தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்

pakistan-flood-2010அண்மையில் எழுத்தாளர் பா.ராகவன் எழுதியுள்ள “நீரில் மிதக்கும் தேசம்” எனும் கட்டுரையில் இந்திய மனநிலை இன்னும் கற்கால மனநிலைக்கு மேலே எழவில்லை என கூறியுள்ளார். (1) ஏனென்றால் யூட்யூபில் பாகிஸ்தானிய இயற்கை அழிவு வீடியோக்களுக்குக் கீழே மனிதாபிமானமற்ற சில கமெண்ட்களை முகமறியாத சில இந்தியர்கள் எழுதியிருந்ததே காரணமாம். இதற்கு அவரது இணையத் தளத்தில் அளித்திருந்த எதிர்வினையின் சற்றே விரிவான பதிப்பு இது.

எந்த இயற்கை அழிவு விளைவிக்கும் மானுட சோகத்தையும், “உனக்கு தண்டனை கிடைச்சுருச்சு பாத்தியா?” என்று சந்தோஷிக்கும் வக்கிரம் எவரையும் தலைகுனிய வைக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. அதை நியாயப்படுத்துவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் அதனை ஏதோ சில முகம் தெரியாத வக்கிரங்களின் கோழைத்தனம் என்பதற்கு மேல் ஏதோ நாம் ஒட்டு மொத்தமாக கற்கால மனோபாவத்தை விட்டு மேலே வரவில்லை எனக் கருத வேண்டிய அவசியமில்லை.

mohan-c-lazarusஇதோ என் மேசையில் மோகன் சி லாசரஸ் (Mohan C. Lazarus) என்கிற புகழ் பெற்ற கிறிஸ்தவப் பிரசாரகர் நடத்தும் Jesus Redeems என்கிற பத்திரிகையின் பிப்ரவரி 2005-ஆம் ஆண்டு இதழ் கிடக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மோகன் சி லாசரஸ் யாரோ ஒரு முகம் தெரியாத இணைய வக்கிரம் அல்ல. முக்கியமான மதப்பிரசாரகர். இவரது கூட்டங்களில் துணை முதல் இசுடாலின் கூடக் கலந்துகொள்கிறார். அதில் பெருமைப்படுகிறார். அந்த மோகன் சி லாசரஸ், சுனாமியின் இரத்தக் காயம் ஆறுவதற்கு முன்னால் இந்த இதழில் எழுதுகிறார்: “Look at our nation The land is grieving due to the curses of sin… Instead of worshiping the God who created heaven and earth they worship demons and evil spirits as their God. Is it not humiliating to God when we worship His creations birds and animals as gods instead of the creator Himself?” கட்டுரையின் பெயர் “Tsunami Why this Disaster” (2)

அதே காலகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கைதாகி சிறையில் இருந்தார். “என்னைக் கைது செய்ததால் சுனாமி வந்தது,” என்று அவர் சொல்லவில்லை. “மக்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்கள் ஆத்ம சாந்திக்காக உபவாசம் இருக்கிறேன்” என்றார். பல எவாஞ்சலிக்கல் இணையத் தளங்கள் சுனாமியால் மகிழந்தன. “ஏசுவின் நற்செய்தியைக் கொண்டு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு” என எழுதியவர் அண்மையில் ஹெய்தியில் பேரழிவு நடந்தபோது அமெரிக்காவின் முக்கிய மதப்பிரசாரகரான பாட் ராபர்ட்ஸன். (3)

எதற்குச் சொல்கிறேன் என்றால் பா.ரா சொல்கிற மாதிரி இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுவது நம் தமிழ் சினிமா நகைச்சுவை பாணியில் சொன்னால் “கொஞ்சம் ஓவர்”. அட, இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. கோட்டு சூட்டு போட்டதால் பண்பாடடைந்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிற (அல்லது குறைந்தது நம்மில் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிற-குறிப்பாக ஈவெரா, எம்.ஆர்.ராதா, கருணாநிதி, விவேக் வகையறா போலிப்-பகுத்தறிவுகள் இந்த எண்ணத்தை எய்ட்ஸ் போலப் பரப்புகிறவர்கள்-) பலர் இந்த மனநிலையில்தான் வாழ்கிறார்கள்.

prem-chands-coffin-was-marked-as-kafirவிபத்துக்களும் இயற்கைப் பேரழிவுகளும் இறைதண்டனை என்கிற அறிவியல் அடிப்படையற்ற தவறான பார்வை ஆபிரகாமிய மதங்களின் மானுடத் தன்மையற்ற ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது. இதன் விளைவாக ஏற்படும் மானுடச் சோகங்களும் வக்கிரங்களும் சொல்லொணாதவை. உதாரணமாக கடந்த மாதம் நடந்த இஸ்லாமாபாத் விமான விபத்தில் இறந்த ஹிந்துவின் சடலம் “காஃபீர்” என எழுதப்பட்ட பெட்டியில் போட்டு வைக்கப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப் பட்டது. (4)

அதே நேரத்தில் 1997-இல் புதுடெல்லியில் நடந்த சவுதி விமான விபத்தின் போது அந்த விமானத்தில் இறந்தவர்கள் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள்; ஹஜ் யாத்திரிகர்கள். அந்த விமான விபத்தின் போது நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். இது குறித்து ஓர் இஸ்லாமியப் பத்திரிகையாளர் எழுதியுள்ள மனம் உருக்கும் ரிப்போர்ட்டைப் பாருங்கள்:

At on the spot, the only people they found to help them in this hour of grief were volunteers of the RSS. Everyone was aware that 98 per cent of those who died in the tragedy were Muslims. Despite this, not to express unreserved praise for the sincerity with which the RSS volunteers helped the grief-stricken families would be social hypocrisy. It is surprising that even weeks later not a single Muslim organisation has bothered to express even to verbally thank the RSS volunteers who struggled-day and night to help the families identify the badly charred bodies of their relatives. Relatives who went to Khedi Sanwal say that if there was anyone to help them on the spot it was the RSS activists. According to these relatives, RSS activists not only provided tea, snacks, food and transport, they even raised money to pay for shrouds, coffins and transport of the dead bodies. According to an aggrieved person from Gonda (in U.P.), some of the bodies had got so badly decomposed that even relatives were finding it difficult even to touch the bodies of their own son, brother or father. But the very RSS volunteers – who are normally deployed into any number of anti-Muslim activities – did not flinch a bit while handling the bodies to help in their identification. After that, they helped in covering the bodies with shrouds, placing them in the coffins and arranging for their transport to their respective places. To prevent the decomposition of the bodies, ice slabs had also been arranged.

கொஞ்சம் நீளமாகவே இருந்தாலும் ஹிஸ்சாம் சித்திக் என்கிற இஸ்லாமிய அறிஞர் எழுதிய கட்டுரையின் பகுதியை மேலே அளித்துள்ளேன். (5) ஓர் அரசாங்கமே தவறான இறையியலால் உந்தப்பட்டு ஒரு மானுடச் சோகத்துக்கு மத முத்திரை குத்தும் வக்கிரம் அதற்கு நேர் எதிரான ஹிந்து மன நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டால் இன்னும் தெளிவாக புரியுமல்லவா? ஆனால் பாகிஸ்தானிய அரசிடம் நாம் நேசபாவம் காட்டவேணும் என்று சொல்பவர்களூக்கு ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் மதவாதிகள்!

pa_raghavanபா.ரா சிந்து சமவெளிதான் உலகநாகரிகம் தோன்றிய இடம் என்கிறார். இதுவும் தகவல் பிழை. மொகஞ்சதாரோ மட்டுமே சிந்து சமவெளியுமல்ல அது உலகநாகரிகம் தோன்றிய இடமும் அல்ல. கிமு 3000-களில் உலகத்தின் தொன்மை நாகரிகப் படுகைகளில், பண்பாடு உச்சம் கண்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய பண்பாடுகளில் அதுவும் ஒன்று. சிந்து-சரஸ்வதி பண்பாடு என ஆய்வாளர்கள் அழைக்கும் இப்பண்பாட்டின் பல அகழ்வாராய்ச்சி மையங்கள் இன்று பாரதத்தில் சரஸ்வதி நதி ஓடிய வறண்ட நதிப்படுகை அருகே உள்ளன. அதற்காக பாகிஸ்தானிய சிந்து சமவெளிப் பண்பாட்டு மையங்கள் அழிந்து போக வேண்டுமென நான் சொல்ல மாட்டேன். ஆனால் பா.ரா மற்றொன்றைக் கவனிக்க வேண்டும். சிந்து-சரஸ்வதி பண்பாடு இன்றும் ஜீவனுள்ள பண்பாடாக ஹிந்து சமயத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பது பாரதத்தில்தான். அகழ்வாராய்ச்சி மையம் பாகிஸ்தானில் ஓர் இறந்த காட்சிப்பொருளாக, அங்கு வாழும் சமுதாயத்துக்குக் கிஞ்சித்தும் தொடர்பில்லாமல் உறைந்து போயும் இருக்கிறது; அதன் மதிப்பு உணரப்படாமல்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தும் ஈமானியக் கடமையை இஸ்லாமியப் பெருமக்கள் துறக்கவில்லை என்பதையும் அதே நேரத்தில் இந்தியத் தூதரகமும் இவர்களிடம் கடுமையாக நடக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி. (6)

இந்திய எதிர்ப்புக்குப் பெயர்போன பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிகையே (ஆகஸ்ட் 28 2010) தனது தலையங்கத்தில் இப்படி எழுதியது:

christian-and-hindus-deliberately-floodedமறுபக்கம் நிவாரண உதவிகள் வழங்குவதில் திட்டமிட்ட பாரபட்சம் காட்டப்படுகிறது என செய்திகள் வருகின்றன. வெள்ள அழிவின் போது அகமதியாக்களுக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்கிற புகார் ஏற்கனவே வந்துள்ளது. இப்போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒரு வட்டிக்கான் மிஷினரி அமைப்பு கிறிஸ்தவர்களின் பெயர்கள் கூட நிவாரண நிதி உதவி வழங்கும் ரிஜிஸ்டர்களில் எழுதப்படவில்லை என கூறுகிறது. இது நம் அரசியல் சட்டத்துக்கே விரோதமானது. சிந்திப்பகுதியில் சாதி மத வேறுபாடில்லாமல் ஹிந்துக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால் நம் அரசாங்கமோ மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்றால் நாம் எந்த அளவு கீழே சென்றுவிட்டோம்; நம் மானுடத்தை இழந்துவிட்டோம் என்பதைத்தான் அது காட்டுகிறது. (7)

ஹிந்துக்கள் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன பல ஊடகச் செய்திகள். நிவாரண உதவி என்கிற பெயரில் ஹிந்துக்களின் அகதிகள் முகாமில் பசு இறைச்சி வழங்கவும் பாகிஸ்தானிய அரசு தயங்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்களுக்காக வட்டிக்கான் இருக்கிறது குரல் கொடுக்க. ஆனால் சோனியாவின் எடுபிடியாக நடத்தப்படும் இந்திய அரசு பாகிஸ்தானிய ஹிந்து-சீக்கியர்களுக்காகக் குரல் கொடுக்குமா? அதை விடுங்கள். இத்தனை பெரிய மானுட சோகத்தின் போதும் சக-பாதிக்கப்பட்டவனை மத ரீதியாக எப்படி அடிப்பது என நினைக்கும் ஈமானியப் பண்பாட்டின் வக்கிரத்தினைப் பார்க்க, பா.ரா சொல்லும் இணைய வக்கிரங்கள் எம்மட்டு? எதற்காக வருத்தப்பட வேண்டும்? இணைய வக்கிரங்களுக்காகவா அல்லது ஓர் அரசாங்கமே வக்கிரமாக இயற்கை உபாதையால் துயரப்படும் மக்களிடம் மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்காகவா?

pakistan-flood-1பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவு மதப்பிரிவுகளுக்கு அப்பால் ஒரு ஹிந்து என்ற முறையில் எனக்குப் பெரும் மன வருத்தத்தை அளிக்கிறது. எந்தப் பெற்றோரும் புத்திர சோகத்தால் அடையும் வலி மதத்தினால் பிரித்துப் பார்க்கப்பட முடியாதது. அத்துயரை அனுபவிக்கும் பாகிஸ்தானிய சகோதர சகோதரிகளுக்கு நம் இதயம் கண்ணீர் வடிக்கிறது. நம்மால் ஆன உதவிகளை செய்ய நாம் முயலுகிறோம். ஆனால் என் நெஞ்சம் இந்த இயற்கைப் பேரழிவிலும் இஸ்லாமிய மதவெறியால் பீடிக்கப்படும் என் ஹிந்து சீக்கிய மக்களுக்காக மிகவும் பதைபதைக்கிறது. சர்வதேச மனசாட்சி மௌனிக்க பாரத அரசியல் பேடிகள் வேடிக்கை பார்க்க, எல்லைக்கு அப்பால் தனித்து விடப்பட்டு வேதனையில் துடிக்கும் கேட்பாரற்ற அந்தச் சமுதாயத்தினருக்காகப் பதைக்கிறது. இந்தப் பதைபதைப்புக்கு முன்னால் இணைய வக்கிரங்களால் ஏற்படும் எரிச்சல் ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இறுதியாக ஒரு விஷயத்தையும் சொல்லவேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் சில கடும்-மதவாதிகள் என்ன நினைக்கிறார்களாம் தெரியுமா? ஆபாசங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிய தாலிபானை விரட்டி அதனைக் கொண்டாடியதால் அதற்கு அல்லா அனுப்பிய தண்டனைதான் இந்த வெள்ளப் பேரழிவாம். (8)

அடுத்த முறை “கற்கால மனநிலை” குறித்து விசனப்படும் போது பா.ரா இந்த விஷயங்களைக் குறித்தும் பாரா முகமாக இருக்க மாட்டார் என நம்புவோம்.

சுட்டிகள் & ஆதாரங்கள்:

1. தண்ணீரில் மிதக்கும் தேசம்
2. Jesus Redeems, Why this disaster , Feb-2005
3. https://www.cbsnews.com/8301-504083_162-12017-504083.html
4. https://www.zeenews.com/news645999.html
5. https://www.hvk.org/articles/1097/0054.html
6. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி
7. Losing faith in humanity, டெய்லி டைம்ஸ், (பாகிஸ்தான்), ஆகஸ்ட் 28, 2010
8. Pakistan’s floods ‘the result of Allah’s wrath’

31 Replies to “தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்”

 1. நன்றாக சொன்னீர்கள். அது ஒரு புறம், பாராவின் திருப்பாவை பற்றிய கட்டுரையை விட ஒரு வக்கிரம் இருக்க முடியுமா என்ன?

 2. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
  குஜராத் பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் இறந்த போது பல கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகவே இது இயேசு குஜராத்துக்கும் மோடிக்கும் தந்த தண்டனை என்று பேசினர்.

  இத்தனைக்கும் குஜராத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த தொல்லையும் தரப்படவில்லை.
  அவர்களது பொருமலுக்கு காரணம் என்னவென்றால் அங்கு கிறிஸ்தவ மத மாற்றம் இங்கு போல் அவ்வளவு சுலபமில்லை. மேலும் அவர்களுக்கு உதவ திராவிடக் கட்சிகள் போல் எதுவும் யாரும் இல்லை என்பதுதான்.

  இப்போது வலைத்தளத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாத கும்பலின் தலைவர் பேசுவதைப் பார்த்தேன்.
  அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
  அன்புள்ள முஸ்லிம்களே ‘முன்பு செய்தது போல் விமானம் ஒட்டிக் கொண்டு போய் கஷ்டப்பட்டு ஒரு கட்டிடத்தின் மேல் இடித்து வெறும் மூவாயிரம் பேரைக்கொல்வது ஒன்றும் இல்லை.
  சுலபமாக ஒரு வழி சொல்கிறேன்’ ஒரே ஒரு சிறிய பெட்டி. அதில் ஆந்த்ராக்ஸ் ( கொடிய விதியை வர வழிக்கும் கிருமி) நிரப்பி மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக் காவில் கொண்டு பொய் வெள்ளை மளிகை புல் வெளியில் கொட்ட வேண்டியது. இதனால் எளிதாக மூன்று லட்சம் அமெரிக்கர்களை கொல்லலாம்.’ என்று . ஆஹா, இந்த மிருகத்தை யார் படைத்தார் என்றுநினைத்தேன்.
  இவர்களுக்கு வக்காலத்து வாங்க வருகின்றனர் பாருங்கள்
  http://www.https:// tangle.com/view-video/vewkey=0681ff3eabea

 3. சமீபத்தில் படித்த செய்தி ‘பாகிஸ்தானில் ஒரு விமான விபத்தில் ஒரு ஹிந்து இளைஞர் இறந்து போனார். அவர் மிகவும் அறிவுள்ள ,துடிப்புள்ள ஹிந்துக்களிடையே புகழ் பெற்ற ,சமுதாயப் பணி ஆற்றும் ஒரு இளைஞர். எல்லா சவப் பெட்டிகளுடன் அவரது சவப் பெட்டியும் இறக்கப் பட்ட போது அந்தப் பெட்டியின் மீது ‘உள்ளே இருப்பது ஒருகாபீரின் பிணம்’ என்று எழுதப் பட்டு மற்றவைகளிடமிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டதாம்.
  இதை விட ஒரு ஈவு இரக்கமற்ற கிராதகத் தனம் இருக்க முடியுமா?

 4. சுனாமியின் பொது இவர்களெல்லாம் கிள்ளு கீரையாகவும், மத வெறி பிடித்தவர்களாகவும் சித்தரிக்கும் ஆர்ர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்கள் முஸ்லிம் பிணங்களை அவர்களின் மத சம்பிரதாயப்படி புதைத்து ஈமச் சடங்கு செய்தனர்.

 5. //Look at our nation The land is grieving due to the curses of sin… Instead of worshiping the God who created heaven and earth they worship demons and evil spirits as their God. Is it not humiliating to God when we worship His creations birds and animals as gods instead of the creator Himself?” கட்டுரையின் பெயர் “Tsunami Why this Disaster” // கடற்கரை ஓரங்களில் மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிப் பார்த்தால் சுனாமியில் கிறிஸ்தவர்களும் தான் இறந்திருக்கிறார்கள். ஏசுவைக் கும்பிட்டதால் நிஜக்கடவுளுக்கு கோபம் வந்திருக்குமோ என்னவோ?

 6. அன்புள்ள அரவிந்தன்

  சரியான நேரத்தில் ராகவனின் சுயரூபத்தை தோல் உரித்திருக்கிறீர்கள். மென்மையானவராகத் தன்னைக் காட்டிக்கொள சிலர் நிகழ்த்தும் வாணவேடிக்கைகள் ஆழ்ந்து கவனித்தால் தான் புரியும்.

  பா.ராகவன் தன்னை ஒரு முற்போக்கு– மதச்சார்பற்ற–அறிவுஜீவி–எழுத்தாளராகக் காட்டிக்கொள்ள முயன்று ஏதோ பிதற்றி இருக்கிறார். அவர் பங்கிற்கு அவரும் பிதற்றட்டுமே. அப்போதுதான் அறிவுஜீவிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்த முடியும்.

  இதற்கு பின்னூட்டம் அளித்து ‘பழைய குருடர்’ பட்டம் பெற்றிருக்கிறார் அரவிந்தன். அதை அப்படியே வெளியிட்டத்திலேயே ராகவனின் நாணயம் தெரிகிறது. “நாணயங்கள்” பேசும் காலத்தில், இப்படித்தான் எதையாவது எழுதி தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. மொத்தத்தில் சூரியக்கதிரும் குமுதம், விகடன் வகையறா ஆகிவருகிறது.

 7. திரு ராம் அவர்களே

  ஹிந்து மதம் பல்வேறு சித்தாந்தங்களை உள்ளடக்கியது.

  இறைவனை நிர்குணப் பிரம்மமாகப் பார்க்கும் தத்துவத்தில், இறைவன் எவ்விதக் குணமும் இல்லாது, வேண்டுதல் வேண்டாமை இல்லாது திகழ்கிறார். தன்னைத் தொழுபவருக்குத் தொழுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக நன்மையைத் தருவதுமில்லை. தொழாதவருக்குத் தொழவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தீமையைத் தருவதுமில்லை. இறைவன் அப்படிச் செய்பவர் என்றால் அவருக்கும் கருணாநிதிக்குமோ ஜெயலலிதாவுககுமோ என்ன வித்தியாசம்? காலில் விழுந்தால் மந்திரிப் பதவி, இல்லாவிட்டால் வசவு, வனவாசம், சிறை என்றெல்லாம் இருந்தால் இறைத்தன்மை அடிபட்டுப் போகிறதே. இதனால்தான், பக்தி செய்யும்போது இறைவனிடம் இம்மைக்குத் தொழாமல், மறுமைக்கும், பொது நலனுக்குமே தொழச்சொன்னார்கள் பெரியோர்.

  வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல.

  அந்தணன் என்போன் அறவோன் மற்றெல்லா உயிர்க்கும்
  செந்தண்மை பூண்டொ ழுகலால்.

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
  யாதொன்றறியேன் பராபரமே.

  சர்வே ஜனோ சுகினோ பவந்து.

  ஏனைய மக்களிடம் பாரதத்தின் சிறந்த பண்பாடு சென்றடையாததும், காட்டுமிராண்டித்தனத்தினர் தமது ஆளுமைக்குக் கீழ் பெரும் நிலப்பரப்பைக் கொண்டுவந்ததுமே இன்றைய உலக அமைதியின்மைக்குக் காரணம்.

  நாமாவது நமது தனித் தன்மையை இழக்காமல் இருப்பதும் ஒவ்வொருவரும் தமது அடுத்த தலைமுறைக்கு இந்த உயரிய பண்பாட்டை எடுத்துச் செல்வதும் தற்போது மிக அவசியம்.

 8. ear Aravindan

  Learn to be a different blind like us. We have turned blind to the plight of kashmiri Hindus. We behave as if that they dont exist.

  We turn blind when refugees are hindus – no matter wherever they are.

  Learn from us. For all other refugees ” nanga pongi ezhunduduvom – aduthan murpokku”

 9. I am giving below a passage from Pa. ragahvans work on food.

  This is what Pa. raghvan is. – படிச்சா ரத்தம் கொதிக்கல?

  அண்ட கோளங்களும் சுண்டலுக்குள் அடக்கம். நல்லதொரு சுண்டல் இன்றி நவராத்திரி நிறைவு பெறுவதில்லை. மகிஷனைக் கொல்லப்போகுமுன் தேவி, இருடா வரேன் என்று ஒரு க(ல்)ப் சோமபானம் அருந்திவிட்டுத்தான் போனாள் என்று தேவி பாகவதம் சொல்கிறது. தொட்டுக்கொள்ள அவசியம் சுண்டல்தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நவராத்திரிக்கு எப்படி அது வந்து சேர்ந்திருக்கும்?

 10. நண்பர்களே காபிர் என்றால் என்ன ? எனக்கு விளக்கம் தர முடியுமா ? நன்றி .

 11. அன்புள்ள சகோதரரே, எனது தமிழில் பிழை இருக்குமே ஆனால்ந தயவு கூர்ந்து மன்னிக்கவும்.

  தாங்கள் சொன்னீர்களே மோகன் என்ற போதகரை பற்றி. அவர் அவருடைய என்னத்தை தெளிவாக, யாருக்கும் பயபடாமல் சொல்லி இருக்கின்றார்.

  இதை ஏன் தாங்கள் இவ்வளவு சிணம் கொண்டு அவரை அவதூறு செய்கிறீர்கள். அவர் தன்னுடைய ஊழியத்திலே மிக சிறப்பாக அன்பு கலந்து கர்த்தருக்கு பிரியமான ஒரு காரியமாக செய்து வருகின்றார்.

  கிறிஸ்தவம் மட்டுமே தன்னலம் இன்றி பிற மக்களுக்கு சேவை செய்ய முடியும். எங்கோ பிறந்து இந்தியாவிலே வந்து இங்கே இருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ மற்றும் கல்வி சேவை செய்த எராளமான கிறிஸ்தவ மிஷனரிகளை பற்றி உமக்கு தெரியாத. இல்லை தெரிந்தும் தெரியாமல் அரசியல் வாதியை போன்று நடிகின்றீரா. அவர்களுக்கு ஒரே நோக்கம் உலகம் முழுக்க இருக்கும் மக்களை கர்த்தருக்கு சீடர்கலக்குவது மட்டுமே.

  ஹிந்து வன்முறையாளர்களால் எத்தனையோ இன்னல்களை சந்தித்தும் இந்த மிஷிஒனரிகள் இன்னமும் ஊழியத்தை செய்கிறார்கள். மன்னிக்கும் மதம் கிறிஸ்தவம் மட்டுமே.

  ஹிந்துக்களால் இப்படி தன்னலமில்லாமல் வேறு ஒரு புரஜதியினருக்கு சேவை செய்யவே முடியாது. ஏன் அவ்வளவு தூரம், இங்கே இருக்கும் பிற கஷ்டப்படும் ஹிந்துக்களுக்கு கூட சேவை செய்ய முடியாது. ஏன் என்றால், அவர்கள் அவர்களுடைய பூர்வ ஜன்ம கர்மத்தின் வினையை அனுபவிக்கிறார்கள் என்று சொல்லி கொள்ளும் மனம் படைத்தவர்கள் தான் ஹிந்துக்கள்.

  இந்தியாவிலே பிணியாளிகளை ரட்சிக்க, அன்னை தெரசா, CMC வேலூர் ஐடா ஸ்கட்டர், ஒரிசாவின் ஸ்டைன்ஸ் போன்ற ஏராளமான கிறிஸ்தவ மிஷிஒனாரிகளால் தன முடிந்தது. ஹிந்துக்களால் முடிய வில்லையே. ஹிந்து மதம் செம்மையான ஒரு மதம் அல்ல.

  தயவு செய்து சத்தியத்தை சரிவர தெரிந்துகொள்ளுங்கள். கர்த்தர் தாமே இந்த தேசத்தை காப்பாராக. கர்த்தர் உங்களை அசீர்வதிபாரகாக.

 12. Though I feel sympathy for the victims of flood, I feel the aid money of $25million to Pakistan from India should rather be used to help our own poor.I do not believe the aid money will reach the victims. More liekly, it will be swallowed by ISI/Taliban.
  Also, when conditions improve in Pakistan, these same victims who got help from India, will be willing to sacrifice their lives to seek the demise and destruction of Hindus of India..Bangladesh is a standing example of this treacherous act..

 13. Joe. I strongly advise you to consult a shrink fast. Your blaberings shows that your brain had sustained too much damage. Daily rabble from Chritian missionary can do this sort of damage.Get rid of your name Joe and get back to your mother religion and to your ancestoral roots..It is not too late.Otherwise you will end in the nuthouse. This mythical Karthar of yours, is just that. MYTHICAL.

 14. //ஹிந்துக்களால் இப்படி தன்னலமில்லாமல் வேறு ஒரு புரஜதியினருக்கு சேவை செய்யவே முடியாது. ஏன் அவ்வளவு தூரம், இங்கே இருக்கும் பிற கஷ்டப்படும் ஹிந்துக்களுக்கு கூட சேவை செய்ய முடியாது. // joe, வாட்டிகனிலிருந்து உங்களுக்கு வரும் பணத்தை எங்களிடம் கொடுத்துப் பாருங்கள்! அப்புறம் உங்களால் இப்படி பேசமுடியாது. உள்நாட்டு செலாவனியை வைத்தே உங்களை விட அதிக அளவில் சத்தமில்லாமல் ஆத்மார்த்தமாக சுயநலமில்லாமல் உதவி செய்யும் இந்து அமைப்புகளும் லட்சக்கணக்கான தனி மனிதர்களும் இருக்கிறார்கள். கம்பெனி அமைத்து உதவினால் தான் உதவி என்றில்லை. தனிமனிதர்களின் கோடிக்கனக்கான உதவிகள் விளம்பரம் ஆவதில்லை என்பது தான் விஷயம். புரிந்து கொள்ளுங்கள்!

 15. மதம் மாற்றம் என்ற ஒரு தன்னல நோக்கத்துடன் தான் மிசனரிகள் இங்கே சேவை செய்கின்றன நண்பரே. இந்து இயக்கங்கள் எந்த ஒரு விளம்பரமும் இன்றி பிற மதத்தவர்க்கும் இந்துக்களுக்கும் செய்து கொண்டிருக்கும் சேவைகளை இந்த தளத்திலேயே நீங்கள் படிக்கலாம் நண்பரே. இந்தியாவை விட மிகவும் வறுமையில் வாடும் ஏமன் போன்ற நாடுகளுக்கு போய் அங்கே சேவை செய்வதற்கு ஏன் எந்த மிசனரியும் முன்வருவதில்லை. தன்னலமற்ற சேவை என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்யபடுவது அதை எந்த விளம்பரமும் இன்றி இந்து அமைப்புகள் இங்கே செய்து வருகின்றன நண்பரே.எல்லாம் விதி என்றும் கர்ம வினை என்றும் விடுவது பாரதத்தில் இல்லை பசுவின் கன்று அடிபட்டு இறந்து போக கரணம் தன் மகனே என்று தேரில் தன் மகனை வைத்து கொன்று நீதி வழங்கியே சிபி சக்கரவர்த்தி வாழ்ந்த மரபு இந்து மரபு.
  வழிபோக்கர்களுக்காக தண்ணீர் பந்தல்,அன்ன சத்திரம் வைத்து உதவிய மரபு இந்து சமயத்தது, ஐயம் (தர்மம்) இட்டு உண் என்பது இங்கே நெடுங்கால பழக்கம்.காக்கைக்கும் பசுவுக்கும் உணவு கொடுத்து வாசல் நோக்கி வரும் வறியவர்க்கு உணவளித்து பின்னரே உணவு உண்ணும் பழக்கம் இன்னும் சில இந்து குடும்பங்களில் உண்டு. அன்னதானம்,கூழ் வார்த்தல் எல்லாம் இங்கே பலகாலமாக உண்டு நண்பரே.இது ஏழைகளுக்கு கஷ்டத்தில் இருப்பவர்க்கு எந்த தன்னலமும் இன்றி தர்மம் செய்யும் நற்பண்புடன் செய்யப்படும் சேவையே.
  அனால் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் அது வேறு,அதற்காக கஷ்டபடுபவனுக்கு உதவி செய்ய கூடாது என்று இந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. உங்கள் அடிவருடி கமல்ஹாசன் வேண்டுமானால் உன்னால் முடியும் தம்பியில் அதைபோல் ஒரு உருவகத்தை,இல்லாத கற்பனையை உருவாக்க முயலலாம். கிறிஸ்துவின் மீதோ,கிறிஸ்தவத்தின் மீதோ எங்களுக்கு எந்த வெறுப்போ.கோபமோ இல்லை.

 16. அன்புள்ள joe
  இயேசு மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அவர் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்புகிறீர்கள். பாராட்டுகிறேன்.
  they will pick up snakes with their hands; and when they drink deadly poison, it will not hurt them at all; they will place their hands on sick people, and they will get well.”
  என்று சொல்லுகிறார். நான் விஷம் தருகிறேன். குடித்து உங்கள் நம்பிக்கையை நிரூபிக்கிறீர்களா? அதே போல மோகன் லாசரஸ் உங்களை விட அதிக நம்பிக்கையாளர் என்று நினைத்தால் அவர் இப்படி குடித்து காட்ட தயாராக இருக்கிறாரா?

 17. அன்பர் திரு Joe அவர்களே

  ///அன்புள்ள சகோதரரே, எனது தமிழில் பிழை இருக்குமே ஆனால்ந தயவு கூர்ந்து மன்னிக்கவும். ///

  தங்களிடம் பிழை, தமிழில் மட்டுமல்ல, கருத்திலும் இருக்கிறது. பிழைப்புக்காக மதம் என்ற பிழை பெரியது. கருத்தரிடமே பாவமன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

 18. திருச்சிக்கரர் அவர்களே

  வெகு நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாதது என்னமோ போல இருந்தது. நலம்தானே?

 19. நன்றி நண்பர் திரு உமா சங்கர் அவர்களே,

  உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.

  நலமே.

 20. Comapring mohan c lazarus with kanchi sankaracharya seems a bit ridiculous. Mohan is a fringe group man who operates on his own. A vip attending his meeting doesnt alter that fact. Moreover we have 100’s of such fringe groups all operating for their own or certain needs. Thats not the case with acharya who is the leader of a community. The article also seems to justify the goodness of acharya just because he said ” iam with them….” what about the circumstance of arrest itself? we have innumerable politicians who can say still better comforting words but do they MEAN anything?
  Secondly regarding the discrimination of hindus as khafir by muslims….do u know that in gulf, higher caste educated indians ( should i call them as hindus or indians?) wont shake hands with lower caste indians but will happily shake hands with arabs!!!! I myself have expereiced this and even an arab narrated the behaviour of the higher caste indian in his office who refuses to see face to face with his office boy!!!! But these people dont have any problem with the arabs.(may be because they too r of higher caste!!) So this is the disease that prevails in our mind which gets reflected in all our social relations. What have we done to root this out? Nothing, rather keep on writing articles in the name of culture and take support from history to further flame such divisions.
  As long as a mind is prejudiced in the name of religion and caste no doubt we r living in the stone age. I have not read p.ragavan but going through the article and the sort of comments it has generated it seems he is perfectly right.

 21. பழனி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் விபத்தில் உயிரிழந்தபோது இறந்தவர்களுக்காக வருத்தம் தெரிவிக்காமல், பழனி முருகனுக்கு சக்தி இல்லை என்று கி வீரமணி அவர்கள் கிண்டலடித்தது கற்கால தனமாக தெரியவில்லையா? அப்போது எங்கே சென்றிருந்தார் இந்த பாரா.

  குண்டு வைத்து பல உயிர்களை கொலை செய்து குற்றவாளியாக ஒரு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு பல பிரச்னைகளுக்கு பின் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியை விடுதலை செய்ய கோரி போராட்டம் நடத்தும் மக்களை பார்த்தால் கற்கால தனமாக தெரியவில்லையா? அல்லது திரு பாராவுக்கு இந்த சம்பவம் தெரியாதா?

  அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்ய சிங்கள நாட்டிற்கு பேருதவி செய்த செகுலர் சொக்க தங்க அரசு உதவி செய்தது நவீன கால தனமாகப் படுகிறதா?
  இந்துக்கள்,கஷ்மீரில் இருந்து காலி செய்ய கேடு விதிக்கப்பட்டது நவீனத்துவமா?
  இந்த சம்பவங்களுக்கு எல்லாம் ஏன் இந்த பாரா கற்காலதுவம் என்று கட்டுரை எழுதவில்லை?

 22. hubert satheesh
  13 September 2010 at 1:12 pm
  //Secondly regarding the discrimination of hindus as khafir by muslims….do u know that in gulf, higher caste educated indians ( should i call them as hindus or indians?) wont shake hands with lower caste indians but will happily shake hands with arabs!!!! I myself have expereiced this and even an arab narrated the behaviour of the higher caste indian in his office who refuses to see face to face with his office boy //

  நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் தான் உள்ளேன். இங்கே அப்படி ஒரு உயர்சாதி இந்துவை பார்த்ததில்லை.
  எந்த உயர் வகுப்பினர் இங்கே அப்படி நடக்கின்றனர்? அப்படி செய்தால் அது நிச்சயம் தவறு தான்.
  எனக்கு தெரிந்து இங்கே எல்லோரும் இந்தியர் என்றுதான் பார்க்கிறோம். இங்கு மதத்தை பார்ப்பது கிறித்துவ மற்றும் முஸ்லிம்கள் மட்டுமே.இனத்தை பார்ப்பது மலையாளி மட்டுமே.

  தனக்கு கிழே உள்ளவர்கள் க்ரித்தவனா என்று பார்த்து பதவி உயர்வு மற்றும் சலுகைகள் தருவதும் அதிலும் சர்ச்சுக்கு போகிறவனுக்கு அதிக சலுகை தரும் மலையாள கிறித்துவர்களை பார்த்திருக்கிறேன். ஏன்,சைட்டில் அவர்களினால் வேலை வாங்கிகொண்டு பின் ஓரம் கட்டப்பட்டு தூக்கி அடிக்கப்பட்ட பலர் பின் என்னிடம் வந்து என் சைட்ட்டில் சேர்ந்திருக்கின்றனர் தமிழர் என்பதாலும்,கிறித்தவர் அல்லாதவர் என்பதாலும்.
  எனக்கு தெரிந்து இங்கு இந்துக்கள் யாரும் சாதியோ மதமோ பார்ப்பதாக தெரியவில்லை. மலையாளிகள் எல்லோருமே நம் ஆட்களை வேலை மட்டும் வாங்குவதற்கு உபயோகப்படுத்துவார்கள் பின் நம் ஆட்களை ஓரம்கட்டுவார்கள்,இதை பார்த்திருக்கிறேன்.
  முஸ்லிம்களை பற்றி இங்கு சொல்லவே வேண்டாம்.
  ஆனால ஒரு சிலர் நல்லவர்களும் உள்ளனர் எல்லா பிரிவிலும்.

  என்னிடம் சார்ஜ் ஹன்ட் ஆக இருந்த தமிழ் கிறித்துவ நண்பர் ஒருவரை நான் போர்மன் ஆக்கி பின் supervisor ஆக்கினேன் அவர் என்னிடமே உழியம் செய்ய ஆரம்பித்தார்.என்னிடம் உழியம் செல்லாது என்று தெரிந்தவுடன் பேசாமல் இருந்தார்.
  நீங்கள் குறிப்பிட்டது போல் வேண்டுமானால் ஒரு சில கழிசடைகள் எதாவது ஒன்றிரண்டு இருக்கலாம், அது அந்த நபர்களின் தவறே.அனால் முதல் முறையாக கேள்விபடுகிறேன்.அனால் நான் மேற்சொன்ன நபர்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
  இங்கே முஸ்லிம் மற்றும் கிறித்தவர்களுக்கு தனியாக சங்கம் போல் அமைப்பு மாநில வாரியாக தனியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்துக்களுக்கென்று ஒரு தனி அமைப்பு இங்கே கிடையாது,நான் பார்த்ததில்லை . தமிழ் சங்கம் என்ற எல்லோரையும் உள்ளடக்கிய அமைப்பு உண்டு. அதில் இந்துக்களும் இருப்பார்கள்.

  இஸ்கான் அமைப்பு மட்டும் இங்கு உண்டு. இங்கே சாதி பேதம் பார்ப்பவர்களை நான் கண்டோ கேட்டோ இல்லை.

 23. //ஆனால ஒரு சிலர் நல்லவர்களும் உள்ளனர் எல்லா பிரிவிலும்.//
  மன்னிக்கவும்

  ஆனால் ஒரு சிலர் தான் அப்படி பல நல்லவர்களும் உள்ளனர் எல்லா பிரிவிலும்
  என்று படிக்கவும்

 24. திரு ஹியூபர்ட் சதீஷ் அவர்களே

  இதைப் பாருங்கள்:
  https://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=3c933ccb-805b-4475-8943-2378416af178&CATEGORYNAME=CHN

  https://www.mail-archive.com/zestcaste@yahoogroups.com/msg08629.html

  கிறிஸ்தவர்களிடையே இந்தியாவிலேயே விழுப்புரம் மாவட்டம் எறையூரில் வன்னியர், தலித் என்ற சாதி வெறி இருக்கிறதே. துப்பாக்கி சூட்டில் இரு உயிர் போகும் அளவுக்கு அது இருக்கிறதே? வெறுமே கை குலுக்குவதைப் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே? தலித் கிறிஸ்தவர் பிணத்தை வன்னியர் கிறிஸ்தவர் வீதி வழியே விடமாட்டோம் என்கிறார்களே?

  சாதீயம் பாரதத்தில் மட்டும் இல்லை, உலகெங்கும் உள்ளது. தீண்டாமையை நானும் எதிர்க்கிறேன். ஆனால் தீண்டாமைக்கு ஹிந்து மதம் மட்டும் காரணம் அல்ல. எல்லா மதங்களுமே காரணம்தான். மேற்சாதி கீழ்ச்சாதி இல்லாத மதம் இருந்தால் அது பார்சி போன்ற விளிம்புநிலை மதங்களாக மட்டுமே இருக்கும். இஸ்லாம், கிறிஸ்தவம் என்று எல்லா பெரிய மதங்களிலும் சாதீயம் உண்டு. ஏற்றத்தாழ்வுகள் உண்டு. அனைத்தும் கண்டிக்கப் படவேண்டியவையே.

 25. ‘கிறிஸ்தவம் மட்டுமே தன்னலம் கருதாமல் சேவை செய்ய முடியும்’

  இதெல்லாம் திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் பரப்பும் பொய்.
  கிறிஸ்தவத்தைப் போல் அமைப்பு ரீதியாக போர்டு போட்டுக் கொண்டு சேவை செய்யும் வழக்கம் ஹிந்து சமயத்தில் இல்லை
  மதம் மாற்ற போடும் வேஷம் இங்கில்லை

  இங்கு தர்மம், தானம் எல்லாம் சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே வைக்கப் பட்டுள்ளது
  ஒரு வீட்டில் சாப்பிட இலை போடுவதற்கு முன் , வெளியில் வந்து திண்ணையில் யாராவது வழிப் போக்கர்கள் உள்ளார்களா என்று பார்த்து விட்டுத்தான் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட உட்காருவார்கள் என்பது நம் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்
  இவ்வளவு ஏன் நாம் சிறுவர்களாக இருந்த பொது சிறிய ஊர்களில் ‘ராப் பிச்சை’ என்று உணவு இரந்து வருவார்கள்
  தவறாமல் அவர்களுக்கு எடுத்து வைத்துப் போடுவோம்

  மேலும் அன்ன சத்திரம் கட்டி வைப்பது,சாவடி கட்டி வைப்பது இதெல்லாம் பண வசதி படைத்தவர்கள் செய்து வந்தனர்

  இதைத் தவிர அடியார்களுக்கு அமுது படைக்கும் வழக்கம் மிக உயர்ந்ததாகப் போற்றப் பட்டது- உதாரணம் அப்பூதி அடிகள் வரலாறு
  இவ்வளவு ஏன், யாராருக்கு உணவு படைக்க வேண்டும் என்றே நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர்’ மேலோர்,பசு, சிறை,விருந்து, ஒக்கல்
  அதாவது- மூதாதையர்கள், கோமாதா ,பறவைகள்,விருந்தினர்,உறவினர் இவர்களுக்கு அன்னம் இட்ட பின்பே உண்ண வேண்டும் என்று மிகச் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது .
  மேலும் வசதி படைத்தவர்கள் கோயிலுக்கு சொத்தை ‘எழுதி வைப்பது’ வழக்கத்தில் இருந்தது
  இதனால் கோயிலுக்கு வருமானம் கிடைத்தது.
  அது மட்டும் இல்லாமல் கோயிலில் தினம் மடைப் பள்ளியில் அமுது ஆக்கப் பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது

  ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் முற்காலத்தில் கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் அல்லாமல் சமுதாயக் கூடங்களாகவும் செயல் பட்டன.
  அறுவடை முடிந்த பின் ஒரு கிராமத்தில் உள்ள நிலச் சுவான்தார்கள் தங்கள் சக்திக்கு ஏற்றாற் போல் அறுவடையில் ஒரு பகுதியை கோயிலுக்கு வழங்குவார்கள்
  அந்த தானியங்களை கோயிலில் உள்ள குதிர்களில் சேமித்து வைப்பார்கள்.
  ஒரு வருடம் வானம் பொய்த்து வறட்சி வந்து மகசூல் குன்றும் பொது கோயிலில் உள்ள தானியத்தை உபயோகித்து உணவு ஆக்கி கிராம சமுதாயம் முழுமையும் பசி தீர்த்துக்கொள்ளும்.

  இதை விட அற்புதமான ஒரு தர்ம சிந்தனையும், மதி நுட்பமும்,திட்டமிடும் ஆற்றலும் உள்ள சமுதாயம் வேறு எங்காவது இருந்திருக்கின்றதா?
  ஆகவே இந்த கிறிஸ்தவக் கதையல்லாம் ஹிந்துக்களிடம் வேண்டாம்

 26. சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ‘கத்ரீனா’ என்ற பெரும் புயல் வந்த பொது எப்படி இரண்டு மூன்று வாரங்கள் ஆகியும் கூட பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவு மற்றும் மற்ற அத்தியாவசியப் பொருள்கள் கொடுக்க முடியாமல் திணறினார்கள் என்பதையும் ,மேலும் காவல் துறையே கொள்ளை அடித்ததையும் பார்த்தோம்.

  அந்த ப்ளோரிடா, மற்றும் லூயிசியானா மாநிலங்களில் பெரும்பான்மையினர் கருப்பு இனத்தவர்
  ஆகவே அவர்களை வெள்ளை, கிறிஸ்தவ அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை என்பதை அந்த மக்களே கூறினர்.

  ஆனால் இங்கு சுனாமி தாக்கிய இரண்டு மணி நேரத்துக்குள் ஆர்ர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்கள் உணவு பொட்டலங்களை வேனில் ஏற்றி பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுப்பி விட்டனர்.
  ஆகவே வல்லரசான கிறிஸ்தவ அமேரிக்கா ‘ஹிந்து மதவாத ஆர்ர் எஸ் எஸ் மற்றும் ‘வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா’ விடம் சமூக சேவையைக் கற்க வேண்டும்.

 27. ராமகிருஷ்ண மிஷன்,சத்ய சாய் சேவா தள், மாதா அம்ருதானந்தமயி பீடம்,ஆதி பராசக்தி பீடம், ஆர்ர் எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத்,வனவாசி கல்யாண் கேந்திரம்,சேவா பாரதி,ஜெயின் சங்கம், தர்ம ரக்ஷன சமிதி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மையங்கள்,கிருஷ்ண பக்தி இயக்கம் ( இஸ்க்கான்), இன்னும் நூற்றுக் கணக்கான ஹிந்து சேவை இயக்கங்கள் அமைதியாக வெளி நாட்டு பணத்தை எதிர்பார்க்காமல் சமுதாய சேவை செய்து கொண்டிருக்கின்றன.

 28. என் நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்தது இது :

  அவர் சிறுவனாக இருக்கும் பொது திடீரென அவரது தகப்பனார் காலமாகி விட்டார்.
  தாயார் பெரிதாகப் படிக்கவில்லை.
  அவர்களுக்கு வீடு ,சொத்து, பணம் என்று எதுவும் இல்லை.
  இவருக்கு ஒரு தமக்கை, ஒரு தம்பி.
  எல்லோரும் பள்ளியில்படித்துக் கொண்டிருந்தார்கள்
  என்ன செய்வது என்று தெரியவில்லை

  அப்போது கைகொடுத்தது’ ரெட்டியார் சத்திரம் ‘
  தினமும் குழந்தைகள் காலையில் பள்ளிப் புத்தகங்களுடன் சீக்கிரம் கிளம்பி ரெட்டியார் சத்திரம் சென்று விடுவர்.
  அங்கு மற்ற வீடுகளிலிருந்து வந்த குழந்தைகளுடன் காலை வணக்கம் ;பிறகு படிப்பு அதன் பின் அங்கேயே இலவச உணவு.
  அங்கிருந்து அவர்கள் நேரே அவரவர்கள் பள்ளிக்க்குச் சென்று விடுவர்.

  அதே போல் மாலையில் பள்ளி விட்டதும் நேரே சத்திரத்துக்குப் போவார்கள். அங்கு சிறிது நேரம் விளையாட்டு.பின் கடவுள் வணக்கம். படிப்புக்குப் பின் அங்கேயே உணவுசாபபிடுவர்.
  அதற்குப் பிறகு தூங்குவதற்கு தத்தம் வீடு செல்வர்
  இந்த மாதிரியே படித்து அவர் பள்ளிப் படிப்பு முடித்தார்
  பின்பு அவர் படிப்படியாக முன்னேறி மேல்படிப்பு , வேலை என்று கடைசியில் ஒரு வங்கியில் மேலாளராக ஆனார்
  நடுத்தெருவுக்கு வந்திருக்க வேண்டிய குடும்பம் அந்த ‘ரெட்டியார் சாத்திரத்தால்’ காப்பற்றப் பட்டது.
  இன்றும் அந்த நபர் அந்த ‘ரெட்டியாரை’ நன்றியுடன் நினைவு கூர்வார்.

  இத்தனைக்கும் அந்த சத்திரத்தைக் கட்டியவர் படிக்காதவர். அவருக்கு இருந்தது கொஞ்சம் வளமான நிலங்களே.
  ஆனால் அவருக்கு சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
  ஒரு படிக்காத ,கிராமத்தில் பிறந்த ஒருவருக்கு இந்த எண்ணம் எப்படி வந்தது.
  அதுதான் ஹிந்து கலாசாரம்.
  இதுதான் ஹிந்துக்களின் சமூக சேவை
  ஆங்கிலத்தில் போர்டு போட்டுக் கொண்டு ,வெளி நாட்டிலிருந்து நன்கொடை, பன்னாட்டுக் கம்பனிகளிடம் காசு வசூல் என்று அவர்கள் செய்வதில்லை.

 29. விருந்தோம்பல் பற்றி ஹிந்துக்களுக்கு யாரும் கற்று தர தேவையில்லை .அதே போல் சகிப்புதன்மையிலும் நம்மைப்போல் ஈடு கொடுப்பவர் யாருமில்லை .அப்படி இருப்பதால் தான் இன்று ஒண்ட வந்த பிடாரிஊர் பிடாரியை விரட்டுவது போல் ஆளாளுக்கு நம்மை விரட்டு கின்றனர் .மற்றவர் போல் நாம் பொய் சொல்லி மதத்தை பரப்ப வேண்டியதில்லை .நல்லது நிலைத்து நிற்கும் .அல்லது[[நல்லது அல்லாதது ] அழிந்து போகும் .

 30. திரு. ந. உமாசங்கர், தீண்டாமைக்கு இந்து மதம் காரணமல்ல. சில தவறான மனிதர்களும், தவறான புரிதல்களுமே காரணம். நாம் அணிய கொடுத்த பெல்டை[belt ], நாம் அடிக்க பயன்படுத்தினால் யார் காரணம்??
  நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *