மூலம்: மிஷேல் டேனினோ (இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை)
தமிழில்: ஜடாயு
ஒரு தேசமாக, நமது வரலாற்று பற்றி அடிக்கடி நாம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். ஆனால் பத்தாண்டுகளாக இந்திய மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நான் பழகியதன் அடிப்படையில், அந்தத் துறை மீது உண்மையிலேயே “அன்பு” கொண்டவர்களை நான் மிக மிக அரிதாகவே பார்த்திருக்கிறேன். எனக்கு வரலாறு சுத்தமாகப் பிடிக்காது, ஹிஸ்டரி மகா போர் (“History is so boring”) போன்றதான விமர்சனங்களையே பொதுக்கருத்தாக கேட்க முடிகிறது.
2010-11 கல்வி ஆண்டின் பொதுப் பாடத் திட்டத்தின் கீழ் (common syllabus) தமிழக அரசு பதிப்பித்திருக்கும் ஆறாம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தகத்தைத் திறந்தால், இதே கருத்தைத் தான் அனேகமாக நீங்களும் சொல்லக் கூடும்.
சிந்துவெளி அல்லது ஹரப்பா நாகரீகம் என்கிற இரண்டாம் அத்தியாயத்திலிருந்து ஆரம்பிப்போம். இதில் ஒரு வரைபடத்தில் காலிபங்கன் என்ற முக்கியமான ஹரப்பா நாகரீக பிரதேசம் அதன் உண்மையான இருப்பிடமான வடக்கு ராஜஸ்தானுக்கு பதிலாக பாகிஸ்தானுக்கு உள்ளே இருப்பதாகக் காண்பிக்கப் பட்டிருக்கிறது (இங்கும், இந்திய நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டதோ?) ரூபர் என்ற இன்னொரு அகழ்விடம் சர்வதேச இந்திய-பாக் எல்லைக் கோட்டுக்கு மேலேயே காண்பிக்கப் பட்டிருக்கிற்து – உண்மையில் அந்த இடம் சண்டிகருக்கு அருகில் இருக்கிறது. ”ஹரப்பா என்றால் சிந்தியில் புதையுண்ட நகரம் என்று பொருள்” என்று பாடம் தெளிவாக நமக்கு சொல்லிச் செல்கிறது. ஆனால், ஹரப்பா பஞ்சாபில் இருக்கிறது, சிந்து மாகாணத்தில் அல்ல; மேலும், ஹரப்பா என்ற சொல்லின் மூலம் கண்டுபிடிக்கப் படவில்லை.
இன்னொரு முத்து: “இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் பட்டயத்தில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்தன” (The terracotta planks discovered here were engraved with letters). ஒரு அகழ்வாராய்ச்சி மாணவன் என்ற முறையில், ”சுடுமண் பட்டயம்” என்றால் என்ன என்று தெரியாத என் அறியாமையை ஒத்துக் கொள்கிறேன் – ஒருவேளை டோலாவிராவின் பிரபலமான, 3-மீட்டர் நீளமான, உதிர்ந்து போன மரப்பலகை மீது கல்போன்ற படிகங்களை வைத்துப் பதிக்கப் பட்ட கல்வெட்டைத் தான் இப்படி சங்கேத மொழியில் குறிப்பிடுகிறார்கள் போலும்! ஆனால் இந்தப் பாடம் முழுவதிலும் எங்கும் மிகப் பெரிய ஹரப்பா அகழ்விடங்களில் ஒன்றான டோலாவிரா பற்றிக் குறிப்பு இல்லை. இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய சிந்துவெளி அகழ்விடம் அது. நமது பாடப்புத்தக எழுத்தாளர்களுக்கு தங்கள் துறை பற்றிய தகவல் அறிவைப் புதுப்பித்துக் கொள்வதில் விருப்பமும், ஆர்வமும் இல்லவே இல்லை என்றே தோன்றுகிறது.
சிந்துவெளி நாகரீகம் அழிந்தது ஏன் என்பதற்காக ஐந்து காரணங்கள் பாடப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. இதில் முதலாவது மொத்தமாக அபத்தமானது “மரச் சாமன்கள் தீயில் அழிந்து போயிருக்கலாம்”, ஏதோ தீவிபத்து ஒரு நாகரீகத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்பது போல. இரண்டாவது ஒரு வினோதமான கற்பனை – “உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அழிந்திருக்கலாம்”. நான்காவது “ஆரியர்கள் இந்த நகரங்களைத் தங்கள் வெற்றிக்காக அழித்திருக்கலாம்” (யாரை எல்லது எதை வெற்றி கொள்வதற்காக என்பது புரிபடவில்லை) – என்ற வாதம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அகழ்வாராய்ச்சியாளர்களால் முற்றாக நிராகரிக்கப் பட்டு விட்டது. அதே போன்று ஐந்தாவதான “மொஹஞ்சதாராவில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் குவியல் அன்னியர்கள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம்“ என்ற கருத்தும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப் பட்ட ஒன்று. குறிப்பாக, அங்கு எங்குமே “எலும்புக் குவியல்” இல்லை. ஒருசில சிதறுண்ட எலும்புக் கூடுகளே உள்ளன – அவையும் வேறுவேறு காலகட்டங்களைச் சார்ந்தவை. மூன்றாவதாக சொல்லப் படும் “சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாறுதல்” என்பது மட்டுமே வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்து. ஆனால், இந்தக் கருத்து அரைகுறையாகவும், தெளிவில்லாமலும் சொல்லப் பட்டிருக்கிறது.
டோலாவிரா – சிந்துவெளி அகழ்விடம்
இப்போது நான்காவது அத்தியாத்திற்கு (வேத காலம்) போகலாம். இந்த அத்தியாயம் பொ.மு 1500 வாக்கில் (around 1500 BCE) ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று ஆரம்பிக்கிறது. இந்த நுழைவு சமாசாரம் ஒரு சர்ச்சைக்குரிய காலனிய கருத்தாக்கம், ஆனால் அது நிரூபிக்கப் பட்ட உண்மை போல பாடப் புத்தகத்தில் சொல்லப் படுகிறது. அது போதாதென்று பல நுண் சித்தரிப்புக்களும் தரப்படுகின்றன – ”ஆரிய ஆண்கள், வேட்டிகளும் போர்வைகளும் தலைப்பாகைகளும், அதோடு நெற்றிப் பட்டைகளும் அணிந்திருந்தார்கள்” – என்னவொரு அவலட்சணமான, முற்றிலும் கற்பனையின் பாற்பட்ட உடைத் தேர்வு! மேலும், ஆரியர்கள் வணங்கிய தெய்வங்களில் ஒருவர் Indra என்பதற்குப் பதிலாக Indira என்று குறிப்பிடப்பட்டுள்ளார் (காங்கிரஸ் கட்சிக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும்). இதே போல varna (varuna அல்ல) என்றொரு கடவுளையும் வணங்கினார்களாம்.
ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை (qualities of Dravidians and Aryans) கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. முதலாவதாக, திராவிடர்கள் “கருப்பு நிறமும், நடுத்தர உயரமும், கருத்த நீண்ட முடியும்” கொண்டவர்கள்; ஆரியர்கள் ”வெள்ளை, உயரம், பழுப்பு நிற முடியினர்”. தெளிவாக, காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.
மற்ற எட்டு பாயிண்டுகளும் ”சிந்துவெளி நாகரீகத்தை திராவிடர்கள் உருவாக்கினார்கள்” என்பது ஏதோ நிரூபிக்கப் பட்ட உண்மை என்று எடுத்துக் கொண்டு பட்டியல் போடுகின்றன. இந்தக் கருத்தாக்கம் சில பத்தாண்டுகளாக உள்ளது; ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்களால் சிறிதும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆரிய/திராவிட பாகுபாடு முழுமையானவே இனம் சார்ந்த ஒன்றாகவே பாடப்புத்தகத்தில் சித்தரிக்கப் படுகிறது. அதில் மொழி பற்றிய ஒப்பீடு கூட இல்லை – அது ஒன்று தான் இன்றைக்குக் கூட வெளிப்படையாகத் தெரிவது! இன்னொன்று – இந்த அத்தியாயத்தில் சம்ஸ்கிருதம் பற்றி எதுவுமே சொல்லப் படவில்லை. ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் வேத காலம் பற்றிப் படிக்கும் ஒரு மாணவன் சம்ஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததையே படிக்க மாட்டான். என்ன தான் திராவிட இயக்கம் சம்ஸ்கிருத எதிர்ப்புக் கொள்கை உடையது என்றாலும், அதற்காக இப்படியா?
தமிழ் பற்றி நிறையவே கவன ஈர்ப்பு செய்யப் படுகிறது. பார்த்தால், பழந்தமிழ் நாடு (Ancient Tamil Nadu) என்ற மூன்றாம் அத்தியாயம் சாதுர்யமாக “வேத காலம்” அத்தியாயத்திற்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் தொன்ம நிலமான குமரிக் கண்டம் என்பது பற்றிய புராணம் ஒரு வரலாற்று உண்மையாகவே இதில் சித்தரிக்கப் படுகிறது. ”மூன்று சங்கங்களில் முதல் இரண்டு அங்கு செழித்திருந்தன, பின்னர் அந்த நிலத்தை கடல் விழுங்கிவிட்டது” (இந்த கடல்கோள் விஷயம் உண்மை என்று தோன்றவைக்க, பாடப்புத்தகத்தில் ‘சுனாமி’ என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தியிருக்கிறார்கள். சுனாமி எந்த நிலப்பரப்பையும் விழுங்குவதில்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்). இது நடந்தது ”வரலாற்றுக்கு முந்தைய காலகட்டங்களுக்கும் முன்னால்” (before prehistoric period). அந்த நிலப்பரப்பு ”தென்னிந்தியாவைப் போல எட்டு முதல் பத்து மடங்கு பெரியதாகவும், பலதரப்பட்ட மலைகள் சூழ்ந்ததாகவும், நாகரீகமான மக்களும், திறன்கொண்ட அரசும் (civilized people and efficient kingdom) உடையதாகவும்” இருந்தததாம்.
தெரிந்து கொள்ளுங்கள் – வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் முன்பே நமக்கு நாகரீகம் இருந்திருக்கிறது ! பாடப்புத்தகம் இன்னும் மேலே சென்று குமரிக்கண்டத்தை, அதே போன்ற ஒரு கற்பனைத் தொன்மமான “லெமூரியா” கண்டத்துடன் தொடர்பு படுத்துகிறது. அது உறுதியாகக் கூறுகிறது – ”உயிரினங்கள் வளர்வதற்கு சாதகமான சூழ்நிலை குமரிமுனையில் தான் இருந்தது. அது சுனாமியில் மூழ்கிவிட்டது. எனவே மனித பரிணாம வளர்ச்சி அப்போது அங்கே தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மனிதர்கள் பேசிய மொழி தான் தமிழ் மொழிக்கு அடிப்படை”. எனவே, எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, மனிதர்கள் ஆப்பிரிக்காவில் அல்ல, லெமூரியாவில் குமரிமுனையில் தான் தோன்றி பரிணாமம் அடைந்தார்கள் – அவர்கள் ஆதிமுதலே தமிழ் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள்!
தேசிய, பிராந்திய பெருமிதம் ஓரளவு இருப்பது பற்றி எனக்கு எந்தப் பிரசினையும் இல்லை. ஆனால் இப்படி புவிக்கோளத்தையே முழுங்கும் வெறித்தனம் (planetary jingoism) அத்துமீறியதாக இருக்கிறது.
இன்னும் இருக்கிறது. லெமூரியா என்பது “ஆஸ்திரேலியாவையாயும் ஆப்பிரிக்காவையும் இணைத்திருந்த பெரும் நிலத் தொகுதி”, அது அவ்வாறு அழைக்கப் படக் காரணம் “லெமூர் குரங்கு” (the monkey Lemur) என்கிறது பாடப்புத்தகம். ஆனால் உண்மையில் லெமூர்கள் குரங்குகள் அல்ல. அதாவது பரவாயில்லை; “மனிதர்கள் லெமூர்களில் இருந்து தான் தோன்றினார்கள் என்று நம்பப் படுகிறது. அந்த மக்களின் மொழி பழமையான தமிழ்” – உங்களுக்கு இது எப்படி மறந்து போகலாம்?
மனிதர்கள் லெமூர்களிடமிருந்து தான் தோன்றினார்கள் என்பது ஒரு மாபெரும் திருப்புமுனையான ஒரு கண்டுபிடிப்பு. அது உண்மை என்னும் பட்சத்தில், வரலாறு மட்டுமல்ல, மனித பரிணாவியல் பற்றிய எல்லாப் புத்தகங்களையும் நாம் திருத்தி எழுதியாக வேண்டும். அதோடு நிலவியல் (geology) புத்தகங்களையும். ஏனென்றால், நிலவியலின்படி பூமியின் தென்பாதியான பெருங்கண்டம் ஒரு காலத்தில் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா எல்லாம் இணைந்ததாக இருந்தது. அதற்குப் பெயர் கோண்ட்வானா (Gondwana) லெமூரியா அல்ல. மேலும், தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி இந்தப் பெருங்கண்டம் 200 மில்லியன் ஆண்டுகள் முன்பே உடைந்து பிரிந்து விட்டது. மனித பரிணாம வளர்ச்சியின் 2 மில்லியன் ஆண்டுக்காலத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்.
எந்த கலாசாரத்திலும் தொன்மங்களும், புராணங்களும் பண்டைக் காலத்தைத் திறந்து காட்டும் சாளரங்கள் என்று கருதப் படுகின்றன தான். ஆனால், குமரிக் கண்டம் பற்றிய ஐதிகத்தை ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக (அதோடு சங்க இலக்கியங்களில் துளிக்கூட காணப்படாத பல மசாலா சமாசாரங்களையும் சேர்த்து) சித்தரிப்பது என்பது எப்படியிருக்கிறது என்றால், கிரகணத்தின் போது ராகு சூரியனை விழுங்குகிறது என்பது தான் வானியலில் சமீபத்தில் நிகழ்த்தப் பட்ட நவீன கண்டுபிடிப்பு என்று சொல்வது போன்று இருக்கிறது.
பின்னால் வரும் அத்தியாயங்களில் இன்னும் பல அபத்தமான தவறுகள் உள்ளன.”ஆன்மிக உயர்நிலையை அடைவதற்காக ஜைனர்கள் பட்டினி கிடந்தார்கள்” (jains starved), அது மட்டுமல்ல, “உடைகளை அகற்றினார்கள்” (they eliminated clothes) போன்ற அரிய உண்மைகளை நாம் அறிய வருகிறோம். எப்படியானாலும், இந்தப் பாடப்புத்தகத்தை எழுதியவர்களின் மிக மோசமான திறமையின்மையை விளக்குவதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை. பெரும்பாலான தமிழகப் பள்ளிகளில் இந்தக் குழப்படியான அவியலைப் படித்து மனப்பாடம் செய்தால் தான் அடுத்த வகுப்புக்கு மாணவர்களால் போகவே முடியும் என்ற கொடுமையான உண்மையையும் நினைவில் வையுங்கள்.
இதைவிட சிறப்பாக மத்திய அரசின் NCERT நிறுவனம் பதிப்பித்துள்ள பாடப்புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவற்றிலும் தப்புகளும், குழப்பங்களும், காலனிய பொதுப்படுத்தல்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த இண்டர்நெட் யுகத்தில், முன்னோக்கு கொண்ட கல்வியாளர்கள் கூறுவது போல, பாடப்புத்தகத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைக்குப் பதிலாக பல்வேறு விதமான சாதனங்களையும் படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி கற்றும் தரும் முறையை நோக்கிச் செல்வதே சரியான வழி. அதிலும் சில தவறுகளும், சறுக்கல்களும் ஏற்படலாம். ஆனால் மேற்குறிப்பிட்டது போன்ற அவமானகரமான பாடங்களை விட ஒன்றும் அது மோசமானதல்ல.
”வாழ்நாள் முழுவதும் இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கற்கும் மாணவன்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கட்டுரை ஆசிரியர் மிஷேல் டேனினோ வரலாற்று ஆய்வாளர். சில பல்கலைக் கழகங்களில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். பிரான்ஸ் நாட்டில் பிறந்து இளவயதிலேயே பாரதம் வந்து பாண்டிச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தில் பயின்றவர். ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை மறுத்து இவர் எழுதிய The Invasion that never was என்ற நூல் இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. மறைந்த சரஸ்வதி நதி குறித்து சமீபத்தில் The Lost River: On the Trail of the Sarasvati என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.
சரி ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள், தாத்தாச்சாரி என்பவர் “ஹிந்து மதம் எங்கே போகிறது” என்ற கட்டுரயில், ஆரியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்று சொல்லி இருக்கிறாரே அதற்க்கு உங்கள் பதில் என்ன.
திரு.மிச்சேல் தானி அவர்களின் ஆய்வுகள் எல்லாம் ஒரு சமுகம் சார்ந்ததாக உள்ளது. அவருடைய உரையாடல்களும் அப்படியே உள்ளது. அவருக்கு இந்தியாவின் மற்ற பண்பாடு பற்றி அதிகம் தெரிந்து இருக்க வில்லை போலும்.
//ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் வேத காலம் பற்றிப் படிக்கும் ஒரு மாணவன் சம்ஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததையே படிக்க மாட்டான். என்ன தான் திராவிட இயக்கம் சம்ஸ்கிருத எதிர்ப்புக் கொள்கை உடையது என்றாலும், அதற்காக இப்படியா?//
தமிழ் புத்தகத்தில் எதற்காக சம்ஸ்கிருதம் பற்றி எழுத வேண்டும்?
வேத காலம் என்பது சம்ஸ்கிருதம் பற்றியதா?
வேத காலம் என்று ஒன்றும் இல்லை. தமிழும் மற்றும் சம்ஸ்கிருதம் சம காலத்தில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது.
முதல் சங்ககாலம் என்பது வேத காலம் இல்லையா?
Mr Mubarak Kwait, Aryans never came form anywhere simply because Aryans are not a race. Aryan means a noble person. End of story. Max Muller, the German national, who never visited India in his life time started this propaganda.( He admitted his mistake in the end) This theory was to justify whiteman’s inavsion of India. You can Google on this false Aryan invasion theory (BBC for example). Of course there were noble persons in the south who were also called Aryans.As it stands,there is no HISTORICAL evidence of any Aryan invasion of India.
If Dhathachari or who ever says that Aryans came from Afghanistan ( so now it is Afghanistan and not Central Asia! Max Muller must be rolling in his grave) they are simply, pardon my expression,uttering nonsense from their bottom,
//ஆரியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்று சொல்லி இருக்கிறாரே அதற்க்கு உங்கள் பதில் என்ன.//
அது கொஞ்சம் பிரிண்டிங் மிஷ்டேக்கு. ஆப்கானிஸ்தாநிளிருந்தும் வந்தார்கள் என்று இருக்க வேண்டும். உலகம் முழுசும் அவங்கதாங்க இருந்தாங்க. முஹம்மது ஸ்வேன் களிச்ச் என்பவர் நபிகள் நாயகம் என்று ஒருவர் இல்லை என்கிறாரே, அதற்க்கு நீங்க என்ன சொல்றீங்க? https://online.wsj.com/article/SB122669909279629451.html
இந்தியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகளா?
இப்போது இந்தியாவில் வசிக்கும் மக்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல என்றும், அவர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும் கூறப் படுகிறது அல்லவா?
ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,
அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,
அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?
ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?
உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?
எனவே இந்தியர்கள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.
முபாரக் குவைத் அவர்களே,
ஆரியர்கள் என சொல்லப் படும் இந்தியர்கள் ஆப்கானில் இருந்து இந்தியா வர வேண்டியதில்லை. குமரி முதல் இமயம் வரை, தீபெத் முதல் ஆப்கான் வரை ஆரியரக்ள என்று சொல்லப் படும் இந்தியர்கள் தான் வாழ்ந்தனர். துரியோதனின் அன்னையும், திருத்த ராஷ்டிரரின் மனைவியுமான காந்தாரி, காண்டஹார் என இப்போது வழங்கப் படும் காந்தார நாட்டு அரசனின் மகள். அவர்கள எல்லோரம் இந்தியர்கள் தான்.
ஆப்கானிஸ்தான் அக்காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அசோகர், கனிஷ்கர் உள்ளிட்ட பலர் ஆப்கானையும் ஆட்சி செய்து இருந்திருக்கின்றனர்.
முதலில் ஆழமாக சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். பாகிஸ்தானில் இருப்பவரும் பஞ்சாபி தான், இந்தியாவில் இருப்பவரும் பஞ்சாபி தான்.
கலகத்தாவில் இருப்பவரும் வங்காளி தான். டாக்காவில் இருப்பவரும் வங்காளி தான். சில பல காரணங்களால் பிரிந்து விட்டனர்.
எனவே நாம் அனைவரும் இந்தியர்கள தான். ஆரிய ன் என்பது ஒரு வாழும் முறை. எப்போதும் சோர்வில்லாமல் , எந்தக் கையறு நிலையிலும் விடா முயற்சி செய்வது ஆரியத் தன்மை.
திராவிடம் என்பது ஒரு பிராந்தியம். தென்னிந்திய பகுதி திராவிடம் என அழைக்கப் பட்டது.
நான் திருச்சி ராப்பள்ளி நகரில் பிறந்தவன் என்பதால திருச்சிக்காரன் என்று என்னை நான் தங்கி இருந்த ரூமில் சில நண்பர்கள் அழைத்தனர். ஆனால் நானா இந்தியன் தான். திருச்சிக்காரர் என்று தனியாக ஒரு இனம் கிடையாது.
இந்த மாத முதலில் வந்த சுட்டி இங்கே.
https://www.thehindu.com/news/international/article812961.ece
To Ramki, even if is proven there was Aryan’s existence in Russia, still one cannot assumed that it was they whom came out with Vedas and todays Hindu religion. Hinduism might be already in India before the Aryans came to India. Its so Hard to believe that Aryans who came to India managed to convert everyone a Hindu and kick Dravidans to south.
Ramki,more than likely, Aryans( for want of better word here) moved to Russia from Bharath.Also, just think about this.Was South India vacant and devoid of people before the kicked out Dravidians from North moved there?
Swamy Vivekanada’s posed this question a long time back to the whites – ” Where is the evidence in our Puranas/Ithikasas that Aryans came from outside India?”
We also need to seriously beleive that our history,culture existed millions of years ago,(example, Shri Rama’s time).We should not be constrained with history written by the white men.
எனவே நாம் அனைவரும் இந்தியர்கள தான். ஆரிய ன் என்பது ஒரு வாழும் முறை. எப்போதும் சோர்வில்லாமல் , எந்தக் கையறு நிலையிலும் விடா முயற்சி செய்வது ஆரியத் தன்மை.
Dont say like This.False information
இந்த நாட்டை எப்படியேனும் சிதைக்கத் திட்டமிட்டவர்களால், ‘வரலாற்று ஆய்வு என்ற பெயரில் திணிக்கப்பட்ட கதை தான் ஆரிய- திராவிட வாதம். உண்மையில் ‘திராவிடம்’ என்ற வார்த்தையே வடமொழி வார்த்தை தான். தமிழின் தொன்மையான இலக்கண நூலான (காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்) தொல்காப்பியம் ‘வடசொற் கிளவி’ குறித்துப் பேசுகிறது. ஆயினும் தமிழின் எந்த இலக்கண நூலிலும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் ‘திராவிட’ என்ற வார்த்தை இல்லை. ஆனால், ‘ஆரியன்’ என்ற வார்த்தை நற்குணத்தின் உருவமாக பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. நமது மகாகவி பாரதியும் அதே பொருளில்தான் ‘ஆரிய’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால், நாட்டு விடுதலைக்குப் பிறகு மெக்காலே கல்வி, மார்க்சிஸ்ட் சார்பு காரணங்களால், நமது வரலாற்று நிபுணர்களும் அரைத்த மாவையே அரைக்கும் ஆய்வுகளை அள்ளி வழங்கினார்கள். மிஷால் டானினோ போன்றவர்கள் ‘ஆரிய திராவிட வாதம்’ கட்டுக்கதை என்று நிரூபித்தாலும், அரசியலுக்காக (இதுவரை பல கட்சிகள் தோன்றியதே இந்த அடிப்படையில் தான்) முயலுக்கு மூன்று கால் கதைகளை சொல்லி வருகிறார்கள்.
நமது சரித்திர புரட்டர்களின் பாடங்களைக் குறித்த இக்கட்டுரை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது, இதற்கு பின்னூட்டமிட்ட சில நண்பர்களின் கருத்துக்களில் இருந்து தெரிகிறது. இந்த மாயை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பரப்பபட்டுவிட்டது. ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் சாட்சிகள் இவர்கள்.
நமது சரித்திரம் மீளவும் உண்மையான ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். இதற்கான பணியில் ”பாரதீய இதிகாச சங்கலன் சமிதி” என்ற அமைப்பு அமைதியான முறையில் பாடுபட்டு வருகிறது.
நாம் உண்மைகளை உரக்கச் சொல்வோம். தொடர்ந்து அரசு சார்பு, வெளிநாட்டு சார்பு வல்லுனர்களால் பரப்பப்படும் இத்தகைய மோசடி பிரசாரத்திற்கு பதிலடி, அமைதியான முறையில் சரித்திரம் படைப்பது தான். மிஷால் டானினோ அத்தகைய அறிய பணியையே செய்து வருகிறார். அவருக்கு நன்றி. கட்டுரையை நல்ல முறையில் மொழிபெயர்த்த ஜடாயுவுக்கும்…
-சேக்கிழான்
தமிழ் என்றாலே தமிழ் நாடு என்றாலே, கருணாநிதியும் கனிமொழியும் தான் என்றாலும், ஆரியர் என்ற சொல் எவ்வளவு முறை கூறப்படுகிறதோ, அவ்வளவு முறை, கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தோப்புக்கரணம் போடுவதாக பாவிக்கப்படுவதாலும், தமிழால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, மேலும் பிழைப்புக்கு வழிவகை செய்யப்படும் என்ற
மூடப்பகுத்தறிவுநம்பிக்கையிருப்பதாலும் ஏற்படும் வினையை, கட்டுரையாளர் நன்றாகப் ‘படம்’ பிடித்துக் காட்டி உள்ளார்
நான் வரலாற்று ஆய்வாளன் இல்லை. மேலும் வரலாற்று ஆய்வுகளின் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென இனக்கேந்த விருப்பமமில்லை. திராவிடக் கட்சிகளைப் போன்றே இந்து ஆர்வலர்களுக்கும் உண்மையைத் தேடத் தேம்பிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு மொழிக்கூறுகள் தமிழ், வடமொழி, ஒரே சிந்தனையிலிருந்து வந்தது என்று நம்புவது கடினம். அதனால் உண்மை திராவிட, இந்து வாதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கலாம்.
தென்னிந்திய வராற்று ஆசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஊடும் பாவும் போன்று இரண்டு கூறுகள் இணைந்திருக்கலாமெனவும், அதன் வரலாறு கிட்டவில்லை என்றும் கூறுகிறார். வரலாற்று ஆய்வு துரதிர்ஷ்டவசமாக இவ்விருகுழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உண்மை வெளி வருமா?
முதலில் திராவிடர்கள் பாகிஸ்தான் அருகே இருந்திருந்தால் அவர்கள் ஏன் இப்படி கன்னம் கரேல் என்று இருதார்கள்? அவர்களும் சிகப்பாக தானே இருந்திருக்க வேண்டும். ( ஏனென்றால் தெற்கே வெயில் அதனால அவர்கள் கருப்பு என்று ஒரு களத்தில் வியாக்யானம் செய்து கொண்டு இருந்தார்கள் )
// வரலாற்று ஆய்வு துரதிர்ஷ்டவசமாக இவ்விருகுழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உண்மை வெளி வருமா? //
ஆய்வாளர்களில் தீவிர கருத்துச் சார்புடையவர்கள் இருக்கிறார்கள் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக தங்கள் முகாமின் பிரசாரங்களையே முன்வைப்பவர்கள் “ஆய்வாளர்கள்” என்று ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ரொமிலா தாப்பர் தீவிர மார்க்சிய சார்பு உடைய வரலாற்று ஆய்வாளர் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் அவரே கூட ஆரிய படையெடுப்பு வாதம் பற்றியும், ஆரிய இனவாதம் பற்றியதுமான இந்தப் பாடப்புத்தக ஆசிரியர்கள் சொல்வது போன்ற காலாவதியான காலனிய கருத்துக்களை ஒட்டுமொத்தமாக ஏற்பதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதைத் தான் இங்கு டேனினோ சுட்டிக் காட்டுகிறார்.
சிந்து சரஸ்வதி நதி நாகரீகம் பற்றிய ஆராய்ச்சிகளில் கடந்த 20 ஆண்டுகளிலேயே கூட பல புதிய பார்வைகள் தரப்பட்டுள்ளன. செயற்கைக் கோள் மூலம் சிந்து சமவெளிப் படுகை முழுவதையும் படம் பிடித்தல் தொடங்கி பல நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் இந்தப் புதிய புரிதல்களைச் சாத்தியமாக்கியுள்ளன. இந்த இண்டர்நெட் யுகத்தில் இது பற்றிய எந்தத் தகவல் அறிவும் பிரக்ஞையும் இல்லாமல் வரலாற்றுப் பாடநூல்களில் பொய்களையும், திரிபுகளையும் எடுத்து விடுவது எந்த விதத்தில் சரியாகும்?
வேதகாலம் என்பதே ஒரு நீண்ட காலகட்டம் (குறைந்தது 4-5 நூற்றாண்டுகள்). இதில் ரிக்வேத காலம் அனைத்தையும் விடத் தொன்மையானது – இது சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு கிளையாகவோ, நீட்சியாகவோ இருந்திருக்கவே சாத்தியக் கூறுகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் இன்று கருதுகிறார்கள். வேத காலத்திற்குப் பின் சிற்றரசுகள் நிலைபெற்று, அவை திரண்டு பேரரசுகள் உருவாகும் காலகட்டம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் காலம். பின் வருவது புராணங்கள் தொகுக்கப் படும் காலம்.
தமிழில் கிடைக்கும் எந்த மிகப் பழைய நூலும் ரிக்வேதத்தை விடத் தொன்மையானதல்ல. வேத காலத்துடன் ஒப்பிடுகையில் சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமும் மிகவும் பிந்தியவை. அவை இதிகாசங்கள் நூல்வடிவம் பெற்று, புராணக் கதைகள் பிரபலமாகும் காலகட்டத்தைச் சேர்ந்தவை – சங்க இலக்கியங்கள் நெடுகிலும் இதிகாச புராணக் குறிப்புகள் பல இடங்களில் பயின்று வருவது இதனை உறுதிப் படுத்துகிறது. (சங்ககாலமும் 2-3 நூற்றாண்டுகளை உள்ளடக்கிய காலகட்டம்).
சிந்துவெளி நாகரீகத்துடன் பழந்தமிழ் இலக்கியங்களைத் தொடர்பு படுத்துவதே ஒரு பெரும் அதி-ஊகம். அதற்கு வலுசேர்க்கும் எந்த உறுதியான வரலாற்று ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. சிந்து பற்றி எந்தத் தமிழ் நூலிலும் தகவல் இல்லை.. மாறாக, சிந்து மற்றும் அதன் ஐந்து கிளை நதிகள், வறண்டு மறைந்து விட்ட சரஸ்வதி நதி ஆகியவை பற்றி பெருமளவிலான குறிப்புகள் ரிக்வேதத்தில் தான் உள்ளன.
நன்றி ஜடாயு.
சிந்து சமவெளி பற்றி நான் முன்னரே குறிப்பிட்ட சுட்டியை ஒட்டி மேலதிக ஆய்வுக்குப் பின்னரே முடிவு செய்ய இயலும். மேலும் அதன் எழுத்துக்கள் இன்னமும் படிக்கப்படவில்லை.
வடமொழியின் தொன்மை பற்றிய சான்றுகளை ஏன் அடுககுகிறீர்களெனப் புரியவில்லை?
சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக இருக்கும் சாத்தியத்தையும் முற்றிலும் நிராகரிப்பதிற்கில்லை. கிறித்தவ எண்ணம் கொண்டவராயினும் பார்போலவின் கருத்துக்கள் ஆய்வுக்குட்பட்டவையே. இந்து ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் வலுவான வாதங்களை வைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
இந்து ஆய்வாளர்கள் தமிழ் எனும் கூறு தனியானது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தக் கூட முன்வருவதில்லை.
ஒரே சிந்தனை உடைய ஒரே கூட்டம் இரு வேறு விதமான மொழிகளைத் தோற்றுவிக்க இயலுமா? அவ்வாற்றின் அதுவே ஆய்வுக்குரிய மிகப்ப பெரும் விஷயம்.
அதையேதான் நான் கூறியிருந்தான். மெய்பொருள் காண்பது அறிவு. இங்கு அது அரிதாகிப்போனது. அதற்காகவே கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களை சுட்டியிருந்தேன்.
மேலும் பிரிக்க இயலாது ஒன்றாகிப்போன இவ்விரு கூறுகளைச் சரியான ஆய்வின்றி பிரிக்க முயலுவது அபத்தமாகும் என்று எச்சரிக்கிறார்.
இந்திய அரசு இதிலெல்லாம் பெரிய கவனம் செலுத்துவதேயில்லை.
ஆய்வாளர்களின் சார்புடைமை பற்றி அயோத்தி தீர்ப்பே கண்டனம் சொல்லியிருக்கிறது. இது எல்லா தரப்பிலும் இருப்பது வேதனை. இவைகளின் நடுவில் என் போன்றவர்கள் உண்மையைத் தெளிவது எவ்வாறு?
மேலும் பாட புத்தகத்தில் அபத்தங்களைச் சேர்ப்பதை சரியென வாதிடுவது என் நோக்கம் அன்று.
நான் கூற விழைந்தது: தமிழ் அதன் தொன்மைப் பற்றி, தனியிடம் பற்றி NCERT புத்தகங்கள் கூட நல்ல பதிவைத் தருவதில்லை. மற்ற மாநிலங்கள் பற்றிய அச்சமா? தெரியவில்லை.
அன்புக்குரிய நண்பர் மதுரைக்காரர் அவர்களே,
//எனவே நாம் அனைவரும் இந்தியர்கள தான். ஆரிய ன் என்பது ஒரு வாழும் முறை. எப்போதும் சோர்வில்லாமல் , எந்தக் கையறு நிலையிலும் விடா முயற்சி செய்வது ஆரியத் தன்மை.
Dont say like This.False information//
இன்றைக்கு இந்தியாவில் வாழும் பெரும்பாலனா மக்களின் முன்னோர்கள், இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்பதை நாம் பின்னோட்டம்மாகவே இட்டுள்ளோம்.
தமிழ் இலக்கியமாக இருந்தாலும், சம்ஸ்கிருத இலக்கியமாக இருந்தாலும் அவற்றில் கூறப்பட்டுள்ள சிந்தனை ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆக்க பூர்வமான கருத்துக்களோ உள்ளனவே அன்றி வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் கருத்துக்கள் எதுவும் இல்லை.
//எனவே நாம் அனைவரும் இந்தியர்கள தான். ஆரியன் என்பது ஒரு வாழும் முறை. எப்போதும் சோர்வில்லாமல், எந்தக் கையறு நிலையிலும் விடா முயற்சி செய்வது ஆரியத் தன்மை.//
இது உண்மைதான் நண்பர் மதுரைக்காரன் அவர்களே. நாம் எல்லோரும் இந்தியர், நம் முன்னோர்கள், இந்தியாவின் பூர்வகுடிகள் என்கிற உண்மையை உணர்ந்து ஒன்றுபடுவோம். குறுகிய செயல்கள் போக்கி குவலயம் ஓங்க செய்வோம்.
சிந்து சமவெளி பற்றி history சேனலில் ஒரு விளக்கம் காண வாய்க்கப் பெற்றேன். சுட்டி கிடைக்கவில்லை. அணுக் கதிர் வீச்சினால் மக்கள் அழிந்திருக்கலாமென ஒரு ஆய்வாளர் கருதுகிறார். அங்கு கண்ணாடி கிட்டியதை அதற்கு சான்றாகத் தெரிவிக்கிறார். அணு வீச்சு போரினால் ஏற்பட்டதென்றும்; பாரதப் போரில் அணு ஒத்த ஆயுதங்கள் பற்றி விவரிக்கப் பட்டதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அறிஞர்களுக்காகக் காத்திருக்கிறேன்.
திராவிடர்கள் இந்துக்களே அல்லவாம். அவர்கள் இந்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘ஆரியர்கள்’ வருவதற்கு “கல்தோன்றி, மண்தோன்றா” காலத்திலிருந்து சாஸ்வதமாக இந்தியாவில் (அகண்ட பாரதம் எனும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பில இடங்களையும் சேர்த்து) வாழ்ந்தவர்களாம்! ஆரியர்கள் படையெடுத்து/இடம்பெயர்ந்து வந்து அவர்களை தென் பகுதிக்கு துரத்திவிட்டு வடபகுதியை அவர்கள் எடுத்துக் கொண்டார்களாம்! (நாளை பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்துக்கொண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தார்கள் என்று சொல்வார்களோ??)
இவர்கள் புழுகுவதுபோல ஆரியர்கள் உண்மையில் மத்திய ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிகா ஏன் செவ்வாய் கிரகத்திலிருந்தோ கூட வந்திருந்தால், அவர்களின் ‘பூர்வீகத்தை’ விட்டு இங்குள்ள கங்கை நதி, காசி, இராமேஸ்வரம், துவாரகை, மதுரா, மதுரை, காஞ்சிபுரம், திருமலை, பதரிநாத், இரிஷிகேசம், திருவனந்தபுரம், “அயோத்தி” போன்ற இடங்களை தெய்வீகமான புண்ணிய தலங்கள் என்று சொல்ல அவர்கள் என்ன மூளை இல்லாதவர்களா மனநலம் பாதித்தவர்களா??
இங்கு இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் இங்குள்ள பல மசூதிகளில் வழிபட்டாலும் அவர்களுக்கு மெக்கா மற்றும் மதினா தான் புண்ணிய தலங்கள். அதேபோல இங்கு என்னதான் சாந்தோம் சர்ச், மேரிமாதா கோயில் எல்லாம் இருந்தாலும், இயேசு கிறிஸ்து வாழ்ந்ததாக அவர்கள் நம்பும் ஜெருசலம், ஜோர்டான் போன்ற இடங்கள் தான் அவர்களுக்கு புண்ணியத்தலங்கள்.
அதுபோல (இராமனையும், கண்ணனையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட) ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், சாய்பாபா போன்ற புனிதர்கள் வாழ்ந்த இந்த நாடு தான் நம் நாடு! இந்துக்களின் உயிர்நாடு!!
அன்புடன்,
பாலாஜி.
திரு ஜடாயு அவர்களே,
//வேதகாலம் என்பதே ஒரு நீண்ட காலகட்டம் (குறைந்தது 4-5 நூற்றாண்டுகள்). இதில் ரிக்வேத காலம் அனைத்தையும் விடத் தொன்மையானது//
//தமிழில் கிடைக்கும் எந்த மிகப் பழைய நூலும் ரிக்வேதத்தை விடத் தொன்மையானதல்ல//
உங்களின் சமஸ்க்ரித்த மொழி பற்று இதில் இருந்து நன்றாக தெரிகின்றது.
சிந்துவெளி பகுதியில் கிடைத்த எழுத்துக்கள் தமிழ் வடிவம் கொண்ட எழுத்துக்கள் என பல ஆராய்சியாளர்களும் கூறி உள்ளனர். இதை ஏன் உங்களை போன்றவர்கள் ஏற்றக்க மறுகின்றிர்கள்?
ரிக்வேத காலம் கி.மு 3 ஆம் நூற்றண்டு. அதைவிட பழமையானது, அகத்தியம். அகத்தியர் தொல்காப்பியரின் குரு.
நான் ஒருமுறை மிஷால் டானினோவிடம், இது பற்றி கேட்டதற்கு, அவர், தமிழை பற்றி அதிகம் தெரியாது என்றார். அவருடைய ஆராய்ச்சி எல்லாம் ஒரு சமுகத்தையும், மொழியையும் பற்றியது தான்.
திரு முபாரக் அவர்களே! திருச்சிக்காரன் என்னும் அன்பர் தந்திருக்கும் விளக்கம் ஆரிய-திராவிட மாயா (பொய்) வாதத்துக்குப் போதுமானதே! இருந்தாலும் ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். ஹிந்து மதத்தைக் சீரழிக்க மத விரோதம் வெளிப்படையாகத் தெரியுமளவு செயல்படும் சிலர் இருப்பது போலவே தங்களை ஆன்மீகவாதிகளாகக் காட்டிக்கொண்டே மோசம் செய்பவர்களும் இருக்கிறார்கள். பெரியபுராணத்தில், மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் வரும் “முத்தநாதன்” இதற்கு ஒரு உதாரணம். உங்கள் மதத்திலும் வேடமணிந்த பொய்யர்கள் உண்டா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தாங்கள் குறிப்பிட்டுள்ள “அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரி” என்பவர் “”நக்கீரன்” வார இதழில் “ஹிந்து சமயம் எங்கே போகிறது?” என்று ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். அவர் ஹிந்து சமய விரோதமாக அக்கட்டுரையில் எழுதியிருந்த எல்லாவற்றுக்கும் வேத ஆதாரப் பூர்வமான மறுப்புரைகளை “சாரங்க வர்ஷம்” என்னும் நூலாகப் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், இரும்பாநாடு என்கிற கிராமத்தைக் சேர்ந்த ஸ்ரீ உ.வே.சே.பத்மநாபன் என்பவர் தந்திருக்கிறார். படியுங்கள். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. மேலும் ஒரு செய்தி. ஹிந்து சமயம் பூரணமான பகுத்தறிவுக் சுதந்திரம் உள்ள சமயம். ஆதி சங்கரர் உள்ளிட்டவர்கள் சொன்னால் கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதில்லை இங்கு பலர். அப்படியிருக்க எவர் சொல்லையும் தீர்ப்பாக எடுத்துக்கொண்டு சமய உண்மைகளை எடைபோடுவது சரியல்ல. தேவை இறைவன்மேல் நம்பிக்கை. அவன்தான் நமக்கு உண்மைகளை உணர்த்தவல்லவன். 18 அத்தியாயங்கள் நிறைந்த பகவத் கீதையின் முடிவிலும் கண்ணன் எந்த முடிவையும் அர்ஜுனன் மேல் திணிக்கவில்லை. ஆராய்ந்து எது சரியென்று படுகிறதோ அதையே செய்யச் சொன்னான். ஆக, ஹிந்து சமயத்தைக் கரைகண்டவர்கள் காண்பதற்கு அரியவர்கள். பொதுவாகவே அவரவர் சார்ந்திருக்கும் சமயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொள்வதே அரிய செயல். நான் தங்களைக் குறை கூறவில்லை. உண்மையைத் தேடுங்கள் என்பதே இதன் சாரம்.
// சிந்துவெளி பகுதியில் கிடைத்த எழுத்துக்கள் தமிழ் வடிவம் கொண்ட எழுத்துக்கள் என பல ஆராய்சியாளர்களும் கூறி உள்ளனர். //
இவை முந்து பிராமி (proto brahmi) எழுத்துருவுடன் ஒத்திருக்கலாம் என்பது மட்டுமே கூறப்பட்டுள்ளது. அது எப்போது உறுதியாக “தமிழ் எழுத்து வடிவம்” ஆனது? தமிழக அரசும், சில ஆர்வக் கோளாறு கொண்ட மொழிமேன்மைவாதிகளும் சிந்துவெளி இலச்சினைகளைப் போட்டு செம்மொழி மாநாடு நடத்தி விடுவதால் அது வரலாறு ஆகி விடுமா? சொல்லப் போனால் அது அப்பட்டமான மோசடி.
லோதல், லோடவிரா, கலிபங்கம் ஆகிய சிந்துவெளிப் பகுதிகளை உள்ளடக்கிய குஜராத்,ராஜஸ்தான்,பஞ்சாப் மாநிலங்கள் அப்படிச் செய்தாலாவது அதில் அர்த்தம் உள்ளது – அவர்கள் கூட அப்படிச் செய்யவில்லை. இந்தியப் பண்பாட்டு முழுமைக்கும் சொந்தமான சிந்துவெளியை தமிழ் வெறியர்கள் ஏதொ தங்கள் தனிச் சொத்து போல திருட முற்படுவது அராஜகம். அது வரலாற்று ஆய்வு அல்ல.
// ரிக்வேத காலம் கி.மு 3 ஆம் நூற்றண்டு. அதைவிட பழமையானது, அகத்தியம். அகத்தியர் தொல்காப்பியரின் குரு. //
முற்றிலும் தவறு. தயவு செய்து பண்டைய இந்திய வரலாறு பற்றி ஏதாவது ஒரு புத்தகத்தையாவது படித்து விட்டுப் பேச வாருங்கள். ப்ளீஸ்! வரலாறு பேசுவதற்கு சில ஆதார அடிப்படைகளாவது சரியாக இருக்கவேண்டும்.
கௌதம புத்தரின் காலமே கி.மு 4-5ம் நூற்றாண்டுகள் (அல்லது அதற்கு முந்தையது), கண்டிப்பாகப் பிந்தையது அல்ல என்பது ஏற்கப் பட்ட கருத்து.. புத்தர் காலத்தில் வேத வேள்விகள் எங்கணும் பரவி, உபநிஷதங்கள் உருவாகி, ஆரிய சிற்றரசுகள் வட இந்தியா முழுவதும் நிலைபெற்று விட்டன. இத்தகைய ஒரு சிற்றரசான சாக்கியர்களின் குலத்தில் தான் புத்த பகவான் அவதரித்தார்…. உங்கள் கணக்குப் படி ரிக்வேதம் புத்தருக்குப் *பின்னால்* வருகிறது !
தொல்காப்பியம்/அகத்தியம் ரிக்வேதத்திற்கு முந்தையது என்று எந்த ஆய்வாளரும் சொல்லவில்லை, தமிழ்மேன்மைவாதிகள், வெறியர்கள் மட்டுமே அப்படிச் சொல்கிறார்கள்.
அன்புள்ள ராம்கி,
// இந்து ஆய்வாளர்கள் தமிழ் எனும் கூறு தனியானது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தக் கூட முன்வருவதில்லை.
ஒரே சிந்தனை உடைய ஒரே கூட்டம் இரு வேறு விதமான மொழிகளைத் தோற்றுவிக்க இயலுமா? அவ்வாற்றின் அதுவே ஆய்வுக்குரிய மிகப்ப பெரும் விஷயம். //
மொழி என்பது கலாசார வளர்ச்சியின் ஒரு அங்கம், முக்கியமான அங்கம். ஆனால் அது மட்டுமே அதன் ஒட்டுமொத்த indicator அல்ல.
ஒன்றிலிருந்து தான் இன்னொன்று வரவேண்டும் என்பதும் வரலாற்று, கலாசார சட்ட விதி அல்ல. ஒத்த தொன்மங்களையே இரண்டு முற்றிலும் வேறுபட்ட கலாசாரங்கள் சுயமாகவே கண்டு அடைந்திருக்கக் கூடும். கிரேக்க, மாய, இந்திய புராணக் கதைகளில் உள்ள சில ஒப்புமைகளை இப்படியும் விளக்கலாம் என்றும் ஆய்வாளர் கருதுகிறார்கள். கோள்களையும், நட்சத்திரங்களையும் இனம் கண்டு அவற்றுக்குப் பெயரிட்டது, அடிப்படை கணிதம், ஜியோமிதி அறிவுகளைக் கண்டடைந்தது ஆகிய உதாரணங்களும் தரலாம்.
தமிழ் சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றியது என்று நான் கருதவில்லை. வடமொழி, தென்மொழி இரண்டும் சிவபிரான் உடுக்கையை ஒலித்தபோது பிறந்தன என்னும் தொன்மம் ஒரு வரலாற்று உண்மையை கவித்துமாக சொல்ல வருகிறது என்றே நான் கருதுகிறேன். மிகப் பழங்காலத்திலேயே அவை ஒன்றுடன் ஒன்று உறவாடி இணைந்து வளர்ந்திருக்க வேண்டும்.
// நான் கூற விழைந்தது: தமிழ் அதன் தொன்மைப் பற்றி, தனியிடம் பற்றி NCERT புத்தகங்கள் கூட நல்ல பதிவைத் தருவதில்லை. மற்ற மாநிலங்கள் பற்றிய அச்சமா? தெரியவில்லை. //
அச்சம் எல்லாம் காரணமல்ல. தமிழின் தொன்மை பற்றிக் கூறும் சரியான, உண்மையான தரவுகள் அவர்கள் கண்ணில் படவில்லை போலும்.. அவற்றைச் சுட்டி NCERT பாடப் புத்தகங்களில் தமிழ் பற்றிய சரியான சித்திரம் தர தமிழக் அரசும், அறிஞர்களும் முயற்சி செய்ய வேண்டும்.
மீட்டும் நன்றி ஜடாயு!
என் ஆதங்கத்திற்கு மற்றுமொரு சான்று அளித்துவிட்டிர்கள். தமிழ், வடமொழி தோற்றுவாய், உறவு குறித்த விவாதங்களில் எல்லாம் உடுக்கை ஒளியே உரத்துக் கேட்கும். நான் இறை நம்பிக்கை உள்ளவனாயினும் அதை வரலாற்றுத் தேடலில் கொணர விரும்பவில்லை. மொழி வரலாற்றுத் தேடலில் முதன்மையான அங்கம் வகிக்கிறது. அதன் துணை கொண்டே மற்றவற்றை அணுக இயல்கிறது. மொழி ஒட்டிய வினாக்களுக்கு விடை காணமல் இவ்வாய்வில் முடிவிற்கு வருவது கடினம்.
நான் முன்னர் கூறியவாறு முடிவிற்கொப்பச் சான்றுகளைத் தேடுகிறீர்கள்.
மைய அரசு அதன் சார்பு நிறுவனங்கள் தமிழை ஏன் தள்ளி வைக்கின்றன? வடமொழிக்கு ஈடான கடப்பாடும் உரிமையும் அவற்றுக்கு தமிழ்பால் உள்ளன. அவை கண்டுகொள்வதேயில்லை. தமிழக அரசைத் தாண்டி செயல்படுவதை யார் தடுத்தது? செம்மொழி ஒட்டிய அரசியலை நீங்கள் கவனித்ததில்லையா? வாக்கு வங்கி அரசியலை ஒட்டிய அச்சம் அவற்றிற்கு இல்லை என்பதை நீங்கள் மறுப்பது வியப்பளிக்கிறது.
ஒரு மாநில மொழி என்பதற்கு அதிகமான எந்த ஆர்வத்தையும் மைய அரசு மட்டுமின்றி பெரும்பான்மையான இந்து ஆர்வலர்களும் காட்டுவதில்லை.
சிந்து வரிவடிவம் தொடர்பான ஆய்வுகளில் தமிழ் இன்னும் தள்ளப்படவில்லை என்பதை நான் தொட்டிருந்தேன். குஜராத்,ராஜஸ்தான்,பஞ்சாப் அவற்றின் பட்டியலில் ரஷ்யா போன்ற நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்பதே நான் இட்ட முதல் சுட்டி. தமிழ் ஆர்வலர்கள் செய்யும் அதே தவறை இந்து ஆர்வலர்களும் செய்கிறார்கள். காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாம். இரட்டை நிலை இந்த நாட்டின் சாபக்கேடு.
சு பாலச்சந்திரன்
இந்து மதத்திற்கு யாரும் தலைவர் என்பவரோ உருவாக்கியவர் என்பதோ கிடையாது. நாங்கள் யார் சொல்வதையும் கேட்போம், பரிசீலிப்போம், சரி என்றால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றால் குப்பை தொட்டியில் தூக்கி போட்டுவிட்டு எங்கள் வேலையை பார்க்கப்போய் விடுவோம். ஒரு மடத்தலைமை பொறுப்பில் இருந்தவர் மீடியாவில் அடிபட்டபோது, இதுதான் சாக்கு என்று இந்துமதத்தை பற்றியே தேவையற்ற விமரிசன ங்களை செய்வதை பிழைப்பாக்கி வியாபாரம் செய்த பத்திரிகைகள் ஏராளம். இந்து மதம் என்பது வெள்ளையர்கள் சூட்டிய பெயர். இந்து மதத்தை சங்கராச்சாரியார் உருவாக்கவில்லை. இதில் பல வழிமுறைகளும், பல உயரிய கொள்கைகளும் உள்ளன. சங்கர மடம் என்பது இந்து மத அமைப்புக்களில் ஒன்று தான். அதனை நூறு சதவீத இந்து மதத்துடன் சமம் செய்து பார்ப்பது மிக வருத்தப்பட வேண்டியது ஆகும். தவிர்க்கப்படவேண்டியவையும் ஆகும்.ஒரே நூலுக்கு 300 க்கு மேற்பட்ட விரிவுரைகள் எழுதப்பட்டுள்ளன. அது பகவத்கீதை ஆகும். காரணம் ஒவ்வொரு விரிவுரையாளரும் விரிவுரை எழுதும் சமயம் மாறுபட்ட தங்கள் கண்ணோட்டங்களை பதிவு செய்துள்ளனர். எங்களுடைய வேதங்களுக்கு கூட எல்லை கிடையாது. வேத கால மகரிஷிகள் தங்கள் மாணவர்களிடம் போதனை செய்யும் பொழுது , எனக்கு தெரிந்த வழியை உனக்கு சொல்லுகிறேன். இது நல்ல வழி. இதை நீ பின்பற்றலாம். ஆனால் இதனை போன்று மேலும் பல வழிகள் உள்ளன. எனக்கு தெரியாத பல வழிகளை நீயே கூட உன் அனுபவத்தில் கண்டு பிடிக்கலாம். இவற்றில் உனக்கு எது மிக சுலபமான வழியாக படுகிறதோ, அதை நீ பின்பற்றிக்கொள்ளலாம் என்று தான் தெரிவித்ததாக உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே யாரும் எதனையும் சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நங்கள் அதனை ஆராய்ந்து சரியானால் தான் ஏற்றுக்கொள்வோம். எங்களுக்கு அந்த சுதந்திரம் உண்டு. எங்கோ உள்ள ஒரு சுவர்க்கம் அல்லது எங்கோ உள்ள ஒரு நரகம் என்று கருதி கடவுள் எங்கோ இருக்கிறான், இங்கு இல்லை என்று நாங்கள் கருதுவதில்லை. கடவுள் இல்லாத இடம் இல்லை. கடவுளைக்கண்டு கூட நாங்கள் பயந்தவர்கள் அல்ல.ஏனெனில் கடவுளை நாங்கள் நண்பனாய், நல்லாசிரியனாய், பார்ப்பவர்கள். எனவே பயப்படத்தேவை ஒன்றும் இல்லை.
Some More Historical Facts From The History Books Published By Tamilnadu Textbook Corporation
Some interesting historical facts from the Social Studies book for class IX (Published by the Corporation in 2003 and, I think, being used in state board schools still):
a) Buddhism did not stress chastity. (Page 28 in the English version)
(The same in the Tamil version is still more damaging. It reads: Buddhism did not insist for chastity for the monks – Page 39 in the Tamil version)
b) The university at Vikramashila was very famous during the period of the Guptas. (Page 68) But the king called Dharmapala who founded the university was born only 600 years later to that period. (Page 85)
c) Charaka and Sushruta, who lived during the period of Kanishka (AD 78) (Page 52) had also lived in the period of the Guptas (4 th century) (Page 66). It means, they might have lived at least for 378 years.
d) Shah Jahan built Moti Masjid and Pearl Mosque at Agra. (Page 132) (Moti means pearl – Moti Masjid and Pearl Mosque are one and the same and not two different structures.)
e) The events of September 9 and 11 of 2001 shook the world. (Page 205) (What event of September 9 shook the world?)
These are only a few samples from the hundred and oddconceptual mistakes, leave alone the thousand and odd grammar and spelling mistakes, found in the book.
This book is being used by at least 8 lakh students, being taught by at least 10, 000 teachers.
As a responsible citizen I felt it was my duty to bring it forth the persons concerned and hence I wrote a letter to the Managing Director of the Corporation in the very year of its publication. I received a mechanical reply from his office after about 6 months, saying that my letter had been forwarded to the Education Ministry. And the matter was over. I bought a copy in the year 2006. No changes had been made. I don’t really dare to buy a copy now. Because I am sure no one would have taken any useful steps to correct the mistakes.
மைய அரசு என்ன, மாநில அரசே தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லையே!
வளைகுடா நாடு ஒன்றில் வேலை பார்த்த ஒரு நண்பர் சொன்னார்.
அங்கு செல் போன்கள் ‘Arabic compatible’ வசதியுடன் இர்க்குமாம்.( இதை எனக்கு technical ஆக சொல்லத் தெரிவில்லை)
நம் நாட்டில்,மாநிலத்தில் செல் போன்களுக்கு இவ்வளவு பெரிய விற்பனைச் சந்தை இருந்தும், பன்னாட்டுக் கம்பனிகள் இங்கு கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தாலும் நம் தமிழினத் தலைவர்கள் அந்தக் கம்பனிகளை இந்த சேவையை செய்யச் சொல்லி ஏன் வற்புறுத்தவில்லை? இவர்களுக்கு பெட்டி வந்தால் போதும்.
ஆகவே மாநிலத்தில் உள்ள அரசும், தலைவர்களும் தமிழ் தமிழ் என்று சொல்லி சும்மா கூப்பாடு போடுவதோடு சரி.
Last year IX History book in matric school where my son studies had the same Aryan dravidian topic and it also said India had four major races, Aryan, Dravidian, Mangolian and Negro. There were Q & Ans for this as well. But the book did not give any reference about mangolian and Negro. Aryan, Dravidian as usual same old story.
I wrote to school questioning these?
I hear a lot of people keep talking about this controversial history but why no one/group have taken it legally?
There is a lot of torture in the name of education happening right from LKG.
I request the readers here to provide their valuable comments for
https://www.virutcham.com/2010/10/நர்சரி-குழந்தைகளின்-மேல்/
https://www.virutcham.com/2010/09/matric-பள்ளிகளில்-பிள்ளைகளை-சே/
https://www.virutcham.com/2010/06/ac-இருக்கிற-பள்ளியில-போய்-ச/
https://wp.me/p12Xc3-Y7
I am in the process of fighting with the school and your valuable comments/sugestion would help me
திரு ஜடாயு அவர்களே,
நீங்கள் சொல்வதை பார்த்தல் தொல்காப்பியருக்கு முன் தமிழில் எதுவும் இருக்கவில்லை போலும். மொழி என்று ஒன்று இல்லாமல், அதற்க்கு ஏன் இலக்கணம் வகுக்க வேண்டும்? தமிழ் மொழியின் காலம் கணக்கிட முடியாதது.
வேத காலம் என்று ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதோ காலம் இருந்திருந்தால், அப்பொழுதும் தமிழ் மொழி வழக்கத்தில் இருந்திருக்கும்.
ரிக் வேதம் கி.மு 3 -ஆம் நூற்றாண்டுகளில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பல ஆய்வாளர்களின் கருது. அதற்க்கு முன் வரை வாய்மொழியாக சொல்லப்பட்டு இருக்கலாம்.
திரு ஜடாயு அவர்களே,
//இந்தியப் பண்பாட்டு முழுமைக்கும் சொந்தமான சிந்துவெளியை தமிழ் வெறியர்கள் ஏதொ தங்கள் தனிச் சொத்து போல திருட முற்படுவது அராஜகம். அது வரலாற்று ஆய்வு அல்ல//
இதை கூறியவர்கள் தமிழர்கள் அல்ல, பல மேலை நாட்டு ஆய்வாளர்கள். சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களை ஒட்டியே உள்ளது என்பதும் அவர்களின் கருது.
தமிழ் பண்பாடு என்பது இந்திய பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கம். அதை பலரும் பிரித்து பார்க்கின்றனர்.
வேதங்களை எழுத கிழவி என்பார்கள். எனவே வேதங்கள் ஒருபோதும் எழுதப்படவில்லை. அவைகள் கி.மு 3 -ஆம் நூற்றாண்டுகளில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய பண்பாட்டில் சமஸ்க்ரிதமும் தமிழும் சம அளவில் பங்கு கொண்டுள்ளன. இதை உங்கள் போன்ற பலரும் ஏற்பது இல்லை.
//இதை கூறியவர்கள் தமிழர்கள் அல்ல, பல மேலை நாட்டு ஆய்வாளர்கள்//
வாசகன் சார், ஆஸ்கோ பார்போலா, மைகேல் விட்ஸல் எல்லாம் தமிழர்கள் அல்ல, மேலை நாட்டு அறிஞர்கள் என்பது எங்களுக்கும் தெரியும்! ஆனால் அதேபோல, மிசேல் தானினோ, பிரான்கோயிஸ் காடியர், கொஎந்ராட் எல்ஸ்ட் மற்றும் பலரும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் பிறந்து இந்திய நாட்டைப்பற்றி படித்து வந்துதான் இங்கு ஆய்வு செய்கிறார்கள். ஏதோ உங்களுக்கு சாதகமாக கூறுபவர்கள் மட்டும் மேலை நாட்டு அறிஞர்கள் என்றும், மற்றவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரர்களோ சங்கர மடத்து சீடர்கள் போலவும் அல்லவா நீங்கள் எழுதியுள்ளீர்கள்!!
//அவைகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்//
ஆரிய-திராவிட இன வாதத்தை தோற்றுவித்த ஐரோப்பிய காலனீய ஆராய்ச்சியாளரான மாக்ஸ் முல்லரே ரிக் வேதம் எழுதப்பட்டது கி.மு. பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்றார் (அதுவே இப்பொழுது ஏற்கக்கூடியதாக இல்லை!). நீங்கள் மற்றொரு புது கதையை கூறுகிறீர்கள்!!
//இந்திய பண்பாட்டில் சம்ஸ்க்ருதமும் தமிழும் சமமாக பங்கு கொண்டுள்ளன//
இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். இதை ஏற்க இவ்வளவு சிரமப்பட வேண்டுமா??
Dear Veda T. Sridharan, your initiative of writing to the Textbook society is commendable in itself. I can understand your frustration when no action is being taken on it.
Dear Virutcham, kudos to your interactions with the school ! When things are not going right with the child, it is important for the parents to take active participation in the school affairs. Any improvement in the system that comes out of this will not just help your child but all the students of the class/school.. School teachers and staff are always under pressure due to many things; and even when the teachers are very good and well intentioned there may be other constraints and limitations posed by the school and the system – this also has to be borne in mind while taking up such issues.
நன்றி திரு ஜடாயு
இது பள்ளிகளின் பிரச்னை மட்டும் அல்ல. அரசு revised syllabus அறிவித்த பின் அதை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்று பார்ப்பதே இல்லை என்றே எனது புரிதல். எனது இந்தhttps://www.virutcham.com/2010/09/matric-பள்ளிகளில்-பிள்ளைகளை-சே/ சுட்டியப் படித்தால் இது புரிய வரும். மேலும் பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்றும் அரசு பார்ப்பதில்லை. Govt certified பள்ளி என்பதன் அர்த்தம் என்ன என்று எனக்கு புரியவில்லை.
ஒரே சிந்தனைகளை உடைய மக்கள் சமுதாயம் ஏன் பல்வேறு மொழிகளை தோற்றுவிக்க இயலாது?
தமிழிலேயே இருபத்து மூன்று வகையான வட்டார வழக்குகள் உள்ளன.
தங்கள் மனதில் தோன்றும் வார்த்தையை பேசுகிறார்கள. அதுதான் மொழியாக உருவாகிறது.
சமயம் மற்றும் மொழி இவற்றைக்கொண்டு ஒரு சமுதாயத்தைக் கண்டறிவதில், இந்துசமயம், தமிழ் மொழி இவையிரண்டன் கலவை, இயற்கையான ஒரே இனத்தைக் குறிப்பது என்பதற்கு ஆதாரம், “என்று இலக்கணம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், எழுதப்பட்டிருந்தாலும்”, தமிழ் இலக்கணத்தில், நிலங்களைப் பிரித்து வகை கூறும்போது, ஒவ்வொரு வகை நிலத்திற்கும், இந்துசமய தெய்வங்களையே, உரிய தெய்வங்களாகக் கூறியிருப்பதுதான்.
“திராவிட-ஆரிய” கூற்றுக்களில்,திராவிடமொழிகளாகக்
கூறப்பட்டுள்ள தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,துளுவம் என்பனவற்றில், தமிழைத்தவிர, ஏனைய மொழிகளில், சமஸ்க்ருததைப்போலவே, தமிழில் வல்லின எழுத்துக்களாகக் கூறப்படும் “ற” வைத்தவிர உள்ள மற்ற எழுத்துக்களுக்கு, நான்கு விதமான வேறுபாடுடைய சப்தங்கள், ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,துளுவம் ஆகிய மொழிகள் சமஸ்க்ருதத்தை ஒட்டி வந்துள்ளன எனக் கண்டு கொள்ளலாம். மேலும், தமிழிலேயே கூட, “புதன்” “புத்தகம்” என்ற சொற்களில், :”பு” வின் உச்சரிப்பு ஒலி மாறுகின்றதைக்க் காணும்போது, அந்நாளிலேயே, மொழிக்காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், தமிழ் மொழியை இந்துசமயத்தைத்திலிருந்து பிரிக்கச் சதி செய்து, தமிழ் மொழி ஏனைய இந்திய மொழிகளைப்போலவே, சமஸ்க்ருதத்தை அடிப்படையாகக் கொண்டு, “நன்கு செய்யப்பட்ட மொழி”யாகச் செய்யப்படுவதைத் தடுத்துவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இச்சதியை உணர்ந்துதான், சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் முதற்கொண்டு, எல்லா அரசர்களும், கோவில்களிலும், கல்வெட்டுக்களிலும், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் போலல்லாமல், சமஸ்க்ருதம் அடிப்படையான ஒலி மற்றும் வரி வடிவங்களில், குறிப்பேடுகள் ஏற்படுத்தினார்கள். திருக்குறளில் இந்து தெய்வங்களை நேரே குறிப்பிடாமல், “இந்திரனே சாலும் கரி” “அடியளந்தான்” என்பன போன்ற மறைமுகக் கையாளும் விதத்தைப் பார்த்தால், திருவள்ளுவரும் “சதிக்கு” ஆளாகிவிட்டாரோ என்றும், அதனால் தான், இந்துமத வெறுப்பைக்காட்டும், கருணாநிதிகளும், திருவள்ளுவரைப் பீடித்துதுக்கொல்வதர்க்குக் காரணங்களோ என்னவோ? என்று தோன்றுவதைத்தவிர, எவ்வளவு சொல்லியும், இந்துக்கடவுள் வழிபாட்டை விட்டகலாத மக்கள் பேசும், “சமஸ்க்ருதம் போன்றே” “நன்கு செய்யப்படுத்தப்படாத” தமிழ் மொழியை, ராமசாமி நாயக்கர், ‘காட்டு மிராண்டி பாஷை’ என்றார் போலும். இந்தியா முழுவதுமாக வானவியல் அடிப்படையாக, எல்லா பண்டிகைகளும், இந்து சமயத்தை அடிப்படையாகக்கொண்டே, கொண்டாடப்படுவதைப்பார்த்தல், இந்து சமுதாயம், இனம் ஒன்றுதான் எனவும், ஆரிய-திராவிட மாயைகளுக்கோ, சமஸ்க்ருதம்-தமிழ் மொழி மயக்கத்திற்கோ, காரனம்களே இல்லை என்பது திண்ணம். நிறைவாக, திரு பாலாஜி அவர்கள் கூறியதுபோல், இந்தியாவில், மெக்கா, ஜெருசலேம் போன்ற வெளிநாட்டுப் புனிதத் தளங்களை தரிசிக்கும் மக்கள் இருப்பதைப்பார்த்தால், சமயத்தாலும், மொழியாலும் இந்திய
naattirkkulleye irukkum இந்துth thalangalaithye dhariசிக்கும் மக்கள், ஒரே inanththaich chaarntha indukkalthaam.
ஹிந்து ஆர்வலர்கள் பலர் தமிழ் ஆர்வலர்களாகவும் உள்ளார்கள்.
ஹிந்து சமயம் மீது பற்று வைப்பதனால் அவர்கள் தமிழில் ஆர்வம் இல்லாதவர்கள் என்று ஆகாது
This writer is definitely a sadist…
His aim is not to point out the mistakes about Harappa and Mohanjadaro..
He could not tolerate the word ‘Dravidian’.. He could not tolerate the word ‘Dravidian’ got presedence over the word ‘Veda Age’.. That’s all… Don’t think this writer really worries for the history….
ஆரியான திராவிடனா என்பதைவிட வரலாற்றை மாணவர்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே முக்கியம். இது தவறு எனில் பொதுநல வழக்கு மூலம் சிலபசை திருத்த வேண்டும்.
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறியவர் யார்?