ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி [ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை ]
தமிழில்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பொற்களஞ்சியம் (கோவில் காணிக்கைகள்) கோவிலுக்குச் சொந்தமா இல்லை அரசுக்குச் சொந்தமா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் அரசுக்கே சொந்தம் என்றும், வேறு சிலர் கோவிலுக்குச் சொந்தம் என்றும் இரு தரப்பாக கருத்துக் கூறுகின்றனர். ஆனால் அவர்களில் எவருக்கும் பழமையான சம்பிரதாயங்களும் தெரியவில்லை, நவீனகால நிலமையும் புரியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

பாரத நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே, இந்த மாபெரும் களஞ்சியத்தைக் கண்ணும் கருத்துமாகக் கட்டிக்காத்ததற்காக, திருவிதாங்கூர் மஹாராஜாவுக்கும் பத்மனாப தாசர்களான அவரது குடும்பத்துக்கும், உயர்ந்த மரியாதையைச் செலுத்த வேண்டும்.

padmanabhaswamy-golden-statue

ஆனால், இங்கு விவாதிப்பவர்களின் சிந்தனையில் தோன்றாத கேள்வி, இந்தக் காணிக்கைகள் உண்மையில் யாருக்காக அளிக்கப்பட்டன என்பது. இவை பத்மநாப சுவாமிக்கே நேரடியாக பக்தியுடன் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இது போன்ற காணிக்கைகள், கடவுளுக்கே நேரடியாக அளிக்கப்பட்டன, கோவில் என்ற அமைப்புக்கு அல்ல என்பதை, நமது நாடெங்கிலும் பரவியுள்ள, வரலாற்றுத் தொடக்க காலம் முதல் நவீனகாலம் வரைக்குமான காலத்தைச் சேர்ந்த, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள், சாசன்ங்கள் வழியாக அறிகிறோம். பொ.மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து நவீன காலம் வரை இத்தகைய கொடைகள் கோவிலில் உறையும் இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பொ.பி. 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய கல்வெட்டுக்கள் காணிக்கைகள் கோவிலின் தெய்வத்திற்குக் செலுத்தப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. கேரளாவிலும் 9ம் நூற்றாண்டிலிருந்து பல ஆதாரங்கள் தெய்வங்களுக்குக் காணிக்கைகள் செலுத்தப்பட்டதைப் பதிவு செய்துள்ளன. [பொ.பி (CE) – பொது யுகத்திற்குப் பின், Common Era, Circa; பொ.மு (BCE) – பொதுயுகத்திற்கு முன்]

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் (juristic entity) போலக் காண முடியுமா என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியாகும். இத்தகைய “கடவுளால்” சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா? நமது முன்னோர்கள் இந்த நுட்பமான, பூடகமான இறையியல் கொள்கையைக் கடந்து சென்று, நடைமுறைத் தளத்தில் கடவுள் தனது பிரதிநிதி மூலமாக செயல்படுகிறார் என்ற விளக்கத்தையும் அளித்தனர். இதன் அடிப்படையிலேயே, சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் பெயரிலும், விஷ்ணு கோவில்களில் விஷ்வக்சேனரின் பெயரிலும், இதே ரீதியில் மற்ற தெய்வக் கோயில்களிலும், கொடுக்கல் வாங்கல் முதலான நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன.

19, 20-ம் நூற்றாண்டுகளில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் பல பகுதிகளிலும் நடந்த பல நீதிமன்ற வழக்குகளில் இதே போன்ற கேள்வி எழுப்பப் பட்டது. இந்த எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் கோவிலில் உறையும் கடவுள் சட்ட வரையறைக்குட்பட்ட நபராக கருதப் படுவார் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளன. சமீபகாலங்களில், பிரபல லண்டன் பத்தூர் நடராஜர் சிலை வழக்கின் போது, மேற்கத்திய நாடுகளில் கடவுள் எனப்படுபவர் சட்ட வரையறைக்குட்பட்ட நபராக ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும், இந்திய மற்றும் தெற்காசிய நாடுகளில் இது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம் என்று லண்டன் உயர்நீதி மன்ற நீதிபதி தான் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டார். ”சிதிலமடைந்த சோழர் காலத்திய பத்தூர் கோவிலில் ஒரு கல்லாவது எஞ்சி இருக்கும் வரையில், சட்டத்தின் பார்வையில் அக்கோவில் அங்குள்ளது. அவ்வாறு கருதப்படும் வரையில், அக்கோவிலைச் சேர்ந்த சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை அக்கோவிலுக்கு உள்ளது. எனவே, [லண்டனுக்கு கடத்தி எடுத்துவரப்பட்ட] அந்த பஞ்சலோக நடராஜர் திருவுருவம் மீண்டும் கோவிலுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் அந்த நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தியாவில் நடத்தப்பட்ட பல வழக்குகளின் தீர்ப்புக்களை நன்கு ஆராய்ந்த பின்பே தான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

padmanabhaswamy-templeஹிந்து தர்ம சாஸ்திர விதிப்படி, ஒருவர் சட்டப்படி அவருக்கு உரிமையில்லாத பொருளைக் கொடையாக வழங்க இயலாது (சட்டத்துக்குப் புறம்பான செல்வத்தை பெறுவதையோ அதற்கு ஈடாக புண்ணியத்தை வழங்குவதையோ பழங்கால இந்திய தர்மசாஸ்திர சட்டங்கள் அனுமதிப்பதில்லை). சட்டப்படி உரிமையுள்ள ஒரு பொருளை, கொடையாக ஒருவர் வழங்குவது ‘தானம்’ எனப்பட்டது. தானமாகப் பொருளையோ சொத்தையோ கொடுப்பவர், அதன் மீதுள்ள தனது சட்டப்படியான உரிமையை முழுமையாக இழக்கிறார் என்பதற்கு அறிகுறியாக, தானம் வாங்குபவரின் கைகளில் தண்ணீரை தாரை வார்ப்பார். சரியாக 900 ஆண்டுகளுக்கு முன், பொ.பி. 1111ம் ஆண்டில் நடந்த ஒரு சிறப்பு மிகுந்த நிகழ்வு கல்வெட்டுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆண்டில் குலோத்துங்கச் சோழனும் அவனது பட்டத்தரசியும் காஞ்சிபுரம் ஊரகம் (திருக்கச்சி ஊரகம்) கோயிலுக்கு விஜயம் செய்தனர். ஆலயத்தில் உறையும் இறைவனின் கரம் மீது நீரை தாரை வார்த்து, நீர் நிரம்பிய பொற்கலத்தையும், நிலபுலன்களையும் சோழன் தானமாக வழங்கினான். இவ்வாறு தானம் வழங்கியபின் அச்சொத்துக்களின் மீது அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதும் புலப்படுத்தப் படுகிறது.

இதுபோலவே, ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்துள்ள நிதிக்குவைகள், நகைகள் , காசுகள் எல்லாம், அரச குடும்பமும் அந்நாட்டுப் பொதுமக்களும் செழிப்பாக வாழ வேண்டும் என்ற மனப்பூர்வமான வேண்டுதல்களுடனும, ஆழ்ந்த பக்தியுடனும் கடவுளுக்கு நேரடியாகக் காணிக்கையாக அளிக்கப் பட்டவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பண்டைய வரலாறு, நவீன வரலாற்றுத் தரவுகள் இரண்டையும் சரியாக அறியாத சில பேராசிரியர்கள், போர்களில் கொள்ளையடித்ததன் மூலம் அரசர்கள் இச்செல்வத்தைச் சேர்த்தனர் என்று கூறிச் செல்கின்றனர். ஆனால் பண்டைய இந்து சட்டங்களின் படியும், ராஜ தர்மத்தின் படியும், போரில் வென்ற அரசன் (தான் வென்ற நாட்டின்) செல்வங்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம், அவற்றை சட்டப்படி உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இது ஏதோ புதைத்து வைக்கப்பட்ட செல்வம் என்று கூறி ‘புதையல் சட்டத்தின்’ (Treasure Trove Act) கீழ் இவற்றை வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், இச்செல்வங்கள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சைக்கே இடமில்லை. இவை ஏதோ அகஸ்மாத்தாக தோண்டி எடுக்கப் படவில்லை. இந்தச் செல்வங்கள் பற்றிய தகவல் வாழும் நினைவுகளாகவே ஆவணப் படுத்தப் பட்டிருக்கின்றது. இவை அரசகுடும்பத்தினரால், பிற்கால உபயோகத்திற்காகவோ, நெருக்கடி நிலைகளைச் சமாளிப்பதற்காகவோ கோவில் களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பதும், இவற்றிற்கு ஸ்ரீபத்மநாபனே உரிமையாளர் என்பதும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும்.

இவை அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டுமென்றும் ஒரு சாரார் கோருகின்றனர். லண்டன் உயர்நீதி மன்ற வழக்கில், பத்தூர் நடராஜர் சார்பாக நான் சாட்சியாக ஆஜரான போதும், இதே போன்ற கேள்வி எழுந்தது. ”இந்தச் சிலையைத் திருப்பித் தந்தால், நீங்கள் கோவிலில் வைப்பதை விரும்புவீர்களா, அல்லது பொதுமக்கள் பார்க்கும்படி அருங்காட்சியகத்தில் வைப்பதை விரும்புவீர்களா?” என்று வழக்கை விசாரித்த நீதிபதி கேட்டார். ஒரு ஹிந்துவாக அல்லாமல், புதைபொருள் ஆராய்ச்சியாளன் என்ற கோணத்திலிருந்து நான் பதி̀லளிக்க வேண்டும் என்று கோரினார். அப்போதும், கோவிலில் இவ்விக்கிரகம் இருப்பதையே விரும்புவேன் என்று நான் கூறினேன். “அது ஏன்?” என்று கேட்டார் நீதிபதி.

”இந்தத் திருவுருவத்தைக் காணிக்கையாக அளித்தவர், இதனை வெறும் காட்சிப் பொருளாக்கும் நோக்கத்துடன் கொடுக்கவில்லை. பக்தியுடன் ஆராதிக்க வேண்டும், இசை உள்ளிட்ட தெய்வீக்க் கலைகளால் வழிபட வேண்டும் என்றெல்லாம் கருதி, ஒரு புனிதக் கொடையாகவே அளித்திருக்கிறார். அதனால் தான்” என்றேன்.

என் கருத்துடன் உடன்பட்ட அந்த நீதிபதி, அவ்வாறே அறிவுறுத்தி, விக்கிரகம் அந்தக் கோவிலுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஒரு அந்நிய நாட்டு நீதிமன்றமே, நமது ஆலயங்களின் புனிதத் தன்மையையும், நமது சமய உணர்வுகளையும் அறிவியல் நோக்கில் அணுகி, புரிந்து கொண்டு, சொத்துக்களை கோவிலுக்குத் திருப்பியளித்திருக்கிறது. எனவே, இது பற்றி ஆதாரமற்ற கருத்துகளைக் கூறும் சுயதம்பட்ட ‘வரலாற்று ஆய்வாளர்களை’ நாம் பொருட்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.

padmanabhaswamy-maharaja-marthanda-varma-in-procession

இந்திய அருங்காட்சியகங்களில் நமது விலை மதிக்க முடியாத அரிய பல செல்வங்கள், எவ்விதப் பராமரிப்புமின்றி குப்பை போல போட்டு வைக்கப் பட்டிருப்பதையும் நாம் மறந்து விட வேண்டாம். அருங்காட்சியகத்தில் வைப்பதைக் குறித்துப் பேசும்போது, இச்செல்வங்களை யார் நிர்வாகம் செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நிச்சயமாக அரசால் அது முடியாது. முதலாவதாக, இந்திய அரசு மதச்சார்பற்றது என்று தன்னை பிரகனப் படுத்திக் கொண்டுள்ள ஒன்று. இரண்டாவதாக, கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்.

நடப்பு விதிகளின்படி, சட்டபூர்வமாக இச்செல்வங்கள் மீது உரிமையுள்ளவர்களே இவற்றை நிர்வாகம் செய்ய வேண்டும். எனவே, பன்னெடுங்காலமாக இவற்றைக் கட்டிக்காத்து வந்த திருவிதாங்கூர் அரச குடும்பமே தொடர்ந்து தர்மகர்த்தாக்களாக ( டிரஸ்டிகளாக) இருக்க வேண்டும். இச்செல்வத்தை யாரும் தகாத வழியில் உபயோகித்து விடாமல், ஆவன செய்து பாதுகாத்து வரவேண்டும். இது வரை இருந்த நிலையே தொடரும் என்று மாநில அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான நிலைப்பாடு. உயர்நீதிமன்றத்தின் மதிப்பிற்குரிய நீதிபதிகளும் இவ்வாறே உத்தரவிட்டிருக்கின்றனர் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இந்தக் களஞ்சியத்தின் மூலம், இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது.

Art Gallery 165டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.

jeyamohan-2011ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் களஞ்சியம் & தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகள் குறித்து திரிபுகளையும், பொய்யான செய்திகளையுமே தமிழ் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இச்சூழலில், சிறந்த இலக்கியவாதியும், சிந்தனையாளருமான ஜெயமோகன் ஆதாரபூர்வமாக, வாசகர்களுக்கு தெளிவு தரும் வகையில், தனது வலைப்பதிவில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றைக் கீழ்க்கண்ட இணைப்புகளில் படிக்கலாம் –

அனந்தபத்மநாபனின் களஞ்சியம்
பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்
அனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?
பத்மநாபனின் செல்வம் – மேலும் விளக்கம்

67 Replies to “ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?”

  1. ஆம் ஸ்ரீ பத்மனாப ஸ்வாமியின் பொற்களஞ்சியம் அவருக்கே சொந்தம். தொல்லியல் அறிஞர் சரியான வாதங்களை அறிவு பூர்வமாக வைத்துள்ளார்.
    இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு ஹிந்துவும் உணர்வு பூர்வமாக இதனை நம்புகின்றோம். நமது உச்ச நீதி மன்றமும் மத்திய அரசும் அதனை மதிக்கவேண்டும். மதிக்கும் என நம்புவோம்.

  2. பத்மநாபசாமி கோயில்-புட்டபர்த்தி ஆசிரம சொத்துகள்: மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்-வீரமணி

    https://thatstamil.oneindia.in/news/2011/07/05/temple-money-spent-national-development-veeramani-aid0090.html

    சென்னை: இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும், மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டில் இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

    ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, முதல் போடா மூலதனப் பெருக்கம் கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அங்கே அதைக் “கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளிகள், கடவுள்கள்.

    இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளிகள்.

    மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளிகள்

    இவர்களை ஒழிப்பது, மற்ற மேலே சுட்டப்பட்ட இருவகை முதலாளிகைளயும் ஒழிப்பதை விட எளிது ஆகும்! ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியுமே அவை உண்மையான சமதர்ம அரசுகளாக இருந்தால்.

    ஆனால், கோயில், மதம், உயர் ஜாதி இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை. சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசால்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் ஆதிக்கத்தின்கீழ் அதன் வருமானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதத் திருமேனிகள் கூட்டம் வழக்குப் போட்டது; அது தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் மீது மேல்முறையீட்டினை (அப்பீல்) உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளனர்! வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. (புதிய அரசு அதில் விட்டுக் கொடுத்தால் அது மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது உறுதி!)

    ஆந்திராவில் புட்டபர்த்தி சாய்பாபாவின் மடத்தின் சொத்துகளை நிர்வகிப்பது முதல், பல பிரச்சனைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன.

    சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது!

    மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் உயர் ஜாதி ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.

    ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டு உயர் ஜாதி தொழிலதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபா சமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீள்வதற்கே இப்படி ஒரு “அற்புத யோசனை” அறிவுரை நிபுணர்களால் ‘அவாளுக்கு’ சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்!

    தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்தவண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன.

    பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடத்திச் செல்லப்பட்டவை என்று ஆந்திர போலீசார் கருதுகிறார்கள். கடந்த முறை யஜுர் வேத மந்திர் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் மதிப்பிடப்பட்டு, அவை வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டதாம்!

    மீண்டும் அதே யஜுர்வேத மந்திரில் அனந்தப்பூர் மாவட்ட இணை ஆட்சியர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. சாய்பாபா அறை, அவரது உதவியாளர் சத்யஜித்தின் அறை, சிறப்பு அலுவலக அறை, உணவு அருந்தும் அறை ஆகியவைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன!

    சாய்பாபா அறக்கட்டளையின் உண்மை சொத்துகளின் மதிப்பு பற்றி அதன் நிர்வாகிகள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை அங்கு மோசமாகியுள்ளது எனத் தெரிய வருகிறது!

    பத்மநாபசாமி கோயிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகள்…

    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அறைகள் திறக்கப்பட்டு நகைகள் எண்ணப்பட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் போட்ட வழக்கில், இரண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அய்வர் ஆக எழுவர் கொண்ட குழுவினரின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கப்பட்டதையொட்டி, கடந்த சில நாள்களாக அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!

    திருப்பதி கோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது!

    கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில் ‘கோயில் பெருச்சாளிகள்’ கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்?

    குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே! கோயில் பூஜை, புனளிகாரம் என்பவைகளால் வழக்கம்போல் நடைபெறுவதற்குப் பதிலாக இம்மாதிரி அரசு எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிப்பது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதே!

    அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக!

    இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
    ____________________________

    It is a crime to keep this wealth like dead while people are starved and homeless – Francis Borgia, abdul khader, Riyaz Ahamed, Bineesh, basheer, Rohit, Krishnamoorthy

    https://www.petitiononline.com/mod_perl/signed.cgi?rajche62&1

    ________________________

    Veteran jurist V.R. Krishna Iyer said the treasure should be handed over to a national trust and spent for the welfare of the poor.

    https://www.asianage.com/india/unholy-controversy-over-holy-treasure-sree-padmanabha-swamy-temple-975

  3. வீரமணி போன்ற குப்பைகளின் உளறல்களை வெளியிடுவதற்கு என்று அவர்களே நடத்தும் பல வீணாய்ப் போன பத்திரிகைகள் உள்ளனவே ? அவற்றை மீண்டும் வெளியிட்டு தமிழ் ஹிந்துவின் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
    ஸ்பெக்ட்ரம் ஊழலில் காணாமல் போன ஒன்றே முக்கால் லட்சம் கோடி என்ன ஆனதென்றே தெரியவில்லை, ஸ்விஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு கொண்டு வர வக்கில்லை, ஆனால் ஹிந்துக்களின் கோயிலில் கிடைக்கும் சொத்துக்களை மட்டும் உடனே அரசே எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.இதற்கு விளக்கு பிடிக்க கிருஷ்ணையர் போன்ற இடதுசாரி முகமூடிகள் வேறு….நல்ல வேளை இது போன்ற புதையல் எதுவும் தமிழகத்து கோயில்களில் கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் நம் தமிழின தலைவர்கள் வீட்டுக்கு நேராக சுரங்கப்பாதை அமைக்கப் பட்டிருக்கும். [ இந்தக் கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை தொடர்ந்தால் தமிழக கோயில் சொத்துக்கள் என்ன ஆயின என்ற தகவலை திரு .ஜெயமோகன் அவர்கள் விளக்கியுள்ளார். ]

  4. \\\\\\இது வரை இருந்த நிலையே தொடரும் என்று மாநில அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான நிலைப்பாடு. உயர்நீதிமன்றத்தின் மதிப்பிற்குரிய நீதிபதிகளும் இவ்வாறே உத்தரவிட்டிருக்கின்றனர் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.\\\\

    மகிழ்ச்சி நிலைபெற பத்மநாபஸ்வாமி அருள் ஓங்குக.

    இன்றும் திருமலையிலும் தங்கமும் வைர வைடூர்யங்களும் பெருமாளுக்கு காணிக்கையாக பக்தர்களால் அளிக்கப்படுகிறது. ஒரு நூறு வருஷம் பின்னர் 2100 ல் preconceived notions உள்ள ஹிந்து சொத்தை அபகரிக்க எண்ணும் அரசியல் வ்யாதிகள் திருமலை சொத்தைக் கூட பூதக்கண்ணாடி அல்லது பிசாசுக் கண்ணாடி மூலம் ஆராய்ச்சி செய்து அல்லது ஆராய்ச்சி செய்ததாக புரளி பரப்பி மீடியா காரர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இவையெல்லாம் ராஜா யுத்தத்தில் மற்ற நாட்டிலிருந்து கொள்ளையடித்த சொத்து என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஹிந்துக் கோவில்களை மதசார்பற்ற அரசு நிர்வாகம் செய்வதே ஹிந்து மதத்தின் மீதான மதசார்பின்மையின் ஆக்ரமிப்பே. புத்தி சார்ந்த வாதம் முன்வைத்த ஸ்ரீ நாகசாமி அவர்களுக்கு கோடி ப்ரணாமங்கள். பத்மநாபஸ்வாமி சொத்தை அரசு சொத்தில் சேர்ப்பது என்பது பகல் கொள்ளை.

  5. ஏன் கலைஞ்சர் வீட்டிலும் சோனியா வீட்டிலும் ராஜாத்தி வீட்டிலும் உள்ள கருப்பு பணத்தை முதலில் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டியதுதானே? வீரமணி நிர்வகிக்கும் கழகத்திற்கு எத்தனை கோடி சொத்துகள் உள்ளது இதுவும் பொது மக்களிடமும் பகுத்தறிவு வாதிகளிடமும் இனாமாக பெறப்பட்டு (பெரும்பகுதி மிரட்டி பிடுங்கி)பின்னர் கல்லுரி பல்கலை கட்டி அங்கு சம்பாதிக்கப்பட்ட மற்றும் தனக்கு திமுக சார்பில் தரப்படும்
    2 எம் எல் எ சீட்டுகளையும் குறைந்தபட்சம் ஒரு 5 கோடிக்காவது ஒவ்வோர் சீட்டையும் விற்று கல்லா கட்டிய பணம் தானே அவற்றை எடுத்து எத்தனை ஏழைகளுக்கு வீடு கட்டி தரலாமோ அதை முதலில் செய்ய வேண்டியது தானே? பெரியார் மனியம்மையில் பயிலும் மாணவிகள் எல்லோரும் வசதி இல்லாதவர்களா என்ன? இங்கு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவிகளுக்கு மட்டுமே கல்வி,ஏழை குடும்பத்தவர்க்கு மட்டுமே கல்வி என்று நடைமுறைபடுத்த வேண்டியதுதானே? இங்கு படிப்ப்புக்கு கல்வி கட்டணம் வசூலிக்க படுவதில்லையா? கடந்த ஆண்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 41 பல்கலையில் இதுவும் ஒன்றுதானே?
    இவர்களின் சொத்துகளை ஏகபோகமாக இவர்கள் அனுபவிக்கலாமா?
    இவர்கள் என்ன சமத்துவவாதிகளா? பிறவி முதலாளிகளா?
    பெரியார் திடலை அல்லேளுயாவுக்கு வாடகை விடும்போது காசு வாங்கும் போது எங்கே போனது அந்த புத்தி?
    ஏன் அதிலேயே வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்ட இலவச பட்டா கொடுத்து இவர் சொல்லிற்கு இவரே முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது தானே? அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்கிற மாதிரி இருக்கு
    இவர்களின் பணமும் சொத்தும் எத்தனை பேரை மிரட்டி பிடுன்கியதோ?
    பக்தர்கள் விரும்பி கொடுக்கும் தர்மங்கள் மற்றும் அரசர்கள் கொடுத்த மானியங்களால் உண்டான கோயில் சொத்துகளை பற்றி பேச இந்த ——-களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
    போய் சர்சு மற்றும் பள்ளிவாசல் சொத்துகளை இலவசமாக மக்களுக்கு செலவிட அறிவுரை சொல்ல தைரியம் உண்டா? இந்த முதுகெலும்பில்லாத பிறப்புகளுக்கு?
    வெளிநாட்டிலிருந்து மதமாற்றத்திற்கு குவியும் பணத்தில் பிடுங்க வேண்டியதுதானே aaniyai

  6. Sir-
    When there umpteen sources are available to print the thoughts of So-called Periyar and Self-respect Veeramani, why you are putting their thoughts here?

    Let Veeramani answer the following questions.

    1. Who are the real owners of the Hindu temples particularly in TN for the last forty five years?
    If he says, Government, then how much of temples wealth has been plundered by politicians?

    2. Second, what so called periyar blabbered was before Independence, which is not applicable
    now, as the government has taken over all the temples and the administration is done by
    government appointed atheists, so who to be blamed?
    3. Nobody forced you to go to a brahmin, who is having darbha and panchanga in his hands.
    Dont go to him, live without his help or seeking his help. Why blame them as if they are
    plunderers of temple and their wealth?
    4. Let Veeramani reply, whether he has been honest all these days by paying taxes
    correctly. Who has been ruling all these years the Glorious TN? How much wealth the so-
    called politicians amassed and in what way? Could he explain? The properties of the
    temples are there for centuries gifted on various occasions by various sections of the
    society. Is he ready to allow Kolathur Mani and Seeman into his trusts? Will his trust funds
    be used for general or public purposes?
    5. Lastly, he does not know what is culture and what is cultured civilisation? He is in this
    samsaara like a dirty pig lying in filth. He cannot and should not try to criticise those
    outside of the filth. Industries alone are not the life of the humanity. Excess industrialisation
    leads to chaos, like pollution, shortage of power, etc., Whenever he wants to blabber let
    him stand near a wall and blabber like a dog yelling at a mountain.

  7. (edited and published)

    வீரமில்லா மணீயை ஒரு கை பார்க்கலாம் என்று கீழே உள்ள லிங்கில் சென்றால் அங்கு ஏற்கன்வே வீரமணீயை பல பேர் கிழித்து போட்டு இருந்ததை பார்க்க நேர்ந்தது 🙂

    https://thatstamil.oneindia.in/news/2011/07/05/temple-money-spent-national-development-veeramani-aid0090.html

    எனக்கு பிடித்த பின்னூட்டங்கள் சில:

    Raja Ramaswamy 15 Jul 2011 07:50 pm
    Veeramany, Can you compare yourself or your political class with the honest rulers of Travancore? Stay off from temple matters! Go and play with Karuna

    Dhanapradap Myilswamy 06 Jul 2011 08:23 pm
    செருப்பு பிஞ்சு போகும் வீரமணி அவர்களே

    rengarajan a 05 Jul 2011 03:35 pm
    பெரியார் சொத்துகளை நீ அரசாங்கத்திடம் முதலில் கொடு. வெங்காயம்.

    Indian s 05 Jul 2011 03:33 pm
    இத்தனை நாட்களை கோயில் சொத்துக்களை கொள்ளை அடுச்சு தானே வாழறீங்க உங்ககிட்ட கேட்ட வேற என்ன சொல்லுவீங்க……..

    gnanasekar s 05 Jul 2011 07:03 pm
    வந்துட்டாரு அண்ணாத்த வீரமானமணி இவரே பெரியார் அறக்கட்டளையின் தொத்த சாப்பிட்டுக்கிட்டு…………

    Ezhumalai PMP 05 Jul 2011 09:09 pm
    அரசியல்வாதிகள் ஊழல், லஞ்சம் மூலம் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வது பற்றி நீதிமன்றமோ, யாராவதோ கேட்டால் உடனே ஒடுக்குதல், அடக்குமுறை என்று நீட்டி முழக்குவது. செல்வச் செழிப்பை தனது தேசத்தில் வளர்த்து, தன்னிடம் இருந்த செல்வத்தை ஆலயத்துக்குத் தானம் செய்த பணத்தை மக்கள் நலப்பணிகள் என்று கதை சொல்லி, அதன் மூலமும் மேலும் சொத்து சேர்க்க அலையும் கூட்டத்தின் தலைவன் மி.கி. வீரமணி என்றாலும் மிகையாகாது. ஆலயத்தின் சொத்த்தைப் பொதுச் சொத்தாக்குவது வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்.

  8. அன்புள்ள களிமிகு கணபதி ,

    பொது சொத்து பல இடங்களில் சூறையாடப்படுகிறது. ஆனால் அதற்காக அந்த நிறுவனங்களை அவதூறு சுமத்தி அழிக்க நினைக்கும் கும்பலை யாரும் அனுமதிக்க முடியாது.

    நீங்கள் குறிப்பிட்ட லிங்கில் சில இஸ்லாமிய மற்றும் சில கிறித்தவ நண்பர்கள் இந்த சொத்தை சூறையாட ஆசைப்பட்டு கடிதம் எழுதியுள்ளார்கள்.

    இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது, கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகளில் ஏராளமான இந்து கோயில்கள் சூறையாடப்பட்டன. அதன் விளைவாக சில கோயில்களில் உள்ள பொக்கிஷத்தை புதைத்தும், மறைவிடங்களிலும் வைத்து நம் முன்னோர் பாதுகாத்தனர். இந்த சொத்து முழுவதும் இந்துக்களால் , இறைவழிபாட்டுக்கென்று கொடுக்கப்பட்ட சொத்து. இதில் பங்கு கேட்க விரும்பும் இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் திரும்பவும் தாய் மதத்திற்கு தாராளமாக திரும்பி வரலாம்.

    சொம்பு வீரமணிக்கு ஒரு கேள்வி , வக் போர்டு சொத்துக்களிலும் , சில மாதாகோயில் சொத்துக்களையும் நிர்வகிப்போரில் சிலர் , சூறையாடிவிட்டதாக செய்தித்தாள்களில் அடிக்கடி வழக்கு செய்திகளும், புகார்களும் வருகிறதே, அவற்றையும் பொதுமக்களின் சொத்து என்று சொல்லி , அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று , போராடு மகனே, உன் கதி என்ன ஆகிறது என்று பார்ப்போம் .

    திருப்பதி கோயில் சொத்தை கொள்ளைஅடிக்க முயன்றவன் பரலோகம் போய் சேர்ந்துவிட்டான். அனந்த பத்மநாப சாமி கோயில் சொத்தை கொள்ளை அடிக்க நினைக்கும், சில திக சொம்புகளும், மதமாற்ற வியாபாரிகளும் அதே நிலை அடைவார்கள்.

  9. Wealth found underground a hindu temple is asked to be distributed for the welfare of the poor but will that be the same attitude in case of wealth found under a church or a mosque. Hindu temples are unfortunately been managed by the state govt. and the benefit of the income of these temples are not given to the hindus alone but to the entire society. Girl children of minority groups are given scholarships, the money comes from the tax income of the govt. to which the hindus also contribute. When I make such demands for hindus, I am termed a communalist. But hindus of low income or high income groups are not given any preference in the matter of education and employment. The category of minority educational institutions do not give any preferential seats to hindus. But when huge wealth was discovered underneath a hindu temple, there are many claimants. Some want it to be given to the state govt. for distribution to all the poor people, some want it at the center in the form of a trust, nobody says hindus should be the beneficiaries. Nobody says let hindu colleges be opened, let hindu universities be started, let there be a revival of hinduism, let hindu research centers be opened, let hindu welfare societies be formed so that poor hindus may be professionally educated so that their living standards be elevated. Wherever hindu temples were destroyed, such temples are to be reconstructed. Whomever have gone out of hinduism be brought back to hinduism. Hindu temples destroyed anywhere in the country, should be rebuilt to its original glory.
    Padmanabhaswamy temple at Thiruvananthapuram is a private temple run by a trust. The wealth found in the temple belongs only to the temple and would be utilised as decided by the court or the trust. Local people are even opposed to any museum authorities coming and taking stock of the situation. We know from experience that anytime the coins are allowed to be counted, there will be shortage on each count. They say let things be.

  10. Rahul Gandhi: “I feel ashamed to call myself an INDIAN after
    seeing what has happened here in UP”.

    Dear Rahul,

    YOU REALLY WANT TO FEEL ASHAMED???????

    But don’t be disappointed, I would give you ample reasons to
    feel ashamed… You really want to feel Ashamed..?

    First Ask Pranav Mukherjee, Why isn’t he giving the details of
    the account holders in the Swiss Banks.

    Ask your Mother, Who is impeding the Investigation against Hasan
    Ali?

    Ask her, Who got 60% Kickbacks in the 2G Scam ?

    Kalamdi is accused of a Few hundred Crores, Who Pocketed the
    Rest in the Common Wealth Games?

    Ask Praful Patel what he did to the Indian Airlines? Why did Air
    India let go of the Profitable Routes ?

    Why should the Tax Payer pay for the Air India losses, when you
    intend to eventually DIVEST IT ANYWAY!!!

    Also, You People can’t run an Airline Properly. How can we
    expect you to run the Nation?

    Ask Manmohan Singh. Why/What kept him quiet for so long?

    Are Kalmadi and A Raja are Scapegoats to save Big Names like
    Harshad Mehta was in the 1992 Stock Market Scandal ?

    Who let the BHOPAL GAS TRAGEDY Accused go Scot Free? ( 20,000
    People died in that Tragedy)

    Who ordered the State Sponsored Massacre of SIKHS in 84?

    Please read more about, How Indira Gandhi pushed the Nation
    Under Emergency in 76-77, after the HC declared her election to Lok Sabha Void!

    WHY ONLY HIGHLIGHT THIS ARREST?

    Dear Rahul, to refresh your memory, you were arrested/detained
    by the FBI the BOSTON Airport in September 2001.

    You were carrying with you $ 1,60,000 in Cash. You couldn’t
    explain why you were carrying so much Cash.

    Incidentally He was with his Columbian girlfriend Veronique
    Cartelli, ALLEGEDLY, the Daughter of Drug Mafia.

    9 HOURS he was kept at the Airport.

    Later then freed on the intervention of the then Prime Minister
    Mr.Vajpayee.. FBI filed an equivalent of an FIR in US and released him.

    When FBI was asked to divulge the information, by Right/Freedom
    to Information Activists about the reasons Rahul was arrested … FBI
    asked for a NO OBJECTION CERTIFICATE from Rahul Gandhi.

    So Subramaniyam Swami wrote a Letter to Rahul Gandhi, ” If you
    have NOTHING to HIDE, Give us the Permission”

    HE NEVER REPLIED!

    Why did that arrest not make Headlines Rahul? You could have
    gone to the Media and told, “I am ashamed to call myself an INDIAN?”.

    Or is it that, you only do like to highlight Symbolic Arrests
    (like in UP) and not Actual Arrests ( In BOSTON)

    Kindly Clarify…..

    In any case, you want to feel ashamed, Read Along…

    YOUR MOTHER’S SO CALLED SACRIFICE OF GIVING UP PRIME MINISTER
    SHIP in 2004.

    According to a Provision in the Citizenship Act.

    A Foreign National who becomes a Citizen of India, is bounded by
    the same restrictions, which an Indian would face, If he/she were to
    become a Citizen of Italy. (Condition based on principle of reciprocity)

    Now Since you can’t become a PM in Italy, Unless you are born
    there. Likewise an Italian Citizen can’t become Indian PM, unless He/She
    is not born here!

    Dr. SUBRAMANIYAM SWAMI (The Man who Exposed the 2G Scam) sent a
    letter to the PRESIDENT OF INDIA bringing the same to his Notice.

    PRESIDENT OF INDIA sent a letter to Sonia Gandhi to this effect,
    3:30 PM, May 17th, 2004.

    Swearing Ceremony was scheduled for 5 PM the same Day.

    Manmohan Singh was brought in the Picture at the last moment to
    Save Face!!

    Rest of the SACRIFICE DRAMA which she choreographed was an EYE
    WASH!!!

    Infact Sonia Gandhi had sent, 340 letters, each signed by
    different MP to the PRESIDENT KALAM, supporting her candidacy for PM.

    One of those letters read, I Sonia Gandhi, elected Member from
    Rai Bareli, hereby propose Sonia Gandhi as Prime Minister.

    So SHE was Pretty INTERESTED! Until She came to know the Facts!

    So She didn’t make any Sacrifice, It so happens that SONIA
    GANDHI couldn’t have become the PM of INDIA that time.

    You could be Ashamed about that Dear Rahul!! One Credential
    Sonia G had, Even that was a HOAX!

    THINK ABOUT YOURSELF.

    You go to Harvard on Donation Quota. ( Hindujas Gave HARVARD 11
    million dollars the same year, when Rajiv Gandhi was in Power)

    Then you are expelled in 3 Months/ You Dropped out in 3
    Months…. ( Sadly Manmohan Singh wasn’t the Dean of Harvard that time,
    else you might have had a chance… Too Bad, there is only one Manmohan
    Singh!)

    Then Why did you go about lying about being Masters in Economics
    from Harvard .. before finally taking it off your Resume upon
    questioning by Dr. SUBRAMANIYAM SWAMI (The Gentlemen who exposed the 2G
    Scam)

    At St. Stephens.. You Fail the Hindi Exam. Hindi Exam!!!

    And you are representing the Biggest Hindi Speaking State of the
    Country?

    SONIA GANDHI’s EDUCATIONAL QUALIFICATIONS

    Sonia G gave a sworn affidavit as a Candidate that She Studied
    English at University of Cambridge

    According to Cambridge University, there is no such Student
    EVER!

    Upon a Case by Dr. Subramaniyam Swami filed against her, She
    subsequently dropped the CAMBRIDGE CREDENTIAL from her Affidavit.

    Sonia Gandhi didn’t even pass High School. She is just 5th class
    Pass! In this sense, She shares a common Educational Background with her
    2G Partner in Crime, Karunanidhi.

    You Fake your Educational Degree, Your Mother Fakes her
    Educational Degree.

    And then you go out saying, ” We want Educated Youth into
    Politics!”

    WHY LIE ABOUT EDUCATIONAL CREDENTIALS?

    Not that Education is a Prerequisite for being a great Leader,
    but then you shouldn’t have lied about your qualifications!

    You could feel a little ashamed about Lying about your
    Educational Qualifications. You had your reasons I know, Because in
    India, WE RESPECT EDUCATION!

    But who cares about Education, When you are a Youth Icon!!

    YOUTH ICON

    You traveled in the Local Train for the first time at the Age of 38.

    You went to some Villages as a part of Election Campaign.

    And You won a Youth Icon!! … That’s why You are my Youth Icon.

    For 25 Million People travel by Train Everyday. You are the
    First Person to win a Youth Icon for boarding a Train.

    Thousands of Postmen go to remotest of Villages. None of them
    have yet gotten a Youth Icon.

    You were neither YOUNG Nor ICONIC!

    Still You became a Youth Icon beating Iconic and Younger
    Contenders like RAHUL DRAVID.

    Shakespeare said, What’s in a Name?

    Little did he knew, It’s all in the Name, Especially the Surname!

    Speaking of Surname, Sir DO YOU REALLY RESPECT GANDHI, OR IS IT
    JUST TO CASH IN ON THE GOODWILL OF MAHATMA?

    Because the Name on your Passport is RAUL VINCI. Not RAHUL
    GANDHI..

    May be if you wrote your Surname as Gandhi, you would have
    experienced, what Gandhi feels like, LITERALLY ( Pun Intended)

    You People don’t seem to use Gandhi much, except when you are
    fighting Elections. ( There it makes complete sense).

    Imagine fighting elections by the Name Raul Vinci…

    You use the name GANDHI at will and then say, ” Mujhe yeh YUVRAJ
    shabd Insulting lagta hai! Kyonki aaj Hindustan mein Democracy hai, aur
    is shabd ka koi matlab nahin hai!

    YUVRAJ, Itna hi Insulting lagta hai, to lad lo RAUL VINCI ke
    Naam se!!! Jin Kisano ke saath photo khinchate ho woh bhi isliye
    entertain karte hain ki GANDHI ho.. RAUL VINCI bol ke Jao… Ghar mein
    nahin ghusaenge!!!

    You could feel ashamed for your Double Standards.

    YOUTH INTO POLITICS.

    Now You want Youth to Join Politics.

    I say First you Join Politics. Because you haven’t Joined
    Politics. You have Joined a Family Business.

    First you Join Politics. Win an Election fighting as RAUL VINCI
    and Not Rahul Gandhi, then come and ask the youth and the Educated Brass
    for more involvement in Politics.

    Also till then, Please don’t give me examples of Sachin Pilot
    and Milind Deora and Naveen Jindal as youth who have joined
    Politics.They are not Politicians. They Just happen to be Politicians.

    Much Like Abhishek Bachchan and other Star Sons are not Actors.
    They just happen to be Actors (For Obvious Reasons)

    So, We would appreciate if you stop requesting the Youth to Join
    Politics till you establish your credentials…

    WHY WE CAN’T JOIN POLITICS!

    Rahul Baba, Please understand, Your Father had a lot of money in
    your Family account ( in Swiss Bank) when he died.

    Ordinary Youth has to WORK FOR A LIVING. YOUR FAMILY just needs
    to NETWORK FOR A LIVING

    If our Father had left thousands of Crores with us, We might
    consider doing the same. But we have to Work. Not just for ourselves.
    But also for you. So that we can pay 30% of our Income to the Govt.
    which can then be channelized to the Swiss Banks and your Personal
    Accounts under some Pseudo Names.

    So Rahul, Please don’t mind If the Youth doesn’t Join Politics.
    We are doing our best to fund your Election Campaigns and your Chopper
    Trips to the Villages.

    Somebody has to Earn the Money that Politicians Feed On.

    NO WONDER YOU ARE NOT GANDHI’S. YOU ARE SO CALLED GANDHI’S!!

    Air India, KG Gas Division, 2G, CWG, SWISS BANK Account
    Details… Hasan Ali, KGB., FBI Arrest..

    You want to feel ashamed..

    Feel Ashamed for what the First Family of Politics has been
    reduced to… A Money Laundering Enterprise.

    NO WONDER YOU ARE NOT GANDHI’S BY BLOOD. GANDHI is an adopted
    Name. For Indira didn’t marry Mahatma Gandhi’s Son.

    For even if you had one GENE OF GANDHI JI in your DNA. YOU
    WOULDN’T HAVE BEEN PLAGUED BY SUCH ‘POVERTY OF AMBITION’ ( Ambition of
    only EARNING MONEY)

    You really want to feel Ashamed.

    Feel Ashamed for what you ‘ SO CALLED GANDHI’S’ have done to
    MAHATMA’S Legacy..

    I so wish GANDHI JI had Copyrighted his Name!

    Meanwhile, I would request Sonia Gandhi to change her name to
    $ONIA GANDHI, and you could replace the ‘R’ in RAHUL/RAUL by the New
    Rupee Symbol!!!

    RAUL VINCI : I am ashamed to call myself an Indian.

    Even we are ashamed to call you so!

    P.S: Popular Media is either bought or blackmailed, controlled
    to Manufacture Consent! My Guess is Social Media is still a Democratic
    Platform. (Now they are trying to put legislations to censor that
    too!!). Meanwhile, Let’s ask these questions, for we deserve some
    Answers.

  11. உண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.
    இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம். இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மமநாபசாமி. ஏழுமலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.

    ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும்.

    சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.
    சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..

    தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.

    கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாப சாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.

    ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை.

    பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.

    ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக இருந்திருக்கின்றன.

    அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள்.

    தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.

    திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும்,

    வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.
    18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரச குடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.

    அவ்வாறின்றி, இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை.

    கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்?

    இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள் நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.

    “தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. “அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்” என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. “மாநில அரசுக்குச் சொந்தம்” என்பது வேறு சிலர் கருத்து.

    “அனைத்தும் பகவான் பத்மநாப ஸ்வாமிக்கே சொந்தம்” என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.

    “பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக் கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.

    1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாபசுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

    ‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்’ என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது. எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர்.

    அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங்கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர்.

    பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர்.

    ஜூலை 1947 இல் தனிநாடாகச் செல்லப்போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப்புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம், தி இந்து, 25.5.2008)

    இதுதான் ‘இந்துப் பொக்கிஷத்தை’ச் சுருட்டிக்கொண்டு போவதற்கு ‘இந்து மன்னன்’ செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

    1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

    “சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.

    பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

    கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

    தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

    ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.

    கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

    எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”

    மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
    விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.

    பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.

    ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது” என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து.

    “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. “பொக்கிஷம் பத்மநாபசுவாமிக்கு சொந்தம்” என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.

    யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள்.

    காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?
    திருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன.
    தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன?

    பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்?

    வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை.

    பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.
    அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

    வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.

    ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.

    திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்

  12. தவறோ, சரியோ, அருள்மிகு பத்மனாப சுவாமி கோயில் பொக்கிஷங்கள் என்னவென்று அமளிக்கப்பட்டுவிட்டது. திரு வீரமணி போன்ற அறிவுஜீவிகளின் எண்ண ஓட்டத்திற்கு இது போன்ற செய்திகள் ஒரு விருந்து. ஹிந்துக்களே அதிகமுள்ள பாரத சாம்ராஜ்யத்தின் துரதிருஷ்டம் போலும், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கோயில்களையும் குறி வைக்கும் பல சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன, தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒரு செயல்பாடாகவும் திருவனந்தபுரம் கோயில் நிகழ்வை ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? திரு வீர்ர மணி அவர்களே, உங்களுக்கு உண்மையிலே வீரமிருந்தால், பகுத்தறிவுப் பாசறையின் பாதுகாவலன் என்று நீங்கள் நினைத்திருந்தால், அறைகூவுங்கள், அனைத்து இந்திய கோயில்களிலும், அனைத்து இந்திய தேவாலயங்களிலும், அனைத்து இந்திய மசூதிகளிலும் என்னென்ன பொக்கிஷங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் அரசுரிமையாக்கப் படவேண்டும் என்று. அயல் நாட்டிற்குச் சென்று ஓடி ஒளியாமல் விளைவுகளை எதிர் கொள்ளுங்கள் வீரரே, மணி( MONEY)யான தமிழ்ச் செல்வமே. இது தவிர, நண்பர்க்கள் மேலே சொன்னது போல், திராவிட இயக்கங்கள், மற்ற கட்சிக்களின் பொக்கிஷங்களையும், நாட்டுடமையாக்கிட அறை கூவல் விடுங்கள்,, ஆவன செய்யுங்கள், வீராதி வீரரே, வீர MONEY கண்டவரே. இவையும் மக்களால் கொடுக்கப்பட்டவை தானே, மக்களுக்கே போய்ச் சேரட்டும். ஆனால், எச்சரிக்கை – அப்படி ஒரு வேளை, நாட்டுடமையாக்கப் பட்டுவிட்டால், நம் நாட்டு திமிங்கிலங்கள் விட்டு வைக்குமா என்பதை எண்ணிப் பாருங்கள். ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக கடவுளர்கள் கட்டிக்காத்த பொக்கிஷங்களின் மதிப்புத் துகை ஸ்விஸ் வங்கிகளுக்குப் போகும் அபாயம் இருக்கிறது.
    கோயில் பொக்கிஷங்கள் ஒரு புரமிருக்கட்டும், நீங்கள் ஏன், இன்னும், அக்கரைச் சீமை வங்கிகளிலிருக்கும் கள்ளப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டுவந்து அரசுடமையாக்கவும், லஞ்ச ஊழல் ஒழிப்புக்காகவும் ஒரு தீவிர நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கவில்லை? உங்கள் செல்வாக்கு இன்னும் உயருமே?
    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – விஜய் டிவியின் ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சி மூலமாகவும், ஹிந்து எதிர்ப்பு சதித் திட்டங்கள் அமல் படுத்தப்படுகின்றனவோ என்ற ஐயப்பாடு எழுந்து வருகிறது. விஜய் டிவியின் netvshow@gmail.com என்ற கணினி விலாசத்திற்கு , ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சி மூலமாக ‘தேவாலயங்களிலும், மசூதிகளிலும் மறைந்துள்ள பொக்கிஷங்கள் மற்றும் மர்ம நடவடிக்கைகளையும்’ ஆராய்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டுமென்று மக்கள் விரும்புவதாக நண்பர்கள் கணினி அஞ்சல் அனுப்புங்கள். ஹிந்துக்கள் தங்களுக்கும் தாங்கள் சார்ந்துள்ள சமயத்திற்கும் ஊறு விளைவிக்கிறவர்களையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் ஏமாளிகளே.

  13. //இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது, கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகளில் ஏராளமான இந்து கோயில்கள் சூறையாடப்பட்டன. அதன்
    விளைவாக சில கோயில்களில் உள்ள பொக்கிஷத்தை புதைத்தும், மறைவிடங்களிலும் வைத்து நம் முன்னோர் பாதுகாத்தனர்//
    இசுலாமியர்களின் படைஎடுப்பை சாமாளிக்க துப்பில்லாத வடநாட்டு மன்னர்கள் அவர்களுக்காக நிங்கள் பொங்குறிங்களா நல்ல வேடிக்கை.
    உங்க கடவுள் மிக வலிமையானவர்னா அவரை அவரே பாதுகாத்துதிருக்க வேண்டியதானே, ஒன்னும் முடியல.
    மக்கள் தங்களை கடவுள் காப்பாத்துவாருனு நம்பினாங்க ஆனா அது மண்ணாய் போனதுதான் மிச்சம்.
    இதுவரை எந்த கடவுளாவது பசித்தவனுக்கு சோறுபோட்டுள்ளதா,
    இல்ல ஒன்னும் அறியாத அப்பாவி மக்கள், குழைந்தைகள், பெண்கள் கொல்லபடும்போது எந்த கடவுளாவது வந்து காப்பாறியுள்ளதா.
    இல்லாத ஒன்றுக்கு இத்தனை சண்டைகள், விவாதங்கள இதுபோதாதுனு இல்லாத கடவுளுக்கு கோயில்கள், மாடமாளிகைகள்.
    எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போதே மதத்தோடு பிறப்பதில்லை, மதம் என்பது இந்த மண்ணில்தான் தீர்மானிக்கபடுகின்றன.
    குழந்தை சிரிக்கும்போது, முறவல் செய்யும்போது அந்த கள்ளகபடம் இல்லாத அந்த பிஞ்சு மனசு மட்டும்தான் தெரியும் அது என்ன மதம் என்ன சாதி என்று தெரியாது.
    கடவுளின் பெயரால் சண்டை போடாமல் அன்பாய் இருந்து ஒருவருக்கொருவர் அனுசரனையாய் நடந்துகொண்டால் மகிழ்ச்சி பொங்கும்.
    அதற்க்காக சண்டை வேண்டாம் என்று சொல்லவில்லை நாம் சண்டைபோட பல வழிகள் உள்ளன
    எ-டு அறிவியல், விஞ்ஞானம், கணிதம், கணினி என பலதுறைகள் உள்ளன
    தமிழனின் மதம் இயற்கை மட்டும்தான்.

  14. //கோயில் பொக்கிஷங்கள் ஒரு புரமிருக்கட்டும், நீங்கள் ஏன், இன்னும், அக்கரைச் சீமை வங்கிகளிலிருக்கும் கள்ளப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டுவந்து அரசுடமையாக்கவும், லஞ்ச ஊழல் ஒழிப்புக்காகவும் ஒரு தீவிர நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கவில்லை? உங்கள் செல்வாக்கு இன்னும் உயருமே?//

    @ Ramsamy,
    Why are you exempting koil pokkisangal? you start your fast on demanding padmanaba temple assets, in fact the assest of kings, to be nationalised.. the wealth are in India.. Call anna hazare, ram dev to join your fast to nationalise all the assests of temples, mutts, adheenams, churches, mosques, swiss bank. Unaccounted money is black money. How does it matter whether it is in temple or in swiss bank.. when both these are not useful to the development of nation, is it not a biased demand to get back the black money in swiss bank only..

    Let the assests of the temples be given to the common man from whom these were amased for years.. invest these wealth in rural india in the form of hospitals,educational institutions, communication facilities, transport,electricity,etc
    atleast common hindu will benefit out of it..

    afterall which god has needs crores of wealth.. whereas 60 crore indians need to have atleast three meals a day.. India needs to reduce the loan debts..

    instead of blaming veeramani, do self introspection and start fast to demand these… crores of fellow hindus will join… why only veermani’s image.. your image also will go up.. dont forget to call Anna Hazare & co to join you the fast..

  15. Apologise, Hindu Aikya Vedi tells MLA

    THIRUVANANTHAPURAM: With speculations rising over the worth of the assets discovered from the secret vaults of Sree Padmanabha Temple, opinions are also sprouting about what to do with the huge cache of wealth discovered.

    Hindu Aikya Vedi has openly come out against the proposal of certain sections to use the wealth for public welfare. The comment made by Jameela Prakasam MLA that the wealth found in the temple belongs to the public is unacceptable, said Aikya Vedi district working president P Jyothindra Kumar in a statement here on Saturday.

    Jameela Prakasam, while speaking in the Assembly, had said that the indiscriminate taxation practised by the erstwhile rulers of Travancore had contributed to this amassment of wealth. She even said that the valuable items, which belong to the State, should be transferred and stored in banks.

    The Vedi demanded an immediate apology from Jameela Prakasam and alleged that there might be the involvement of vested interests behind these sort of statements. The wealth stored in the secret vaults of the temple belongs to the Lord Padmanabha, which was part of the offerings from the devotees and the royal family, it said.

    The matters relating to the use of the wealth should be decided by the devotees, spiritual leaders and Hindu society, they added.

    Several other religious bodies and social organisations have made it clear that the wealth recovered from the Temple belongs to Lord Padmanabha and it should be preserved in the temple itself. “The wealth belongs to the Temple and the Temple belongs to the royal family.
    The decision of the Government to preserve the wealth in the Temple is laudable,” said Chamackal Rajappan, secretary of the Kerala Social Service Sanghom.

    Read full report at
    https://expressbuzz.com/cities/thiruvananthapuram/apologise-hindu-aikya-vedi-tells-mla/295166.html

  16.            Hinduism, also called Sanathana Dharma, is universal in application and does not make any difference between one religion and the other. All the devotees who believe and follow the tenets of Hinduism are respected and rewarded alike. The foregoing is a classic example of an Englishman by name Sir Thomas Munro [1761-1827] who was the Governor of Madras and his devotional attachment to Sri Padmanabha Swamy Temple at Trivandrum [then called Travancore].
     
              When India was ruled by the British, there were so many princely states like Mysore, Rajasthan, Travancore etc which were directly ruled by the respective Maharajas who owed allegiance to the British throne.  The erstwhile Maharajas of Travancore ruled the State in the belief that it was their ‘Divine Right to Rule’. They were simultaneously aware of the fact that the Right to Rule entirely depended on their ability to rule ‘rightly’ in keeping with the tenets of Hindu Dharma or Raja Dharma as it is called in Sanskrit. They also knew that it was Divinity that gave them the power to rule.
     
          In 1750, King Martanda Varma, the most powerful of the Travancore rulers, pledged that he and his descendents would serve the kingdom as servants of Lord Padmanabha [Padmanabha Dasa], the Lord being the King. The British had observed the tradition and honoured the Lord with a 21-gun salute
          When the Indian states were merged, Independent India appointed the Travancore royal head as the Raj Pramukh; but he preferred to be known as Padmanabha Dasa, and not as Raja Pramukh. The government had continued to honour the tradition of 21 gun-salutes to the Lord till 1970 when, along with the abolition of princely titles, the honour of the Lord was withdrawn!
                Sri Padmanabha Swamy Temple, as seen today, was built by Maharaja Martanda Varma in 1773. Dedicated to Lord Vishnu, the Temple has an 18 feet long idol and a seven-tier Gopuram.
               Sometime in the early 19th century, the State was ruled by Maharaja Martanda Varma. When he passed away in 1813 he had no male heir to succeed him to the throne. So, the British Government approved of a provisional arrangement to rule the State by making his wife Rani Lakshmibai as a Regent. This was an immediate and temporary arrangement till a final decision was taken about the successor.  At that time Thomas Munro who was stationed at Travancore was representing the British Government as Dewan.of Travancore. After sometime, the Governor General of India asked Munro to intimate the name of a suitable successor.  Munro could not give an immediate reply as he knew that at that time Rani Lakshmibai was carrying and the delivery was expected soon.  If the Rani failed to deliver a male child, the Travancore State, as per the Doctrine of Succession, would lapse to the British throne.
               When a final reminder came from the Governor General for an immediate reply and the decision could not brook any delay, Munro was in a real fix. The Queen had not yet delivered. However, as Munro had great respect to Hinduism and believed in the Divinity of Lord Padmanabha and as he was also keen on continuing the lineage of the Maharaja, he prayed to Lord Padmanabha and sent a letter to the Governor General saying that the Queen had delivered a male child, even though no delivery had taken place.  He took a great risk of uttering a lie, guided by an inner voice that divine intervention would prove him true.
               Munro spent sleepless nights after sending the letter. One fine morning he went on horse back to the East Fort at Travancore and facing the Lord murmured “O Lord! I believe you are omnipotent. I adore you.  Please grant me a boon. Let Her Highness deliver a male child. There should not be a gap in your Slave Kings. Bless Her Highness with a male child for the throne”. He further added “if it is true that you are there, grant me my boon. If it is not granted, I cannot say what I will do”. After his prayer, Munro returned to the Residency, his official residence. Within a few minutes, he heard the news that Her Highness had delivered a male child. The joy of the Resident knew no bounds. He cried in ecstasy “O Lord Padmanabha! You are a reality. You are very much there in flesh and blood”
             The male child that was born to Rani Lakshmibai in 1813 was none other than the most famous ruler of the State who later ascended the throne of Travancore as Swathi Tirunal Maharaja—one of the greatest  composers of Carnatic music. Besides music, His Highness was highly learned in Sanskrit, poetry and other fine arts. Though His Highness died at the young age of 34 years, he ruled the State for nearly 18 years and was a master of 13 languages. Apart from music compositions, he has written a book on “The Theory of Music” in his own handwriting which is preserved even today in the Department of Oriental Studies, Trivandrum.
               Munro became an ardent devotee of Lord Padmanabha and personally undertook the work of temple administration. The code he evolved in Temple Administration is even now followed in several temples of that region.
         As a digression, it may be noted that when Munro first came to India and took service under the British Government in 1801, he was for some time looking after the administration of some of the districts in the South, ceded by the Nizam of Hyderabad. In this capacity, he was once entrusted with the job of bringing the land on which the famous Sri Raghavendra Swamy Math is situated in Mantralaya under the control and jurisdiction of the East India Company under the Permanent Settlement Act. When this order came to the notice of the local citizens, many natives and devotees of the Math vehemently opposed the move as they thought it would be a religious sacrilege for a foreign government to encroach upon the holy premises of the Math. They approached Munro with their grievance. Munro decided to visit Mantralaya personally and check about the religious sanctity of the Math. It is said that when he reached the Math premises, removed his shoes and was about to enter the Math, Sri Raghavendra Swamy himself appeared before him in a vision and it is further said that both became involved in a conversation. However, no one knew about this till the fact was made known by Munro himself. A subsequent issue of the Madras Government Gazette, however, bears witness to this strange incident. It is also learnt that soon after this incident, Munro was promoted as the Governor of Madras Presidency in which capacity he got cancelled the earlier decision of the British Government to annex Mantralaya. When the Math sent some consecrated coloured rice [Mantrakshatha] to Munro as God’s Blessings on the occasion of his elevation to the post of Governor, he received it with all humility and reverence.
            Sir Thomas Munro, Scottish by birth and Hindu at heart, died of Cholera in India in 1827 when he was on tour of the Northern Districts.

  17. If we just think of the value so far they say it is 1 lakh crore which is still 0.76 lakh crore less than the loss in 2G! Hope we get that when the other vaults are opened. So finally as most of our people believe God has to help them when politicians loot them?!

  18. //The wealth stored in the secret vaults of the temple belongs to the Lord Padmanabha, which was part of the offerings from the devotees and the royal family, it said.//

    யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?

    //The matters relating to the use of the wealth should be decided by the devotees, spiritual leaders and Hindu society, they added//

    The wealth belongs to the Temple and the Temple belongs to the royal family.
    The decision of the Government to preserve the wealth in the Temple is laudable,” said Chamackal Rajappan, secretary of the Kerala Social Service Sanghom.//

    உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

    “சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.

    பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

    கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

    தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

    ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.

    கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

    எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”

    —கேரள உயர்நீதி மன்றம்

  19. என்ன கன்ஸ்,

    நீங்க என்ன software engineer ra என்ன? இப்படி copy & paste செய்றீங்க? இதற்கு பதிலாக நீங்கள் வினவின் வலைதல லிங்கையே கொடுத்து இருக்கலாமே? அண்ணா சொன்னது போல் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது போல் ஹிந்துக்களின் சொத்துக்கு ஏன் இப்படி நாக்கை தொங்க போட்டு அழைகிறீர்கள்.

    அதுவும் தவிர இது போன்ற ஒரு தீர்ப்பை சர்ச்க்களுக்கு , மசூதிகளும் வழங்கியிருந்தாள் மிகவும் நன்றாக இருந்து இருக்கும். இது கோயில் பிரச்சனை. இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

    முதலில் அரசியல்வாதிகள் அடித்த கோடிக்கணக்கான பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு எடுக்க பாருங்கள்.

  20. கோ என்றல் அரசன். இல் என்றால் இல்லம். அரசனின் இல்லம் தான் கோயில். நம் கோபுரங்கள் மீது உலோகத்தினால் ஆன கலசங்கள் உண்டு. இவை இடிதாங்கிகளாகவும் மேலும் அந்த கோபுரத்தின் மீது வைக்கப்பட்ட தானியம் முதலான பொருட்கள் கெடாத வகையில் செய்யப்பட்டவை. கோயில்கள் தான் உண்மையில் நம் நாகரீகத்தின் அடையாளம். அவற்றை சமைத்த சேரனும், சோழனும், பாண்டியனும் மற்றும் பிராமணர் அல்லாத பல ஆழ்வார்களும் நாயன்மார்களும் மூடர்கள் அல்ல.

    பிராமணர்கள் ஒரு சமுதாயத்திற்கு கல்வி சொல்லி கொடுக்கும் சமூகம் ஆக இருந்ததால் அவர்கள் பரபிரம்மனின் முகத்தில் இருந்து வந்தததாக சொல்லப்படுகிறார்கள். அவர்களின் சொற்கள் தான் ஒரு சமுதாயத்தை செம்மை ஆக்குகின்றது என்பதே இதன் காரணம். தேவ மாத அதிதி அதே இறைவனின் காலில் இருந்தது தோன்றியதாக சொள்ளப்படுகிறாள். அதனால் இந்த கூற்றினை வைத்துக்கொண்டு பிரிவினை பேசுவது அரசியல் லாபத்திர்க்குத்தானே தவிர உண்மை அல்ல.

    கேரளா பிராமனர்கள்ளல் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பிரதேசம்? அங்கு தான் நீலகண்ட நம்பூதரி என்பவர் வைக்கம் போராட்டம் செய்தார். எத்தனையோ பணக்கார நம்பூதரிகள் நிலங்களை சட்டப்படி பிரித்து கொடுத்தனர். வரலாறை புரிந்து கொண்டு பேசுவது புத்திசாலித்தனம்.

    கோயில் சொத்து இறைவன்னுக்கு தான் சந்ததம். மக்கள் நல காரியங்களுக்காக அதனை பயன் படுத்தினாலும் ஆலய மற்றும் சமஸ்தான அனுமதியுடன் தான் செய்ய வேண்டும்.

  21. 200 வருடத்திற்கு முன்பு ஒரு 1000 ரூபாய் கொடுத்து தங்கம் வாங்கியிருந்தாள் இன்னேறம் அதன் மதிப்பு பத்து இலட்சத்திற்கு மேல் இருக்கும்.

    kans,

    உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? இஸ்லாமிய மற்றும் கிறித்துவ கயவர்கள் வரும் வரை பாரதம் வழமையாக இருந்தது. எந்த பிரச்சனையும் இல்லை. 1931 ஆம் ஆண்டே இந்த பொக்கிஷ்ங்கள் கணக்கிடப்பட்டு அது ஆவணமக்கப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் கண்ட களிசடைகள் எழுதும் வலைதளத்தில் இருந்து இங்கு paste செய்வது கேவலமான விசயம்.

    நல்ல வேலை, இது போன்ற பணம் கிறித்துவ மிஷினரிகளிடம் இருந்தால், கலவரத்தை உருவாக்கி மதம் மாற்றி நாட்டை உடைத்து இருப்பார்கள்.

    முஸ்லீம்களிடன் இருந்தால் நீயூயார்க்கில் நடந்தது போல் பல ஆயிர கணக்கான மக்களை கொன்று இருப்பார்கள்.

  22. (edited and published)

    பல நூறு வருடங்களாகவும் அரசர்கள் மற்றும் பரம்பரை குடும்பங்களால் செயல்பாட்டில் இருந்து வரும் கோவில்களுக்கும்,1947 ஆகஸ்டு 15 க்குப் பிறகே வந்த அரசாங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்போ கட்டுப்பாடோ கிடையாது. இதை மீறி அரசாங்கங்கள் சட்டம் இயற்றி கோவில் சொத்துக்களையும் வருமானங்களையும் சூறையாடிக்கொண்டது, செங்கிஸ்கான் முதல் இங்கிலாந்து ராணி வரை செய்த அநீதியையே சாரும். தற்காலம் அப்படிப்பட்ட அரசாங்கமே, மக்கள் வரியினால் சேர்நத பணத்தை கொள்ளை அடித்ததே அந்த அநீதிக்கு சான்று. இந்நலையில் கொள்ளைக்கார அரசாங்கம் எந்த நல்ல முகத்தை வைத்துக்கொண்டு, கோவில் சொத்துக்களை மக்களுக்குப் பயன்படுத்துகிறேன் என்று எடுத்துக்கொள்ள முடியும்? கொள்ளை முகம் கொண்ட அரசு, கொள்ளை அடிக்கும் மனதையே காண்பிக்கின்றது, அகத்தின் அழகு,முகத்தில் தெரியுமாப்போலே!

    மேலும், கருணாநிதியின் கோவில் சொத்தை கொள்ளையடிக்கும் எண்ணம், பதமனாபச்வாமி ஆலய நிகழ்சிகளைப் பார்க்கும் போதுதான் விளங்குகின்றது. கருணாநிதியும் காங்கிரசும் நல்ல காரியம் செய்வதைவிட, நல்லதிற்கு காரியம் செய்வதில் கடை தேர்ந்தவர்கள். இவர்களின் அறிவிப்புக்களில், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைசெய்வதைப்போல இருக்கும். ஆனால். கொள்ளை அடிப்பதையே மறைத்து செய்வார்கள். கருணாநிதியும், காங்கிரசும் ராமேஸ்வரம் கோவில்களில் கனிமொழியுடனும், சிடம்பரம்கார்த்திக்குடனும், உள்ளூர் முஸ்லிம்களுடன், கோவில் மதியம் மூடியவுடன் தேடோ தேடு என்று, பொக்கிஷங்களைத்தான் தேடினார்கள்.

  23. கோயில்கள் தான் உண்மையில் நம் நாகரீகத்தின் அடையாளம். அவற்றை சமைத்த சேரனும், சோழனும், பாண்டியனும் மற்றும் பிராமணர் அல்லாத பல ஆழ்வார்களும் நாயன்மார்களும் மூடர்கள் அல்ல.
    //
    Where is your culture which still prevents dalits from entering the temples?? For whom the temples are symbol of culture?? for the oppressors or oppressed?? Any dalit would laugh at this. where is your culture which still prevents non-brahmins becoming priests in your temples? is it possible for a dalit to become a priest, head of saiva, vainava mutt, adheenams, 18patti naattamais???

    //பிராமணர்கள் ஒரு சமுதாயத்திற்கு கல்வி சொல்லி கொடுக்கும் சமூகம் ஆக இருந்ததால் அவர்கள் பரபிரம்மனின் முகத்தில் இருந்து வந்தததாக சொல்லப்படுகிறார்கள். அவர்களின் சொற்கள் தான் ஒரு சமுதாயத்தை செம்மை ஆக்குகின்றது என்பதே இதன் காரணம்.//
    who has authorised them to be responsible for educating the society?? who has denied the right of education to dalits and sudhras?

    1931 ஆம் ஆண்டே இந்த பொக்கிஷ்ங்கள் கணக்கிடப்பட்டு அது ஆவணமக்கப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் கண்ட களிசடைகள் எழுதும் வலைதளத்தில் இருந்து இங்கு paste செய்வது கேவலமான விசயம்.

    //கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.– Kerala high court order..

    Cholan, why dont you arrange to release the correct list at least now?? what is opinion on the above ruling?? you are only saying the same rule should be applicable to all other religions.. but you are not commenting on the above point made by the court..

    இஸ்லாமிய மற்றும் கிறித்துவ கயவர்கள் வரும் வரை பாரதம் வழமையாக இருந்தது. எந்த பிரச்சனையும் இல்லை.// what a historical knowledge you got?? there was nothing called Bharatham by that.. only English named this country as India after annexing the kingdoms.. during those periods, you people pushed dalits and tribals out of the mainstream and it contiuues now.. you remember pappa patti , keeripatti, melavalu???

    நல்ல வேலை, இது போன்ற பணம் கிறித்துவ மிஷினரிகளிடம் இருந்தால், கலவரத்தை உருவாக்கி மதம் மாற்றி நாட்டை உடைத்து இருப்பார்கள்.
    முஸ்லீம்களிடன் இருந்தால் நீயூயார்க்கில் நடந்தது போல் பல ஆயிர கணக்கான மக்களை கொன்று இருப்பார்கள்.
    // it is good that dalits and tribals dont retaliate the hindu religion people.. if this kind of discrimination occurs elsewhere, it would have been different and the religion would have paid the price for the discrimination??

    இது கோயில் பிரச்சனை. இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.// the same exclusivity …which is practised by upper castes hindus for hundreds of years…

    as a fellow hindu, I and other fellow hindus have a right to comment on the affairs of the religion.. why you only to look after the issues?? who has authorised you?? Have you been elected by the hindus??

    ஹிந்துக்களின் சொத்துக்கு ஏன் இப்படி நாக்கை தொங்க போட்டு அழைகிறீர்கள். // how the wealth was amased?? we and our forefathers contributed towards them.. you will take the wealth from us(common hindus) through donations, offerings, dhanams, taxes,etc and now you say it belongs to the temple… here who is trying to loot and then deny the common hindu??

    Since it is our wealth, we, the common hindus, demand to invest these wealth in rural (hindu) india in the form of hospitals,educational institutions, communication facilities, transport,electricity,etc. This will atleast benefit common hindu..

    you want dalits, tribals and other poor hindus to be in your fold but you will not give them back the wealth you have looted from them..

    afterall which god has needs crores of wealth.. whereas 60 croreof Hindu indians need to have atleast three meals a day..Hindu India needs the money and welfare..

    முதலில் அரசியல்வாதிகள் அடித்த கோடிக்கணக்கான பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு எடுக்க பாருங்கள்.// sure.. also the unaccounted money/wealth in all temples, churches, mosques should be retrieved and given back to the respective religion people..

  24. If we just think of the value so far they say it is 1 lakh crore which is still 0.76 lakh crore less than the loss in 2G! Hope we get that when the other vaults are opened. So finally as most of our people believe God has to help them when politicians loot them?!

    /// who are the politicians?? have they come from the other planets?? atleast 90% of them will be/are from our hindu society!!! see the most of scams and looters!! when our own hindu politicians, hindu industrialists, hindu officials loot us (common hindus), what should we do??

  25. \\you will take the wealth from us(common hindus) through donations, offerings, dhanams, taxes,etc and now you say it belongs to the temple… here who is trying to loot and then deny the common hindu??\\

    It shows your poor knowledge on temple administration. Only less than 20% of temple money is used for rituals and prasatham. Rest of the money is going to the central and state government. you can file RTI to know more on this.

    \\Where is your culture which still prevents dalits from entering the temples?? For whom the temples are symbol of culture?? for the oppressors or oppressed?? Any dalit would laugh at this. where is your culture which still prevents non-brahmins becoming priests in your temples? is it possible for a dalit to become a priest, head of saiva, vainava mutt, adheenams, 18patti naattamais???\\

    என்ன ஒரு அறிவு கெட்ட தனமாக கேள்வி இது. இதில் இருந்தே தெரிகிறது. உங்கள் அறிவு ஹிந்து மதத்தில் எவ்வளவு என்று. முதலில் தலித் என்ற வார்த்தையே ஹிந்து மதத்தில் கிடையாது. இல்லாத ஒரு சமுதாய (அல்லது) கற்பனை சமூகத்திற்கு எதற்காக பரிந்து பேச வேண்டும்.

    ஒவ்வொரு சாதியினருக்கும் தனி தனி மடாலயங்கள் மற்றும் குருமார்கள் உள்ளனர். அந்த மடாலயங்களில் அந்த அந்த சமுதாய மக்கள் தான் இருப்பார்கள். எவ்வளவு பெரிய வேத பிராமணன் ஆனாலும் அவன் சைவ மடத்தில் குருவாக முடியாது. இது அவரவர் பண்பாடு. இதில் அடுத்தவர் தலையிட முடியாது. இது போன்ற சமுதாய கட்டுபாடு அற்ற எத்தனையோ ஆன்மிகம் மட்டுமே கொண்ட ராம கிருஷ்ண மடம் போன்ற அமைப்புகள் உள்ளனர். அங்கு எந்த ஒரு தங்கு தடையும் இல்லை. சாதி அமைப்பு ஹிந்து மதத்தில் உள்ளது. ஆனால் அது மட்டுமே ஹிந்து மதம் அல்ல.

    https://books.google.com/books/about/Travancore.html?id=qC0yqkMOIEcC

    இந்த புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    \\you will take the wealth from us(common hindus)\\

    ஹா ஹா என்ன அது ‘YOU’. நானோ, RSS, VHP, hindu munnai / any hindu org யோ கோயிலின் அதிகாரி இல்லை. இந்தியாவில் உள்ள எத்தனையோ கோயில்கள் மற்றும் அவற்றின் வருமானம் அரசிற்கு போய் சேருகிறது, அதில் எத்தனை கோயில் வருமானம் முறையாக மக்களுக்கு போய் சேருகிறது? குறைந்த பட்சம் கோயிலையாவது பராமரிக்கலாம்.

    அது சரி கோயில் சொந்தமானஇடத்தின் வாடகை என்ன என்று தெரியுமா?

    \\// it is good that dalits and tribals dont retaliate the hindu religion people.\\

    இது கோயில் பிரச்சனை. இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.// the same exclusivity …which is practised by upper castes hindus for hundreds of years…

    என்ன ஒரு குழப்பமான பதில், நீங்கள் தான் சொல்லிகிறீர்கள். தலித்துகளும், வனவாசிகளுக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று. உங்கள் வார்த்தை உணமையாக இருக்கும் பட்சத்தில்.. சரி இது உயர் சாதி ஹிந்துக்களுக்கு சொந்தமானதாக இருந்து விட்டு போகட்டும் உங்கள் பார்வையில்… உங்கள் பார்வையில் பார்க்கும் பொழுது கூட அந்த சொத்திற்கும் ஒரு சராசரி இந்தியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

    இந்த கோயில் சொத்து கண்டுபிடிக்கபடும் முன்பு இந்த கோயிலை பற்றி எத்தனை பேர் கவலை பட்டீர்கள். உங்களுக்கு கோயில் வெறும் சிலை இருக்கும் இடம். எங்களுக்கு அது எங்கள் பண்பாட்டின் அடையாலம்.

    \\you want dalits, tribals and other poor hindus to be in your fold but you will not give them back the wealth you have looted from them.. afterall which god has needs crores of wealth.. whereas 60 croreof Hindu indians need to have atleast three meals a day..Hindu India needs the money and welfare..\\

    முதலில் இருக்கும் அரசிடம் இருக்கும் பல மில்லியன் மதிப்பிலான கோயில் பணத்தை (குறிப்பாக திருப்பதி மற்றும் பழனி கோயில்) அரசாங்கம் முதலில் ஹிந்துக்களுக்கு கொடுக்கட்டும் அதன் பின்பு இதில் உள்ள நகைகளை பற்றி பேசட்டும். கோயில் பணத்தில் பெரும்பாலான வளம் அரசு மற்றும் அரசியல் வியாதிகளுக்கு தான் போகிறது, எந்த ஹிந்து அமைப்புக்கோ அல்லது அவர்கள் நடத்தும் பள்ளி கல்லூரிகளுக்கோ செலவது கிடையாது? அது சரி கால்ம் கால்மாக அரசு வரிப் பணத்தில் ஹட்ஜுக்கு மில்லியம் மில்லியனாக பணம் கொட்டப்படுகிறது, இதை பற்றி எந்த முற்போக்கு அமைப்புகளும் வாயே திற்ப்பது இல்லை. ஏன் எழை ஹிந்துக்களுக்கு காசி அல்லது அயோத்தி போக கோயில் பணத்தையாவது அரசாங்கம் கொடுக்கலாமே? சிறுபாண்மை கல்வி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு சலுகைகளை நிறுத்தி அனைவருக்கும் சமமான பகிர்வு நடைபெற வேண்டும்.

    நீங்கள் தான் உங்கள் முதல் வரியில் ஹிந்துக்களுக்கும், தலித் மற்றும் வனவாசிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று. அவர்கள் ஹிந்துக்களே இல்லை என்று. பிறகு எதறகாக அவர்களுக்கு உங்கள் கருத்தின் படி செலவு செய்ய வேண்டும்.

    \\If we just think of the value so far they say it is 1 lakh crore which is still 0.76 lakh crore less than the loss in 2G! Hope we get that when the other vaults are opened. So finally as most of our people believe God has to help them when politicians loot them?\\

    முதம் முதலில் அந்த நகைகள் கொடுக்கப்படும் பொழுது அதன் மதிப்பு ஒரு மூட்டை அரிசியின் விலை தான் இருந்து இருக்கும். அதுவும் தவிர அதன் பழமைக்கு தான் அந்த மதிப்பே தவிர தங்கத்திற்கானது அல்ல. கோயில் பூஜை பொருட்கள் மற்றும் அதன் ஆபரணங்கள் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் எடுத்து கொள்ளலாம் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்து ஆயிற்று. ஆதலால் முற்போக்கு கயவர்கள் அதை தாராளமாக எடுத்து, ஏழைகளூக்கு செலவு செய்கிறேன் என்ற பெயரில் ஆட்டை போடலாம். அல்லது கோயில் விக்ரங்கங்களை கடத்துவதை போல் வெளினாடுகளில் எடுத்து போய் விற்ற காசு சேற்கலாம்.

    ஒரு கற்சிலையாக இருந்தாலும், அதன் சரித்திர முக்கியதுவம் காரணமாக அதன் மதிப்பு பல கோடி பெறும். ஏன் தாஜ்மாஹாலை ஏலம் விட்டு வரும் பணத்தில் ஏழைகளுக்கு உதவலாமே.. பல லட்சம் கோடி இதன் மூலம் வெளி நாட்டில் கிடைக்கும். உங்கள் கருத்தின் படி அனைத்து விசயங்களும் தலித் சமுதாயத்தை அடிமை படுத்தி தானே எல்லா வளமும் இந்த நாட்டில் ஏறபட்டது. அந்த கட்டிடத்தை ஏலம் விடுங்கள். அதில் வரும் பணத்தை எடுத்து தலித்துக்களுக்கு உதவுங்களேன் – அதற்காக பிரசாரம் செய்ய நீங்கள் தயாரா?

    (edited and published)

  26. தினமலரில் ஜக்கி வாசுதேவ்:

    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611

    கேள்வி: பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்?

    பதில்:

    அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.

    எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம். கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்?

  27. தினமலர் கட்டுரையை குறிப்பிட்ட திரு.ஜடாயுவிற்கு நன்றி.

    குறிப்பாக ஜக்கி வாசுதேவ் எல்லோருக்கும் தெரிந்த ஆனால் பேச பயப்படும்
    வரலாற்று உண்மையை “அரசியல் சரிநிலையை” கணக்கில் கொள்ளாமல்
    தைரியமாக பேசி உள்ளார். நம் சமூகத்தில் மிகவும் குறைவானவர்களே
    இப்படி பேசும் தைரியம் மிக்கவர்கள்.

    மேலும் இந்த வார துக்ளக்கில் இந்த சொத்தைப் பற்றின ஒரு கட்டுரை
    வந்துள்ளது. இலங்கையை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவரான
    திரு.ரோஹன் ஒரு கடிதத்தை துக்ளக்கிற்கு எழுதியுள்ளதாகவும் அதில்
    உள்ள வேகத்தை தணித்தே இந்த கட்டுரையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது
    என்றும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

    அந்த கட்டுரையிலிருந்து சில வாக்கியங்கள்.

    “புதையல் யாருக்கு சொந்தம் என்பது வேறு விஷயம். இதை வெள்ளி,
    தங்கம், வைரம் என்று பார்ப்பது அற்பத்தனம். இதன் மதிப்பை யார்
    எப்படி அளவிடுவது? இது “ஹெரிடேஜ்”, தொன்மம் என்று ஏன்
    உங்களுக்கு புரியவில்லை? மரபு என்பது மக்கள் உருவாக்கியது. அங்கே
    சமயம் முக்கியமில்லை. முட்டாள்கள்தான் வயிற்றைப் பற்றி மட்டுமே
    சிந்திப்பார்கள். இந்தப் பணத்தினால் நாட்டை வளப்படுத்தலாம் என்றால்,
    இந்தப் பணம் கிடைக்கா விட்டால் என்ன செய்வீர்கள்? ஸ்பெக்ட்ரம்
    பணத்தை விரட்டித் திரட்டுங்கள். கறுப்புப் பணத்தை மீட்டு வந்து
    கொட்டுங்கள்.”

    “இதை ஏலம் விடலாம் என்கிறார்கள் சிலர். என் நெஞ்சம் பதைக்கிறது.
    பணம்தான் முக்கியம் என்றால், இதை ஏலம் விடுவதற்கு முன்பு உங்கள்
    மனைவியை, தாயை, சகோதரியை, மகளை விற்றுவிட்டு இதை ஏலம்
    விடுங்கள்”.

  28. அனந்தபத்மநாபனின் இன்னொரு செல்வம் – திரு ஜெயமோகன்:
    https://www.jeyamohan.in/?p=18111

    நேற்று ஒரு கேரள ஆலயப்பாதுகாப்புக்குழு பெரியவரைச் சந்தித்தேன். பத்மநாபசாமியின் சொத்து இரு வகை. நகைகள் உள்ளே உள்ள சொத்து என்றால் வெளியே உள்ள சொத்து,நிலங்கள். பழங்காலத்தில் கோயிலுக்குப் பலர் நிலங்களையும் கட்டிடங்களையும் தானமாக எழுதி வைத்தார்கள். வாரிசில்லா சொத்தை பத்மநாபனுக்கு அளிக்கும் வழக்கமிருந்தது. மன்னரும் ஏராளமான நிலங்களை அளித்தார். ஆகவே திருவனந்தபுரத்தில் இன்றும் பத்மநாபசாமிக்குச் சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் உள்ளது. அதுவும் நகரின் நடுவில். திருவிதாங்கூர் முழுக்கப் பல்லாயிரம் ஏக்கர் வயல்கள், தோட்டங்கள் உள்ளன. எல்லாத் தென்கேரள நகர்களிலும் பல்லாயிரம் கட்டிடங்கள் உள்ளன.

    அந்நிலங்கள் கோயிலின் பல்வேறு ஊழியர்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டன. கோயிலுக்குப் பொருட்களை அளித்தவர்களின் உபயோகத்துக்கும் வாடகைக்கு அளிக்கப்பட்டன. அவர்கள் எவரும் அந்நிலங்களை சுதந்திரத்துக்குப்பின்னர் திருப்பி அளிக்கவில்லை. அந்நிலங்களும் கட்டிடங்களும் முழுக்கத் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளன. திருவனந்தபுரம் நகருக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்பது ஆவணக்கணக்கு. அவற்றில் பல இன்று பெரும் கடைகளாகக் கட்டப்பட்டு லட்சக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கிறது. கோயிலுக்கு எதுவும் கிடைப்பதில்லை. சாலைபஜாரில் செண்ட் ஒன்றுக்கு ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் அமைந்த கட்டிடத்துக்கு எண்பது வருடங்களாக வருடம் நாற்பது ரூபாய் வாடகை கட்டி வருகிறார்கள்!

    பத்மநாபசாமியின் நகைகளை விற்பதோ ஏலம்போடுவதோ அசாத்தியமென அனைவருக்கும் தெரியும். அதற்கு இந்தியத் தொல்பொருள் துறை அனுமதிக்காது. ஆனால் அவரது நிலங்களை விற்பதோ ஏலம்போடுவதோ முழுக்கமுழுக்க சட்டபூர்வமானதே. ஆகவே இந்நிலங்களை விற்றால் என்ன? எப்படியும் ஐம்பதாயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்கப்படலாம். அப்பணத்தில் இரண்டு சதவீதத்தைக் கோயிலுக்கு வைத்துக்கொண்டு மிச்சத்தைத் திருவனந்தபுரத்தை மேம்படுத்த செலவிடலாம். சாலைகள் அமைக்கலாம். குடிசைகளை அகற்றலாம். மக்கள்நலம் என்று பேசுபவர்கள் இதைச் செய்யலாமே? -என்றார்

    செய்யமுடியாது. அந்நிலங்களை வைத்திருப்பவர்கள் எவரும் ஏழைகள் அல்ல. பெரும்பாலும் பெருவணிகர்கள். அரசியல் பின்னணி கொண்டவர்கள். இடதுசாரிகள் வலதுசாரிகள். முக்கால்வாசி நிலங்கள் மாற்று மதத்தவர்களின் கைவசம் உள்ளன, அவர்களே அதிகமும் வணிகர்களாக இருந்தார்கள். மிகக்கணிசமான நிலங்கள் தமிழ் வணிகர்களின் கைகளில் உள்ளன. பத்மநாபசாமியின் சொத்தை ’மக்களுக்கு’ ப் பயன்படுத்தவேண்டுமெனச் சொல்பவர்கள் இந்தச்சொத்தை ஏழை மக்களுக்கு முதலில் பயன்படுத்திக் காட்டலாமே. பத்மநாபசாமியின் சொத்து கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து மக்கள்நலனைப் பாதுகாக்கலாமே?

    சாத்தியமே இல்லை என நாம் அனைவருக்கும் தெரியும். இப்போது தமிழகத்தில் கோயில்வைப்புநிதி மக்கள் நலனுக்கு எனக் கூச்சலிடும் கூட்டம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் ஐம்பதாண்டுகளாகத் தனியாரால் கைவசப்படுத்தப்பட்டுள்ள கோயில்சொத்துக்களை அரசே கைப்பற்றிப் பொது ஏலம் போட்டு அந்தச் செல்வத்தை மக்கள்நலப்பணிகளில் செலவிட வேண்டும் என இவர்கள் சொல்லிப் போராடிக் காட்டலாமே? அது ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையுமே? சரி,விவசாய நிலங்களை விடுவோம். நகர்ப்புறக் கட்டிடங்களை மட்டுமாவது அப்படிச்செய்யலாமே?

    கோயில் சொத்தை பிராமணர்கள் அனுபவிக்கிறார்கள் என்ற அவதூறு திட்டமிட்டே சொல்லப்படுகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் கோயில்நிலங்கள் 99 சதவீதம் பிராமணரல்லாத சாதியினரால்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தச்சொத்தின் மதிப்பு எப்படியும் பலலட்சம் கோடி ரூபாய். அதைப்பற்றிய பேச்சே இங்கே எழுவதில்லை. சொல்லப்போனால் பிராமணர்களிடம் இருந்த சொத்துக்கள் மட்டுமே சிறிதேனும் பாதுகாக்கப்பட்டு இப்போதும் கோயிலுக்கென எஞ்சியிருக்கின்றன. பிறசாதியை நம்பி ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் எவையும் ஆலயத்துக்கென மிஞ்சவில்லை.

    சென்றவருடம் நெல்லை சந்திப்பில் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு வருட வாடகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாயாக ஆக்கப்பட்டது. அந்தக் கடைகள் பலவும் மாதம் இரண்டு லட்சரூபாய் வரை மறுவாடகைக்கு விடப்பட்டவை. அந்த உயர்வை நடைமுறைப்படுத்த முயன்ற ஆணையர் வெளிப்படையாக மிரட்டப்பட்டார். கோயிலின் அவலநிலையை அவர் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார். கடை வாடகையாளர் சங்கம் அமைக்கப்பட்டு வாடகை உயர்வுக்கு எதிராக நீதிமன்றத் தடை பெறப்பட்டது.’எப்டீங்க அப்டி ஒரேயடியா வாடகைய டபுள் ஆக்கறது?’ என்று அதன் தலைவரின் ஜூனியர்விகடன் பேட்டியை நானே வாசித்தேன். அரசியல் மூலம் ஆணையாளர் மாற்றப்பட்டார். இதைச்செய்தவர்கள் பிராமணர்கள் இல்லை.

    [சித்திரை திருநாள் பாலராமவர்மா]

    ஆக இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள். தாங்கள் நிலங்களைக் கொள்ளையடித்தபோது நகைகளைப் பத்திரமாக இதுவரை வைத்திருக்கும் பிராமணர்களை கொள்ளையர்கள் என்கிறார்கள்!

    திருவிதாங்கூரில் கோயிலுக்குத் தொடர்பானவர்களில் ஒரே ஒருவர்தான் ஒரு துண்டு கோயில் நிலத்தைக்கூட தனக்கென வைத்துக்கொள்ளாதவர். தன் சொந்தநிலங்களைக்கூடப் பொதுசேவை அமைப்புகளுக்காகக் கொடுத்தவர், திருவிதாங்கூர் மகாராஜா பாலராமவர்மா. அவர்களின் குடும்பத்தினரின் சிறிய வியாபார நிறுவனங்கள் பலவும் வாடகைக் கட்டிடங்களில் செயல்படுகின்றன

  29. அன்புள்ள சோழன்,

    மிக நன்றாக உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்.

    கோயில்கள் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமான ஏராளமான அசையாசொத்துக்களை , 1969 க்கு பிறகு , அரங்காவலற் குழுவில் சேர்க்கப்பட்ட நாத்திகர்களும், கழக கொள்ளையர்களும் கொள்ளை அடித்துவிட்டனர்.

    எஞ்சியிருக்கும் சொத்துக்களுக்கும் , தங்கள் கடிதத்தில் சொல்லியுள்ளபடி , மாதவாடகை என்ற பெயரில் மிக குறைந்த , அடிமாட்டு விலை போல , மிக மிக குறைந்த வாடகை வசூலிக்கப்படுகிறது.

    எனவே, தமிழக அரசும், மற்ற மாநில அரசுகளும் கோயில் சொத்தில் அசையா சொத்தாக உள்ள, நிலம் மற்றும் கட்டிடங்கள் இவற்றை வாடகை வசூலிப்பதற்கு பதில், திறந்த முறை ஏலம் விட்டு, விற்பனை தொகையை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற அரசுடையாக்கப்பட்ட வங்கியில் நிலையான வைப்பு தொகையாக போட்டுவிட்டால், வரும் வட்டி தொகையை வைத்து , தர்ம காரியங்களையும், கோயில் திருவிழாக்களையும் நடத்துவதற்கும், அன்றாட பூஜைகளை செய்வதற்கும் தேவையான நிதி கிடைக்கும்.

    ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் மோசடி வியாபாரம் செய்யும் கழகங்கள் இதை செய்து, தங்களுடைய அவப்பெயரை போக்கி கொள்வார்களா?

    ” ஆக இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள். தாங்கள் நிலங்களைக் கொள்ளையடித்தபோது நகைகளைப் பத்திரமாக இதுவரை வைத்திருக்கும் பிராமணர்களை கொள்ளையர்கள் என்கிறார்கள்! “- சோழனின் இந்த உண்மையான, சத்திய வாக்கியங்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.

  30. வீரமணி சொன்னதாக இங்கே எடுத்துப்போட்ட களிமிகு கணபதிக்கு நன்றி. மாற்றுக்கருத்துகள் தேவை. அவை நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட உதவும். தவறான இடத்தில் என்றால் மாற்றிக்கொள்ள உதவும்.

    “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பான் இலானும் கெடும்”

    என்று உங்களை எச்சரித்தவர் உங்கள் ஆள்தானே ?

    பெரியார் சொன்னவை சமூகத்தில் கண்டவை, அதாவது அவர் கண்டவையே. எனவே அவர் மீது தனிநபர் தாக்கம் சரியல்ல.

    ” வேண்டாமென்றால் பிராமணனினிடம் ஏன் போகிறீர்கள்/” என்று ஒருவர் கேட்கிறார் இங்கே. அப்படிப்போகிறார்கள் என்றே பெரியார் சொல்கிறார். அவர்களைத் தடுக்க முடியாது தடுக்க முடிந்தால் அவர் செய்திருப்பார். முடியவில்லை. எனவே அதை எடுத்துக்காட்டுகிறார். ஆகவே, பின்னூட்டக்கேள்வி விதண்டாவாதம்.

    வீரமணி எழுதியதற்கு அவர் சொத்தைக்கொடுப்பாரா? என்பதும் விதண்டாவாதம். ஏனெனில், வீரமணி சொன்னது ஒன்றும் அபச்சாரமல்ல. கோயில்கள், இந்துமதத்தில், வெறும் இறையுறையும் இடங்களாக மட்டுமே என கருதப்படவில்லை. அவை சமூக நலக்கூடங்களாகவும் ஆபத்பாந்தவனாகவும் திகழ்ந்தன என்பது தமிழக வரலாறு. எனவே ஆங்கே குவிந்திருக்கும் செல்வத்தை மக்கள் நலத்திற்கு செல்வழிக்கலாம் என்பது இந்துமதத்திற்கு எதிரான வாதமன்று. ஒன்று மட்டும் சேர்த்துச் சொல்லலாம் வீரமணி போன்றோர்: அச்செல்வத்திலிருந்து கோயில் பராமரிப்பு, அவ்வூழியருக்கு, போன்ற செலவழிப்பு போக மிஞ்சியதை மக்கள் நலப்பணிக்கு செலவழிக்கலாம்.

    வீரமணி சொன்னது அவர் கருத்து மட்டுமல்ல். இந்தியா முழுவதும், குறிப்பாக கேரளத்தில் பலர் சொல்லிவருகிறார்கள். நீதிபதி கிருஷ்ண அய்யர் அப்படியே சொல்லியிருக்கிறார் என்று இங்கு ஒருவர் பின்னூட்டமிட்டிருக்கிறார். அவரிடம் போய், “நும் சொத்தைக்கொடுப்பீர்களா என்று ஏன் கேட்கவில்லை? வீர்மணியிடம் மட்டும் ஏன்? எனவேதான் விதண்டவாதம் என்கிறேன்.

    சிலர் அச்செலவம் கலாச்சார பாரம்பரியம் மிக்க நகைகள். அவை அப்படியே இருக்கட்டும் என்று எழுதியிருக்கிறார்கள். ஜெயமோகனும் அப்படிச் சொல்கிறார். நான் அவருக்கு இட்ட பதிலை அவர் போடவில்லை. மாறுகருத்தை அவர் எதிர்னோக்குவதில்லை.

    கண்டுபிடிக்கப்பட்ட செல்வங்களில், தங்கக்கட்டிகளும் நிறைய உள. அவை எந்த கலாச்சாரப்பாரம்பரியத்தைக்காக்கின்றன?அவை போக, வேறு பலவும் கலாச்சார பாரம்பரியத்தின் கீழ் வருவன கிடையா. அவற்றையெல்லாம் எடுத்து மக்கள் நலப்பணிக்கு செலவழிக்கலாமே ? என்று ஜெயமோகனிடன் நான் கேட்டிருந்தேன். அஃதையே இங்கும் கேட்கின்றேன்.

  31. இந்தத் திருவுருவத்தைக் காணிக்கையாக அளித்தவர், இதனை வெறும் காட்சிப் பொருளாக்கும் நோக்கத்துடன் கொடுக்கவில்லை. பக்தியுடன் ஆராதிக்க வேண்டும், இசை உள்ளிட்ட தெய்வீக்க் கலைகளால் வழிபட வேண்டும் என்றெல்லாம் கருதி, ஒரு புனிதக் கொடையாகவே அளித்திருக்கிறார். அதனால் தான்” என்றேன்.

    சொன்னவர் நாக சாமி.

    நாக சாமி ஒரு நாத்திகர். ராமனுஜர் என்று ஒருவரே கிடையாது என்று நூல் வெளியிட்டு வைணவர்களைப்புண்படுத்தியவர் என்பதை மொழிபெயர்ப்பாளருக்கு முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    போகட்டும். இங்கு நாகசாமி வைக்கும் வாதங்களில் பல ஓட்டைகளைக்காணலாம். மேலே உள்ள சுட்டி ஒரு எ.கா.

    வெளிநாட்டரசு மன்றம் இவரை மட்டும் அழைத்திருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இந்திய மன்றம் இவர் மட்டுமே ஒட்டுமொத்த பிரதினிதியா என்று கேட்டுக்கொள்ளும். மேலும் பலர் கருத்துக்களையும் தெரிந்து தெளியும்.

    போகட்டும்.

    காணிக்கையாகக் கொடுத்தவர் என்ன நோக்கத்துடன் கொடுத்தார் என்று எப்படி தீர்க்கதரிசனமாகச் சொல்கிறார் நாகசாமி. 1000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்கள் என்ன நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்பதேல்லாம் ஒரு யூகமே. அதை வைத்து தீர்ப்பளிக்கமுடியுமா ?

    நாகசாமி மேலும் சொல்கிறார். ‘பல மன்னர்களை வீழ்த்தி அவர்களின் உடமைகளைக் கவர்வது மன்னர் மரபு” உண்மைதான் என நாமும் வரலாற்றில் படிக்கிறோம். ஆனால், அச்செல்வம் நற்செல்வமா ? தவறான வழியில் சேர்த்த செல்வத்தை இறைவனுக்குப் படைக்க இந்துமதம் இடமளிக்கிறதா ?

    இல்லையென்றால், அவற்றை பதுக்கிவைக்க மட்டுமே கோயில் பயன்படுத்தப்பட்டிருக்கிறத் என்றல்லவா ஆகிறது?

    ஊரைக்கொள்ளையடித்து பலமக்களைக் கொன்ற பணத்தைத் திருப்பதி கோயில் உண்டியலில் போடலாமா ?

    திருப்பதி என்றவுடன் இங்கு ஒருவர் எழுதிய பின்னூட்டம் நினைவில் வருகிறது. அவர் சொல்கிறார். ‘பின்னாளில் திருப்பதி கோயில் செல்வத்தையும் மக்கள் நலத்திற்குச் செலவழிக்கவேண்டும் என கேட்ப்பார்கள்’ என்று நக்கலாகச் சொல்கிறார்.

    அவருக்கு ஒன்று சொல்வேன். நண்பரே. திருப்பதி கோயில் நாளும் சேரும் செல்வம் அன்னதானத்திற்கும், பலவகைப்பட்ட மக்கள் நலப்பணிக்கும் (மருத்துவச்சாலைகள், கல்விக்கூடங்கள் என்று) செலவழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கோயில் நல்லவிதமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதுப்புதுச்சாலைகள், கோயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு. அவர்களுக்கென்று இல்லங்கள் என்றெல்லாம்.

    திருப்பதி தேவஸ்தானம், கேரள மன்னன் செய்த மாதிரி, இருட்டறைகளல் பதுக்கிவைக்கவில்லை என்பதை நினைவில் வைத்துப் பின்னூட்டமிடவும்.

  32. “இதுபோலவே, ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்துள்ள நிதிக்குவைகள், நகைகள் , காசுகள் எல்லாம், அரச குடும்பமும் அந்நாட்டுப் பொதுமக்களும் செழிப்பாக வாழ வேண்டும் என்ற மனப்பூர்வமான வேண்டுதல்களுடனும, ஆழ்ந்த பக்தியுடனும் கடவுளுக்கு நேரடியாகக் காணிக்கையாக அளிக்கப் பட்டவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.”

    This s not a convincing statement. Guesses only.

    A guess cant be the basis of a categorical statement. The qn is Where from did the king get all such wealth ?

    Next, did he get all through fair means ?

    Definitely, he cant have got that way, if we go by Nagasamy’s statement quoted earlier quoted by me, namely, it is the universal practice of the victorious king to take away all the wealth of the vanquished king, including the womenfolk of the kings. Akbar tried to take away the Rajput Queen Padmini but she committed suicide. In his backyard (andhapuram), he had many Rajput Hindu queens and princess forcibly taken away, some of whom he married and made fellow queens. Similarly all royal wealth.

    As Nagasamy himself conceded, the Travancore kings vanquished many other kings and forcibly took away the wealth of such kings. Nagasamy in an earlier para says that all the wealth a kings gives to a temple shd be of the king’s own as, according to Hindu dharma saashtras, one can offer to a deity only the wealth one has earned.

    If so, what kind of wealth did Travancore kings give to the temple? Ill gotten ? or fairly gotten?

    No doubt such wealth was a mixed wealth i.e. from the vanquished kings, i.e. ill gotten; from taxes from the subjects, if the kingdom expanded after victories, then from the subjects of such vanquished territories also; and from all other sources also. In a word, ill gotten as well as taxes. In another word, nothing from the honest labor of the king, which s impossible as a king never worked for himself, but lived on the labor of his subjects only. Taxes can be said to be fairly gotten only if they were fair and in the welfare of the masses. Many kings levied unfair and uncharitable and cruel taxes on their subjects, for e..g Aurangaze who levied jizziya tax on Hindus. Can we call such jizzia tax fairly gotten or ill gotten ?

    How r v sure that all taxes levied by Travancore kings were fair; and only such fair taxes went in the form of gold to the Lord of the temple ?

    Guesses…guessess. guesses !

    Now, we may fairly say, the wealth found in the cellars r all ‘tainted’, to say the least.

  33. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 108 திவ்ய தேயங்களுள் ஒன்று. திவ்ய தேசங்கள் எனப்படுபவை ஆழ்வார்களால் மங்களா சாசனம் (போற்றிப்பாடப்பட்டு தொழப்பட்ட) பெருமாள் கோயில்கள். இக்கோயிலை அப்படி மங்களாசாசனம் செய்த ஆழ்வார், ஆழ்வார்களில் தெய்வத்துக்கருகில் வைத்து தொழப்படும் நம்மாழ்வாரே. 10 பாசுரங்களில் மங்களாசாசன்ம் செய்கிறார். ‘கோவிந்தனாரே’ என்று தூய தமிழில் அழைத்து வைகுந்தம் போல் அடிமை செய்ய முடிவான இடம் திருவனந்தபுரம் என்கிறார்.

    “திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
    அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்”

    “அனந்தபுரம் சிக்கனப் புகுதிராகில்
    தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம்; நாம் அறியச் சொன்னோம்;
    பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே”

    என்று அறுதியிட்டுச்சொன்ன நம்மாழ்வார் காலம் 7 அல்லது 8ம் நூற்றாண்டு. அப்போது வேநாடு இல்லை. திருவாங்கூர் சமஸ்தானம் என்று கிடையாது. பாண்டியனே மன்னன் திருவனந்தபுரத்துக்கும். திருவனந்தபுரம் அல்லது நாஞ்சில் நாடு சேரனின் கீழ் வந்ததன்று. அது பாண்டிய நாடே.

    நம்மாழ்வார் காலத்துக்கு முன்பேயே மக்களிடையே நன்கறியப்பட்டு வணங்கப்பட்டு வந்த பெருமாள் கோயில் இது. பாண்டியன் கோபுரத்தைக் கட்டுவித்தான். சேர சோழ பாண்டியர் காலத்துக்குப்பின், சிற்றரசுகளாக தென்னாடு சிதைந்த காலக்கட்டத்திலே தோன்றியது வேநாடு. அப்போது எழுந்த பரம்பரையினரே திருவாங்கூர் மன்னர்கள். அவர்கள் காலத்தில் வந்த மன்னன் தன்னை இக்கோயிலுறையும் தெய்வத்தின் சேவகன் எனச்சோல்லிக்கொண்டு கோயிலைத் தனதாக்கிக்கொள்ள ஆரம்பித்து இப்போது நாம் இக்கோயில் அம்மன்னன் அவனுடைய வம்சாவழியினரின் கோயில் என்கிறோம்.

    இம்மன்னர்கள் இக்கோயிலை எடுத்தது 16ம் நூற்றாண்டு முதலாகத்தான். இவர்கள் கோயிலைப் புதுப்பித்தார்கள். பின்னர் தங்கள் சொந்தக்கோயிலாக ஆக்கிக்கொண்டார்கள். அவ்வளவே.

  34. ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்? என்ப‌து கட்டுரையின் த‌லைப்பு.

    குறைந்தது ஸ்ரீ போட்டு பத்மநாப சுவாமியை அழைத்ததற்கு தமிழ் வைணவர்கள் ஸ்ரீநிவாசன் ராஜகோபாலனுக்கு நன்றி சொல்வார்க‌ள்.

    ஏனெனில் ஜெயமோகன், இத்தெய்வத்தை, ஏதோ ஒரு வேலைக்காரனைக் குறிப்பிடுவதைப்போல தலைப்புக்களிட்டு தொடர்ந்து எழுதிவருகிறார் அவற்றுள் சில ஈண்டு ஸ்ரீநிவாசன் ராஜகோபாலனன் கட்டுரைக்கு கீழே காண்க. அவ்வாறு தலைப்பிட்டு எழுதுவதைப் பார்த்து நொந்தபின்னர், ஸ்ரீநிவாசன் ராஜகோபாலனுக்காவது பத்மநாப சுவாமியை ஸ்ரீ போட மனது வந்தது கண்டு மகிழ்ச்சி.

    நினைவிருக்க‌ட்டும். நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத்தொடுத்த‌ கால‌ம்சென்ற‌ திரு சுன்த‌ர் ராஜ‌ன் ஒரு நாத்திக‌ர் அன்று. அவ‌ர் ஒரு ப‌ழுத்த‌ த‌மிழ் வைண‌வ‌ர். அவ‌ருக்குல்லாத‌ க‌ரிச‌ன‌ம் நாக‌சாமிக்கும் ஜெய‌மோக‌னுக்கும் இருக்குமா ?

    திருவனந்தபுரம் ஒரு தமிழ் வைணவர்களின் கோயில். தமிழ் முறைப்படியே பேணப்பட்டிருக்கவேண்டும். மன்னன் கைவைத்து தன் சொந்தக்கோயிலாக்கிக் கொண்டதால், ஆழ்வார் மறக்கடிக்கப்பட்டார்.

  35. இத்தலைப்பின் கீழ் வந்துள்ள அமலனின் கடிதங்கள் முழுவதும் வருந்த தக்கதாய், முன்னுக்கு பின் முரணாக உள்ளன.

    அருள்மிகு பத்மநாப சாமி கோயில் நகைகள் பற்றி வழக்கு தொடுத்த சுந்தரராஜன் ஐ பி எஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். அவர் நாத்திகர் இல்லை என்பதால் அவருக்கு கரிசனம் உண்டு என்கிறார். அப்படியானால் வீரமணி ஆழ்வார் எப்போது ஆத்திகர் ஆனார் ?

    வீரமணி இதுபற்றி பேசலாம் என்பது , முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தன்னை நாத்திகர் என்று கூறிக்கொள்ளும் சொம்பு வீரமணி , கடவுள், கோயில் , வழிபாடு , பக்தி இவை ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்லும் இயக்கத்தை சேர்ந்தவன் என்று பொய் சொல்லிக்கொண்டு சோரம் போய், தற்போது பெரியார் திடலில் , சுவிசேஷ பூஜை செய்துவருகிறார்.இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லி திரியும் , மதமாற்ற ஏஜென்ட் வீரமணி இதுபற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.

    ஏனப்பா அமலா,

    திருவனந்தபுரம் தமிழ் வைணவர்கள் கோயில் என்கிறாயே, அப்படி என்றால் மற்ற மாநில மொழிகளை பேசும் வைணவர்கள் அங்கு வழிபட முடியாதா ? . திருவனந்தபுரம் அருள்மிகு அனந்த பத்மநாப சாமி கோயில் , இந்தியா முழுவதுமிருந்து வந்து, தரிசிக்கும் அறுவகை சமயத்தோர்க்கும் உரியது. வீணாக பழைய தென்கலை, வடகலை சண்டை போல , கற்கால நிலைக்கு செல்ல வேண்டாம். திருப்பதிக்கு உலகம் முழுவதுமிருந்து இந்துக்கள் வந்து வழிபடுகிறார்கள். திருப்பதி கோயில் இந்துக்களின் கோயில். அதை வைணவகோயில் என்று குறுகிய புத்தியுடன் சொன்னால், எல்லோரும் சிரிப்பார்கள்.

    ஏனப்பா , தமிழ் வைணவக்கோயில் ஏன் மலையாளம் பேசும் கேரளாவில் உள்ளது? இறைவழிபாட்டில் மொழிப்பிரச்சினையை உள்ளே கொண்டு போகாதே ? திருப்பதி கோயிலும் தமிழ் கோயில் தான். ஆந்திராவிலிருந்து பிரித்து , நம் தமிழ் நாட்டில் சேர்க்க முடியுமா? அதெல்லாம் நடக்கிற காரியமா ? வைணவர்கள் மட்டும்தான் திருப்பதிக்கு போகவேண்டும் என்று ஆரம்பித்தால், அந்த கோயிலை மூட வேண்டியதுதான். மத நம்பிக்கை, வழிபாடு, கோயில் போன்ற விஷயங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி , சமஸ்கிருதம் என்று மொழி அடிப்படையிலும் , குறுகிய நில எல்லைகள் ( land territory) அடிப்படையிலும் அணுகாதீர்கள்.

    அந்தக்காலத்தில், நம்மவர்களில் குறுகிய புத்தி படைத்தோர் சிலர், தென்கலை, வடகலை, வீரசைவம், சாதா சைவம், நீ என் கோயிலுக்கு வரக்கூடாது , நான் உன் கோயிலுக்கு வரமாட்டேன் , என்று அடித்த கூத்துக்களின் விளைவாகத்தான் , நம்மவர்களில் பலர் , மத மாற்ற வியாபாரிகளின் வலையில் விழுந்து , வீணாகப் போனார்கள் . நாம் இனியாவது திருந்த வேண்டாமா ?

    ஏராளமான சைவர்கள் அருள்மிகு அனந்த பத்மநாப சாமி கோயில் சென்று வழிபடுவதை நான் பார்த்திருக்கிறேன். கணக்கற்ற சாக்தர்களும் அங்கு வழிபடுகிறார்கள். ஏராளமான முருக பக்தர்களும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். உங்களை போன்றவர்கள் போகிற போக்கை பார்த்தால், இவை போன்ற கோயில்களின் முன்பு , வடகலை, தென்கலையார் தவிர பிற சாதியினர் உள்ளே வரக்கூடாது என்று போர்டு வைக்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல இருக்கிறது. நீங்கள் திருந்தவே மாட்டீர்களா ? என்ன புண்ணியமோ ?

    அருள்மிகு அனந்த பத்மநாப சாமி கோயில் நிலவறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் அந்த கோயிலின் சொத்துதான். அதில் சுரண்ட வீரமணி கும்பலுக்கு எப்போதும் ஆசை. அதில் உள்ள தங்க கட்டிகளை , தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் டிபாசிட் செய்தால் , வருடத்துக்கு ஒரு ஒன்று அல்லது இரண்டு சதவீத வட்டி கோயிலுக்கு கிடைக்கும். அதனை வைத்து, கோயில் செலவுகளையும், கோயில் சம்பந்தப்பட்ட தர்ம காரியங்களையும் செய்யுங்கள். அன்னதானம், கல்விப்பணி, மருத்துவப்பணி , முதியோர் இல்லம் எல்லாம் செய்யலாம்.

    இஸ்லாமிய வெறியர்கள் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்த போது, ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து, விக்கிரகங்களை சின்னாபின்ன படுத்தி, பொன், வெள்ளி, நவரத்தினம் இவற்றை கொள்ளை அடித்து, தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்றனர். அதன் விளைவாக, நம் முன்னோர் அன்னியர் படையெடுப்பு காலங்களின் போது , பொக்கிஷத்தை புதைத்தும், மறைத்தும் வைத்து பாதுகாத்தனர். எனவே, அந்த கோயில் நகைகளை இறை திருமேனிக்கு அணிவிக்க தேவையானவை போக, எஞ்சியவற்றை ஏலம் போட்டு , கோயில் பெயருக்கே டிபாசிட் செய்து , அதில் கிடைக்கும் வட்டியை கோயில் சம்பந்தப்பட்ட செலவுக்கே பயன் படுத்த வேண்டும். அவற்றை சும்மா வைத்திருப்பதால் , யாருக்கும் எந்த வித உபயோகமும் இல்லை.

    உங்களை போன்ற சிலர் இறைவனை எவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்? ஜெயமோகன் எழுதிய கடிதம் அல்லது கட்டுரையில் ” திரு ” என்று குறிக்க தவறிவிட்டார் என்று ஒரு குற்றம் சுமத்தியுள்ளீர்கள். உங்கள் நண்பர் வீரமணி மட்டும் மரியாதையாகவா எழுதினர்? அவரது அறிக்கையில் எவ்வளவு கேவலமாக எழுதினார் தெரியுமா ?

    உலகத்தில் எத்தனையோ குப்பனும் சுப்பனும் இறைத்திரு நாமங்களை உரிய மரியாதை இன்றி எழுதுவதும், பேசுவதும் வழக்கம். அதனால் எல்லாம் இறைவனுக்கு எவ்வித அவமரியாதையும் வந்து சேராது. ஏனெனில் இறைவனுக்கு யாரும் கூடுதல் பெருமைகளை சேர்க்கவும் முடியாது, அவமரியாதைகளையும் செய்ய முடியாது. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜெயமோகன் கடிதத்தை நானும் படித்தேன். அவர் தவறாக எதுவும் எழுதவில்லை. அவர் கருத்து சரியாகத்தான் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கருத்தில் தவறு இருந்தால் இங்கு எழுதவும். ஸ்ரீ என்று போடாதது ஒரு சிறு டைப்பிங் தவறு. வீணாக அவர்மீது , புழுதிவாரி தூற்றி அவருக்கு வீண் விளம்பரம் கொடுக்கவேண்டாம்.

  36. அமலன்,

    கோயில்களுக்குள் மொழி வேற்றுமை தேவையற்றது. நல்ல வேலை இந்த கோயில் நமது மன்னர்களின் கட்டுபாட்டில் இல்லை. பழனி கோயில் கதி என்ன ஆயிற்று என்பதும், ஸ்ரீரங்கம் கோயில் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றியும் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

    \\திருவனந்தபுரம் ஒரு தமிழ் வைணவர்களின் கோயில். தமிழ் முறைப்படியே பேணப்பட்டிருக்கவேண்டும். மன்னன் கைவைத்து தன் சொந்தக்கோயிலாக்கிக் கொண்டதால், ஆழ்வார் மறக்கடிக்கப்பட்டார்.\\

    பல நூறு ஆண்டுகள் வெள்ளையர்களிடன் இருந்தும் ஜிஹாதிகளிடன் இருந்தும் டச்சு காரர்களிடம் இருந்தும் இந்த கோயிலை பாதுகாத்த உத்தமர்களை இவ்வாறு ‘கை வைத்து’ என்று சொல்வது மிகவும் வேதனை தருகிறது.

    கிருஷ்ண தேவ ராயரும், சத்ரபதி சிவாஜியிம் இல்லாவிட்டால் இன்னேறம் பல கோயில்கள் அழிந்து இருக்கும்.

  37. இத்தளம் திரு ஜோ அமலனின் கருத்துகளை அமோதிக்கிறதா? உண்மை அதுதானா?
    /////////ஆக இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள். தாங்கள் நிலங்களைக் கொள்ளையடித்தபோது நகைகளைப் பத்திரமாக இதுவரை வைத்திருக்கும் பிராமணர்களை கொள்ளையர்கள் என்கிறார்கள்!
    திருவிதாங்கூரில் கோயிலுக்குத் தொடர்பானவர்களில் ஒரே ஒருவர்தான் ஒரு துண்டு கோயில் நிலத்தைக்கூட தனக்கென வைத்துக்கொள்ளாதவர். தன் சொந்தநிலங்களைக்கூடப் பொதுசேவை அமைப்புகளுக்காகக் கொடுத்தவர், திருவிதாங்கூர் மகாராஜா பாலராமவர்மா. அவர்களின் குடும்பத்தினரின் சிறிய வியாபார நிறுவனங்கள் பலவும் வாடகைக் கட்டிடங்களில் செயல்படுகின்றன//////////////////
    திரு சோழனின் மேற்கண்ட கருத்துகள் பொய்யா?

    நீங்கள் ஏற்றாலும் ஏற்க விட்டாலும் கோவிலின் சொத்துக்கள் இறை அன்பர்கள் கொடுத்தவையே,இன்றைய நிலையோடு ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.கோயிலுக்கு சொந்த பணத்தை கொட்டி ஆன்மிகத்திற்கு தங்களின் பங்களிப்பாக கருதி வருகிறார்கள் அப்பாவி இந்துக்கள்.ஆனால் அவை இந்துக்களின் ஆன்மிகத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தால் பயன்படுத்தபடுகிறது. எங்கோ அமெரிக்க. அராபிய நாட்டு பணங்கள் இந்து மத ஆலயங்களுக்கு வருவதில்லை.கொள்ளை அடித்தவன் கோயிலில் பணத்தை கொட்டினால் அது கருப்பு பணமாக முடங்க விடாமல் பொது சேவைக்கு வர ஆண்டவன் செய்த ஏற்பாடு என்று கொள்வோம்.கோயில் நிர்வாகம் அதனை கோயில் சார்ந்த பயனுள்ள மக்கள் மற்றும் ஆன்மிக சேவைகளுக்கு கோயிலின் வருமானத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே இங்கு கருத்து தெரிவிக்கும் பலரின் விருப்பம்.அதில் தொன்மை பாதுகாப்பு என்பது எல்லோரும் உடன்பாடுடையதே, இது ஒரு சர்ச்சில் இந்தளவு பொக்கிசங்கள் கண்டேடுக்கபட்டால் அதனை நாட்டிற்கு அர்பணிக்க நீங்கள் சம்மதிப்பீரா? மேலும் திரு சோழனின் ஒரு கருத்தில் தனியார்களிடம் வாடகை என்ற பெயரில் ஏமாற்றி அனுபவில்க்கபடும் சொத்துகளை அரசாங்கம் கையகபடுத்தி இன்றைய சந்தை விலைக்கு வடகைக்கோ விலைக்கு விற்றோ அதனை முதலில் சமுக தேவைக்கு பயன்படுத்தலாமே? இது ஏன் இந்த மேதாவிகளின் மூளைக்கு எட்டவில்லை

    வீரமணியின் சொத்துக்கள் ஒரு பொது அமைப்புக்கு சொந்தமானது,நீதிபதியின் சொத்துகள் அவர் சம்பாதித்தது,ஒரு பொது சொத்தை நிர்வகிக்கும் சமத்துவ வாதி முதலில் அதனை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும்,இதுவரை எத்தனை ஏழைகள் திக சொத்துக்களால் பயன் பெற்றுள்ளனர்? பெரியார் பாசறையில் முதலில் ஆரம்பித்தால் அது உண்மை சீர்திருத்தம்.மேலும் இது போன்ற கருத்துகளை எல்லா மத ஸ்தாபனங்களுக்கும் அவர் சொல்வாரா? அப்படி அவர் சொன்னால் உங்களின் நிலை என்ன? மேலும் கடவுள் மதம் என்பதற்கு எதிரான கொள்கை உள்ள இயக்கம் தன இடத்தை ஒரு மதம் வளர்க்க மத பிரசங்க கூட்டத்திற்கு வாடகை விடுவது ஏற்புடையதா? இப்படி வருடா வருடம் இந்த கழகத்திற்கு கிடைக்கும் சொத்துகளால் பலன் அடைவது எத்தனை ஏழைகள்.?
    ///இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பான் இலானும் கெடும்//
    இதை நான் திகவிற்கு கோட் செய்கிறேன்.
    உங்களின் திருப்பதிக்கு இணையான மக்கள் சேவை என்பது வரவேற்க தக்கது, உங்களின் தமிழ் ஆர்வம் மற்றும் இறையியல் ஆர்வம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது

  38. திரு ஜோ,
    இந்து மதத்தில் கடவுளுக்கு “ன்’ மற்றும் “ள்” விகுதி தான் பயன்படுத்துவது வழக்கம். ஆண்டாள் முதல் பாரதி வரை நீங்கள் அதை காணலாம்.
    இயேசு வருகிறார்,இயேசு உயிரோடிருக்கிறார்,etc போன்ற ர் விகுதி உங்கள் கடவுளுக்கு தான்.
    கண்ணன் என் வேலைக்காரன் என்று கூட பாரதி பாடிவிட்டான்.
    அன்னை அருள்வாள் இதுதான் இங்கு வழக்கு, அதற்கெல்லாம் எங்கள் கடவுள் தண்டிக்காது

  39. ஆநிரை கவர்தல்,ஆநிரை மீட்டல் அக்கால அரசற்கு மரபே (உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்). அனால் இச்செல்வங்கள் அப்படி கொள்ளை அடிக்க பட்டவை என்பதற்கு ஏதானும் சான்றுகள் உள்ளதா? அப்படி கொள்ளை அடித்து அரசாங்க கஜானாவில் சேர்த்தவை ஆகா இருப்பின் அதனை எடுத்து அரசாங்கம் மக்கள் பனி செய்யலாமா? இதனை இந்திய அரசாங்கம் சொல்கிறதா? ஏன் அதை கோயில் நிர்வாகம் செய்ய கூடாதா? கோயிலுக்கென்று ஒரு சொத்து இருந்தால் அதனால் பயன் பெறுபவர் பொது மக்களே.அன்றி தனி நபர் அல்ல.கோயிலுக்கு வரும் மக்களுக்கு உணவு இருப்பிடம் அந்த நகரத்தை மேம்படுத்துதல் அதனால் அவ்வூரின் பண நடமாட்டத்தை அதிகரித்தல் எல்லாம் பொது மக்களுக்கு மற்றும் அந்த நகருக்கு நன்மை தானே? கோயில் நிர்வாகம் செய்தாலும் அரசுக்கும் அரசு அதிகாரிக்கும் பணம் செல்லத்தான் போகிறது கவலை வேண்டாம்.ஆனால் ஓரளவேனும் மக்கள் நலனுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. அரசாங்கத்துக்கு போனால் பாதி மந்த்ரி வீட்டிற்கும் மீதி அதிகாரி வீட்டிற்கும் தான் செல்லும். எப்படியும் வீர மணி பருப்பு மலையாளிகளிடம் எடுபடாது.
    சிதம்பரம் கோயில் ஆணையத்தின் கைக்கு சென்ற பின்னர் கோயிலில் உண்டியல் வைத்து பிச்சை எடுக்கிறது (அறநிலைய துறை வந்தவுடன் முதலில் செய்தது பல உண்டியல்களை கோயிலில் வைத்தது தானம் ) இந்த அரசு,
    அதிக பணத்துக்கு குறுக்கு வழி,குறைந்த பணத்துக்கு செகண்ட் கிளாஸ்,தர்ம தரிசனத்துக்கு நீண்ட வழி என்று ஆரம்பித்து விட்டது.அரசின் இந்த செயல்களுக்கு இந்துக்களிடம் எடுக்கும் மிரட்டல் பிச்சை என்று பெயர்.

  40. ////////வீரமணியின் சொத்துக்கள் ஒரு பொது அமைப்புக்கு சொந்தமானது,நீதிபதியின் சொத்துகள் அவர் சம்பாதித்தது,ஒரு பொது சொத்தை நிர்வகிக்கும் சமத்துவ வாதி முதலில் அதனை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும்,இதுவரை எத்தனை ஏழைகள் திக சொத்துக்களால் பயன் பெற்றுள்ளனர்? பெரியார் பாசறையில் முதலில் ஆரம்பித்தால் அது உண்மை சீர்திருத்தம்.மேலும் இது போன்ற கருத்துகளை எல்லா மத ஸ்தாபனங்களுக்கும் அவர் சொல்வாரா? அப்படி அவர் சொன்னால் உங்களின் நிலை என்ன? மேலும் கடவுள் மதம் என்பதற்கு எதிரான கொள்கை உள்ள இயக்கம் தன இடத்தை ஒரு மதம் வளர்க்க மத பிரசங்க கூட்டத்திற்கு வாடகை விடுவது ஏற்புடையதா? இப்படி வருடா வருடம் இந்த கழகத்திற்கு கிடைக்கும் சொத்துகளால் பலன் அடைவது எத்தனை ஏழைகள்.?
    ///இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பான் இலானும் கெடும்//
    இதை நான் திகாவிற்கு கோட் செய்கிறேன் ///////////

    இது விதண்டா வாதம் அல்ல,விவாதம் நீங்கள் நீதிபதியின் சொத்தை கேட்க சொல்வதே விதண்டாவாதம்,அல்லது உங்களின் தனிப்பட்ட உழைப்பில் சம்பாரித்த சொத்துகளை கேட்டால் விதண்டாவாதம் என சொல்லலாம்.திகாவின் சொத்தால் எத்தனை தீவிர அடிமட்ட ஏழை திக குடும்பத்திற்கு உதவி செய்யப்பட்டுள்ளது? கல்வி கட்டணமின்றி எத்தனை ஏழை மாணவிகளுக்கு பெரியார் மணியம்மை பல்கலையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.? சமத்துவம்.பொது நலம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாதவர்கள் பேச என்ன அருகதை?

  41. Dravidan,
    “அனந்த பத்மநாபனின் களஞ்சியம்”

    “பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்”

    “அனந்த பத்மநாபனின் நிதியை என்ன செய்வது?”

    “பத்மநாபனின் செல்வம் – மேலும் விளக்கம்”

    இவையெல்லாம் ஜெயமோகனின் தலைப்புக்கள்.

    பாரதியார் பக்தர். பக்தன் தன் கடவுளை எப்படியும் அழைக்கலாமென இந்துமதத்தில் அறிகிறோம்.

    ஆனால் ஜெயமோகன் பக்தரா ? பக்தர் என்ற முறையிலா அவர் கட்டுரைகள் எழுதப்படுகின்றன ? கண்டிப்பாக சிரிவைணவர்கள் மனம் புண்படும்.

    எங்கள் கடவுள், உங்கள் கடவுள் என்பது இந்து மதத்தில் அனுமதிக்கப்படவில்லை. இசுலாமில்தான் உண்டு. இந்துவாக இருந்தால், ‘கடவுள்’ என்று மட்டுமே சொல்லப்படும். இந்து முருகன், இந்து சிவன், இந்து பெருமாள் என்றெல்லாம் கிடையா. வெறுமனவே முருகன், சிவன், பார்வதி, இலக்குமி, பெருமாள் என்றுதான் வரும். அதன் காரணம் எவரும் இக்கடவுளர்களையோ, அல்லது இவற்றுள் ஓர் கடவுளையே ஏற்று வழிபடலாம். அவர் இந்துவாக இருக்கவேண்டும் என்று எவரும் எழுதிவைக்கவில்லை. சொல்லவும் மாட்டார்கள். எனவேதான் திருப்பதி கோயில் கிருத்துவர், இசுலாமியர் என்றெல்லாம் எவரையும் அனுமதிக்கும். அவர்கள் இந்துவாக மாறவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவர்கள் ஏதோ நினத்தார்கள். அவர்களுக்கு ஏதோ மனச்சங்கடம். அதை இக்கடவுள் தீர்க்கவேண்டுமென என இறைஞ்சுகிறார்கள். இந்து மதம் தடையேதும் சொல்வதில்லை. எங்கள் கடவுள் உங்கள் கடவுள் என்று இங்கு கிடையவே கிடையாது.

    ‘வைணவன்’ என்ற சொல்லுக்குப் பொருள், சிரிவைணவத்தின் கொள்கைப்படி, எவருக்கும் பொருந்தும் அவர்கள் ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தால். எனவேதான் துலுக்க நாச்சியாருக்கும் கோயில். Thulukka Naachchiyaar was Alaudin Kilgi’s daughter. எனவேதான் திருப்பதி கோயில் ஒரு இசுலாமியர் திருப்பதி கடவுளுக்குக் கொடுத்த பெருங்காணிக்கையை ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொள்ளும்.

  42. //நீங்கள் ஏற்றாலும் ஏற்க விட்டாலும் கோவிலின் சொத்துக்கள் இறை அன்பர்கள் கொடுத்தவையே,இன்றைய நிலையோடு ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.கோயிலுக்கு சொந்த பணத்தை கொட்டி ஆன்மிகத்திற்கு தங்களின் பங்களிப்பாக கருதி வருகிறார்கள் அப்பாவி இந்துக்கள்//

    நாம் இங்கே பேசிக்கொண்டிருப்பது ஒரு மன்னன் தன் சொந்தக்கோயிலென்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தன் குடும்பச்சொத்தாக வைத்துக்கொண்டிருந்த கோயிலைப்பற்றியே.

    இப்படி பலகோயில்கள் இன்றும் உண்டு. அதாவது ஒரு குறிப்ப்ட்ட சமூகம், அல்லது குடும்பத்துக்கு மட்டுமே உரித்தாக இருக்கும்.

    மன்னர் கோயில்களை எடுத்துக்கொண்டவுடன், அக்கோயிலின் வளம், அப்பாவி இந்துக்கள் தரும் வரியால் மட்டுமே பேணப்படுவதில்லை. மன்னன் பலவழிகளைக்கையாண்டான். அவையணைத்துமே நல்வழிகளே என்று சொல்ல முடியாது.

    திருமங்கை ஆழ்வாரே சிரிரங்கத்து மதில்களைக்கட்ட நாகப்பட்டினத்து விகாரத்திலிருந்து பொன்னாலான புத்தர் சிலையைக்கவர்ந்ததாக வரலாறு.

    ‘அப்பாவி இந்துக்கள்’ கொடுக்கிறார்கள் என்பது இன்று பொருந்தும் அன்று பொருந்தா. மக்களின் வரிப்பணத்தில் ஒரு பங்கு கோயில் பராமரிப்புக்கும் போனது அம்மன்னன் இந்துவாக இருந்தால். இசுலாமியனாகவிருந்தால், மசூதி பராமரிப்புக்குப் போகுமில்லையா?

    நான் ஏற்பதும் ஏற்காததும் சட்டை பண்ண வேண்டியது கிடையாது. என்ன நமக்குத் தெரிய வருகிறது வரலாற்றுப்படிப்புகளிலிருந்து என்றுதான் பேசுகிறோம்.

    திருவனந்தபுரம் கோயில் என்றால் வரலாற்றைத் தோண்டாமல் இருக்கமுடியாது

  43. //அரசாங்கத்துக்கு போனால் பாதி மந்த்ரி வீட்டிற்கும் மீதி அதிகாரி வீட்டிற்கும் தான் செல்லும். எப்படியும் வீர மணி பருப்பு மலையாளிகளிடம் எடுபடாது//

    வீரமணி போன்றவர்களால் சொல்லப்பட்டது ஒரு ப்ரபோசல் மட்டுமே. மொடாலிட்டீஸ்கள் கிடையா.

    அதாவது, செல்வம் மக்கள் நலப்பணிகளுக்கு, அல்லது நலப்பணிகளுக்கும் செய்யப்படவேண்டும், அல்லது செய்யப்படலாம் என்பது ஒரு ப்ரபோசல் proposal மட்டுமே.

    நான் ஏற்கனவே சொன்னது போல இது ஒரு தவறான இந்துக்கள் மனத்தைப் புண்படுத்தும் ப்ரொபோசல் அன்று.

    இதை எப்படி செய்வது என்பது பின்னர் பார்க்கப்படும். அதாவது மொடாலிட்டீஸ். modalities

    அனைத்து செல்வத்தையுமா ? அல்லது கொஞ்சமா ? ஆர் மூலம் ? அரசு அதிகார்களின் மூலமா? அல்லது மன்னர் வைக்கும் ஆட்களையா ? மக்கள் நலப்பணிகள் என்றால் எவையெவை ? and so so மொடாலிட்டீஸ்.

    அவை ஆராயப்படுமுன்பேயே பெசிமிஸ்டிக்காக கொள்ளையடிப்பார்கள் என்றால் எப்படி?

    தமிழ்நாடு வேற; கேரளா வேற.

  44. //இது விதண்டா வாதம் அல்ல,விவாதம் நீங்கள் நீதிபதியின் சொத்தை கேட்க சொல்வதே விதண்டாவாதம்,அல்லது உங்களின் தனிப்பட்ட உழைப்பில் சம்பாரித்த சொத்துகளை கேட்டால் விதண்டாவாதம் என சொல்லலாம்.திகாவின் சொத்தால் எத்தனை தீவிர அடிமட்ட ஏழை திக குடும்பத்திற்கு உதவி செய்யப்பட்டுள்ளது? கல்வி கட்டணமின்றி எத்தனை ஏழை மாணவிகளுக்கு பெரியார் மணியம்மை பல்கலையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.? சமத்துவம்.பொது நலம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாதவர்கள் பேச என்ன அருகதை?//

    இது வீரமணியைப்பற்றிய தனிநபர் பிரச்சினை. என்னைப்பொறுத்தவரை, இஃது உங்களுக்கும் அவருக்குமுள்ள பிரச்சினை.

    நான் என்ன சொல்கிறார் என்றுதான் பார்க்கிறேன். மேலும், அவர் மட்டுமல்ல; பலரும் சொல்கிறார்கள் தமிழ்நாட்டையும் தாண்டி. அதையும் பார்க்கிறேன்.

    அவ்வளவுதான்.

    வீரமணி சொன்னகருத்தை மற்றவர்கள் சொல்லும்போது எப்படி எடுக்கிறீர்கள் ?

    உங்கள் கருத்தின்படி, ஒருவன் ஒன்றைச்சொல்வதற்கும் தகுதி வேண்டும். இல்லாவிட்டால் அவன் சொல்லக்கூடாது.

    Suppose a good and well known Hindu makes the same suggestion namely spend the wealth for the betterment of people’s lives, instead of hoarding it. Will u accept the suggestion ?

  45. சிதம்பரம் கோயில் ஆணையத்தின் கைக்கு சென்ற பின்னர் கோயிலில் உண்டியல் வைத்து பிச்சை எடுக்கிறது (அறநிலைய துறை வந்தவுடன் முதலில் செய்தது பல உண்டியல்களை கோயிலில் வைத்தது தானம் ) இந்த அரசு,
    அதிக பணத்துக்கு குறுக்கு வழி,குறைந்த பணத்துக்கு செகண்ட் கிளாஸ்,தர்ம தரிசனத்துக்கு நீண்ட வழி என்று ஆரம்பித்து விட்டது.அரசின் இந்த செயல்களுக்கு இந்துக்களிடம் எடுக்கும் மிரட்டல் பிச்சை என்று பெயர்//

    திராவிடன்!

    தமிழ்நாடு அரசு செய்வது சரி.

    கோயிலில் வைத்துத்தான் சாமியைக்கும்பிடுவேன் என்று நீங்கள் வந்தால், காசு செலவழிக்கவேண்டும்.

    ஆண்டவனைக் கோயிலில் வைத்துப்பராமரிக்க செலவழிப்பது ஆர் ? ஓசியிலேயே வசதியாக வந்து கும்பிட்டுவிட்டுப்போவேன் என்றால் எப்படி?

    கோயில் சுற்றுக்கு வெள்ளையடிக்க, பூஜாரிகளுக்கும் பிற ஊழியர்களுக்கும் சம்பளம் போட, தீபம் எண்ணை பூ மின்சாரம் வைக்க, பணத்துக்கு எங்கே போவது ? அனைத்தையுமே வணிகவரி, சுங்க வரி என்று போய் எடுத்துவிடமுடியுமா ? கோயிலில் கும்பிட வருபவர்களும் ஏதாவது கொடுக்க வேண்டும்! கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்றுதான், இந்த தனிவரிசை, சேவாக்களுக்கு தனி டிக்கட் என்று வைக்கிறார்கள்.

    கொஞ்சம் பர்சைத் திறக்க வேண்டும். ஆருக்காக ? அந்த ஆண்டவனுக்காக !

    இயன்றவன் ரூ 100 டிக்கட் வாங்கி போகட்டும். உங்களை ஆரும் கட்டாயப்படுத்தவில்லை. ஓசியிலே தர்மதர்சனம் பண்ணிவிட்டு, ஓசியிலே அன்னதானம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப்போங்கள்..

  46. அமலன் உங்களுடையவை மிகவும் விசித்திரமான கமெண்டுகளாக உள்ளன.

    பரவலாக உள்ள தவறான நம்பிக்கைகளையே நீங்கள் முன்வைக்கிறீர்கள்.

    தலித்துகளில் வடமொழி அறிந்தவர்கள் பலர் உண்டு. புலமை பெற்றவர்களும் உண்டு.

    சைவசித்தாந்தம் மட்டும்தான் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கிறது என்பதும் சரியல்ல. மேலும், மனிதன் கடவுளாக முடியாது என்று சைவ சித்தாந்தம் சொல்வதாக வேறு குண்டு போடுகிறீர்கள். எங்கிருந்து ஐயா இப்படிப்பட்ட விஷயங்களைப் பிடித்தீர்கள்?

    ஜெயமோகன் ஒரு பக்தர் இல்லை என்று வேறு ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிறீர்கள். அவர் பக்தர் இல்லை என்றால், இந்தியா ஐரோப்பா கண்டத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

    .

  47. கோயில் என்ற அமைப்பு எல்லா தரப்பினருக்கும் பொதுவானதாக,ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே அனுமதி உள்ள இடமாக இருக்க வேண்டும். அதனை பணம் காய்ச்சி மரமாக வியாபார ஸ்தலமாக மாற்ற கூடாது என்பது என் கருத்து, சும்மா அரசு செய்வது சரி என சொல்லவேண்டாம்.அன்னதானம் நான் சாப்பிடவேண்டும் என்று.கோயிலுக்கு இருக்கும் சொத்தை ஒழுங்கா பராமரித்து ஏமாற்றும் நிலா குத்தகை தாரரிடம் ஒழுங்காக சரியான குத்தகை பணத்தை வசுளித்தாலே சுண்ணாம்பு அடிக்கவும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் போதுமானது, நிர்வாக திறமை இல்லாத நிர்வாகம் விட்டு வெளியே போக வேண்டியதுதானே.அதனை பராமரிக்க எத்தனையோ ஆன்மிக அமைப்புகள் உள்ளன.
    நீங்கள் ஆணையிட வேண்டாம்.
    உங்கள் மதத்தில் வழிபடும் கடவுள் என்று குறிப்பிட்டது இதில் என்ன ட்விஸ்ட்?
    திருப்பதி தேவச்த்தானம் செய்வது போன்ற சேவைகளை செய்யலாம்.ஆனால் கோயில் அதற்கான அமைப்பு கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும்

    ////இது வீரமணியைப்பற்றிய தனிநபர் பிரச்சினை. என்னைப்பொறுத்தவரை, இஃது உங்களுக்கும் அவருக்குமுள்ள பிரச்சினை////
    வீரமணி என்ற தனிப்பட்ட நபருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஒரு பொது அமைப்பின் தலைவர் ஒரு கருத்து சொல்லும்போது ஒரு பொது உடமை அமைப்பின் தலைவர் அவருடைய செய்கை நிச்சயம் விமர்சனத்துக்கு உரியது ஆகிறது, ஆனால் உங்களை பொருத்தமட்டில் அந்த கருத்து உங்களுக்கு பிடித்த கருத்து ஆகையால் அதனை ரசித்து வரவேற்கிறீர்கள். .

    //////////நாம் இங்கே பேசிக்கொண்டிருப்பது ஒரு மன்னன் தன் சொந்தக்கோயிலென்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தன் குடும்பச்சொத்தாக வைத்துக்கொண்டிருந்த கோயிலைப்பற்றியே.

    இப்படி பலகோயில்கள் இன்றும் உண்டு. அதாவது ஒரு குறிப்ப்ட்ட சமூகம், அல்லது குடும்பத்துக்கு மட்டுமே உரித்தாக இருக்கும்.///////

    https://tamilhindu.com/2011/07/sri-padmanabhas-treasure-who-owns/comment-page-2/#comment-32999
    இன்றைய இந்த கட்டுரையை காணவும்.

  48. ///////வீரமணி சொன்னகருத்தை மற்றவர்கள் சொல்லும்போது எப்படி எடுக்கிறீர்கள் ?

    உங்கள் கருத்தின்படி, ஒருவன் ஒன்றைச்சொல்வதற்கும் தகுதி வேண்டும். இல்லாவிட்டால் அவன் சொல்லக்கூடாது.
    //////
    நீங்களோ நானோ சொல்வது வேறு, ஆனால் ஒரு பொதுடைமை வாதி சொல்வது வேறு,அவர் நிச்சயம் தகுதியை செயலில் கொண்டவராக இருக்கவேண்டும். நீங்கள் அவரின் கருத்தை ஆதரிப்பது ஒருதலை பட்சமானது. தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என உள்ளவரை ஆதரிப்பது நீங்கள்.

  49. பக்த்தனாக இல்லாவிட்டாலும் அவன் இவன் என்று சொல்வது ஒன்றும் இறைவனுக்கு குறைந்து போகபோவதில்லை, மேலும் நான் குறிப்பிட்டது உங்களின் பழக்கத்தையும் இங்குள்ள பழக்கத்தையும்,ட்விஸ்ட் ஏன்?

  50. ////கோயிலில் வைத்துத்தான் சாமியைக்கும்பிடுவேன் என்று நீங்கள் வந்தால், காசு செலவழிக்கவேண்டும்////.

    கோயில் இப்படியா இருக்கவேண்டும்? எல்லோருக்கும் குறிப்பாக இல்லாதவர்க்கு எளிதாக வரக்கூடிய தன்னை பிறரிடம் வேறுபடுத்தி காட்டாத இடமாக இருக்கவேண்டும்.எனக்கு ஓசி அன்னதானம் சாபிடுவதில் ஒன்றும் தவறில்லை, யாரானாலும் நியாயமான ஒரே அளவிலான தரிசனம் என்பதே கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதை நிர்வாகத்தினர் கடைபிடிப்பதாகும். சினிமா தியேட்டரில் தான் பிரஸ்ட் கிளாஸ்,பால்கனி, தரை டிக்கெட் எல்லாம் இருக்கவேண்டும்.
    ////கொஞ்சம் பர்சைத் திறக்க வேண்டும். ஆருக்காக ? அந்த ஆண்டவனுக்காக/////
    ஆண்டவன் எங்கும் காசு கொடுக்கசொல்லி கேட்க வில்லை,அவரை பராமரிக்க தேவையான சொத்து முன்னோர்களால் உண்டாக்கப்பட்டு அது இன்று ஒரு சிலரால் அனுபவிக்கபடுகிறது. நிர்வாகம் அதனை சீரமைக்கவேண்டும். பாரபட்சம் காட்டி கடவுளை காட்சி பொருளாக்கி வியாபாரம் செய்ய கூடாது.
    நீங்கள் குறிப்பிட்டது போல கோயில் வெறும் இறை சம்பந்த பட்டதல்ல.
    நான் பள்ளி சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட வெல்ல அபாய காலங்களில் (mgr கடைசி நேரம்) தஞ்சை மாவட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ள தாழ்வான நில பகுதி மக்கள் பலரை அந்தன ஊர் கோயில்களில் தங்க வைத்து உணவும் குத்தகை தாரர் அளந்த (அக்காலத்தில் அளந்தார்கள் 1984 ) நெல்லில் இருந்து உணவும் போட்டார்கள்.

    ஆனால் உங்கள் இறையியல் அறிவு (சைவ வைணவ சங்கர ) உண்மையிலேயே எனக்கு வியப்பளிக்கிறது.

  51. அமலன்

    //
    கோயிலில் வைத்துத்தான் சாமியைக்கும்பிடுவேன் என்று நீங்கள் வந்தால், காசு செலவழிக்கவேண்டும்.

    ஆண்டவனைக் கோயிலில் வைத்துப்பராமரிக்க செலவழிப்பது ஆர் ? ஓசியிலேயே வசதியாக வந்து கும்பிட்டுவிட்டுப்போவேன் என்றால் எப்படி?

    கோயில் சுற்றுக்கு வெள்ளையடிக்க, பூஜாரிகளுக்கும் பிற ஊழியர்களுக்கும் சம்பளம் போட, தீபம் எண்ணை பூ மின்சாரம் வைக்க, பணத்துக்கு எங்கே போவது ? அனைத்தையுமே வணிகவரி, சுங்க வரி என்று போய் எடுத்துவிடமுடியுமா ? கோயிலில் கும்பிட வருபவர்களும் ஏதாவது கொடுக்க வேண்டும்! கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்றுதான், இந்த தனிவரிசை, சேவாக்களுக்கு தனி டிக்கட் என்று வைக்கிறார்கள்.
    //
    இதை எல்லாம் நிஜமாகவே அரசு செய்கிறது என்று நீங்கள் நம்பினால் உங்களை மாதிரி ஒரு அப்பாவி இந்த உலகத்தில் இருக்கவே முடியாது

    இதுக்காக அரசு ஒரு பைசா தருவதில்லை எல்லாம் கொள்ளை அடிக்க படுகின்றன. பக்தர்கள் தாங்களாகவே போர்த்களையும், கோவில் தீட்சிதர்கள்/பட்டர்கள்/பூசாரிகளின் தனிப்பட்ட முயற்சினாலேயே இன்று கோவில்களில் விளக்கு எரிகிறது குங்கும அர்ச்சனை நடக்கிறது.

    உதாரணத்திற்கு – மதுராந்தகம் ஏறி காத்த ராமர் கோவிலில் உண்டியல் வருமானம் மாதத்திற்கு ஒரு லட்சம். நெய், திரி, கும்குமத்திர்காக அங்குள்ள பாட்டர் பிச்சை எடுக்காத உரை தான் உள்ளது.

    கும்பாபிஷேகம் எல்லாம் அரசு பணம் தந்து நடக்கிறது என்று நீங்கள் நம்பினால் என்ன செய்வது. எல்லாம் பக்தர்களின் தனிப்பட்ட முயற்சி தான்.

    தமிழ்நாட்டில் திராவிடா காட்டாட்சி மலர்ந்து 44 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறியவில்லையா

  52. “ஜெயமோகன் ஒரு பக்தர் இல்லை என்று வேறு ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிறீர்கள். அவர் பக்தர் இல்லை என்றால், இந்தியா ஐரோப்பா கண்டத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.”

    Mr Kalimigu Ganapathi

    ஒருவ‌ன் எழுதுவ‌திலிருந்து க‌ண்டுபிடிக்க‌ முடியும்.

    போக‌ட்டும்.

    ‘ப‌த்ம‌நாப‌ன்’ என்று எழுதுவ‌து உங்க‌ளுக்குச் ச‌ம்ம‌த‌மா?

    ஜெயமோகன் is an intellectual. His writings about Hindu religion, its concepts, etc. are on intellectual plane only. I have never come across his bakhti writings. He coldly analyses and draws his conclusions. He defends Hindu religion and Hindus, only as a political defence. Religion and piety go beyond that. On reading him closely, it is my considered view that he is incapable of any religious feelings that one expects and sees in a bhakta. If he has really any bhakti towards the Lord of Thiruvananthapuram, his mind would on its own have referred to the Lord with respect. Maybe, as a private person, he is a bhakta. We don’t know that. We are concerned with his public persona as comes out from his writings placed before the public and that is getting quoted here many times.

    For one thing, piety is ingrained already in us and that gets activated or encouraged by religion. Religion is an enabling thing only. It can’t create piety; but kindles piety already existing in us. If a person is not capable of piety or does not allow his piety to get activated, his religion can only be politics.

    Bhatkas are not intellectuals. But intellectuals can be bhaktas if only they are willing to let go their preoccupation with their intellect. Intellect harbours ego. To have intellect is to have an ego. It gives us arrogance. Never humuility. Bhatha goes empty handed before God and have abundance of humility. Intellectuals, with their intellectual consciousness, don’t approach or worship their god w/o using their intellect and reason. They are like foreign tourists in Madurai Meenakshi temples, observing the sculptures, rituals and ceremonies there, with wonder and for the purpose of acquiring knowledge in order to use them for arguments in their discourses on religions. Jeyamohan is a kind of such a tourist in a Hindu temple and the only difference being that he does it with the purpose of defending the religion.

    A religion per se does not need a defence. When the religion becomes political, it requires defence.

    Religion does not come under the realm of Reason. Since intellect comes under the realm of Reason, religion per se is beyond the comprehension or grasp of intellect. So, as an intellectual, no one can be a bhakta. Only that religion which is political is for such intellectuals.

    ஹிந்து.காம் வேறு. வைண‌வ‌ப்ப‌திவுக‌ள் வேறு. வைண‌வ‌ப்ப‌திவுக‌ளிலோ, ச‌ஞ்சிகைக‌ளிலோ இப்ப‌டி ‘பத்மநாபன்’ என்றெழுத‌‌ அனும‌திக்க மாட்டார்க‌ள். ப‌க்த‌ன் என்ப‌வ‌ன் க‌ண்டிப்பாக‌ நாலுபேர் ப‌டிக்க‌ எழுதும் விட‌ய‌த்தில் கொஞ்ச‌ம் சிரியாவது போட்டாவ‌து எழுத‌லாம் நாகசாமி கட்டுரையை மொழிபெயர்த்தவர் அதையாவது செய்திருக்கிறார் அல்லவா ? As a bhakta, one can call his god in the way he likes. When we share his bhakthi, we understand him. We are also transported to his world of egoless state. But when an intellectual uses such terms like padmanaban, we feel offended.

    எழுதுப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி எழதினாலும், இந்து.காம் ச‌ரி செய்ய‌லாம். I don’t know y it s not doing.

    திராவிட‌ன்,

    இறைவ‌னை இழுக்காதீர்க‌ள். அவ‌ன் பெரிய‌வ‌ன். நாம் பேசுவ‌து ம‌னித‌ர்க‌ளின் ந‌ட‌த்தைப் ப‌ற்றியே. ப‌த்மநாப‌ன் என்று விளிக்கும்போது, அஃது இறைவ‌னைக் காய‌ப்படுத்துமா என்ப‌து கேள்வியே கிடையாது. அவ்விறைவ‌னின் -இங்கே சிரிவைண‌வ‌ர்க‌ளின் – ம‌ன‌ங்க‌ளைக் காய‌ப்ப‌டுத்துமா என்ப‌தே கேள்வி. அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒருவ‌ரிட‌ம், ஜெய‌மோக‌னின் த‌லைப்புக்க‌ளைக் காட்டிக் கேளுங்க‌ள். அவ‌ர்க‌ள் அவ‌ர் விளிக்கும் முறை ச‌ரியே என்றால், நான் எழுதிய‌தெல்லாம் க‌ற்ப‌னை என்று ஒத்துக்கொள்கிறேன்.

    இந்து ம‌த‌த்தில் இறைவ‌னை நிந்தித்தவ‌ரை இறைவ‌ன் தண்டிப்பதில்லை; சிலவேளைகளில் அவர்கள் ஆசிர்வதிக்கவே பட்டிருக்கிறார்கள் என்று படிக்கிறோம். ஆனால், இறைவன் தன் ப‌க்த‌ர்க‌ளை நிந்தித்தோரை விடுவ‌தில்லை என்றும் படிக்கிறோம். அவர்களை அவன் நிந்திப்போரிடமிருந்து காப்பாற்றுகிறான்.

    மேலும், சிரிவைண‌வ‌த்தில் ப‌க்த‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌டும் ம‌ரியாதை ஆச்ச‌ரிய‌த்தைத் த‌ரும். ஆழ்வார்கள் பாடல்கள் நிறைய இதைப்பற்றிப் பேசுகின்றன.

  53. பக்த்தனாக இல்லாவிட்டாலும் அவன் இவன் என்று சொல்வது ஒன்றும் இறைவனுக்கு குறைந்து போகபோவதில்லை, மேலும் நான் குறிப்பிட்டது உங்களின் பழக்கத்தையும் இங்குள்ள பழக்கத்தையும்,ட்விஸ்ட் ஏன்?
    . Dravidan

    உங்களின் பழக்கத்தையும் – Whatever does this mean ?

  54. கோயில் இப்படியா இருக்கவேண்டும்? எல்லோருக்கும் குறிப்பாக இல்லாதவர்க்கு எளிதாக வரக்கூடிய தன்னை பிறரிடம் வேறுபடுத்தி காட்டாத இடமாக இருக்கவேண்டும்.எனக்கு ஓசி அன்னதானம் சாபிடுவதில் ஒன்றும் தவறில்லை, யாரானாலும் நியாயமான ஒரே அளவிலான தரிசனம் என்பதே கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதை நிர்வாகத்தினர் கடைபிடிப்பதாகும். சினிமா தியேட்டரில் தான் பிரஸ்ட் கிளாஸ்,பால்கனி, தரை டிக்கெட் எல்லாம் இருக்கவேண்டும்.
    . பாரபட்சம் காட்டி கடவுளை காட்சி பொருளாக்கி வியாபாரம் செய்ய கூடாது.

    திராவிடன்!

    இவை உங்கள் கருத்துகள். வேறு பலரும் இப்படியே சொல்கிறார்கள். இக்கருத்துகளுடன் என் வாதம் இல்லவே இல்லை. என வாதம் வேறு.

    அது:

    காசு இல்லாமல் கோயிலில் இறைவனை வைத்துப் பூசிக்க முடியாது. இறைவன் உறையுமிடமட்டுமில்லாமல், கோயில்கள் செங்கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை. நாளும் பேணப்படவேண்டும். பூஜாரிகள், சுத்தி செய்யும் ஊழியர்கள் தேவை. பூஜாரி எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும், அவருக்கும் பெண்டாட்டி, குழந்தைகுட்டிகள் என்று உண்டு. சுத்தி தொழிலாளியும் அவ்வாறே. அவர்களும் வாழவேண்டும். எனவே கோயில் தனவந்தர்களின் நல்ல உள்ளங்களை எதிர்னோக்க வேண்டியதாகி, அவர்கள் தரும் பொருட்களை மனமுவந்து ஏற்கவேண்டியதாகிறது. அவர்களுக்கு மரியாதையும் வசதியும் செய்ய வேண்டியதாகிறது. தனி வரிசை, ரு 100, 200, 300 என்று சேவாக்கட்டணங்கள் வைக்கவேண்டியதாகிறது. அவர்கள் விரும்புகிறார்கள். இறைவனுக்காக, உங்களைப்போன்ற பக்தர்களுகாக கோயில் கொஞ்சம் காம்பரமைஸ் பண்ணவேண்டியதாகிறது இறைவன் முன் அனைவரும் சமம் என்றாலும்!

    மற்றமதங்களும் இப்படித்தான். ஆனால் அவர்கள் வேறு உத்திகளைக் கையாளுவார்கள்; அவை பொதுவாக வெளியில் தெரிவதில்லை.

  55. நீங்களோ நானோ சொல்வது வேறு, ஆனால் ஒரு பொதுடைமை வாதி சொல்வது வேறு,அவர் நிச்சயம் தகுதியை செயலில் கொண்டவராக இருக்கவேண்டும். நீங்கள் அவரின் கருத்தை ஆதரிப்பது ஒருதலை பட்சமானது. தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என உள்ளவரை ஆதரிப்பது நீங்கள்.

    Dravidan

    If the proposal for spending at least a part of the found wealth for the betterment of the people living in the temple city, was mooted by anyone other than Veeramani, I wd hav welcomed it. The city of Tvpm is in bad shape. Hav u gone there? Or, if u dont lke to spend for people, at least u may welcome spending for the upkeep of the temple, which s not being done; hence Sundarajajan went to court. Only after he has gone to court, the gopuram was renovated last year. Hav u been frequenting the city and seen the gopularams ? I hav been doing so for decades.

    Veeraman may have his personal reasons for making the proposal, but discussion on that, and discussion on the proposal per se, are to be considered different, in my view.

  56. இதை எல்லாம் நிஜமாகவே அரசு செய்கிறது என்று நீங்கள் நம்பினால் உங்களை மாதிரி ஒரு அப்பாவி இந்த உலகத்தில் இருக்கவே முடியாது

    இதுக்காக அரசு ஒரு பைசா தருவதில்லை எல்லாம் கொள்ளை அடிக்க படுகின்றன. பக்தர்கள் தாங்களாகவே போர்த்களையும், கோவில் தீட்சிதர்கள்/பட்டர்கள்/பூசாரிகளின் தனிப்பட்ட முயற்சினாலேயே இன்று கோவில்களில் விளக்கு எரிகிறது குங்கும அர்ச்சனை நடக்கிறது.

    உதாரணத்திற்கு – மதுராந்தகம் ஏறி காத்த ராமர் கோவிலில் உண்டியல் வருமானம் மாதத்திற்கு ஒரு லட்சம். நெய், திரி, கும்குமத்திர்காக அங்குள்ள பாட்டர் பிச்சை எடுக்காத உரை தான் உள்ளது.

    கும்பாபிஷேகம் எல்லாம் அரசு பணம் தந்து நடக்கிறது என்று நீங்கள் நம்பினால் என்ன செய்வது. எல்லாம் பக்தர்களின் தனிப்பட்ட முயற்சி தான்.

    தமிழ்நாட்டில் திராவிடா காட்டாட்சி மலர்ந்து 44 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறியவில்லையா
    .
    Sarang

    That which I wrote is theory and principles. Not practice. I dont follow TN affairs. I am away. I dont go to Chidambaram or any Siva temple, so I dont know what s happening there. Sorry for the religious fanaticism.

    But I read in the first buget of DMK, that the govt earmarked about for renovation of the temples and consequent consecration ceremonies (kumbabhisekams.)

    Nellaippar koil was consecrated during DMK rule. Also, remember last year Kallalagar Koil was elaborately renovated and this year, its consecration took place. I like that God, I have been frequenting that temple for many years, and had to see it in dilapidated state. The front building under the hill built by kings was collapsing. Now everything has been restored. All in DMK rule. Whether I am true or false, you may verify from the citizens of Nellai and devotees of Kallalagar.

    I may sound DMKish. I agree they shd hav done more. What was done is infinitesmall as compared to what s required to b done.

    Hopefully, Jeyalalitha will do more.

  57. திரு.ஜோ.அமலன் அவர்கள் இந்து அறநிலை [ அற்ற ] துறையில் வேலை செய்கிறாரா என்ன ? சார் நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீர்கள்? தமிழக கோயில்களின் உண்மையான வருமானம் என்ன என்ற கணக்கு முதலில் அரசிடம் இருக்கிறதா? ஒரே உதாரணமாக எங்கள் திருப்பூரில் உள்ள நல்லூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயிலை எடுத்துக்கொள்வோம். இந்தக்கோயிலுக்கு சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலம் உண்டு. அனைத்து நிலங்களும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளன.அவற்றின் இன்றைய மதிப்பு பல கோடிகள் பெரும். இப்பகுதியை சார்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அனைவருக்கும் கோயில் நிலம் எது என்று தெரியும்.அனைத்துக்கும் முறையான ஆவணங்கள் உள்ளன. அரசுக்கு இது தெரியாதா? இன்று வரை மேற்ப்படி சொத்தை கையகப்படுத்தவோ ,குறைந்த பட்சம் கோயில் நிலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வாங்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோயில் மடப்பள்ளியில் வேலை செய்து வந்தவர் சம்பளம் கட்டுபடியாகவில்லை [ மாதம் ரூ தொள்ளாயிரம் ] என்று வேலையை விட்டு நின்று பல மாதங்கள் ஆகின்றன . இன்றுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.கோயில் பிரகாரத்தில் உள்ள சிலைகளுக்கு நீர் கொண்டு வர உதவியாளர் [ மடப்பள்ளி ஆள் ] இல்லாததால் பக்தர்கள் செலவில் எல்லா இடத்திலும் pipe கள் பொருத்தப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. இந்து அறநிலை [அற்ற ] துறையிடம் கேட்டால், கோயிலுக்கு வருமானமில்லை , ஆகவே எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் வருகிறது. இதுதான் அரசு நிர்வாகம் செய்யும் லட்சணமா? இப்படி வரவேண்டிய பணத்தை வசூலிக்காமல் விட்டுவிட்டு தரிசனம் செய்பவனிடம் பிச்சை எடுத்தால் என்ன அர்த்தம்? மேலும் கோடிக்கணக்கில் வருமானம் வரும் கோயில்களின் நிதி எப்படி செலவளிக்கப்படுகிறது?
    ஒரே ஒரு ஹிந்து கோயிலில் கிடைத்த சொத்தைப் பற்றி இவ்வளவு விவாதம். சரி, மற்ற மதங்களை பற்றி ஏன் ஒருவரும்பேசுவதில்லை?குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நகரிலும் நட்ட நடுவில் பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை வைத்துள்ளனரே,அதை பற்றி பகுத்தறிவு [இல்லாத ] வாதிகள் இன்றுவரை மூச்சு விட்டது உண்டா? முஸ்லீம்கள் சந்து சந்துக்கு கட்டும் மசூதிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது[ பெரும்பாலும் அரசை ஏமாற்றி ஹவாலா மூலம் வரும் பணம் ] என்ற கேள்வியையாவது இவர்கள் எழுப்பியது உண்டா? கிடப்பது கிடக்க அரண்மனை நெல்லுக்கு இந்த பகுத்தறிவு [ அற்ற ] பெருச்சாளிகள் அடித்துக்கொள்வது ஏன்?

  58. ///////காசு இல்லாமல் கோயிலில் இறைவனை வைத்துப் பூசிக்க முடியாது. இறைவன் உறையுமிடமட்டுமில்லாமல், கோயில்கள் செங்கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை. நாளும் பேணப்படவேண்டும். பூஜாரிகள், சுத்தி செய்யும் ஊழியர்கள் தேவை. பூஜாரி எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும், அவருக்கும் பெண்டாட்டி, குழந்தைகுட்டிகள் என்று உண்டு. சுத்தி தொழிலாளியும் அவ்வாறே. அவர்களும் வாழவேண்டும். எனவே கோயில் தனவந்தர்களின் நல்ல உள்ளங்களை எதிர்னோக்க வேண்டியதாகி, அவர்கள் தரும் பொருட்களை மனமுவந்து ஏற்கவேண்டியதாகிறது. அவர்களுக்கு மரியாதையும் வசதியும் செய்ய வேண்டியதாகிறது. தனி வரிசை, ரு 100, 200, 300 என்று சேவாக்கட்டணங்கள் வைக்கவேண்டியதாகிறது. அவர்கள் விரும்புகிறார்கள். இறைவனுக்காக, உங்களைப்போன்ற பக்தர்களுகாக கோயில் கொஞ்சம் காம்பரமைஸ் பண்ணவேண்டியதாகிறது இறைவன் முன் அனைவரும் சமம் என்றாலும்!///////

    இருக்கும் கோயிலின் சொத்துக்களை அதன் மூலம் வரவேண்டிய நியாயமான வருமான இனங்களை சரியாக நிர்வகித்தாலே அந்தந்த கோயிலின் பராமரிப்புக்கும் அன்னதானம் இன்னபிற சேவைகளுக்கும் போக மீதி பணம் இருக்கும்.இதனை சரியாக நிர்வகிக்கதது அந்த நிர்வாகத்தின் மெத்தனம் மற்றும் சீர்கேடு,இதனை ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன்,பலரும் இக்கருத்தை கூறி விட்டனர்.
    /////மற்றமதங்களும் இப்படித்தான். ஆனால் அவர்கள் வேறு உத்திகளைக் கையாளுவார்கள்; அவை பொதுவாக வெளியில் தெரிவதில்லை./////
    அது என்ன உத்தி?????

  59. ////உங்களின் பழக்கத்தையும் – Whatever does this mean ?/////
    கிறித்தவர்களே தாம் வணங்கும் ஏசுவுக்கு பிறர் மரியாதை செலுத்தாததை குறையாக பார்ப்பார்கள், (இதுவே நான் உங்களின் பழக்கம் என்று குறிப்பிட்டது) இந்துக்கள் தாங்களே கடவுளை அவன் இவன் அவள் இவள் என்றே அழைப்பது இயல்பு ஆகையினால் ஜெ மொ ஸ்ரீ என்று போடாதது பிரச்னை இல்லை என்று கூறியிருந்தேன், அதையே உங்கள் கடவுள் என்று குறிப்பிட்டிருந்தேன் நீங்கள் அதற்கு என்னவோ விளக்கம் எழுதி நான் சொன்ன விஷயம் ட்விஸ்ட் ஆகி விட்டதை குறிப்பிட்டேன்

  60. கோயில் சொத்து கோயிலுக்கு உபயோகபட வேண்டும், இன்னபிற சேவைகளும் (மக்கட்செவை)கோயிலின் பெயராலே திருப்பதி போன்று நடப்பது வரவேற்க தக்கது. அதிலும் உபயோகபடுத்த முடிந்த செல்வங்களே உபயோகபடுத்தமுடியும் தொல்லியல் துறை பரிந்துரை மற்றும் ஆணைக்கிணங்க

  61. May I also share with the readers that many temples in Tamil Nadu, once famous for glorious festive activities have deserted looks with no money to spend. One such temple is Nagapattinam Sri Neelayadakshi Amman Temple where anyone can see a board which says that Kind Safoji of Thanjavur had given………..acres of land for this temple’s maintenance. There was a time when festivals of this temple, like Adi Puram, were talked about with devotion and pleasure. There used to be Chanting of Vedas along with the Deity’s procession and also Music Concerts in all the four main Streets surrounding the temple by eminent Vidwans like Madurai Sri Somasundaram, Clarionette Vidwan Shri AKC Natarajan, Nadaswaram by Shri TN Rajaratnam Pillai,Shri Karukurichi Arunachalam and many more. Some of the Devotees have formed an Association called Saptha Vidanga Kaingarya Sabha and have been rendering yeomen service. May I request the TN Government and its HR & CE Dept. controlling such temples to explain what is the status of such lands and in whose custody they exist now and how? This temple’s present pathetic status can be understood by the devotees if they visit the temple. Who is responsible and what should be done to restore such temples’ glory?

  62. ஏராளமான சைவர்கள் அருள்மிகு அனந்த பத்மநாப சாமி கோயில் சென்று வழிபடுவதை நான் பார்த்திருக்கிறேன். கணக்கற்ற சாக்தர்களும் அங்கு வழிபடுகிறார்கள். ஏராளமான முருக பக்தர்களும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். //

    பண்ணலாம் நாகராசன். எனினும் வழிபாட்டுமுறைகளை அவர்கள் மாற்றமுடியாது. அவர்கள் வெறும் பக்தர்கள் மட்டுமே.

  63. தமிழ் ஹிந்து…மீண்டும் சில எழுத்துப் பிழைகளுக்காக, என் முந்தைய பதிவை நீக்கி, இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளுங்கள். //Where is your culture which still prevents dalits from entering the temples? For whom the temples are symbol of culture? for the oppressors or oppressed? Any dalit would laugh at this.Where is your culture which still prevents non-brahmins becoming priests in your temples? is it possible for a dalit to become a priest, head of saiva, vainava mutt, adheenams, 18patti naattamais?//
    எந்தக் கோயிலிலும் தலித்துக்களை அனுமதிக்காமலில்லை. கோயில்கள் பண்பாட்டுச் சின்னங்கள்தான். இதில் ஒடுக்கப்பட்டோர், ஒடுக்கியோர் என்பதெல்லாம் இல்லை. சைவ, வைஷ்ணவ ஆதீனங்களின் மடாதிபதிகள், 18 பட்டி நாட்டாமைகள் என்பதையெல்லாம் தலித்துக்களுக்குக் கொடுக்க எந்தக் கோயிலும் தடையாக இல்லை. நாட்டாமையாக ஒருவர் அங்கீகரிக்கப்படுவதற்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு? இந்தியாவில் மதம் மாற்றிகள் சில இடங்களில் Priest-களாக யாரை வேண்டுமானாலும் போட்டிருக்கலாம். அவர்களையெல்லாம் மிகப் பெரிய Church-களிலோ மசூதிகளிலோ Priest-களாகப் போட்டிருக்கிறீர்களா என்ன? ஜாதி கூடப் பார்க்க வேண்டாம். நாட்டின் எல்லைகளைப் பார்க்காமல், Vatican-லும் அரபு தேசங்களிலும் Priest-களாக இந்திய முஸ்லிம் ஒருவரையோ இந்தியக் கிறிஸ்துவர் ஒருவரையோ போட்டிருப்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். ஆனால், பாரதம் முழுவதிலும் எத்தனையோ கோயில்களில் பிராமணரல்லாதார் கோயில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்.

    //Who has authorised them to be responsible for educating the society?? who has denied the right of education to dalits and sudhras?//
    எவர் அறிவுடையோராகவும் சுயநலமில்லாதோராகவும் இருந்தனரோ அவரை ஆசிரியராகக் கொள்வது சமூகம்தான். தனி மனிதர்களல்லர். நாட்டாமை என்று வரும்போது சூத்திரர்களிளிருந்து தலித்துக்களைப் பிரித்து இனம் காணும் தாங்கள், கல்வி மறுப்புப் பற்றி எழுதும்போது இவ்விருவரையும் ஒனறாக்கக் காரணம் என்ன? கோயில்களுக்கும் நாட்டாமைக்கும் தொடர்பில்லை; நாட்டாமைகளாக பிராமணரல்லாதார்தாம் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதை அறிந்துதானே? தவிர, கல்வி உரிமை சூத்திரர்களுக்கும் தலித்துக்களுக்கும் எப்போது பிராமணர்களால் மறுக்கப்பட்டது? அப்படி நிகழ்ந்திருந்தால், குறிப்பிட்ட நிகழ்வுகளைக் காட்டுங்கள்; அதற்குச் சரியான பின்னணி என்ன என்பதை இந்த வலைத் தளம் தெளிவு படுத்தும்.

    //Chozhan, why dont you arrange to release the correct list at least now?? what is your opinion on the above ruling? You are only saying the same rule should be applicable to all other religions.. but you are not commenting on the above point made by the court.//
    மறைந்த பலராம வர்மாவிடம் Court பட்டியலைப் பெறுவதற்கு அன்பர் சோழன்தான் தடையாக இருக்கிறாரா?

    .// What a historical knowledge you got?? There was nothing called Bharatham by that.. only English named this country as India after annexing the kingdoms.. during those periods, you people pushed dalits and tribals out of the mainstream and it contiuues now.. You remember Pappa patti , Keeripatti, Melavalavu?//
    வெளி நாட்டார் வைத்த பெயர்தான் இந்தியா என்பதென்னவோ உண்மைதான். ஆனால், பாரதம் என்றொரு நாடு இருந்ததில்லை என்று சொல்வது அபத்தம். இன்றும் இந்நாட்டுக் currency-யில் ‘பாரதிய ரிசர்வ் பாங்க’ என எழுதியிருப்பதைக் காணலாம். பாரதம் என்னும் சொல் அனாதியாக வருவது. யாரோ ஒரு சிலர் திணித்ததெல்லாம் கிடையாது. நமக்குத்தான் ஆங்கிலேயர் வைக்கும் பெயரில் அதீத ஈர்ப்பாயிற்றே ! கலாச்சார ரீதியாக அகண்ட பாரதம் முழுவதும் ஒன்றாகவே இருந்தது. தங்களுக்குத்தான் கலாச்சாரம் என்றாலே shock அடிக்கிறதே! தலித்துக்களையும் பழங்குடியினரையும் புறந்தள்ளியதும் பாப்பட்டி, கீரிப் பட்டிகளை உருவாக்கியதும் யார் என்கிறீர்கள்? இஸ்லாமிய/கிறிஸ்துவ வருகைக்கு முன் பாரதம் வளமையாகத்தான் இருந்தது என்பதை ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் ஒன்றே உங்களுக்கு உறுதிப்படுத்தவில்லையா? நாடு செல்வ வளத்துடன் இருந்ததைப் பற்றி அந்த அன்பர் ஒரு வரி குறிப்பிட்டால், தாங்களோ தேசத்தின் பெயர்க் காரணம் பற்றி ஆய்வு செய்யப் போகிறீர்கள். இது என்ன விதக் countering?

    //நல்ல வேளை, இது போன்ற பணம் கிறித்துவ மிஷினரிகளிடம் இருந்தால், கலவரத்தை உருவாக்கி மதம் மாற்றி நாட்டை உடைத்து இருப்பார்கள்.
    முஸ்லீம்களிடன் இருந்தால் நீயூயார்க்கில் நடந்தது போல் பல ஆயிர கணக்கான மக்களைக் கொன்று இருப்பார்கள்.//

    மேற்கண்ட பதிவுக்கும் அதற்குத் தாங்கள் கொடுத்துள்ள கீழ்க்கண்ட மறுப்புக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை!

    //It is good that Dalits and Tribals dont retaliate the Hindu religion people. If this kind of discrimination occurs elsewhere, it would have been different and the religion would pay the price for the discrimination?//
    அப்படியே discrimination இருந்திருந்தாலும் அதற்கு இன்றைக்கு யாரை தண்டிக்க? தலித்துக்கள், உயர் ஜாதி ஹிந்துக்களைப் பழிவாங்க வேண்டும் என்கிறீர்களே… கொலை பாதகச் செயல்களைச் செய்பவரையும் உடந்தையாய் இருப்பவரையும் கூட தண்டிக்கக் கூடாது என்று இங்கு ஒரு ஞாயம்? நிலவுகிறது. இந்தக் கொடுங்காலத்தில் போய், எந்தக் காலத்தில் யார் செய்த தவறு என்று இன்றைக்கு வாழும் மனிதனை தண்டிப்பது? தந்தை செய்யும் தவறுக்குக்கூட மகனை தண்டிக்க முடியாது தெரியுமா?

    கோயில் விஷயத்தை அதை நம்புபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒருவர் சொன்னால், இதில் எங்கு Upper/Lower class வித்தியாசம் வருகிறது? வேண்டுமானால், எல்லாத்தரப்பு ஹிந்துக்களையும் இவ்விஷயத்தில் ஒன்றுகூடி முடிவு செய்யச் சொல்லுங்கள். ஆனால் எவர் இதில் குறுக்கிட்டாலும் அவருக்கிருக்க வேண்டிய அடிப்பைத் தகுதி ‘கடவுள் (ஸ்ரீ பத்மனாபரின் மேல்) நம்பிக்கை.’ கடவுள் என்று சொன்னாலே Upper Class, Lower Class என்று பிரிக்கும் தங்களைப் போன்றவர்களுக்கு, இதில் கருத்துச் சொல்ல உரிமை உண்டா என்று தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

    தாங்களும் தங்கள் மூதாதையரும்தான் இவற்றைஎல்லாம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதற்கு ரசீது, பிற ஆவணங்கள்… ஆதாரமாக இருக்குமே! எடுத்துப் போய் Court-ல் காட்டலாமே! பெறுபவர் மட்டும்தான் ஆதாரம் வைத்திருப்பாரா? தருபவர் எந்த ஆதாரமும் வைத்திருக்க வேண்டாமா? அப்படியே தாங்களும் தங்கள் மூதாதையரும் through donations, offerings, dhanams, taxes, etc., மூலமாகக் கோயிலுக்குக் கொடுத்திருந்தாலும், கொடுத்தவற்றை வேறு பயன்களுக்குக் கேட்பது என்ன ஞாயம்? பத்மநாப சுவாமியையே ஏற்காத பிரிவினருக்கெல்லாம் இச்செல்வம் செல்வது ஞாயமல்லவே! உயில் எழுதுபவர்களின் விஷயத்தில்கூட, உயிலில் சொல்லப்பட்டுள்ள விதத்தைத் தவிர வேறு விதத்தில் ஒருவரின் செல்வத்தினைப் பயன்படுத்த முடியாது தெரியுமா?

    அந்தந்தச் சமயத்தினரிடமிருந்து பெறப்படுகிற நிதி உதவி, அவரவர்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுவதற்காகத்தான். இதில் சந்தேகமில்லை. அந்த அடிப்படையில் ஸ்ரீ பத்மநாப சுவாமியின்மேல் நம்பிக்கை, பற்று, பக்தியுள்ள அத்தனை பேருக்கும் இந்தச் செல்வம் பயன்படும். அதில் உங்களுக்குக் கவலை வேண்டாம். மற்றவர்கள் இதில் ஹிந்து என்னும் போர்வையில்கூட மூக்கை நுழைக்க வேண்டாம்.

    எந்த விஷயத்தினை எடுத்தாலும் மேல் ஜாதி, கீழ் ஜாதி, ஒடுக்கப்பட்டோர், ஒடுக்கியோர்… என்றெல்லாம் பேசிப் பேசி இந்தியர்களைப் பிளவுபடுத்தும் போக்கு இந்த நாட்டு நலனுக்கு நல்லதல்ல.

    மேலும் 2G கொள்ளை போன்ற விஷயங்களை, விரும்பிக் கொடுக்கும் நன்கொடைகளோடு ஒப்புநோக்குவது அறிவுடைமையாகாது. இன்றைய சட்டத் திட்டங்களின் மேலேயே மண்ணள்ளிப் போட்டுவிட்டு ஏமாற்றுபவர்கள், அன்றைய சட்டத் திட்டங்களின்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளை எந்த அளவுகோலின்படி ஆராய்வது?

  64. //கிறித்தவர்கள்,முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது//
    என்ன கதை விடுகிறீர்கள்? கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டில் தனியாக மன்னனுக்கு வரி கட்டினார்களா? தங்களைப் போன்றோர் எழுதிய இந்திய வரலாற்றில்கூட, ஹிந்துக்களுக்குத் தான் ‘தலை வரி’ போட்டிருந்ததாக இருக்கிறது.

    //யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள்//
    அங்கு கணக்குக் காட்டாமல் இருந்திருக்க முடியாது. சுரண்டப்பட்ட, ும் தேவையில்லை” என்று தங்கள் கடிதத்திலேயே பாதுகாப்பாகக் கூறிவிட்டீர்கள். நல்ல ஞாயம். அவர்கள் யாருக்கு அன்றைய சட்டங்களின்படி கணக்குக் காட்ட வேண்டுமோஅங்கு கணக்குக் காட்டாமல் இருந்திருக்க முடியாது.

    //பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்?//
    பெண்டாட்டி, பிள்ளை இருந்தால், இன்றைய 2G-க்களைப் போல, படுக்கையறைவரை திருட்டுச் சொத்துக்களை நிரப்பி வைத்திருக்கலாம் என்றாகிறதே! ஸ்ரீ பாபா இதுநாள் வரை அந்தச் செல்வத்தின் மூலம் எவற்றைச் செய்துவந்தாரோ, அவற்றைச் செய்ய இப்போதும் யார் தடை விதித்தார்கள்?

    //அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறை//
    அலைக்கற்றை ஊழலை மறைக்க, “நாங்கள் மக்களுக்குக் குறைந்த செலவில் அலைபேசிப் பயன்பாட்டைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்” என்று மாய்மாலம் செய்தவர்களைப் போல, ஸ்ரீ பாபா ஒன்றும் கட்டுக் கதைகளைப் புனையவில்லையே!

    //வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம்//
    ஆன்மிகம், கோயில்… என்றெல்லாம் சொன்னால்தானே மக்களைப் பிளவுபடுத்தும் சி/நிந்தனைகளைக் கட்டவிழ்த்துவிடலாம்? அரசியல், அராஜகம், ஏமாற்று… உள்ளிட்டவை மூலம் வெளி நாடுகளுக்கே பணத்தைக் கொண்டுபோய்விட்டால், அவற்றைப் பற்றியெல்லாம் இந்நாட்டு உச்சநீதி மன்றம்கூடப் பேசக் கூடாதுதானே! சபாஷ்!

    //இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள்//
    இவற்றைத் திருட்டுச் சொத்துக்கள் என்று தாங்களாகவே முன்மொழிகிறீர்கள். தங்களின் மற்றொரு மறுப்புரையில் தானம், அன்பளிப்பு, காணிக்கை… என்றெல்லாம் கதைக்கிறீர்கள். ஏனிந்த முரண்பாடு? ‘திருட்டு’ என்று சொன்னால், தாங்கள் அறிந்திருந்தால், முறையாகப் புகார் செய்ய வேண்டிய இடத்தில் புகார் கொடுங்கள். இந்த வலைத் தளம் அதற்கான இடமல்லவே!

    //முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு//
    இந்திய மக்கள் தொகையின் ஒரு சகோதரப் பிரிவினருக்கு ஏதோ தாங்கள்தாம் முன்மொழியப்பட்ட ‘தலைவர் அல்லது ஒரே வழிகாட்டி’ என்பதுபோல் பேச/எழுத, உரிமையை யார் தங்களுக்குத் தந்தார்கள்? தங்களுக்கு இருக்கும் அதே உரிமையை !க் கொண்டுதான் தங்களுக்குப் பிடிக்காததும் ஞாயமுள்ளதுமான கருத்துக்களையும் மற்றவர்கள் எழுதுகிறார்கள். எந்தத் தேதியில், எவரிடமிருந்து, எவ்வளவு பிடுங்கப்பட்டது என்று இவ்வளவு நாள் கவலைப் படாமல் இருந்தவர்களுக்குச் செல்வம் கண்களுக்குக் காட்சியானவுடன் நிலை கொள்ள முடியாமல், “முன்னோரிடமிருந்து பிடுங்கியது” என்று அங்கலாய்க்க என்ன உரிமையோ?

    நிறைவாக… கருத்துச் சொல்லும் உரிமை தங்களுக்கு இருக்கிறதுதான். எழுத்து நாகரிகம், பிறரை விளிப்பதில் ஒருமையைத் தவிர்க்கிற மரியாதை… இவையெல்லாம் அவசியம். தாங்கள் ஏற்காவிட்டாலும், பிறரால் மதிக்கப்படுகிற பெரியோரைக்கூட மரியாதை மிகுந்த சொல்லாட்சியால் குறிப்பிட முடியாத/தெரியாத தங்களிடமெல்லாம் எதைச் சொன்னால் செவியேருமோ! ஸ்ரீ பத்மனாபருக்கே வெளிச்சம்.

  65. //உத்திராடன்
    4 September 2011 at 11:15 am//
    மேற்படி பதிலில் பத்தி எண் 2-ஐ இப்படி வாசிக்கவும்.
    //யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள்//
    சொத்துக்கள் கோயிலுக்குச் சொந்தம் என்பதற்கு மட்டும் ஆதாரம் வேண்டும்; அது, சுரண்டப்பட்ட,திருடப்பட்ட சொத்து என்று குற்றம் சுமத்துவதற்கு மட்டும் ஆதாரம் வேண்டாமா? “சொத்துகள்அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை” என்று தங்கள் கடிதத்திலேயே பாதுகாப்பாகக் கூறிவிட்டீர்கள். நல்ல ஞாயம். அவர்கள் யாருக்கு அன்றைய சட்டங்களின்படி கணக்குக் காட்ட வேண்டுமோஅங்கு கணக்குக் காட்டாமல் இருந்திருக்க முடியாது.

  66. all those who claim ownership of the treasure hunts in any temple may please consider the following fact: all temples had been granted or accorded the use of many lands donated by the kings of yore. even viollages had been donated by kings. our ancestors had been not only respected the rights of the temple on the benefits from those lands but also had been maintaining them and the temples diiligently and with devotion. what happened to them all now? are those who now own them and enjoy their benefits ready to make them over to the temples? it is but a fact that no one ever attended to the temples attached to these lands even for one puja a day; many temples have been left to deterioratel the priests in many small temples are surviving on the petty offerings of visitors; only those who accept this justice can talk about the ownership of the treasures from the temples. justice cannot have two sides. it is really strange that these treasures were unknown to these folks this long! let God save Himself and the temples too! submitted by sundar ; email lalsun@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *