திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..

வரலாறு.காம் தலையங்கம்  கேட்கிறது: ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்?

இதுதான் என் கேள்வியும்.

14.4.1963-இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஆண்டுதோறும் திருவள்ளுவர் நினைவாக சூலைத் திங்கள் 21-ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரையில் யாதேனும் ஒரு நாளை அரசாங்கம் விடுமுறையாக விடவேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் தி.மு.க நிறுவனர் அண்ணா. இந்தக் கோரிக்கையை ஏற்று 1966-ஆம் ஆண்டு முதல், தமிழ் அறிஞர்களின் திடமான முடிவின்படி, வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுடம் (பனை) என்பதனால், சூன் திங்கள் 2-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை வைத்த ஒருவரான அண்ணா, 1967-இல் ஆட்சிக்கு வந்தபின், திருவள்ளுவர் தினத்தை சூன் மாதத்திலிருந்து மாற்றவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1970-இல் கருணாநிதி தை மாதத்திற்கு திருவள்ளுவர் தினத்தை மாற்றினார் என்பது வரலாறு.

1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்! ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றுவது தவறு தான்!

இனி வரலாறு.காம் தளத்தின் தலையங்கக் கட்டுரையைப் பார்ப்போம்!

//புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

சரி, இது கட்டுரையாளர்களின் தனிப்பட்ட விருப்பம், குறை கூற முடியாது. அடுத்த வரியை பாருங்கள்!

//அவர்களுக்காக ஏற்கனவே பல தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.//

எந்த அறிஞர் நிரூபித்தார்? எப்போது நிரூபித்தார்? ‘தை’யே தமிழ்ப் புத்தாண்டு என்று நீதிமன்றத்தில் affidavit தாக்கல் செய்தவர்களுக்கும் கருணாநிதியால் மாற்றத்திற்கு ஆலோசனை வழங்கிய அறிஞர்கள் என்று பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும், குடந்தை மூவர் முதலிகள் முற்றம் என்ற அமைப்பின் சார்பாக ஓர் ஆய்வரங்கிற்கு சான்றுகள் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது. இன்று வரை எந்தச் சான்றும் தரப்படவில்லை. இலக்கியங்களிலிருந்தோ, கல்வெட்டுக்களிலிருந்தோ, எதாவது மரபு வழக்காட்டுதலிலோ அல்லது அறிவியல் அடிப்படையிலோ ஏதேனும் ஒரு சான்றாவது கொடுக்கப்பட்டுள்ளதா? நிரூபணம் என்றால், நான் சொல்லி விட்டேன் நான் சொல்லி விட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதா? அல்லது நான் நின்றால் சரித்திரம், நடந்தால் திக்விஜயம் என்று அடுக்கிப் பேசும் மேடைப் பேச்சா? வரலாறு தெரிந்தவர்களுக்கு அறிமுகமான ஒரு பாத்திரம் ஹிட்லர். அவன் வெற்றிக்குக் காரணமான ஒருவர் கோயாபெல்ஸ். இவரின் தத்துவம் கூர்ந்து கவனிக்கத் தக்கது– “ஒரு பொய்யைப் பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும்”

அது போலத் தான் இந்தத் ‘தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்ட’ என்ற சொற்றொடர். ஹிட்லரை ஒரு ‘சைகோ’ என்று சொல்லும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஆட்சியாளரால் தான் கோயாபெல்ஸ் போன்றவர்களை ஊக்குவிக்க முடியம் என்பது ஒரு கருத்து. இந்த ஆண்டு மாற்ற பாசிச செயல்பாடு, நாசி பண்பாட்டின் சாயலில் உள்ளது என்பதில் ஐயமில்லை.

//அரசின் அறிவுப்புகளால் முடிவு செய்யப் படுபவைகளா பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்?//

இது நியாயமான வாதம்.. அப்படியென்றால் 2009-இல் கருணாநிதியிடம் இந்தக் கருத்தை வரலாறு.காம் தெரிவித்திருக்கலாமே? கருணாநிதிக்கும், அரசு என்பது நீங்கள் கூறுவது போல் விடுதலை பெற்று 62 ஆண்டுகளாகி இருக்கும் ஜனநாயக அரசு என்பது நினைவுக்கு வந்திருக்கும்! //விக்ரமன், சாலிவாகனன்// என்ற நினைப்பும் இருந்திருக்காது!

//மானமும் அறிவும் நிரம்பிய, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபாசக் குப்பையான 60 ஆண்டு பிறப்பு பற்றிய கதையையா நம்பிக்கொண்டு இத்தனை காலமும் தமிழன் சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடிவந்தான் //

இங்கு கேள்வி, “ஆண்டுத் தொடக்கம் சித்திரையா, தையா?” என்பது தான். 60 ஆண்டு சுழற்சிக்கும் முதல் மாதத்திற்கும் என்ன சம்மந்தம்?

//60 ஆண்டு முறை தமிழர் கண்டதே//

நான் சொல்லவில்லை! கருணாநிதி அரசுக்காக தமிழ் அண்ணல் இராம.பெரிய கருப்பன் அவர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற affidavit சொல்கிறது.

 • 60 ஆண்டுகளின் பெயர் சோழர் கல்வெட்டுகளிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கு முன்பே இடம் பெற்றுள்ளதே? அப்படி என்றால் அவர்களும் மானமும் அறிவும் இல்லாதவர்களா?
 • பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே, அவர்களும் மானம் கெட்டவர்களா?
 • பங்குனியைக் கடை மாதம் என்று அகத்தியர் பன்னீராயிரம் சொல்கிறதே, அப்படியென்றால் அகத்தியரும் அறிவற்றவர், மானம் கெட்டவர்.
 • ‘திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக’ என்று சித்திரை மாதத்தை முதல் மாதம் என்று சொன்ன நக்கீரன் அறிவற்றவன்; மானம் கெட்டவன்.
 • இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு மேட ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்த முனைவர் மா.ராசமாணிக்கனார் அறிவற்றவர்; மானம் கெட்டவர்.
 • சுமார் 500 ஆண்டுகள் முன்பு புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று சொன்ன கமலை ஞானப் பிரகாசர் அறிவற்றவர்; மானம் கெட்டவர்.
 • சித்திரையை முதல் மாதம் என்று சொன்ன நாமக்கல் கவிஞர் அறிவற்றவர்; மானம் கெட்டவர்.
 • பல நூற்றாண்டு காலமாக சித்திரையை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடிய தமிழ் மன்னர்களும் புலவர்களும் சான்றோர்களும் நம் குடிமக்களும் அறிவற்றவர்கள்; மானம் கெட்டவர்கள்.

அப்படியென்றால் அந்தக் கட்டுரையின் பார்வையில், அறிவாளி யார்? மானமுள்ளவர் யார்? விடையும் அதிலேயே உள்ளது.

//பெரியாராலேயே முடியாதது நம்மாலா முடிய போகிறது?//

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை வெட்கம்கெட்டு தந்தை என்று சொல்லுவது அறிவுடைமை! தன்மானம்! முலையிலிருந்து தீ வைத்து எரித்தாளாம்! கற்புக்கரசியாம்! முட்டாள் பெண்பிள்ளை! இது கண்ணகிக்கு ஈ.வே.ரா கொடுத்த வெகுமதி….. இதை ஏற்றுக்கொண்டால் அறிவாளி! தன்மானச் சிங்கம்!

ஆரியம் நன்று தமிழ் தீது என்று சொன்ன குயக்கோடனை அழித்த நக்கீரன் சொன்ன சித்திரையைப் பின்பற்றுபவன் மானங்கெட்டவனா? தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்குத் தந்தை உறவை கொடுத்தவர்கள் மானங்கெட்டவர்களா?

//1921-இல் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் தை மாதம் தமிழ் புத்தாண்டுத் தொடக்கம் //

1921-இல் எந்த நாளில் இந்தக் கூட்டம் நடந்தது? அந்த ஆண்டு பொங்கல் விழாவை மறைமலை அடிகள் இலங்கையில் கொண்டாடியதாக அவர் மகன் மறை.திருநாவுக்கரசு எழுதுகிறார். சரி, அதற்குப் பின் பச்சையப்பன் கல்லூரியில் கூட்டம் எந்தத் தேதியில் நடந்தது? புளுகுவதற்கு ஓர் அளவு உள்ளது. சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935-ஆம் ஆண்டு மே திங்கள் 18 மற்றும் 19-ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மறைமலை அடிகள்,

“கிறுத்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” (திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் .௧௧௭(117))

என்று சொன்னதைத் தவிர, தை மாதம் பற்றியோ, தமிழ் ஆண்டு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இந்தக் கூட்டத்தில் திரு.வி.க, தெ.பொ.மீ போன்ற சான்றோர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுடம் என்பதே! மறைமலை அடிகளின் வள்ளுவர் காலத்தை அவர்கள் ஆமோதிக்கவில்லை. மு.வ. அவர்கள் திருவள்ளுவர் காலம் கி.பி. முதல் நூற்றண்டிற்குப்பின் என்று குறிப்பிடுகிறார். பெரும்பாலான அறிஞர்களும் அங்ஙனமே குறிப்பிடுகிறார்கள். திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் முடிவு செய்யப்பட்ட 9 நோக்கங்களில், ‘தை’யோ, தமிழ்ப் புத்தாண்டோ இடம் பெறவில்லை. (திருவள்ளுவர் நினைவு மலர்) தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் திருவள்ளுவர் தினமாக 1935-இல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) – ௧௩௦ (130) இல் காணலாம். 15.5.1955-இல் தமிழ்மறைக் கழகம், தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள். அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் ‘தை’யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. யார் அந்த அறிஞர்கள்? சில பிரசித்தி பெற்ற அறிஞர்களைப் பார்ப்போம். பேரா.ரா.பி.சேது பிள்ளை, திரு.மா.பொ.சி, வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், புலவரேறு அ.வரதநஞ்சைய்யன், முனைவர்.மா.இராசமாணிக்கனார், சித்தாந்த சிரோமணி ரி.எஸ்.கந்தசாமி முதலியார், கவியோகி சுத்தானந்த பாரதியார், டாக்டர் மு.வரதராசனார், புலவர் சி.இலக்குவனார், சுவாமி சித்பவானந்தர், வேதாரண்யம் சர்தார், ஆ.வேதரத்தினம், திரு.கி.வா.ஜகன்னாதன், கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன், கல்கி ரா.கிருஷ்ணமுர்த்தி..

இவர்கள் முட்டாள்களா? மானம் கெட்டவர்களா? தமிழ் அறிஞர்கள் இல்லையா? இந்த ஆதாரங்களின் அடிப்படையில், தை 2-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகவும், தை மாதம் ஆண்டுத் தொடக்கமாகவும் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. சூலை மாதத்தில் திருவள்ளுவர் தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் 1963 கோரிக்கையும், 1966இல் தமிழக அரசின் சூன் 2 திருவள்ளுவர் தின விடுப்பையும் பார்க்கும் போது,

//1921, 1939 தமிழனுக்கு உண்மையை உணர்த்த விழைந்த தமிழ் அறிஞர்கள்//

என்று தை வேஷம் போட, அறிஞர்களைத் துணைக்கு அழைப்பது, ஹிட்லர் ஆட்சியின் கோயாபெல்ஸ்-ஐ நினைவுப்படுத்துகிறது.

//ஒரு வேளை 1969 லோ அல்லது 1971 லோ ஆணையிட்டிருந்தால்//

இது கவனிக்கப்பட வேண்டிய வாக்கியம்.

தி.மு.க ஆட்சி பீடம் ஏறிய 1967-இல் குறிப்பிடப்படவில்லை. அப்படியென்றால் அண்ணாதுரை தை 2-ஐ திருவள்ளுவர் தினமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கட்டுரையாளருக்குத் தெரிந்திருக்கிறது. இது கருணாநிதியின் விளம்பர மோகமும் வெறுப்புணர்ச்சியின் அடையாள வேட்டையும் என்பதைக் கட்டுரையாளரே ஒத்துக்கொண்டு விட்டார். அவர் தவறை மறைக்க,

//அவர்கள் மனது மாறப்போவதில்லை//

என்று நம் மீது பிளேட்டைத் திருப்புகிறார்..

//ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சிகள் மாறலாம்.ஆனால் நம் வழக்கங்கள் மாறலாகாது.//

எது வழக்கம்? சித்திரையா? தை-யா? தை முதல்நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதற்கு சான்று உள்ளதா?

உண்மையிலேயே சான்றுகள் இருந்தால், சான்று கேட்ட மூவர் முதலிகள் முற்றத்திற்கு அதைக் கொடுத்திருக்கலாமே? அட, அந்தக் கட்டுரையிலேயே கூட சான்றுகளைச் சுட்டியிருக்கலாமே?

அறிவுடையோர் ஆராய்ச்சிபூர்வமாக அணுகி ஒரு விசயத்தை நிறுவ முயற்சித்திருப்பார்கள். வெறுப்பையும் நஞ்சையும் மனதில் வைத்திருக்கும் சுயநலவாதிகள் தான் பொய்யுரையையும் இனவெறி பிரசாரத்தையும் முன்னிறுத்திப் பிழைப்பு நடத்துவார்கள்.

உண்மையான வரலாற்றை முன்னிறுத்தி பல சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கொணர்ந்திருக்கும் ஒரு இணையத் தளத்தில் இத்தகைய பொய்ப் பிரசாரம் அனுமதிக்கப் பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கருப்புப் புள்ளி அது இருக்கும் பரந்த வெண்மைப் பரப்பின் தோற்றத்தையே மாற்றி விடுகிறதல்லவா?

45 Replies to “திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..”

 1. இங்கு அனைவரும் தை அல்ல சித்திரை தான் தமிழ் புத்தாண்டின் முதல் மாதம் என்று வாதிடுகிறார்கள் … அதற்கு அவர்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி சித்திரை தான் தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று வாதிடுகிறார்கள்… இருக்கலாம் . சங்கதமிழ் இலக்கியங்கள் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தமிழர்களின் வாழ்வை படம்பிடித்து காட்டும் ஒரு கால பேழை அன்றைய மக்களின் வாழ்க்கை நிலை,அரசியல் நிலை, மக்கள் கொண்ட பழக்க வழக்கங்கள் பேணிய கலாச்சாரங்கள் பற்றி சொல்லும் ஒரு இலக்கியம் சங்க இலக்கியம்.இதை தவிர இலக்கியங்கள் ஒன்றும் தெய்வ வாக்கு அல்ல.. ஆரிய புராண இதிகாசங்கள் போல பொய்யான கற்பனையான நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத புரட்டுகளை சொல்லும் இலக்கியங்கள் அல்ல தமிழ் இலக்கியங்கள்.. தமிழர்களின் அன்றைய வாழ்கைமுறை காதல், வீரம், தமிழ் மன்னர்கள் மேற்கொண்ட வீரமிக்க போர்கள் தமிழர்களின் கொடைத்தன்மை போன்ற நடந்த உண்மை வரலாறை கூறும் கால பெட்டகங்கள் அவை.

  அன்றைய காலத்தில் உள்ள சூழ்நிலைகளை புலவர்கள் தங்கள் கவித்திறன் முலம் வெளி படுத்திஇருகிறார்கள் அவ்வளவே …இது நிற்க, 2000 ஆண்டுகளாக சொல்ல பட்ட விஷயம் அல்லது கடைபிடித்த ஒன்று என்பதற்காக ஒரு விஷயம் உண்மை ஆகி விடாது .. அதில் ஒன்று தான் இந்த சித்திரை மாதம் தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதும்.. ஆண்டுகள் என்பது மனிதன் கணகிடுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒரு விஷயம். மனிதனின் எவ்வளவோ கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று அது நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் என்று மாறுபடும். மனிதனின் முளையில் இருந்து வரும் எண்ணங்களுக்கு அபார ஆற்றல் உண்டு. இது போன்ற அற்ப விஷயங்களுக்கு விஞ்ஞான ஆதாரம் மெய்ஞான ஆதாரம் என்று எல்லாம் வியாக்கியானமும் கொடுக்கும் . 2000 ஆண்டுகளாக எப்படி சம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்று ஒரு முட்டாள்தனமான கீழ்த்தரமான ஒரு நம்பிக்கை உலவி வந்ததோ அதே போல் தான் இந்த புத்தாண்டின் விஷயமும். சம்ஸ்க்ருதமும் ஒரு மொழி அவ்வுளவு தான் அதற்கு மேல் அந்த மொழிக்கு எந்த சிறப்பும் இல்லை அது தேவபஷாயும் கிடையாது என்று இப்போது அனைவர்க்கும் விழிப்புணர்வு ஏற்பட்டதுபோல் ஒரு நாள் இந்த ஆண்டின் விஷயத்திலும் ஏற்படும்.. எனக்கும் உலக நாடுகளில் பல தமிழர்கள் நண்பர்களாக இருகிறார்கள் தை புத்தாண்டை அவர்கள் தனி தன்மையோடு வரவேற்கிறார்கள் மிகவும் விரும்புகிறார்கள் .. உலக நாடுகளில் உள்ள அணைத்து தமிழ் சங்ககளிலும் தை புத்தாண்டை மனதார வரவேற்கிறார்கள் .. தமிழர்க்கு என்று பல தனி தன்மைகள் உள்ளது.. மொழி, சமயம் ,மருத்துவம்,கலாச்சாரம்,பண்பாடு என்று அனைத்திலும் வேறு பட்டு தனி தன்மையோடு நிற்கும் தமிழனை ஆரியத்திற்கு அடிமை ஆக்கிட வேண்டும். எந்த தனி தன்மையும் தமிழனுக்கு இருக்க கூடாது.அனைத்தும் ஆரியத்தின் எச்சமாக இருக்க வேண்டும் . தமிழ்மொழி சமஸ்க்ருததின் எச்சமாக இருக்க வேண்டும், தமிழ்இலக்கணம் பாணினியின் எச்சமாக இருக்கவேண்டும், சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தின் எச்சமாக இருக்க வேண்டும் ,தமிழரின் சமயம் மதம் ஆரிய புரட்டுகளின் எச்சமாக இருக்க வேண்டும் அது போல் தான் இந்த ஆண்டு கணக்கும். ஆரியத்தின் கடைசி எச்சம் இது தான் போலும் . இப்போது வந்தாக இருக்கட்டுமே தை புத்தாண்டு , இன்னும் 2000 ஆண்டுகள் கழித்து தை திங்கள் முதல் நாள் புராதன தமிழர் புத்தாண்டாக மாறிவிடும்..

 2. வரலாறு.காம் நம்பகத்தன்மை முழுவதுமாக சரிந்து விட்டது! அனைவரும் ஏதாவது ஒரு சார்பு நிலையில் இருந்தே சிந்திப்பதும் எழுதுவதும் தவிர்க்க முடியாதது! ஆனால் வெறுப்பின் மீது நின்று கொண்டு, தாம் சொல்வதே ஆதாரம், வரலாறு, முடிவு என்று எழுதுபவர்களின் பழைய கட்டுரைகளின் நமபகத்தன்மையும் குறைகிறது! மேலும் அவர்களின் சார்பு நிலையிலி இருந்தே மதிப்பிட பட வேண்டும்!

 3. மு.க. முதல் முறையாக முதல்வர் ஆன காலத்தில் ஜனவரி மாதத்தில் சென்னையில் டெஸ்ட் கிரிகெட் ஆட்டம் நடை பெரும். அப்போது அரசு விடுமுறை விடுவதற்கு ஒரு excuse ஆக திருவள்ளுவர் பிறந்த நாளைக் கண்டு பிடித்தார் மு.க. பெரியவர்களைக் கேட்டுப் பாருங்கள். சொல்வார்கள். மு.க. தனக்குத் தோன்றியதை எல்லாம் சொல்லி அதை justify செய்வார். அதை அவரின் அடி வருடிகள் தவிர வேறு யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

 4. \\\\\\ஒரு கருப்புப் புள்ளி அது இருக்கும் பரந்த வெண்மைப் பரப்பின் தோற்றத்தையே மாற்றி விடுகிறதல்லவா? \\\\

  சத்யவசனம். தமிழ் ஹிந்து மூலம் வரலாறு இணைய தளத்திற்கு முதன் முதல் சென்று நான் வாசித்த முதல் வ்யாசம் தமிழ்ப் புத்தாண்டு பற்றியது. வாஸ்தவமாக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற ரீதியில் இந்த வ்யாசம் வாசித்த பின் இந்த தளம் டம்பாச்சாரி நாஸ்திகவாதம் பேசும் த்ராவிடகழகக் கண்மணிகளின் தளமோ என்று யோசித்தேன். பின்னிட்டும் தளத்தின் மற்ற வ்யாசங்களை வாசிக்குங்கால் புரிந்தது ஒரு கருப்புப் புள்ளி அது இருக்கும் பரந்த வெண்மைப் பரப்பின் தோற்றத்தை எப்படி மாற்ற இயலும் என்பது.

  \\\\வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. யார் அந்த அறிஞர்கள்? சில பிரசித்தி பெற்ற அறிஞர்களைப் பார்ப்போம். பேரா.ரா.பி.சேது பிள்ளை, திரு.மா.பொ.சி, ………\\\\\

  தமிழ் சஞ்சிகைகளில் மற்றும் தமிழ் ஹிந்து தளத்தில் அவ்வப்போது வாசிக்க நேரும் சிற்சில உத்தரங்களையும் சேர்த்து தீந்தமிழ்ப்ற்றாளர் என்றால் அதற்கான குறைந்த பக்ஷ அம்சங்களாக ஸம்ஸ்க்ருதத்திற்கு எள்ளுந் தண்ணியுஞ் சேர்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்; மற்றும் புழக்கத் தமிழில் ஸம்ஸ்க்ருத சம்பந்தமான வாடை அறவே இல்லாது பார்த்துக் கொள்ள வேணும் (ஆனால் சகட்டு மேனிக்கு ஆங்க்ல பாஷையை தமிழுடன் கலக்க வேணும்); மற்றும் ஆரியம் மற்றும் த்ராவிடம் என்பவை தனித்தனி இனம் என்று துண்டு தாண்டி சத்யம் செய்யவேணும் என்றெல்லாம் ப்ரமை இருந்தது.

  ஆனால் தமிழ் அறிஞர்களின் மேற்கண்ட தீர்மானம் வாசித்தபின் ஸம்ஸ்க்ருத வெறுப்பு என்பது கழகம் சார்ந்த சமாசாரம் என்பதும் தமிழ்த்தொண்டு செய்பவர்கள் ஸம்ஸ்க்ருத வெறுப்பிலிருந்து பல காத தூரம் உள்ளவர்கள் என தோன்றுகிறது. திருவள்ளுவர் தினம் வைகாசி மாதம் என்பது சரி. மேற்கொண்டு வைகாசி மாதம் இன்ன திகதி என திகதிக்கணக்கு எடுக்காது அச்வினி, பரணி, க்ருத்திகா, ரோகிணி, ம்ருகசீர்ஷம் என்ற 27 நக்ஷத்ர வரிசையில் வரும் அனுஷ நக்ஷத்ரத்தைக் கையாண்டிருப்பது தமிழ் கூறும் நல்லுலகத்து அறிஞர்கள் பெரும்பாலும் பாஷா த்வேஷமில்லாதவர்கள் என்பதையும் ஆஸேது ஹிமாசலம் ஹிந்துஸ்தானத்து மொழிகளிடையே கலப்பு மற்றும் பிணைப்பு என்பது மிக இயல்பானது என்பதையும் காண்பிக்கிறது.

  தூய பால் போன்று அறவே த்வேஷமற்ற நிலைப்பாடுடைய இவ்வறிஞர்களோடு

  ஆதாரம் கொடுக்காமல் அளவில்லா ஆகாத்தியம் செய்து மற்றும் பொய்க்கதைகளை மட்டும் கூசாது புனைந்து தையை முதலாண்டாக வைக்க முனையும் அறிஞர்கள் பாலோடு கலந்த ஜலம் போன்று இருக்கிறார்கள் என்று புரிகிறது.

  சித்திரையை முதன் மாதமாகக் கொண்ட தமிழ்ச் சான்றோர்களின் பட்டியல் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் மலை போல் குவித்து முன் வைக்கப்படுகின்றன. தையை முதன் மாதமாகச் சொல்லும் அறிஞர்கள் யார் அதற்குக் காரணம் என்ன ஆதாரங்கள் என்ன என்று கேழ்க்கக்கூடாது போலும்.

  எட்டாவது குழந்தை மூலம் ம்ருத்யு என்றறிந்த கம்சனுக்கு நாரதர் எட்டு என்பதை எப்படியெல்லாம் கணக்கிடலாம் என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது தை மாதத்தை தமிழின் முதல் மாதமாக ஜபர்தஸ்தியாக திணிப்பவர்களைப் பார்த்து. தை மாதமென்ன கோஷம் போட கூட்டமும் ப்ரதிகளெடுத்து விதரணம் செய்ய அச்சுக்கூடமும் கைவசம் இருந்து விட்டால் யாராவது முனைந்தால் வைகாசியோ அல்லது புரட்டாசியோ கூட முதல் மாதம் என சாதிக்கலாமே. ஒரு விஷயத்தை நிறுவுவதற்கு ஆதாரம் அவசியமில்லை ஆகாத்யமே அவசியம் என்றால் எதுவும் சாத்யமே.

 5. தாயுமானவன் அய்யா

  //
  இது நிற்க, 2000 ஆண்டுகளாக சொல்ல பட்ட விஷயம் அல்லது கடைபிடித்த ஒன்று என்பதற்காக ஒரு விஷயம் உண்மை ஆகி விடாது .. அதில் ஒன்று தான் இந்த சித்திரை மாதம் தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதும்..
  //

  //
  சம்ஸ்க்ருதமும் ஒரு மொழி அவ்வுளவு தான் அதற்கு மேல் அந்த மொழிக்கு எந்த சிறப்பும் இல்லை அது தேவபஷாயும் கிடையாது
  //

  //
  எனக்கும் உலக நாடுகளில் பல தமிழர்கள் நண்பர்களாக இருகிறார்கள் தை புத்தாண்டை அவர்கள் தனி தன்மையோடு வரவேற்கிறார்கள் மிகவும் விரும்புகிறார்கள் .. உலக நாடுகளில் உள்ள அணைத்து தமிழ் சங்ககளிலும் தை புத்தாண்டை மனதார வரவேற்கிறார்கள் .. தமிழர்க்கு என்று பல தனி தன்மைகள் உள்ளது.. மொழி, சமயம் ,மருத்துவம்,கலாச்சாரம்,பண்பாடு என்று அனைத்திலும் வேறு பட்டு தனி தன்மையோடு நிற்கும் தமிழனை
  //

  அதெப்படி சார் உங்கள் வாக்கு படியே. தமிழனும் ஒரு மனித இனத்தின் பங்கு தான் அவன் பெரிதாக தனித்தன்மை கொண்டவன் என்று சொல்ல முடியாது என்று எல்லோருக்கும் விளங்கி இருக்கும். ஆயிரம் மருத்துவ முறைகளில் தமிழனதும் ஒன்று தான்.

  பன்னிரண்டு மாதங்களில் தையும் ஒன்று தான். பொங்கலுக்கு என்று எதற்கு தனிச்சிறப்பு வேண்டிக்கிடக்கு. அதுவும் ஒரு நாள் தான். எந்த நாளில் தமிழ் புத்தாண்டு வந்தால் என்ன. அட புத்தாண்டு என்பதே எதற்கு. இது யாரோ ஒரு மனிதன் ஆரம்பித்த விதி அதற்க்கு தனித்துவம் வாய்ந்த இன்றைய மனிதர் எதற்க்காக அடிமையாக வேண்டும். யாரோ இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் புத்தாண்டு என்று சொன்னானாம் இன்று நாம் அதை கொண்டாட வேண்டுமாம். என்ன ஒரு கிறுக்குத்தனம். எவனோ கண்டுபிடித்த தமிழை அது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதற்காக இன்றைக்கும் அதை நாம் ஏன் பேசிக்க கொண்டிருக்கிறோம். இதை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது. நாமெல்லாம் அவர்களா. நாம் வேறு மனிதர்கள் அல்லவா

  சார் நீங்க எழுதியது இந்த பாணி தான். நான் நிராயுதபாணி சார் என்னை ஆழ விடுங்க.

  இனிமேல் கனிமொழி பிறந்த நாளையே தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவோம். ஹ்ம்ம் பிறந்த நாள் வேண்டாம். கனிமொழி திஹாரிளிருந்து விடுதலை (பெயிலில்) அடைந்த நாள் தான் அதுவரை மானங்கேட்டவனாக இருந்த தமிழனுக்கு புத்தாண்டு நாள். அதை அன்று கொண்டாடுவதன் மூலமே தமிழன் விழிப்புணர்வு பெற்றவனாக முடியும். திராவிடனான அவனது பாரம்பரியம் அப்பொழுதான் பேணப்படும்.

 6. இவர்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா,

 7. தாயுமானவன் அவர்களே…..

  இன்னும் எத்தனை நாள் இப்படியே குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவதாக உத்தேசம்? காலம் மாறிடுச்சு சார்…..இன்னும் அறுபதுகளில் திராவிட இயக்கத்தினர் பயன்படுத்திய துவேஷங்களை பரப்பியே காலம் தள்ள முடியாது…….

  வேணும்னா ஒன்னு செய்யலாம் சார்…..தை ஒன்னாம் தேதி நீங்க வெளியே போய் உங்க ஊர்க்காரர் ஒருத்தர பார்த்து இன்னிக்கு என்ன விஷேசம்னு கேளுங்க….அது நகரமா இருந்தாலும் சரி …..கிராமமா இருந்தாலும் சரி….நானும் வேணும்னா கூட வாரேன்…..அவரு இன்னைக்கு தமிழ் புத்தாண்டுன்னு சொல்லிட்டாருன்னா அதுக்கப்புறம் நாங்க சித்திரையை தமிழ் புத்தாண்டு இல்லைன்னு ஒத்துக்கறோம்……அவருகிட்ட தமிழ் புத்தாண்டு என்னைக்குன்னு கேளுங்க….அந்த தமிழர் சொல்லுவாரு….சித்திரை ஒன்னாம் தேதின்னு…….

  …….இப்படிஎல்லாம் ஓவரா ஆட்டம் போட்டுத்தான் உங்க தமிழின தலைவரு எதிர்க்கட்சியாக்கூட வரமுடியாம போச்சு……
  இந்த மாதிரியான பித்தலாட்ட பிரச்சாரமெல்லாம் இனிமே எடுபடாது சார்…..போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க ……….அதுங்களாவது புத்தியோட பொழைக்கட்டும்……..

 8. அன்பு நண்பர்களே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சித்திரையே ஆண்டின் தொடக்கம் என்பது நமது பஞ்சாங்கத்தின் வாயிலாக நாம் நிருபிக்க முனைகிறோம். இருப்பினும் அதே பஞ்சாங்கத்தில் வருட புருடன் எழுந்தருளுவது எந்த நாளில் என்பதை ஆராய வேண்டுகிறேன். சித்திரையில் வருடம் பிறக்கின்றது என்றால் ஏன் வருட புருடன் தை மாதம் முதல் தேதியில் எழுந்தருளுகின்றார் எனக் கூற முடியுமா ?
  வருடத்தின் புருடன் வருடத்தின் முதல் நாளில் எழுந்தருளுவாரா ? அல்லது வருட முடிவில் எழுந்தருளுவாரா ? என்பதை உங்களது கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
  தை முதல் நாள் என்பது கருணாநிதி போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்டது அன்று. அவரால் அரசாணை வெளியிடப்பட்டது என்பதனாலேயே அதை எதிர்க்க வேண்டும் என்பது மடமை.
  வருட புருடன் எழுந்தருளும் முதல் நாளான தை முதல் நாளே தமிழ் வருடப்பிறப்பாகும் என்பது தெளிவு.

  நக்கினம் சிவம்

 9. அனைவருக்கு வணக்கம் என் அன்பு நண்பர் சாரங் அவர்களுக்கும் வணக்கம்.

  தமிழ்புத்தாண்டு விஷயத்தில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். சித்திரை முதல் நாள் என்பதை உங்கள் விஞ்ஞான வ்யாக்யானத்தின் படி நீங்கள் ஜோசியம் பஞ்சாங்கம் நல்லது கெட்டது பார்க்க( அதில் நம்பிக்கை உள்ளவர்கள் ) ஜாதகம் கணிக்க வைத்து கொள்ளுங்கள் யாரும் உங்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே. வேண்டுமானால் இந்து மத புத்தாண்டு என்று இந்தியா முழுமைக்குமாக வைத்து கொள்ளுங்கள் யார் உங்களை தடுக்க போகிறார்கள் அதான் சொல்லிவிட்டிர்களே “வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு” என்று . எந்த தமிழனும் உங்கள் மீது வழக்கு தொடுத்து நிறுத்த மாட்டான். கவலை வேண்டாம். அனால் தை திங்கள் முதல் நாள் என்பது மார்கழிக்கு பிறகு வரும் ஒரு மனதுக்கு இதம் தரும் இனிய குளுமையான மாதம். உலகிலுள்ள சர்வ மத தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாட கூடிய பாரம்பரிய புத்தாண்டாக அமையட்டும் அந்த மாதம் . சித்திரையில் என்ன இருக்கிறது கொண்டாட.. சுட்டெரிக்கும் வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும். 100 மீட்டார் தூரம் நடந்தாலே நாய்க்கு நாக்கு தள்ளுவது போல் தள்ளி விடுமே நாவறட்சி. வேண்டும் என்றால் சன் t .v யில் போடும் நிகழ்ச்சிகளை வீட்டில் உட்கார்ந்து ரசிக்கலாம்.அதற்கு தான் அது லாயக்கு. இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் உள்ள தமிழ் பழமொழியே சொல்லுவது கூட “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்பது தானே.. தை அன்று தானே உழவன் மகிழ்ச்சியாக தான் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்து புத்தாடை அணிந்து அறுவடை செய்த நெல்லை இறைவனுக்கு பாலும் வெள்ளமும் சேர்த்து காணிக்கை ஆகுகிறான். மீதம் இருக்கும் நெல்லை சந்தையில் விற்று பணம் சம்பாதித்து தன் இன்ப நாட்களை தொடங்குகிறான் . அந்த மகிழ்ச்சியான தருணம் தான் தமிழனுக்கு ஒரு இனிய புத்தாண்டாக அமைய முடியும். “சித்திரையில் பிள்ளை பிறந்தால் நித்திரை கெட்டு போகும்” என்பது தானே சித்திரையின் யோகியதையை சொல்லும் பழமொழி, அன்றைக்கு மருத்துவமனை அறுவை சிகிச்சை fan , a /c போன்ற வசதி இல்லாத காலத்தில் பெண்ணுக்கு பிரசவ வேதனை என்பது பெரிய வேதனையாக அமைந்து இருந்தது .அதிலும் சித்திரையில் பிரசவம் என்பது மரண வேதனையாக இருந்ததால் தானே அப்படி சொல்லி வைத்தார்கள் . இப்போது வந்ததாக இருக்கட்டும் தை தமிழ் புத்தாண்டு இனி வரும் காலங்களில் உலகில் உள்ள தமிழர்கள் சித்திரையை மறந்து தை மாதத்தை மட்டுமே புத்தாண்டாக மனதில் கொள்வார்கள்.அந்த நாள் விரைவில் அமையும். ஆர்ய குலசெல்வர்கள் அதற்காக கவலை படவேண்டாம் …. நன்றி

  //வேணும்னா ஒன்னு செய்யலாம் சார்…..தை ஒன்னாம் தேதி நீங்க வெளியே போய் உங்க ஊர்க்காரர் ஒருத்தர பார்த்து இன்னிக்கு என்ன விஷேசம்னு கேளுங்க….அது நகரமா இருந்தாலும் சரி …..கிராமமா இருந்தாலும் சரி….நானும் வேணும்னா கூட வாரேன்…..அவரு இன்னைக்கு தமிழ் புத்தாண்டுன்னு சொல்லிட்டாருன்னா அதுக்கப்புறம் நாங்க சித்திரையை தமிழ் புத்தாண்டு இல்லைன்னு ஒத்துக்கறோம்……அவருகிட்ட தமிழ் புத்தாண்டு என்னைக்குன்னு கேளுங்க….அந்த தமிழர் சொல்லுவாரு….சித்திரை ஒன்னாம் தேதின்னு…….//

  அட என்ன ஒரு அதிமேதாவிதனமான கண்டுபிடிப்பு ….. சான்றோன் அவர்களே .. 2000 ஆண்டுகளாக ஒரு விஷயத்தை மண்டையில் ஏற்றி வைத்து விட்டு திடீர் என்று மாற்றும்போது அது தொடக்கத்தில் குழப்பமாகவும் மக்களை சென்று அடைவதில் கொஞ்சம் காலதாமதமும் இருக்கும் … அவசரம் வேண்டாம் சான்றோன் அவர்களே .. தை திங்கள் முதல் நாளை புத்தாண்டாக மீண்டும் அறிவியுங்கள் 2000 ஆண்டுகள் வேண்டாம் ஒரு தலைமுறை போதும் சித்திரை புத்தாண்டு என்பது எப்படி புதைந்து மண்ணோடு மண்ணாக போகிறது என்பதை மட்டும் பாருங்கள்… அப்போது நீங்களும் நானும் உயிரோடு இருந்தால் நீங்கள் சொன்னதுபோல் ஊர் ஊராக சென்று ஒவ்வொரு தமிழனிடமும் கேட்போம் அப்போது கிடைக்கும் பதில் எது உண்மையான புத்தாண்டு என்று..

 10. நக்கன் ஐயா அது சங்கராந்தி தேவதை- வருட புருஷன் அல்ல.

 11. 🙂 Oh , “வருட புருடன்” என்பது வருட புருஷனா? நாங்கூட என்னவோ ஏதோ என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

 12. வலைத் தள நிர்வாகிகள் கவனத்திற்கு…

  கட்டுரைகளுக்கான மறுமொழிகளைப் படிக்க, Older/Newer என்று அடுத்தடுத்த பக்கங்களுக்கு விரட்டிச் செல்வது சிரமமாக இருக்கிறது. ஒரே பக்கத்தில் தொடர்ச்சியாகப் படிக்கும் பழைய முறைதான் தேவை.

 13. ஒரு கருணாநிதிக்காக, எவ்வளவோ பெரிய மனிதர்களை,”இவர்கள் முட்டாள்களா? மானம் கெட்டவர்களா? தமிழ் அறிஞர்கள் இல்லையா? ” என்று கேட்டு இழிவு படுத்துவதைவிட, “எனவே இந்தக் கருணாநிதி முட்டாள், மானம் கெட்டவன்” என்று சொல்வதே சாலச் சிறந்ததாகும்.

 14. தாயுமானவன் அவர்களே…..

  சித்திரை தமிழ் வருடப்பிறப்பு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக உள்ள வழக்கம் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி….இதை முதலில் உங்கள் தமிழின தலைவருக்கு சொல்லுங்கள்……இரண்டாயிரம் ஆண்டுகளாக உள்ள வழக்கத்தை இப்போது மாற்றியே ஆகவேண்டும் என்று நீங்கள் துடிப்பதன் மர்மம் என்ன?

  ஒரு சில தலைமுறைகளுக்கு முன்பாக ஏற்பட்ட வழக்கங்களையே ,இது எங்கள் குடும்ப வழக்கம் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் உலகம் இது…..இந்நிலையில் குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள விஷயத்தை மாற்ற இந்த கும்பலுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? சரி மாற்றியதுதான் மாற்றினீர்கள்….உங்கள் மாற்றத்தை ஒரு நாய் கூட மதிக்கவில்லையே ?….பிறகும் என் இந்த வீண் புலம்பல்?

  // சுட்டெரிக்கும் வெய்யிலில் என்ன இருக்கிறது கொண்டாட ? //

  உங்கள் பகுத்தறிவு புல்லரிக்க வைக்கிறது……இயற்கையில் காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை……..மழை எவ்வளவு முக்கியமோ அதே அளவு வெய்யிலும் முக்கியம்……பங்குனி சித்திரையில் நிலம் நன்கு காய்ந்தால்தான் களைகள் முழுவதுமாக காய்ந்து கருகும்…. ஆடி மாத மழை முழுவதுமாக உள்ளே இறங்கும்……நிலம் பதப்படும் …கோடை உழவின் அவசியத்தை யாராவது விவசாயியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்….வெறும் துவேஷ பிரச்சாரத்தை நம்பியே காலம் தள்ளாதீர்கள்…….

 15. சான்றோன் அவர்களே ….

  //உங்கள் பகுத்தறிவு புல்லரிக்க வைக்கிறது……இயற்கையில் காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை……..மழை எவ்வளவு முக்கியமோ அதே அளவு வெய்யிலும் முக்கியம்……பங்குனி சித்திரையில் நிலம் நன்கு காய்ந்தால்தான் களைகள் முழுவதுமாக காய்ந்து கருகும்…. ஆடி மாத மழை முழுவதுமாக உள்ளே இறங்கும்……நிலம் பதப்படும் …கோடை உழவின் அவசியத்தை யாராவது விவசாயியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்….வெறும் துவேஷ பிரச்சாரத்தை நம்பியே காலம் தள்ளாதீர்கள்…….//

  எப்ப்பா….. உலக மகா பெரிய விஞ்ஞான ரகசியத்தை எனக்கு பாடம் எடுத்ததற்கு நன்றி. நான் என்ன சொன்னேன் சித்திரை வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும் என்று தான் கேட்டேனே ஒழிய சித்திரை மாதத்தால் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்றா கேட்டேன் …எதற்கு தேவை இல்லாத இந்த வியாக்கியானம் எல்லாம் எனக்கு தருகிறீர்கள்..அப்படி பார்த்தால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பை இயற்க்கை கொடுத்து இருக்கிறது .தேவை இல்லாத மாதம் என்று ஏதும் இல்லை. நான் சொன்னது புத்தாண்டு கொண்டாடும் விஷயத்தில் தை மாதத்திற்கு உள்ள தகுதி என்ன என்பதை பற்றி தான். அதை என் சென்ற மறுமொழியில் கூறிவிட்டேன். வெறும் பஞ்சாங்க விஷயத்தை அடிப்படையாக வைத்து கொண்டு நீங்கள் ஒரு புத்தாண்டை கொண்டாடும் போது .. நாங்கள் விவசாயத்தை அடிப்படையாக வைத்து புத்தாண்டு கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது … தை மாதம் தமிழ் புத்தாண்டு என்று கூறி அதை சட்டம் ஆக்கினார்களே தவிர சித்தரை புத்தாண்டிற்கு தடை விதித்தார்களா.. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை கடைபிடிக்கட்டும். தை மாதத்தை விரும்புகிறவர்கள்
  தையை புத்தாண்டாக ஏற்று கொள்ளட்டும் .. இறுதியில் எது வெற்றி அடைகிறது என்று பார்த்துகொள்வோம்..

  //ஒரு சில தலைமுறைகளுக்கு முன்பாக ஏற்பட்ட வழக்கங்களையே ,இது எங்கள் குடும்ப வழக்கம் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் உலகம் இது…..இந்நிலையில் குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள விஷயத்தை மாற்ற இந்த கும்பலுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? சரி மாற்றியதுதான் மாற்றினீர்கள்….உங்கள் மாற்றத்தை ஒரு நாய் கூட மதிக்கவில்லையே ?….பிறகும் என் இந்த வீண் புலம்பல்?//

  யார் அதிகாரம் கொடுக்கவேண்டும் … யாரிடம் அதிகாரம் வாங்க வேண்டும்… இது எங்கள் மொழி எங்கள் நாடு (தமிழ்நாடு )…அது சரி சித்திரை புத்தாண்டிற்கு யார் அதிகாரம் கொடுத்தது அதை கொஞ்சம் விளக்கி கூற முடியுமா … மக்களிடம் நாங்கள் பேசி புரியவைத்து கொள்கிறோம் .. நீங்கள் அதை தடுக்காமல் இருந்தால் போதும். மாற்றம் எவ்வுளவு சீக்கிரம் வரும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். மாற்றத்தை நாய் கூட விரும்பவில்லை என்று கூறினீர்கள்.. மறுமொழியில் கொஞ்சம் பண்போடு இனி பேச கற்று கொள்ளுங்கள் அது தான் நாம் சார்ந்து இருக்கும் மதத்திற்கும் பெருமை இருந்தாலும் நீங்கள் கேட்டதால் இந்த நாய் விஷயதிர்ற்கு வருகிறேன்.. நாய்க்கு நன்றி என்கிற ஒரு சிறப்பு குணம் இருந்தாலும்.. தான் எடுத்த வாந்தியை தானே தின்னும் ஒரு அல்ப ஜீவன் நாய் . தன்மானம் என்பது கொஞ்சமும் இல்லாத ஒரு ஜீவன் நாய்.. அந்த நாயாக நீங்கள் இருந்துவிட்டு போங்கள் (உங்கள் மொழியில் சித்திரையை ஆதரிக்கும் ஜீவன்கள்) யாரும் உங்களை தடுக்க போவது இல்லை .. அதான் நாய் கூட மதிக்காத மாற்றம் ஆச்சே அப்புறம் என் கோர்ட்டுக்கு போய் தை புத்தாண்டுக்கு தடை வாங்க சென்றீர்கள் ….. நாய் கூட மதிக்காத தீர்மானம் என்று தைரியமாக போய் இருக்கலாமே…புதிதாக ஆ.தி.மு.க ஆட்சி வந்ததும் தை புத்தாண்டு தீர்மானத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். காலபோக்கில் மக்கள் மனதில் சித்திரை மறைந்து தை மேலோங்கும் என்கிறே அச்சம் தானே கரணம் …2000 ஆண்டுகள், பழமை, பாரம்பரியம், மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு நிகழ்வு என்று நீங்கள் எதை சொன்னாலும் காலம் அதை விட ஆற்றல் வாயிந்தது காலம் பதில் சொல்லும் பொறுத்து இருந்து பாருங்கள்.

 16. தமிழ் புத்தாண்டு ஹிந்துக்களாக இருக்கிற தமிழர்கள் மட்டும் கொண்டாடும் சமய விழா அது அரசியல் விழா அன்று. அதில் தலையிட மதச்சார்பற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை. திரு தாயுமானவன் போன்ற தமிழ் ஆர்வலர்கள் முடிந்தால் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் இஸ்லாமியர்களையோ அல்லது கிறிஸ்தவர்களையோ காட்டலாமே. நாத்திகர்கள் எப்படி புத்தாண்டைக்கொண்டாடுகிறார்கள் என்றும் எம்மைப்போன்றவர்களுக்குக்காட்டலாம். தமிழ் வழிபாட்டை போற்றும் எம்மைப்போன்ற பலர் வேதம், வடமொழி, ஆயுர்வேதம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்க்கிறோம். அவற்றை அவமதிப்பதைக் கனவிலும் நினையோம். யாரோ ஒரு கிறித்தவ மிசநரி சொன்னதை நம்பி நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் போற்றியவற்றை யாம் ஏன் கைவிடவேண்டும். எம் முன்னவர்கள் வழிகாட்டிகள் அருளாளர்களன்றி மிசனரி மதமாற்றிகள் அல்லர் அவரடியெற்றி நடக்கும் நாத்திகம் பேசி நாத்தழும்பேரிகளும் அல்லர்.

 17. சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதை மறுக்கும் சில அன்பர்கள், ‘தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு’ என்று கருணாநிதி கொண்டு வந்ததால்தான் அதைப் பலர் எதிர்க்கிறோம் என்று (நினைத்து?!) அவ்வப்போது கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்கள், இந்த முன்னாள் முதல்வர் தோன்றுமுன்னாலேயே தமிழ் மண்ணில் ஆண்டுப் பிறப்பு சித்திரையில் கொண்டாடப்பட்டு வந்திருப்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

  சித்திரைத் தமிழ் மகளின் பிறப்பைக் கொண்டாடும் எவரும், அதனை மாற்றித் தையில் கொண்டாடத் துடிப்பவர்களைவிட அறிவில், சிந்தனையோட்டத்தில், தேச நலனில், தமிழர் நலனில் கடுகளவும் குறையில்லாதவர்களே. சித்திரை வருடப் பிறப்பின் மூலம் எந்த மூடத் தனத்தையும் தமிழன் கடைப் பிடிக்கவும் இல்லை; அதைத் தைக்கு மாற்றுவதன் மூலம் எந்தப் பகுத்தறிவு சார்ந்த செயலையும் அவன் மேற்கொள்ளவுமில்லை.

  நாட்டுக்குத் தேவையான எத்தனையோ நல்ல காரியங்களைத் திட்டமிட்டு ஆற்ற வேண்டிய பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் (என்று கருதப் படுபவர்கள்), இது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு, அதன் மூலம் பல நல்லவர்களையும் வீண் விவாதத்தில் இறங்க வைத்து, அவர்களின் ஆற்றலை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  மக்களிடம் ஏதோ ஒரு காரணத்தால் செல்வாக்கு வளர்ந்துவிட்டவர்கள், அர்த்தமற்ற கொள்கைகளை?!ப் பரப்புவதை விட்டொழித்தாலே போதும். மக்கள் அவரவர் கோயில், பண்டிகை, தேவை… இன்ன பிறவற்றை எல்லாம் தாங்களாகவே பொருத்தமான முறையில் கடைப் பிடித்துத் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்வார்கள்.

  ‘இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது. எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கிறது’ என்பதைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு, தமக்குச் சம்பந்தமில்லாத, தமக்கு முழுமையான அறிவில்லாத, தாம் கருத்துச் சொல்ல வேண்டியதில்லாத… பல விஷயங்களில் மூக்கை நுழைத்து எல்லாவற்றையும் சிக்கலாக்குகிறார்கள்.

  ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வது, நதி நீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, மக்களை உண்மை உழைப்பின் பெருமையை அறியச் செய்து அதன் மூலம் பொருள் சம்பாதிக்க வைப்பது… என இவை போன்ற பக்கங்களில் தம் மூளையையும் செலவிடாமல், மற்றவரையும் கெடுத்ததுதான் இது போன்ற தேவையற்ற ‘மாற்ற’ முயற்சிகள் கண்ட பலன்.

  மக்களை இவர்கள் வழி நடத்த வேண்டாம். சும்மா இருந்தாலே போதும். தமிழரும் இந்தியரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலை மெனக்கெட்டுச் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டைத் தைக்கு மாற்றுகிறார்களாம். தை மாதப் பிறப்பைத்தான் தமிழர்கள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்… என்றெல்லாம் கொண்டாடுகிறோமே.

  என்னமோ தை முதல் நாளை துக்க நாளாகத் தமிழர்கள் அனுசரித்து வருவது போலவும் இவர்கள் தாம் அதை மகிழ்ச்சி பொங்கும் நாளாக ஆக்கிவிட்டதாகவும் கதைக்கிறார்கள். அட ஆண்டவா…!

 18. மயில் வாகனன் on February 28, 2012 at 7:43 pm
  “ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வது, நதி நீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, மக்களை உண்மை உழைப்பின் பெருமையை அறியச் செய்து அதன் மூலம் பொருள் சம்பாதிக்க வைப்பது… என இவை போன்ற பக்கங்களில் தம் மூளையையும் செலவிடாமல், மற்றவரையும் கெடுத்ததுதான் இது போன்ற தேவையற்ற ‘மாற்ற’ முயற்சிகள் கண்ட பலன்.”
  “என்னமோ தை முதல் நாளை துக்க நாளாகத் தமிழர்கள் அனுசரித்து வருவது போலவும் இவர்கள் தாம் அதை மகிழ்ச்சி பொங்கும் நாளாக ஆக்கிவிட்டதாகவும் கதைக்கிறார்கள். அட ஆண்டவா…!”

  அற்புதம் மயில்வாகனரே ,

  நல்ல சாட்டையடி கொடுத்துள்ளீர். ஆனால் அந்த ஜடங்களுக்கு உறைக்குமா?

  உண்மை பகுத்தறிவு

 19. தாயுமானவனுக்கு எந்த ஊரோ?

  மு க வை ஆதரிக்க ஆரம்பித்து விட்டாலே இருக்கும் மூளையையும் விற்று விடுவீர்களோ?


  எப்ப்பா….. உலக மகா பெரிய விஞ்ஞான ரகசியத்தை எனக்கு பாடம் எடுத்ததற்கு நன்றி. நான் என்ன சொன்னேன் சித்திரை வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும் என்று தான் கேட்டேனே ஒழிய சித்திரை மாதத்தால் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்றா கேட்டேன் …
  “”

  சித்திரை மாதத்தில் என்ன கொண்டாட்டத்தைக் காண முடியும் என்று கேட்க்கும் அறிவுக் கொழுந்தே கொஞ்சம் சித்திரை மாதம் மதுரைப் பக்கம் போய்ப் பாரும். லட்சக்கணக்கான மக்கள் சித்திரைத் திருவிழாவில் எதைக் கொண்டாடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சித்திரைத் திருநாள் அன்று சித்திரை மாதம் பொளர்ணமி அன்று மதுரையின் அனைத்துக் கிராமங்களில் இருந்தும் லட்சக்கணக்கான எளிய மனிதர்கள் மதுரையில் தண்ணீரே ஓடாத வைகை ஆற்றில் கூடி முடி காணிக்கை கொடுத்து அழகரை வணங்கிக் கொண்டாடிச் செல்கிறார்கள். அதற்கு இணையாக இன்னொரு கொண்டாட்டத்தைக் காட்ட முடியுமா? ஒவ்வொரு கிராமத்துக் கோவில்களுக்கும் சென்றால் சித்திரை மாதம் எதைக் கொண்டாடுகிறார்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும். சுட்டெரிக்கும் கோடை மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில்தான் தமிழர்களின் பெரும்பாலான திருவிழாக்களே நடை பெறுகின்றன.

  தி மு க மாநாட்டில் குவாட்டர் அடித்து விட்டு வேட்டி அவிழக் குப்பை மேட்டில் குப்புறப் படுத்துத் திரியும் உன்னைப் போன்ற உளுத்துப் போனவர்களுக்கு எல்லாம் சித்திரைக் கொண்டாடம் பற்றித் தெரியாமல் போனதில் அதிசயமில்லைதான்.
  பண்பாடும் தெரியாது கலாச்சாரமும் தெரியாது. காழ்ப்பையும் வெறுப்பையும் பரப்ப மட்டுமே தெரிந்த மூடர்களாக்கி வைத்திருக்கின்றன கேடு கெட்ட திராவிட ஆட்சிகள்.

  சித்திரை மாதத்தில் எதைக் கொண்டாட முடியும் என்று முட்டாள்த்தனமாக உளறும் முக குஞ்சே கொஞ்சம் பங்குனி மாதம் (அதும் சுட்டெரிக்கும் கோடைதான்) தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பெரிய கோவில்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று பார்த்தால் அங்கு எதைக் கொண்டாடுகிறார்கள் என்று தெரியும். பங்குனி உத்திரம், பங்குனித் தேர், பங்குனித் திருவிழாக் கொண்டாடாத கோவில்களையும் மக்களையும் தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும் காண முடியுமே? ஒரு வேளை சென்னையைத் தாண்டிப் போயிராத கழகக் கண்மனியோ?

  தன்னைச் சுற்றி என்ன திருவிழாக்கள் நடக்கின்றன என்ன கொண்டாட்டங்கள் நடக்கின்றன என்ற பொது அறிவு கூட இல்லாமல் கிளம்பி விட்டார்கள் கருணாநிதிக்கு ஜால்ரா தட்ட. அடுத்த முறை பொது இடத்தில் வந்து எழுதும் பொழுது கொஞ்சமாவது மூளையைப் பயன் படுத்தி யோசித்து எழுதவும். அது, சரி இல்லாத விஷயத்தைப் போய் எப்படி பயன் படுத்துவது?

  சுட்டெரிக்கும் வெயிலையும், கொட்டும் மழையையும், வசந்தத்தையும், குளிரையும் ஒவ்வொரு பருவ நிலையையும் கொண்டாடக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் எங்கள் முன்னோர்கள். வெயில் இன்றி மழை இல்லை மழை இன்றி பனி இல்லை பனி இன்றி தென்றல் இல்லை. இவையெல்லாம் உலகத்தின் அற்புத சுழற்சியில் நிகழ்பவை. உங்களைப் போன்ற அற்பர்களுக்கு அவையெல்லாம் புரியாமல் போனதினால்தான் சித்திரை மாதத்தில் எதைக் கொண்டாட முடியும் என்று லூசுத்தனமாக உளற முடிகிறது.

 20. தயுமானவனுக்கு தக்க பதிலடி கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
  தையில் புத்தாண்டு பிரசாரத்தை இங்கு வந்து செய்வதை ஆமதிக்க கூடாது. கட்டுரையில் சித்திரை புத்தாண்டிற்கு எண்ணற்ற தரவுகள் இலக்கிய வழியில் கொடுத்திருந்தும் இங்கு வந்து தி முக சோம்பு அடிப்பவர்களை அனுமதிக்க கூடாது.

 21. \\\\\\\\\இப்படிஎல்லாம் ஓவரா ஆட்டம் போட்டுத்தான் உங்க தமிழின தலைவரு எதிர்க்கட்சியாக்கூட வரமுடியாம போச்சு\\\\\

  ஸ்ரீ சான்றோன் அவர்கள் அன்பர் தாயுமானவர் தன் தனித்தமிழ் பற்றினை வெளிப்படுத்தியதை (பல இடங்களில் தாயுமானவரின் தர்க்கம் இடிக்கிறது) மட்டும் வைத்து அவரை கழகத் தலைவருடன் சம்பந்தம் வைத்துப்பேசுவதாக தோன்றுகிறது. அவர் கழக விஸ்வாசியா தெரியாது. தனித்தமிழ்ப் பற்றாளர் என்பது தாண்டவம் வ்யாசத்தின் அவர் உத்தரத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

  தமிழ் மொழியொடு ஸம்ஸ்க்ருதம் கலப்பதற்காக சாமியாடும் ஆனால் கவலையே படாது சகட்டு மேனிக்கு கூசாது ஆங்க்லத்தை தமிழொடு கலந்து எழுதும் சாமியாடிகளை பார்க்குங்கால் அன்பர் தாயுமானவன் அவர் கருத்து (என் மொழிநடை அவருக்கு கசக்கவே செய்யும்) ஒப்புக்கொள்ள இயலாவிடினும் கண்யமானது.

  ஸ்ரீ ஜடாயுவின் “தாண்டவம்” வ்யாசத்திற்கான அவரது ( 16-05-2011) உத்தரத்தில், அவர் சொல்லியுள்ளது,

  \\\\ வடமொழி மட்டும் இல்லை தற்சமயம் தமிழில் கலந்து வழங்கி வரும் இந்தி, ஆங்கிலம்,உருது,பாரசீகம் போன்ற எந்த அயல் மொழிகளையும் தமிழில் ஏற்று கொள்ள முடியாது என்பது தான் என் பேச்சு.. மதத்தில் கலப்பு ஏற்பட்டு விடகூடாது என்று நினைக்கும் இந்த இடத்தில தான் மொழியிலும் கலப்பு ஏற்பட கூடாது என்னும் வாதத்தையும் என்னால் வைக்க இயலும்.\\\\

  ஆனால் அவர் தனித் தமிழ் பற்று மோசமாக கண்ணை மறைத்ததாகவே தெரிகிறது.

  \\\ஆரிய புராண இதிகாசங்கள் போல பொய்யான கற்பனையான நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத புரட்டுகளை சொல்லும் இலக்கியங்கள் அல்ல தமிழ் இலக்கியங்கள்.. தமிழர்களின் அன்றைய வாழ்கைமுறை காதல், வீரம், தமிழ் மன்னர்கள் மேற்கொண்ட வீரமிக்க போர்கள் தமிழர்களின் கொடைத்தன்மை போன்ற நடந்த உண்மை வரலாறை கூறும் கால பெட்டகங்கள் அவை.\\\\

  இதிஹாசங்கள் – ராமாயணம், மஹாபாரதம். கம்பநாட்டாழ்வாரும் வில்லிபுத்தூராழ்வாரும் முறையே தமிழில் ராமாயணம் மற்றும் மஹாபாரதம் இயற்றியுள்ளனர். தாயுமான ஸ்வாமி சொல்ல வருவது என்ன. கம்ப ராமாயணமும் வில்லி பாரதமும் இலக்கியமல்லவா அல்லது அவை தமிழில் இயற்றப்பட்டவையன்றா.

  தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் புராண கருத்துக்களை ஸ்ரீமான் கந்தர்வன், ஸ்ரீமதி ஜெயஸ்ரீ அவர்களின் பல வ்யாசங்களில் இந்த தளத்திலேயே அன்பர் தாயுமானவன் வாசித்து மகிழலாம். அவையெல்லாம் என்ன புரட்டுகளா?

  பிற மொழி அறவே கலவாது தமிழ் புழங்க வேண்டும் என்ற தாயுமானவர் கருத்து மிக மேலானது. ஆனால் நடைமுறையில் மிகக் கடினமானது.

  \\\\சம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்று ஒரு முட்டாள்தனமான கீழ்த்தரமான ஒரு நம்பிக்கை \\\\

  கடவுளே. தமிழைக்கூட தெய்வத்தமிழ் என்று தான் சொல்கிறோம். சம்ஸ்க்ருதம் மட்டுமல்ல தமிழ் மட்டுமல்ல. ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அனைத்து மொழிகளும் இறைவனிடமிருந்தே உண்டானதாகத் தான் அனைத்து மொழி பேசுபவர்களும் நம்புகிறார்கள். இது நம்பிக்கை தான். அதற்கு ஏன் மட்டமான விகுதிகள் கொடுத்து தாயுமானவர் மகிழ்கிறார்.

  \\\\எந்த தனி தன்மையும் தமிழனுக்கு இருக்க கூடாது.அனைத்தும் ஆரியத்தின் எச்சமாக இருக்க வேண்டும் . தமிழ்மொழி சமஸ்க்ருததின் எச்சமாக இருக்க வேண்டும், தமிழ்இலக்கணம் பாணினியின் எச்சமாக இருக்கவேண்டும், சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்\\\\

  எச்சம், மிச்சம், சொச்சம் எல்லாம் பழங்கதை. தனித்தமிழ் போற்றுபவரிடையே தனித்தமிழ் என்றென்றும் ப்ரகாசமாக ஒளிரவே செய்யும். ஆனால் அதே சமயம் “ஒய் திஸ் கொலவெறி” கூட நிதர்சனம் தான். இது புரிந்து விட்டால் ஆரியம் த்ராவிடத்தை நசுக்குகிறது என்ற மாயையெல்லாம் திரைபோல் விலகும்.

  பின்னும் ஆரியம் சம்பந்தமான தவறான நம்பிக்கைகள் தவிர்த்து அன்பர் தாயுமானவரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றுக்கு வாழ்த்துக்கள்.

  \\\\ மறுமொழியில் கொஞ்சம் பண்போடு இனி பேச கற்று கொள்ளுங்கள் அது தான் நாம் சார்ந்து இருக்கும் மதத்திற்கும் பெருமை\\\\

  பண்பு பிறழாமைக்கும் மேற்கொண்டு வாழ்த்துக்கள்.

  \\\\தி மு க மாநாட்டில் குவாட்டர் அடித்து விட்டு வேட்டி அவிழக் குப்பை மேட்டில் குப்புறப் படுத்துத் திரியும் உன்னைப் போன்ற உளுத்துப் போனவர்களுக்கு எல்லாம் சித்திரைக் கொண்டாடம் பற்றித் தெரியாமல் போனதில் அதிசயமில்லைதான்.\\\\சித்திரை மாதத்தில் எதைக் கொண்டாட முடியும் என்று முட்டாள்த்தனமாக உளறும் முக குஞ்சே \\\\

  ஸ்ரீ விஸ்வாமித்ரரின் தர்க்க ஞாயங்கள் வியக்க வைப்பவையே. ஆனால் மேற்கண்ட வாசகங்கள் தமிழ்ஹிந்து தளத்தின் நெறிமுறைக்குட்பட்டவையா? குறிப்பாக, சிகப்பு எழுத்துக்களில் ஒவ்வொரு வ்யாசத்தினடியிலும் காணக்கிடைக்கும் கீழ்க்கண்ட வாசகங்கள்

  \\\\தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் \\\

  கருத்துப் பரிவர்த்தனங்களிடையே வசவுகள் குறைபாடாகவே தெரிகின்றன.

 22. நாகரிகம் தெரியாமல் மறுமொழியிடும் ஆரிய குஞ்சு விஸ்வாமித்ரா உங்கள் அற்ப அறிவுக்கு இதோ என்ன பதில்

  //சித்திரை மாதத்தில் என்ன கொண்டாட்டத்தைக் காண முடியும் என்று கேட்க்கும் அறிவுக் கொழுந்தே கொஞ்சம் சித்திரை மாதம் மதுரைப் பக்கம் போய்ப் பாரும். லட்சக்கணக்கான மக்கள் சித்திரைத் திருவிழாவில் எதைக் கொண்டாடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சித்திரைத் திருநாள் அன்று சித்திரை மாதம் பொளர்ணமி அன்று மதுரையின் அனைத்துக் கிராமங்களில் இருந்தும் லட்சக்கணக்கான எளிய மனிதர்கள் மதுரையில் தண்ணீரே ஓடாத வைகை ஆற்றில் கூடி முடி காணிக்கை கொடுத்து அழகரை வணங்கிக் கொண்டாடிச் செல்கிறார்கள். அதற்கு இணையாக இன்னொரு கொண்டாட்டத்தைக் காட்ட முடியுமா? ஒவ்வொரு கிராமத்துக் கோவில்களுக்கும் சென்றால் சித்திரை மாதம் எதைக் கொண்டாடுகிறார்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும். சுட்டெரிக்கும் கோடை மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில்தான் தமிழர்களின் பெரும்பாலான திருவிழாக்களே நடை பெறுகின்றன.//

  ஏன் ஆடி, கார்த்திகை,மார்கழி என்று எல்லா மாதங்களிலும் தான் எதாவது ஒரு தெய்வத்திற்கு எதாவது ஒரு விழா நடக்கிறது அதற்காக அணைத்து மாதங்களையும் புத்தாண்டாக அறிவிக்க முடியுமா. சாமி திருவிழா என்று எப்போது நடந்தாலும் மக்கள் கூட்டம் வந்து கொண்டே தான் இருக்கும் .. அதற்க்கும் கால நேரத்திற்கும் சம்மந்தம் இல்லை… இன்னும் சொல்ல போனால் புத்தாண்டிற்கும் அதற்க்குமே தொடர்பு இல்லை.. நாளைக்கே ரோட்டுல ஒரு சாமி ஊர்வலம் போன அதுக்கும் ஒரு கூட்டம் அடிச்சிகிட்டு வந்து நிக்கும் அதோடு இதை முடிச்சு போடாதீர்கள் விஸ்வாமித்ரா … நான் சொன்ன கொண்டாட்டம் அது அல்ல …தண்ணி இல்லாத ஆத்துல மண்டைய பொலகுற வெய்யில்ல நின்னு சாமி அருளும் வரமும் தருவார் நிக்கறதுக்கு பேரு கொண்டாட்டம் இல்ல.. அது ஒரு நம்பிக்கை அவ்ளோதான்.. கொண்டாட்டம் என்பது மதம் ஜாதி இவைகளை கடந்து இனத்தால் மக்களை ஐக்கிய படுத்துவது எதுவோ அதற்க்கு பெயர் தான் கொண்டாட்டம்.. எந்த நாள் நமக்கு உணவு அளிக்கும் உழவனுக்கு கொண்டாட்டமோ அது தான் உண்மையான புத்தாண்டாக அமைய தகுதியான நாள் .. அந்த தகுதி நிச்சயமாக தை திங்களுக்கு மட்டுமே தான் இருக்கிறது. உங்கள் ஜோதிட தர்மபடி நீங்கள் விருப்பபட்டால் இந்து முறைப்படி சித்தரை புத்தாண்டை கொண்டாடுங்கள் யாரும் உங்களை தடுக்க போவது இல்லை.. அனால் தை திங்கள் புத்தாண்டை எந்த தமிழனும் கொண்டாடகூடாது என்று சொல்ல உங்கள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை எந்த தகுதியும் கிடையாது. இந்து முஸ்லிம் கிறிஸ்தவன் என்கிற மதம் கடந்து நான் தமிழன் என்கிற எண்ணத்தோடு இருக்கும் அனைவருக்கும் தை திங்கள் மட்டுமே ஒரு இனிய புத்தாண்டாக அமைய முடியும்.(உடனே முஸ்லிமும் கிறிஸ்தவனும் தை திங்களை ஏற்று கொள்ள மாட்டான் என்று ஜல்லி அடிக்க வேண்டாம் ஏற்று கொள்பவர்கள் இருகிறார்கள் நாள் அடைவில் அது பெருகும்)

  //தி மு க மாநாட்டில் குவாட்டர் அடித்து விட்டு வேட்டி அவிழக் குப்பை மேட்டில் குப்புறப் படுத்துத் திரியும் உன்னைப் போன்ற உளுத்துப் போனவர்களுக்கு எல்லாம் சித்திரைக் கொண்டாடம் பற்றித் தெரியாமல் போனதில் அதிசயமில்லைதான்.
  பண்பாடும் தெரியாது கலாச்சாரமும் தெரியாது. காழ்ப்பையும் வெறுப்பையும் பரப்ப மட்டுமே தெரிந்த மூடர்களாக்கி வைத்திருக்கின்றன கேடு கெட்ட திராவிட ஆட்சிகள்.//

  விஸ்வாமித்ரா அவர்களே கொஞ்சம் நாகரீகதோடும் பண்போடும் மறுமொழியிட கற்று கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும் மரியாதை நீங்கள் சார்ந்து இருக்கும் சனாதன இந்து மதத்திற்கும் பெருமை . தை புத்தாண்டை ஆதரித்தால் நான் தி.மு.க காரன் என்று அர்த்தமா கருணாநிதிக்கு கோஷம் போடுபவன் என்று பொருளா. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்த தை புத்தாண்டு ஒன்னும் கருணாநிதியின் மூளையில் இருந்து உதித்த விஷயம் அல்ல.. அதன் வரலாறு உங்களுக்கு தெரியும் பச்சையப்பன் கல்லூரியில் 1921 மறைமலை அடிகள் , திரு வி. க போன்ற ஒப்பற்ற 500 தமிழ் அறிஞர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான் இந்த தை தமிழர் புத்தாண்டு. மறைமலை அடிகளை விடுங்கள் இந்து உலகமே போற்றும் திரு.வி.க இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை முன் மொழிந்தவர்களில் ஒருவர் என்பதை மறந்து விடவேண்டாம் .. திரு.வி.க வின் கட்டுரையை இதே தமிழ்ஹிந்து தளம் வெளியிட்டு புளங்காகிதம் அடைந்ததே அவர் நினைத்தால் மறுப்பு அன்றைக்கே வெளியிட்டு இருக்க முடியாதா.. ஆகவே இனியாவது தை புத்தாண்டை அதரிபவர்களை கருணாநிதியின் கைகூலிகள் என்று கூறுவதை நிறுத்தி கொள்ளுங்கள்… உங்கள் அளவுக்கு நானும் இறங்கி வந்து பேசமுடியும் ஆனால் அப்படி பேசி என்ன மதிப்பை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை … இனியாவது பண்போடு மறுமொழியிட பழகி கொள்ளுங்கள் .nandri

 23. ஒரு சின்ன திருத்தம்….
  //விஸ்வாமித்ரா அவர்களே கொஞ்சம் நாகரீகதோடும் பண்போடும் மறுமொழியிட கற்று கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும் மரியாதை நீங்கள் சார்ந்து இருக்கும் சனாதன இந்து மதத்திற்கும் பெருமை .//

  விஸ்வாமித்ரா அவர்களே கொஞ்சம் நாகரீகதொடும் பண்போடும் மறுமொழியிட கற்று கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும் மரியாதை நாம் சார்ந்து இருக்கும் சனாதன இந்து மதத்திற்கும் பெருமை … விரைவாக தட்டச்சு செய்ததில் கவனிக்காமல் பிழை ஆனதற்கு மன்னிக்கவும். உங்கள் என்பதை நாம் என்று மாற்றி கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன்

 24. தாயுமானவன் அவர்களே….

  //சித்திரை வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும் என்று தான் கேட்டேனே ஒழிய சித்திரை மாதத்தால் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்றா கேட்டேன் //

  நான் சொல்ல விரும்பிய விஷயத்தை திரு. விஸ்வாமித்ரா அவர்கள் நெத்தியடியாக விளக்கி விட்டார்…..போதும் என்று நினைக்கிறேன்….போதாதென்றால் என் பங்குக்கு நானும் சித்திரையில் கொண்டாடப்படும் விழாக்களை பட்டியலிடுகிறேன்…….

  // யார் அதிகாரம் கொடுக்கவேண்டும் … யாரிடம் அதிகாரம் வாங்க வேண்டும்… இது எங்கள் மொழி எங்கள் நாடு (தமிழ்நாடு //

  ஓவரா சீன் போடாதீங்க சார்….நானும் தமிழன்தான்…..உங்கள் பகுத்தறிவு பகலவன் பாஷையில் சொன்னால் பச்சை தமிழன்….ஆனால் தமிழின் பெயரால் வயிறு வளர்க்காதவன்…..தமிழனை திட்டியே காசு சம்பாதித்து , அதை வைத்தே தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் வித்தை தெரியாதவன்…..மற்றவர் நம்பிக்கையை மதிக்கும் நாகரீகம் தெரிந்தவன்…..

  எங்கள் நம்பிக்கையை மாற்றி அமைக்க முயற்சி செய்து அதில் படுதோல்வி கண்டவர் கருணாநிதி…..நான் அதைத்தான் சுட்டிக்காட்டினேன்….கருணாநிதிக்கு சட்ட சபையில் பெரும்பான்மை இல்லை…..காங்கிரஸ் புண்ணியத்தில் தான் அவர் ஆட்சி நடந்தது…இந்த மாற்றத்தை கொண்டுவரும் முன் கருணாநிதி மக்கள் கருத்தை கேட்டாரா?கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்…..இப்போது கூட ஒன்றும் மோசமில்லை….ஒரு உண்மையான கருத்துக்கணிப்பு நடத்திப்பாருங்கள்…..உண்மை உங்கள் முகத்தில் அறையும்……மைனாரிட்டி ஆட்சி நடத்திய கருணாநிதிக்கு புத்தாண்டை மாற்றும் அதிக்கரம் இருக்கும்போது முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்யும் ஜெயலலிதாவுக்கு அதை ரத்து செய்யும் அதிகாரம் கிடையாதா?

  தமிழ் புத்தாண்டு என்பது மத நம்பிக்கை சம்பத்தப்பட்டது…..அதை அனாவசியமாக மொழியோடு இணைத்து குழப்பிகொள்வது நாத்திகர்கள் தான்….ஹிந்துக்கள் அல்லாத எவரும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது கிடையாது……..தமிழர்களாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதில்லை..கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனுசரிக்கும் விஷயத்தை நாத்திகர்கள் ஏன் மாற்ற வேண்டும்?

  சிறுபான்மையினர் விஷயம் என்றால் நவ துவாரங்களையும் இறுக்க மூடிக்கொள்பவர்கள் ஹிந்துக்கள் விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏன்?
  // நாங்கள் விவசாயத்தை அடிப்படையாக வைத்து புத்தாண்டு கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது //

  என் முதல் மறுமொழியிலேயே இதற்கான பதில் இருக்கிறது….[ கோடை உழவு ] உழவில் தான் விவசாயம் ஆரம்பிக்கிறது என்பதாவது தெரியுமா? ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் முன் இறைவனை வணங்குவதுதான் எங்கள் [ தமிழர்கள் ] பண்பாடு……வருடப்பிறப்பன்று இறைவனை வணங்கிவிட்டு உழவை ஆரம்பிப்பதுதான் எங்கள் வழக்கம்…..

 25. திருவிழா என்றால் அது கொண்டாட்டம்தான். விழா என்றால் க்வார்ட்டருக்கு ஆள் பிடிக்கும் சமாச்சாரம் என்ற புரிதல் உள்ளவர்களுக்கு அது புரியாது.

  வெயிலைக் கண்டு அஞ்சி நடுங்கி ஒளிந்து கொள்ளுவது ஐரோப்பியர்களுக்குப் பழக்கமாக இருக்கலாம்.

  அல்லது அந்த வெள்ளைத் துரைமார்களைக் கண்டு நடுங்கி அவர்கள் கால்களின் மலத்தைக் கழுவி குடிப்பதில் பெருமை அடையும் திராவிடக் கும்பல்களுக்கும் அச்சம் தரலாம்.

  ஆனால், வெயிலில் பிறந்து வெயிலோனை தையில் வணங்கும் தமிழ் இந்துக்களுக்கு வெயில், காதலின் வெம்மை போல் இனிமையே.

  எதையுமே கொண்டாடத் தெரியாத, ரசிக்க முடியாத, நுணுக்கமான உணர்வுகளே இல்லாத நபும்சக மனநிலைக்கு திராவிடர் கழக மன நிலை என்று பெயர். கிருத்துவப் பிரச்சாரங்களை மறுபதிப்புச் செய்து செய்து அவர்களுக்கு இன்பமான உணர்வுகள் மழுங்கிப் போய் இருக்கலாம்.

  வாழ்வைக் கொண்டாடுவதுதான் இந்து மதம். கொண்டாட்டத்தைத் தொடருங்கள் என்று சொல்லுவது இந்துத்துவம்.

  இயற்கையை தெய்வமாகக் காணும் இந்துக்களுக்கு மட்டுமே இயற்கையை அதன் ஒவ்வொரு வடிவத்திலும் கொண்டாட முடியும்.

  மேலும், இந்திய மரபின்படி கொண்டாட்டம் என்பது இரவில் அதிகம். வெயில் கால இரவு போல சுகமான இரவு வேறு உண்டா ?

  இள வேனில் இரவு பற்றிப் பாடாத புலவரும் உண்டோ ?

  ஆதலால் கதிரோனைக் காதல் செய்வீர் சகத்தீரே !

  .

 26. அன்புள்ள சான்றோன்,

  உங்கள் மறுமொழி நன்றாக உள்ளது.

 27. அன்பு நண்பர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ……….

  //தமிழ் மொழியொடு ஸம்ஸ்க்ருதம் கலப்பதற்காக சாமியாடும் ஆனால் கவலையே படாது சகட்டு மேனிக்கு கூசாது ஆங்க்லத்தை தமிழொடு கலந்து எழுதும் சாமியாடிகளை பார்க்குங்கால் அன்பர் தாயுமானவன் அவர் கருத்து (என் மொழிநடை அவருக்கு கசக்கவே செய்யும்) ஒப்புக்கொள்ள இயலாவிடினும் கண்யமானது//

  எனக்கு கசக்கவில்லை வருத்தம் அளிக்கிறது அவ்வளவுதான் அந்த வருத்தம் என்பது தாண்டவம் சிறுகதையை படித்து விட்டு ஒரு தொன்மையான மதத்தில் கிறிஸ்தவர்கள் செய்யும் கலப்படத்தை நினைத்து நீங்கள் அடைந்த வருத்தத்தை போன்றது தான் என் வருத்தமும் … அதற்காக நான் சக தமிழன் (கண்டிப்பாக தமிழை எந்த உள்நோக்கமும் இல்லாமல் நேசிப்பவன் ) என்கிற முறையில் முடிந்த அளவு வடசொற்களை நீக்கி தமிழை பயன்படுத்துங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கலாம்.. அதற்க்கு மேலும் உங்களுக்கு இந்த மணிப்ரவாள நடை தான் பிடித்து இருக்கிறது எனும் போது அதை உங்கள் விருப்பத்திற்கே விடுவது தான் நாகரிகம் .. அதைவிடுத்து இந்த மொழி நடையை பயன்படுத்தகூடாது என்று உங்களை கண்டிபதோ ஏளனம் செய்வதோ தர்மம் ஆகாது… அதை தான் இங்கு இருக்கும் அனைவரிடமும் கூறுகிறேன் உங்களுக்கு சித்திரை திங்களில் புத்தாண்டு கொண்டாடுவது பிடித்து இருக்கிறதா தாரளமாக அதை கடைபிடியுங்கள் யாரும் தடுக்கபோவது இல்லை. அதற்காக தை திங்களில் புத்தாண்டு கொண்டாடுவதை ஏன் தடை செய்ய முற்படுகிறீர்கள் என்பது தான் என் வாதம். மணிப்ரவாள நடை பிடித்தால் மனிப்ரவாளத்தை ஏற்று கொள்ளட்டும் தனி தமிழ் பிடித்தால் தனி தமிழ்… மக்கள் கால போக்கில் எதை ஏற்று கொள்கிறார்களோ அதை மேற்கொள்ளட்டும்.

  //அவர் கழக விஸ்வாசியா தெரியாது//

  நிச்சயமாக இல்லை. தை திங்களை தமிழ் புத்தாண்டாக கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அவ்வுளவுதான். அதற்கு மேல் நான் கழக விசுவாசி எல்லாம் கிடையாது.

  திரு. சான்றோன் அவர்களுக்கு ….
  //தமிழ் புத்தாண்டு என்பது மத நம்பிக்கை சம்பத்தப்பட்டது…..அதை அனாவசியமாக மொழியோடு இணைத்து குழப்பிகொள்வது நாத்திகர்கள் தான்….ஹிந்துக்கள் அல்லாத எவரும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது கிடையாது……..தமிழர்களாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதில்லை..கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனுசரிக்கும் விஷயத்தை நாத்திகர்கள் ஏன் மாற்ற வேண்டும்?//

  தமிழ் என்கிற சொல் மொழியை குறிப்பதா அல்லது மதத்தை குறிப்பதா. மதத்தை குறிப்பது என்றால் அப்போது தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என்போர் யார்.. தமிழ் புத்தாண்டு என்று வரும்போது அது அணைத்து தமிழர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே அல்லாமல் குறிப்பிட்ட ஒரு மத பண்பாட்டை மட்டும் ஒட்டியவர்களுக்கு மட்டுமே இருப்பது நிச்சயம் நியாயம் ஆகாது. அதற்காக சித்திரையை கொண்டாட கூடாது என்று யாரும் இங்கு சொல்லவில்லை. நீங்கள் இந்து முறைப்படி சித்திரையை கொண்டாடுங்கள் தவறு இல்லை அனால் தை திங்களில் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதை தடுக்காதீர்கள் என்று தான் உங்களிடம் கேட்கிறோம்.

  //தமிழர்களாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதில்லை.//

  ஆமாம் கொண்டாடுவது இல்லை தான் ஒத்துகொள்கிறேன் ஆனால் ஏன் கொண்டாடுவது இல்லை என்பது தான் இங்கு முக்கியமான கேள்வி. சோதிடம், பஞ்சாங்கம், உத்தராயணம், தட்சிணாயனம் போன்ற இந்து மதத்திற்கே உரித்தான விஷயங்கள் இதில் அடங்கி இருக்கிறது அது அவர்களின் மதத்திற்கு எதிரானவை என்று நினைப்பதால் சித்திரை புத்தாண்டை அவர்கள் இயல்பாக ஏற்று கொள்வது இல்லை.. அனால் தை புத்தாண்டு என்பது அப்படி அல்ல .. இதில் மதம் என்பதற்கே இடம் இல்லை தமிழனாக மட்டுமே தன்னை நினைப்பவன் கொண்டாட அணைத்து தகுதிகளும் உள்ள ஒரு புத்தாண்டாக இது அமையும்.. வாதத்திற்காக சொல்லவில்லை எத்தனையோ இஸ்லாமிய கிறித்துவ நண்பர்கள் தை நன்னாளில் எனக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆகவே தை புத்தாண்டு மலரட்டும் மதம் கடந்து தமிழர் என்கிற உணர்வு நீடிக்கட்டும் அதற்க்கு நீங்கள் தடை போட வேண்டாம் . நன்றி

 28. தாயுமானவன்

  முதலில் கடும் சொற்களுக்கு மன்னிக்கவும். வழக்கமாக இவை போன்ற திரிகளில் வந்து குழப்பம் ஏற்படுத்தும் ஒரு நபர் என்று நினைத்து சற்று கடுமையான சொற்களைப் பயன் படுத்தி விட்டேன். நீங்கள் அவர் இல்லை என்பது உங்கள் பதிலைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. தவறு என்னுடையதுதான். மன்னிக்கவும். அந்த நபரிடம் எவ்வளவு நயமாகச் சொல்லியும் மேலும் மேலும் பொய்யான தகவல்களையும், அவதூறுகளைப் பரப்பியும் பெயர்களை மாற்றியும் எழுதி வருவதால் ஏற்பட்ட எரிச்சலில் அவரின் செயல்களைத் தடுக்கும் என்று நினைத்துச் சொல்லப் பட்ட வரிகள் அவை. எனது கடுமையான சொற்களுக்குத் தகுதியான நபர் அவர். இங்கு மட்டும் அல்ல இன்னும் பல இடங்களிலும் இதைச் செய்து வருகிறார் அவர்.

  இப்பொழுது நீங்கள் சொன்னதை நீங்களே ஒரு முறை படியுங்கள்:

  —————
  சித்திரையில் என்ன இருக்கிறது கொண்டாட.. சுட்டெரிக்கும் வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும். 100 மீட்டார் தூரம் நடந்தாலே நாய்க்கு நாக்கு தள்ளுவது போல் தள்ளி விடுமே நாவறட்சி. வேண்டும் என்றால் சன் t .v யில் போடும் நிகழ்ச்சிகளை வீட்டில் உட்கார்ந்து ரசிக்கலாம்.அதற்கு தான் அது லாயக்கு.
  ————–

  நீங்கள் தானே சொன்னீர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் எதைக் கொண்டாட முடியும் என்று? இப்பொழுது அதற்கான பதில்தான் நான் சொன்ன திருவிழாக்கள். சித்திரை மாதத்திலும் கொண்டாட முடியும் என்பதற்கான பதில் தான் என்னுடையது. வெயில் உகந்த அம்மன் என்று அம்மனுக்கே வெயிலை உகந்தவள் என்று பெயரிட்டு இயற்கையோடு ஒன்றி வழிபடும் ஒரு மதம் இந்து மதம். இங்கு சுட்டெரிக்கும் வெயில் மட்டுமின்றி இயற்கையின் எந்த பரிமாணமும் வெறுக்கவோ ஒதுக்கவோ தக்கது அல்ல. உங்களைப் போன்ற ஏசி அறையில் அமர்ந்து சன் டி வி போன்ற அருவருப்பன டி வி நிகழ்ச்சிகளை ரசிக்கும் மட்டமான ரசனையுள்ளவர்களினால் மட்டும் நிறைந்ததில்லையே தமிழ் நாடு? வெயிலில் இறங்கி வேலை பார்க்க வேண்டிய நிலையில் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களால் ஆனதுதானே தமிழ் நாடு? ஆக அவர்களுக்கு சித்திரையிலும் கொண்டாட முடியும். அவர்கள் கடுமையாக உழைக்கும் அந்த மாதத்திலும் அதனால்தான் பல்வேறு திருவிழாக்கள் வைக்கப் பட்டன. மேலும் அந்த மாதங்கள் விவசாய வேலைகள் இன்றி சற்று ஓய்வு தரும் மாதங்கள் அதனால்தான் அந்த மாதங்களைக் குறிப்பாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கு உரிய மாதமாக திருவிழாக்களைக் கொண்டாடும் மாதமாக அமைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆக நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் தான் என்னுடையது.

  மற்றப்டி சித்திரையில் வெயில் அடிப்பதினால் வருட துவக்கத்தை வைக்க முடியாது என்று சொல்வது அபத்தமான ஒரு வாதமாமும். அப்படியானால் மார்கழியில் குளிர் இருக்காதா? ஆடியில் காற்றடிக்காதா? ஐப்பசியில் மழை பெய்யாதா? ஆக எந்த மாதமும் புது வருடத்துக்கு உகந்த மாதமாக அமையாதே? நம் முன்னோர்கள் கிறுக்கர்கள் அல்லர். நீங்கள் சொல்லும் மறைமலையடிகள் புருடாவை எல்லாம் ஏற்கனவே பல தமிழ் ஹிந்துக் கட்டுரைகள் கட்டுடைத்து விட்டன. இன்று வரை அப்படி நடந்த ஒரு மாநாட்டின் தீர்மானங்களை உங்கள் கருணாநிதியால் கூடக் காட்ட முடியவில்லை.

  நீங்கள் கீழ்க்கண்டவாறு சொன்னதற்கு என்ன ஆதாரம் உண்டு? அந்த மாநாட்டின் தீர்மான நகலை இங்கு இட முடியுமா? திரு வி க முன்மொழிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? அப்படியே சிலர் தீர்மானம் போட்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக எம் முன்னோர் வகுத்ததை மட்டுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.


  1921 மறைமலை அடிகள் , திரு வி. க போன்ற ஒப்பற்ற 500 தமிழ் அறிஞர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான் இந்த தை தமிழர் புத்தாண்டு. மறைமலை அடிகளை விடுங்கள் இந்து உலகமே போற்றும் திரு.வி.க இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை முன் மொழிந்தவர்களில் ஒருவர் என்பதை மறந்து விடவேண்டாம் ..

 29. மேலும் திரு. சான்றோன் அவர்களுக்கு…..

  //எங்கள் நம்பிக்கையை மாற்றி அமைக்க முயற்சி செய்து அதில் படுதோல்வி கண்டவர் கருணாநிதி//

  மிக தவறு சான்றோன் அவர்களே கருணாநிதி படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் உண்டு விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு இவைகள் தான் முக்கிய காரணங்களே ஒழிய தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியதற்காக அல்லவே அல்ல….ஆனால் மேற்சொன்ன காரணங்கள்(விலைவாசி உயர்வு,மின்வெட்டு ) கருணாநிதியின் ஆட்சியை விட இப்போது இருக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியில் இன்னும் கேவலமாகவே இருக்கிறது…இப்போது நியாயமான ஒரு தேர்தல் நடத்தி பார்த்தால் அப்போ புரியும். இதை சொன்னதால் என்னை தி.மு.க வின் விசுவாசி என்று நினைத்து விட வேணாம் நடுநிலைமையாக நின்று அரசியலை கவனித்தாலே இந்த உண்மை புரியும் …

  //இந்த மாற்றத்தை கொண்டுவரும் முன் கருணாநிதி மக்கள் கருத்தை கேட்டாரா?கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்….//

  சித்திரை மாதத்தில் புத்தாண்டை தமிழர்களுக்கு அளிக்கும் போது எந்த மன்னன் எந்த புலவன் மக்களிடம் கருத்து கேட்டு அறிவித்தான் என்று கூற முடியுமா.. அதுசரி மக்களிடம் கருத்து கேட்டுவிட்டு தான் ஜெயலலிதா அந்த தீர்மானத்தை ரத்து செய்தாரா.
  .
  //இப்போது கூட ஒன்றும் மோசமில்லை….ஒரு உண்மையான கருத்துக்கணிப்பு நடத்திப்பாருங்கள்…..உண்மை உங்கள் முகத்தில் அறையும்…//

  தாரளமாக வாங்கள் நடத்தி பார்த்து விடுவோம்… முழு துணிச்சலோடு உங்களை அழைக்கிறேன் நேர்மையான கருத்துகணிப்புக்கு நான் தயார்..மக்களிடம் கேட்டு பார்த்து விடுவோம் அப்புறம் உண்மை யார் முகத்தில் அறையபோகிறது யார் முகத்தில் முத்தமிட போகிறது என்பதை பார்க்கலாம்

  //மைனாரிட்டி ஆட்சி நடத்திய கருணாநிதிக்கு புத்தாண்டை மாற்றும் அதிக்கரம் இருக்கும்போது முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்யும் ஜெயலலிதாவுக்கு அதை ரத்து செய்யும் அதிகாரம் கிடையாதா?//

  இங்கு தான் நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீர்கள் யாரும் இப்போது புத்தாண்டை மாற்றவில்லை.. தையில் தமிழ் புத்தாண்டு என்று கூறினார்களே தவிர சித்திரையில் தமிழ் புத்தாண்டிற்கு தடை என்று எதாவது சட்டம் கொண்டுவந்தார்களா .. அல்லது சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் சட்ட படி நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்களா. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை புத்தாண்டாக கை கொள்ளுங்கள்.. தை மாதத்தை விரும்புபவர்கள் தனி தமிழ் புத்தாண்டை கொண்டாடட்டும் என்று தான் கூறினார்கள்..இதனால் என்ன இப்போது இந்து மதத்திற்கு களங்கம் வந்து விட்டது

  //சிறுபான்மையினர் விஷயம் என்றால் நவ துவாரங்களையும் இறுக்க மூடிக்கொள்பவர்கள் ஹிந்துக்கள் விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏன்?//

  தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது எப்படி இந்துகளின் விஷயமாகும்.. அவர்கள் என்ன கோயில் வழிப்பாட்டில் மாற்றம் கொண்டுவந்தார்களா. அல்லது ஆகம முறையை மாற்றி அமைக்கும் படி சட்டம் இயற்றினார்களா. புத்தாண்டு என்ற சொல்லிற்கு முன் தமிழ் என்கிறே சொல் வருகிறது அதை மறந்துவிட வேண்டாம். அந்த சொல் ஒரு குறிப்பிட்ட மத பண்பாடு பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. தமிழ், பெரிய புராணத்திற்கும் சொந்தம் சீறா புராணத்திற்கும் சொந்தம் , தேம்பவானிக்கும் சொந்தம் என்பதை மறந்து விடவேண்டாம் அதை நினைவில் கொள்ளுங்கள். தை புத்தாண்டை தமிழர் புத்தாண்டாக அறிவிக்கட்டும் தமிழை தாய் மொழியாக கொண்ட தையை தங்கள் புத்தாண்டாக உளமார ஏற்று கொண்ட லட்சோப லட்சம் இஸ்லாமிய கிருத்துவர்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன் … கடைசியாக ஒன்று.. வேண்டுமானால் சித்திரையை வெறும் இந்து மத புத்தாண்டு( HINDU RELIGIOUS NEW YEAR) என்று வைத்து கொள்ளுங்கள் அதன் பிறகும் அதில் முக்கை நுழைத்தால் நானே கோபாலபுரம் சென்று காவி கோடி ஏந்தி போராடுகிறேன் ஏன் எங்கள் மத விஷயத்தில் மூக்கை நுழைகிறாய் என்று. நன்றி
  .

 30. விஸ்வாமித்ரா அவர்களே

  //
  நீங்கள் கீழ்க்கண்டவாறு சொன்னதற்கு என்ன ஆதாரம் உண்டு? அந்த மாநாட்டின் தீர்மான நகலை இங்கு இட முடியுமா? திரு வி க முன்மொழிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? அப்படியே சிலர் தீர்மானம் போட்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக எம் முன்னோர் வகுத்ததை மட்டுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
  //

  நகலென்ன நிஜமாகவே என்பதி எட்டு அகவை முடிந்த குரலை ஓவியமாய் தீட்டிய தமிழ் கொள்ளுத் தாத்தா காலையில் கோபாலபுரத்திலும் மாலையில் சி ஐ டி காலனியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறானே அது போடாதா உங்களுக்கு.

  1921 ஆண்டு இந்தியாவில் செராக்ஸ் இருந்ததா என்ன. ஒரிஜினலை கூட எலி பசியாரிருக்கக் கூடும். ஒரு எலி பயன் பெற்றதே என்று நினைத்துக் கூட்ட பார்க்க முடியாத அளவுக்கா இன்று தமிழனின் நிலைமை தரம் தாழ்ந்துள்ளது.

  ஏன் ஒரிஜினலை விஷமப் பார்பனர்கள் லாவகாம லவட்டி சுருட்டி ஹோம குண்டத்தில் போட்டு ஏறித்திருக்கலாம் என்று கூடவா மட தமிழர்களுக்கு தோன மாட்டேன் என்கிறது.

  CBI 2 ஜி சம்பந்தாமான ஆவணகளே kaanamal pogum போது நூறு varuda பழைய file காணாமல் போனால் குற்றமா. அதை தமிழா ஏற்பது கஷ்டமா.

  புத்தாண்டு என்பது வானவியல் சார்ந்தது என்று சிலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது. அனாமத்துக்கு ஒரு நாளை முடிவு செய்வது காமடி. ஏன் கருணாநிதியின் பிறந்த நாளை புத்தாண்டாக கொண்டாட கூடாது. தமிழின் தமிழாகிய ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றை கொண்டாடினால் சிறப்பாக இருக்குமே. அதை விடவா தமிழனுக்கு வேறு பாக்கியம் வேண்டிக்கிடக்கு.

  காலம் காலமாக உண்மை தமிழர்கள் கொண்டாடிய தமிழ் புத்தாண்டை மாற்றி அமைக்க மறை மலை அடிகள் யார். அவர் சொல்வதை ஏன் நான் கேட்க வேண்டும். சைவ , வைணவ, சாக்த, காணபத்திய, குமாரவர்களும், வேதாந்திகளும் அனைவரும் ஒத்துக் கொண்டு கொண்டாடும் தமிழ் புத்தாண்டை மாற்ற மறை மலை அடிகள் யார். (அவர் மாத்த வில்லை என்பது வேறு விஷயம்).
  உடனே புத்தாண்டேன்பது பொதுவுடைமை அதை நமது கிறிஸ்தவ இஸ்லாமிய சகோதர்களும் கொண்டாடவேண்டும் என்று கிறுக்குத்தனமான பிதற்றல்களை என்ன செய்ய. தமிழன் ஹிந்து தான். இஸ்லாமியன் அரபு நாட்டுக்காரன் சொல்வதை தான் கேட்கிறான். அவனுக்கு அரேபியாவில் எது புது வருசமோ அது தான் இங்கும்.
  சூர்யமானம் என்பது தமிழரின் தனிச்சிறப்பு. எல்லோரும் சன்றமானத்தில் புத்தாண்டு கொண்டாட உகாதி, ஓணம் இத்யாதி, தமிழன் மட்டும் இன்று வேறு நாளில் கொண்டாடுகிறான். இதெங்கே ஆரியமாகும். ஆரியன் என்று சிலர் பிதற்றும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டும், தமிழன் கொண்டாடும் புத்தாண்டும் வேறாக இருக்கிறதே ?

  கொண்டாட்டம் என்று வரும் போது சித்திரை தான் சிறந்தது,. எல்லோருக்கும் பள்ளி விடுமுறை. குடும்பத்துடன் கொண்டாட சிறந்த சமயம் சித்திரையே. குடும்பத்துடன் ஊருக்கு போய் கொண்டாடலாம், உறவினர் நம் வீட்டிற்கு வரலாம்
  🙂

  பொங்கல் அன்று புத்தாண்டு வந்தால் எவ்வளவு சிரமம் என்று தாயுமானவனுக்கு புரியவில்லை. ரெண்டும் தனித்தனியாக இருந்தால் தான் சிறப்பு நிகழ்சிகளை நிரப்பி, பச்சை தமிழச்சிகளை (சமந்தா, அனுக்ஷா இத்யாதிகளை) வைத்து பெட்டி, கலைஞரின் கருவூலத்தில் உருவான உளியின் ஓசை போன்ற மெகா ஹிட் திரைப்படங்கள் எல்லாம் காட்டி விளம்பர பணம் அல்லும் உள்ள நினைப்பில் வாழுண்டு கொண்டிருக்கும் தமிழ் தின்றாட்டும் சன் டிவி , ராஜ் டிவி, ஜெயா டி வீ, விஜய் டி வீ எல்லாம் அன்ன கதிக்காலாவார்கள்.

  ரெண்டு நாள் மெகா ஹிட் திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு களிக்கும் பாக்யத்தை தமிழர்கள் த்யாகம் செய்ய வேண்டுமா.

  தமிழக அரசுக்கு டாஸ்மாக் விற்பனை மூலம் வரும் பண குறைய வேண்டுமா.

  ஆளுநர் ஒருவர் இருக்கிறார் என்று பொங்கல் வாழ்த்து, தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னால் தானே தெரிய வரும். சரி இப்போ கருணாநிதியே தான் இருப்பதாக காட்டிக் கொள்ள இன்ரண்டு நாட்கள் இருந்தால் நல்லது தானே.

  பொங்கலும் புத்தாண்டும் ஒரே நாளில் வந்தால் தமிழ் குடிமகன் கலங்கிவிட மாட்டான். பொங்கல் வாழ்த்து சொல்வதா புத்தாண்டு வாழ்த்து சொல்வதா என்று புரியாமல் இன்னொரு எச்ட்ரா பாட்டில் உள்ள தள்ள மாட்டானா?

  உழைப்பாளி தமிழனே சிந்திப்பாய். இரண்டையும் நீங ஒரே நாளில் கொண்டாடினால் உனது ஒரு நாள் ஒய்வு பரி போய் விடும். இது முதாளித்வ ஏகாதிபதிகளின் சதி. உன்னை அதிகம் உழைக்க செய்து உன் ரேத்தத்தை சுவை பார்க்க அவர்கள் போட்ட இது, ஐயோ என்ன உன் கதி.

  சித்திரையில் வைத்தால் இந்த கருணாநிதி பேசியே சித்திரவதி செய்கிறான். தையில் வைத்தால் சிலர் தை தை என்று குதிக்கிறார்கள். அதனால் சித்திரையும் வேண்டாம், தையும் வேண்டாம். இனி மார்கழியே தமிழ் புத்தாண்டு.

 31. அன்பார்ந்த தாயுமானவர் அவர்களுக்கு

  ஹிந்து தர்மத்தின் மீது தங்களுக்கு எந்த அளவு அக்கறை உள்ளதோ அதே அளவு தனித்தமிழ் மீது தங்களுக்கு பற்று உண்டு என்பதை தங்களின் பல உத்தரங்கள் மூலம் வாசித்து அறிந்து இருக்கிறேன். அதனால் தாங்கள் கழக விஸ்வாசியாக இருக்கவியலாது என்பது என் அனுமானம். தங்கள் உத்தரம் அதை உறுதி செய்தது. நன்றி.

  \\\\ தமிழ் புத்தாண்டு என்று வரும்போது அது அணைத்து தமிழர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே அல்லாமல் குறிப்பிட்ட ஒரு மத பண்பாட்டை மட்டும் ஒட்டியவர்களுக்கு மட்டுமே இருப்பது நிச்சயம் நியாயம் ஆகாது. \\\\\

  அன்பரே, சித்திரை மாதத் தமிழ்ப் புத்தாண்டு என்ற நியதி எவ்வளவு பழமையானது மற்றும் எத்துணைத் தமிழ்ச் சான்றோர்கள் அதை ஏற்றுள்ளார்கள் என்பதை இந்த வ்யாசத்திலும் மேலும் ஸ்ரீமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களது வ்யாசத்திலும் நீங்கள் வாசித்தறியலாம்.

  ஆப்ரஹாமிய மதஸ்தவர்களின் ப்ரச்சினையே ஒரு விஷயத்தை ஹிந்து மதத்துடன் சம்பந்தப்படுத்த முடியும் என்றால் அதை முழுமுச்சூடாக நிராகரணம் செய்வது. வந்தே மாதரம் தேசிய கீத விஷயத்திலும் அவர்களது இது போன்ற ஒரு நிலைப்பாடே.

  சித்திரை தமிழ்ப்புத்தாண்டு என்பது பல்லாயிரம் காலமாக தமிழ்ச்சான்றோர்கள் அதை ஏற்றுள்ளார்கள் என்பது எவ்வளவு முக்யமானதோ அதே அளவு கூர்ந்து நோக்கத் தக்கது தைத் தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழ்ச்சான்றோர்களாலன்றி தமிழ் மொழியினின்று ஹிந்து மதத்தை பிரிக்க சூழ்ச்சி செய்யும் கழகக் கண்மணிகளின் ஆசியினாலும் தமிழ் மொழிப்பற்று என்ற வ்யாஜத்தில் ஹிந்து மத வெறுப்பில் ஈடுபட்டு ஆப்ரஹாமிய மத சதியாளர்களுடன் கூட்டு சேர்ந்த சில தனித்தமிழ்ப் பற்றாளர்களாலும் விதைக்கப்பட்ட விஷம் என்பது. இங்கு பலரும் கொதிப்பது தமிழை ஹிந்து மதத்திலிருந்து பிரிக்க இயலும் என்ற ஆப்ரஹாமியரின் ஆகாத்யத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தமிழ் ஹிந்துக்கள் இறையாவது.

  \\\எத்தனையோ இஸ்லாமிய கிறித்துவ நண்பர்கள் தை நன்னாளில் எனக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.\\\\

  இதை வைத்து அவர்கள் தமிழ்ப்பற்றாளர் என்று முடிவு செய்வது அறியாமை என்றே தோன்றுகிறது. அன்பரே எனக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. அன்பர் ராஜ் ஆனந்தன் அவர்கள் ஈழத்தில் தமிழ் பேசும் ஹிந்துக்கள் பால் தமிழ் பேசும் ஆப்ரஹாமியரின் நிலை என்ன என்பதை தெளிவாக தன் வ்யாசத்தில் தெரிவித்துள்ளார்கள். ஆப்ரஹாமியரின் தமிழ் மொழிப்பற்றுக்கும் முதலைக்கண்ணீருக்கும் வித்யாசமில்லை. அவலை நினைத்து உரலை இடிக்க வேண்டாம் அல்லவா. ஆப்ரஹாமியம் என்ற மதம் பிடித்து விட்டால் முதலில் பின்னுக்குப் போகும் விஷயம் மொழி. ஆங்கே சஹ மொழி பேசுபவர் முக்யமன்று பிற மொழி ஆனாலும் சஹ மதம் சார்ந்து மதம் பிடித்த அன்ய மனிதரே முக்யம். ஏறாவூரில் (ஈழம்) லிபியாவுக்காக அரபியிலோ உருதுவிலோ கொடிபிடித்த தமிழ் பேசும் முஹமதியர்கள் தங்கள் பக்கத்து க்ராமத்திலிருக்கும் தமிழ் பேசும் ஹிந்துக்களின் வீடுகளை இடித்து கோவில்களைத் தரைமட்டமாக்கி மீன்சந்தையாக மாற்றியுள்ளதை ராஜ் ஆனந்தன் பதிவு செய்துள்ளார். இதைப்போன்றோர் தை மாதத் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கொடுப்பது எதற்காக என்பதை விளக்கவும் வேண்டுமோ.

  \\\சம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்று ஒரு முட்டாள்தனமான கீழ்த்தரமான ஒரு நம்பிக்கை\\\

  என்னிடம் சில வாசகங்கள் பகிர்ந்து கொண்ட தங்களிடம் நான் யாசிப்பது இது போன்ற நிலைப்பாடுகளை தவிருங்கள் என்பதே. தங்கள் தனித்தமிழ்ப் பற்று ஓங்குக. அதே சமயம். சம்ஸ்க்ருத மொழி ஏதோவிதத்தில் தமிழ் மொழியை நசுக்குகிறது என்ற ஆப்ரஹாமிய சதிப் ப்ரசாரத்திற்கு நீங்கள் ஆளாகாமல் இருப்பது மற்றும் வடமொழி மற்றும் தமிழ் என்பவை ஏதோ ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் இல்லாதவை என்பது போன்ற நிலைப்பாடுகள் ஆதாரமற்றவை என்று நீங்கள் அறிவது நன்று. முத்தமிழோனே என்று பாடிய எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் தான் தமிழ்த்ரய விநோதப் பெருமாளே என்றும் வள்ளிக்குவாய்த்த பெருமானைப் பாடியுள்ளார் என்பது நான் சொல்லித் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமன்று.

  இரு தசாப்தங்களாக ஹிந்துஸ்தானத்தின் பல மாகாணங்களில் பணி செய்து பல மொழிகளில் புழங்கிய எனக்கு மணிப்ரவாளம் என்பது விருப்பமான ஒரு நடை என்பது மட்டுமன்றி ஒரு இயல்பான விஷயம். தினம் ஒரு சில நிமிஷங்கள் மட்டிலும் தமிழில் பேசவும் நாள் முழுதும் அன்ய பாஷைகளில் பேசும் ஒரு நிலையை அனுபவத்திலேயே புரிய இயலும். என்னால் இயன்ற ஆனால் எனக்கு ச்ரம சாத்யமான தனித்தமிழை யார் எழுதினாலும் வாசிக்கையில் மகிழ்ச்சியே

  ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையில் இருக்கும் நான் அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்டது அரிசி கோதுமை பருத்தியாடை கம்பளி ஆடை என்று வேண்டுமானால் வித்யாசங்கள் இருக்கலாமேயன்றி ஆஸேது ஹிமாசலம் நமது தமிழகப்பழக்க வழக்கங்களிலிருந்து கிஞ்சித்தும் வேறானவை அன்று இதர மொழி பேசும் ஹிந்துக்களது பழக்க வழக்கங்கள்.

 32. அன்பர் தாயுமானவர், சில பகிர விட்ட விஷயங்கள்.

  \\\\\ அனால் தை புத்தாண்டு என்பது அப்படி அல்ல .. இதில் மதம் என்பதற்கே இடம் இல்லை தமிழனாக மட்டுமே தன்னை நினைப்பவன் கொண்டாட அணைத்து தகுதிகளும் உள்ள ஒரு புத்தாண்டாக இது அமையும்\\\\

  ஒரு ஆப்ரஹாமியர் எவ்விதத்திலும் தன்னைத் தமிழனாக மட்டும் நினைப்பது என்பது இயலாத விஷயம். ஓரிறைக் கொள்கைக்கு முன் மற்ற எல்லா விஷயமும் அவர்களுக்கு அநாவசியம். மொழி என்பது ஆப்ரஹாமியரைப் பொருத்தவரை மத அறுவடைக்குச் சாதகமான ஒரு சாதனம் அவ்வளவே. அவர்களது நோக்கமே தேனுடன் கலந்த சுவை போன்று தமிழில் தமிழ்ப்பண்பாட்டில் பிரியவொண்ணாது பிணைந்துள்ள ஹிந்து மதத்தை பிரித்தெடுப்பதே.

  தமிழனாக மட்டும் தங்களை டிண்டோரா போட்டு நாடகமாடுபவர் தமிழிலிருந்து ஹிந்துவைப் பிரிக்க முயலும் ஆப்ரஹாமியர். அவர்களோடு சேர்ந்து சேர்ந்திசை புரிபவர் அவர் தம் கைக்கூலிகளான பொய் நாஸ்திக வாதம் பேசும் வீட்டிலே தனியாக தெய்வ வழிபாடு நடத்தும் கழகக் கண்மணிகள். இவர்களது (பொய்த்) தமிழ்ப் பற்று என்ற முக்காடால் மூடப்பட்ட ஹிந்து மதத்வேஷத்திற்குகு இறையாகும் அப்பாவிகள் தங்களைப் போன்ற தமிழ் ஹிந்துக்கள் என்பது என் அபிப்ராயம்.

  தமிழ் பேசுகிறார் என்பதால் ஒருவர் தமிழ்ப்பற்றாளர் ஆகவியலாது. ஏறாவூர்த் தமிழ் முஹமதியர் போல் கோவிலிடிக்கும் முஸல்மான்கள் தமிழ் பேசுவதால் மட்டும் அல்லது தை மாதத்திற்கு தமிழ்ப் புத்தாண்டு சொல்வதன் மூலம் மட்டும் தமிழ்ப்பண்பாடு பேணுபவர் ஆகார். ஆலயம் தொழுவது சாலவும் நன்று; கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்பதெல்லாம் தான் நானறிந்த தமிழ்ப்பண்பாடு. மலயாளமோ ஹிந்தியோ பேசுவதால் மட்டும் மற்றைய ஹிந்துக்கள் தமிழுக்கு வேறானவர் அன்று. கோவிலிடிக்கும் தமிழ் முஹமதியரை விட என்னுடன் ஸ்ரீரங்கத்திலோ அல்லது அயோத்தியிலோ வழிபாடு செய்யும் வேற்று மொழியாளர் என்னைப் பொறுத்தவரை மேலானவர் வணக்கத்திற்குறியவர்.

  \\\ஒரு தொன்மையான மதத்தில் கிறிஸ்தவர்கள் செய்யும் கலப்படத்தை நினைத்து நீங்கள் அடைந்த வருத்தத்தை போன்றது தான் என் வருத்தமும் \\\

  க்றைஸ்தவர் கலப்படம் செய்தது மதத்தில் அன்று கலையில். அது அக்ரமம். ஆகாத்யம். கலப்படம் என்பது பயங்கரமான விஷயமன்று. எதனுடன் எதைக் கலப்பது என்பதில் தான் ஆகாத்யம் உள்ளதா அல்லவா என்பது வெளிச்சமாகிறது. ஆலயங்களில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுவது சுத்தான்னம். வெறும் அன்னம் மட்டும் வடித்து அது நிவேதனம் செய்யப்படுகிறது. ஆனால் நாம் உணவுண்ணும் போது பல வ்யஞ்சனங்களுடன் கலந்தே அன்னத்தை உண்கிறோம். பாலோடு சர்க்கரையை கலப்பது இயல்பான கலப்பு. பாயாசம் செய்ய பாலோடு சர்க்கரையையோ வெல்லத்தையோ கலக்கிறோம். இதெல்லாம் இயல்பானது. க்றைஸ்தவர் பரதக் கலையில் செய்யும் கலப்படம் பாலோடு விஷத்தைக் கலப்பது போன்றது. கலையைச் சிதைக்கும் உள்நோக்குடன் கூடியது.

  இது போன்ற அக்ரமத்தை ஆயிரம் வருஷ காலமாக ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்திற்குப் பணியாற்றும் முஹமதியர்கள் கூட செய்தது இல்லை.

  ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்தில் இன்றைக்கு சரிக்கு சரி ஹிந்துக்களும் முஹமதியர்களும் உள்ளனர். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மிகத் தொன்மையாகப் போற்றப்படுவது “த்ருவ்பத்” அல்லது “த்ருபத்” என்றறியப்படும் இசைமுறை. முஸல்மானாக இருந்தாலும் ஹிந்துவாக இருந்தாலும் “த்ருவ்பத்” இசையை இசை இலக்கணங்கள் மீறி இசைப்பதில்லை. தங்களிஷ்டத்துக்கு கலப்படங்கள் செய்வதில்லை. கலப்படம் மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகள் தனி இசைமுறைகளாகவே பரிணமித்தன. ஒவ்வொரு ஊர் சார்ந்து ஒரு பாரம்பரியம் சார்ந்து படியாலா கரானா; ஜெய்பூர் கரானா, க்வாலியர் கரானா போன்ற இசை முறைகள் பாரம்பரிய த்ருபத் இசையிடமிருந்து தனியாக வளர்ந்தனவேயன்றி “த்ருபத் இசையை சிதைத்து வளரவில்லை. அது போன்றே ஸூஃபி, டும்ரி, கவ்வாலி போன்ற இசை முறைகளும்.

  தனித்தமிழ் என்பது இறைவனுக்குப் படைக்கப்படும் சுத்தான்னம் போன்று.

  மணிப்ரவாளம் என்பது பாலுடன் கலந்த சர்க்கரை போன்று.

  கலாக்ஷேத்ராவில் க்றைஸ்தவர் பரதத்தில் நுழைக்க மற்றும் கலக்க முயற்சிக்கும் விசித்ர க்றைஸ்தவ முத்ரைகள் மற்றும் ஆங்கு செய்துள்ள ஆகாத்யங்கள் பாலுடன் கலந்த விஷம் போன்றவை.

  தொன்மையான தமிழ்ச்சான்றோர் போற்றும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு வழக்கத்தை குழப்பி கலக்கலாக உள்நோக்கத்துடன் தை தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழ் பேசும் ஆப்ரஹாமியர் விதைக்க விழைவது விளை நிலத்தில் பயிரொடு களை பயிரிடல் போன்று.

  அதைகேட்டு அன்பர் தாயுமானவர் புளகாங்கிதம் அடைவது தமிழ்ப் பொன்னிப்புனலுடன் ஆங்க்ல சாரயம் கலந்து எழுதப்படும் மொழிநடையை ச்லாகிப்பது போல.

 33. தாயுமானவன்

  //
  தாரளமாக வாங்கள் நடத்தி பார்த்து விடுவோம்… முழு துணிச்சலோடு உங்களை அழைக்கிறேன் நேர்மையான கருத்துகணிப்புக்கு நான் தயார்..மக்களிடம் கேட்டு பார்த்து விடுவோம் அப்புறம் உண்மை யார் முகத்தில் அறையபோகிறது யார் முகத்தில் முத்தமிட போகிறது என்பதை பார்க்கலாம்
  //

  இதை எல்லாம் வெச்சு பாத்தாச்சு. தட்ஸ் தமிழ் கூட வெச்சாங்க. சித்திரை தான் வென்றது.

  ஒரு சாமான்ய தமிழ் குடிமகன் கேட்பான். சித்திரையில் இருந்தது நீ அத தைக்கு மாத்தி என்ன முன்னேற்றத்தை கண்ட என்று.

  தைக்கு புத்தாண்டை மாறியது தமிழனின் புகழ் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. டெல்லியில் அறத் தமிழர்களின் நடமாட்டம் அதிகமாகியது.

  அந்தோ பாவம் தமிழனை ஜி வைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். டூ ஜி ராஜா. த்ரீ ஜி சிதம்பரம். பல ஜி தயாநிதி.

  சேரன் ஹிமயமாலையில் கொடி நாட்டினான். நாம் டெல்லையில் திஹாரிலேயே நமது சாம்ராஜ்யத்தை படர விட்டுள்ளோம். திடீர்னு டேஹார்ல சப்பாத்தி தால் தராத நிறுத்திபுட்டு. பொங்கல் இட்லி சாம்பார் கொடுக்கா ஆரம்பித்து விட்டார்களாம் தமிழனின் ஆதிக்கத்தை பார்த்தீர்களா.

 34. //சோதிடம், பஞ்சாங்கம், உத்தராயணம், தட்சிணாயனம் போன்ற இந்து மதத்திற்கே உரித்தான விஷயங்கள் இதில் அடங்கி இருக்கின்றன. அவை அவர்களின் மதத்திற்கு எதிரானவை என்று நினைப்பதால், சித்திரைப் புத்தாண்டை அவர்கள் இயல்பாக ஏற்றுக் கொள்வது இல்லை.//

  பஞ்சாங்கம் கணிக்காத எந்தக் கணக்கின் அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறது என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.

  அதனோடு உத்தராயனம், தக்ஷ்ணாயனம் என்பவை ஹிந்து சமயத்துக்கே உரியவை என்று சொல்வதன் மூலம், ‘வான நூலறிவு நமக்கே உரியது’ என்று சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. (சூரியனின் இயக்கமாக) பூமியின் இயக்கத்தை இப்படி விஞ்ஞானம்தான் விளக்கியிருக்கிறது. இத்தகைய விஞ்ஞானம் ஹிந்துக்களுக்கே உரியது என உங்கள் வாக்கின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

  ‘இஸ்லாமியரும் கிறிஸ்துவரும் சித்திரையைக் கொண்டாடவில்லை’ என்பது பற்றியதல்ல இங்கு விவாதம். என்னதான் ‘தைத் தமிழ்’ பற்றிப் பேசினாலும் அதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டாடவில்லை என்பதுதான் இங்கு பதிவு செய்யப்பட கருத்து. ‘எதிர் காலத்தில் அவர்கள் அதை ஏற்பார்கள்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்போது பஞ்சாங்க வழியில் அல்லாமல், வேறு வழியில் தை உள்ளிட்ட மாதப் பிறப்புக்கள் கணிக்கப் படுமோ என்னவோ ! யார் கண்டார்கள் போங்கள்.

  //…தைப் புத்தாண்டு என்பது அப்படி அல்ல .. இதில் மதம் என்பதற்கே இடம் இல்லை.//

  இதன் மூலம் தெரிவது என்ன? தைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் மூலமும் சித்திரையைப் புத்தாண்டுக் கொண்டாட்டச் சிறப்பிலிருந்து மாற்றத் துடிப்பதன் மூலமும் மதத்தை ஒழிக்க முயற்சி நடக்கிறது என்பது தானே? இந்த முயற்சியை சம்பந்தப்பட்ட சமயத்தினர் எதிர்ப்பதில் தவறென்ன? நீங்கள் உங்களை ஒரு ஹிந்து என உணர்ந்தால், நீங்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய விஷயமல்லவா இது? ‘மதத்தின் அடையாளம்தான் இதன் மூலம் அழிக்க முயற்சிக்கப்படுகிறது’ என்று உணர்ந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  //…தமிழனாக மட்டுமே தன்னை நினைப்பவன்…//

  ஒருவர் தன்னைத் தமிழர் என்று வெளிக் காட்டிக் கொள்ள வேண்டும் என்றால், தையில் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் எனக் கூறுவதெல்லாம் மிக மிக அபாண்டம். இதுதான் வம்புக்கு இழுக்கும் சொற்றொடர். தமிழர்கள் தையில் பொங்கல் கொண்டாடுகிறார்கள். அந்தப் பொங்கலை நீங்கள் சொல்லும் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் கொண்டாடட்டுமே !

  //…எத்தனையோ இஸ்லாமிய கிறிஸ்துவ நண்பர்கள் தை நன்னாளில் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.//

  எனக்கும்கூட எத்தனயோ பேர் தெரிவித்தார்கள். அதனால் அவர்கள் தைப் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வாறு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு ‘உங்கள் வாழ்த்தைப் பொங்கல் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டேன்’ என்று நான் பதிலிறுத்தேன்.

  உண்மையை உணர்ந்தால், எந்த நேரத்திலும் நம் நிலையை மாற்றிக் கொள்ளலாம். வீம்பாக, ‘இப்படித்தான்’ என்று இருப்பது மறு பரிசீலனைக்கு உரியது அன்பரே !

 35. தாயுமானவன் அவர்களே…..

  // நீங்கள் இந்து முறைப்படி சித்திரையை கொண்டாடுங்கள் தவறு இல்லை அனால் தை திங்களில் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதை தடுக்காதீர்கள் என்று தான் உங்களிடம் கேட்கிறோம்.//

  // தையில் தமிழ் புத்தாண்டு என்று கூறினார்களே தவிர சித்திரையில் தமிழ் புத்தாண்டிற்கு தடை என்று எதாவது சட்டம் கொண்டுவந்தார்களா .. //

  தூங்குபவர்களை எழுப்பலாம்,ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது……உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி விட்டார் என்பதற்காக கருணாநிதி கும்பல் செய்த அக்கிரமங்களை மறைக்க முயலாதீர்கள்…….

  சித்திரை ஒன்றாம் தேதி கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது……அந்த அரசாணையை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது……கோயில்களில் சித்திரை முதல் நாள் எந்த சிறப்பு வழிபாடுகளும் நடத்தக்கூடாது என்று கருணாநிதி அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது…..இதை திருப்பூர் மாவட்டம் , சிவன்மலை ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகியே என்னிடம் சொன்னார்…..முழுப்பூசனிக்காயை இலை சோற்றில் மறைக்க முயற்சி செய்யாதீர்கள்….

  ஹிந்துக்களை பிளவு படுத்த கிறித்தவ பாதிரி கால்டுவெல் கிளப்பிய ஆரிய திராவிடப்புரட்டை இன்னும் எத்தனை நாளுக்கு பிடித்துக்கொண்டு தொங்குவீர்கள் என்பது தெரியவில்லை…..மொழிவெறியை தூண்டிவிட்டு ஹிந்து மதத்தில் இருந்து தமிழர்களை தனிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியே தனித்தமிழ் இயக்கம் ……அப்போது அதில் பங்கேற்ற சிலருக்கு அதன் பின்னணியில் இருந்த ஆபிரகாமிய சூழ்ச்சி தெரிந்திருக்கவில்லை…….பிற மொழி கலப்பில்லாத எந்த மொழியும் வளர முடியாது……ஆங்கிலம் அதற்கு ஒரு நல்ல உதாரணம்…..

  // தமிழ், பெரிய புராணத்திற்கும் சொந்தம் சீறா புராணத்திற்கும் சொந்தம் , தேம்பவானிக்கும் சொந்தம் என்பதை மறந்து விடவேண்டாம் // விடவேண்டாம் //

  அப்படீங்களா சார்…..பெரிய புராணம், தேவாரம் ,திருவாசகம் பாடப்படும் பல நூறு சிவாலயங்களை என்னால் காட்ட முடியும்…….ஆனால் தேம்பாவணி பாடப்படும் சர்ச்சையோ , சீறாப்புராணம் இசைக்கப்படும் ஒருமசூதியையோ உங்களால் காட்ட முடியுமா?அதுக்கெல்லாம் அவங்களுக்கு தனி புக் இருக்கு சார்…….குறிப்பாக இஸ்லாமியர்களிடம் தமிழ் வழிபாடே கிடையாது………கிறித்தவர்களிடம் தமிழ் உண்டு….ஆனால் அந்த சுவிஷேஷத்தமிழ் நமக்கு விளங்காது…..உடனே உணர்ச்ச்சி வசப்பட்டு அவங்களையும் திருத்தறேன்னு கிளம்பிடாதீங்க சார்….வாலை ஓட்ட நறுக்கீருவாங்க…..ஹிந்துக்கள் தான் தாசில்தார் ஆபீஸ் மைக்கூண்டு மாதிரி …போறவன் வர்றவனெல்லாம் ஒரு குத்து குத்தலாம்……..

  //தை புத்தாண்டை தமிழர் புத்தாண்டாக அறிவிக்கட்டும் தமிழை தாய் மொழியாக கொண்ட தையை தங்கள் புத்தாண்டாக உளமார ஏற்று கொண்ட லட்சோப லட்சம் இஸ்லாமிய கிருத்துவர்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன் //

  அப்படியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கமிட் பண்ணிக்காதீங்க சார்…..உடற்பயிற்சியான யோகாசனத்தை சாத்தானின் வேலை என்று முத்திரை குத்துபவர்கள் அவர்கள்…….

  மற்றபடி எந்த விதமான கருத்துகணிப்புக்கும் நானும் தயார்……எங்க வச்சுக்கலாம்.? எப்படி வெச்சுக்கலாம்..?…

 36. ////இங்கு தான் நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீர்கள் யாரும் இப்போது புத்தாண்டை மாற்றவில்லை.. தையில் தமிழ் புத்தாண்டு என்று கூறினார்களே தவிர சித்திரையில் தமிழ் புத்தாண்டிற்கு தடை என்று எதாவது சட்டம் கொண்டுவந்தார்களா .. அல்லது சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் சட்ட படி நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்களா. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை புத்தாண்டாக கை கொள்ளுங்கள்.. தை மாதத்தை விரும்புபவர்கள் தனி தமிழ் புத்தாண்டை கொண்டாடட்டும் என்று தான் கூறினார்கள்..இதனால் என்ன இப்போது இந்து மதத்திற்கு களங்கம் வந்து விட்டது//////
  ஐயா,
  கண்ணு மண்ணு தெரியாமல் பேசாதீர்கள் 2010 ஏப்ரல் 14 அன்று வந்த தமிழ் புத்தாண்டிற்கு கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க தடை விதித்தனர், அத்தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்தவர்களை கைது செய்தது திருக்குவளை அவுரங்கசிப் அரசாங்கம்,
  இது அன்றைய நாளிதழ்கள் எல்லாவற்றிலும் வெளியான செய்தி.
  இப்படி முழு பூசணி தோட்டத்தை சோற்றில் மறைக்க பார்க்காதீர்கள்.
  ஆயிரம் தடை ஏற்படுத்தினாலும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஒன்றில் தான் தொடரும். தன் பேச்சை ஏற்காத மக்களை கைது செய்த அராஜகவாதி திரு மு க

 37. /////தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது எப்படி இந்துகளின் விஷயமாகும்.. //////
  அன்றைய தினத்தில் இந்துக்கள் மட்டுமே சிறப்பாக உணவெல்லாம் செய்து இந்து கோயில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்வர். பெரியவர்களின் கால்களில் விழுந்து இப்புத்தாண்டு சிறப்புடன் அமைய வாழ்த்து பெறுவார். அறுசுவையும் உணவில் சேர்த்து எல்லாம் (பிடித்த மற்றும் பிடிக்காத ) கலந்த அளவை தான் வாழ்க்கை என்று உண்பர்.
  //// அவர்கள் என்ன கோயில் வழிப்பாட்டில் மாற்றம் கொண்டுவந்தார்களா. அல்லது ஆகம முறையை மாற்றி அமைக்கும் படி சட்டம் இயற்றினார்களா////
  முந்தைய மறுமொழியில் விவரம் தந்துள்ளேன் இந்து முறைப்படி கோயிலில் நிகழும் புத்தாண்டு நிகழ்வுகளை தடை செய்தனர். இது தெரியாதது போல் நடிக்காதீர்கள்.
  /////. புத்தாண்டு என்ற சொல்லிற்கு முன் தமிழ் என்கிறே சொல் வருகிறது அதை மறந்துவிட வேண்டாம////
  ஆம் அதற்குத்தான் சொல்கிறோம் தமிழராய் தமிழ் கலாச்சாரத்தோடு இங்கு வாழ்வது இந்துக்கள் மட்டுமே.
  ஒரு முஸ்லிம் எம்மை எப்படி அழைப்பர் தெரியுமா? தமிழ் ஆளு என்றுதான், இன்னும் தெளிவாய் தம்பல பையன் (தமிழ் பையன் என்பதன் மருவிய வார்த்தை) என்றுதான் கூறுவார். அவர் ஹிஜ்ரி புத்தாண்டே ஏற்பர், அதன் படியே அவர் கணக்கு எல்லாம், அவருக்கு தமிழ் புத்தாண்டு உங்களை போன்றோரிடம் அரசியல் செய்ய தான், இப்படி வாழ்த்து சொல்லி சொல்லி உசுப்பேத்தியே நம்முள் பிரிவினை மற்றும் சண்டை உண்டாகி ரணகளமா ஆக்கிவிட முயற்சிப்பார்,நீங்க இது தெரியாம அவர்கள் சொன்னதை நம்பி இங்கு வந்து புளகாங்கிதம் அடைவது வடிவேலு சொல்றது போல சின்னபுள்ள தனமா இல்ல இருக்குது. நல்லா சொல்றாங்கப்பா டிடைலு

 38. ஏப்ரல் 13 2012அன்று வரவிருக்கும் சித்திரை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் 53 நாட்கள் முன்னதாகவே என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 39. தமிழ்ப் புத்தாண்டு தினத்தைத் தமிழர் அனைவருக்குமான புத்தாண்டாக ஆகி விடாமல் தடுக்கும் ஆபிரகாமிய முனைப்புத்தான் இதற்கான காரணம். இந்த முனைப்பிற்குக் கிருத்துவர்களும் இசுலாமியர்களும் கம்யூநிஸ்ட்டுகளும்தான் காரணம். இந்துக்கள் அல்ல.

  .

 40. அன்புள்ள பாலா கௌதமன் அவர்களுக்கு,

  உங்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வரலாறு.காம் இந்த வாரம் கட்டுரை ஒன்று வெளியிட்டுருக்கிறது. அதற்க்கு உங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  //பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே’ – பால கௌதமன் – ‘திரிபே வரலாறாக’//

  எந்தக் கோயிலின் எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது என்று தெரிவிப்பதுடன் கல்வெட்டின் முழுப்பாடத்தையும் வெளியிட்டால் நன்றாகும்.

  https://varalaaru.com/Default.asp?articleid=1094

 41. திராவிடன் on March 1, 2012 at 8:12 pm

  ” 2010 ஏப்ரல் 14 அன்று வந்த தமிழ் புத்தாண்டிற்கு கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க தடை விதித்தனர், அத்தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்தவர்களை கைது செய்தது திருக்குவளை அவுரங்கசிப் அரசாங்கம்,
  இது அன்றைய நாளிதழ்கள் எல்லாவற்றிலும் வெளியான செய்தி.”

  அன்புள்ள திராவிடன்,

  அவுரங்கசீப் மத வெறியனே தவிர , மஞ்சளாரைப்போல, அவ்வளவு மோசமானவன் அல்ல. அவுரங்கசீப் கடைசிவரை மிக எளிமையாகவே வாழ்ந்தான் என்றே வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர் . அவுரங்கசீப் நல்லவன் அல்ல. அதே சமயம் மஞ்சளாரை போன்று மிக மிக மோசமானவனும் அல்ல. அவுரங்கசீப்பை விட நமது மஞ்சள் அண்ணன் மிக மோசமானவர்.

 42. ” விஸ்வாமித்ரா on March 1, 2012 at 1:18 am ”

  “வெயில் உகந்த அம்மன் என்று அம்மனுக்கே வெயிலை உகந்தவள் என்று பெயரிட்டு இயற்கையோடு ஒன்றி வழிபடும் ஒரு மதம் இந்து மதம். இங்கு சுட்டெரிக்கும் வெயில் மட்டுமின்றி இயற்கையின் எந்த பரிமாணமும் வெறுக்கவோ ஒதுக்கவோ தக்கது அல்ல. ”

  அன்புள்ள விஸ்வாமித்ரா,

  வெயிலுகந்த அம்மன் மட்டும் அன்று. வெயிலுகந்த விநாயகரும் உண்டு. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ( திருப்பெருந்துறை) என்ற திருத்தலத்தில் , ( மாணிக்க வாசகர் திருவாசகம் பாட ஆரம்பித்த தலம்) அக்கினி தீர்த்தம் என்ற பெயரில் உள்ள திருக்குளத்துக்கு போகும் பாதையில் இடது பக்கம் பிள்ளையார்கள் உள்ள சிறு மண்டபம் உள்ளது. நம் முன்னோர்கள் அதற்கு வெயில் உகந்த விநாயகர் என்று பெயரிட்டு வணங்கி வந்துள்ளனர்.

  இந்து மதம் இயற்கையுடன் இணைந்த மதம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

 43. அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்…

  திருவள்ளுவர் திருநாள் மலர் எங்குமே கிடைக்கவில்லையாம் என்கிறார்கள்…தமிழ்ஹிந்து இணையத்தளம், அவ்விதழை மின்னூல் வடிவில் (pdf வடிவில் e.book) இலவசமாக வெளிக்கொணர்ந்தால், இத்தகைய அண்டப்புளுகர்கள், ஆகாசப்புளுகர்களின் வாயை அடைக்கலாமே?? திராவிட மாயையில் மூழ்கி, தையில் புத்தாண்டு கொண்டாடும் சில மக்களையும் சரியான் வழிக்குக் கொணரலாமே?? தமிழ்ஹிந்து தளம் இதைச் செய்யுமா??

 44. அண்ணாவின் திருவள்ளுவர் ஜூன் இரண்டாம் நாள் பிறந்தார். மஞ்சளாரின் அண்ணா பொங்கல் அன்று பிறந்தார். திராவிட இயக்கங்கள் ஒரு மோசடி கும்பல் தான் என்பது மேலும் உறுதியாகிறது. மானம் கேட்ட ஈனப்பிறவிகள். இந்த இழிபிறவிகளுக்கு வக்காலத்து வாங்கும் பூவண்ணன் போன்ற ஆபிரகாமிய நண்பர்களை நினைத்தால் பாவமாக உள்ளது. இந்த பொய்யர்களை விரைவில் தமிழகம் தலைமுழுகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *