மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது 61-வது பிறந்த நாளை முன்னிட்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது தேசிய அரசியல் களத்தில் புதிய சுறுசுறுப்பைக் கூட்டி இருக்கிறது. ‘காய்த்த மரம் தான் கல்லடிபடும்என்பது போல, வழக்கமாக மோடியை விமர்சிக்கும் கட்சிகளும் ஊடகங்களும், இப்போதும் தங்கள் கடமையை செவ்வனே செய்தன. மோடியும் தனக்கே உரித்தான நிதானத்துடன், தேசத்தின் முன்னேற்றத்திற்கான அறைகூவலை குஜராத் உண்ணாவிரதப் பந்தலிலிருந்து விடுத்தார்.

நாட்டின் எந்த முதல்வரும் சந்திக்காத பல இடையூறுகளையும் சவால்களையும் சந்தித்தவர் நரேந்திர மோடி.  ஆர்.எஸ்.எஸ் பிராசரகர் என்ற நிலையில் இருந்து கொண்டு, பாஜகவின் முதல்வராகவும் திறம்படப் பணியாற்றும் ஒருவரைக் கண்டு மதச்சார்பற்ற வியாதியால் பீடிக்கப்பட்டுள்ள நமது அரசியல்வாதிகள் அச்சம் கொள்வதில் வியப்பில்லை.  அவர்களுக்குத் தோதாக 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை அடுத்து நடந்த மதக் கலவரங்கள் அமைந்தன. அக்கலவரங்களில் பலியான சிறுபான்மையினரைக் காட்டி, மோடி அரசின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்டது. உண்மையில் கலவரத்தை அடக்க மோடி அரசு மேற்கொண்ட கடினமான நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

யினும் ஒவ்வொரு முறை மோடி மீது குற்றம் சாட்டப்பட்ட போதும், அதிலிருந்து அவர் எந்தக் களங்கமும் இன்றி வெளி வந்தார். மோடி மீது மாநில அளவிலும் தேசிய அளவிலும் கடுமையான குற்றச்சாட்டுக்களுடன் துஷ்பிரசாரம் நடந்தது. முஸ்லீம் வாக்குக்களை ஒட்டு மொத்தமாக அறுவடை செய்ய விரும்பும் கட்சிகளின் எளிய இலக்காக மோடி இருந்தார். ஆனால் மோடி எதைப் பற்றியும் கவலையின்றி மாநில முன்னேற்றம் ஒன்றே குறியாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். அவரது தனிப்பட்ட ஆளுமை, நேர்மை, ஊழலுக்கு இடங்கொடாத துணிவு, தேசபக்தி, பேச்சாற்றல் போன்ற காரணிகளால், குஜராத் மாநிலம் மிக விரைவில் நாட்டின் முதல் தர மாநிலமானது.  வெளிப்படையான நிர்வாகம், அரசு அலுவலகங்களில் ஊழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது, பாரபட்சமற்ற செயல்பாடு, அரசியல் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தாமல் தடுத்தது, நீர் மேலாண்மை, தொழில்துறை வளர்ச்சியில் அதீத கவனம், மகளிர் மேம்பாடு, விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்கள்,.. என குஜராத் மாநிலம் நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறியது. எல்லாப் புகழும் நரேந்திர மோடிக்கே! 

ல தரப்பிலிருந்தும் புழுதி வாரித் தூற்றப்பட்ட போதும், மதச்சார்பின்மையாளர்களால் வேட்டையாடப்பட்டபோதும்,  மத்திய அரசு ஏஜென்சிகளால் களங்கப்படுத்தப்பட்டபோதும், மோடி நிலை குலையவில்லை. மாறாக ஒவ்வொரு முறை அவர் மீது அவதூறு சுமத்தப்பட்ட போதும், தனது சிறப்பான ஆட்சி மூலமாகப் பதிலடி கொடுத்தார் மோடி.  

ன்று நாட்டிலேயே தொழில் துறையினர் விரும்பும் மாநிலமாக குஜராத் மாறி இருக்கிறது. முஸ்லிம்கள் உள்படச் சிறுபான்மையினர் முன்னேறியுள்ள  மாநிலம் குஜராத் தான் என்று காங்கிரஸ் அரசு நியமித்த ராஜேந்திர சச்சார் குழுவே கூறி விட்டது ! மாநிலத்தில் பாயும் அனைத்து நதிகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, நதிநீர் இணைப்பும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.  மின்வெட்டு இல்லாத மாநிலம், மதுபானம் பாயாத மாநிலம், இலவசங்கள் கொடுக்கப்படாத மாநிலம் எனப்பல பெருமைகளுடன் குஜராத் சிறப்புப் பெற்றிருக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் இம்மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது. தேசியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவிகிதமாக உள்ள நிலையில், குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 12 சதவிகிதமாக உள்ளது. மொத்ததில் நாட்டின் முன் மாதிரியான மாநிலமாக குஜராத் விளங்குகிறது. 

தனைப் பொறுக்க முடியாத அரசியல் எதிரிகள் மோடிக்குப் பலவைககளில் இடைஞ்சல் கொடுக்கிறார்கள். மதக்கலவரத்தில் மோடியின் தூண்டுதல் இருந்தது என்று பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி அலைக்கழிக்கிறார்கள். அதில் ஒன்று தான் குஜராத் கலவர வழக்குக்களை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு. இக்கலவரத்தில்(குல்பர்கா சொசைட்டிக் கலவரம்) மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை அதன் உச்சக்கட்டம். அதனை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இனிமேலும் கலவர வழக்குகளஇக் கண்காணிக்கத் தேவையில்லை என்றும் உச்சநீதி மன்றம் ( செப்.12,2011) கூறிவிட்டது. ஒரு வகையில் மோடியின் தார்மீக நெறிகளுக்குக் கிடைத்த சான்றிதழாகவே இத்தீர்வு காணப்படுகிறது. இத்தீர்ப்பு, ஒரே நேரத்தில் மோடிக்கும் பாஜகாவுக்கும் தெம்பூட்டுவதாகவும், மோடியின் எதிரிகளை நிலகுலையச் செய்வதாகவும் அமைந்து விட்டது. 

தே நேரத்தில் குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவால் மூலமாகவும் மோடி அரசுக்கு வேறு வகையில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.  குஜராத் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்குத்(லோக் ஆயுக்தா) தலைவரை நியமிப்பதில் மாநில அரசின் பரிந்துரைகளைப் புறந்தள்ளி, தன்னிச்சையாக ஆர்.ஏ.மேத்தா என்பவரை நியமித்தார் ஆளுநர்.  இவர் மோடிக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுநிலையான நீதிபதிகளை நியமிக்க வேண்டிய இடத்தில் அரசியல் காரணங்களுடன் ஆளுநர் செய்த இந்த நியமனத்துக்கு மோடி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். பாரதீய ஜனதாக் கட்சியும் இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. இவ்விவகாரத்தால் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 30 முதல் ஒரு வார காலம் முடங்கியது. மத்திய அரசின் சூழ்ச்சியை உணர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் குஜராத் ஆளுநரின் முறையற்ற செயலைக் கண்டித்து பாஜகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இப்போது இவ்விவகாரம் நீதிமன்றம் சென்று விட்டது. 

வ்வாறாக, அடுத்தடுத்து மோடியைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் விரயமான நிலையில், மத்திய அரசுக்குத் தனது உண்ணாவிரதம் வாயிலாக அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் மோடி. தனது பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் மூன்று நாட்கள்,  ‘சத்பாவனா மிஷன்’ என்ற பெயரில் நல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருப்பதாக அவர் அறிவித்தபோது, காங்கிரஸ் அதிர்ந்தது.  அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் வழக்கம் போல வார்த்தை ஜாலங்களால் மோடியைக் குறை கூறினார்கள். மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங்வகேலா களம் இறக்கப்பட்டார். அதைக் காணவே பரிதாபமாக இருந்தது. செப்டம்பர் 17-ல் அகமதாபாத்திலுள்ள குஜராத் மாநில பல்கலைக்கழக மண்டபத்தில் மோடியின் உண்ணாவிரதம் துவங்கியது. இதற்கு அதிமுக, சிவசேனை, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

நாடு முழுவதும் இருந்து பாஜக தலைவர்களும் தொண்டர்களும் சென்று இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். முஸ்லிம்கள் பெருந்திரளாக இந்த உண்ணாவிரத நிகழ்வுக்கு வந்து மோடியை வாழ்த்தியது பலரை வியப்புக்கு உள்ளாக்கியது. மாநிலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தின் பயனை முஸ்லிம்களும் அடைந்திருப்பதன் அடையாளம் அது. உண்ணாவிரதத்தில் அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட கட்சியின் பிரதானத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றது கட்சிக்குள் மோடியின் மதிப்பை மேலும் உயர்த்தியதுள்ளது. வெங்கைய நாயுடு சொன்னது போல, ‘மோடி முதல்வர் என்ற பதவிக்கு மேலாக நாட்டையே வழி நடத்துவதற்கான தகுதி கொண்டவர்’ என்பது நிரூபணமானது.  எதிர்காலத்தில் பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி களம் இறக்கப்பட வாய்ப்புள்ளதை இந்த உண்ணாவிரதம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

தை மோடி எதிர்ப்பாளர்கள் குறை கூறுகின்றனர். தன்னை அரசியல் ரீதியாக முன்னிறுத்தவும் பிரதமர் வேட்பாளராக உயர்த்திக் கொள்ளவுமே மோடி உண்ணாவிரதம் இருப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட மோடியின் எதிரிகள் விமர்சிக்கின்றனர், அதிலென்ன தவறு? எந்தத் தகுதியும் இல்லாத வாரிசான ராகுல் தன்னை பிரபலப்படுத்த உத்தரப்பிரதேசத்தில் தலித் வீட்டில் சாப்பிட்டு நாடகம் ஆடலாம் என்றால், ஒரு சிறந்த மாநிலத்தை உருவாக்கிய மோடி ஏன் தன்னைத் தேசிய அளவில் முன்னிறுத்தக் கூடாது?

ந்த உண்ணாவிரதத்தில் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கள் அற்புதமானவை. உண்ணாவிரத நிறைவின் போது, அவர் பேசியது இது..

னது உண்ணாவிரதம் நிறைவு பெற்றிருக்கலாம். ஆனால் வளர்ச்சிக்கான பணி தொடர்ந்து நடைபெறும். சத்பாவனா மிஷன் மூலம் இந்தியா ஒன்று பட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. மக்கள் அனைவரும் ஒன்று கூட இந்தப் போராட்டம் அழைப்பு விடுத்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அரசியலுக்காக அல்ல. தேசத்திற்காகவே சத்பாவனா மிஷன் – குஜராத் மாநிலத்திற்காக மட்டும் அல்ல; இது இந்திய நாட்டிற்காக நடத்தப்பட்ட போராட்டம். இந்தியாவும், இந்திய மக்களும் பெரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எந்த விஷயமும் முடியாதது அல்ல. நான் சிறுபான்மையினருக்காகவோ, பெரும்பான்மையினருக்காகவோ பாடுபடவில்லை – குஜராத்திற்காகப் பாடுபட்டேன். குஜராத் மாநில விவசாய வளர்ச்சியை உலக வங்கி பாராட்டியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மக்களின் இயக்கமாக மாற வேண்டும். விரைவில் அனைத்து குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கெல்லாம் செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து போராட்டம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். நாடு முன்னேறிச் செல்ல குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும்” என்றார் மோடி.

ப்போதும் கூட, மோடியின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தாங்க முடியாத அவரது எதிரிகள் ‘தொப்பிக்கதைகள்’ மூலமாக அவரைச் சிறுமைப்படுத்த முனைகின்றனர். உண்ணாவிரத நிகழ்வுக்கு வந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் அணிவிக்க முயன்ற முஸ்லிம் தொப்பியை ஏற்க மறுத்து அவமதித்து விட்டதாகக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உண்மையில் இச்சம்பவம் நிகழவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு நடந்தாலும் அதில் தவறு காண ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.

வ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாகக் கடைபிடிக்கட்டும்; பிறர் மீது அதைத் திணிப்பதுதானே பிரச்னைக்குக் காரணமாகிறது? இஸ்லாமியரின் தொப்பியை மறுத்து சால்வையை மோடி அணிந்தார் என்பது உண்மையானால், அது அவரது உள்ள உறுதிக்கும், நேர்மைக்கும் தானே அடையாளம்? ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுடன் மூக்கு முட்டச் சாப்பிட்ட அரசியல் தலைவர்கள் ஒருங்கே அமர்ந்து ‘இஃப்தார் விருந்து’ என்ற பெயரில் கஞ்சி குடிப்பதுதான் மதச்சார்பின்மை என்று கற்பிக்கப்படும் சூழலில் மோடியின் துணிவு போலித்தனத்தைத் துகிலுரிப்பதாக அமைந்திருக்கிறது என்று பாராட்டவல்லவா வேண்டும்?

தே போல, காங்கிரஸ் கட்சியை அழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் திக்விஜய் சிங்கும் மோடியைக் கேலி செய்திருக்கிரார். கோல்வால்கர் முகாமிலிருந்து காங்கிரஸ் முகாமுக்கு மோடி தாவி இருப்பதை வரவேற்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் கறுப்புத் தொப்பியிலிருந்து காந்தியின் கதர்த் தொப்பிக்கு மாறி இருப்பதாகவும் மோடியை அவர் பகடி செய்தார். அவர் முக்கியமான ஒன்றை மறந்து விட்டார். மகாத்மா காந்தி வழி நடத்திய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் இன்று அன்னியர் ஒருவரின் அடிவருடியாக மாறி, காந்தியை மறந்து காலம் தள்ளுவதைத் திக் விஜய் சிங் மறந்து விட்டார். காந்திஜியின் அஹிம்சைப் போராட்ட முறைகளை மறந்து விட்ட காங்கிரசுக்கு, மோடியின் உண்ணாவிரதம் தான் அதை நினைவுபடுத்த வேண்டி இருந்திருக்கிறது.

ன்றைய சூழலில் மகாத்மா காந்தியை மதிப்பவர்கள் யார், மிதிப்பவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர். அன்னா ஹசாரே உண்ணாவிரதம், ராம்தேவ் உண்ணாவிரதம், மோடி உண்ணாவிரதம் – இவை மூன்றுமே காங்கிரஸ் அல்லாதவர்களால், காங்கிரஸ் இந்நாட்டில் ஏற்படுத்தியுள்ள சீரழிவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவை. இந்த உண்ணாவிரதங்களின் வெற்றிகள், காங்கிரஸ் கட்சிக்குக் கண்டிப்பாகத் தோல்விகளாகவே மாறும் என்பதை அக்கட்சி உணர்ந்திருப்பதன் விளைவே, திக்விஜய்சிங் போன்றவர்களின் உளறல்கள். அவற்றை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை. வெளிநாட்டுப் பெண்மணிக்கும், அவரது வாரிசுக்கும் ‘குல்லாய்’ போட்டு அரசியல் பிழைப்பு நடத்தும் காங்கிரஸ் கும்பல்களின் ‘நல்லகாலம்’ விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனையே மோடியின் உண்ணாவிரதத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் திரள் காட்டுகிறது. விரைவில் அத்வானியின் ஊழலுக்கு எதிரான யாத்திரை பிஹாரிலிருந்து கிளம்பும்போது காங்கிரசின் ஆணவமயாமான ஊழல் அரசுக்கு எதிரான சங்கொலி முழங்கப்படும். அப்போது மோடியின் மகிமை மீண்டும் தெரியவரும்.

உண்ணாவிரதத்தின் நோக்கம் : நரேந்திரமோடி

உண்ணாவிரதம் துவங்கிய போது அதன் நோக்கத்தை விளக்கி 

நரேந்திர மோடி பேசியது:

                                      

“எனது இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. அமைதியும் மதநல்லிணக்கமும் தான் இந்த உண்ணாவிரதத்தின் குறிக்கோள். இந்த உணர்வை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது வெற்றியில் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. இந்தச் செய்தி அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்காகவே இந்த உண்ணாவிரதம். இது காலத்தின் தேவை. உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் எனது வார்த்தைகளுக்குச் சக்தி கூடும். அதிகமான மக்கள் இதன் முக்கியத்தை உணர்வார்கள்.

ஒரு நாகரிகமான சமூகத்தில் 2002-ல் நடந்தது போன்ற சம்பவங்கள்(கோத்ரா சம்பவம்) நடந்திருக்கக் கூடாது என்று அப்போதே கூறினேன். அதனால் ஏற்பட்ட வலியை இன்றும் உணர்கிறேன். எனினும் குஜராத் எந்தக் காலமும் மனித நேயமற்றுத் தாழ்ந்து விடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். குஜராத் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறது. குஜராத் மக்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணிக்க இறைவன் போதுமான சக்தியைத் தரவேண்டும். இன்று தொழில், விவசாயம், ஊரக வளர்ச்சி, கல்வி ஆகிய துறைகளில் குஜராத் சிறந்து விளங்குவது குறித்து உலகமே விவாதித்துக் கொண்டிருக்கிறது.

2001 நிலநடுக்கத்துக்குப் பிறகு குஜராத் இனி மீளவே மீளாது என்று பலர் நினைத்தனர். இது போன்ற பேரழிவிலிருந்து மீள 7 ஆண்டுகள் பிடிக்கும் என உலக வங்கி கூடக்கூறியது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் மீண்டு எழுந்து சாதனை படைத்தோம். எங்கள் மீது எறியப்பட்ட கற்களை எல்லாம் சேகரித்து நாங்கள் படிக்கற்களாக்கிக் கொண்டோம். 2008-ல் அகமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றபோது கூட குஜராத் அமைதியாகவே இருந்தது. ஆனால் குஜராத்தை எதிர்ப்பவர்கள் இதனை அங்கீகரிக்க மறுத்தனர்.

1980, 90-களில் சிறிய பிரச்னைகள் கூட மதக்கலவரங்களாக  மாறியிருக்கின்றன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதற்கு காரணம் குஜராத் மக்கள் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்பியதுதான். சுதந்திரத்துக்குப் பிறகு மதச்சார்பின்மை என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியல் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதம் வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கு குஜராத்தின் முன்மாதிரி குறித்து நாடும், உலகமும் பேசக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை மிகுந்த பொறுப்புடன் கூற விரும்புகிறேன்.”

19 Replies to “மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்”

 1. நரேந்திர மோடியின் முயற்சியில் குற்றம் காணும் காங்கிரஸ் மற்றும் சில சுயநல அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இன்னும் நிறைய நரேந்திர மோடிகள் நமது நாட்டிற்கு தேவை! பாரதீய ஜனதா கட்சியின் துருவ நக்ஷத்திரமாக மோடி இருப்பதில் நாம் பெருமை அடைந்தாலும், 125 கோடி மக்கள்தொகை உள்ள 30 மாநிலங்களை கொண்ட நமது பாரத நாட்டிற்கு சேவை புரிவதற்கு நிச்சயமாக மேலும் பல நரேந்திர மோடிகளை உருவாக்க வேண்டும்!

 2. \\\\\\\\\\\ உண்ணாவிரத நிகழ்வுக்கு வந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் அணிவிக்க முயன்ற முஸ்லிம் தொப்பியை ஏற்க மறுத்து அவமதித்து விட்டதாகக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உண்மையில் இச்சம்பவம் நிகழவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு நடந்தாலும் அதில் தவறு காண ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.\\\\\\\

  அன்பார்ந்த ஸ்ரீ சேக்கிழான், தமிழ்த் தொலைக்காட்சிகளில் தொப்பி விஷயம் காண்பிக்கப்படாமல் இருந்திருக்கலாம். “இண்டியா TV”, “News24” போன்ற ஹிந்தி சேனல்களில் இந்த விஷயம் பலமுறை காண்பிக்கப்பட்டது. இரு முஸல்மாணியர் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களை வாழ்த்த வந்திருந்தனர். அதில் ஒருவர் முஸல்மாணியர் அணியும் வெள்ளை குறுந்தொப்பியை கொடுக்க விழைவதும் ஆனால் பின்னர் சால்வையை போர்த்துவதும் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. வந்திருந்த இரு முஸல்மாணியரில் ஒருவரிடம் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் தொப்பி ஏற்கவில்லையே என்று தொலைக்காட்சியினர் கேள்வியும் எழுப்பினார்கள். அதற்கு அவர் இதில் என்ன பெரிய விஷயம். குஜராத்தின் ஒட்டுமொத்தவளர்ச்சியில் முஸல்மான்களும் பலன் அடைகிறார்களா என்பதே முக்யமானது. அதன் பதில் ஒட்டு மொத்த குஜராத்தியனரும் வளர்ச்சியில் பலன் அடைகிறார்கள் என்பதே. இது வரை முஸல்மாணியர் தலையில் தொப்பி போட்டே அவர்களை ஏமாற்றி வந்த காங்க்ரஸ் காரர்கள் ஸ்ரீ நரேந்த்ரபாய் தொப்பி மறுத்த விஷயத்தை பெரிதுபடுத்துவது தான் மோசமானது என்று சூடாக பதிலும் கொடுத்தார். தெளிவான விஷயங்கள் சாதாரண முஸல்மான்களுக்கு தேவை எது என்பதும் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களின் கார்யசைலியும்.

 3. காந்தி மட்டும் தான் கங்கிரஸா! காங்கிரஸை ஆரம்பித்தது ஹும் என்ற அன்னியர். கங்கிரசின் தலைமை பொறுப்பை திறம்பட நடத்தியது அன்னிபெசண்ட் என்னும் அந்நியர். ஆதலால் சோனியா என்னும் அன்னியரின் காலில் அடிவருடியாக கிடப்பது ஒன்றும் அவமானமில்லை.

 4. காங்கிரஸ் அடிவருடும் அன்பரே,

  தங்கள் அடிவ்ருடிக் குணத்தை மூடி மறைக்காமல் உலகத்துக்குச் சொன்னதும், தங்கள் பெயரையே மாற்றிக்கொண்டுள்ள தைரியமும் வியப்புக்குரிய அரிய குணங்கள். தங்கள் ஆயுள் பூராவும் அடிவுருடிக்கொண்டே இருக்கும் வாய்ப்பும் உள்ளது. சோனியா அடிவருடி என்று இன்னம் குறிப்பாக பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம். ஏனெனில் காங்கிரஸ் கட்சி பூராவுமே அடிவருடியாக இருக்கும் போது உங்கள் அடிவருடித்தனத்தைச் சிற்ப்பிக்க தனித்துக் காட்ட வேண்டாமா?

  உங்கள் ஆயுத பரியந்த அடிவருடும் வாய்ப்பைப்பர்றிச் சொன்னேன். சோனியா மாத்திரம் இல்லை. பிரியங்கா, ராபர்ட் வாடெரா,, சன் ஜெய் இன்னும் அவனது கொலம்பிய காதலி, இப்படி இந்த வரிசை நீண்டு கொண்டே போகிறது. அவ்வளவு பேருக்கும் அடிவருடிச் சேவை உங்களுக்காகக் காத்திருக்கிறது.

  ஆமாம், வடவர் ஆதிக்கத்தையே ஒழிக்கக் கிளம்பிய கூட்டத்தின் இன்றைய தலைவராக கோலோச்சுபவரே வடவர் ஆதிக்கம் செலெச்டிவாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று கொள்கையில் சிறிய மாற்றம் செய்து இத்தாலிய சொக்கத் தங்கத்துக்கு சால்வை போற்ற 10 ஜனபத் வாசலில் காத்திருக்கும் காட்சி காணும் காலத்தில் இருக்கிறோம். அதில் அடிவருடிகள் பெருக்கம் தாங்கள் அடிவருடிகள் தாம் என்று முரசறைவித்துக்கொண்டு வருவதையும் பார்க்கிறோம்.

 5. மன்னிக்கவும் அடிவருடி அவர்களே,

  இரண்டு தவறுகள் நேர்ந்துவிட்டது. ஒன்று, ராகுல் காந்தி (அவருக்கு இன்னொரு பெயர், நிஜப்பெயர் உண்டு மறந்து விட்டது) இதாலி சொக்கத் தங்கத்துக்கும் அவரது நிஜப் பெயர் வேறு. அதனால் என்ன உங்களுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும். தவறாக் ராகுல் காந்தியை சஞ்ஜை காந்தி என்று சொலிவிட்டேன்.

  அடுத்த தவறு இன்னும் சிலரை விட்டு விட்டேன். அடிக்கடி வந்து போகும் அது பற்றி செய்தி வெளிவராமல் பார்த்துக்கொள்வார்கள், சோனியாவின் சகோதரி மார்கள் மூன்று என்று நினைவு, பின் அவருடைய அம்மாக்காரி ஒருத்தி. இவர்களையும் நீங்கள் அடிவருட விரும்பும் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு பிரியங்காவின் இரண்டு குழந்தைகள். ராபர்ட் வடேராவின் அந்தக் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அது பற்றி வடேரா உங்களைக் கோபித்துக்கொள்ளமாட்டார். நன்றி.

  இனி நீங்கள் உங்கள் பணியைனைத் தொடங்கலாம்.

 6. சோனியா வினால் அமர்த்தப்பட்ட கவர்னர் தற்போது மோடியின் உண்ணாவிரதத்திற்கு என்ன செலவாயிற்று என்று கேள்வி கேற்கிறார்! இது எப்படி இருக்கு?

 7. தானா அவர்களுக்கு நன்றி. நான் மறந்து விட்ட பெயர்களை நினைவு படுத்தியதற்கு.

  வெ.சா

 8. Raul Vinci – Raghul Khan – Rahul Gandhi
  Antonia Monio – Sonia Khan – Mansoor ali khan – Neison mandala
  இருந்த என்ன பிராச்சனை. குஜாராத்காரன் மட்டும் கென்யா, ஜிம்பாவே போன்ற நாடுகளில் மினிஸ்டார், உயர் அரசு பதவில் உட்காரலம் ஆனா இந்தியவில் மட்டும் யாரவது வந்தா போதுமே இவன் இந்த ஜாதி மதம் வேற நாடு எல்லாம் பார்த்து நாசம போகவேண்டியதுதான். அன்னிய நாட்டு பணம் வேணும், அன்னிய நாட்டு கண்டுபுடுச்சா காரண்ட் வேணும், அன்னிய நாட்டு எண்ணை வேணும். ரொம்பா நல்ல இருக்கு நாசமா போன கொள்கை

 9. குமார், தங்களுடைய கேள்வி ஆச்சரியத்தை அளிக்கிறது. எந்த திறமையை அடிப்படையாக வைத்து ராகுல் காந்தியை தலைவராக ஏற்று கொள்வது. எந்த நாட்டிலும் மற்ற குடியுரிமையை பெற்றவர்கள் தலைவராக முடியாது. இது நாள் வரை சோனியாவோ அல்லது ராகுல் காந்தி தங்களது குடியுரிமை விசயத்தை மர்மமான முறையிலேயே வைத்து உள்ளார்கள். காங்கிரஸ் எத்தனையோ தலைவர்கள் இருக்கும் பொழுது எந்த ஒரு அடிப்படை அறிவும் அற்ற ராகுல் காந்தி தலைவராக வந்தால் என்ன தவறு என்று கேட்கும் பொழுதுதே தங்களின் அரசியல் மற்றும் பொருளாதார அனுபவம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் சொன்ன இந்திய வம்சாவளியை சேர்ந்த எவருக்கும் இந்திய குடியுரிமை கிடையாது. அது மட்டும் இன்றி அவர்கள அனைவரும் அந்த நாட்டிலேயே பிறந்து அந்த பாரம்பரிய படி நடக்கிறார்கள். பல இலட்சம் கோடி ஊழலகளை அவர்கள் செய்யவில்லை…

 10. \\அன்னிய நாட்டு பணம் வேணும், அன்னிய நாட்டு கண்டுபுடுச்சா காரண்ட் வேணும், அன்னிய நாட்டு எண்ணை வேணும்\\

  அடுத்தவர் வீட்டில் பொருட்களை கொடுங்கள் / வாங்கள் முறையில் பெறலாம். ஆனால் ஒரு பெண் பக்கத்து வீட்டுகாரியின் கணவனை இரவல் வாங்கி கொள்ள முடியாது. நீங்கல் கேட்பதும் இவ்வாறு தான் உள்ளது.

  \\கென்யா, ஜிம்பாவே போன்ற நாடுகளில் மினிஸ்டார், உயர் அரசு பதவில் உட்காரலம் \\

  minister பதவிக்கும், president / prime minister பதவிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் என்ன பேச முடியும்… கொடுமை….

 11. அன்புள்ள குமார்,

  1. உலகின் வேறெந்த நாடுகளிலும் தங்கள் உழைப்பாலும் அந்த நாட்டின் மீது செலுத்திய பக்தியாலும்தான் பாரதீயர்கள் உயர் பதவியை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் வால் பிடிக்கும் சோனியா, ராகுல் போல, தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டு யாரும் அங்கு மோசடி செய்யவில்லை.

  2. உலகின் எந்த நாட்டில் உயர பதவியை அடைந்தபோதும், அங்கு நம்மவர்கள் அந்த நாட்டை சுரண்டி நம் நாட்டுக்குக் கொண்டுவந்ததில்லை. நீங்கள் வால் பிடிக்கும் சோனியா கானும் ராகுல் வின்சியும் இந்தியாவை சுரண்டி இத்தாலிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் (உதாரணம்: 2 ஜி ஊழல்).

  3. அமெரிக்கா, சிங்கப்பூர், கென்யா, இங்கிலாந்து என எந்த நாட்டில் உயர் பதவியை நம்மவர்கள் அடைந்திருந்தாலும், அது அவர்களது திறமையால் பெற்றதாகவே உள்ளது. சோனியா, ராகுல் போல நேரு குடும்ப செல்வாக்கைப் பயன்படுத்தியோ, காந்தி பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியோ நம்மவர்கள் உயர் பதவிகளை அடையவில்லை.

  ஆகவே, குமார், முதலில் நீங்கள் உங்கள் ‘நாசமாப் போன’ ஒப்பீடுகளை நிறுத்திக்கொண்டு, கொஞ்சமாவது தேசபக்தியுடன் சிந்தியுங்கள்.

  -சேக்கிழான்

 12. //எந்தத் தகுதியும் இல்லாத வாரிசான ராகுல் தன்னை பிரபலப்படுத்த உத்தரப்பிரதேசத்தில் தலித் வீட்டில் சாப்பிட்டு நாடகம் ஆடலாம் என்றால்//

  சோனியாவின் பிள்ளையால் நாட்டை அல்ல வீட்டை கூட ஆள முடியாது… ஒரு தகுதியும் இல்லாத ராகுல் எங்கே, எந்த அமெரிகனால் வராதே என்று அசிங்கப் படுத்தப்பட்டரோ, அவனையே புகழ வைத்த தன்மானத் தலைவர் எங்கே!

  //ஒவ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாகக் கடைபிடிக்கட்டும்; பிறர் மீது அதைத் திணிப்பதுதானே பிரச்னைக்குக் காரணமாகிறது? //

  குல்லா அணிந்தால் தான் மதசார்பு என்றால், முஸ்லீம்கள் விபுதி வைக்க சம்மதிப்பார்களா? நம் கோவில் பிரசாதத்தை கிருஸ்தவனால் சாப்பிட முடியுமா?

  // எங்கள் மீது எறியப்பட்ட கற்களை எல்லாம் சேகரித்து நாங்கள் படிக்கற்களாக்கிக் கொண்டோம் //

  படிகற்களாக மாற்றி விட்டீர்கள் கோட்டையாக மற்ற வேண்டியது இந்தியர்களான எங்கள் பொறுப்பு

 13. கோமதி செட்டி

  //எந்த திறமையை அடிப்படையாக வைத்து ராகுல் காந்தியை தலைவராக ஏற்று கொள்வது.//
  மோடி ஐயா மட்டும் இதற்கு முண்ண்டி என்ன பிரதமராவ இருந்தார தங்களுடைய பதில் ஏமற்றம் அளிக்கிறது.

  //minister பதவிக்கும், president / prime minister பதவிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் என்ன பேச முடியும்… கொடுமை….//
  minister பதவிலை இருக்கரவாங்க தான் ஆந்த நாட்டோ ரிம்மோட்கன்டோரல் நீங்கா கென்யா போயிந்தா நிலமை தெரியும். இதனாலதான் இந்தியார்களு பாதுகாப்பே இல்லே. (சோனியா அன்னை இப்படித்தான் பத்து பேர் சொல்லரான்) ரிம்மோட்கன்டோரல் தெரியாதவர்களிடம் என்ன பேச முடியும்… கொடுமை

  [Edited and Published]

 14. சேக்கிழான் (author)
  //1. உலகின் வேறெந்த நாடுகளிலும் தங்கள் உழைப்பாலும் அந்த நாட்டின் மீது செலுத்திய பக்தியாலும்தான் பாரதீயர்கள் உயர் பதவியை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் வால் பிடிக்கும் சோ…., ரா…. போல, தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டு யாரும் அங்கு மோசடி செய்யவில்லை.//
  நீங்கா 1900 இருக்கைங்கா google news போயிபார்த்தா உங்கலுக்கே தெரியும் வெளிநாட்டில் மோசடி சேய்தார்கள இல்லையா.. எதுக்கு அடுத்தவார்களை சொல்லராதக்கு முண்ணாடி நம்ம நட்டுலை சவ்வா பெட்டி உழல் நடந்ததே. அதனால யாருக்கும் Certificate யார்க்கும் கொடுக்க முடியாது.

  //ராகுல் வின்சியும் இந்தியாவை சுரண்டி இத்தாலிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் (உதாரணம்: 2 ஜி ஊழல்).//
  சுரண்டப்பா நீங்காதான பக்கத்தில குக்காந்து பணத்தை என்னி கொடுத்திங்கா?… என்ன (உதாரணம்: 2 ஜி ஊழல்) 175,0000,000 கோடி இது ஊழல்லா இல்ல நம்ம நாட்டு நஷ்டமா? நேற்று வந்த செய்தி 2ஜி 2800 கோடி நம்ம நாட்டு நஷ்டம்முன்னு செய்தி படிச்சேன். என்டா பார்த்த முட்டபையபுள்ள கணக்கு தப்பா கொடுத்துட்டான்.

  //சோனியா, ராகுல் போல நேரு குடும்ப செல்வாக்கைப் பயன்படுத்தியோ, காந்தி பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியோ//
  மேனகா காந்தி, வர்ண் காந்தி இவங்க பேரை சேத்திங்கா…
  இப்படித்தான் ஒரு வருஷத்து முன்னாடி எங்க வீட்டு பாக்கத்தால ரங்கநாதன் குல்லாவா போட்டு வந்தா ரங்கா கூப்படரா நான் ரங்கா இல்லா அப்துல்கலாமுன்ன கூட வந்தா துளுக்… பைய புள்ளைக்கு கோவமே ….., இதே பாணி தீடீர் ஒருத்தார் வந்தாரையா அமிஷ்சை காந்தி நா உண்ணவிரதம் இருக்க போறேன் ……., நான் வந்து காந்தி நம்ம நாட்டு செஞ்ச தியகாத்தை தான் பார்க்குரேன். இப்படி தான் எல்லாத்தை பார்க்கனும். காந்திகார பெயர் காந்தி மட்டுமா சொந்தாம். நீங்கா வேண்ணா கருப்பு காந்தி, தெண்னட்டாடு காந்தி வைச்சுங்கா எனக்கு மனவருத்தம்மில்லை

  //முதலில் நீங்கள் உங்கள் ‘நாசமாப் போன’ ஒப்பீடுகளை நிறுத்திக்கொண்டு, கொஞ்சமாவது தேசபக்தியுடன் சிந்தியுங்கள்//
  இதேதயா நானும் சொல்லுரேன் சுதேசி சுதேசி பிராச்சரம் செஞ்புட்டு குஜாரத்த்தை வெளிநாட்டு கம்பெனி வித்திட்டு குஜாரத்காரர் வெளிநாட்டு கஷ்ட படுகிறார்கள். மோடி ஐயா கூட அடுத்த தேர்தலா முதலைமைச்சர வராமட்டோம் தெரிஞ்ச பயத்தில இப்ப தேசிய அரசியலா குதிச்சிர்காரு

 15. சிண்டு முடியும் NDTV… தேசிய அரசியல் விழாக்களில் பொதுவாக மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்வது இல்லை. ஆனால் மோடி அத்வானி நடத்த இருக்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கட்சி தலைமைக்கும் அவருக்கும் சண்டை என்றும் சொல்லி சகுணி வேலை பார்கிறது…. ஏன் கர்நாடக முதலமைச்சர் வரவில்லை என்றோ? மத்திய பிரதேச முதலமைச்சர் வரவில்லை என்றோ சொல்லவில்லை…. காங்கிரஸ் கை கூலி மீடியா பாஜாகவுக்கும் மட்டும் வில்லன் இல்லை… நாட்டுகும் கூட தான்

 16. நிங்கள் ஆடிக்கும் சால்ரா சோனியா வரைக்கும் கேட்கிறது அடிமைகளின் சால்றாவில் அன்னை (?) சோனி அக மகிழ்ந்து போய் உள்ளார்.
  இப்பிடியே தொடருங்கள்
  ஜிங் சக் ஜிங் சக்

 17. \\\\\\\\\\\காங்கிரஸ் கை கூலி மீடியா பாஜாகவுக்கும் மட்டும் வில்லன் இல்லை… நாட்டுகும் கூட தான்\\\\

  ஒரு சிறிய அதிசயம். ஹிந்துத்வவாதிகள் இரண்டு வாசகம் பேசுமுன் பத்து முறை இடைமறிக்கும் மீடியாவினர் அல்லது சரியான விஷயம் பேச முனைகையில் விளம்பர இடைவேளை என ஆகாத்தியம் செய்யும் மீடியாவினர் அலைக்கற்றை விவகாரத்தில் காங்க்ரஸை போட்டு மொத்து மொத்து என்று மொத்தி வருகின்றனர். நேற்று NDTV யில் நடந்த விவாதத்தில் லாஹோரில் பிறந்த படிக்கு பாகிஸ்தான தாஸனாகவும் மதசார்பின்மை தீவிரவாதியாகவும் தன்னை முன்னிருத்தும் ஸ்ரீ மணிசங்கர அய்யர் மீடியாவை மொத்தினார். பாஜகவின் ரவிசங்கர் ப்ரஸாத் அவர்களின் பசி மந்த்ரி சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் கொடுக்க முடியாததால் NDTV சங்க பரிவாரிடம் இருந்து பெற்ற போனஸ் வேலை செய்கிறது என்று பாகிஸ்தான் தாஸர் பிலாக்கணம் பாடினார். புன்னகை செய்த செய்தி வாசிக்கும் அம்மணி எப்போதும் நாங்கள் பாஜகவிற்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டைக் கேட்டு பழகியிருக்கிறோம். தாங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது என்று சொல்ல அய்யரைத் தவிர்த்து அனைவரும் பெருஞ்சிரிப்பு சிரித்தனர்.

 18. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *