கம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

தொடர்ச்சி…

New Pension System: (புதிய ஓய்வூதிய திட்டம்) :-

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 2004 ஜனவரி 1ம் தேதியிலிருந்து “புதிய ஓய்வூதிய திட்டம்” “New Pension System” அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும்  இந்தப் புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவார்கள். இதன்படி ஓய்வூதியம், ஊழியர் சேமித்த பணத்தை அடிப்படையாக மட்டும் கொண்டே தீர்மானிக்கப்படும். அவரின் கடைசி மாத சம்பளத்திற்கும் ஓய்வூதியத்தின் அளவிற்கும் சம்பந்தம்  இருக்காது. அதைப் போலவே வருடாந்திர வட்டியும், சந்தையைப் பொறுத்தும், ஊழியரால் தேர்வு செய்யப்பட்ட ஃபண்டுகளின் Performanceஐப் பொறுத்தும் இருக்கும்.

ஆகவே, 2004க்குப் பிறகு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க, மத்திய மாநில அரசுகள் நம் தலை மீது கை வைக்காது. இந்தத் திட்டத்தினால் எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் சுமை என்பதே இருக்காது. அரசு ஊழியர் சேமிப்பது அவருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். “அவர் சேமிப்பு;அவரின் ஓய்வூதியம்”.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ள புதிய ஊழியர்களுக்கான ஃபண்டுகள், கடந்த 5 வருடங்களாக 13 சதவிகிதத்திற்கும்  அதிகமாகவே வட்டியை அளித்துள்ளன. அதாவது, ம்யூச்சுவல் ஃபண்டுப் பங்குகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டன. ஆனால்  அரசு இன்னும் தீர்மானமான முடிவை அறிவிக்காததால் அந்த ஊழியர்களின் கணக்குகளுக்கு வெறும் 8 சதவிகிதமே  வட்டியாக அளிக்கப் படுகிறது. மீதி அரசாங்க கஜானாவிற்குத்தான். ஓய்வூதிய மசோதா சட்டமாக்கப் பட்டிருந்தால், கடந்த  5 வருடங்களாக ஊழியர்களுக்கு 13 சதவிகிதத்திற்கு அதிகமாக வட்டி கிடைத்திருக்கும் என்றாலும், இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலைக்கு வந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை அரசு கஜானாவிலிருந்து அளிக்க வேண்டி வரும். இது எப்படி இருக்கிறதென்றல், எனக்குரிய உணவும் வேண்டும், மற்றவர்களுக்காக வைக்கப்பட்ட உணவும் வேண்டும், உணவு  இருக்கும் பாத்திரங்களும் வேண்டும் என்பது போல இருக்கிறது. அதிக இலாபம் அடையும்போது மற்றவர்களுக்கு அளிக்க  மாட்டார்கள். இலாபம் குறையும் போது மட்டும், மற்றவர்களின் பணத்தையும் (மக்களின் வரிப்பணம்) ஆட்டையைப் போடுவார்களாம்.

உதாரணத்திற்கு ஒரு அரசு ஊழியரை எடுத்துக் கொள்ளலாம். அவரின் சம்பள அளவின் படி அவரிடமிருந்து 1000 ரூபாய் மாதாந்திர சேமிப்பாக பிடிக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்ளலாம். அரசும் 1000 ரூபாயை அதற்கு இணையாக அவரின் கணக்கில் பங்களிக்கும். இந்த 2000 ரூபாயும், அந்த ஊழியரால் தேர்வு செய்யப்பட்ட ஃபண்டுகளில், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளில் முதலீடு செய்யப்படும். வருடாந்திர வட்டிக்கு உத்திரவாதம் இல்லை.20 சதவிகிதமாகவும் இருக்கலாம். 5 சதவிகிதமாகவும் இருக்கலாம். ஆனால் அசலுக்கு உத்திரவாதத்தை அரசேஅளிக்கும்.

3 விதமான முதலீட்டு வழிமுறை ஊழியருக்கு உண்டு. அரசாங்கக் கடன் பத்திரம், அரசாங்கம் அல்லாத நிறுவனங்கள் அளிக்கும் கடன் பத்திரம் மற்றும் நிறுவன பங்குகள். நாம் ஊகிப்பதைப் போலவே இந்த 3 வகை முதலீடுகளிலும் ஆபத்தும், வட்டி விகிதமும் வேறுபடும். ஊழியரின் மொத்தப் பங்களிப்பின் 100 சதவிகிதத்தை ஊழியரின் விருப்பத்திற்கேற்ற அளவில் இந்த 3 முறைகளில் முதலீடு செய்யப்பட்டு வருடாந்திர வட்டி அவரின் கணக்கில் சேர்க்கப்படும்.

சிலருக்கு சந்தையில் உள்ள நிறுவனப் பங்குகள் என்றாலே அலர்ஜி. அவர்கள் எந்தக் கவலையும் படவேண்டியதில்லை. 100 சதவிகித முதலீட்டையும், அரசாங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தாலே போதும். வட்டியும் குறைவு. ஆபத்தும் கிட்டத்தட்ட இல்லை.

 

ஊழியருக்கு 60 வயதானவுடன், அவரின் கணக்கில் உள்ள தொகையில் அதிகபட்சமாக 60 சதவிகிதத்தை Provident Fund  என்று கூறுவதைப் போல, சந்தை விலைக்கேற்றபடி விற்றுப் பணத்தை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். மீதி 40  சதவிகிதமும் முதலீடாக வைக்கப்பட்டு, அவருக்கு வருடாந்திர வட்டி, மாதாந்திர ஓய்வூதியமாக அளிக்கப்படும். மேலும் அகவிலைப்படி உயர்வு, சம்பள கமிஷன் போன்றவற்றின் தாக்கம் ஓய்வூதியத்தில் சுத்தமாக இருக்காது.

விருப்பப்படும் ஊழியர்கள், அதிகப்படியான பங்களிப்பையும் அவ்வப்போது செய்து கொள்ள முடியும். அதையும் ரொக்கமாக வட்டியுடன் ஓய்வு பெறுகையில் பெற்றுக் கொள்ளலாம்.

இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் 401K ஓய்வூதிய கணக்குகளைப் போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, அதிக வட்டியை ஓய்வூதியமாகப் பெற்றவர்கள், பொருளாதாரம் தேக்க நிலைக்கு வந்தவுடன் வட்டி விகிதம் குறைந்ததை ஏற்றுக் கொண்டே வாழ்கிறார்கள். தற்பொழுதும் அமெரிக்கஅரசு, அசலுக்கான உத்திரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கவே செய்கிறது. வட்டிக்கு அல்ல. நமக்கு பிரச்சினையே வட்டிதானே!

இந்தியாவில் நம்மைப் போன்ற பொதுமக்களின் சுமையை முழுமையாகக் குறைக்க முயலும் இந்த திட்டம் சாதாரணமாக  அல்ல, தலைவணங்கி ஏற்றுக்கொள்ள தக்கது.

மறுபடி பழைய ஓய்வூதிய திட்டம் :

நாம் மீண்டும் பழைய திட்டத்திற்கு வருவோம். 2003 டிசம்பர் 31 வரை வேலையில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் ஓய்வு பெற்றவுடன், பழைய முறையில் ஓய்வூதியம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.

கடந்த காலங்களில் பீஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநில அரசுகளால், சில மாதங்கள் ஓய்வூதியமே அளிக்க  முடியவில்லை, சில மாதங்கள் கழித்தே அளிக்க முடிந்தது என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூறலாம். இந்தப்  பிரச்சினையின் பூதாகார அளவு வரும் காலத்தில் நமக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.

இந்திய ரயில்வேயில் ஓய்வு பெற்ற ஒருவரின் ஓய்வூதியத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவரின்  கடைசி மாத Basicம் DAம் 25000 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அதில் 50 சதவிகிதம், அதாவது 12500 ரூபாய்கள் அவருக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். அவரின் சம்பளத்திலிருந்து மாதாந்திர

சேமிப்பைக் கணக்கில் எடுக்காமல், அதற்கான வட்டியை குறித்தும் கவலைப் படாமல் இந்த ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும். மேலும் சம்பளக் கமிஷன், அகவிலைப்படி அதிகரிப்பு போன்றவற்றின் மூலமும் ஓய்வூதியம் அவ்வப்போது அதிகரிக்கும்.

முதியவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது எவ்வாறு தவறாகும் என்று இன்னும் கூட சிலருக்கு ஐயம் எழலாம். தமிழக நிலையை நோக்குங்கள்.ஐயம் தீர்ந்து விடும். தமிழக அரசு, தன் 2012-13ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், 6,83,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்க 13000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இது நம் மாநிலத்தின் வருவாயில் 15 சதவிகிதம். 12 இலட்சம் ஊழியர்களின் சம்பளத்திற்காக 30000 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறது. மொத்தமாக வருவாயில் 43 சதவிகிதத்தைச் செலவு செய்ய வேண்டி உள்ளது.

7.2 கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில், வெறும் 19 இலட்சம் பேருக்கு 43 சதவிகித வருவாயை அளிப்பது தார்மீக  நெறியில் சரிதானா என்ற கேள்வியைக் கேட்டு விட்டோமானால், இந்த கும்பலின் சாயம் வெளுத்து விடும்.

அடிக்கடி அகவிலைப்படி உயர்வும் ஓய்வூதியத்துடன் அளிக்கப்படுகிறது. ஒரு ஊழியர், குறிப்பிட்ட ஓய்வூதியத்தைப் பணயமாக வைத்து மொத்தமாக ரொக்கப் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக 10000 ரூபாய் ஓய்வூதியம் பெறுபவர் 4000 ரூபாயைப் பணயமாக வைத்து சில இலட்சங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 15 வருடங்கள் கழித்து முழு ஓய்வூதியமும் அவருக்கு வழங்கப்படும். இதில் ஒன்றும் தவறில்லை. ஆனால். 15 வருடங்கள் வரை அதிகரிக்கப்படும் அகவிலைப்படி, 10000 ரூபாயை அடிப்படையாகக் கொண்டே அளிக்கப்படுகிறது. இப்படி ஓய்வூதியத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

இதையே இந்திய மத்திய அரசுக்கு விரிவு படுத்திக் கொண்டு யோசித்தால், டப்பா டான்ஸ் ஆடி விடுகிறது. இந்திய இரயில்வே துறையைத் தவிர மற்ற அனைத்துப் பொதுத்துறை ஊழியர்களுக்குமான ஓய்வூதியத்தை அந்த நிறுவனங்களால் அளிக்க முடியவில்லை. மத்திய அரசு, நம் வரி வருமானத்தில் இருந்தே அளிக்கிறது. இரயில்வே  துறையில் 15 இலட்சம் ஊழியர்கள் இருப்பதால், அவர்களிடமிருந்து பிடித்தம் செய்தே, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளித்து விடுகிறது. இந்த நிலை இன்னும் சில வருடங்களில் மாறி விடும். ஏனெனில், இந்திய  இரயில்வேயில் வேலையில் சேர்வோரை விட, ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.  இதைப் பற்றிய மேலதிக விவரங்களை அடுத்து பார்க்கலாம்.

அரசே நடத்தும் சீட்டு கம்பெனி போன்ற வியாபாரம்:-

Ponzi Scheme என்று கூறப்படும் வியாபாரத்தைப் பற்றிப் பார்த்தோம். சீட்டுக் கம்பெனி வியாபாரத்திற்கும், அரசின்  திட்டங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். புதிய பங்களிப்பாளர்கள் சேராதவுடன் சீட்டுக் கம்பெனி திவாலாகி விடும்.  முதலாளி ஓடி விடுவார். ஆனால் அரசு அப்படி விடுவதில்லை. இதற்காகவே இருக்கும் இளிச்சவாயர்களான,

பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து அதிகப்படி பணத்தை அளித்து விடுகிறது.

இந்தியாவிலும் இதற்கான உதாரணங்கள் உள்ளன. இந்திய ரயில்வேயின் ஓய்வூதிய திட்டம் அத்தகையதுதான்.

1950களில் ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்கையில், ஊழியர்கள் அதிகமாகவும், ஓய்வூதியம் பெறுபவர்கள் மிகவும் குறைவாகவும் இருந்தனர். ஆகவே வேலைபார்க்கும் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் பணத்தையும் அதற்கான வட்டியையும் கொண்டே ஓய்வூதியத்தை அளிக்க முடிந்தது.

2003ல், நிலை கவலை தரும் நிலைக்கு சென்றது. அதாவது 100 பேர் வேலை செய்து, 74 பேருக்கு ஓய்வூதியம் அளித்தார்கள். 2012லோ அல்லது 2013லோ, ஓய்வூதியம் பெறுபவர்கள், ஊழியர்களை விட அதிகமாகி விடுவார்கள்.

மக்களின் வரிப்பணத்தைக் கை வைக்காமல் ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு வருடமும் ஓய்வு  பெறுபவர்களை விட அதிகமாக புதியதாக ஊழியர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஒரு Ponzi Scheme என்பது இதுதான். ஆரம்பிக்கும் போது, இலாபத்தின் பங்கீட்டை சரியாக அளிக்க முடியும்.  வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க, இலாபத்தின் அளவை விட, அளிக்க வேண்டிய பங்கீடு அதிகமாகி விடும். சீட்டுக் கம்பெனியின் முதலாளி ஓடி விடுவான். ஆனால் அரசு ஓட முடியாதே! எப்படியாவது பங்கீட்டைத் தந்தாக வேண்டுமே! எந்த

இளிச்சவாயர்களின் தலையிலாவது மிளகாய் அரைக்க வேண்டியதுதான். அந்த இளிச்சவாயர்கள் வேறு யாருமில்லை. நீங்களும் நானும்தான்.

இக்கட்டுரைக்காக, இரயில்வே துறையின் இணைய தளங்களை அவதானித்தேன். எங்கள் கிராமத்தில் இருக்கும், ஆண்டி மடம் கூட இரயில்வே நிறுவனத்தை விட ஒழுங்காக நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு சம்பளக் கமிஷன் பரிந்துரைக்குப் பிறகும், ஓய்வூதியத்தின் அளவும், அதற்கான பயனீட்டாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

குறிப்பாக ஊழியர் இறந்துவிட்டால், அவரின் மனைவிக்கு ஓய்வூதியம் என்பது தொடங்கி, அவரின் குழந்தைகளுக்கு ஓய்வூதியம் என்று விரிவு படுத்தப்பட்டு, இன்று பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தாலும் ஓய்வூதியம் என்று ஆகி, பிறகு அவருக்கு மறுமணம் ஆகியிருந்தால் கூட, தந்தையின் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அளிக்கப்படும் என்ற கொடூரமான நிலைக்கு வந்துள்ளது. ஆண் குழந்தையாக இருந்தால் 25 வயது வரை ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அளிக்கப்படும். அதை 28 வயது வரை அளிக்க வேண்டும் என்று கேட்கிறது  யூனியன் மாஃபியா. இது ஒரு சாம்பிள்தான். இதைப் போன்று இப்படி இருந்தால், அப்படி இருந்தால் என்று பல்வேறு  கோணங்களில் ஊழியர்களின் குடும்பத்தினரின் பல வாழ்க்கை நிகழ்வுகளை சரிபார்க்க வேண்டிய நிலையில்தான் இரயில்வே நிர்வாகம் இருக்கிறது. இவ்வளவு காரணிகளையும் நடைமுறைபடுத்தவே நிர்வாகத்திற்கு பல நூறு  அதிகாரிகளும், அதனாலேயே ஊழல்களும் ஏற்படுகிறது.

என் தந்தை வேலை செய்த சென்னைத் துறைமுகத்திலும் இதே கதிதான். 14000 பேர் வரை வேலை செய்த அந்த நிறுவனத்தில் தற்பொழுது 4000 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். பல வேலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டன. ஆனால், 12000 பேர்களுக்கு மேல் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அந்த ஓய்வூதியக் கணக்குகளை நிர்வகிக்கவே, 50 அதிகாரிகள் தனியாகப் பணியில் உள்ளனர்.

எனக்கு மட்டும் துர்வாச முனியைப் போல “சாபம் கொடுக்கும்” சக்தி இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல், இந்த Ponzi Schemeஐ உருவாக்கியவர்கள், விரிவுபடுத்தியவர்கள், சீர்திருத்தங்களைத் தடுப்பவர்கள் என்று அனைவரையும் சபித்து விடுவேன்.

இரயில்வேத் துறையில் அக்கிரமங்கள் இதோடு நிற்கவில்லை. அங்குள்ள ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சலுகைகளை வரிசைபடுத்தி, ஊழியர்களுக்கான இணையதளம் ஒன்று இயங்குகிறது. அதை அவதானித்தால், அது நிறுவனமல்ல. ஆண்டி மடம் கூட அல்ல. அது ஒரு தனி அரசாங்கத்தையே கட்டமைத்துள்ளது புரியும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் சீர்திருத்தம்:-

இதற்கான கவலைகள் விவரம் அறிந்தவர்களிடம் தற்காலத்தில்தான் அதிகமாக எழுப்பப் படுகின்றன. நாம் சோஷலிஸ லூசுத்தனத்தில் பயணித்த போது, வருடம் தோறும் 12 சதவிகித வட்டியை அரசே அளித்து விடும். மேலும் புதியதாக அரசுத்துறைக்கு வேலையில் ஆட்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆகவே இந்த ஓய்வூதியத்தைக் குறித்து  யாரும் கவலைப் பட்டதில்லை. ஆனால், தற்பொழுதைய சூழலில் 8 சதவிகிதம் வட்டி கிடைப்பதே கடினமாக உள்ளது.

ஒருவர் 2003 டிசம்பரில் அரசு வேலைக்கு, 22 வயதில் சேர்ந்தார் என்று எடுத்துக் கொண்டால், அவர் தன் 58 வயதில் அதாவது 2039ல் ஓய்வு பெறுவார். இந்திய நடுத்தர மக்களின் சராசரி வயது 80 என்று கொண்டால், அவருக்கு 2061ம்  ஆண்டு வரை, பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் அளித்தாக வேண்டும்.

இன்னும் குறைந்தபட்சம் 50 வருடங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டப்படி மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியத்தை அளித்தாக வேண்டும். இந்த பிரச்சினையைப் போக்க அரசு, ஓய்வூதிய ஃபண்டுகளில் ஒரு பகுதியை, சுமார் 5  சதவிகிதத்தைச் சந்தையில், பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. ஆனால் சுமை குறைந்தபாடில்லை. ஆகவே 40  சதவிகிதத்தைத் தனியார் ம்யூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களிடம் அளித்து, நிர்வகிக்க முயற்சிக்கிறது. நாம் ஊகிக்கிற படியே,  இதற்குப் பல மட்டங்களில் எதிர்ப்பு இருக்கிறது. இருந்தும் இது நடைமுறைபடுத்தப் படுவது அரசு ஊழியர்கள் அல்லாத நம்மைப் போன்றவர்களுக்கு முக்கியமான தேவையே.

இந்தச் சுமையை ஒரு கணக்கின் மூலம் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இந்த ஓய்வூதிய ஃபண்டுகளின் முதலீட்டு தொகைக்கான வட்டியை, பல்லாயிரம் கோடி ரூபாய்களை, பொருளாதாரம் எந்த நிலையில் இருந்தாலும், வருடந்தோறும் உத்திரவாதத்துடன் அளிப்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது.

வரும்கால வைப்பு நிதியின் பிரச்சினை ஓரளவிற்கு சரியாகி விட்டது. ஏனெனில், 12 சதவிகிதமாக இருந்த வட்டி,  தற்பொழுது 8 சதவிகிதமாக குறைந்து விட்டதால், பொது மக்களுக்கான சுமையும் கொஞ்சம் குறைந்துள்ளதை கூறித்தான்  ஆக வேண்டும். ஆனாலும், எதிர் காலத்தில் இந்தச் சுமையையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும். பொது மக்களின்
தலையில் அல்ல.

பொருளாதாரம் வளர வளர, ஒவ்வொரு நாடும், ஓய்வூதிய முதலீடுகளை தனியார்மயப் படுத்துவது சாதாரணமான நடைமுறைதான். கிட்டத்தட்ட 75 இலட்சம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்காக, 120 கோடி மக்களின் வரிப்பணத்தை தாரை வார்ப்பது, தவறு மட்டுமல்ல, என்னைப் பொறுத்தவரை மாபெரும் அட்டூழியமே!

இந்த தனியார் மயமாக்கல் பெறும் சர்ச்சைகளை துவக்கியிருக்கிறது. என் தந்தையின் ஓய்வூதியத்தையே எடுத்துக் கொள்ளலாம். அவர் “புதிய ஓய்வூதியத் திட்டத்தின்” மூலம் ஓய்வூதியம் பெற்றிருந்தால், அவருக்கு பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது 25000 ரூபாயாக கிடைத்திருக்கும். ஆனாலும் பொருளாதாரம் தேக்கநிலையில்

இருக்கும்போது அது 10000ஆக குறையவும் வாய்ப்பு உண்டு. இதில் என்ன தவறு காண முடியும்? பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும்போது, இந்தியாவில் கோடிக்கணக்கான பொதுமக்கள் வேலைகளை இழந்தும், பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு தொகுதியினர் மட்டும் சொகுசாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நேர்மையற்ற, துணிவற்ற, வாதம்?

இந்த ஓய்வூதிய ஃபண்டின் முதலீடுகளை தனியார் ம்யூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் போது வட்டிக்கான சுமை, சிறிதாவது நம் தலையிலிருந்து வெளியேறும். இது நடைமுறை படுத்தப்பட வேண்டிய அத்தியாவசியமான திட்டம். கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் இதை ஆதரிப்பது கனவிலும் நடக்காது.

இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தின் முதலீட்டை மட்டுமல்ல, புதிய ஓய்வூதிய திட்டத்தின் முதலீட்டையும் சேர்த்து சில சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள விரும்புகிறது. இதற்காக “ஓய்வூதிய சீர்திருத்த மசோதா” என்பதை உருவாக்கி பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் அளித்தது. இந்த குழுவின் தலைவர் பா.ஜ.கவைச்சேர்ந்த திரு. யஷ்வந்த் சின்ஹா. காங்கிரஸும், பா.ஜ.கவும், ஓய்வூதிய திட்டங்களின் சீர்திருத்தத்தை முழுமையாக ஏற்கின்றன. குறிப்பாக ஓய்வூதிய ஃபண்டுகளில் 26 சதவிகிதத்தில் அந்நிய முதலீடும் அனுமதிக்கப்படும் என்ற ஷரத்தையும் இரு கட்சிகளும் ஏற்கின்றன. ஆனால், எப்பொழுதும் போல், மம்தா பேனர்ஜி தலைமையிலான த்ரிணாமுல் காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்க்கிறது. மத்திய அரசை மிரட்டிப் பணிய வைத்தும் விட்டது. மசோதா கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்த மசோதாவைப் பொறுத்தவரை, காங்கிரஸும், பா.ஜ.கவும் ஆதரித்தாலும், இந்த சீர்திருத்தங்களின் அடிப்படையிலேயே குறைபாடு உள்ளது. நான் ஏற்கெனவே எழுதியது போல், நம் தலைவர்களுக்கு சோஷலிஸ சித்தாந்தத்தின் எச்ச-சொச்ச  தாக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆகவே, வருடாந்திர வட்டிக்கு உத்திரவாதத்தை இந்த மசோதா அளிக்கிறது. இது நெடுங்காலத்திற்குத் தாக்கு பிடிக்க முடியாத வழிமுறை.

எனினும், இந்த அளவில் கூட, மசோதா நிறைவேறாதது ஏமாற்றமே! வரும் காலங்களில் இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்ப்பதைத்தவிர வேறு வழியில்லை.

ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை மிகவும் குறைவு என்று பார்த்தோம். உதாரணமாக 2000 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால், 500 ரூபாய் மட்டுமே ஓய்வூதிய கணக்கில் வைக்கப்படுகிறது. 1500 ரூபாய் வரும்கால வைப்பு நிதி கணக்குக்கு சென்று விடுகிறது. இந்த 500 ரூபாய் உள்ள கணக்குகளை, என்னதான் சந்தை பங்குகளில் முதலீடு செய்தாலும், அதிகமாக வட்டி கிடைத்தாலும், ஊழியர்களின் ஓய்வூதியத்தை அளிக்க முடியாது. இதை நினைவில்  கொள்ள வேண்டும். நம் வரிப்பணம் குறைவாக செலவு செய்யப்படும். அவ்வளவுதான்.

இதற்கெல்லாம் காரணம், வேறு யாருமல்ல, நமக்கு முன்னால் இருந்த சோஷலிஸ தலைமுறைதான். அவர்களுக்கு இருந்த அட்டூழியமான சிந்தனைகள்தான். அவர்கள் எதிர்கால சோஷலிஸ இந்தியாவை கீழ்வருமாறு கனவுலகிலேயே  கட்டமைத்தார்கள்.

  • சோவியத் யூனியனும், அதன் அல்லக்கைகளும் என்றும் மாறா அற்புத கம்யூனிஸ ஒளியை உலகிற்கு அளித்துக்கொண்டே இருப்பார்கள்
  • இந்தியா சோஷலிஸத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கும்.
  •  அரசு, வருடா வரும் பல இலட்சம் மக்களை வேலையில் சேர்த்துக் கொண்டே இருக்கும்.
  • புதியதாக வேலை செய்வோரின் சேமிப்பைக் கொண்டே, ஓய்வூதியத்தை வழங்கி விட முடியும்
  • சில இலட்சம் அரசு ஊழியர்களை (அவர்களின் பாஷையில் தொழிலாள தோழர்களை) கவனித்துக் கொண்டாலே போதும். கோடானு கோடி மக்களைக் குறித்து லவநேசமும் கவலை கொள்ளத் தேவையில்லை.

இப்படிப்பட்ட தெய்வீக சிந்தனைகளை அவர்கள் பெற்றதெல்லாம், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் போன்றவற்றில் இருந்துதான். அங்குள்ள இடதுசாரி கொரில்லாக்களிடமிருந்து, இடதுசாரி கொரில்லாத்தனத்தை கற்றுக் கொண்டு,இடதுசாரி கொரில்லாக்களாகவே மாறி உமிழ்ந்த சிந்தனைகள் இவை.

இந்த ஓய்வூதிய திட்டங்கள் இந்தியாவில் மட்டும் அக்கிரமமாக கட்டமைக்கபட வில்லை. கிரேக்கத்தில் ஓய்வூதியம் பெறுபவர், தன் கடைசி மாத சம்பளத்தில் 80 சதவிகிதத்தை கட்டாய குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டிருந்தார். வாங்கும் வரை நன்றாகத்தான் இருந்தது. பொருளாதாரம் கீழே விழுந்தவுடன் ஜெர்மனியிடம் கடன் கேட்டது. ஜெர்மனியிலோ, ஓய்வூதியம் பெறுபவர்கள் வெறும் 46 சதவிகித கடைசி மாத சம்பளத்தையே பெற்றனர்.

ஜெர்மனி கிரேக்க நாட்டிற்கு கடன் கொடுக்க ஒரு Condtion போட்டது. ஓய்வூதியத்தை குறைப்பது உள்ளிட்ட பல சிக்கன நடவடிக்கைகளை கிரேக்கம் நடைமுறை படுத்தியவுடன்தான் ஜெர்மனி கிரேக்கத்திற்கு கடன் அளித்தது. கிரேக்கத்தைப் போன்று நம் நாட்டின் பொருளாதாரம் கீழே விழுந்தால், இந்த யூனியன் கும்பலுக்கு மட்டும் சிரமங்கள் இல்லை. இந்த வியாபாரத்தில் சம்பந்தமே இல்லாமல், நம் வாழ்வும் நாசமாகும்.

ஒரு பழமொழி வருமே! “என்ன பெத்துப் போட்டவன் நிம்மதியா போயிட்டான். நான் கிடந்து சீப்படுறேன்”. அதுபோல், இந்த கொரில்லாக்கள், 70களிலும் 80களிலும் நம் நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு சூனியம் வைத்து விட்டு போய்  விட்டார்கள். இன்னும் பல தசாப்தங்களுக்கு நாம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

திவாலாகாத Ponzi Scheme:-

அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் 3500 ரூபாய்கள். தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஓய்வூதியம் 3250 ரூபாய்கள். உடனே, நான் ஏதோ தனியார் துறை ஊழியர்களுக்கும் அதிக ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று கூறுவதாக எண்ண வேண்டாம்.

1971ல் FPS-Family Pension Scheme அறிமுகப்படுத்தப்பட்டது. மாத சம்பளத்தில், 2.33 சதவிகிதம் ஊழியரிடமிருந்தும், 1.66  சதவிகிதத்தை அரசாங்கமும் பங்களிப்பு செய்தது. ஆனால் இந்த திட்டத்தினால் கிடைக்கப்பெறும் ஓய்வூதியம் மிகவும்  குறைவாக இருந்ததினால்,  அதற்கு மாற்று அவசியம் என்று கருதப்பட்டது.

வருடம்-1995. நாம் சந்தை பொருளாதார முறைக்கு சென்று விட்ட பிறகுதானே வந்தது. அக்காலகட்டத்தில் உலகம்  முழுவதும் ஓய்வூதிய திட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், நம் யூனியன் மாஃபியா  கும்பல் ஓய்வூதியத்தை உத்திரவாதத்துடனேயே அளிக்க வேண்டும் என்று தகராறு செய்து கொண்டிருந்தன.

70, 80களில் தீட்டப்பட்ட உத்திரவாத திட்டங்களையாவது சோஷலிஸ கிறுக்கர்களின் செயல்பாடுகள் என்று கூறி விடலாம். ஆனால் 1995ல் சோஷலிஸத்திலிருந்து வெளியேறிய பிறகும் கூட, இந்த இடதுசாரி சிந்தனையாளர்களும், யூனியன் மாஃபியா கும்பல்களும், தெரிந்தே மேலும் ஒரு புதை குழியில் நம்மை தள்ளி விட்டன.

1995ல் EPS-Employee Pension Scheme என்ற திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. பழைய திட்டம் கைவிடப்பட்டு அதன் உறுப்பினர்கள் புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். மாதம் அதிகபட்சமாக 541 ரூபாயை பிடித்தம் செய்து அதை  அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் வழங்க திட்டம் போடப்பட்டது.

தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர், 35 வருடங்கள் பங்களிப்பு செய்தால் கூட, அவருக்கு 3250 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக 2030 வாக்கில் கிடைக்கும். இதை ஒரு மோசடி என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 541 ரூபாயை அஞ்சலக தொடர் சேமிப்பு திட்டத்தில் (Recurring Deposit) 35 வருடங்கள் கட்டினால் கூட 12 இலட்சம்  ரூபாய்கள் கிடைக்கும். அதிலிருந்து 10000 ரூபாய் வரை மாதாந்திர வட்டியாக பெற முடியும் என்று கூறுகின்றனர்.

உதாரணமாக தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவருக்கு 2030 வாக்கில் 3250 ரூபாய் ஓய்வூதியம் அளிப்பது  நகைப்புக்கு இடமளிப்பது. இதற்கு காரணமாக அரசாங்கம் முன்வைப்பது அதே “பொதுவுடைமை” குப்பைக்  காரணங்களைத்தான். தனியார் துறையில் அதிக சம்பளம் வாங்குவோரிடம் இருந்து மாதாந்திர பணத்தைப் பெற்றுக்  கொண்டு, குறைந்த ஓய்வூதியத்தை அளிப்பதன் மூலம், குறைந்த சம்பளம் வாங்குவோருக்கு சுமாரான ஓய்வூதியத்தை  அளிக்கிறது. சரியாக கூறுவதானால், நடுத்தர மக்களிடம் இருந்து சேமிப்பை பிடுங்கி, ஏழைகளுக்கு வழங்குகிறது. இதை Income Redistribution என்றே அழைக்க வேண்டும்.

தனியார் துறை என்பதால், ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு வேலை மாற்றம் செய்து கொள்ளும் ஊழியர்களின் சேமிப்பு, ஊழியருக்கு பயனில்லாமல் போய்விடுகிறது. ஓய்வூதிய கணக்கை ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மாற்றுவது அரசாங்க அலுவலகங்களில் நாட்கள் பிடிப்பது. ஆகவே பலர் இதை அப்படியே விட்டு விடுகிறார்கள். மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாலும், இந்த கணக்குகள் ஆதரவற்று

நின்று விடுகிறது. சில வருடங்களுக்கு பிறகு அந்த கணக்குகளுக்கு வட்டியும் அளிக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட அதிகப்படியான வருமானங்கள் இருந்தும், இந்த ஃபண்டின் பற்றாக்குறை 54000 கோடி ரூபாய்கள் என்பது கொடுமை.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப் பட்டிருக்கும் மருத்துவ துறையின் சீர்திருத்தங்களும் இதே பாணியில் செயல்படுத்த படுகிறது. மருத்துவ காப்பீடு இல்லாமல் 5 கோடி அமெரிக்கர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு காப்பீட்டுக்கான  பணத்தை அரசே வழங்கும். அந்த பணம் மரத்திலிருந்து காய்க்காதே! இதற்கு அதிபர் திரு.ஒபாமா எளிமையான

வழியைக் கண்டார். 20 முதல் 40 வரை உள்ள நல்ல உடல்நிலையைக் கொண்டவர்கள் பலர் அமெரிக்காவில் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வதில்லை. புதிய சட்டத்தின் படி, அமேரிக்கர்கள் அனைவரும் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இளைஞர்களுக்கு நோய்கள் வருவது அபூர்வம்தானே! ஆனாலும் அவர்கள் அளிக்கும் காப்பீட்டு பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு காப்பீட்டை அளிப்பது என்ற சோஷலிஸ சித்தாந்தத்தைத்தான் அதிபர் ஒபாமா செயல்படுத்தியுள்ளார்.

மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது தனிப்பட்ட மனிதனின் சுயவிருப்பைப் பொறுத்தது. அரசாங்கம் இதை கட்டாயமாக்குவது நியாயமே அல்ல. நோய்கள் வந்தால் அது அந்த தனிமனிதனின் பிரச்சினை. இதற்கான வழக்கு அமேரிக்க உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு எப்படி வருகிறது என்று அமெரிக்காவில் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்திய ஓய்வூதிய பிரச்சினைக்கு வருவோம். தற்காலங்களில் அரசாங்கமே நடத்தும் அஞ்சலக ஓய்வூதிய திட்டங்கள்,  தனியார் கம்பெனிகளால் நடத்தப்படும் ஓய்வூதிய திட்டங்கள் போன்றவை இருக்கும்போது, EPS திட்டத்தில் சேர கட்டாயமாக்கப்படுவது நியாயமே அல்ல. ஒன்று ஊழியர் சேமிக்கும் பணத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை வழங்க

வேண்டும். இல்லையேல், அந்த சேமிக்கும் பொறுப்பை ஊழியரிடமே விட்டு விட வேண்டியதுதானே!

இந்த குறைந்த ஓய்வூதிய பிரச்சினையைக் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டது. 1996ல் வந்த தீர்ப்பு முழுவதும், அரசாங்கத்திற்கு சார்பாகவே வந்துள்ளது. அதாவது அதிகபட்ச ஓய்வூதியத்தை 3250 ரூபாய்க்கு மேல் அளிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்றே தீர்ப்பு வந்துள்ளது.

என் சேமிப்பையே எடுத்துக் கொள்வோம். 11 வருடங்கள் மாதம் தோறும் 541 ரூபாய் நான் பங்களித்தேன்.  அரசாங்கமும் 107 ரூபாய்கள் மாதந்தோறும் பங்களித்தது. எனக்கு 58 வயதில் கிடைக்கப்போகும் ஓய்வூதியம் என் பங்களிப்பை நோக்குகையில் அதிகமாகவே இருக்கும். ஆனால் 35 வருடங்கள் மாதந்தோறும் சேமிக்கும் ஒருவருக்கு அவர் பங்களிப்பை நோக்குகையில் குறைவாகவே இருக்கும். மேலும் அரசாங்கம் அளிக்கும் 107 ரூபாயால் ஒரு

பிரயோஜனமும் இல்லை. அவர் சேமிக்கும் அளவுக்கே ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்னும்போது அதிக பங்களிப்பினால் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுவதில்லை.

குறைந்த வருடங்கள் பங்களிப்போருக்கு 9 சதவிகித வட்டியும், அதிக வருடங்கள் பங்களிப்போருக்கு குறைந்த வட்டியும் அளிக்கும் இந்த திட்டம் சத்தியமாக, முழுமையான மனநிலை பிறழ்ந்த கும்பலால் மட்டுமே நடைமுறை படுத்தப்பட்டிருக்கும். அதில் சந்தேகமே இல்லை!

மீண்டும் அதே பிரச்சினைக்கு வருவோம். எறும்புக்கு சேர்த்து வைக்கும் பழக்கத்தை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. Coaching Class எடுப்பதில்லை. மழை காலம் வரும் என்பதை அறிந்து அது உணவை சேர்த்து வைத்துக் கொள்கிறது. அதே போல், முதுமை வரப்போகிறது என்று உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதற்காக சேமித்து வைத்துக் கொள்வது தனிமனிதனின் பொறுப்பு. அரசாங்கம் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவது, கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவற்றை மட்டும்தான் செய்ய வேண்டும்.

ஒரு மனிதன் ஓய்வூதியத்திற்காக சேமித்து வைக்க வேண்டுமா,வேண்டாமா; எவ்வளவு சேமிக்க வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கக் கூடாது.

இந்த திட்டத்திலும், தனியார் துறையில் வேலை செய்பவருக்கு என்றாலும், குறைந்த அளவிலாவது மானியங்கள்  அளிக்கப்படவே செய்கின்றன. மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 107 ரூபாய்களை அரசாங்கம் ஒவ்வொருவருக்கும்  அளிக்கிறது. மேலும் இதிலும் வருடாந்திர வட்டிக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திலுள்ள முதலீடும்,  தனியார் மூலம் நிர்வகிக்கப்பட ஆரம்பிக்க வேண்டும். நம் வரிப்பணத்தை காப்பாற்ற அது ஒன்றே வழி.

(தொடரும்..)

13 Replies to “கம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4”

  1. ஸ்ரீ பாலாஜி
    ஒரு சின்ன சந்தேகம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எல்லாம் வரிசெலுத்துபவர்களின் தலையில் விடிகிறது என்று அடிக்கடி சொல்கிறீர்களே. ஒழுங்காக வருமான வரிசெலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் அரசு ஊழியர்கள் என்பதை இங்கு மறந்துவிட்டீர்களா என்ன? ஒரு அரசு ஊழியர் தனது ப்பணிக்காலத்தில் எத்தனை லட்சங்கள் (கோடிகூட இருக்கலாம்) வருமான வரி தனது தேசத்திற்கு அளித்திருப்பார் என்பதை க்கணக்கில் கொள்ளுங்கள்.

  2. ஸ்ரீ பாலாஜி ஓய்வூதிய தனியார்மயம் அதில் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவு இவையெல்லாம் இவையெல்லாம் உங்கள் அமெரிக்க ஆதரவுப்போக்கை க்காட்டுகின்றன. இந்த ஓய்வூதியம், காப்பீடு, வங்கி ஆகியவற்றில் தனியார் கம்பெனிகள் திவாலாய்ப்போனால் ஒரு மாதாந்திர சம்பளக்காரரின் இறுதிக்காலம் கேள்விக்குறியாகும்.
    அமெரிக்காவுக்கும் பெரும் பணக்கார பகாசுர கம்பெனிகளுக்கும் வால்பிடிக்க ஹிந்து பாரம்பரியத்தில் வந்தவர்களால் ஒருகாலும் முடியாது.

  3. ” இப்படிப்பட்ட தெய்வீக சிந்தனைகளை அவர்கள் பெற்றதெல்லாம், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் போன்றவற்றில் இருந்துதான். அங்குள்ள இடதுசாரி கொரில்லாக்களிடமிருந்து, இடதுசாரி கொரில்லாத்தனத்தை கற்றுக் கொண்டு, இடதுசாரி கொரில்லாக்களாகவே மாறி உமிழ்ந்த சிந்தனைகள் இவை.”-

    கம்யூனிஸ்டுகள் முற்றிலும் மனநிலை பிறழ்ந்த கும்பல்களே ஆவார்கள். நமது நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஒரு பொருளாதார ஞான சூனியம். இன்று இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் , மாநில அரசுகளின் மொத்த வருவாயில் சுமார் அறுபது( 60) சதவீதம் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. எஞ்சிய நாற்பது சதவீதத்திலும், அரசியல் வாதிகள் இருபது சதவீதம் ஊழல் செய்ததுபோக, பாக்கி நிற்கும் இருபது சதவீதமே நாட்டில் உள்ள நூற்று இருபது கோடி மக்களுக்கு போய்ச்சேருகிறது. எனவே, விரைவில் நம் நாட்டில் ஒரு புரட்சி வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று விவரம் தெரிந்தவர்கள் அஞ்சுகிறார்கள். காட்டுமிராண்டி கம்யூனிஸ்டுகளின் கையில் சிக்கிய மேற்குவங்காளம் முப்பத்துநாலு வருட கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அழிந்து போனது. இன்று அது ஒரு பிச்சைக்கார மாநிலம் ஆகிவிட்டது. கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் மாறி மாறி சிக்கி சீரழிந்த கேரளம் , மேற்குவங்காளத்தை போலவே சீரழிந்து வருகிறது. தீய சக்தி கலைஞரால் உருவாக்கப்பட்ட வி பி சிங்கு கூட்டணியில் , கம்யூனிஸ்டுகள் -1989- ஆம் ஆண்டு சேர்ந்ததிலிருந்து, கம்யூனிஸ்டுகளின் அறிவுரைக்கிணங்க செயல்பட்ட மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு கேடு விளைவித்தன.

    ஆனால், புதிய பொருளாதார கொள்கை என்று சொல்லி , சிறிது சீர்திருந்திய நம் நாட்டின் பொருளாதாரத்தினை, காங்கிரசும், திமுகவும் சேர்ந்து , டூ ஜி மற்றும் இதர ஊழல்கள் மூலம் , அரசு பணத்தினை கொள்ளை அடித்து , வெளிநாடுகளில் உள்ள தங்கள் பினாமி கணக்குகளில் சேர்த்துவிட்டனர்.

    பாலாஜி அவர்களின் சிறந்த கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

  4. நம் நாட்டில் தோன்றி நம் தாய் நாட்டைத் தம் இரு கண்களாக எண்ணிய , தன மக்களுக்காகக் கண்ணீர் பெருக்கிய சுவாமி விவேகானந்தரைப் போன்றவர்களை இவர்கள் மதிக்க மாட்டார்களாம்!

    எங்கேயோ இருந்த, நம் நாட்டைப் பற்றி சிறிதும் அறியாத ,கவலைப் படாத , எதிரிகளை அழித்தாவது தான் வாழ வேண்டும் என்று நினைத்த லெனின், ஸ்டாலின், மாவோ இவர்களெல்லாம் இவர்களுக்குத் தலைவர்களாம், வழிகாட்டிகளாம்!
    இரா.ஸ்ரீதரன்

  5. திரு.சிவஸ்ரீ. விபூதிபூஷன்,

    அரசு ஊழியர்கள் வருமான வரியை கட்டுவதால் ஓய்வூதியத்தை வரி வருமானத்திலிருந்து பெறுவது தவறாகாது என்பது உங்கள் வாதம்.

    முதலில், வரியை ஏன் கட்டுகிறோம் என்ற கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும்?

    நான் ஏன் வரியை கட்டுகிறேன்? நான் ஒரு Social Animal. நான் எதை செய்தாலும் எனக்கு ஒரு இலாபம் இருக்க வேண்டும்.
    (1) நாட்டின் பாதுகாப்பு
    (2) சமூக ஒழுங்கை நிறுவ சட்டத்தின் ஆட்சியை நடைமுறைபடுத்த காவல்துறை மற்றும் நீதி அமைப்புகள்
    (3) சொத்து உரிமையை நிலைநாட்ட
    (4) சாலை போன்ற கட்டமைப்புகளை உருவாக்க
    (5) நாணயம் அச்சடித்து புழங்க,
    (6) கல்விக்கான பாடத்திட்டங்கள் உருவாக்க மற்றும் தேர்வுகளை நடத்த
    (7) கலாச்சார குறியீடுகளை உருவாக்க அல்லது மேம்படுத்த
    கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம் போன்ற துறைகளில் என் பங்களிப்பு இல்லாது போனாலும், பிற சமூக அங்கத்தினர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்க

    மேற்குறிப்பிட்ட வேலைகளை, நானும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நிர்வாகத்தைக் கொண்டு நடத்தத்தான் வரியை அளிக்கிறேனே தவிர அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவோ, ஏழைகளுக்காகவே இருந்தாலும் ஒன்றுக்கும் உதவாத
    மானியங்களுக்காகவும் அல்ல.

    அரசு ஊழியர்கள் அளிக்கும் வரியிலிருந்து மேற்குறிப்பிட்ட வசதிகளை அவர்கள் அனுபவிக்கவே செய்கிறார்கள். நான் அளிக்கும் வரியிலிருந்து நானும் அனுபவிக்கிறேன். என் கேள்வி அது அல்ல. நான் அளிக்கும் வரியிலிருந்து
    அவர்களுக்கு ஏன் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பதுதான்?

    ஓய்வூதியத்தைக் குறித்த சில தகவல்களை கட்டுரையின் அளவு கருதி நான் எழுதவில்லை. இரண்டு தகவல்களை அளிக்க விரும்புகிறேன்.
    (1) 1995ல் இந்தியாவில் EPS திட்டம் அமல்படுத்துகையில், பாரத ஸ்டேட் வங்கியைத்தவிர மற்ற பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் வரும்கால வைப்பு நிதியையோ அல்லது
    ஓய்வூதியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பல இலட்சம் ஊழியர்களில் பெரும்பாலானோர் வரும் கால வைப்பு நிதியையே தேர்ந்தெடுத்தனர். யூனியன் மாஃபியாவும் இந்த முடிவை எடுக்குமாறு ஊழியர்களுக்கு சிபாரிசு செய்தது.

    காரணம்,1995ல் வருடாந்திர வட்டி விகிதம் 12 சதவிகிதமாக இருந்தது. அது அப்படியே இருக்கும் என்று நினைத்த இந்த கும்பல் எடுத்த முடிவு, தற்போது அவர்களுக்கு சிரமத்தையும், என்னைப் போன்றவர்கள் குத்தாட்டம் போடவும் வழி
    செய்துள்ளது. மீண்டும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்கிறது யூனியன் மாஃபியா!

    (2) கொஞ்சம் அமேரிக்க கதை

    வாரேன் பஃபெட் கூறிய வரிவிதிப்பு சதவிகிதத்தை மேடை தோறும் முழங்கும் அதிபர் ஓபாமாவோ அவரின் ஜனநாயக கட்சியின் அல்லக்கைகளோ, அதே வாரென் பஃபெட், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை ஒரு “Time Bomb” என்று அழைப்பதை பேசுவதேயில்லை. அவர் மிகைப்படுத்திக் கூறவே இல்லை.

    அமேரிக்காவில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தின் அளவை சில காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார்கள். முக்கியமாக, அடுத்த 100 வருடங்களில் பொருளாதாரம் எந்த அளவு உயரும்? என்பது போன்ற காரணிகள்.
    கடந்த 100 வருடங்களில் அமேரிக்க பொருளாதாரம் 175 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த 100 வருடங்களில் அது 1750 மடங்கு உயரும் என்ற அயோக்கியத்தனமான கற்பனைகளுடன்தான் இந்த ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு
    வருகிறது. ஊழியர்களின் பங்களிப்பு அதே சதவிகிதம் இருந்தாலும், பொருளாதாரம் நினைத்த அளவு உயராததால், அதை அரசே வரிப்பணத்திலிருந்து அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது. தப்பிக்கவும் முடியாது. இப்படித்தான்
    யூனியன் மாஃபியாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

    சில பிராந்தியங்களில் அரசின் வருடாந்திர ஓய்வூதிய செலவுகள் கடந்த 10 வருடங்களில் 2000 மடங்கு உயர்ந்துள்ளது.

    இந்த கேவலம் இப்பொழுது நடக்கவில்லை. அவ்வப்பொழுது ஊதிய உயர்வு கேட்கும் அரசு ஊழியர்களுக்கு அதை முழுவதும் அளிக்காமல், ஓய்விற்குப் பிறகு அளிக்கப்படும் என்று கடந்த 2, 3 தசாப்தங்களாக அரசுகள் அறிவித்து விடுகின்றன. ஆகவே உடனடியாக பட்ஜெட்டிலிருந்து பணத்தை அளிக்க வேண்டியதில்லை. பிற் காலத்தில் பதவியேற்கும் அரசுகளின் கதி அதோகதியாகி விடும். உத்திரவு போட்டவரும் ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பார்.

    இந்தியாவில் என்னைப் பொருத்தவரை ஓய்வூதியத்தின் அளவை தற்காலத்திய சூழலைப் பொருத்து மீளாய்வு செய்து அதைக் குறைப்பது ஒன்றுதான் நம்மை காக்கும். இல்லையேல் விளைவுகள் வரும்காலத்தில் இதைவிட கடுமையாக
    இருக்கவே செய்யும்.

  6. திரு.சிவஸ்ரீ. விபூதிபூஷன்,

    நீங்கள் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால் உங்களுக்கு மறுமொழியை அளிக்க விரும்புகிறேன். கம்யூனிஸ்டு கொரில்லாக்களுடன் விவாதித்து பயனில்லை. சந்தை பொருளாதாரத்தை எதிர்ப்பதாகவும் கூறுகிறீர்கள்.

    உங்கள் பல மறுமொழிகளுக்கான என் பதிலை ஒரே மறுமொழியாக எழுதுகிறேன். ஆகவே பெரியதாகவே இருக்கும்.

    முதலில் ஒரு சிறிய விளக்கம். பொருளாதார வெளியில் சித்தாந்தம் என்பது பெரும்பாலும் எதிர்ப்பை ஒட்டியே கட்டமைக்கப் படும். அதை நானும் இக்கட்டுரையில் ஏற்றிருக்கிறேன். ஆகவே கம்யூனிஸ எதிர்ப்பு எனக்கு உயிர் போன்றது.

    அடுத்து, அந்த சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவது என்பது அந்தந்த சமூக, பொருளாதார, அரசியல், கால சூழலை பொருத்து அமைய முடியும். பல்வேறு விட்டு கொடுப்புகளை வைத்துத்தான் இது நிகழ முடியும். மேலும் எந்த நிலையிலும்
    எந்த சித்தாந்தமும் முழுமையாக (Complete in all aspects) நிகழவே முடியாது. எந்த பொருளாதார சித்தாந்த நடைமுறைபடுத்தலிலும் பாதிக்கப்படுபவர்கள் இருக்கவே செய்வார்கள். ஆகவே எதிர்ப்புகளை அது சந்தித்துக் கொண்டே இருக்கும்.

    (1)உங்களின் முதல் கேள்வி. கம்யூனிஸத்தை எதிர்க்கும் நான், எந்தெந்த காரணிகளைக் கொண்டு அதை எதிர்க்கிறேனோ, அதே காரணிகளைக் கொண்டு சந்தை பொருளாதாரத்தை ஆதரிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. எந்த
    பொருளாதார நிபுணராலும் முடியாது. I think விவாதம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

    இனி நான் எழுதப்போகும் மறுமொழியின் அம்சங்களுடன் நீங்கள் ஒத்துப்போக வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் என் பார்வையை மட்டும் எழுதுகிறேன். ஆனாலும் பல காரணிகளில் சந்தை பொருளாதாரம் சிறந்தது என்பதையே நான்
    முன் வைக்கிறேன். உங்களை Convince செய்ய முடியுமா என்பது வேறு விஷயம்.

    காரணம் மிகவும் எளிமையானது. கம்யூனிஸ சித்தாந்தத்தை நான் எதிர்த்தாலும், அந்த சித்தாந்தத்தின் அடிப்படை கூறுகளின்படி எதிர்ப்பதையும் செய்திருக்கிறேன் என்றாலும் அது குறைவுதான். ஆனால், அது நடைமுறை படுத்தப்பட்ட விதம், நடைமுறைபடுத்தபடக் கூடிய விதம் ஆகிய அனுபவங்களைக் கொண்டுதான் அந்த சித்தாந்தத்தை முழுமையாக எதிர்க்க முடியும்.

    நீங்கள் சந்தை பொருளாதாரத்தை எதிர்ப்பதிலும் இதே வழியை நீங்களே காண முடியும். சந்தை பொருளாதாரத்தை நடைமுறை படுத்தலிலும், எதிர்கால நடைமுறை படுத்தலில் நீங்கள் காணும் பிரச்சினைகளின் அடிப்படையிலுமே அதை
    எதிர்க்கவே செய்வீர்கள்.

    (2) “அறிவியல் வளர்சிக்கும் முதலாளித்துவத்திற்கும் தொடர்பு உண்டு என்றாலும் கம்யூனிஸ்த்திலும் அது வளர்ந்தது”. இதை எனக்கு புரிந்தவரை என் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். கம்யூனிஸத்திலும் அறிவியல் வளர்ந்தது என்றாலும்
    அது தற்காலிகமாகவே இருக்க முடியும். புத்திசாலியையும் முட்டாளையும் ஒரே தரத்தில் நடத்தினால், புத்திசாலி நான் ஏன் அதிகமாக பங்களிக்க வேண்டும் என்று எண்ணவே செய்வான்?

    (3)”உலக சுற்று சூழலை நாசமாக்கி மனித சமுகத்தின் எதிர்காலத்தினைக் கேள்விக்குறியாக்கியிருப்பது முதலாளித்துவம்”. இது முற்றிலும் உண்மை. ஆனால் இந்த புவியும், மனிதர்களும் அழியப்போகிறது என்பதை நான் ஏற்கவில்லை. இப்பிரச்சினைக்கான தீர்வுகளும் நவீன அறிவியலின் மூலமாகவே நம் அடுத்த தலைமுறைகளுக்கு கிடைக்கப்போகிறது. ஆகவே உடனடியாக நவீன வாழ்க்கை முறையை விட்டுவிட்டு மாட்டு வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியாது. சுற்று சூழலை மாசுபடுத்தாமல் வாழ வேண்டும் என்பது ஒரு பயணம். அதை நாளையோ நாளை மறுதினமோ அடைய முடியாது. மேலும் எதிர்காலத்திலும், என் வசதிகளையும் குறைத்துக் கொள்ளாமல்,
    சுற்று சூழலையும் மாசுபடுத்தாமல் வாழ்க்கையை அனுபவிக்கும் வசதியை நவீன அறிவியல் வழங்கும் என்று நான் தீர்மானமாகவே நம்புகிறேன். என்ன! அதைப் பார்ப்பதற்கு நான் இருக்க மாட்டேன்!

    (4) “சந்தைப்பொருளாதாரம் இயல்பானது அன்று. ஒரு சிலர் பொருளாதாரத்தில் மட்டற்ற அதிகாரம் செலுத்த கட்டுப்படுத்த வழிவகுப்பது”.

    கொஞ்சம் விவகாரமான விளக்கமான மறுமொழி அவசியம். இதை விளக்க நீங்கள் கூறுவதுபோல் “பகீரத பிரயத்தனம் வேண்டும்”.

    முதலில் மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்தது பொதுநலனுக்காக அல்ல. கூட்டமாக வாழ்ந்தால் அதிகம் பேருக்கு அதிக இலாபம் என்பதாலும், அந்த அதிகம் பேரில் தானும் வருவது Statistical Probabilityன் படி அதிகம் என்பதாலும் தான்.
    கருணை என்பதன் உருவாக்கமே கூட சுயநலத்தினாலேயே உருவானது. பரிணாம வளர்ச்சி அறிவியல் நமக்கு நிறைய உண்மைகளை அளித்து வருகிறது. இதைப் பற்றியும் இந்த கட்டுரையில் எழுதியுள்ளேன்.

    வெறும், உடல்பலத்தைக் கொண்டு வாழ்ந்த சமூகத்திலிருந்து, அறிவுக்கூர்மையை முன்னிறுத்தி வாழும் போக்கை நாம் கைக்கொள்ள ஆரம்பித்துள்ளோம். நான் கூறவந்த விஷயம், ஒரு சிலர், தலைமையில் இருந்து கொண்டு சமூகத்தை நடத்துவதைத்தான் மனித சமூகம் அனுசரித்து வந்துள்ளது. உடல்பலத்தை முன்னிறுத்தி, எதிர்ப்பாளர்களை கொன்று குவித்து மட்டற்ற அதிகாரத்துடன் மனிதர்களை நடத்துவது கம்யூனிஸம்.

    சாதாரண மக்களைவிட அதிக அதிகாரத்தையும், வசதி வாய்ப்புகளையும் ஒரு சிலர் கொண்டு, சமூகத்தை உந்தி முன்னேற்றுவது சந்தை பொருளாதாரம். எனினும் சமூகத்தின் எந்த அங்கத்தினரும் அந்த சிலராக முடியும் என்ற நம்பிக்கையை சந்தை பொருளாதாரமும் ஜனநாயகமும் வழங்குகிறது. ஆனால் இதை Morality என்ற அளவைக் கொண்டு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். பணக்காரர்களுக்கு பிறந்த குழந்தைக்கு பிற குழந்தைகளை விட வசதி வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கும். இதை என் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். இந்த முறையை நீங்கள் மறுதலித்து “எல்லார்க்கும் சமவாய்ப்பு” என்றால் பணக்காரனாகும் ஊக்கம் இருக்காது. “எல்லார்க்கும் எல்லாம்” என்பதை ஏற்காத நீங்கள் “எல்லார்க்கும் சம அதிகாரம்” என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் Specialதான்.

    சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸ்ன் முன்னாள் தலைவர் திரு.சுதர்ஷன் சில மணிநேரங்கள் காணாமல் போய் பின் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது செய்தி. அவரை கண்டுபிடிப்பதற்கு 20 காவல்துறை சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு
    தேடப்பட்டார். நீங்களோ நானோ காணாமல் போனால் 48 மணிநேரத்திற்கு பிறகு ஏதோ பேருக்காக கொஞ்சம் தேடப்படுவோம். ஒன்றுமில்லா ஏழைகள் காணாமல் போனால் அன்பே சிவம்தான்.

    இது முழுமையான Moral இல்லாவிட்டாலும் ஒரு அளவில் சரிதான். அவரின் வாழ்க்கையில் சமூகத்திற்கு அவர் அளித்த பங்களிப்பைக் கொண்டே அவரையும் அவரின் வாரிசுகளையும் பார்க்கும் முறை. இது தி.க தலைவர் வீரமணி 85 வயதில் காணாமல் போனாலும் நடக்கும். அதுவும் சரிதான். நான் கூற வந்தது அவர்கள் Special என்பதுதான்.

    இதைப் போன்றே பாரதியாரின் மனைவி, அண்ணாதுரையின் மனைவி போன்றோர்க்கு அரசே செய்யும் உதவிகளை கருத்தில் கொள்ளலாம். As Such அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பு சமூகத்திற்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால்
    பெரும்புள்ளிகளின் மனைவி என்பதை கருத்தில் கொண்டே நாம் விசேஷமாக அவர்களை பொருளாதாரத்திலோ அல்லது அந்தஸ்திலோ கௌரவிக்கிறோம்.

    நான் கூற வந்தது இது சரியே என்பதற்காகத்தான். பணக்காரர்களுக்காக மட்டுமே அளப்பரிய அதிகாரம் சமூகத்தில் இல்லை. சமூகத்தில் அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கும், அளிப்பவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் சற்றே
    அதிக அதிகாரமும், வசதி வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. நான் இவற்றையெல்லாம் ஆதரிப்பவன். எனக்குப் புரிந்தவரை காலம் காலமாக விசேஷ அந்தஸ்து அளிக்கப்பட்ட நபர்கள் இருந்தே வந்திருக்கிறார்கள்.

    பொருளாதார முறைகளைப் பொருத்தவரை, கடந்த கால அரசாட்சி முறைகளின் நீட்சிதான் இன்றைய சந்தை பொருளாதார முறை. என்ன! மேலும் சில அடுக்கு முறைகளை இன்று வைத்துக்கொண்டுள்ளோம். பழங்காலத்தில் விவசாயி தன் விளைபொருட்களை சந்தையின் ஒரு தரகரிடத்தில் விற்பான். அப்பொருட்களை சந்தையிலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வார்கள். எட்டுப்பட்டி கிராமத்தைத் தாண்டி சந்தைபடுத்துதல் அன்று
    அவசியமாக இருக்கவில்லை.

    கம்யூனிஸத்தையும் எதிர்த்து, சந்தை பொருளாதாரத்தையும் எதிர்த்து, பழங்கால எட்டு பட்டி கிராம பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க வேண்டும் என்று கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒரு உதாரணம். என் தாயார் திருச்சிக்கு அருகில்
    ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தானியங்கள், காய்கறிகள் போன்றவை எட்டுப்பட்டி கிராமங்களின் சந்தைகளிலேயே கிடைத்துவிடுமாம். புளிசாதம், எலுமிச்சை சாதம் போன்றவை காணும் பொங்கல் திருநாளில் மட்டும்தான் சமைக்கப்படும். கொஞ்சம் போரடித்தால் இன்று நாம் மாதத்தில் ஒருமுறை இவற்றை உண்கிறோம். இதுபோன்றே வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உண்ண வேண்டிய பண்டங்களை இன்று பலமுறை நம்மால் உண்ண முடிகிறது. இதையெல்லாம் எட்டுப்பட்டி கிராம பொருளாதாரத்தில் சாதிக்கமுடியாது. வேறு பிராந்தியங்களிலிருந்தும் விளைபொருட்களை வாங்கி விற்று வியாபாரம் செழிப்பதனால்தான் இது சாத்தியப்படுகிறது.

    ஆனால் இப்போது உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்த மூலைக்கும் பொருட்கள் செல்கின்றன. பல்வேறு விதமான தரகர்கள், சந்தைகள், சந்தைகளிலிருந்து Retail கட்டமைப்புகள், அங்கிருந்து வாடிக்கையாளர்கள் என்று பழங்கால முறையின் நீட்சிதான் இன்றும் நடக்கிறது. அன்றும் வியாபாரத்தில் ஏமாற்றுவோர் இருந்துதான் இருப்பார்கள். இன்றும் இருக்கிறார்கள்.

    சில முறைமைகள் தலைகீழாக மாறியுள்ளன என்பதும் உண்மைதான். விளம்பரங்கள், நாணய மாற்றங்கள் போன்றவை பழங்காலத்தில் இருந்திருக்க முடியாது. இதை பார்த்து அச்சப்படவேண்டிய அவசியமில்லை. கடந்த 50 வருடங்களில் உலகம் பல மட்டங்களில் மாறியிருக்கிறது. அடுத்த 50 வருடங்களில் மேலும் மாறும். இப்பொழுது உள்ள பல தவறுகள் களையெடுக்கப்பட்டுவிடும். ஆனால் புதிய முறையில் தவறு செய்பவர்கள் உருவாகி இருப்பார்கள்.

    ஆகவே சந்தை பொருளாதாரம் இயல்பானதே என்பது என் கருத்து. அதில் பல தவறுகள் என்றும் இருந்துள்ளன. இன்று கொஞ்சம் அதிகம். நாளையும் தவறுகள் இருக்கும்.

    கடைசியாக இப்படி முடிக்கலாம். சந்தை பொருளாதாரம் இயற்கைக்கு அறிவியலுக்கு உகந்ததா என்றால் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இயல்பானது எதார்த்தமானது என்றே நான் நம்புகிறேன். கண்டிப்பாக நாகரீக வளர்ச்சிக்கு
    உதவக்கூடியது. ஹிந்து மரபுகளுக்கு இயைந்ததா என்றால் ஹிந்து மரபுகளுக்கு எதிரானது அல்ல என்றே நான் நம்புகிறேன்.

    (5) “உலகத்தில் நடக்கும் அனாகரிக செயல் காம்த்தினை கேளிக்கையை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கை முறைக்கும் மூலம் முதலாளித்துவமே”
    நான் சாதாரணமாக சமூக மாற்ற பிரச்சினைகள் குறித்து கவலைப்படுவதில்லை. 100 வருடங்களுக்கு முன் பெண்கள் வேலைக்கு போவது இழிவாக உலகம் முழுவதும் கருதப்பட்டது. ஆனால் இன்று நிலை தலைகீழ். கேளிக்கை ஒரு
    சமூகத்திற்கு மிகவும் அவசியம். காமம் இயற்கையின் அடிப்படை உந்துதல் சக்தி. இதைப்பற்றி அதிகமாக இங்கு நான் எழுத விரும்பவில்லை. ஏனெனில் அது இக்கட்டுரையின் போக்கை மாற்றிவிடும்.

    (6) நீங்களோ அல்லது உங்களைப் போன்றவர்களோ சந்தை பொருளாதாரத்தை எதிர்ப்பது தவறல்ல. ஆனால் அதற்கான மாற்றை எந்த பொருளாதார நிபுணரும் முன்னிருத்துவதில்லை. கம்யூனிஸத்தை எதிர்க்கிறோம். சந்தை
    பொருளாதாரத்தை எதிர்க்கிறோம். பின் பொருளாதாரம் எப்படித்தான் நடக்க வேண்டும்? ஆன்மீகத்தை அளவுக்கதிகமாக சாதாரண சமூக விவகாரங்களில் எடுத்தாளாமல், சமூக ஒழுங்கையே மீண்டும் மீண்டும் வேறு வேறு வடிவங்களில்
    பேசிக்கொண்டிராமல் வர்த்தகம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். Sorry to Say பொருளாதாரத்தை தார்மீக நெறிமுறைகளின் அதி உச்ச அளவுகோல்களின்படி நடத்த வேண்டுமென்றால், இராமகிருஷ்ணா மடத்தின்
    துறவிகள்தான் வியாபாரம் செய்ய முடியும்.

    (7) சந்தை பொருளாதாரம் என்பது நமக்குள்ள ஒரே வழி என்பதற்கு என்னால் வேறு ஒரு விளக்கத்தையும் அளிக்க முடியும்.
    “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்-ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”. இந்த பாடல் வரிகள் ஞாபகம் இருக்கிறதா? இது காந்திஜியின் காலத்திற்காக எழுதப்பட்டது. நவீன இந்தியாவில் இந்த பாடல் வரிகளுக்கு சிறிது கூட முக்கியத்துவம் இருக்க முடியாது.

    இந்தியாவில் நமக்கு தேவையான அளவிற்கு வளங்கள் இல்லை என்ற உண்மையுடன்தான் இந்த விளக்கத்தை ஆரம்பிக்கிறேன். இதிலேயே வேறுபாடு இருந்தால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். அதேபோல் நவீன வாழ்க்கை
    முறைகளை, வசதிகளை கிட்டத்தட்ட 50 கோடி பேர் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 70 கோடி மக்களும் இந்த நவீன வாழ்க்கை வசதிகளுடன் வாழவே விரும்புகின்றனர். எங்கள் கிராமமாக இருந்தாலும் சரி, இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, கிராம மக்கள் நவீன வசதிகளுடன் வாழவே விரும்புகிறார்கள். இதற்கு வரும் காலத்தில் மிகப்பெரும் அளவில் வளங்கள் தேவைப்படுகிறது. நவீன வாழ்க்கை முறைகளை முற்றும் முழுவதுமாக எதிர்ப்பதாக உதார் விட்டுக் கொண்டு, அதன் அத்துணை வசதிகளையும் ருசித்துக் கொண்டிருப்பவர்கள் இன்று உலகம் முழுவதும் இருக்கின்றனர். அவர்களிடமும் விவாதித்து பயனில்லை.

    முதலில் வளங்கள் என்பதை இரண்டாக பிரிக்க முடியும். (1) இயற்கையான Raw வளங்கள் (2) Processed வளங்கள்.

    தற்காலத்தில் எந்த ஒரு சமூகத்திற்கும் சில வளங்கள் முதுகெலும்பு. எரிசக்தி (எண்ணெய், நிலக்கரி, எரி வாயு), இரும்பு தாது போன்றவை. உலோகத் தாது மற்றும் நிலக்கரி விஷயத்தில் நம்மிடம் தேவையான அளவு Raw இயற்கை
    வளங்கள் உள்ளன. உலோகத்தாது வளம் இருந்தாலும் அதை process செய்ய தொழில்நுட்பம், பெரும் முதலீடு, வங்கி, காப்பீடு போன்ற கட்டமைப்புகள் ஆகியவை இல்லை. ஆகவே நாம் Raw தாதுவை ஏற்றுமதி செய்து விடுகிறோம்.
    நிலக்கரியிலும் இதே பிரச்சினைதான். அடுத்த 200 வருடங்களுக்கு தேவையான நிலக்கரி நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதைத் தோண்டி எடுக்க தாது பிரச்சினையைப் போன்றே சிரமப்படுகிறோம். தோண்டி எடுக்கும் கட்டமைப்புகள்
    இல்லாததால் இறக்குமதியும் செய்ய நேரிடுகிறது.

    எரிசக்தியைப் பொருத்தவரை நான் சொல்ல வேண்டியதில்லை. வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

    அடுத்து, நம் இறக்குமதியின் அளவிற்கோ, அதைவிட அதிகமாகவோ ஏற்றுமதி இருக்க வேண்டும். உலக எண்ணெய் வர்த்தகம் அமேரிக்க டாலரில்தான் இயங்குகிறது. அடுத்த சில தசாப்தங்களுக்கு இப்படித்தான் இருக்கும். அமேரிக்காவை திட்டுவது திண்ணை பேச்சிற்கு உதவலாமே தவிர பருப்பு வேகாது. சேவை தொழில்கள் மூலமாக டாலர் கிடைப்பது 2 தசாப்தங்களாக இருந்தாலும், மிகப்பெரிய அளவில் டாலர் கிடைத்தால்தான் (அதாவது அந்நிய முதலீடு உள்ளே
    வந்தால்தான்) நம் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

    கிட்டத்தட்ட இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தின் வலைப்பின்னல் இதுதான். டாலர் வேண்டாம் என்று கூப்பாடு போடுபவர்களிடம் பேசி புண்ணியம் இல்லை.

    இந்தியாவின் பல மாநிலங்களின் நிதிநிலை கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் உள்ளது. பெரும் திட்டங்களை எல்லாம் பேசுவதற்குக் கூட திராணி இல்லாத நிலையில், தனியாரின் முதலீடுகளும், இதை விரைவாக தொடங்க
    அந்நிய முதலீடுகளும் இன்று காலத்தின் கட்டாயம்.

    கடந்த ஒரு வருடமாக தினமும் தமிழக முதல்வர் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். அந்த திட்டத்தின் பண அளவை பாருங்கள். சில இலட்சமாக இருக்கும். அல்லது அதிகப்படியாக சில கோடிகள் இருக்கும். 3000 கோடி,
    4000 கோடி என்ற அளவிலெல்லாம் திட்டங்கள் மிகமிக குறைவு. 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 3000 கோடி ரூபாய்கள் தேவைப்படும். ஒரு நிலக்கரி சுரங்கம் அமைக்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது. மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இதே நிலைதான்.

    To recap:
    – இந்தியாவில் சில வளங்கள் இருந்தாலும் Process செய்யும் கட்டமைப்புகளோ தொழில்நுட்பமோ இல்லை.
    – சில வளங்கள் தேவையான அள்விற்கு சத்தியமாக இல்லை.
    – நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமேரிக்க டாலரில்தான் உலக வர்த்தகம் நடக்கிறது. நடக்கவும் செய்யும்.
    – இறக்குமதியை நம்பியும் நம் பொருளாதாரம் இயங்குவதாலும், ஒரு அளவிற்கு மேல் ஏற்றுமதியை செய்ய முடியவில்லை என்பதாலும், டாலரை பிடிக்க வெள்ளையனை பிடித்து இழுக்கத்தான் வேண்டும்.
    – இந்த பொருளாதார இயக்கங்களைக் கண்டு அச்சப்பட்டு இதற்கு முட்டுக்கட்டை போடுவது தற்காலிகமாகவே இருக்க முடியும். இந்தியாவில் பெரும்பாலானோர் நவீன வாழ்க்கையை நாடுவதால், எதிர்ப்புகள் பிசுபிசுத்து போகவே செய்யும்.

    – கடைசியாக நீங்கள், மனதளவில் சில அடிப்படை சமாதானங்களை செய்து கொண்டு ஜோதியில் ஐக்கியமாகலாம். அல்லது Perfectionist, Utopianist போன்று நீங்களும், ஒரு சிலரும், வரும் தலைமுறைகளிலும் ஒரு சிலரும் இதை
    எதிர்த்துக் கொண்டே இருக்கலாம். (முக்கியமாக சந்தை பொருளாதாரத்தின் பயன்களை எங்களை விடவும் அதிகமாக ருசித்துக் கொண்டே!)

    Choice is yours!

  7. // இந்த ஓய்வூதியம், காப்பீடு, வங்கி ஆகியவற்றில் தனியார் கம்பெனிகள் திவாலாய்ப்போனால் ஒரு மாதாந்திர சம்பளக்காரரின் இறுதிக்காலம் கேள்விக்குறியாகும் //

    // ஒரு அரசு ஊழியர் தனது ப்பணிக்காலத்தில் எத்தனை லட்சங்கள் (கோடிகூட இருக்கலாம்) வருமான வரி தனது தேசத்திற்கு அளித்திருப்பார் என்பதை க்கணக்கில் கொள்ளுங்கள். //

    சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்களின் கேள்விகள் நியாயமானவை. வரிவிலக்கு, வரிச்சலுகை என்பது போக வரிஏய்ப்பு என்று விழுங்கி ஏப்பம் விட்ட பல லட்சம் கோடிகள் இருக்க முதியோரின் ஓய்வு ஊதியத்தில் கை வைக்க எந்த நியாயமுமில்லை.

  8. //நாம் சோஷலிஸ லூசுத்தனத்தில் பயணித்த போது, வருடம் தோறும் 12 சதவிகித வட்டியை அரசே அளித்து விடும்.//

    //நம் தலைவர்களுக்கு சோஷலிஸ சித்தாந்தத்தின் எச்ச-சொச்ச தாக்கங்கள் இருக்கவே செய்கின்றன.//

    //குறைந்த வருடங்கள் பங்களிப்போருக்கு 9 சதவிகித வட்டியும், அதிக வருடங்கள் பங்களிப்போருக்கு குறைந்த வட்டியும் அளிக்கும் இந்த திட்டம் சத்தியமாக, முழுமையான மனநிலை பிறழ்ந்த கும்பலால் மட்டுமே நடைமுறை படுத்தப்பட்டிருக்கும். அதில் சந்தேகமே இல்லை!//

    மொத்த பதிவும் அற்புதம். தெளிவாக விளக்கியுள்ளீர்கள். கொஞ்சம் பதிவின் நீளத்தைச் சுருக்கி, பகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

  9. Dear Mr. Balaji

    You are writing this article without a basic knowledge about economics or communism. If you a true hindu, then knowing truth is most important for all of us. But in your article, you are confusing the readers without any knowledge of the subject you have chosen. So most of it against truth. If you want to know some aspects of socialism, please visit any Scandinavian country and find out the difference between our country and theirs. Just hatred towards one group or idealogy will not bring any truth.

  10. Mr.Kumaran if you are a economics genius then you are worth to let a comment like this. I don’t think that you have any basic knowledge of economics.

    If you are so, you will not let comment like you have let here. Please answer the question Mr.Balaji asks. Don’t try to bluff that you are more genius than Mr.Balaji. Communism is an alcoholic mentality which is spreading like a virus among youth. These type of essays are the way to cure the disease.

    I also personally felt that, Mr. Balaji is straying more in pension scheme rather than the Non-sense of communism. I request with graciousness to Mr. Balaji to portrait on only communism (this is also [economics] the soul of the subject you have taken But). More people don’t know abcd of economics. So they may omit reading a great purposeful article that you are producing. Moreover these type of genius’s can’t interfere purposefully to show that they are genius.

    // If you a true hindu, then knowing truth is most important for all of us.//

    Mr.Kumaran, Go and tell these words to your comrades and watch their reaction. Then you will know what is true communism.

    // you are confusing the readers without any knowledge of the subject you have chosen. So most of it against truth.//

    Do you think that Mr.Balaji has no knowledge about this subject. Please read the article line by line. touch your heart and say that.

    Which are against the truth.

    Please Explain. So that all the readers may escape from confusion. And that your faith may be true (if at all).

    //If you want to know some aspects of socialism, please visit any Scandinavian country and find out the difference//

    You people who speak about communism and socialism are so rich to visit Scandinavian countries or else any other country. We don’t have to, and our economics don’t support us. But we know the practical truth. Bluffing and playing fool is not geniousness.

    //Just hatred towards one group or idealogy will not bring any truth.//

    if you want to know about hatred. Go and visit some communist websites. Communism itself is a hatred idealogy.

    Please, Mr. Kumaran if you have any contradiction in the essay, I plead to communist people like you, to ask in a proper way, and not in the way you had. This is not the Hindu way of asking for knowledge.

  11. கடந்த வெள்ளிக்கிழமை (06/09/2013), இந்திய நாடாளுமன்றத்தின் இராஜ்ய
    சபையிலும், புதிய ஓய்வூதிய திட்டம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    “இந்த நாள், உன் டைரில குறிச்சு வைச்சுக்கோ” என்னும் தொனியில் எழுதினால்,
    எனக்கு பிறகு வரும் சந்ததியினர், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை
    அமுல்படுத்திய தற்பொழுதைய நாடாளுமன்றத்தை ஆதரிக்கவே செய்வர்.

    அடுத்தவன் பணத்தை, அட்டையைப் போல் ஆட்டையை போட்டு, “ஏழைகளுக்காக”
    நீலிக்கண்ணீரையும் சேர்த்து வடிக்கும் சோஷலிஸ முதியவர்களே எங்களின்
    அடுத்த இலக்கு நீங்கள்தான்! தயாராகுங்கள். இன்றைய இளைஞர்களுக்கு
    தெளிவான செய்தியும் கொடுக்கப்பட்டு விட்டது. உங்கள் முதுமையில் எப்படி, எந்த
    வாழ்க்கை தரத்தில் வாழ வேண்டும் என்பதை இப்பொழுதே திட்டமிட்டுக்கொள்ள
    வேண்டும். மானியம் கிடைக்காது. சேமித்தால் நல்ல வாழ்வு இல்லையேல், நரக
    வாழ்வுதான்! I am Very Happy! Start Music

  12. இப்பதிவிற்கு மறுமொழி அளித்த ஒருவர், என்னை Scandinavian நாடுகளுக்கு
    சென்று ஒருமுறை பார்த்து வந்து சோஷலிஸம் எவ்வளவு அழகாக நடைமுறை
    படுத்தப்படுகிறது என்று எழுதினார். இன்று நான் படித்த ஒரு சுட்டி

    https://globalpublicsquare.blogs.cnn.com/2013/09/07/what-sweden-can-teach-america/

    உதாரணம் சுவீடன்-1995ல் மொத்த நாட்டு செலவில் (GDP) 69 சதவிகிதத்தை அரசே
    செய்தது. ஆனால் இன்று 2012-ஐயோ பாவம்-20 சதவிகிதமாக குறைந்து விட்டது.
    அதாவது சோஷலிஸ கூறுகள் பலவற்றை “எனக்கு சம்பந்தமில்லை” என்று அரசு
    கைகழுவி விட்டது. ஆனாலும் இதே சுட்டியின் படி, இன்றும் கல்வியும்,
    மருத்துவமும் அனைவர்க்கும் கொடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். மற்ற
    கூறுகளை (பொதுத்துறை நிறுவனங்களை விற்பது போன்றவை) விட்டெறிந்தாகி
    விட்டது. கல்வியும், மருத்துவமும் தானே! அடுத்த 10,20 வருடங்களிலும்
    அவையும் தனியார் மயமாகிவிடும். நார்வே நாடும் இதே பாதையில்தான் சென்று
    கொண்டிருக்கிறது. ஓசியில் கொடுத்துக் கொண்டே இருந்தால், வாங்கிக்
    கொண்டேதான் இருப்பார்கள். நிறுத்துங்கள் மகத்துவமும் தெரியும். உழைக்கவும்
    வேண்டியிருக்கும்.

    Moral Of the story-மறுமொழி எழுதியவர்தான் Scandinavian நாடுகளை நன்றாக
    அவதானித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *