ஹிந்துத்துவமும் தாழ்த்தப் பட்டவர்களும்


சித்திரை 1 : அம்பேத்கர் ஜெயந்தி

ambedkar_jayanthi_quote_tamilhindu(படத்தின் மீது க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

ஹிந்துத்துவம் என்பது எந்த அளவு மேல்சாதி என தம்மை நினைக்கும் இந்துக்களுக்கு சொந்தமோ, அதே அளவு தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம். இந்த ஹிந்துத்துவத்தின் வளர்ச்சிக்கு தாழ்த்தப்பட்டவர்களான வான்மீகி, வ்யாதகீதையை எழுதிய ரிஷி, சொக்கமேளர் ரோஹிதாசர் ஆகியோர், அந்தணரான வசிஷ்டர், ஷத்திரியரான கிருஷ்ணர், வைசியரான ஹர்ஷர், சூத்திரரான துகாராம் போலவே பங்களித்துள்ளனர்.

ஹிந்துக்களின் மானத்தையும் உயிரையும் பாதுகாக்க சித்தநாக மகர் போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனையோ வீரர்கள் பெரும் தியாகங்கள் செய்திருக்கின்றனர். ஹிந்துத்துவத்தின் பெயரால் எழுப்பப்படும் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களும் மேல்சாதி என கருதப்படும் ஹிந்துக்களைப் போலவே தங்கள் வாழ்க்கைகளை தியாகம் செய்து உழைத்துள்ளனர். எனவே ஹிந்துத்துவத்தின் ஆலயம் அவர்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி முழுமையாகத் திறக்கப்பட வேண்டும்.

– போதிசத்வ அம்பேத்கர்

8 Replies to “ஹிந்துத்துவமும் தாழ்த்தப் பட்டவர்களும்”

  1. //ஹிந்துத்துவம் என்பது எந்த அளவு மேல்சாதி என தம்மை நினைக்கும் இந்துக்களுக்கு சொந்தமோ, அதே அளவு தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம்.// 100% true.

  2. ஹிமயம் தொடங்கி குமரி வரையிலான பாரத புண்ணிய பூமியில் பிறந்த அனைவரும் பின்பற்றுவது ஒரே தர்மம்தான். அதைத்தான் ‘இந்து’ என்றான் படையெடுத்து வந்த அந்நியன். இங்கு வாழ்ந்த மக்கள் செய்த தொழிலின் அடிப்படையில் பிரிவுகள் தோன்றின, எனினும் அவற்றில் ஏற்றத் தாழ்வு கிடையாது. இடையில் புகுந்த சில சுய நலக்காரர்கள் தொழிலில் ஏற்றத் தாழ்வு கற்பித்து, அந்தந்த தொழில் செய்வோரைப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்தனர். அவரவர் செய்து வந்த தொழிலின் சூழ் நிலைக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு இவை அமைந்தன. இவற்றால் எல்லாம் மனிதருக்குள் உயர்வு தாழ்ச்சி சொல்லல் பாவம் என்றான் பாரதி. நாம் அனைவரும் பாரதியர்கள், நாம் அனைவரும் பாரதத் தாயின் புதல்வர்கள், மனிதர்கள் தமக்குள்ள கற்பித்த ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்போம், சம நிலையில் வாழ்வோம், ஒற்றுமையே வலிமை. வலிமை மிகுந்த பாரதத்தை உருவாக்குவோம். அதுதான் ஒரு உண்மையான ‘இந்து’வின் கடமை.

  3. வணக்கம்

    தொழில் முறை வர்ணங்கள் கூட இப்போது மலையேறிவிட்டது, சும்மா இருக்கிற மக்களை அரசியல் வாதிகள் சாதியின் பெயரால் உசுப்பேத்தி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ” ராசா தலித் என்பதால் அவரை குறை சொல்கிறார்கள்” என்று காரணம் காட்டி கருணா அவர்கள் சொன்னது போல பல விஷயங்களில் தப்பித்துக் கொள்ளவும், தனக்கு அரசியல் ஆதாயம் தேடவும் மட்டுமே இந்த சாதியத்தை அரசியல் வாதிகள் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறாகள் என்பதுதான் இன்றைய உண்மை.

    தனது குலத்தொழில் செய்து வாழும் மக்கள் இன்று எத்தனை இருக்கிறார்கள் என்று பாருங்கள்? பிறகு எப்படி சாதியை கையிலே எடுக்க முடியும், மரம், தங்கம் இவைகளிலே வேலை செய்பவரை ஆசாரி என்று குறிப்பிடுவதும், வியாபாரம் செய்வோரை வைசியர் என்று சொல்வதும் நடை முறை எனில்
    பல இடங்களில் கடை விரித்து இருக்கும் இஸ்லாமியர்களும் வைசியர்களா?

    ராமசாமி செட்டியார்.m.b.b.s என்று ஒரு நபர் இருந்தால் அவர் யார்? சரி நம்மை ஆளும் , ஆண்ட முதல்வர்கள் சத்திரியர்களா? ஜன நாயக முறையிலே யாரை வேண்டுமானால் தேர்ந்து எடுக்கிறோம், அப்படியானால் ஜன நாயகம் என்பது அரசியலில் மட்டுமல்ல நமது வாழ்விலும் இருக்கவேண்டும், ஆனால் அதை நாம் தவற விடுவது நமது குற்றமே.

    வர்ணத்துக்கும் , சாதிக்கும் அடிப்படையாய் இருக்கும் தொழிலே மாறிய பின்னர் சாதீயம் என்பது வெறும் வெட்டிப் பேச்சு மட்டுமே, அதை நாம் இறுகப் பற்றியிருக்கும் ஒவ்வொரு க்ஷணமும் அரசியல் வாதிகளின் பிடி நம் மீது இருகும் என்பதுவே நிதர்சனம்.

    மேலும் வர்ணத்தாராய் நமது மக்கள் இருந்த காலத்திலேயே தமக்குள்ள தொழில்களை பிரித்துக் கொள்வதற்காகவே இந்த அமைப்பே அன்றி ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக்கொள்ள உருவாகியது அல்ல.

    எவரோ வந்து நமது ஈகோவை ஏற்றி விட்டு அவர்கள் குளிர்காய்கிறார்கள்.
    காயட்டும் தப்பில்லை, அதற்க்கு நாம் ஏன் விறகாக வேண்டும்?

  4. வருணம் இருந்தது ஆனால் பேதம் இல்லை. வசிஷ்டர் அருந்ததியை மணந்தார். 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி மற்றும் பறவை நாச்சியாரை மணந்தார்.

    சமயம் மற்றும் சமூஹம் இதை ஏற்றது மற்றும் அல்லாது போற்றவும் செய்தது.

  5. திரு குழலேந்தி,

    தேசமே தெய்வம் மிகவும் அருமை.

    அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    கலன்

  6. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உண்மை முகத்தை, உயர்ந்த முகத்தை, இக்கட்டுரையாளர் வெளிக்காட்டியிருக்கும் விதமும் அதற்கு வந்துள்ள மறு மொழிகளும் கன கச்சிதமானவை.

    கட்டுரையாளரோடுகூட மறுமொழியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

    சென்ற தமிழக அரசு ஆங்கில ஏப்ரல் 14 ஐ அம்பேத்கரின் பிறந்த நாளாக அறிவித்து, ஏப்ரல் 15 அல்லது 13 ல் சித்திரை பிறந்தால், தமிழக அரசு விடுமுறை இல்லாத, இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது.

    ஆனால், இக்கட்டுரை, அழகாக, ‘சித்திரை 1 அம்பேத்கர் பிறந்த நாள்’ என்று கூறி, சரியான தருணத்தில், பொருத்தமான விஷயத்தைத் தந்திருக்கிறது. இப்படிப் பார்த்தால், ஆங்கிலக் கணக்குப் பாராமல், என்று சித்திரை பிறக்கிறதோ அன்றுதான் அண்ணல் பிறந்த நாளாகும்.

    இவ்வாங்கில ஆண்டில் (2012), ஏப்ரல் 13 அன்று பிறக்கும் தமிழ்ச் சித்திரைப் புது வருஷ வாழ்த்துக்களை இறைவன் அனைத்துத் தமிழர் மீதும் பொழியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *