இந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்

ராஜீவ் கொலைக்காக எல்லாரும் உள்ளம் பதற உடல் நெக்குருக துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை கண்டிக்கத்தக்கது; ஐயமில்லை. கிடைத்த தரவுகளை வைத்து இந்தியாவுக்கு “நிரூபியுங்கள் பார்ப்போம்!” எனச் சவால் விட்ட ஒரு கொலை. புலன் விசாரணை அதிகாரிகள் கடுமையாக உழைத்து அப்படுகொலையை படிப்படியாக வெளிப்படுத்தினார்கள். இந்திய காவல்துறை, உளவு அதிகாரிகள், நீதித்துறை அனைத்துமே கடுமையாக உழைத்து இன்று அந்தக் குற்றத்தின் பல பரிமாணங்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் 70-க்கும் மேலே இந்தியர்களை போட்டுத்தள்ளிய மதானியை விசாரணைக் கைதியாக இருக்கும்போதே விடுவிக்க சட்டசபையில் தீர்மானம் இயற்றியது இதே ராஜீவின் குடும்பச்சொத்தான காங்கிரஸ்தான் என்பது ஏனோ எல்லாருக்கும் மறந்துவிடுகிறது. காங்கிரஸின் பரம்பரைத் தலைவனுக்காக இந்த நாடே துடித்தது. ஆனால் 70 இந்திய உயிர்களைப் பறித்த குண்டுவெடிப்பை நடத்தியவனாக குற்றம் சாட்டப்பட்டவனை விசாரணைக்கு முன்னரே விடுவிக்க காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது, சட்டமன்றத்திலேயே!

இன்றைக்கு மௌனமோகன்சிங் மூலம் நாட்டை ஆளுகிற இத்தாலியக் குடும்பத்துக்கு இந்திய உயிர்களும் ஒன்றுதான் ராகுல் காந்தி சாப்பிடுகிற ஸ்பானிஷ் சிக்கன் கறிக்காகப் பொரிக்கப்படும் கோழியின் உயிரும் ஒன்றுதான். பின்னதற்கு ஒருவேளை விலை அதிகமாக இருக்கலாம், டாலர்களில்.

இந்திய உயிர்களுக்கு இத்தாலியக் குடும்பத்தின் ரிமோட் கண்ட்ரோல் அரசாங்கத்தில் எவ்வித மதிப்பும் இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றன விக்கிலீக்குகள். வேறொருநாடாக இருந்தால் நாடே கொந்தளித்திருக்கும். இப்போதுதான் அண்ணா ஹஸாரே ஊழலில்லாப் பாதையில் மன்மோகனை செலுத்திய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வாண வேடிக்கைகளும் வாதப் பிரதிவாதங்களும் முடியாத சூழலில் யாருக்குப்பா வேணும் டேவிட் ஹெட்லே பிரச்சினை…

டேவிட் ஹெட்லியின் உண்மைப் பெயர் ‘தாவூத் சையத் ஜிலானி’. சிகாகோவில் வாழும் பாகிஸ்தானி முஸ்லீம். 2008-இல் மும்பை தாக்குதல் ஒன்று நடந்ததே நினைவிருக்கிறதா? ராஜீவ் படுகொலை போல பெரிய விஷயமெல்லாம் இல்லை தோராயமாக 200 இந்தியர்கள் செத்தார்கள்; அவ்வளவுதான். இந்தத் தாக்குதலை நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய – எங்கெங்கே தாக்கலாம் எப்படித் தாக்கலாம்… எந்தெந்த இடங்களில் தாக்கினால் வசதி- இந்த விஷயங்களையெல்லாம் ஆராய்ச்சிசெய்து உதவியவன். ஹெட்லி இல்லை என்றால் மும்பை தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.

அந்த ஹெட்லி எப்படி அகப்பட்டான்? இப்படிப்பட்ட பெரிய தாக்குதலுக்கு அவன் துணைபோனபோது விழித்துக்கொள்ளாத மேற்கத்திய உளவுத்துறைகள் முகமது கார்ட்டூனை வெளியிட்ட ஸ்பானியப் பத்திரிகையைத் தாக்க அவன் திட்டமிட்டபோது விழித்துக் கொண்டன.

அந்த விசாரணையின் போது அவன் இந்தியா மீது தாக்குதல் நடத்தவும் துணை போனான் என்பது தெரிந்தது. பயங்கரவாதிகள் வாக்மேனில் பாட்டுக் கேட்க பாட்டரி செல் வாங்கிக் கொடுக்கவில்லை அவன். அணு அணுவாகத் திட்டமிட்டவன் அவன். அவனுடைய இந்திய நண்பர்களில் முக்கியமானவன் ராகுல் பட். இவன் திரைப்பட இயக்குநர் மகேஷ் பட்டின் மகன்.

மகேஷ் பட் சோனியாவுக்கு மிகவும் வேண்டிய ஒருவர். கிறிஸ்தவ என்ஜிஓ-க்களுடன் நெருக்கமானவர். “கிறிஸ்தவத்துக்கு எதிரான இந்தியப் பண்பாட்டை கக்கூஸில் ஃபளஷ் செய்ய வேண்டும்” என்று சோனியாவின் அடிவருடி டிவி சானலான சிஎன்என் ஐபிஎன்னில் கர்ஜித்தவர்.

ஹெட்லியின் ஈமெயில் சொல்கிறது: “நாம முடியும் போது இந்தியாவுக்குள்ள போயி ராகுலைப் பாத்து ’ஹாய்’ சொல்லணும்பா”.  ஈமெயில் அனுப்பப்பட்டது ஹெட்லியின் பாகிஸ்தான் லஸ்கர்-ஈ-தொய்பா அதிகாரிக்கு.

அந்த லஸ்கர் ஆள் சொல்கிறான்: “ராகுலைப் பார்ப்பது நல்லவிசயம்தான். ஏன்னா மும்பைலயும் உனக்கு கொஞ்சம் வேலை பாக்கலாம்… எல்லாம் நல்லா முன்னேறுதுண்ணே…” இதெல்லாம் வெளி வந்த்து 2009-இல். 2011-இல் மாநிலத் தேர்தல்களில் சோனியா காங்கிரஸுக்கான பிரசார நட்சத்திரங்களில் ஒருவர் மகேஷ்பட்.

மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிப் பிரசாரகரான மகேஷ் பட், ஹெட்லி நல்லவனென்றும் இதெல்லாமே அமெரிக்க சதி என்றும் பேட்டி கொடுத்தார்.

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் விக்கிலீக்ஸ் சொல்லுகிற செய்தி– ”ஹெட்லியை நீங்கள் ஒன்றும் எங்களிடம் விசாரிக்கத் தரவேண்டாம். ஆனால் நாங்கள் அப்படிக் கேட்போம். ஏனென்றால் பாருங்கள் இல்லாவிட்டால் இந்த இந்தியர்களை …” முட்டாளாக்க முடியாது என்று மட்டும்தான்சொல்லவில்லை. யார்? திருவாளர். நாராயணன். சோனியா குடும்ப விசுவாசி. இந்தியப் பாதுகாப்புக்கான முக்கிய அதி தலைமைப் பொறுப்பில் இருந்த ஆசாமி. இன்று மேற்கு வங்காள கவர்னர்.

ஹெட்லிக்காக வாதாடும் மகேஷ் பட்- சோனியா காங்கிரஸ் பிரசாரகர். ஹெட்லியை விசாரிக்கக் கேட்கிற மாதிரி கேட்போம்; நீங்க அனுப்ப வேண்டாம் என்று சொன்னதாக விக்கிலீக்ஸ் காட்டுகிற நாராயணன் சோனியா குடும்ப விசுவாசி. 200 இந்திய உயிர்கள் பலியான பயங்கரவாதம் குறித்த விசாரணையில் இந்திய அரசு இந்திய மக்களிடம் இரட்டைவேடம் ஆடியிருக்கிறது. இது குறித்து நமக்கெல்லாம் எந்த சலனமும் வரவில்லை. ராஜீவ் கொலையைத் தவிர வேறு எந்த பயங்கரவாதச் செயலுக்கும் முழுமையான புலனாய்வை காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளான திமுகவும் நடத்தியதில்லை. வழக்குகள் பலவீனமாக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் அல்லது சிறையில் ராஜமரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.

நாம் கேட்பதெல்லாம் ஒன்றுதான்… ராஜீவ் கொலைக்கு நீங்கள் காட்டிய அதே தீவிரம் அதே சிரத்தையுடன் இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் புலன்விசாரணையை மேற்கொள்ளுங்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள். சோனியா காங்கிரஸ் ஏன் ஒவ்வொரு பயங்கரவாதச் செயல் குறித்த புலன்விசாரணைக்கும் திரைமறைவில் சமாதி கட்டுகிறது என்பதை விசாரியுங்கள்.

இல்லாவிட்டால்…

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? இறந்தது எத்தனை நூறு அப்பாவி இந்தியர்கள் உயிரானாலும் இத்தாலி மாப்பிள்ளை உயிருக்கு ஈடாகுமா?

… என்று பாடியபடி அடுத்த ஜிகாதி குண்டுவெடிப்பில் நம் வீட்டு பிள்ளைகள் உடல்சிதறி வீதிகளில் இறந்த செய்தி வரும் வரை ராஜீவுக்கும் சோனியாவுக்கும் ராகுலுக்கும் வெரோனிக்காவுக்கும் ’ஈஸ்வர அல்லா தேரெ நாம்’ என மதச்சார்பின்மை பஜனை பாடிக் கொண்டிருப்போம்.

ஜெய் ஹிந்த்!

[குளவிக் கொட்டுகள் தொடரும்…]

9 Replies to “இந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்”

 1. குளவிக் கொட்டைத் தாண்டி மற்றொரு பக்கமும் உண்டு. இந்த விஷயத்தில்.
  ஹெட்லி அமேரிக்காவில் இருப்பதே நல்லது. மும்பை தாக்குதலில் பல
  அமேரிக்கர்களும் கொல்லப் பட்டுள்ளதால் அமேரிக்காவிலும் வழக்கு
  நடக்கிறது. ஹெட்லிக்கு சரியான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

  மேலும் பெரியார் அல்லது அண்ணா பிறந்த நாட்களில் தண்டனை
  குறைக்கப் படுவதும் அங்கு நடக்காது.

 2. WHY TAMIL HINDU IS NOT APPEARING IN OTHER MAJOR INDIAN LANGUAGES? IT IS IMPORTANT TO DO THAT AS IT WOULD HELP MORE OF OUR COUNTRYMEN TO KNOW THE TRUTH. PLEASE TAKE STEPS.

 3. இந்த இத்தாலிய மிசனரி இருக்கும் தேனவேல்லிட் தான் முத்தூட் கம்பனி காரர்கள் இப்படி ஒரு circular அனுப்பி உள்ளார்கள்.

  ஹிந்துப் பெண்கள் போட்டு வைக்கக் கூடாதாம். நெற்றியில் சந்தனம் இதெல்லாம் கூடாதாம். பூ வெச்சுக்கக் கூடாதாம்

  http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=14662

 4. குழவியரே வணக்கம்
  நீங்கள் இங்கு கூறியிருப்பது எல்லாம் சரி ஆனால், எந்த கொலையும் கண்டிக்கத்தக்கதே பாட்டரி வாங்கினாலும் குண்டூசி வாங்கினாலும் அது கொலைக்கு பயன் பட்டதானால் , அதற்கு உடந்தையாய் இருந்தவருக்காக வக்காலத்து வாங்குவது மனு நீதி படி சரி அல்ல

 5. //dont worry, sonia gandhi is back from her ailment. now she will address all of india’s problems//

  it should be

  dont worry, sonia gandhi is back from her ailment. now she will BE THE ADDRESS OF all of india’s problems.

 6. //dont worry, sonia gandhi is back from her ailment. now she will BE THE ADDRESS OF all of india’s problems.//

  really very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *