தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்…(மூலம்: மிஷேல் டேனினோ)

View More தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்… துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது…

View More தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பயனுக்காக பயன்பட்ட கட்டடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும் வாயில் நிலைகளும், சிற்பங்களும் அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும் மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன… மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது…

View More அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

யார் நப்பின்னை ?

தமிழ் பக்தி உலகிலும் , இலக்கிய உலகிலும் , தனியிடத்தைப் பெற்ற மர்மப் பெண் நப்பின்னை … கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.. மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.

View More யார் நப்பின்னை ?

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை… இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது…

View More கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்