திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை

tkadaiவா கஜா, என்ன லேட்டு?

ஒரே பேஜார் சார். வழில ஒரு ஆளுகூட அர்சியல் பேசி அது வலிச்சிகினே பூட்ச்சி. அத்தான் சார் லேட்டு.

நீ மேடையில பேசினா எதாவது பிரயோசனம் இருக்கும், ஏன் வெட்டியா வெளியாள் கூட பேசுற?

சார், பேசுறதப் பத்திதான் பேச்சு வலிச்சிகினுபூட்சி. ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். ’இல்ல, கட்சீல ஜெய்ஹிந்த் சொன்னாரே அதுக்கா’ன்னு ஒரு வலி வலிச்சேன். ஒடனே மொறச்சிகினார் சார்.

கொழுப்புதான் கஜா ஒனக்கு. திமுக ஆளுகிட்ட ஜெய்ஹிந்த் பத்தி பேசலாமா?

அக்காங் சார். ‘இன்னா மொறைக்கிற, நான் இன்னா தப்பா கேட்டுகினேன், ஜெய் ஹிந்த் கெட்ட வார்த்தையா’ன்னு மறுடியுங் கேட்டன் சார். அவுரு சமாளிச்சிகினு சூதானமா ‘காங்கிரஸ்காரங்க அப்டித்தான் சொல்லுவாங்க’ன்னாரு. ‘ஏன், நீங்க சொல்ல மாட்டிங்களா, தீட்டா’ன்னேன். கம்முன்னு இர்ந்தார் சார்.

அதோட வரவேண்டிய்துதான் கஜா.

அப்பால நான் ‘அதிமுகவுக்கு ஜெய் ஹிந்த் தீட்டு இல்லியே, தேமுதிகாவுக்கு தீட்டு இல்லியே, பாஜாகாவுக்கு தீட்டு இல்லியே, கம்முனிஸ்டுக்கு கூட தீட்டு இல்லியே, உங்களுக்கு மட்டும் இன்னா தீட்டு ஒட்டிகிது’ன்னு கேட்டன் சார்.

அப்பவும் கம்முன்னு இர்ந்தார் சார்.

நல்லா கேள்வி கேட்ட, அப்பறம் வரவேண்டியதுதானே?

சார் அப்பால எனக்கு கொஞ்சம் ஏறிகிச்சு. ’நா வேணா ஜெய் ஹிந்த் சொல்றன், நீ விசில் உட்றியா’ன்னு கேட்டன் சார். அதுக்கு சூப்பரா மொர்ச்சி பாத்தாரா, ’இல்ல வந்தே மாதரம் சொல்லவா அதுக்கு விசில் உட்றியா’ன்னு சொன்னப்ப அந்தாளுக்கு கொவம் பொத்துகினு வந்திடுச்சி சார். அப்பாலதான் சார் இந்தியாவுல அல்லாரும் பெருமையா சொல்றத சொல்றதுக்கு கூசுற நீங்க எப்டி இந்தியால ஓட்டு மட்டும் கேக்குறிங்க’ன்னு சொல்ல சொல்ல வேகமா கெளம்பிகினார் சார்.

கஜா திமுகாவுக்குதான் ஜெய் ஹிந்த் அலர்ஜின்னு தெரியுமில்லியா!

சார், அப்பால கிளம்புன ஆளப் புட்சி ‘சரி சரி கோவிச்சிக்காம எனக்காக நீ ஒரே ஒரு தபா ஜெய்ஹிந்த் சொல்லு, நான் விசில் அடிக்கிறேன்’னு சொன்னா அதுக்கும் கம்னுகிறார் சார்.

ஒன்ன மாதிரி நாலு பேர் நல்லா கேக்கணும் கஜா, அப்பதான் ஜனங்க சிந்திப்பாங்க.

அட போங்க சார். முன்னாடி திமுகாகாரங்க வந்தே மாதரத்த எப்டி சொன்னாங்க தெரியுமா சார்?

சொல்லு கஜா?

வந்து எமாத்றோம் வந்து ஏமாத்றோம்னு சொல்லுவாங்க சார். யார்னா பெர்சுங்கள கேட்டுப்பார் சார். ஜனங்க அதெல்லாத்தையும் மறந்துட்டாங்க சார்.

சரி இப்பொ மாறியிருக்கலாமில்லியா?

இல்ல சார். அவுங்க மாறல மக்கள்தான் மறப்போம் மன்னிப்போம்னு அவுங்களுக்கே ஓட்டு போடுறாங்க.

எப்டி அவங்க மாறலன்னு சொல்ற?

சார், ஆ. ராசாவுக்கு பேரு ஒரு மேனனோ ஒரு சிங்கோ ஒரு ராவோ இருந்துதின்னா இப்டி ஆவுமான்னு கேக்குறாங்க சார்.

அப்படியா?

ஆமா சார்.

சரி வா, நம்ம வேலையப் பாப்போம்.

கட்சியா ஒன்னு சொல்லிகிறேன் சார். வந்தே மாதரத்தை வந்து ஏமாத்றோம்னு சொன்ன ஆளுங்களுக்கும் கட்சிக்கும் ஓட்டு போடலாமான்னு மக்கள் யோசிக்கனும் சார்.

3 Replies to “திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை”

  1. நல்ல உரையாடல்தான்.. ஆனால் மக்களின் காதுகள்தான் டமாரச் செவிடாகி பல பத்தாண்டுகள் ஆகின்றனவே.. இப்போதும் கேட்கவில்லையெனில் கடவுள்கூட நம்மைக் காப்பாற்ற முடியாது..

  2. //இப்போதும் கேட்கவில்லையெனில் கடவுள்கூட நம்மைக் காப்பாற்ற முடியாது..//
    ஏப்ரல் 11ஆம்தேதிதினமணியில் மதியின் கார்ட்டூனும், அதற்கு விளக்கமாக, “இப்படிப் பேசறேனு தப்பா எடுத்துக்காதே. ! 66ஆவது முறையுமவரே முத்ஃல்வராகிவிட்டார்னா, அவரும் அவரது கொள்கையும்தான் சரி, ! அதன்பிறகு நானும் அவரை மாதிரியே நாத்திகரா மாறிடறதா இடுக்கறேன் கடவுளே!” என பொதுஜனம் பிள்ளையாரிடம் தெரிவிப்பதும் கானவும்.

  3. சென்னை மொழி நடையாக இருந்தாலும், ஒரு பாமரனின் என்ன ஓட்டத்தை அழகாகக் காட்டியிருக்கிறீர்கள். ஒரு முறை கருணாநிதி, மிகவும் பெருமையாக அந்த நாட்களில் காங்கிரஸ் தொண்டர்கள் “வந்தேமாதரம்” என்று சொல்வதைத் தான் “வந்து ஏமாத்தறோம்” என்று கேலி செய்ததாக ஒரு பேட்டியில் சொன்னார். அது சிறு பிள்ளைகள் சிறு பிள்ளைத்தனமாக உளரும் செயல், அதைப் போய் ஒரு சாதனையாக இத்தனை நாட்கள் கழித்து பெருமையாக சொன்னது அசிங்கமாக இருந்தது. மேலும் ‘வந்தேமாதரம்’ என்பதோ, ‘ஜெய் ஹிந்த்’ என்பதோ கேவலமா? என் தாயை வணங்குகிறோம் என்பதையும், வீரன் செண்பகராமனும், நேதாஜி சுபாஷ் சந்திர போசும் முழங்கிய ‘ஜெய் ஹிந்த்’ எனும் இந்த ‘இந்திய’ தேசம் வாழ்க என்பதும் தவறா? மகாகவி பாரதி “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அவர் முந்தையோர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந் நாடே” என்று பாடி நிறைவில் “பின்னர் அங்கவர் மாய அவருடல் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே” என்கிறான். நம் மூதாதையர், பாட்டன், பூட்டன், முப்பாட்டன் இவர்களெல்லாம் வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாக மாறி இங்கு எங்கும் பரவிக் கிடக்கும் இந்தப் புண்ணிய பூமியை வணங்குதல் தவறா? பகுத்தறிவுப் பகலவன் என்று ஒரு தலைவருக்கு சிலை ஒன்றை வடித்து அதற்கு மாலையிட்டு மரியாதை செய்வது பகுத்தறிவு என்றால், என் முன்னோர் வாழ்ந்து மண்ணோடு மண்ணாக நிறைந்து கிடக்கும் இந்த பூமியை வணங்குதல் அவமானமா? தவறா? தீமையா? இந்த மண்ணுக்கு என்று ஏதாவது பாடு பட்டிருந்தால், இந்த மண்ணில் வாழும் மனிதர்களின் சுதந்திரத்துக்காகப் பாடு பட்டிருந்தால் சிறிதாவது “தேச பக்தி” ஏற்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் சுதந்திரத்தின் விலையைத் தெரிந்து கொள்ளாமலேயே, சுதந்திரத்தின் பலன்களைஎல்லாம், வாரி வாரி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பூமியை மதிக்க மாட்டார்கள். விந்தை மனிதர்கள் கூட்டம். என்று மாறும் இந்த அவலம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *