இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2

மூலம்: டாக்டர். மூர்த்தி முத்துசுவாமி
தமிழில்: ஜடாயு

தொடர்ச்சி…


மதப்பிரிவினைக் கொள்கைகளால் உருமாறும் பண்பாடு:

thomas_schelling30வது சட்டப் பிரிவு உருவாக்கும் மதப் பாரபட்சங்கள், கல்வி நிறுவனங்கள் மீது மிஷநரிகளின் அளவுக்கதிகமான கட்டுப்பாடு – இவை உருவாக்கும் நீண்டகால விளைவுகளை “பிரிவினைகளின் தொடர் இயங்குமுறைக் கோட்பாடு” (Dynamic Models of Segregation) என்கிற அறிவியல்பூர்வமான முறை கொண்டு ஆராய்வோம். இந்த அறிவியல் முறை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங் உருவாக்கியது [32]. அவரது ஆய்வுகளில், தனது பக்கத்துவீட்டுக் காரர் ஒரே நிறத்தவராக இருக்கவேண்டும் என்று சிறிய அளவிலான மக்கள் நிபந்தனை விதித்தால் கூட, காலப் போக்கில் ஒட்டுமொத்த சமுகப் பிரிவினைக்கு அது இட்டுச் செல்லும் என்று அவர் நிரூபித்தார். பல மனித சமூகங்களில் ’தனிமைப் படுத்துதல் – மனச்சாய்வு – தன்குழுவினருக்கு முன்னுரிமை’ என்ற சுழல் உருவாக்கும் நேர்மறை சுழற்சி (positive feedback) இயங்குவதைப் பார்க்கலாம். பாலினம், வயது, இனம், பூர்வீகம், மொழி, பாலியல் சார்பு, மதம் என்று பல்வேறு விதமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மாறுதல்களுடன் இந்த சுழற்சி பல தளங்களில் இயங்குகிறது. குறிப்பாக, ஒருமுறை ’தனிமைப் படுத்துதல் – மனச்சாய்வு – சட்டரீதியான பாரபட்சம் – மேலும் தனிமைப் படுத்துதல்’ (separation-prejudice-discrimination-separation) என்ற சுழற்சி தொடங்கினால், பிறகு அது தானாகவே மேன்மேலும் வளரும் நிலைத்த சுழற்சிக்கு (self sustaining cycle) இட்டுச் செல்லும் என அவர் தனது ஆய்வுகளில் நிரூபித்துள்ளார்.

வெள்ளையர்களால் ஆளப் பட்ட தென்னாப்பிரிக்காவில் இனப் பிரிவினை நடவடிக்கைகள் கடுமையாக ஆனபோது, கறுப்பர்களால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. ஏனென்றால், தங்கள் நிறம்சார்ந்த உடற்கூறுகளை அவர்களால் மாற்றிக் கொள்ளவே முடியாது. ஆனால், இந்தியாவில் கடுமையான மதப்பிரிவினை நடவடிக்கைகளால் கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் இழக்க நேரிடும் இந்துப் பெரும்பான்மையினர், சிறுபான்மை மதத்திற்கு மாறிவிட்டால் அதிலிருந்து மீளலாம் என்ற சாத்தியம் உள்ளது.

டாக்டர் ஷெல்லிங்கின் மேற்கண்ட கோட்பாட்டை அப்படியே பெரும்பான்மை இந்து சமூகத்தினரின் மதமாற்றத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம்.

தனிமைப் படுத்துதல் = மதமாற்றம், அதாவது கிறிஸ்தவ மதத்திற்கு மாறுதல்.

மனச்சாய்வு = பிற்பட்ட நிலை (மிஷநரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள உயர்தர நிறுவன்ங்களில் கல்வியும், வேலைவாய்ப்புகளும் மறுக்கப் படுவதால்) மற்றும் மதப்பிரசாரகர்களின் முனைப்புமிக்க விளம்பரங்கள்.

மதமாற்றம் – பிற்பட்ட நிலை+மதப்பிரசாரம் – சட்டரீதியான பாரபட்சம் – மேலும் மதமாற்றம்’ என்ற சுழற்சி உருவாகி, பின்னர் அது தானாகவே மேன்மேலும் வளரும் நிலைத்த சுழற்சியாக (self sustaining cycle) ஆகும். இந்த சுழற்சி தொடர்ந்து கிறிஸ்தவ மதமாற்றம் என்றே ஒரே திசையில் பயணித்து, இந்தியாவில் பெரும்பான்மையினரின் மதமான இந்துமதம் வீழ்ச்சியடைவதில் தான் போய் முடியும். மதமாற்றத்தின் விசை முடுக்கிவிடப் படும்போது, ஒரு ஹிட் திரைப்படம் பற்றிய செய்தி வாய்மொழியாகப் பரவி அதற்கு மேலும் கூட்டம் சேர்வது போல, இந்துமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை துளித்துளியாக இருப்பதிலிருந்து பெருவெள்ளமாக மாறும்.

ஏற்கனவே இந்தியாவின் சில பகுதிகளில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், இந்தக் கோட்பாடு இயங்கும் விதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகாலாந்து, மிசோரம் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் எண்னிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது [33]. ஆனால், 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்த இரண்டு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் [34]. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், மிஷநரிகள் தான் முதன் முதலில் கல்வியையும், மற்ற பொதுநல வசதிகளையும், இந்த வளர்ச்சி குன்றிய பிரதேசங்களுக்குக் கொண்டு வந்தார்கள். இதோடு சேர்த்து, அங்குள்ள கல்வி நிறுவன்ங்கள் முழுமையாக மிஷநரிகளின் கட்டுப் பாட்டில் இருந்த்ததாலேயே, அங்கு இவ்வளவு வேகமாக, பூதாகாரமாக மதமாற்றங்கள் நிகழ்ந்தன.

christian_college_faculty1

ஆனால், இதே வேகத்தில் இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாகவில்லை. ஏனென்றால், இந்தியாவின் மற்ற பகுதிகளில், பலகாலமாக அங்கிருந்த பல இந்து சாதியினர் கிறிஸ்தவ சிறுபான்மையினரை விடவும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். அங்கிருந்த இந்து சமூகங்கள் மிசோரம், நாகாலாந்தில் இருந்த சமூகங்களுடன் ஒப்பிடுகையில், நன்கு வளர்ச்சியடைந்திருந்தன. இந்துப் பெரும்பான்மையினர் பல கல்வி நிலையங்களைத் தாங்களே நிறுவி நடத்தியும் வந்தனர். அதோடு கூட, மிஷநரி கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிலையங்களிலும், கிறிஸ்தவர்களுக்கு அளித்த இட ஒதுக்கீடுகள் போக (1990களுக்கு முன்பு இந்த ஒதுக்கீடுகள் 50% ஆக அல்ல, அதைவிடக் குறைவாகவே இருந்தன), மற்ற இடங்கள் எல்லாருக்குமானவையாக இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எனவே, இதன் விளைவாக, தேசிய அளவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை துளித்துளியாகப் பெருகி 2001ம் ஆண்டு 2.3 சதவீதத்தை எட்டியது.

ஆனால், அதற்குப் பிறகு, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சதவீதம் தேசிய அளவில் திடீரென்று பயங்கரமாக வளரத் தொடங்கியது.

ஆபரேஷன் வேர்ல்ட் என்ற அமைப்பு உலக அளவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்களைக் கண்காணித்து, உடனுக்குடன் ஆவணப்படுத்தி வருகிறது. அதன் இணையதளத்தில் இந்தியா பற்றிய விவரங்களும் உள்ளன. அதன்படி, தற்போது இந்தியாவில் கிறிஸ்தவர்களின் வருடாந்திர எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 3.7 சதவீதம். ஒப்பீட்டில் இந்தியாவின் வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி விகிதமே 1.44 சதவீதம் தான் [35]. 2001ல் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதம் தான், [36] ஆனால் 2010ல் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 5.84 சதவீதம் [37]. பத்தே வருடங்களில், எண்ணிக்கை சதவீதம் இரட்டிப்பாகியுள்ளதைக் கவனியுங்கள். 1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், வருடாந்திர இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.13 சதவீதம் [38]. வருடாந்திர கிறிஸ்தவ மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.26 சதவீதம் [39]. சராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக, இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஏன் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சதவீதம் கடந்த பத்தாண்டுகளில் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது?

ஆபரேஷன் வேர்ட்ல்ட் இணையதளத்தில் உள்ள ஒரு வரைபடம் இதற்குக் காரணம் இந்துமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்வதே என்று தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் இதே காலகட்டத்தில், இந்து மக்கள்தொகை சதவிகிதம் குறைந்த்துள்ளது (ஆனால் முஸ்லிம் மக்கள்தொகை சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதிலிருந்து முஸ்லிம்கள் பெருமளவில் கிறிஸ்தவத்திற்கு மாறுவதில்லை என்பது புலனாகும்) [40]. 1990களின் ஆரம்பத்தில் தான் இந்திய உச்சநீதிமன்றம், 30வது சட்டப் பிரிவின் அடிப்படையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மத அடிப்படையில் 50 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற அதிரடியான, அதிர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கியது. இதற்குப் பிறகு, உடனடியாக மிஷநரி கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீடு சிறிதளது உயர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் அதன் உச்சவரம்பான 50 சதவீதத்தை எட்டியது. இந்தப் புதிய மாறுதல்களின் தாக்கம் முழுமையாக ஏற்பட, நேரம் பிடித்தது. இந்த இட ஒதுக்கீடுகள் தேசிய மக்கள் தொகை விகிதத்தையே மாற்றி வருகின்றன என்ற விவரம் 2000ம் ஆண்டு வரை நேரடியாகப் புலப்படவில்லை. இப்பொழுது, மதமாற்றங்களும் அதன் விளைவாக கிறிஸ்தவ மக்கள்தொகை விகிதத்தின் பூதாகாரமான வளர்ச்சியும் அதன் முழுமையான இயங்கு விசையுடன் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

ஆபரேஷன் வேர்ல்ட் இணையதளத்தில் உள்ள தகவல்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது, வேறு வட்டாரங்களிலிருந்தும் அந்த தகவல் உறுதிப் படுத்த வேண்டும் என்று சிலர் கூறலாம். ஆனால், இந்தியாவிலிருந்து சமீபத்தில் வரும் பல செய்திகளும் கூட மதமாற்றங்கள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருவதையே சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாட்டில் 20 சதவீதம் உள்ள கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களை மதப் பாரபட்சத்தின் அடிப்படையில் திட்டமிட்டு நிரப்பும் மிஷநரிகளின் செயல்பாடு இரண்டையும் இணைத்துப் பாருங்கள் – இந்தியா என்ற மதச்சார்பற்ற, ஜன்நாயக தேசத்தில் இன்றைக்கு இந்துவாக இருப்பது சாதகமல்ல, பாதகம்; மாறாக கிறிஸ்துவராக இருப்பது மிகவும் நலம் பயக்கக் கூடியது என்ற செய்தி அதில் பொதிந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்புகளுக்காகத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கொண்ட குறைந்த வருமானமுள்ள கீழ்மத்தியத் தரக் குடும்பங்கள் விஷயத்தில், இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

bishop_cotton_bangaloreஇத்தகைய தாக்கத்தைக் கணக்கிட்டு அளவிடுவது பயனுள்ளதாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் மாணவர்களும், பணியாளர்களும் சேர்த்து 300 இடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். மிஷநரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் 40,000 நிறுவன்ங்களையும் சேர்த்தால் மொத்தமாக 12 மில்லியன், அதாவது ஒரு கோடியே இருபது லட்சம் இடங்கள். ஒவ்வொரு வருடமும், பெரும்பாலும் அரசு உதவியிலேயே இயங்கும் தங்கள் கல்வி நிறுவனங்களில், சில லட்சம் இடங்கள் முதல் அதிகபட்சமாக 60 லட்சம் இடங்கள் வரை சட்டபூர்வமாகவே கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கு மறுக்கும் அதிகாரத்தை மிஷநரிகளுக்கு இந்த்த் தீர்ப்பு வழங்கியுள்ளது. மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் முடிவு எத்தகைய கவலையளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று பாருங்கள்.

ஆக, இந்துப் பெரும்பான்மையினர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுவது மேன்மேலும் நிலையாக அதிகரிப்பதற்கான களம் ஏற்கனவே அமைக்கப் பட்டுவிட்டது என்பது தான் டாக்டர் ஷெல்லிங்கின் கோட்பாடு கூறும் அறிவியல்பூர்வமான முன்னறிவிப்பு.

மத்திய மாநில அரசுகள் பிற்படுத்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவன்ங்களிலும், *சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்த* மற்ற அரசு மற்றும் தனியார், கல்வி நிறுவன்ங்களிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கியுள்ளன. இந்த இட ஒதுக்கீடுகளினால் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் யாரும் பயனடைவதில்லையே என்று கேட்கலாம். அது பெருமளவில் உண்மையும் கூட. ஆனால், இவற்றால், இட ஒதுக்கீடுகளுக்குள் வராத சாதிகளைச் சேர்ந்த ஏராளமான இந்துக்களும் பயன்பெறுவதில்லை. இப்படி, எந்த இடஒதுக்கீடுகளுக்குள்ளும் வராத இந்துக்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகம் [43]. எப்படியானாலும், கல்வி நிலையங்கள் மீது கிறிஸ்தவ மிஷநரிகள் கொண்டுள்ள அளப்பரிய அதிகாரம், தங்கள் மதத்தினரை மற்றும் பொறுக்கி எடுத்து முன்னேற்றும் சக்தியை அவர்களுக்கு அளிக்கிறது, அதுவும் இந்தியக் குடிமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு. கீழ்க்கண்ட உதாரணங்கள் இதனை மேலும் தெளிவாக்கும்.

30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் உரிமை இழப்புகள்

1990க்குப் பிறகு, 30வது சட்டப் பிரிவு அனுமதிக்கும் மதப்பிரிவினை செயல்பாடுகளே கேரள மாநிலத்தில் இந்துப் பெரும்பான்மை சமூகத்தினரின் கல்வி வாய்ப்புகளை முடக்கி, அவர்களைப் பொருளாதார ரீதியாக நிலைகுலையச் செய்வதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. கேரளத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சி.ஐசாக் கூறுகிறார் –

”கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த வங்கி வைப்பு நிதியில் (bank deposits) 11.11 சதவீதம் மட்டுமே கேரள மக்கள்தொகையில் 55 சதவீதம் உள்ள இந்துக்கள் கையில் உள்ளது. அதே சமயம், மக்கள் தொகையில் 19 சதவீதம் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினர் வங்கி வைப்பு நிதியில் 33.33 சதவீதத்தையும், 25 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் 55.55 சதவீதத்தையும் கையில் வைத்துள்ளனர்.. கல்வித் துறையில் சிறுபான்மையினரின் நிறுவன அதிகாரம் மறைமுகமான வடிவில் பிரயோகிக்கப் படுகிறது. இந்துக்களும் மாநில அரசும் சேர்த்து, கல்வித் துறையில் வெறும் 11.11 சதவீதம் மட்டுமே தங்கள் கையில் வைத்துள்ளனர். மாறாக, சர்ச் மற்றும் மிஷநரி அமைப்புகள் 55 சதவீதமும், முஸ்லிம் மத அமைப்புகள் 33.33 சதவீதமுமாக, கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளனர். தற்போது கேரளத்தில் தொழில்முறைக் கல்வி (professional courses) ஒட்டுமொத்தமாகவே சிறுபான்மையினரின் கையில் உள்ளது. பொறியியல் கல்லூரிகளின் 12,000 கல்வியிடங்களும், மருத்துவக் கல்லூரிகளின் 300 கல்வியிடங்களும் முழுதும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் வசம் உள்ளன. மாணவர் சேர்க்கை முற்றிலுமாக அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மருத்துவம் சார்ந்த (paramedical) நர்சிங் போன்ற துறைகள் 60 சதவீதம் நிறுவன மத அதிகார பீடங்களின் கையில் உள்ளன… அடுத்தடுத்து வரும் அரசுகள் இது குறித்து எதுவுமே செய்ய முடியாமல், வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றன.. சிறுபான்மையினர் நிர்வாகத்தில் இருக்கும் இந்த நிலையங்களில் செம்பாதிக்கும் மேல் அரசு நிதி உதவி பெறுபவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” [44].

இந்த நிலையில், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எல்லாவிதமான கல்வித் தகுதிகளும் இருந்தும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்ற விஷயத்தோடு, விசேஷ சலுகை பெற்ற ‘சிறுபான்மை’ மதம் ஒன்றிற்கு மாறிவிட்டால், அவர்களது வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்ற விஷயமும் அவர்கள் மனதில் சென்று தைக்காமலிருக்காது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவப் பெரும்பான்மை பிரதேசமாகியுள்ளது. இங்கு வசிக்கும் ஒருவர் சொல்கிறார் – “சிறுபான்மையினருக்கு ஏராளமான சலுகைகளும், உதவித் தொகைகளும் உள்ளன. அந்த உதவித் தொகைகள் இந்து மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏழைகள் தங்கள் குழந்தைகளை எப்படிப் படிக்க வைக்க முடியும்? எங்களது உரிமைகளைத் திரும்ப்ப் பெறுவதற்கு நாங்கள் பொன்.ராதாகிருஷ்ணன் (அந்தத் தொகுதியின் ஒரே இந்து வேட்பாளர்) அவர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை”. [46]

இந்தியாவின் பல பகுதிகளில் தங்கள் குழந்தைகள் கல்வியும், உதவித் தொகையும் பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்தமாக குடும்பங்களே கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுவது ஆதாரபூர்வமாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது [47]. இது பெருமளவில் சமூக மோதல்களையும் உருவாக்குகிறது. சரியாக அறிவுறுத்தப்படாத பெரும்பான்மை இந்து சமூகத்தினர், சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும் இட ஒதுக்கீட்டுத் திட்டங்களை அரசியல்பூர்வமாக எதிர்த்து, அவற்றை நீக்க வழிசெய்வதற்குப் பதிலாக, தங்கள் கோபத்தை நேரடியாக சிறுபான்மை-கிறிஸ்தவர்கள் மீது காண்பிக்கின்றனர்.

இத்தகைய ஒரு வன்முறை மோதல் சமீபத்தில் ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில் நிகழ்ந்தது. இங்கு சில காலமாகவே பாணா சமூகத்தினருக்கும் கந்தா சமூகத்தினருக்கும் இடையில் பதற்றம் நிலவி வந்த்து. பாணா சமூகத்தினர் கூட்டமாக கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி விட்டனர். பழங்குடியினரான கந்தா சமூகத்தினர் இந்து மதத்திலேயே தொடர்ந்தனர் [48]. 30வது சட்டப் பிரிவின் பயனாக, மதம் மாறியவர்கள் அரசு உதவி பெறும் கிறிஸ்தவப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்று தங்களை முன்னேற்றிக் கொண்டனர். கந்தா சமூக இளைஞர் ஒருவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் – “நாங்கள் நிராகரிக்கப் பட்டவர்களாக உணர்கிறோம். எங்கள் அரசியல் பிரதிநிதிகள் எல்லாரும் கூட பாணாக்களே. பாணாக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறினார்கள், முன்னேறி விட்டார்கள்” [50].

அடுத்து என்ன?

சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தியா ஒரு பண்பாட்டு அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது. 30வது சட்டப் பிரிவின் விளைவாக, எங்கும் இந்துக்களுக்கு உரிமை இழப்புக்கள். அதனால், இந்துத்தன்மை நீக்கம் (a process of de-hinduising) நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தங்களது உரிமைகளும் நலன்களும் அநியாயமாக நசுக்கப் படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பும் முதிர்ச்சியும் இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையினரிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சிறுபான்மையினரின் மத நிறுவன்ங்கள் அரசியல்மயமாக்கப் பட்டவை. தங்களை அணிதிரட்டிக் கொண்டு வாக்களிக்கவும், அதன் சக்தியைப் பயன்படுத்தி தங்கள் நலன்களை முன்னெடுக்கவும் இவை சிறுபான்மையினருக்கு உதவியுள்ளன [51]. பெரும்பான்மை சமூகத்தினரின் மத நிறுவனங்கள் அரசியல்மயமாக்கப் படாமலிருப்பதனால் உண்மையில் பெரிதாக நலன் ஏதும் விளைந்தது என்று சொல்ல முடியாது. சிறுபான்மை, பெரும்பான்மை மத நிறுவனங்களின் இந்த மாறுபட்ட இயல்புகளுக்கு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த அன்னிய அரசாட்சியும் ஒரு காரணம். தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் நேரக்கூடாது என்பதற்காக, அன்னிய அரசுகள் பெரும்பான்மை சமூகத்தினரின் மத நிறுவனங்களை அரசியலில் தலையிடாதிருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.

1988_census_of_indiaஇன்றும், இந்திய சமூகத்தில், வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கும் நடுத்தர, மேல் நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த இந்துப் பெரும்பான்மையினர் பெரும்பாலும் அரசியல் சார்பற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களில் கணிசமானோர் வாக்களிக்க வருவது கூட இல்லை. தேசத்தின் அரசியல் முறைகேடுகளால் அவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கருதலாம் [52]. அவர்களால் இப்படி ஒதுங்கி இருக்க முடிவதற்குக் காரணம் என்னவென்றால், கடந்த இருபதாண்டுகளின் பொருளாதார வளர்ச்சி பல கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது என்பதே. ஆனால், தற்போதைய நிலவரத்தை வைத்துப் பார்த்தால், வரும் ஆண்டுகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகப் போகிறது. அப்போது 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது. நாம் கேரளாவில் காண்பது போல, ஒரு குறிப்பிட்ட அளவு கணிசமான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் இருந்தாலே போதும், இந்தப் போக்கு தீவிரமடைந்து கொண்டே வரும். இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்.

அரசியல் சார்பில்லாத, வாழ்க்கையில் நல்ல நிலையில் உள்ள இந்துப் பெரும்பான்மையினர் இப்போது அரசியல் செயல்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டேயாக வேண்டும். தங்களது மற்றும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்து அவர்கள் இதனைச் செய்தேயாக வேண்டும். இந்திய அரசியலில் இது ஒரு புத்துணர்வைக் கொண்டு வரும், இந்திய ஜன்நாயகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும். மிக விரைவிலேயே 30வது சட்டப் பிரிவு முக்கியமானதொரு தேர்தல் பிரசினையாக ஆகப் போகிறது. பொதுவாக, இந்துப் பெரும்பான்மையினர் தங்களது மத அனுஷ்டானங்களை விடவும், லௌகிக வசதிகளுக்கும், கல்வி, வேலைவாய்ப்பு பிரசினைகளைக்குமே முக்கிய இடம் கொடுப்பவர்கள். எனவே, 30வது சட்டப் பிரிவு முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடுகிறது என்ற பிரசினையை வைத்து பெரும்பான்மை சமூகத்தினரை அரசியல் ரீதியாகத் திரட்டுவது சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று அரசியல் கட்சிகளும் விரைவில் தெரிந்து கொள்வார்கள்.

நவீன இந்தியாவில், வளரும் இந்தியாவில் இப்போது இருக்கும் 30வது சட்டப் பிரிவு போன்ற ஒரு மதப்பிரிவினை சட்டத்திற்கு சிறிதும் இடமில்லை. அப்படியானால், இதற்குப் பதிலாக என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான ஒரு பதில் அமெரிக்காவிலிருந்து கிடைக்கலாம். அதன் குறைகளுடனே கூட, உலகின் பெருவளர்ச்சி பெற்ற ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக தேசமாகவும், பல இன்ங்களும், பல மதங்களும் கூடி வாழும் ஒரு சமூகமாகவும் அமெரிக்காவைக் கண்டிப்பாகக் கருதலாம். சிறுபான்மை கருப்பர்களும், குடியேறிகளாக வந்த கிறிஸ்தவர்-அல்லாத வெள்ளையர்-அல்லாத இனமக்கள் சிலரும் வேலை வாய்ப்பு, கல்வி, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் பிரிவினையையும். நிராகரிப்பையும் அமெரிக்காவில் அனுபவிக்க நேர்ந்தது. அதனைத் துடைக்கும் முகமாக, 1964ல் வரலாறுச் சிறப்பு மிக்க குடி உரிமைச் சட்ட்த்தை (The Civil Rights Act of 1964) அமெரிக்கா நிறைவேற்றியது. இனம், நிறம், மதம், பாலினம், பூர்விக தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பாரபட்சமும் கூடாது என்பதே இந்தச் சட்டத்தின் மையக் கருத்து [53]. ஒரு சிறு விதிவிலக்காக, கறுப்பர்கள் வெள்ளையின மக்களால் ஒடுக்கப் பட்டார்கள் என்ற வரலாற்று உண்மையையும் கருத்தில் கொண்டு, Affirmative Action என்ற பெயரில் மிகச் சிறிதளவிலான இட ஒதுக்கீடுகளும், சலுகைகளும் கறுப்பர்களுக்கும், வேறு சில சிறுபான்மையினருக்கும் வழங்கப் படுகின்றன. [54]

இந்தக் கட்டுரை சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல. அவர்களது உரிமைகளை ஒடுக்க வேண்டும் என்று கோருவதோ அல்லது மதமாற்றங்களையே நிறுத்தி விடவேண்டும் என்று சொல்வதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இதன் முக்கிய நோக்கம் 80 சதவீத பெரும்பான்மையினரின் மனித உரிமைகள் மீறப் படுவதைச் சுட்டிக் காட்டுவதே ஆகும். இந்த உரிமை மீறல்களின் ஒரு முக்கிய காரணியாக 30வது சட்டப் பிரிவை முன்வைப்பதன் மூலமாக, இக்கட்டுரை எவரது உரிமையிலும் தலையிடாமல், இந்தப் பிரசினையை அறிவுபூர்வமாக அலசி ஆராய்வதற்கு ஒரு வழிமுறையை அளிக்கிறது. ஒரு நவீன, சுதந்திர தேசம் என்ற அளவில் மக்கள் தாங்கள் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கவும், விரும்பினால் மாற்றிக் கொள்ளவும் வழிசெய்யும் தனிமனித உரிமையை இந்தியா நிலைநிறுத்தியே ஆகவேண்டும். ஐ.நா சபையின் அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 18வது ஷரத்தும் இத்தகைய மத சுதந்திரத்தையே பரிந்துரைக்கிறது. [55].

அதே நேரத்தில், மனித குலத்தின் எட்டில் ஒரு பங்கு மக்களான இந்துக்களுக்கு [56] இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே அநியாயமாக உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப் படுவதை, அவர்களுக்கு எதிராக பாரபட்சமான நடைமுறைகள் செயல்படுத்தப் படுவதை, இந்தியா நிறுத்த வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், ஒரு நவீன ஜனநாயக தேசம் என்று அழைக்கப் படும் தகுதியையே இந்தியா இழந்து விடும் அபாயம் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் இனப்பிரிவினைக் கொள்கைகளுக்கு எதிரான போரட்ட்த்தை ஆரம்பித்து வழிநடத்திய தேசம், இப்போது தனது பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராகவே மதப்பிரிவினைக் கொள்கைகளை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு துரதிர்ஷ்டகரமான நிலைமையில் உள்ளது.

மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு உயிரியல் பன்மை (biodiversity) இன்றியமையாத்து என்று நாம் கருதுகிறோம் [57]. கலாசார – சமய ரீதியான பன்மையும் அதே போன்றது தான். உதாரணமாக, இந்தியாவின் மேற்குப் பக்க தேசமான பாகிஸ்தான் தனது நாட்டிற்குள் கலாசார-சமய ரீதியான பன்மையை இடைவிடாது அழித்தொழிக்க முயன்றதால் தான், இப்போது வேறு திசைக்கு வழியில்லாத அடிப்படைவாத கருத்தியலுக்கு எளிதாக பலியாகும் நிலையில் உள்ளது [58]. பிரிவினைக் கொள்கைகள் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை ஒழித்து விடாமல், அவை ஜீவித்திருக்கவும், பரிணமிக்கவும் வழிவகை செய்வது மனிதகுலத்தின் கடமை.

(முற்றும்)

moorthy-muthuswamyடாக்டர். மூர்த்தி முத்துசுவாமி அமெரிக்காவில் வசிக்கும் அணு இயற்பியலாளர். 1979ல் இந்தியாவின் பிர்லா அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் (BITS, Pilani) தனது பட்டப் படிப்பை முடித்தார். 1989ல் நியூயார்க் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தில் அணு இயற்பியலில் ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் பல கல்வி நிறுவனங்களில் பதவி வகித்தும் உள்ளார். அண்மைக் காலமாக உலக அரசியல், சமூகவியல் ஆகிய துறைகள் குறித்து எழுதி வருகிறார். உலகளாகிய இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து இவர் எழுதியுள்ள Defeating Political Islam என்ற நூல் இந்தப் பிரசினை குறித்த முழுமையான பார்வையை முன்வைப்பதாக விமர்சகர்களால் மதிப்பிடப் பட்டுள்ளது.

சான்றுகள்:

[32] Thomas Schelling, “Dynamic Models of Segregation,” Journal of Mathematical Sociology 1 (1971), pp. 143-86; see also, “Thomas Schelling,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Thomas_Schelling (accessed Nov. 13, 2010).

[33] “Christian Conversions in North-East India,” Mar. 10, 2006, https://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1141970933 (accessed Nov. 13, 2010).

[34] “2001 Census India – State-wide Population Breakdown by Religion.”

[35] “Operation World – India,” https://www.operationworld.org/indi (accessed Nov. 17, 2010).

[36] “2001 Census India – State-wide Population Breakdown by Religion.”

[37] “Operation World – India”; see also, “Joshua Project – India,” https://www.joshuaproject.net/countries.php (accessed Nov. 17, 2010).

[38] “Religion in India,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Religion_in_India (accessed Nov. 18, 2010).

[39] “Population of India over a Century,” https://cyberjournalist.org.in/census/cenpop.html (accessed Nov. 18, 2010).

[40] “Operation World – India.”

[41] Outlook India.

[42] “Reservations in India,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Reservation_in_India (accessed Nov. 23, 2010).

[43] Ibid; from this reference: the forward caste in India constitutes well over 30 percent, compared to about 20 percent, Muslim and Christian communities put together.

[44] Organiser, Oct. 31, 2004, https:/www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=48&page=30 (accessed Nov. 14, 2010).

[45] The Pioneer, May 4, 2009, https://www.dailypioneer.com/173741/BJP-has-bright-chances-in-2-TN-seats.html (accessed Nov. 14, 2010).

[46] Ibid.

[47] The Times of India, Sept. 17, 2006, https://timesofindia.indiatimes.com/India/Inducements_lure_poor_to_convert/articleshow/3491637.cms (accessed Nov. 14, 2010).

[48] “Religious Violence in Orissa,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Religious_violence_in_Orissa (accessed Nov. 14, 2010).

[49] IBNLive, Dec. 30, 2007, https://ibnlive.in.com/news/caste-tribe-conversion-make-orissa-district-volatile/55272-3.html (accessed Nov. 22, 2010).

[50] Ibid.

[51] Boloji, Mar. 12, 2006, https://www.boloji.com/plainspeak/021.htm (accessed Nov. 16, 2010); see also, “The Pioneer.”

[52] IBNLive, Mar. 25, 2005, https://ibnlive.in.com/blogs/saurabhsaksena/559/53292/why-the-middleclass-must-vote.html (accessed Nov. 13, 2010); see also, Asia Times, Apr. 25, 2009, https://www.atimes.com/atimes/South_Asia/KD25Df01.html (accessed Nov. 13, 2010).

[53] “The Civil Rights Act of 1964 and the Equal Employment Opportunity Commission,” https://www.archives.gov/education/lessons/civil-rights-act/ (accessed Nov. 13, 2010); see also, “Civil Rights Act of 1964,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Civil_Rights_Act_of_1964 (accessed Nov. 14, 2010).

[54] “Affirmative Action in the United States,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Affirmative_action_in_the_United_States (accessed Nov. 14, 2010).

[55] “The Universal Declaration of Human Rights.”

[56] Derived from estimated Hindu majority population of 850 million taken from “Operation World – India” and “World Population,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/World_population (accessed, Nov. 22, 2010).

[57] “Biodiversity,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Biodiversity (accessed Nov. 15, 2010).

[58] “Why have Pakistan and India Evolved so differently?”

9 Replies to “இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2”

 1. Pingback: Indli.com
 2. மிக முக்கியமான கட்டுரை. மொழிபெயர்ப்பிற்கு நன்றி ஜடாயு சார்.

  கட்டுரை ஆசிரியர் ஒரு தகவலைச் சொல்லுகிறார்:

  //…இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், மிஷநரிகள் தான் முதன் முதலில் கல்வியையும், மற்ற பொதுநல வசதிகளையும், இந்த வளர்ச்சி குன்றிய பிரதேசங்களுக்குக் கொண்டு வந்தார்கள்….//

  இது தவறான தகவல். பொதுவாக கிறுத்துவர்களும், அவர்களது கைக்கூலிகளும், மீடியாக்களும் பிரபலமாக்கிவிட்ட பொய் இது. கேரளாவிலும், நாகலாந்திலும் கல்வி வளர்ச்சிக்குக் காரணம் கிறுத்துவர்கள் கிடையாது.

  ஆங்கில அரசு ஆட்சியின்போதே அதிக அளவு பள்ளிகளை நடத்திய மாநிலம் கேரளம். பத்மநாபசுவாமியின் சார்பாக அரசை நடத்திய “திருவிதாங்கூர் சமஸ்தானம்”. அவர்களது ஆட்சிக்காலத்தில், இந்து மரபின்படி கல்விக்கூடங்கள் பெரிதும் கட்டப்பட்டு, பெருமளவில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. கேரளத்தின் கல்வி வளர்ச்சிக்குக் காரணம் இந்துக்களிட்ட இந்த அடித்தளமே.

  நாகலாந்தில் கல்வி நிறுவனங்களைப் பெரிதும் ஏற்படுத்திக் கல்வியை போதித்தவர்கள் ராமகிருஷ்ண மிஷன் துறவிகளும், தன்னார்வலர்களும் மட்டுமே. ஆனால், அவர்கள் செயல்பட முடியாதபடி அரசின் மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. சிறுபான்மையினர் மட்டுமே செயல்படும் வகையில் சட்டங்கள் செயல்பட்டன. இந்தச் சூழலில், தொடர்ந்து கல்வியைப் பரப்ப ராமகிருஷ்ண மிஷனேகூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டு, அதிலும் தோல்வி அடைந்தது.

  அதற்குப் பின்னர், நாகலாந்தில் கல்வி நிறுவனங்களையும், போதித்தலையும் கிறுத்துவர்கள் கையகப்படுத்திக் கொண்டனர். அத்துடன் கல்வி போதித்தலை சர்ச்சிற்கு லாபம்தரும் தொழிலாகவும் செய்துகொண்டனர்.

  எனவே, கல்வியை முதன்முதலில் இந்த மாநிலங்களில் பெரிதும் கொண்டுவந்தவர்கள் இந்துக்களே என்பது தெளிவு.

  எறும்புகளின் புற்றில் புகுந்த கட்டுவிரியன் எறும்புகளைத் தின்று கொழுப்பது போல கிறுத்துவம் இந்த மாநிலங்களில் கொழுத்தது. கட்டுவிரியன் புகுந்த புற்று பாம்புப் புற்றானது போல, கல்வி நிறுவனங்கள் கிறுத்துவப் புற்றுகளாகிவிட்டன. குயில் இடும் முட்டைகளைப் பாதுகாத்து, அதில் இருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகளை வளர்த்து, கெட்ட பெயரையும் சம்பாதிப்பதுதான் இந்துக்களின் நிலையாக இப்போது இருக்கிறது.

 3. sir,
  What is this??????

  விஜயகாந்த் is a Christian ???????? or it is one of the game ???

  //விஜயகாந்த் இனி ‘புரட்சிக்கலைஞர் டாக்டர் விஜயகாந்த்’. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிள்ளது.” – இது பத்திரிகை செய்தி.

  நடிகர் – அரசியல்வாதியான திரு. விஜயகாந்த் அவர்கள் டாக்டர் பட்டம் வாங்குவதில் குறைசொல்ல எதுவும் இல்லை. அது வரவேற்க வேண்டியதுதான்.

  அதேசமயம், நாட்டின் புகழ்பெற்ற முன்னணி பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது நாம் அறிந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பலரும் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூட டாக்டர் பட்டம் தருகின்றன. கமலஹாசன், நடிகர் விஜய் போன்றோர் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

  ஆனால், இவ்வாறெல்லாம் இல்லாமல் – அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகத்தில் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

  அது என்ன – ஐ.ஐ.சி.எம்?

  பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனம் (International Institute of Church Management Inc.) என்பதுதான்”ஐ.ஐ.சி.எம்” ஆகும். இது இணையத்தின் மூலம் கிறித்துவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பு. நமது ஊரில் ஆங்காங்கே உள்ள “இயேசு அழைக்கிறார்” என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் அது. அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல.

  அதாவது – முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

  அதிலும் அந்த அமைப்பு “டாக்டர் பட்டம்” அளிக்க வைத்திருக்கும் நிபந்தனைகளை பார்த்தால் – திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றது விந்தையாக இருக்கிறது.

  கிறித்தவ மதம் தொடர்பான “Biblical Studies, Church Management, Christian Leadership, Ministry” ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது “பயோ – டேட்டாவை” அனுப்பினால் “டாக்டர் பட்டம்” கிடைக்குமாம். ஆக, பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் திரு. விஜயகாந்த் எப்போது நிபுணத்துவம் பெற்றார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

  இப்படிதான் முன்பு ஐ.நா. அவையின் பேரைச்சொல்லி – இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு “தங்கத்தாரகை விருது” கொடுத்தது. இப்போது – ஒரு மதப் பிரச்சார அமைப்பு பல்கலைக்கழகத்தின் பெயரால் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு “டாக்டர் பட்டம்” அளிக்கிறது.

  இப்படி செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.

  மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை காண்க.

  https://www.iicmweb.org/

  ஐ.ஐ.சி.எம் நிறுவனத்தின் நோக்கங்கள் இதோ:

  OBJECTIVES OF IICM

  To provide Continuing Education for Pastors, Evangelists, Bible Teachers and Christian Leaders;

  To Equip Professionals, Businessmen/Women & Lay Leaders for Ministry.

  To Teach the Word of God, topically in a Simple and Practical Way to make it Easy to Understand and Apply it, both in their Lives and Ministries

  To help understand the importance of using Management Skills and Modern Technologies of Communication to Maximize Results in the Ministry

  To impart Revelation Knowledge of the Word of God and the Anointing of the Holy Spirit

  To facilitate Spiritual, Leadership and Church Growth and Development

  To help being Effective and Successful in Life and Ministry in terms of achieving Goals and realizing Full Potential

  To help Discover and Fulfill God’s Will & Purpose! //.

  https://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html

 4. அனைத்து இந்துக்களும் படிக்க வேண்டிய கட்டுரை.. நம் உரிமைகளை நாம் எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும்.நம் உரிமையை மீண்டும் பெற, நம் உரிமையை நிலை நாட்ட தேர்தலில் இந்து ஆதரவு கட்சிகளுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.

 5. தன்னந்தனியாகவே, மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி என்று இந்துக்களுக்கு எதிராய் நடந்துகொள்கின்ற காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் தற்போது ஒன்று சேர்ந்து அரக்கர்களாய் ஆகிவிட்ட நிலையில், வளமான வாழ்வைபெற்றிருக்கும் இந்துக்கள், குறைவான வாழ்வு நிலையில் இருக்கும் இந்துக்களுக்கு உதவி செய்வதன் மூலம் மட்டுமே, ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை மேற்சொன்ன அரக்கர்களிடமிருந்து காப்பாற்ற முடியும். ஆனால் மக்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால், ஏசுதேவன்களும், யாஹ்யாகான்களும் தான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் போலுள்ளது

 6. இது மூர்த்தி முத்துசுவாமி

  Can some one find out and send me an email (moorthym@comcast.net) the details (published references) of Christian quota system in missionary-run colleges in Chennai and elsewhere?

  If we have that information, we can really do something, to ensure a future for Hindu children and youths in Tamilnadu and elsewhere in India.

  ரொம்ப நன்றி.

  By the way, you may find very interesting take on jihadist threat in India, and how the Christian missionaries are deliberately compromising the future of INNOCENT Hindu children and youths in my book Defeating Political Islam…

  The book is available in India. More details in my website – https://moorthymuthuswamy.com/

 7. வணக்கம்
  ஓர் இந்து வாக இந்து மதத்தை பற்றி அறியாதவனாக இருந்தேன் தமிழ் ஹிந்து இணையம் மூலம் நான் அதை அறிந்து கொண்டு வருகிறேன் மேலும் ஒரு சிறு சம்பவத்தையும நான் இங்கு கூறு விரும்புகிறேன் .

  நேற்று விக்கிபீடியா தலத்தில் எனது ஊரான குன்னத்தூர் பகுதியை பற்றி படித்து கொண்டு இருந்தேன் ஏற்கனவே பலமுறை படித்து இருந்தாலும் புதியதாக யாதேனும் தகவல் சேர்த்து இருகிறார்களா? என்று பார்த்தேன் .அப்பொழுது தான் கண்டேன் (Centre of attraction in the middle of the town is Church of God Ministries were founded in the year 1973 October by Pastor. I. Vedhanaygam. Now it has a building on its own at 244 Uthukuli Road, Kunnathur. It has 750 members on a regular basis on every Sunday. 96% of them are from Hindu backgrounds. Every Friday there is a special Fasting and Prayer conducted by Sis. Elish Nayagam (Pastor. Vedhanayagam’s wife) who is gifted prophetess and deliverance minister. The Bible study is being conducted on every Wednesday at 7.30pm to 9pm. Springs Youth Fellowship is conducted by Pastor. Sam D Jebaraj on Sunday Morning between 9am and 9-45 am. Praise and Worship starts at 10am on Sunday. Every First Sunday there will be a communian Service. The annual Thanks Giving Meetings would be conducted during the month of October for 4 days from Thursday to Sunday. The Church has widespread its expansion in 116 villages at the radius of 20 Kilometers surrounding.Pastor. Justin Vedhanaygam is one of the best Bible Teacher and wanted speaker in international conferences for the last 16 years since 1995. He is married to Jacinta and having 2 daughters and travelled widely to 38 nations. Pastor. Austin Delight Daniel is one of the assistant Pastors who take care of the care cells and visiting. Pastor. Biju is taking care of the planning, admin and AV Departments. Mr. George Stephen and 10 other teachers are in charge of Sunday School for the kids. The Sunday School starts at 10-10 am to 11-30am. The Church is located at 244 Uthukuli Road, Kunnathur – 638103. Tirupur District. Come and be blessed!) என்று எழுதி இருந்தார்கள் .நான் உடனே விக்கி இணையத்தில் புதிய தொரு கணக்கு தொடங்கி மேலே குறிப்பிட்ட தகவலை அழித்தேன்.அவர்கள் விக்கிபீடியா தளத்தையும் தங்களது மத பிரச்சாரத்துக்கு பயன்படுத்து கிறார்கள்
  உண்மை என்னவெனில் எனது ஊரில் தேவாலயம் இருக்கிறது ஆனால் அது ஒன்றும் பிரசித்தி பெற்றது அல்ல .சமீபகாலமாக எங்கள் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறிது சிறிதாக கிருஷ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டு வருகின்றனர்.இது நம் மதத்திற்கு நல்லது இல்லை என்றே தோன்றுகிறது.

  மேலும் இதை மறு மொழியாக எது கொள்ளாமல் ஒரு செய்தி நிகழ்வாக எது கொள்ளுங்கள் .
  மற்றும் எனக்கு ஒரு சிறு ஐயம் RSS இயக்கத்தில் சேருவதற்கான நடைமுறைகள் என்னவென்று எனது ஈமெயில் முகவரியான p.anandhakumar88@gmail.com தெரிய படுத்துங்கள் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *