வீட்டிற்கு வந்த மதபோதகர்

ரு கிறிஸ்தவப் பிரசாரக் கூட்டத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இன்முகத்துடன்தான் வரவேற்றேன். உங்களிடம் சிறிது நேரம் உரையாடலாமா என்று ஆரம்பித்தார்கள். அப்படி என்ன பேச வருகிறார்கள், அவர்கள் பிரசாரத்தை எந்த விதத்தில் எவ்வாறு ஆரம்பிக்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் எனக்கு இருந்ததால் சம்மதம் தெரிவித்தேன்.

முதலில் என்னிடம் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கினர். “உங்களுக்கு வாழ்வில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா, இருந்தால் எங்களிடம் மனம் விட்டுக் கூறுங்கள். எங்களால் உங்கள் துன்பங்களையும் கவலைகளையும் தீர்க்க முடியாது என்றாலும் நம் தேவனால் கண்டிப்பாக அமைதியைக் கொடுக்க இயலும். அந்த அமைதியை உங்களிடம் கொடுக்கவே தேவன் எங்களை உங்களிடம் அனுப்பி உள்ளான்.”

“எனக்கு துன்பம் என்று எதுவும் இல்லை, இருந்தாலும் அவ்வளவு எளிதில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது” என்றேன் நான்.

“இல்லை. உங்கள் கண்கள் சொல்கின்றன; உங்கள் மனதில் சமாதானம் இல்லை. தேவன் கூறியுள்ளான், எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் மனம் விட்டுக் கூறினால் அழிந்து போகும். கூறுங்கள்!” என்றனர். விடாக்கண்டத்தனம் இருந்தது பேச்சில்.

தெரியாமல் இவர்களிடம் மாட்டிக் கொண்டேன் என்பதை உள்ளுணர்வு அப்போதுதான் எச்சரித்தது. வெளியே போங்கள் என்று அதிர்ந்து கூறவேண்டும் என்றில்லை, “தயவுசெய்து போய்வாருங்கள்,” என்று சமாதானமாகச் சொல்லக்கூட மனதளவில் நான் தயாராகவில்லை.

அவர்கள் மேலும் தொடர்ந்து கொண்டே இருந்தனர், இந்த வேளையில்தான் கடைக்குச் சென்றிருந்த என் அம்மா வீட்டிற்குள் வந்தார். யார் இவர்கள் என்று கண்களாலேயே கேட்டார். இதைப் புரிந்து கொண்ட கூட்டம் அவர்களாகவே கூறினார்கள், “உங்கள் மகனுக்குக் கிடைத்த புதிய நண்பர்கள்!”

அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வந்தவர்களை உபசரிப்பது நம் பழக்கம் என்பதால், “வாழைப் பழம் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டார். “தேவன் தரும் பழம் இங்கிருந்துதான் கிடைக்கும் என்றால் சந்தோசமாகப் பெற்றுக் கொள்கிறோம்…” என்று அவர்கள் பாணியிலேயே பதில் கூறினார்கள்.

பூஜை அலமாரியில் இருந்த பழத்தை எடுத்துக் கொடுக்குமாறு அம்மா சைகை செய்துவிட்டு, அவர்கள் குடிப்பதற்காக அடுப்பில் பால் சுடவைக்க உள்ளே சென்றுவிட்டார். நானும் வந்தவர்களுக்கு ஆளுக்கொரு பழம் எடுத்துக் கொடுத்தேன்.

இந்நிலையில்தான், தற்செயலாக நடந்த அந்த விஷயத்தில் அவர்களிடம் இருந்த விஷமத்தன்மை புரிந்தது. நான் கொடுத்த பழத்தை வாங்க மறுத்தனர். “கடைக்குச் சென்று வேறு பழம் வேண்டுமானாலும் வாங்கித் தாருங்கள்; இந்தப் பழம் வேண்டாம்,” என்று சொல்லிவைத்ததுபோல் அனைவரும் மறுத்தனர்.

“இல்லை, இது இன்று வாங்கிய பழம்தான்; நன்றாக உள்ளது” என்றேன் அப்பாவியாக.

ஆனால் அப் பாவிகள், “வேண்டாம் இதை நீங்கள் பூஜை அலமாரியில் இருந்து எடுத்தீர்கள், அது உங்கள் கடவுளுக்குப் படைக்கப் பட்டதாக இருக்கலாம். அந்தப் பழத்தை நாங்கள் சாப்பிடுவது கிடையாது” என்று முகத்தில் அடித்தது போலக் கூறினார்கள். பழத்தை அவர்கள் சாப்பிடவில்லை என்பதை விட, தொடக் கூட இல்லை என்பதுதான் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

என் வீட்டிற்கே வந்து என்னையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நமது கலாசாரத்தின் மிக உன்னதமான பண்பாடு விருந்தோம்பல், அதையே அசிங்கப்படுத்தும் இவர்களால் என்ன நிம்மதியை எனக்குத் தந்துவிட முடியும்?

பொதுவாக, கடையில் இருந்து வங்கி வரும் பழங்களை பூஜை அலமாரியில் வைப்பதுதான் அப்பாவின் பழக்கம். ஏன் என்றால் அப்போதுதான் அது பார்வையாக இருக்கும், நாங்களும் மறக்காமல் எடுத்து சாப்பிடுவோம். இந்தத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலையில் நானும் இல்லை. அதை ஏற்றுக் கொள்ளும் பரிசுத்த நிலையில் அவர்களும் இல்லை. அதற்குமேல் ஒரு நிமிடம் கூட என் வீட்டில் அவர்கள் இருப்பது எனக்குப் பிடிக்காவிட்டாலும் வீட்டுக்குள் வந்தவர்களை வெளியே போகச்சொல்வதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் திகைத்திருந்தேன்.

எந்த தவறும் செய்யாமலே அவமானத்தில் சிறுத்து நான் அமர்ந்திருக்க, அவர்களோ எந்தக் கூச்சமும் இல்லாமல் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து… இல்லை இல்லை திணித்து…. அதற்கு ஐம்பது ரூபாயும் கேட்டனர். அந்தப் புத்தகத்தின் பெயர் “சாத்தானிடம் இருந்து விடுதலை”. நான் வாங்க மாட்டேன் என்று மறுக்கவே, இருபது ரூபாய்க்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசினார்கள்.

இதற்கு மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. என்னால் வாங்க முடியாது, என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம், எனக்கு வேலை இருக்கிறது. நான் கிளம்பப் போகிறேன் என்றேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை, இலவசமாகவே தருகிறோம் என்று என் கையில் திணித்தனர்.

நான் செய்வதறியாமல் முழிக்கவே என் அம்மா சுதாரித்துக்கொண்டு முன்வந்து, அவர்களைத் திட்டி வெளியே அனுப்பினார். அதற்குப் பின்பு எனக்கும் திட்டு விழுந்தது என்று சொல்லவா வேண்டும்? ஆனாலும் சைத்தான்களிடம் இருந்து விடுதலை கிடைத்ததால் நிம்மதியாகவே இருந்தது.

அவர்கள் சென்ற பின்பு என் மனதில் சில கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன.

உங்கள் கஷ்டங்களைக் கூறுங்கள் அமைதியை தருகின்றோம் என்று நாக்கில் தேன் ஊறக் கூறும் இவர்களின் நெஞ்சில் ஊறுவது நஞ்சு என்பது ஏன் நம் மக்களுக்குத் தெரிவது இல்லை?

இன்று மைனாரிட்டியாக இருக்கும்போதே நம் கடவுளை எந்தக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் சைத்தான் என்று கூறுபவர்கள், நாளை பெரும்பான்மை ஆகும்போது என்னையே சைத்தான் என்று கூறிக் கொலை செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

இது என்றோ ஒரு நாள் யாரோ ஒருவருக்கு நடக்கும் அசாதாரண விஷயம் இல்லை. நம்மில் பெரும்பாலானோருக்கு நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்னர் கூட என் நண்பன் வீட்டிற்கு இதே போன்று ஒரு கூட்டம் வந்துசென்றதாகக் கூறினான். இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கின்றார்கள் என்றால், இவர்களுக்கு தொழிலே இதுதானா? வருமானம் எப்படி வருகிறது? இவர்கள் அன்றாடத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்வார்கள், இவர்களது குழந்தைகளை எப்படிப் படிக்க வைப்பார்கள்?

ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது பத்து பேராவது செயல்பட்டால், மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் எவ்வளவு கூட்டங்கள் செயல்படும்?

அப்படி என்றால் பல ஆயிரம் மதமாற்ற ஊழியர்களுக்கும் ஏதோ ஒரு பின்புலத்தில் இருந்து பணம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இவர்கள் அனைவரும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு மதமாற்றம் செய்கின்றனர். இறைவனுக்காக, இறைவனின் பெருமைகளைக் கூறுவதற்காக ஒருவனும் மதமாற்றம் செய்யவில்லை. உடல் உழைத்து வேலை செய்ய வலித்து, பேசிப்பேசியே ஒருவனை மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் கூட்டமாகத்தான் இந்தியா முழுவதும் வலம்வந்துகொண்டு இருக்கிறார்கள். பல ஆயிரம், பல இலட்சம் மக்கள் மதமாற்ற அறுவடையில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஒரு மதமே தீவிரமாக மதமாற்ற வேலையைச் செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

விதவிதமான பிராத்தனைக் கூட்டங்கள், நற்செய்திப் பெருவிழாக்கள் எல்லாம் நடத்த இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஒவ்வொரு கிருஸ்துவப் பள்ளியும் நற்செய்திப் பெருவிழாக்கள் நடத்துகின்றது என்றால், நாம் செலுத்தும் பள்ளிக் கட்டணங்கள் மறைமுகமாக நம்மையே மதம் மாற்றும் சக்தியாக மாறுகின்றது. ஆனால் வெறும் பள்ளிகளினால் வரும் வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா இடங்களிலும் பிரம்மாண்டமான “எழுப்புதல் கூட்டங்க”ளை இவர்களால் எழுப்ப முடியாது.

வெளிநாட்டுக் கருப்புப் பணங்களை மதமாற்றம் என்னும் பெயரில் வெள்ளையாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதைக் கண்டுகொள்ளாமல் விடும் அரசாங்கமும் இவர்களுக்கு உடந்தையாகவே உள்ளது. மதமாற்றத்திற்குப் பணம் வருகிறது; தீவிரவாதத்திற்குப் பணம் வருகிறது; அதை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, நமது கோயில் பணங்களைக் கொண்டுதான் தன் கஜானாவை நிரப்புகிறது. இந்த மைனாரிட்டிகளை மேன்மேலும் போஷிக்கிறது.

இவர்கள் மெல்ல மெல்ல நம்மைக் கொல்லும் விஷம் போன்றவர்கள்; அன்பாகப் பேசுவது இவர்கள் வழக்கம்; ஆனால் பண்பில்லாமல் நடப்பது இவர்களது வாடிக்கை. எங்கள் கடவுளை வணங்குங்கள் குறைகள் தீரும் என்று அன்பாகக் கூறி சாத்தான் வழிபாட்டு முறையை நிறுத்துங்கள் என்று பண்பில்லாமல் ஊளை இடத் தொடங்குவார்கள். வஞ்சக நரிகளின் காட்டுமிராண்டித்தனமான ஊளை அது.

குழந்தைப் பருவம் முதல் இருந்தே கிருஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மத நூல்களை போதிக்கிறார்கள். அது மதபோதனை வகுப்பாக மட்டும் இல்லாமல் மதவெறி ஏற்றும் வகுப்பாகவும் மாறிப்போனது வேதனை தரும் விஷயமே.

நம் போன்ற பெரியவர்களையே மூளைச் சலவை செய்து மதமாற்றும் இவர்கள் நம் குழந்தைகளை மட்டும் விட்டுவைப்பர்களா என்ன? மத வகுப்புகளை இவர்கள் குழந்தைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். தெருவில் விளையாடும் நம் பிள்ளைகளையும் அழைத்து நயமாகப் பேசி இனிப்பு கலந்த நஞ்சை வாரி வழங்குவார்கள். மதமாற்றத்தின் விதையை குழந்தைகளிடம் ஊன்றும் தந்திரமான முயற்சி இது. இனிப்பில் மயங்கும் பிள்ளைகளிடம் மதம் மாற்றும் அநாகரிகத்தைக் கூட நாகரிகமாகச் செய்ய இவர்களால் மட்டுமே முடியும். நய வஞ்சகர்களின் சூழ்ச்சியைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நம்மை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். இதை அவர்களின் வெற்றி என்பதை விட நமது தோல்வி என்றுதான் கொள்ள வேண்டும்.

“எங்கள் கண்களை மூடி பிரார்திக்கச் சொன்னார்கள்
கண்களை மூடிய பொழுது நாடு எங்கள் கைகளிலும்
பைபிள் அவர்கள் கைகளிலும் இருந்தது.
கண்களை திறந்த போது தான் உணர்ந்தோம்
பைபிள் எங்கள் கைகளிலும்
நாடு அவர்கள் கைகளிலும் மாறியது”
–ஆப்பிரிக்கப் பழமொழி

 

“உலகின் எல்லா நாடுகளிலும் மதமாற்றம் செய்யும் போது
பலத்த எதிர்ப்பு கிளம்பியது ஆனாலும் சில ஆண்டுகளில்
அதை கிருஸ்துவ நாடக மாற்றி விட்டோம்.
இந்தியாவிலோ எங்களுக்கு பலத்த எதிர்ப்பு இல்லை
250 ஆண்டுகளுக்குப் பின்பும்
எங்களால் இந்தியாவை இன்னும் கிருஸ்துவ நாடாக
மாற்ற முடியவில்லை”
–இந்திய கிருஸ்துவர்கள் மொழி

 

நம் தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. ஆனாலும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்மை காப்பற்றிக் கொள்ளவே முடியாது.

 

பாதகம் செய்வோரைக் கண்டால்
பயங் கொளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்திலே காரி உமிழ்ந்து விடு

–என்று கூறிய பாரதியின் கோபம்தான் நினைவுக்கு வருகிறது.

நம்மிடம் இருக்கும் பலவீனங்களை அவர்களது பலமாக மாற்றிக் கொண்டு இருக்கும் இந்த நிலை மாற வேண்டும். நம் கண் எதிரே நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்க வேண்டும். நம்முள் ஒற்றுமை இருந்தால் இது போன்ற சைத்தான்களிடம் இருந்தும் அசுத்த ஆவிகளிடம் இருந்தும் விடுதலை பெறுவது சர்வ நிச்சயம். ஆம் மிஷினரி இருளிலிருந்து தருமத்தின் ஒளிக்குச் செல்லும் பாதை என்மனதில் தெளிவாகத் தெரிகின்றது.

அந்தக் கூட்டம் பக்கத்துக்கு வீட்டு கதவுகளை தட்டும் சப்தம் கேட்கின்றது. அந்தச் சைத்தான்களை விரட்ட நான் கிளம்பி விட்டேன்; நீங்களும் வருகிறீர்களா?

வந்தால் உங்களோடு
வராவிட்டால் தனியாக
எதிர்த்தால் உங்களையும் மீறி
– பா.ஸ்ரீநிவாசன்.

102 Replies to “வீட்டிற்கு வந்த மதபோதகர்”

 1. பாதம் செய்வோரை கண்டு பயம் கொள்ளலாகாது பாப்பா
  மோதி மிதித்திடு பாப்பா அவர்கள் முகத்தில் உமிழ்ந்துடு பாப்பா

 2. என்ன வழி நம் முன்னே இர்ருகின்றது என்று தெரியவில்லை.

 3. எல்லா ஹிந்துகளின் வீட்டின் முன்பும், ”கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் உள்ளே வந்தால் — —– என்று போர்ட் வைக்கவேண்டியது தான்.

  நான் போட்ட பின்னூட்டத்தில் என்ன தப்பு. ஏன் அதை வெளியிடவில்லை?

 4. Right to Freedom of Religion 25. (1) Subject to public order, morality and health
  and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion

 5. Nice article.

  We should be aware of one thing, here. The foreign based priests are not supposed to come to India and preach. There is explicit bar on such things. Normally Indian visas will not be issued for such persons and the preachers. Even if they come, they will come on visa for Nepal and then will enter India. If suppose, you see any foreigner preaching, kindly report them to Police. They have to be deported with in 72 hours or be jailed for violation of visa rules. I will inform the exact sections for reference

 6. மருத்துவரின் அறிவுரைப்படியும் இளங்காலை பொழுதின் இனிமையை அனுபவிக்க வேண்டி நடைபயிற்சி மேற்கொள்கிறேன் . நேற்று காலை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஒரு போஸ்டர் காண நேர்ந்தது. அதைக்கண்டவுடன் நெஞ்சம் கொதித்தது . நண்பர்கள் பலர் அதைப் பார்த்திருக்ககூடும். அது ஒரு கிறிஸ்துவ மதப்ரசாரக் கூத்தின் அறிவிப்பு. “தேவ செய்தி அளிப்பவர் ரவி பால், மனம் திருந்திய பூசாரி” என்று இருந்தது அதை விடக் கொடுமை அந்த பிரசாரகரின் பழைய படம் நெற்றி நிறைய திருநீறு அணிந்து காவியுடையுடன் காட்சி அளிக்கிறார். அவர் மனம் திருந்தியபின் “”நாகரிக ப்ரசாரகராய்” காட்சி அளிக்கிறார். இந்துக்களின் சகிப்பு தன்மையா அல்லது அதனால் என்ன மனோபாவமா எது என்று தெரியவில்லை இதுபோன்ற வற்றை அனுமதிப்பது. கிறிஸ்துவர்களுக்கு துணிவிருந்தால் மனம் திருந்திய மௌலவி என்று போடுவார்களா? மதமாற்ற பிர (விப)சார கூடத்துக்கு வரும் பணபரிமாற்றங்கள் நிச்சயம் சட்டத்துக்கு உட்பட்டவையல்ல என்பது அரசாங்கத்துக்கு தெரியும். வோட்டு பொறுக்கிகள் உள்ளவரை இது போன்றவற்றை தடுப்பது மிகவும் கடினம். எல்லாம் வல்ல இறைவன் இந்துக்களை காப்பற்றட்டும்

 7. My experience in Sydney few months back.It happened around 7 pm. I was confronted by an eager young, handsome, blonde Christian priest while visiting the local library.
  Priest ( smiling broadly): Hello, Do you know Jesus is here and now.
  Me: That is good
  P: Do you want to see Him?
  M: No
  P: May I ask you why?
  M:I am not a christian. I am an Hindu. I follow my own religion.
  P:But it is my duty to show you the truth :
  M: Look Sir, I am happy with my religion. I don’t have the need to seek answers elsewhere as my faith has all the answers that I want. Please, leave me alone, let me practice my religion without any interference and I as a matter courtesy, will not be impinging in your right to practice yours in peace. Let us just leave it at that.
  But the priest would not leave me alone. Pestering me further again and again he said ” look, I have to show you the true way, I want you to realize Jesus in person. You are a spiritually a sick person and I have to administer the bitter medicine in the form of Jesus Christ. It is my duty. I will incur a great sin if I fail in this duty,. Let us pray together,blah, blah blah.”
  I just got fed up. I told the priest ” Look, I am a Doctor, and I should know something about medicines.Here you are prescribing me poison, masquerading as cure . You are no better than a quack and a snake oil salesman, trying to cure a a very healthy person”
  Shocked by my outburst and glaring me with contempt, he walked away.
  Lesson learnt: Do not be polite, treat these people with contempt they deserve.

 8. இது கிறிஸ்தவ மிசனரிகளிடம் எப்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு. முதலில் மதமாற்ற மிசனரிகளை வீட்டுக்குள் விடக்கூடாது. அந்த்க்குழுவில் நமக்கு முன்பே தெரிந்தவர்கள் இருந்தாலும் கூட.
  நடுத்தெருவில் மட்டுமே அவர்களோடு பேசவேண்டும். அவர்களோடு யார்வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஏன் எனில் அவர்களுக்கு ஒப்பிக்கத்தான் தெரியும். நிச்சயம் விவாதிக்கத்தெரியாது. அவர்களை விரட்ட ஒரே வழி க்கேள்வி கேட்பது தான். பைபிளைப்பற்றியும் இயேசி கிறிஸ்து பற்றியும் கேள்வி கேளுங்கள் அவர்கள் ஓடிவிடுவார்கள். அவர்களைக் கேட்க சில கேள்விகள்.
  1. இறைவன் முதலில் படைத்தது சூரியனையா பகலையா ?
  2. இயேசு மட்டும் தான் கடவுளின் பிள்ளையா நாம் எல்லாம் கடவுளின் குழந்தைகள் இல்லையா?
  3. இயேசு யூதர்களை மட்டும் மீட்கவந்தாரா இல்லை உலக மக்களை யெல்லாமும் மீட்கவந்தாரா? இயேசு எங்காவது உலகை மீட்க வந்தேன் என்று சொன்னாரா?
  4. இயேசுவை இரத்தத்தால் நம் பாவம் போகும் என்கிறீர்களே? அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் இறந்தவர்களின் கதி என்ன?
  5. இயேசுவுக்கும் மேரி மகதலேனாவுக்கும் என்ன சம்பந்தம்?
  இவற்றைப் பயன்படுத்திப் பார்த்து இருக்கிறேன். கிறித்தவகள் பாட்சா பலிக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
  தர்மம் காப்போம் தர்மத்தின் வழி நடப்போம்.

 9. என் வீட்டிற்கு இப்படி யாரும் வர மாட்டேனுங்கராங்கலே – ஒரு பெரிய உபசரிப்பு லிஸ்டே வெச்சுரிக்கேன்

  ஸ்ரீனிவாசன் சார் அவங்க மேல மஞ்ச/வேப்பலை தண்ணி தெளிச்சு வழி அனுப்பி இருக்கணம் – மிஸ் பண்ணிட்டீங்களே

 10. @sarang,

  // மஞ்ச/வேப்பலை தண்ணி தெளிச்சு வழி அனுப்பி இருக்கணம் // இது நல்ல யோசனையாக இருக்கிறதே, இந்த மாதிரி வேற என்ன இருக்கு.

 11. You can ask wise questions- christians consider number 13 is unlucky why ? preacher will tell
  you that 13 people took supper before jesus was crusified. Hence 13 is unlucky and no hotel in western has 13th floor. you may tell him- why christians wear cross symbol when the cross was used to crusify your god christ who died in this cross- is it not treated as unlucky for christians who are made to wear with chain particularly when same cross is used in thier tombs at semetry- burial
  Christians have no answer.
  similarly you can tell hindus worship ganga river because they consider it came from lord vishnu in his thrivikrama avatar when his foot was washed by brahma and later was received by shiva in his head. so hindus take ganga water which wash their sins if they take bath. so ganga flows in our country from ancient period of puranam.
  jesus blood wash the sins of christians. But there is no blood flowing either from his idol or his image or no where for the present days christians to wash their sins as jesus blood has stopped already after spilling once he died. where can the christians wash their sins now ?

  christians says soul is mortal and hence soul never takes rebirth again like hinduism consider.
  Then once the christians bodies are buried, where can the soul go ?- will it join with christ in the sky ?if all can join with christ in the sky, why missionaries insist only people who are bapitized alone can join with christ. so what will happen to the souls of non bapitised christians? will it stay in the bodies buried and reduced to skeleton? Missionaries say that during jesus second coming
  resurection, only believers of jesus alone would raise up and non believers would be sent to hell.
  so will the souls of non believers sent to hell eventhough they are good and honest.

  what is christianity say for the reasons of inequality, inequity, social disparties, variation of bodies
  nature and wealth, good people suffer and bad people florish- why such things in our society take place ? Hinduism says it is due to past karmas and hence advocates for ‘Athma, karma, janma and moksha final salvation ” while christianity do not believe karmas or rebirths and say souls are mortal. life is one time opportunity either to go to heaven or dumped in hell permanently. so they can not explain such variation of happenings in world. only hinduism has answer to this.

  Similarly christianity tells there is no soul for birds, animals, reptiles and also for plants, vegetations
  trees ect. as they say above are created by father god for the sake and pleasure of humanbeings
  so christians never believe in science. every animals and birds have some mind working and do some action intelligently. Lotus flowers open up petals once it sights sun rise, some flowers bloom once moon is sighted, some trees leaves close once sun is set, why such things happen- does not they have lifes and souls to do such acts. so christianity is totally failed in science.

  Finally even monkey or cow never go and stand before church or mosque but only before temples for seeking food from devotees. All people must realise the truth and believe our own faith of sanatana dharma.

 12. என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்,ஜெகோவா வின் சாட்சிகள் என கூறி கொண்டு என் வீட்டினுள் நுழைந்த சில தேவ மனிதர்கள் (!!!!!!!!!!) உங்களக்கு ஆண்டவரின் நட்செய்தியை அளிக்க வந்துள்ளோம் என கூறினர்.பின் விக்கிரக வழிபாடு,சாத்தன் வழிபாடு என உளற ஆரம்பித்தனர்.அவர்களை நிறுத்திய எனது அக்கா பூஜை அறையில் இருந்த பகவத் கீதையை அவர்களிடம் கொடுத்து இதை படித்து இதில் உள்ள பிழைகளை கூறுங்கள் நீங்கள் அளிக்கும் கை ஏட்டை படிக்கிறேன் என்றார்….தொப்பி வாங்கிய அந்த தேவ மனிதர்கள் சடார் என அடித்தார்கள் ஒரு ,அந்தர் பல்டி …….உங்களுக்கு சாத்தன் பிடித்து உள்ளது அதை ஓட்ட வேண்டும் என்றனர்……..எனக்கு தோன்றிய சந்தேகங்கள்
  1 .சாத்தன் உள்ள வீடு என ஏன் தேவன் முன்பே அவர்களக்கு அறிவிக்கவில்லை ?
  2 .கீதையை படிக்காமல் ஹிந்து சமயம் பற்றி பேச இவர்கள் யார் ?????(இதர புராணங்களும் )
  3 .இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்வில் தேவ மகிமையை ஏற்படுத்த இவர்களால் முடியவில்லையா ????அல்லது எல்லாம் வல்ல தேவன் அவர்களிடம் செல்ல வேண்டாம் என தடுத்தாரா???????
  4 .ஹிந்து வீட்டினில் உணவு உண்டால் பாவம் ,ஆனால் ஹிந்து வீட்டினில் உட்காந்தால் பாவம் அல்ல …..
  ஸப்ப்ப்பாஆஆஅ ……முடியல

 13. பின்பு ஒரு நாள் ,செட்டியார் தெருவில் நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிள் ஹெல்மேட்டினுள் சில ஜேசு உருவம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வைத்து வீதியில் போவோரிடம் விநியோகித்து கொண்டிருந்தார்…நான் தலையில் அடித்து கொண்டேன் …அவர்களின் இறை பக்தியை நினைத்து ……..புனிதமாக அவர்கல் பார்க்க வேண்டிய ஒரு பொருளை வியர்வை குளிக்கும் தலைகவசத்தில் வைத்து விநியோகிக்கும் இவர்களின் இறைபணி அவசியம் நம்மை தீண்ட வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது ………

 14. பார்டிகள் வந்தால் செய்யக் கூடிய சில உபசரிப்புகள்

  உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை உங்களை திட்ட சொல்லிவிட்டு – ஐயோ இவர் என்னை கண்டபடி ஏசு கிறானே (லே) என்று சொல்லலாம்

  உங்களது மனைவியிடம் – நம் பிள்ளையை வெளியில் வராமல் பாத்துக்கோ – வந்திருக்கவரங்க ஆவி சாத்தான் தேவதைன்னு பேசுவாங்க – தேவை இல்லாமல் இதை கேட்ட நம்ம பிள்ளைக்கு கிறுக்கு பிடிச்சிர போகுதுன்னு ரகசியம் போல சத்தமா சொல்லணும்

  வந்தவர்களிடம் ஒரு பத்து ரூவா கொடுத்து சார் மாடம் போகும் பொது புள்ளையார் கோவில் உண்டியல்ல கொஞ்சம் போட்டுடறீங்கள உங்களுக்கு புண்ணியமா போகும்ன்னு சொல்லலாம்

  உங்கள் அம்மாவிடமோ மனைவியிடமோ அம்மா இங்க வாங்க பாவிகள் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க அப்படின்னு சொல்லலாம்

  இந்தாங்க விசேஷ சுவாமி பிரசாதம் அப்படின்னு கொஞ்சம் அல்வா கொடுக்கலாம்

  ராம நாமம் பத்து முறை சொல்லி விட்டு – பாருங்க நீங்க ச்வாசிச்சது ராம நாம காற்று தான்னு சொல்லலாம்

  உங்களால ஒரு tune கூட ஒழுங்க போடா முடியாத, உங்கள்ள ஒருத்தருக்கு கூட ஒழுங்கா பாட வராதா – ஏன் தோண்ட கிழிய கத்தி சாமியப் போட்டு இப்படி டார்ச்சர் பண்றீங்கன்னு கேக்கலாம். ஏற்கனவே தொங்கிகிட்டு இருக்கறவரு விழுந்துடப் போராருன்னு பரிதாபப் படலாம்.

  வீட்டுக்கு உள்ள அழைக்கும் போது வலது காலை எடுத்து வைத்து வர சொல்லலாம்

  அச்சச்சோ ராகு காலத்தில்/யம கண்டத்திலே வந்திருக்கீங்களே – ஒரு பத்து நிமிஷம் வெளியிலேயே இருந்துட்டு ராகு காலம்/யம கண்டத்திலே முடிஞ்சா பின் வாங்கன்னு சொல்லலாம்

  மதம் மாற்றம் எலும்பை முறிக்கும் அப்படின்னு வீட்ல போர்டு மாட்டி வெக்கலாம்

  போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு பாட்டை முணுமுணுக்கலாம் ஆல்லது உங்கள் மனைவியை முனுமுனுக்க சொல்லலாம்.

  மூச்சுக்கு மூணு தடவை புள்ளையாரப்பா எல்லாருக்கும் அறிவ கொடப்பன்னு சொல்லிகிட்டே இருக்கலாம்

 15. எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு. இக்கட்டுரையை படித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இனி இவர்களை எதிர்கொள்ளும் பாதையும் தெரிகிறது.

 16. இந்த கிறிஸ்துவ சகதோரர்கலே இப்படி தான் இந்த உலகத்தையே கிருஸ்துவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்று நினைபவர்கள். முதல்ல இந்த கட்டுரைய எழுதிய ஆசிரயர் அவர்களுக்கு மிக்க நன்றி. சரியாக சொன்னிர்கள் அன்பரே. அனால் பத்து விரலும் ஒன்றாக இருப்பதில்லையே.

 17. பாரம்பரிய கிறிஸ்தவர்கள் என பறை சாற்றி கொள்ளும் பலரிடமும் ஒரு கேள்வி ….தங்களின் பூர்விகம் எது என அறுதி இட்டு கூற முடியுமா ????நான் இலங்கையன் ,ஆனால் என் தந்தை திருநெல்வேலி,இந்தியா…மதம் மாறிய ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி …உங்களின் பெற்றோர்கள் உங்களிடம் பாசமாக இல்லை என்று பக்கத்துக்கு வீடு மாமாவை உங்களின் தந்தை என்று கூருவிர்களா ??????சிலை வழிபாடு நடத்தும் போது ஒருவனின் ஐம்புலன்களும் ஓரிடத்தில் அடங்கி எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளை தன கட்புலனிட்குள் தன மனம் சாந்தியுற காண்கிறான்.,கோவிலுக்கு செல்லும் முன் மன,உடல் அழுக்குகளை கழுவி நீக்கி விட்டு சிரத்தையுடன் வழிபாடு செய்யும் இந்துவை சாத்தன் வலிபாடு செயும் மூடன் என கூறும் கிறிஸ்தவ மேதைகளக்கு………உங்கள் பைபிள் கூறும் சாத்தன் போல் எந்த ஹிந்து கடவுளும் அலங்கோலமாய் காட்சி அளிப்பது இல்லை….மங்களகரமான வாழ்வை வாழ்வது ஹிந்துவின் மார்க்கம்..காக்கை எறும்பு கூட பசியில் இருக்குமே என மனம் வருந்துபவன் இந்து…மூத்தோர் உயிர் நீத்த நாளில் ஏழைகலக்கு உணவளித்து அவன் பசி போக்குபவன் ஹிந்து …வர்க்க முரண்பாடு,உணவின்மை என்பவற்றை குறைக்க இந்து தன்னால் ஆன பங்களிப்பை தன் வாழ்கை நெறியுடன் கலந்து கடை பிடிக்கிறான் ..ஒரு புத்தகம் அதுவும் பழைய மக்களுக்கு பழைய ஏற்பாடு ,புதிய மக்களக்கு புதிய ஏற்பாடு …????????????? இயேசுவை உயர்த்தி பாடும் தாங்கள் மோசஸை மறந்தது ஏனோ ??????????????

 18. இன்றைய தினமணியில் வாடிகனின் வேண்டுகோள்””இந்தியாவில் கிறிஸ்தவர்கள் (கத்தோலிகர்)காப்பாற்ற படவேண்டும், அவர்கள் மதத்தை பரப்ப இந்துக்கள் உதவிசெய்ய வேண்டும் “” இந்த வேண்டுகோளை அரபு நாடுகளிலும் வாடிகன் வைக்கலாமே

 19. கிறிஸ்துவர்கள் மனதில் மதமாற்றம் என்பது ஒரு வகை மனோ வியாதியாகப் பரவியிருக்கிறது.. முட்டாள்த்தனமான, நடக்க முடியாத… எண்ணக்கருவை மனதில் கொண்டு இவர்கள் செயற்படுகிறார்கள்..

  இவர்களில் பலரும் இவ்வாறான தமது செயற்பாடு சரியா.. தவறா என்று புத்தி பூர்வமாகச் சிந்திப்பதே இல்லை என்றே தெரிகிறது. இக்கட்டுரை ஒரு நல்ல விழிப்புணர்ச்சியைத் தருகிறது.. இதனை ஹிந்துக்கள் படிப்பதைக் காட்டிலும்.. மதமாற்றிகள் முக்கியமாகப் படிக்க வேண்டும்..

 20. ரோடில் மத மாற்ற பிச்சை எடுக்கும் கோழைகள் . படித்தவர்கள் கூட இந்த செயலில் இறங்கும் பொது தான் ரௌதரம் பழக வேண்டும் போலே தோன்றுகிறது

 21. நமது நாட்டில் நடைபெற்று வரும் மத மாற்ற நிகழ்வுகளுக்கு அடித்தளமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களையும் அவற்றுக்கு கிடைத்து வரும் பொருளாதார மற்றும் இதர உதவிகளை பதவியில் உள்ள அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் ஆட்சியாளர்களுடன் தேர்தலுக்கு முன்பே பேரம் பெசிமுடித்துவிடுகின்றனர். இடையில் எந்த பிரச்சினை வந்தாலும் இவர்களது மதமாற்ற வியாபாரம் தடைபடாமல் இருப்பதற்கு வழிவகுத்து நெளிவுசுழிவுகளை கண்டறிந்து செயல்படுகின்றனர். நமது சமுதாயத்திலிருந்தே இவர்களை ஆதரிப்பவர்களை உருவாக்கிவிடுவதால், துரோக சிந்தனை உடைய நம்மவர்களாலேயே நாம் மிகவும் பலவீனப்படுத்தப்படுகிற சூழல் உள்ளது. சிறுபான்மை என்ற போர்வையில் சட்டத்தின் ஆதரவும் கிடைப்பதால் ஹிந்துக்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. நக்சல் ஆதரவு இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள், மனித உரிமை இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் மற்றும் ஹிந்து சிந்தனை இல்லாத அரசியல்வாதிகள் இவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் நமது சமுதாயம் சீரழிந்து வருகிறது!

 22. அதான், உங்ககிட்ட ஒரு புத்தகத்த குடுத்துட்டு, 50 ரூபான்னு வியாபாரம் பேசினாங்களே.. அதிலிருந்தே தெரிய வேண்டாம்.. அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று?

  எங்கள் ஊரில், பால் தினக்கரனோட புத்தகத்த ஒருவர் ரெகுலரா வாங்கிகிட்டு இருக்கார்.. கேட்ட, மாசம் 100 ரூபா சந்தா கட்டறாராம்.. மாசத்துக்கு ஒரு தடவ, ஜெபம் பண்ண ஒருத்தன் வரான்.. அவனுக்கு ஃபீஸ் 200 ரூபா.. யோசிக்காம குடுக்கிறார்.. நகரின் முக்கிய பகுதியில், 2000 சதுர அடி அளவில் ஒரு சர்ச் கட்ட வேண்டும்.. ஒவ்வொருவரும் 2000 ரூபாய் ஏசுவுக்காக பங்களிப்பாக கொடுத்து ஒரு அடி வாங்க உதவி செய்யுங்கள் என்று கூறி, 2000 பேரிடம் 2000 ரூபாய் கறந்துவிடுகிறார்கள்.. அதையும், பெருமையுடன் எங்கள் ஊரில் சமீபமாக மாறிய கிறித்துவர் கொடுக்கிறார்..

  நாம் நினைப்பது போல, வெளி நாட்டு பணத்தின் மூலம் மட்டுமே சர்ச் நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.. வெளி நாட்டு பணம் வெறும் மூலதனமே..

 23. எங்களூரில் ஒரு ஐயங்கார் மாமா இருந்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மிஷநரி வீடு எடுத்துத் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் சுவிசேஷ ஜெபக்கூட்டம் நடக்கும். மைக் செட் கட்டி 3 மணி நேரம் பாட்டு பேச்சு எல்லாம் நடக்கும். இவர் சில காலம் பொறுத்து ஞாயிறு அதிகாலைகளில் தன் வீட்டில் டேப் ரெக்கார்டரில் விஷ்ணு சுப்ரபாதம், சகஸ்ரநாமம் என்று சத்தம் போட்டு வைப்பார். அவர்கள் வந்து டிஸ்டர்ப் ஆகிறது என்றார்கள். “நான் என் வழக்கப்படி சாமி கும்பிடறேன். உனக்கென்ன வந்தது, நீ 3 மணி நேரம் மைக் கட்டி என்னை டிஸ்டர்ப் பண்றியே சொன்னா கேட்டியா? சாமி கும்பிடறத எதிர்க்கிறான்னு பேசினே…. இப்போ நீ என்ன பண்றே?” என்றார். அந்த பாஸ்டர் பேசாமல் போய்விட்டார். 4 நாட்கள் கழித்து ஒரு 5-6 பேர் அவர் வீட்டுக்கு வந்தார்கள். பாதிரிகளும் அவர்தம் தொண்டர்களும் அடக்கம். வந்தவர்களில் ஒருவர் முந்தைய நாள் இரவில் ஏசு தம் கனவில் வந்ததாகவும், இவரைக் குறிப்பிட்டு இவருக்கு நல்ல வழியைக் காட்டுமாறு பணித்ததாகவும் கூறியுள்ளார். பிறகு ஏசுவைத்தவிர வேறு கடவுள்கள் பற்றி அவதூறு பேசிவிட்டு சுவிசேஷ கூட்டத்துக்கு வந்து பங்கேற்க அழைத்தனர். இவர் சொன்னார்,” நேற்று இரவு என் கனவில் காளியம்மன் வந்தாள். இப்படிச் சிலபேர் வந்து உன்னிடம் பேசுவார்கள். அவர்கள் உன்னை பாவி என்றும் நீ கும்பிடும் சாமி பிசாசு என்றும் ஏசுவார்கள். அவர்களுக்கு என் பிரசாதத்தைக் கொடுத்து சாப்பிடச் சொல். மறுத்தால் அவர்களின் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடித்து அவர்களைப் பிடித்துள்ள பேயை நீ விரட்டு என்று என்னிடம் சொன்னாள். பிரசாதம் சாப்பிடுகிறீர்களா? பூஜையை ஆரம்பிக்கலாமா?” என்றார்… வந்தவர்கள் ஓட்டம் எடுத்தனர். கடைசி வரை தம் மதத்தை அவர் விட்டுக் கொடுத்தது கிடையாது. குறைகளை மிகக் கடுமையாகச் சாடுவார். என் மதம் நான் பேசுவேன். மாற்றான் பேசக்கூடாது என்பார்.

 24. அதெல்லாம் சரிங்க.. மதம் மாறிய கிறித்துவன் ஒவ்வொருவனும், பைபிளில் இருந்து ஸ்லோகம் சொல்றான்.. இங்கே உங்களால் ஏன் தேவாரம் திருவாசகம் பாட முடியவில்லை.. அல்லது பகவத் கீதையில் இருந்து எந்த ஸ்லோகமும் சொல்ல முடியவில்லை?

  எல்லாரும் தன்னை இந்து என்று நினைத்துக் கொண்டாலே போதும் என்ற குறுகிய கிறுக்குத்தனமான கொள்கையுடைய பொந்துத்துவ வாதிகள்தான் இதுக்கு காரணம்.. மதம் என்ற ஐரோப்பா பானியில் இந்து மதத்தை நிறுவும் முயற்சியில், நமது பாரம்பரியத்தை ஒவ்வொன்றாக சிதைய விட்டுவிட்டார்கள்.. பத்தாததுக்கு, இருக்கிறவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆகவே நண்பர்களே.. இந்த இந்துத்துவம், பொந்துத்துவம் பேசுவதை விட்டுவிட்டு, உங்களுடைய பாரம்பரிய என்ன என்பதை தேடுங்கள்.. அப்புறம் ஆதி சங்கரர் சொன்ன சன்மதத்தில், நீங்கள் எந்த மத சம்பிரதாயத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதையும் தேடுங்கள்.. அதெல்லாவற்றுக்கும் முன்னால், உங்கள் குல தெய்வத்தை தேடி வழிபடுங்கள்.. முதலில் குலதெய்வ வழிபாடு.. பின்பு, குடும்ப ஜாதி சம்பிரதாயம்.. பின்பு, சைவம், வைணவம் போன்ற மத சம்பிரதாயங்கள்.. இவைதான் நமது பாரதிய தர்மம்..

  குழந்தைகளுக்கு தேவாரம் திருவாசகம் சொல்லிக் கொடுத்து, கோயிலில் பாடும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள்..

 25. இன்று மாலை கண்ட காட்சிகள், கூட்டம் கூட்டமாக மிஷனரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்களை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சின்னஞ் சிறு குழந்தைகள் முதல் கொண்டு இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர். எங்கு எல்லாம் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் இவர்களும் இருகிறார்கள்.

  பிரசுரங்களை கொடுக்கும் பொழுது யேசு ஆசிர்வதிப்பார் என்று சொல்லியே கொடுகின்றனர்.

  இவர்களை நம்மால் கட்டுப் படுத்த முடியாது, ஆனால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

  இனி இவர்கள் என்னிடம் துண்டுப் பிரசுரங்களை கொடுத்தல் நாமும் பதிலுக்கு ஹிந்து தர்மம் சார்ந்த பிரசுரங்களை கொடுக்கப் வேண்டும்…நாம் அனைவரும் இது போல் சிறிது முயன்றால் பதிலடி கொடுத்தது போல் இருக்கும். அச்சமயம் அவர்கள் செய்கைகளையும் காண முடியும்.

 26. வெறும் பிரசுரம் கொடுத்தால் மட்டும் போதாது.. நாம், நம் தாத்பரியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.. நம் நாட்டில் கிரித்துவம் மாதிரியான மதங்கள் என்றுமே இருந்ததில்லை.. அதனால், வெறுமானே, பதிலுக்கு பதில் என்று ரியாக்ஷனரியாக நாம் மாற கூடாது..

  ஆனால், இதுவரை, நம் பாரதிய வாழ்க்கை முறை என்ன என்பது பற்றிய ஆக்கப்பூரவமான விவாதங்கள் நான் இந்த தளத்தில் பார்த்ததில்லை.. நாம் எப்படி வாழ வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கோட்பாடு இருக்கிறது.. அதை நம் தாத்தா காலத்தோடு நின்று விட்டது.. நமது அப்பா காலத்திலும், நமது தலைமுறையிலும் சுத்தமாக மறந்துவிட்டோம்.. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை ஒரு ஃபேஷனாக கொண்டுவந்துவிட்டார்கள்.. கேட்டால், இந்து மதம் முழு சுதந்திரம் கொடுக்கிறதாம்.. அவர்களுக்கு தெரியவில்லை.. பறிக்கப்பட்ட சுதந்திரம் தான் கொடுக்க முடியும்.. பிறவியில் எல்லாருமே சுதந்திரமாகத்தான் பிறக்கிறார்கள்..

  ஒரு கிறித்துவ பாதிரியார் நம்மிடம் வரும்போது, நமது பக்திப்பாடல்களை உளப்பூர்வமாக நம்மால் பாட முடிந்தால், அதை விட என்ன சிறப்பான பதிலடி வேண்டும்.. நம்மால் முடிவதில்லை.. ஏன் என்றால், இந்த எச்சகெட்ட சிஸ்டம் (education system) , நம்மள அபப்டி வளர்த்து வைத்திருக்கிறது.. நாமும் அதே சிஸ்டத்தில் நம் குழந்தையை கொண்டு போய் சேர்க்கிறோம்.. கடைசியில், 23ஆம் புலிகேசியாக ஒரு தலைமுறையே பிறந்து நிற்கிறது..

  இந்த நிலையில், மிஷனரி வந்து யேசுவை பத்தி சொன்னால், நமக்கு பத்திகிட்டு வருது.. காரணம், நமது இயலாமை.. நம்மால் நமது தாத்பரியத்தை திருப்பி சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம்.. நாம் வலிமையாக இருந்தால் நம்மை யாரும் தொட முடியாது.. நாம் ஏன் அப்படி இல்லை என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள்.. எதெல்லாம் நம்மை பேடியாக ஆக்கி வைத்திருக்கிறது என்று உணருங்கள்.. பின்பு எல்லாமே நமக்கு புரியும்..

 27. திரு கோமதி செட்டி
  பாதம் செய்வோரை கண்டு பயம் கொள்ளலாகாது பாப்பா
  மஹாகவி பாரதியாரின் வரி
  பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா

 28. // எல்லாரும் தன்னை இந்து என்று நினைத்துக் கொண்டாலே போதும் என்ற குறுகிய கிறுக்குத்தனமான கொள்கையுடைய பொந்துத்துவ வாதிகள்தான் இதுக்கு காரணம் //

  // ஆகவே நண்பர்களே.. இந்த இந்துத்துவம், பொந்துத்துவம் பேசுவதை விட்டுவிட்டு, உங்களுடைய பாரம்பரிய என்ன என்பதை தேடுங்கள்.. அப்புறம் ஆதி சங்கரர் சொன்ன சன்மதத்தில், நீங்கள் எந்த மத சம்பிரதாயத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதையும் தேடுங்கள் //

  அன்புள்ள செந்தில், ஏதோ மேதாவித் தனமாக சொல்வதாக நினைத்துக் கொண்டு, வெறுப்பையும், அறியாமையையும், பிழைபட்ட புரிதல்களையுமே உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.. இந்துத்துவம் என்ற மந்திரச் சொல்லின் மீது உங்களுக்கு என்ன காழ்ப்புணர்வோ தெரியவில்லை.

  அந்தச் சொல்லை உருவாக்கிய வீர சாவர்க்கர் கண்டிப்பாக உங்களை விட பல மடங்கு அறிவுக்கூர்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட பேரறிஞர். ஈடு இணையற்ற தேசபக்தர். ஆழ்ந்த வரலாற்று வாசிப்பும், சமூக தீர்க்கதரிசனமும் கொண்டவர். அவர் பெயரிட்டு உருவாக்கிய அரசியல், சமூக சித்தாந்தத்திற்கு அடித்தளம் தந்தவர்கள் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், தயானந்த சரஸ்வதி, டாக்டர் ஹெக்டேவார் ஆகிய நவீன ஹிந்து மறுமலர்ச்சியின் நாயகர்கள். அதன் பின் இந்த சிந்தனை இழையை வளர்த்தவர்கள் தீனதயாள் உபாத்யாயா சீதாராம் கோயல், அருண் ஷோரி, கொய்ன்ராட் எல்ஸ்ட், அரவிந்தன் நீலகண்டன் போன்ற சிந்தனை வீரர்கள் தொடங்கி குருஜி கோல்வல்கர், தாணுலிங்க நாடார், ராம கோபாலன் முதலான செயல்வீரர்கள் வரை இந்துத்துவத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்.

  இந்துத்துவம் என்ற சொல்லை எள்ளி நகையாடுவதன் மூலம், அவதூறு செய்வதன் மூலம் இந்த மாபெரும் நவீன இந்து மறுமலர்ச்சியையே நீங்கள் அவதூறு செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்.

  இந்து என்று எல்லாரும் தன்னை நினைக்கவேண்டும் என்பது மாபெரும் கலாசார, பண்பாட்டு விழிப்புணர்வு. தான் பொந்துக்குள் இருப்பதைக் கூட அறிந்து கொள்ளாமல், சாதியத்தையும், பழமைவாதத்தையும் ஜிகினா பேப்பரைக் கூட ஒழுங்காக சுற்றத் தெரியாமல் எடுத்துப் பேசும் உங்களுடையது தான் “குறுகிய கிறுக்குத்தனமான கொள்கை”..

  இன்று தேசமெங்கும் குழந்தைப் பருவத்திலேயே இந்துப் பண்பாட்டையும், விழுமியங்க்ளையும் கற்றுத் தருவதில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள். விவேகானந்தா வித்யாலயா, சரஸ்வதி சிசு மந்திர் முதல் வன்வாசிப் பகுதிகளில் ஏகல் வித்யாலயா வரை உருவாக்கியது யார் நண்பரே?? கிருஷ்ண ஜெயந்திப் போட்டிகள் முதல் பள்ளிகளில் காயத்ரி மந்திரத்தையும், பஜனைப் பாடல்களையும், தேசபக்த வீரர்களின் கதைகளையும் யார் எடுத்துச் சென்றார்கள்? இதெல்லாம் பாரம்பரியம் இல்லையா? சமயக் கல்வி இல்லையா? இந்து சமுதாய அமைப்பில் இத்தகைய பரந்து விரிந்த வெகுஜன பிரசார இயக்கத்தை “இந்துத்துவ” இயக்கங்கள் இல்லாமல் வேறு யார் செய்தார்களாம்? திருமுருக கிருபானந்த வாரியார், சுவாமி சின்மயானந்தர், சுவாமி சத்யஸ்வரூபானந்த கிரி, சுவாமி சித்பவானந்தர், உடுப்பி சுவாமி விஸ்வேஸ்வர தீர்த்தர் போன்ற மாபெரும் மகான்கள் இந்துத்துவ இயக்கங்களை முழுமையாக ஆசிர்வத்து தங்கள் பரிபூர்ண ஒத்துழைப்பையும் நல்கினார்கள் என்ற விவரமாவது தெரியுமா?

  உங்கள் இந்துத்துவ நண்பர்கள் யாருடனாவது உங்களுக்கு கருத்து வேறுபாடு, பிரசினைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.. அல்லது ஒரு நல்ல மனநல ஆலோசகரிடம் செல்லுங்கள். யோகாசனம் செய்யுங்கள். நல்ல இசை கேளுங்கள். ஒரு சுற்றுலா சென்று வாருங்கள்.

  பொதுவில் வந்து அபத்தமாகப் பேசி அதற்கு வடிகால் தேடவேண்டாம்.

 29. திரு செந்தில்
  அதெல்லாம் சரிங்க.. மதம் மாறிய கிறித்துவன் ஒவ்வொருவனும், பைபிளில் இருந்து ஸ்லோகம் சொல்றான்.. இங்கே உங்களால் ஏன் தேவாரம் திருவாசகம் பாட முடியவில்லை.. அல்லது பகவத் கீதையில் இருந்து எந்த ஸ்லோகமும் சொல்ல முடியவில்லை.
  ஐயா செந்திலாரே ஹிந்துமதத்தை கிறித்தவம் போல் இஸ்லாம் போல மாற்ற முயல்வது ஹிந்துத்துவர்கள் அல்ல நீங்கள்தான். கட்டாயப்படுத்தி சுலோகங்கள் தத்துங்கள் பிரார்த்தனைகள் ஆகியவற்றை குழந்தைகள் மேல் திணிப்பது நமது பாரதீய பாரம்பரியம் அன்று ஆபிராகாமியமே அது என்று உணருங்கள்.

  திரு செந்தில்
  ஆகவே நண்பர்களே.. இந்த இந்துத்துவம், பொந்துத்துவம் பேசுவதை விட்டுவிட்டு, உங்களுடைய பாரம்பரிய என்ன என்பதை தேடுங்கள்.. அப்புறம் ஆதி சங்கரர் சொன்ன சன்மதத்தில், நீங்கள் எந்த மத சம்பிரதாயத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதையும் தேடுங்கள்.. அதெல்லாவற்றுக்கும் முன்னால், உங்கள் குல தெய்வத்தை தேடி வழிபடுங்கள்.. முதலில் குலதெய்வ வழிபாடு.. பின்பு, குடும்ப ஜாதி சம்பிரதாயம்.. பின்பு, சைவம், வைணவம் போன்ற மத சம்பிரதாயங்கள்.. இவைதான் நமது பாரதிய தர்மம்..
  தனது பாரம்பரியத்தில் வேரோடி நிலைத்திருத்தலே ஹிந்துத்துவம். ஹிந்து என்பதில் ஏன் உங்களுக்கு எரிச்சல் குளவி கொட்டிவிட்டதா என்ன? ஹிந்து என்பது ஸ்ரீ சங்கராச்சாரியார் ஒருங்கிணைத்த வைதீக சமயங்கள் மட்டுமன்று அவைதீக சமயங்களான பௌத்தமும் ஜைனமும் கூடத்தான். அது எல்லாவித குலதெய்வ பழங்குடி மரபுகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பாதுகாக்க காப்பாற்ற முயல்வது. ஆபிராகாமியம் இவற்றை வேரோடு அழிக்க முயல்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
  சிவஸ்ரீ. விபூதிபூஷண்

 30. @ ஜடாயு ,

  சரியாக கூறினீர்கள்,திரு.செந்தில் வளர்ந்த விதம் எப்படியோ நான் அறிகிலேன்,பாரதம் தாண்டியும் இலங்கை,இங்கிலாந்து,பிரான்ஸ்,மலேசியா போன்ற நாடுகளில் சுவாமி ஊர்வலம் நடப்பதும்,விரதங்கள் அனுட்டிப்பதும்,பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதும் தார்பரியம்,பாரம்பரியம் இவற்றில் அடங்காதவைகளா ???????நான் கொழும்பில் படித்த பாடசாலையில் நாம் காலையில் கல்வியை ஆரமபிப்பது காயத்ரி மந்திரத்துடன்,வெள்ளிகிழமைகளில் சிவபுராணம் எம் உள்ளத்தினின்று பாடப்படும்.இது எந்த இலங்கை இந்து பாடசாலைகளிலும் காண கூடியதாய் இருக்கும். ?Inter-school hindu competitions கூட இங்கு நடைபெறுவது வாடிக்கை..செந்தில் கூறுவதை பார்த்தால் கர்நாடக சங்கீத வகுப்புகளில் சினிமா பாடல்களும்,பிற மத பாடல்கள் மட்டுமே தான் பாட படுகிறது போலும்?????????பைபிள் படிப்பையும் ஹிந்து மத வாழ்வையும் ஒப்பிட வேண்டாம்….இரண்டும் இரு வேறு பட்ட கோணங்களில் வாழ்வை நோக்குபவை…இவ் இடத்தில கீதை விளக்கம் தரும் விவாதம் இடம் பெறவில்லை அதனால் நம்மவர் அதை பற்றி பேசவில்லை…..தங்களக்கு தேவை எனின் ஜடாயு,ராம் என பலரின் பிளாக்’s உள்ளன.தேடி பிடித்து படித்து பாருங்கள்

 31. @செந்தில்
  குலதெய்வ வழிபாடு இன்றி எந்த ஹிந்து குடும்பமும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள் திரு.செந்தில்

 32. ஹிந்து எனது ஒரு பரந்த பண்பாட்டினை அழகாக குறிக்கும் சொல்

  அதில் ஹி என்பது ஹிமாலயத்தையும், இந்து என்பது இந்து மகா சமுத்திரத்தையும் குறிக்கும் – இப்படி பறந்து விரிந்த பாரத தேசத்தில் உருவான தர்மமே ஹிந்து தர்மம் – ஹிந்து என்ற சொல்லால் மட்டுமே அகண்ட பாரதத்தின் தர்மத்தை குறிக்க முடியம் – சனதான தர்மம் என்றால் அது எங்கு தோடியது என்பதற்கான பதில் இல்லாமல் பொய் விடுகிறது. ஹிந்து என்ற சொல் அது பாரத்தில் தான் பாரத்தில் தான் என்று அழுத்தி சொல்கிறது.

  ஹிமாலய முதல் இந்து மகா சமுத்திரம் உள்ள ஸ்தானம் தான் ஹிந்துஸ்தானம் என்பது

  இதில் விவேகானந்தர் மற்றும் சங்கம் சம்பத்தப்பட்டிருப்பதாலேயே ஒரு சிலர் தங்கள பாஷனாக நாங்கள் எல்லாம் சனாதன தர்மிஸ்ட் என்று அழைத்துக் கொண்டு ஹிந்து என்று அழைத்து கொள்ள விரும்பாதவர்களாக இருந்தனர்

  செந்தில் என்பவர் ஹிந்துவில் வாழாமல் பொந்தில் வாழ விரும்பினால் நமக்கு பிரச்சனையை இல்லை.

  சைவம், வைணவம், சாக்தம், வேதாந்தம் , சனாதன தர்மம் போன்ற எந்த சொல்லும் இந்திய ஞான மரபை ஒரு சேர குறிக்காது – அதை ஹிந்து என்ற ஒரு அற்புத சொல்லால் மட்டுமே குறிக்க முடியும்.

  தீபாவளி வாழ்த்துக்கள் – அகங்காரம் என்னும் அஞானத்தின் ஸ்வரூபமான ராவணனை கொன்று ராமன் இந்து மகா சமுத்திரத்திலிருந்து ஹிமாலயத்தின் அருகில் உள்ள அயோத்தி திரும்பிய நாள் தீபாவளி நாள்.

  நமக்கு ஹிந்துத்தவ ஞானம் பிறக்க, ஸ்திரமாக இருக்க ஒவ்வொரு ஹிந்துவும் நன்கு எழ ராமனை நன்கு பிரார்த்திக்கிறேன்

 33. நமக்கு இன்றைய உலகில், பெயர்கள் தேவை. பெயர்கள் உலகம் முழுவதும் அடையாளமாகிவருகின்றன. எனவே, இந்து என்ற பெயரும் வெள்ளையர்கள் நமக்கு சூட்டியது என்று இருந்தாலும் பரவாயில்லை. நமக்கு பெயர் தேவை. எனவே, இந்து என்ற பெயர் மிக சிறந்த ஒன்றே ஆகும்.

  எங்கள் குலதெய்வம் பெரியசாமி ஆவார். குலதெய்வ வழிபாடு இந்து மதத்தின் ஒரு அடிப்படை தத்துவம் ஆகும். பெயர் ஒரு அடையாளத்திற்கு தான். பெயரே எல்லாமும் ஆகிவிடாது.

  ” சைவம், வைணவம், சாக்தம், வேதாந்தம் , சனாதன தர்மம் போன்ற எந்த சொல்லும் இந்திய ஞான மரபை ஒரு சேர குறிக்காது ” – இது சரிதான்.

  ஆனால் இந்து என்ற சொல்லும் அதே போல தான். இந்து என்ற சொல்லும் , மேலே கூறிய சைவம், சாக்தம், வேதாந்தம், வைணவம் போன்ற பெயர்களை போல , மற்றொரு பெயர் தான். எனவே பெயர்களில் உயர்வு தாழ்வு சொல்லுதல் கூடாது. பெயர்கள் அடையாளம் மட்டுமே.

 34. திரு ஜடாயு,

  உங்களின் பதில், எனது புரிதலையும், நிலைப்பாட்டையும் மேலும் உறுதிப்படுத்துகிறது. உங்களுக்கும் ஆப்ரகாமிய மதங்களுக்கும் என்ன வித்தியாசம்?. இந்துத்துவம் என்பது மந்திர சொல்லான பிறகு, சகிப்புத்தன்மை காணாமல் போகிறது.

  என்னுடைய வலைத்தளத்தை பாருங்கள்.. கடந்த 5 வருடங்களில் என்னை போல இந்துத்துவத்தை தூக்கி பிடித்தவன் அதிகம் இல்லை. ஆனால், பல இடங்களில் வாதம் செய்ய செய்ய இந்துத்துவம் என்ற செயற்கை தன்மை புர்ந்தது. கொஞ்சம் ஆர அமர்ந்து யோசித்தபோதுதான், நாம் செல்லும் பாதை எந்த விதத்திலும் சரியல்ல என்பது புர்ந்தது.. விளைவு.. எல்லவற்றையும் தூக்கி எறிந்து விட்டு என்னுடைய வீடு, சுற்றூப்புறம், சமூகத்திலும், புதிதாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.. தமிழ் நாட்டில் பல இடங்களில் சுற்றி, நேரில் பார்த்தபொழுதுதான் பொது மக்களின் எண்ண ஓட்டமும், நகரத்தில் இருப்பவர்கள் எப்படி உண்மையான பாரதிய சமூகத்திலிருது துண்டிக்க பட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.. அதுதான் இங்கே இருப்பவர்களின் பதில்களில் நான் காண்கிறேன்.

  /** அந்தச் சொல்லை உருவாக்கிய வீர சாவர்க்கர் கண்டிப்பாக உங்களை விட பல மடங்கு அறிவுக்கூர்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட பேரறிஞர். ஈடு இணையற்ற தேசபக்தர். ஆழ்ந்த வரலாற்று வாசிப்பும், சமூக தீர்க்கதரிசனமும் கொண்டவர். அவர் பெயரிட்டு உருவாக்கிய அரசியல், சமூக சித்தாந்தத்திற்கு அடித்தளம் தந்தவர்கள் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், தயானந்த சரஸ்வதி, டாக்டர் ஹெக்டேவார் ஆகிய நவீன ஹிந்து மறுமலர்ச்சியின் நாயகர்கள். அதன் பின் இந்த சிந்தனை இழையை வளர்த்தவர்கள் தீனதயாள் உபாத்யாயா சீதாராம் கோயல், அருண் ஷோரி, கொய்ன்ராட் எல்ஸ்ட், அரவிந்தன் நீலகண்டன் போன்ற சிந்தனை வீரர்கள் தொடங்கி குருஜி கோல்வல்கர், தாணுலிங்க நாடார், ராம கோபாலன் முதலான செயல்வீரர்கள் வரை இந்துத்துவத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்.
  **/

  வீர சாவர்க்கர் தவறே செய்யாதவரா? இல்லை யேசுவை போல தவறு செய்ய வாய்ப்பில்லாதவரா? சரி.. அவர் ஒரு நாத்திகவாதி.. அதனால் எல்லோரும் கடவுளை கும்பிடுவதை விட்டு விடலாமா? யேசு சொன்னார் என்று கண்ணை மூடிக்கொண்டு பிரச்சாரம் செய்யும் கிறித்துவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? தர்க்கம் என்ற ஒன்று எங்கே சென்றுவிட்டது?

  நேஷனலிசம் என்பது சமீபத்திய கோட்பாடு.. ஐரோப்பாவின் இன மொழி வெறியின் ஒரு அடையாளம்.. நீங்கள் மேற்சொன்னவர்கள் எல்லாம் அந்த சித்தாந்ததில் கவரப்பட்டவர்கள்.. அதே போல, இங்கயும் ஒரு சித்தந்தத்தை உருவாக்கும் முயற்சியில் தான் இந்துத்துவம் உருவானது.. ஆனால், ஜாதியும், அதை சார்ந்த பாரம்பரியமும் தர்மமும், காலம் காலமாக இந்தே தொடர்ந்து இருக்கிறது.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால், வீர சாவர்க்கர் என்ற ஒருவர் இந்துதுவம் என்ற ஒன்றை உருவாக்கிவிட்டார்.. ஆதலால் எல்லா மக்களும் இந்து என்று நம்ப வேண்டும் என்கிறீர்கள்.. அதற்கு ஜாதி ஒரு தடையாக இருக்கிறது… அதனால் சாதியம் என்று முத்திரை குத்தி, அதை அழிக்க பார்க்கிறீர்கள்..
  மறுபடியும் கேட்கிறேன்.. உங்களுக்கு கிறித்துவத்துக்கும் என்ன வேறுபாடு..

  அரவிந்தர், விவேகானந்தர், சாவர்க்கர் எல்லாம் இறந்து விட்டார்கள்.. ஆனால், அரவிந்தன் நீலகண்டன், தாணுலிங்க நாடார் போன்றவர்களுக்கு இங்கே பொது மேடையில் சவால் விடுகிறேன்.. இந்துத்துவத்தை பற்றி வாதம் செய்ய தயாரா? நான் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல தயாரா?

  /** இந்து என்று எல்லாரும் தன்னை நினைக்கவேண்டும் என்பது மாபெரும் கலாசார, பண்பாட்டு விழிப்புணர்வு. தான் பொந்துக்குள் இருப்பதைக் கூட அறிந்து கொள்ளாமல், சாதியத்தையும், பழமைவாதத்தையும் ஜிகினா பேப்பரைக் கூட ஒழுங்காக சுற்றத் தெரியாமல் எடுத்துப் பேசும் உங்களுடையது தான் “குறுகிய கிறுக்குத்தனமான கொள்கை”..
  **/

  இதுதான் நாம் இன்று வீழ்ந்து கொண்டிருப்பதற்கு அடிப்படை காரணம்.. எல்லாரும் இந்து என்று நினைப்பதினால் மட்டுமே ஒற்றுமை வரும் என்பது ஆப்பிராமிய மதங்களின் கொள்கை.. அவர்களே இந்த விஷயத்தில் தோற்று விட்டார்கள்.. பாகிஸ்தானியரும் வங்கசத்தவரும் இஸ்லாமியர்கள் என்று தங்களை நம்புகிறவர்கள்.. ஆனால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. அதே போல, பல உதாரணங்கள் சொல்லலாம்.. ஐரிஷ்காரர்களும் இங்க்லேண்ட் காரர்களும் தங்களை கிறித்துவர்கள் என்று நினைக்கிறவர்கள்.. ஆனால், ஒற்றுமையாக இருக்க முடியவில்லை..

  அப்படியிருந்தும் அவர்களின் தோல்வியடைந்த கொள்கையை இன்று வரை பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்..

  அதென்னங்க சாதியம்?

  கற்பு என்பது கூட பழமை வாதம்தான்.. தூக்கி எறிந்து விடலாமா?

  /** இன்று தேசமெங்கும் குழந்தைப் பருவத்திலேயே இந்துப் பண்பாட்டையும், விழுமியங்க்ளையும் கற்றுத் தருவதில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.
  **/

  முதலில் இந்து பண்பாடு என்ன என்பதை விளக்குங்கள்.. அதன் பின்பு மற்றவை பற்றி விவாதிக்கலாம்..

  /** விவேகானந்தா வித்யாலயா, சரஸ்வதி சிசு மந்திர் முதல் வன்வாசிப் பகுதிகளில் ஏகல் வித்யாலயா வரை உருவாக்கியது யார் நண்பரே??
  **/

  அவர்கள் நமது தர்மத்தை எந்த அளவிற்கு அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?

  /** கிருஷ்ண ஜெயந்திப் போட்டிகள் முதல் பள்ளிகளில் காயத்ரி மந்திரத்தையும், பஜனைப் பாடல்களையும், தேசபக்த வீரர்களின் கதைகளையும் யார் எடுத்துச் சென்றார்கள்? இதெல்லாம் பாரம்பரியம் இல்லையா? சமயக் கல்வி இல்லையா?
  **/

  இதெல்லாம் பாரம்பரியம்தான்.. ஆனால் யாருடைய பாரம்பரியம்? கிருஷ்ண ஜெயந்தி என்பது வைணவர்கள் கொண்டாடுவது.. அதை இந்துத்துவம் ஆட்டைய போட்டுட்டு (அதாங்க.. திருடிக்கிட்டு வருவது ) , இந்து கலாச்சாரமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. என்னமோ இந்துத்துவாதிகள் சொல்லித்தான் எல்லாரும் தெரிந்து கொண்டது போல சிலாகிக்கிறார்கள்.. 5000 வருடமாக யார் சொல்லி மக்கள் தெரிந்து கொண்டார்கள் நண்பரே?

  அதை விட என்ன கொடுமைனா, சைவ சமயத்த சேர்ந்தவர்கள், சைவ வழிபாட்டையும், சைவ விழாவையும் கொண்டாடுவார்கள்.. அவர்களிடம், கிருஷ்ண ஜெயந்தியை திணித்து, அவர்களுடைய பாரம்பரியத்தை கெடுத்து குட்டி சுவராக்கி வருகிறார்கள்.. அதே போல, சிவராத்திரி விழா சைவர்கள் கொண்டாடுவது.. அதை இந்து விழா என்று ஆட்டைய போட்டுட்டு, வைணவர்களை கொண்டாட வைப்பது.. இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு இந்து எழுச்சி என்று வேறு..

  இது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று யாராவது உணர்ந்ததுண்டா? சைவர்களும் வைணவர்களும் அவர்கள் சமயத்தின் மீது பிடிப்பு விட்டுப்போய், ஏதோ கடனுக்கு கொண்டாடுவது போலாகிவிட்டது.. ஆன்ம பலமும், தத்தம் வீரியமும் இழந்து பாரம்பரியத்தையும் இழந்து விட்டிருக்கிறார்கள்..

  இங்கிருக்கும் பல பிராமணர்களுக்கு தெரியும்.. அவர்களின் தாத்தா பாட்டி கடை பிடித்தது இந்து பாரம்பரியம் அல்ல என்பது.. சைவம் இல்லை வைணவ இல்லை ஸ்மார்த்த பாரம்பரியத்தைதான் கடைபிடித்திருப்பார்கள்.. இரண்டுக்கும் தனி தனி வாழ்க்கை முறை.. இரண்டையும் கலந்து எல்லாரும் எல்லாவற்றையும் கடை பிடிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு கிறித்துவ மிஷனரி, கிறித்துமஸ் கொண்டாட சொல்வதற்கும், ஒரு வைணவனை, சைவ பாரம்பரியத்தை கொண்டாட சொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

  ஒரு மக்களின் அடையாளத்தை மாற்றுவது என்பது எவ்வளவு கொடூரமானது என்பது எல்லாருக்கும் தெரியும்.. ஆயிரக்கணக்கான வருடமாக, நான் என ஜாதியின் அடையாளத்தையும், சமயத்தின் அடையாளத்தையும் (சைவ சமயத்தை சேர்ந்தவன்) கொண்டிருந்தேன்.. என்னிடம் வந்து, இந்து இந்து என்று சொல்லி, அடையாளத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

  மறுபடியும் கேட்கிறேன்.. கிறித்துவத்திற்கும், இந்துத்துவவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

  /** திருமுருக கிருபானந்த வாரியார், சுவாமி சின்மயானந்தர், சுவாமி சத்யஸ்வரூபானந்த கிரி, சுவாமி சித்பவானந்தர், உடுப்பி சுவாமி விஸ்வேஸ்வர தீர்த்தர் போன்ற மாபெரும் மகான்கள் இந்துத்துவ இயக்கங்களை முழுமையாக ஆசிர்வத்து தங்கள் பரிபூர்ண ஒத்துழைப்பையும் நல்கினார்கள் என்ற விவரமாவது தெரியுமா?
  **/

  சரி.. கிருபானந்த வாரியார், எந்த மதத்தை பரப்பினார்? இந்து இந்து என்று சொல்லிக் கொண்டிருந்தாரா? அவர் பெரும் முருக பக்தர்.. அவர் பரப்பியது எல்லாம் முருகனுடைய புகழ் . அவர் மேற்கொண்டது முருக வழிபாடு.. அவர் என்றைக்கு இந்து இந்து என்று சொல்லிக்கொண்டிருந்தார்.. அவர் பரப்பியது, ஆதி சங்கரரின் ஸ்கந்த மதத்தை.. அதில் ஒரு தெளிவு இருந்தது.. அதில் ஒரு பக்தி இருந்தது.. அதில் கும்பிடுவதற்கு முழுமுதற் கடவுளான முருகர் இருந்தார்.. முருகனை கும்பிடு என்று தெள்ளத்தெளிவாக சொன்னார்.. அதில் ஒரு ஆன்ம பலம் இருந்தது..
  ஆனால் இந்த இந்துதுவ வாதிகள் என்ன செய்தார்கள்.. எந்த கடவுளையும் பிரதானப்படுத்தவில்லை.. எந்த பாரம்பரியமும் இல்லை.. எந்த ஆன்ம பலமும் இல்லை.. வெறும் இந்து என்ற வெத்து அடையாளத்தை கண்மூடித்தனமாக பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்..

 35. @சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  /** ஐயா செந்திலாரே ஹிந்துமதத்தை கிறித்தவம் போல் இஸ்லாம் போல மாற்ற முயல்வது ஹிந்துத்துவர்கள் அல்ல நீங்கள்தான். கட்டாயப்படுத்தி சுலோகங்கள் தத்துங்கள் பிரார்த்தனைகள் ஆகியவற்றை குழந்தைகள் மேல் திணிப்பது நமது பாரதீய பாரம்பரியம் அன்று ஆபிராகாமியமே அது என்று உணருங்கள்.
  **/

  தெளிவாகத்தான் இருக்கிறீர்களா? குழந்தைகளுக்கு தேவாரம் திருவாசகம் சொல்லிக் கொடுத்த பாட வையுங்கள் என்றால், கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறீர்கள்.. அப்போ, உங்கள் குழந்தை யேசுவை கும்பிட்டாலும் அப்படியே விட்டு விடுங்கள்..

  /** தனது பாரம்பரியத்தில் வேரோடி நிலைத்திருத்தலே ஹிந்துத்துவம். **/

  தெளிவு இல்லாத ஒரு அடையாளத்திற்கு அப்படி வேண்டுமானாலும் வியாக்யானம் கொடுக்கலாம்.. நான் கூடத்தான் சொல்வேன்.. ஏசுவையும், அல்லாவையும் கும்பிடுவது கூடத்தான் இந்துதுவம் என்று.. யார் வந்து கேட்கப் போகிறார்கள்.. இந்து என்பது, இஸ்லாம், கிறித்துவம், யூதம், பார்சி அல்லாத அனைத்தும், என்பது உச்ச நீதிமன்ற விளக்கம்..
  சுய்சார்பில்லாத அடையாளம்தான் இந்து.. அதனால்தான் எல்ல குழப்பமும்..

  /** ஹிந்து என்பது ஸ்ரீ சங்கராச்சாரியார் ஒருங்கிணைத்த வைதீக சமயங்கள் மட்டுமன்று அவைதீக சமயங்களான பௌத்தமும் ஜைனமும் கூடத்தான். **/

  இந்த மாதிரி ஒரு பித்துகுளித்தனத்த பார்த்ததில்லை.. சனாதன தர்மத்திற்கு எதிரான சமணத்தையும், பௌத்தத்தையும் சங்கராச்சாரியார் எதிர்த்து விரட்டியது வரலாறு.. ஞான சம்பந்தர், சமணர்களை, “வெஞ்சொல் வீரர்கள், கஞ்சி மண்டையர்கள்” என்று வசை பாடி, தன்னை கொல்ல வந்த சமணர்களின் கொடிய சூழ்ச்சியை எத்ர்த்து நின்று பாண்டிய நாட்டை விட்டு துரத்தியடித்தவர்.. தமிழ் இலக்கியத்திலேயே அக மதம், புற மதம் என்று தெளிவாக வகுத்திருக்கிறார்கள்..

  இப்படி எதிரெதிர் சம்யங்களை எல்லாம், ஒன்று சேர்த்து, இந்து என்ற அடையாளத்தை குத்தி, ஒரு மசால மிக்ஸ் போல குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.. கொடுமையிலும் கொடுமை..

  விட்டா, நாய் பேய், புழு பூச்சியேல்லாம் இந்து என்று சொல்வீர்கள் போல..

  /** அது எல்லாவித குலதெய்வ பழங்குடி மரபுகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பாதுகாக்க காப்பாற்ற முயல்வது. ஆபிராகாமியம் இவற்றை வேரோடு அழிக்க முயல்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
  **/

  இது இன்னொரு பித்துக்குளித்தனம்.. ஆப்ரகாமிய மதங்களுக்கு, ஒர் மத்திய அமைப்பும் அதிகார மையமும் இருக்கிறது.. அவர்களுக்கு எதை சேர்க்கனும், எதை சேர்க்ககூடாது என்று வழிகாட்ட (நல்லதோ கெட்டதோ) ஒரு புனித நூல் இருக்கிறது.. எல்லாரையும் ஒருங்கிணைக்க, ஒரு கடவுள் அல்லது கடவுளின் தூதர் இருக்கிறார்…

  ஆனால், இந்த பொந்துத்துவதற்கு ஏதாவது ஒரு அமைப்பு முறை இருக்கிறதஒ.. இல்லை அதிகார மையம் இருக்கிறதா? இல்லை ஏதாவது புனித நூல் இருக்கிறதா?
  அப்புறம் எப்படி இவைகள் விலக்கவம், சேர்க்கவும் முடியும்.. இல்லை, எதை சேர்க்கனும், எதை விலக்கனம்னு ஏதாவது வழிகாட்டுதல் இருக்கிறதா? சும்மா, பார்க்கிறதையெல்லாம் இந்துமதத்த சேர்ந்ததுன்னு சொல்றது சிறுபிள்ளைதனமா இருக்கு..

 36. திரு கொழும்பு தமிழன்,

  /** பாரதம் தாண்டியும் இலங்கை,இங்கிலாந்து,பிரான்ஸ்,மலேசியா போன்ற நாடுகளில் சுவாமி ஊர்வலம் நடப்பதும்,விரதங்கள் அனுட்டிப்பதும்,பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதும் தார்பரியம்,பாரம்பரியம் இவற்றில் அடங்காதவைகளா
  **/

  இங்கு சில பேர் புத்த மதமும் இந்துவோடு சேர்ந்ததுதான் என்று கூப்பாடு போடுகிறார்களே.. அப்புறம் அங்கு ஏன் புத்த பிட்சுகள் உங்களை சேர்த்துக் கொள்ளவில்லை.. காரணம் உங்களோட பருப்பு அங்கே வேகவில்லை.. அங்குள்ள புத்த மதத்தவர்கள் தங்களை தனியாக அடையாளப்படுத்திவிட்டார்கள்..

  அதில்லாமல், இலங்கையில், சைவ வழிபாடும், முருக வழிபாடும்தான் பிரதானம்.. சாதாரண மக்கள் இந்து கோயில் என்று போவதில்லை.. முருகன் கோயில், பிள்ளையார் கொயில், சிவன் கோயில் என்று தெளிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.. இங்கிருக்கும் இந்துதுவ வாதிகள், அங்கேயும் போய், மசால மிக்ஸ் போட முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன!!! புத்த மதம் மட்டும் ஒத்து வரவில்லை..

 37. திரு கொழும்பு தமிழன்,

  /** @செந்தில்
  குலதெய்வ வழிபாடு இன்றி எந்த ஹிந்து குடும்பமும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள் திரு.செந்தில்
  **/

  குலமும் கோத்திரமும் தான் ஒரு ஜாதியின் அம்சம்.. ஜாதியை ஒழிக்க வேண்டும்னு ஒரு பக்கம் கத்திக்கிட்டு, இன்னொரு பக்கம், குல தெய்வ வழிபாடு இன்று அமையாதுன்னு சொல்றிங்க.. ஒரு குலத்த அழிச்சு எப்படி குல தெய்வத்த நிலை நிறுத்த முடியும் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

 38. @sarang

  /** அதில் ஹி என்பது ஹிமாலயத்தையும், இந்து என்பது இந்து மகா சமுத்திரத்தையும் குறிக்கும் – இப்படி பறந்து விரிந்த பாரத தேசத்தில் உருவான தர்மமே ஹிந்து தர்மம் – **/

  அப்படிங்க இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க முடியுது? தர்மம் என்ற வார்த்தைக்கு இதுவரை யாராலும் விளக்கம் கொடுக்க முடியல.. முடிஞ்சா நீங்க தர்மம்னா என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

  /** ஹிந்து என்ற சொல்லால் மட்டுமே அகண்ட பாரதத்தின் தர்மத்தை குறிக்க முடியம் – **/
  பல சங்க ஆளுங்களை இப்படி சொல்லியதற்காக ஓட்டி எடுத்துவிட்டோம்.. பொது விவாதம் ஆகையால், இங்கு வேண்டாம் என்று நினைக்கிறேன்..

  பாரத வர்ஷம், பரத கண்டம், மற்றும் 56 பண்டைய தேசங்கள்.. இவைகளெல்லாம் என்ன ஆனது?

  /** சனதான தர்மம் என்றால் அது எங்கு தோடியது என்பதற்கான பதில் இல்லாமல் பொய் விடுகிறது. **/

  சனாதன தர்மம் என்றால் என்ன? இதுக்கும் இதுவரை யாருமே தெளிவான விளக்கம் தரவில்லை..

  /** செந்தில் என்பவர் ஹிந்துவில் வாழாமல் பொந்தில் வாழ விரும்பினால் நமக்கு பிரச்சனையை இல்லை. **/
  என்னை பொருத்த வரையில், இந்துவும் பொந்துவும் ஒன்றுதான்.. எனக்கென்று காலம் காலமாக ஒரு அடையாளமும் பாரம்பரியமும் இருக்கிறது.. அதுவே போதும்..

  /** சைவம், வைணவம், சாக்தம், வேதாந்தம் , சனாதன தர்மம் போன்ற எந்த சொல்லும் இந்திய ஞான மரபை ஒரு சேர குறிக்காது – அதை ஹிந்து என்ற ஒரு அற்புத சொல்லால் மட்டுமே குறிக்க முடியும்.
  **/

  அதான் சைவம், வைணவம், சாக்தம்னு தனி தனி பேரே இருக்கிறதே.. அதை வைத்தே குறிக்க வேண்டியதுதானே? எதுக்கு பொய், ஒரு வெள்ளக்காரன், வைத்த பேயரை தூக்கி பிடிக்க வேண்டும்.. நான் சைவ மதத்த சேந்தவன், என்று சொல்வதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்க போகுது..

  /** தீபாவளி வாழ்த்துக்கள் – அகங்காரம் என்னும் அஞானத்தின் ஸ்வரூபமான ராவணனை கொன்று ராமன் இந்து மகா சமுத்திரத்திலிருந்து ஹிமாலயத்தின் அருகில் உள்ள அயோத்தி திரும்பிய நாள் தீபாவளி நாள்.
  **/

  அகங்காரத்துக்கும் , அஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்.. ராவணன், நான்கு வேதங்களையும் படித்த பண்டிதன்.. அவனை, சாத்தான் அளவுக்கு கேவலப்படுத்திகிறீர்கள்..

 39. //////கிருஷ்ண ஜெயந்தி என்பது வைணவர்கள் கொண்டாடுவது.. அதை இந்துத்துவம் ஆட்டைய போட்டுட்டு (அதாங்க.. திருடிக்கிட்டு வருவது ) , இந்து கலாச்சாரமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. என்னமோ இந்துத்துவாதிகள் சொல்லித்தான் எல்லாரும் தெரிந்து கொண்டது போல சிலாகிக்கிறார்கள்.. 5000 வருடமாக யார் சொல்லி மக்கள் தெரிந்து கொண்டார்கள் நண்பரே?///////

  ஐயா கண்ணனிடம் கீதை உபதேசம் பெற்ற அர்ஜுனன் கூட சிவனை நோக்கி தவம் இருந்து பாசுபதம் பெற்றான் என்பது மகாபாரதம் கூறும் நிகழ்வு.

  கிருஷ்ண கதையில் கோபியர் அனைவரும் துர்கையிடம் நோன்பு நோற்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

  ராமர் வழிபட்ட சிவலிங்கம் என்று ராமேஸ்வர ஈசன் போற்ற படுகிறார்.
  இந்து என்ற பெயர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள், இவை எல்லா வழிபாடுகளிலும் ஒரு இணைப்பு எப்போதும் இருந்திருக்கிறது. அவரவர் விருப்பிற்கு அவரவர் வழிபட உரிமை இருப்பதும் உண்மை ஆனால் ஓவொன்றும் ஒவோர் மதம் என்ற தங்களின் வாதம் சரி அல்ல
  விஷ்ணு வழிபட்ட சிவ தளங்களும் சில உள்ளன சிவ ஆலயங்கள் எல்லாவற்றிலும் ஒரு விஷ்ணு கோஷ்டத்தில் இருப்பதும். தவறாமல் எல்லா முருக ஆலயங்களும் ஒரு சிவ ஆலயத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது . ஒவ்வோர் வழிப்பாட்டு முறையும் ஒரு மதம் என்று நீங்கள் நிறுவ முயல வேண்டாம்.

  /////அகங்காரத்துக்கும் , அஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்.. ராவணன், நான்கு வேதங்களையும் படித்த பண்டிதன்.. அவனை, சாத்தான் அளவுக்கு கேவலப்படுத்திகிறீர்கள்//////
  வேதம் படித்த ஞானி என்ற வரிகளை ஏற்கிறேன் ஆனால் சாத்தான் அளவுக்கு கேவலமானவன் என்பதில் சிறிதும் மாற்று கருத்தில்லை. மேலும் அகங்காரம் வந்து விட்டால் ஞானம் போய் அஞ்ஞானம் வருவது இயல்பே. அகங்காரம் என்ற ராஜச குணம்,தமோ குணத்தில் விரைவில் வீழ்ந்து அஞ்ஞானத்தை கொடுத்துவிடும்.
  படித்தவர் கூட கயவர்களில் இருப்பார் என்பதால் தான் பாரதி படித்தவன் சூது செய்தால் அய்யோ என போவான் என்று கூறினான்.
  படித்தவன் செய்யும் தவறுக்கு அக்கால சட்டப்படி படிக்காதவனை விட அதிக தண்டனை வழங்கப்பட்டு வந்தது.

 40. /////குலமும் கோத்திரமும் தான் ஒரு ஜாதியின் அம்சம்.. ஜாதியை ஒழிக்க வேண்டும்னு ஒரு பக்கம் கத்திக்கிட்டு, இன்னொரு பக்கம், குல தெய்வ வழிபாடு இன்று அமையாதுன்னு சொல்றிங்க.. ஒரு குலத்த அழிச்சு எப்படி குல தெய்வத்த நிலை நிறுத்த முடியும் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்/////
  சாமி குல தெய்வம் என்பது பல சாதியினருக்கு கூட ஒரே தெய்வமாக இருப்பது சர்வ சாதாரணம். ஐயரும் அய்யர் அல்லதா ஒருவரும் ஒரே குல தெய்வத்தை கொண்டுள்ளது கண் கூடு. நீங்க குல தெய்வ வழி பாடு தவறு என்கிறீரா? சரி என்கிறீரா? இஷ்ட தெய்வ வழிபாடு அவரவர் விருப்பம். அதற்காக ஒரு ஆப்ரஹமிய தெய்வம் இஷ்ட தெய்வம் ஆக இருக்க கூடாத என்று நீங்கள் கேட்டால் நீங்கள் நிச்சயமாக ஜோ அமலன் ராய் பெர்னாண்டஸ் ஆகத்தான் இருப்பீர்கள்

 41. ஸ்ரீ செந்தில்
  தெளிவாகத்தான் இருக்கிறீர்களா? குழந்தைகளுக்கு தேவாரம் திருவாசகம் சொல்லிக் கொடுத்த பாட வையுங்கள் என்றால், கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறீர்கள்.. அப்போ, உங்கள் குழந்தை யேசுவை கும்பிட்டாலும் அப்படியே விட்டு விடுங்கள்..
  ஐயா செந்தில் முதலில் நமக்கு தேவாரம் திருவாசகம் தெரியவேண்டும் நாம் அவற்றின் பெருமை அறியவேண்டும். தேவாராம் திருவாசகம் நாள்தோரும் சொல்லும் சைவன் என்றாலும் அதை எனது தந்தையார் சொல்லிக்கொடுக்கவில்லை. ஏன் என்றால் விவசாயியான அவர் படிக்கவில்லை. பக்தி, ஈடுபாடு காரணமாக அடியேன் தெரிந்து படித்தேன். இன்னும் எனது குழந்தைகளுக்கு அவற்றை திணிக்கவில்லை. நான் ஓதுவதைக்கேட்டு அவர்கள் கற்றுக்கொள்வார்கள். எனது குழந்தைகளில் ஒருத்தி திருமாலை வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன். கிறித்தவத்தை இஸ்லாமை ஏற்றுக்கொள்வதில்லை.அவை வேறு நமது சமயம் பண்பாடு வேறென்று எனது குழந்தைகளுக்கு சொல்வேன். ஆனாலும் கடவுளை நம்பவேண்டும், திரு நீறு பூசவேண்டும் என்றோ திருவாசகம் ஓதவேண்டும் என்றோ கட்டாயப்படுத்தமாட்டேன்.அடியேனைப் பொறுத்தவரையில் இது தான் ஹிந்துத்துவம்.

  ஸ்ரீ செந்தில்
  இப்படி எதிரெதிர் சம்யங்களை எல்லாம், ஒன்று சேர்த்து, இந்து என்ற அடையாளத்தை குத்தி, ஒரு மசால மிக்ஸ் போல குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.. கொடுமையிலும் கொடுமை..
  விட்டா, நாய் பேய், புழு பூச்சியேல்லாம் இந்து என்று சொல்வீர்கள் போல.

  ஆம் மசாலாதான் அதாவது பன்மைத்தன்மை. எல்லாவற்றையும் ஒன்றாக்கி விடுவது ஹிந்துத்துவம் அன்று ஆபிராகாமிய்ம. இப்பாரத கண்டத்தில் உதித்த சமயங்களிடையே வேறுபாடுகள் காணப்படினும் ஒற்றுமைகள் நிறைய உண்டு.
  ஆம்ஆம் நாய், பேய், புழு, பூச்சி எல்லாம் ஆன்மாகள் அவற்றிற்கும் பிறவி உண்டு எனபது ஒரு மகத்தான ஒற்றுமை. அவையும் இறைவனை வழிபடும் என்பது சைவம்.
  ஸ்ரீ செந்தில்
  ஆனால், இந்த பொந்துத்துவதற்கு ஏதாவது ஒரு அமைப்பு முறை இருக்கிறதஒ.. இல்லை அதிகார மையம் இருக்கிறதா? இல்லை ஏதாவது புனித நூல் இருக்கிறதா?
  அப்புறம் எப்படி இவைகள் விலக்கவம், சேர்க்கவும் முடியும்.. இல்லை, எதை சேர்க்கனும், எதை விலக்கனம்னு ஏதாவது வழிகாட்டுதல் இருக்கிறதா? சும்மா, பார்க்கிறதையெல்லாம் இந்துமதத்த சேர்ந்ததுன்னு சொல்றது சிறுபிள்ளைதனமா இருக்கு.
  ஹிந்து என்பதற்கு வரையறை பாரத தேசத்தில் தோன்றிய பண்பாடு என்பது மட்டுமே. ஒரே கடவுள், வேதனூல், ஒரு தூதுவர்(வழிகாட்டி,) ஒரே அமைப்பு என்பதெல்லாம் ஆபிராகாமியம். அந்த இலக்கணம் யூதம், கிறித்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய செமிட்டிக் மதங்களுக்கு மட்டுமே பொருந்தும். வேறு எதற்கும் பொருந்த்தாது. அந்த வகையில் நீங்கள் சொல்லுகிற வைதீகமான ஆறு சமயனங்களும் கூட மதங்கள் அல்ல. சைவத்தில் சைவசித்தாந்தம், வீரசைவம், காசுமீரசைவம், ஆந்திரத்து சிவாத்வைத சைவம் என்று பலவகை உண்டு. வேதவழியில் வாராத காபாலிகமும், காளாமுகம், பாசுபதம் ஆகியவையும் சைவம் தான். இவ்வொவ்வொன்றும் தனித்தனி மதமாகக் கருதவேண்டும். அப்படியென்றால் இந்த நாட்டில் இஸ்லாம் தான் பெரும்பான்மையினரின் மதமாகும். அப்புறம் அனைவரையும் தமது ஆட்சியில் கொண்டுவந்து ஜிசியா வரிவிதித்து. கட்டாய மதமாற்றமும் செய்வார்கள். இது வேண்டுமா. சிந்தியுங்கள் பொந்தில் இருப்பது நாங்களா நீங்களா.

 42. ஸ்ரீ செந்தில்
  குலமும் கோத்திரமும் தான் ஒரு ஜாதியின் அம்சம்.. ஜாதியை ஒழிக்க வேண்டும்னு ஒரு பக்கம் கத்திக்கிட்டு, இன்னொரு பக்கம், குல தெய்வ வழிபாடு இன்று அமையாதுன்னு சொல்றிங்க.. ஒரு குலத்த அழிச்சு எப்படி குல தெய்வத்த நிலை நிறுத்த முடியும் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

  ஜாதி அழியவேண்டும் என்பது பெரியாரியம். வர்ணங்கள் ஒழியவேண்டும் என்பது அம்பேத்கரியம். சாதி இல்லை வர்கம் மட்டுமே மெய் என்பது மார்க்சீயம். ஜாதி அடிப்படையில் மனிதர் களை தாழ்வாக கருதுவதை நிராகரிப்பது ஹிந்துத்துவம்.
  ஹிந்துத்துவம் ஜாதியை நிராகரிக்கிறது என்பதற்கு ஏதாகிலும் ஆதாரம் காட்ட இயலுமா.
  ஜாதி, பழங்குடிகளைப்பற்றி கடந்த இருபது ஆண்டுகளாக. பழங்குடிகள், ஜாதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஆகியோரின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு அடியேனுக்கு உண்டு. அந்த வகையில் சொல்கிறேன். மெய்யாகிலும் இன்று காணப்படும் ஜாதிகள் அனைத்தும் பழங்குடிகள் தான். இன்னும் சொல்லப் போனால் உப ஜாதிகள் ஒவ்வொன்றும் தனி பழங்குடிகள் தான். இந்த அகமணம் என்பது பழங்குடிக்கூறு. குலம் கோத்திரம் என்பவையும் அதற்காகத்தான்.

 43. செந்தில்

  தர்மம் என்பது புத்திசாலிகளின் நிலைப்பாடு அதை பொறுத்து அவர்கள் செய்யும் செயல் – ஹிந்து தர்மம் என்று புத்திசாலிகளே அழைக்கிறார்கள்

  உங்களது மற்ற கேள்விகளும் வாக்கியங்களும் பயனற்றவைகள் – பதில் சொல்லி ப்ரோயோஜனமில்லை – முதல் வரியை திருப்பி திருப்பி படித்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

  அகன்கரத்திர்க்கும் அஞானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள் – இருவரும் இணை பிரியா புருஷன் பொண்டாட்டி உறவு உள்ளது

  ராவணன் நாலு வேதத்தையும் படத்து இருக்கவே முடியாது – ராவணன் காலத்தில் த்ரயீ வித்யா என்ற மூன்று தான் – அதர்வண ரிஷியால் எழுதப்பட்ட அதர்வண வேதம் வியாசர் காலத்தில் தான் வேதங்களோடு சேர்க்கப்பட்டது
  (நீங்க சொல்லும் நமது தர்மத்தை பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் )

  ராவணன் பண்டிதன் என்றால் நீங்களும் பண்டிதரே ஹையா – பண்டிதன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று பாருங்கள் – புத்திசாலி என்று அர்த்தம் அதாவது தர்மம் தெரிந்தவன் என்று அர்த்தம் – வேதத்தை படித்தால் புத்திசாலி ஆகலாம் என்று எனக்கு இதுவரைக்கும் தெரியாது

  பாரத ராஜாவிற்கு அப்புறமே பாரதம் பாடம் என்று ஆனது – அதற்க்கு முன்னாள் இந்த நாட்டின் பெயர் என்ன – ஜம்பூ த்வீபத்தில் ஒரு பகுதி அவ்வளதானா.

  சங்கத்தவர்கள் பாரத மாதா என்று தான் அழைக்கிறார்கள் – இந்தியா என்று நாட்டையும் மதத்தையும் ஏற்கிறார்கள். – நீங்கள் வேண்டுமானால் பாரத தர்மம் என்று கூரிகிக் கொண்டு போங்கள் – ஒரு பிரச்சனையும் இல்லை.

  உங்களை விட சங்கத்தவர்கள் பாரத தர்மத்தை பன் மடங்கு ஆச்சரணம் செய்கிறார்கள் – பேசி பேசி தொண்டையை பாழ் செய்து கொள்ளாதீர்கள் – சங்கத்தவர்கள் போல ஏதாவது நாட்டுக்கு செய்யுங்கள். இந்த ஹிந்து சனாதநிஸ்ட் வீர சைவன் , வீர வைஷ்ணவன் என்று மார் தட்டி சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை

  சனாதா தர்மத்தின் ஒரு பங்கான சாங்க்ய மிமாம்சத்தை விட பௌத்தம் ஜைனம் ஒன்றும் மோசம் இல்லை

  சங்கராச்சாரியார் புத்தத்தை விட சான்க்யத்தை தான் மிக அதிகமாக எதிர்த்துள்ளார் – என்ன பெயர் என்று ஒருபுறம் இருக்கட்டும் – விஷயத்தை முதில் தெரிந்து கொள்ளுங்கள். சங்கராச்சாரியாரால் பௌத்தம் மாண்டது என்பதற்கு ஒரு சான்றும் இல்லை (அவரது பாஷ்யத்தில் கூட).

  //
  ஆனால், இந்த பொந்துத்துவதற்கு ஏதாவது ஒரு அமைப்பு முறை இருக்கிறதஒ.. இல்லை அதிகார மையம் இருக்கிறதா? இல்லை ஏதாவது புனித நூல் இருக்கிறதா?
  அப்புறம் எப்படி இவைகள் விலக்கவம், சேர்க்கவும் முடியும்.. இல்லை, எதை சேர்க்கனும், எதை விலக்கனம்னு ஏதாவது வழிகாட்டுதல் இருக்கிறதா? சும்மா, பார்க்கிறதையெல்லாம் இந்துமதத்த சேர்ந்ததுன்னு சொல்றது சிறுபிள்ளைதனமா இருக்கு
  //

  வேத மதத்தில் இப்படி வரையறை இல்லாமல் சேர்க்கப்பட்டவை தான் ஷேன் மதங்களும். சாங்க்ய யோகா, மிமாம்ச, நியாய வைசேசிக மதங்களும் இப்படிதான், நியாய சாஸ்திரம் படிக்காமல் இன்று யாரும் வேதாந்தம் படிப்பதில்லை – போச்சு வைதீக தர்மத்திற்கு அபசாரம் வந்து விட்டது போங்கள்

  அதென்னது ஆகம: என்றால் வந்து சேர்ந்தது என்று அர்த்தமாமே

 44. //நீங்கள் எந்த மத சம்பிரதாயத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதையும் தேடுங்கள்.. அதெல்லாவற்றுக்கும் முன்னால், உங்கள் குல தெய்வத்தை தேடி வழிபடுங்கள்.. முதலில் குலதெய்வ வழிபாடு.. பின்பு, குடும்ப ஜாதி சம்பிரதாயம்.. பின்பு, சைவம், வைணவம் போன்ற மத சம்பிரதாயங்கள்.. இவைதான் நமது பாரதிய தர்மம்..//

  அய்யா செந்தில்,
  நாங்களா குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி பேசினோம் ?????தாங்கள் ஹிந்துக்கள் சமய பற்று அற்றவர்கள் என கூற முற்படும் போது குலதெய்வ வழிபாட்டை வம்புக்கு இழுத்து விட்டு இப்போது ஜாதி பேதம் என சப்பை கட்டு கட்டுகிரிர்களே ??????
  புத்த சமயம் தற்போது 14 பிரிவுகளாக பிளவடைந்துள்ளது,இலங்கையில் மகாயான பெளத்த மதம் பின்பற்றபடுகிறது….விகாரையினுள் பிள்ளையார்,முருகன்,விஸ்ணு,அம்மன் தெய்வங்கள் இருப்பதை

  http://www.uktamilnews.com/index.php/archives/27855
  பார்க்கவும் ..
  புத்த பிட்சுக்கள் ஒட்டுமொத்த சிங்களவர்களின் பிரதிநிதிகள் அல்லர்..இலங்கையின் பூர்வகுடிகள் அவர்கள் என்றும் இயக்கர்,நாகர் போன்ற இலங்கையின் தமிழ் பூர்வ குடிகளை தமிழ்நாட்டு நாடோடிகள் என கூறும் மகாவம்சம் ஏந்திய மூடர்கள்…மற்றும் அங்கு கிறிஸ்தவ சிங்களவர்களும் உண்டு.,அவர்களும் அல்லவா எம்மை ஏற்று கொள்ளவில்லை …….இங்கு புரையோடி போய் இருப்பது இனவாதமே அன்றி மதவாதம் அல்ல ……தமிழன் அழிக்கபடவேண்டுமே அன்றி ஹிந்துத்துவம் அல்ல !!!!!
  முருகன் கோவில் வலிபாடிட்கும் ஹிந்து கோவில் வழிபாடிட்கும் என்ன வித்தியாசம் என கூற முடியுமா ????இவ்வளவிற்கும் கதிர்காமம் முருகன் கோவில் அமைந்து இருப்பது தனி-சிங்கள பிரதேசத்தில் ….பூசகர்களும் பௌத்தர்களே …பௌர்ணமி தினத்தில் சைவ உணவு,பசுவதை தடுப்பு என அணைத்து ஹிந்து மத அம்சங்களும் பௌத்தத்திலும் உள்ளன.இப்போதாவது புரிகிறதா பௌத்தம் ஹிந்து சமய வழிதோன்றல் என்று?
  குலதெய்வம் என்பது எம் ஆதிகுடிகளால் அவரவர் பூர்விகபிரதேசங்களில் தம் இறைவனாகிய பரம்பொருளை வழிபடுவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆண்டாண்டுகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருவதை காணலாம் …இதில் ஏன் ஜாதியை குழப்புகிரிர் ??????அமெரிக்காவோ ஐரோபாவோ …புலம்பெயர்ந்த ஹிந்துக்கள் கூட குலதெய்வ வழிபாடிட்காக தாயகம் திரும்பி ஒன்றுகூடும் நற்பண்பு உம கண்களக்கு தெரியவில்லை எனின் இதற்கு மேல் எம் பெருமானாகிய சிவபெருமானே உம்மை ஈடேற்ற வேண்டும் …..

 45. @ செந்தில்

  தெளிவாதான் இருக்கீங்களா ???
  குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என கூறிய தாங்கள் திடீர் என ஜாதி மதம் என பேசும் மாயவித்தை தான் என்ன \??

  புத்த சமயம் ஹிந்து சமயத்தின் தழுவல் என்பதற்கு இவ் 16 வயது சிறுவன் அறிந்த சில விடயங்கள்
  1 .பௌர்ணமி தினத்தில் பௌத்தர்கள் மாமிசம் உண்பது இல்லை
  2 .பசுவதையை எதிர்க்கும் பண்பு பௌத்தத்தில் உண்டு
  3 .விகாரையில் பிள்ளையார்,முருகன்,விஸ்ணு,அம்மன் சந்நிதிகள் உண்டு.
  4 .விஷேட நாட்களில் அன்னதானம் இடம் பெறுவது வழக்கம் (கவனிக்க:ஆபிரஹமிய மதங்களில் நன் அறிந்த வகையில் இல்லை)
  5 .ஜாதகம்,ஜோசியம்,வாஸ்து,நல்லநேரம் பார்ப்பது அனைத்தும் இலங்கையின் மகாயான பௌத்தத்தில் உண்டு……

  நீங்கள் கேக்கலாம் அப்போது ஏன் இலங்கையில் பிரச்சினை என ???????இலங்கையில் இருப்பது தமிழர்-சிங்களவர் பிரச்சினையே அன்றி பெளத்த-ஹிந்து பிரச்சினை அல்ல …பிட்சுக்கள் காந்தி வழிவந்தோர் என யாரும் தமக்கு கூறினார்களோ ????இலங்கையின் உண்மையான பூர்வகுடிகளான இயக்கர்,நாகர் ஆகிய வாடா பகுதி தமிழர்களையே தமிழ் நாட்டில் இருந்து வந்தோர் என புரட்டு கூறும் மகாவம்சம் எனும் பொய் நூல் கூறுவதையே அவர்கள் ஏற்பர்…… புத்த பிட்சுக்கள் சிங்களவர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் அல்லர்….மற்றும் இன்று பெளத்த மதம் தன் உண்மையான அடையாளத்தை இழந்து 14 பிரிவுகளாக பிரிந்து மகாயானம்,வஜ்ரயானம் என நிற்கின்றது…ஹிந்து ஜாதியால் பிரிந்து நின்றாலும் அதை அண்மைய காலங்களில் சற்றே தள்ளி வைக்கும் மனநிலை மாற்றத்தையும் அடைந்து வருகிறான் மற்றும் ஜாதி எது ஆயினும் கடவுள் ஒன்றே கோவில் ஒன்றே

  கீதை கூறும் நால்வகை மனிதர்களும் அவரின் குணஅடிப்படையில் தான் பிரிக்கபட்ட்னர் அன்றி அவரின் பிறப்பு அல்லது நிறத்தில் அல்ல …

 46. செந்தில்

  //அரவிந்தர், விவேகானந்தர், சாவர்க்கர் எல்லாம் இறந்து விட்டார்கள்.. ஆனால், அரவிந்தன் நீலகண்டன், தாணுலிங்க நாடார் போன்றவர்களுக்கு இங்கே பொது மேடையில் சவால் விடுகிறேன்.. இந்துத்துவத்தை பற்றி வாதம் செய்ய தயாரா? நான் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல தயாரா?

  //

  🙂 உடனே மேடை மைக் செட் ரெடி பண்ணுங்கள் – அரவிந்தன் இந்த வாரம் நாகர்கோவிலில் தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன் – அவரை நேர பாத்து விஷயத்தின் முக்கியத்துவத்தையும் அவர் யாரை எதிர்கொண்டு இருக்கிறார் அதில் கொஞ்சம் இடறினால் கூட எவ்வளவு ஆபத்து என்பதையும் தெளிவாக சொல்லியே கூட்டி வருகிறேன். நானும் கூடவே ஒரு நாலு கொயர் நோட்டு வாங்கி வருகிறேன் – நீங்கள் சொல்லும் கேள்விகளை குறித்து வைத்து கொள்ளத்தான்.

 47. செந்தில்

  எதோ சைவர்கள் ஒரு தனி பிரிவு போலவும் வைணவர்கள் ஒரு தனி பிரிவு போலவும் லேந்தியா பேசறீங்க – வேத, வேதாந்த, ஆகம மதங்களின் ஒருங்கிணைப்பு தான் ஹிந்து மதம் என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை – இது நடப்பில் இருந்த ஒரு வழக்கு தானே.

  ஆகமங்கள் இல்லாமல் சிவ வைஷ்ணவ சாக்த மதங்கள் எங்கே ? வேதங்கள் இல்லாமல் கோவில்கள் எங்கே ? வேடத்தையும் ஆகமத்தையும் யார் ஒருங்கினைதார்கள் ? இவை இரண்டும் முரண்பாடுகள் கொண்ட வழிமுறைகள் என்பதாவது நீங்கள் அறிவீர்களா? அதை ஒருங்கிணைத்தவர்கள் புத்திசாலிகள் என்பதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

  சங்கராசார்யார் ஷன் மதங்களை ஸ்தாபித்தார் என்று நீங்களே சொல்கிறீர்கள்

  அவர் அடிப்படையில் அத்வைத வாதி – அவர் ஏன் ஷன் மதங்களை ஸ்தாபித்து இவை எல்லாம் ஒரு மத்தத்தின் பல வடிவங்களே என்று சொல்ல வேண்டும் – அதையே கொஞ்ச நாள் கழித்து வீர சார்வாகர் செய்தால் ஏன் கத்துகிறீர்கள்

  சிவன் விஷ்ணு, முருகன் இவர்கள் எல்லாம் எதோ பைபிள் கதை பாத்திரங்கள் அல்லவே – வேதம் சொல்லும் முப்பத்தி முக்கோடி (, 33000, 3300, 12, 6, 3, 1.5 1 )கடவுள்களுள் அடக்கம் – கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாடும் எந்த வைணவனும் சிவன் இல்லை என்று சொல்வதில்லையே.

  க்ரூஷ்ண ஜயந்தியும் சிவ ராத்திரியும் வேதம் சொல்லும் கடவுல்கள்கலின் பன்டிகை என்று தான் நான் நினைக்கிறேன்Ÿ. இந்த அடிப்படை உன்மையை மரந்து இந்த கர்ம பூமியில் தோன்றிய தர்மங்களை ஒருவருக்கொருவர் எட்டி உதைத்து கொண்டிருந்த போது ஒருங்கினைப்பதே மார்கமே ஹிந்து மதம்

  சன்னொ மித்ர சம் வருண சன்னொ பவத் வர்யமா சன்ன இந்த்ரொ ப்ரஹஸ்பதிஹி சன்னொ விஷ்னு ருருக்க்ரமா –நமொ ப்ரஹ்ம்மனே நமஸ்தே வாயு

  என்று ஒரு சேர தானே வேதம் பூராவும் கோஷனம் வருகிறது

  வேதத்தை யாரும் தங்கள் பாட்டன் வீட்டு சொத்து என்று சொல்லிக்கொண்டு சௌன்டு விட முடியாது – ஹிந்து மதம் என்று இன்று உள்ளது வேத வேதாந்த மதங்கலில் சொல்லப் பட்டுல்லதை ஒரு விதத்திலும் திரித்து மாற்றி அமைக்கப் படவில்லை – மாராக ஹிந்து மதம் வேத வேதாந்த மதமில்லை என்று சொல்பவர்கள் தான் எதோ ஒரு ஆகம வழி பற்றி வரும் சில சாமியார்கலின் பேச்சை கேட்டு புத்தகஙகளை படித்து விட்டு விடும் வெத்து சௌன்டு மட்டுமே – இவர்கள் சிரிதளவு கூட வேடாந்தத்தின் பக்கத்தை புரட்டிப் பார்க்கவில்லை என்பது தெளிவு.

  செந்தில் தேசியத்தை பற்றி பேசுகிரார் –மாமன்னர் பரதர் அதை தான் செய்தார் – பல நாடுகளை ஒருங்கினைத்து பாரதம் என்று பெயர் செய்தார். இதை வைத்தே பரதக் க்ண்டே என்று வரை நாம் சொல்கிறோம் – இந்தியா இதை விட எப்படி வேறானது.

  தெசிய பார்வை இல்லாமல் பாரதம் இஸ்லாமிய ஆங்கிலேய கூட்டத்தின் அடிமைகலானது போறாது போலும். நாய்களின் அடிமைகலாக இருந்து கொண்டு மூனு வேலை சந்த்யா வந்தனமும் பூஜயும் செய்து என்ன ப்ரயோஜனம் – பொது நோக்கு சற்றும் இல்லாத அல்பத்தனம்.

  ராவண வதம் முடிகிற்து –இலங்கையை அடுத்து ஆலும் மன்னன் யார் என்று ஒரு சர்ச்சை வருகிறது. விபீடனன் ராமணை அறியணையை அலங்கரிக்குமாரு வேண்டுகிறான் – ராமண் அழகாக சொல்கிறான் விபீடனா எனக்காக என் நாடு காத்திருக்கிரது இது எவ்வளவு புன்னிய பூமியாகிலும் பரவா இல்லை எனக்கு கொஸலம் தான் நாடு – நான் அயொத்தியின் ராஜா என் அழைக்கப்படுவத்யே விரும்புகிறேன்.

  ராமண் பேசியது தேசியமே.

  டாகோர் ஒரு முறை ஜப்பான் சென்று பாரத தர்மத்தை ப்ற்றி பேச ஒரு பல்கலை கழகத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்தது – பேச்சு தொடங்க இருக்கிறது அரங்கில் மானவர் ஒருவரும் இல்லை. நாங்கள் ஒரு அடிமை நாட்டின் உயர்ந்த விஷயத்தை பற்றி கேட்க விரும்பவில்லை – அது உயர்ந்த விஷ்யாமாகஇருந்தால் அதை கடைபிடித்திருந்தால் ஏன் அடிமைகளாக இருக்கிறார்கள்

  ஜப்பானியர்கள் சுட்டிக் காட்டியது தேசியமின்மயை தான்

  தேசியம் இல்லாவிடில் தாசியமே – தேசியம் இல்லாத ஒரு தர்மத்தை கடைபிடிப்பதை விட நான் நாத்திகனாக வாழ்வதையே விரும்புவேன்.

 48. //அரவிந்தர், விவேகானந்தர், சாவர்க்கர் எல்லாம் இறந்து விட்டார்கள்.. ஆனால், அரவிந்தன் நீலகண்டன், தாணுலிங்க நாடார் போன்றவர்களுக்கு இங்கே பொது மேடையில் சவால் விடுகிறேன்.. இந்துத்துவத்தை பற்றி வாதம் செய்ய தயாரா? நான் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல தயாரா? //

  செந்தில் என்பவர் மேலும் எழுத எழுத அவருடைய அறியாமையின் அளவு எவ்வளவு அதிகம் என்பது வெளிவந்து கொண்டேயிருக்கிறது. சொத்தைப் பல்லைக் குத்தக் குத்த நாற்றம் அதிகமாகிக் கொண்டே வருவது போல.

  தாணுலிங்க நாடார் உயிரோடு இருக்கிறார் என்று எழுதுகிறார் இந்த ஆசாமி இதிலிருந்தே இவரது சமூக, வரலாற்று அறிவு பல்லை இளிப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதே..

  ஸ்ரீஅரவிந்தர் உயிரோடு இருந்தால் அவருடன் மோதுவாரம். ஸ்ரீஅரவிந்தர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைக் கூட இந்த செந்தில் படித்திருப்பாரா என்று ஐயுறுகிறேன். இவர் அரவிந்தன் நீலகண்டனுக்கும்,ஜடாயுவுக்கும் சவால் விடுகிறாராம் – ஐயோ எங்கே போய் முட்டிக் கொள்வது தெரியலையே..

  சைவம், வைணவம் என்ற பிரிவினை எல்லாம் கல்லில் எழுதிவைத்து விட்டது போல பேசுகிறார். செந்தில் இந்துப் புனித நூல்களில் ஒன்றையாவது உருப்படியாகப் படித்திருப்பாரா தெரியவில்லை. தன்னுடையது “பாமரத் தனம்” என்பதைக் கூட புரிந்து கொள்ளாத பாமரத் தனம் இவருடையது.

  கருப்ப சாமிக்கும், சிவபெருமானுக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம் என்ற ரேஞ்சில் கேள்வி கேட்டு சமீபத்தில் ஒருவர் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதி அதற்கு ஜெயமோகன் அருமையான ஒரு பதில் எழுதியிருந்தார் –

  நான் இந்துவா: – http://www.jeyamohan.in/?p=21656

  செந்தில் நீங்கள் எழுதுவதை வைத்துப் பார்த்தால் நீங்கள் எதையும் படிக்கும் டைப் என்ற எண்ணம் ஏற்படாத போதும், இதைக் கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.. படித்து விட்டு இன்னும் சந்தேகம் இருந்தால் ஜெயமோகனுக்கே உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்

 49. செந்தில்,

  அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் “ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்” என்று ஏற்கனவே ஒரு எளிய புத்தகம் எழுதியிருக்கிறார். ஹிந்துத்துவம் குறித்த சர்ச்சைகளுக்கு தர்க்க ரீதியாக விடையளிக்கிறது இந்தப் புத்தகம். வெளியீடு: கிழக்கு பதிப்பகம். இணையத்தில் வாங்க – https://www.nhm.in/shop/978-81-8493-536-3.html

  இந்துத்துவத்தை வசைபாடி, பாரம்பரியம் சம்பிரதாயம் ஆ ஊ என்று நீஙக்ள் கோஷம் போடுகிறீர்கள். அதே சமயம் கம்பராமாயணம், ஆழ்வார்கள், லலிதா சகஸ்ரநாமம், வேதம் உபனிஷத் என்று இந்து பாரம்பரியத்தின் பல விஷயங்கள் குறித்து பல நல்ல கட்டுரைகளை நீங்கள் வசைபாடும் ஜடாயு தொடர்ந்து எழுதி வருகிறார். இருவரில் இந்து பாரம்பரியம் பற்றி உண்மையில் புலமையும், புரிதலும் கொண்டது யார் என்று நான் கருதவேண்டும்? நீங்களே சொல்லுங்கள்.

  மேலும், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு,பனித்துளி இணைந்து “சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்கள், இந்த இணையதளத்திலேயே உள்ளது – http://tamilhindu.com/tag/jati-castes-a-new-outlook/

  “பொதுமேடைக்கு வா” போன்ற சவடால்களுக்கு பதிலாக, இந்த இரு புத்தகங்களுக்கும் ஓர் உருப்படியான மதிப்புரை எழுத நீங்கள் முயற்சிக்கலாமே? சிந்தனையாளர்களுக்கு “சவால்” விடுமுன்பு நீங்களும் உங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டுமல்லவா?

 50. விவாதம், திசையில்லாமல், இழுத்துச்செல்லுமாதலால், ஒவ்வொருவருக்கும் தனிதனியாக பதில் சொல்லாமல், மைய கருத்தின் அடிப்படையில், என் கருத்துக்களை பதிவு செய்கிறேன்..

  1. பொதுவாக இங்கே நான் கவனித்த ஒன்று – சைவம், வைணவம் என்று சொல்வதால் பிரிவினை தோன்றிவிடும் என்ற தேவையில்லாத பயம் பல பேரிடம் இருக்கிறது. ( Sense of Insecurity ) . அதனால் தான், எல்லாவற்றிலும் இந்து இந்து என்று விடாப்புடியாக பிடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய தாத்பர்யங்கள் பற்றி சரியான புரிதல் இல்லை என தெளிவாகிறது..

  முதலில் சன்மதங்களை பற்றி பார்ப்போம்.. ஸ்கந்தம் தமிழ் நாட்டிலும் லங்கையிலும்தான் அதிகமாக காண்கிறோம்.. சாக்தம், வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், பிகாரிலும் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் காணப்படுகிறது. கணபத்யம், என்று தனியாக இருப்பதில்லை.. அது மற்ற எல்லாவற்றிலும் கலந்துவிட்டது.. மீதி பெரும்பான்மையான சமயம், சைவம், வைணவம் மற்றூம் ஸ்மார்த்தம்தான்..

  சைவர்கள் சிவனை முதன்மையாக கொண்டு வழிபடுவார்கள்.. ஆனால், அவர்களின் பூஜையில், மற்ற எல்லா கடவுளும் இருக்கும்.. விஷ்னு, லக்ஷ்மி, பார்வதி, விநாயகர் என்று சகல கடவுளும் இருப்பார்கள்.. ஆனால், சிவன் தான் முதன்மையானவர்..

  அதே போல், வைணவர்களுக்கு, விஷ்ணு முதன்மையானவர்.. ஆனால், அவர்களும், மற்ற கடவுளை பூஜையில் வழிபடுவார்கள்..

  ஸ்மார்த்தர்கள், எல்லா கடவுளையும் சமமாக பார்ப்பவர்கள்.. அவர்கள், வேத முறையை மட்டும் பின்பற்றுபவர்கள்..

  இதில், வீர சைவம், மற்றும் ஸ்ரீவைஷ்ணவம், எக்ஸ்ட்ரிமிஸ்ட்கள் (தீவிரவாதிகள்.. ) .. சிவனை மட்டுமே உண்மையான கடவுள், மற்றவையெல்லாம் டூப் என்று வீரசைவர்களும், விஷ்ணு மட்டுமே உண்மையான தெய்வம், என்று ஸ்ரீவைஷ்ணமும் சொல்கின்றது.. தற்போதைய கிறித்துவத்தை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்..

  இந்த வீர சைவர்களுக்காகவே, சிவன் அர்த்தனாரீஸ்வரராக தோன்றி அவர்களுக்கு பாடம் கற்பித்தார்.. தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் ஆட்டம் போட்ட அவர்களை அர்த்தனாரீஸ்வரர் மூலம் துரத்தியடித்தார்கள் ஆதி சைவர்கள்.. இன்றைக்க்கு, கர்நாடகாவில் லிங்காயத்துகள் மற்றுமே இதை கடைபிடிக்கிறார்கள்.. அதில் ஒருவர்தான், இன்றிருக்கும் பேரூர் ஆதீனம் என்று டுபாகூர் விட்டுக்கொண்டிருக்கும் லிங்கங்கட்டி மடம்.. கன்னடக்காரர்களான அவர்கள்தான் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தி.க அரசியலில் இறங்கி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்கள்..

  லிங்கங்கட்டிகள் பாசாண்டிகள்.. வீர வைவம் சம்ணம் மாதிரி ஒரு பாசாண்ட மதம்.. வைதீக தர்மத்துக்கு விரோதமான முறையை கோண்டவர்கள் .. எப்படி என்றால், சிவலிங்கத்தை மார்பில் கட்டி தொங்க விட்டுக்கொள்பவர்கள்.. வேத நெறிகளுக்கு முரணானது.. சிவலிங்கம், என்பது, எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டியது என்பது சொல்லித் தெரிய வில்லை.. அதை உடம்பில் கட்டிக்கொண்டு மாசுபடுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது..

  ஸ்ரீவைஷ்ணவத்தை பற்றி நான் சொல்ல தேவையில்லை.. சிவனை நிந்தித்து, சோழனிடம் வாங்கிக்கட்டிக் கொண்டு மைசூருக்கு ஓடியவர் ராமனுஜர்.. அவர் இன்னொரு தீவிரவாதி.. (இங்கு தீவிரவாதி என்பதை, டெர்ரரிஸ்ட் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. எக்ஸ்ட் ரிமிஸ்ட் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.. தன் வாதத்தில் தீவிரமாக இருப்பவர் தீவிரவாதி.. டெர்ரரிஸ்ட் என்பது பயங்கரவாதி)

  தென்னிந்தியாவில், சைவ மதம் மொட்டை தலையர்களை விரட்டியடித்தது (அதாங்க.. சமணர்களும் பௌத்தர்களும் ).. வட இந்தியாவில், வைணவம் விரட்டியடித்தது.. ஆதி சங்கரர், தத்துவார்த்த ரீதியில், பௌத்தத்தை தோற்கடித்தார்.. மேலும், பல பிரிவுகளாக இருந்தவற்றை, சன்மதங்களாக தொகுத்து ஒரு வழிமுறையை ஏற்படுத்தினார்..

  மேற்சொன்னவை எத்தனை பேருக்கு ஆழமாக புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.. ஆனால், இவைகளை புரிந்து கொண்டால, தேவையில்லாத பயம் ஏற்படாது.. சைவர்களும் திருமாலை தன் பூஜையில் கும்பிடுபவர்கள்.. அதனால், சைவ மதத்தை சேர்ந்தவர்கள், வைணவத்த்துக்கு எதிராக திரும்பி பொந்து சமுதாயம் பிளவுபடும் என்று யாரும் பயப்பட தேவையில்லை..

  வீர சைவமும், ஸ்ரீவைஷ்ணமும், பெரிதாக பரவவில்லை.. அவையும் பிரிவினையை ஏற்படுத்த போவதில்லை..

  இவை எல்லாவற்றுக்கும் மேல், குல தெய்வ வழிபாடுதான், பெரும்பான்மையான மக்களிடம் பிரதானமாக இருக்கிறது.. சமயங்கள் மாறலாம்.. ஆனால், குலமும் குலதெய்வமும் மாறாது.. இந்த காரணத்தினால்தான், இன்றுவரை கூட தலித் என்று முத்திரை குத்தப்பட்ட சாதிகள் கூட தன் பாரம்பரியத்தில் இருக்கிறது.. ஏனென்றால் அவர்களின் குலதெய்வம், அவர்களின் சொந்த தெய்வம்.. யாரும் வெளியில் இருந்து திணிக்கவில்லை..

  ஆனால், இவர்கள், அதை புரிந்து கொள்ளாமல், அவரகளிடம் போய், சிவனை கும்பிடு, விஷ்ணுவை கும்பிடு, எல்லாவற்றையும் கும்பிடு என்று அவர்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. கிறித்துவர்கள் அவர்களுடைய குலதெய்வத்தை சாத்தான் என்று சொல்லி, மாத்துகிறார்கள்.. நாம் என்ன செய்ய்வேண்டும் என்றால், அவர்களுடைய குல தெய்வ வழிபாட்டின் அருமையை எடுத்து சொல்லி, அவர்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியத்தை எடுத்து சொன்னாலே போதும்.. அவர்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை வந்துவிடும்.. ஆனால், இது இந்த பொந்துத்துவவாதிகளுக்கு புரிவதில்லை.. எல்லாரும் இந்து என்று நினைத்தால் மட்டுமே ஒற்றுமை வரும் என்று நம்பிக்கொண்டு அவர்களிடம் போய், “நீ யேசுவை கும்பிடாதே.. பெருமாலை கும்பிடு.. ராமரை கும்பிடு” என்று சொன்னால் அவர்கள் என்ன நினைப்பார்கள்.. ராமரும் சிவனும், யேசுவை போல ஒரு தெய்வம் என்று நினைக்க ஆரம்பிப்பார்கள்.. நம்முடைய தெய்வத்தை நாமே அவர்களிடம் இருந்து அன்னியபடுத்துகிறோம்..

  இது நான், கண்கூடாக, அடித்தளத்தில் இருக்கும் மக்களிடம் கண்டவை..

  சில வருடங்களுக்கு முன்பாக, நானும் என பிராமண நண்பரும், ஒரு சேரிப்பகுதியில் போய் பிரச்சாரம் மேற்கொண்டோம்.. ஆரம்பத்தில், என் நண்பர், கீதையை பற்றி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.. அந்த மக்கள் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தனர்.. புரிந்த மாதிரி தெரியவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து அவர்கள், “எங்களுடைய குலதெய்வ கோயில் இடிந்த நிலையில் இருக்கிறது.. விழா எதுவும் போட முடியவில்லை.. அதை கட்டிக் கொடுத்தாலே, யாரும் கிறித்துவத்துக்கு மாற மாட்டார்கள்” என்று சொன்னார்கள்.. அப்பொழுதுதான் எங்களுக்கு சாதாரண மக்களின் மன நிலை புரிந்தது..

  பாரம்பரியம் பாரம்பரியம் என்று நாம் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம், ஒரு பொதுவான வார்த்தை.. ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு பாரம்பரியம் இருக்கிறது.. அந்த பாரம்பரியம், அந்த சமூகம் ஒருங்கிணைந்து இருக்கிற வரையில்தால் அது நிலைக்கும்.. சமூகம் உடையும்பொழுது, அவர்களின் பாரம்பரியமும் உடைகிறது.. அப்படி உடையும்போதுதான், அவர்கள் தனித்து விடப்பட்டு, வாழ்க்கை போராட்டத்திற்கு ஆளாகிறார்கள்.. அந்த நிலையில், கிறித்துவர்கள், தங்களுடைய சர்ஸ் அமைப்பின் முலம், அவர்களுக்கு உதவிக்கு வருகிறார்கள்.. மதம் மாற்றுகிறார்கள்..

  ஒருவரின் பாரம்பரியம் என்னதான் சிறப்பானதாக இருந்தாலும் இன்னொருவருக்கு ஒத்துவராது.. இது நமது தர்மத்திலேயே ஏற்கப்பட்ட ஒன்று.. கிதையிலேயே கிருஷ்ணர் தெளிவாக கூறியிருக்கிறார்.. , ஒருவரின் தர்மம் எவ்வளவு கீழானதாக இருந்தாலும், அதுதான் அவனுக்கு சிறந்த தர்மம்.. மற்றவர்களின் தர்மம் எவ்வளவு மேலானதாக இருந்தாலும், தன்னுடையதை விட்டு அதனை கடைபிடிக்கும்பொழுது, அழிவைதான் தரும்..

  அதனால், இந்து என்று சொல்லி மசாலா மிக்ஸ் செய்து எல்லா பாரம்பரியங்களையும் கபளீகரம் செய்து அழிப்பதை விட்டு விட்டு, ஒவ்வொரு பாரம்பரியத்தையும் அதை காலம்காலமால கடையபிடித்து வந்த மக்களிடமே விட்டு விட வேண்டும்.. ஒருவரது பாரம்பரியத்தை கொண்டு போய், இன்னொருவரின் மேல் திணிப்பது அழிவிக்கு வித்திடும்.. அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.. எத்தனையோ சைவ மடங்கள் அழியும் நிலையில் இருக்கிறது.. எத்தனையோ வைணவ மடங்கள் கலையிழந்து காணப்படுகிறது.. அதை இன்று வரை எந்த இந்துத்துவவாதிகளும் போய் ஆதரிக்கவில்லை.. சொல்லப்போனால், இருப்பவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்து தர்ம ஆச்சார்ய சபா என்ற ஒன்றை கிறித்துவ வேடிகன் கணக்கில் உருவாக்கி, இருக்கிற அத்தனை மடங்களையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்..

  இந்த பாரம்பரிய மடங்கள் சார்பாக, நாங்கள் கடந்த சில வருடங்களாக, ஊர் ஊராக சுற்றி, பல விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறோம்.. அந்த தகவல்கள் வேண்டுமானால், என்னுடைய இமேயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்..

  (edited and published)

 51. அய்யா சக்திவேல்,

  அரவிந்தன் நீலகண்டன், பெரிய சிந்தனை வாதிதான்.. என்னை விட பல புத்தகக்ங்களை படித்தவர்தான்.. அவர் செய்த வேலைகளில் நான் ஒரு துளி கூட செய்யவில்லை.. ” Breaking India” போன்ற புத்தகத்தை எழுத என்னால் கனவிலும் நினைக்க முடியாது.. அதனால், நான் என்னை ஒரு பாமரனாகவே எண்ணிக் கொள்கிறேன்.. எனக்கு, நான் இருக்கும் இடத்தில் உள்ள பாரம்பரியம், வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை, மட்டுமே பிரதானம்.. அதை நான் எந்த புத்தகம் படித்தும் தெரிந்து கொள்ள தேவையில்லை.. என்னுடைய தாத்தன் பாட்டனிடமிருந்து தெரிந்து வைத்திருக்கிறேன்.. அந்த அடிப்படையில், இந்துத்துவம் எந்த அளவில் சாதாரண மக்களிடம் எடுபட்டிருக்கிறது, என்பதை எனது சொந்த கோணத்தில், அனுபவத்தில் மூலம் கேள்வி எழுப்புகிறேன்..

  ஒரு பாமரன், எந்த தர்க்கத்திலும் கலந்து கொள்ள கூடாது என்று ஏதாவது விதி இருந்தால் சொல்லுங்கள்.. நான் விலகிக் கொள்கிறேன்.. இல்லை, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகங்களை படித்தால் மட்டுமே அவரிடம் வாதம் செய்ய முடியும் என்றால் சொல்லுங்கள்.. அப்பொழுதும் விலகிக் கொள்கிறேன்.. எனக்கு அந்த அளவுக்கும் அறிவு இல்லை என்று கருதிக் கொள்கிறேன்..

  பாமரனுக்கு எதுவும் தெரியாது.. அவன் கிராமத்தில் வாழும் ஒரு காட்டுமிராண்டி.. அவன் ஒரு முட்டாள்.. எனபது வெள்ளைக்காரணின் கொள்கை.. ( 1832 வரை வந்துள்ள வெப்ஸ்டர் டிக்ஷ்னரியில், Village என்ற ஆங்கில சொல்லுக்கு, uncivilized என்று அர்த்தம்..)

  நீங்களும் அந்த மாதிரியே நினைக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்..

  அடுத்து, சாதியை பற்றி நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறோம்.. உங்களை போல நாங்கள் அறிவு ஜீவிகள் இல்லை என்பதால், எந்த புத்தகத்தையும் நாங்கள் படிக்க வில்லை.. மாறாக, எங்கள் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு ஜாதியையும், அவர்களோடு எங்களுக்கு இருக்கும் உறவுமுறையை வைத்து நாங்கள். ஆராய்ச்சி செய்திருக்கிறோம்.. எங்கள் கோயில் வரலாறை வைத்து, எங்கள் வயதானவர்களிடம் கேட்டு தெரிந்து, அவர்கள் சொன்னதை வைத்து, எங்கள் வரலாற்றை புரிந்து வைத்திருக்கிறோம்..

  அதனால், சாதியை பற்றியும், எங்களிடம் வாதம் செய்ய தயாரா? நீங்கள் குறுப்பிட்ட “சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம்” என்ற தோடரை ஏற்கனவே படித்திருக்கிறேன்.. அம்பேத்கர் சொன்னார், காந்தி சொன்னார், அய்யன் காளி சொன்னார், என்று சில குறிப்பிட்ட மனிதர்கள் சொன்னதை வைத்தே அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்றவர்களின் கண்ணோட்டம் அமைந்திருக்கிறது.. இது சித்தாந்த சாயத்தில், உண்மையை தொலைத்துவிட்ட ஒரு கண்ணோட்டம்.. மேற்கத்திய பாணியில் சிந்திக்கிறார்கள்.. தலித் அடக்குமுறை போன்ற பிரச்சாரத்திற்காகவே பரப்பப்பட்ட வாதங்களை உள்ளிழுத்து, எழுதப்பட்ட ஒரு செயற்கையான கண்ணோட்டம்..

  இவர்கள் யாருமே, போய் ஒரு சாதாரண மக்களிடம் எதுவுமே கேட்கவில்லை.. அங்கேதான் இவர்களிடம் நாங்கள், மாறுபடுகிறோம்.. புத்தகங்கள் மூலமாக நமது சமுதாயத்தை புரிந்து கொள்ள முடியாது.. நாங்கள், குப்பனிடமும், சுப்பனிடமும் கேட்டு தெரிந்து புரிந்து கொண்டுள்ளோம்.. மேற்கத்திய அகாடெமிக் வரைமுறையில், எங்கள் கருத்துக்கள் ஏற்கப்படாது.. நாங்கள் அதை பற்றி கவலை படவில்லை.. உண்மையை அவர்கள் யார் அங்கீகரிப்பதற்கு?

 52. @சக்திவேல்,

  /** தாணுலிங்க நாடார் உயிரோடு இருக்கிறார் என்று எழுதுகிறார் இந்த ஆசாமி இதிலிருந்தே இவரது சமூக, வரலாற்று அறிவு பல்லை இளிப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதே.. **/

  எனது தவறை திருத்தி கொள்கிறேன்.. அரவிந்தன் நீலகண்டனின் தோள்சீலை கலகம் புத்தக விமர்சனத்தை இதே வலைத்தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.. அந்த புத்தகம் எழுதியவர்களுள் கணேச நாடாரும் ஒருவர் என்று நினைக்கிறேன்.. அவரைதான் தாணுலிங்க்க நாடார் என்று தவறாக எண்ணிவிட்டேன்..

  /** சைவம், வைணவம் என்ற பிரிவினை எல்லாம் கல்லில் எழுதிவைத்து விட்டது போல பேசுகிறார். **/
  சைவம் வைணவம் என்பது பிரிவினை அல்ல என்பதை என்னுடைய முந்தைய மறுமொழியில் விளக்கியிருக்கிறேன்.. அதுவ உங்கள் கேள்விக்கும் பதில்.

  /** செந்தில் இந்துப் புனித நூல்களில் ஒன்றையாவது உருப்படியாகப் படித்திருப்பாரா தெரியவில்லை. தன்னுடையது “பாமரத் தனம்” என்பதைக் கூட புரிந்து கொள்ளாத பாமரத் தனம் இவருடையது. */

  நம்மிடையே புனித நூல என்ற கான்செப்டே கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. என்னிடம் பாமரத்தனம் தெரிந்தால், பெருமை கொள்கிறேன்.. ஒரு பாமரனின் கருத்துக்கள் பத்திரிக்கைகளை சென்றடைவதில்லை.. ஒரு பாமரனின் பார்வையில் வாதிடவே நான் விரும்புகிறேன்.. அதில் தான் ஒரிஜினாலிட்டி இருக்கிறது..

  /** கருப்ப சாமிக்கும், சிவபெருமானுக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம் என்ற ரேஞ்சில் கேள்வி கேட்டு சமீபத்தில் ஒருவர் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதி அதற்கு ஜெயமோகன் அருமையான ஒரு பதில் எழுதியிருந்தார் –
  நான் இந்துவா: – http://www.jeyamohan.in/?p=21656
  **/

  ஜெயமோகனின் கட்டுரையை அவர் பதிப்பித்த அன்றே படித்துவிட்டேன்.. நான் சொன்னவற்றைதான் அவரும் சொல்லியிருக்கிறார்.. இந்து என்பது ஒரு தொகை மதம்.. மதங்களின் தொகுப்பு.. அதற்கு ஒரு மையம் இல்லை.. சொல்லப்போனால், மையம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்.. நீங்கள் அதை முழுமையாக படித்தீர்களா என்பதுதான் கேள்வி.. படித்தாலும், எந்த அளவுக்கு புரிந்துவைத்துள்ளீர்கள் என்பது இன்னுமொரு கேள்வி.. இந்த இந்துத்துவவாதிகள் என்ன செய்கிறார்கள் என்றால், இந்த மதங்களின் தொகுப்பை, செமிட்டிக் மதம் போல, மாற்ற முயல்கிறார்கள்.. அதற்கு ஒரு மையத்தை ஏற்படுத்தி, ஒரு அமைப்புக்குள் கொண்டுவர பார்க்கிறார்கள்..

  ஜெயமோகனின் வரிகளில், முக்கியமானதாக நான் கருதுவதை கீழே கொடுக்கிறேன்..

  நீங்கள் சொல்கிறீர்கள், இந்து வழிபாட்டுமுறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என. இது எதையுமே அறியாமல் வெறுமே செவிவழிப் பேச்சுகளை நம்பி சொல்லும் கூற்று. இந்துமதத்தின் இறையனுபவ முறைகள் நான்கு. ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டுமுறைக்குள்தான் இருக்கும்.

  இந்த வரிகள் தான் நான் இந்த தளத்தில் இவ்வளவு நாள் கத்திக் கொண்டிருக்கிறேன்.. அவர் என்ன சொல்கிறார் என்றால் நமது வழிபாட்டு முறையில் நான்கு நிலைகள் இருக்கிறது..

  1. சடங்கு சம்பிரதாயம்.. — பாமர மக்கள் கடைபிடிப்பது..
  2. பூஜை புனஸ்காரங்கள்.. — கொயில் பூசாரி, அர்ச்சகர்கள் செய்வது..
  3. யாகம் யக்ஞம் – வேத முறையில் செய்யப்படுவது.. வேத விற்பன்னர்களால் செய்யப்படுவது..
  4. யோக நிலை – சித்தர்கள், ரிஷிகள் போன்றவர்களுக்கு..

  இந்த பன்முகங்களை புரிந்துகொண்டாலே, இந்த இந்துதுவத்தில் உள்ள செயற்கைதன்மையை நாம் அறிந்துகொள்ளலாம்..

 53. செந்தில்,
  இங்கு யார் இருக்கின்றனர் என்பதனை மறந்து விட்டீர்கள் போலும். சென்னையில், ஏசி ரூமில் புக் படித்துக்கொண்டே பில்டர் காபியும் த ஹிண்டூவும் படிக்கும் அறிவுஜீவி ஹிண்டூஸ் இருக்கும் இடம் இது. இவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று சொல்லுங்கள்

  மற்றவர்கள்,
  ஒருத்தன் கெடச்சுட்டான்னா உடமாட்டீங்களே! வறுத்து எடுப்பீங்களே. அவர் என்னதான் செய்கிறார்ன்னு அவர் பார்முலாவை கேட்டுத்தான் பாருங்களேன்

 54. அன்புநிறை செந்தில்,

  நண்பர் சக்திவேல் உங்களைப் பற்றிக் கணித்தது எவ்வளவு சரியானது என்பதை உங்கள் சமீபத்திய பதில்கள் மேலும் உறுதி செய்கின்றன.

  ஜெயமோகனின் கட்டுரை ’இந்து’ என்ற கருத்தாக்கம் இல்லவே இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு முற்ற்லும் மாறாக, இந்து மதத்தின் தொகுப்புத் தன்மையை, அதில் எப்படி தத்துவங்களும், கலாசாரங்களும், சமய மரபுகளும் ஒன்றுக்கொன்று வலைப்பின்னலாக ஊடாடிக் கொண்டிருக்கின்றன என்பதை விளக்க முயன்றுள்ளது. உங்களப் போல ஒன்றுக்கொன்று கலக்கவே கூடாது என்று அது வாதிடவில்லை. இங்கு கலப்பு எப்படி இயல்பாக ஆயிரமாண்டுகளாக நடந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது. “நான் இந்துவா” என்று கேள்வி கேட்டவரை நீ இந்து இல்லாமல் வேறு யாரடா, இந்து தான் இந்து தான் இந்துவே தான் என்று மண்டையில் அடித்து சொல்கிறது. நீங்கள் ஏற்கனவே உங்கள் மனதில் உருவாக்கிக் கொண்ட எண்ணங்களை வைத்து, அதை அப்படியே முற்றிலும் எதிர்த்திசையில் உள்வாங்கி இருக்கிறீர்கள். வினோதம்!

  ஜெயமோகனைப் பல்லாண்டுகளாகப் படித்து அவருடன் விவாதித்து வருபவன் நான். “இந்து” என்ற சொல்லை ஒரு முறைகூட அவச்சொல்லாக, இழிசொல்லாக அவர் பயன்படுத்தியதில்லை. தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்ள அவர் தயங்கியதும் இல்லை. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் என்று தன் புத்தகத்துக்குப் பெயர் வைத்தபோது வந்த கடும் விமர்சனங்களுக்குப் பதிலாக, ஏன் அந்தப் பெயர் மட்டுமே அதற்கு மிகவும் பொருத்தமானது என்று கூறி பல விளக்கங்களும் அளித்திருக்கிறார். இந்துத்துவம் என்ற அரசியல் சித்தாந்தத்தைக் கூட அவர் வசைபாடுவதில்லை. மதித்து, விவாதிக்க வேண்டிய ஒரு கருத்துத் தரப்பாகவே பார்க்கிறார். ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை எழுதும்போதும் இந்து என்ற சொல்லையே ”பொந்து” என்று வசையாக உபயோகிக்கிறீர்கள்.

  வீரசைவர்கள் மீதும், ஹிந்து தர்ம ஆசாரிய சபா மீதும் நீங்கள் உமிழ்ந்துள்ள வெறுப்பைப் பாருங்கள்.. இது தான் பாரம்பரியத்திற்கு நீங்கள் தரும் மரியாதையின் லட்சணமா?

  உங்களுக்கு வீரசைவத்திடம் கடும் வெறுப்பு இருக்கிறது (உங்கள் குலம்/கோத்திரம்/சாதி தந்த உன்னதமான கொடை போலும்!) ஆனால் அது கோடிக்கணக்கான இந்துக்கள் 12 நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கும் ஒரு மாபெரும் சைவ மரபு என்ற அடிப்படை புரிதல் கூட உங்களிடம் இல்லையே. பசவண்ணர், அல்லம பிரபு, அக்கமகாதேவி, சிவப்பிரகாசர் போன்ற மகான்களை உருவாக்கிய பெருமரபு அது. அந்த மரபின் நூல் ஒன்றையாவது நீங்கள் படிக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? வீரசைவ மடாதிபதி ஒருவரிடமாவது உரையாடியிருக்கிறீர்களா? நானும், என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான இந்துக்களும் பேரன்புடன் மதிக்கும் திருமுருக கிருபானந்த வாரியார் அந்த வீரசைவ மரபில் தான் தீட்சை பெற்றவர். அத்தகைய மரபை ஒரு வரியில் கொசு அடிப்பது போல இகழ்கிறீர்கள். உங்கள் கருத்துக்கள் எவ்வளவு கிணற்றுத் தவளைத் தனமானவை, அபாயகரமானவை என்பதற்கு ஒது ஒன்றே சான்று.

  ஏதோ ஒரு ஊரில், சில கோயில்களுக்கு நல்லது செய்கிறீர்கள். மக்களிடம் பேசிவிட்டீர்கள் என்பதாலேயே எல்லாம் தெரிந்துவிட்டது என்று அகம்பாவமும், திமிருமே உங்கள் பேச்சில் அதிகம் வெளிப்படுவதைக் காண்கிறேன் நண்பரே. நீங்கள் ஒரு இணையதளத்தில் வந்து விவாதிக்கும் போதே, உள்ளூர் மனநிலையில் இருந்து உலகளாவிய அறிவுசார் விவாதக் களத்தில் இறங்கி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அங்கு வந்துவிட்ட பிறகு அறிவுசார் விவாதத்தையே ஏதோ மேட்டிமைத் தனம் என்பது போலப் பேசுவது நியாயம் அல்ல. உங்கள் வரையறைகளைக் கூட நீங்கள் புரிந்து கொள்ள முயலவில்லை.

  ஜெயமோகனிடம் கேள்வி கேட்டவரிடம் ஒரு நேர்மை இருந்தது, கற்றுக் கொள்ளும் விழைதல் இருந்தது. ஆனால் உங்களிடம் முடிவுகள் மட்டுமே உள்ளன நண்பரே. உங்களைப் போன்ற ஒரு “நிறைகுடத்திடம்” இந்த முறையில் உரையாடி இனி ஒன்றும் ஆகப் போவதில்லை.

  நமக்கு சில பொது நண்பர்கள் உள்ளனர் என்று அறிய வருகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் நாம் நேரில் சந்தித்துப் பேசுவோம்.

 55. அன்புள்ள ஜடாயு ,

  நல்ல தெளிவாய் விளக்கி உள்ளீர்கள் . நன்றிகள் பல. இந்து என்பவனுக்கு எந்தவித தளையும், எல்லைகளும் இல்லை.

  இதுதான், இது மட்டுமே , என்று வரையறுப்பவன் யாராக இருந்தாலும் இந்து மதத்தின் உண்மையை புரிந்துகொள்ளாதவன் என்பது உண்மை. இந்து என்பது எல்லை மற்றும் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட விஷயம். it is all inclusive and never exclusive.

 56. அன்புமணம் கமழ் செந்தில்,

  உங்களுடைய அண்மைய மறுமொழியில் வீரசைவம் குறித்த பேரறிவை ஜடாயு அவர்கள் பாராட்டியுள்ளனர். அங்ஙனமே ஸ்ரீவைஷ்ணவம் குறித்த உங்களது ஆழ்ந்த அறிவும் அதே மறுமொழியில் மிளிர்கிறது.

  இது ஸ்ரீவைஷ்ணவத்தை நீங்கள் கிறிஸ்துவத்துடனும் இஸ்லாத்துடனும் ஒப்பிடுவதிளிருந்தே தெளிவாகிறது.

  ராமானுஜர் சிவனை நிந்தித்தார் என்கிறீர்கள். எங்கு என்று காட்ட முடியுமா? சோழனிடம் வாங்கிக்கொண்டு மைசூருக்கு ஓடினார் என்று நீங்கள் இராமானுஜரைக் குறிப்பிடுவதிலிருந்து உங்கள் த்வேஷம் வெளிப்படுகிறது. முதலில், இராமானுஜரை கர்நாடகத்திற்குச் செல்லுமாறு அவர் சீடர் கூரத்தாழ்வான் தான் அவரிடம் கேட்டுக்கொண்டார். அவர் ‘ஓடவில்லை’. அலாவுதீன் கில்ஜி, கஜினி முகமது கோஷ்டியில் சேர்க்கவேண்டிய கொடுங்கோலனாகிய அந்த சோழனிடம் விவாதித்து ஜெயிக்க முடியாது (ஏனென்றால் அவன் எந்தவொரு அறிவுசார்ந்த விவாதத்தையும் கேட்கும் நிலையில் இல்லாத பிடிவாதக்காரன்) என்பதை இராமானுஜரும் அவர் சீடர் கூரத்தாழ்வானும் அறிந்திருந்தார். ஆகையால் இராமானுஜராகிய ஒருவர் உண்டுபண்ணி வந்த ஒரு மாபெரும் எழுச்சி ஒரு கொடுங்கோல் மன்னனால் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அவ்விருவரும் அப்படியொரு திட்டம் இட்டனர்.

  இராமானுஜர் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு புரிகிறது – அவர் தலித் மக்களைத் தமது இயக்கத்தில் இணைத்துக்கொண்டார் என்பதே அந்த வெறுப்புக்குக் காரணம்.

  மேலும் ஸ்ரீவைஷ்ணவம் பரவவில்லை என்றீர்கள். வட இந்தியாவில் ராமானந்தி வைஷ்ணவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இராமானுஜர் வழி வந்தவர்கள். அது தவிர, வட இந்தியாவில் வல்லப சைதன்ய மற்ற பல வைஷ்ணவ சம்பிரதாய ஸ்தாபகர்கள் இராமானுஜரைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர். இராமானுஜர் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதில் அவர்களுக்கே ஐயமில்லை.

  இராமானுஜர் சிவாலயம் ஒன்றைப் பராமரித்துள்ளார் என்பதும் அவருடைய தாக்கம் இந்தியா முழுவதும் பரவியது என்பதும் கிணற்றுத் தவளையாகிய உங்களுக்குத் தெரிந்திருக்க சிறிதும் வாய்ப்பில்லை.

 57. @ஜடாயு,

  திரு. ஜெயமோகனின் கட்டுரையை நீங்கள் ஆழமாக புரிந்துகொள்ளவில்லை என்பது உங்கள் பதிலிலேயே தெரிகிறது.. இந்து என்ற வார்த்தையை அவர் தூக்கிப் பிடித்ததாலேயே உங்களுக்கு சந்தோசம் பிச்சுக்கிட்டு பொய்விட்டடது.. வேறு எதுவும் தேவையில்லை உங்களுக்கு..

  அவருடைய அந்த கட்டுரையில் எனக்கு சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை.. உதாரணமாக, அவர் பண்டைய ஆட்சி அமைப்பு முறையும், அதை மையமாக ஒற்றி அமைந்த சமுதாய அமைப்பும் பற்றியும், சாதிகளின் அடையாளம் எப்படி அந்த சமுதாய அமைப்பிலிருந்த உருவானது என்பது பற்றியும் அவர் எதுவும் சொல்லவில்லை.. பொத்தாம் பொதுவாக, சாதிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு அதிகாரம் செய்ய முனைகிறது என்ற வாக்கில் சொல்லியிருக்கிறார்.. பொதுவாகவே, ஜாதி அமைப்பு பற்றி சரியான புரிதல் 99% பேரிடம் இல்லை.. அவரும் விதிவிலக்கில்லை.. ஆனால், அவரிடம், மற்றவர்கள் சொல்லும் விஷயங்களை அவர்கள் மன நிலையில் பொய் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது.. உங்களை போன்ற இந்துத்துவவாதிகளிடம் அது இல்லை.. நான் என்னுடைய முந்தைய பதிவில், நாங்கள் ஆராய்ச்சி செய்த தகவல்கள் வேண்டுமானால் என்னுடைய முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் என்று எழுதியிருந்தேன்.. உங்கள் யாருக்கும் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை இல்லை.. ஆர்வமும் இல்லை..

  ஜெயமொகன் ஒரு இந்துத்துவவாதி இல்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..

  ஜெயமோகன், பாரம்பரியம் ஒன்றுக்கொன்று கலந்துவிட்டது என்று சொல்லவில்லை.. உங்களை போன்று எல்லாரும் எல்லாவற்றையும் கொண்டாட வேண்டும் என்று சொல்ல்வில்லை.. அவர் நாட்டர் பாரம்பரியம், தன் சுயத்தை இழக்காமல், எந்த அளவில் சைவ மரபில் பிண்ணிப் பிணைந்திருக்கிறது என்று அழகாக விளக்கியிருக்கிறார்.. அதை புரிந்து கொள்ளும் மன நிலையில் நீங்கள் இல்லை…

  /** “இந்து” என்ற சொல்லை ஒரு முறைகூட அவச்சொல்லாக, இழிசொல்லாக அவர் பயன்படுத்தியதில்லை **/

  இந்து என்ற சொல், ஒரு Hollow Identity.. vague identity.. அந்த வகையில், நான் தமிழ்படுத்தி, அழகாக “பொந்து” என்று வைத்திருக்கிறேன்.. 🙂 🙂 அவ்வளவு தான்..

  இதை, நீங்கள் அவரிடமே கேளுங்கள்.. என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்..

  /** தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்ள அவர் தயங்கியதும் இல்லை. **/

  நானும் என்னை இந்து என்று சொல்லிக் கொள்ள தயங்கியது இல்லை.. இப்பொழுதும் தயங்க மாட்டேன்.. நான் இந்து தான்.. ஆனால், இங்கு பிரச்சினை, அந்த அடையாளம், நமது பாரம்பரிய அடையாளத்தை அழித்துக் கொண்டிருப்பதுதான்.. மதங்களின் தொகுப்பாக இருக்க வேண்டிய அடையாளம், அந்த மதங்களையெல்லாம் அழித்து, கிறித்துவத்தை போல, தனி மதமாக மாற்றும் முயற்சி நடக்கிறது.. அதை பல முறை பல தளங்களில் எடுத்து சொல்லியிருக்கிறேன்.. யாரும் கேட்பதுமாதிரி தெரியவில்லை.. அதனால் தான், அந்த அடையாளத்தையே தூக்கி எறிய முடிவு செய்துவிட்டேன்.. நான் இந்து என்பதை விட, நான் சைவ மரபை சேர்ந்தவன் என்பதுதான் எனக்கு இனிமேல் முக்கியம்.. எனது ஜாதி அடையாளம் தான் எனக்கு முக்கியம்..

  /** வீரசைவர்கள் மீதும், ஹிந்து தர்ம ஆசாரிய சபா மீதும் நீங்கள் உமிழ்ந்துள்ள வெறுப்பைப் பாருங்கள்.. இது தான் பாரம்பரியத்திற்கு நீங்கள் தரும் மரியாதையின் லட்சணமா?
  **/
  இது இன்னொரு பித்துக்குளித்தனம்.. கிறித்துவர்கள் மாதிரி பேசுகிறிரீர்கள்.. வீரசைவம் ஒரு பாசாண்ட மதம் என்பது, சைவ மார்க்கத்தில் இருக்கும் பெரியவர்களே அந்த காலத்தில் சொன்னது.. உங்கள் அகராதியில், சைவர்கள் எல்லாருமே, வெறுப்பை உமிழ்பவர்கள்.. அப்படித்தானே..

  ஞானசம்பந்தர், சமணர்களையும் பாசாண்டிகள் என்று சாடியிருக்கிறார்.. கஞ்சி மண்டையர்கள் வெஞ்சொல் மிண்டர் என்று தேவாரத்தில் சமணர்களை தாக்குகிறார்.

  529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
  வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
  விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுது செய்
  நஞ்சுஉள் கண்டன் நமச்சி வாயவே.

  தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கொடுமையான சொற்களைக் கூற, அவற்றை ஏற்காதவராயும் தேவர்கள் வேண்டுகோளுக்கும் அருள் செய்து கொடிய நஞ்சினை உட்கொண்டவரும் ஆகிய ஈசனின் திருநாமம். நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும்

  தினமலர்: http://temple.dinamalar.com/news_detail.php?id=5627

  உங்கள் அகராதியில், ஞானசம்பந்தர் வெறுப்பின் உருவம்.. அப்படித்தானே..?

  வைதீக தர்மத்துக்கு எதிரான மதங்களை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.. ஆனால் உங்களை போன்ற இந்துத்துவவாதிகள், எல்லவற்றையும் இந்து என்ற அடையாளத்தில் ஒன்றாய் போட்டு குழப்பி, ஆப்ரகாமிய மதங்களை போல, “Belief Based System” ஆக மாற்றுகிறீர்கள்.. தர்மத்தின் அடிப்படையில் இல்லாது, கூட்டத்தின் அடிப்படையில் இருக்கும் மதமாக மாற்றுகிறீர்கள்.. என்னுடைய குற்றச்சாட்டு புரிகிறதா?

  இன்று தமிழ் நாட்டில், தமிழ் முறை குடமுழுக்கு என்று சொல்லிக்கொண்டு அந்த பேரூர் மடம், எத்தனை கோயில்களின் பாரம்பரியத்தை அழித்திருக்கிறது என்பது உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தமிழ் முறை அர்ச்சனை, என்று தமிழ் வெறி கும்பலின் ஒரு பாகம்தான் இந்த பேரூர் மட கும்பல்.. அவர்களை வெறுக்கக் கூடாதாம்..

  /** நானும், என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான இந்துக்களும் பேரன்புடன் மதிக்கும் திருமுருக கிருபானந்த வாரியார் அந்த வீரசைவ மரபில் தான் தீட்சை பெற்றவர். அத்தகைய மரபை ஒரு வரியில் கொசு அடிப்பது போல இகழ்கிறீர்கள்.
  **/
  அவர்களின் மரபு அவர்களுக்கு.. அதை அழிக்கணும் என்று சொல்லவில்லை.. ஆனால், அவர்கள் வைதீக தர்மத்துக்கு எதிரான மரபை கொண்டுள்ளார்கள் என்பது நிதர்சனம்.. அவர்களை ஆதிசைவர்கள் எதிர்த்தே தீருவார்கள்.. ஆனால் நீங்கல், அவர்களும் சைவ மரபை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, முரண்பாடான இரு மரபினை ஓரே பானையில் வைத்து அடைக்கிறீர்கள்..

  /** ஏதோ ஒரு ஊரில், சில கோயில்களுக்கு நல்லது செய்கிறீர்கள். மக்களிடம் பேசிவிட்டீர்கள் என்பதாலேயே **/
  என்னுடைய பகுதி கொங்கு மண்டலம்.. பண்டைய 56 தேசங்களில் ஒன்று இது.. எங்கள் ஆராய்ச்சி முழுவதும் இந்த கொங்கு மண்டலத்தை சுற்றிதான் நடக்கிறது.. அதனால், ஏதோ ஒரு ஊர் இல்லை நண்பரே.. எங்கள் பகுதி முழுதும், உள்ள கலாச்சார, பாரம்பரியத்தை எடுத்து கொண்டிருக்கிறோம்..

  நாங்கள் செய்யும் பணியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தால் தொடர்பு கொள்ளூங்கள்.. விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. குரங்கு பாம்பை பிடித்தது போல, இந்து என்ற சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு இருக்காதீர்கள்..

  /** நீங்கள் ஒரு இணையதளத்தில் வந்து விவாதிக்கும் போதே, உள்ளூர் மனநிலையில் இருந்து உலகளாவிய அறிவுசார் விவாதக் களத்தில் இறங்கி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
  **/
  இதுதான் பிரச்சினை.. அதென்னங்க உலகளாவிய?? பெரும்பாலான மெட்ரோ கலாச்சார அகதிகளின் வாதம் அது.. தன் சொந்த ஊரின் பாரம்பரியத்தை விட்டு, பணத்துக்காக நகரம் என்னும் கெட்டோவுக்குள் இருந்து கொண்டு உலகளாவியம் பேசுவது நகைப்புக்குரியது.. இந்த மாதிரி கலாச்சார அகதிகள் தான், இந்துத்துவவாததை உடாப்புடியாக தொங்கிக் கொண்டு, மற்றவர்களின் பாரம்பரியத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்..

 58. செந்தில்,

  நல்லது. சக்திவேல் உங்களை வெறும் புத்தக மதிப்புரை மட்டுமே எழுதுமாறு கேட்ட்டார். அதற்கு பதில் சொல்லாமல் மழுப்பி விட்டீர்கள்.

  உங்கள் சமூக “ஆய்வுகளை” பொதுவில் எழுதுங்களேன் என்று நான் கேட்கிறேன். தனியாக வந்து கேட்பவர்களுக்கு தான் சொல்வேன் என்று இணைய யுகத்தில் சொல்வது கிறுக்குத் தனம். 99% மக்கள் தவறவிட்ட அந்த அறிவொளிக் கீற்றைப் புரிந்துகொண்ட உங்கள் தரப்பு என்னவென்று தான் பார்ப்போமே..

  சைவ மரபையும் சம்பந்தரையும் பற்றி எனக்கு வகுப்பு எடுப்பதற்கு முன், நான் எழுதியுள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன்.

  சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் –
  http://jataayu.blogspot.com/2009/04/1.html
  http://jataayu.blogspot.com/2009/04/2.html

  வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்
  http://jataayu.blogspot.com/2008/06/1.html
  http://jataayu.blogspot.com/2008/06/2.html
  http://jataayu.blogspot.com/2008/06/3.html
  http://jataayu.blogspot.com/2008/06/4.html

  // ஆனால் உங்களை போன்ற இந்துத்துவவாதிகள், எல்லவற்றையும் இந்து என்ற அடையாளத்தில் ஒன்றாய் போட்டு குழப்பி, ஆப்ரகாமிய மதங்களை போல, “Belief Based System” ஆக மாற்றுகிறீர்கள்.. தர்மத்தின் அடிப்படையில் இல்லாது, கூட்டத்தின் அடிப்படையில் இருக்கும் மதமாக மாற்றுகிறீர்கள்.. என்னுடைய குற்றச்சாட்டு புரிகிறதா? //

  இப்படி பொத்தாம்பொதுவாக சாணத்தட்டைகளை எடுத்து அப்ப வேண்டாம். எத்தனை இடங்களில் “இந்துத்துவ வாதிகள்” பாரம்பரியத்தை அழித்துள்ளனர் என்று ஊர்,பேருடன், ஆதாரங்களுடன் நிரூபியுங்கள்.

  கோயில் கோபுரங்களுக்கு ஏஷ்யன் பெயிண்ட அடித்து, சிற்பஙக்ளின் மீது மணல்வாரி அடித்து சிறப்பு அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்று கோயில் சொத்தை கொள்ளையடிப்பவர்கள் தமிழக “ஆன்மிக / ஜோதிட” கும்பல்கள், இந்து அறநிலையத்துறை திருடர்கள், இவர்களுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை சொல்லப் போனால் கோயில்களை இவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று தான் இந்துத்துவவாதிகள் இன்று வரை போராடி வருகிறார்கள்.

  நீங்கள் யாரை இகழ்கிறீர்கள்? கன்னியாகுமரி மாவட்டத்தில் சுடலை மாடசுவாமி கோயில்களையும், பேச்சியம்மன் கோயில்களையும் அற்புதமாகப் பராமரித்துக் கொண்டு அங்கு கீதை வகுப்புகளையும், இந்து சமய வகுப்புகளையும் நடத்தும் உத்தமர்களையா?

  எதன் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்? மண்டைக்காடு கலவரத்தின் போதும், மீனாட்சிபுரம் மதமாற்றத்த்ன் போதும் தங்கள் உடல் பொருள் ஆவியை சிந்தி அந்தப் பிரதேசங்கள் ஆபிர்காமிய மயமாகாமல் கட்டிக் காத்த தியாக வீரர்களின் புனித நினைவையா?

 59. சடாயு, நீலகுண்டன் போன்றவர்களுக்கு சகோதரர் செந்தில் சொல்வதைக் கேட்டால் ஆத்திரம் வருகிறது. ஏனென்றால் சகோதரர் செந்தில் சொல்வதுதான் உண்மையான சனாதனம். சாதி அதில் ஒரு சத்தியமான ஏற்பாடு. சடாயு, செயமோகன், நீலகுண்டன் போன்றவர்கள் எல்லாரும் சமம் என்கிற கோட்பாட்டை கிறிஸ்தவ வேதமான பைபிளிலிருந்து கடன் வாங்கி மக்களை மயக்க பார்க்கிறார்கள். அது தவறு. கிறிஸ்தவத்தை தழுவும் வரை யாரும் ஒரே மக்களாக முடியாதுஎன ஆணித்தரமாக சொல்லும் அன்பர் செந்திலுக்கு கர்த்தரின் ஆசி பரிபூரணமாக கிடைக்கட்டும். சரியான பாதையில் இருக்கும் இந்த சகோதரர் விரைவில் ஏசுவின் அன்பு சாம்ராச்சியத்தில் பிரவேசிக்க இறைமக்கள் பிரார்த்தனை செய்வோமாக. ஆமென்.

 60. கிறிஸ்தவ மிஷினரி வந்தால் நன்றாக பதில் கொடுத்து அனுப்புவது அவசியம். அதே சமயம் நமது குழந்தைகளுக்கும் நமது தர்மதைபற்றிய விஷயங்கள் தெரித்திருக்க வேண்டும். கீதை ஸ்லோகங்கள், தேவாரம்,திருவாசகம், திவ்யப்ரபந்தம்,போன்றவை மனப்பாடமாக தெரித்திருக்க வேண்டும். சமய சின்னங்கள் இட்டுக்கொல்லுதல் , கோவிலுக்கு செல்லுதல் போன்ற பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது நமது கடமை.

 61. திரு.செந்தில்,
  உங்களின் முடிவான சிந்தனைகளை என்னால் மறுக்க முடியாது. எனக்கு
  புரிந்தவற்றை எழுதுகிறேன்.

  உங்களின் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு எதிரான சிந்தனைகளில் 2ஐ
  நான் எடுத்துக் கொள்கிறேன்.
  (1) வேற்று மதப்பிரிவு வழிபாட்டு முறைகளை திணிப்பது.
  (2) அதனால் அந்த மக்களின் தனித்துவம் மறைந்து விடும்

  முதலில் எந்த ஒரு சமூகத்திலும் Orthodox and Un-Orthodox என்ற
  நிலையில் இரு வேறு மனநிலையுடன் மக்கள் இருப்பார்கள்.
  சம்பிரதாயங்களில் இருந்து மாறுவதை Orthodox மக்களால் நினைத்து
  கூட பார்க்க முடியாது. ஆனால் சமூக வரலாற்றில் Orthodox மக்கள்
  சிறிது சிறிதாக மாறுவார்கள் என்பதே நிதர்சனம்.

  நீங்கள் சுட்டும் சங்கரரே உங்களின் கருத்துப்படி பார்த்தால் கூட,
  சம்பிரதாய மக்களின் வழிபாட்டு முறைகளை மாற்றியவர்தான்.
  அதாவது இந்தியாவில் அவர் இருந்த சூழலில் பலவிதமான தேவதா
  உபாசனைகள் இருந்து வந்தன. (அக்னி, இந்திரன் என்று ஒவ்வொருவரும்
  ஒவ்வொரு தேவதையை முக்கிய கடவுளாக எண்ணி வழிபட்டு வந்தனர்.
  ஆனால் சங்கரன்தான் இந்த வழிபாட்டு முறைகளை 6ஆக குறைத்தார்.
  (சிவன், சக்தி, விநாயகர், குமரன், சூரியன், விஷ்ணு). உங்களின்
  கருத்துப்படி பார்த்தால் இந்திரன், அக்னி போன்ற தேவதைகளை
  வழிபடுபவர்களின் வழிபாட்டு முறைகளை மாற்றினார் என்று கூட
  கூறலாம். (இந்த விவரம் ஒரு சுவாமிஜியின் புத்தகத்தில் படித்தது.
  வரலாற்று ரீதியாக உறுதி செய்யப் பட்டதா என்பது எனக்கு தெரியாது).

  இங்கே குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம். ஷண்மதங்கள் என்று
  சங்கரன் ஸ்தாபித்தது 6 வழிபாட்டு முறைகள்தானே தவிர அதன்
  அடுத்த படி வேதாந்தம்தான். நான் கூற முற்படுவது, சங்கரன் ஸ்தாபிக்க
  விரும்பிய சைவத்திற்கும், இன்று நம்மிடையே உள்ள சைவத்திற்கும்
  வேறுபாடு உண்டு. அதே போல்தான் மற்ற வழிபாட்டு முறைகளும்.

  சுதந்திர போராட்ட காலத்தில் திலகர் மக்களை ஒன்றிணைக்க எண்ணி
  விநாயகரின் வழிபாட்டை பிரதானமாக ஆக்கினார். விநாயகர் வழிபாடு
  ஒரு குறியீடுதானே ஒழிய அது வட இந்திய கிராமங்களில் உள்ள
  அவரவரின் குலதெய்வ வழிபாட்டை இன்றளவும் அழிக்க வில்லையே!

  அடுத்து நம் மரபுக்கும் ஆப்பிரிக்க பழங்குடிகளுக்கும் உள்ள அடிப்படை
  வித்தியாசம். ஒரு கிராமத்தில் “கருப்பசாமி” தெய்வம். அடுத்த
  கிராமத்தில் “மாரியாத்தா” தெய்வம். கருப்பசாமியை வழிபடுபவர்கள்
  மாரியாத்தாவை தெய்வம் இல்லை எனக் கூற மாட்டார்கள். இன்றுவரை
  இந்தியாவில் பெரிய அளவில் மதமாற்றம் நிகழாததற்கு இது முக்கிய
  காரணம்.

  நான் கடந்த 6 வருடங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு டொக்கு
  கிராமத்தில் வசித்து வருகிறேன். நீங்கள் கூறும் ஹிந்துத்துவாவாதிகள்
  இங்கு பெயருக்கு கூட இல்லை. 2500 பேர் வாழும் எங்கள் கிராமத்தில்
  என்னையும் சேர்த்து 5 பேர் பா.ஜ.க விற்கு ஓட்டு போடலாம்.
  இருப்பதெல்லாம் ஒரே திராவிட கட்சிகள்தான். இங்குள்ள 6 கோயில்களில்
  மாரியாத்தா கோயிலை தலித் மக்கள் கட்டியிருக்கிறார்கள். சிறப்பு
  வேண்டுதலுக்குக்காக அவர்கள் குணசீலத்திற்கும் போகிறார்கள்.
  வைகுண்ட ஏகாதசிக்கு உப்பிலி அப்பன் கோயிலுக்கும் போகிறார்கள்.
  உங்கள் கருத்துப் படி ஹிந்துத்துவாவாதிகள்தான் பிற தெய்வ
  வழிபாட்டை திணிக்கிறார்கள் என்பது உண்மையில்லை. ஹிந்துத்துவா
  இயக்கத்தினர் இல்லாத நிலையிலும், பிற தெய்வ வழிபாட்டு முறைகள்
  இங்கு காலம் காலமாக இருந்துதான் வருகிறது. ஆனால் அவர்களின்
  குல தெய்வமான மாரியாத்தா வழிபாடும் பிரதானமாக இருக்கவே
  செய்கிறது.

  இதை Replacing என்று கூற முடியாது. ஒன்றை சேர்த்து இன்னொன்று.
  ஆனால் நமக்குரியது பிரதானமானது.

  அடுத்தது, நீங்கள் அகில இந்திய சாதுக்கள் கூட்டமைப்பைப் பற்றி
  கூறுவது. அதில் அஹோபில ஜீயரும் உள்ளார். உடுப்பி ஜீயரும்
  உள்ளார். அத்வைத மடாதிபதிகளும் உள்ளனர். ஒவ்வொருவரும்
  தங்களின் தனித்துவத்தை இழந்து விட்டார்கள் என்றா கூற முடியும்?

  ஒவ்வொரு சமூக சூழலிலும் தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள்
  ஒத்த சிந்தனையுடையவர்களுடன் கை கோர்த்து கொள்வார்கள் என்பது
  மனித இயல்பு. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதல்வராக ஆந்திராவில்
  இருந்த காலத்தில், திருப்பதியில், திருமலையிலும் சேர்த்து
  மதமாற்றம் வெளிப்படையாக நடந்தது. வெறும் வைஷ்ணவர்கள் அதை
  எதிர்த்திருந்தால் அதை எளிதாக முதல்வர் அடக்கியிருப்பார். ஆனால்
  சுவாமி தயானந்த சரஸ்வதி, ஒரு சாது சங்கமாக முழுமூச்சுடன் எதிர்த்த
  காரணத்தினால்தான் இன்று அது நின்றிருக்கிறது. மேலும் ஒரு வழக்கையும்
  உயர்நீதி மன்றத்தில் தொடுத்து “ஏழுமலைகளும் ஏழுமலையானுக்கே
  சொந்தம்” என்ற தீர்ப்பும் வந்துள்ளது. மேலும், அந்த எதிர்ப்பைக் கண்டு
  அஞ்சிய சாமுவேல், திருப்பதியின் ஏழு மலைகளிலும் மத மாற்றம்
  நிகழக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தார்.

  மிகப் பெரிய எதிரிகளுடன் மோதும்போது தனித்தனியாக போராடினால்
  தோற்றுத்தான் போக வேண்டியதிருக்கும். தனித்துவத்தையும்
  இழக்காமல் உரிமையையும் வென்றெடுக்க இந்த அமைப்பு உதவியதை
  நீங்கள் காண வில்லையா?

  கடைசியாக, பழைய காலங்களுடன் இன்றைய நிலையை ஒப்பிட
  முடியாது. தங்கள் கிராமத்தில் இருந்த அல்லது அதிகப் படியாக
  சுற்று வட்டார கிராமத்தில் இருந்த கோயில்களைத் தவிர மற்ற
  கோயில்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் இன்று போக்குவரத்து
  நவீனமான பிறகு பிற பிராந்திய கோயில்களுக்கு குறிப்பிட்ட
  வேண்டுதல்களுக்காக செல்வது அதிகரித்திருக்கிறது. இது ஹிந்துத்துவா
  வாதிகளினால் ஏற்பட்டதல்ல. இயற்கையாகவே உருவானது.

  கடைசியாக ஒன்றை பச்சையாக கூறிவிடுகிறேன். வழிபாட்டு முறைகளைத்
  தாண்டி ஹிந்து தத்துவ மரபுகளை அணுகாதவர்கள்தான் பெரும்பாலான
  தலித்துக்கள். எங்கள் கிராமத்தை எடுத்துக் கொண்டால் “சாக்தம்”
  என்றால் என்ன என்று கூட தெரியாதவர்கள்தான் அவர்கள். ஆனால்
  மாரியாத்தா வழிபாட்டை பல நூற்றாண்டுகளாக தொடர்பவர்கள்.
  மாரியாத்தா வழிபாட்டுடன் மற்ற தெய்வ வழிபாட்டை கடந்த சில
  தசாப்தங்களாக (ஹிந்துத்துவாவாதிகளின் தலையீடே இல்லாமல்)
  செய்கின்றனர். ஆனால் மாரியாத்தாவின் வழிபாட்டை விடவும் இல்லை.
  எதிர்காலத்தில் அது நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை.

 62. டேனியல் கலையரசன்,

  வீட்டில் கொசுத்தொல்லை இருப்பதைப் பார்த்து, தெருவோரத்தில் ஓடும் குட்டை அவ்வீட்டை விடச் சிறந்தது என்கிறீர்கள் 🙂

 63. வீட்டிற்கு வந்த மிலேச மதபோதகர் பற்றிய கட்டுரையில் அதைபற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு உள் நாட்டு சகோதர மதபோதகர் திரு.செந்தில் அவர்களின் ஹிந்து ஹிந்துத்துவம் பற்றிய கேள்விகளுக்கான பதில் விவாதம் தனியாக ஹிந்து ஹிந்துத்துவம் கேள்வி பதில் என்ற தலைப்பை போட்டு விவாதிக்கலாமே.

 64. அன்புள்ள பாலாஜி,

  ஆதி சங்கரரை ‘ சங்கரன்” என்று ‘னகர’ மெய்யை விகுதி யாக்கி அழைப்பது , தங்களுக்கு பெருமை சேர்க்காது. இதே போலவே, ராமானுஜரையும் ராமானுஜன் என்று ‘னகர’ மெய்யை விகுதி யாக்கி அழைப்பது , யாரும் செய்யக்கூடாது.

  இரண்டாவது, ஆதி சங்கரர் சைவத்தை உருவாக்கியவர் அன்று. ஏற்கனவே இருந்த பல பிரிவுகள் ஒருவருக்கொருவர் குரோத மனப்பான்மையை மாற்றி , ஒழுங்கு படுத்தினார்.

  மூன்றாவது, ஆதிசங்கரர் பஜகோவிந்தம் என்று துதிகள் எழுதியவர். அவரை சைவம் என்ற மதத்தை உருவாக்க விரும்பியவர் என்று சொல்வது முழு தவறு. அவர் கிருஷ்ணரை வணங்கி தனது ஸ்லோகங்களை ஆரம்பித்துள்ளார். சைவம் என்பது இந்துமதத்தின் தூண்களில் ஒன்று. கற்காலத்திலிருந்து உள்ள மதம் சைவம் ஆகும்.

  நான்காவது, ஆதிசங்கரர் அத்வைதத்தை உருவாக்கியவர் அல்ல. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றியது அத்வைதம். ஆதிசங்கரர் அந்த அத்வைத மரபில் வந்த ஆயிரக்கணக்கான ஞானிகளில் ஒரு பெரிய மகான்.

  ஐந்தாவது, ஆதி சங்கரர் இந்து மதத்தை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த நமது மதத்தை அவர் ஒழுங்கு படுத்தினார்.

 65. மேலும் சைவம் அல்லது வைணவம் என்ற குறுகிய எல்லைகளுக்குள் சங்கரரை அடக்கிவிட முடியாது. இந்து மதத்திலுள்ள எவ்வளவோ கணக்கற்ற வழிபாட்டு முறைகளில் இவை ஒரு சிலவே.

  கீதையில் கண்ண பரமாத்மா ” நீ என்ன பெயரில் , என்ன முறையில் வழிபாடுகள் செய்தாலும் எல்லாமே என்னை வந்தடைகின்றன” என்று தெளிவாக கூறியுள்ளார்.

  எனவே, இதுதான் இறைவனின் ஒரே பெயர், இது மட்டுமே இறைவனின் உருவம் என்று பிதற்றும் அறிவிலிகள் மாறவேண்டும். இல்லையெனில் கடவுள் உங்களைபோன்றவர்களை , காலவெள்ளத்தில் மூழ்க செய்திடுவார்.

 66. டேனியல் கலையரசன்,

  இங்கும் தொடர்கிறது உங்களை போன்றோரின் மதமாற்ற பிதற்றல்…முதலில் ஏசுநாதர் யாரை காக்க உலகிற்கு வந்தாரோ அவர்களை இயேசு நாதரை ஏற்றுகொள்ளுமாறு நீங்கள் தேவனிடம் மன்றாடலாமே ?????நான் குறிப்பது யூதரை ……….மேற்கிலே தேய்ந்து வரும் கிறிஸ்தவத்தை கிழக்கிலே உயிர்ப்பிக்க முயலும் தங்கள் போன்றோரின் ஆசை நிராசையாகி போக எல்லாம் வல்ல பரம் பொருளாகிய எம்பெருமான் அருள் புரிவாராக..
  .எல்லாரும் சமம் என்ற பைபிள் கோட்பாட்டை நாங்கள் திருடுரோமா????ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை மதம் மாற்றி கப்பலில் ஏற்றி நாய்களை போல அமெரிக்காவில் வேலை வாங்கிய பெருமைகள் சமத்துவ கிறிஸ்தவர்களாகிய தங்களையே சாரும்..ஆனாலும் தங்களின் பாச்சா எங்களிடம் பலிக்கவில்லை.பலித்து இருந்தால் ஆப்ரிக்காவை போல நாங்களும் எப்போதோ எம் மதம்,கலாசாரம் ஆகியவற்றை இழந்து வேற்றுமதம் தழுவி இருப்போம்.

  கடவுளால படைக்கப்பட்ட எல்லாரும் சமம்,ஆனா இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டோர் மட்டுமே சமம்…There ‘s contradiction in your statement???
  கீதையில் பகவான் கூறுகிறார்,அனைவிரின் படைப்பிற்கும் நானே காரணகர்த்தா,அவர்களின் கலப்பிட்கும் நானே காரணம் அதாவது குண அடிப்படையில் அவர்கள் நால்வராக வியாகியனபடுத்தபட்டனர்…தற்கால பொருளியல் பொருளாதார சமத்துவம் என்பது பொருளியல் நன்மைகளை அனைவரிடமும் சமமாக பகிர்வதை கூறவில்லை,மாறாக ஏற்றத்தாழ்வுகளை ஓர் அளவு குறைப்பதையே கூறுகிறது…இதை அன்றே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் வசனங்களில் எடுத்துரைத்து விட்டார்…..

 67. கந்தர்வன் ஐயா அவர்களக்கு,

  டேனியல் கலையரசன் போன்றோருக்கு தாங்களின் அறிவு,ஆற்றாலை கொண்டு பதில் அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்,இந்து மத அறியாமையில் இருந்து உளருவோருக்கு தங்கள் தக்க பதில் அளிக்க வேண்டுகிறேன் .

  நன்றி
  கொழும்பு தமிழன்

 68. மையம் மையம் என்பது ஒரு மனிதர் சார்ந்ததோ அல்லது ஒரு புத்தகம் சார்ந்ததோ அல்ல. அது கருத்தாக்கம் சார்ந்தது.
  திரு ராஜீவ் மல்ஹோத்ர புதிய புத்தகத்தில் ” being different ” தெளிவாக விளக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.படித்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

  எங்கோ தமிழகத்தின் தென் மூலையிலிருந்து வந்த மாடசாமி என்பவர் போகிற போக்கில் சர்வ சாதாரணமாக ” அவங்க அவங்க முறைப்படி பிரார்த்தனை செய்யறாங்க . நாம் சத்தம் செய்யாமல் அமைதியாக இருப்போம். நாம் எல்லாரும் ஒரே கடவுளை அவனகவங்க முறைப்படி கும்புடறோம் இல்லையா?” என்றார்.
  பகவத் கீதை பற்றி அறிந்திருக்க மாட்டார். க்ருஷ்ண பகவான் சொல்லும் பக்தர்கள் வகைப்பற்றிதெரிந்திருக்க மாட்டார்.
  வேதம் எத்தனை , அதுவும் தெரியாதாக இருக்கும். [ ஆயிரம் வருடங்கள் . அன்னியர் ஆட்சி .போர்கள் , துன்பங்கள். எல்லாம் தாங்கி பலவற்றை இழந்து இன்று உயிர் , உணர்வு மற்றும் நம்பிக்கை மிஞ்சியுள்ளது. இன்றாவது எதோ விவாதம் செய்யும் நிலையில் உள்ளோம்.]

  இந்து என்ற கருத்தாக்கத்தைஅவர் சரிவர புரிந்து கொண்டிருக்கிறார்.” இட்டுபீன்களா ” என்று கேட்டு விட்டு அவர் ஊர் கோயிலின் வீபுதி கொடுக்கிறார் [ வீபுதி உண்மையில் யஞ்ய பஸ்பம் என்று காஞ்சி பெரியவர் சொன்ன நினைவு ] நாத்திகராக இருந்தால் என்ற நம்பாதவர்களையும் மதிக்கும் உணர்வு, நம்பாதொற்கு தன மதிக்கும் பிரசாதத்தை அளிக்க விரும்பாமை கூட காரணமாக இருக்கலாம்,கேட்க விரும்பாதோருக்கு சொல்ல வேண்டாம் என்கிறானே கண்ணனும்?
  ஆர்வத்துடன் திருநீற்றை இட்டுக்கொண்டு தல வரலாறு கேட்க உர்ச்சாகமாகி பேசினார்.

  இந்துத்துவம் எங்கும் மிளிர்கிறது. ! ஒப்புக்கொண்டாலும் கொள்ளா விட்டாலும்.

  படித்தவர்கள் மட்டுமென்ன? குல தெய்வம் கோயில் வருடம் ஒரு முறை. மற்ற இஷ்ட தெய்வக்கோயில்கள் நினைத்த போதெல்லாம்.
  கீதை புத்தகம் [ கண்காட்சியில் வாங்கியது பத்திரமாக வீட்டில்.]
  வாழ்வில் அது வேண்டும் இது வேண்டும் என வித விதமாக ஸ்லோகங்கள் படித்து எதோ ஒரு நேரம் கீதை படிப்போமே என்று கையில் எடுக்க அது என்னை விடவேயில்லை.
  மாரியம்மன் கோயிலும் மகாபாரத உடுக்கையடிக்கும் பூசாரியும் இரண்டும் இந்துத்துவ நிதர்சனங்களே .

  பள்ளி வயதிலேயே கீதையை அறிமுகம் செய்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும். திருமந்திரம், பிரபந்தம், திருவாசகம் என்று பள்ளியில் இந்துக்களுக்கு மட்டுமாவது மாரல் சயன்ஸ் வகுப்பில் சொல்லிக்கொடுத்திருந்தால் எவ்வளோ நன்றாக இருந்திருக்கும் தான். கேடு கேட்ட அரசியல் காரணமாக வரலாறு என்ற பெயரில் குப்பை கூளங்களை நம் மண்டையில் திணித்தார்கள்.

  இங்கு கண்ட படி திட்டப்படும் இந்து குழுக்கள் இன்று தனிப்பட்ட முறையில் அரசாங்க எதிர்ப்பையும் மீறி நல்ல காரியம் செய்கிறார்கள். பாராட்ட விட்டாலும் பார்வையிலை…

  நம் பாரம்பரோய வீட்டை தனதாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் நேரடி சேனைகள் ஒரு புறம்.
  இந்நிலையில் வீட்டில் இருப்பவர்களே அத ரெண்டாவது மாடில ரூம் தாத்தா கட்னது இல்லை-அந்த மூணாவது மாடி இன்னொரு ரூம் நமது இல்லை
  [ தாத்தா பற்றி தனக்கும் மட்டும் எதோ ரொம்ப தெரிந்தது போல] இந்த் நாலு ரூம் தான் நம்மது என்றால் வீடு, நிலம் முழுக்க தின்று ஏப்பம் விட சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே குஷி தான்,
  சரவணன்

 69. டோனியல் கொலையரசன்:
  மற்றவர்களின் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் இருப்பது உங்களின் பிழை அல்ல …..பலன் என்பதையே பெலன் என சிதைப்பவர்கள் இருக்கும் வரை நீங்கள் திருந்த மாடீர்கள்

 70. @All எச்சரிக்கை

  தானம் தவமிரண்டும் தங்க வியனுலகம்
  வானம் வழங்கா தெனின்

  அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
  வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
  புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
  வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே.

  இந்துத்துவத்தை பற்றி கூவாமல் (இவ்விழையில் கூவிய மெட்ரோ பிராமணர்கள்) போய் முதலில் சொந்த ஊருக்கு வேதமோதுங்கள்.

  வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை
  நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
  மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
  மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே.

  கூவியதற்கு எதிர் கூவல் விடுத்த செந்தில் அவர்கள் போய் மண்ணைக்கீறி மாட்டை மேயுங்கள்.

  கொழுவின் சிறப்பு

  வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
  ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
  கோதைவேல் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
  ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே

  உங்கள் கடமைகளை நீங்கள் செய்தால் நல்ல மழை பெய்து தர்மம் தழைக்கும் என்று கீதை சொல்கிறது.

 71. @ஜடாயு,

  /** நல்லது. சக்திவேல் உங்களை வெறும் புத்தக மதிப்புரை மட்டுமே எழுதுமாறு கேட்ட்டார். அதற்கு பதில் சொல்லாமல் மழுப்பி விட்டீர்கள். **/
  அதான், நான் ஒரு பாமரன் என்று ஒத்துக் கொண்டேனே.. பாமரனுடன் வாதம் செய்ய மாட்டீர்களா?

  /** உங்கள் சமூக “ஆய்வுகளை” பொதுவில் எழுதுங்களேன் என்று நான் கேட்கிறேன். தனியாக வந்து கேட்பவர்களுக்கு தான் சொல்வேன் என்று இணைய யுகத்தில் சொல்வது கிறுக்குத் தனம்
  **/
  எங்கள் ஆய்வு, பொதுவில் வைத்து விளம்பரம் தேடிக்கொள்வதற்காக அல்ல.. அழிந்து கொண்டிருக்கிற பாரம்பரியத்தை மீட்பதற்காக.. அதனால், யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் தான் சொல்வேன்..

  /** சைவ மரபையும் சம்பந்தரையும் பற்றி எனக்கு வகுப்பு எடுப்பதற்கு முன், நான் எழுதியுள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். **/
  படித்தேன்.. மேற்கத்திய பார்வையிலேயே எழுதியுள்ளீர்கள்.. Compartmentalised thinking.. மேலும் கருத்துக்களை உங்கள் ப்லாக்கிலலேயே போடுகிறேன்..

  /** இப்படி பொத்தாம்பொதுவாக சாணத்தட்டைகளை எடுத்து அப்ப வேண்டாம். எத்தனை இடங்களில் “இந்துத்துவ வாதிகள்” பாரம்பரியத்தை அழித்துள்ளனர் என்று ஊர்,பேருடன், ஆதாரங்களுடன் நிரூபியுங்கள்.
  **/
  வி.எஹ்.பி நடத்திய ஈரோடு இந்து மாநாட்டில் வர்ணாஸ்ர தர்மத்தை நிராகரிப்பதாக அறிவித்தது. அதை எந்த வித்தத்தில் எடுத்துக் கொள்வது.. இன்று பாரம்பரியத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில், மேற்கத்திய பாணியில் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள்.. சங்கம் நடத்தும் 30000 மேற்பட்ட பள்ளிகளில் அதே வகுப்புதானே நடக்கிறது..?? நமது கல்விக்கூடங்களே அழிக்கிறதே..

  /** இந்து அறநிலையத்துறை திருடர்கள், இவர்களுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை சொல்லப் போனால் கோயில்களை இவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று தான் இந்துத்துவவாதிகள் இன்று வரை போராடி வருகிறார்கள்.
  **/
  80 வருடமாகவா போராடுகிறீர்கள்? இன்னும் முடிந்தபாடில்லை.. நீங்கள் போரடி மீட்பதற்குள், மக்கள் இருக்கமாட்டார்கள்..

  /** நீங்கள் யாரை இகழ்கிறீர்கள்? கன்னியாகுமரி மாவட்டத்தில் சுடலை மாடசுவாமி கோயில்களையும், பேச்சியம்மன் கோயில்களையும் அற்புதமாகப் பராமரித்துக் கொண்டு அங்கு கீதை வகுப்புகளையும், இந்து சமய வகுப்புகளையும் நடத்தும் உத்தமர்களையா?
  **/
  இதிலிருந்தே உங்கள் பித்துக்குளித்தனம் தெரிகிறது.. மாடசுவாமி கோயிலிலும் பேச்சியம்மன் கோயிலிலும் எதற்கு கீதை வகுப்புகள்? இதை தான் நான் இதுவரை சொல்லிக் கொண்டிருக்கிறேன். கீதையை புனித நூலாக்கி, கிறித்துவர்கள் மாதிரி நீங்களாகவே இந்து என்று கற்பனை செய்துகொண்ட மக்கள் எல்லாருமே கீதை படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.. மறுபடியும் கிறித்துவ வாசனைதான் வீசுகிறது.. வெத்து பெருமைதான் தெரிகிறது நண்பரே..

  /** எதன் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்? மண்டைக்காடு கலவரத்தின் போதும், மீனாட்சிபுரம் மதமாற்றத்த்ன் போதும் தங்கள் உடல் பொருள் ஆவியை சிந்தி அந்தப் பிரதேசங்கள் ஆபிர்காமிய மயமாகாமல் கட்டிக் காத்த தியாக வீரர்களின் புனித நினைவையா?
  **/
  நீங்கள் இல்லை என்றால இந்து மதமே இருக்காது என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. அதுதான் இங்கு பிர்ச்சினையே.. மொத்த சமுதாயமுத்தையும் நீங்கள் தாங்கி பிடித்து கொண்டிருப்பது போல பேசுகிறீர்கள்.. இதை நான் பல R.S.S ஆட்களிடம் பார்த்துவிட்டேன்..

 72. @டேனியல் கலையரசன்

  /** கிறிஸ்தவத்தை தழுவும் வரை யாரும் ஒரே மக்களாக முடியாதுஎன ஆணித்தரமாக சொல்லும் அன்பர் செந்திலுக்கு கர்த்தரின் ஆசி பரிபூரணமாக கிடைக்கட்டும்.
  **/

  பொதுவாகவே, கிறித்துவின் ஆசி, பல மக்களை கொன்றொழித்திருக்கிறது.. இல்லையென்றால், பெறுபவரின், மூளையை மழுங்கடிக்கிறது.. உங்கள் விஷயத்தில் அது உண்மையாக் இருக்கிறது போலும்.. இப்படி உளறுகிறீர்கள்.. இந்துதுவம் கிறித்துவ கருத்துக்களை பரப்புகிறதைத்தான் நான் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன்..

  அண்டமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமானின் அருள் எனக்கு எப்பொழுதும் இருக்கிறது.. உங்கள் கிறித்துவ ஆசி பெற்று நான் பைத்தியமாக விரும்பவில்லை..

  /**
  சரியான பாதையில் இருக்கும் இந்த சகோதரர் விரைவில் ஏசுவின் அன்பு சாம்ராச்சியத்தில் பிரவேசிக்க இறைமக்கள் பிரார்த்தனை செய்வோமாக. ஆமென்.
  **/
  ஏசுவின் “அன்பு” சாம்ராஜ்ஜியத்திற்காக அழிக்கப்பட்ட நாகரிகங்கள் பட்டியலில் (இன்கா, மாயன்) எனது பாரம்பரியத்தை சேர்க்க விரும்பவில்லை.. மாறாக, சிவபெருமானின் கணத்தில் உங்கள் யேசுவும் கிறித்துவமும் காணாமல் போவட்டுமாக..

  சிவபெருமானிடம் ஒன்றை மட்டுமே நான் வேண்டிக் கொள்கிறேன்..

  *”புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியவாவுன்னடி
  யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்”

 73. /** இரண்டாவது, ஆதி சங்கரர் சைவத்தை உருவாக்கியவர் அன்று. ஏற்கனவே இருந்த பல பிரிவுகள் ஒருவருக்கொருவர் குரோத மனப்பான்மையை மாற்றி , ஒழுங்கு படுத்தினார்.
  **/

  ஆதி சங்கரர் ஒரு சன்னியாசி.. சைவ, வைணவ கோட்பாட்டின் படி, ஒரு சன்னியாசி, ஈஸ்வரன் கோயில் கருவரையில் வந்து பூஜை செய்யக்கூடாது.. கல்யாணம் ஆனவரே பூஜை செய்யவேண்டும்.. சங்கரருக்கு முன்னாலயே, சைவம் இருந்துள்ளது..

  /** மேலும் சைவம் அல்லது வைணவம் என்ற குறுகிய எல்லைகளுக்குள் சங்கரரை அடக்கிவிட முடியாது. இந்து மதத்திலுள்ள எவ்வளவோ கணக்கற்ற வழிபாட்டு முறைகளில் இவை ஒரு சிலவே.
  **/
  /** மூன்றாவது, ஆதிசங்கரர் பஜகோவிந்தம் என்று துதிகள் எழுதியவர்.
  **/

  ஆதி சங்கரர் நிறுவிய சிரிங்கேரி மடத்தில் இன்றும் சிவ பூஜைதான் நடக்கிறது.. சங்கரர் பஜகோவிந்தம் பாடியதில் என்ன வியப்பு.. சிவ பூஜையில், நாரயணனையும் வைத்து வழிபடுகிறார்களே..

  /** ஐந்தாவது, ஆதி சங்கரர் இந்து மதத்தை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த நமது மதத்தை அவர் ஒழுங்கு படுத்தினார்.

  **/

  இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது.. தயவு செய்து இந்த பொய்யான நம்பிக்கையை உடைத்தேறியுங்கள்..

 74. @R Balaji,

  /** (அக்னி, இந்திரன் என்று ஒவ்வொருவரும்
  ஒவ்வொரு தேவதையை முக்கிய கடவுளாக எண்ணி வழிபட்டு வந்தனர்.
  ஆனால் சங்கரன்தான் இந்த வழிபாட்டு முறைகளை 6ஆக குறைத்தார்.
  **/

  அக்னி இந்திரன் என்பது தேவதை வழிபாடு அல்ல..

  /** ஒரு கிராமத்தில் “கருப்பசாமி” தெய்வம். அடுத்த
  கிராமத்தில் “மாரியாத்தா” தெய்வம். கருப்பசாமியை வழிபடுபவர்கள்
  மாரியாத்தாவை தெய்வம் இல்லை எனக் கூற மாட்டார்கள்.
  **/

  இன்று வரை, கருப்பசாமிக்கும், மாரியம்மனுக்கும், பேச்சியம்மனுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி இந்த இந்துத்துவவாதிகளுக்கு புரியவில்லை.. காரணம், கிறித்துவ மத பார்வையில் நம் ஒவ்வொரு கோயிலையும் பார்ப்பது.. எங்கள் ஊருக்கு வந்த மெட்றாஸ் பிராமண நண்பர் ஒருவருக்கும், எங்கள் காளியம்மன் கோயிலை பற்றி ஒன்று புரியவில்லை.. அதுபோலதான் உங்களுக்கும்..

  சரி.. சொல்கிறேன் கேளுங்கள்.. நாகர்கோயில் கன்னியாகுமரி பற்றி தெரியாது.. எங்கள் ஊரில், கருப்பசாமியும், முனீஸ்வரனும், காவல் தெய்வங்கள்.. ஊருக்கு காவல் தெய்வமாக, நாலு திசையிலும் ஊர் எல்லையில் இருப்பார்கள்.. ஆனால், மாரியம்மன், என்பது, கிராம தெய்வம்.. அந்த கோயில் ஊர் நடுவில் தான் இருக்கும்.. இந்த தெய்வங்கள், மதங்கள் பாணியில் வழிபா படுவதில்லை… ஆதலால், நீங்கள் நினைப்பது போல, கருப்பசாமியை கும்பிடுபவர்கள், மாரியம்மனை கும்பிட மாட்டார்கள் என்பதில்லை..

  அப்புறம், குல தெய்வம் என்பது வேறு.. கிராம தெய்வம் என்பது வேறூ.. மாரியம்மன் எப்பொழுதுவே கிராம் தெய்வமாகத்தான் இருக்கும்,.. குலதெய்வமாக இருக்காது..

  /** இங்குள்ள 6 கோயில்களில் மாரியாத்தா கோயிலை தலித் மக்கள் கட்டியிருக்கிறார்கள் **/

  மாரியாத்தா கோயில் என்பது தலித் கோயில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. தலித்துகளுக்கு தனியாக குலதெய்வம் இருக்கிறது..

  /** வெறும் வைஷ்ணவர்கள் அதை எதிர்த்திருந்தால் அதை எளிதாக முதல்வர் அடக்கியிருப்பார். **/

  வைண்வர்கள் எதிர்த்திருந்தால், இன்னும் வீரியமாக இருந்திருக்கும்.. சொல்லப் போனால், வைணவர்கள்தான் அதிகம் எதிர்த்தார்கள்..

  இன்னும் நான் சொல்லப் போனால், வைணவ மடங்கள், ராம ஜென்ம் பூமி விஷ்யத்தை கையில் எடுத்திருந்தால், இன்னேரம் மீட்டிருக்கலாம்..
  இந்துத்துவ வாதிகள், இந்து என்ற கோணத்தில் கொண்டு சென்று அரசியலாக்கிவிட்டார்கள்..

 75. ராமானுஜரிடம் உரிய மரியாதையுடன்..

  கந்தவர்மன்

  த்ரோனமஸ்திததபரம் என்று ஏளனம் செய்தார் ராமனுஜர். அரசனை விட்டுவிடுவோம்….ஆசார்யன் எனப்படுபவன் இத்தகைய தர்க்க வில்லங்கங்கள் செய்யலாமா?

  ஸ்ரீ வைஷ்ணவம் மத்வ, கௌடீய வைஷ்ணவங்களிலிருந்து வேறுபட்டது. அது வைதிகத்தில் இருப்பினும் பிற வைதீகர்களை எதிர்க்கத் தூண்டுகிறது

 76. பொன்ஸ்,

  உங்கள் புரிதல் முற்றிலும் பிழையானது. இந்தத் திரியை சைவ-வைணவப் பிணக்கு என்ற திசையில் திருப்ப எனக்கு இஷ்டமில்லை. ஒன்றே ஒன்று மாத்திரம் கூறுவேன் – குருபரம்பரை நூல்களையும், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் நன்கு கற்றறிந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம் கற்றுக்கொண்டு திறந்த மனத்துடன் யோசித்துப் பாருங்கள். அவ்வளவு தான் சொல்லுவேன்.

 77. பொன்ஸ்

  உங்கள் விஷய ஞானம் அபாரம்

  //த்ரோனமஸ்திததபரம் // இதை சொன்னது ராமானுஜர் அல்ல – கூரத்தாழ்வான். அவர் சும்மா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு உயர்ந்த அறிவு சார் மன்னன் – சிவனார் தான் பரம் என்று பலவந்தப்படுத்தி எழுதி கையொப்பம் இடச்சொன்னான் இடச்சொன்னான் – இப்படி அர்வாலை வைத்துக் கொண்டு பேசுபவனிடம் என்ன செய்ய முடியும் இப்படிதான் இடக்காக பேச முடியும்.

  //
  ஸ்ரீ வைஷ்ணவம் மத்வ, கௌடீய வைஷ்ணவங்களிலிருந்து வேறுபட்டது. அது வைதிகத்தில் இருப்பினும் பிற வைதீகர்களை எதிர்க்கத் தூண்டுகிறது
  //

  இதென்ன பேத்தல் மத்வ வைஷ்ணவம் வைதீகம் இல்லையா – மற்ற வைதீகர்களை எதிர்க்க எங்கே தூண்டுகிறது என்று ப்ரமாத்துடன் சொல்ல முடியுமா.

  செந்தில் என்பவர் செம்மையா கொழம்பி போய் இருக்கார் – வைணவம், சைவம், சாக்தம் எல்லாம் ஒரே பெரிய குறிக்கோளை நோக்கி செல்லும் வேறு வழிகள் அவைகளுக்கு பின்னால் இருப்பது ஒரே தர்மம் தான். அதை வேதாந்தம், சந்தன தர்மம் என்று அழைத்தால் என்ன ஹிந்து என்று அழைத்தால் என்ன – பாரம் பரியம் எங்கும் அழிந்து போய் விடவில்லை.

  எதோ சங்கத்து ஆள்கள் எல்லாரும் சேர்ந்துதான் பாரம்பரியத்தை அழித்ததுபோல பேசுகிறார். சேரி வாழ் மக்களிடம் போய் பகவத் கீதை பாராயணம் செய்து அப்புறம் நிலைமையை புரிந்து கொண்டதாக சொல்கிறார் – இதிலிருந்தே இவருக்கும் நடை முறைக்கும் எவ்வளவு தூரம் என்று தெரிய வருகிறது. சேவா பாரதி நபர்கள் இது போல பகவத் கீதையை தூக்கிக்கொண்டு போவதில்லை – இடிந்த ஹிந்து கோவில்களை தான் கட்டுகிறார்கள் – எளிய ஸ்லோகங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும் தான் சொல்லி தருகிறார்கள். நோட்டு புஸ்தகம் வாங்கி தருவது, மருத்துவ உதவி செய்வது இப்படிதான் செய்கிறார்கள். – அவர்கள் உங்களை விட நிச்சயமாக புத்திசாலிகள் தான்.

  நண்பர் சொல்கிறார் சைவர்கள் சிவனை பிரதானமாக கும்பிடுகிறார்கள் அப்புறம் மாற எல்லா சாமியையும் கும்பிடுகிறார்கள், வைணவர்கள் இது போல விஷ்ணு பிரதானமாக அப்புறம் மற்ற எல்லாரும் கூட

  இதே தான் ஹிந்து என்பவனும் செய்கிறான் – அவனுக்கு புடித்த சாமி பிரதானம் அப்புறம் மற்ற எல்லாரும்.

  முத்து சுவாமி தீட்சிதர் என்ற ஹிந்து குஹனை பிரதானமாக கும்பிட்டார் அப்புறம் சிவன், பார்வதி, லக்ஷ்மி, ராமன் கிருஷ்ணன் எல்லாரும் கும்பிட்டு பாட்டு எழுதினார். த்யாகராஜர் என்ற ஹிந்து ராமனை பிராதானமாக கொண்டு மற்ற எல்லாரையும் ஆங்காங்கே பாடினார்.

  நீ எல்லா சாமியையும் நாங்க சொன்ன மாதிரி கும்பிட்டாத்தான் ஹிந்துன்னு யார் சொன்னாங்கன்னே தெரியல – இல்ல இது உங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனையா அப்படின்னும் தெரியல

  வீர சைவர்களையும் ஸ்ரீ வைணவர்களையும் தீவிரவாதி (extremeist) என்று சொல்ல இவர் யார் – அது தானே அவர்களது பாரம்பரியம் பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களது பழக்கம்

  ஸ்ரீவைஷ்ணவம் பரவ வில்லை – ஆம் உண்மை தான் – ஹிந்துத்துவம் பரவிய அளவு ஸ்ரீ வைஷ்ணவம் பரவ வில்லை. சாக்தம் வங்காளத்தில் மட்டுமே பிரதானம் – ஆம். ஹிந்துத்துவம் பாரதம் முழுக்க இருக்கிறது

  ஹிந்துத்வத்தால் கீதை ஜெயித்து ராமன் ஜெயித்து, தேவரம் ஜெயித்து, பாமரன் ஜெயித்து, வைஷ்ணவம் சைவம் சாக்தம் தோற்றால் ஏதாவது பிரச்சனையா?

 78. செந்தில்

  //வைண்வர்கள் எதிர்த்திருந்தால், இன்னும் வீரியமாக இருந்திருக்கும்.. சொல்லப் போனால், வைணவர்கள்தான் அதிகம் எதிர்த்தார்கள்..//

  ஹீ ஹீ – ராமருக்கு தென்கலை நாமம் போடுவதா வடகலை நாமம் போடுவதா என்று பெரிய சண்டை தான் வந்திருக்கும்.

  அயோத்தி அரசியலாகவிட்டால் இன்று இந்துக்களுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்ச எழுச்சியும் ஒற்றுமையும் இருந்திருக்காது – சைவ, வைணவம், சாக்த பேதம் இன்றி எல்லோரும் பாடுபட்ட ஒரு பெரும் இயக்கம் ராம ஜன்ம பூமி இயக்கம் – அது உண்டாக்கிய தாக்கத்தை பொந்துக்குள் இருக்கும் நீங்கள் அறிந்திருக்க முடியாது. வெப்பில் வளம் வரும் இந்துக்களுக்கு கூட ரோஷம் என்ற ஒன்றை உருவாக்கிய ஒரு இயக்கம் – டௌட்டு இருந்தால் ஆங்கில news site களில் நம்மவர்கள் ரோஷம் போங்க எழுதும் பதில்களை பாருங்கள். web ஹிந்துக்களுக்கே இந்த நிலை என்றால் பாமார ஹிந்டுயன் எழுச்சி பற்றி கேக்கவே வேண்டாம்.

  சரி இத்தோட இதை முடிப்போம் – நீங்கள் வேணும்னா சண்டை போட்டு பாருங்கள், சவால் விட்டு பாருங்கள் – சங்கம் தான் ஜிக்கு, சங்கத்தோடு இந்தியாவின் தேசிய மற்றும் ச்வதேசிக் கொள்கையும் ஜெயிக்கும்.

 79. செந்தில்

  //
  இன்று வரை, கருப்பசாமிக்கும், மாரியம்மனுக்கும், பேச்சியம்மனுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி இந்த இந்துத்துவவாதிகளுக்கு புரியவில்லை.. காரணம், கிறித்துவ மத பார்வையில் நம் ஒவ்வொரு கோயிலையும் பார்ப்பது.. எங்கள் ஊருக்கு வந்த மெட்றாஸ் பிராமண நண்பர் ஒருவருக்கும், எங்கள் காளியம்மன் கோயிலை பற்றி ஒன்று புரியவில்லை.. அதுபோலதான் உங்களுக்கும்..
  //

  உங்களுக்கு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை பற்றி ரொம்ப புரியுதாக்கும் ?

  ஏதோ நீங்கள் மட்டும் தான் நமது பாரம்பரியம் பற்றி முற்றும் அறிந்தவர் போலவும் மற்றவர் எல்லாம் கிறிஸ்தவத்தின் வார்ப்பு போலவும் பேசுகிறீர்கள்
  நமது பண்பாட்டை பற்றி எல்லா விஷயயமும் எல்லோருக்கும் தெரியாது – நிச்சயமாக உங்களுக்கு தெரியாது. நாம் எதை கடந்து வந்திருக்கிறோம் என்று கூட தெரிந்திருக்காமல் எதோ பேசிக்கொண்டே போகிறீர்கள்.

  ஹிந்துத்தவ வாதிகள் ஒன்றும் சம்பந்தத்தை அறுக்க முயல்வதில்லை அரும் கயிற்றை லவட்டிக் கொண்டு போகும் கூத்ததிடம் இருந்தான் காப்பாத்துகிரார்கள் – காப்பாற்ற இவர்கள் யார் என்கிறீர்களா – அன்பு நெஞ்சங்கள் செயல் வீரர்கள். வெட்டி பேச்சு பேசும், நிலைமை புரியாத மூடர்கள் அல்ல.

  //
  கருப்பசாமிக்கும், மாரியம்மனுக்கும், பேச்சியம்மனுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி இந்த இந்துத்துவவாதிகளுக்கு புரியவில்லை.
  //
  இந்த சம்பந்தம் புரிந்தால் மட்டுமே இந்தியாவை காப்பற்ற ஒருவன் முயற்சிக்க வேண்டும் என்றால் உங்களை தவிர இந்தியாவில் ஒருவர் கூட காப்பற்ற முயற்சி செய்ய முடியாது – உங்களுக்கே அந்த தனிப் பெருமை உண்டாகட்டும்.

  உங்கள் கருத்தை முன்வைக்க கூட உங்களுக்கு பக்குவம் போதவில்லை – எகிறிக் குதித்து போன்து என்கிறீர்கள் வீர சைவம் ஸ்ரீ வைணவம் தீவிரவாதம் என்கிறீர்கள். ராமானுஜர் பயந்து ஓடினார் என்கிறீர்கள் – மேல்கோட்டை சென்ற பொது அவருக்கு வயது என்பது – என்பது வயதில் உயிருக்கு பயந்தா ஓடுவார் – ஸ்ரீ பாஷ்யம் எழுத வேண்டிய பனி முழுமை பெறாததால் அங்கு சென்றார் – இளம் வயதிலேயே அவரை கொள்ள பல முறை சதி நடந்தும் அவரது கொள்கையில் பணியில் எதிர்த்து நின்றவர் அவர்.

  இன்று சிவன் கோயில்கiளையும் பெருமாள் கோவில்களையும் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு கட்டிக் காப்பது வீர சைவர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் தான்

  முதிலில் முதலில் பக்குவமடையுங்கள்.

 80. இது தேவையற்ற விவாதம் என்று தான் தோன்றுகிறது, இடையில் ஆப்பிரகாமியர்கள் கொடுக்கும் காசிற்காக ஐந்து அறிவு கொண்ட மனித விலங்கு வேறு கத்தி கொண்டு இருக்கிறது.

  சிந்திக்கும் மக்கள் இருக்கும் இடத்தில் கருத்து வேறுபாடுகள் வர தான் செய்யும். அதனால் இங்கு இத்தகைய நீண்ட விவாதம் எனக்கு ஆச்சரியம் எற்படுத்தவில்லை.இருப்பினும் வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது தனி மனித தாக்குதல்களை தவிர்ப்பது நல்லது.

  இந்த விவாதத்தை இத்தோடு முடித்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

  செந்தில்,

  ஸ்ரீ வைஸ்னவத்தையும், வீர சைவத்தையும் இது போன்று எழுதி நம்மை இகழ்பவர்களின் வாய்க்கு அவலை கொடுத்து இருக்கிறீர்கள். இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை 🙁

  எற்கனவே நான் பல முறை சொன்னது தான். ஹிந்து என்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை தாங்கள் தவிர்க்கலாம். பல ஆயிரம் பண்பாடு கொண்ட நமது நாட்டில் சங்கம் போன்ற அமைப்பு கண்டிப்பாக இருக்க தான் வேண்டும்.

 81. Comments are interesting. In a lighter vein, I thought I will share this true story. (which is relevant to this article.) My friend was lazing around alone in the house recently on the weekend. He is an atheist but his wife is a very devoted Hindu. ( Mr Senthil take note!)There was a knock on the door and the usual Missionary crowd was standing outside. He invited them in and listened politely to their propaganda on Jesus and sinners for half an hour.They than asked him whether they could pray for him and his family in his house He said yes and with a lot of enthusiasm, took them to the wife’s pooja room where pictures of a lot of Hindu deities were adorning the wall. He then told them that he will be very happy if they could do all their prayers there Apparently in less than 2 minutes, the entire Missionary crowd melted from his house.
  I was laughing so much when he narrated this story

 82. I am surprised to see comments like “Ramanjua ran away to Melkote fearing for his life”, “he hated saivaites” etc.,

  That is pure rubbish. He was the only religious leader to view humanity as one (Even Adhi shankara did not). If as you say, he was really interested in converting many saivaites to vaishnavaites, he could have done so since he lived for as long as 120 years.

  That never happened. He was opposed by many orthodox hindus for admitting dalits into the vaishnavism fold. An attempt was made on his life, not once but thrice.

  He had a large number of women disciples, something unheard of even today.

  Dalits were made to perform tasks in temples, They were given the name “Thirukulaththaar”.

  Also, his social contribution is immense.

  While on his tour in melkote, he came to know of acute water-scarcity.

  He stopped at one place and called for the local Village officers.

  “Make an Earthen Dam here, connecting those two Hills… from this point to that point… which will solve your water-problem for ever… ..because this will form a large Water-Storage lake.

  Accordingly the word was sent to the King Vishnu-vardhana the King of Mysore… and on his immediate sanction, the Earthen Dam was built conforming to Ramanuja’s instructions.

  To the amazement of all… it became a large lake to store water for all sorts of local needs for minimum seven years even without any rain.

  The King wondered and thanked the Acharya and said..”Even our Engineers could not find out this simple solution.whereas you have solved it easily.

  He named that Reservoir as RAMANUJA – LAKE … which continues with the same Name and fame even now.

  This lake is in Tondanur. It is to be noted that the lake has not dried even once so far.

  “Karunai Kadal” Ramanuja propogated human values of vedic spirit.

  Look at waht swami Vivekanda has to say ” The movement of Sankara forced its way through its high intellectuality, but it could be of little service to the masses, because of his adherence to strict caste laws, very small scope for ordinary emotion, and making Sanskrit the only vehicle of communication. Ramanuja, on the other hand, with a most practical philosophy, great appeal to the emotions an entire denial of birthrights before spiritual attainments and appeals through the popular tongue, completely succeeded in bringing the massess back to the Vedic religion.”
  — Swami Vikekananda, “The Historical Evolution of India”

  That is why he said “India should have the heart of Ramanuja”.

  Bhagawad Ramanuja, who was the incarnation of Aadhi Sesha was, is & will always be the Greatest Mahapurusha ever to set foot on earth.

  Srimathe Ramanuja Namaha!

 83. சகோதரர்களே …நாம் மிகவும் தீவிரமாக இத்தகைய சதி செயல்களை முறியடிக்க வேண்டும்… நிலைமையின் தீவிரம் பெரும்பாலோர் அறியவில்லை ….
  விழிப்புணர்வு உருவாக்குவது முக்கிய வேலை ….தயவு செய்து விழிப்படையுங்கள் …

 84. அன்புள்ள சஞ்சய்,

  ராமானுஜர் எல்லோரையும் கோயிலுக்கு அழைத்தார். ஆனால் உங்களை போன்றவர்கள், தமிழ் ஹிந்து தளத்தில் ஆங்கிலத்தில் எழுதி வீணாக அவமதிக்கிறீர்கள். உள்ளூர் மக்களிடம் அவர்களது மொழியில் எழுத, பேச தெரியாவிட்டால் எல்லாம் வீணே.

  கதிரவன்

 85. @ ரவி;
  if you have the guts to face us,please say your statement with enough evidence,your people still not came out from the nightmare that you have get from the missioners.

  * All other communities are devil worshipers
  *Jesus is going to come again to secure the JEWS!!!!
  *When Jesus Christ come again all other people will be punished………

  haaa haaa haaa what a comedy,that mean are you say that swami Vivekananda currently on hell ??????and cruel christian rulers are in Heaven with holy angels??????/

  ஆப்ரிக்காவின் தாய் மதம் எது???தெரியாது ,ஆஸ்திரேலியாவின் உண்மையான மதம் எது ??தெரியாது .அமெரிக்காவின் உண்மையான மதம் எது? தெரியாது
  ………………………………………………………………………..இந்தியாவின் உண்மையுள்ள தாய் மதம் எது ????தெரியாதோர் யாரும் உண்டோ ???
  புற்றுநோய் குணம் ஆக்கிய,கால் நடக்க முடியாதொரை நடக்க வைத்த தங்களின் தேவனால் ஏன் கிறிஸ்தவ நாடுகளில் ஏன் மருத்துவமனைகளின் பரவலை தடுக்க முடியாமல் போனது ???தேவன் இருக்க மருத்துவமனை எதற்கு ??அது தேவ விசுவாசத்துக்கு விரோதமான காரியம் தானே ??

  இந்திய கிறிஸ்தவ நாடு ஆகும் என்பதை ஜகர்தாவில் இருந்து ஆருடம் கூறிய அந்த கிறிஸ்தவ ஜோதிடர் ரவி அவர்களே, முதலில் பிறரை எவ்வாறு அழைக்க வேண்டும் என்ற பண்பை சுவாமி விவேகானந்தரிடம் கற்று கொள்ளுங்கள்.தங்களின் கிறித்துவ வழி எதுவோ நன் அறிகிலேன்..சகோதர,சகோதரிகளே என்பது பண்பு,….
  We are not the babies that you are mentioned,and we are not like Christians,we have grown more than 3000 years before.

 86. எப்போதும் இந்து மதத்துக்கெதிரான கருத்துகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் நண்பர் சாரங் இப்போது அதிகம் பதிலளிப்பதில்லை. அவர் அளவு இப்போது கொழும்பு தமிழன் பதிலளிக்கிறார். தொடரட்டும் உங்கள் பணி நண்பர் கொழும்பு தமிழன் அவர்களே.

 87. @ravi, have you ever thought why do so many foreigners come to India in search of ultimate peace. It is just because it is not available in their country and the religion practiced in their countries does not offer anyway to find Ultimate peace. The only destination for Ultimate peace is the eastern part of the world where people understand in deeper sense what real human values are and act accordingly.
  But people like you are trying to damage such a beautiful situation, you are enjoying the peace because you are born in such a country with beautiful culture. Sit quite and think about this for sometime and listen to your inner self. You will appreciate the beauty of this culture and I am sure you will get back to this golden culture.

 88. @ திராவிடன்,

  மூத்தோரின் வார்த்தை அமிர்தம் என்பார்கள்,அவ்வகையில் தாங்கள் எனக்கு வழங்கிய பாராட்டுக்கள் என்னை பெருமிதம் கொள்ள வைக்கின்றன.இத்தளத்தில் நான் பெற்ற முதல் பாராட்டும் தங்களுடையதே .தமிழ்ஹிந்து எனக்கு அறிமுகம் ஆக முன்னர் வரை இந்துமதத்தின் அருமைகள் தெரியாமல் தொலைகாட்சிகளில் காட்டப்படும் ஆபிரஹமிய கானோளிகளில் இந்துமதம் பற்றிய அவதூறு பிரசாரங்களை பார்த்து மனம் நொந்தேன்.அனால் தற்போது அவர்களை எதிர்கொள்ளும் யுக்தியை எம்பெருமான் எனக்கு இத்தளம் வழியாக எனக்கு காட்டிவிட்டார்….

  நன்றி
  இப்படிக்கு
  கொழும்பு தமிழன் (எ) விஜய்

 89. @Ragu

  தங்களை போல அனைவரும் சீரிய முயற்சி எடுப்பின் மதம் மாறி போகும் நம் சகோதரர்களை அம்மாயவலையிலிருந்து மீட்டுக்க முடியும்,ஹீலிங்,பெலன்,விசுவாசம்,ஆன்மவிடுதலை,கடன்தொல்லையிளிருந்து விடுதலை என பலவகையிலும் ஆசை காட்டி அழைக்கும் மதமாற்றிகளிடம் நம்மவர் எதிர்கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களை நம் வழிக்கு கொண்டு வர முடியும்…அவ்வழிக்கு சென்று போப் ஆண்டவரை விட அதிகமாக உணர்ச்சிவசப்படும் சகோதரர்களை விட்டு தள்ளுவோம்.இனிமேலும் நம்மததினர் மாற்றுவழி தள்ளபடுவதை தடுப்போம்.அதற்கு முதலில் நாம் செய்ய கூடிய காரியம்,மனம் மாற்ற பட்ட (அ) அவர்களின் பசப்பு வார்தைகளக்கு மயங்கிய நம் நண்பர்களக்கு தமிழ்இந்து தளத்தை அறிமுகம் செய்வோம்,அரவிந்தன் நீலகண்டன் போன்றோரின் வலைபதிவுகளை காண்பிக்க வேண்டும்..ஒன்றுபட்டால் நம்மை அளிக்க துடிக்கும் ஆபிரகாமிய சக்திகளின் சதிவலையை அறுத்தெரிவதுடன் பாரத்பன்பாட்டை நம் சந்ததிகள் வழி தொடர வழிகோலலாம்.

  நன்றி
  கொழும்பு தமிழன் (எ) விஜய்

 90. வணக்கம்,
  மதமாற்றம் ஏன் நடைபெறுகிறது, எதனை அடிப்படையாக வைத்து நடைபெறுகிறது. மனிதனுடைய அடிப்படைத தேவையை வைத்து. எதை கிருஷ்டுவர்கள் செய்யும் போது. நமுடைய மக்களுக்காக நாம் ஏன் செய்யக்குடாது. அடிப்படை பிரச்சனை தீர்ந்து விட்டால் யாரும் மத மாற மாட்டார்கள் என்பது என் எண்ணம். நமக்கு நாமே எதிரியாக இருப்பதுதான் பிரச்சனை.

  rajaguru

 91. ஹிந்துத்துவத்திற்கு எதிராக மதமாற்றிகள் மற்றும் போலி மதச்சார்பின்மை வாதிகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று நினைத்தேன். மூன்றாவதாக ஒருதரப்பு ஸ்ரீ செந்தில் போன்றவர்களின் சாதீய வாதம். சைவத்தில் தலையாய வீரசைவத்தை ஒன்றும் தெரியாமல் புரியாமல் கடுமையாக சாடியிருக்கும் திரு செந்திலுக்கு கண்டனங்கள். வீர சைவ நூல்களைப் படித்து உணர்ந்து எழுதவேண்டும் செந்தில் போன்ற ஜாதீய வாதிகள்.
  இதில் ஒரு துரதிருஷ்டம் திரு செந்தில் தன்னை சிவனடியார் என்று கூறுவதுதான். பரம பொருள் ஞானதாதா சிவபெருமான் அவருக்கு நல்ல அறிவையும் தெளிவையும் வழங்க வேண்டிடுவோம்.
  திரு செந்தில்
  இந்த வீர சைவர்களுக்காகவே, சிவன் அர்த்தனாரீஸ்வரராக தோன்றி அவர்களுக்கு பாடம் கற்பித்தார்.. தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் ஆட்டம் போட்ட அவர்களை அர்த்தனாரீஸ்வரர் மூலம் துரத்தியடித்தார்கள் ஆதி சைவர்கள்.. இன்றைக்க்கு, கர்நாடகாவில் லிங்காயத்துகள் மற்றுமே இதை கடைபிடிக்கிறார்கள்.
  இந்த கதைக்கு ஆதாரம் காட்டமுடியுமா. அர்த்தனாரீசன் தத்துவத்தை வீரசைவமும் போற்றுகிறது என்பதை அறிவீர்களா. வீரசைவருக்கும் சைவ சித்தாந்தி களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் அவருக்கு அடிப்படை ஆகமங்கள் முப்பத்தாறு தத்துவங்கள் இருவருக்கும் பொது.
  திரு செந்தில்
  இன்றைக்க்கு, கர்நாடகாவில் லிங்காயத்துகள் மற்றுமே இதை கடைபிடிக்கிறார்கள்.. அதில் ஒருவர்தான், இன்றிருக்கும் பேரூர் ஆதீனம் என்று டுபாகூர் விட்டுக்கொண்டிருக்கும் லிங்கங்கட்டி மடம்.. கன்னடக்காரர்களான அவர்கள்தான் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தி.க அரசியலில் இறங்கி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்கள்..
  தவறு வீரசைவம் தமிழகத்திலும் ஆந்திராவிலும் மராட்டியத்திலும் நிலவும் உயரிய சைவம். தமிழகத்தில் கன்னடம் தெலுகு பேசும் மக்கள் வீரசைவத்தில் உள்ளனர். எனினும் தமிழ் வீரசைவர்களும் உள்ளனர். சமீபத்தில் நடுவணரசின் தொல்காப்பியர் விருது பெற்ற திருப்பெருந்திரு அடிகளாசிரியர் என்ற தமிழ்ப்பேறாசிரியர் குகையூர் வீரசைவ ஆதீனகர்த்தர் ஒரு தமிழர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
  வீரசைவ ஆதீனங்கள் எப்போதும் தமிழ் மீது தீராப் பற்று கொண்டவை. ஸ்ரீ சிவப்பிரகாசர், ஸ்ரீ சாந்தலிங்க அடிகள், ஸ்ரீ குமாரதேவர், ஸ்ரீ திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகியோர் எழுதிய நூல்களை வாசியுங்கள். இந்த பேரருளாளர்கள் சிவதரிசனம் பெற்றவர்கள்.
  குமாரதேவரைத்தவிர இவர்கள் தமிழர்களே. ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மதுரையை சேர்ந்தவர். இன்று பேரூர் பீடத்தை அலங்கரிக்கும் திருப்பெரும்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள் இளைய பட்டம் ஸ்ரீ மருதாச்சல அடிகள் ஆகியோர் கன்னடர்கள் அல்ல சுத்தமான கொங்குத் தமிழர்கள். இன்றைக்கு தமிழ் வழிபாட்டை அவர்கள் போற்றுகிறார்கள். கொங்கு நாட்டில் ஆன்மிகம் தழைக்க பேரூர் அடிகள் ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியது.ஹிந்து இயக்கங்களோடு அவர்கள் இணைநது ஹிந்து தர்மம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை. பேரூர் மடத்தை அவமரியாதையாக எழுதியிருக்கும் திரு செந்தில் ஒரு சைவர் என்பது வெட்கம்.
  திரு செந்தில்
  லிங்கங்கட்டிகள் பாசாண்டிகள்.. வீர வைவம் சம்ணம் மாதிரி ஒரு பாசாண்ட மதம்.. வைதீக தர்மத்துக்கு விரோதமான முறையை கோண்டவர்கள் .. எப்படி என்றால், சிவலிங்கத்தை மார்பில் கட்டி தொங்க விட்டுக்கொள்பவர்கள்.. வேத நெறிகளுக்கு முரணானது.. சிவலிங்கம், என்பது, எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டியது என்பது சொல்லித் தெரிய வில்லை.. அதை உடம்பில் கட்டிக்கொண்டு மாசுபடுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது..

  வீரசைவம் பரம வைதீகமானது என்று பெரும் வைதீக சைவ அறிஞர்களே ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல அணித்து சைவர்களும் பாஷாண் டிகள் தாம். பாசாண்டி என்பது உன்னதமானது உயர்வானது. சமணர்கள் பாசாண்டிகள் அல்லர். அவர்கள் தான் எம்மை பாசாண்டிகள் என்று இகழ்ந்தனர். அந்த வரிசையில் லிங்க தாரணம் ரிக் வேதத்தில் உள்ளது.
  பாணி மந்த்ரம் பவித்ரம் என்று கரதலத்தில் சிவ பூஜையை ரிக் வேதம் உயர்வாகப் போற்றுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஆகமங்கள் யாவும் லிங்கதாரனத்தைப் போற்றுகின்றன. லிங்கம் துய்மையானது என்றால் அதை அணிந்து இருப்பவர்கள் எப்போதும் சுத்தமாகவே துய்மையாகவே இருக்கிறார்கள். சதா சுசி என்று சொல்வார்கள். பிறப்பு, இறப்பு, போன்ற எவ்வகைத்தீட்டும் வீரசைவனாம் லிங்காயதனுக்கு இல்லை. ஆண் பெண் இடையே சாதீய அடிப்படையிலும் பேதம் இல்லை. அனைவரும் சமம் என்று முழக்கமிட்ட வீரசைவம் செந்தில் போன்ற சாதிய வாதிகளுக்கு கசக்கும் என்பது சரிதான் . லிங்கத்தை அணிவதால் லிங்கம் மாசுபடும் என்றால் அது எப்படி பவித்திரமானதாகும்.
  வீரசைவம் கர்நாடகத்தில் உள்ளது அதன் வேர்கள் தமிழகத்திலும் உள்ளன. தமிழக வீரசைவத்திற்கு த்தனித்தன்மைகளும் உண்டு. ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் ஸ்ரீ திருமூலர் ஆகியோரும் வீரசைவ ஞானிகள் என்று பெரியோர் கூறுவார்.

 92. நண்பா கண்டிப்பாக நானும் வருகிறேன் , அந்நியனே வெளியேறு..,எங்கள் பரத பண்பாட்டை எளிவைகருதும் நீ வெளியேறு என்று வீர முழக்கம் செய்வோம் .

 93. நமது கலாச்சாரத்தை முடிந்த அளவுக்கு பாது காக்க வேண்டும்.அலமாரியிலிருக்கும் வேதங்களை மூளையில் எட்ட vaikka வேண்டும்.மண்டைக்காடு வட்டார சமய வகுப்புகளில் இலவசமாய் சிறு புத்தகங்கள் குழந்தைகளுக்கு நேரடியாக கொடுப்பதோடு பாடமும் நடத்தி வருகிறேன்.பொது மக்களால் கட்டப்பட்ட அந்த ஹாலில் சமய வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே தீனி பக்தர்கள் அங்கு வந்து அரட்டை ஆடித்து asuththamaakkukintarkal.இப்போது தேவஸ்வம் முக்கால்வாசி இடத்தை விற்பனை செய்வதற்காக மீண்டும் ஆக்கிரிமித்த்ள்ளனர்.. வெடி வெடிவெடி entru kaaட்டுக்கத்தல்களோடு குங்குமமிட்ட நாலைந்து இளவட்டங்கள். இவர்கள் தொல்லை நடுவிலும் குழந்தைகள் பிரதி ஞாயிறு தோறும் படிக்கின்றனர்.கேரளாவிலிருந்து திருவிழா காண வரும் மக்களது வாகனங்களுக்கு பஞ்சாயத்து வரி , பார்கிங் வரி என்று இரு முறை கொள்ளை..கோவில் முன் அவர்களுக்காக வழங்கப்படும் வெந்நீர் மோர் ஆகியவற்றை பறிக்கும் காவலர்கள் அரசாங்க ஊழியர்கள். விழிப்புணர்வு உருவாக்குவது முக்கிய வேலை

 94. நம் நாட்டில் அழிந்து கொண்டிருக்கும்விலங்குகலக் கூட காப்பதற்க்கு முயற்ச்சிக்கும் அரசுகள் உலகின்தொன்மையானகலாச்சாரத்தை கொன்ட இந துமக்கள்தொகை. குறைந்துகொண்டுபோவது பற்றி சிறிதும் கவலைபடுவதில லை.

 95. 13. கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.

  14. விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.

  15. அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

  16. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

  17. நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.

  18. அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,

  19. காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,

  20. கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.

  21. ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது.

  22. அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.

 96. pavangali mannikum orea kaduvul easu matume
  aandavrea evarkal theriyamal ethai seikirarkal evarkalai manniyum evarkalai eratchiyum
  amen

 97. தங்கள் கட்டுரை அருமை! ஆனால் ஒரு சிலர் செயலால் அனைவரும் சமம் என்று கூறுவது ஏற்க தகுந்தது இல்லை.

 98. கிறிஸ்தவம் நாட்டிற்கு வீட்டிற்கு உலகிற்கு கேடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *