில் இல்லாமல் செய்துவிடத் திட்டமிடப்படுகிறது.

    தி.மு.க.வில் இன்று விபூதி குங்குமம் பளிச்சிடப் பலர் காட்சியளிக்கக் கூடும். தி.மு.க. வில் நாத்திகக் கொள்கை மறைந்து விட்டது அல்லது ஆஷாட பூதி வேடம் புனையப்படுகிறது என்று வேண்டுமானால் அதற்குப் பொருள் கொள்ளலாமே தவிர அங்குள்ளவர்கள் ஹிந்து சமூக உணர்வுள்ள வர்களாக மாறிவிட்டார்கள் எனக் கருத முடியாது. கோவில், திருவிழா, நோன்பு, தல யாத்திரை சபரிமலை விரதம் என எல்லாமே இன்று வணிக மயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நாட்டில் பெரியாரியம் காலாவதியாகி வருவதாக சந்தோஷப்பட்டுக்கொளவதில் அர்த்தமில்லை. உண்மையிலேயே இங்கு ஆன்மிக உணர்வு மிகுந்திருப்பின் இத்தனை குற்றச் செயல்களும் சுயநல ஊழல்களும் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்காது. இன்று அயோக்கியர்களின் முறைகேடுகளும் அத்து மீறல்களும் போலீஸ் பாதுகாப்புடன் சர்வ சாதாரணமாக நடந்து வருவதைக் கண்முன் காணுகின்ற போதிலும் அது நம்மை வெகுண்டெழச் செய்வதில்லை.

    பதவியில் உள்ள அரசியல்வாதி முறைகேடுகள் செய்து ஆயிரம் ஆயிரம் கோடி பொதுப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போவதோடு வாழ்த்தொலி முழங்க போலீஸ் பாதுகாப்புடன் கம்பீரமாக பவ்னி வருவதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க்கிறோம். அதே சமயம் ப்ஸ்ஸிலோ ஜன நெரிசலிலோ பிக்பாக்கெட் அடித்து மாட்டிக் கொள்பவனை அனைவருமாகச் சேர்ந்து துவட்டி எடுத்துவிடுகிறோம்.

    நித்தியானந்தன் என்பவரை நான் ஆதரிக்கவில்லை. எப்போதுமே அந்த நபர் என் கவனத்திற்கு வந்ந்ததுமில்லை. ஆனால் அந்த நபர் தனிநபர்கள் பலர் த்ன்னை நம்பிக் கொடுத்த நன்கொடைகளைத்தான் கைவசம் வைத்திருந்தார். நம்பிக்கை மோசடி என்று சொன்னாலும் அது தனிப்பட்டவரிடையிலான பிரச்சினை. ஆனால் நித்தியானந்தன் மீது ஒரு தொலைக் காட்சி சில விஷயங்களை வெளியிட்டதும் அந்த் நபர் சார்ந்த் இடங்களில் எல்லாம் நாச காரியங்களும் வன்முறையும் தாண்டவமாடின. இவையெல்லாம் பொது மக்களின் சீற்றம் காரணமாகவா நேர்ந்தன? செல்வாக்குள்ள விரோதிகளின் தூண்டுதல் காரணமாக ரவுடிப் பட்டாளங்கள் நிகழ்த்திய அட்டகாசங்கள்தானே அவை? பகல் கொள்ளைக்காரராகச் செயல்படும் அரசியல்வாதிகள் மீது ஏன் மக்களுக்குக் கோபமே வருவதில்லை?

    இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தில் எல்லாவகையான குற்றங்களும் எக்காலத்தும் இருந்தே வருகின்றன. ஆனால் குற்றமிழைப்பதற்கு வெட்கமும் அச்சமும் மக்கள் மத்தியில் குற்றமிழைப்பவர் மீது இழிவான எண்ணமும் முன்பெல்லாம் இருந்து வந்தன. இன்று குற்ற மிழைப்பவனைப் பற்றி சம்பாதிக்கத் தெரிந்தவன் என்ற பொறாமையும் வியப்பும் கலந்த பாராட்டுணர்வு மிகுந்துள்ளது. குற்றமிழைப்பவனும் கைதாகும்போது தலை நிமிர்ந்து அட்டகாசமாகச் சிரித்தபடி போஸ் கொடுக்கிறான். வெளியே வந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறான். அதேபோல் வெளியில் வந்தும் விடுகிறான். நான் நிரபராதி என்று நீதி மன்றமே கூறிவிட்டது என்கிறான். ஆக அவன் கைது செய்யப்பட்டதுகூட அவனுக்குச் சாதகமாக, சட்டரீதியாக அவன் நிரபராதி என்று நீதிமன்றச் சான்றிதழ் பெறுவதற்கே பயன்படுகிறது. இவ்வாறு சான்றிதழ் பெற்றமைக்காக அவன் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை அபிஷேகம் என்றெல்லாம் செய்யும் அபத்தத்தையும் வேடிக்கை பார்க்கிறோம்.

    வெற்றிக்காக நம்பிக்கையுடன் பிரார்த்த்னை செய்யுங்கள் ஆனால் வெடி மருந்து ஈரமாகி விடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின்போது தம்மவர்களிடம் கூறினாராம். இது இன்று நமக்கும் பொருந்தும். ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் தெருவுக்கு வந்து போராட வேண்டிய காலம் இது.

  57. இரா.சத்தியபாமா, மலர்மன்னன் பற்றிக் குறிப்பிட்டு எழுதி நீங்கள்தான் சத்தியபாமா என்று நிரூபித்துவிட்டீர்கள். :))

    நீங்கள் சொல்லியாவது ஹைஜாக்காரர்கள் அமைதியாகிறார்களா என்று பார்ப்போம்!

  58. திரு. tamilhinduwatchdog,

    மன்னிப்பு, எதற்கு கேட்க வேண்டும் மன்னிப்பு?பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய சித்தாந்ததில் நான் இல்லை.

    இதே தளத்திலே இன்னொருகட்டுரையில் நீங்கள் இன்னொரு பின்னூட்டத்தை கருத்து அடிப்படையில் இல்லாமல் வெறுமனே எழுதி இருக்கிறீர்கள்.

    //tamilhinduwatchdog
    27 April 2010 at 11:22 am
    சத்தியபாமா, உங்கள் கமெண்ட் உங்கள் அளவில் ஓர் உலக சாதனை. வாழிய நீவிர். ஏனென்றால், அதில் மலர் மன்னன் என்கிற பெயரே வரவில்லையே! சாதனைதானே?!//

    இதற்கும் கட்டுரையின் பொருளுக்கும், அல்லது இந்த பின்னூட்டத்துக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

    இந்து மதத்தின் கருத்துக்களுக்கும், இந்து மதத்தை பின்பற்றும் முக்கிய நாடான இந்திய நாட்டின் சமுதாயத்துக்கும் சம்பந்தமே இல்லாமல், என்னைத் தாக்குவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு ஹைஜாக் செய்வது நீங்கள் தான்!

    இந்துக்களை பிரித்து பேசும் , இந்தியரகளை பிரித்து பேசும் எந்த கருத்துக்கும் பதில் கருத்து கொடுக்க நான் தயங்க வேண்டியதில்லை. நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் நான் அஞ்சப் போவதில்லை.

  59. திருச்சிக்காரன், உங்களுக்காக பரிதாபப் படுகிறேன். நான் என்னைப் பிறப்பித்துக்கொண்டதே இன்றுதான். ஒவ்வொரு கட்டுரையாக என்று எழுதிவிட்டு, ஒரே ஒரு எடுத்துக்காட்டு, அதுவும் ஒரு நகைச்சுவையாக நான் குறிப்பிட்டதைத்தான் காண்பிக்க முடிந்திருக்கிறது. அதிலும் நான் ஹைஜாக் செய்தேன் என்று சொல்கிறீர்கள். என்ன காமெடி. மனம் விட்டுச் சிரித்தேன். நீங்கள் சீரியசாக எழுதும்போது வரும் நகைச்சுவையின் சுகமே அலாதிதான். எனது அந்த கமெண்ட்டில் வாதம், விவாதம் இல்லை. சிறிய அப்சர்வேஷன் உள்ள ஒரு சிறிய பகடி மட்டுமே. மேலும் நான் தொடர்ந்து கமெண்ட்டு போட்டுக்கொண்டே இருக்கமாட்டேன், உங்களை போல, மற்றவர்களை மட்டம்தட்டி, தான் ஜெயித்துவிட்டதாக மார்தட்டி.

    எவ்வளவு மிரட்டினாலும் அஞ்சமாட்டேன் என்கிறீர்கள். ஐயா உங்களை யார் மிரட்டியது? ஏன் உங்களை நீங்களே கோபுரத்துக்கு மேலே இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள்? உங்களை நினைத்துக்கொள்வது கூட உங்கள் உரிமை, ஆனால் அதனை நம்பி நீங்கள் எழுதுவதெல்லாம் பாடாவதியாகவும் பெரிய ரோதனையாகவும் உள்ளது. தயவு செய்து கருணை காட்டுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், கெஞ்சி கூத்தாடிக் கேட்டுக்கொள்கிறேன், ஒரு தடவையாவது, ஒரே ஒரு தடவையாவது, I mean atleast one time in your life time, பதிவுக்கு சம்பந்தமுள்ள ஒரே ஒரு கமெண்ட்டைப் போட்டுவிடுங்கள், ப்ளீஸ்.

    Bye.

  60. //தி.மு.க.வில் இன்று விபூதி குங்குமம் பளிச்சிடப் பலர் காட்சியளிக்கக் கூடும். தி.மு.க. வில் நாத்திகக் கொள்கை மறைந்து விட்டது அல்லது ஆஷாட பூதி வேடம் புனையப்படுகிறது என்று வேண்டுமானால் அதற்குப் பொருள் கொள்ளலாமே தவிர அங்குள்ளவர்கள் ஹிந்து சமூக உணர்வுள்ள வர்களாக மாறிவிட்டார்கள் எனக் கருத முடியாது.//

    எனக்கும் அரசியலுக்கும் சமபந்தம் கிடையாது. ஆனால் என்னுடைய நண்பர்களில் சிலர் தி.மு.க மற்றும் பா.ம.க அனுதாபிகள். அவர்கள் இந்துக்கள் தான். அவர்கள் கடவுளிடம் பக்தி செய்வதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். ஆன்மீக விடயமாக அவர்கள் சில கேள்விகளை என்னிடம் கேட்பதுண்டு. எனக்கு தெரிந்த வரையில் நான் விளக்கம் தருவேன்.

    அவர்களுக்கு உண்மையான ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கிறது.

    ஆறு கோடி தமிழர்களுக்கும் ஆன்மீக உணர்வு உண்டாக்க என்னால் முடியும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என்னால் முடிந்த அளவு ஆன்மீக சிந்தனையை உருவாகக் இயலும்.

    //ஹிந்துக்கள் வெறுமனே கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு அர்ச்சனை செய்துவிட்டு வருவதால் மட்டும் ஹிந்துகளாகிவிட முடியாது. ஹிந்து என்கிற சமுதாய உணர்வும் ஒற்றுமையும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும்//

    இது என்ன கட்டளையா ? ஹிந்து என்பதற்கு புதிய வரையறை தருகிறீர்கள். தமிழன் என்று சொல்ல முன்பு கருணாநிதியிடம் சர்டிபிகட் கிடைக்கும். இந்து என்பதற்கு இனிமேல் சர்டிபிகேட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமா?

    ஹிந்து என்கிற சமுதாய உணர்வு உங்களுக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் இப்படி இவர்தான் இந்து அவர் இந்து இல்லை என்று வரையருப்பீர்களா?

    // வெறுமனே கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு அர்ச்சனை செய்துவிட்டு வருபவர்கள் ஹிந்துக்களாகி விட முடியாது //என்றால், இன்றைக்கு நாட்டிலே பல கோடி மக்கள் அப்படித்தான் செய்கிகிறார்கள். அவர்கள்எல்லாம் இந்துக்கள் என அழைத்துக் கொள்ள முடியாதா? இது கொடுமையான சட்டமாக இருக்கிறதே.

    நாங்கள் இந்துக்கள் தான், நாங்கள் அமைதியாக ஆன்மீக விடயங்களில் ஈடுபடுகிறோம். இன்னும் இன்னும் அதிகமாக பலே பேருக்கும் ஆன்மீக சிந்தனையை உணர்வை அதிகப் படுத்துவோம். எல்லா மக்களிடமும் ஆன்மீக உணர்வை வூட்டுவோம்.

    நீங்கள் எங்களை இந்துக்களை என்று அழைத்தாலும் சரி, அல்லது இந்து இல்லை என்று சொன்னாலும் சரி.

    எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இந்துக்கள் தான்.

  61. தமிழ் ஹிந்து வாட்ச்டாக் அவர்களே, பொருத்தம் இல்லாமல் நான் அறிஞர் மலர்மன்னன் அவர்களின் பெயரை எனது பின்னூட்டங்களில் குறிப்பிட்டால் அது பற்றிய உங்கள் மறுமொழியை நகைச் சுவையாக ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறு இல்லாத் பட்சத்தில் அது பொறமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்! இங்கு நான் திராவிடன் என்கிற பிரச்சினை குறித்து நடக்கும் கருத்துப் பறிமாறலையொட்டி மலர்மன்னன் அவர்கள் முன்பு எழுதிய மிக முக்கியமான கருத்தினைக் குறிப்பிட்டேன் ( திராவிட இயக்கம் இறந்துவிட்டது ஆனால் அதனை ஆழக குழி தோண்டிப் புதைக்க நாம் தவறிவிட்டதால் அதன் வீச்சம் இன்னும் இருந்து வருகிறது) இக்கருத்தின் காராணமகத்தான் திராவிடன் என்ற சொல்லே அனர்த்தமாகியிருக்கிறது. இங்கு அறிஞர் மலர்மன்னன் பெயரைக் கையாண்டதில் தவறென்ன? இம்மாதிரியான கருத்தை வேறு எவரும் சொல்லியிருந்தால் அவர் பெயரையும் குறிப்பிடத் தவறியிருக்க மாட்டேன்!
    திரு திருச்சிக்காரன் அவர்களுக்கு மிக்க நன்றி. நகைச்சுவை என்ற சாக்கில் பிறர் மனதைப் புண்படுத்துதல், ஏளனம் செய்தல் ஆகியவறைப் பொருத்தம் இன்றி அதிகார தொனியில் பின்னூட்டமாக இடுவதும் பிறகு பொருத்தமாக எழுதுங்கள் என்று மற்றவர்களளுக்கு உபதேசம் செய்வதும் நியாயமல்ல என்பதை நாகரிகமாகச் சுட்டிக் காட்டியமைக்கு மீண்டும் திருச்சிக்காரருக்கு நன்றி.

  62. இறந்துபோன திராவிட இயக்கத்தினை ஆழக் குழி தோண்டிப் புதைக்க நாம் தவறிவிட்டதால்தான் திராவிட, திராவிடன் என்பது போன்ற சொற்களுக்கு ஒரு கறுப்பபுக் கறை படிந்துவிட்டது என்ற கருத்திலும் திராவிட இயக்கம் ஹிந்துக்களிடையே ஏறிய விஷம் முறியவில்லை என்ற உண்மை புலப்படவும் அறிஞர் மலர்மன்னன் அவ்வாறு கருத்தரங்கில் குறிப்பிட்டார். எனது முந்தைய மறுமொழியில் இதனைத் தெளிவாகக் குறிப்பிடத் தவறிவிட்டேன்.

  63. நான் எழுதியுள்ள பல பின்னூட்டங்களும் , இந்தக் கட்டுரைக்கு சமபந்தமுடையவே. தமிழக அரசின் சின்னம் மாற்றப் படப் பட்டாலும், தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரிய எதிர்ப்பு இல்லாததற்கு காரணம் என்ன என்பதை சுட்டிக் காட்டும் வகையிலே நான் எழுதியுள்ளேன். நான் சாதாரணமானவன் தான். நான் என்னைக் கோபுரம் என்று கருதிக் கொள்ளவுமில்லை, அந்த ரீதியில் எழுதவும் இல்லை.

    பாடாவதி, பெரிய ரோதனை இவ்வளவுதானா? இன்னும் திட்டிக் கொள்ளலாம். ஆனால் அத்தனையும் பொருட்படுத்தாமல் உண்மையான ஆன்மிகத்தின் அவசியத்தை தெளிவு படுத்த வேண்டியது என் கடமையே.

  64. திரு, சத்யபாமா அவர்களே,

    எனக்கு தனிப் பட்ட முறையில் யார் மீதும் வெறுப்பு கிடையாது. ஆனால் உண்மையான ஆன்மீகமே இந்து மதத்திற்கு சரியான மறுமலர்ச்சி தரும் என்பதே என்னுடைய கருத்து. நியாயமான போராட்டங்கள், பிறரை அச்சுறுத்தாத போராட்டங்கள் தேவைதான்.

    ஆனால் அவை நிரந்தரத் தீர்வாகி விடாது. ஆதி சங்கரும், விவேகானந்தரும் எப்படி செயல பட்டனர். அவர்களின் சிந்தனையும் செயல் பாடும் எப்படி மக்களிடையே மாற்றத்தை உருவாக்கியது? அப்பர் மகேந்திர பல்லவனை மாற்றிய போது, உங்களால் தி.மு.க காரரை மாற்ற இயலாதா?

    ஒரு தி.மு.க. காரரை சந்திக்கும் போது அவரிடம் கருணாநிதி யைக் குறை கூறி பேசுவதை விடுத்து , ஆன்மீகம் எப்படி அமைதியை தரும் என்று விளக்கிப் பாருங்கள். அவர் புரிந்து கொள்வார். நீங்கள் விளக்க கூட வேண்டாம். உங்களிடம் இருக்கும் அமைதி அவரை உங்களிடம் கவனம் கொள்ள வைக்கும்.

    ஆனால் அதற்கும் முதலில் நம்மிடம் சரியான ,ஆன்மீக உணர்வு, பயிற்ச்சி , முன்னேற்றம் இருக்க வேண்டும்.

    அது உங்களிடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.

    உணர்வின் அடிப்படையில் செயல் படுவதோடு, சிந்தனையின் அடிப்படையில் செயல் படுவது அவசியமானது.

    நீங்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் உயர்த்தி அவனை மிகச் சிறந்தவனாக, கடவுளாகவே மாற்ற முடியும் என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் தான்.
    பிற மதங்கள் மனிதர்கள் என்ன செய்தாலும் கல்லறைக்குத் தான் போய்க் காத்திருக்க வேண்டும் என்கின்றன.

    நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

  65. ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஹிந்துக்களின் சுய மரியாதையை மீட்டெடுத்துக் கொடுத்த சத்ரபதி சிவாஜி மகராஜுடன் போரிட முகலாய மன்ன்ன ஒளரங்கசீப் தனது ராஜபுத்திர வம்சத் தளபதியை அனுப்பினான். அந்த ராஜபுத்திர தளக்கர்த்தன் போருக்குப் புறப்படுமுன் போரில் தனக்கு வெற்றி கிடைக்கவேண்டும், சிவாஜி தோற்க வேண்டும் என்று பக்தி சிரத்தையுடன் சிவபெருமானிடம் பிரார்தித்து யாகமும் செய்தான் அவன் பக்திமானாகவும் ஹிந்துக் கடவுளரிடம் நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்கலாம். ஆனால் ஹிந்துக்களின் மானம் காத்த மாமன்னர் சிவாஜியைத் தோற்கடிக்க வேண்டும் என்று பூஜை செய்த அந்த ராஜபுத்திர தளபதி ஹிந்து சமூக உணர்வுள்ளவனாக இருந்திருந்தால் அவ்வாறு வேணடுதல் செய்வானா? அவன் ஹிந்துவாக இருந்து ஹிந்து கடவுளை வணங்கி என்ன பயன்?

    ஒளரங்கசீப்பின் அந்த ராஜபுத்திரத் தளபதிக்கு போர் தொடங்குமுன் எமது கண்ணின் கருமணியாம் சத்ரபதி சிவாஜி மகராஜ், நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். ஹிந்து சமூக உணர்வுடன் நடந்துகொள்ளு மாறு அதில் அவர் அவனிடம் மன்றாடிக் கேட்டிருந்தார். இன்று அதைப் படித்தாலும் நம் கண்களில் கண்ணீர் வழியும். நெஞ்சு பதறும். எங்கள் ராஜாவே நீங்கள் ஏன் போயும் போயும் அந்த மனிதப் பதரிடம் கெஞ்ச வேண்டும். தூக்கி எறியுங்கள் துரோகிகளை என்று சத்ரபதி சிவாஜி மகராஜிடம் மனம் விண்ணப்பிக்கும். ஆனால் சிவாஜி மகராஜரோ த்மது சுயகெளரவத்தைப் பொருட்படுத்தாமல் சக ஹிந்துவுக்கு ஹிந்து சமூக உணர்வூட்டுவதே தமது கடமை எனக் கருதியே அந்த ராஜ புத்திரனுக்குக் கடிதம் எழுதினார். நீங்கள் நியாயப்படி என்னுடன் தோளோடு தோள் சேர்ந்து நம் பொது எதிரியுடன் மோதுவதல்லவா முறை என்று கேட்டார். இப்போதாவது நான் தெரிவித்த கருத்து புலப்படும் என நம்புகிறேன்.

  66. இந்த உதாரணம் சரியல்ல. இது தவறான அணுகுமுறை. இந்து மதத்திற்காக போராடாதவன் இந்து இல்லை என்றால், இது இந்து மதமா, இஸ்லாமா?

    சாதாரண மக்களுக்கு இந்து மதத்தின் உயரிய கருத்துக்களை, ஆன்மீக சிந்தனைகளை உணர வையுங்கள். அவர்கள் நம்மை விட சிறப்பாக இந்து மதத்திற்கு பணி புரிவார்கள்.

    இந்து மதத்தின் சிறப்பையும் , ஆன்மீக உயர்வையும், உலக நன்மைக்கு இந்து மதத்தின் அவசியத்தையும் ஒவ்வொரு இந்துவுக்கும் புரிய வைத்து விட்டால் பிறகு இந்து மதத்திற்கு எந்தப் பிரச்சினையும் வராது.

    இந்து மதம் வாளாலோ, பணத்தாலோ அல்ல – உண்மையால் ஆன்மீகத்தால், அமைதியால், அஹிம்சையால் நிலைத்து இருக்கிறது.

  67. திருச்சிக்காரர் மதத்திற்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள வேறுபாட் டைப் புரிந்துகொள்ளாமல் இரண்டும் ஒன்றெனக் குழம்புகிறார். இம்மாதிரியான குழப்பம் நம்மில் பலபேருக்கு இருப்பதுதான் பிரச்சினை. இரண்டையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வதால்தான் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தென் கிழக்கு ஆசியா, வட மேற்கு ஹிந்துஸ்தான் எங்கும் இத்தகைய அளவுக்கு மீறிய நம்பிக்கை யினால் ஹிந்து மதமே இறுதியில் இல்லாமலும், இருந்தாலும் மங்கிப்போயும் நிலைமை மோசமாகிவிட்டது. மக்களுக்காக மதமேயன்றி மதத்திற்காக மக்கள் அல்ல! மக்கள் என்பது சமூகமே. ஆன்மிகம் முற்றும்போது அங்கு மதம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் தலைசிறந்த ஆன்மிகவாதியான அரவிந்தர்கூட ஆகஸ்ட் 15 1947 க்கு முன் தியானம கலைத்து, தமது பீடத்திலிருந்து இறங்கி வந்து ஹிந்துஸ்தானத் திற்கு, அதாவது ஹிந்துக்களுக்கு எச்சரிக்கை செய்தார். நம் காலத்தில் அரவிந்தரைவிடவா ஒரு ஆன்மிகவாதியைக் காணப்போகிறோம்?

  68. வாளால் வருவதை வாளால் எதிர்கொள்! வாயால் வருவதை வாயால் எதிர்கொள்!

    பணத்தால் பரவும் எதிரியை பணத்தால் எதிர்கொள்!

    தவறினால் அழிவு நிச்சயம்!

    வறட்டு வேதாந்தம் வேலைக்கு ஆகாது!

    ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் சதவீதம் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இப்போது குறைவே. இதே கால கட்டத்தில் அந்நிய மததவர் சதவீதம் முன்பைவிடக் கூடுதலே. மக்கள் குறைந்தால் மதமும் குறையும்!

    ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமுன் ஹிந்து மதம் நடைமுறையில் இருந்த நிலப்பரப்புடன் ஒப்பிட்டால் இப்போதுள்ள நிலப் பரப்பு மிகவும் குறைவே. மக்கள் திசை மாறிப் போய்விட்டார்கள். மதமும் போனது!

  69. திரு. சத்யா பாமா அவர்களே,

    வறட்டு வேதாந்தம்! எப்படிப் பட்ட வார்த்தைகள்? ஆனால் அதற்கும் நான் சொலவதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    ஏனெனில் தியாக ராசர், விவேகானந்தர், ஆதி சங்கரர், அப்பர், போகர் செய்தது வறட்டு வேதாந்தம் இல்லை.

    வாளை எடுத்த காட்டு மிராண்டிக் காலம் முடிந்து விட்டது. காட்டு மிராண்டிகளை சீர் திருத்துவதே நாகரீகத்தவரின் பணி. அவர்களைப் போல நாமும் காட்டுமிராண்டி ஆவது தீர்வு அல்ல.

    ஆன்மீகத்தின் வலிமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் எந்த முறையை பயன்படுத்தியதோ, அந்த முறையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இதற்க்கு மேல் நான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. நாம் இருவரும் அதே விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருப்பதில் உபயோகம் இல்லை. என்னுடைய வழி முறை, மக்களின் மனதில் முதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆன்மீக வழி முறையே.

    இந்து மதம் , இந்து மதமாகவே நிலைக்கும். அது வேறொரு மதமாக மாறி விடாது.

    இந்துக்கள், இந்துக்களாகவே இருப்பார். வேறொரு நிலைக்கு செல்ல மாட்டார்கள்.

    நன்றி!

  70. திருச்சிக் கார‌ன்,

    //அப்பர் மகேந்திர பல்லவனை மாற்றிய போது, உங்களால் தி.மு.க காரரை மாற்ற இயலாதா?// — முடிந்தால் நீங்கள் ஒரே ஒரு கமலஹாசனை மாற்றி ஒரு படத்தில் சமண மதத்து மன்னன் மகேந்திர பல்லவன் அப்பரை தூக்கி கல்லில் கட்டி எறிவதுபோல் சினிமா எடுக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு தலை வணங்குவேன். சத்யபாமாவும் தி.மு.க காரரை மாற்றுவார்.

    //திருச்சிக் கார‌ன்
    27 April 2010 at 8:13 pm
    திரு. சத்யா பாமா அவர்களே,

    வறட்டு வேதாந்தம்! எப்படிப் பட்ட வார்த்தைகள்?
    //
    நீங்கள் சொன்ன இதெல்லாம் என்ன? ரொம்ப மென்மையான வார்த்தைகளா? :

    ===================================================
    இது என்ன கட்டளையா ?

    ஹிந்து என்கிற சமுதாய உணர்வு உங்களுக்கு இருக்கிறதா?

    இது கொடுமையான சட்டமாக இருக்கிறதே.

    நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் நான் அஞ்சப் போவதில்லை.

    மிரட்டி எழுதுகிறீர்களே. தமிழ் ஹிந்துவில் பலரும் பின்னூட்டம் இட்டால் அதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?

    இதைப் புரிந்து கொள்ளாமல் என் மீது பாய்கிறீர்கள்?

    இது உங்களை அறியாமலேயே நீங்கள் திராவிட கழகத்தின் மாணவர் ஆகி விட்டதையே காட்டுகிறது

    =========================================================

    ஆரியன் என்பதற்கு கிருஷ்ணர் என்ன அர்த்தம் சொன்னார் என்று சொல்கிறீர்களே, அவர் சொன்னது ‘அருஞ்சொற்பொருள்’ அன்று. அவர் சொன்னது “விளக்கம்”. அதைப்போலத்தான் நானும் ‘திராவிடன்’ என்பதற்கு அருஞ்சொற்பொருள் ஆன ‘தெற்கன்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டாம், “ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களை” குறிப்பிட்டேன் என்று விளக்கம் சொன்னேன்.

    நீங்கள் அருஞ்சொற்பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம், விளக்கத்தை கவனியுங்கள் என்று நான் சொன்னது, உங்களுக்கு புரியாத அளவுக்கு நீங்கள் முட்டாள் அன்று. உண்மையில் அதிபுத்திசாலியான நீங்கள், வீம்புக்கு சண்டையிட்டு, பிரச்சினைகளை பெரிதாக்கி, அபாண்டமாக பழிபோட்டு நீங்கள் தி.மு.கவினரிடம் சிநேகிதம் வைத்திருப்பது இயல்பானதே என்று நிரூபிக்கிறீர்கள்.

    மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் காலவிரயம் செய்யாதீர்கள்.

    ==================================================
    My heart felt thanks to Rama, Sathyabama, tamilhinduwatchdog for your valuable arguments.

  71. //வெற்றிக்காக நம்பிக்கையுடன் பிரார்த்த்னை செய்யுங்கள் ஆனால் வெடி மருந்து ஈரமாகி விடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின்போது தம்மவர்களிடம் கூறினாராம். இது இன்று நமக்கும் பொருந்தும். ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் தெருவுக்கு வந்து போராட வேண்டிய காலம் இது.//
    “பூ“ என்றுசொல்லலாம் ”புய்ப்பம்” என்றும்சொல்லலாம் நீங்கள் சொன்னமாதிரியும் சொல்லலாம் ஆனால் சத்தியபாமா சொல்வதுதான் இன்று நமக்கு முதல் தேவை புலம்புவதால் சாதிக்கபோவது ஒன்றும் இல்லை

  72. // இரா. சத்தியபாமா
    2010/04/27 at 3:45pm

    தமிழ்ஹிந்து வாட்ச் டாக் என்பது ஆசிரியர் குழுவின் நிழலா? நேரடியாகச் சொல்ல முடியாததற்காக ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டிருகிற பினாமியா? //

    இல்லை.

    தளத்தைப் படிக்கும் ஏராளமான வாசகர்களில் ஒருவர் இப்படி ஒரு பெயரில் மறுமொழிகள் இடுகிறார். ஆசிரியர் குழுவுக்கும் tamilhinduwatchdog என்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    அவதூறு சொல்வதற்கு முன் நிதானத்துடன் யோசித்துப் பார்ப்பது நல்லது. பினாமிகள் உருவாக்குவதில் ஆசிர்யர் குழுவுக்கு ஆர்வமும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை. மறுமொழிகளைப் பொறுத்த வரையில், ஆசிரியர் குழு செய்வது என்பது அவற்றை மட்டுறுத்துவது மட்டுமே.

  73. உலகச் செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழாக அரசு கவிதைப் போட்டி அறிவித்திருக்கிறது. முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய்.

    தலைப்பு: “சங்கத் தமிழ் அனைத்தும் தா.”

    அவ்வையார் கேட்டது “சங்கத் தமிழ் முன்றும் தா” என்று விநாயகரிடம்

    இவர்கள் கேட்கச் சொல்வது சங்கத் தமிழ் அனைத்தும்.
    யாரிடம் என்று எல்லாருக்கும் தெரியும், கருணாநிதியிடம் தானே கேட்கவேண்டும், கடவுளே இல்லாத நிலையில் கருணாநிதி தானே கடவுள்.

    அவரிடம் இப்போது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் மேல்,
    வசைத் தமிழ், பசைத் தமிழ் என்று பலவகையான தமிழ் இருப்பதால், அனைத்தும் தா என்று மாற்றி விட்டார்கள்.

    கண்டிப்பாகப் பரிசுகள் எல்லாம் தி. மு. கழக இலக்கிய அணியில் இருப்பவர்களுக்குத்தான் போய்ச் சேரும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

    https://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17991

  74. ஆசிரியர் குழுவுக்கு

    நான் முன்னரே சொல்லிவந்தபடி …

    மறுமொழி செய்பவர்கள் சொந்தப்பெயரில்தான் செய்யவேண்டும்.
    தளத்தில் பதிவுசெய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை வேண்டும்.
    இதனால் ….

    1 கண்டபடி தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்குவது குறையும்.
    2. பொது மனிதர் யாரைப்பற்றியும் கூட நிதானத்துடன் விமரிசனம் செய்வார்கள்.
    3 கண்டபடி கொரில்லா போல திடீரென்று வந்து தாக்குதல் நடக்காது.
    4 அந்நிய மதத்தவர்களின் மட்டில்லாத தாக்குதலைத் தடுக்கலாம்.
    5 ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களில் மறுமொழி இட்டு தனது கருத்தை நிலைநிறுத்த முயல முடியாது.
    6 அவதூறுகளை எழுதும் முன் யோசிப்பார்கள், ஏனெனில் எழுதியது யார் என்பது தெளிவாகத் தெரியும் என்ற பயம் இருக்கும்.

  75. அன்பர் திருச்சிக்காரன் அவர்களே

    திருச்சிக்காரன் என்பது சொந்தப்பெயர் இல்லை என்றே கருதுகிறேன்.

    தங்கள் கூற்றுக்களும் எனது கருத்தும்:

    ///வாளை எடுத்த காட்டு மிராண்டிக் காலம் முடிந்து விட்டது. காட்டு மிராண்டிகளை சீர் திருத்துவதே நாகரீகத்தவரின் பணி. அவர்களைப் போல நாமும் காட்டுமிராண்டி ஆவது தீர்வு அல்ல. ///

    நான் ஒப்புக்கொள்கிறேன். முழுக்க முழுக்க சரியே.

    ///ஆன்மீகத்தின் வலிமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் எந்த முறையை பயன்படுத்தியதோ, அந்த முறையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ///

    எனக்கும் இதில் முழு உடன்பாடே.

    /// என்னுடைய வழி முறை, மக்களின் மனதில் முதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆன்மீக வழி முறையே. ///

    இங்கேதான் உதைக்கிறது. ஆன்மீக வழியில் நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை இருந்தால் எதற்குப் புனைப்பெயர். சொல்லும் சொல் உண்மையானால், உண்மையின் வலுவில் நம்பிக்கை இருந்தால், புனைப்பெயரை விட்டு வெளியே வாருங்கள். இதை ஏன் பிறரிடம் சொல்லவில்லை என்ற கேள்வி வரும். அவர்கள் ஆன்மீக வழியில் உள்ள நம்பிக்கை பற்றி தங்கள் ஆன்மீக வழி ப‌ற்றிப் ப‌றைசாற்ற‌வில்லை.

  76. திரு. உமா சங்கர் அவர்களே,

    ஆன்மீகத்தில் நம்பிக்கை (confidence) உள்ளவர்கள், புனைப் பெயரில் எழுதினால் அதில் தவறு ஒன்றும் இருப்பதாக நான் கருதவில்லை.

    என்னுடைய பூர்வீகம் திருச்சி மாவட்டம் தான். எனவே பொய்யான எந்த தகவலையும் நான் அளிக்கவில்லை. எனவே சத்யம் வதா, தர்மம் சரா என்கிற கோட்பாட்டுக்கு மாறாக நான் செயல் படவில்லை.

    என்னுடைய பெயர், முகவரி, போட்டோ, … இத்யாதி விவரங்கள் வெளியிட்டே ஆக வேண்டியது அவசியம் இல்லை என நினைக்கிறேன்.
    இணையத்திலே தன்னுடைய சொந்த விவரங்களை வெளியிட்ட சிலரும், அவரது குடுமபத்தினரும், பல தொல்லைகளுக்கு ஆளானதை நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

    நான் இடும் பின்னூட்டங்களைக் குறைத்துக் கொள்ளவே விரும்புகிறேன், எனவே இது பற்றி நான் இன்னும் இன்னும் அதிக பின்னூடங்களை இட்டு இங்கே தளத்தை நிரப்ப விரும்பவில்லை. வேண்டுமானால் என்னுடைய தளத்திலே விவாதத்தை தொடரலாம்.

    https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/28/pen-name/

  77. உமாசங்கர், சத்யபாமா மற்றும் பிறருக்கு,
    திருச்சிக் காரன் அவர்களுக்கு “குங்குமம் பூசிக்கொள்ளும் திமுக காரன், கோவிலை கொள்ளை அடிக்கக் கூட பூசிக் கொள்வான்” என்பதும், போலி பக்தர்களும், “வேண்டிப் பெறவே” கோவிலுக்கு போகும் பக்தர்களும் மெய்யன்பர்கள் இல்லை என்பதும் நன்றாகத் தெரியும்.

    ஆரியனுக்கு நேரடி அர்த்தம் கொள்ள மாட்டாராம், ஆனால் திராவிடனுக்கு நேரடியான அர்த்தம்தான் கொள்வாராம், அவர் மனத்தில் இருக்கும் அர்த்தத்தில்தான் நானும் குறிப்பிட்டேனாம். (நான் இல்லையென்று சொன்னாலும்).

    மேலும் கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தினர் செய்யும் இயல்பான ஒன்று, ஹிந்துக்களை எள்ளி மனம் புண்படும்படி பேசுவது; பின்பு “ஐயோ..தமிழன் மனது புண்படும்படி பேசுகிறார்களே” என்று ஹிந்துக்கள் மீது பழி போடுவது. அதையும் இவர் நன்றாகவே செய்கிறார். சத்யபாமாவை “எப்படிப் பட்ட வார்த்தைகள் சொல்லிவிட்டீர்கள்” என்கிறார்.

    இவர் தூங்குவது போல் நடிக்கிறார். எழுப்ப முயற்ச்சித்து விரயம் செய்ய வேண்டாம்.

  78. திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    //அப்பர் மகேந்திர பல்லவனை மாற்றிய போது, உங்களால் தி.மு.க காரரை மாற்ற இயலாதா?// — முடிந்தால் நீங்கள் ஒரே ஒரு கமலஹாசனை மாற்றி ஒரு படத்தில் சமண மதத்து மன்னன் மகேந்திர பல்லவன் அப்பரை தூக்கி கல்லில் கட்டி எறிவதுபோல் சினிமா எடுக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு தலை வணங்குவேன். சத்யபாமாவும் தி.மு.க காரரை மாற்றுவார். //

    நான் கமலஹாசனை எப்போதாவது சந்திப்பேனா என்பது தெரியாது. அப்படி சந்திக்க நேரிட்டால் நான் அவரிடம் ஆன்மீக சிந்தனைகளை முன் வைப்பேன்.

    கமலஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, நாம் ஒருவரிடம் ஆன்மீக உணர்வை தூண்டுவது, அவருக்கு மனதில் அமைதியையும் , வலிமையையும் உண்டு பண்ண வேண்டும் என்கிற நோக்கத்திலே தானே தவிர, அவரை ஒரு செயலை செய்ய வைப்பதற்காக அல்ல.

    ஒருவரின் மனதில் ஆன்மீகத்தை சேர்ப்பதுதான் நம் பணி. “வேதிப் பொருட்களை சேர்ப்பதுதான் நம் வேலை. வேதியியல் விதிகளின் படி வேதிக் கிரியை தானாக நடை பெரும்” என்று விவேகானந்தர் சொன்னது போல,

    அவரவர் மனதில் ஆன்மீகம் என்ன மாற்றங்களை உண்டாக்கும், கமலஹாசன் அப்பராக நடித்துப் படம் எடுப்பாரா அல்லது வேறு ஏதாவது செய்வாரா என்று கணிக்க இயலாது.

    ஆன்மீகம் என்பது பெரும் படைகளைத் திரட்டி ஆரவாரத்துடன் போர் நடத்துவது போலன்று. அது யாருமே அறியாமல் ரோஜாப் பூக்கள் பூப்பது போல மனதிலே நிகழும் நிகழ்வு என்று சுவாமிஜி குறிப்பிட்டதைக் சுட்டிக் காட்டி விடை பெறுகிறேன்.

  79. // ந. உமாசங்கர்
    28 April 2010 at 10:03 am

    ஆன்மீக வழியில் நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை இருந்தால் எதற்குப் புனைப்பெயர். சொல்லும் சொல் உண்மையானால், உண்மையின் வலுவில் நம்பிக்கை இருந்தால், புனைப்பெயரை விட்டு வெளியே வாருங்கள். //

    உமாசங்கர் ஐயா,

    புனைபெயரில் எழுதுவது என்பது இணையத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்று தானே? தனது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அளிக்காமல் பாதுகாப்பதற்குப் பலருக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் குறுக்கிடுவது முறையல்ல.

    சொந்தப் பெயரில் வந்து தான் கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்பதற்கு இது பாராளுமன்றமோ, விசாரணைக் கூடமோ அல்ல. ஒரு கருத்து/விவாதத் தளம் மட்டுமே. சொந்த வாழ்க்கை பற்றிய எந்தத் தகவல்களும் இல்லாமலே இங்கு கருத்துக்கள் முன்வைக்கப் படலாம், மோதிக் கொள்ளலாம், இணைந்து முன் நகரலாம்..

    இத்தகைய அழுத்தங்கள் தேவையவற்றவை என்பது என் எண்ணம்.

  80. ஐயா திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    என்னைப் பொறுத்தவரையில் எல்லோருமே இந்தியர் தான், வேறுபாடு அல்ல என்பதை பலமுறை எழுதி விட்டேன். திராவிடர் என்பதாக சொல்லப் படும் வேறுபாடு உண்மையில் இல்லை.

    திராவிடர் என்று குறிப்பிட்டு கட்டுரையில் முதலில் எழுதியதும் நீங்களே, இப்போது வரை அதை நீடிப்பதும் நீங்களே.

    நீங்கள் திராவிடர் என்பவரை பிரித்து எழுதினீர்கள், நான் நாம் அனைவருமே ஒன்றுதான் என்று சேர்த்தே எழுதுகிறேன்.

    தி.மு.க மட்டுமல்ல, அ.தி,மு.க, பா.ம.க. , கம்யூனிஸ்ட்டு, காங்கிரெஸ் உட்பட பல கட்சிகளுக்கு ஓட்டு போடுபவர்களோ, அந்தக் கட்சிக்கு அனுதாபியாக இருப்பவர்களோ, அந்தக் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களோ எல்லோரும் உண்மையான பக்தர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வது மிகவும் வருத்தப் பட வேண்டிய , கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. கிறிஸ்தவர்கள் எல்லோரயும் பாவிகள் என்று திட்டுவது போல இருக்கிறது, நீங்கள் எல்லோரையும் Generalise செய்வது.

    தமிழ் நாட்டில் பெரும்பானமியான மக்கள் இந்தக் கட்சிகளுக்கு தான் வாக்கு அளிக்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் இல்லையா? பலரும் அரசியலில் இருக்கிறார்கள் என்றால் அரசியலில் இருக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமாகிறது.

    தி.மு.க மட்டுமல்ல, அ.தி,மு.க, பா.ம.க. , கம்யூனிஸ்ட்டு, காங்கிரெஸ் – எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவர்களின் மனதில் ஆன்மீக உணர்வை தூண்டுவதே எனக்கு முக்கியம். அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.

  81. திரு. ஜடாயு அவர்களே,

    //சொந்தப் பெயரில் வந்து தான் கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்பதற்கு இது பாராளுமன்றமோ, விசாரணைக் கூடமோ அல்ல. ஒரு கருத்து/விவாதத் தளம் மட்டுமே. சொந்த வாழ்க்கை பற்றிய எந்தத் தகவல்களும் இல்லாமலே இங்கு கருத்துக்கள் முன்வைக்கப் படலாம், மோதிக் கொள்ளலாம், இணைந்து முன் நகரலாம்..//

    நன்றி,

    திருச்சிக்காரன்

  82. ஐயா திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    கருணாநிதி இந்து மதத்தை கேலி செய்வதையும், இந்து மத தெய்வங்களை இகழ்வதையும் வழக்கமாக உடையவர்தான். அதற்கு நீங்கள் பதில் கொடுப்பதானால், அவரை குறிப்பிட்டு பதில் கொடுக்கலாம்.

    ஆனால் எல்லா தி. மு.க வினரும் இந்து மத தெய்வங்களை இகழ்வது கிடையாது. அவர்கள் கருணாநிதி யின் மீது மிகவும் மரியாதை கொண்டவர்களாக, அவர் முதல்வராக் இருக்க வேண்டும் என்று விரும்புபவராக இருக்கலாம். ஆனால் எல்லோரும் இந்து மதத்தை திட்டுபவர்கள் இல்லை.

    நீங்கள் எழுதும் வேகத்தைப் பார்த்தால், நீங்கள் எல்லா தி,மு.க வினரையும் கருணாநிதி போல ஆக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள் போல இருக்கிறதே.

    ஒருவர் தி.மு.க கட்சியில் இருந்தால் அவர் உண்மையான பக்தராக இருக்க முடியாது, என்பதாக நீங்கள் சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒருவர் உண்மையான பக்தரா இல்லையா என்பதைத் தீர்மானம் செய்யும் அத்தாரிட்டியை, இந்து மதம் உங்களுக்கு மட்டும்தான் வழங்கி இருக்கிறதா?

    உங்களை அறியாமலேயே பல இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிரீர்கள், நீங்கள் செய்யும் செயல் இந்து மத நன்மைக்கு விரோதமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறியவில்லை.

    எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒருவன் இந்துவே. அவனுக்கு இன்னும் சிறப்பாக ஆன்மீகத்தை வழங்க்குவதில் முனைப்புக் காட்டுவோம்.

  83. // ஒருவர் தி.மு.க கட்சியில் இருந்தால் அவர் உண்மையான பக்தராக இருக்க முடியாது, என்பதாக நீங்கள் சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

    …. எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒருவன் இந்துவே. அவனுக்கு இன்னும் சிறப்பாக ஆன்மீகத்தை வழங்க்குவதில் முனைப்புக் காட்டுவோம். //

    இது ஒரு குழப்படி. இங்கு பிரசினை ஒருவர் “பக்தரா” இல்லையா என்பதல்ல. தனது குடும்ப, சுய லாபங்களுக்காக வழிபாடுகள், சடங்குகள் செய்வது வேறு. ஆன்மிக, சமூக தளத்தில் ஒரு உணர்வுள்ள இந்துவாக வாழ்வது என்பது வேறு.

    சில வாரங்கள் முன்பு அருணகிரி எழுதிய “மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்” என்ற கட்டுரையைப் படித்தால் இதில் தெளிவு பிறக்கும்.

    https://tamilhindu.com/2010/03/hindutva-three-types/

    அந்தக் கட்டுரைப் படி, இந்து விரோத அரசியல் கட்சியான தி.மு.க வுக்கு வாக்களிப்பவர்கள், ஆதரிப்பவர்கள் ’அரசியல் இந்துத்துவம்’ என்பதில் கண்டிப்பாகக் கிடையாது, “ஆன்மிக இந்துத்துவம்’ என்பதிலும் கிடையாது… அவர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை வேண்டுமானால் “சடங்கு இந்துத்துவம்” என்பதில் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் சடங்கு இந்துத்துவத்தால் என்ன பயன் என்று அந்தக் கட்டுரையே சொல்கிறது, படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    Having said this, இந்து சமூக பிரசினைகள் என்று வரும்போது எல்லா அரசியல் கட்சிகளையும், அதன் ஆதரவாளர்களையும் ஒன்று திரட்ட தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. இந்து ஒற்றுமை என்பது கட்சிகளால் பிளவுபட்டதாக இருக்கக் கூடாது. இந்து விரோதக் கட்சித் தலைமைகள் மாறாவிட்டாலும், கட்சித் தொண்டர்களிடம் செய்தி போய்ச் சேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்கள் கண்டிப்பாக அரசியல் இந்துக்களாக மாறுவார்கள், மாறவேண்டும்.

  84. திரு. ஜடாயு அவர்களே,

    //இந்து சமூக பிரசினைகள் என்று வரும்போது எல்லா அரசியல் கட்சிகளையும், அதன் ஆதரவாளர்களையும் ஒன்று திரட்ட தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. //

    சரியான கருத்து.

    //இது ஒரு குழப்படி. இங்கு பிரசினை ஒருவர் “பக்தரா” இல்லையா என்பதல்ல. தனது குடும்ப, சுய லாபங்களுக்காக வழிபாடுகள், சடங்குகள் செய்வது வேறு. ஆன்மிக, சமூக தளத்தில் ஒரு உணர்வுள்ள இந்துவாக வாழ்வது என்பது வேறு. //

    நான் சொல்லுவதை சரியாகப் புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது.

    சடங்கு இந்துத்துவம் மட்டும் உடையவர்களிடம், ஆன்மீக இந்துத்துவத்தையும் கொண்டு சேர்ப்பதை பற்றியதே நான் சொல்லுவது.

    இந்து மதம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உதவி செய்கிறது, அதோடு மனித இனத்திற்கு உதவி செய்கிறது என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைக்க இயலும்.

    இந்து மதம் உலக அமைதிக்கு எவ்வளவு உதவி செய்து வந்துள்ளது, அது பாதிப்படைந்தால் உலக அமைதியும் பாதிப்படையும், இந்திய நாட்டின் அமைதி பாதிப்படையும், தானும் பாதிக்கப் படுவோம் என்பது பற்றிய உண்மையை, ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற்ற ஒரு மனிதன் தானாகவே புரிதல் செய்வான்.

    அது தானாகவே ஒருவனை ஒருங்கிணைப்புக்கு கொண்டு வரும்.

    //இங்கு பிரசினை ஒருவர் “பக்தரா” இல்லையா என்பதல்ல. தனது குடும்ப, சுய லாபங்களுக்காக வழிபாடுகள், சடங்குகள் செய்வது வேறு. //

    அது ஒரு பெரிய தவறல்ல. கீதையிலேயே நான்கு வகையானவர் என்னை பக்தி செய்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

    பல்லைக் காட்டி காசு வாங்கிக் கொண்டு மதம் மாறுபவனை விட,

    மதத்தை தன் பிழைப்புக்காக உபயோகப் படுத்தி அசிங்கப் படுத்துபவனை விட,

    தனக்காகவும் , தன் குடும்பத்திற்காகவும் சடங்கு செய்பவன் எத்தனையோ மேலானவன். சடங்கு இந்து, கடவுளின் மீது உண்மையான பக்தி வைத்து இருப்பவன்.

    இந்துக்களில் பெரும்பாலானவர்கள் சடங்கு இதுக்களே. அன்று முதல், இன்று வரை இந்து மதத்தின் தூணாக இருப்பவன் சடங்கு இந்துவே.

    இந்து மதத்தின் உன்னத கருத்துக்கள் எல்லா இந்துக்களையும் இன்னும் சென்று அடையவில்லை. அது நடக்காத வரையில் நாம் சடங்கு இந்துக்களை, அவர்கள் சடங்கு இந்துக்களாகவே இருப்பதற்காக குறை சொல்ல முடியாது எனக் கருதுகிறேன்.

  85. சடங்கு என்பது பக்தி இல்லை – ச்ரத்தை (sincerity) மட்டுமே அல்லது பழக்கம் சார்ந்து வருவது – அமெரிக்காவில் இருக்கும் பல இந்தியர்கள் (ஹிந்துக்கள்) கிறிஸ்மஸ் போது வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைப்பார்கள்,புது துணி உடுத்துவார்கள்- நான் அவர்களை சடங்கு கிறிஸ்தவர்கள் என்று அழைப்பேன் – அவர்களிடம் இயேசுவின் பால் பக்தியோ, கிறிஸ்தவம் சொல்லும் கொள்கைகளின் மீது பிடிப்போ இருக்காது

  86. சடங்கு இந்து, சடங்கு இந்துத்துவம் என்பதை பல வழிகளில் புரிதல் செய்யலாம்.

    மொட்டை போடுதல், காவடி எடுத்தல், அம்மனுக்கு கூழ் காய்ச்சுதல், அலகு குத்துதல், அங்க பிரதக்ஷணம் ….. இவற்றையே சடங்கு இந்துத்துவம் என்று குறிப்பிட்டதாகவே நான் கருதுகிறேன். மொட்டை போடுபவனும், காவடி எடுப்பவனும் கடவுளிடம் வந்து நிற்கும் போது கண்ணை மூடி பக்தி செலுத்துகிறான். அவனுக்கு வேண்டியவற்றையும் அவன் கேட்க கூடும். ஆனாலும் சில நொடிகளாவது இந்த உலகில் எல்லாவற்றையும் மறந்து அவன் வணங்குகிறான். இதுவே ஆன்மீகத்தின் தொடக்கம்.

    அவன் அப்படி சில நொடிகள் தன்னை மறந்து ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவதை அதிகப் படுத்தி, பல நிமிடங்கள் மனக் குவிப்பில் ஈடு பட்டால் அவன் ஆன்மீகத்தில் இன்னும் முன்னேற்றம் அடைகிறான். இந்த வகையான “சடங்கு இந்துத்துவம்”, பழக்கம் சார்ந்து வழி வழியாக வருவதுதான். ஆனால் அவர்களின் பக்தி வேறு எந்த இந்துவின் பக்திக்கும் குறைந்தது அல்ல. அப்படி பக்தி செலுத்துபவன் அந்தக் கடவுளிடம் முழு மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவனாக இருக்கிறான் .

    இதற்க்கு சடங்கு இந்துத்துவம் என்ற பெயர் கூட பொருத்தமானது அல்ல. இதை அடிப்படை இந்த்துதுவம் என்று அழைப்பதே பொருத்தமானது.

    ஆனாலும் ஒரு கட்டுரையில் திரு. அருணகிரி அவர்கள் அந்தப் பெயரிட்டு (சடங்கு இந்துத்துவம்) அழைத்ததால், அதையே இங்கு திரு. ஜடாயு அவர்களும் குறிப்பிட்டதால், நானும் அதையே குறிப்பிட நேர்ந்தது.

    சடங்கு என்பது Ritualistik ஐ குறிக்கிறது. Ritual என்பதே ஒரு செயலை மனப் பூர்வமாக செய்யாமல் இருப்பதைக் குறிப்பிட பயன் படுத்தும் சொல்லாக நம்மில் பலரால் பயன்படுத்தப் படுகிறது.

    எனவே இனி இதை நாம் அடிப்படை இந்துத்துவம் என்றே அழைக்கலாம், என்று கோருகிறேன். இது தான் எல்லா இந்துக்களுக்கும் அடிப்படையானது, எல்லா இந்துவும் முதலில் துவங்குவது இந்த வகையான இந்துத்துவத்தில் தான் என்றே கருதுகிறேன்.

    இதை சுட்டிக் காட்டிய நண்பர் திரு. சாரங் அவர்களுக்கு நன்றி. இது மிக நல்ல காரியமே.

    அமெரிக்காவில் பல இந்தியர்கள் (ஹிந்துக்கள்) கிறிஸ்துமஸ் டிரீ வைத்து பார்ட்டி கொண்டாடுவது – அது மத சடங்கு எனக் கருதப் பட்டால்,

    இங்கே அங்கப் பிரதட்சிணம் செய்வது, சபரி மலைக்கு விரதம் இருப்பது அதைப் போன்றது அல்ல,

  87. திருச்சிக்காரன் போல் பேசக்கூடாது என்று நாகரீகத்தையும், நேர்மையையும் கடை பிடித்தேன். இப்போது, பட்டென்று பேசும் தன்மையையும், நேர்மையையும் மட்டும் கடைபிடிக்கிறேன்:

    இந்த திருச்சிக்காரன் ஏற்கெனவே சத்யபாமாவின் மேல் பழிபோட்டதும் இல்லாமல், அவரை தன்னெதிரில் இருந்து tamilhinduwatchdog -கை நோக்கி லாவகமாகத் திருப்பிவிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். இப்போது சாரங்கை திசைதிருப்பி கவிழ்க்க முயற்சி செய்கிறார்.

    //தி.மு.க மட்டுமல்ல, அ.தி,மு.க, பா.ம.க. , கம்யூனிஸ்ட்டு, காங்கிரெஸ் …., அந்தக் கட்சிக்கு அனுதாபியாக இருப்பவர்களோ, அந்தக் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களோ ****எல்லோரும்*** உண்மையான பக்தர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வது மிகவும் ***வருத்தப் பட வேண்டிய , கண்டிக்கப் பட**** வேண்டிய ஒன்று. கிறிஸ்தவர்கள் ***எல்லோரயும் பாவிகள்*** என்று திட்டுவது போல இருக்கிறது, நீங்கள் எல்லோரையும் Generalise செய்வது. //

    “எல்லாரும்” என்று நான் சொன்னதாக, என் மேல் அபாண்டமாக பழியை படமாக போட என்ன தெரியுமா காரணம்? நான் எழுதிய இதுதான்:
    “குங்குமம் பூசிக்கொள்ளும் திமுக காரன், கோவிலை கொள்ளை அடிக்கக் **கூட** பூசிக் கொள்வான்” . (அதாவது ‘கொள்ளை அடிப்பதற்காகக்கூட பூசிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது’ என்று சொன்னதை ‘எல்லாரும்’ என்று நான் சொன்னதாக தானே சேர்த்துக் கொள்கிறார் )

    பாருங்களேன் கபட நாடகத்தை. இவர் சுயநலத்துக்காக, இவரின் ப்ளாக் எழுத்துக்களை பிறர் படிக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து மதத்துக்காக பாடுபடும் என்னையே பொய் சொல்லி, பழி போட்டு அழிக்க நினைக்கிறார்.

    (edited and published)

  88. திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது. உங்களின் மீதும் வெறுப்பு கிடையாது. என்னுடைய விளக்கங்கள் கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் மட்டுமே. இதே தளத்தில் நான் பலருடன் கருத்து அடிப்படையில் மோதி இருக்கிறேன்.

    நான் உங்களை அழிக்க நினைக்கவில்லை. உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் பல்வேறு வளமும் பெற்று மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன். எல்லோரின் கருத்துக்களும் உங்களின் உயர்வுக்கு உதவியாக இருக்கும்.

  89. இப்போது மாற்றி எழுதுகிறேன் :
    முகமதியர்கள், திராவிட இயக்கத்தினர், திருச்சிக்காரன் இவர்களிடம் உள்ள ஒற்றுமை என்னவென்றால் நாகூசாமல் பொய் சொல்வது.

    இந்த திருச்சிக்காரன் தான் சில திமுக நண்பர்களுக்கு ஆன்மீக விளக்கம் அளிப்பதாகவும், அவர்கள் பொட்டு, திருநீறு வைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டார். நான், அந்த ஒருசில திமுகவினர் போன்றோரைக் குறிப்பிட்டு //“குங்குமம் பூசிக்கொள்ளும் திமுக காரன், கோவிலை கொள்ளை அடிக்கக் கூட பூசிக் கொள்வான்” // என்று எழுதினேன்.

    அதை அபாண்டமாக மாற்றி “எல்லாரும்” என்று நான் சொல்லாததைச் சொல்கிறார்.

    நேரத்தை வீண் செய்யும் தமிழ் ஹிந்துதளம் என்னுடைய முந்தைய பதிவை வெளியிட வேண்டுகிறேன். மட்டுறுத்தலுக்கு முற்பட்டால், ஒருவர் என்னைப்பற்றி சட்ட சிக்கல் வருமாறு குற்றம் சாட்டி பொய் சொல்லும்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

    (Edited and published.)

  90. அறிஞர் மலர்மன்னனை தேவையான போது மட்டுமே கோட் செயவதாக க்ளெய்ம் செய்யும் ‘இரா’ சத்தியபாமா அவர்கள் (அவர்கள் என்று சொல்லாவிட்டால் பெண்ணென்றால் இளப்பமா என்று ஆதிகாலச் சண்டையில் இருந்து ஆரம்பித்தால் நான் அம்பேல்!) என்னை எடிட்டோரியலின் நிழலா என்றார். எனது கமெண்ட்டுகளை ஏன் மட்டுறுத்தவில்லை என்றார் திருசிக்காரர். இப்போது கார்கில் ஜெய், ’திருச்சிக்காரர் எடிட்டோரியலில் இருக்கிறாரா’ என்கிறார்.

    இவர்கள் எல்லாரும் சேர்ந்து இந்தத் தளத்தை நடத்துகிறார்களா? அப்படியானால் இது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் தளமா?

    என்ன கொடுமை சரவணன் இது!

    –தமிழ்ஹிந்துகாவல்நாயர்

  91. By going through various மறுமொழிகள் I feel that
    we have deviated from the subject matter.
    An argument will only leads to who is right. But a discussion
    will lead to what is right.
    Let us only discuss relevent to the subject matter.

    RGK

  92. @ தமிழ் ஹிந்து தளத்திற்கு,

    தமிழ் ஹிந்து தளத்தில் எடிட்டர்களில் திருச்சிக்காரன் இருக்கிறாரா?

    அவர் தமிழ் ஹிந்து எழுத்தாளர்களில் ஒருவரான நான் எல்லா கட்ச்யினரையும், அதில் உள்ள உறுப்பினர்கள் எல்லாரையுமே உண்மையான பக்தர்கள் இல்லை என்று சொன்னதாகவும் அதை தமிழ் ஹிந்து வெளியிட்டதாகவும் விளம்பரம் செய்து எல்லா கட்சிகளுக்கும் தமிழ் ஹிந்துவை (குறைந்த பட்சம் என்னை) எதிரியாகக முயற்ச்சிக்கறார். இதனால் தமிழ் ஹிந்துவிற்கு பன்முனைகளில் இருந்து பிரச்சினைகள் ஏற்படலாம். இது தமிழ் ஹிந்துவுக்கு ஆரோக்கியமானதன்று.

    இதோ அவர் சொன்னவை:
    //தி.மு.க மட்டுமல்ல, அ.தி,மு.க, பா.ம.க. , கம்யூனிஸ்ட்டு, காங்கிரெஸ் உட்பட பல கட்சிகளுக்கு ஓட்டு போடுபவர்களோ, அந்தக் கட்சிக்கு அனுதாபியாக இருப்பவர்களோ, அந்தக் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களோ எல்லோரும் உண்மையான பக்தர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வது மிகவும் வருத்தப் பட வேண்டிய , கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று//

    இதை படிக்கும் எந்த திமுக காரனும் ஹிந்து மதத்தின்மீது (அல்லது எழுதியதாக அபாண்டமாக குற்றம் சாட்டப்படிருக்கும் என்மீது ) எரிச்சலடைவான். இவ்வாறு கட்சிக்காரர்களைத் தூண்டிவிடும், பிரச்சனைகளைத் தூண்டும், அவதூறு எழுத்தக்களை தமிழ் ஹிந்து ஏன் அனுமதிக்கிறது?

    @ RGK அவர்களே,

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
    நான் பலமுறை தமிழ்ஹிந்து தளத்தினரிடம் சொல்லிவிட்டேன் (இக்கட்டுரை ஆசிரியர் ஜடாயுவிடமும் சொல்லி இருக்கிறேன்). ஆனால் திருச்சிக்காரன் போன்றோர் எந்த சுமுக சூழலையும் லாவகமாக பிரச்சினைகளாக மாற்றி சூழ்ச்சி செய்து முன்னேறுவார்கள்.

    @ திரு. திருச்சிக்காரன் அவர்களுக்கு,
    நீங்கள் சொன்ன
    //உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் பல்வேறு வளமும் பெற்று மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன். எல்லோரின் கருத்துக்களும் உங்களின் உயர்வுக்கு உதவியாக இருக்கும்.//

    இந்த வார்த்தைகளின் உள்நோக்கம் என்னவென்பது எனக்குத் தெரியும். இந்த திருக்குறளின் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

    தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுத கண்ணீரும் அனைத்து.

  93. கார்கில் ஜெய் அவர்களுக்கு,

    திருச்சிக்காரன் எடிட்டோரியலில் இல்லை.

    நீங்கள் இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்ளும்போது, இதில் தமிழ்ஹிந்துக்கு சம்பந்தம் இருக்கிறதா, இதை தமிழ்ஹிந்து ஊக்குவிக்கறதா எனக் கேட்டுக்கொண்டு, எங்களிடம் இருந்து பதிலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்க முடியாது.

    ஏற்கெனவே மிகத் தெளிவாக சொல்லப்பட்டது போல, இங்கே வரும் மறுமொழிகளுக்கு தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது. ஓரளவு மட்டுறுத்தல் மட்டுமே செய்கிறோம். மற்றபடி, மறுமொழிகளுக்கு அவரவர்கள் மட்டுமே பொறுப்பு.

    தமிழ்ஹிந்து எடிட்டோரியல் குழு விவாதம் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்புதான் மறுமொழிகளை வெளியிடுகிறது. எதை வெளியிடுவது, மட்டுறுத்துவது என்பது தமிழ்ஹிந்து எடிட்டோரியலின் முழு உரிமை.

    நன்றி,
    தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு,.

  94. @தமிழ் ஹிந்து தளத்திற்கு,

    திருச்சிக்காரன் எடிட்டர் குழுமத்தில் இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இனி நான் தெரிந்தே பொய் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தையும், ஆசிரியர் குழுவின் நேரத்தையும் வீணாக்க மாட்டேன்.

  95. vanakam…

    we can give our full support to this ruling government to remove the temple symbol from the tamilnadu government logo, but only one condition. They should remove all the “RED CROSSES” from all the government hospitals and colleges. Because we are secular people. This cross symbol may disturb the other religious people.
    thank you.

  96. தமிழக அரசு விளம்பரங்களின் வரும் அரசுச் சின்னத்தைப் பாருங்கள். அதை எந்த கோவிலின் கோபுரம் என்று குறிப்பாகச் சொல்ல முடியுமா? அது நம் பண்பாட்டைக் காட்டும் சின்னம். அவ்வளவுதான். கலைஞர் வைக்க விரும்பும் சின்னம் திருவள்ளுவர் அல்ல. அவர் வைக்க விரும்புவது அவர் அரசாட்சியில் நிறுவப்பட்ட வள்ளுவரின் சிலையின் படத்தை. அப்போதுதானே அத்துடன் கலைஞர் பெயரும் அடிபடும்.அவர் சிந்தனை சின்னமல்ல.சின்னத்தனம்.

  97. அண்மைச்செய்தி தினமலரிலிருந்து

    https://www.dinamalar.com/Political_detail.asp?news_id=௧௮௦௯௩

    தமிழக அரசு முத்திரையில் ஸ்ரீவி.,கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணமில்லை:அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு
    மே 03,2010,00:00 இசட்

    பழநி:அரசு முத்திரையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம், தமிழக அரசிற்கு இல்லை என, அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.பழநியில் 2வது ரோப்கார் உட்பட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, சிறுவர் பூங்கா துவக்க விழா நடந்தது. விழாவில், அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,’தமிழக அரசு சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. பழநி வரும் பக்தர்களுக்கு பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக தனியார் நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாது. பக்தர்களுக்கு நகராட்சியே எல்லா வசதிகளும் செய்துதர முடியாது. மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் நிதி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  98. நான் மேற்கூறிய செய்தியில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.

    பழனிக்கு வரும் பக்தர்களுக்கான எல்லா வசதிகளையும் நகராட்சியே செய்யமுடியாது என்று கூறும் அரசு, வேளாங்கண்ணிக்கு மட்டும் அரசு நிதியிலுருந்து எல்லா வசதிகளையும் செய்து தருகிறது. சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்கிறது.

  99. Tamilnaadu today is a plural society. Hindus are a majority no doubt, but only when we take the entire population of the State in to account. In many pockets, they are a minority. In certain cities, towns and villages, they are not even present. In southern districts of Tamilnadu, the Hindu religion as practiced has nothing to do with the variety as practised in other parts: no iyer, no homem etc. Hindu religion lacks homogenity and a single identity, notwithstanding the valiant attempt to forge one made by Hindus like Tamilhindu.com. Hindus can never be united because of the nature of the religion itself.

    Hindus, Muslims and Christians dominate the population scene in this state. In a hundred years, Muslims and Christians will vastly outnumber Hindus.

    Of Christianity, I am referring to Pentacostalism. It is sweeping the entire Asia, even in Indonesia, as reported in a special article in TIME two weeks ago. In TN, too, it is sweeping. It appeals to working classes and the neglected sections of society. The main brand Christiantiy is given up by them, because it is elitist, just like the Hindu variety which fell into that vexatious category long ago, so finds no favour with others except brahmins and upper castes who have more benefits in it than spirituality.

    Of Islam, no missionaries are necessary. No terrorists, too. It appeals to the poor without incentives or inducements being dangled. The large number of Muslims in TN were not covnerted by swords. It is the disenchantment they felt with the elitist Hindu religion and the domination of brahmins and impracticable orthodoxy, rituals and ceremonies (which were written keeping only brahmins in mind), the people gave up the religion in preference to Islam.

    Thus, no claim can be made in favour of Hindus only in a plural society which changes daily. A state which is meant to govern the whole population cant have a logo to project the pet desire of one single segment of the population namely the Hindus, albeit in the filmsy ground of ART and HERITAGE !

    It is unfortunate that the minister buckled under the pressure of Hindu lobby. How long will he evade the popular surge?

    If not today, tomorrow or day after tomorrow, the feeling that they are slighted by the Hindus by manipulation of such a common logo, will touch the powers that be, or will be.

    The change in the logo, in order to reflect the character and life of the whole population, is long overdue.

    The Hindu logo should go, yielding place to a common logo, acceptable to one and all.

    As one person wrote here: Let the people decide. Not Tamilhindu.com!

  100. மானமிகு
    Ever since Muslim invasion Brahmins were particularly targeted and hit. They played a major role preserving Hinduism and social bonding among the masses. Malikapur forced the Brahmins to undergo Sunath and convert to Islam. When refused he ordered to chop the heads of Brahmins below 17 years. During the period of Portuguese the same ill treatment was continued. During the British period also the same enmity was propagated. This was continued even after independence to till date by the so called pseudo secular and Dravidian parties ,thus the mind set of younger generation was polluted and it will take longer time to erase the mind set.

    Because of a major role played also by Brahmins, Hinduism is still surviving inspite of all the atrocities committed by the invaders. Remember worst kind of slavery was in practice in the entire world except in India. Hence I request all the pseudo secular forces not to use the Brahmin shield for your selfish exploitation of the downtrodden masses any more.

    (edited and published)

  101. I give the views of Karthi Chidambaram at least said very late

    ‘தமிழக அரசு முத்திரையில் கோபுர சின்னத்தை மாற்றவேண்டும்’ என்று எம்.எல்.ஏ., ஒருவர் சட்டசபையில் கருத்து கூறியுள்ளார். இன்றுவரை காங்கிரஸில் எவரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கவில்லை.தமிழ் கலாச்சாரத்துக்கும் ஆன்மிகத்துக்கும் சம்மந்தமே இல்லாதது போல் சிலர் பேசுகின்றனர். நம்முடைய செயல்பாடு மாறினால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்.

  102. manamigu

    a beautiful rendering of points as though a thorough research has been conducted and a great revelation equvalent to nothing less than the holy scriptures.

    can you with 100 % certainity say that those who converted to islam or christianity are happy just becuse they converted – can i take you to those people – do you want to ask for yourself?

    do you know that in Hinduism non brahmins follow complex orthodox practices than Brahmins – several brahmins shun practices.

    You claim that hindus in south tn do not follow orthodox hindu (iyer & homam) practices and you also claim than hinduism has impracticeable orthodoxy – you also imply that hinduism itself is plurlistic – is this not incoherence – you have merely typed something thinking that you made a great punch line and a hole in the tree

    hinduism is not about iyer and homam – it is about leading a good life – one need not go temple, do homam, … one needs to lead a good and happy life – that is the subject matter of Hinduism

    let us change the color of tyres, thar roads – for it is black and bible cover is also black
    let us change change the name of the state – there are andhrites, biharis, kannadigas, marathis, bengalis, gujarathis, rajasthanis in this state – their population has increased over the years
    let us change (as one gentleman pointed out earlier) the cross symbol in all hospitals for it represents the holy cross of the christ
    let us change the name of all ministers, goverment workers, cm, governer for their names should never represent a religion – let us give them obscure name which no religion can have

    i have tried to match your insanity – if you write more, so will i – i will become Tuglak’s sathya

  103. //thus the mind set of younger generation was polluted and it will take longer time to erase the mind set. //

    This I couldn’t understand. What is the pollution you are talking about? What is the younger generation thinking about brahmins? Could you throw more light on this, please?

    On the major role played by brahmins in preserving the Hindu religion, we should rather ask why they played at all?

    Because, they would benefit with the victory.

    Religion is not all about God and the mumbo-jumbo of the theology. This statement is common to all religions.

    Religion is more: it is power struggle; power mongering; exploitation of the weak; power over land and property. Sometimes naked the power is; sometimes subterranean.

    If a religion is all about God, it will have just a few takers; and the takers are named as பரமஞானிகள்.

    Common expectations from religion are: quid pro quo. catelogue of wishes, litany of requests, festivals, and its commerce; opulance and lavish meetings, high drama of song and dance, stances, trances (as in pentacostalism and Chaitanya brand of Hindu vaishnavism) etc. If you dont brew your religion in such masala or spice, people will go to that religion which supply it. Pentacostalism does it with aplomb: hence its overwhelming popularity.

    Be that as it may, Lets come to your core point of brahmins and their defence of their religion. It was selfish. They had power over other populace which accepted the suzarainty of the brahmins speechlessly. They manipulated the religion to weave an elaborate web of happiness for themselves. A coccon of culture for them and their families to live in shadow.

    Invaders came and wanted to covert the brahmins. Of all people, why brahmins? Because, it was easy to convert others – even today. But difficult to convert brahmins. Brahmins took their religion as their personal property which assured them good life. So, they did not like to be deprived of the kamadhenu.

    In a nutshell, I would say, it was a selfish motive of self-preservation that drove brahmins to defend their relgion at the expense of their own lives. Nothing spiritual.

  104. What is happening even in this Tamilhindu.com?

    If you read their articles here, you will come across many, many times, the words ‘Culture and tradition’.

    Ya, it is this that motivates the article writers here to defend the religion against the ‘enemies’.

    The religion has given them a nice culture and nicer tradtions – according to them.

    The other religious people, suppose they offer nicer culture and nicer traditions ?

    To be fair to hindu.com, they may not take the offer. But others will do.

    The long and short of the argument is, GOD IS DEAD !

  105. welcome to america website will talk about america and not about turkumenistan or checkeslovakia, same way in a mahabalipuram.gov website one would find information about mahabalipuram not about maladives – needless to say what one should expec from TAMIL HINDU. COM

    i am not sure why people don’t even bother to study a bit – one should be aware that hinduism has drawn concepts, traditions and practices from Jainism, Nyaya, Vaisesika, Budhism and Sankya Yoga – it has never failed to draw good things – hinduism has no need to accept so called good teachings from those who engage in crusades

    btw, what you may call as called good things from the religions you have in mind are available as panchatantra katha in India

    insanes write whatever comes to their mind, inhumans proclaim that whatever they wrote so is the reality

  106. திருச்சிக்காரன் தமில்ஹிண்டு ஆசிரியர் குழுவில் இல்லை.அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

  107. அப்படிப் பார்த்தால் “ஹிந்து/இந்து ” என்ற பெயரே இந்து குஷ் மலைதொடற்குட்பட்ட எல்லையில் வாழும் மக்களைக் குறிப்பது. இதிலிருந்தே இந்தியா என்ற பெயர் வந்தது. கிழக்கு மேற்கு என எந்த வெளி நாட்டிற்குப் போனாலும் இந்தியா என்றவுடன் அவர்கள் கேட்பது நீங்கள் ஹிந்து தானே என்று தான்? அதனால் “இந்தியா” வின் பெயரையும் மாற்றி விடலாமா?

  108. People who lived within the region of Hindu-Kush/Indu Kush/Indus vally/mountains were know as Hindus in Western. So their religion was named as Hinduism. Their language was known as Hindi. From the term Indu/Hindu the name came India for our country. So will they change the Countries Name first??????????

    If u go to any part of the world and you say you are from india, they presume that you are a Hindu. Hinduism is the identity of this country. If you had been to any foreign countries you can see it for yourself.

  109. எழுதப்பட்ட பிரச்சினையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டது இந்த மறுமொழி வாதப்பிரதிவாதம். நல்லா கெளப்புறாய்ங்கய்யா பொரளிய…….. அடிச்சுகிரணும்னா நல்ல மைதானமாப் பாத்து கட்டிப் பொரண்டு உருளுங்கப்பூ! எவன் கேக்குறான்? பிரச்சினைய பேசவிடாம பஞ்சாயத்தக் கலைச்ச சூனா பானா வேலைய ஏய்யா இங்க பாக்குறீக? எங்கேள்வி இதுதான்! அரசு சின்னத்துல கோபுரம் இருக்குமா? இருக்காதா? விட்டு வெச்சிருப்பாகளா? தூக்கிருவாகளா? தூக்கிட்டா பண்பாடு கலாச்சாரம் போச்சுன்னு நம்ம மக்க மனுசங்க போராடுவாய்ங்க்யளா? இல்ல ஓசி டிவில ஆதித்யாவும் K டிவியும் பாத்து மதசார்பின்மைய போற்றிப் பாதுகாப்பாய்ங்க்யளா? இது தான் பிரச்சினை. இதப் பேசுங்கய்யா! அத விட்டுபுட்டு கருவேப்பிலச் சண்டயில வாங்குன காய்கறிய தெருவில கொட்டி வெச்ச மாதிரி இருக்கு ஒங்க மறுமொழிச் சண்டை. இப்படியே எகணைக்கு மொகணையா பேசிக்கிட்ருந்தீயன்னா வெளங்கிரும் ஊரு!! நல்லா எழுதுறாய்ங்க்யப்பா பீடுபேக்கு!!!

  110. Tolerance is only with Hinduism. A day will come in India too where Christianity will be encroached by tenets of Islam…already it has started showing signs..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *