புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?

ல ஆண்டுகளாக இந்த நாட்டில் சேவை இயக்கங்கள் எனும் பெயரால் அயல் நாட்டுப் பணத்தை ஏராளமாகக் கொண்டு வந்து குவித்து மதமாற்றங்களைச் செய்து கொண்டு, வெளியில் பொதுமக்களுக்கான நலச்சேவை என்று பறை சாற்றிக் கொண்டிருந்தார்கள். பல இந்து இயக்கங்கள் இது குறித்து குரல் எழுப்பிய போதெல்லாம் அவர்களை மத வெறியர்கள் என்று முத்திரை குத்தி இந்த மதமாற்றத்தைப் பல வகையாலும் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி யாராவது இவர்களது போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினால் உடனே அவர்களை எல்லா விதத்திலும் வாயடைக்கச் செய்து வந்தார்கள். வெளி நாட்டுப் பணம் இவர்களைப் போன்ற இயக்கங்களுக்கு வருகிறது என்பதும், யார் யாருக்கு எத்தனை பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் மத்திய அரசின் உள்துறைக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அப்படி வருகின்ற பணம் எத்தகைய நலத் திட்டங்களுக்குச் செலவிடப் படுகின்றன என்பதைத் தெரிந்திருந்தும் அவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்கக் காரணம் ஓட்டு வங்கி அரசியல்தான்.

மீப காலமாகத் தமிழ் நாட்டில் கூடங்குளம் பிரச்சினை தலையெடுத்து மிகப் பெரிய போராட்டக் களமாக மாறிவிட்டது. இது ஒரு புறம் என்றால், மறுபுறம், தமிழ் நாடு மின் பற்றாக்குறையால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சென்னை தவிர மற்ற பகுதிகளில் ஒரு நாளில் பத்து பன்னிரெண்டு மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூடங்குளம் மின்சாரம் கிடைத்தால் தமிழ் நாட்டுக்கு அது மிகவும் பயன்படும் என்கிற எண்ணம் தோன்றி அதுவும் ஒரு புறம் போராட்டமாக உருவெடுக்கத் தொடங்கியது.

வ்விரு போராட்ட களங்களில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் போர்க்களத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்து அதில் கலந்து கொண்டு முன்னணியில் நிற்போர் யாரென்று பார்த்தால் பல கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எனும் போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகக் கூடங்குளம் அணு உலையைத் திறக்க போராட்டங்களில் இறங்கின. சிறு குறு தொழில் முனைவோர் ஊர் ஊராகக் கூடங்குளம் மின் நிலையத்தைத் தொடங்க வேண்டுமெனும் தங்கள் போராட்டத்தை வலுப்படுத்தினர். காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ் நாட்டில் வாய் திறந்து பேசத் தொடங்கினர். கூடங்குள எதிர்ப்புப் போராட்டம் ஒரு சதி என்றும், அங்கு மின் உற்பத்தி தொடங்க வேண்டுமென்றும் பேசத் தொடங்கினர்.

ந்திய மக்களின் ஏன் அகில உலக அறிவாளிகள் ஒருங்கே மதிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் கூடங்குளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று சொன்ன பிறகும் போராட்டம் தொடர்ந்தது மட்டுமல்ல, அவரையே சந்தேகக் கண் கொண்டு மரியாதைக் குறைவாகப் பேசத் தொடங்கியதும் தான் மக்கள் விழித்துக் கொண்டனர். மக்கள் மட்டுமா? மத்திய அரசும் தாங்கள் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த இரகசியங்களை வெளியிட்டு இந்தப் போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருகிறது என்பதை ஒப்புக் கொண்டனர். இந்தியப் பிரதமரும் வெளிநாட்டுப் பணம் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசலானார்.

விழித்துக் கொண்ட மத்திய அரசு இப்போதுதான் சொல்லுகிறது தமிழகத்தில் 3200 தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலர் வந்து கொட்டுகிறது என்று. நாடு முழுவதும் 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2009-10ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 3218 நிறுவனங்களுக்கு இந்த அயல் நாட்டுப் பணம் பாய்கிறது என்பதையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. சரி! இந்தப் பணங்கள் எப்படி செலவு செய்யப்படுகின்றன. யாருக்கு இந்தப் பணங்கள் போய்ச் சேருகின்றன என்பதையும் அரசு வெளியிட வேண்டாமா?

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு இதிலிருந்து நிதி உதவி கிடைப்பதாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதற்கு அந்தப் போராட்டக்காரர்களும், தொண்டு நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்தனர். கண்டனங்களை வெளியிட்டனர். மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக நிதி பெற்று செயல்படுவதாகவும் சொல்லி வந்தனர். ஆனாள் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விவரங்கள் இப்போது உண்மையை வெளிக் கொண்டுவந்து விட்டன.

Courtesy : Rediff.com

ப்போது மத்திய அரசு மூட்டையை அவிழ்த்து விட்ட நிலையில் அன்னிய நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் பெறும் அன்னிய உதவி, அது வருகின்ற விதம், செலவிட்ட துறை போன்றவற்றை உள்ளது உள்ளபடி வெளியிட வேண்டியிருக்கும். வெளியிட மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். சில காலமாகவே மத்திய அரசின் உள்துறை இந்த விவகாரங்களைக் கண்காணித்ததாகவும், அதன் பயனாக இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டன என்றும் தெரிய வருகிறது. 2009-10 ஆம் ஆண்டுக்கான இந்த விவரங்களை உள்துறை செயலர் ஆர்.கே.சிங் வெளியிட்டிருக்கிறார், அதன் பின் 10-11, 11-12 ஆகிய ஆண்டுகளின் விவரங்களும் 2009க்கு முந்தைய பல ஆண்டுகளில் வந்த நிதியும் கணக்கிடப் படவேண்டுமல்லவா. அவைகள் எப்படியெல்லாம் செலவிட்டன, எதற்குப் பயன்பட்டன, பயனாளிகள் யார் என்பதையெல்லாம் மத்திய அரசு விரிவாக வெளியிட்டால்தான் இந்தியாவில் நடக்கும் பல திரை மறைவுச் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வரும்.

வெளிநாட்டு நிதி என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும் இந்த நிதி குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி 12 நிறுவனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனவாம். 4 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கும் இந்த நிதி பெருமளவில் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வருகிறது. சென்னையைப் பொறுத்த வரையில் மட்டும் ரூ.871 கோடி ரூபாய் வந்துள்ளதாகத் தெரிகிறது. தவிர மும்பைக்கு ரூ.606 கோடி கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி தமிழகத்தில் உள்ள “வேர்ல்டு விஷன் இந்தியா” எனும் அமைப்புதான் அதிக பட்சமாக ரூ.208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றிருப்பதாக அரசாங்க அறிக்கை கூறுகிற்து. மேலும் இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன் என்பவர். இது ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று கூறப்படுகிறது. இந்த உண்மையையும் அரசாங்கம் கண்டறிந்து அறிக்கை வெளியிட வேண்டும்.

து போன்ற அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதியுதவி செய்வோரில் அமெரிக்காவில் உள்ள “காஸ்பல் ஃபார் ஆசியா” எனும் நிறுவனம் மட்டும் 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் “ஃபண்ட் ஆக்ஷன் வின்செண்ட் பெரரர்” எனும் நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் “வேர்ல்ட் விஷன் குளோபல் சென்டர்” 197.62 கோடியும் தாராளமாக வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த நிதி அதிகரித்துக் கொண்டே பொயிருக்கிறது. இந்தியாவில் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொண்டு பதிவாகியிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் அதிகமானதாகும். இவற்றில் வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் 2 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனவாம். இந்த அறிக்கை நாட்டில் இதுவரை அன்னிய உதவி என்ற பெயரில் என்னவெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்பதை மத்திய அரசு முழுவதுமாக ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நிறைவாக சமீபத்தில் எனக்கு எற்பட்ட ஒரு அனுபவத்தை எழுத விரும்புகிறேன். ஒரு நாள் காலை 10 மணி சுமார், நான் வீட்டு வாயிற்கதவைத் தாழிடுவதற்காக வந்தேன். அப்போது வாயிலில் நன்றாக உடையணிந்த வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் உட்பட மூவர் வந்து வாசல் கேட்டருகில் நின்றனர். என்ன வேண்டுமென்றேன். உங்களிடம் பேச வேண்டுமென்றார்கள். பாத்ததுமே எனக்குப் புரிந்து போயிற்று இவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்று. இருந்தாலும் வந்திருந்த பெரியவர் நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரை நினைவு படுத்திய காரணத்தால் மரியாதையோடு என்ன பேச வேண்டுமென்பதை சுருக்கமாகச் சொல்லுங்கள் எனக்கு வேலையிருக்கிறது என்றேன். அவர் உடனே கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்து, “பாருங்கள் இப்போது உலகத்தில் எங்கு பார்த்தாலும், அமைதியின்மை ….” என்று தொடங்கியதுமே எனக்குப் புரிந்தது. நான் சொன்னேன், “நீங்கள் வந்திருப்பது என்னிடம் மதப் பிரச்சாரம் செய்ய என்றால் போய்விடுங்கள். கணுக்கால் அளவுள்ள உங்கள் தத்துவங்களை பசிபிக் சமுத்திரம் போன்ற ஆழமான கருத்துகளை அறிந்திருக்கும் நான் கேட்க விரும்பவில்லை. உங்கள் எண்ணமும் இங்கு நிறைவேறாது, போய்வாருங்கள், என்று இருகரம் கூப்பிக் கும்பிட்டு விடைகொடுத்தேன். அருகில் இருந்த அந்த இளைஞர் உடனே புரிந்துகொண்டு, சரி போகலாம் வாருங்கள் என்று அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டார்.

ப்படித் தினம் தினம் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். செய்வார்களா?

ooooo0ooooo

19 Replies to “புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?”

 1. கோயிலில் வரும் வருமானங்கள் எல்லாம் இந்து சமய அறநிலை துறை என்ற கொள்ளையர்களின் பிடியில் உள்ளது, முதலில் அவர்களை கோயிலில் இருந்து விரட்ட வேண்டும். கோயிலில் இருந்து கிடைக்கும் வருமானம் மூலம் நாமும் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய கல்வி முறைகளுக்கு அதனை செலவிடலாம். இவ்வாறு செய்தால் மட்டுமே நமது மக்கள் பாவாடைகளின் பிடியில் இருந்து விடுபட முடியும்.

 2. these are the end of days for hinduism,you can’t save your hinduism,your painstaking efforts are going down the drain
  All your efforts are useless
  we determined to smash your (edited) புனித பாரதம்,you tamilhindus cant have the stamina to withstand us
  with in 25 years hinduism become extinct from this world
  we dont smash hindus ,we love them -we are going to smash hinduism only
  ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
  6 The wolf will live with the lamb,
  the leopard will lie down with the goat,
  the calf and the lion and the yearling[a] together;
  and a little child will lead them.
  7 The cow will feed with the bear,
  their young will lie down together,
  and the lion will eat straw like the ox.
  8 The infant will play near the cobra’s den,
  and the young child will put its hand into the viper’s nest.
  9 They will neither harm nor destroy
  on all my holy mountain,
  for the earth will be filled with the knowledge of the LORD
  as the waters cover the sea.

  We are looking forward for that glorious day to come

 3. நம் பாரதத்தை துண்டு போட விரும்பும் சக்திகளைக் குறித்து கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனாலும், மூடுபனி முழுவதும் விலகவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகளை வெளிப்படையாக பெயரிட்டழைப்பது
  குறித்து இன்னும் மனத்தடைகள் உள்ளன.

  ஆனாலும், சில குறியீட்டுடன் இதை மத்திய காங்கிரஸ் அரசு வெளியிட்டு வருகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கூடங்குளம் அணு உலையை ஆரம்பிப்பதற்காகவே இது நடக்கிறது என்றாலும் நடக்கும் வரை சந்தோஷமே!

  பிரதமர் Science இதழிற்காக அளித்த பேட்டியிலிருந்தே இந்த விவகாரம் சூடு பிடித்தது.

  நான் இந்த மறுமொழியை எழுத மேலும் ஒரு முக்கிய காரணம் உள்ளது.

  பிரதமரின் அந்த பேட்டியில், சில வெளிநாட்டு உதவி பெறும் “அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்” குறித்து மேலும் ஒரு முக்கிய தகவலை அளித்தார். ஆனால் கூடங்குளம் பிரச்சனையின் தீவிரத்தால் அந்த முக்கிய பேட்டி அம்சம் கவனிக்கப் பட வில்லை.

  அதை இங்கு விளக்க விரும்புகிறேன். இது மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பற்றியது.

  பிரதமர் அவர்கள் தன் பேட்டியில், “மரபணு மாற்றப்பட்ட விதைகளை” உபயோகிப்பது தவறு என்று தீவிரமான பிரச்சாரத்தில் சில “அரசுசாரா நிறுவனங்கள்” ஈடுபடுகின்றன. அந்த “அரசுசாரா நிறுவனங்களுக்கும்” வெளிநாடுகளில் இருந்தே பணக்கொடை வருகிறது. இந்த எதிர்ப்பு, அறிவியல் அடிப்படையில் அல்லாமல் வெறும் உணர்ச்சி ரீதியில் நடைபெறுகிறது. இந்தியாவின் பெருகி வரும் மக்கள் தொகை கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில் உணவு உற்பத்தி பெரும் அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  “மரபணு மாற்றப்பட்ட விதைகள்” குறித்து விட்டு விடுவோம். கூடங்குளம் எதிர்ப்பை முன் நின்று நடத்துபவர்களுக்கு வெளிநாட்டு பண உதவி வருவதைப் போலவே, இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான எதிர்ப்பும் வெளிநாட்டு பண உதவியுடனேயே நடைபெறுகிறது.

  பிரதமரின் பேட்டியின் ஒரு அம்சத்தை மட்டும் நமக்கு ஏற்புடையதால் ஏற்றுக்கொண்டு, மற்றொரு அம்சத்தை கேட்டும் கேட்காமல் விடுவது சரியல்ல.

 4. Mr/Mrs/Ms.Not necessary (rightly the name implies your comment in this site),
  Let us look at what you have written:-

  //these are the end of days for hinduism,you can’t save your hinduism,your painstaking efforts are going down the drain
  All your efforts are useless
  we determined to smash your (edited) புனித பாரதம்,you tamilhindus cant have the stamina to withstand us
  with in 25 years hinduism become extinct from this world
  we dont smash hindus ,we love them -we are going to smash hinduism only
  ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
  6 The wolf will live with the lamb,
  the leopard will lie down with the goat,
  the calf and the lion and the yearling[a] together;
  and a little child will lead them.
  7 The cow will feed with the bear,
  their young will lie down together,
  and the lion will eat straw like the ox.
  8 The infant will play near the cobra’s den,
  and the young child will put its hand into the viper’s nest.
  9 They will neither harm nor destroy
  on all my holy mountain,
  for the earth will be filled with the knowledge of the LORD
  as the waters cover the sea.//

  You know that “wolf will not live with the lamb, leopard will not lie with the goat, calf and lion wont be together, shit and sandal paste wont look the same”, blah blah blah…
  You know that the wonderful song you wrote is a nice figment of imagination and a dream, but you failed to recognize that your words of ‘destroying Hinduism’ will also end as a dream! Just like a stray dog barking at a huge mountain…
  Leave alone you and your filthy missionaries, even if your Lord-God comes directly, he cannot take away a single hair from the enormous bodybuilder called Hinduism.
  Proof:- Hinduism very well existed when your Lord-God lived on this Earth (if at all true???), yet what could he do? Hinduism lived, lives and in future won’t just live, but will dominate!!

 5. Mr. Not necessary…!

  ஹிந்துயிசத்தை 25 ஆண்டுகளில் வேரறுக்க இருக்கும் உங்கள் திமிர்த்தனத்தைப் பாராட்டுகிறேன். ஹிந்து வலைத் தளத்தில் வந்து இப்படி அர்த்தமில்லாமல் பிதற்ற உங்களுக்கு வந்தது தைரியம் அல்ல; திமிர்த்தனம். தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களை வம்புக்கு இழுக்கும் உங்களைப் போன்றவர்களை இந்த மண், இருக்க அனுமதிக்கிறதே… அது வேதனை தான்.

  ‘ஹிந்துக்களையல்ல, ஹிந்துயிசத்தையே நாங்கள் அழித்து வருகிறோம்’ என்னும் உங்கள் வாக்கு மூலம், இந்தக் கட்டுரைக்கு ஒரு மறுமொழியாக உங்களிடத்திலிருந்து வெளிப்பட்டிருப்பதே ‘அயல் நாட்டுக் கரன்சிகளை வாங்கிக் கொண்டு, இந்தியாவை அழிக்க முயலும் உங்கள் திமிர்த்தனமான வீண் முயற்சி’க்கு ஆதாரமாகிறது.

  நீங்கள் யார்? உங்களுக்கு ஹிந்து சமயத்தின் மேல் என்ன வெறுப்பு? ஏன் அதை அழிக்க வேண்டும் என்று துடிக்கிறீர்கள்? உங்கள் வீண் முயற்சிகள் எந்தக் காலத்திலும் பலிக்கப் போவதில்லை என்றாலும் உங்கள் மனத்திலிருக்கும் அழுக்கைக் கழுவுவது எங்கள் கடமையாகிறது. அதனால் கேட்கிறேன். உங்களுக்கு ஹிந்து சமயம் பற்றி என்ன தெரியும்? எதைத் தெரிந்துகொண்டு எதிர்க்கிறீர்கள்?

  ஏதேனும் தெளிவு வேண்டுமானால் விவாதித்துப் பெறலாம். ஆனால் திமிர்த்தனத்துக்குச் சட்டம்தான் பதில் தர வேண்டும். தமிழ் ஹிந்து தளம் உங்கள் மேல் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் //we determined to smash your (edited) புனித பாரதம்// என்னும் பதிவுக்காகவே…!

 6. கிறிஸ்துவம் பல நூற்றாண்டுகளாக மத மாற்றத்தையே சமூக சேவையாக உலகம் முழுவதும் கடைபிடித்து வருகிறது .யூதர்களிடம் எடுபடாத இம்மதம் ஹிந்துக்களிடம் பரப்ப பணத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பிரசாரம் செய்ய மிசனரிகள் காலம் காலமாக முயல்கிறார்கள் .இவர்களின் மூளை சலவை பிரச்சாரங்கள் பாமர மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .தமிழ் நாட்டின் சாபக்கேடான திராவிட கட்சிகளை உருவாக்கியதே இம்மிசனரிகள் தான் .இவர்களின் கைகூளிபடையாகிய ஈ. வே .ரா துதிபாடிகள் தங்கள் போலி பகுத்தறிவை அப்பாவி ஹிந்துக்களிடம் மட்டும் பேசுவார்கள் .மோசடி கிருத்துவ மத மாற்ற கும்பலுக்கு எதிராக வாயை திறக்க மாட்டார்கள் .இவர்களின் பொய்யான கேவலமான நாத்திகம் மற்ற மதங்களுக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்துள்ளது .

 7. பெருந்துறையான்,

  யாரோ சிலர் உளறுவதற்கு எல்லாம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம். அழிப்பேன் என்று சொல்பவன் தானே அழிந்துபோவான். கடவுள் அவனை கவனித்துக்கொள்வார்.

 8. தமிழில் தட்டச்சு செய்யாமல் ஆங்கிலத்தில் மெயில் அனுப்பியுள்ள” நாட் நெசசரி ” ( not necessary) அவர்களுக்கு ,

  எங்கும் நிறைந்ததை , எப்போதும் உள்ளதை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. குறிப்பிட்ட காலத்தில் உருவானது , வேறொரு காலத்தில் மறையும். தோன்றியது மறையும், சுயம்பு மறையாது. ஹிந்துக்கள் என்பவர் மனிதர்கள், மனிதர்கள் பிறந்து மறைபவர்கள், ஆனால் இந்துயிசம் என்பது என்றும் உள்ளது. அதற்கு அடிப்படை பகுத்தறிவு, விவாதம், தர்க்கம், உண்மை, ஞானம் ஆகியவை ஆகும்.

  கடவுள் நம்பிக்கை தேவை என்று நினைப்பவனும், கடவுள் நம்பிக்கை மனித சமுதாயத்தை பிடித்த பீடை என்று சொல்லும் வீரமணி கும்பல் போன்றவர்களும் , இந்துமதத்தின் இரு பக்கங்களே. சார்வாகர்கள் சுமார் ஐயாயிரம் வருடத்துக்கு முன்பே ,நாத்திகம் பேசிய பெருமக்கள் ஆவார்கள். இதனையே மணிவாசக பெருமான் திருவாசகத்தில் “நாத்திகம் பேசி நாத்தழும்பேறி ” என்று குறிப்பிட்டுள்ளார்.

  நாத்திகம் பேசியோரை ஆபிரகாமிய மதங்கள் பயமுறுத்தி வன்முறை மூலம் கொன்று அழித்தனர். ஆனால் இந்துக்கள் அவர்களை எங்கள் ஞான மரபின் ஒரு பகுதி என்று அங்கீகாரம் செய்துள்ளனர்.
  நீயும் உன் கொள்ளு தாத்தாவும் இந்து மரபில் வந்தவர்களே. மத மாற்ற வியாபாரிகளின் பெரிய ரொட்டி துண்டுகளுக்கு வாலாட்டிக்கொண்டு போனவர்கள் சிலர். கொடிய வெறியன் அவுரங்க சீப்பின் வன்முறை வெறியாட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் , இஸ்லாமை மனதில்லாமல் ஏற்றவர் பல லட்சம். அது அந்த காலக்கட்டத்தின் நிர்ப்பந்தம். வரலாறு திரும்பும். வன்முறை ஒழியும். பெண்ணடிமையும்,ஆணாதிக்கமும், உள்ள ஆபிரகாமிய மதங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு குப்பை கூடையில் வீசப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 9. நாட் நெசசரி என்று ஆங்கிலப் பெயரில் மறைந்து கொண்டு இதுபோன்று அழிப்பேன், ஒழிப்பேன் என்பதெல்லாம் காட்டுமிராண்டித் தனம். என்று தோன்றியது எனும் மூலம் தெரியாத ஆதி மூலம் இந்துத்துவம் எனும் வாழ்க்கை முறை. இது உருவாக்கப்பட்ட முதல அல்ல. இந்த புண்ணிய பூமியில் வாழ்ந்த மகா பெரியவர்கள் வாழ்ந்து காட்டிய நெறி முறை. இதை அழிக்க அவுரங்கசீப்பினால் கூட முடியவில்லை. பிரிட்டிஷ்காரன் இருநூற்றைம்பது ஆண்டுகள் முயன்றும் முடியவில்லை. லார்டு மெக்காலே இந்திய பாரம்பரிய கல்வி முறையை அழித்துவிட்டு புதிய அடிமைக் கல்வித் திட்டம் கொண்டு வந்தும் இந்தியாவை கிருத்துவ நாடா ஆக்க முடியவில்லை. இந்த பண்பாட்டு வாழ்க்கை முறையில் ஊறியவர்களை அடிக்க அடிக்க மேல் எழுவர். இதன் விஸ்வரூபம் ஒரு நாள் வெளிப்படும். அப்போது புதிதாய் முளைத்த காளான்கள் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து போதும். ஆகையால், நாட் நேசசரியே பகல் கனவுகள் காண வேண்டாம். இது ஆயிரம் வோல்ட் மின்சாரம்.

 10. வலை தளங்களில் பதில் கொடுப்போர் எல்லோரும் வெளியே வந்து மதமாற்ற முயற்சிகளை முறியடிக்க வேலை செய்ய வெளியே வரவேண்டும்.

 11. அரசியல் ரீதியாக பார்த்தால் இந்து மதம், இந்தியா மற்றும் நேப்பாளம் ஆகிய இரு மூன்றாம் உலக வறுமை சூழ்ந்த நாடுகளிலேயே இருக்கிறது. உலகம் முழுவதும் ஆபிரகாமிய உலகமே. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் புத்த மதம் இருக்கிறது என்றாலும் அவை தனித்தன்மை வாய்ந்தவை. அந்த நாடுகள் மத ரீதியில் இந்தியாவுடன் எந்த அனுசரனையையையும் மேற்கொள்ள போவதில்லை. இந்தியாவுக்கு சப்ளை ஆகும் பெட்ரோல் அரபு நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இஸ்லாமிய அரபு உலகில் ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை செய்து பொருள் ஈட்டுகிறார்கள். அந்த வருமானத்தை நம்பி இந்தியாவில் ஒரு மாநிலமே (கேரளா) இருக்கிறது. மேலும் கல்வி, பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் ராணுவ வலிமை ஆகியவற்றில் முன்னேறிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் மத அடையாளம் என்றால் கிருத்தவமே. இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒரு சாரார் ஆகியோருக்கு இந்துமதம் என்றாலே எட்டிக்காய். இந்து மதம் அழிக்க முடியாத மதம் அல்ல. ஒரு காலத்தில் இந்து மதத்தின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா, மலேசியா ஆகியன இன்று மற்ற மதங்களின் பிடியில். பின் யாரை எதிர்த்து இந்த பதிவு?. இந்து மதம் சார்ந்த பதிவுகளில் பெரும்பாலும் யதார்த்தத்துக்கு புறம்பான வெறியும், பித்தலாட்டமுமே இருக்கிறது.

 12. பெரியசாமி சார்! இந்து மதத்திற்கு இதைவிட கொடுமையான சோதனைகளெல்லாம் வந்துள்ளது. அப்பொழுதெல்லாம் இந்து மதம் அழிவதுபோல தென்பட்டிருந்தாலும், அது நடக்கவில்லை! காரணம் தர்மம். அழிந்திருக்கவேண்டுமேன்றால் கிரேக்க, இரோம, ஐரோப்பிய அமெரிக்க மதங்களெல்லாம் அழிந்தபோழுதே இதுவும் அழிந்திருக்கவேண்டும். ஆனால் நடக்கவில்லை. துளியளவு நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இவ்வுலகில் இருக்குமாயின் நிச்சயம் இந்துமதம் தழைத்தோங்கும். முகமது கஜினி, முகலாயர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இவர்களால் முடிந்ததா? பல கொடூரங்கங்களிலும் அழியாமல் நிலைத்து நிற்கும் ஒரே மதம் இந்துமதம் தான்.

  நிற்க, பல விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் பணக்காரர்களும் கிரித்தவர்கலாகவோ இஸ்லாமியர்களாகவோ இருந்தால் அம்மதங்கள் நிலைத்திடுமா? உலகத்தில் அனைத்தும் ஒருநாள் அழியக்கூடியவைதான், உலகமே ஒரு நாள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களே, அப்படியென்றால் இஸ்லாமையும் கிறித்தவத்தை மட்டும் யார் பின்பற்றுவார், காப்பாற்றுவார்??

  லிசா மில்லர் என்ற நியூஸ்வீக் பத்திரிக்கையின் எழுத்தாளர் எழுதிய இக்கட்டுரையை படித்துப்பாருங்கள்:-
  http://www.thedailybeast.com/newsweek/2009/08/14/we-are-all-hindus-now.html

  இறுதியாக, இந்துமதத்தை அழித்துவிட்டால், எல்லாம் முடிந்துவிடுமா? அங்கேதான் கிளைமாக்ஸ்! நான் பெரியவனா, நீ பெரியவனா நு
  அமெரி அக்காவுக்கும் (கிறித்தவம்) அரபு அண்ணனுக்கும் (இஸ்லாம்) நடக்கும் பஞ்சாயத்தில் வந்து நீங்கள் தீர்ப்பு சொல்லுங்கள் பாப்போம்.. அந்த நாள் வெகு தொலைவில்லில்லை…

  முடிந்தால் டிரை பண்ணுங்கள்.. all the best!

 13. @ periyasamy on April 14, 2012 at 9:34 am

  உங்கள் பதிவின் மூலம், எல்லோரும் அறிந்துள்ள உண்மைகளையே நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.

  உலகின் பெரும்பான்மை நாடுகளில் கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமியம் தான் இருக்கிறது. பௌத்த ஜப்பானோ அல்லது சீனாவோ இந்தியாவுக்கு அனுசரணையாக இருக்காது. முன்பு இந்து சமயம் வீற்றிருத்த பல நாடுகள் இன்று பிற மதங்களின் பிடியில். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஒரு பிரிவு மக்கள் மதம் மாற்றப்பட்டுள்ளார்கள்

  இவற்றை யார் மறுத்தார்கள்?

  தங்களுடைய பதிவுகளிலிருந்து இந்தியா உட்பட்ட உலகின் பல பகுதிகளில் நிகழும் அக்கிரமங்களுக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் வறுமைக்கும் ஏழ்மைக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஹிந்து சமயம் காரணமல்ல. மற்ற மதங்களே காரணம் என்பது பெறப்படுகிறது. ஏனெனில் ஹிந்து சமயம்தான் உலகிலும் இல்லை: இந்தியாவிலும் பெரும்பாலும் இல்லையே..!

  அப்படியானால் இங்கு யதார்த்தக்குப் புறம்பான வெறி, பித்தலாட்டம் என்பவையெல்லாம் என்ன? மற்ற மதங்களால் ஹிந்து சமயத்துக்கு, இந்தியாவுக்கு எந்தக் கெடுதலும் இல்லை என்று நினைப்பது தானே?

  கல்வி, பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் ராணுவ வலிமை ஆகியவற்றில் முன்னேறிய நிலையில் பல நாடுகள் இருந்துவிட்டால், அதைக் கொண்டு இந்தியர்களை மதம் மாற்றலாமா?

  இந்தக் கட்டுரையே தங்கள் பலத்தையும் ஹிந்துக்களின் அறியாமை என்னும் பலஹீனத்தையும் கொண்டு அன்னியர் இந்தியாவை வேரறுக்க முயன்று வருவதைப் பற்றியது தானே?

  நீங்கள் ‘ஹிந்துக்கள் மதம் மாற்றப் படவில்லை’ என்று கூறினால், இங்கு வரும் கட்டுரைகளும் கருத்துக்களும் ‘பித்தலாட்டங்கள்’ என்று கொள்ளலாம். ஆனால் நீங்களே உலகம் முழுதும் மக்கள் ஹிந்து சமயத்திலிருந்து மாற்றப்பட்டு வந்திருப்பதைக் குறிப்பிட்டுள்ளபோது எங்கிருந்து வந்தன ஹிந்துக்களிடம் வெறியும் பித்தலாட்டமும் ?

 14. To Not Necessary,
  Well in reality, your comments are actually for your missionaries. The stats of the world says so. I have just replaced the word Hinduism and edited to suit the Hindu mentality, which lives harmoniously with other religions than half-baked theories of the missionaries.
  ——
  these are the end of days for christianity, you can’t save your christianity, your painstaking efforts are going down the drain
  All your efforts are useless,you missionaries cant have the stamina to withstand Truth & Science
  —–
  வேத மதத்தினை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. உன் அப்பன், பாட்டன், முப்பாட்டனுக்கு மேல் போன முப்பாட்டனாலும் முடியாது. நீ நேற்று பெய்த மழையில் முழைத்த காளான். உனக்கு உன் மதம் பற்றியே ஒன்றும் தெரியாது. ஏனெனில் பாதிரி அதை உன்னிடம் விளக்கினானால் நீ அதை பின்பற்ற மாட்டாய். நீ இந்து மதத்தைப் பற்றியா பேச வந்து விட்டாய்? ஒன்றும் அறியாக் குழந்தாய், உனக்கு தில் இருந்தால் ஒரு முஸல்மானிடம் இதை சொல்லிப் பார். அவன் உனக்கு சுன்னத் பண்ணி விடுவான். ஏனெனில் உன் மிஷிநரிகளின் பெரிய தலைவலி அவர்கள் தான்.

  ஹிந்துக்கள் முழித்துக் கொண்டு விட்டார்கள் தம்பி, இனிமேல் அரை வேக்காட்டு சித்தாந்தங்கள் அவர்களிடம் செல்லுபடியாகாது. அது உலக மக்களிடையே வெறும் பித்தலாட்டம் என்ற பெயரெடுத்து வேகமாக தொகையிழந்து வருகிறது. உனக்கு கூகிளில் தேடத் தெரியுமானால் தேடிப் பார். பாதிரியைக் கேட்காதே, அவனுக்குப் பொழைப்பு ஓடாது உண்மையை அவன் சொன்னால். பரிசுத்த ஆவியில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். வளர்வாய் பாலகா, வளர்வாய். (edited)

 15. பதிவு செய்த நாள்
  08 மே
  2014
  01:00
  ஈரோடு: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே, பள்ளி வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் சர்ச்சால், மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக, ஈரோடு கலெக்டரிடம் பொதுமக்கள் நேற்று, புகார் மனு வழங்கினர்.

  பெருமாள் கோவில் : ஈரோடு மாவட்டம், கொடுமுடி, காவிரி ஆற்றின் கரையில், மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பங்குனி, சித்திரை மாதங்களில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உட்பட பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் என, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
  இங்கு, கட்டண சீட்டு, பக்தர்கள் காணிக்கை, என, ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கொடுமுடியை புராதான நகரமாக அறிவித்து, 1 கோடி ரூபாயை, தமிழக அரசு வழங்கி உள்ளது.
  இந்நிலையில், நேற்று காலை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பாலசுப்ரமணியம் என்பவர் தலைமையில் வந்த, கொடுமுடியை சேர்ந்த பொதுமக்கள், வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது:

  “செவன்த் டே’ பள்ளி : தமிழகத்தில் புண்ணிய தலங்களில் கொடுமுடி, பிரதானமானது. இக்கோவிலுக்கு அருகில், கடந்த, 20 ஆண்டுக்கு மேலாக, கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான இடத்தில், “செவன்த் டே’ பள்ளி ஒன்று செயல்பட்டது. அரசு உதவி பெறும், இப்பள்ளி வளாகத்தில், சில மாதங்களாக தடுப்பு வைத்து கட்டட பணி நடந்த நிலையில், உள்ளே புதிதாக சர்ச் கட்டியது, தற்போது தெரிய வந்துள்ளது; இன்னும் சில நாட்களில் திறப்பு விழா நடக்க உள்ளது. மகுடேஸ்வரர் கோவிலுக்கு அருகில், புதிய சர்ச் கட்டி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இக்கோவில் விழா, தேர் ஊர்வலம், பக்தர்கள் வந்து செல்லும் வழியில், சர்ச் கட்டி உள்ளனர். இதனால், வழிபாடு நடத்துதல், ஸ்பீக்கர் கட்டுதல், சுவாமி தேர் ஊர்வலம் ஆகியவற்றில் சிக்கல் எழும். அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில், புதிய சர்ச் கட்ட, முறையான அனுமதி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. இங்கு மோதல் ஏற்பட, இது வழி வகுக்கும் என்பதால், கலெக்டர் தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

 16. சர்ச் கட்டுவதே சர்ச்சையை உண்டாக்கி அதன் மூலம் மதத்தை வளர்ப்பாதுதானே நோக்கம். Secularism என்ற Mask ஐ அணிந்து கொண்டு Mosque ஐ ஒரு terrorist centre ஆக வைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்துக்களோ temple ஐ சுடச் சுட சுண்டல், வெண்பொங்கல், புளியோதரை ஆகியவை சாப்பிடுவதற்குமான இடம் என்று நினைக்கின்றார்கள். அப்படி நினைப்பதால் மற்றவர்களுக்கு தீங்கு ஏதும் இல்லை. ஆனால் மற்ற இரு மதத்தவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் பேராபத்து. இதை கேட்டால் அவர்கள் சிறுபான்மையர் என்று வக்காலத்து வாங்க வந்துவிடுவார்கள் போலி மதச்சார்பின்மைவாதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *