சிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்!

சிக்கிமில் இயற்கையின்  கோரத் தாண்டவம் நிகழ்ந்திருக்கிறது.

செப்டம்பர் 18 ஆம்தேதி சிக்கிமை மையமாகக் கொண்டு தாக்கிய பூகம்பப் பேரழிவில் இறந்தோர் எண்ணிக்கை 120ஐத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த பூகம்பத்தால் மிக அதிகமாக சிக்கிமிலும் மற்றும் அண்டைப் பிரதேசங்களான மே.வங்கம், பீகார், திபெத், நேபாளம் ஆகிய இடங்களிலும் உயிரிழப்புக்களும், பெரும் சேதமும் நேர்ந்துள்ளன.

காயமடைந்த முன்னூறுக்கும் மேற்பட்டோர் காங்டாக், சிலிகுரி மற்றும் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். பூகம்பத்தின் அதிர்வுகள், டெல்லி, மே.வங்காளம், பீகார், ஒரிசா, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளம் வரை இருந்தன.

இடைவிடாது பெய்யும் பலத்த மழை, அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகள், துண்டிக்கப் பட்ட சாலைத் தொடர்பு போன்றவைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கி விட்ட நிலையில் மீட்புப் பணிகளை மிகுந்த சிரமத்திற்கிடையில் அரசு நிறுவனங்கள் செய்து வருகின்றன. NH55 மற்றும் NH31 ஆகிய நெடுஞ்சாலைகள் முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டிருந்தன. 7 நாட்களுக்குப் பிறகு செம்பம்பர் 23 அன்று தான் அவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பூகம்பத்தினால் பள்ளிகள், வீடுகள் உட்பட 15,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்திருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களுடன், தன்னார்வ அமைப்புகளும் பாதிக்கப் பட்டோரை மீட்கும் பணியில் முனைந்துள்ளன. ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் சேவாபாரதி தொண்டர்கள் பலர் மீட்புப் பணியில் முழுமூச்சுடன் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிவாரணத்திற்கான நன்கொடைகளைத் திரட்டும் பணியில் சேவா இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.

சிக்கிம் உங்களுடைய உதவியை நாடி நிற்கிறது.

சேவா இண்டர்நேசனல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக,அமெரிக்கா, இங்கிலாந்து, குயானா, கென்யா, இலங்கை மற்றும் மியான்மர் மற்றும் சில நாடுகளில், நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுப் பணியில் முண்ணனியில் ஈடுபட்டு வருகிறது.

பூகம்பத்தால் பாதிக்கப் பட்ட நூற்றுக்கணக்கான சிக்கிம், மே.வங்காளம்,அருணாச்சலப் பிரதேச மாநில மக்களுக்கு உதவிக்கரம் கொடுத்திட சேவா இண்டர்நேசனல் உங்களை அன்போடு வேண்டுகிறது.

பூகம்ப தகவல் சேவை தொலைபேசி எண்கள்:

காங்டாக் காவல் தகவல் சேவை தொலைபேசி எண்கள்:03592-202022 (அ) 03592-202033
மேற்கு வங்காளம் காவல் தகவல் சேவை தொலைபேசி எண்கள்: 033-22145486.

சேவா இண்டர்நேஷனல் முகவரி:

SEWA INTERNATIONAL
49,Deendayal Upadhyaya Marg
New Delhi-110002-India.
Tel: +91 11 2323 2850 ,+ 91 11 2368 4445
Email: sewainternationaldelhi@gmail.com

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு எண்கள்:

வெளிநாடுகளிலிருந்து அனுப்பிட: (For Foreign Donations)

SEWA INTERNATIONAL
Account No:- 10080533326
Jhandewala Extn Branch
State Bank of India
Branch Code – 9371.
Swift Code- SBININBB550

இந்தியாவில் இருந்து அனுப்பிட (For Inland Donations)

SEWA INTERNATIONAL
Account No:- 10080533304
Jhandewala Extn Branch
State Bank of India
Branch Code – 9371.
Swift Code- SBININBB550

இணையம் மூலம் நேரடியாக நன்கொடை அளிக்க (For online donations):
https://www.sewausa.org/contribute-sewa-usa

காலத்தால் நீங்கள் செய்யும் சிறு உதவி கூட, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் உயிரைக் காக்கவோ,பசியால் வாடுவோருக்கு உணவு வழங்கவோ, வீடிழந்து தவிப்போர்க்கு வசிப்பிடம் அமைக்கவோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

One Reply to “சிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்!”

  1. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *