சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்

sridhara_ayyaval_1காலம் 16ம் நூற்றாண்டு.

மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் இலிங்கார்யர். இவரது ஒரே மைந்தன் ஸ்ரீதர வெங்கடேசர். இவர் திருவிடை மருதூர் திருத்தலத்திற்கு அருகில் உள்ள திருவிசநல்லூரில் தங்கிவிட்டார். ஸ்ரீதர ஐயாவாள் நாள்தோறும் திருவிடைமருதூர் மகாலிங்க பெருமான் திருகோயிலில் இரவு அர்த்தயாம பூசையில் வழிபட்டு வருவார். ஒரு நாள் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட இக்கரையில் மனம் தவிக்க நின்ற ஐயாவாளுக்கு சிவபெருமானே சிவாச்சாரியார் உருவில்திருநீற்றுப்பிரசாதம் அளித்ததாக ஐதீகம்.

ஒரு முறை ஒரு விசேஷ நாளன்று அந்தணர்களுக்கு அன்னதானம் செய்ய வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டு காவிரியில் நீராட சென்று கொண்டிருந்தார் ஸ்ரீதர ஐயாவாள். வழியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பசியினால் களைத்து விழுந்திருப்பதைக் கண்டார். அந்த தலித்தை தனது இல்லத்துக்கு அழைத்து அந்தணர்களுக்கென்று வைத்திருந்த அன்னத்தை அந்த தலித்துக்கு தம் துணைவியாரைக் கொண்டு பரிமாறச் செய்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் இது சாஸ்திர விரோதமென்றும், இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர ஐயாவாள் காசி சென்று கங்கையில் நீராட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்துவிடுவதாகவும், அவரை குடும்பத்துடன் நீக்கி வைப்பதாகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவர்கள் இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போதே, ஐயாவாள் வீட்டு கிணற்றில் நீர் பொங்கிப் பெருகி ஊரெங்கும் ஓட ஆரம்பித்தது. கங்கை கிணற்றிலிருந்து பெருகி வர ஆரம்பித்து சாதி வெறியை அடித்துச் செல்லலானாள். அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஐயாவாளிடம் மன்னிப்பு கேட்க ஐயாவாள் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார்:

பகீரத மனோபீஷ்ட ஸித்தயே புவனாஸ்ரிதே
ப்ராம்மணானாம் மன: பூர்த்யை மம கூபே ஸ்திரா பவ

கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம்.

இந்த அற்புத நிகழ்ச்சி கார்த்திகை மாதம் அமாவாசையில் நடைபெற்றது. அன்று முதல் ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் கார்த்திகை அமாவாசையில் கங்கை பொங்கும் பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய நாளில் திருவாவடுதுறை ஆதீனத்திற்க்குச் சொந்தமான திருவிடைமருதூர் திருக்கோவில் அருள்மிகு மகாலிங்கப் பெருமானுக்கு ஐயாவாள் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்பெறுகிறது. உச்சிகாலப் பூசையின் பிரசாதம் (நைவேத்யம், திருநீறு) திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் ஐயாவாள் மடத்துக்கு அனுப்பப் பெறுகிறது.

சாதிய அடக்கு முறைகளை மீறி ஆன்மநேய ஒருமைப்பாட்டு uணர்வுடன் தாழ்த்தப்பட்ட சமுதாய நலனுக்குப் பாடுபடுவதை சிறப்பித்துப் போற்றும் இந்த திருவிழா உண்மையான சமூக நீதியையும் சமுதாய சமரசத்தையும் தன் மைய கருத்தாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு இந்த சமூகநீதி ஆன்மீக திருவிழா –கங்காவதரண மகோத்ஸவம்- திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் கார்த்திகை 19 (அமாவாசை) ஞாயிற்றுக்கிழமை (05-12-2010) நடைபெறுகிறது.

விபரம் அறிய விழைவோர் திரு.எஸ்.இராமநாதன், திருவிசநல்லூர் (தொலைபேசி: 044-24714102, கைபேசி 9444056727) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மடத்தின் இணையதளம் இங்கே.

viswanatha_mandapamபகீரதப் பிரயத்தனம் என்று ஒரு சொல்லடை பாரத தேசம் முழுக்க உண்டு. பல தலைமுறைகள் தவம் செய்து பின்னர் பகீரதன் கன கஷ்டப்பட்டு கங்கையை கொண்டு வந்தான். ஆனால் ஸ்ரீ தர அய்யாவாளோ தலித் சேவை மூலம் தனது வீட்டு கிணற்றிலேயே கங்கையை பிரவாகமெடுத்து வர செய்தார். இன்றைக்கும் பொது நீர்நிலைகளுக்கும் பொதுவீதிகளுக்கும் தலித் சமுதாயஙக்ளுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில் ஒவ்வொரு ஹிந்துவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யும் சேவை மூலம் ஹிந்துத்துவ ஞான கங்கை ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இதயத்திலும் சாதியமெனும் அழுக்குகளை நீக்கி சமுதாய ஏற்றம் பெற உழைப்போம். அதற்கு இந்த கங்காவதரண மகோத்ஸவம் நமக்கு உத்வேகமளிக்கட்டும்.

தகவல் உதவி:’மெய்கண்டார்’ (திருவாவடுதுறை ஆதீனத் திங்களிதழ்) நவம்பர் 2010

22 Replies to “சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்”

 1. Very good article. I would love to read articles like these. These incidents are long forgotten and only the negative aspects of our religion are highlighted.
  Thanks for reminding us of this tradition.

 2. இன்றைக்கும் பொது நீர்நிலைகளுக்கும் பொதுவீதிகளுக்கும் தலித் சமுதாயங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில் ஒவ்வொரு ஹிந்துவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யும் சேவை மூலம் ஹிந்துத்துவ ஞான கங்கை ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இதயத்திலும் சாதியமெனும் அழுக்குகளை நீக்கி சமுதாய ஏற்றம் பெற உழைப்போம்.
  அருமை! உண்மை! ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!

 3. சு பாலச்சந்திரன்

  ஸ்ரீதர அய்யாவாள் வரலாறு அனைவரும் போற்றத்தக்கது. இது போன்ற உண்மை வரலாறுகள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும். அவரை போன்ற சமூக சீர்திருத்தவாதிகளை மெக்காலே கல்வி திட்டம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. உண்மை வரலாறுகளை நம் இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வழி செய்ய வேண்டும்.

 4. தக்க தருணத்தில் வெளிவந்த நல்ல கட்டுரை. நாளை அந்தக் கிணற்றில் நீரிறைத்து எண்ணற்றோர் மங்கள ஸ்நானம் செய்யும் திருநாள்.

  ஸ்ரீதர ஐயாவாள் என்னே அருமையான செயல் செய்த உத்தமமான மகான்.

  ///வழியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பசியினால் களைத்து விழுந்திருப்பதைக் கண்டார். அந்த தலித்தை தனது இல்லத்துக்கு அழைத்து அந்தணர்களுக்கென்று வைத்திருந்த அன்னத்தை அந்த தலித்துக்கு தம் துணைவியாரைக் கொண்டு பரிமாறச் செய்தார்.///

  அவருக்குத் தெரிந்திருந்ததெல்லாம் சக மனிதனின் பசி மட்டுமே, வேறெதுவுமில்லை.

  ‘நான் வணங்கும் கடவுளை நீயும் வணங்குவதால் நீயும் தீண்டத்தக்கவனே’ என்ற முறையில் அவர் நடக்கவில்லை.

  ‘நான் கூறும் தத்துவத்தை நீயும் ஏற்பதால் நீயும் தீண்டத்தக்கவன்’ என்று அவர் நடக்கவில்லை.

  சக மனிதனின் பசியைத்தவிர அவருக்கு வேறெதுவும் பொருட்டல்ல என்பது மிகவும் கவனிக்கவும் போற்றத் தக்கதும் ஆகும். மனிதம் என்பது என்ன என்பதற்கு இந்நிகழ்வு ஒரு வழிகாட்டி.

  வேறு சில இடங்களில் “பிறப்பின் அடிப்படையில் தனிப்பந்தி” என்ற தீண்டாமை இன்றும் தீண்டாமைகொடுமைக்கு எதிரான சட்டங்கள் இருக்கும் காலத்திலும் தொடருகின்றது.

  ஆனால், சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதே தமிழ்நாட்டில் இப்படி அந்தணர் குலத்தில் தோன்றிய ஒரு மகான் செய்தார், அதிலும் அவரைச் சாதிப்பிரஷ்டம் செய்யும் அளவுக்கு எதிர்ப்பு வந்தபோதும் தன் நிலை தவறவில்லை, அதனால் இறையருளே தோன்றி அவரைச் சாதிப்பிரஷ்டம் செய்த மற்ற அந்தணர்களுக்குப் பாடம் புகட்டியது என்பதை மக்களிடம் சரிவர எடுத்துச் செல்லவேண்டும். அதுதான் அந்த மகானுக்கு நாம் செய்யும் மரியாதையும் கடமையும் ஆகும்.

  சாதி வேறுபாடின்றி கங்கை நீராடலும், அன்னப் பகிர்வும் நடைபெறுவதை நம் அரசியலார் உணரும் வண்ணம் பிரபலப் படுத்தவேண்டும். அந்தத் திசையில் இக்கட்டுரை சிறந்த சேவை செய்துள்ளது.

 5. A great essay – the occasion was Srartham, i.e., honoring one’s elders and the custom required that no one be fed before the function was over. It was not about who was being fed. That Sri Sreedhara Iyaaval could not bear the sufferings of the poor individual and decided to feed him even if it meant violating his own personal Dharma is a great testimony to his concern for the well-being for everyone in the world.

  However, we should not repeat the mistakes of Sri Gopalakrishna Bharati, who for the sake of poetic taste, created an imaginary character and positioned Sri Nandanar as a worker of this fictional Vedika – which fiction continues to be used as a political tool by some foreign missionaries to drive a wedge in our otherwise harmonious society till date. In a similar vein, we should not use the word “dalit” when referring to individuals who are all Parabramam’s children. This word, coined and used by evangelical missionaries, with a view to driving a wedge in the Indian community is part of the language that is used by the foreign forces to continue to divide our societies. These evangelical fanatics, sanctioned by their “books”, come from lands who systematically enslaved people of color and exploited them till very recent days for economic and other gains.

  Sree Sreedhara Iyaaval viewed all beings (not just human beings alone) essentially the manifestation of the same underlying Paramatma – as ordained by Vedas and followed by all our saints. So, our Sanatana Dharma always has emphasized that every individual is the same and the same Paramatma resides and manifests in every being. The misinterpretation of our “division of labor” to divide our society was done by foreign fanatics to create disharmony amongst us. A lot has been written about this – no need for us to go into the details.

 6. அன்புள்ள அடியார்க்கும் அடியேன்,

  // However, we should not repeat the mistakes of Sri Gopalakrishna Bharati, who for the sake of poetic taste, created an imaginary character and positioned Sri Nandanar as a worker of this fictional Vedika – which fiction continues to be used as a political tool by some foreign missionaries //

  கோபாலகிருஷ்ண பாரதியார் செய்தது “தவறு” என்று இன்றைய அரசியல் சரிநிலைகளை வைத்து மதிப்பிடுவது பிழைபட்ட அணுகுமுறை. கோபாலகிருஷ்ண பாரதிகள் அடிப்படையில் ஒரு கலைஞர். அவரது வேதியர் பாத்திரம் கற்பனையில் உதித்தது தான் – ஆனால் அதில் யதார்த்தம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஆணவம் பிடித்து தங்கள் பண்ணையாட்களைக் கொடுமைப் படுத்திய மிட்டா மிராசுகள் அவர் காலத்தில் அதே தஞ்சை வட்டாரத்தில் இருந்தார்கள் தான்.. கலைரீதியாக, அவர் இரு துருவங்களைக் காட்ட வேண்டும் – வேதச் செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு எல்லாம் சேர்ந்த ’ஆண்டை’. இவை எதுவுமே இல்லாமல் பக்தி மட்டுமே கொண்ட நந்தனார். அந்த வேதியர் பாத்திரம் அதற்கு அதி கச்சிதமாகப் பொருந்துவது.

  ஆருக்குப் பொன்னம்பலம் கிருபை இருக்குமோ – அவனே பெரியவனாம்..

  வேதபுராணங்கள் ஓதினதால் என்ன
  வேலைகொள் பணைமாதரால் என்ன காரியம்

  என்றே ஒரு கீர்த்தனை நந்தன் சரித்திரத்தில் உண்டு.

  பின்னால் வந்த காலகட்டங்களில், ஒரு சாரார், இந்த சித்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அது எப்படி அந்தக் கலைஞனுடைய தவறாகும்? மகாபாரத ஏகலைவன் கதையைக் கூட இதே ரீதியில் சித்தரிக்கிறார்கள் – அதற்காக, வியாசர் ஏகலைவன் என்ற பாத்திரத்தைப் படைத்ததே தவறு என்று நாம் கூறுவோமா? அது போலத் தான் இதுவும்.

  மிட்டா மிராசுகள் பண்ணையாட்களை மட்டுமல்ல, ஏழைப் பிராமணர்களைக் கூட அவமதிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். .தி.ஜானகிராமனின் பல கதைகளில் பார்க்கலாம். அதே போல எல்லா சமூகத்தினரையும் அரவணைத்து அன்பும் கருணையும் கொண்ட மிராசுகளும் இருந்திருக்கிறார்கள் – க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலில் வரும் மிராசுதார் ஒரு உதாரனம். தலித் இலக்கியவாதியான தருமன் எழுதியுள்ள் ‘கூகை’ என்ற நாவலில் கூட இப்படி ஒரு நன்மனம் கொண்ட மிராசுதாரைக் காட்டுகிறார்.

  எந்தக் காலகட்டத்திலும் ஒரு உண்மையான கலைஞன் மனச்சாட்சியின் குரலாகவே இருப்பான். அப்படி உள்ள கலைப்படைப்புகள் தான் உன்னதமானவையும் கூட.

 7. // In a similar vein, we should not use the word “dalit” when referring to individuals who are all Parabramam’s children. This word, coined and used by evangelical missionaries, with a view to driving a wedge in the Indian community is part of the language that is used by the foreign forces to continue to divide our societies. //

  தவறு. தலித் என்ற சொல்லை உருவாக்கியவர்கள் வெளிநாட்டு மிஷனரிகள் அல்ல. டாக்டர் அம்பேத்கரை அடியொற்றி எழுந்த மராட்டிய தலித் போராளிகள் இயக்கமே அந்தச் சொல்லை உருவாக்கியது. ஒடுக்கப் பட்டவன் என்ற அந்தச் சொல் துகாராம் சுவாமிகளின் அபங்கம் என்ற பக்திப் பாடலில் மராட்டி மொழியில் பயின்று வந்தது, அதிலிருந்து தான் சாகு மகராஜ், தலித் போராளிகள் அச்சொல்லை எடுத்துக் கொண்டார்கள். காந்திஜி தாழ்த்தப் பட்டவர்களைக் குறிக்க உருவாக்கிய ஹரிஜன் என்ற சொல்லும் இதே போன்று ஒரு பக்தி இயக்கப் பாடலில் இருந்து உருவானது தான்.

  ஹரிஜன் என்ற சொல் harmonizing தன்மை கொண்ட நல்ல சொல். ஆயினும் தற்போதைய சமூக நீதி இயக்கங்கள் தலித் என்ற சொல்லைத் தான் முன்வைக்கிறார்கள்.

  மகாராஷ்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்களும் தற்போது தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு அந்தச் சொல்லின் பயன்பாட்டில் ஒரு மனத்தடை இருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த மனத்தடை அகலவேண்டும்.

 8. சில எண்ணங்கள்…

  ஒருவன் பண்டிதனுக்கு மகனாய்ப் பிறந்தானாகில், அது ஆண்டவன் போட்ட பிச்சையே என்று நினைக்காமல், அது தன்னுடைய சொந்த முன்ஜென்ம முயற்சியால் வந்த ஒன்று என்று செருக்குறுவதால் வரும் விபரீத புத்தியே சாதீய வெறி.

  தர்மசாஸ்திரத்தில் சாமானிய தர்மம், விசேஷ தர்மம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தம்மை மேதாவிகளாக நினைத்துக் கொண்டு மனம் போனபடி அர்த்தம் பண்ணிக் கொள்வதால் சாதிய சர்ச்சை ஏற்படுகிறது. அத்தகைய அர்த்தம் பாண்டித்யத்தின் விளைவல்ல, மாறாக ஆணவம் மூட நம்பிக்கை இரண்டின் சேர்க்கையால் ஏற்படுவது அது. செருக்குறுபவர் கண்ணுக்குத் தம்முடைய சொந்த வாழ்க்கையில் தாமே செய்யும் அனாச்சாரங்களும் துர்நடத்தைகளும் தெரியாது.

  தைத்திரீய உபநிஷத் “அன்னத்தைத் தேடி வருபவனுக்குக் கட்டாயம் அன்னமிடு” என்கிறது. ஆசார விஷயம் பரிவுக்குத் தடையாக இருப்பது போன்ற சங்கடம் ஏற்பட்டால் சாஸ்திர ரீதியிலேயே பரிகாரமும் கண்டிப்பாக இருக்கும். துன்பப்படுபவனுக்கு பரிவு காட்டக்கூடாது என்று எந்த ஸ்மிருதியிலும் இல்லை, பரிவு தான் சாஸ்திரத்தின் நோக்கமே.

  ஆணவம் உள்ளவன் புத்திக்கு இப்படியெல்லாம் தன்னுடைய நம்பிக்கைகளை ஆலோசித்துப் பார்க்கத் தெரியாது. சரி என்று தான் தவறாக நினைக்கும் ஒன்றை மற்றவர்கள் பெரியோர்களின் வாக்கை ஆதாரமாகக் கொண்டு தவறு என்று சுட்டிக் காட்டினால் கூட அதை ஏற்கும் மனநிலையில் அவன் இல்லை. மாறாக, “அகப்பையில் வால் சிக்கிய” பழமொழிக் குரங்கு போல போகிற இடமெல்லாம் சுட்டிக் காட்டப்பட்ட அந்த தவறான புரிதலின் அடிப்படையிலேயே மேன்மேலும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்துக்கொண்டே இருப்பான்.

  “வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே பீட பராய் ஜான ரே” — “உண்மையான இறையடியவன் எவன் எனில், துன்பப்படுபவனைப் பார்த்த மாத்திரத்தில் எவன் அத்துன்பத்தைத் தன் துன்பமாகப் பார்க்கிறானோ அவனே” என்று குஜராத்தி மொழிப் பாடலில் உள்ளதையும் அதுபடி வாழ்ந்து காட்டிய பெரியோர்களைப் பற்றியும் தினமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 9. ஸ்ரீதர ஐயாவாளின் உத்சவத்துக்கு திருவிசைநல்லூருக்குச் செல்லும் அன்பர்கள் ஒரு அற்புத விருந்தோம்பலை கவனிக்கலாம். அந்தத் தெருவுக்குள் நுழைந்து ஐயாவாள் மடம் எது என்று கேட்க வாழை மரம் கட்டிய ஒரு வீட்டிலிருந்து, வந்து முதலில் உணவு அருந்திச் செல்லுங்கள் என்பர். யார் வீட்டுத் திண்ணையிலும் தங்கிக்கொண்டு பொங்கி வரும் கிணற்றுக் கங்கையில் நீராடி, பஜனை கேட்டு ஆனந்தமாக வரலாம். ஒருமுறை வந்து பாருங்கள். அது போகட்டும். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரத்தில் புதிதாக வேதியர் பாத்திரத்தைச் சேர்த்தார். அது சிலருக்கு சாதகமாக போய்விட்டது. வேதியர்கள் நில உடமையாளர்களாக முதலில் இல்லை. சர்வ மான்யம், தானம் இவை கொடுத்து அவர்களை மக்கள் நலனுக்காக வேதம் படிக்க, யாகம் செய்ய சில மன்னர்கள் குறிப்பாக நாயக்க, மராட்டிய மன்னர்கள் கொடுத்தார்கள். ஆங்கிலேயன் காலத்தில் நில அளவை மூலம் சிலர் நிலம் பெற்று நிலச் சுவான்தார்கள் ஆயினர். அவர்கள் செய்த தவறை அதற்கு முன் குலத் தொழிலாம் வேதம் ஓதுதல், ஊருக்காக யாகம் வளர்த்தல் இவைகளைச் செய்து வந்த உண்மை வேதியர்கள் மீது போடக் கூடாது. பிராமணன் என்பவன், முன்பு அவனுக்கு விதிக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்தபோது எந்த எதிர்ப்பும் இல்லை. பின்னர் அவன் தன் கடமை நீங்கி மற்றவர் போல் சுகங்களுக்கு ஆசைப்பட்டு, குல தர்மத்தை நீங்கிய போதே பிடித்தது சனியன்.

 10. உண்மையான மறுமலர்ச்சியும் ஹிந்துச் சமூக மேம்பாடும் உருவாக இத்திருநாள் வழிவகை செய்ய வேண்டும் என்று திருவிடைமருதீசனையும் ஸ்ரீ ஸ்வாமிகளின் திருவடிகளையும் பணிந்து வேண்டுகிறேன்.

  தை அமாவாசையில் அபிராமியன்னையின் அருளால் பிறந்த ஒளிநிலவு போல கார்த்திகை அமாவாசையில் கங்கையன்னையின் ஒளி வெள்ளம் பிறந்ததான இச்சம்பவம் மிக மகிழ்ச்சி தருகிறது. புத்துணர்வையும் கொடுக்கிறது.
  இவ்விழாவை முதன்மை செய்து கட்டுரை பதிப்பித்த தமிழ்ஹிந்து தளத்திற்கு நன்றிகள்…

 11. Sriman Gandarvan,

  //ஒருவன் பண்டிதனுக்கு மகனாய்ப் பிறந்தானாகில், அது ஆண்டவன் போட்ட பிச்சையே என்று நினைக்காமல், அது தன்னுடைய சொந்த முன்ஜென்ம முயற்சியால் வந்த ஒன்று என்று செருக்குறுவதால் வரும் விபரீத புத்தியே சாதீய வெறி.//

  The above statement implies that either god practices favoritism or his acts are random and not determined by karma. If somebody is born in vaidika’s family then in previous birth the Jiva either have wished to study vedas which it didn’t have an opportunity or continue to do it in next birth too. The current birth is only an opportunity for that Jiva to fulfill its previous desire. It’s upto the Jiva to take or leave it.

 12. ‘தலித்’களுக்குக் கொடுமை புரிந்ததாகக் கூறி, இந்து சமயத்தவர்களை, குற்றம்புரிந்த மனப்பான்மைக்கு ஆளாக்கிய, ஆளாக்கும் ஏச்சுக்கள் புதிதன்று. தலித்துக்கள், இந்து சமயத்திற்கு உள்ளிருப்பவர்கள் என்றால், 100 இந்துக்களில், தலித்துக்கள் 8 +4 = 12 பேர்களே. 12 பேர்கள், எவ்வளவு பெரிய பரப்பளவில் இருந்தால், உலகமே வந்து, இந்துக்கள் தலித்துக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பழி சொல்ல முடியும்? தலித்துக்கள் இந்துசமயத்திற்கு வெளியில் உள்ளனர் என்றால், 100 இந்தியர்களில், 16 + 8 = 24 தலித்துக்களை, 76 இந்தியர்கள் கொடுமைப்படுத்தினார்கள் என்பதற்குப் பதிலாக, 56 இந்துக்கள் மட்டுமே கொடுமைப்படுத்தினார்கள் என்று கூறுவது எவ்விதத்தில் நியாயம்?
  76 – 56 = 20 , இந்துக்கள் அல்லாத 20 இந்தியர்களை, சிறுபான்மையினர் என்று கூறிச் சலுகைகளை அளிப்பதை எவரும் தட்டிக் கேட்காமல், 56 இந்துக்களை மட்டும் 44 இந்தியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அனுமதிக்கிறார்களே?
  Religious Composition Population (%)
  Hindus (other than scheduled caste/tribe) 576,597,948 , 56.1%
  Scheduled caste Hindus 166,634,873 , 16.2%
  Muslims 138,188,240 , 13.4%
  Scheduled tribal Hindus 84,346,047 , 8.2%
  Christians 24,080,016 , 2.3%
  Sikhs 19,215,730 , 1.9%
  Buddhists 7,955,207 , 0.8%
  Jains 4,225,053 , 0.4%
  Other religions & persuasions 6,639,626 , 0.6%
  Religion not stated 727,588 , 0.1%
  Total 1,028,610,328 ,100.0%
  https://en.wikipedia.org/wiki/Demographics_of_India

 13. ஒருவன் பண்டிதனுக்கு மகனாய்ப் பிறந்தானாகில், அது ஆண்டவன் போட்ட பிச்சையே என்று நினைக்காமல், அது தன்னுடைய சொந்த முன்ஜென்ம முயற்சியால் வந்த ஒன்று என்று செருக்குறுவதால் வரும் விபரீத புத்தியே சாதீய வெறி.//

  What crap…

  If I were to be born as a Sudra, should I not beg such a stupid god?

 14. Dear Kumudan,

  What I was talking about is the bhaavam in which one has to look at one’s situation. It is all Ishvara prasAda or anugraha, and nothing is possible without His grace.

  Acharya Shankara in Brahma Sutra Bhashya explains this clearly and also answers your objection. I am cutting and pasting two key sentences from the English translation:

  “For the soul which in the state of Nescience is blinded by the darkness of ignorance and hence unable to distinguish itself from the complex of effects and instruments, the samsâra-state in which it appears as agent and enjoyer brought about through the permission of the Lord who is the highest Self, the superintendent of all actions, the witness residing in all beings, the cause of all intelligence; and we must therefore assume that final release also is effected through knowledge caused by the grace of the Lord.

  Why so?–‘Because scripture teaches that.’ For although the soul has its own imperfections, such as passion and so on, for motives, and is furnished with the whole apparatus of action, and although ordinary experience does not show that the Lord is a cause in occupations such as ploughing and the like, yet we ascertain from scripture that the Lord is a causal agent in all activity. For scripture says, ‘He makes him whom he wishes to lead up from these worlds do a good deed; and the same makes him whom he wishes to lead down from these worlds, do a bad deed’ (Kau. Up. III, 8); and again, ‘He who dwelling within the Self pulls the Self within’ (Sat. Br. XIV, 6, 7, 30).

  But if causal agency thus belongs to the Lord, it follows that he must be cruel and unjust, and that the soul has to undergo consequences of what it has not done.–This objection the following Sûtra refutes.”

  and in the next sutra Sri Bhagavatpada clearly explains why this objection does not arise. I believe there is quite a bit of subtlety in undersetanding this phenomenon.

 15. This is one of the greatest story, on the day the bomb blast happened in Kasi. Muslims sacrat place mecca only muslims alone can go, not living just visiting. But in Kasi, not only many muslims live, they are also buiding a masque right next to Kasi Vishwanathar temple; In spite of that, they kill innocent Hindus for no reason.

 16. Sriman Gandarvan,

  //It is all Ishvara prasAda or anugraha, and nothing is possible without His grace.//

  No one can dispute this.
  This grace is an occasional cause as that of Sun and rain which functions without any partiality. The amount of sun light or rain water one gets is dependent on his purva karma which might act as a blocker or enhancer.

  I assume that your quote comes from this link: https://www.sacred-texts.com/hin/sbe38/sbe38042.htm

 17. திரு கந்தர்வன் அவர்களே

  ///தர்மசாஸ்திரத்தில் சாமானிய தர்மம், விசேஷ தர்மம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தம்மை மேதாவிகளாக நினைத்துக் கொண்டு மனம் போனபடி அர்த்தம் பண்ணிக் கொள்வதால் சாதிய சர்ச்சை ஏற்படுகிறது. அத்தகைய அர்த்தம் பாண்டித்யத்தின் விளைவல்ல, மாறாக ஆணவம் மூட நம்பிக்கை இரண்டின் சேர்க்கையால் ஏற்படுவது அது. செருக்குறுபவர் கண்ணுக்குத் தம்முடைய சொந்த வாழ்க்கையில் தாமே செய்யும் அனாச்சாரங்களும் துர்நடத்தைகளும் தெரியாது.///

  உண்மை. இதைத்தான் பகவான் ரமணர் இவ்வாறு கூறுகிறார்.

  https://tamilhindu.com/2010/12/true-knowledge-8/

  ///என்றும் எவர்க்கும் இயல்பாயுள பொருளை
  ஒன்றும் உளத்துள் உணர்ந்து நிலை – நின்றிடாது
  உண்டு, இன்று, உரு, அரு, என்று ஒன்று, இரண்டு, அன்று, என்றே
  சண்டையிடல் மாயைச் சழக்கு///

  அந்தக் கட்டுரையில் மேற்கூறிய பாடலுக்கு விளக்கமாக பகவான் ரமணரின் பக்தி கனகம்மாள் அவர்களின் விளக்கமும் மிக அருமையாக உள்ளது. மிகவும் சிந்திக்கத்தக்கது.

 18. //Narasimhan
  7 December 2010 at 5:11 pm
  If I were to be born as a Sudra, should I not beg such a stupid god?//

  நாம் ‘பிராமண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர’ என்று எந்த வர்ணத்தினருக்குப் பிறந்தாலும் அதில் முன் வினைப் பயனும் இறைவனின் கருணையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தே உள்ளன.

  பிராமணராகப் பிறந்ததற்காக ஆணவம் கொள்வது எப்படி முறையற்றதோ அப்படியே சூத்திரராகப் பிறந்ததற்காக வருந்துவதும் சரியானதல்ல.

  ஏனெனில் இப்போதைய நம் பிறப்புக்கு நம் வினையே காரணம் என்பது போல், நம் வர்ணத்தை உறுதி செய்து கொள்வதற்கும் தக்க வைத்துக் கொள்வதற்கும் நழுவ விட்டுவிடுவதற்கும் கூட நம் வினையே காரணமாகும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா !’

  உலக இன்பங்களைத் துய்ப்பதில் பற்றில்லாத மகான்கள், மற்றவரை வருண அடையாளப்படுத்தலாம். ஆனால், உலகாயத வாழ்வில் கட்டுண்ட நாம், ஒருவரை இன்ன வருணத்தவர் என்று (அதிலும் தன்னைத்தானே) குறிப்பிடுவது சரியாக இருக்காது ! இதில் கடவுளை முட்டாளாகப் புரிந்துகொள்ளும் முட்டாள் தனம் தவிர்க்கப்படலாம். இது விஷயத்தில் கட்டுரையாளர் கருத்து விமர்சகரால் விபரீதமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

  இன்னொன்று! இந்தத் தளத்தில் தமிழில் அல்லது தமிழோடு சிறிதளவு பிற மொழி கலந்து எழுதலாமே ! இதை விடுத்து முழுமையான ஆங்கில மறுமொழிகள் ஏன்? கட்டுரைகள் தமிழிலோ அல்லது சிறிதளவு பிற மொழிக் கலப்புள்ள தமிழிலோதானே வெளியாகின்றன?

  அவற்றைப் படித்துப் புரிந்துகொள்பவர்கள், அதே மொழியிலேயே பதில் தருவதை விடுத்து, முழு ஆங்கிலத்தில் எழுதுவது தம்மை மேதாவிகள் எனப் பறை சாற்றிக் கொள்ளவா?

 19. அன்புள்ள திரு ஸ்ரீராம் அவர்களே

  ///பிராமணராகப் பிறந்ததற்காக ஆணவம் கொள்வது எப்படி முறையற்றதோ அப்படியே சூத்திரராகப் பிறந்ததற்காக வருந்துவதும் சரியானதல்ல. ///

  பிராமணராகப் பிறந்ததற்கு ஆணவம் கொள்ளாமல் இருக்கலாம். முடியும்.

  ஆனால் சூத்திரராகப் பிறந்து, அப்படிப்பட்ட பிறப்பின் காரணமாகத் தீண்டாமையின் கொடுமைகளை அனுபவிக்கும் ஒருவர் எப்படி தனது பிறப்புக்காக வருந்தாமல் இருக்க முடியும்.

  நான் கூறுவதற்கு மன்னிக்கவும். சூத்திரர் அல்லாதோர் யாரும், முக்கியமாக அந்தணர்கள், நமது ஹிந்து மதத்தையும் வேதம், சாஸ்திரம் முதலியவற்றையும், அன்றாட வாழ்வையும் சூத்திரர் பார்வையில் பார்ப்பதே இல்லை. என்று அவ்வாறு நாமெல்லாம் தாழ்த்தப் பட்டவரின் பார்வையில் எந்த ஒரு விஷயத்தையும் அணுகுகிறோமோ அன்றுதான் நமது மதம் பிறரால் சீண்டப் படாமல் இருக்கும்.

 20. //சூத்திரர் அல்லாதோர் யாரும், முக்கியமாக அந்தணர்கள், நமது ஹிந்து மதத்தையும் வேதம், சாஸ்திரம் முதலியவற்றையும், அன்றாட வாழ்வையும் சூத்திரர் பார்வையில் பார்ப்பதே இல்லை. என்று அவ்வாறு நாமெல்லாம் தாழ்த்தப் பட்டவரின் பார்வையில் எந்த ஒரு விஷயத்தையும் அணுகுகிறோமோ அன்றுதான் நமது மதம் பிறரால் சீண்டப் படாமல் இருக்கும்.//

  காலம் மிகவும் மாறி வருகிறது. இன்று நிலைமையை பார்த்தால் அந்தணர்கள் என்ற சமூகம் எவ்வளவு தூரம் தனித்துவமாக இருக்கிறது? தாங்கள் சொல்வதை ஏற்க முடியவில்லை. எல்லோரும் எல்லோருடனும் இயல்பாகப் பழகுகிறார்கள். இது இப்படியிருக்க… தங்களின் இப்பதிவு சிலரை (தங்களை மேல் சாதி என்று நம்புகிற முட்டாள்களான) மட்டும் குறிப்பதாகவே கொள்ளமுடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *