இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை

இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடமிருந்து கீழ்க்கண்ட கோரிக்கை நமக்கு வந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறோம் –

imk1

மதிப்பிற்குரிய தமிழ் ஹிந்து உணர்வாளர்களுக்கு வணக்கம் !

ஹிந்து அறவழி போராட்டத்திற்கும் – போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லுகின்ற தொண்டர்களுக்கும் – ஹிந்து பலிதானிகள் குடும்பத்தார்க்கும், எங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் அறப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

அறவழி போராட்டங்கள்:

கடந்த ஆண்டு ஹிந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சுமார் 127 க்கும் மேற்பட்ட ஜனநாயக அறவழி போரட்டங்கள் அரசின் தடைகளை மீறி நடை பெற்றுள்ளது உதாரணமாக பெரியார் திராவிடர் கழகத்தின் வன்முறை நடவடிக்கைகளை எதிர்த்து மேட்டூர் கோவை சென்னை ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி பண்டிகைகளின் போது இ.ம.க. சார்பில் போராட்டங்கள் நடந்து எமது தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சமூகசேவை:

எமது அமைப்பின் சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் நான்கு சொர்க்கரதங்களும் இயக்கப் படுகின்றன. இத்தகைய எமது சேவை தற்போது சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு உள்ளது. 13 முழு நேர ஊழியர்கள், 2 அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஹிந்து ஒட்டு வங்கி துவக்கப்பட்டுள்ளது, தாய் மதம் திரும்பும் விழாக்கள் நடத்தப்படுகிறது, ரத்த தான சேவை, கண் தான சேவை, உடல் தான சேவை, ஆகியவை எமது தொண்டர்களால் பரவலாக நடத்தப்படுகிறது.

எமது அமைப்பின் பணி தொடர்ந்திட இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்..

காசோலை/டிராஃப்ட் Indu Dharma Seva Arakkattalai என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் –

திரு. அர்ஜுன் சம்பத்,
தலைவர், இந்து மக்கள் கட்சி – தமிழகம்
130, வீரகணேஷ் நகர், கெம்பட்டி காலனி
கோயம்புத்தூர் – 641 001.தொலைபேசி : 0422 – 2394877
தொலைநகல் : 0422 – 2349922
கைப்பேசி : 098422 44833, 094421 54833
மின் அஞ்சல் : imkarjunsampath@yahoo.co.in
இணையத்தளம் : http://imkhindu.com/

நேரடி பணம் செலுத்த வங்கிக் கணக்கு விவரம்:

Indu Dharma Seva Arakkattalai
A/c No: 1120155000131901
Karur Vysya Bank, OPPANAKARA STREET (branch).

பணம் செலுத்திய விவரத்தை அஞ்சல் மூலமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

4 Replies to “இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை”

  1. நான் என்னால் முடிந்த தொகையை அனுப்பிவிட்டேன் நீங்களும் அது போல் சிறு தொகையாக இருந்தாலும் அனுப்புங்கள்.நமக்கு சிறியதாக தொன்றுகிண்ட தொகை பிறருக்கு வாழ்க்கையாக அமையும்.ஜைஹிந்த்

  2. வெளிநாட்டு இந்துக்கள் எவ்வாறு பணம் அனுப்புவது ?????

  3. வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலில் இணையத்தளம் மூலம் பண பரிமாற்றம் செய்யும் மும் வங்கி (கரூர் வைஷ்ய) பெயர் இட்டு ஊர் (கோயம்புத்தூர்) என டைப் செய்து IFSC code கண்டுபிடிக்க வேண்டும்.அதற்க்கு பின் account number மற்றும் பெயர் எழுதி சரிபார்க்க வேண்டும்.

  4. வெளிநாட்டுவர்கள் மேற்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் அதற்கான IFSC CODE KVBL0001120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *