2 Replies to “சிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்”
என்ன தனலட்சுமி அம்மா, தேர்தல் முடிந்ததா?
முடிஞ்சு போச்சுங்க!
யாரு கெலிப்பாங்க ?
எந்த நாய் கெலிச்சா நமக்கு என்னங்க ஆச்சு?
என்னம்மா இவ்வளவு கோவமா பேசறீங்க, என்ன காரணம்?
ரேஷன் அரிசி தவிர , குடும்பம் நடத்த தேவையான எல்லா சாமானும் எக்கசக்கமாக வெலை எகிறிக்கெடக்குதுங்க. என்னை மாதிரி சாதாரணமான மனுஷாளுங்க எப்படி வாழரதாம்?
அது சரி, விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு எப்படி பொறுப்பு ஆக முடியும் தனலட்சுமி அம்மா?
ஏனய்யா! நல்லா கேட்டிங்களே கேள்வி? மத்திய அரசிலே கூட இவர் குடும்ப மகனும், பேரனும் தானே மந்திரிங்களா இருக்காங்க – அதனாலே விலைவாசியை கட்டுப்படுத்தும் பொறுப்பு இவருக்குத்தான் உண்டு.
அதனாலே இவருக்கு ஒட்டு போடாமே, வேறு யாராவது நல்ல மனுஷாளுக்கு ஒட்டு போட்டியா?
நல்ல மநிஷாளா அதுக்கு எங்கங்க போறது? எவனாவது சுயேச்சைக்கு தான் போடணும். அவனுங்க கெலிக்க மாட்டாங்க. எனவே இருக்கிற திருடன், கொள்ளைக்காரன், மொள்ளைமாரி, கேப்மாரி பசங்களிலே , கொஞ்சம் சுமாரான பொறுக்கிக்கு தான் ஓட்டுபோட முடியும்.
ஏம்மா இப்படி சொல்லறீங்க? பதினெட்டு பேரு நிக்கராங்கரீன்களே ஒருத்தன் கூடவா நல்லவனாக இல்லை?
ஏம்மா ! மஞ்ச கட்சியும் , பச்சை கட்சியும் பிடிக்கல்லேன்னா , தாமரை கட்சி பீஜெபிக்கு ஒட்டு போடலாமேங்க?
ஏங்க, நல்ல மனுஷாளுக்கு சட்ட சபை தேர்தல்லே ஒட்டு போடற அளவுக்கு நம்ம ஜனத்துக்கு துணிச்சல் கிடையாதுங்க. எனவே இருக்கற கேப்மாரிங்கள்ளே குரஞ்ச கேப்மாரிக்கு தான் ஒட்டு போடுவாங்க.
ஏம்மா , இப்படியே எல்லோரும் கேப்மாரி கட்சிக்கே மாறி மாறி ஒட்டு போட்டா நாடு எப்போ முன்னேறும்?
கடவுள் தாங்க இந்த நாட்டை காப்பாத்தணும், ஆனா நிச்சயம் கடவுள் நம்ப நாட்டை காப்பாத்துவார். நிச்சயமா பாருங்க.
தனலட்சுமி அம்மா! நீங்களும் ஒங்க கடவுளும் எப்படியோ போங்க. எனக்கு ஒரே வேதனையா இருக்கு.
பரபரப்பு நிறைந்த தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. என்றுமில்லாத வகையில் மக்கள் பெருமளவில் வாக்களித்து விட்டனர். இந்தத் தேர்தலில் விஞ்சி நின்றது ஊழல் புகார்கள்தான். ஊழலில் பிறந்து வளர்ந்த முதலைகள், இன்று முற்றும் துறந்த முனிவர்கள் போலவும், ஒரு கன்னத்தில் அடித்தவருக்கு மறு கன்னத்தைக் காட்டும் மகாத்மா போலவும் பேசிய வாசாலங்களைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர் மக்கள். எதிர் கட்சிகளை எதிரிகளாகக் கருதக் கூடாது, அவர்கள் கருத்தினைக் கேட்டு , அவர்கள் தொகுதிக்குத் தேவையானவற்றைச் செய்யத் தயங்கமாட்டேன் என்றெல்லாம் உதிர்த்த பொன்மொழிகளைக் கல்வெட்டில்தான் பொறித்து வைக்க வேண்டும். சொந்த ஊரில் பேசிய பேச்சில் சின்ன வயது சம்பவங்களை நினைவு படுத்தி, பணி ஓய்வு பெறும் ஒருவர் பேசுகின்ற முறையில் இருந்தது கண்டு இவர் இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரோ என்று நினைக்கத் தோன்றியது . 90 வயதில் கூட ஓய்வு பெறாவிட்டால் பின்பு எப்படி? விட்டது சனியன் என்ற ஆறுதல் நமக்குக் கிடைக்கவே கிடைக்காதோ? நம் வாழ் நாளெல்லாம் இந்த ஒரு மனிதனின் முகத்தையும், போலித்தனமான பேச்சையுமே கண்டு கேட்டு மாண்டு போக வேண்டியது தானா? இந்த நாட்டில் திறமையுள்ள இளைஞர்களே இல்லையா? எல்லாம் தலை விதி. வடக்கே இருந்து ஒரு இளைஞன். கேரளாவுக்கு வந்து அங்குள்ள முதலமைச்சருக்கு வயதாகிவிட்டது என்கிறான். அந்த இளைஞனுக்கு தமிழ்நாடும், இங்குள்ள முதல்வரின் வயதும் தெரியாமல் போனதன் மர்மம் என்ன? வீராங்கனை இந்திரா அம்மையாரின் உயிருக்கு மதுரையில் உலைவைக்க முயன்ற கூட்டத்தை, நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ராஜீவின் உயிர் ஸ்ரீபெரும்புதூரில் சிதறிப் போக காரணமானவர்கள் என்று விசாரணைகள் சுட்டிக்காட்டியவர்களைச் சுலபமாக மறந்து விட்டு பாராளுமன்றத்தில் விடலைப் பெண் போல கூச்சலிட்டு அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு அம்மையார் இங்கு வந்து தன்னை இந்திரா காந்தி என்று நினைத்துக் கொண்டும், சிறு பிள்ளைத்தனமாகக் கூச்சலிட்டதை எல்லாம் எப்படி ஜீரணிப்பது. இப்படி மக்களுக்கு வித்தை காட்டிய தேர்தல் சந்தடி ஓய்ந்து விட்டது. இனி ஒரு மாதம் காத்திருக்க வேண்டும், மக்கள் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள. பாரத நாடு சுதந்திரமடைந்து அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆகியும், மக்கள் விழித்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மை ஆளப் போகிறவர்கள் மக்களுக்காகப் பணியாற்றுவார்களா, தம் மக்களுக்காகவா என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் வந்து விட்டதா என்பது அன்று தெரிந்து போகும். எல்லாவற்றையும் அந்தப் பரம்பொருள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்கள் மீது அந்த இறைவன் கருணை காட்டுவானா? பொறுத்திருப்போம்.

பதினைஞ்சு பேரு சுயேட்சைங்க. கட்சிக்காரங்களே ஒன்னும் கிழிக்கலே. சுயேச்சைங்க என்னத்தை பண்ணமுடியும். ?