எழுமின் விழிமின் – 11

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

சீர்திருத்தம் என்பது சிதைப்பதன்று, புதுப்பிப்பதாகும்:

உருவ வழிபட்டை எதிர்த்துப் பிரசாரம் செய்து, அதைப் பழிக்கிறவர்களுக்கு நான் கூறுகிறேன்: “சகோதரர்களே! எல்லாவிதமான வெளி உதவிகளையும் கைவிட்டுவிட்டு, உருவமற்ற கடவுளை வழிபட உங்களுக்குத் தகுதி இருக்குமாயின், அவ்வாறே செய்யுங்கள். ஆனால் அது போலச் செய்ய முடியாதவர்களைக் கண்டிக்க உங்களுக்கு உரிமையில்லை. ஏன் கண்டிக்கிறீர்கள்?”

அழகான பெரிய மாளிகை, மிகத் தொன்மையான புகழ் மிக்க புராதனச் சின்னம் அக்கறையின்மையாலோ, பயன்படுத்தாமையினாலோ, இடிந்து சிதைந்த நிலைக்கு இழிந்து விட்டது. அதனுள்ளே எங்கு பார்த்தாலும் அழுக்கும் தூசியும் படிந்து கிடக்கலாம். ஒருக்கால் அதன் சில பாகங்கள் தரை மட்டமாக இடிந்தும் கிடக்கலாம். அந்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? தேவையானபடி தூய்மைப்படுத்துதல், பழுதுபார்த்தல் முதலிய வேலைகள் நடத்தி அதன் மூலம் பழையனவற்றைப் புதுப்பிப்பீர்களா, அல்லது மாளிகை முழுவதையும் தரைமட்டமாக இடித்துத் தள்ளிவிட்டு அந்த இடத்தில் அழகில்லாத- அது நிரந்தரமாக இருக்குமா, இராதா என்பது நிரூபிக்கப்படாத நிலையிலுள்ள- நவீன காலத்திட்டப்படி வேறொரு கட்டிடம் கட்டுவீர்களா? நாம் அதனைச் சீராக அமைக்க வேண்டும்; தேவையானபடி சுத்தப்படுத்தி, பழுது பார்த்து, முறைப்படுத்தவேண்டும் அல்லது நிறைவுறச் செய்ய வேண்டும். அதைத் தரைமட்டமாக்கக் கூடாது. சீர்திருத்தத்தின் உண்மையான பொருள் இதுவே ஆகும். அத்துடன் சீர்திருத்த வேலை முடிவடைகிறது.

ஒரு சீர்திருத்தக் குழு வெறும் சீர்திருத்தத்தில் மட்டும் ஈடுபடுமாயின் அது உயிர் வாழாது; அதிலுள்ள ஆக்க சக்திகள், உண்மையான துடிதுடிப்பு, அதாவது கொள்கைத் தத்துவங்கள் மட்டுமே எப்பொழுதும் வாழ்கின்றன. ஒரு சீர்திருத்தைச் செய்ய முயலும்போது அதன் ஆக்க அம்சத்தையே வலியுறுத்த வேண்டும். கட்டிடம் கட்டி முடித்து விட்டால் முட்டுக் கொடுத்திருக்கும் சாரங்களை அகற்றி விட வேண்டும்.

ஹிந்து மதத்தை ஏன் நாம் கைவிடவேண்டும்? சேர்ந்தே அதில் நீந்துவோம் அல்லது மூழ்குவோம்:

நமது நாட்டிலுள்ள சீர்திருத்தக் குழுவினர், அதற்கு மாறாகத் தமக்கென தனியானதொரு வர்க்கத்தை நிர்மாணித்துக் கொள்ள விரும்புகிறார்கள். எப்படியாயினும் அவர்கள் நல்ல பணி செய்திருக்கிறார்கள். அவர்கள்மீது இறைவன் அருள்பாலிக்க வேண்டும். ஆனால் சீர்திருத்தவாதிகளே! ஹிந்துக்களாகிய நீங்கள் மகத்தான பொதுப் பிணைப்பில் இருந்து ஏன் பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? மகத்தான மிகப்பெரும் புகழ்வாய்ந்த உடைமையான ஹிந்து என்ற பெயரை உங்களுக்கு வைத்துக்கொள்ள ஏன் வெட்கப்படுகிறீர்கள்?

அழியாப்பேறு பெற்றவர்களின் புதல்வர்களே! எனது நாட்டினரே! நமது தேசீயக் கப்பலானது யுகக்கணக்காக, நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு தனது மதிப்பிட முடியாத பெருநிதிகளால் உலகையெல்லாம் வளப்படுத்தி வந்துள்ளது. ஒளிமிகுந்து விளங்கிய பலநூற்றாண்டுகளாக வாழ்க்கைக் கடலைக் கடந்து நமது தேசியக் கப்பல் ஓடிவந்துள்ளது. துன்பமெல்லாம் கடந்த ஆனந்த நிலையாகிய மறுகரைக்குக் கோடிக்கணக்கான ஆன்மாக்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. ஆனால் இன்றைக்கோ- நமது குற்றத்தினாலோ அல்லது வேறு எந்த காரணங்களினாலோ எப்படியாயினும் கவலையில்லை- அதில் ஓட்டை விழுந்து, பழுதுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் அமர்ந்துள்ள நீங்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள்? அதைச் சபித்துக்கொண்டும் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டும் பூசலிட்டுக்கொண்டும் நிற்பீர்களா? நீங்கள் அனைஅரும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து ஓட்டைகளை அடைக்க, சிறந்தமுறையில் முயற்சிக்க மாட்டீர்களா? ஆகவே இப்பணியைச் செய்வதற்காக நாம் அனைவரும் நமது நெஞ்சத்து உதிரத்தை மகிழ்வுடன் அளிப்போம். அந்த முயற்சியில் தோற்போமாயின், நமது வாய்களில், வசைமொழியுடனன்றி, வாழ்த்து மொழியுடன், நாம் அனைவரும் ஒன்றாக மூழ்கி மரிப்போம்.


தீமைகள் எல்லாம் நாள்பட்ட கீல்வாதத்தைப் போல:

நமது சமூகத்தில் தீமைகள் மிகுந்துதான் உள்ளன. மற்ற எல்லாச் சமூகங்களிலும் இதைப் போலவே இருந்து வருகின்றன. இங்கே சில வேளைகளில் விதவைகளின் கண்ணீரால் பூமி நனைகிறது என்றால், அங்கே மேற்கு நாடுகளிலோ விவாகமாகாதவர்கள் விடும் பெருமூச்சு வானவெளியை நிறைக்கிறது. இங்கு வறுமைப் பிணி வாழ்க்கையில் நஞ்சாக உள்ளது என்றால், அங்கே மிதமிஞ்சிய சுகபோகங்களினால் அவற்றில் ஏற்பட்ட வெறுப்பு அந்த இனத்துக்கே நஞ்சாகியுள்ளது. இங்கே வயிற்றுக்கில்லாத கொடுமையால் மக்கள் தற்கொலை செய்துகொள்ள விரும்புகின்றனர். அங்கே அளவு கடந்த உணவின் பயனாகவே தற்கொலை செய்துகொள்கின்றனர்.

நாள்பட்ட கீல்வாதத்தைப் போல் தீமை எல்லாவிடத்தும் இருந்துவருகின்றது. காலிலுள்ள வாதத்தை மருந்து முதலியவற்றால் போக்கினால், அது உடனே தலைக்கு வந்து விடுகிறது. அங்கிருந்து விரட்டினால் இன்னோர் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. இவ்விதம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் துரத்தலாமேயன்றி அடியோடு ஒழித்துவிடுவதென்பது இயலாது. குழந்தைகளே! தீமையை ஒழிப்பது என்பது சரியான வழியல்ல. நல்லது, கெட்டது இவை இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் எக்காலத்தும் இணைபிரியாதவை என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று உங்களுக்குக் கிடைத்தால், மற்றதும் கிடைத்தே தீரும். கடலின் நீர்ப்பரப்பில் ஓர் அலை எழுமானால் அதற்கு ஈடாக வேறோர் இடத்தில் குழிவிழுவது திண்ணம். அதுமட்டுமல்ல; வாழ்வென்பதே தீமைதான். வேறொரு ஜீவ ஜந்துவைக் கொல்லாமல் மூச்சு விடவே முடியாது. ஒருவன் ஒரு கவளம் உணவு அருந்தியபோதும் அவன் அதன் வழியாக வேறு ஏதாவது ஒரு ஜீவனை மோசம் செய்தவனே ஆகிறான். இதுதான் சட்டம்; இதுவே தத்துவஞானம்.

ஆகவே நாம் செய்யக் கூடியதெல்லாம் ஒன்றுதான். தீமையை எதிர்த்துப் புரியும் காரியங்கள் அனைத்தும் புறச் செயல்களைவிட உள்ளம் சம்பந்தப்பட்டதாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எத்தனை வாய் கிழியப் பேசினாலும் சரிதான்; தீமையை எதிர்ப்பது என்பதெல்லாம் நிகழ்வதைவிட, பயிற்சிபூர்வமானது என்பதுதான் அதன் உட்கருத்து. அதுதான் நமக்கு அமைதி தரும்; அதுதான் நம்முடைய இரத்தத்தில் பாயும் வெறியைத் தணிக்கும்.

வெறித்தனமான சீர்திருத்தங்களால் பயன் விளையாது:

வெறியினால் குருட்டுத்தனமான பிடிவாதங்களைக் கொண்ட சீர்திருத்தக்காரர்கள் எங்கெங்கே இருந்தனரோ அங்கெல்லாம் அவர்கள் தமது வேலையில் சித்தியடையவில்லை என்பதை உலக வரலாறுகள் கற்பிக்கின்றன. அமெரிக்க நாட்டில் உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட, அடிமைத்தனத்தைப் போக்குவதற்காக ஏற்பட்ட ஒரு யுத்தத்தைவிடப் பெரியதொரு எழுச்சியை ஊகிப்பதும் சாத்தியமில்லை. அதைப்பற்றி உங்களெல்லோருக்கும் தெரியும். அதனால் விளைந்த பயன் என்ன? அடிமைத்தன ஒழிப்புக்கு முன்னிருந்ததைவிட நூறு மடங்கு கேவலமான நிலையில் அவ்வடிமைகள் இன்று உள்ளனர்.

அடிமை ஒழிப்புக்கு முன்னால் இவ்வேழை நீக்ரோக்கள் * யாரோ ஒருவருடைய உடைமைகளாயிருந்து வந்தனர். ஆகவே சொத்துக்களை கவனிப்பது போல அவர்களது எஜமானர்கள் அவர்கள் கெட்டு அழியா வண்ணம் பாதுகாத்து வந்தனர். இன்றைக்கோ அவர்கள் யாருடைய சொத்தாகவும் இல்லை. அவர்களது உயிருக்கு மதிப்பென்பது கிடையாது. அற்பக் காரணங்களுக்காக அவர்கள் உயிருடன் கொளுத்தப் படுகிறார்கள். சுட்டுத் தள்ளப் படுகிறார்கள். அவர்களைக் கொல்லுகிறவர்களுக்கு எதிரான சட்டமில்லை ஏனெனில் அவர்கள் கருப்புத் தோலுடைய ‘நீக்ரோக்கள்’. அவர்கள் மனிதர்களல்ல; மிருகங்களாகக்கூட அவர்கள் ஆகமாட்டார்கள்; பலாத்காரமாகச் சட்டத்தின் மூலமோ அல்லது குருட்டுப் பிடிவாதத்தின் மூலமோ தீமையை அகற்ற முயன்றதால் மேற்கண்ட விளைவுகள் நிகழ்ந்தன.

[* – சுவாமிஜி வாழ்ந்த 1863-1904 காலகட்டத்தில் ‘நீக்ரோ’ என்பது சகஜமான சொல்லாகப் பயன்படுத்தப் பட்டது, இன்று போல அவமதிப்பான சொல்லாக அது கருதப் படவில்லை. அப்போதைய அமெரிக்காவில் கருப்பர்களின் நிலையை உள்ளபடியே சுவாமிஜி இங்கு எடுத்துக் கூறியுள்ளார். இதற்கு அரை நூற்றாண்டு கழிந்த பின்னரே அமெரிக்காவில் கருப்பர்களுக்கான உரிமைப் போரை மார்ட்டின் லூதர் கிங் முன்னெடுத்து வெற்றி பெற்றார்].

இஷ்டதெய்வ வழிபாட்டை, புத்தர் இடைவிடாமல் நிந்தித்து வந்தார். அதன் விளைவாக விக்கிரங்கள் பாரதத்தில் நுழைவு பெற்றன. வேதங்களுக்கு உருவங்களைப் பற்றித் தெரியாது. படைப்பாளனாகவும் நண்பனாகவும் இருந்த கடவுள் தத்துவத்தை இழந்த போது அதற்கு எதிர்ச்செயலாக மகான்களான ஆசான்களின் உருவங்களைச் சமைக்கத் துவங்கினார்கள். புத்தரே விக்கிரகமாக ஆக்கப்பட்டார். அப்படியே அவரை லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். பலாத்காரமான சீர்திருத்த முயற்சிகள் உண்மையான சீர்திருத்தத்தை முட்டுக்கட்டையிட்டுத் தடுப்பதில் வந்து முடிகின்றன.

நல்லது செய்வதற்காகவேனும், முரட்டுப் பிடிவாதமான இயக்கத்தைத் துவக்கினால் சரித்திரம் அதற்கு விரோதமாக இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

யாருக்குச் சீர்திருத்தம் தேவை?

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கலாம்… பாரதத்தின் பாமரமக்கள் பிறப்புரிமையாகப் பெற்று வந்துள்ள ஞான ஒளியை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு ஒரு காலத்திலும் அளிக்கப்படவில்லை. கடந்த சில நூற்றாண்டுகளாக மேல்நாட்டு மக்கள் சுதந்திரத்தை நோக்கி வெகுவேகமாக முன்னேறி வருகின்றனர். பாரதத்தில் குல நிர்ணயம் முதற்கொண்டு மனிதர்கள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பது வரை எல்லா விவரங்களையும் தீர்மானித்துத் தருபவன் மன்னன்தான். மேலைநாடுகளில் மக்கள் எல்லாவற்றையும் தாமே செய்துகொள்வது வழக்கம்.

… பாரத மக்களுக்கு, தம்மிடம் சிறிதளவுகூட நம்பிக்கையில்லை. அந்நிலையில் அவர்கள் தம் காலில் நிற்பது பற்றிச் சிந்திக்கவும் முடியுமா? தனது ஆத்மாவில் நம்பிக்கை கொள்வதுதான் வேதாந்தத்தின் அடிப்படை. இது நடைமுறையில், மிகச் சிறிய அளவுக்குக் கூட இன்னும் கொணரப்படவில்லை.

சமூகச் சீர்திருத்தப் பிரச்சினை முழுவதும் ஒரு கேள்விக்குள் ஒடுங்கிவிடுகிறது. சீர்திருத்தம் யாருக்குத் தேவை? முதலில் அவர்களை உண்டாக்குவோம். ‘யாருக்குத் தலையே இல்லையோ அவர்களுக்குத் தலைவலி வர சந்தர்ப்பமேயில்லை’ என்பது போலப் ‘பொது மக்கள்’ எங்கேயிருக்கிறார்கள்? எங்கேயிருக்கிறார்கள் ‘ஜனங்கள்’?

(தொடரும்)

அடுத்த பகுதி >>

10 Replies to “எழுமின் விழிமின் – 11”

  1. ஒன்றுபட்டு நின்று பழுதுபட்டுள்ள ஹிந்து வாழ்க்கை முறை என்னும் கப்பலைச் சீர் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தன்னை ஹிந்து என்று கூச்சமில்லாமல் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஸ்வாமிஜி விளக்கியிருக்கும் விதம் அருமை.

  2. ” இஷ்டதெய்வ வழிபாட்டை, புத்தர் இடைவிடாமல் நிந்தித்து வந்தார். அதன் விளைவாக விக்கிரங்கள் பாரதத்தில் நுழைவு பெற்றன. வேதங்களுக்கு உருவங்களைப் பற்றித் தெரியாது. படைப்பாளனாகவும் நண்பனாகவும் இருந்த கடவுள் தத்துவத்தை இழந்த போது அதற்கு எதிர்ச்செயலாக மகான்களான ஆசான்களின் உருவங்களைச் சமைக்கத் துவங்கினார்கள். புத்தரே விக்கிரகமாக ஆக்கப்பட்டார். அப்படியே அவரை லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். பலாத்காரமான சீர்திருத்த முயற்சிகள் உண்மையான சீர்திருத்தத்தை முட்டுக்கட்டையிட்டுத் தடுப்பதில் வந்து முடிகின்றன.”-

    – இந்த வரிகள் வைர வரிகள் எனலாம். புத்தர் நம் மக்களுக்கு தவறான வழிகாட்டி குழப்பிய பெருமகனார். அவர் செய்த தவறின்விளைவே இன்று உலகம் முழுவதும் உள்ள புத்த மத வழிபாட்டு தலங்களில், கவுதம புத்தரின் பிரம்மாண்டமான சிலைகள், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி , வெண்கலம் என்று ஏராளமாக அணி வகுக்கின்றன. இனிவருங்காலங்களிலும், அவருக்கு ஏராளமான கோயில்கள் கட்டி, பிரம்மாண்டமான சிலைகள் நிறுவப்பட்டு வழிபடப்படும். ஏனெனில், மனித இனத்துக்கு அற்புதமான மன ஒருமைப்பாடு தரவல்லது உருவவழிபாடே ஆகும். சுமார் 98% மக்களுக்கு உருவ வழிபாடே ஏற்றது. உருவமற்ற வழிபாட்டில் மனம் பெரும்பான்மையினருக்கு லயிக்காது. மிக சிலருக்கே உருவமற்ற வழிபாடு ஏற்றது.

    நம் இந்து மதத்திலும் பல மூடர்கள், பெண்கள் காயத்திரி மந்திரம் சொல்லக்கூடாது, வேதம் படிக்ககூடாது என்று பொய்களை சொல்லி, ஆணாதிக்க வெறிநாய்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் , பெண்களுக்கு மத வழிபாட்டு உரிமைகளில் , ஆண்களுக்கு சமமான உரிமை வழங்காத எல்லா வழிபாட்டு தலங்களில் இருந்தும் , அது எந்த மதத்தினை சார்ந்ததாக இருந்தாலும் சரி, ஆண்களை விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    ஆணுக்கு பெண் சமம் இல்லை என்று சொல்லும் எந்த மத நூல் ஆனாலும் மக்கள் அவற்றை கொளுத்துவார்கள். அண்மையில், லிப்கோ பிரசுரத்தாரின் ” சகல காரிய சித்தி தரும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் “- புத்தகத்தினை ( 2011- வெளியீடு ) வாங்கிப்படித்தேன். பக்கம் அறுபதில் , பிரம்மா, க்ஷத்திரிய , வைசிய என்ற மூவர்ணத்தை சேர்ந்த புருஷர்கள் மட்டுமே மேற்படி ஜபம் செய்யலாம் என்றும், மற்றவர்கள் இந்த ஜபமுறையை பின்பற்றினால் பயனளிக்காது. கோபுரத்தின் மீதேறி அனைவருக்கும் ஓம் நமோ; நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த வைணவ மகான்கள் பிறந்த நம் புனித நாட்டில், எல்லா வர்ணத்து பெண்களும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜபம் செய்யக்கூடாது/ பெண்கள் பின்பற்றினால் பயனளிக்காது என்று பொய் சொல்லி , இதுவரை செய்த பாவம் போதாது என்று, மேலும் மேலும் பாவத்தினை ஏனிந்த மனிதர்கள் சுமக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான்காம் வருணத்தினர் விஷ்ணு சகஸ்ரநாமத்தினை ஜபம் செய்தால் பயனளிக்காதாம். என்ன அக்கிரமம்? இந்த கருத்தை வெளியிட்டோர் , விஷ்ணு சகஸ்ரனாமத்தினையே கேவலப்படுத்தி , தங்களையும் கேவலப்படுத்திக்கொள்கின்றனர்.

    இதுபோன்ற அழுக்கு சிந்தனை கொண்டோரும் நம் இந்து சகோதரர்களே, அவர்கள் திருந்த எல்லாம் வல்ல பாற்கடல் நாயகனாம் சங்கு சக்ரதாரி அருள்புரியட்டும்.

  3. விஷ்ணு சகஸ்ரநாமத்தினை எந்த உயிரினம் ஜபம் செய்தாலும் மேன்மை பெறும்.உயர்நலம் பெறும். அப்படியிருக்க, புருஷர்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என்று எழுதியிருப்பதனை இனியாவது திருத்துங்கள் . பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? ஆணாதிக்க வெறியர்களை, எம்மதத்தினர் ஆயினும் விரட்டியடிப்போம். இது உறுதி.

  4. அத்விகா on August 25, 2012 at 10:24 பம்

    எனது மேற்கூறிய கடிதத்தின் நாலாவது பத்தி( பாரா) நாலாவது வரியின் கடைசியில் ” என்று தெரிவித்துள்ளனர்”- என்று சேர்த்துக்கொள்ளவும். டைப்பிங் செய்தபோது விடுபட்டுள்ளது.

  5. //மனித இனத்துக்கு அற்புதமான மன ஒருமைப்பாடு தரவல்லது உருவவழிபாடே ஆகும். சுமார் 98% மக்களுக்கு உருவ வழிபாடே ஏற்றது. உருவமற்ற வழிபாட்டில் மனம் பெரும்பான்மையினருக்கு லயிக்காது. மிக சிலருக்கே உருவமற்ற வழிபாடு ஏற்றது. //

    தவறான வாதம். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று உருவத்தை வணங்குவதில்லை. ஐந்து நேரமும் அவர்கள் தங்களைப் படைத்த இறைவனின் பெருமையை தினமும் மசூதிகளிலும் வீடுகளிலும் போற்றி வருகிறார்கள். விவேகானந்தர் கூற்றுப்படி புத்தருக்கு முன்னால் நமது பாரதத்தில் உருவ வழிபாடு இல்லாதிருந்தது என்பதை அறியலாம்.

  6. சுவனப்பிரியன்,

    மீண்டும் குழப்ப ஆரம்பித்து விட்டீர்களா? இந்துக்கள் உருவம் மூலம் எங்கும் நிறைந்தவனையே வழிபடுகிறார்கள். உருவத்தை மட்டும் வழிபடுவதாக நீங்கள் புரிந்து கொண்டால் , நாங்கள் என்ன செய்வது?

    இஸ்லாமிய அன்பர்கள் உருவமில்லாமல் வழிபடுகிறார்கள் என்பதும், ஆனால் அவர்களுக்கு மன ஒருமைப்பாடு சித்திக்காததால் தான், வன்முறை மூலம் பிறரை அழித்து, இஸ்லாம் என்றாலே வன்முறை என்ற கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த உலகில் எழுநூறு கோடி மக்களுக்கும் வித்தியாசங்களுடனேயே தான் இறைவி படைத்துள்ளார்.

    எழுநூறு கோடி மக்களும் எந்த நாளிலும் ஒரே மொழி, ஒரே உணவுப்பழக்கம், ஒரே வகை உடை, ஒரே வகை இறை வழிபாடு, ஆகியவற்றை பின்பற்ற மாட்டார்கள். இறைநம்பிக்கை இல்லாத மனிதர்களை கூட , அந்த இறைவி தான் படைத்துள்ளாள்.

    நல்லது கெட்டது எது என்று எல்லோருக்கும் தெரியும். அவரவருக்கு தேவையானதை அவரவர் கொள்வர். ஒருவருக்கு பொருந்துவது எல்லோருக்கும் பொருந்தும் என்பது சரியல்ல. உங்களுக்கு ஒரு கேள்வி? காபா என்பது கூட ஒரு உருவம் தான். அதனை ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமிய பெருமக்கள் , அதன் முன்னர் வழிபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் புனிதம், மற்ற இடங்கள் அவ்வளவு புனிதமானவை அல்ல என்று சொல்லும் எந்த மதத்தையும் பகுத்தறிவுள்ள மனிதன் ஏற்கமாட்டான். ஆணுக்கு பெண் சமம் இல்லை என்று சொல்லி , ஆண்களை உயர்த்துகிற ஆணாதிக்க கொடுங்கோன்மையின் சின்னமே உங்கள் மதம்.

  7. சுவனத்திற்கு விசா எடுத்து வைத்திருக்கும் மதமல்ல மார்க்க சகோ சூபி அவர்களே,

    புத்தருக்கு முன் இந்தியாவில் உருவ வழிபாடு கிடையாது என்பது தவறு. அத யார் சொல்லியிருந்தாலும் தவறு தான். மகாபாரத்திலேயே குடும்பத்துடன் காத்யாயனி விரதம் இருக்கு கோவிலுக்கு போவதாக இருக்கிறது. இதெல்லாம் நமக்கேதுக்கு விடுவோம்.

    இஸ்லாம் உருவ வழிபாட்டை எதிர்க்கிறதா 🙂 அல்லாவுக்கு உருவம் இல்லையா. உருவம் இல்லாத ஒருவர் தான் அர்ஷின் மீது அமர்ந்திரிக்கிறாரா. உருவமில்லாதவர் தான் ஜிப்ரீலை திட்டினாரா. உருவமில்லாதவர் தான் குன் என்று சொல்லி உலகத்தை படைத்தாரா. உருவமில்லாதவரை தான் ஒரே நைட்டில் நபி அவர்கள் அர்ஷிர்க்கு சென்று பார்த்தாரா?

    பாகன்களை அடிச்சு நொறுக்கி அவங்களுக்கு எதிரா ஒரு மதத்தை நிறுவணும். இதே டெக்னிக்க வெச்சு யூதர்கள் ஜெயிச்சதால் மறுபடியும் வொர்க் அவுட் ஆகும்னு காப்பி அடிச்சு அவுத்து வுட்டதெல்லாம் தத்துவம்னு உளறினால் தான் விசா கவுன்டர்ல பெர்மிட் கிடைக்கும்!

    உருவமில்லாத இறைத் தத்துவத்தை முழுவதுமாக விளக்குவது அத்வைதம் தான். உடனே இசுலாம் அத்வைதம்னு சொல்லாதீங்க, உங்காளுங்களே (பீ ஜெ) அத இல்லேங்கறாங்க.

    (edited and published)

  8. இந்து மதத்தின் வழிபாட்டு முறை என்பது வாழ்வியலும், மனோவியலும் சேர்ந்தது .
    கீழ்மையான , மிருகத்தின் தன்மையிலிருந்து மனதை மேன்மையான கடவுள் தன்மைக்கு உயர்த்தும் நோக்கோடு அமைந்தது அது .

  9. உருவ வழிபாடை ஏற்காதவர்கள் ரூபாய் நோட்டை காகிதம் என்று சொல்லமாட்டார்கள்.கழுதை அறியுமாகற்புர வாசனை ?

    53 வயதில் 9 வயது சிறுமிஆயிசா வை திருமணம் செய்து அநதச் சிறுமி வயதிற்கு வரும் முன்பே தனது காம வெறியை தணிக்க அந்த குழந்தையை பயன்படுத்திய முஹம்மதுவை எப்படி இவர்களால் வழிகாட்டி மனிதர்களில் பரிபுரணா் என்று புகழ முடிகின்றது என்பது விளங்கவில்லை.படிக்கவே குடலை பரட்டுகின்றது.

  10. mஅத்விகா நமது கோவில்களின் அமைப்பு கத்தோலிக்க தேவாலயங்களின் சாயலில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.புதிய கோவில்களையாவது அபபடி கட்டலாம். ராமகிருஷ்ண மடத்தில் பிராா்த்தனை கூடங்கள்தானே கட்டுகின்றாா்கள். கலையரங்கம் போல்- கோவில் களை அமைத்து பத்மானசனத்தில் அமர வைத்து அந்தா் யோகம் பாணியில் பிராா்த்தனை செயய பழக்க வேண்டும். கருவறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் தெய்வம் வசுலுக்கு மட்டும் பயன்படுகின்றாா்.முறையான சமய கல்வி வே ண்டும்.விவேகானந்தா் பாறைக்கு சென்றவர்கள் தியான அறையில் அமைதியாக தியானம் செய்வதைக் காணலாம். இந்துக்களா இப்படி என்று அதிசயத்துப் போனேன். இந்த மாற்றம் அனைத்து வீடுகளுக்கும வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *